Tuesday 8 May 2012

உயிர்



அன்று வெள்ளி கிழமை இரவு egmore ரயில்வே ஸ்டேஷன் வழக்கத்தை விட மிக பரபரப்பாக இருந்தது .. சுதந்திர தின விடுமுரயை சேர்த்து தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் , வலகமான கூட்டதுடன் சேர்ந்து வெளி ஊரிலிருந்து வந்து சென்னயில் வேலை செய்பவர்களும் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல வந்திருந்தனர் ..... சென்னை to மதுரை express புரபட்டது .. Unreservedil செல்பவர்கள் டிரைன் பெட்டிகளின் கதவுகளின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தனர் ...
அங்கு இருந்த s6 பெட்டியிள் இரண்டு வயதான தம்பதிகள் தங்கள் வீட்டிலிருந்து கட்டி வந்த இட்லியை சாப்பிட்டு கொண்டிருந்தனர் .. பக்கதில் உட்காந்திருந்த இளைங்கனிடம் எனக்கு upper berth குடுதிருக்காங்கபா என்னால ஏற முடியாது நீ மேல படுதுகிரியாபா என்று கேட்டார் சரி என்பதுபோல் அவன் தலை அசைதான்.. அந்த இளைங்கனின் ஃபோன் ஒலித்தது எடுத்து பேசியவன் டிக்கெட் கெடச்சிருச்சு காலைல வந்திருவேன் என்று கூறினான் அவனுடய முகம் வாடி இருந்தது வெகுநேரம் அழுது கொண்டிருந்தது போன்று தோன்றியது எழுந்து bath roomuku சென்றான் ..
ஒரு 7 வயது பய்யன் அவனுடய அப்பாவிடம் நான்தான் மேல படுப்பேன் என்று அடம் பிடித்து கொண்டிருந்தான் . அவனுடய அம்மா நீ தூங்கிக்கிட்டே கீழ விழுந்துருவ நீ middle berthla படுத்துக்கோ அம்மா lower berthla படுத்துகிறேன் சரியா என்றால் .. ஆனால் அந்த சிறுவன் நான்தான் upper berthil படுப்பேன் என்று கத்தி அளதொடன்கினான்.. அவனுடைய தந்தை அவனிடம் நீ அடம்பிடிக்காம இருந்தா உனக்கு நீ கேட்ட மாதிரி சைக்கிள் வாங்கிதரேன் என்றான் இதை கேட்ட அந்த சிறுவன் முகம் மலர்ந்தது கண்டிப்பா வாங்கிதரின்களா என்றான் .. நிச்சயமா நீ இப்ப middle berthla ஏறி படுத்து தூங்கு என்றான் ..


அந்த சிறுவனும் சந்தோஷமாக middle berthil ஏறி படுத்து கொண்டான் . இதை பார்த்து சிரித்து கொண்டிருந்த பெரியவர் இப்பலாம் குழந்தைங்களுக்கு கூட லஞ்சம் குடுத்தாதான் வேலை நடக்குது என்றார் .. அந்த சிறுவனின் தந்தையும் சிரித்து கொண்டே என்ன பண்றது சார் இந்த காலத்து பசங்க நம்மள விட விவரமா இருக்காங்க .. அந்த பெரியவரின் மனைவி அந்த சிறுவனின் அம்மாவிடம் மதுரைக்கா போறீங்க? என்றால் .. இல்ல திருச்சில எங்க அப்பா வீட்டுக்கு போறோம் நீங்க மதுரைக்கு போறிங்களா என்று கேட்டால் .. ஆமா ஊர்ல ஒரு வீடு வாங்கி இருக்கோம் அதான் க்ரஹா பிரவேஷம் பண்றதுக்கு போறோம் .. சென்னைல வாங்காம ஏன் அங்க வாங்கிருகிங்க என்றால் .. கடைசி பொண்ணுக்கு அடுத்த மாசம் கல்யாணம் முடுஞ்சபுரம் சொந்த ஊரு மதுரைக்கே போய்டலாம்னு முடிவு பண்ணிட்டோம் , பிளைபுகாக சென்னைக்கு வந்தோம் எல்லாம் நல்லபடியா முடுஞ்சுச்சு அதான் நிம்மதியா சொந்த ஊர்லையே வீடு வாங்கி அமைதியா கடைசி காலத்துல இருக்கலாம்னு வாங்கினோம் என்றால் அந்த வயதானவள் ..
