Monday, 26 August 2013

ஐ ஹேட் யூ, பட். 9

அத்தியாயம் 25 அன்று இரவு.. அசோக் நீண்ட நேரம் தூக்கம் வராமல்.. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்..!! ப்ரியாவின் நினைவுகளே அவனுடைய நெஞ்சில் அலை அலையாய் வந்து மோதிக் கொண்டிருந்தன. அவளுடய கனிவான பேச்சு.. காதலான பார்வை.. கவின்மிகு புன்னகை..!! 'என் மீது எவ்வளவு காதல் வைத்திருக்கிறாள்.. எனக்காக எப்படியெல்லாம் உருகுகிறாள்.. நானுந்தான் அவளை எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கிறேன்.. ச்சே.. பாவம் அவள்..!!' கோவிந்தும், நேத்ராவும் கூட அடிக்கடி அவன் மனதில் வந்து போனார்கள். 'அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் எவ்வளவு காதல் வைத்திருக்கிறார்கள்.. என்ன அழகாக ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்துக் கொள்கிறார்கள்.. அடுத்தவரின் வளர்ச்சியிலும், சந்தோஷத்திலும் எவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறார்கள்..?? காதலிப்பவர்களின் நிலையை உயர்த்திப் பார்ப்பதுதானே உண்மையான காதலாக இருக்க முடியும்..?? ப்ரியாவின் நிலை உயர்ந்தபோது, அதற்காக நான் ஏன் மகிழ்ந்து போயிருக்க கூடாது..?? அந்த மகிழ்ச்சி எனக்கு இல்லாமல் போனதால்தானே எல்லா பிரச்சினையும்..??'

தீவிர சிந்தனை அவனுடைய உறக்கத்தை திருடியிருந்தது. பிறகு அவனையும் அறியாமல் தூக்கத்தின் பிடியில் சிக்கிக்கொள்ள, பின்னிரவு இரண்டு மணி ஆயிற்று. எரிச்சலெடுக்கும் விழிகளுடன், காலையில் சற்று தாமதமாகவே எழுந்தான். எழுந்ததுமே குளித்துவிட்டு, ஆபீசுக்கு கிளம்பி தனது அறையை விட்டு வெளியே வந்தான். "என்ன.. இன்னைக்கு தொரை ஒன்பது மணி வரை தூங்கிட்டாரு..??" செல்வி காபியை நீட்டிக்கொண்டே கேட்டாள். "நைட்டு சரியா தூக்கம் இல்ல அண்ணி..!! ப்ரியா இன்னும் வரலையா..??" "இன்னும் வரலைடா.. ஆளைக்காணோம்.!!" அசோக் காபியை எடுத்துக்கொண்டு அடுத்த அறைக்கு சென்றான். ப்ரியாவின் முகத்தை உடனே பார்க்கவேண்டும் போலிருந்தது. டேபிள் முன்பாக அமர்ந்துகொண்டான். ஓரமாக மூடி வைக்கப்பட்டிருந்த அவனது லேப்டாப்பை தன் பக்கமாக இழுக்க, டேபிள் மீதிருந்த ஒரு புத்தகம் தவறி கீழே விழுந்தது. அந்த புத்தகத்துக்குள் வைக்கப்பட்டிருந்த புகைப்படம் ஒன்றும் வெளியே நழுவி விழுந்தது. குனிந்து அதை எடுத்தான். ப்ரியாவின் புகைப்படம்..!! முன்பொரு நாள் ராஜேஷ் அவனிடம் காட்ட நினைக்க, அதை பார்க்காமலே விசிறி எறிந்தானே.. அதே புகைப்படம்..!! மஞ்சள் நிற புடவையுடன் மந்தகாசமாக புன்னகைக்கிற ப்ரியாவின் புகைப்படம்..!! அசோக் ப்ரியாவை கையில் அள்ளிக்கொண்டான். காபியை உறிஞ்சிக்கொண்டே அவளுடைய அழகு கொஞ்சும் முகத்தை சிறிது நேரம் ஆசையாக பார்த்தான். அவனுடைய மூளை தனியாக ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தது. அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவனாய், அந்த புகைப்படத்தை எடுத்துக்கொண்டு எழுந்தான். நடந்து ஹாலுக்கு வந்தான். சோபாவில் அமர்ந்து ந்யூஸ் பேப்பர் புரட்டிக்கொண்டிருந்த ராஜேஷின் முன்பாக வந்து நின்றான். தனக்கு முன் நிழலாட ராஜேஷ் நிமிர்ந்து பார்த்தான். தம்பி என்று தெரிந்ததும், சற்றே குழப்பமாக நெற்றியை சுருக்கி.. "என்னடா..??" என்றான். "எனக்கு உடனே கல்யாணம் பண்ணிக்கணும் போல இருக்கு..!!" "என்னது..???" "நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணை.. ஒரு வருஷத்துக்குள்ள செலக்ட் பண்ணி.. உனக்கு சொல்றேன்னு சொன்னேன்ல..??" "ம்ம்.." "இவதான் அந்தப்பொண்ணு..!!" அசோக் கையிலிருந்த ஃபோட்டோவை அண்ணனிடம் நீட்ட, அதை பார்க்காமலே ராஜேஷ் டென்ஷனாக சீறினான். "இங்க பாருடா.. நீ இழுத்த இழுப்புக்குலாம் இனி எங்களால ஆட முடியாது..!! ப்ரியாதான் பொண்ணுன்னு நாங்க எல்லாம் முடிவு பண்ணிட்டோம்.. அந்தப்பொண்ணும் உன் மேல உயிரையே வச்சிருக்குறா.. அவளை விட வேற நல்ல பொண்ணு யாருடா உனக்கு கெடைப்பா..?? நல்லா சொல்றேன் கேட்டுக்கோ.. அவளை கல்யாணம் செய்துக்குறதா இருந்தா.. எங்கிட்ட சொல்லு.. இல்ல.. உன் இஷ்டந்தான் உனக்கு முக்கியம்னா.. நீ என்ன வேணா பண்ணிக்கோ.. எவளை வேணா கட்டிக்கோ.. எப்படியோ போ.. எங்ககிட்ட சொல்லிட்டு இருக்காத..!!" "ஹாஹா.. மொதல்ல ஃபோட்டோவை பாத்துட்டு அப்புறம் கத்துடா.. லூஸு..!!" அசோக் சிரிப்பாக சொல்ல, அப்புறந்தான் ராஜேஷ் ஃபோட்டோவையே பார்த்தான். உடனே அவன் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு. டேய்.. அசோக்கு..!!" என்று கத்தியே விட்டான். "ஆமாண்டா.. ப்ரியாவை மேரேஜ் பண்ணிக்க எனக்கு சம்மதம்..!! அப்பாட்ட பேசு.. நீயே கஷ்டப்பட்டு தேடி கண்டுபுடிச்ச பொண்ணுன்னு சொல்லி.. அவர்ட்ட நல்ல பேர் வாங்கிக்கோ..!!" அசோக் கண்சிமிட்டினான். "ஹாஹா..!! ஹேய் செல்வி.. இங்க வாடி.. என் தம்பி என்ன சொல்றான்னு கேளு..!!" ராஜேஷ் கிச்சன் பக்கம் திரும்பி கத்த, "என்னங்க.. என்னாச்சு..??" என்று கேட்டவாறே செல்வி ஓடிவந்தாள். ராஜேஷே அவளிடம் விஷயத்தை சொல்ல, அவளுக்கும் இப்போது தாங்க முடியாத சந்தோஷம். 'அடடடா.. இப்பத்தாண்டா உனக்கு புத்தியே வந்திருக்கு.. குடும்பத்து மேல அக்கறை உள்ள புள்ள மாதிரி இப்பத்தான் நீ நடந்துக்கிட்டிருக்குற..!!' என்று அசோக்கை பார்த்து பெருமிதமாக சொன்னாள். அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு கல்யாணப் பேச்சுதான் அங்கு ஓடிக்கொண்டிருந்தது. 'அப்பா, அம்மாவிடம் எப்போது சொல்வது.. வரதராஜனிடம் எப்படி பேசுவது.. எத்தனை நாட்களுக்குள் கல்யாணத்தை முடிப்பது.. ரிஷப்ஷன் எங்கே வைத்துக்கொவது..' என்பது மாதிரியாக பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அசோக்கின் செல்போன் உள்ளறைக்குள் இருந்து அலறியது. செல்வியே உள்ளே சென்று அதை எடுத்து வந்து அசோக்கிடம் நீட்டினாள். அசோக் செல்போனை வாங்கி பார்த்தான். செண்பகம் கால் செய்திருந்தாள். 'இவள் எதற்கு இந்த நேரத்தில்..??' என்று சற்றே குழப்பமான அசோக், கால் பிக்கப் செய்து பேசினான். "சொல்லு செம்பு..!!" "மா..மாமா.. எங்க இருக்கீங்க..??" செண்பகத்தின் குரலில் ஒரு பதட்டம். "நான் இன்னும் கெளம்பல செம்பு.. வீட்லதான் இருக்கேன்.. சொல்லு..!!" "இங்க ஆபீஸ்ல கொஞ்சம் பிரச்னை மாமா..!!" செண்பகம் சொன்ன விதத்திலேயே, இப்போது அசோக்கையும் மெலிதான ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டது "பிரச்னையா..?? என்ன பிரச்னை..??" "யு.ஏ.டி போஸ்ட்போன் ஆயிடுச்சு.. ஏதோ பெரிய பிரச்னை போல.. ப்ரியாக்காதான் எல்லாத்துக்கும் காரணம்னு சொல்றாங்க.. பாலா ரூமுக்குள்ள அவருக்கும், அக்காவுக்கும் பயங்கர ஆர்க்யுமன்ட் நடந்துட்டு இருக்கு.. ப்ராப்ளம் ரொம்ப சீரியஸ் போல இருக்கு மாமா.. எனக்கு முழுசா தெரியல..!! நீங்க உடனே கெளம்பி வர்றீங்களா.. ப்ளீஸ்..!!" அசோக்கிற்கு கொஞ்ச நேரம் எதுவுமே புரியவில்லை. 'யு.ஏ.டி எதற்காக போஸ்ட்போன் செய்தார்கள்..?? நேற்று இரவு வரை எந்தப்பிரச்சனையும் இல்லையே..?? திடீரென என்ன ஆயிற்று..?? அதுவும் ப்ரியாதான் காரணம் என்றால்..??' யோசிக்க யோசிக்க அவனுக்கு குழப்பமே மிஞ்சியது. ப்ரியாவின் நம்பருக்கு இரண்டு மூன்று முறை கால் செய்து பார்த்தான். ரிங் சென்றது, கால் பிக்கப் செய்யப்படவில்லை. இப்போது அசோக்கை ஒருவித அவசரம் தொற்றிக் கொண்டது. படக்கென எழுந்தான். தன் அறைக்குள் நுழைந்தவன் பைக் சாவியுடன் வெளியே வந்தான். 'என்னடா.. என்னாச்சு..?' கேட்டவாறே எதிர்ப்பட்ட செல்விக்கு பதிலே சொல்லாமல், பரபரப்பாய் வீட்டை விட்டு வெளியேறினான். பைக்கை ஸ்டார்ட் செய்து பறந்தவன், ஆபீஸை சென்றடைய அரைமணி நேரம் ஆனது. லிஃப்ட் ஏறி அவர்களுடைய தளத்திற்கு சென்றான். டீமில் இருப்பவர்கள் ஆங்காங்கே நின்று, ஏதோ கூடிக்கூடி பேசிக்கொண்டிருந்தார்கள். உள்ளே நுழைந்ததுமே செண்பகம் பதற்றம் அப்பிய முகத்துடன் எதிரே வந்தாள். "என்ன பிரச்னை செம்பு.. ஏதாவது தெரிஞ்சுச்சா..??" "நேத்து யு.ஏ.டி ஸ்டார்ட் பண்றதுக்காக.. பில்ட் எடுத்து டெப்லாய் பண்ணிருக்காங்க.. ஆனா.. ப்ரொஸீட் பண்ண முடியாம மாதிரி ஷோ ஸ்டாப்பர்..!! வேற வழி இல்லாம.. யு.ஏ.டி போஸ்ட்போன் பண்ணிருக்காங்க.. க்ளையன்ட் ரொம்ப கடுப்பாயிட்டாங்க போல.. நம்ம கம்பனியை கன்னாபின்னான்னு திட்டிருக்காங்க..!! நேத்து நைட்டு ப்ரியாக்கா லாஸ்ட் மினிட்ல ஒரு கோட் செக்கின் பண்ணிருக்காங்க மாமா.. அதனாலதான் எல்லா ப்ராப்ளமும்..!!" "அதுல என்ன ப்ராப்ளம்..??" "அப்ளிகேஷனே வொர்க் ஆகல மாமா.. எந்த லிங்க் க்ளிக் பண்ணினாலும்.. 'ப்ரியா இஸ் எ ஸ்டுபிட்.. ப்ரியா இஸ் எ ஸ்டுபிட்..' னு கொட்டை எழுத்துல வந்திருக்கு..!! ஏதோ.. கேர்லஸா செக்கின் பண்ணிட்டாங்கபோல.. அக்கா பாவம் மாமா.. காலைல இருந்து.. " செண்பகம் சொல்லிக்கொண்டிருக்க, அசோக்கிற்கு இப்போது சுருக்கென்று இருந்தது. அதிர்ச்சியில் அவனது விழிகள் அகலமாய் விரிந்து கொண்டன. ப்ரியாவை சீண்டுவதற்காக நேற்று இரவு அவளுடைய லேப்டாப்பில் அவன் செய்த வேலைதான் எல்லாவற்றிற்கும் காரணம் என்பது உடனே அவனுக்கு புரிந்து போனது. அவள் மட்டும் பார்ப்பாள் என்று எண்ணி, அப்ளிகேஷனை செயலிழக்க செய்து, 'ப்ரியா இஸ் எ ஸ்டுபிட்..' என்று திரும்ப திரும்ப வருமாறு.. ப்ரோக்ராம் சில்மிஷம் செய்து வைத்திருந்தான். அதை கவனிக்காமல் அவள் செக்கின் செய்து விட்டாள் போலிருக்கிறது. அதனால்தான் எல்லா பிரச்சினையும்..!!தான் விளையாட்டாய் செய்த காரியம் எவ்வளவு பெரிய விபரீதத்தை உண்டு பண்ணியிருக்கிறது என்பதை உணர்ந்து, அசோக் அப்படியே தளர்ந்து போனான். உள்ளுக்குள் பொடிப்பொடியாக நொறுங்கினான். தான் செய்த தவறுக்காக இப்போது ப்ரியா மாட்டிக்கொண்டாள் என்பதை எண்ணும்போது, அவனுடைய இதயத்தில் ஒரு இனம்புரியாத வலி. 'ச்சே..' என்று நொந்துபோனவனாய் தலையை பிடித்துக் கொண்டான். தடுமாற்றமான குரலில் செண்பகத்திடம் கேட்டான். "ப்..ப்ரியா இப்போ எங்க செம்பு..??" "மீட்டிங் முடிஞ்சு அக்கா இப்போதான் அவங்க ரூமுக்கு போனாங்க.. ரொம்ப அப்சட்டா இருக்காங்க மாமா..!!" செண்பகத்தை ஒரு கையால் விலக்கிவிட்டு, அசோக் ப்ரியாவின் அறைக்கு விரைந்தான். 'ச்சே.. என்ன காரியம் செய்துவிட்டேன்..??' என்று தன்னைத்தானே மனதுக்குள் திட்டியவாறு, அறைக்கதவை தள்ளி உள்ளே நுழைந்தான். ப்ரியா அழுது கொண்டு இருந்திருப்பாள் போலிருக்கிறது. யாரோ அறைக்குள் நுழைகிறார்கள் என்று உணர்ந்ததும், அவசரமாய் தன் விழிகளை துடைத்துக் கொண்டாள். அப்புறம் அது அசோக் என்று தெரிந்ததும், "அசோக்..!!" என்று ததழத்த குரலில் கத்தினாள். உடைந்து போய் மீண்டும் அழுதவாறே, அவளுடைய இருக்கையை விட்டு எழுந்து, இவனை நோக்கி ஓடி வந்தாள். "எ..என்னாச்சு ப்ரியா..??" என்ன பேசுவதென்று புரியாமல் அவ்வாறு கேட்டான் அசோக். "என்னாச்சுன்னே எனக்கு ஒன்னும் புரியல அசோக்.. எல்லாம் போச்சு.. நான் இத்தனை நாளா சம்பாத்திச்ச பேர், மதிப்பு எல்லாம் போச்சு..!! யாரோ என் மெஷின் அக்ஸஸ் பண்ணி தப்பான கோட் சேர்த்திருக்காங்க.. அதை கவனிக்காம நானும் செக்கின் பண்ணிட்டேன்..!! நைட்டு வீட்டுக்கு போய் தூங்குறதுக்கே ஒரு மணி ஆயிடுச்சுடா.. காலைல மூணு மணிக்கு எனக்கு கால் வந்தது.. அப்போலருந்து நான் தூங்கவே இல்ல..!! ஒரே டென்ஷன் அசோக்..!! இவங்கலாம் நான்தான் எல்லாத்துக்கும் காரணம்னு சொல்றாங்க.. நான் சொல்றதை யாருமே நம்ப மாட்டேன்றாங்கடா..!! யாரு இந்த வேலையை செஞ்சான்னே எனக்கு ஒன்னும் புரியல அசோக்..!!" ப்ரியா படபடவென பரிதாபமாக சொல்ல, அசோக்கால் அதற்கு பிறகும் பொறுக்க முடியவில்லை. "நா..நான்தான் ப்ரியா.. நான்தான் செஞ்சேன்..!!" என்று உண்மையை உடனே உடைத்துவிட்டான். அவன் சொன்னதுமே ப்ரியாவின் முகம் பட்டென மாறிப்போனது. அவளுடைய அழுகை சட்டென நின்று போனது. அப்படியே அதிர்ந்து போனவளாய் அசோக்கின் முகத்தையே திகைப்பாய் பார்த்தாள். இன்னுமே அவன் சொன்ன வார்த்தைகளை நம்ப முடியாத மாதிரியான ஒரு பார்வை. அப்புறம் அசோக்.. "நா..நான்தான் ப்ரியா..!!" என மீண்டும் தாழ்ந்த குரலில் சொல்ல, ப்ரியா இப்போது தளர்ந்து போனாள். பொத்தென்று அவளுடய சேரில் அமர்ந்தாள். அசோக்கை ஏறிட்டு பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தாள். "ஏன் அசோக்..??" என்று ஏக்கமாக கேட்டாள். அசோக் இப்போது அப்படியே உருகிப் போனான். பட்டென அவளை நெருங்கி அவளுடைய கையை பற்றிக்கொண்டான். "ஸாரி ப்ரியா.. நா..நான்.. நான் வேணுன்னு பண்ணல.. சும்மா வெளையாட்டுக்கு பண்ணேன்.. உன்னை சீண்டுறதுக்காக..!! நீ மட்டும் பார்ப்பேன்னு நெனச்சேன்.. அது இவ்வளவு பெரிய பிரச்னை ஆகும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..!!" அசோக் உண்மையான வருத்தத்துடன் சொன்னான். ப்ரியா எதுவும் பேசவில்லை. சில வினாடிகள் எங்கேயோ வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். என்ன செய்வதென்றே எதுவும் புரியாதவளாய், உணர்ச்சியற்ற ஜடம் போல அமர்ந்திருந்தாள். ஒரு அரை நிமிடம் இருக்கும்..!! அப்புறம் ஏதோ முடிக்கு வந்தவளாய் நிமிர்ந்தாள். அசோக் அவளையே இரக்கமாக பார்த்துக் கொண்டிருக்க, அவள் தனது விழிகளில் வழிந்த நீரை அவசரமாய் துடைத்துக் கொண்டாள். "ஸாரி ப்ரியா..!!" என்றான் அசோக் மீண்டும். "பரவால அசோக்.. விடு..!!" இறுக்கமாக சொன்ன ப்ரியா, தனது லேப்டாப்பை தன் பக்கமாக இழுத்தாள். படபடவென்று ஏதோ டைப் அடிக்க ஆரம்பித்தாள். "பா..பாலா என்ன சொன்னாரு..??" அசோக் தயங்கி தயங்கி கேட்டான். "அவர் என்ன சொல்வாரு..?? நம்ம கம்பனி மானத்தை நான் வாங்கிட்டதா சொன்னாரு.. எல்லா ப்ளானும் என்னால ஸ்பாயில் ஆயிடுச்சுன்னு சொன்னாரு.. கேவலமா திட்டினாரு..!! மதியம் இன்னொரு எக்ஸ்ப்ளனேஷன் மீட்டிங் அரேஞ்ச் பண்ணிருக்காரு..!! ஆனா.. அந்த மீட்டிங் அட்டன்ட் பண்ண நான் இருக்க மாட்டேன்..!!" "இ..இருக்க மாட்டியா..?? எ..என்ன சொல்ற..??" அசோக் குழப்பமாய் கேட்டான். "வேலையை ரிஸைன் பண்ணப்போறேன்.. லெட்டர் டைப் பண்ணிட்டு இருக்குறேன்..!!" ப்ரியா சொல்ல, அசோக் டென்ஷனாகிப் போனான். "ஹேய்.. இப்போ என்னாயிடுச்சுன்னு ரிஸைன் பண்ற நீ..??" "இன்னும் என்ன ஆகணும் அசோக்..?? இத்தனை நாளா நீ மட்டும் சொல்லிட்டு இருந்த.. இன்னைக்கு எல்லாரும் என்னை ஸ்டுபிட்னு சொல்றாங்க.. நான் ஸ்டுபிட்ன்ற விஷயம் யு.எஸ் வரை போயிடுச்சு..!! புரிஞ்சுக்கோ அசோக்.. என்னால முடியாது.. ஆளாளுக்கு வந்து கேள்வி கேட்பாங்க.. இத்தனை நாளா என்னை ஆஹா ஓஹோன்னு பாராட்டினவங்களே, இப்போ வந்து என்னால எல்லாம் நாசமா போச்சுன்னு சொல்வாங்க.. கேவலமா பார்ப்பாங்க..!! அந்த அவமானத்தை என்னால தாங்கிக்க முடியாது அசோக்.. அதைவிட ரிஸைன் பண்ணிடுறது பெட்டர்..!!" அறிவில்லாம பேசாத ப்ரியா.. நீ என்ன தப்பு பண்ணின.. ரிஸைன் பண்றதுக்கு..?? நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு..!! பாலாட்ட போய் நான் பேசுறேன்.. எல்லா பிரச்சினைக்கும் நாந்தான் காரணம்னு உண்மையை ஒத்துக்குறேன்.. அவங்க என் மேல என்ன ஆக்ஷன் எடுக்குறாங்களோ எடுக்கட்டும்.. உனக்கு எந்தப் பிரச்சினையும் வராம நான் பாத்துக்குறேன் ப்ரியா.. சரியா..??" அசோக் தவிப்பாக கேட்க, ப்ரியா வேண்டாம் என்பது போல தலையை அசைத்தாள். "வேணாம் அசோக்.. ஆளாளுக்கு கேள்வி கேட்டு உன்னை டார்ச்சர் பண்ணுவாங்க.. உன் பெர்ஃபார்மன்ஸ் ரெகார்ட்ல இது ஒரு ப்ளாக் மார்க் மாதிரி ஆயிடும்.. அந்த அவார்ட் உனக்கு கெடைக்காது.. அடுத்த வருஷம் ப்ரோமோஷன் உனக்கு இருக்காது..!!" "ஸோ வாட்..??" "தேவை இல்லாம இந்த பிரச்னைல நீ சிக்கிக்காத.. உனக்கு இந்த கஷ்டம்லாம் வேணாம்.. நானே இதை ஹேண்டில பண்ணிக்குறேன்.. தப்புலாம் என் மேலதான்னு நான் ஒத்துக்கிட்டு ரிஸைன் பண்ணிடுறேன்.. இந்த பிரச்சினை ஈசியா முடிஞ்சிடும்..!! நீ உன் இடத்துக்கு போ.. இதெல்லாம் கண்டுக்காம உன் வேலையை பாரு.. போ..!!" சொல்லிக்கொண்டே ப்ரியா டைப் அடிப்பதை தொடர்ந்தாள். "நோ.. உன்னை ரிஸைன் பண்றதுக்கு நான் அல்லோ பண்ண மாட்டேன்..!!" "புரியாம பேசாத அசோக்.. நான் ரிஸைன் பண்றதுதான் இதுக்கு ஒரே வழி..!!" "நான் செஞ்சதுக்கு நீ ஏன் தண்டனை அனுபவிக்கனும்..??" "இதை நான் தண்டனையாவே நெனைக்கல அசோக்..!! நீ செஞ்சதால கெடைச்சதுதான் இது எல்லாமே..!!!! இந்த பேர்.. இந்த பாராட்டு.. இந்த மதிப்பு.. இந்த டி.எல் போஸ்ட்.. எல்லாமே உன்னால எனக்கு கெடைச்சதுதான்..!! இப்போ அதெல்லாம் உனக்காவே இழக்குறது.. எனக்கு ஒன்னும் பெரிய விஷயமா தோணலை.. சந்தோஷமா நான் ரிஸைன் பண்றேன்.. போதுமா..??" ப்ரியா அசோக்கை ஏறிட்டு நிதானமாக சொல்ல, அவன் சற்றே ஆடிப்போனான். "ப்..ப்ரியா ப்ளீஸ்..!!" என்றான் திணறலாக. "டைப் அடிச்சு முடிச்சுட்டேன் அசோக்.. அனுப்ப போறேன்..!!" "வே..வேணாம் ப்ரியா.. நான் சொல்றதை கேளு..!!" இப்போது அசோக்கின் கண்களிலும் நீர் துளிர்க்க ஆரம்பித்திருந்தது. 'உன்னை கம்பனியை விட்டே தூக்குறேன் பாரு..' என்று ஒருகாலத்தில் அவளிடம் சவால் விட்டது இப்போது நினைவுக்கு வந்தது. அவனே அறியாமல்.. அவன் செய்த ஒரு காரியம்.. இப்போது அவள் கம்பனியை விட்டு வெளியேற காரணம் ஆகிவிடுமோ என்று பயந்தான்..!! அது நடந்துவிடக்கூடாது என்று தவித்தான். 'ப்ளீஸ் ப்ரியா.. ப்ளீஸ் ப்ரியா..' என்று கெஞ்சினான். ப்ரியாவும் கண்களில் நீர் அரும்ப இவன் முகத்தையே காதலாக பார்த்தாள். உதடுகள் பிரித்து மெலிதாக புன்னகைத்தாள். அவனைப் பார்த்து அவ்வாறு புன்னகைத்துக்கொண்டே, தனது வலது கையை லேப்டாக்கு நகர்த்தி, பட்டென்று என்டர் தட்டினாள். "அனுப்பியாச்சு..!! ஐ க்விட்..!!" என்றாள் புன்னகை சற்றும் மாறாதவளாய். அசோக் இப்போது அவளையே பிரமிப்பாக பார்த்தான். மனதுக்குள் பொங்கிய அவள் மீதான காதல் வெள்ளம், எல்லா அணைகளையும் உடைத்து எறிந்துவிட்டு, காட்டாறாக ஓடியது. ப்ரியா லேப்டாப்பை மூடி வைத்தாள். எழுந்து கொண்டாள். தன்னுடைய பேகை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டாள். மிக இயல்பான குரலிலேயே அசோக்கிடம் சொன்னாள். "காலைல இருந்து என்னால முடியலை அசோக்.. ஒரே தலைவலி .. டார்ச்சரா இருந்தது..!! இப்போத்தான் ரொம்ப நிம்மதியா இருக்கு..!! நான் வீட்டுக்கு கெளம்புறேன்.. போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன்..!!" அசோக் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தான். ப்ரியாவின் முகத்தையே காதலும் ஏக்கமுமாய் பார்த்துக் கொண்டிருந்தான். ப்ரியா இப்போது அவளுடைய கையால் அசோக்கின் கையை பற்றிக்கொண்டாள். கண்களில் ஒரு தெளிவும், உதட்டில் ஒரு மெலிதான புன்முறுவலுமாக சொன்னாள்.

