Thursday, 23 May 2013

மான்சி 13


வெகுநேரம் கண்களை முடி தன் கொதிப்பை அடக்கியவள் பிறகு கண்திறந்து சிவாவைப் பார்த்து ''அதுக்கு நீ என்னண்ணா சொன்ன ''என்று கேட்டாள் தங்கையின் குமுறல் சிவாவின் மனதை நோகச் செய்தாலும் அவள் சத்யனுடன் நல்லபடியாக சேர்ந்து வாழவேண்டுமே என்ற ஆசையில் மனதை கல்லாக்கிக்கொண்டு ''ம் மான்சி அவ இஷ்டப்படியே இருக்கட்டும்அவளை வீட்டில் இருந்து அனுப்பிட்டுதான் என் கல்யாணம் நடக்கனும்னு அப்படிப்பட்ட கல்யாணமே எனக்கு வேண்டாம் ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்''என்றான் சிவா உறுதியான குரலில்

அவன் பதிலை கேட்டு அமைதியாக இருந்த மான்சி தன் மனதை நிலைப்படுத்த சிறிது அவகாசம் எடுத்து கொண்டாள் பிறகு ''சரிண்ணா இதைப்பற்றி பிறகு பேசலாம் இப்போ என்னை சுமித்ரா வீட்டுக்கு கூட்டிப்போய் விடு அவங்க வரச்சொன்னாங்க என்ன விஷயம்ன்னு கேட்டுட்டு வர்றேன்''என்றவள் அவன் பதிலை எதிர்ப்பார்க்காமல் வேகமாக போய் சிவாவின் பைக் அருகில் நின்றுகொண்டாள் சிவாவும் வேறு எதுவும் பேசாமல் அமைதியாக அவளை சுமித்ரா வீட்டில் கொண்டு விட்டுவிட்டு வந்தான் சுமித்ரா மான்சியை வரவேற்று அவள் வீட்டு தோட்டத்திற்கு அழைத்து போய் இருவரும் அங்கிருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்தார்கள் மான்சியின் முகத்தை பார்த்து அவளுக்கு விஷயம் தெரிந்துவிட்டது என்பதை யூகித்த சுமித்ரா மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள ''ஏன் மான்சி கோவையில் நடந்ததைப்பத்தி சிவா ஏதாவது சொன்னாரா''என்று கேட்க ''ம்''என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள் மான்சி ''மான்சி உங்களுக்கு நான் புத்தி சொல்றதா நினைக்காதீங்க நீங்களே நல்லா யோசிச்சு பாருங்க நிர்மலா சொன்னதில் எந்த தப்பும் இல்லை அவ இடத்தில் யார் இருந்தலும் இதைத்தான் சொல்லியிருப்பாங்க. நீங்க இப்படி வீட்டில் இருக்கும் போது அவங்க எப்படி புதுசா கல்யாணம் செய்து உங்க முன்னாடி வாழமுடியும். நான் எதைப்பற்றி சொல்றேன்னு உங்களுக்கு புரியும்.சிவா எப்படிப்பட்டவர்ன்னு எங்களை விட உங்களுக்கு நல்லா தெரியும் சிவா இவ்வளவு நாளா உங்களை ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து கவணமாக பார்த்துகிட்டவர் இப்போ உங்களால்தான் அவருடைய கல்யாணம் தடைபடுது இந்த பிரச்சனையை நீங்க மட்டும்தான் தீர்க்கமுடியும் இப்போ உங்க அண்ணன் வாழ்க்கையே நீங்க எடுக்க போற முடிவில்தான் இருக்கு வீட்டுக்குப் போய் நல்லா யோசிச்சு பாருங்க நான் சொன்னதெல்லாம் சரியா தவறான்னு உங்களுக்கு தெரியும் மான்சி இதை நான் என்னோட அண்ணனுக்காக கேட்களை சிவா இயல்பாகவே ரொம்ப நல்லவர் அவர் வாழ்க்கை அவருக்கு பிடிச்ச பொண்ணோட அமையனும் அதுக்காகத்தான் கேட்கிறேன் ''என்று மூச்சு விடாமல் பேசிய சுமித்ரா மான்சியின் முகத்தை பார்த்தாள் மான்சிக்கு சுமித்ரா சொன்னவைகள் எல்லாம் சம்மட்டியால் தலையில் தாக்கியது போல் வலித்தாலும் அதில் இருக்கும் உன்மை நன்றாகவே உறைத்தது பேச்சு வராமல் தொண்டை அடைக்க அதை கனைத்து சரிசெய்து கொண்டு மெதுவான குரலில் ''நீங்க சொன்னது எல்லாமே சரிதான் நான் கொஞ்சம் யோசிக்கனும் என்னை யாரையாவது விட்டு எங்க வீட்டில் விட ச்சொல்லுங்க ''என்று மான்சி கூற 'ம் சரி வீட்டில் கார்த்திக் இருக்கார் அவரை கொண்டுபோய் விடச் சொல்றேன் வீட்டுக்கு போய் நல்லா நிதானமா யோசிச்சு நல்ல முடிவா எடுங்க மான்சி''என்றவள் எழுந்து கார்த்திக்கை அழைத்து வர வீட்டுக்குள் போனாள் சுமித்ரா வீட்டுக்கு வந்த மான்சி மனம் மிகவும் பலவீனப்பட்டிருக்க தன் தாயாரிடம் தலை வலிக்கிறதென்றும் தன்னை யாரும் தொந்தரவு செய்யவேண்டாம் என்று கூறிவிட்டு படுத்தவளுக்கு தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது போயிற்று வெடித்துச் சிதறிய உள்ளத்தின் குமுறலை வாயை விரலால் பொத்தி அடக்க முயன்றாள் அது விரல்களையும் விம்மலாக வெடித்தது ஒருகணம் கையில் கிடைத்த சொர்க்கத்தை ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தது மறுகணம் எங்கே அதை தவர விட்டுவிடுவோமோ என்ற தவிப்பு அவளை விதிர்க்கச் செய்தது மனமே இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்க அவன் தனக்கு செய்த கொடுமை மட்டும் மறக்கமுடியாமல் நெஞ்சத்தின் ஓரம் சிறு நெருஞ்சி முள்ளாய் உறுத்தியது தன்னுடைய பழைய நாட்கள் நினைவுக்கு வந்து அவள் உடல் மற்றும் மனதின் பலம் முழுவதையும் கொஞ்சம் கொஞ்சமாக தோல்வியடையச் செய்தது பழைய நினைவுகள் மனதில் புதிதாய் வந்த காதலை சட்டென்று உயர்ந்து சீறிப் பாய்ந்து இந்த பிரபஞ்சத்தையே சுழற்றி எறியும் சுனாமியாய் சுழற்றிப் போட்டது புது நகரத்தில் மொழி தெரியாத குழந்தையை போல் தவித்து விழித்தது அவள் மனது மனது காட்டாற்று வெள்ளத்தின் போக்கைப் போல எங்கெங்கோ சென்று சுழன்று பழயை நினைவுகள் கறையை உடைக்க தன்னை அமைதிப்படுத்திக் கொள்ளவாவது எங்காவது ஓடிவிடலாமா என்று இருந்தது மான்சிக்கு மான்சியின் மனம் இவ்வளவு உழன்று அடி மனதில் இருந்த மாய உணர்வுகளையும் சேர்த்து தட்டி எழுப்ப அங்கே தன் குழந்தையின் மீது உண்டான கலப்பற்ற பாசமும் சத்யன் மீதான நேசமும் மட்டும் மிச்சமாய் இருக்க இப்போது மான்சிக்கு ஒன்று புரிந்தது அது வலிமையான இல்லறத்துக்கு அஸ்திவாரமே குழந்தைகள் தான் என்பது தன்னுடைய முதல் காதல் கல்யாணம் என்ற ஆயுதத்தை ஏந்தி வந்து அவளுக்குள் அழுத்தமாய் தன் தடத்தை பதித்துவிட்டு போயிருந்தது மான்சிக்கு இப்போது புரிந்தது ஆனாலும் இப்போது சத்யன் மீது ஆதாரமற்ற நேசம் உருவாகியிருந்தாலும் அவன் தொடுகைகளை மட்டும் தன்னால் சகித்துக்கொள்ள முடியாது என்று ஆணித்தரமாக நம்பினாள் மான்சி உறக்கம் வந்து கண்களை தழுவ வந்த அத்தனை கனவுகளிலும் சத்யனின் பிம்பங்களே மிக பிரம்மாண்டமாக தெரிந்தது மனதில் இருந்த மாய உணர்வுகள் விசுவரூபம் எடுத்து அவனின் நினைவுகளையே அவளுக்கு பரிசளித்தது நாளை விடிலை நினைத்து இன்று இரவே அவள் மனம் வெட்கப் போர்வை போத்திக்கொண்டது இரவு வெகுநேரம் அவனின் நினைவுகளை ஞாபகங்களை மனம் தத்தெடுத்ததால் மான்சி விழித்து கிடந்தாள் நேசம் கொண்ட மான்சியின் மனது புதிதாய் கவிதை வாசித்தது ''அன்று உன்னைப்பார்த்ததை தவிர்த்திருந்தால்...... ''இன்று என் மனம் உடைந்து போனதையும் தவிர்த்திருக்கலாம்......... ''நேற்று நீ என் இதயத்தை திருடியதற்காக ............ ''இன்று காதல் நீதிமன்றத்தில் கைதியாய் நான்.........!மான்சி இரவு வெகுநேரம் கழித்து தூங்கினாலும் அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது எழுந்தவள் பாத்ரூமில் ஹீட்டரைப் போட்டு முகம் கழுவிவிட்டு தன் முகத்தை கண்ணாடியில் பார்த்தாள் இரவில் விழித்திருந்தது அவள் கண்களை சுற்றி கருவளையமாக தெரிய ச்சே என்ன இது கோவை போகிற நேரத்தில் கண்கள் இப்படியிருக்கிறதே என்று நினைத்து மறுபடியும் சோப்பை குழைத்து கண்களை சுற்றி நன்றாக கழுவினாள் இவ்வளவு நாட்களாக தன் அழகை பேணிப் பாதுகாத்ததில்லை இப்போதுஅவள் விழிகளை சுற்றியிருந்த அந்தகருவளையம் அவளுக்கு பெரும் குறையாக இருந்தது அதுவும் இந்த ஊட்டியின் நடுங்க வைக்கும் குளிரில் இத்தனை முறை முகம் கழுவிக்கொள்பவள் இவளாகத்தான் இருக்கும் அவளுக்கே தன்னை நினைத்து சிரிப்பு வந்தது முகத்தை சரிசெய்து கொண்டு நேராக ஹாலில் போடப்பட்டிருந்த மூங்கில் சோபாவில் தலைவரைக்கும் கம்பளியால் போர்த்திக் கொண்டு படுத்திருந்த சிவாவிடம் வந்து அவனை உலுக்கி எழுப்ப சிவா அலறியடித்துக்கொண்டு எழுந்து மான்சியை பார்த்து விழித்தான் '' என்னண்ணா அப்படி முழிக்கிற நான்தான் மான்சி என்ன நிர்மலா அண்ணிக்கூட கனவிலே டூயட் பாடிக்கிட்டு இருந்தியா டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னா ஸாரிண்ணா ''என்ற தங்கையைப் பார்த்து சிவா இன்னும் பெரிதாக கண்களை விழித்துப் பார்த்தான் மான்சி இதுபோல் பேசி பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்றைய அவள் பேச்சு கனவே என்று நினைத்து அவசரமாக தன் கையில் கிள்ளிப் பார்த்துக்கொன்டான் சிவா அவன் செயல் மான்சிக்கு சிரிப்பை வரவழைக்க வாய்ப்பொத்தி உடல் குலுங்க சத்தமாக சிரிக்க சிவா ஆகா இது கனவில்லை நிஜம்தான் என்று கம்பளியை உதறி எழுந்தான் ''என்னம்மா இவ்வளவு சீக்கிரமே எழுந்துட்ட ஏன் தூக்கம் வரலையா ''என்று அக்கரையுடன் சிவா தங்கையை விசாரிக்க ''அதெல்லாம் நல்லாதான் தூங்கினேன் இப்போ மணி 5-30 ஆகுது நீ என்னமோ நான் நடுச்சாமத்தில் எழுந்த மாதிரி கேள்வி கேட்டுகிட்டு இருக்க போண்ணா ''என்று மான்சி சினுங்கினாள் சிவாவுக்கு அவளின் பேச்சு நான்குவருடத்துக்கு முந்தைய பழைய மான்சியை ஞாபகப்படுத்த அந்த அதிகாலையிலும் கண்கலங்க எங்கே அழுதுவிடுவோமோ என்று அஞ்சி அவசரமாக பாத்ரூம் போய் முகம் கழுவிவிட்டு வந்தான் வந்தவன் ''என்ன மான்சி என்னம்மா விஷயம் ரொம்ப உற்சாகமா இருக்கிற மாதிரி தெரியுது உன்னை இப்படி பார்க்கவே சந்தோஷமா இருக்கும்மா''என்று சிவா உணர்ச்சிகரமாக பேச மான்சியின் முகத்தில் ஓடிய வெட்க்க ரேகையால் முகம் சிவப்பை பூசிக்கொண்டது வெட்கப்பட்ட முகத்தை அண்ணனிடம் மறைத்து திரும்பி நின்று ''அண்ணா நான் கோவை போகனும் என்னை வந்து பஸ்ஸில் ஏத்திவிடு நான் போறேன் ''என்று கூற இப்போது சிவா மறுபடியும் தன் கையை கிள்ளிப் பார்த்து இது கனவில்லை என்று உறுதிசெய்து கொள்ளவேண்டியிருந்தது ''என்ன மான்சி என்னாச்சு கோவை போகனும்னு சொல்ற நிஜம்தானா''என்று சிவா உறுதியாக கேட்க ''ஆமாம் அண்ணா இப்பவே போகனும் உனக்கு எஸ்டேட்டில் ஏதாவது வேலையிருக்கும் அதனால என்னை மட்டும் பஸ் ஏத்திவிட அப்படியே அவர் வீட்டுக்கு எப்படி போகனும்னு சொல்லு நான் போயிக்கிறேன் தயவுசெய்து இதுக்கு மேல என்னை துருவித்துருவி கேட்காதே நான் எதுவுமே சொல்லமாட்டேன் ''என்று காதுகளில் புதிதாய் போட்டிருந்த ஜிமிக்கிகள் ஆட அழகாக தலையசைத்து பேசினாள் மான்சி சிவாவுக்கு உற்ச்சாகத்தில் எகிறிக் குதித்து ஓவென்று கத்தி அந்த ஊட்டியையே தன் கூச்சலால் எழுப்ப வேண்டும் போல் இருந்தது சந்தோஷத்தில் மான்சியின் முழங்காலைப் பற்றி அலேக்காக தூக்கி சுற்ற ஆரம்பிக்க சத்தம் கேட்டு அறையிலிருந்து வெளியே வந்த வேதம் தன்மகனையும் மகளையும் பார்த்து''டேய் சிவா என்னடா இது அவ என்ன சின்னகுழந்தையா இப்படி தூக்கிகிட்டு சுத்துற கீழே விடுடா ''என்று சிரிப்புடன் கூற சிவா மான்சியை கீழே விட்டுவிட்டு தன் தாயிடம் மான்சியின் மனமாற்றத்தை கூறி அவள் கோவை புறப்பட ஏற்ப்பாடு செய்யச்சொன்னான்

அதை கேட்ட அந்த தாயின் கண்களில் கரகரவென கண்ணீர் வழிய தன் மகளை அணைத்துகொண்டாள் மான்சி பஸ்ஸில் கிளம்புகிறேன் என்றதும் சிவா வேண்டாம் கார்த்திக்கின் காரை எடுத்துச் செல்லலாம் என்றான் மான்சி அதற்க்கு ஒத்துக்கொள்ளவில்லை ''வேண்டாம்ண்ணா நான் கோவை போறது யாருக்கும் தெரியவேண்டாம் அவருக்கு கூட போன் செய்து சொல்லாதே சஸ்பென்ஸ்ஸாவே இருக்கட்டும் ''என்று வெட்கத்துடன் மான்சி கூற ''சரி சரி உன்னோட இஷ்டம் சீக்கிரமா ரெடியாகு நானும் ரெடியாகி வர்றேன்''என்று சிவா பாத்ரூமை நோக்கி ஓடினான் மான்சியும் போய் குளித்துவிட்டு வந்தவளுக்கு இப்போது பெரும் குழப்பம் அதான் எந்த புடவையை கட்டுவது என்ற குழப்பம்தான் சத்யனு என்ன நிறம் பிடிக்கும் என்றுகூட தனக்கு தெரியாதே என்று வருந்தினாள் திருமணத்திற்கு எடுத்த மாதுளம் முத்துக்கள் நிற பட்டுபுடவையும் அதை சத்யன்தான் தேர்வு செய்தான் என்று சுமித்ரா சொன்னதும் ஞாபகம் வர அதே மாதுளம் முத்துக்கள் நிறத்தில் தன்னிடம் இருந்த குந்தன் வேலைபாடுகள் நிறைந்த ஒரு புடவையை எடுத்து கட்டிகொண்டு கண்ணாடியில் புடவை விளம்பரத்தில் வருபவள் போல் முந்தானையை கையில் பிடித்துக்கொண்டு தன்னைத்தானே சுற்றிச்சுற்றி பார்த்துகொண்டாள் தன் அழகைப் பார்த்து தானே நாணத்துடன் சிரித்துக்கொண்டாள் குளித்துவிட்டு வந்த சிவா தனது தங்கையைப் பார்த்து கண்களை அகலவிரித்து