பாத்ரூமிலிருந்து வெளிய வந்த அந்த இளைஞன் upper berthil ஏறி படுத்து கொண்டான் .. எதிரில் ஒரு இளம் வயது கணவனும் மனைவியும் அமைதியாக இவர்கள் பேசுவதை பார்த்து கொண்டிருந்தனர் இருவர் முகத்திலும் ஒரு விதமான மௌனம் , அவன் தன்னுடைய மனைவியிடம் சூட் கேஸ் சாவி எந்த bagla இருக்கு என்றான் .. தெரியாது நீங்கதான பூட்டுநிங்க என்ன கேட்டால் எனக்கு எப்படி தெரியும் என்று ஜன்னலில் வெளியே பார்த்து கொண்டே சொன்னால் .. எவ்ளோவ் திமிருடி உனக்கு என்று அவன் மனதில் தோன்றியது பொது இடம் என்பதால் எதுவும் பேசாமல் மற்ற bagilum தேடி கொண்டே இருந்தான் .. சிறிது நேரம் கழித்து அவள் சாவி உங்களோட laptop bagla இருக்குனு நினைக்கிறன் என்றால் ..
Laptop bagil சாவி இருந்தது .. அவளை முறைதான் தெரிஞ்சு வச்சுகிட்டே இவ்ளோவ் நேரம் சொல்லாம இருந்திருக்கிறாள் என்று நினைத்தான் ஊரிலிருந்து திரும்பியதும் இவளுக்கு ஒரு முடிவு கட்டணும்னு நினைத்தான் .. அத்தைக்கு போன் போட்டு மாத்திரைய beduku கீழ வசிருகேனு சொல்லுங்க என்றால் .. ரொம்ப நடிகாதடி அதெல்லாம் அவங்களுக்கு தெரியும் என்றான் .. அவள் கோபத்துடன் எதுவும் பேசாமல் வெளியே பார்த்தல் .. ஏதாவது சாப்பிட வேணுமான்னு அவளிடம் கேட்டான் .. அவள் எதுவும் சொல்லாமல் வெளியே பார்த்து கொண்டே இருந்தால் .. அவன் கோபத்துடன் எழுந்து மேல் berthil ஏறி படுத்து கொண்டான் .. மற்றவர்களும் அவரவர் இடத்தில ஏறி படுத்து கொண்டனர் ...................................... ………………………………….
Middle berthil படுத்திருந்த அந்த சிறுவன் தன்னுடைய தந்தையிடம் கண்டிப்பா வாங்கி தரின்களா என்று மறுபடியும் கேட்டான் .. அவர் சரி என்று மறுபடியும் சொல்வதை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் . அவன் தன்னுடைய தந்தையிடம் 6 மாசமாக சைக்கிள் வாங்கிதர சொல்லி கேட்டு கொண்டிருக்கிறான் .. பக்கத்துக்கு வீட்டில் இருந்த சுரேஷ் இவனை விட 2 வயது பெரியவன் 6 மாசத்துக்கு முன்னாடி சைக்கிள் வாங்கினான் தினமும் மாலை அந்த தெருவை cycleile சுற்றி வருவான் .. அதை பார்த்ததிலிருந்து இவனுக்கும் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று ஆசை வந்தது .. இவனுடைய கனவு எப்படியாவது சைக்கிள் வாங்கி மழை காலத்தில் ரோட்டில் தேங்கி இருக்கும் மழைநீர் மேல் சைக்கிளில் வேகமாக சென்று தண்ணீரை பீச்சி அடிக்க வேண்டும் என்பதுதான் அந்த கனவு .. தன்னுடைய கனவு நிறைவேற போவதை நினைத்து அந்த சிறுவனுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி .. அந்த கனவை அவன் மனதில் மறுபடியும் ஓடவிட்டான் .. அந்த கனவை கண்டுகொண்டே தூங்கிவிட்டான்...............................................