"இத்தனை நாளா உன்கூட எதுக்கெதுக்கோ போட்டி போட்டிருக்கேன் அசோக்.. சின்னப்புள்ள மாதிரி..!! வேணுன்னே உன்னை.. லேட் நைட் வொர்க் பண்ண வச்சிருக்கேன்.. அப்ரூவ் பண்ணின லீவை கேன்சல் பண்ணிருக்கேன்.. உனக்கு புடிக்காத வேலையா குடுத்து டென்ஷன் பண்ணிருக்கேன்.. ஸ்குவாஷ் கோர்ட்ல அடிச்சு போட்டிருக்கேன்.. ஹாஹா..!!" "ஹ்ம்ம்..!!" "எல்லாமே ஒரு கொழந்தையோட கோவம் மாதிரிதான் அசோக்.. உடனே வரும்.. உடனே போயிடும்.. உள்ளலாம் வச்சிருக்க மாட்டேன்..!! அந்த கோவத்துல நான் என்ன செஞ்சிருந்தாலும்.. உன் மேல இருந்த லவ் மட்டும்.. ஒரு பர்சன்ட் கூட எப்போவும் குறைஞ்சது இல்ல..!! வெளையாட்டுல வேணா உன்னை ஜெயிக்க நெனச்சிருப்பேன்.. காதல்ல உன்கிட்ட தோக்கனும்னுதான் எப்போவும் நெனச்சேன் அசோக்..!! என்னை நம்புறல..?? ம்ம்..??"ப்ரியா பரிதாபமாக கேட்க, அசோக்கிற்கு உள்ளுக்குள் கொப்பளித்த உணர்ச்சியை அடக்கிக்கொள்ள மிகவும் கடினமாக இருந்தது. பற்களால் உதடுகளை அழுத்தி கடித்துக் கொண்டான். ப்ரியாவின் முகத்தையே ஏக்கமாக பார்த்தான். "ம்ம்ம்..!!" என்று மெல்ல தலையை அசைத்தான். "கெளம்புறேன் அசோக்.. பை..!!" ப்ரியா சொல்லிவிட்டு, திரும்பி விடுவிடுவென நடந்தாள். கதவை திறந்து வேகமாய் வெளியேறினாள். அசோக் அப்படியே செயலற்றுப்போய் நின்றிருந்தான். அவள் சென்றபிறகு சில வினாடிகள் கழித்து, மெல்ல தலையை சுழற்றி அந்த அறையை ஒருமுறை பார்த்தான். எங்குமே ஒரு வெறுமை நிறைந்திருப்பதாய் அவனுக்கு தோன்றியது. ப்ரியாவுடைய டேபிள் மீது பார்வையை வீசினான். அலங்காரத்திற்காக அவள் வைத்திருந்த பொருட்களை எல்லாம் அவள் இப்போது எடுத்து சென்றிருக்க, இரண்டே இரண்டு பொருட்கள் மட்டும் அங்கே மிச்சம் இருந்தன. ஒன்று.. அவன் உருவாக்கிய காம்பொனன்ட்டுக்காக ப்ரியாவுக்கு கிடைத்த நினைவுப்பரிசு.. இன்னொன்று அவள் அமெரிக்காவில் இருந்து அவனுக்காக வாங்கி வந்திருந்த கைக்கடிகாரம்..!! அசோக் கொஞ்ச நேரம் அந்த இரண்டு பொருட்களையுமே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய மூளை எதையோ சுறுசுறுப்பாக யோசித்துக் கொண்டிருந்தது. அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவனாய், கண்களில் துளிர்த்திருந்த நீரை அவசமாய் துடைத்துக் கொண்டான். ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டவாறே, கை நீட்டி அந்த கைக்கடிகாரத்தை எடுத்துக் கொண்டான். இடது கையில் அணிந்து கொண்டான். அறையை விட்டு அவசரமாய் வெளியேறினான். பாலாவின் அறைக்கு நடந்தான். இவன் உள்ளே நுழைந்ததுமே இவனைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர் மாதிரி அவர் சொன்னார். "வா அசோக்.. நானே உன்னை வர சொல்ல நெனச்சேன்..!! வா.. உன்கூட கொஞ்சம் பேசணும்.. உக்காரு..!!" "எ..என்ன பேசணும்..??" அசோக் அவருக்கு எதிரே அமர்ந்தவாறே கேட்டான். "இந்த ப்ரியா என்ன வேலை பண்ணி வச்சிருக்குறா பாத்தியா அசோக்..?? க்ளயண்ட்ஸ் கோடிக்கணக்குல பணத்தை கொட்டி கொடுத்துட்டு.. ஃபர்ஸ்ட் டைம் நம்ம ப்ராடக்ட் பாக்குறதுக்காக ஆசையா வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க.. கடைசில அவங்க பாத்ததுலாம்.. 'ப்ரியா இஸ் எ ஸ்டுபிட்..ப்ரியா இஸ் எ ஸ்டுபிட்..' தான்..!! ச்சே.. நேத்து நைட்டுல இருந்து எவ்வளவு மெண்டல் டார்ச்சர் தெரியுமா..?? க்ளையன்ட்ட இருந்து எவ்வளவு ப்ரெஷர் தெரியுமா..?? எல்லாம் இந்த ப்ரியாவாலதான்.. அவளோட ஸ்டுபிடிட்டியாலதான்..!! ப்ரியா தரப்போற தலைவலியை தாங்கிக்க ரெடியா இருங்கன்னு நீ ஒருநாள் சொன்ன.. அதோட அர்த்தம் இப்போதான் எனக்கு முழுசா புரியுது..!! தேங்க் காட்.. அவளே இப்போ ரிஸைன் பண்ணிட்டு போயிட்டா..!! இனி.. ஆகவேண்டியதை பாக்கனும்.. அதுக்குத்தான் உன்னை வர சொல்ல நெனச்சேன்..!! இவ பண்ணின மெஸ்ஸப்ல இருந்து ப்ராஜக்டை மீட்டு கொண்டு வர நீதான் சரியான ஆளு..!!" "எ..என்ன சொல்றீங்க..?? பு..புரியல..!!" "நீதான் இனி டீமை லீட் பண்ணனும் அசோக்.. மிட் இயர் அப்ரைசல்ல உனக்கு ஸ்பெஷல் ப்ரோமோஷன் கொடுக்க சொல்றேன்.. ஓகே..?? ஈவ்னிங் க்ளயண்டோட ஒரு மீட்டிங் செட்டப் பண்றேன்.. நீதான் டீமை இனி லீட் பண்ணப் போறேன்னு உன்னை இன்ரோட்யூஸ் பண்றேன்..!! அவங்களை கன்வின்ஸ் பண்ணனும் அசோக்.. திரும்ப இந்தமாதிரி ஒரு இன்சிடன்ட் நடக்காம பாத்துக்கணும்..!! இட்ஸ் வெரி வெரி க்ரிட்டிக்கல்.. நீதான் இந்தவேலைக்கு பொருத்தமானவன்னு நம்புறேன்..!!" நம்பிக்கையாய் சொல்லிவிட்டு பாலா பார்க்க, அசோக்கிற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. பாலாவின் முகத்தையே சில வினாடிகள் அமைதியாக பார்த்தான். அப்புறம் விரக்தியாக ஒரு புன்னகையை வீசினான். அந்தப் புன்னகையின் அர்த்தம் பாலாவுக்கு புரியவில்லை. அவனுடைய மௌனத்தை பார்த்து குழம்பியவராய் கேட்டார். "என்ன அசோக்.. எதுவும் பேச மாட்டேன்ற..??" "நானும் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னுதான் வந்தேன் பாலா..!!" "எ..என்ன..??" "ப்ரியா மேல எந்த தப்பும் இல்ல.. எல்லா பிரச்சினைக்கு காரணம் நான்தான்.. அவ இல்ல..!!" அசோக் உறுதியான குரலில் சொன்னதை கேட்டு, பாலா சற்றே திகைத்து போனார். "வாட்..??" என்றார் நெற்றியை சுருக்கியவாறே. "ஆமாம் பாலா.. நான்தான் அவ சிஸ்டம் அக்சஸ் பண்ணி.. தப்பான கோட் ஆட் பண்ணேன்..!! "எ..என்ன சொல்ற நீ..?? ஏ..ஏன் அப்படி பண்ணின..??" "நான் சும்மா.. அவளை சீண்டுறதுக்காக பண்ணேன்.. இவ்ளோ சீரியசாகும்னு எதிர்பார்க்கல..!!" "ஓ..!!" "ப்ளீஸ் பாலா.. நான் செஞ்ச தப்புக்கு என் மேல ஆக்ஷன் எடுங்க..!! ப்ரியாவை விட்டுடுங்க.. அவ இன்னொசன்ட்.. அவ ரெசிக்னஷேஷனை அக்சப்ட் பண்ணிக்காதிங்க.. அவளை கூப்பிட்டு பேசுங்க.. ப்ளீஸ்..!!"அசோக் கெஞ்சலாக சொன்னான். பாலா இப்போது அதிர்ச்சியில் அமைதியாகிப்போனார். கண்ணாடியை கழற்றி டேபிளில் வைத்துவிட்டு, 'உஷ்ஷ்ஷ்..' என்று சலிப்பு மூச்சு விட்டார். 'இது என்ன புது குழப்பம்..?' என்று தலையை சொறிந்தார். இந்த குழப்பத்தை எப்படி தீர்ப்பது என்று நெற்றியை சொறிந்தவாறு சில வினாடிகள் யோசித்தார். அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவராய், மீண்டும் கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டார். அசோக்கை ஏறிட்டு தெளிவான குரலில் சொன்னார். "ஸீ அசோக்.. நீ செஞ்சது தப்புதான்.. ஆனா பிரச்னைக்கு நீதான் காரணம்னு என்னால அக்சப்ட் பண்ணிக்க முடியாது..!! கோட் செக்கின் பண்றதுக்கு முன்னாடி டெஸ்ட் பண்ணனும்ன்றது பேசிக்கான விஷயம்.. டெஸ்ட் பண்ணாம அவ செக்கின் பண்ணதாலதான் இவ்வளவு பிரச்னையும்..!! ஸோ.. அவதான் எல்லாத்துக்கும் காரணம்..!!" "நான் கோட் மாடிஃபை பண்ணிருக்குறது அவளுக்கு எப்படி தெரியும் பாலா..?? ஏற்கனவே டெஸ்ட் பண்ணி ரெடியா வச்சிருந்திருப்பாளா இருக்கும்.. திரும்ப டெஸ்ட் பண்ணுவான்னு எப்படி எதிர்பார்க்க முடியும்..??" "நோ அசோக்.. நோ.. ஐ கான்ட் அக்சப்ட் திஸ் எக்ஸ்க்யூஸ்..!! ஸீ.. இட்ஸ் வெரி சிம்பிள்.. மேனேஜ்மன்ட்டை பொறுத்தவரை அக்கவுண்டபிலிட்டிதான் முக்கியம்.. இந்த வொர்க்கு அவதான் அக்கவுண்டபில்.. கோட் டெஸ்ட் பண்ணி செக்கின் பண்ண வேண்டியது அவளோட ரெஸ்பான்ஸிபிலிட்டி.. அவ அதை பண்ணல.. அதுதான் எல்லாத்துக்கும் ரூட்காஸ்..!! ஸோ.. நடந்த தப்புக்கு அவ பொறுப்பு ஏத்துக்குறதுதான் சரி.. அதைத்தான் அவளும் இப்போ பண்ணிருக்குறா..!! நீ தேவை இல்லாம உன்னை இன்வால்வ் பண்ணி.. இதைப்போட்டு குழப்பிக்காத.. சரியா..?? அடுத்து என்ன செய்யலாம்னு பேசலாம்.. அதுதான் இப்போ இம்பார்டன்ட்..!!" "எனக்கு இதுதான் இம்பார்டன்ட் பாலா..!!" அசோக் பிடிவாதமாக சொல்ல, பாலா எரிச்சலானார். "இப்போ என்னை என்ன பண்ண சொல்ற..?? அவளை ரிஸைன் பண்ண நான் ஃபோர்ஸ் பண்ணல.. அவளா பண்ணிட்டு போறா.. அதுக்கு நான் என்ன பண்றது..??" "அவளை கூப்பிட்டு பேசுங்க பாலா.. நடந்த தப்புக்கும் அவளுக்கும் சம்பந்தம் இல்லன்னு மேனேஜ்மன்ட்டை கன்வின்ஸ் பண்ணுங்க.. அவளுக்கு சப்போர்ட்டிவா இருங்க.. ப்ளீஸ்..!!" "என்னால அது முடியாது அசோக்.. தப்பு பண்ணிட்டு போனவளை திரும்ப கூட்டிட்டு வந்து.. என்னால கெஞ்சிட்டு இருக்க முடியாது..!!" "ப்ளீஸ் பாலா..!!" "முடியாது அசோக்.. வேற எதாவது இருந்தா பேசு.. இல்லனா வெளில போ..!!" பாலா உறுதியான குரலில் மறுத்தார். அவருடைய முகத்தில் ஒரு அதீத எரிச்சல். அசோக் இப்போது கண்களை இடுக்கி அவரை முறைத்தான். ஒரு சில வினாடிகள்..!! அப்புறம் அவசரமாய் தனது செல்போனை பாக்கெட்டில் இருந்து எடுத்தான். படபடவென ஏதோ டைப் செய்தான். பாலா எதுவும் புரியாமல் அவனையே பார்த்தார். 'என்ன பண்ற அசோக்..?' என்று கேட்டார். அசோக் அவருக்கு பதில் சொல்லாமல், டைப் செய்வதிலேயே கவனமாய் இருந்தான். அரை நிமிடத்திற்குள்ளாகவே டைப் செய்து முடித்தான். முடித்ததும் பாலாவை நிமிர்ந்து பார்த்து சொன்னான். "உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பிருக்கேன் பாலா.. பாருங்க..!!" "எ..என்ன மெயில்..??" பாலா குழப்பத்தில் திளைத்தவராகவே தனக்கு முன்பிருந்த லேப்டாப்பில், தனது மெயில் பாக்ஸ் செக் செய்தார். அசோக் அனுப்பிய மெயிலை திறந்து பார்த்தார். பார்த்ததுமே அவருக்கு விஷயம் புரிந்து போனது. அசோக்கும் தனது வேலையை ராஜினாமா செய்வதாக மெயில் அனுப்பியிருந்தான். பாலா இப்போது உச்சபட்சமாய் ஒரு எரிச்சலுக்கு உள்ளானார். "வாட் இஸ் திஸ் அசோக்..??" என்று கோவமாக கேட்டார். "ஸாரி பாலா.. எனக்கு வேற வழி தெரியலை..!!" "அவ செஞ்ச தப்புக்கு அவ ரிஸைன் பண்றா.. நீ எதுக்கு தேவை இல்லாம ரிஸைன் பண்ற..??" "தப்பு செஞ்சது நான்னு சொல்றேன்.. அதையே நீங்க புரிஞ்சுக்க மாட்டேன்றீங்க..!!" "அசோக் ப்ளீஸ்.. திஸ் இஸ் நாட் கிட்ஸ் ப்ளே.. வீ ஆர் இன் சீரியஸ் பிசினஸ் ஹியர்..!! ப்ராஜக்ட் க்ரிட்டிக்கலான ஸ்டேஜ்ல இருக்கு.. இந்த ப்ராஜக்ட் பத்தி எல்லாம் தெரிஞ்சவங்க நீங்க ரெண்டு பேருந்தான்.. ஒரே நேரத்துல நீங்க ரெண்டு பேருமே இப்படி ரிஸைன் பண்ணினா..என்ன அர்த்தம்..?? கம்பனிக்கு இதனால பெரிய ப்ராப்ளம் ஆகும் அசோக்.. உன் மேல ஸ்ட்ரிக்ட் ஆக்ஷன் எடுக்க வேண்டி இருக்கும்..!!" "என்னவேணா செஞ்சுக்கங்க பாலா.. எனக்கு கவலை இல்லை..!!" அலட்சியமாக சொன்னவாறே அசோக் எழுந்து கொண்டான். கதவை திறந்து ஆத்திரமாக அந்த அறையை விட்டு வெளியேறினான். அதன்பிறகு ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து.. எலக்ட்ரானிக் சிட்டியிலிருந்து சில்க்போர்ட் செல்லும் சாலையில் ப்ரியா தனது வண்டியில் சென்றுகொண்டிருந்தாள். காலையில் இருந்து கொந்தளித்துக் கொண்டிருந்த அவளது மனம் இப்போது அமைதியடைந்திருந்தது. வேலையை இழந்ததற்காக ஒரு சிறு கவலை கூட அவளிடம் இல்லை. அசோக்கின் நினைவைத்தவிர, மற்றபடி சலனமற்ற மனதுடன் நிதானமாக தனது ஸ்கூட்டியை செலுத்திக் கொண்டிருந்தாள்.அவளுக்கு பின்னால் இருந்து 'கீங்.. கீங்..' என திரும்ப திரும்ப அலறும் ஹார்ன் சத்தத்தை ஆரம்பத்தில் அவள் கவனிக்கவில்லை. அப்புறம் கவனித்ததும், தனது ரியர்வ்யூ மிரரை பார்த்தாள். ஏதோ மின்னல் வெட்டுவது மாதிரி பளிச் பளிச்சென்று ஒளியை சிதறியது கண்ணாடி. ப்ரியாவிற்கு சிலவினாடிகள் எதுவும் புரியவில்லை. அப்புறம் அந்த மின்னல் தீர்ந்து, அவளுக்கு பின்னால் பைக்கில் வருகிற அசோக் தெரிந்தான். தனது இடது கையை உயர்த்திக் காட்டியபடி, ஒரு கையால் பைக்கை செலுத்திக் கொண்டு வந்தான். அவன் உயர்த்தி காட்டிய கையில் அந்த கடிகாரம். அவ்வளவுதான்..!! அதைப்பார்த்ததுமே ப்ரியா அப்படியே பூரித்துப் போனாள். வாழ்வில் அதுமாதிரி ஒரு சந்தோஷம் எப்போதும் அவளுடைய மனதை நிறைத்ததில்லை. நெஞ்செல்லாம் பூந்தோட்டமாய் பூத்துக் குலுங்குவது மாதிரி ஒரு உணர்வு அவளுக்கு. படக்கென்று தலையை திருப்பி பார்த்தாள். இப்போது அசோக் ஹெல்மட் கண்ணாடியை உயர்த்திவிட்டு, இவளை பார்த்து புன்னகைத்தான். ப்ரியா வண்டியின் வேகத்தை குறைத்து, இடது புறமாய் ஒதுங்கி, சாலையோரமாய் நின்றிருந்த ஒரு மரநிழலில் சரக்கென்று ப்ரேக் அடித்து நின்றாள். அவள் நின்ற அடுத்த நொடியே அவளுக்கு பக்கவாட்டில் அசோக் தனது பைக்குடன் வந்து நின்றான். இருவரும் ஹெல்மட் கழற்றி பைக் விட்டு இறங்கினார்கள். இறங்கியவர்கள் சிறிது நேரம் எதுவும் பேச தோன்றாதவர்களாய், ஒருவர் முகத்தை ஒருவர் ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். இருவர் உதட்டிலுமே மெலிதான ஒரு புன்னகை. அசோக்கின் புன்னகையில் மட்டும் ஒருவித குறும்பு கலந்திருந்தது. "ஐ லவ் யூ..!!" என்றான் அசோக் திடீரென. "ஹ்ஹ.. நீ ஒன்னும் சொல்லத்தேவை இல்ல.. எனக்கு தெரியும்..!!" ப்ரியா குறும்புடன் சொன்னாள். "ஓ.. அப்புறம் எதுக்கு அன்னைக்கு கழுத்துல கத்தி வச்சு மிரட்டுனியாம்..??" அசோக் அவளை மடக்க, "அ..அது.. அது.. சும்மா.." ப்ரியா வழிந்தாள். "ஹாஹாஹாஹா..!!" அசோக் அழகாக, வசீகரமாக சிரித்தான். இப்போது ப்ரியா தயங்கி தயங்கி தனது வலது கையை உயர்த்தி, அசோக்கின் கன்னத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டாள். இதமாக வருடினாள். அப்புறம் அவனது இடது கையை பற்றினாள். அந்தக்கையை சுற்றியிருக்கும், கடிகாரத்தை பூரிப்புடன் பார்த்தாள். அவனுடய கைவிரல்களுடன் தனது கைவிரல்களை கோர்த்துக் கொண்டாள். அசோக்கின் முகத்தை ஏறிட்டு பார்த்தாள். அவன் இன்னும் இவளுடைய முகத்தையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். ப்ரியா இப்போது சற்றே தைரியமுற்றவளாய் அவனுடைய கையை மெல்ல உயர்த்தினாள். தனது முகத்துக்கருகே எடுத்து சென்றாள். அசோக்கின் முகத்தை பார்த்துக்கொண்டே.. சிறிது தயக்கத்துடனே.. தன் உதடுகளை குவித்து.. 'இச்ச்...!!' என்று கடிகாரம் அணிந்த அவனுடைய கைக்கு முத்தமிட்டாள். அவளுடைய செய்கைகளை எல்லாம் அமைதியாக ரசித்துக் கொண்டிருந்த அசோக், இப்போது குறும்பாக சொன்னான். "இந்த வாட்சை நீ வாங்கிட்டு வந்த அன்னைக்கே இது தெரியாம போச்சு.. இல்லனா அன்னைக்கே வாங்கி கைல கட்டிருந்திருப்பேன்..!!" "எது தெரியாமப் போச்சு..??" "வாட்ச்சை கைல கட்டிக்கிட்டா.. அந்த ஹனி லிப்ஸால ஒரு ஸ்வீட் கிஸ் கெடைக்கும்னு..!!" அசோக் சொல்ல, ப்ரியா வெட்கத்தில் முகம் சிவந்து போனாள். "ச்சீய்.. போடா..!!" என்று சிணுங்கியவாறே, மெல்ல அவனுடைய தோளில் சாய்ந்து கொண்டாள். ப்ரியாவின் ஸ்பரிசம் அசோக்கிற்கு இதமாக இருந்தது. அவளுடய தளிர் மேனி பட்டும் படாமல் அவன் மீது உரசியதற்கே, அவனுடைய இதயம் படபடக்க ஆரம்பித்திருந்தது. மனதுக்குள் ஒரு ஆசை எழ, தலையை திருப்பி சுற்றும் முற்றும் பார்த்தான். அவ்வப்போது சீறிப்பறக்கும் வாகனங்களை தவிர வேறு ஆள்நடமாட்டம் ஏதும் இல்லை. தைரியம் பெற்றவனாய், மெல்ல குனிந்து அவளுடைய நெற்றியில் 'இச்..!!' என்று இதழ்கள் பதித்தான். ப்ரியா அதை எதிர்பார்த்திருக்கவில்லை. ஷாக் அடித்தது மாதிரி பட்டென அவனிடம் இருந்து விலகிக் கொண்டாள். அவசரப்பட்டு முத்தமிட்டு நெருக்கத்தை இழந்துவிட்டோமே என அசோக் தன்னைத்தானே திட்டிக் கொண்டான். முத்தமிட்டதன் அதிர்ச்சி ஓரிரு வினாடிகள்தான் ப்ரியாவின் முகத்தில் தங்கியிருந்தது. அப்புறம் சிவப்பாய் ஒரு வெட்கம் வந்து அப்பிக்கொண்டது. அசோக்கின் குறும்பு கொப்பளிக்கும் கண்களை நேருக்கு நேர் பார்க்க தடுமாறினாள். அப்புறம் திடீரென ஞாபகம் வந்தவளாய், பேச்சை மாற்றும் விதமாக கேட்டாள். "அது சரி.. என்ன.. நீயும் பின்னாடியே கெளம்பி வந்துட்ட..??" ப்ரியா கேட்க, அசோக் குரலில் ஒருவித குறும்பு தொனிக்க சொன்னான். "எனக்கும் காலைல இருந்து ஒரே தலைவலி.. அதான் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கலாம்னு.." "லீவ் போட்டுட்டியா..??" "இல்ல.. ரிசைன் பண்ணிட்டேன்..!!" அசோக் கூலாக சொல்ல, ப்ரியா அதிர்ந்து போனாள். "ஹேய்.. ரிசைன் பண்ணிட்டியா..?? என்னடா சொல்ற..??" "ஆமாம் ப்ரியா.. பாலாட்ட போய் பேசுனேன்.. 'தப்புலாம் என் மேலதான்.. என் மேல ஆக்ஷன் எடுங்க.. ப்ரியாவோட ரெசிக்னசேஷனை அக்சப்ட் பண்ணாதீங்க..'ன்னு கெஞ்சினேன்..!!" "ஓ..!! அவர் என்ன சொன்னாரு..??" "முடியாதுன்னாரு..!! சரி.. ஒன்னுக்கு ரெண்டா வச்சுக்கங்கன்னு.. நானும் பேப்பர் போட்டுட்டு வந்துட்டேன்..!!" "ஐயோ.. அறிவு இருக்கா உனக்கு..?? ஏன் அப்படி பண்ணின..??" "வேற என்ன பண்ண சொல்ற..?? சொல்ல சொல்ல கேட்காம நீயும் ரிஸைன் பண்ணிட்டு வந்துட்ட..?? எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை..!!" "ப்ச்.. அதுக்காக..?? நீ எதுக்கு.." "நீ இல்லாத இடத்துல நானும் இருக்க மாட்டேன் ப்ரியா..!!" அசோக் மிக இயல்பாகவே அப்படி சொன்னான். ஆனால் அந்த வார்த்தைகள் ப்ரியாவின் மனதில் அசோக் மீதான காதலை பீறிட்டு கிளம்ப செய்தது. நேற்று இந்த வார்த்தைகளை கோவிந்த் சொன்னபோது, நேத்ராவின் மீது அவளுக்கு ஒரு பொறாமை வந்தது. இன்று தனது காதலனும் அதே வார்த்தைகளை சொல்ல.. சொன்னது மட்டுமில்லாமல் அதை செய்துவிட்டு வேறு வந்து நிற்க.. ப்ரியாவுக்கு அப்போதே அவனை அப்படியே இறுக்கி அணைத்து.. அவனுடைய முகமெல்லாம் முத்தமிட்டு நனைக்கவேண்டும் போலிருந்தது..!! நடுச்சாலையாய் போயிற்றே என்று அந்த உணர்வை கட்டுப்படுத்திக் கொண்டாள். "இல்ல.. என்னதான் இருந்தாலும்.. நீ செஞ்சது தப்பு..!!" என்று நேற்று நேத்ரா சொன்ன மாதிரியே ப்ரியாவும் சொன்னாள். "ஒரு தப்பும் இல்ல..!! இந்த கம்பனி இல்லனா வேற கம்பனி..!! ஆனா.. எந்த கம்பனியா இருந்தாலும்.. நாம ரெண்டு பேரும் ஒண்ணாதான் இன்டர்வ்யூ போறோம்.. ஒண்ணாதான் ஜாயின் பண்றோம்..!! ஓகேவா..??" "ஹாஹா.. ஓகே..!! ஒரே கம்பனில அவ்வளவு ஈசியா வேலை கெடைக்குமா..??" "கெடைக்கலைன்னா ஜாயின் பண்ண வேணாம்..!! வேணுன்னா அவங்களுக்கு ஒரு ஆஃபர் கொடுக்கலாம்..!!" "என்ன ஆஃபர்..??" "எங்க ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல செலக்ட் பண்ணினா.. சம்பளம் கம்மியா கொடுத்தா போதும்னு..!! "ஹ்ம்ம்.. நல்லாத்தான் இருக்கு ஆஃபர்..!! ஹாஹா..!!" ப்ரியா அவ்வாறு சிரித்துக் கொண்டிருக்கும்போதுதான், அசோக்கின் செல்போன் சிணுங்கியது. எடுத்து பார்த்தான். பாலா கால் செய்தார். இவன் கால் பிக்கப் செய்து, "ஹாய் பாலா..!!" என்றதுமே, "எங்க இருக்குற..??" அவர் இறுக்கமான குரலில் கேட்டார். "இங்க பக்கத்துலதான்..!!" என்றான் அசோக் சன்னமான குரலில். "அவ..??" "அவளும் பக்கத்துலதான்..!!" "ஹ்ம்ம்..!! சரி.. ரெண்டு பேரும் கெளம்பி வாங்க.. பேசணும்..!!" "என்ன பேச.." அசோக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, "கெளம்பி வாங்கன்னு சொல்றேன்ல..??" பாலா எரிச்சலாக சொல்லிவிட்டு காலை கட் செய்தார்."என்ன சொல்றார் பாலா..??" ப்ரியா அசோக்கிடம் கேட்டாள். "கெளம்பி வாங்க.. பிரச்னையை பேசி தீர்த்துக்கலாம்னு சொல்றார்..!!" "என்ன பண்ணலாம்..??" "இது என்ன கேள்வி.. போய் பேசிப்பாக்கலாம்..!! என்ன சொல்ற..??" அசோக் கேட்க, ப்ரியா ஒரு சில வினாடிகள் யோசித்தாள். பிறகு "ம்ம்.. ஓகே..!!" என்று சம்மதித்தாள். அசோக்கும் ப்ரியாவும் பாலாவை சந்தித்து பேசினார்கள். பாலாவுக்கு இந்த ப்ராஜக்ட்டை நல்லபடியாக முடிக்கவேண்டும் என்று கவலை. அசோக்கும் ப்ரியாவும் இல்லாமல் அது சாத்தியம் இல்லை என்பது அவருக்கு மட்டுமே புரிகிற விஷயம். இருவருடைய ராஜினாமாவையும் திரும்ப பெற்றுக்கொள்ள சொன்னார். க்ளயன்ட்டையும், மேனேஜ்மன்ட்டையும் தானே பேசி சமாளித்துக் கொள்வதாக சொன்னார். அசோக்கையும், ப்ரியாவையும் ஒரு அப்பாலஜி மெயில் அனுப்ப சொன்னார். 'இனிமேயாவது சின்னப்புள்ளைத்தனமா நடந்துக்காம... கொஞ்சம் சீரியஸா நடந்துக்கங்க..' என்று அறிவுரை சொன்னார். 'போய் வேலையை பாருங்க.. போங்க..!!' என்று விரட்டினார். "தேங்க்ஸ் பாலா..!!" அசோக் புன்னகையுடன் சொன்னான்.