ஆச்சர்யத்தோடு சிரித்து ''ம்ம் இன்னிக்கு சத்யன் கிளீன் போல்ட்தான்''என்று கிண்டல் செய்தவன் மான்சியின் அருகே வந்து கண்கலங்க அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தி ''மான்சி உன்னோட முழுவிருப்பத்தோடத்தான கோவை போற எனக்காக இல்லையே உன்மையை சொல்லு மான்சி ''என்று கேட்க ''ம்ஹூம் அதெல்லாம் இல்லண்ணா நானே விரும்பித்தான் போறேன் என்னோட இடம் அதுதான் எனக்கு இப்போ புரிஞ்சிருச்சு மத்தபடி நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஒன்னும் கிடையாது என்ன என்னால உடனே அங்கே ஒன்றிப்போக முடியாது போகப்போக சரியாயிடும்ன்னு நினைக்கிறேன் ''என்றவள் ''சரி கிளம்பும் போது கண்கலங்காதே அண்ணா அப்புறமா இன்னோரு விஷயம் உடனே இந்த விஷயத்தை போன் பண்ணி என் வருங்கால அண்ணிகிட்ட சொல்லிறாதே அப்புறமா சொல்லிக்கலாம்'' என்று மானசிகூற அப்போதுதான் சிவாவுக்கு நிர்மலாவின் ஞாபகமே வந்தது இன்று அவளையும் சந்திக்க போறோம் என்று அவன் மனம் உற்சாகத்தில் துள்ளி குதிக்க ஆரம்பித்தது மான்சி சிவா இருவரும் கிளம்பிபோய் கோவை செல்லும் பஸ்ஸில் ஏறி உட்க்கார இவர்களுக்காகவே காத்திருந்தது போல அந்த பஸ் உடனே புறப்பட்டது ஆனால் அந்த பஸ்ஸுக்கு முன்பே மான்சியின் மனம் வேகமாக கோவையை நோக்கி சென்றது ஆயிரம் கனவுகளுடன் ஆயிரம் போராட்டங்களுடன் மான்சிக்கு அந்த காலைநேர குளிர்காற்று மனதில் இனம்புரியாத கிளர்ச்சியை ஏற்ப்படுத்தியது ''ஏரிக்கரையில் இதமான குயிலின் கூவல் ..... ''காற்றுக்கு தலையாட்டும் பச்சை நெல்வயல்...... ''கோவில்களில் அழகிய புறாக்களின் சிறகடிப்பு...... ''மலைச்சாரலில் பனிசுமந்த ரோஜாக்களின் தலையசைப்பு..... ''அழகான சீருடையில் பள்ளி செல்லும் மழலைகள்...... ''இவைகள் மட்டுமே எனக்குள் அறிமுகம்...... ''அறிமுகமில்லாதது ...... ''உன் மனதுள் புதைந்திருக்கும் ...... ''உணர்வுகளின் உன்மை முகம்....!மான்சியும் சிவாவும் கோவை பஸ்டாண்டில் இரங்கி ஒரு ஆட்டோவில் ஏறியபோது மணி காலை 9-5 ஆகியிருந்தது ஆட்டோ சத்யன் வீட்டுக்கு செல்ல அந்த மிகப்பெரிய வீட்டின் முன் ஆட்டோ நின்ற போது மான்சிக்கு வயிற்றில் சில்லென்ற உணர்வு ஏற்ப்பட அவசரமாக பக்கத்தில் இருந்த சிவாவின் கையை பிடித்துக்கொண்டாள் ''ம் என்ன மான்சி இது ஏன் இப்படி பதட்டப்படுற இது உன் வீடு மான்சி இங்கே யாருமே உனக்கெதிராக நடக்கமாட்டாங்க நடக்கவும் சத்யன் விடமாட்டார் நீ தைரியமா உள்ளே போ ''என்றவன் தங்கையின் கையை பற்றிதைரியம் சொல்லிவிட்டு ஆட்டோவிலிருந்து இறங்கிக்கொண்டு பணம் கொடுத்து அனுப்பிவிட்டு மூடியிருந்த பெரிய கேட்டில தட்டினான் கதவைத்திறந்து வெளியே வந்த வாட்ச்மேன் இவர்கள் இருவரையும் பார்த்து பதட்டத்துடன் ''ஐயோ ரொம்ப நேரமா நிக்கிறீங்களா சின்னம்மா பெட்டிய என்கிட்ட குடுங்க நான் எடுத்துட்டு வர்றேன்''என்றவன் மான்சி கையில் இருந்த பெட்டியை வாங்கிக்கொண்டு உற்ச்சாகமாக முன்செல்ல மான்சிக்கு தன்னுடைய வரவு ஒரு சாதாரண வேலைக்காரனை கூட உற்ச்சாகப்படுத்தியுள்ளது தெரிந்தது வாட்ச்மேன் கதவருகிலேயே நின்றுவிட சிவாவும் மான்சியும் உள்ளே போனார்கள் அங்கே முதலில் இருந்த ஹாலில் யாருமே இல்லை பக்கவாட்டில் இருந்த வேறு அறையில் பேச்சு குரல் கேட்க இருவரும் அங்கு போனார்கள் அது டைனிங் ஹால் வீட்டின் அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்க சத்யன் மான்சிக்கு முதுகு காட்டி எதிர்பக்கம் பார்த்தபடி உட்க்கார்ந்து இருக்க இவர்களை முதலில் பார்த்தது கண்ணன் தான் அவசரமாக 'வா சிவா வாம்மா மான்சி ''என்று கூப்பிட சத்யன் சட்டென்று திரும்பிப் பார்த்து மான்சியை கண்டதும் சாப்பிட்ட கையோடு திகைப்புடன் எழுந்து நின்றுவிட்டான் பிறகு சுதாரித்து ''வாங்க சிவா ''என்றவன் மான்சியை வாயால் அழைக்காமல் கண்களால் அழைத்தான் மான்சியின் மனம் பொய்யாய் சினுங்கியது 'ம்க்கும் ஐயாவுக்கு வாயால கூப்பிட முடியாதோ அதென்ன இத்தனை பேர் முன்னாடி கண்ணால் ஜாடை காட்றது இரு இரு உன்னை அப்புறமா கவனிச்சுக்கிறேன்' என்று மனதுக்குள் அவனுடன் செல்லமாய் சீண்டி விளையாடியவள் நேரில் குனிந்த தலையை நிமிராமல் நின்றாள் சத்யன் அவள் முகத்தை நிமிர்வாள் பார்க்கலாம் என்று சிறிதுநேரம் அவளைப்பார்த்து விட்டு அவள் நிமிர்ந்து பார்க்காததால் ஏற்ப்பட்ட ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு சிவாவிடம் திரும்பி ''என்ன இது திடீர்னு என்னிடம் சொல்லியிருந்தா நான் ஊட்டிக்கு கார் அனுப்பியிருப்பேன் இப்போ எப்படி வந்தீங்க''என்று கேட்க ''ஊட்டியில் இருந்து பஸ்ஸில் வந்து இங்கே ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்தோம் சார் நான் கார்த்திக் சார்கிட்ட கார் கேட்டு எடுத்திட்டு போகலாம்னு சொன்னேன் மான்சிதான் வேனாம்னு சொல்லிடா''என்று சிவா பதில் சொன்னான் அதற்க்குள் சத்யனின் அம்மா மரகதம் ''எப்படியும் ஊட்டியில் காலையில ஆறு மணிக்கெல்லாம் கிளம்பியிருப்பீங்க சரி வாங்க ரெண்டு பேரும் சாப்பிடலாம் ''என்று அழைக்க சிவா கையிலிருந்த பேக்கை சுவற்றோறமாக வைத்துவிட்டு போய் வாஷ்பேசினில் கைகழுவ மான்சி நின்ற இடத்திலேயே கால்களில் வேர்பிடித்து நின்றாள் சத்யன் சாப்பிட்ட தட்டில் கைகழுவிவிட்டு எழுந்து மான்சியின் அருகில் வந்து அவளை நிதானமாக ஏறஇறங்க பார்த்தான் வெள்ளைக்கு பதிலாக சிவப்புச் சேலை கட்டிய தேவதை போல் இருந்தாள் மான்சி அவளுக்கு மிக அருகில் சத்யன் நின்றதால் அவளின் வாசனையைக்கூட சத்யனால் உணர முடிந்தது இமைகளை குடையாக பிடித்து கண்கள் கவிழ்ந்திருக்க நேரான கூர் நாசியில் இருந்த அந்த ஒற்றை சிவப்புகல் மூக்குத்தி அவளின் பால்போன்ற நிறத்துக்கு எடுப்பாக இருக்க சத்யனுக்கு தன் நுனி நாக்கால் அந்த மூக்குத்தியை தீண்டி அவளை சிலிர்க்க வைக்கவேண்டும் போல் இருக்க தன்னை அடக்கிக்கொண்டு அவளின் தேன்சுமந்த இதழ்களை பார்த்தான் இந்த இதழ்கள் இயற்கையாகவே இவ்வளவு சிவப்பாக இருப்பதால் இவற்றை செம்பருத்தியின் இதழ்கள்ளோடு