அந்த சிறுவனின் குறும்புகளை பார்த்து கொண்டிருந்த அந்த வயதானவரின் மனைவிக்கு தன்னுடைய மூத்த மகளின் குழந்தையின் நினைவு வந்தது ,
எல்லாருக்கும் முதல் குழந்தையோ பேரனோ பிறக்கும்போது அந்த சந்தோஷத்துக்கு எல்லையே இருக்காது ,தன்னை பாட்டி என்று அழைக்க ஒருவன் வந்து விட்டான் என்று மனதிற்குள் நெகிழ்ந்தால் ஆனால் அந்த சந்தோஷம் வெகு நேரம் நீடிக்கவில்லை .. அவளுடைய பேரனுக்கு பேச்சு வரவில்லை .. அதற்கு முன்பு வரை அவள் மகளின் மாமனார் மாமியாரும் அவளை தங்களுடைய மகளை போன்று நினைத்தனர் , வருடங்கள் நகர நகர அவர்கள் இவளுடைய மகளை வெறுக்க ஆரம்பித்தனர் , என்ன செய்தாலும் குத்தம் சொன்னார்கள் .. இப்பொழுது தன்னுடைய கடைசி பெண்ணுக்கு மூத்த பெண்ணை விட அதிக நகை செய்வது தெரிந்து அவர்கள் என்ன செய்வார்களோ என்று அஞ்சினால் .. தன்னுடைய மூத்த மகளுக்கு திருமணம் செய்யும்போது அவ்வளவு வசதி இல்லை ஆனால் இப்போலோது கொஞ்சம் பரவாஇல்லை மாபிள்ளையும் பெரிய இடம் அதனால் கொஞ்சம் அதிகமாக செய்ய ஒப்புகொண்டோம் .. தன்னுடைய மகளை அவர்கள் என்ன கொடுமை செய்கிறார்களோ எப்படியாவது தன்னுடைய மூத்த மகளுக்கும் இவளுக்கு செய்வதை போன்று செய்து விட வேண்டும் என்று நினைத்தால் .. நாளை காலை தன்னுடைய கணவரிடம் இதை பற்றி பேச வேண்டும் என்று முடிவு செய்தால் . நாம இருக்கும்போதே செய்தால்தான் உண்டு என்று நினைதுகுண்டே உறங்கிவிட்டாள் ..... ………………………………………………………….


அந்த சிறுவனின் அம்மாவுக்கு இந்த வயதான தம்பதிகளை பார்த்ததும் தன்னுடைய அம்மா அப்பாவின் ஞாபகம் வந்தது .. 3 வருடங்கள் கழித்து இப்போலோதுதான் தன்னுடைய சொந்த ஊருக்கு செல்கிறாள் .. என்னதான் புருஷன் வீட்ல சந்தோஷமா இருந்தாலும் பொண்ணுங்களுக்கு அவங்களோட பிறந்த வீட்டுக்கு போறதுனா அது தனி சந்தோஷம் .. கல்யாணம் ஆகி 2 வருஷம் ஆனாலும் சரி 20 வருஷம் ஆனாலும் சரி பொண்ணுங்களுக்கு அவங்க பொறந்த வீட்டுக்கு போறப்ப அவங்களோட சின்ன வயசுக்கே போய்டுவாங்க .. தன்னோட கணவருடைய தந்தைக்கு உடம்பு சரி இல்லாததால் 3 வருஷமா பிறந்த வீடுகே போகல , இப்ப அண்ணன் குழந்தைங்க காது குத்துக்கு கண்டிப்பா வர சொன்ன்னால போயிடு இருக்கோம் .. அக்காலாம் நேத்தே வந்திருப்பா நான்தான் கடைசியா போறேன் என்ன பண்றது திருச்சி என்ன அவ்ளோவ் பக்கமா இருக்கு .. அப்பா அம்மா அண்ணன் அண்ணி அக்கா மாமா தம்பி அவங்களோட பசங்க இவங்கலாம் பாத்து எவ்ளோவ் நாளாச்சு .. சின்ன வயசுல ஒரே வீட்ல இருந்தோம் அப்ப அடிகடி சண்டை போட்டு கிட்டு பேசாம பல நாள் இருந்திருப்போம் ஆனால் இப்ப அவங்கள பாக்கணும் நிம்மதியா ஒரு நாள் பூரா பேசணும்னு எவ்ளோவ் ஆசையா இருக்கு ... அபலாம் வீட்ல current போயடுசுனா எல்லாரும் வீடு வாசல்ல உக்காந்து நிலா வெளிச்சத்துல உக்காந்து சாப்டது .. வண்டி கட்டிக்கிட்டு பக்கத்துக்கு ஊர்ல இருக்க குலதெய்வம் கோயிலுக்கு பொங்கல் வைக்க போனது .. தோட்டத்துல எல்லாரும் சேந்து மல்லி பூ பரிசது .. ஆத்துல குளுசது .. எவ்ளோவ் சந்தோஷமா இருந்தோம் .. நாளைக்கு காலைல அவங்களாம் பாக்க போறோம்னு நெனச்சு தன்னோட வயதே மறந்து குழந்தை மாதிரி சிரித்தால் .. அந்த பழைய நாட்களை நினைத்து கொண்டே தூங்கினால் ..... ………………………………………………………….