"சிரிக்காத நீ.. உனக்கு அடுத்த வருஷமும் ப்ரமோஷன் கெடயாது..!!" பாலா வெறுப்பாக சொன்னார். "ப்ளீஸ் பாலா.. அப்படி மட்டும் சொலலதீங்க..!!" ப்ரியா இடையில் புகுந்து கெஞ்சலாக சொல்ல, "அவனுக்கு நீ சிபாரிசா..?? உனக்கு இந்த வருஷ போனஸ் கட்..!!" "பரவால பாலா.. இட்ஸ் ஓகே ஃபார் அஸ்..!! தேங்க்யூ.. தேங்க்யூ வெரி மச்..!!" அசோக்கும் ப்ரியாவும் கோரசாக சொல்லிவிட்டு, சந்தோசம் அப்பிய முகத்துடன் அந்த அறையை விட்டு வெளியே வந்தார்கள்.அத்தியாயம் 26 அதன் பிறகு ஒரு இரண்டு மாதங்கள் கழித்து.. சென்னையில் இருக்கும் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல்..!! அந்த ஹோட்டலின் மூன்றாவது தளத்தில்.. வரிசையாக அமைந்திருந்த அந்த ஐந்தாறு குளிரூட்டப்பட்ட அறைகள்..!! அசோக்கின் கம்பனியில் இருந்து அந்த அறைகளில் வாக்கின் இன்டர்வ்யூ நடைபெற்றுக் கொண்டிருந்தது..!! அதில் கடைசி அறையில் அசோக்கும் ப்ரியாவும் இன்டர்வ்யூ பேனலில் அமர்ந்திருந்தார்கள். அப்போது நேரம் மாலை ஆறு மணி..!! காலையில் இருந்தே பலரை இன்டர்வ்யூ செய்து சற்றே களைத்துப் போயிருந்தனர். கடைசியாக வந்திருந்த அந்த ஜீன்ஸ், டி- ஷர்ட் பெண்ணை இப்போது இன்டர்வ்யூ செய்து கொண்டிருந்தார்கள். அசோக்தான் சிரித்த முகத்துடன், அந்தப்பெண்ணிடம் ஆர்வமாக கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த ப்ரியா, பக்கவாட்டில் திரும்பி அசோக்கையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். இன்டர்வ்யூ முடியும் தருவாய். அசோக் இன்டர்வ்யூக்கு வந்திருந்த பெண்ணிடம் கேட்டான். "ஸோ.. மிஸ் மாதவி.. ஆஃபர் லெட்டர் குடுத்தா எத்தனை நாள்ல ஜாயின் பண்ணுவீங்க..??" "ஓ.. அப்போ எனக்கு ஜாப் கண்பார்ம்டா..??" அந்த மாதவி நம்பவே முடியாமல் கேட்டாள். "ஹாஹா.. இன்னுமா உங்களுக்கு சந்தேகம்..?? அதான் இவ்வளவு எக்சலண்டா இன்டர்வ்யூல பெர்ஃபார்ம் பண்ணிருக்கீங்களே..?? கண்டிப்பா உங்களுக்கு ஆஃபர் உண்டு..!! சொல்லுங்க.. எப்போ ஜாயின் பண்ணுவீங்க..??" "ஐ கேன் ஜாயின் இம்மீடியட்லி.. நாட் எ ப்ராப்ளம்..!!" அவள் சொன்ன விதத்தில் இருந்தே வெட்டி ஆபீசர் என்று தெரிந்தது. "ஓகே.. தேட்ஸ் கிரேட்..!! ஹ்ம்ம்ம்... தேட்ஸ் ஆல் மாதவி.. நீங்க கெளம்பலாம்.. வீ வில் சென்ட் யுவர் ஆஃபர் லெட்டர் ஸூன்..!!" அசோக் புன்னகையுடன் சொன்னான். "ஓ..!! தேங்க்யூ.. தேங்க்யூ வெரி மச் அசோக்..!!" மாதவி அசோக்கை பார்த்து வாயெல்லாம் பல்லாக சொன்னாள். அப்புறம் ப்ரியாவின் பக்கம் திரும்பியவள், போனால் போகிறதென்று அவளுக்கும் ஒரு 'தேங்க்ஸ்..'ஐ சலிப்பாக உதிர்த்தாள். உடலை ஒருமாதிரி தளுக்கி, குலுக்கியவாறே அந்த அறையை விட்டு வெளியேறினாள். அவள் கண்ணில் இருந்து மறையும்வரை அவளையே 'ஆஆ..'வென்று பார்த்துக் கொண்டிருந்த அசோக், அப்புறம் அதே முகத்துடன் ப்ரியாவிடம் திரும்பி, "எப்டி ப்ரியா.. மிஸ் மாதவி..??" என்று இளித்தான். ப்ரியா அதற்குமேலும் பொறுக்க முடியாமல் வெறுப்பாக சொன்னாள். "ரிஜக்டட்..!!" உடனே அசோக்கிற்கு முகம் சுருங்கிப் போனது. "என்ன ப்ரியா இப்படி சொல்ற..?? புடிக்கலையா அவள..??" "எனக்கு புடிக்கல..!! மாதவியாம் மாதவி.. பேரே ரொம்ப வில்லங்கமா இருக்குது.. இவள்லாம் நம்ம டீமுக்கு சரிப்பட்டு வர மாட்டா..!!" "ப்ச்.. பேர்ல என்ன இருக்கு ப்ரியா..?? அந்தப்பொண்ணோட குவாலிட்டிசை பாரு..!!" "அவகிட்ட என்ன குவாலிட்டிஸ் இருக்கு..?? ஏதோ பாக்குறதுக்கு கொஞ்சம் அழகா இருக்கா.. அவ்ளோதான்.. அறிவுன்றது கொஞ்சமாவது வேணாம்..?? இவளுக்குலாம் எப்படி வேலை கொடுக்க சொல்ற..??" "ஹ்ஹ.. அப்படிலாம் பாத்தா உனக்குலாம் வேலை கெடைச்சிருக்குமா ப்ரியா..??" அசோக் கிண்டலாக சொல்ல, ப்ரியா டென்ஷன் ஆனாள். "என்ன.. என்ன சொன்ன நீ..?? திரும்ப சொல்லு..!!" "சும்மா கத்தாத.. அந்தப்பொண்ணுக்கு என்ன கொறைச்சலு..?? கேட்ட கேள்விக்குலாம் அப்படியே கில்லி மாதிரி ஆன்சர் பண்ணினா..!!" "ஆமாம்.. கிழிச்சா..!! எல்லாம் அஞ்சு பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத கேள்வியா கேட்ட.. அவ ஆன்சர் பண்ணிட்டா..!! அவ ப்ரா சைஸ் என்னன்னு மட்டுந்தான் கேக்கல.. மத்த எல்லா நான்சென்ஸ் கொஸ்டின்ஸும் கேட்டாச்சு..!! இன்ஹெரிடன்ஸ்னா என்னன்னு நான் கேட்டதுக்கு.. அப்படியே இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி முழிக்கிறா.. இவளுக்கு போய் ஆஃபர் குடுக்க சொல்றியா..??" "அப்போ அவளுக்கு வேலை இல்லையா..??" "அவ தலை கீழா நின்னுக்கிட்டு தண்ணி குடிச்சாலும் அவளுக்கு வேலை கெடையாது..!!" ப்ரியா உறுதியான குரலில் சொல்ல, அசோக் அவளையே கொஞ்ச நேரம் முறைப்பாக பார்த்தான். அப்புறம் டென்ஷனாக சொன்னான். "எனக்கு இப்போ நல்லா புரிஞ்சு போச்சு.!!" "என்ன..??" "உன் ஈகோ உன்னை விட்டு போகவே போகாதுல..?? நீ நெனச்சதுதான் நடக்கணும்.. நீ வச்சதுதான் சட்டம்.. அப்படித்தான..??" "இப்போ எதுக்கு ஈகோ அது இதுன்னு உளர்ற.. அப்படி என்ன பண்ணுனேன்..??" "பின்ன என்ன..?? காலைல இருந்து பத்து பொண்ணுகளை செலக்ட் பண்ணிருக்கேன்.. எல்லாரையும் நீ ரிஜக்ட் பண்ணிருக்குற..!!" "அதுதான் அதுதான்.. அதேதான்..!! காலைல இருந்து பத்து பொண்ணுகளை செலக்ட் பண்ணுனியே.. ஒத்தை பையனை செலக்ட் பண்ணுனியா நீ..?? இன்டர்வ்யூக்கு வந்தவங்கள்ள முக்காவாசி பேர் பசங்க.. ஆனா நீ.. செலக்ட் பண்ணினது எல்லாம் பொண்ணுக..!! அதுவும் நல்ல கலரா.. கொஞ்சம் தளதளன்னு.. ஈ ஈ ன்னு இளிச்சு பேசுறவளுகளா செலக்ட் பண்ற..!! இவளுகலாம் ஐ.டி கம்பனிக்கு வேலைக்கு வர்றவளுக மாதிரியா வர்றாளுக.. ஏதோ ஐட்டம் சாங்குக்கு ஆட்டம் போட வந்தவளுக மாதிரில வர்றாளுக..?? நீயும் நாக்கை தொங்க போட்டுட்டு.. 'செலக்ட் பண்ணலாம் ப்ரியா.. செலக்ட் பண்ணலாம் ப்ரியா..'னு கெடந்து குதிக்கிற..!! த்தூ..!!" ப்ரியா படபடவென பொரிந்து தள்ள, "ஏய்.. அப்படிலாம் ஒன்னும் இல்ல..!!" அசோக் மழுப்பலாக சொன்னான். "சும்மா நடிக்காத.. எல்லாம் பாத்துட்டுத்தான இருக்குறேன்..?? கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரந்தான் இருக்குது.. நீ என்னடானா.. இன்னும் கண்டவளுகளை சைட் அடிச்சுட்டு இருக்குற..?? ஜொள்ளு..!!" "ப்ச்.. நான்தான் இல்லைன்னு சொல்றேன்ல..??" "நான்தான் இருக்குன்னு சொல்றேன்ல..??" "ஷ்ஷ்ஷ்.. ப்பா.. முடியல..!! இப்போ முடிவா என்னதான் சொல்ற.. இந்த மாதவிக்கு ஆஃபர் குடுக்க முடியுமா முடியாதா..??" "முடியாது.. முடியாது.. முடியவே முடியாது..!!" "அப்புறம் எதுக்கு 'இன்டர்வ்யூ பண்ணலாம்.. நீயும் வா..'னு பெங்களூர்ல இருந்து என்னை மெனக்கெட்டு கூட்டிட்டு வந்த..?? கடைசி வரை நான் செலக்ட் பண்ண யாருக்குமே ஆஃபர் குடுக்கல..!!" "ஆமாம்.. கம்பனிக்கு பொருத்தமா ஆள் செலக்ட் பண்ணுவேன்னு பார்த்தா.. நீ கடலை போடுறதுக்கு தோதா ஆள் புடிப்பேன்னு எனக்கு எப்படி தெரியும்..??" அசோக்கால் அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை. சில வினாடிகள் ப்ரியாவையே உர்ரென்று முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் 'போடீ லூசு..!!' என்று கத்திவிட்டு ஆத்திரமாக எழுந்து அந்த அறையைவிட்டு வெளியேறினான். 'போடா போடா.. ஜொள்ளு லாரி..!!' ப்ரியா அவன் முதுகை பார்த்து கத்தினாள். அந்த ஹோட்டலிலேயே நான்காவது தளத்தில்தான் இன்டர்வ்யூ செய்ய வந்திருந்தவர்களுக்கு, தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அசோக்குக்கும், பிரியாவுக்கும் மாலையில் நடந்த சண்டையின் தாக்கம், இரவு உணவு அருந்திய பிறகும் நீடித்தது. இப்போது இருவரும் ப்ரியாவுடைய அறையின் பால்கனியில் நின்றிருந்தார்கள். ஒருவரிடம் ஒருவர் பேசிக்கொள்ளாமல், ஆளுக்கொரு பக்கமாய் முகத்தை திருப்பி வைத்துக்கொண்டு நின்றிருந்தனர். நீண்ட நேர மௌனத்தை ப்ரியாதான் முதலில் கலைத்தாள். குழைவான குரலில் கேட்டாள். "ஒய்.. கோவம் இன்னும் போகலையா..??" "ப்ச்.. அதுலாம் ஒன்னும் இல்ல..!!" "அப்புறம் ஏன் பேச மாட்டேன்ற..??" "பேசிட்டுத்தான இருக்குறேன்..??" "இல்ல.. நீ சரியா பேசல.. கோவந்தான் உனக்கு..!!" "அதான் இல்லன்னு சொல்றேன்ல..??"இப்போது ப்ரியா அசோக்கையே குறும்பு கொப்பளிக்கும் கண்களுடன் பார்த்தாள். அவனை மெல்ல நெருங்கினாள். "நெஜமா சொல்லு.. கோவம் இல்ல.. கோவம் இல்ல..?? ம்ம்..?? ம்ம்..??" என்று கேட்டவாறே தனது சுட்டு விரலால் அவனுடைய முகம், கழுத்து, புஜம், இடுப்பு என்று ஒவ்வொரு பாகமாக குத்தினாள். 'ஏய்.. ச்சீய்.. சும்மா இரு..' என்று அசோக் சிணுங்கிக் கொண்டிருக்கும்போதே, ப்ரியா அவனுடைய இடுப்பின் இரண்டு புறமும் கைகளை பதித்து அவனுக்கு கிச்சு கிச்சு மூட்டி விட்டாள். 'ஏய்.. ஏய்..' என்று ஆரம்பத்தில் கத்தினாலும், அசோக்கால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்து விட்டான். "ஹாஹா... ஹாஹா... ஹாஹா..." "அப்படி சிரி.. இப்போ எப்படி இருக்கு மூஞ்சி..??" "போடீ லூசு..!!" அசோக் இப்போது முகத்தில் சிரிப்புடனே அவளை திட்டினான். "நீதான் லூசு..!! எவளோ மாதவிக்காக எங்கிட்ட மொறைச்சுட்டு நிக்கிற..??" சலிப்பாக சொன்ன ப்ரியா ஒரு கையால் அசோக்கின் இடுப்பை வளைத்துக் கொண்டாள். தனது மூக்கை அவனுடைய புஜத்தில் சரசரவென தேய்த்தவள், பிறகு அவனுடைய தோள் மீது மெல்ல சாய்ந்து கொண்டாள். அசோக்கும் இப்போது அவளுடைய இடுப்பில் கைபோட்டான். மென்மையாக தடவினான். அவளுடைய இடது பக்க மார்பு, அசோக்கின் நெஞ்சில் மெத்தென்று அழுந்திக் கொண்டு இருந்தது. இருவரும் சிறிது நேரம் அப்படியே சுகமாக தழுவிக்கொண்டவாறு நின்றிருந்தனர். கடந்த சில நாட்களாகவே அவனுக்கு அவ்வப்போது ப்ரியா மீது வருகிற ஒரு கெட்ட விதமான ஏக்கம், இப்போது உச்சபட்சமாய் வந்திருந்தது. அவளுடைய மனநிலையை அறிந்து கொள்ள நினைத்தான். அவளுடைய நெற்றியில் மெல்ல முத்தமிட்டான். உடனே அவளும் முகத்தை திருப்பி அவனுடைய மார்பில் 'இச்..' என்று முத்தம் பதித்தாள்.பதித்துவிட்டு மீண்டும் அவனுடைய மார்பில் முகம் சாய்த்துக் கொண்டாள். இப்போது அசோக் மெல்ல ஆரம்பித்தான். "நான் உன்கிட்ட ஒன்னு கேக்கவா..??" என்று குழைவாக கேட்டான். "என்ன..??" "நமக்கு அடுத்த வாரம் ஃபர்ஸ்ட் நைட் நடக்க போகுதுல..??" "ஐயே.. கல்யாணம் நடக்கப் போகுதுன்னு சொல்லேன்..??" ப்ரியா முகத்தை சுளித்தாள். "எப்படி சொன்னா என்ன.. இது நடந்தா அது நடந்த மாதிரி.. அது நடந்தா இது நடந்த மாதிரி..!!" "ஹ்ம்ம்.. சரி.. ஃபர்ஸ்ட் நைட் நடக்க போகுது.. அதுக்கு..??" "இப்போ.. நாம ப்ராஜக்ட் பண்றப்போ.. ஏதாவது மேஜர் பங்க்ஷனாலிட்டி டெவலப் பண்றதுக்கு முன்னாடி என்ன பண்ணுவோம்..??" "என்ன பண்ணுவோம்..??" "அது வொர்க் அவுட் ஆகுமான்னு தெரிஞ்சுக்குறதுக்காக.. கிட்டத்தட்ட ஒத்திகை பாக்குற மாதிரி.. ஒரு P.O.C பண்ணி பார்ப்போம்ல..??" "ம்ம்.. ப்ரூஃப் ஆஃப் கான்செப்ட்..!!" "அடுத்த வாரம் வர்ற ஃபர்ஸ்ட் நைட்க்கு.. நாம ஏன் இன்னைக்கு ஒரு P.O.C பண்ணி பார்க்க கூடாது..!!" அசோக் கேட்டுவிட்டு இளிக்க, ப்ரியா வெடுக்கென திரும்பி அவனை முறைத்தாள். "செருப்பு பிஞ்சுடும் ராஸ்கல்..!!" என்றாள் சீற்றமாக. "என்ன ப்ரியா..??" "என்ன நொன்ன ப்ரியா..?? அதுலாம் கெடயாது.. எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறந்தான்..!!" "ப்ளீஸ் ப்ரியா..!!" "ப்ச்.. அப்படியே புடிச்சு கீழ தள்ளி விட்ருவேன்..!! போடா.. உன் ரூமுக்கு போ.. பேசுனது போதும்..!! நாளைக்கு பாக்கலாம்..!!" ப்ரியா பிடிவாதமாக மறுக்க, அசோக் அவளுடைய முகத்தையே பரிதாபமாக பார்த்தான். அப்புறம் கொஞ்ச நேரம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியவாறே, பால்கனி கைப்பிடி சுவற்றில் சாய்ந்தவாறு நின்றிருந்தனர். அசோக் அவ்வப்போது திரும்பி ஓரக்கண்ணால் ப்ரியாவை பார்த்தான். அவன் மனதில் ஒரு வித எரிச்சல். ஆசைப்பட்டது கிடைக்கவில்லையே என்று ஒருவித ஏக்கம். கடுப்புடனே அவ்வப்போது அவளை முறைத்துக் கொண்டிருந்தான். ப்ரியாவும் அமைதியாக வேறெங்கோ பார்வையை வீசியிருந்தாள். இப்போது அசோக் பொறுமை இழந்தவனாய் சொன்னான். "சரி.. நான் கெளம்புறேன்..!!" சொல்லிவிட்டு அவன் நகர முயல, ப்ரியா இப்போது வாய் திறந்து மெல்லிய குரலில் சொன்னாள். "வேணுன்னா.. ஒரு கிஸ் பண்ணிக்கோ..!!" "என்னது..??" அசோக் ஒருமாதிரி முறைப்பாகவே கேட்டான். "வேணுன்னா ஒரு கிஸ் பண்ணிட்டு கெளம்புன்னு சொன்னேன்..!!" "யாருக்கு வேணுன்னா..??" "உனக்குத்தான்..!!" "நான் இப்போ கிஸ் வேணுன்னு உன்னை கேட்டனா..?? உனக்கு இப்போ கிஸ் வேணும்.. அதுக்கு என் மேல பழியை போட்டு.. வாங்கிக்க பாக்குற.. அப்படித்தான..??" "சேச்சே.. அ..அப்படிலாம்.. ஒ..ஒண்ணுல்ல..!!" ப்ரியா தடுமாறியதில் இருந்தே அப்படித்தான் என்று புரிந்தது. "ஓ.. அப்போ உனக்கு கிஸ் வேணாம்..??" "ம்ஹூம்.. வேணாம்..!!" ப்ரியா வீராப்பாக சொன்னாள். "எனக்கும் வேணாம்..!!" அசோக்கும் முறைப்பாக சொன்னான். "வேணான்னா.. போ..!!" ப்ரியா சொல்லிவிட்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள். அதற்கு எதிர்புறத்தில் அசோக் தனது முகத்தை திருப்பி வைத்திருந்தான். மனதுக்குள் ஆசையை வைத்துக்கொண்டு இரண்டு பேரும் அப்படி விறைப்பாக நின்றிருந்தார்கள். இரண்டு பேருமே தங்களை தாங்களே மனதுக்குள் திட்டிக் கொண்டிருந்தார்கள் இப்போது.

'மெயின் மேட்டர்தான் கெடைக்கலை.. முத்தமாவது கெடைச்சிருக்கும்.. இப்படி பேசி அதையும் கெடுத்துட்டியே.. அப்படி என்ன உனக்கு ஈகோ..!!' - அசோக் 'ச்சே.. இந்தப்பாழாப்போன ஈகோ என்னைக்கு என்னை விட்டு போக போகுதோ.. ஹ்ஹ்ஹ்ம்ம்.. இன்னைக்கு முத்தம் அவ்வளவுதானா..??' - ப்ரியா இருவரும் அமைதியாக நின்றிருந்தார்கள். ஆனால் அவர்களுடைய நெஞ்சில் ஒரு துடிப்பு அதிகரித்துக் கொண்டே சென்றது. ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்கள். அவர்களுடைய ஆசைக்கும், ஈகோவுக்கும் பெரிய சண்டையே நடந்து கொண்டிருந்தது. திடீரென்று என்ன நினைத்தார்களோ. ஒரே நேரத்தில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாய்ந்தார்கள். இறுக்கமாக அணைத்துக் கொண்டார்கள். அணைத்துக்கொண்ட வேகத்தில் அவர்களுடைய உதடுகள் நான்கும் 'பச்சக்..' என்று ஒட்டிக்கொண்டன. ஒன்றோடொன்று புரண்டு.. ஒன்றையொன்று உறிஞ்சி.. ஆவேசமாக உறவாட ஆரம்பித்தன..!!

ஐ ஹேட் யூ, பட்.8


அத்தியாயம் 21 நீங்கள் அன்பு கொண்டிருப்பவரை தன்முனைப்புடன் அணுகுவது.. அளவற்ற வேதனையையே அள்ளித்தரும்.. அவருக்கு மட்டுமல்லாது உங்களுக்கும் சேர்த்து..!! தான் காதலிப்பவருக்கு சிறு கஷ்டம் நேர்ந்தாலே இதயம் பதைபதைத்து போகிறது.. கட்டுப்பாடின்றியே கண்கள் நீரை உகுக்க ஆரம்பிக்கின்றன.. அன்று நேத்ரா அழுதாளே.. அது மாதிரி..!! காய்ச்சலில் படுத்திருக்கும் காதலனுக்காவே நேத்ரா அந்த மாதிரி உருகிப் போனாள் என்றால்.. விபத்தில் காயம்பட்டு வீழ்ந்திருக்கும் காதலனை எண்ணி ப்ரியா எந்த மாதிரி உடைந்து போயிருப்பாள்..?? அதுவும் அந்த விபத்திற்கு காரணமே அவள்தான் என்று உணர நேருகையில்..!! அசோக்குடைய உடலில் பட்ட காயத்தின் அளவை விட.. ப்ரியாவின் உள்ளத்தில் ஏற்பட்ட காயத்தின் அளவுதான் பெரிதாக இருந்தது..!! இதயத்தில் இடி விழுந்த மாதிரி இருக்க.. இரு கண்களும் இருட்டிக்கொண்டு வர.. மயங்கி சரிந்து.. சேரை தள்ளிவிட்டவாறு.. தரையில் வீழ்ந்தாள் ப்ரியா..!! அவளுடைய அறைக்கு மிக அருகில் அமர்ந்து வேலை பார்ப்பது கவிதாதான். அறைக்குள் 'தட்..!!!' என்று சேர் கவிழும் சப்தம் கேட்டதுமே படக்கென்று எழுந்து பார்த்தாள். ஒருவித பதட்டத்துடனே அறைக்குள் நுழைந்தவள், உள்ளே மயக்கமுற்று கிடந்த ப்ரியாவை காண நேரிட்டதும், அலறியே விட்டாள். கவிதாவின் அலறலை கேட்டு அனைவருமே எழுந்து ஓடி வந்தனர். அவசரம் தொற்றிக்கொன்றவர்களாய் ப்ரியாவின் மயக்கத்தை தெளிய வைத்தனர்.