ஒப்பிடுவதா இல்லை தொட்டால் ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு ஈரமாகவும் மிருதுவாகவும் இருப்பதால் அதிகாலையில் பனித்துளிகளை சுமந்திருக்கும் ரோஜாவின் இதழ்கள்ளோடு ஒப்பிடுவதா என்று சத்யனுக்கு ஒரே குழப்பமாக இருக்க 'ஏன் அந்த இதழ்களை சுவைத்துப் பார்த்தே அதை நீ தெரிந்துகொள்ளளாமே' என்று அவன் மனம் உத்தரவிட இருக்கும் இடத்தை உணர்ந்து சத்யன் மனதை அடக்கிக்கொண்டு ஏக்கத்துடன் அவளின் ஈர இதழ்களைப் பார்த்தான் ''உன் இதழ்ப் பெட்டகத்துள்...... ''எனக்கெனநீ சேமித்து வைத்திருக்கும்...... ''ஒரு கோடி முத்தங்களை ......... ''என் உதட்டுச் சாவிகளால் ..... ''திறந்தெடுக்க முயல்கிறேன் ஆனால்..... ''ஒவ்வெரு முறையும் ஒன்று மட்டுமே ....... ''சாத்தியமாகும் போலிருக்கிறதே ஏன் .......! மானசி சத்யன் தன்னையே வெறிக்க பார்த்துக்கொன்டிருப்பதை உணர்ந்து 'ச்சே இதென்ன இத்தனை பேர் முன்னால இப்படி வெறிச்சுப் பார்த்துகிட்டு நின்றால் எல்லாரும் என்ன நினைப்பாங்க கொஞ்சமாவது மண்டையில ஏதாவது இருக்கா இல்லை மண்டையில் ஆப்ரேஷன் பண்ணப்ப எல்லாத்தையும் எடுத்திட்டாங்களா 'என்று செல்லக் கோபத்தோடு அவனை வைதவள் சரி அவன்தான் இப்படி நிக்கிறான்னா நானும் அப்படியே நிக்கிறேனே என்று என்னியவளாய் கால்களை பின்னால் ஒரு எட்டு எடுத்து வைக்க நீளமாக விட்டிருந்த புடவை முந்தானையில் கால் தடுக்கி தடுமாற சத்யன் முன்னால் எக்கி அவள் தோள்களை பற்றிக்கொன்டான் தோள்களை பற்றியவன் அவளை அப்படியே தன் நெஞ்சில் சாய்த்துக்கொள்ள அவன நெஞ்சில் முகம் வைத்திருந்த மான்சிக்கு 'இவனுக்கு இதே வேலையாப்போச்சு எப்பபாரு எல்லார் முன்னாடியும் அணைச்சிகிட்டு ச்சே இப்படியா டைட்டா பிடிக்கறது எனக்கு தோள் வழிக்கும்ன்னு கொஞ்சம் கூடவா தெரியாது' என்று எண்ணினாலும் அவன் மார்பில் வந்த அந்த ஆண்மையின் வாசனை அவளை அங்கேயே முகத்தை ஆழமாக பதிக்கவைத்தது யப்பா இது என்ன வாசனை என்று நினைத்து மூச்சை இன்னும் ஆழமாக இழுத்து சுவாசிக்க அது அவள் மூளைக்குப் போய் சுர்ரென்று ஏறியது அப்போது பின்னால் இருந்து யாரோ அவள் முந்தானையை பற்றி இழுப்பது போல் இருக்க அவசரமாக அவனிடம் இருந்து விலகி திரும்பி பார்த்தாள் அங்கே குழந்தை பிரவீன் அவளின் முந்தானையை பிடித்துக்கொண்டு நின்றிருந்தான் மான்சி குழந்தையையே பார்த்தாள் இவனை எப்படி இவ்வளவு நேரம் மறந்தோம் குழந்தையா வந்து என்னைத் தொட்டதும்தான் நினைவு வருகிறதே ச்சே இங்கே இருப்பவர்கள் என்ன நினைப்பாங்க என்று நினைத்து மனம் வருந்தியபடி மான்சி நிற்க்க சத்யனுக்கு அவளின் நிலைமை புரிந்திருக்கவேண்டும் சட்டென குனிந்து குழந்தையை தூக்கிக்கொண்டு ஒருகையில் குழந்தையை தாங்கி மறுகையால் மான்சியின் இடுப்பைச் சுற்றிவளைத்து பாதி அணைத்தார்போல் அவளை சாப்பாட்டு மேசையருகே அழைத்துச் செல்ல மான்சிக்கு கூச்சமாக இருந்தது

மான்சி மெதுவாக தன் இடையில் அவன் கையை அகற்ற முயற்ச்சித்தாள் ம்ம் அவனா விடுவான் அவள் இடுப்பில் தன் ஐந்து விரல்களையும் அழுத்திவைத்து கொத்தாகப் பற்றிக்கொண்டான் மான்சி மனதுக்குள் சிறு புகைச்சல் எட்டிப்பார்க்க வேறுவழியின்றி அவனுக்கு அருகில் நாற்காலியில் உட்க்கார்ந்தாள் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு உட்கார்ந்த சத்யன் ''ம் சிவா நீங்களும் உட்காருங்க சாப்பிடலாம் ''என்று உத்தரவிட சிவாவும் சாப்பிட உட்கார்ந்தான் சிவாவுக்கோ தனது கண்ணெதிரில் நடந்த மான்சி சத்யன் ரொமான்ஸ்ஸை பார்த்து காதல் எக்குத்தப்பாக உச்சியில் ஏற உடனே போய் நிர்மலாவைப் பார்த்தே ஆகவேண்டிய நிலைமை ச்சே காதல் செய்தாலும் இம்சை காதல் செய்பவர்களை பார்த்தாலும் இம்சைதான் போல ''நான் மடல் விரித்து ..... ''மனம் பிரித்து..... ''நினைவை வருத்தி ..... ''வின் நோக்கி..... ''கருவைச் சுருக்கி..... ''நான் கவிதை புனைந்தாலும் .... ''அது முழுமை பெறுவதென்வோ...... ''என் மார்பில் நீ சாய்ந்து .... ''மெல்ல முத்தமிட்டு.... ''நன்றாயிருக்கிறது என.... ''சினுங்கலாக நீ உரைக்கும் அந்த .... ''மந்திரத் தருனம் தான்.... ''உரைப்பாயா கண்மணி..........?மான்சிக்கு தட்டு வைத்துவிட்டு என்னம்மா சாப்பிடுறீங்க என்று சமையல்காரன் கேட்க அவள் வாயை திறக்காமல் அமைதியாக இருந்தாள் சத்யன் அவளை திரும்பி பார்த்துவிட்டு சமையல்காரனிடம் ''அவளுக்கு இட்லி மட்டும் வச்சிட்டு சிவாவுக்கு என்ன வேனும்னு கேட்டுட்டு வை''என்று வீட்டு எஜமானாய் உத்தரவிட்டான் சிவா அமைதியாக சாப்பிட சத்யன் தனது தட்டிலிருந்து எடுத்து மடியிலிருந்த மகனுக்கு ஊட்டிக் கொண்டே சாப்பிட மான்சி தனக்கு வைத்த இரண்டு இட்லியை உதிர்த்து உதிர்த்து புட்டாக மாற்றிக் கொண்டிருந்தாள் சிவா சாப்பிடும் வரை காத்திருந்த சத்யன் '' ம் சொல்லுங்க சிவா என்ன விஷயமா வந்திருக்கீங்க ''என்று கேட்க சிவா இந்த நேரடியான கேள்வியால் ஒருகணம் தடுமாறி பிறகு சமாளித்து''அது வந்து மான்சிதான் காலையில என்னை எழுப்பி கோவைக்கு போகனும் என்னை பஸ்ஸில் ஏத்தி விடுன்னு சொன்னா சரின்னு நானும் கிளம்பி கூட சேர்ந்து வந்தேன் ''என்று மான்சியை பார்த்து கொண்டே கூறினான் ''ஓ அப்படியா''என்று போலியாக கண்களை விரித்து ஆச்சரியப்பட்ட சத்யன் பக்கத்தில் மான்சியை பார்க்க அவள் இப்போது தன் தட்டில் இருந்த உதிர்ந்த இட்லியை சிறு சிறு பாகங்களாக பிரித்து கொண்டிருந்தாள் சத்யன் பட்டென அவள் கையை பற்றி ''என்ன மான்சி பண்ணிகிட்டு இருக்க பிடிக்கலைன்னா வேற ஏதாவது வச்சி சாப்பிடு ''என்று கூற அவள் வேறு எதுவும் வேண்டாம் என்பது போல தலையசைத்தாள் ''சரி அப்ப போய் கைகழுவிவிட்டு வா ''என்று கூற மான்சிக்கு இவன் ஏன் தன்னை இப்படி அதிகாரம் செய்கிறான் என்று மனம் முரண்டினாலும் எழுந்து அவன் சொன்னதை செய்துவிட்டு மறுபடியும் வந்து நின்று கொள்ள ''ம் ஏன் நிக்கிற இங்கேயே வந்து உட்காரு உணவுதான் வேண்டாம் ஜூஸ்ஸாவது குடிக்கிறாயா ''என்று கேட்க