அந்த வயாதானவர்தான் முதல் முதலில் ஊரிலிருந்து trainil வந்ததை நினைத்து பார்த்தார் .. கிராமத்தில் பிழைக்க வழி இல்லாமல் , ட்ரெயினில் சென்னயில் துணி கடையில் வேளைக்கு வந்து சேர்ந்தேன் .. 8 வருஷம் அந்த கடைல இருந்து எல்லா வேலையும் கத்துகிட்டேன் .. அப்பறம் வீடு வீடா துணிய கொண்டு போய் வித்தேன் .. நடந்தே எவ்ளோவ் தூரம் போயிருக்கேன் இப்ப பக்கத்துக்கு தெருக்கு கூட கார்ல போறோம் .. அம்பத்தூர் பஸ் ஸ்டாப்ல ஒரு சின்ன கடைய வாடகைக்கு எடுக்கலாம்னு முடிவு பண்ணுனேன் .. அது வரைக்கும் சம்பாதிச்ச எல்லா பணத்தையும் குடுத்து அந்த கடைய வாடகைக்கு எடுத்தேன் , அம்பத்தூர் மக்கள் என்ன கை விடல கொஞ்சம் கொஞ்சமா முன்னேருனேன் .. இப்ப அம்பதுர்லையே என்னோட கடைதான் பெருசு .. ராஜா textiles அம்பதுற்கே ஒரு அடையாலமாச்சு .. அதை நினைக்கும்போதே அவர் முகத்தில் ஒரு பெருமிதம் .. மூத்த பொண்ணுக்கு கல்யாணம் முடுசுடேன் .. ரெண்டு பசங்களும் இப்ப கடைய பாதுகுறாங்க . கடைசி பொண்ணுக்கு மட்டும் கல்யாணம் முடுச்சிட்டா போதும் மறுபடியும் சொந்த ஊருக்கே போய் கடைசி காலத்த முடுசிடுவேன் .. கடைசி பொண்ணு கல்யாணத மட்டும் நல்லபடியா நடதிகோடு முருகா இதுக்குமேல நா என்னோட வாழ்க்கைல உங்கிட்ட வேற எதுவும் கேட்க மாட்டேன் என்று வேண்டிவிட்டு தூங்கினான்.............................................................
அந்த சிறுவனின் தந்தை மிகவும் குழப்பத்துடன் இருந்தார் . கடந்த இரண்டு வாரங்களாக யோசித்து கொண்டே இருக்கிறார் .. கடந்த 3 வருடமாக அவருடைய தந்தைக்கு உடல் நிலை மோசமாக உள்ளது இப்படியே போனால் இன்னும் ஒரு 3 மாசதுகுதான் முடியும் ஆபரேஷன் பண்ணி கட்டிய எடுத்தா இன்னும் சில வருடங்களுக்கு பிரச்சனை இல்லை ஆனால் அதுக்கு அவர் உடம்பு தாங்குமான்னு தெரியல operationku 2 லட்சமாச்சு வேணும் .. யோசிச்சு சொல்லுங்க என்று டாக்டர் சொன்னார் . அதை கேட்டதிலிருந்து அவர் குழப்பத்திலே இருக்கிறார் .. வயசாகிடுச்சு இதுக்குமேல ஆபரேஷன் செஞ்சு நா என்ன பண்ண போறேன் இருக்குற வரைக்கும் இருந்துட்டு போறேன் நீ தேவ இல்லாம பணத்த வீணடிக்காத என்று அவருடைய தந்தை சொன்னது அவர் காதுகளில் கேட்டு கொண்டே இருந்தது .. சொந்த காரங்க நண்பர்கள் எல்லாரும் எங்க அப்பா சொன்ன மாதிரிதான் சொல்றாங்க .. ஆனால் ஆபரேஷன் செஞ்சா சில வருஷங்கள் நல்லா வால்றதுக்கு சான்ஸ் இருக்கு .. இரண்டு வாரங்களாக இரவு தூங்காமல் ஒரு முடிவு எடுக்க முடியாமல் யோசித்து கொண்டே இருந்தான் .. ஒரு வேலை அவர் இறந்த பின்பு ஆபரேஷன் செய்திருந்தால் அவர் நம்முடன் இருந்திருப்பார் நாம் தான் பணத்துக்காக கொன்று விட்டோமோ என்ற நினைப்பு நம் மனதுக்குள் வந்து விட்டால் அந்த குற்ற உணர்ச்சியிலிருந்து மீளவே முடியாது .. ஆபரேஷன் செய்து விடுவோம் நல்லபடியாக நடந்தால் அவர் என்னுடன் சில வருடங்கள் வாழ்வாரே .. தப்பாக ஏதாவது நடந்தாலும் நம்மால முடுஞ்ச வரைக்கும் முயற்சி செஞ்சோம்னு ஒரு திருப்தி இருக்கும் . 2 லட்சம் ஆபீஸ் லோன் போட்டு வாங்கிக்கலாம் .. காசு எப்ப வேணும்னாலும் சம்பதுசுகலாம் இப்ப விட்டா எங்க அப்பாவோட நா மறுபடியும் வாழ முடியாது . ஒரே முடிவாக ஆபரேஷன் செய்து விடலாம் என்று முடிவு செய்தான் .. இரண்டு வாரம் கழித்து இன்றுதான் அவருக்கு தூக்கம் வந்தது நிம்மதியாக தூங்கினார் .........,.,..........................................................................