கண் விழித்த ப்ரியா கண்ணீருடனே விபத்து பற்றிய விஷயத்தை எல்லோருக்கும் தெரிவித்தாள். பதறிப்போன ஹரி உடனே அசோக்கின் வீட்டிற்கு கால் செய்து விபரம் சொன்னான். கோவிந்த் பாலாவின் அறைக்கு ஓடி அவருடைய காரை இரவல் வாங்கி வந்தான். டீமில் இருக்கும் ஐந்து பேருமே அசோக்கை காண ஆபீசில் இருந்து பரபரப்பாய் காரில் விரைந்தனர். வழிநெடுக ப்ரியா புலம்பிக்கொண்டே வந்தாள். "எல்லாம் என்னாலதான்.. எல்லாம் என்னாலதான்..!!" தலையில் அடித்துக்கொண்டு அழுகிற ப்ரியாவை அருகிலிருந்த கவிதா ஆறுதலாக அணைத்துக் கொண்டாள். "ப்ச்.. அழாத ப்ரியா.. ப்ளீஸ்.. அவனுக்கு ஒன்னும் ஆகாது..!!" கார் ஓட்டுகிற ஹரியும், அவனுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த கோவிந்தும், பின்புறமாக திரும்பி ப்ரியாவை ஒருமுறை இரக்கமாக பார்த்தார்கள். 'ப்ரியாவுடைய அழுகை, வெறும் நட்பினால் பிறந்ததா.. இல்லை.. அதையும் தாண்டிய உணர்வினாலா..?' என்ற சந்தேகம் இப்போது எல்லோருக்குமே வந்திருந்தது. நேத்ராவுக்கு மட்டும், அன்று அழுதுகொண்டே அவள் கோவிந்தின் வீட்டுக்கு ஸ்கூட்டியில் பறந்தது நினைவுக்கு வந்து போனது. கோவிந்த் அசோக்கின் செல் நம்பருக்கு கால் செய்து, அசோக்கை ஹாஸ்பிட்டலில் சேர்த்தவரிடம் பேசிக்கொண்டே வந்தான். அசோக்கின் நிலைமை பற்றி விசாரித்து தெரிந்து கொண்டான். "பயப்படுறதுக்குலாம் ஒண்ணும் இல்லையாம்.. ஹெல்மட் போட்டிருந்ததால தலை எதுவும் அடி இல்ல.. கைலதான் எலும்பு ஃப்ராக்சர் ஆயிருக்கும் போல.. ஆனா.. பெருசா கவலைப்படுறதுக்கு எதுவும் இல்லன்னு சொல்றாரு..!!" கோவிந்தின் வார்த்தைகள் கொந்தளித்துக் கொண்டிருந்த ப்ரியாவின் மனதுக்கு ஓரளவு நிம்மதியை வார்த்தன. இருந்தாலும் அவளுடைய கண்கள் தொடர்ந்து நீரை சிந்திக்கொண்டேதான் இருந்தன. கார் மருத்துவமனை சென்றடைந்தது. காரில் இருந்து இறங்கிய ஐந்து பேரும் அசோக் அனுமதிக்கப்பட்டிருக்கும் நான்காவது தளத்திற்கு அவசரமாய் விரைந்தார்கள். தம்பு பள்ளியிலும், ராஜேஷ் அலுவலகத்திலும் சிக்கிக்கொண்டதால், அவர்கள் இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை. தீவிர சிகிச்சைப் பிரிவை சார்ந்த அறை ஒன்றுக்கு வெளியே.. அதிர்ச்சியில் உடைந்து போனவளாய்.. அழுது ஓய்ந்து உறைந்து போனவளாய்.. செல்வி அமர்ந்திருந்தாள்..!! மருத்துவர்கள் அழைப்பிற்கும்.. மருந்து வாங்க அலைவதற்குமாய்.. செண்பகம்தான் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தாள். "அ..அசோக்குக்கு என்னாச்சு..?? எப்படி இருக்கான் இப்போ..??" கண்களில் நீருடன் தன் முன் நிற்கிற ப்ரியாவை செல்வி அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய் ஏறிட்டாள். ப்ரியாவும் செல்வியும் சந்தித்துக் கொண்டனர். 'அசோக்குடன்தான் ப்ரியா ஆறு வருடங்களாக வேலை பார்த்திருக்கிறாள்' என்ற விஷயம் செல்விக்கு தெரிய வந்தது. 'அசோக்கிற்கும் ப்ரியாவுக்கும் திருமணப்பேச்சு நடந்திருக்கிறது' என்ற விஷயம் மீதம் உள்ளவர்களுக்கும் தெரியவந்தது. அனைவருக்குமே ஆச்சரியம்..!! ஆனால் அந்த ஆச்சரியத்தை வெளிப்படுத்த முடியாதவாறு, அங்கு நிலவிய இறுக்கமான சூழ்நிலை அவர்களை தடுத்திருந்தது. அசோக்கை மருத்துவமனையில் சேர்த்திருந்தவர் இவர்கள் அங்கே சென்றடைந்தபோது கிளம்பியிருந்தார். அவர் சொன்னதைப் போலவே, விபத்தினால் அசோக்கிற்கு பெரிய அளவு சேதம் எதுவும் இல்லை. இடது முழங்கை எலும்பு முறிவும்.. இரண்டு கால்களிலும் சிராய்ப்புகளும் மட்டுமே..!! முறிந்த எலும்பின் நகர்வு சற்று சிக்கலாகிப் போனதால்.. அறுவை சிகிச்சை மூலமே எலும்பை பொருத்தி நிலை நிறுத்த முடியும் என்றாகிப் போனது. ஆபரேஷன் தியேட்டருக்குள் அசோக் அடைபட்டிருக்க, அதற்கு வெளியே அனைவரும் கவலை தோய்ந்த முகத்துடன் காத்திருந்தனர்.இவர்கள் சென்று சேர்ந்த அரை மணி நேரத்திற்கெல்லாம், ராஜேஷ் தம்புவுடன் ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தான். கணவனை கண்டதுமே, அதுவரை எங்கேயோ வெறித்த பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்த செல்வி, 'என்னங்க..' என்று கத்தியவாறு எழுந்து ஓடினாள். "அ..அவனுக்கு.. அவனுக்கு.." என்று வார்த்தை வராமல் திணறினாள். உடைந்து போய் அழ ஆரம்பித்தாள். "அழாதம்மா.. ஒண்ணுல்ல.. ஒண்ணுல்ல..!!" ஆறுதலாய் சொன்னவாறே ராஜேஷ் அவளை அணைத்துக் கொண்டான். "நைட்டு ஒரு கெட்ட கனவுன்னு காலைலேயே சொன்னனேங்க.. இப்படி ஆயிடுச்சே..??" "அழாத செல்வி.. ப்ளீஸ்..!!" "அவன் கை காலெல்லாம் ஒரே ரத்தங்க..!!" சொல்லிவிட்டு செல்வி கண்ணீரை சிந்த ஆரம்பித்தாள். மனைவியின் அழுகை ராஜேஷையும் பாதித்தது. அவனுடைய கண்களும் மெல்ல கசிய ஆரம்பிக்க, அதை அவசரமாய் துடைத்துக் கொண்டான். அவர்களையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த ப்ரியாவுக்கு, 'சண்டை போடுறது எங்களுக்கு ஹாபி மாதிரி..!!' என அசோக் அன்று புன்னகையுடன் சொன்னது ஞாபகம் வந்தது. வெளியே சண்டை போட்டுக்கொண்டாலும் உள்ளுக்குள் அவர்களுக்குள் இருக்கும் பாசப்பிணைப்பை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. 'இந்த குடும்பத்தில் ஒருத்தியாக எனக்கு கொடுத்து வைக்கவில்லையே..' என்பது மாதிரியான ஒரு ஆதங்கம் அவளையும் அறியாமல் அவளுக்குள் எழுந்தது. "ஹை.. ப்ரியா சித்தி..!!" தம்பு கத்திக்கொண்டே அப்பாவின் கைகளில் இருந்து விடுபட்டு, ஓடிவந்து ப்ரியாவை கட்டிக்கொண்டான். சற்றே ஆச்சரியத்தில் திளைத்த ப்ரியாவும், உடனே அவனை ஆரத்தழுவிக் கொண்டாள். 'ப்ரியாவின் புகைப்படத்தை காட்டி இவள்தான் உன் சித்தி என யாரோ சொல்லியிருக்கிறார்கள்' என்பது மட்டும் எல்லோருக்கும் புரிந்தது. ஆனால்.. செல்வியாயிருக்கும் என ராஜேஷும்.. ராஜேஷாய் இருக்கும் என செல்வியும்.. அவர்கள் இருவருமாயிருக்கும் என அடுத்தவர்களும் நினைத்துக் கொண்டார்கள்..!! 'இவள் எப்படி இங்கே..?' என்று குழம்பிய ராஜேஷுக்கு ப்ரியா பற்றி செல்வியே எல்லாம் சொன்னாள்..!! நண்பகல் ஒரு மணி அளவில்.. நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்து.. அசோக் பொது வார்டுக்கு மாற்றப்பட்டான்..!! ஆனால் சிகிச்சைக்காக அளிக்கப்பட்டிருந்த செடேட்டிவ் அவனை மயக்கத்துடனே வைத்திருந்தது. இடையில் ஒருமுறை அரைகுறை மயக்கத்துடன் அவன் விழித்தபோதே, அவனிடம் ஆறுதலாக ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு, காரில் வந்த அனைவரும் திரும்ப ஆபீஸ் கிளம்பினார்கள். 'நான் வரல.. நீங்க கெளம்புங்க..' என்று ப்ரியா மட்டும் அங்கேயே தங்கிவிட்டாள். மயக்கத்தில் இருக்கிற அசோக்கின் அருகில் அமர்ந்தவாறு, அவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். தனது முட்டாள்த்தனமான கோவத்தினால் கைமுறிந்து சுனங்கிப்போய் படுத்திருக்கும் காதலனை இரக்கத்துடன் பார்த்தாள். அவ்வப்போது அவளையும் அறியாமல் கண்களில் வழிந்த நீரை ரகசியமாய் துடைத்துக் கொண்டாள். யாரும் கவனிக்கவில்லை என்று தோன்றும்போது, தனது கையால் அசோக்கின் கையை பற்றி வாஞ்சையுடன் தடவினாள். ப்ரியாவின் இந்த செய்கைகளை எல்லாம் கவனித்த செல்வி, அவளை சற்றே வியப்பாகவும் வித்தியாசமாகவும் பார்த்தாள். மாலையில் அசோக் கண்விழித்து எழுந்ததும்.. எழுந்ததுமே அவன் சகஜமாக பேச ஆரம்பித்ததும்.. அதுவரை அங்கு நிலவிய இறுக்கமான சூழ்நிலை தளர்ந்து.. ஒரு இலகுவான சூழ்நிலை மெல்ல திரும்பியது..!! ப்ரியா மட்டும் அங்கேயே தங்கிவிட்டது அசோக்கை சற்றே ஆச்சரியமுற செய்தது. ஆனால் அவனுடைய மனமோ அவள் மீது ஒருவித வெறுப்பில் உழன்றதால், முகத்தில் எந்தவித உணர்ச்சியும் அவன் காட்டிக்கொள்ளவில்லை. கடந்த சில நாட்களாகவே கொஞ்சம் கொஞ்சமாய் ப்ரியாவின் மீது ஏறியிருந்த வெறுப்பு, இன்று உச்சபட்சத்தை எட்டியிருந்ததுதான் காரணம். அசோக் ப்ரியாவின் முகத்தை நேரிடையாக பார்ப்பதையே தவிர்த்தான். ஒருமுறை எதேச்சையாக பார்க்க நேர்ந்தபோது, அவள் பார்வையாலேயே பரிதாபமாக கெஞ்ச.. இவன் அவளை அலட்சியம் செய்தான்..!! அசோக்கிற்கு ஸ்பூனில் சாப்பாடு ஊட்டிக்கொண்டே.. செல்வி அவன் மீதிருந்த அன்பை வெளிப்படுத்தினாள்.. அவளுடைய பாணியில்.. அவளுக்கு தெரிந்த விதத்தில்.. அதிகாரமும், கோபமுமாக..!! "என்னைக்காவது யார் சொல்றதையாவது காது குடுத்து கேட்டாத்தான.. பொறுமையா போடா பொறுமையா போடான்னு.. எத்தனை நாள் சொல்லிருப்பேன்..?? பைக்கு ஓட்டுறதுனா எதோ ப்ளைட்டு ஓட்டுறது மாதிரி நெனைப்பு.. அப்படியே எடுத்த வாக்குல விர்ர்ருனு பறக்குறது..!!" என்று குழைத்த சாதத்தை அவனுடைய வாயில் திணித்தவாறே முறைப்பாக சொன்னாள். "ஷ்ஷ்ஷ்.. ப்பாஆஆஆ.. ஆரம்பிச்சாச்சா..??" அசோக் சலிப்பாக சொன்னவாறே சாதத்தை மென்றான். "அப்படி என்ன தலை போற அவசரம்னு கேக்குறேன்..?? எந்த கோட்டையை புடிக்க அம்புட்டு வேகம்..??" செல்வி அவனிடம் கேட்கும்போதே, ப்ரியாவுக்கு இங்கே சுருக்கென்று இருந்தது."ப்ச்.. இப்போ எதுக்கு அதுலாம்.. விடுங்க அண்ணி..!!" அசோக் ப்ரியாவை காட்டிக் கொடுக்கவில்லை. "ஹ்ம்ம்.. அந்த பைக்கை யார்ட்டயாவது வித்துடுங்கன்னு உங்க அண்ணன்ட்ட சொல்லிப்புட்டேன்..!!" "ஹையோ.. என்ன அண்ணி இது..?? பைக் இல்லாம நான் எப்படி ஆபீஸ் போறது..??" "பஸ்ல போ.. வீட்ல இருந்து அஞ்சு நிமிஷம் நடந்தா கம்பனி பஸ் வரப்போகுது.. ஏறி போகப் போற..!! என்ன கஷ்டம் இருக்கு உனக்கு..??" "ப்ச்.. பஸ்லலாம் என்னால போக முடியாது..!!" "ஓஹோ.. முடியாதா..?? இனி நீ பைக்ல கெளம்புறதை பாத்துட்டு.. என்னாலையும் வீட்ல நிம்மதியா இருக்க முடியாது..!! எந்த சாமி புண்ணியமோ.. இந்த அளவோட போச்சு..!! நாங்க இனிமே நிம்மதியா இருக்கணும்னு நீ நெனச்சியின்னா.. ஒழுங்கா பஸ்லயே ஆபீஸ் போ..!!" "இப்போ ஏன் தேவை இல்லாம பயப்படுறீங்க.. அதுலாம் திரும்ப இதுமாதிரி நடக்காது..!!" "உனக்கு என்ன.. எல்லாம் வெளையாட்டுத்தான்..!! காலைல இருந்து நாங்க பட்ட வேதனை எங்களுக்குத்தான தெரியும்..!! இனிமே அந்த பைக்ல நீ காலை வையி.. கால் ரெண்டையும் ஒடைச்சு போட்டுர்றேன்..!!" "ஏன்.. கை உடைஞ்சு படுத்து கெடக்குறது பத்தாதாக்கும்..??" "ம்க்கும்.. இந்த லொள்ளுப்பேச்சுக்கு ஒன்னும் கொறைச்சலு இல்ல.. சொல்லுப்பேச்சு மட்டும் கேக்காத..!!" அசோக்கும் செல்வியும் அந்த மாதிரி இயல்பாகவும் இலகுவாகவும் பேசிக்கொண்டது, அவர்களை பார்த்துக் கொண்டிருந்த ப்ரியாவையையும் செண்பகத்தையும் சற்றே இறுக்கம் தளர்ந்து புன்னகைக்க செய்தது. செல்வி காலையில் தன் கணவனிடம் காட்டிய கண்ணீர் முகத்திற்கும்.. இப்போது அசோக்கிடம் காட்டுகிற முறைப்பு முகத்திற்கும் நிறைய வேறுபாடுகள்.. ஒரே ஒரு ஒற்றுமையை தவிர..!! அசோக் மீது அவள் வைத்திருக்கும் பாசம்தான் அந்த ஒற்றுமை..!! சிறிது நேரத்தில் நேத்ரா மீண்டும் மருத்துவமனைக்கு வந்தாள். அசோக்கின் மெடிக்கல் இன்ஷ்யூரன்ஸ் சம்பந்தமான டாகுமண்டுகளை ஆபீசில் இருந்து எடுத்து வந்திருந்தாள். அவர்களுடன் அமர்ந்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தவள், அப்புறம் அவசர வேலை இருக்கிறது என அங்கிருந்து கிளம்பினாள். அவள் ஆபீஸில் இருந்து வருகையில் எடுத்து வந்திருந்த ப்ரியாவின் ஸ்கூட்டி சாவியை ப்ரியாவிடம் ஒப்படைத்துவிட்டு சென்றாள். பிறகு ராஜேஷும், செல்வியும் சிறிது நேரம் ப்ரியாவிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். அவளுடைய குடும்பத்தை பற்றி விசாரித்து அறிந்து கொண்டார்கள். நின்று போன திருமணத்தைப் பற்றி பேச விரும்பாதவர்களாய், அந்தப் பேச்சை தவிர்த்தார்கள். அதனால் அப்போதும் கூட.. 'ப்ரியாதான் தனக்காக பார்க்கப்பட்ட பெண்' என்பது அசோக்கிற்கு தெரிய வரவில்லை. தன்னைப் பார்க்க வந்த அலுவலக தோழியை பற்றி அண்ணனும், அண்ணியும் விசாரித்து தெரிந்து கொள்கிறார்கள் என்று சகஜமாகவே எடுத்துக் கொண்டான். அப்புறம் வானம் இருட்டிய பிறகுதான் ப்ரியா அங்கிருந்து கிளம்பினாள். அவள் கிளம்புகையில்தான் செல்வி திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாய் தன் தங்கையை பார்த்து சொன்னாள். "ஏய் செண்பகம்.. நீயும் ஹாஸ்டலுக்கு போகணும்லடி.. அக்கா கூடவே போயிடேன்..!!" "இ..இல்லக்கா.. நான் அப்புறம் போய்க்குறேன்.. அ..அவங்களுக்கு எதுக்கு சிரமம்..??" செண்பகம் தயங்கினாள். "பரவால செண்பகம்.. வா.. நான் ட்ராப் பண்றேன்..!!" ப்ரியா இதமான குரலில் சொன்னாள். "இ..இல்லக்கா.. இட்ஸ் ஓகே..!!" "ஏய்.. கூப்பிடுறாங்கல்ல.. போடீ..!!" தங்கையின் தயக்கத்திற்கான அர்த்தம் புரியாமல் செல்வி எரிச்சலாக சொன்னாள். ஒரு சில வினாடிகள் அவஸ்தையாக நெளிந்த செண்பகம், அப்புறம் எழுந்து கொண்டாள். ப்ரியாவுடன் கிளம்பினாள். செண்பகமும் ப்ரியாவும் நான்காவது தளத்தில் இருந்து படிக்கட்டில் கீழே இறங்கினார்கள். இருவருக்குள்ளும் இப்போது ஒருவித இறுக்கம் நிறைந்திருந்தது. இயல்பாக பேசிக்கொள்வதில் ஒரு தயக்கம் இருந்தது. எதுவும் பேசிக்கொள்ளாமலே அமைதியாக ஒவ்வொரு படியாக இறங்கிக் கொண்டிருந்தார்கள். செண்பகம் அசோக்கை காதலிக்கிறாள் என்பது ப்ரியாவின் நம்பிக்கையாக இருந்ததால், அவனுக்கு நேர்ந்த இந்த விபத்தினால், தன்னைப்போலவே ஒரு தாங்க முடியாத வலியை அவளும் இப்போது அனுபவித்துக் கொண்டிருப்பாள் என்றே கருதினாள். ஓரக்கண்ணால் ஒருமுறை சென்பகத்தை பார்த்துக் கொண்டாள். செண்பகத்துக்கோ வேறொரு விதமான உணர்வு. ப்ரியாவின் அடக்குமுறையான அணுகுமுறையால் அசோக் இப்படி அடிபட்டு கிடக்கிறானே என்பது மாதிரியான உணர்வு. கொஞ்ச நேரத்திலேயே அந்த உணர்வை அடக்க முடியாமல், பட்டென ப்ரியாவிடம் கேட்டுவிட்டாள். "ஏ..ஏன்க்கா இப்படிலாம் பண்றீங்க..??"அவ்வளவுதான்..!! அந்த ஒற்றை கேள்விக்கே ப்ரியா துடித்துப் போனாள். அவ்வளவு நேரம் காணாமல் போயிருந்த அந்த குற்ற உணர்வு, இப்போது குப்பென வந்து அவள் மனதை அப்பிக்கொண்டது. அம்பு தைத்த பறவையை போல, செண்பகத்தை மருட்சியாக ஒரு பார்வை பார்த்தாள். தடுமாற்றமாய் சொன்னாள். "ஸா..ஸாரி செண்பகம்.. நா..நான் ஏதோ.. தெ..தெரியாம.." "நான் உங்களை குத்திக்காட்டனும்னு கேக்கலைக்கா..!! ஆக்சிடன்ட்டுக்கு நீங்கதான் காரணம்னு நான் சொல்லல.. ஆனா.. அவசரமும் டென்ஷனுமா மாமா இன்னைக்கு கெளம்புனதுக்கு நீங்கதான் காரணம்.. அந்த டென்ஷன்தான் இந்த ஆக்சிடன்ட்டுக்கு காரணம்..!! 'வேணுன்னே எல்லாம் பண்றா செண்பகம்.. ஏன் இப்படிலாம் பண்றான்னே எனக்கு ஒன்னும் புரியலை..'னு வெறுப்பா சொல்லிட்டுத்தான் பைக்ல கெளம்பினாரு..!!" "......................." "அவரை ஏன் இப்படி டென்ஷனாக்கி வேடிக்கை பாக்குறீங்க..?? அவர் மேல அப்படி என்ன உங்களுக்கு வெறுப்பு..??" "சேச்சே.. அ..அவன் மேல எனக்கு வெ..வெறுப்புலாம் எதுவும் இல்ல செண்பகம்..!! நெ..நெஜமாவே இன்னைக்கு ஒரு க்ரிட்டிக்கல் இஷ்.." ப்ரியா சமாளிக்க தடுமாறினாள். "இன்னைக்கு நடந்ததை மட்டும் வச்சு நான் சொல்லலைக்கா.. நானும் வந்ததுல இருந்து எல்லாம் கவனிச்சுட்டுத்தான் இருக்குறேன்.. நீங்க அவர்ட்ட எப்படி நடந்துக்குறீங்கன்னு நானும் பாத்துட்டுத்தான் இருக்குறேன்..!! அவரை வெரட்டி வெரட்டி அடிக்கிறீங்க நீங்க..!! ஆனா.." செண்பகம் சொல்ல வந்ததை பாதியிலேயே நிறுத்தினாள். "ம்ம்..?? ஆனா..??" "மாமாவுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்க்கா.. உங்களை பத்தி எப்போவும் நல்லவிதமாத்தான் பேசுவாரு.. அவருக்கு உங்க மேல எந்த வெறுப்பும் இல்ல..!! ஒருதடவை.. நானே உங்களை திட்டி பேசுனப்போ.. 'ப்ரியா பத்தி இனி இப்படிலாம் பேசாத'ன்னு.. என் மேல கோவப்பட்டிருக்காரு..!! ஆனா.. உங்களுக்கு மட்டும் ஏன் அவர் மேல இவ்வளவு கோவம்..?? உங்க கோவத்தால அவரு இப்போ எப்படி கெடக்குறாருன்னு பாத்தீங்களா..??" "......................." ப்ரியா பேச வார்த்தையின்றி சிலையாக நின்றிருந்தாள். "ப்ளீஸ்க்கா.. இனிமே இப்படிலாம் பண்ணாதீங்க.. மாமாவை புரிஞ்சுக்கங்க.. ப்ளீஸ்..!!" செண்பகம் சொல்லிவிட்டு ப்ரியாவின் முகத்தை ஏக்கமாக பார்க்க, ப்ரியாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. தேவையற்ற பொறாமை உணர்வால்.. தேவையற்ற வெறுப்பினை சிந்தி.. தேவையற்ற வேதனையை அனைவருக்கும் கொடுத்து.. தானுமே அந்த வேதனையில் சிக்கித்தவிக்கிறோம் என்று தெளிவாக புரிந்தது அவளுக்கு..!! அசோக்கின் நிலையை நினைக்க நினைக்க அழுகை வரும்போல இருந்தது. உதடுகளை கடித்து கட்டுப்படுத்திக் கொண்டாள். "ஸாரி செண்பகம்.. ஸாரி.. எல்லாத்துக்கும்..!! நான் செஞ்சது தப்புதான்..!!" என்று கெஞ்சலாக சொன்னாள். செண்பகம் அப்புறம் அவளை எதுவும் கேட்கவில்லை. இருவரும் அதற்குமேல் எதுவும் பேசிக்கொள்ளாமல், அமைதியாக அந்த மருத்துவமனையின் கீழ்த்தளத்துக்கு வந்து சேர்ந்தார்கள். நுழைவாயில் விட்டு வெளியே வந்ததும், செண்பகம் வேறுபக்கமாய் திரும்பி நடக்க, ப்ரியா அவளை அவசரமாய் அழைத்தாள். "ஹேய்.. செண்பகம்.. பார்க்கிங் ஏரியா இந்தப்பக்கம்.." "இல்லக்கா.. நான் ஆட்டோலேயே போய்க்குறேன்.. அதுதான் பெஸ்ட்.. அவன்தான் பாதில இறக்கிவிட மாட்டான்..!!" செண்பகம் திரும்பிக்கூட பாராமல் சொல்லிவிட்டு, விடுவிடுவென நடையை தொடர்ந்தாள். போகிற போக்கில் ஒரு கூர்மையான அம்பாக பார்த்து எறிந்துவிட்டு செல்கிற செண்பகத்தை, ப்ரியா திகைப்பாய் பார்த்தவாறே சிறிது நேரம் நின்றிருந்தாள்.அன்று இரவு.. அண்ணனும் அண்ணியும் தனக்காக பார்த்த பெண் ப்ரியாதான் என்ற விஷயம் அசோக்கிற்கு தெரியவந்தது. அவனுடைய கால் சிராய்ப்புக்கு மருந்து தடவிக்கொண்டே செல்விதான் ஆரம்பித்தாள். "அந்தப்பொண்ணு உனக்கு நல்ல பழக்கமாடா..??" "எந்தப்பொண்ணு..??" அசோக் புரியாமல் கேட்டான்."அதான்.. உனக்கு கட்டிவைக்கிறதுக்காக நாங்க பாத்த பொண்ணு.. நல்ல பழக்கம் மாதிரிதான் தெரியுது.. அப்புறம் ஏன் நீ எங்ககிட்ட சொல்லவே இல்ல..??" செல்வி இயல்பாக பேசிக்கொண்டே போக, அசோக் குழப்பமாய் அவளை ஏறிட்டான். "என்னாச்சு உங்களுக்கு..?? எனக்கு கைல அடிபட்டிருக்குன்னா.. உங்களுக்கு தலைல ஏதாவது அடிபட்ருக்கா..??" அசோக் அந்தமாதிரி கிண்டலாக கேட்கவுந்தான் செல்விக்கு நடந்த விஷயம் நினைவுக்கு வந்தது. "ஓ.. ஆமால்ல.. நீதான் அவ ஃபோட்டோவே பாக்கலைல..?? சரி சரி.. இப்போ எனக்கு புரியுது..!!" "ப்ச்.. என்ன புரியுது.. எனக்கு ஒரு எழவும் புரியல..!!" "ஹையோ.. அ..அந்த ப்ரியா இருக்கால்ல.. உன் கூட வேலை பாக்குறவ.." "ஆமாம்..!!" "அவதான்டா நாங்க உனக்கு பாத்த பொண்ணு..!!" செல்வி கேஷுவலாக சொல்ல, அசோக் அப்படியே அதிர்ந்து போனான். "எ..என்ன அண்ணி சொல்றீங்க..??" என்று நம்பமுடியாதவனாய் கேட்டான். "ஆமாண்டா..!! நாலு மாசம் முன்னாடி.. உனக்கு பாத்திருக்குற பொண்ணுன்னு உன் அண்ணன் உன்கிட்ட ஒரு ஃபோட்டோ நீட்டுனார்ல.. அது இந்த ப்ரியாதாண்டா..!! அப்போ நீ வேணான்னு சொல்லிட்ட.. அவரும் அதை அப்படியே கெடப்புல போட்டாரு..!! அப்புறம் நீயாவே பொண்ணு பாருங்கன்னு சொன்னதும்.. திரும்பவும் பேசி.. இந்த ப்ரியா அப்பாகிட்ட ஜாதகம் வாங்கி.. பொருத்தம்லாம் பார்த்து.." செல்வி சொல்லிக்கொண்டே இருக்க, அசோக் ஒரு உச்சபட்ச குழப்பத்திலும், திகைப்பிலும் திளைக்க ஆரம்பித்தான். அண்ணி சொன்ன விஷயத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளவே அவனுக்கு சிறிது நேரம் பிடித்தது. உள்வாங்கிக்கொண்ட விஷயத்தை அவனது மூளை உற்று ஆராய, பலவித குழப்ப எண்ணங்கள் மளமளவென அவனுக்குள் கிளம்ப ஆரம்பித்தன. 'ப்ரியாவா..?? ப்ரியாவையா எனக்காக பெண் பார்த்தார்கள்..?? 'இவளை கட்டிக்கப் போறியா.. இல்லையா..' என இவர்கள் கண்டிப்புடன் கேட்டது ப்ரியாவைத்தானா..?? 'முடியவே முடியாது..' என நான் ஒற்றைக்காலில் நின்று ஒதுக்கியதும் ப்ரியாவைத்தானா..?? என்ன ஒரு குழப்பம் இது..?? அப்படியானால்.. அவர்.. அந்த வரதராஜன்.. ப்ரியாவின் அப்பாவா..?? 'என்னை விட நல்ல மாப்பிள்ளை கிடைப்பான்..' என நான் வாழ்த்து வழங்கியது ப்ரியாவிற்கா..??' அடுக்கடுக்காய் கேள்விகள் எழ, அசோக்கிற்கு தலையை வலிப்பது போல இருந்தது. இந்த விஷயத்தையும் ப்ரியாவையும் இணைத்து யோசித்து பார்த்தான். 'இந்த கல்யாண ஏற்பாடு விஷயம் எல்லாம் ப்ரியாவிற்கு தெரிந்திருக்குமா..?? இல்லையே.. தெரிந்திருந்தால் என்னிடம் சொல்லியிருப்பாளே..??' "அ..அவளுக்கு இந்த விஷயம் தெரியுமா அண்ணி..?? ஐ மீன்.. நான்தான் மாப்ளைன்னு..??" "ம்ம்.. தெரிஞ்ச மாதிரிதான் காட்டிக்கிட்டா.. அதான எனக்கும் கொழப்பம்..?? அந்த பொண்ணு உன்கிட்ட சொல்லவே இல்லையா..??" "இ..இல்ல அண்ணி.. சொல்லல..!!" "ஆமாம்.. நீதான் புடிச்ச புடில வேணான்னு சொல்லிட்டியே.. அதை அவ அப்பா அவட்ட சொல்லிருப்பாரு.. அதான் அவளும் அதைப்பத்தி பேசல போல..!! ஆனா.. நான் கூட என்னவோ நெனச்சன்டா.. பெங்களூர்லயே பொறந்து வளந்த பொண்ணு.. என்ன குணமோ.. எப்படி இருக்காளோன்னு.."செல்வி தொடர்ந்து பேசியதை கவனியாமல் அசோக் மீண்டும் சிந்தனையில் மூழ்க ஆரம்பித்தான். 'ஓ.. எல்லாம் தெரிந்து கொண்டுதான் இத்தனை நாளாய் அவள் எதுவும் சொல்லவில்லையா..?? ஏன் அப்படி செய்தாள்..?? ஆமாம்.. காரணமே இல்லாமல் உன்மீது இவ்வளவு வெறுப்பை உமிழ்கிறாள்.. அவளா வந்து கல்யாண செய்தியை உரைக்கப் போகிறாள்..?? அவளுக்கு இந்த கல்யாணத்தைப் பற்றி எந்த அக்கறையும் இருந்திருக்கப் போவதில்லை..!! நான் வேண்டாம் என்று சொன்னதும் 'விட்டொழிந்தது சனியன்' என்று மறந்திருப்பாள்..!!' ".......................... ரொம்ப அமைதியான குணம்.. எளகுன மனசு.. ரொம்ப அப்பாவியா இருக்குறாடா.." செல்வி பேசிக்கொண்டே இருக்க, "யா..யாரை சொல்றீங்க..??" அசோக் இடையில் புகுந்து கேட்டான். "அந்த ப்ரியாவைத்தாண்டா சொல்றேன்..!! பேருக்கு ஏத்த மாதிரி எல்லார்ட்டயும் எவ்வளவு ப்ரியமா நடந்துக்குறா..?? ரொம்ப நல்ல புள்ளைடா..!!" வெகுளியாக சொன்ன அண்ணியை அசோக் முறைப்பாக பார்த்தான். "ம்க்கும்.. ரொம்ப நல்ல்ல்ல நொள்ளைதான்.. நாட்டுலயே கெடைக்காது..!!" அசோக் வெறுப்பாக சொன்னான். "ஏண்டா அப்படி சொல்ற..?? உனக்கு ஆக்சிடன்ட்னு தெரிஞ்சு அவ எப்படி துடிச்சு போயிருக்கா தெரியுமா..?? வர்றப்போவே ஓ'ன்னு அழுதுட்டேதான் வந்தா..!! நீ தூங்குனப்போ உன் பக்கத்துல உக்காந்து உன் மூஞ்சியவே பாத்துட்டு இருந்தா..!! உன் மேல அவளுக்கு ரொம்ப ப்ரியம் போலடா..!!" 'அதான் அந்த ப்ரியம்.. புண்ணாக்கு.. புடுங்கி பிராண்டுனதுலாம் பார்த்தாச்சே..?? கல்லை விட்டு அடிச்சுட்டு.. காயத்துக்கு மருந்து போட வந்திருக்கா.. நீலிக்கண்ணீர் வடிக்கிறா.. அது புரியாம நீங்க பேசிட்டு இருக்கீங்க..!!' அசோக் மனதில் நினைத்தை வெளியே சொல்லவில்லை. அமைதியாகவே இருந்தான். அவனுடைய மனநிலை புரியாது செல்விதான் கேட்டாள். "ஏண்டா.. ஒருவேளை இந்த ப்ரியாதான் பொண்ணுன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா.. நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருப்பியா..??" "ஏ..ஏன் அப்படி கேக்குறீங்க..??" அசோக் சற்று தடுமாற்றமாகவே கேட்டான். "இல்லடா.. எனக்கு அப்படி தோணுச்சு..!! நான் வேணுன்னா உன் அண்ணன்ட்ட சொல்லி.. மறுபடியும் அவ அப்பாட்ட பேச சொல்லவா..??" "ஹையோ.. சும்மா இருங்க அண்ணி.. உள்ள கொழப்பம் போதும்.. நீங்க வேற ஏதாவது பண்ணிட்டு இருக்காதீங்க..!!" "நான் என்ன பண்ண பண்றேன்..??" "எதுவும் பண்ண வேணாம்னுதான் சொல்றேன்.. எல்லாம் நான் பாத்துக்குறேன்.. விடுங்க..!!" அதேநேரம் ப்ரியாவின் வீட்டில்.. அசோக்கிற்கு நேர்ந்த விபத்து பற்றி ப்ரியா தன் அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். விஷயம் கேட்டு வரதராஜன் பதறிப் போனார். அடுத்த நாள் மருத்துவமனை சென்று, அசோக்கை நேரில் பார்க்க விரும்புவதாக கூறினார். ப்ரியா அவரை அவசரமாய் தடுத்தாள். "ஐயோ.. வேணாம் டாடி..!! அவன் ஏற்கனவே என் மேல பயங்கர கோவத்துல இருக்கான்.. இந்த நேரத்துல நீங்க அவனை பாக்க வேணாம்..!!" "உன் மேல கோவமா..?? ஏன்மா..??" "ப்ச்.. அதெல்லாம் சொன்னா உங்களுக்கு புரியாது டாடி..!! எல்லாம் நான் பாத்துக்குறேன்.. விடுங்க..!!" என்ற ப்ரியா மனதுக்குள் 'அவன்கூட மனசு விட்டு பேசணும் டாடி.. மன்னிப்பு கேக்கணும்.. நான் செஞ்ச தப்பை உணர்ந்திட்டேன்னு சொல்லி கெஞ்சனும்..' என்று நினைத்துக் கொண்டாள்.