அவள் எதுவும் பதில் சொல்லாமல் முதலில் அமர்ந்திருந்த இருக்கையிலேயே வந்து அமர்ந்து கொண்டாள வேலைக்காரன் எடுத்துவந்த ஜூஸை வாங்கி அவள் எதிரில் வைத்த சத்யன் ''ம் இப்ப சொல்லு எதுக்காக இங்கே கிளம்பி வந்திருக்க ''என்று வெகு நிதானமாக கேட்க மான்சி நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்து 'ப்ளீஸ் எதையும் கேட்காதேயேன்''என்பது போல இறைஞ்சுதலாய் தன் விழிதிறந்து பார்க்க ஒவ்வெரு நாளும் தன்னை ஏங்க வைத்த தன் நினைவை விட்டு அகலாத அந்த பிரவுன் நிற கண்களை பார்த்து ரசித்து கொண்டே''இல்ல மான்சி நீ எதற்காக வந்திருக்கன்னு சொல்லித்தான் ஆகவேண்டும் ''என்று இரக்கமின்றி கேட்டான் மான்சிக்கு கோபமாக வந்தது பெரிய இவரு இவர் கேட்டவுடனே பதில் சொல்லனுமாக்கும் என்று மனதுக்குள் சினுங்கிகொண்டே ''இனிமேல் உங்கவீட்டில் இருக்கலாம்ன்னு வந்தேன்''என்று மெல்லிய குரலில் கூறினாள் ''என் வீட்டில் இருக்கலாம்னுதான் வந்தியா என்கூட இல்லையா ''என்று குரலில் குறும்புடன் கேட்க மான்சி வெடுக்கென்று நிமிர்ந்து அவனை பார்த்து முறைக்க ''சரி சரி அதுக்கு ஏன் முறைக்கிறாய் உன் முடிவில் எந்த மாற்றமும் கிடையாதே ஏன் கேட்கிறேன்னா நம்ம குடும்பம் கோவையில் ஒரளவுக்கு மரியாதையான கௌரவமான குடும்பம் இங்கேயிருந்து அடிக்கடி மருமகள் வீட்டைவிட்டு வெளியேறினால் அவ்வளவு நன்றாக இருக்காது அதனால தான் கேட்குறேன் உன்னோட முடிவில் எந்த மாற்றமும் கிடையாதே ''என்று மறுபடியும் திருப்பி திருப்பி கேட்க இப்போது மான்சிக்கே குழப்பமாகிவிட்டது இவன் சொல்வதை பார்த்தால் நான் இங்கே இவன் சொல்படி கேட்டு இவன் இஷ்டப்படி தான் நடக்க வேண்டும் என்று சொல்வதை போல இருக்கிறதே ம்ஹூம் இது சரியில்லை முதலி ல்எல்லாவற்றையும் பேசி ஒரு முடிவு எடுத்தபிறகுதான் எதையுமே ஒத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செயதவளாய் நிமிர்ந்து சத்யனை பார்த்து ''உங்களிடம் நான் தனியாக பேசவேண்டும்''என்று கிசுகிசுப்பாய் மான்சி கூற '' ம் சரிவா மாடிக்கு என்னோட அறையில் போய் பேசலாம் ''என்றவன் குழந்தையை சிவாவிடம் கொடுத்துவிட்டு மாடிப்படிகளில் தாவி ஏற அவன் நடையில் தெரிந்தது அவன் மனதின் உற்ச்சாகம் ''அன்றொரு நாள் கோபத்தில் .... ''என்னை விரும்பவில்லை ...... ''மறந்துவிடு என்றாய் ...... ''மறந்துவிட்டேன் ''உன்னை அல்ல... ''நீ சொன்ன மொழிகளை.....! தனது அறைக்குள் நுழைந்த சத்யன் நின்று திரும்பி வாசலிலேயே நின்ற மான்சியை பார்த்து தன் இடைவரை குனிந்து நெற்றியில் சலாம் வைத்து ''வெல்கம் மை ரூம் மை டியர் பியான்ஸி ''என்று குறும்புடன் கூற அவன் செய்கை மான்சி முகம் நிறைந்த புன்னகையையும் மனம் நிறைந்த காதலையும் வரவழைத்தாலும் அதை அவனிடம் மறைத்து திரும்பி நின்று கொண்டு ''ம்க்கும் இதில் ஒன்னும் குறைச்சல் இல்லை''என்று தன் தோளில் முகவாயை இடித்து பழித்து காண்பித்தாள் ''ஏய் மான்சி வேற எதுல நான் கொறைச்சல்ன்னு சொல்ற வேனும்னா என்னோட வேலையெல்லாம் எப்படின்னு காட்றேன் அப்புறமா ஐயா தேர்றேனா இல்லையான்னு பாரு என்ன ரெடியா''என்று அவளை நெருங்கனான் மான்சி பயத்துடன் பின்னால் நகர்ந்து கதவை ஒட்டி நின்று கொண்டு ''அய்யோ நான் சும்மாதான் சொன்னேன் நீங்க அங்கேயே இருங்க கிட்ட வராதீங்க''என்று பதட்டத்துடன் சொல்ல சத்யனுக்கு அவளுடைய பதட்டம் அவனை மிகவும் பாதித்தது ம்ஹூம் அவ்வளவு சீக்கிரம் இவள் மாறாது காரணம் தான் அவளுக்கு செய்த மிகப்பெரிய கொடுமைதான் என்பதை உணர்ந்து ''சரி சரி விடு நான் இங்கேயே இருக்கேன் என்னவோ பேசனும்னு சொன்னியே இப்போ பேசு ''என்று குரலில் குளிர்ச்சியை வரவழைத்துக்கொண்டு சத்யன் கூற சிறிதுநேரம் தன் புடவை முந்தானையை விரலில் சுற்றி சுற்றி இழுத்தவள் ஒருவாறு தன்னை நிதானப்படுத்திக் கொண்டு மெல்லிய குரலில் ''அது நான் எங்க அம்மா வீட்டுலயே இருந்தா சிவா அண்ணனுக்கு கல்யாணமே ஆகாது போல இருக்கு அதனால்தான் கிளம்பி வந்துட்டேன் ''என்று கூற ''அப்படின்னா எனக்காகவும் குழந்தைக்காகவும் வரலை உன்னோட அண்ணனுக்கு கல்யாணம் நடக்கனும்னு தான் வந்திருக்க ''என்று பிசிறடித்த குரலில் கேட்கதனது அறைக்குள் நுழைந்த சத்யன் நின்று திரும்பி வாசலிலேயே நின்ற மான்சியை பார்த்து தன் இடைவரை குனிந்து நெற்றியில் சலாம் வைத்து ''வெல்கம் மை ரூம் மை டியர் பியான்ஸி ''என்று குறும்புடன் கூற அவன் செய்கை மான்சி முகம் நிறைந்த புன்னகையையும் மனம் நிறைந்த காதலையும் வரவழைத்தாலும் அதை அவனிடம் மறைத்து திரும்பி நின்று கொண்டு ''ம்க்கும் இதில் ஒன்னும் குறைச்சல் இல்லை''என்று தன் தோளில் முகவாயை இடித்து பழித்து காண்பித்தாள் ''ஏய் மான்சி வேற எதுல நான் கொறைச்சல்ன்னு சொல்ற வேனும்னா என்னோட வேலையெல்லாம் எப்படின்னு காட்றேன் அப்புறமா ஐயா தேர்றேனா இல்லையான்னு பாரு என்ன ரெடியா''என்று அவளை நெருங்கனான் மான்சி பயத்துடன் பின்னால் நகர்ந்து கதவை ஒட்டி நின்று கொண்டு ''அய்யோ நான் சும்மாதான் சொன்னேன் நீங்க அங்கேயே இருங்க கிட்ட வராதீங்க''என்று பதட்டத்துடன் சொல்ல சத்யனுக்கு அவளுடைய பதட்டம் அவனை மிகவும் பாதித்தது ம்ஹூம் அவ்வளவு சீக்கிரம் இவள் மாறாது காரணம் தான் அவளுக்கு செய்த மிகப்பெரிய கொடுமைதான் என்பதை உணர்ந்து ''சரி சரி விடு நான் இங்கேயே இருக்கேன் என்னவோ பேசனும்னு சொன்னியே இப்போ பேசு ''என்று குரலில் குளிர்ச்சியை வரவழைத்துக்கொண்டு சத்யன் கூற சிறிதுநேரம் தன் புடவை முந்தானையை விரலில் சுற்றி சுற்றி இழுத்தவள் ஒருவாறு தன்னை நிதானப்படுத்திக் கொண்டு மெல்லிய குரலில் ''அது நான் எங்க அம்மா வீட்டுலயே இருந்தா சிவா அண்ணனுக்கு கல்யாணமே ஆகாது போல இருக்கு அதனால்தான் கிளம்பி வந்துட்டேன் ''என்று கூற