அன்று நள்ளிரவு தாண்டியும் அசோக்கும் ப்ரியாவும் உறக்கம் வராமல் மிகவும் சிரமப்பட்டனர். ப்ரியாதான் தனக்காக பார்த்த பெண் என்ற விஷயம் அசோக்கிற்கு ஆச்சரியத்தை கொடுத்திருந்தது. ஆனால் அவனிருந்த சூழ்நிலையிலும், மனநிலையிலும் அந்த ஆச்சரியம் அவனுக்கு ஏனோ மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. ப்ரியாவின் செய்கைகள் அவன் மனதில் ஏற்படுத்தியிருந்த வெறுப்பு, அந்த ஆச்சரியம் தந்த சந்தோஷத்தை சாப்பிட்டிருந்தது. கட்டுப்போட்டிருந்த கையை ஒருமுறை தடவிப் பார்த்துக் கொண்டான். அதே நேரம் ப்ரியாவோ.. 'தன்னால் அசோக்கிற்கு இவ்வாறு நேர்ந்துவிட்டதே' என்று எண்ணி எண்ணியே, இருட்டுக்குள் ரகசியமாக அழுதாள். மனதுக்குள்ளேயே அசோக்கை வரவழைத்து 'மன்னித்துவிடு..!!' என்று மன்றாடினாள். அவனிடம் மனம் விட்டு பேசவேண்டும் என்று மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டாள். கண்ணீர் பொங்கும் கண்களை தலையணையிலேயே துடைத்துக் கொண்டாள்.அத்தியாயம் 22 ப்ரியா நினைத்துக்கொண்ட மாதிரி அவ்வளவு எளிதாக அசோக்கிடம் மனம்விட்டு பேசி விட முடியவில்லை. அவர்கள் இருவரும் தனித்திருக்கும் நேரமே வாய்க்கவில்லை. அசோக் அந்த மருத்துவமனையில் ஐந்து நாட்கள் இருந்தான். அந்த ஐந்து நாட்களும் ப்ரியா காலையில் ஒருமுறை, மாலையில் ஒருமுறை அவனை சென்று பார்த்து வருவாள். ஆனால் எந்த நேரமும் அவனுடன் யாரவது ஒருவர் உடனிருப்பார்கள். மனதில் நினைத்தை சுதந்திரமாக பேசிக்கொள்ள முடியாமல் போகும். "இப்போ எப்படிடா இருக்கு..?? பரவாலையா..??" என்று ஃபார்மலாகத்தான் கேட்க முடியும். அதற்கு அவனும் "ம்ம்..?? இருக்கு இருக்கு..!!" என்பான் முகத்தை முறைப்பாக வைத்துக்கொண்டு. "ஸாரிடா..!!" ப்ரியா கிசுகிசுப்பான குரலில் கெஞ்சலாக சொல்வாள். "ப்ச்..!!" அசோக் சலிப்பாக சொல்லிவிட்டு முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொள்வான். தினமும் காலையிலே கோவிலுக்கு சென்று அசோக்கின் பெயரில் அர்ச்சனை செய்து, அவன் நெற்றியில் வந்து திருநீறு பூசுகிற ப்ரியாவை செல்விக்கு மிகவும் பிடித்து போனது. மாலையில் ஆபீஸை விட்டு கிளம்ப எவ்வளவு நேரம் ஆனாலும், ஆஸ்பத்திரிக்கு வந்து கொஞ்ச நேரமாவது அவர்களுடன் செலவழித்து சென்றது செல்வியை கவர்ந்துவிட்டது. ப்ரியா வந்துவிட்டாலே, அவளை அருகில் அமர்த்தி வைத்து, அவளுடைய கையை வாஞ்சையாக தடவிக் கொடுத்தவாறே, ஏதாவது ஸ்னேஹமாக பேசிக்கொண்டிருப்பாள். ஆறாம்நாள் காலை.. அசோக் ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான். வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டான். 'வீட்டுக்கு அடிக்கடி வாம்மா..!!' என்று சொன்ன செல்வியின் நட்பு கிடைத்ததால், ப்ரியா அசோக்கின் வீட்டுக்கு செல்வதிலும் எந்த தடையும் இருக்கவில்லை. ஆஸ்பத்திரிக்கு விட்டது போலவே அசோக்கின் வீட்டுக்கும் தினம் இரண்டு முறை விசிட் விட்டாள். ஆனால் அவர்கள் தனித்து பேசிக்கொள்ளத்தான் சந்தர்ப்பம் கிட்டவில்லை..!! அசோக்கின் மனதிலோ வெறுப்பு.. ப்ரியாவின் மனதிலோ ஏக்கம்.. வெளிப்படுத்திக்கொள்ளத்தான் வாய்ப்பு அமையவில்லை.. காத்திருந்தனர் இருவரும்..!! அசோக் வீட்டுக்கு சென்ற மூன்றாம் நாள் காலை..!! அன்று விடுமுறைதான்.. ப்ரியா சற்று தாமதமாகவே தனது வீட்டில் இருந்து அசோக்கை பார்த்துவர கிளம்பினாள்..!! அசோக்கின் வீட்டை அடைந்தபோது மணி ஒன்பதரை ஆகி இருந்தது..!! வீட்டுக்குள் நுழைந்தவள்.. 'இது அசோக்கின் வீடுதானா..?' என்று ஒருகணம் குழம்பிப் போக நேர்ந்தது..!! ஏதோ சந்தைக்கடைக்குள் நுழைந்தாற்போல சலசலவென்று ஒரே சத்தம்..!! இருபது.. இருபத்தைந்து பேர்கள்.. அசோக்கின் உறவினர்கள்.. விபத்தில் சிக்கிய அசோக் வீடு திரும்புவதற்காக காத்திருந்தவர்கள்.. அவன் வீடு திரும்பியதும் கிராமத்தில் இருந்து கிளம்பி வந்திருந்தனர்..!! இப்போது ஹாலில் கும்பலாக அமர்ந்து ஆளாளுக்கு ஏதேதோ கதையடித்துக் கொண்டிருந்தார்கள்..!! அசோக்கை மட்டும் அந்த கூட்டத்தில் காணோம்..!! அவர்களை பார்த்து ப்ரியா சற்றே திகைத்துப்போய் நின்றிருக்க.. "இதோ வந்துட்டால..?? இவதான் ப்ரியா..!!" என்று செல்விதான் முதலில் இவளை கவனித்து கத்தினாள். அவ்வளவுதான்..!! உக்காந்திருந்த ஏழெட்டுப் பெண்கள் உடனே எழுந்து வந்து ப்ரியாவை பிடித்துக் கொண்டார்கள். 'நீதானாம்மா.. வா.. வா..' என்று அவளை அழைத்து சென்று அவர்களுக்கு நடுவில் அமர்த்தி வைத்துக் கொண்டனர். இந்த திடீர் சூழ்நிலையை சற்றும் எதிர்பாராத ப்ரியா திருதிருவென விழித்தாள். ஒருமாதிரி மிரட்சியாக எல்லோரையும் பார்த்தாள். அதை யாரும் புரிந்து கொள்ளாமல் ஆளாளுக்கு அவளுடைய கன்னத்தை தடவி பிய்த்து எடுத்தனர். ஏதேதோ கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர். "செவசெவன்னு சினிமாக்காரி மாதிரில இருக்குறா..!!" என்று கமென்ட் அடித்தாள் ஒரு கிழவி. "ஏம்மா.. இந்த தலைக்கறில சின்ன வெங்காயம், மொளகா வத்தல் போட்டு பெரட்டி எடுத்தா.. எனக்கு ரொம்ப உசுரு.. தாத்தாவுக்கு வச்சு குடுப்பியா..??" என்று கேட்டது ஒரு பெருசு. "உங்களுக்கு அஜித் புடிக்குமா.. விஜய் புடிக்குமா..??" என்றாள் ஒரு ஆறு வயது சிறுமி. "இது என்னடி அதிசயமா இருக்கு..?? வளையலை போய் காதுல மாட்டிருக்காக..?? இதுதான் பெங்களூர் மாடலாக்கும்..??" ப்ரியாவின் காது வளையத்தை பிடித்து இழுத்தாள் ஒரு பெண். "ஏத்தா.. என் பேரனை கட்டிக்க உனக்கு சம்மதந்தானா..??" இதை கேட்டது அசோக்கின் பாட்டி. ப்ரியா இன்னும் மிரட்சி தெளியாமலே இருக்க, செல்வியே அதற்கு பதில் சொன்னாள். "ம்க்கும்.. இந்தப்புள்ளையா வேணாஞ்சொல்லுச்சு..?? உன் பேரப்புள்ளைதான் உச்சானிக்கொம்புல ஏறி ஒக்காந்திருக்காப்புல.. அவன்ங்கிட்ட போய் கேக்க வேண்டியதான..??" "அடிப்போடி.. அவன்ங்கிட்ட போய் என்னத்த கேக்க சொல்றவ..?? பொண்ணு பாக்கவான்னு கேட்டதுக்கே.. 'போறியா.. இல்ல.. பொதைகுழில எறக்கிப்புடவா'ன்ல கேட்டான்..??" "அப்புறம் என்ன.. வாயை மூடிக்கிட்டு ச்சும்மா கெட..!!"இப்போது அசோக்கின் அம்மா எழுந்து வந்து ப்ரியாவுக்கு அருகில் அமர்ந்து கொண்டாள். ப்ரியாவின் கன்னத்தை பிடித்து வாஞ்சையாக தடவியவாறே, மலர்ந்த முகத்துடன் கேட்டாள். "வீட்ல அப்பா, தம்பிலாம் சவுக்கியமாம்மா..??" "ம்ம்.. ச..சவுக்கியம்..!!" "நீயும் என் புள்ளை வேல பாக்க அதே கம்பெனிலதான் வேல பாக்கியாக்கும்..?? "ம்ம்.. ஆ..ஆமாம்..!!" "செல்விதான் சொன்னா..!! அசோக்கு அடிபட்ட அன்னைக்கு நீ எப்படி துடிச்சு போயிட்டேன்னு.. அன்னைக்கு பூரா அவன் கூடவே இருந்து பாத்துக்கிட்டியாமே..?? என் புள்ளை மேல உனக்கு அவ்வளவு பிரியமாம்மா..??" "ம்ம்..!!" ப்ரியா அவஸ்தையாக நெளிந்தவாறே சொன்னாள். ஒருமுறை பார்வையை சுழற்றி செண்பகத்தை தேடினாள். அவளோ இங்கே நடப்பது எதையுமே கண்டுகொள்ளாமல், அசோக்கை பார்க்க வந்தவர்கள் அவனுக்கு கொண்டுவந்திருந்த பலாச்சுளைகளை, 'லபக் லபக்' என்று வாய்க்குள் திணித்து அசைபோட்டுக் கொண்டிருந்தாள். ப்ரியா இப்போது சற்றே எரிச்சலாக செண்பகத்தை பார்த்தாள். 'ச்சே.. என்ன பெண் இவள்..?? அவளுடைய காதலனை பிடித்திருக்கிறதா என்று இங்கே ஆளாளுக்கு என்னை மொய்க்கிறார்கள்.. கல்யாணப்பேச்சு பேசுகிறார்கள்.. இவள் என்னவென்றால் கவலையே இல்லாமல் பலாப்பழம் விழுங்குகிறாள்..??' "என்னம்மா.. அப்படி பாக்குற..??" அசோக்கின் அம்மா அன்பாய் கேட்க, "ஒ..ஒண்ணுல்ல ஆண்ட்டி.. அ..அசோக்.. அசோக் எங்க..??" ப்ரியா திணறலாக கேட்டாள். "அப்படியே காத்து வாங்கிட்டு வரேன்னு மொட்டை மாடிக்கு போனான்..!! ஏன்மா.. அவனை பாக்கணுமா..??" "ம்ம்..!!" "சரி போ.. மேலதான் இருக்கான்.. போய்ப்பாரு..!!" 'விட்டால் போதும்..' என்பது போல ப்ரியா படக்கென எழுந்து கொண்டாள். அவளுடைய முதுகுக்குப்பின், அவளை கிண்டல் செய்து எல்லோரும் கெக்கேபிக்கே என்று கனைக்க, இவள் அதை கண்டுகொள்ளாமல் வெளியே வந்தாள். படியேறி மொட்டை மாடி சென்றாள். தூரத்தில் முதுகு காட்டி நின்றவாறு பூங்காவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அசோக் கண்ணில் பட்டான். மெல்ல நடந்து அவனை நெருங்கினாள். ப்ரியா வந்ததை அசோக் கவனிக்கவில்லை. அவனுக்கு அருகில் சென்ற ப்ரியா, ஓசை ஏதும் எழுப்பாமல், கைப்பிடி சுவற்றில் ஊன்றியிருந்த அவனது வலது கையை, தனது கையால் இதமாக பற்றி ஒரு அழுத்தம் கொடுத்தாள். உடனே படக்கென திரும்பி பார்த்த அசோக், ப்ரியா என்று தெரிந்ததும் வெடுக்கென தனது கையை உருவிக் கொண்டான். சற்றே சீற்றமாக கேட்டான். "ப்ச்.. என்ன..??" "என் மேல கோவம் இன்னும் போகலையா..??" "உன் மேல கோவப்பட நான் யாரு..??" அசோக்கின் வார்த்தைகள் ப்ரியாவை வன்மையாக தாக்கின. "ஏண்டா இப்படிலாம் பேசுற..??" "இனிமே எல்லாம் அப்படித்தான்..!! என்ன விஷயம்னு சொல்லு..!!" அசோக் கடுமையாக சொன்னான். வெறுப்பு கொப்பளிக்கும் அவன் முகத்தையே ப்ரியா பரிதாபமாக பார்த்தாள். சில வினாடிகள் தயங்கியவள், அப்புறம் மெல்ல ஆரம்பித்தாள். "கீ..கீழ.. அவங்க எல்லாம் என்னன்னவோ பேசுறாங்க அசோக்..!!" "என்ன பேசுறாங்க..??" "நம்ம கல்யாணப் பேச்சை திரும்ப ஆரம்பிச்சுட்டாங்க.. உன்னை கட்டிக்க சம்மதமான்னு எங்கிட்ட கேக்குறாங்க..!!" "ஓஹ்..!! அவங்களுக்கு வேற வேலையே கெடயாது.. அவங்க எய்ம்லாம் ஏதோ ஒரு கழுதையையோ குரங்கையோ புடிச்சு எனக்கு கட்டி வச்சிடணும்.. அவ்ளோதான்.. ச்ச..!!" அசோக் சலிப்பாக சொல்ல, "என்னது..???" ப்ரியா முகத்தை சுளித்தவாறு அவனை பார்த்தாள். "ஹ்ம்ம்.. அதுக்கு நீ என்ன சொன்ன..??" "நான் என்னத்த சொல்றது..?? நீதான் அவங்ககிட்ட போய் சொல்லணும்..!!" "நானா..?? நான் என்ன சொல்லணும்..??" "இங்க பாரு அசோக்.. இனிமேயும் நீ காலம் கடத்துறது கொஞ்சம் கூட சரி இல்ல.. அல்ரெடி ரொம்ப லேட்..!! போய் அவங்ககிட்ட உன் மனசுல இருக்குறதை பளிச்சுன்னு சொல்லிடு..!!" "ப்ச்..!! என்ன சொல்றேன்னே எனக்கு ஒன்னும் புரியல..!!" "ஹையோ.. 'செண்பகத்தைத்தான் நான் கட்டிக்கப்போறேன்'னு.. அவங்ககிட்ட போய் சொல்லுன்னு சொல்றேன்..!!" ப்ரியா சொன்ன விஷயத்தை சரியாக புரிந்து கொள்ளவே அசோக்கிற்கு சில வினாடிகள் பிடித்தன. பிறகு புரிந்ததும் எரிச்சலாக கேட்டான். "என்ன உளர்ற..?? செண்பகத்தை எதுக்கு நான் கட்டிக்கணும்..??" "அவளைத்தான நீ லவ் பண்ற..??" "உனக்கென்ன லூசா..?? அவளை நான் லவ் பண்றேன்னு உனக்கு யாரு சொன்னது..??" அசோக் முறைக்க, இப்போது ப்ரியா நெற்றியை சுருக்கினாள். "செ..செண்பகத்தை லவ் பண்றேன்னு.. நீ..நீதான அன்னைக்கு என் அப்பாகிட்ட.." ப்ரியா தடுமாற்றமாய் சொல்லி முடிக்கும் முன்பே அசோக் புரிந்து கொண்டான். "ப்ச்.. நான் லவ் பண்றேன்னு மட்டுந்தான் சொன்னேன்.. அவராத்தான் 'அன்னைக்கு உங்ககூட வந்த பொண்ணா'ன்னு கேட்டாரு..!! அந்த நேரம் பாத்து.. நீ வேற இந்தப்பக்கம் அவசரப் படுத்தின.. நானும் கால் கட் பண்ற அவசரத்துல ஆமாம்னு சொல்லிட்டேன்..!!" என்று அவன் படபடவென சொல்ல, "ஓ..!!" அதிர்ச்சியில் ப்ரியாவுக்கு வாய் 'ஓ'வென பிளந்து கொண்டது. ஒரு கையால் அந்த வாயை மூடிக்கொண்டாள். விழிகளை அகலமாய் விரித்து, உறைந்து போனவளாய் அசோக்கையே பார்த்தாள். அவன் சொன்னதை இன்னும் நம்ப முடியாதவளாகவே சிலவினாடிகள் திகைப்பாய் பார்த்தாள். அப்புறம் சற்றே திணறலாக கேட்டாள். "அ..அப்போ நீ செண்பகத்தை லவ் பண்ணலையா..??" "ம்ஹூம்..!!' "ஐயோ.. என்னடா நீ..??? நீ அவளை லவ் பண்றேன்னு நெனச்சுல நான் எல்லாம் பண்ணிட்டேன்.. தேவை இல்லாம உன் மேல கோவத்தை காட்டிட்டேன்.. வேணுன்னே வெறுப்பை கொட்டிட்டேன்.. இந்த ஆக்சிடன்ட்க்கு கூட.." ஏதோ ஒரு அவசரத்தில் படபடவென பேசிவிட்ட ப்ரியா, பட்டென நாக்கை கடித்துக் கொண்டாள். உடனே அமைதியாகிப் போனாள். அவஸ்தையாய் அசோக்கின் முகத்தை ஏறிட்டாள். ஆனால் அவள் சொன்னதை கேட்டு அதிர்ச்சியுற்ற அசோக், அந்த வார்த்தைகளை பிடித்துக் கொண்டான். "ம்ம்.. சொல்லு ப்ரியா.. இந்த ஆக்சிடன்ட்கு கூட..??" அசோக் கூர்மையாக கேட்க, ப்ரியா இப்போது சுதாரித்துக் கொண்டாள். "அ..அசோக்.. ப்ளீஸ்.. நான் உனக்கு ஆரம்பத்துல இருந்து சொல்றேன்..!!" "இல்ல.. இதை மொதல்ல சொல்லு.. இந்த ஆக்சிடன்ட்கு கூட..?? என்ன பண்ணின..??" "அ..அசோக்.. ப்ளீஸ்..!!" ப்ரியா கெஞ்சினாள். "சொல்லுடி..!!" அசோக் கத்தினான். ப்ரியாவுக்கு வேறு வழி இருக்கவில்லை. "அன்னைக்கு வேணுன்னேதான் அப்படி பண்ணினேன்.. அது ஒன்னும் க்ரிட்டிக்கல் இஷ்யூலாம் இல்ல.. பொய் சொல்லித்தான் உன்னை உடனே ஆபீஸ் கெளம்பி வர சொன்னேன்..!!" ப்ரியா சொல்ல சொல்லவே, அசோக்கின் மனதுக்குள் அவள் மீது ஒரு ஆத்திரம் குபுகுபுவென பொங்க ஆரம்பித்தது. அவள் சொன்னதை நம்பி.. பைக்கை எடுத்துக்கொண்டு பறந்து.. லாரியை முந்தி செல்ல நினைத்து.. வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து.. லாரி மீது மோதி.. ரோட்டோரமாய் தூக்கி வீசப்பட்டது.. அவனுடைய கண்முன் படமாக ஓடியது..!! "ஓ..!! நெனச்சேன்..!!" என்றான் வெறுப்புடன். "ப்ளீஸ்டா அசோக்.. நான் ஏன் அப்படிலாம் செஞ்சேன்னு புரிஞ்சுக்கோ.. எல்லாத்துக்கும் காரணம் இருக்கு..!!" "என்ன காரணம் இருக்கு..?? உனக்கு உடம்பு பூரா கொழுப்புன்றதை தவிர..??" "ஹையோ.. நான்.." ப்ரியா சொல்ல முடியாமல் தவித்தாள். "ம்ம்.. சொல்லு..!!" தன் காதலை எப்படி எப்படி எல்லாம் அசோக்கிடம் சொல்லவேண்டும் என்று ப்ரியா எத்தனையோ நாள் கனவு கண்டிருக்கிறாள். எந்தெந்த வார்த்தைகள் எல்லாம் உபயோகித்து அலங்காரத்துடன் சொல்லவேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறாள். ஆனால்.. அந்த வார்த்தைகள் எல்லாம் இப்போது அவளுக்கு கைகொடுக்காமல் போக, "நா..நான் உன்னை லவ் பண்றன்டா..!!" என்றாள் அலங்காரமற்ற வார்த்தைகளால்.. சற்றே பரிதாபமாக..!!அசோக்கும் எத்தனையோ நாள் ப்ரியாவின் வாயிலிருந்து இந்த வார்த்தைகளை கேட்க ஏங்கியிருக்கிறான். அவள் தன் காதலை சொல்லும்போது, தன் மனம் எப்படி எல்லாம் பூரித்துப் போகும் என்று கற்பனை வளர்த்திருக்கிறான். ஆனால்.. அந்த நேரத்தில் ப்ரியாவின் மீது அவனுக்கிருந்த அளவற்ற ஆத்திரம்.. அவள் காதல் சொன்ன மகிழ்ச்சியை மங்கிப் போக செய்திருந்தது..!! சீறினான்..!!"ஓ..!! லவ் பண்ணினா என்ன வேணா பண்ணுவியா..?? ஏதோ நல்ல நேரம்.. கையோட போச்சு..!! உசுரு போயிருந்தா..??" "எனக்கு புரியுதுடா.. நான் செஞ்சது தப்புதான்..!! என்னை மன்னிச்சுடு.. ப்ளீஸ்..!!" பரிதாபமாக சொன்னவாறு ப்ரியா அசோக்கின் கையை பற்றினாள். அவன் வெடுக்கென அவளுடைய கையை உதறினான். "ச்சீ.. கையை விடு..!! என் கண் முன்னாடியே நிக்காத.. போயிடு..!!" "ப்ளீஸ் அசோக்.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு..!!" "என்ன சொல்லப் போற..??" "நான் உன் மேல உயிரையே வச்சிருக்கேன்டா..!! ஆறு வருஷத்துல இந்த லவ் எப்போ ஆரம்பிச்சதுன்னு கூட எனக்கு தெரியல.. கொஞ்சம் கொஞ்சமா உள்ள வந்து.. இப்போ என் மனசு பூரா நீதான் இருக்குற..!! நீ எனக்கு சொந்தமானவன்னு நான் முடிவே பண்ணிட்டேன் அசோக்.. அதான் செண்பகம் நமக்குள்ள வந்ததை என்னால தாங்கிக்க முடியல..!! அவ மேல பொறாமை.. பொசசிவ்னஸ்..!! அதான் இப்படிலாம் நடந்துக்கிட்டேன்.. எல்லாத்துக்குமே உன் மேல இருந்த லவ்தாண்டா காரணம்..!!" ப்ரியா இரக்கமாக சொல்ல, "பொய்..!! எல்லாத்துக்கும் உன்னோட ஈகோதான் காரணம்.. நான் நெனச்சா என்ன வேணா பண்ணுவேன்ற உன் திமிர்தான் காரணம்..!! பண்றதெல்லாம் பண்ணிட்டு.. இப்போ லவ் மேல பழியை போடுறியா..?? இதுல என்னை ஈகோ புடிச்சவன்னு கிண்டல் பண்றது..?? என் ஈகோலாம் சும்மா வெளையாட்டுத்தனமாதான் இருக்கும்.. இப்படி கையை முறிச்சு ஹாஸ்பிட்டல் அனுப்பாது..!! இன்னைக்கு நீ டெக்லீடா இருக்குறேன்னா அதுக்கு காரணம் நான்.. ஆனா நீ.. அந்த அதிகாரத்தை வச்சுக்கிட்டு.. என் உசுருக்கே உலை வச்சிட்ட.. இல்ல..??" அசோக் சூடாக கேட்டான். "இல்லடா.. சத்தியமா இல்ல.. நான் அப்படிலாம் நெனைக்கவே இல்ல..!!" "நடிக்காத..!! 'உன்னை டீமே விட்டே தூக்குறேன் பாரு'ன்னு வெரல் சொடுக்கி சவால் விட்டவதான நீ..?? 'எனக்கும் நேரம் வரும்.. அப்பா நான் யாருன்னு காட்டுறேன்'னு சொன்னவதான நீ..?? இன்னும் கொஞ்சம்னா இந்த உலகத்தை விட்டே தூக்கிருப்ப..!!" "ஹையோ.. உனக்கு புரியலை.. அது வேற.. இது வேற..!!" "என்ன வேற வேற..?? எனக்கு எல்லாம் ஒண்ணாத்தான் தெரியுது..!!" "இப்படி புரிஞ்சுக்கவே மாட்டேன்னு அடம் புடிச்சா நான் என்ன பண்ணட்டும்..?? நான் பண்ணினது தப்புதான்னு நான் ஒத்துக்கிட்டேன்.. நான் செஞ்ச தப்பை திருத்திக்க எனக்கு ஒரு சான்ஸ் குடுக்க மாட்டியா..?? என்னை கொஞ்சம் பேச விடு.. ப்ளீஸ்..!!!" ப்ரியா அந்த மாதிரி அழுகுரலில் கேட்கவும், அசோக் இப்போது சற்றே ஆத்திரம் தணிந்தான். "சொல்லு..!!" "நான் உனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணி தர்றேன்.. ஓகேவா..??" "என்ன..??" "உனக்கு ஆக்சிடன்ட் ஆனது தெரிஞ்சதுமே.. என் ஈகோ செத்துப் போச்சு அசோக்..!! இனிமே சத்தியமா அந்தமாதிரி நடந்துக்க மாட்டேன்.. எந்த வகையிலையும் உன் மேல வெறுப்பு காட்ட மாட்டேன்.. ஆபீசுக்கு உள்ளேயும் சரி.. ஆபீசுக்கு வெளிலயும் சரி.. சத்தியமா உனக்கு இனி எந்த கஷ்டமும் கொடுக்க மாட்டேன்டா..!! இட்ஸ் எ ப்ராமிஸ்.. என்னை நம்பு.. ப்ளீஸ்..!!" ப்ரியா அசோக்கின் தலை மீது கைவைத்து உறுதியான குரலில் சொன்னாள். அவள் சொன்னதைக்கேட்டு அசோக் எந்த உணர்ச்சியும் காட்டாமல் நின்றிருந்தான். இப்போது ப்ரியா அசோக்கின் தலை மீது இருந்த கையை மெல்ல கீழிறக்கி, அவனுடைய நெற்றியை மென்மையாக வருடினாள். கலைந்திருந்த அவனது தலை முடியை காதோரத்திற்கு ஒதுக்கிவிட்டாள். பிறகு அவனது கன்னத்தை கனிவாக தாங்கிப்பிடித்தவாறு, பரிதாபமான குரலில் சொன்னாள். "நீ எனக்கு வேணுண்டா அசோக்..!! நீ என்னை லவ் பண்ணாட்டாலும்.. என் லைஃப் லாங் நீ எனக்கு வேணும்.. ஒரு ஃப்ரண்டா..!! நான் என்னை மாத்திக்கிட்டேண்டா.. நான் இதுவரை செஞ்சதுக்காக என்னை நீ வெறுத்து ஒதுக்கிடாத ப்ளீஸ்.. என்னால அதை தாங்கிக்க முடியாது.. நீ எனக்கு எப்போவும் வேணும்..!!" ப்ரியாவின் கெஞ்சலில் அசோக் சற்றே நெகிழ்ந்து போனான். அன்று ஸ்குவாஷ் கோர்ட்டில் அவளிடம் அடிபட்டுவிட்டு, அப்புறம் அவள் ஒத்தடம் தந்தபோது.. அவனுக்கு எந்த மாதிரி ஒரு உணர்வு இருந்ததோ.. அதே மாதிரியான ஒரு உணர்வு இப்போது மெகா சைஸில் அவன் மனதை நிறைத்திருந்தது..!! 