''அப்படின்னா எனக்காகவும் குழந்தைக்காகவும் வரலை உன்னோட அண்ணனுக்கு கல்யாணம் நடக்கனும்னு தான் வந்திருக்க ''என்று பிசிறடித்த குரலில் கேட்க ''ம் அப்பிடியெல்லாம் இல்லை எனக்கும் இங்கேதான் நிறைவான ஒரு வாழ்க்கை இருக்கும்ன்னு தோனிச்சு அதான் கிளம்பி வந்தேன் ஆனால் எனக்கு கொஞ்சம் டைம் வேனும் என்னோட மனசு முழுமையா மாறுவதற்கு அதுவரைக்கும் நான் .....'என்று மான்சி தயக்கத்துடன் வார்த்தையை முடிக்காமல் நிறுத்த ''ம் சொல்லு மான்சி அதுவரைக்கும் நீ ''என்று சத்யன் அவளை மேலே சொல்லும்படி ஊக்கப்படுத்தினான் ''அதுவரைக்கும் நான் தனியாகவே இருந்துக்கிறேன்''என்று மான்சி முடித்தாள் சத்யன் அவளிடம் இதை எதிர்ப்பார்த்துதான் இருந்தான் அவள் இங்கே வந்ததே பெரிய விஷயம் அப்படி இருக்க அவளை எதற்காகவும் வற்புறுத்த கூடாது என்று முடிவு செய்தான் அவள் மனம் மாறும் வரை அவன் காத்திருக்க தயார் ஆனால் ஒரே வீட்டில் தனித்தனியாக இருந்தால் வரும் பிரச்சனைகளை யோசித்து பார்த்தான் பிறகு மான்சியிடம் ''மான்சி உன் மனம் எனக்கு புரியுது ஆனால் கீழே பார்த்தே இல்ல வேலைக்காரர்களில் இருந்து என் அம்மா அப்பா வரை எல்லோருக்கும் நீ வந்ததில் ரொம்ப சந்தோஷம் இப்படியிருக்க நீயும் நானும் தனித்தனியாக இருந்தால் ஏதாவது பிரச்சனைகள் சங்கடங்கள் வரலாம் அதனால இந்த அறையிலேயே நீயும் நானும் தனித்தனியா இருந்துக்கலாம் வெளியே யாருக்கும் எதுவும் தெரிய வாய்ப்பில்லை ம் என்ன சொல்ற மான்சி'' என்று சத்யன் அவளை கேட்டான் மான்சிக்கும் அவன் சொல்வது நியாயமாக தோன்றியது மெதுவாக அந்த அறையை நோட விட்டாள் இளஞ்சிவப்பு வண்ணச் சுவர்களுடன் அழகான வேலைபாடுகள் நிறைந்த மிகப்பெரிய அறை அறையின் நடுவில் போடப்பட்டிருந்தபெரிய கட்டிலில் பத்து இஞ்ச் உயரத்தில் நுரைரப்பர் மெத்தை அதில் அழகான பாம்பே டையிங் விரிப்பு அதன் மேல் பட்டு உறையிட்ட தலையனைகள் அந்த அறையில் சகலவிதமான வசதிகளும் இருந்தன அவற்றையெல்லாம் மான்சி பார்த்துக்கொன்டிருக்க சத்யன் அவளருகில் வந்து ''என்ன ரூம் பிடிச்சிருக்கா பிடிக்கலைன்னா சொல்லு மாத்திரலாம்'' என்று கேட்டான் ''ம்ஹூம் அதெல்லாம் வேண்டாம் ரூம் நல்லாதான் இருக்கு''என்று மான்சி கூற ''அப்போ இங்கேயே தங்கிக்கிறேன்னு சொல்றியா''என்று அவளின் உறுதியை தெரிந்து கொள்ள சத்யன் கேட்க ''ம்''என்று ஒற்றை வார்த்தையில் தலையசைத்து மான்சி சம்மதம் தெரிவித்தாள் சத்யனுக்கு அப்பாடா என்று பெருமூச்சு வந்தது பாவம் அவனுக்கு தெரியவில்லை அழகான பொண்டாட்டியை பக்கத்தில் படுக்க வச்சிகிட்டு நாம சும்மா இருப்பதென்றால் அது எவ்வளவு கொடுமையான விஷயம் என்று திருப்தியுடன் மூச்சு விட்ட சத்யன் ''சரி வா மான்சி ''என்று அவளை நோக்கி தன் வலதுகையை நீட்டினான் மான்சி அவன் நீட்டியக்கையை பற்றாமல் தயங்கி நின்று இவ்வளவு சொல்லியும் உனக்கு புரியலையா என்பது போல் அவனை பார்க்க சத்யன் அவள் பார்வையின் அர்த்தம் புரிந்து ''இதோ பார் மான்சி உனக்கென்ன என் கூட இப்போ செக்ஸ் வச்சுக்க விருப்பமில்லை அதை நான் ஏத்துக்கிறேன் ஆனால் அதுக்காக இப்படி கையை பிடிப்பது தொட்டு பேசுவது இதெல்லாம் தப்பு ஒன்னும் கிடையதே இப்படி நீ கதவையும் நான் உன் முதுகையும் பார்த்து பேசினால் எப்படி உன் மனம் மாறும் நான் ரொம்ப பொறுமைசாலி கிடையாது மான்சி உன்னை கசக்கி முகரக்கூடாது என்று பார்க்கிறேன் நீ தானாவே கனியனும்னு நான் நினைக்கிறேன் அதுக்காக என்னை ஏமாந்தவன்னு நெனைச்சிறாதே எனக்கும் என் அழகான பொண்டாட்டியை அணைச்சிகிட்டு தூங்கனும் காலையில அழகான அவள் முகத்தில் விழிக்கனும் அவ கையால சாப்பிடனும் சாப்பிட்ட பிறகு அவள் முந்தானையில் கையை துடைக்கனும் ஒரு தலைவலி வந்தால் கூட அவள் கையால் தைலம் தேய்க்கனும் தோட்டத்து புல்வெளி நடுவில் நான் உன் மடியில் தலைவைத்து என் நெஞ்சில் நம் மகனை போட்டுக்கொண்டு படுத்துக்கனும் இப்படி ஏகப்பட்ட ஆசைகள் என் மனசிலும் இருக்கு அதுக்கெல்லாம் நீயும் ஒத்துழைக்கனும் நான் உன் விருப்பமில்லாமல் செக்ஸுக்காக வற்புறுத்த மாட்டேன் இப்போதைக்கு அதை மட்டும் நீ நம்பினால் போதும் மற்றதையெல்லாம் இனிவரும் காலங்களில் பார்த்துக்கலாம் என்ன ஓகேயா ''என்று ஒரு நீளமான சொற்பொழிவை நடத்தியவன் போல களைத்துப் போய் மான்சியை பார்த்து கேட்க மான்சி வியப்புடன் அவனை விழியெடுக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தாள் இவனுக்குள் இவ்வளவு ஆசையா இவை அனைத்தும் இனி என் வாழ்க்கையில் நடக்கபோவதா இதற்க்கெல்லாம் இவன் தகுதியானவன்தானா இவன் இயல்பிலேயே நல்லவன் தானா ஏன் முன்பு என்னிடம் அப்படி கொடூரமாக நடந்துகொண்டான் இப்போது ஏன் இப்படி மாறிவிட்டான் என்னிடம் இருக்கும் எது இவனை இப்படி மாற்றியது நானா இல்லை என் வயிற்றில் பிறந்த குழந்தையா இவன் மனதை மாற்றியது ஏன் இவ்வளவு பெரிய பணக்காரனுக்கு வேறு பெண்ணா கிடைக்காது எவ்வளவு அசிங்கங்கள் நடந்தாலும் அதை கார்பெட்டின் கீழே தூசியை தள்ளி மறைப்பது போல் மறைத்துவிட்டு திருமணம் செய்ய இந்த பணக்காரர்களுக்கா தெரியாது ஏன் காத்திருந்து என்னை மனந்தான் செய்த தப்புக்காக என்றால் பிறகு ஏன் நான்கு வருடம் கழித்து வந்தான் இப்படி ஏகப்பட்ட ஏன் ங்கள் அவள் மனதை போட்டு குழப்ப சத்யனையே பார்த்துக்கொண்டிருந்தாள் சத்யன் அவள் முன்னால் சொடக்குப்போட்டு அழைத்து ''என்ன மான்சி மறுபடியும் ஏதாவது குழப்பமா ''என்று கேட்க ''ம்ஹூம் இனிமேல் எந்த குழப்பமும் கிடையாது வாங்க கீழே போகலாம் ''என்று இப்போது மான்சி அவனை நோக்கி கையை நீட்ட சத்யன் நீட்டிய அவள் கையை அவசரமாக இருக பற்றிக்கொண்டான் இந்த புது முயற்சி வெற்றி பெறவேண்டும் என்று இறைவனை வேண்டினான் ''ஆதவன் வரவுக்காக.... ''மொட்டவிழக் காத்திருக்கும் .... ''மலர்களின் மௌன தவமாய்.... '' வெளிச்சக்காதலன் வரவுக்காக.... ''இசைக்காமல் காத்திருக்கும் ..... ''குயில்களின் அசையா தவமாய்... ''உனக்காக நான் காத்திருக்கிறேன்... ''என்னை புரிந்துகொண்டு .... ''ஏற்றுக் கொள்வாயா.... ''என் இனியவளே....!இருவரும் ஜோடியாக கைபிடித்து வருவதை பார்த்த சத்யனின் பெற்றோர் கண்கலங்க சிவா நிம்மதி பெருமுச்சுடன் கையில் இருந்த பிரவீனை முத்தமிட்டான் தன் பிடியில் இருந்த சத்யனின் கையை விட்டுவிட்டு சிவாவிடம் இருந்த பிரவீனை வாங்கி தன் மார்போடு அணைத்து உச்சியில் முத்தமிட்டாள் மான்சி சத்யன் மான்சியின் அருகில் வந்து தானும் குழந்தைக்கு முத்தமிட்டான் இப்படி அனைவரும் பிரவீனை மாறி மாறி முத்தமிட அவன் வெட்கத்துடன் கன்னத்தை துடைத்து கொண்டு தன் தாயின் தோளில் முகத்தைவைத்து கொண்டு அனைவரையும் பார்த்து சிரிக்க ஒரு குழந்தையின் வரவு ஒரு குடும்பத்தையே எப்படி மாற்றிவிடுகிறது சத்யன் தன் குழந்தையை கொஞ்சியபடியே ''என்ன சிவா நீங்க இன்னுமா ஆசிரமத்திற்கு கிளம்பலை ''என்று கிண்டலாக கேட்க சிவா வெட்கத்துடன் வளைந்து நெளிந்து ''ம்ம் இதோ கிளம்பிட்டேன் சார் ''என்று கூறினான் ''ஒருநிமிஷம் இருங்க என்னை இப்ப என்னென்னு கூப்பிட்டீங்க சாரா ஏன் சிவா மான்சி என்னை புருஷனா ஏத்துகிட்டாலும் உங்களுக்கு என்னை மச்சானாக ஏத்துக்க முடியலை அப்படித்தானே சிவா... ''என்று சத்யன் வருத்தத்துடன் கேட்க ''ஐயோ அப்படியெல்லாம் இல்லைங்க முதல்ல இருந்தே அப்படி கூப்பிட்டதால் பழகிப்போச்சு இனிமேல் கொஞ்சம் கொஞ்சமாக மாத்திக்கிறேன்'' என்று சிவா கூற ''ம் சரி சரி உடனே கிளம்புங்க இல்லேன்னா நிர்மலா நீங்க வராததுக்கு நான்தான் காரணம்ன்னு என்னை பண்ணி திட்டப்போறா ''என்று சத்யன் குறும்புடன் கூற சிவா வெட்கமாய் சிரித்தபடி உடனே கிளம்பினான் சில சமயங்களில் ஆண்களின் வெட்கம் கூட பேரழகாய் இருப்பது ஏன்....? அன்று மதிய உணவின் போது சத்யனின் ஆசையை நினைவில் வைத்து மான்சிதான் அவனுக்கு உணவு பரிமாறினாள் அவன் சாப்பிட்டு முடித்ததும் கை துடைக்க தன் முந்தானையை கொடுத்தாள் சத்யன் இதுதான் சாக்கு என்பதுபோல் கையை துடைத்துவிட்டு முந்தானையை அதிகமாக இழுத்து தான் அணிந்திருந்த சட்டைக்குள் லேசாக வியர்த்திருக்க அவள் புடவையால் தன் மார்பை துடைத்தான் மான்சி தன் தோளில் புடவையை ஜாக்கெட்டோடு சேர்த்து வைத்து பின் குத்தியிருந்ததால் தப்பித்தாள் இல்லையென்றால் அவள் மார்பு சேலை முழுவதும் அவன் கைகளில் சுருண்டிருக்கும் ''ப்ச் இதென்ன விளையாட்டு சேலையை விடுங்க யாராவது பார்க்க போறாங்க ''என்று மான்சி வலுக்கட்டாயமாக அவனிடமிருந்து புடவையை இழுத்து பறித்துக்கொண்டாள் பிறகு சத்யன் தன் அப்பாவுடன் பிசினஸ் விஷயமாக பேச முன்னால் இருந்த அலுவலக அறைக்கு போய்விட... குழந்தையை பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட்டிருந்த ஒரு பெண் குழந்தையை வாங்கிக்கொண்டு போய்விட தனித்து விடப்பட்ட மான்சிக்கு நேற்று இரவுமுழுவதும் தூங்காததால் தூக்கம் கண்ணை சுழற்ற மாடிக்குபோய் சத்யன் அறையில் ஒரு விரிப்பை எடுத்து கீழே விரித்து படுத்துகொண்டாள் படுத்தவுடன் தூங்கியும் விட்டாள் அப்பாவிடம் பேசிவிட்டு தன் அறைக்கு வந்த சத்யன் கீழே படுத்து உறங்கிக்கொண்டிருந்த மான்சியையே சிறிதுநேரம் பார்த்துகொண்டு இரு்ந்தான் பிறகு அவள் படுத்திருந்த அதே விரிப்பில் இன்னெரு தலையனையை போட்டு அவளருகே படுத்து தூங்கும் அவள் முகத்தையே வெகுநேரம் பார்த்தகொண்டு இருந்தான் ''அந்த ஒற்றை தலையனை மட்டுமே..... ''சொல்லும் அவள் துக்கங்களை..... ''உறக்கத்தில் கூட அவள் ..... ''தன் காதலையும்...... ''தன் காதலனையும்.... ''அவள் பிரிந்ததேயில்லையென்ற..... ''தேவ ரகசியங்களை......! மான்சியின் முகத்தையே பார்த்த சத்யன் அப்படியே தூங்கிப் போனான்

மாலை மணி ஐந்து தூக்கம் கலைந்து கண்விழித்த மான்சி எதிரில் இவள் முந்தானையால் முகத்தை மூடியிருந்த சத்யனை பார்த்து முதலில் திடுக்கிட்டு பின்னர் சுதாரித்துக்கொண்டு எழ முயற்ச்சிக்க முடியவில்லை புடவை முந்தானை சத்யனின் முகத்தை மூடி சுற்றி கழுத்தின் அடியில் வைத்துகொண்டு உறங்கினான் இவள் பதட்டத்துடன் புடவையை பிடித்து இழுக்க அந்த அசைவில் கண்விழித்தான் சத்யன் கண் பகுதியில் மட்டும் புடவையை நீக்கிய சத்யன் பதட்டத்துடன் புடவையை இழுத்து கொண்டிருந்த மான்சியைப் பார்த்து ''என்னாச்சு மான்சி ஏன் இவ்வளவு பதட்டம் இருஇரு நான் எடுத்துவிடுறேன் ''என்றவன் தன் கழுத்தை உயர்த்த இப்போது புடவை சுலபமாக மான்சியின் கைக்கு வர எடுத்து தன் இடுப்பில் சொருகிக்கொண்டு அவனை பார்த்து முறைத்தாள் லேசாக அசடு வழிந்த சத்யன் ''அது ஒன்னுமில்ல மான்சி இந்த புடவை முழுக்க உன்னோட வாசம் சூப்பரா இருந்திச்சா அதான் கொஞ்சநேரம் முகத்திலே போட்டு அந்த வாசத்தை முகர்ந்தேன் அப்படியே தூங்கிட்டேன் போல ப்ளீஸ் கோச்சுகாதே மான்சி ''என்று சத்யன் தன் பார்வையால் கெஞ்சினான் மான்சிக்கு அந்த பார்வை இதயத்தின் ஆழம் வரை செல்ல அவனை முறைப்பதை நிறுத்தி ''ஆமா நீங்க இங்கே ஏன் வந்து படுத்தீங்க கட்டில்ல படுக்க வேண்டியது தானே ''என்று கேட்க ''ம் நீ மட்டும் கீழே தரையில் படுத்துகிட்டு நான் மட்டும் கட்டில்ல படுக்கிறதா ம்ஹூம் இது சரிகிடையாது மான்சி நீ எங்க படுத்துகிறயோ அங்கேதான் நானும் படுப்பேன் இதுவும் கூட இனி மாறாது மான்சி ''என்று சத்யன் உறுதியாக கூறினான் மான்சி இதென்னடா புது குழப்பம் என்று நினைத்து அவனை பார்க்க ''என்ன மான்சி அப்படி பார்க்கிற நாம ஒரே கட்டில்ல சேர்ந்து படுக்கிறதால என்ன பிரச்சனை நீ ஒரு பக்கம் நான் ஒரு பக்கம்ன்னு படுக்கப்போறோம் அவ்வளவு பெரிய கட்டில்ல பத்து பேர் கூட படுக்கலாம் ''என்ற சதயன் முகத்தில் இரஞ்சுதலோடு 'ஐயோ இவ அதுக்கு ஒத்துக்கனும் கடவுளே' என்று மனதுக்குள் வேண்டியபடியே அவளிடம் சொல்ல மான்சி அவன் முகத்தை பார்த்துக்கொண்டே''இன்னும் மிச்சம் இருக்கிற ஒன்பது பொண்ணுங்க எப்ப வருவாங்க சார் ''என்று குறும்புடன் கேட்க சத்யனுக்கு அவள் பேச்சு புரியவில்லை இருந்தாலும் ஏதோ கிண்டல் செய்கிறாள் என்பதை அவள் பார்வையால் உணர்ந்தவன் அப்பிடியே உருண்டு அவளை நெருங்கி உட்கார்ந்திருந்த அவள் காலருகே தன் முகத்தை இருகைகளில் தாங்கி அவளை குறுகுறுவென பார்த்துகொண்டே ''நீ என்ன சொல்ற மான்சி எனக்கு புரியவே இல்லை ''என்று அவளிடமே திருப்பி கேட்டான் அவளும் அவ்வளவு நெருக்கமாக இருந்த அவன் முகத்தை