'இவளிடம் ஒத்தடம் பெறுவது இதமாகத்தான் இருக்கிறது.. ஆனால் ஒத்தடத்துக்கு முன் இவள் அடித்த அடியின் வலி.. அதை விட அதிகமாக இருக்கிறதே..??' "சரி விடு.. இதை இத்தோட விட்ரலாம்..!!" அசோக் சாந்தமாக சொன்னான். அவனுடைய ஆத்திரம் தணிந்து போயிருந்ததில் பிரியாவுக்கும் இப்போது நிம்மதியாக இருந்தது. அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு அவர்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. புயலடித்து ஓய்ந்த மாதிரி இருந்தது. கைப்பிடி சுவற்றில் சாய்ந்தவாறு.. கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியவாறு.. வானத்தை வெறித்துக் கொண்டிருந்தனர்..!! சிறிது நேரம் கழித்து ப்ரியா முகத்தை பக்கவாட்டில் திருப்பி, அசோக்கை பார்த்தாள். அவனுடைய முகத்தில் எந்தவித சலனமும் இருக்கவில்லை. ப்ரியாவின் இதழ்களில் இப்போது மெலிதாக ஒரு புன்னகை அரும்பியது. தனது கையால் அசோக்கின் கையை தேடிப்பிடித்தாள். அவனது விரல்களோடு தனது விரல்களை கோர்த்துக் கொண்டாள். மென்மையாக நெறித்தாள். அசோக் இப்போது அவளுக்கு எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. அவன் அமைதியாய் நின்றிருக்க, ப்ரியாதான் மெல்லிய குரலில் கேட்டாள். "யார் அந்தப்பொண்ணு..??" "எ..எந்தப்பொண்ணு..??" "அதான்.. நீ லவ் பண்ற அந்த லக்கி கேர்ள்..!! செண்பகம் இல்லைன்னு சொல்லிட்ட.. அப்படினா வேற யாரு..??" இப்போது அசோக் திரும்பி ப்ரியாவின் முகத்தை ஏறிட்டான். ஓரிரு வினாடிகள் அவள் கண்களையே கூர்மையாக பார்த்தான். அப்புறம் என்ன நினைத்தானோ.. ஒரு பெருமூச்செறிந்துவிட்டு, சுரத்தற்ற குரலில் சொன்னான். "நான் யாரையும் லவ் பண்ணல..!!" "ப்ச்.. அப்புறம் ஏன் அன்னைக்கு அப்பாட்ட அப்படி சொன்ன..??" "அது.. சும்மா அவரை சமாளிக்க பொய் சொன்னேன்..!!" "இல்ல.. இப்போ நீ சொல்றதுதான் பொய்..!! நீ யாரையோ லவ் பண்ற..!!" "ப்ச்.. அதான் இல்லன்னு சொல்றேன்ல..??" "கமான் அசோக்.. ஏன் மறைக்கிற..?? இத்தனை நாளா நீ எங்கிட்ட மறைச்சதுக்கே உனக்கு நல்ல பனிஷ்மன்ட் கொடுக்கணும்..!! சொல்லு.. யாரை லவ் பண்ற..?? எனக்கு இப்போ தெரிஞ்சாகனும்..!!" "................." "ஹ்ம்ம்ம்... எங்கிட்ட சொல்றதுல என்னடா தயக்கம்..?? இதுதான் நீ என் ப்ரெண்ட்ஷிப்கு தர்ற மரியாதையா..?? யாரை லவ் பண்ணாலும் உடனே எங்கிட்ட வந்து சொல்லிருக்க வேணாமா..?? ம்ம்..??" ப்ரியா புன்னகையுடன் கேட்க, அசோக்கும் ஏதோ ஞாபகத்தில்.. "ப்ச்.. வேற யாரையாவது லவ் பண்ணிருந்தாத்தான் உடனே உன்கிட்ட சொல்லிருப்பேனே..!!" என்று அவசரமாக சொல்லிவிட்டான். ப்ரியாவிற்கு உடனே சுருக்கென்று இருந்தது. 'என்ன சொல்லுகிறான் இவன்..??' "எ..என்ன..?? இப்ப என்ன சொன்ன.. திரும்ப சொல்லு..??" என்று நெற்றியை சுருக்கியவாறு கேட்டாள். அசோக் இப்போது சுதாரித்துக்கொண்டவனாய்.. "யா..யாரையாவது லவ் பண்ணிருந்தாத்தான் உடனே உன்கிட்ட சொல்லிருப்பேனேன்னு சொன்னேன்..!!" என்று சற்று முன் சொன்னதை சற்றே மாற்றி சொன்னான். "இல்ல இல்ல.. வேற யாரையாவதுன்னு சொன்ன..?? அப்படின்னா என்ன அர்த்தம்..??" "ப்ச்.. அப்படிலாம் நான் சொல்லவே இல்ல..!!" "ம்ஹூம்.. எனக்கு தெளிவா கேட்டுச்சு..!! வேற யாராவதா இருந்தா எங்கிட்ட உடனே சொல்லிருப்ப.. அப்போ யாரா இருந்தா எங்கிட்ட சொல்ல தயங்கிருப்ப..?? யோசிச்சு பாத்தா.. ம்ம்ம்.. ம்ம்ம்.."அசோக் சாந்தமாக சொன்னான். அவனுடைய ஆத்திரம் தணிந்து போயிருந்ததில் பிரியாவுக்கும் இப்போது நிம்மதியாக இருந்தது. அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு அவர்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. புயலடித்து ஓய்ந்த மாதிரி இருந்தது. கைப்பிடி சுவற்றில் சாய்ந்தவாறு.. கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியவாறு.. வானத்தை வெறித்துக் கொண்டிருந்தனர்..!! சிறிது நேரம் கழித்து ப்ரியா முகத்தை பக்கவாட்டில் திருப்பி, அசோக்கை பார்த்தாள். அவனுடைய முகத்தில் எந்தவித சலனமும் இருக்கவில்லை. ப்ரியாவின் இதழ்களில் இப்போது மெலிதாக ஒரு புன்னகை அரும்பியது. தனது கையால் அசோக்கின் கையை தேடிப்பிடித்தாள். அவனது விரல்களோடு தனது விரல்களை கோர்த்துக் கொண்டாள். மென்மையாக நெறித்தாள். அசோக் இப்போது அவளுக்கு எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. அவன் அமைதியாய் நின்றிருக்க, ப்ரியாதான் மெல்லிய குரலில் கேட்டாள். "யார் அந்தப்பொண்ணு..??" "எ..எந்தப்பொண்ணு..??" "அதான்.. நீ லவ் பண்ற அந்த லக்கி கேர்ள்..!! செண்பகம் இல்லைன்னு சொல்லிட்ட.. அப்படினா வேற யாரு..??" இப்போது அசோக் திரும்பி ப்ரியாவின் முகத்தை ஏறிட்டான். ஓரிரு வினாடிகள் அவள் கண்களையே கூர்மையாக பார்த்தான். அப்புறம் என்ன நினைத்தானோ.. ஒரு பெருமூச்செறிந்துவிட்டு, சுரத்தற்ற குரலில் சொன்னான். "நான் யாரையும் லவ் பண்ணல..!!" "ப்ச்.. அப்புறம் ஏன் அன்னைக்கு அப்பாட்ட அப்படி சொன்ன..??" "அது.. சும்மா அவரை சமாளிக்க பொய் சொன்னேன்..!!" "இல்ல.. இப்போ நீ சொல்றதுதான் பொய்..!! நீ யாரையோ லவ் பண்ற..!!" "ப்ச்.. அதான் இல்லன்னு சொல்றேன்ல..??" "கமான் அசோக்.. ஏன் மறைக்கிற..?? இத்தனை நாளா நீ எங்கிட்ட மறைச்சதுக்கே உனக்கு நல்ல பனிஷ்மன்ட் கொடுக்கணும்..!! சொல்லு.. யாரை லவ் பண்ற..?? எனக்கு இப்போ தெரிஞ்சாகனும்..!!" "................." "ஹ்ம்ம்ம்... எங்கிட்ட சொல்றதுல என்னடா தயக்கம்..?? இதுதான் நீ என் ப்ரெண்ட்ஷிப்கு தர்ற மரியாதையா..?? யாரை லவ் பண்ணாலும் உடனே எங்கிட்ட வந்து சொல்லிருக்க வேணாமா..?? ம்ம்..??" ப்ரியா புன்னகையுடன் கேட்க, அசோக்கும் ஏதோ ஞாபகத்தில்.. "ப்ச்.. வேற யாரையாவது லவ் பண்ணிருந்தாத்தான் உடனே உன்கிட்ட சொல்லிருப்பேனே..!!" என்று அவசரமாக சொல்லிவிட்டான். ப்ரியாவிற்கு உடனே சுருக்கென்று இருந்தது. 'என்ன சொல்லுகிறான் இவன்..??' "எ..என்ன..?? இப்ப என்ன சொன்ன.. திரும்ப சொல்லு..??" என்று நெற்றியை சுருக்கியவாறு கேட்டாள். அசோக் இப்போது சுதாரித்துக்கொண்டவனாய்.. "யா..யாரையாவது லவ் பண்ணிருந்தாத்தான் உடனே உன்கிட்ட சொல்லிருப்பேனேன்னு சொன்னேன்..!!" என்று சற்று முன் சொன்னதை சற்றே மாற்றி சொன்னான். "இல்ல இல்ல.. வேற யாரையாவதுன்னு சொன்ன..?? அப்படின்னா என்ன அர்த்தம்..??" "ப்ச்.. அப்படிலாம் நான் சொல்லவே இல்ல..!!" "ம்ஹூம்.. எனக்கு தெளிவா கேட்டுச்சு..!! வேற யாராவதா இருந்தா எங்கிட்ட உடனே சொல்லிருப்ப.. அப்போ யாரா இருந்தா எங்கிட்ட சொல்ல தயங்கிருப்ப..?? யோசிச்சு பாத்தா.. ம்ம்ம்.. ம்ம்ம்.."ப்ரியாவின் மூளை இப்போது சுர்ரென சுறுசுறுப்பாக இயங்கியது. ஆறு வருடங்களாக அசோக்குக்கும் அவளுக்குமான நிகழ்வுகள்.. அப்போது அவனுடைய பேச்சு.. பார்வை.. நடவடிக்கைகள்.. எல்லாம் பளிச் பளிச்சென மின்னல் போல அவளுடைய நினைவில் வந்து போயின..!! அவள் தலையை சற்றே கவிழ்த்தவாறு அந்த மாதிரி யோசித்துக்கொண்டிருக்க, அசோக் அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். எல்லாவற்றையும் அவசரமாய் ஆராய்ந்த ப்ரியாவின் புத்தி.. அவளுக்கு ஒரு முடிவை அறிவிக்க.. அவள் இப்போது தனது கருவிழிகளை மேலே உருட்டி.. அசோக்கின் முகத்தை ஒரு மேல்ப்பார்வை பார்த்து.. பட்டென்று கேட்டுவிட்டாள்..!! "நீ என்னைத்தான லவ் பண்ற..??" "ஹேய்.. அ..அதுலாம் ஒண்ணுல்ல..!!" அசோக் தடுமாற்றமாய் சொன்னான். "இல்ல இல்ல.. நீ என்னைத்தான் லவ் பண்ற..!! மறைக்காத அசோக்.. உண்மையை சொல்லு.. ப்ளீஸ்..!!" ப்ரியா தவிப்பாக கேட்டாள். "ஏய்.. அதான் இல்லைன்னு சொல்றேன்ல..??" அசோக் சொல்லும்போதே அவனையும் அறியாமல், ஒரு சிறு புன்னகை அவனுடைய இதழ் வழியே கசிந்தது. "பாரு பாரு.. சிரிக்கிற பாரு..!! இட்ஸ் கன்ஃபார்ம்ட்.. யு ஆர் இன் லவ் வித் மீ..!!" ப்ரியா முகமெல்லாம் பரவசமாய் சொல்ல, அசோக் இப்போது பட்டென முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டான். "ஒய்.. உனக்கென்ன லூசா..?? சொன்னா புரியாதா..?? நான்தான் இல்லைன்னு சொல்றேன்ல..?? அப்புறமும் நாந்தான நாந்தானன்னு கேட்டா என்ன அர்த்தம்..?? நான் யாரையும் லவ் பண்ணலை.. லவ் பண்ணலை.. லவ் பண்ணலை..!! போதுமா..???" அசோக் அப்படி பெரிய குரலில் கத்த, ப்ரியா இப்போது சோர்ந்து போனாள். அவனுடைய முகத்தையே ஒருமாதிரி ஏக்கமாய் பார்த்தாள். 'ஏண்டா இப்படி என்னை சித்திரவதை செய்கிறாய்..??' என்பது போல இருந்தது அந்தப்பார்வை. அசோக்கும் அவளுடய முகத்தையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடய பார்வையில் ஒரு குறும்பு மிளிர்ந்ததை ப்ரியா சில வினாடிகளிலேயே புரிந்து கொண்டாள். அதுவரை அவனை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தவள், இப்போது பட்டென முகம் மாற்றிக்கொண்டு முறைத்தாள். "நீ என்னைத்தான் லவ் பண்ற.. எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு..!! ஆனா.. அதை சொல்றதுக்கு உன் ஈகோ இடம் குடுக்கலைல..?? இத்தனை நாளா நான் ஈகோ பாத்துட்டு உன்னை கஷ்டப்படுத்தினேன்னு.. நீ இப்போ என்னை கஷ்டப்படுத்தி பாக்க நெனைக்கிறல..?? பரவால.. இட்ஸ் ஓகே..!! நானும் பாக்குறேன்.. எத்தனை நாள் நீ இப்படி இருக்குறேன்னு பாக்குறேன்..!! 'என் லவ்வை அக்சப்ட் பண்ணிக்கோ ப்ரியா'ன்னு உன்னை எங்கிட்ட வந்து கெஞ்ச வைக்கிறனா இல்லையான்னு பாரு..!!"

ப்ரியா சவால் விடுவது மாதிரி சொன்னாள். மார்பில் புரண்ட கூந்தலை தூக்கி பின்புறம் வீசியவள், விடுவிடுவென படிக்கட்டை நோக்கி வேகமாய் நடந்தாள். அசோக்கும் இப்போது மெல்ல அவன் நின்றிருந்த இடத்தை விட்டு நகர்ந்தான். படிகளில் தபதபவென்று கோபமாக இறங்குகிற ப்ரியாவை, மேலிருந்து பார்த்தான். அவ்வளவு நேரம் தயங்கி தயங்கி சிந்திய புன்னகையை, அவன் உதடுகள் இப்போது தாராளமாய் சிந்தின. 'போடீ லூசு.. சவால் விடுற ஆளைப்பாரு..!!' என்று முணுமுணுத்தன.அத்தியாயம் 23 ப்ரியா அன்று வீட்டுக்கு சென்றதுமே தன் அப்பாவை பார்த்து முதலில் பேசிய வார்த்தைகள்.. "உங்களுக்கு சிக்கன் பிரியாணி பண்ண தெரியும்ல டாடி..??" அடுத்த நாள் காலையில் ஐந்து மணிக்கெல்லாம் வரதராஜன் எழுந்துவிட்டார். மகளுக்கு திடீரென என்னாயிற்று என்ற குழப்பத்துடனே, மணக்க மணக்க சிக்கன் பிரியாணி தயார் செய்தார். எழுந்து குளித்து ஆபீசுக்கு கிளம்பிய ப்ரியா, அப்பா செய்து வைத்திருந்த பிரியாணியை ஒரு பெரிய டப்பாவில் அடைத்து எடுத்துக் கொண்டாள். "எனக்கு எதுவும் புரியலைம்மா.. திடீர்னு ஏன் உனக்கு சிக்கன் பிரியாணி மேல ஆசை..?? அதுவும் காலாங்காத்தால..??" அப்பாவின் கேள்விக்கு ப்ரியா பதில் சொல்லாமல் புன்னகைத்தாள். ஷோல்டர் பேகுக்குள் அந்த டப்பாவை திணித்து, ஜிப் இழுத்து மூடினாள். பேகை தோளில் மாட்டிக்கொண்டாள். அடுத்து ஒரு மணி நேரம் கழித்து.. அவர்கள் ஆபீஸ் கேஃபிட்டீரியாவில்.. அந்த பிரியாணி டப்பா மூடி திறக்கப்பட்டு கிடந்தது..!! ஒருவித தயக்கத்துடனே.. ஓரக்கண்ணால் ப்ரியாவை மிரட்சியாக பார்த்துக்கொண்டே.. ஒரு கையால் பிரியாணி அள்ளி.. மெல்ல வாயில் திணித்துக்கொண்டாள் செண்பகம்..!! "உ..உங்களுக்கு..??" அசை போட்டுக்கொண்டே ப்ரியாவிடம் கேட்டாள். "ச்ச.. அக்காக்கு வேணாண்டா.. எல்லாம் உனக்குத்தான்.. சாப்பிடு..!! இந்தா.. முட்டை எடுத்து வச்சுக்கோ..!!" கனிவுடன் சொல்லிக்கொண்டே, தனியாக இருந்த அவித்த முட்டையை எடுத்து, தட்டில் வைத்தாள் ப்ரியா. செண்பகம் மெல்ல அதை கையில் எடுத்து, ஒரு கடி கடித்துக்கொண்டே கேட்டாள். "என்னால நம்ப முடியலைக்கா.. நெஜமாவே நீங்க அசோக் மாமாவை லவ் பண்றீங்களா..??" "ஆமாண்டா..!! இப்போ இல்ல.. ரொம்ம்ம்ப நாளா லவ் பண்றேன்.. அவன் எனக்குத்தான் சொந்தம்னு என் மனசுக்குள்ள ஒரு பொசஸிவ்னஸ்..!! அந்த பொசஸிவ்னஸ்லதான் அக்கா அப்படி எல்லாம் நடந்துக்கிட்டேன்.. தேவை இல்லாம உனக்கு நெறைய கஷ்டம் கொடுத்திட்டேன்.. அக்காவை மன்னிச்சுடுடா.. ப்ளீஸ்..!!" "சேச்சே.. பரவாலக்கா.. உங்க மேல எந்த தப்பும் இல்ல.. உங்க பொசிஷன்ல இருந்திருந்தா நானும் இதைத்தான் செஞ்சிருப்பேன்..!!" என்று சொன்ன செண்பகம் அடுத்த நொடியே செய்தது, லெக்பீஸை வாயால் கவ்வி இழுத்ததுதான்..!! "ஹையோ.. ஹவ் ஸ்வீட் ஆஃப் யூ..!!! உன்னைப்போய் இப்படி கஷ்டப்படுத்திட்டனே.. அதை நெனச்சாத்தான் அக்காவுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு செண்பகம்..!!" "இட்ஸ் ஓகேக்கா..!!" என்று வெகுளியாக புன்னகைத்த செண்பகம், உடனே.. "பிரியாணி சூப்பரா இருக்குக்கா..!!" என்று பல் இளித்தாள். "ஓ..!! உனக்கு புடிச்சிருக்கா..??" "ஹ்ம்ம்.. ரொம்ப பிடிச்சிருக்கு.. நல்லா பண்ணிருக்கீங்க..!!" "ஹாஹா.. ஆக்சுவலா இதை விட பிரம்மாதமா பண்ணுவேன் செண்பகம்.. இன்னைக்கு காலாங்காத்தால எழுந்து.. தூக்க கலக்கத்தோடவே பண்ணினனா.. அதான் கொஞ்சம் சரியா வரல..!! பிரியாணி பண்றதுல என்னை அடிச்சுக்க ஆளே இல்ல.. தெரியுமா..??" ப்ரியா வாய் கூசாமல் பொய் சொன்னாள். "ஓ.. அப்படியாக்கா..??" அதையும் நம்பி, செண்பகம் அப்பாவியாக வாய் பிளந்தாள். "ஹ்ம்ம்..!! அசோக்குக்கும் எனக்கும் மேரேஜ் மட்டும் ஆகட்டும்.. அக்கா உனக்கு டெயிலி பிரியாணி பண்ணித் தரேன்.. சரியா..??" ப்ரியா ஆசை வார்த்தை காட்ட, "ம்ம்ம்ம்.. தேங்க்ஸ்க்கா..!!" செண்பகத்தின் கண்களில் இப்போதே கலர்கலராய் பிரியாணி கனவு."ஹ்ம்ம்.. ஊர்ல இருந்து வந்தவங்கலாம் என்னைக்கு கெளம்புறாங்க..??" "இன்னைக்கு கெளம்பிடுவாங்கக்கா.. அத்தையும் மாமாவும் மட்டும் ரெண்டு நாள் இருந்துட்டு கெளம்புவாங்க..!! வீட்ல எல்லாருக்கும்.." செண்பகம் பாதியிலேயே நிறுத்திவிட்டு பிரியாணியை அசை போட.. "ம்ம்..?? எல்லாருக்கும்..??" ப்ரியா பொறுமை இல்லாமல் கேட்டாள். "எல்லாருக்கும் உங்களை ரொம்ப பிடிச்சு போச்சுக்கா..!! உங்களைத்தான் மேரேஜ் பண்ணிக்கனும்னு.. அசோக் மாமாவை எல்லாரும் நேத்து கம்பல் பண்ணாங்க..!!" "ஓ..!! இவன் என்ன சொன்னான்..??" "நானே கை உடைஞ்சு கெடக்குறேன்.. இப்போ வந்து கல்யாணம் பத்தி பேசுறீங்க.. எல்லாம் கொஞ்ச நாள் போகட்டும்'னு சொன்னாரு..!!" "பாத்தியா.. பாத்தியா..?? வேணாம்னும் சொல்லல.. வேற பொண்ணு பாருங்கன்னும் சொல்லல..!! இதுல இருந்தே தெரியல.. அவன் என்னைத்தான் லவ் பண்றான்னு..??" "ஆமாக்கா.. நீங்க சொல்றது சரிதான்..!! கொஞ்ச நாளாவே.. எனக்கு கூட அந்த சந்தேகம் மைல்டா இருக்குது..!!" "எ..எப்படி சொல்ற..??" "மாமா அடிக்கடி அவர் லேப்டாப்ல.. உங்க போட்டோஸ்லாம் எடுத்து.. மொறைச்சு மொறைச்சு பாத்திட்டு இருப்பாரு..!!" செண்பகம் சொல்ல, ப்ரியாவின் மனதில் அப்படி ஒரு புல்லரிப்பு. "ஆஹா.. இது எப்போ இருந்து..??" "நான் வந்ததுல இருந்தே கவனிச்சுட்டுத்தான்க்கா இருக்குறேன்..!!" "ஓஹோ..?? அதுசரி.. என் ஃபோட்டோஸ் எப்படி அவனுக்கு கெடைச்சது..??" "நீங்கதான் ஷேர் பண்ணினதா சொன்னாரு..??" "நானா..?? நான் எங்க ஷேர் பண்ணினேன்..?? ஹ்ம்ம்... இப்போ புரியுது..!! அவனுக்கு என் மெஷின் அக்சஸ் கொடுத்திருந்தேன்ல.. அப்போ லவட்டிருப்பான்.. திருட்டுப்பய..!!" "ஹாஹா..!!" "ஹ்ம்ம்.. சந்தேகமே இல்ல செண்பகம்.. அவன் என்னைத்தான் லவ் பண்றான்..!!" "ம்ம்.. எனக்கும் அப்படித்தான்க்கா தோணுது..!! ஆனா.. நீங்க லவ் பண்றேன் சொன்னப்புறமும்.. மாமா ஏன் இப்படி பிகு பண்றாரு..??" "எல்லாம் கொழுப்புதான்.. வேறென்ன..?? ஈகோ புடிச்ச பய..!! நான் இத்தனை நாளா அவனை கஷ்டப்படுத்தினேன்ல.. அதான் அவன் கொஞ்ச நாள் என்னை காய விடலாம்னு நெனைக்கிறான்..!! ஹ்ம்ம்.. என் மேல எவ்வளவு பிரியமா இருப்பான் தெரியுமா.. எப்படி இழைவான் தெரியுமா.. என்னெல்லாம் ஹெல்ப் பண்ணிருக்கான் தெரியுமா..?? என்னைக்கு அந்த நாசமாப்போன அவார்ட் எனக்கு குடுத்தாங்களோ.. அன்னைக்கு ஆரம்பிச்சது எல்லாம்..!! இல்லனா.. நானும் அவனும் சேர்றதுல எந்த பிரச்சினையும் வந்திருக்காது..!!" "கவலைப்படாதீங்கக்கா.. மாமாவை எப்படியும் நம்ம வழிக்கு கொண்டு வந்துடலாம்..!!" செண்பகம் சொல்ல, ப்ரியாவுக்கு லேசாக முகம் சுருங்கியது. "எ..என் வழிக்குன்னு சொல்லேன்..??" "ஓகே ஓகே.. உங்க வழிக்கு கொண்டு வந்துடலாம்..!!" இப்போது ப்ரியாவின் முகத்தில் இப்போது மீண்டும் பல்பு எரிந்தது. "நல்லா அள்ளி சாப்புடு செண்பகம்.. குருவி மாதிரி கொறிச்சுட்டு இருக்குற..?? நீ வந்தப்போ இருந்ததுக்கு.. இப்போ ரொம்ப எளைச்சு போயிட்ட..!!" என்று பாசத்தை பொழிந்தாள். "ம்ம்.. ஆமாக்கா.. பெங்களூர் சாப்பாடு எனக்கு புடிக்கவே இல்ல..!!" செண்பகமும் மனசாட்சியே இல்லாமல் கவலைப்பட்டாள்."ஹ்ம்ம்.. உன் மாமனை வழிக்கு கொண்டு வர்றதுக்கு.. நீதான் அக்காவுக்கு ஹெல்ப் பண்ணனும் செண்பகம்..!!" "சொல்லுங்கக்கா.. என்ன ஹெல்ப்பா இருந்தாலும் பண்றேன்..!!" "உனக்கு ஏதாவது ஐடியா தோணுச்சுனா சொல்லேன்..??" "ஐடியாவா..??" செண்பகம் பிரியாணியை அசை போட்டுக்கொண்டே யோசித்தாள். 'என்ன பண்ணலாம்.. என்ன பண்ணலாம்..' என்று முணுமுணுத்தவாறே நெற்றியை கீறிக்கொண்டாள். ப்ரியா செண்பகத்தின் முகத்தையே ஆர்வமாய் பார்த்துக்கொண்டிருக்க.. அவள் இப்போது திடீரென முகம் மலர்ந்து போய் கேட்டாள். "ஆங்.. உங்களுக்கு சொறாப்புட்டு பண்ணத் தெரியுமாக்கா..??" செண்பகம் அப்படி கேட்டதுமே, ப்ரியாவின் முகம் காற்றுப் போன பலூன் மாதிரி ஆனது. "ஏன் கேக்குற..?? சொறாப்புட்டு தின்னாத்தான் உனக்கு ஐடியா வருமோ..??" என சற்று கடுப்புடனே கேட்டாள். "ஐயோ.. அதுக்கு இல்லக்கா.. உங்களுக்கு பண்ண தெரியுமா.. தெரியாதா..??" "தெ..தெரியும்..!! என்ன மேட்டர்னு சொல்லு..!!" "மாமாவுக்கு சொறாப்புட்டுன்னா ரொம்ப புடிக்கும்க்கா..!!" "அதுக்கு..????" "எனக்கு பிரியாணி பண்ணி கொண்டு வந்த மாதிரி.. மாமாவுக்கு சொறாப்புட்டு பண்ணி கொண்டு போய் குடுங்க.. மாமா மனசு மாறிடுவாருன்னு நெனைக்கிறேன்..!!" செண்பகம் படுசீரியசாக சொல்லிவிட்டு பற்களை காட்ட.. ப்ரியா அவளை கேவலமாக ஒரு பார்வை பார்த்தாள்..!! 'முடியல..' என்பது போல சலிப்பாக தலையசைத்தாள். 'சொறாப்புட்டுக்கு மயங்குறவனா உன் கேடிப்பய மாமன்..?? உன்கிட்ட வந்து ஐடியா கேட்டேன் பாரு.. என்னை சொல்லணும்..!!' என்று மனதுக்குள்ளேயே நொந்து கொண்டாள். "என்னக்கா.. ஒன்னும் சொல்ல மாட்டேன்றீங்க..??" "ஒண்ணுல்ல..!! ஐடியாலாம் அக்காவே யோசிச்சுக்குறேன்.. நீ தேவை இல்லாம உன் ப்ரயினை போட்டு பிராண்டாத.. சரியா..?? பாரு.. பிரியாணி அப்படியே இருக்கு.. சாப்பிடு சாப்பிடு.. காலி பண்ணு..!!" செண்பகம் மீண்டும் சுறுசுறுப்பாய் பிரியாணி சாப்பிட ஆரம்பித்தாள். அவள் சாப்பிட்டு முடிக்கும்வரை.. அவளுடைய முகத்தையே.. கன்னத்தில் கைவைத்தவாறு.. கவலையுடன் ப்ரியா பார்த்துக் கொண்டிருந்தாள். அசோக்கைப் பற்றி ப்ரியா நினைத்தது சரிதான். அவள் கணித்த மாதிரியான ஒரு மனநிலையில்தான் அசோக் இருந்தான். அவனுக்கு ப்ரியா மீது காதல் இருந்தாலும், அதற்கு போட்டியாக எரிச்சலும், கோபமும் இருந்தது. கை முறிந்து போனதினால் வந்த ஆத்திரம் வேறு. அதனால்தான் ப்ரியா வந்து மன்னிப்பு கேட்டும், மனதை திறந்து காட்டியும், அவனது காதலை உடனே வெளிப்படுத்திவிட அவனுடைய ஈகோ தடுத்தது. 