பார்க்க கூச்சப்பட்டு பக்கத்தில் இருந்த தலையனையை சரி செய்வது போல லேசாக திரும்பி ''ம் கட்டில்ல பத்து பேர் படுத்துக்கலாம்ன்னு சொன்னீங்களே மிச்ச ஒன்பது பொண்ணுங்க எப்ப வருவாங்கன்னு கேட்டேன்''என்று சிரிக்காமல் சொல்ல சத்யன் அவள் சொன்னதன் அர்த்தத்தை உள்வாங்கி அடிப்பாவி நீ இவ்வளவு குறும்புத்தனமானவளா எனக்குமுதல்லயே இது தெரியாம போச்சே என்று எண்ணியவன் இவனும் அவளை கலாட்டா செய்ய நினைத்து ''இன்னும் ஒன்பது பேரா நல்லா ஜாலியாத்தான் இருக்கும் ஆனா என் பொண்டாட்டி ரொம்ப கோபக்காரியாச்சே அப்புறம் என் முதுகில் டின் கட்டிட்டா என்ன பன்றது ஏற்கனேவே அடிபட்டு இப்பதான் ஆஸ்பத்திரியில் இருந்து வந்திருக்கேன் மறுபடியும் அங்கே போக நான் தயாராக இல்லம்மா தாயே ''என்று ரொம்ப பயந்தவன் போல சத்யன் கூற ''ம்ம் அந்த பயம் எப்பவுமே இருக்கட்டும் ''என மான்சி விரல் காட்டி எச்சரிக்கை செய்துவிட்டு எழுந்திருக்க ''ஏய் ஏய் அதுக்குள்ள எங்கே போற ப்ளீஸ் ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே இரு மான்சி ''என்று தன் முகத்தருகே இருந்த அவள் மடியில் எக்கி தலையை வைத்து அவளை அசையவிடாமல் தன் கைகளால் இடுப்பை சுற்றி வளைத்துக்கொண்டான் சத்யன் ''கண்னே என் இதயத்தை .......... ''மட்டும் எடுத்துக் கொள்....! ''உன் மனச்சிறையே ...... ''சொர்க்கம் எனக்கு.... ''ஆனால் விடுதலை மட்டும் .... 'செய்துவிட்டதே ....!மான்சி சங்கடத்துடன் அவன் தலையை கீழே தள்ள முயற்ச்சிக்க சத்யன் நிமிர்ந்து ப்ளீஸ் என்பது போல் அவள் முகத்தை பரிதாபமாக பார்த்தான் மான்சி உடனே அவன் தலையிலிருந்து கைகளை எடுத்துவிட்டு ''ச்சு இதென்ன பிடிவாதம் மணி ஆறாகப்போகுது எந்திரிங்க கீழே பிரவீன் வேற என்ன பண்றான்னு தெரியலை நீங்க என்னடான்னா இப்படி நேரங்காலம் தெரியாம என்னை சங்கடப்படுத்துறீங்க கீழே எல்லாரும் என்னைதான் தப்பா நினைப்பாங்க ''என்று அவனிடம் கெஞ்சினாள் சத்யனுக்கு அவள் பேச்சு லேசான கோபத்தை வரவழைத்தது ''யார் என்ன சொன்னா எனக்கென்ன நான் என் பொண்டாட்டி கூடத்தானே இருக்கேன் நான் ஒன்னும் வேற யாரும் தெருவில் போறவளை கூட்டிவந்து ரொமான்ஸ் பண்ணலையே அதுவுமில்லாம எங்க வீட்டை நீ சாக்கு சொல்லாதே உனக்கு பிடிக்கலைன்னா அதை நேரடியாக சொல்லு அதைவிட்டுட்டு ஏன் மத்தவங்களை சொல்ற ''என்று கோபமாய் சத்யன் எழுந்து உட்கார்ந்து கொண்டான் மான்சிக்கு என்னடா இது இவனுக்கு இப்படி தொட்டதுக்கெல்லாம் கோபம்வருதே இன்னும் மிச்சகாலத்தை இவனோடு எப்படி கழிப்பது என்று புதிதாய் கவலை வந்தது ''ச்சு நான் அப்படி சொல்லலை குழந்தை தனியே இருப்பானேன்னுதான் அதுமாதிரி சொன்னேன் நீங்க வேறமாதிரி அர்த்தம் பண்ணிகிட்டு கோபப்படுறீங்க ''என்று முகத்தை வருத்தமாக வைத்துக்கொண்டு மான்சி கூற அவளின் வருத்தத்தை பார்த்து வேதனைப்பட்ட சத்யன் ''இதோ பார் மான்சி குழந்தையை பார்த்துக்க கீழே ஏகப்பட்ட ஆளுங்க இருக்காங்க ஆனா என்னை கவனிச்சுக்க நீ மட்டும்தான் உனக்கு என்கூட செக்ஸ் வச்சுக்க பிடிக்கலைன்னா அது நியாயமானதுதான் ஏன்னா நான் உனக்கு செய்த அநியாயம் அந்த மாதிரி அதுக்காக நான் உன்கிட்டே பலமுறை மன்னிப்பு கேட்டுட்டேன் இனிமேலும் கேட்பேன் ஆனால் இப்படி தொடுவது அணைப்பது போன்ற இதெல்லாம் வாழ்க்கையில் இபோதுதான் கிடைக்கும் இந்த சின்ன சின்ன சந்தோஷங்கள் இன்னும் கொஞ்சநாள் கழிச்சு நாம இப்படியெல்லாம் இருக்கனும்னு நெனைச்சாலும் அப்போது கிடைக்காது அதனால இதை மட்டும் தடுக்காதே மான்சி ப்ளீஸ் ''என்று சத்யன் கண்நிறைந்த தாபத்துடன் அவளிடம் கைநீட்டி யாசிக்க மான்சி சட்டென அவன் கைகளை பற்றிக்கொண்டு ''என்ன நீங்க ஏதேதோ பேசிகிட்டு நானும் ஒன்னும் மரக்கட்டை இல்லை உயிரும் உணர்வும் உள்ள ஒரு மனுசிதான் எனக்கும் எல்லா கனவுகளும் ஆசைகளும் இருக்கு ஆனால் பழசையெல்லாம் நான் மறந்தாலும் என் உடம்பில் இருக்கும் காயங்கள் என்னை மறக்க விடலை ஒவ்வொரு நாளும் குளிக்கும் போதும் உடைமாற்றும் போதும் அந்த காயங்களை பார்த்து நான் எவ்வளவு மனவேதனைப் படுறேன்னு உங்களுக்கு தெரியுமா நான் என்ன உங்களை தொடவே கூடாதுன்னா சொன்னேன் என் மனம் சிறுகச்சிறுகத்தான் மாறும் அவசரப்படாமல் இருங்கன்னுதான் சொல்றேன் தயவுசெய்து புரிஞ்சிக்கங்க ''என்று மான்சி கண்களில் கண்ணீருடன் அவனிடம் தன் நிலைமையை எடுத்துச்சொல்ல சத்யனுக்கு அவள் காயங்கள் என்று எதைச்சொல்கிறாள் என்பது புரிந்தது அந்த காயங்களை இவன் எந்த நிலைமையில் எப்படி ஏற்ப்படுத்தினான் என்பதை எண்ணிப்பார்த்த சத்யன் அந்த நிமிடமே தன் உயிர் போய்விடக்கூடாதா என்று மனமுடைந்து கைகளால் தன் முகத்தை மூடிக்கொண்டு குமுறினான் அவன் குமுறுவதை கணட மான்சி தன் கண்ணீரை அவசரமாக துடைத்துக்கொண்டு அவன் முகத்தை மூடியிருந்த கைகளை விலக்கி அவனை இழுத்து தன் மார்பில் சாய்த்து அணைத்து அவன் உச்சியில் தன் முகத்தை வைத்துக் கொண்டு''ச்சு என்னங்க இது சின்னகுழந்தையாட்டம் கண்ணீர் விட்டுகிட்டு காலப்போக்கில் எல்லாம் சரியாயிடும் நாமலும் கொஞ்சம் கொஞ்சமாக சரி பண்ண முயற்ச்சிப்போம்''எனறவள் அவன் முகத்தை நிமிர்த்தி நெற்றியில் தன் இதழ்களை பதித்துவிட்டு ''இனிமேல் இதுமாதிரி கண்ணீரெல்லாம் விடக்கூடாது இப்போ எழுந்திருச்சு போய் முகம் கழுவி கீழே போய் சாப்பிட ஏதாவது இருக்கான்னு பார்க்கலாம் எனக்கு ரொம்ப பசிக்குது பொண்டாட்டியோட பசியக்கூட தெரிஞ்சிக்க முடியலை உங்ககூடயெல்லாம் எப்படித்தான் குடும்பம் நடத்துறதோ ''என்று மான்சி போலியாக சலித்து அவனை இயல்புக்கு கொண்டுவர முயற்ச்சித்தாள்

சத்யனுக்கு கடவுள் தனக்கு எப்பேர்ப்பட்ட மனைவியையும் வாழ்க்கையையும் பரிசாக கொடுத்திருகிறார் என்று உள்ளம் பூரித்தான் . ''நான் உன்னை ..... ''உனக்காகவே நேசிக்கிறேன்... ''உன் நிஜத்தை நேசித்து.... ''உனக்காகவே காத்திருக்கிறேன்.... ''இனி நீயின்றி நான் ''உயிர்க் கூடின்றி ... ''ஒலிச் சிறகை மட்டுமே... ''விரிக்கும் பாடற்பறவை ...!

No comments:

Post a comment