'இத்தனை நாளா என்னை என்ன பாடுபடுத்தின.. நீ கொஞ்ச நாள் என் பின்னாடி அலை..!!' என்பது மாதிரியான எண்ணம்..!! ஒரே நாளில்.. ஒரே பிரியாணியில்.. ப்ரியாவும் செண்பகமும் ஒன்றுக்குள் ஒன்றாக ஆகிப் போனார்கள்..!! அன்று இரவு அசோக்கின் வீட்டிற்கு ஒன்றாக ஸ்கூட்டியில் சென்று இறங்கினார்கள். ஏதோ பேசி சிரித்துக்கொண்டே இருவரும் வீட்டுக்குள் நுழைய, அதைப் பார்த்த அசோக், சற்றே டென்ஷன் ஆகிப் போனான். அப்புறம் தனிமையில் செண்பகத்திடம் கேலியாக கேட்டான். "என்ன செம்பு.. அக்கா அக்கான்னு ரொம்பத்தான் அவகிட்ட குழையுற.. ஒரே நாள்ல.. க்ளோஸ் பிரண்ட்ஸ் ஆயிட்டிகளோ..??" "ம்ம்.. ஆமாம் மாமா..!!" "ஹ்ம்ம்.. பாத்து ஜாக்கிரதையா இருந்துக்கோ..!!" "ஜாக்கிரதையாவா..?? எதுக்கு..??" "நானும் ஒரு காலத்துல அவகூட இந்த மாதிரி க்ளோஸா இருந்தவன்தான்.. இப்போ நெலமையை பாத்தேல..??" என்று அசோக் கட்டுப்போட்டிருந்த கையை ஆட்டி காட்டினான். "ம்ம்ம்ம்.." செண்பகம் சற்றே மிரட்சியாய் அந்த கையை பார்த்தாள். "உனக்கு எந்த லாரி ரெடி பண்ணி வச்சிருக்காளோ..?? ஹ்ம்ம்ம்... நாளைக்கு மொத வேலையா.. உன் பேர்ல பத்து லட்ச ரூபாய்க்கு.. ஒரு இன்ஷ்யூரன்ஸ் பாலிசி எடுக்கணும் செம்பு..!!" அசோக் கேஷுவலாக செண்பகத்திற்கு கிலி கிளப்பிவிட்டு சென்றான். உள்ளுக்குள் சற்றே உதறல் எடுத்தாலும் ப்ரியாவின் நட்பை, செண்பகம் உதறிவிடவில்லை. தினமும் மாலை ஒன்றாகவே ப்ரியாவுடன் அசோக்கின் வீட்டுக்கு வருவாள். சிறிது நேரம் அங்கே செலவழித்துவிட்டு, அப்புறம் ப்ரியாவே அவளை ஹாஸ்டலில் கொண்டு விடுவாள். ப்ரியாவுக்கும் அசோக்குக்கும் இடையிலான இந்த நட்பு, காதல், மோதல் எல்லாம் செண்பகம் மூலமாக செல்விக்கும் ராஜேஷுக்கும் மேலோட்டமாக தெரிந்து போனது. அசோக்கின் ஈகோதான் இப்போது இடையில் நிற்கும் ஒரே ஒரு தடைக்கல் என்பதை அவர்களும் புரிந்து கொண்டார்கள். அவனை வழிக்கு கொண்டுவர அவர்களும் முயற்சித்தார்கள். அசோக்கிற்கும் ப்ரியாவிற்கும் திருமணம் நடப்பது உறுதி செய்யப்பட்டு விட்டது போலவே அவனிடம் பேசி, அவனுக்கு டென்ஷன் கிளப்புவார்கள். அசோக் அவனுடைய அறைக்குள் அமர்ந்திருக்கும்போதே, செல்வியும் ப்ரியாவும் உள்ளே நுழைந்து, அவனை கண்டுகொள்ளாமல், அவர்களுக்குள்ளேயே பேசிக்கொள்வார்கள். "இந்த ரூமையே எடுத்துக்கங்க ப்ரியா.. இதுதான் உங்களுக்கு ரொம்ப வசதியா இருக்கும்..!! இந்த வீட்டுலயே ரெண்டு ஜன்னல் இருக்குற ஒரே ரூம் இதுதான்.. நல்ல வெளிச்சமா, காத்தோட்டமா இருக்கும்..!!" என்பாள் செல்வி. "ஹையோ.. ஜன்னல்லாம் எதுக்குக்கா..?? எந்த நேரமும் அடைச்சுத்தான் வச்சிருக்க போறோம்..?? அதனால என்ன யூஸ்..??" ப்ரியா ஒரு தொலைநோக்கு பார்வையுடன் சொல்வாள். "ஹ்ம்ம்.. அதுவும் சரிதான்..!!" "இந்த ரூம் ஓகேதான்க்கா.. ஆனா ஒரே டன்ஜனா இருக்குற மாதிரி இருக்கு..!!" "ஐயையே.. இந்தப்பய ரூமை அந்த மாதிரி போட்டு வச்சிருக்கான் ப்ரியா..!! எல்லாத்தையம் ஒதுங்க வச்சு அக்கா உனக்கு அரேஞ்ச் பண்ணி தரேன்..!!" "ஓ.. தேங்க்ஸ்க்கா..!!" ப்ரியா குழைந்துகொண்டு சொல்ல, அசோக்கால் அதற்கு மேலும் பொறுக்கக்க முடியாது. "யார் வீட்டுல வந்து.. யார் ரூம் செலக்ட் பண்ணிட்டு இருக்கீங்க.. வெளில ஓடிப்போங்க ரெண்டு பேரும்..!!" என்று ஆத்திரமாக கத்தி அவர்களை விரட்டுவான். மற்றவர்கள் இப்படி என்றால், ப்ரியாவின் அணுகுமுறை வேறு மாதிரி இருந்தது. அசோக் குடும்பத்தார் அனைவருடனும் ஏற்பட்டிருந்த ஸ்னேஹம் அவளுக்கு ஒரு புது தைரியத்தை அளித்திருந்தது. அசோக் தன்னை காதலிக்கிறான் என்பது உறுதிப்பட்டு போனதால், அதிரடியாகவே அவனை அணுகினாள். எப்படி என்றால்.. அன்று.. அசோக்குக்கு கை உடைந்து போய் இரண்டு வாரங்களுக்கு மேல் கியிருந்தது. இரண்டு வாரங்களாக மழிக்கப்படாத தாடி சொரசொரவென அவனுடைய தாடையில் உறுத்தியது. ஒற்றை கையுடனே ஷேவ் செய்துகொள்ள கிளம்பினான். சோப்பு நுரையை முகத்தில் தடவிவிட்டு நிமிர்ந்தபோது, அறை வாசலில் நிழலாட, நிமிர்ந்து பார்த்தான். கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியவாறு ப்ரியா நின்றுகொண்டிருந்தாள். நுரை பொங்கும் இவனுடைய முகத்தையே, கண்களில் ஒரு குறும்பு கொப்பளிக்க பார்த்துக் கொண்டிருந்தாள். இவன் அவளை பார்த்து ஒரு ஏளனப் பார்வையை வீசிவிட்டு, ரேசர் எடுத்து கன்னத்தில் இழுத்துக்கொள்ள ஆரம்பித்தான். ஒற்றை கையுடன் ஷேவ் செய்து கொள்வது அவ்வளவு எளிதல்ல என்பது ஓரிரு இழுப்பிலேயே அவனுக்கு புரிந்து போனது. அடர்த்தியாய் வளர்ந்துவிட்ட மயிர்கள் ப்ளேடுக்குள் சிக்கி வெட்டுப்பட மறுத்தன. அவஸ்தையாய் நெளிந்த அவனுக்கு உதவி செய்ய ப்ரியா முன்வந்தாள். "குடு.. நான் பண்ணி விடுறேன்..!!" என்றாள் அன்பாக. "வேணாம் விடு.. நானே பண்ணிக்கிறேன்..!!" அசோக் சலிப்பாக சொன்னான். "ப்ச்.. குடுன்றேன்ல..?? இது ஜஸ்ட் ஒரு ஃப்ரண்ட்லி ஹெல்ப்.. இதுக்காகலாம் உன்கிட்ட இருந்து ஸ்பெஷலா எதுவும் எதிர்பார்க்க மாட்டேன்..!!" "வே..வேணாம் ப்ரியா..!!" "அடச்சை.. குடுடா..!!" ப்ரியா அவன் கையில் இருந்த ரேசரை பிடுங்கிக் கொண்டாள். அசோக் முகத்தை உர்ரென்று வைத்தவாறு நின்றிருக்க, இவள் அவனுக்கு சவரம் செய்துவிட ஆரம்பித்தாள். ஒரு கையால் அவனுடைய கன்னத்து தோலை அழுத்தி பிடித்துக்கொண்டு, இன்னொரு கையால் ரோமங்களை நுரையுடன் சேர்த்து அழகாக மழித்தெடுத்தாள். ப்ரியாவின் அருகாமை அசோக்கிற்கு ஒரு கிறக்கத்தை கொடுக்க ஆரம்பித்தது. அவளுடைய மேனியில் இருந்து வந்த இனிய வாசனை அவனது நாசியில் போதையாய் ஏறியது. தேனில் ஊறிய செர்ரி துண்டுகளாய் அவளுடைய உதடுகளை க்ளோசப்பில் பார்த்து, அவனுடைய இதயத்துடிப்பு படபடவென எகிறிக்கொண்டிருந்த போதுதான்..மொகரையை கொஞ்சம் லிஃப்ட் பண்ணு..!!" என்றாள் ப்ரியா. அசோக் தன் தலையை உயர்த்தி தாடையின் அடிப்பாகத்தை அவளுக்கு காட்டினான். அவனுடைய மோவாயில் இருந்து கீழ்நோக்கி ரேசரை ஓட்டிவந்த ப்ரியா, சரியாக அவனது தொண்டைக்குமிழ் வந்ததும் நிறுத்தினாள். அதே நேரம் அவளுடைய இன்னொரு கையால் அசோக்கின் பின்னந்தலையை தாங்கி பிடித்துக் கொண்டாள். அசோக்கிற்கு ஒன்றும் புரியவில்லை. "ஏ..ஏய்.. என்னாச்சு..??" தொண்டைக்குமிழ் அசையாத வண்ணம் மிக சிரமப்பட்டு பேசினான். "எங்க.. சொல்லு பார்ப்போம்..!!" என்றாள் ப்ரியா. "சொ..சொல்லவா..?? என்ன சொல்ல..??" "ஐ.. லவ்.. யூ..!! சொல்லு பார்ப்போம்.. ஐ.. லவ்.. யூ..!!" குழந்தைக்கு பேச சொல்லி தருவது போல ப்ரியா சொல்ல, அசோக் இப்போது டென்ஷன் ஆனான்.ஏ..ஏய்.. எ..என்ன.. வெளையாடுறியா..?? கையை எடுடி..!!" பதற்றமாக சொன்னான். "மவனே.. இப்போ மட்டும் நீ ஐ லவ் யூ சொல்லல.. இங்க புடைச்சிருக்கு பாரு.. இதுலயே ப்ளேடால சரக் சரக்னு கோடு போடப்போறேன்..!! மரியாதையா என்னை லவ் பண்றதை ஒத்துக்கோ..!!" "நா..நான் ஒன்னும் உன்னை லவ் பண்ணலை..!!" "அப்புறம் என்ன ஹேர்-க்கு என் ஃபோட்டோவை.. திருட்டுத்தனமா உன் லேப்டாப்ல வச்சு பாத்துட்டு இருக்குற..??" "உனக்கு யார் சொன்னது..??" "யார் சொன்னா என்ன..?? உண்மையா இல்லையா..??" "நீ..நீயுந்தான் என் ஃபோட்டோவை திருட்டுத்தனமா வச்சு பாத்துட்டு இருந்திருக்குற..??" "ஆமாம்.. நான் உன்னை லவ் பண்றேன்.. பாக்குறேன்..!! நீ என்ன டேஷ்-க்கு பாக்குற..??" "மொ..மொதல்ல நீ கையை எடு.. நான் சொல்றேன்..!!" "இல்ல.. நீ சொல்லு.. நான் கையை எடுக்குறேன்..!!" "ஹேய்.. எடுடி.. பேசுறதுக்கே கஷ்டமா இருக்கு.. கட் ஆயிடுமோன்னு பயமா இருக்கு..!!" அசோக் கெஞ்ச, ப்ரியா அவளது உடும்பிப்பிடியை தளர்த்தினாள். "ஹ்ம்ம்.. இப்போ சொல்லு..!! என்னை லவ் பண்றதான..??" "நா..நான் ஒன்னும் உன்னை லவ் பண்ணல.. லவ் பண்ணலாம்னு ஒரு காலத்துல ஒரு ஐடியா இருந்தது.. அந்த ஆசைலதான் உன் ஃபோட்டோஸ்லாம் சுட்டேன்..!!" அசோக் தனது கழுத்தை தடவிக்கொண்டே சொன்னான். "ஹ்ம்ம்.. கழுத்துல கத்தியை வச்சதுந்தான்.. உண்மை கொஞ்சம் கொஞ்சமா வெளில வருது..!! சரி.. என்னை லவ் பண்ற அந்த ஐடியா இப்போ எந்த ஸ்டேஜ்ல இருக்கு..??" "ஆங்..?? என்னைக்கு நீ டெக்லீட் ஆகி.. ஈகோ வெறியாட்டம் போட ஆரம்பிச்சியோ.. அன்னைக்கே அந்த ஐடியாலாம் தூக்கி தூரமா போட்டாச்சு..!!" "ப்ச்.. அதான்.. இனிமே நான் அப்படிலாம் நடந்துக்கமாட்டேன்னு அன்னைக்கே ப்ராமிஸ் பண்ணேன்ல ..?? இனிமே உன்னை எந்த வகைலையும் ஹர்ட் பண்ண மாட்டேன் அசோக்..!! இட்ஸ் ப்ராமிஸ்.. என்னை நம்பு ப்ளீஸ்..!!" ப்ரியா இப்போது ஏக்கமான குரலில் சொன்னாள். "ம்க்கும்.. உன் ப்ராமிசை தூக்கி குப்பைல போடு..!! ஹர்ட் பண்ண மாட்டாளாம்..?? இப்போ என் கழுத்துல ப்ளேடு வச்சு மெரட்டுனியே.. இதுக்கு பேர் என்ன..?? இந்த ஈகோ உன்கூடவே பொறந்தது.. அது என்னைக்கும் உன்னை விட்டு போகாது..!!" "அட ராமா.. இது ஈகோவால செஞ்சதா.. உன் மேல இருக்குற லவ்வால அப்டி நடந்துக்கிட்டேன்டா..!! இட்ஸ் ப்யூர்லி லவ்..!!" "ம்ம்.. ம்ம்..!! உன் லவ் ப்யூர்னு எனக்கு மொதல்ல நம்பிக்கை வரட்டும்.. உன்னை லவ் பண்ற ஐடியாவை அப்புறம் கன்சிடர் பண்றேன்..!!" அசோக் விடாப்பிடியாக சொல்ல, ப்ரியா இப்போது கடுப்பாகி போனாள். "உ..உன்னல்லாம்..?? உன்னல்லாம் திருத்தவே முடியாதுடா.. எப்படியோ போ..!!" எரிச்சலாக கத்தியவள், ரேசரை அசோக்கின் கையில் ஆத்திரமாக திணித்தாள். திரும்பி அறை வாசலை நோக்கி விடுவிடுவென வேகமாக நடந்தாள். அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த அசோக், திடீரென ஏதோ ஞாபகம் வந்தவனாய் அவளுடய முதுகை பார்த்து கத்தினான். "ஏய்.. என் ஃபோட்டோவை MM-னு ஒரு ஃபோல்டர்ல போட்டு வச்சிருந்தியே.. MM-னா என்ன அர்த்தம்..??" "ஆங்..?? மானங்கெட்ட மடப்பயன்னு அர்த்தம்..!!" ப்ரியா வெறுப்பாக கத்திவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள். அதைக்கேட்டு அசோக் அப்போது முறைத்தாலும், அவனுடைய உள்மனம் இதையெல்லாம் ரசித்தது என்றுதான் சொல்லவேண்டும். ப்ரியா இந்த மாதிரி வலிய வந்து அவனிடம் வழிவது.. அவனுக்காக உருகுவது.. காதல் சண்டை இடுவது.. எல்லாமே அவனுக்கு பிடித்திருந்தது..!! இத்தனை நாளாய் அவனுடன் முட்டிக்கொண்டு நின்ற காதலி.. இப்போது அவனுடைய காதலுக்காக கையேந்தி நிற்பதை.. அவனுடைய இயல்பான ஈகோ மனம் மிகவும் விரும்பியது..!!அவனுடைய மனம் அதையெல்லாம் ரசித்ததால்தான்.. அவனுக்கு கை சரியாகி, கட்டெல்லாம் அவிழ்த்தபிறகு.. அவன் திரும்ப ஆபீஸ் கிளம்புகிற நாளன்று நடந்த சம்பவத்தின்போது கூட.. அவன் அதிகப்படியான எதிர்ப்பொன்றும் காட்டவில்லை..!! அசோக்கை தனது ஸ்கூட்டியில் ஆபீஸ் அழைத்து செல்ல, அன்று காலையிலேயே ப்ரியா அவன் வீட்டிற்கு வந்து நின்றாள். அசோக் ஆரம்பத்தில் பிகு செய்தான். அவளுடன் வர மறுத்தான். தனது வண்டியில் சென்றுகொள்வதாக கூறினான். ப்ரியா செல்வியிடம் சென்று முறையிட, அவள் அசோக்கின் பைக் சாவியை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டாள். "அண்ணி.. வெளையாடாதீங்க அண்ணி.. பைக் சாவியை குடுங்க..!!" அசோக் செல்வியிடம் கெஞ்சினான். "எதுக்கு..?? மறுபடியும் ஏதாவது லாரியை போய் முட்டிப் பாக்குறதுக்கா..?? ஒழுங்கா அந்தப்புள்ள கூட போ.. பூப்போல கூட்டிட்டு போய்.. பூப்போல வந்து எறக்கி விடும்..!!" "இவ கூடலாம் என்னால போக முடியாது..!!" "அப்போ பஸ்ல போ..!!" "பஸ்ஸா..?? பஸ்லலாம் போக முடியாது அண்ணி..!!" "அப்போ இவ கூட போ..!!" "அடச்சை.. என்ன இது.. சின்னப்புள்ளத்தனமா..?? எ..என்னால முடியாது..!!" "அப்போ வீட்லயே கெட..!! எங்கயும் போக வேணாம்..!!" "ஐயோ.. என்ன அண்ணி இது..?? வெளையாடாம சாவியை குடுங்க..!!" "சாவியைலாம் தர முடியாது.. உன்னால முடிஞ்சதை பாத்துக்கோ..!!" செல்வி தனது முடிவில் உறுதியாக இருக்க, அசோக்கிற்கு வேறு வழி இருக்கவில்லை. இவர்களுடைய மொத்த உரையாடலையும், புன்னகையுடனே பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ப்ரியாவிடம் திரும்பி சொன்னான். வேண்டா வெறுப்பாக ஒத்துக்கொள்பவன் மாதிரி நடித்தான். "சரி வா.. கெளம்பலாம்..!!" இருவரும் வீட்டில் இருந்து கிளம்பினார்கள். அவர்கள் கிளம்புமுன், ப்ரியாவை தனியாக அழைத்து சென்று ராஜேஷ் ரகசியமான குரலில் சொன்னான். "பைக்ல ஒண்ணா போறது முக்கியம் இல்ல ப்ரியா.. லைஃப்ல நீங்க ஒண்ணா சேரனும்.. அதுதான் முக்கியம்..!! என்ன சொல்றேன்னு புரியுதா..??"

"ம்ம்.. புரியுது மாமா..!!" ப்ரியா புன்னகையுடன் கூறினாள். ப்ரியா வண்டியை ஸ்டார்ட் செய்ய, அசோக் பின் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டான். வண்டியை கிளப்புமுன் ப்ரியா சொன்னாள். "பேலன்சுக்கு வேணா என் இடுப்பை புடிச்சுக்கோ.. நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்..!!" "போ போ.. அதுலாம் ஒன்னும் வேணாம்.. ஐயா எப்போவும் ஸ்டெடி..!!" அசோக் வீராப்பாக சொல்லி முடிக்கும் முன்பே, ப்ரியா ஆக்சிலரேட்டரை பிடித்து சரக்கென முறுக்க, ஸ்கூட்டி ஜிவ்வென்று சீறியது. அதை சற்றும் எதிர்பாராத அசோக், 'ஆஆஆவ்..!!' என்று கத்திக்கொண்டே முன்பக்கமாக பாய்ந்தான். ஆட்டோமெடிக்காக அவனுடைய கைகள் ரெண்டும்.. ப்ரியாவுடைய இடுப்பை இரண்டு புறமும் அழுத்தி பற்றிக்கொண்டன..!!அத்தியாயம் 24 நீண்ட நாட்களுக்கு அப்புறம் அலுவலகத்துக்கு சென்றாலும், அன்றாட வேலைகளில் அசோக்கால் எளிதாக தன்னை பொருத்திக்கொள்ள முடிந்தது. சென்ற முதல் நாளே சுறுசுறுப்பாக தனது வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டான். அவனுக்கும் ப்ரியாவுக்குமான காதலும், ஊடலும் டீமில் எல்லோருக்கும் அரசால் புரசலாக தெரிந்து போனது. அதை வைத்தே, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அசோக்கையும் ப்ரியாவையும் காலை வாறுவது, அனைவருக்கும் ஒரு வழக்கமாகிப் போனது. தினமும் காலையில் அவர்களுக்கு டீம் மீட்டிங் இருக்கும். அன்றைய தினத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக.. அன்று செய்யவேண்டிய வேலைகள் பற்றி கூடிப் பேசி கொள்வார்கள்..!! ஒருநாள்.. மீட்டிங் முடிந்து.. எல்லோரும் டிஸ்பர்ஸ் ஆக.. "அசோக்.. நீ மட்டும் இரு.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..!!" என்று அலுவல் சம்பந்தமாக ஏதோ பேசத்தான், ப்ரியா அவ்வாறு இயல்பாக சொன்னாள். ஆனால் டீமில் அனைவரும் மனதுக்குள்ளேயே ஒரு கற்பனையை ஓட்டியவர்களாய்.. 'ஹ்ஹ்ம்ம்ம்..' என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே கலைந்து சென்றார்கள். 'நடத்துங்க.. நடத்துங்க..!!' என்று முனுமுனுத்தவாறே, அறையை விட்டு வெளியேறினார்கள். கடைசியாக சென்ற ஹரி மட்டும் கொஞ்சம் அதிகப்படியாய்.. "கம்பனி மீட்டிங் ரூமை.. கடலை போடுற சேட்டிங் ரூமா மாத்திட்டீங்க.. ஹ்ம்ம்... நீங்கல்லாம் நல்லா வருவீங்கப்பா.. நல்லா வருவீங்க..!!" என்று கமென்ட் அடித்தான். "டேய்.. மூடிட்டு போடா..!!" என்று அவனை பார்த்து கடுப்பாக கத்தியது ப்ரியாவேதான். "என்னது..????" அவளுடய வார்த்தைகளில் ஹரி அதிர்ந்து போய், திரும்பி அவளை முறைக்க, "கதவை சொன்னேன்..!!" ப்ரியா கூலாக சொல்லிவிட்டு வேறெங்கோ பார்த்தாள். முன்பு அசோக்கின் மீது தனது கோவத்தை காட்ட, ப்ரியா அவளது அதிகாரத்தை உபயோகப்படுத்தினாள் அல்லவா..?? அதுபோலவே இப்போது அவன் மீது அன்பை பொழியவும் அந்த அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டாள். ஒருநாள் இரவு.. நெடுநேரம் ஆகியும்.. அசோக் தனது இடத்தில் அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தான்..!! ஆபீசில் இருந்து கிளம்பிய ப்ரியா.. அவன் இன்னும் அங்கே இருப்பதை அறிந்ததும்.. சற்றே கவலையுற்றவளாய் அவனிடம் சென்றாள்..!! "என்னடா.. எட்டு மணி ஆச்சு.. இன்னும் கெளம்பலையா..??" என்று கனிவாக கேட்டாள். "இல்ல ப்ரியா.. கொஞ்சம் வேலை இருக்கு.. முடிச்சுட்டு கெளம்புறேன்..!!" "ப்ச்.. உடம்பு இப்போத்தான் கொஞ்சம் கொஞ்சமா தேறிட்டு வருது.. இப்போ போய் ஏன் தேவை இல்லாம ஸ்ட்ரெயின் பண்ணிக்கிற..?? வீட்டுக்கு கெளம்பு மொதல்ல..!!" "ஹையோ.. இன்னைக்கு இதை ஃபிக்ஸ் பண்ணனும் ப்ரியா..!!" "ஹரிட்ட குடுத்துட்டு கெளம்பு.. அவன் இருந்து ஃபிக்ஸ் பண்ணிட்டு போகட்டும்.. நீ தேவை இல்லாம கஷ்டப்படாத..!!" ப்ரியா படுசீரியசாக அசோக் மீது காதலை பொழிந்துகொண்டிருக்க, அவளுக்கு பின்புறமாக அமர்ந்திருந்த ஹரி அதைக்கேட்டு டென்ஷன் ஆகிப்போய், வெடுக்கென திரும்பிப் பார்த்தான். அவளுடைய முதுகையே வெறித்தான். 'அடிப்பாவி.. சண்டாளி.. சதிகாரி.. எவ்வளவு கூலா எனக்கு ஆப்பு செதுக்குறா பாருய்யா..?? ஊருக்குலாம் எளைச்சவன் புள்ளையார் கோயில் ஆண்டியாம்.. அந்தக்கதையால ஆகிப்போச்சு என் கதை..?? இவனுக ஜாலியா லவ்ஸ் விடுறதுக்கு.. நான் நைட்டு பூரா உக்காந்து டிஃபக்ட் ஃபிக்ஸ் பண்ணனுமா..??' "ஹேய்.. அவனுக்கே நெறைய வேலை இருக்கு ப்ரியா.. பாவம் அவன்..!!" அசோக் அந்தமாதிரி சொல்ல, ஹரிக்கு நிஜமாகவே வயிற்றில் பீர் ஊற்றியது போல இருந்தது. "ஓ.. அப்படியா..?? ஹ்ம்ம்.. சரி பரவால.. நீ கெளம்பு.. நாளைக்கு ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்.. நான் க்ளையன்ட்ட ஏதாவது சொல்லி சமாளிச்சுக்குறேன்..!!" "எ..எதுக்கு ப்ரியா தேவை இல்லாம.." அசோக் அப்புறமும் தயங்க,ப்ச்.. சொல்றேன்ல.. கெளம்பு.. ஷட்டவுன் பண்ணு..!!" ப்ரியா வலுக்கட்டாயமாக அவனை கிளப்பினாள். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த ஹரி, அதற்கு மேலும் பொறுத்துகொள்ள முடியாமல், "ம்க்கும்.. வேலை பாக்குறேன்னு சொல்றவனையும்.. வெரட்டி விடுறாய்யா ஒரு டி.எல்.லு.. வெளங்குன மாதிரிதான் இந்த ப்ராஜக்ட்டு..!!" என்று சலிப்பாக சொன்னான். அவனுடைய கமென்ட்டை கேட்டு கடுப்பான ப்ரியா, அசோக்கின் டேபிள் மீதிருந்த நாய் பொம்மையை எடுத்து, ஹரியின் தலையை குறிபார்த்து விட்டெறிந்தாள். அது அவனுடைய தலையில் சென்று நச்சென்று அடித்து ஓட, அவன் 'ஆ..' என்று கத்தினான். அசோக் சிரிப்பை அடக்கமுடியாமல் 'ஹாஹா..' என சிரித்துவிட்டான். அப்புறம் சிரிப்பு பொங்குகிற அந்த முகத்துடனே திரும்பி, ப்ரியாவை காதலாக ஒரு பார்வை பார்த்தான். ப்ரியா ஆபீஸில் அந்தமாதிரிதான் அசோக்கை அணுகினாள். அவனிடம் பேசுகையில், தான் என்கிற எண்ணம் சிறிது கூட தலை தூக்காமல் கவனமாக பார்த்துக் கொண்டாள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தனது காதலை, அழகாக தெளிவாக அவனுக்கு உணர்த்தினாள். அசோக்கும் மெல்ல மெல்ல மாற ஆரம்பித்தான் என்றுதான் சொல்லவேண்டும். உறுதி அளித்தமாதிரியே அவள் நடந்துகொண்டது அவனுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. தைரியமாக அவள் அவன் மீது காட்டிய காதல், அவனை அவள்பால் சாய செய்தது. இருந்தாலும் தன் காதலை அவளிடம் தெளிவாக எடுத்துரைக்க விடாமல், அவனுடைய ஈகோ மனம் தடுத்து வைத்திருந்தது. 'இன்னும் கொஞ்ச நாள் பின்னாடி திரியட்டும்.. என்ன இப்போ..?' என்பது மாதிரிதான் அவனது எண்ணம் இருந்தது. அசோக் திரும்ப ஆபீசுக்கு சென்ற இரண்டாவது வாரம், அவர்களுடைய ப்ராஜக்டின் இரண்டாவது கட்டமான இம்ப்ளிமண்டேஷன் முடிவுக்கு வந்தது. மொத்த மென்பொருளையும் முழுவதுமாக ப்ரோக்ராமிங் செய்து முடித்திருந்தார்கள். கடைசி நேரத்து சிற்சிறு ஒட்டு வேலைகள் மட்டுமே நடந்து கொண்டிருந்தன. இனி இறுதிக்கட்டமான இன்ஸ்டாலேஷன் தொடங்க வேண்டும். உருவாக்கிய மென்பொருளை க்ளையண்டின் சிஸ்டத்தில் நிறுவ வேண்டும். அதை நிறுவவதற்கு அவ்வளவு எளிதில் க்ளையன்ட் சம்மதிக்க மாட்டார்கள். அவர்கள் பங்கிற்கு தனியாக ஒரு டெஸ்டிங் டீம் வைத்து, மென்பொருளின் தரத்தை சில வாரங்கள் சோதித்துப் பார்த்தபின்பே, தங்களுடைய சிஸ்டத்தில் நிறுவ சம்மதிப்பார்கள். அதை யூஸர் அக்ஸப்டன்ஸ் டெஸ்டிங் (யூ.ஏ.டி) என்று குறிப்பிடுவார்கள். உறுதியளித்த நேரத்திற்கு சரியாக மென்பொருள் டெலிவர் செய்ய திட்டமிடப்பட்டிருந்ததில், க்ளையன்ட் மிக திருப்தியாகவும், சந்தோஷமாகவும் இருந்தார்கள். இதுவரை அரைகுறையாகவே மென்பொருள் வடிவத்தை பார்த்திருந்தவர்கள், அதன் முழு வடிவத்தையும் முதன்முறையாய் பார்ப்பதற்கு மிக மிக ஆர்வமாக இருந்தார்கள். அதே நேரம் இவர்கள் கம்பனியும் அந்த டெலிவரியை மிக கவனமாக உற்று நோக்கிக் கொண்டிருந்தது. இதை வைத்துத்தான் அடுத்து நிறைய ப்ராஜக்ட்கள் க்ளயன்ட்டிடம் இருந்து வரவேண்டும் என்கிற கவலை அவர்களுக்கு. இவர்கள் கம்பனியும், க்ளையன்ட் கம்பனியும்.. யூ.ஏ.டி ஆரம்பிக்கிற தினத்தை மிக மிக க்ரிட்டிக்கலான தினமாக கருதினார்கள்..!! யூ.ஏ.டி ஆரம்பிப்பதற்கு முதல் நாள்.. ஆபீஸ் கேஃப்டீரியா.. மதிய உணவு அருந்துவதற்காக டீமில் அனைவரும் கூடியிருந்தார்கள்.. வெட்டிப்பேச்சு பேசிக்கொண்டு, தட்டில் இருந்த உணவை ஸ்பூனால் அள்ளி வாயில் திணித்துக் கொண்டிருந்தனர்.. !! அப்போதுதான் ப்ரியா திடீரென உற்சாகமான குரலில் ஆரம்பித்தாள். "ஹேய் கைய்ஸ்.. ஒரு ஹேப்பி ந்யூஸ்..!! என்னன்னு யாராவது கெஸ் பண்ணுங்க பார்ப்போம்..!!" "என்னாச்சு.. யூ.ஏ.டி போஸ்ட்போன் ஆயிடுச்சா.. நம்ம சங்காத்தமே வேணான்னு க்ளையன்ட் காறி துப்பிட்டானுகளா..??" ஹரி அவசரப்பட்டான். "அடச்சை.. அதுலாம் ஒண்ணுல்ல..!!" "அப்புறம்..??" "கோவிந்த் ஆன்சைட் போறான்..!! ஹுர்ரே..!!" ப்ரியா சந்தோஷமாக கத்தினாள். உடனே எல்லோருடைய முகத்திலும் ஒரு உச்சபட்ச மலர்ச்சி..!! "டேய்.. சொல்லவே இல்ல..!!" அசோக் மலர்ந்த முகத்துடனே கேட்டான். "காலைலதான் பாலா கன்ஃபார்ம் பண்ணினாரு அசோக்.. நேத்ராட்டயே கொஞ்ச நேரம் முன்னாடிதான் சொன்னேன்..!!" கோவிந்த் ஒருமாதிரி சுரத்தே இல்லாத குரலில் சொன்னான். "ஹ்ம்ம்.. கங்க்ராட்ஸ்..!!" அசோக் அவனுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவிக்க, இப்போது எல்லோருமே அடுத்தடுத்து 'கங்க்ராட்ஸ்.. கங்க்ராட்ஸ்..' என அவனிடம் கை நீட்டினார்கள். கோவிந்த் எல்லோருடனும் கைகுலுக்கிவிட்டு, ப்ரியாவிடம் திரும்பி மெல்லிய குரலில் சொன்னான். "தேங்க்ஸ் ப்ரியா.. நீதான் என்னை ரெகமன்ட் பண்ணினதா.. பாலா சொன்னாரு.. ரொம்ப தேங்க்ஸ்..!!" "ஹேய்.. இட்ஸ் ஓகே..!! யு டிஸர்வ் திஸ்..!!" ப்ரியா புன்னகையுடன் சொன்னாள். நேத்ரா முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருக்க, இப்போது செண்பகம் அவளிடம் கேட்டாள். "என்னக்கா.. உங்க ஆளு ஆன்சைட் போறாரு.. நீங்க சந்தோஷமா இல்லாம.. உர்ருன்னு உக்காந்திருக்குறீங்க..??""ப்ச்.. ஒரு வருஷம் இவனை பிரிஞ்சி இருக்கணுமே.. அதான் கஷ்டமா இருக்கு செண்பகம்..!!" நேத்ராவின் குரலில் காதலின் ஏக்கம் தெளிவாக தெரிந்தது. "ஹேய்.. நேத்ரா.. வாட்ஸ் திஸ்..??" - இது கவிதா. "அதான் நான் ஆன்சைட்டே போகலைன்னு சொல்றேன்.. அதுக்கும் ஒத்துக்க மாட்டேன்றா..!!" கோவிந்த் பாவமாக சொல்ல, இப்போது அசோக் டென்ஷனாக அவனை ஏறிட்டான். "டேய்.. என்னடா பேசுற..?? ஆன்சைட் போகலையா..?? இந்த ஆப்பர்ச்சூனிட்டிக்காக எத்தனை நாள் நீ வெயிட் பண்ணிட்டு இருந்த..?? இப்போ அசால்ட்டா போகலைன்ற..??" "நல்லா கேளு அசோக்.. நானும் அதைத்தான் சொன்னேன்..!!" நேத்ரா கோவிந்தை கோவமாக முறைத்தாள். "ஏய்.. நீ சும்மா இரு.. எனக்கு போறதுக்கு சுத்தமா இன்ட்ரஸ்ட் இல்ல.. நான் போகல..!!" கோவிந்த் சலிப்பாக சொல்ல, இப்போது ஹரி அவனிடம் கேட்டான். "டேய்.. என்னடா ஆச்சு உனக்கு.. இப்படி புரிஞ்சுக்காம பேசுற..??" "ப்ச்.. நீதான் புரியாம பேசுற ஹரி..!! நேத்ரா மனசுக்குள்ள எவ்வளவு கஷ்டத்தை வச்சுக்கிட்டு.. என்னை ஆன்சைட் போக சொல்றான்னு.. உனக்கு புரியலை..!!" "அவ கஷ்டப்படுறது இருக்கட்டும்டா.. உன் லட்சியம் என்னாச்சு..?? எல்லாருக்கும் உன்னை ப்ரூவ் பண்ணி காட்டணும்னு சொல்வியே.. என்னாச்சு அதெல்லாம்..??" அசோக் கேட்டுவிட்டு கோவிந்தின் முகத்தையே கூர்மையாக பார்த்தான். "மனசுக்கு புடிச்சவங்களுக்கு கஷ்டத்தை குடுத்துட்டு.. நான் யார்ட்ட போய்.. எதை ப்ரூவ் பண்ணி காட்டனும் அசோக்.. ம்ம்.. சொல்லு..?? அதுல எனக்கு என்ன சந்தோஷம் கெடைச்சிடப் போகுது..??" கோவிந்த அவ்வாறு திருப்பி கேட்க, அந்த கேள்வி சுருக்கென்று அசோக்கின் மனதை தைத்தது. வாயடைத்துப் போனான். மூளைக்குள் இருந்த ஒரு குழப்பமான விஷயம், இப்போது மெல்ல தெளிவடைவது போல அவனுக்கு இருந்தது. மெதுவாக திரும்பி ப்ரியாவை ஒருமுறை பார்த்தான். அவளும் கோவிந்தின் பதிலில் சற்றே ஆடிப்போயிருந்தாள். அசோக் அவளை பார்த்ததும், அவளும் அவனை திரும்பி பார்த்தாள். என்னவென்று புரியாமலே இருவரும் கொஞ்ச நேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் இப்போது பேச்சிழந்து போயிருக்க, நேத்ராவே கோவிந்திடம் விவாதம் செய்ய ஆரம்பித்தாள்."லூசு மாதிரி பேசாத கோவிந்த்.. உன்னை பிரிஞ்சி இருக்குறது எனக்கு கஷ்டந்தான்..!! ஆனா.. நீ ஆன்சைட் போய்.. நெனச்சதை சாதிச்சுட்டு திரும்ப வர்றப்போ.. அப்போ எனக்கு கெடைக்கிற சந்தோஷத்துக்கு முன்னாடி.. இந்த கஷ்டம்லாம் ஒண்ணுமே இல்ல..!! நான் தாங்கிக்குவேன்.. நீ ரொம்பலாம் வொர்ரி பண்ணிக்காத..!!" "இங்க பாரு.. பிரிஞ்சி இருக்குறது என்னமோ உனக்கு மட்டுந்தான் கஷ்டம்ன்ற மாதிரி பேசாத.. எனக்கு கஷ்டம் இருக்காதா..?? என்னால முடியாது நேத்ரா..!!" "என்ன முடியாது..??" "நீ இல்லாத இடத்துல என்னால இருக்க முடியாது..!!" "இப்போ அறை வாங்கப் போற நீ..!!" நேத்ராவும், கோவிந்தும் அதன்பிறகும் நீண்ட நேரம் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அனைவரும் அவர்களுடய சண்டையை புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அசோக்கும் ப்ரியாவும் மட்டும் ஏதோ தீவிர சிந்தனையில் மூழ்கியவர்களாய் காணப்பட்டார்கள். அவ்வப்போது ஒருவரை மற்றொருவர் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டார்கள். அன்று இரவு.. அனைவரும் தங்களது கடைசி கட்ட வேலைகளையும் முடித்து.. கோட் செக்கின் செய்துவிட்டு.. வீட்டுக்கு கிளம்பியிருந்தார்கள்..!! அமெரிக்காவில் இருப்பவர்களுடன் கம்யூனிகேட்டரில் உரையாடுவதும், அவர்களை கான்ஃபரன்ஸில் அழைப்பதுமாக ப்ரியா படுபிஸியாக இருந்தாள். அசோக் அவ்வப்போது அவளுடைய அறையை எட்டிப்பார்த்தவாறே அவளுக்காக காத்திருந்தான். அப்போதுதான் அவனுடைய மெயில் பாக்ஸில் அடுத்தடுத்து அந்த மெயில்கள் வந்து வரிசையாக விழுந்தன. முதலில் ப்ரியா அனுப்பிய மெயில்..!! சாஃப்ட்வேர் ரிலீசுக்கு முன்பாக அந்த ப்ராஜக்டின் லீட் என்கிற முறையில், அவர்களுடைய கம்பனி மற்றும் க்ளையன்ட் கம்பனியின் முக்கியமான புள்ளிகளுக்கு அனுப்பிய ஃபார்மல் மெயில்..!! டீமில் இருக்கும் இவர்களுக்கு CC இட்டிருந்தாள். டீமில் எல்லோருடைய பெயரையும் குறிப்பிட்டு, அவர்கள் இந்த ப்ராஜக்டுக்கு ஆற்றிய பணிகளையும் அடுக்கியிருந்தாள். அசோக்கை சற்று அதிகமாகவே புகழ்ந்திருந்தாள். அவன் செய்த பணிகளின் முக்கியத்துவத்தை ஹைலைட் செய்து காட்டியிருந்தாள். இந்த ப்ராஜக்டுக்கு அவனுடைய பங்கு மிக முக்கியமானது என சுயகருத்து தெரிவித்து பாராட்டியிருந்தாள்.அவளுடைய மெயில் வந்த அடுத்த நிமிடத்தில் இருந்தே.. அடுக்கடுக்காய்.. அந்த மெயிலை ரிஸீவ் செய்த அனைவருமே.. டீமை பாராட்டி ரிப்ளை செய்தார்கள்..!! எல்லோருமே அசோக்கை தனியாக குறிப்பிட்டு வெகுவாக பாராட்டினார்கள்..!! எல்லாவற்றையும் வாசித்த அசோக்குக்கு, வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒருவகை சந்தோஷம்..!! ப்ரியாவிடம் பேசவேண்டும் போலிருந்தது அவனுக்கு..!! எழுந்து அவளுடைய அறைக்கு நடந்தான். கதவை திறந்து உரிமையாக உள்ளே நுழைந்தான். இவன் நுழைந்ததும் ப்ரியா லேப்டாப்பில் இருந்து நிமிர்ந்து.. "ஹேய்.. இன்னும் கெளம்பலையா நீ..??" என்று புன்னகையுடன் கேட்டாள். "உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்..!!" "ஹாஹா.. நான் இன்னைக்கு கெளம்ப ட்வெல்வ் ஆயிடும்னு நெனைக்கிறேன் அசோக்..!!" "ஓ..!! அவ்ளோ லேட் ஆகுமா..??" "ஆமாம்.. எனக்காக வெயிட் பண்ணாத.. நீ கெளம்பு.. கேப் வேணா புக் பண்ணிக்கோ.. ரெக்வஸ்ட் அனுப்பு.. நான் அப்ரூவ் பண்றேன்..!!" "அதெல்லாம் ஒன்னும் வேணாம் விடு..!! நான் ஆட்டோல கூட போய்க்குறேன்..!!" "ஹ்ம்ம்..!! அப்புறம்..?? மெயில்ஸ்லாம் பாத்தியா..?? ஆளாளுக்கு உன்னை புகழ்ந்து தள்ளுறாங்க போல..??" "ஆமாம்..!! நீ இல்லாததும் பொல்லாததுமா என்னை பத்தி சொல்லிருக்குற..?? அவங்களும் வெவரம் இல்லாம என்னை புகழ்றாங்க..!!" "ஹாஹா..!! அப்படிலாம் ஒன்னும் இல்ல.. நான் சொன்னதுல ஒரு வார்த்தை கூட பொய் இல்ல..!! இந்த ப்ராஜக்ட் இன்னைக்கு சக்சஸ்ஃபுல்லா டெலிவர் ஆகப் போகுதுன்னா.. அதுக்கு உன்னோட கான்ட்ரிப்யூஷன் ரொம்ப ரொம்ப இம்பார்ட்டன்ட்..!! உன்னோட வேலை மட்டும் இல்லாம, அடுத்தவங்க வேலைக்கும் ரொம்ப ரொம்ப ஹெல்ப் பண்ணிருக்குற..!! அதைத்தான் நான் மெயில்ல மென்ஷன் பண்ணிருந்தேன்..!! எல்லாமே ஹன்ட்ரட் பர்சன்ட் ட்ரூ வேர்ட்ஸ் அசோக்..!!" "ம்ம்.. தேங்க்ஸ் ப்ரியா..!! எனக்கு ரொம்ப ஹேப்பியா இருந்தது..!!" அசோக் ஸ்னேஹமாக ஒரு புன்னகையை வீசினான். "ஹாஹா.. பார்டா.. ஒருத்தன் தேங்க்ஸ்லாம் சொல்றான்..!! ம்ம்.. உனக்கு இன்னொரு சர்பரைஸ் கூட இருக்கு அசோக்..!!" "என்ன..??" "இதை பாரேன்..!!"

ப்ரியா தனது லேப்டாப்பை அவன் பக்கமாக திருப்பினாள். ஓரிரு வினாடிகள் குழப்பமாய் திகைத்த அசோக், அப்புறம் சேரில் அமர்ந்தவாறே அவளுடைய லேப்டாப் மீது பார்வையை வீசினான். என்ன விஷயம் என்று அவன் படித்து தெரிந்து கொள்வதற்கு முன்பாக, ப்ரியாவே சொன்னாள். "பெர்ஃபார்மர் ஆஃப் திஸ் குவார்ட்டர் அவார்ட்க்கு.. உன் பேரை நாமினேட் பண்ணிருக்கேன் அசோக்..!! நீ என்னன்ன பண்ணிருக்கன்னு பக்காவா ஒரு டாகுமன்ட் ரெடி பண்ணி.. அவார்ட் கமிட்டிக்கு அனுப்பிருக்கேன்..!! நீ வேணா பாரு.. இந்தத்தடவை கண்டிப்பா உனக்குத்தான் அந்த அவார்ட்..!!" ப்ரியா பூரிப்பாக சொல்ல, அசோக் அவளை ஏறிட்டு புன்னகைத்தான். "இது என்ன.. பதிலுக்கு பதிலா..??" என்று குறும்பாக கேட்டான். "அப்படின்னா..?? புரியல..!!" "என் ஹெல்ப்பால நீ அவார்ட் வாங்குன.. அதுக்கு பதிலா இப்போ.. நான் அவார்ட் வாங்குறதுக்கு நீ ஹெல்ப் பண்றியா..??" "சீச்சீ.. அப்படிலாம் இல்ல..!! ஒன்னு சொல்லவா.. எனக்கு அவார்ட் கெடைச்சது.. இட் வாஸ் ஜஸ்ட் ப்யூர் லக்.. அந்த அவார்டை வாங்குறதுக்கு எனக்கு கொஞ்சம் கூட தகுதியே கெடையாது..!! ஆனா இது அப்படி இல்ல.. இந்த அவார்ட் வாங்குறதுக்கு எல்லா தகுதியும் உனக்கு இருக்கு.. சொல்லப்போனா அதைவிட அதிகமாவே இருக்கு..!! ஆறு வருஷமா இந்தக்கம்பனிக்காக நீ செஞ்ச பெரிய பெரிய நல்ல காரியத்துக்காக.. கம்பனி உனக்கு கொடுக்குற ஒரு சின்ன ரெகக்னைஷேஷன்..!! அதுக்கான எல்லா குவாலிட்டியும் உனக்கு இருக்கு அசோக்..!! நான் சும்மா.. நீ செஞ்சதுலாம் அவங்களுக்கு ஹைலைட் பண்ணி சொல்ற ஒரு ஆள்.. அவ்ளோதான்..!!" ப்ரியா அடக்கமாக சொன்னாள். அவள் சொன்னதைக்கேட்டு அசோக் எதுவும் பேசாமல் அவளையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது ப்ரியா தனது சேரில் இருந்து எழுந்து கொண்டாள். அந்த அறையின் ஒரு மூலைக்கு மெல்ல நடந்தவள், சுவற்றில் தொங்கிய பிளாஸ்டிக் கர்ட்டைனை தளர்த்தினாள். கண்ணாடி சுவர் மூலமாக வெளியே தெரிந்த வெளிச்சமிகு சாலையை வேடிக்கை பார்த்தவாறே, இதமான குரலில் தொடர்ந்து பேசினாள். "அன்னைக்கு கோவிந்த் ஒன்னு சொன்னானே.. ஞாபகம் இருக்கா அசோக்..?? நேத்ரா ஸ்டேஜ்ல பாடனும்.. எல்லாரும் அவளுக்கு கை தட்டுறதை பாத்து.. அவன் சந்தோஷப்படனும்னு சொன்னானே..??" "ஹ்ம்ம்..!!" "அதே மாதிரி எனக்கும் இப்போ மனசுக்குள்ள ஒரு ஆசை..!! இந்த அவார்ட் நீ வாங்கணும்.. அதை பாத்து நான் சந்தோஷப்படணும்.. கை வலிக்க வலிக்க க்ளாப் பண்ணனும்..!!"ப்ரியா பேசிக்கொண்டே இருக்க, அதை கேட்டுக்கொண்டே அசோக் இங்கே அவளுடைய லேப்டாப்பை நோண்டிக் கொண்டிருந்தான். அவள் வேறென்ன விண்டோஸ் எல்லாம் திறந்து வைத்திருக்கிறாள் என்று பார்த்தான். கோட் எடிட்டர் திறந்து வைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்ததுமே அவனுக்குள் ஒரு குறும்பான எண்ணம். ப்ரியாவை சீண்டி டென்ஷன் ஆக்கும் எண்ணத்துடன், ப்ரோக்ராமில் ஒரு சில்மிஷம் செய்தான். அவன் செய்த காரியம் ப்ரியாவுக்கு தெரிய வரும்போது, அவள் எந்த மாதிரி கடுப்பாவாள் என்பதை இப்போதே கற்பனை செய்து பார்த்தான். சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டான்."என்னடா.. என்ன பண்ணிட்டு இருக்குற..??" அசோக்கின் அமைதியை உணர்ந்து, ப்ரியா அவன் பக்கமாக திரும்பி கேட்க, "ஒ..ஒண்ணுல்ல..!! எ..என்ன சொல்லிட்டு இருந்த..??" அவன் தடுமாற்றமாக அவளை ஏறிட்டான். "கோவிந்த் பத்தி சொல்லிட்டு இருந்தேன்..!!" "ஓ.. ஓகே ஓகே..!! ஹ்ம்ம்... அப்புறம்..?? கடைசில என்னாச்சு..?? அவன் ஆன்சைட் போறானா.. இல்லையா..??" "ஹாஹா.. ஒருவழியா ஓகே சொல்லிட்டான்.. நெக்ஸ்ட் வீக் கெளம்புறான்..!!" சொல்லிக்கொண்டே ப்ரியா மீண்டும் அசோக்கை நோக்கி வந்தாள். "ஓ.. அப்போ நேத்ராதான் ஜெயிச்சாளா..??" "ஆமாம்..!! லவ்ல யூசுவலா பொண்ணுக வச்சதுதான் சட்டமா இருக்குது..!! ஆனா.. என் லவ்வுதான் இப்படி ஏடாகூடமா உல்டா ஆகிப்போய் கெடக்குது.. நீ வீம்பு பண்ணிட்டு திரியுற.. நான் உன் பின்னாடி வெக்கமே இல்லாம தொங்கிட்டு திரியுறேன்..!! ஹ்ஹ்ம்ம்ம்.. எல்லாம் நான் லவ் பண்ண ஆரம்பிச்ச நேரம்..!!" ப்ரியா சலிப்பாக சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டாள். அவளுடய சேரில் அமர்ந்துகொண்டாள். "ஹாஹாஹாஹா..!!" அசோக் இப்போது வாய்விட்டு சிரித்தான். "சிரிக்காத..!! அப்படியே கன்னத்துல பளார் பளார்னு விடலாம் போல இருக்கு எனக்கு..!!" ப்ரியா முறைக்க, "ஹாஹாஹாஹா..!!" அசோக் அதற்கும் சிரித்தான். ப்ரியா இப்போது பட்டென அமைதியானாள். இதழ்களில் புன்னகையை வழியவிட்டு.. விழிகளை அகலமாய் விரித்துவைத்து.. அசோக்கின் முகத்தையே ஆசையும் காதலுமாய் பார்த்தாள்..!! அவனை அப்படியே விழுங்கிவிடுபவள் மாதிரியான ஒரு பார்வை..!! அப்புறம் அவளுடைய காதல் மொத்தமும் சொட்டுகிற மாதிரியான ஒரு குரலில் சொன்னாள். "ஆனா.. இப்போ எனக்கு அதுலாம் பெரிய விஷயமா தெரியலை அசோக்.. தெரியுமா..?? நீ பெரியவனா நான் பெரியவளான்னு போட்டி போட்டதுலாம் போயிடுச்சு..!! இன்னைக்கு கேஃப்டீரியால கோவிந்த் சொன்னானே ஒரு வார்த்தை.. 'மனசுக்கு புடிச்சவங்களுக்கு கஷ்டத்தை கொடுத்துட்டு.. என்னத்த ப்ரூவ் பண்ணி.. என்ன சந்தோஷம் எனக்கு கெடைச்சிடப் போகுது'ன்னு..?? எவ்வளவு சத்தியமான வார்த்தை அசோக்..?? 'இந்த டி.எல் போஸ்ட்க்கு நான் தகுதியானவன்னு ப்ரூவ் பண்ணி காட்டுறேன்..' அப்டின்னு.. உன்கிட்ட நான் சவால் விட்டது.. அதுக்காக நான் செஞ்ச வேலைகள்.. அதெல்லாம் இப்போ நெனச்சுப் பாத்தா ரொம்ப ஸில்லித்தனமா தோணுது அசோக்..!!" சொல்லிவிட்டு ப்ரியா புன்னகைக்க, இப்போது அசோக் அவளுடய முகத்தையே கண்ணிமைக்காமல் காதலாய் பார்த்தான். ஒரு சில வினாடிகள்..!! அப்புறம் மெல்ல தனது உதடுகளில் ஒரு புன்னகையை கசியவிட்டவாறே சொன்னான். "உன்கிட்ட ரொம்ப நாளா ஒன்னு சொல்லனும்னு நெனச்சுட்டு இருந்தேன் ப்ரியா..!!" "என்ன..??" "நீ ஜெயிச்சுட்ட.. இந்த டி.எல் போஸ்ட்க்கு எல்லா வகைலயும் நீ தகுதியானவதான்னு ப்ரூவ் பண்ணிட்ட..!! என் தோல்வியை நான் ஒத்துக்குறேன்..!!" "ஹேய் ச்சீய்.. சும்மா காமடி பண்.." ப்ரியா சிரிப்புடன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, "நோ..!! ஐ'ம் சீரியஸ்..!!" அசோக் இடை மறித்து சொன்னான். அவளுடைய கை மீது தனது கையை வைத்து ஒரு அழுத்தம் கொடுத்தவாறே தொடர்ந்தான். "சொன்ன நேரத்துக்கு ஒரு ப்ராஜக்ட் டெலிவர் பண்றது எவ்வளவு கஷ்டம்னு.. உனக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்ல..!! பல ப்ராஜக்ட் ஹேண்டில் பண்ணின ஆளுங்களே.. பல தடவை சொதப்பிடுவாங்க..!! நீ எந்த எக்ஸ்பீரியன்சும் இல்லாம.. இந்த ப்ராஜக்ட் லீட் பண்ண ஆரம்பிச்ச.. இன்னைக்கு எந்த பிரச்சினையும் இல்லாம.. இந்த ப்ராஜக்ட் டெலிவர் பண்ணப்போறோம்னா.. அதுக்கு உன்னை தவிர வேற யாரும் காரணம் இல்ல ப்ரியா..!! லெட் மி அக்ஸப்ட் திஸ்.. ஐ ரியல்லி அண்டர் எஸ்டிமேட்டட் யு.. ஐ வாஸ் ராங்.. யு ப்ரூவ்ட் தேட் ஐ வாஸ் டோட்டல்லி ராங்..!!" அசோக் பேசிமுடித்து அமைதியானான். ப்ரியாவின் முகத்தையே ஆசையாக பார்த்தான். அவளும் இப்போது அசோக்கையே அன்பு சொட்ட பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரும் வார்த்தைகளை தொலைத்தவர்களாய், அப்படியே ஒருவரை ஒருவர் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கைவிரல்கள் மட்டும் ஒன்றோடொன்று பிண்ணிக்கொண்டு கிடந்தன. எவ்வளவு நேரம் என்பதை அவர்கள் அறியவில்லை. அப்புறம் டேபிள் மீதிருந்த டெலிபோன் கனைத்துத்தான் அவர்களுடைய கவனத்தை கலைக்கக் வேண்டி இருந்தது. டிஸ்ப்ளே பார்த்த ப்ரியா, அசோக்கிடம் திரும்பி அவசரமாக சொன்னாள்.

"ஹேய்.. யு.எஸ். கால்டா..!! பேச ஆரம்பிச்சா ரொம்ப நேரம் ஆகும்னு நெனைக்கிறேன்..!!" "ஓ..!!" "நீ வேணா கெளம்பு.. நாம நாளைக்கு பேசலாம்.. காலைல வீட்டுக்கு வர்றேன்.. சரியா..??" "ம்ம்.. சரி ப்ரியா..!!" சொல்லிக்கொண்டே அசோக் எழுந்தான். "கவனமா போ.. குட்நைட்..!!" "ம்ம்.. குட்நைட் ..!!" புன்னகையுடன் சொல்லிவிட்டு அசோக் அந்த அறையிலிருந்து வெளியேறினான். அவன் வெளியேறியதும், ப்ரியா ரிஸீவர் எடுத்து காதில் வைத்துக்கொண்டு 'ஹலோ..!!' என்றாள்.