சைடில் இருந்த மேல் பெர்த்திலும் கீழ் பெர்த்திலும் அந்த இளம் தம்பதியினர் படுத்திருந்தனர் ... அவனுக்கு இன்னும் அவள் மேல் இருந்த கோபம் அடங்கவில்லை .. அவளை ஓங்கி அறைய வேண்டும் என்று அவனுக்கு தோன்றியது ..
அவனுடைய செல் போனிலிருந்து r u there? Nu மெசேஜ் செஞ்சான் .
Msg சவுண்ட் கேட்டு போனை எடுத்து பார்த்தல் ..Messaga தப்பா எனக்கு மாத்தி அமுச்சிடியா ? இந்த நேரத்துல எவளுக்கு r u there ? நு மெசேஜ் பண்ற என்று அவனுக்கு மெசேஜ் செய்தால் ..
அதை படித்த அவனுக்கு மேலும் கோபம் அதிகமானது இது மட்டும் public place இல்லாம வீடா இருந்துச்சுனா உன்ன அறைஞ்சிருப்பேன் என்று msg செய்தான் ...
உனக்கு வேற என்ன தெரியும் எப்பவும் நீ அடுச்சா வாங்கிகிடே இருப்பேனு நினைக்காத , பொண்டாட்டிய கை நீட்டி அடுச்சா வீரனு நெனப்பா ?. என்ன பிடிகலேனா எதுக்கு எனக்கு மெசேஜ் அனுப்புற என்று மெசேஜ் அனுப்பினால் ..
Oh அப்ப நீ என்ன திருப்பி அடிபியாடி அங்கேயே உன்ன கொன்றுவேன் , காலைலேயே என்கிட்டே வாங்கிருப்ப எங்க அப்பா அம்மா இருந்தனால தப்புசிட்ட , உனக்கு என்னடி அவ்ளோவ் திமிரு ? என்று மெசேஜ் செய்தான் ...
எனக்கு திமிரா இல்ல உனக்கா ?, உனக்குதான் பொம்பளைனா ஆம்பளைக்கு அடங்கி போனும்னு நெனப்பு .. Male shovanist.. எங்க அப்பா வீட்டுக்கு போனும்னு சொன்னது தப்பா ? என்று மெசேஜ் செய்தால் ..
ஆமாம் நா male shovenistdhaan.. போன மாசம்தான உங்க அப்பா வீட்டுக்கு போனோம் அதுக்குள்ள என்ன ?.. எனக்கு ஆபீஸ்ல வேலை இல்லன்னு நெனச்சியா ? என்று மெசேஜ் செய்தான் .. நானும்தான் ஆபீஸ்கு போறேன் ஆகஸ்ட் 15thla எந்த ஆபீஸ் இருக்கு , நா மட்டும் உங்க அப்பா அம்மாவை என்னோட அப்பா அம்மாவை நினைக்கிறன் ஆனா நீ அப்படி நினைக்க மாடிகிர .. லவ் பண்றப சொன்னதெல்லாம் மறந்துட்டியா ?.. என்று மெசேஜ் செய்தால் .
நா எதையும் மரகல , உனக்குதான் வேலைக்கு போறோம்னு திமிரு , அடுத்த மாசம் உங்க அப்பாவ பொய் பாத்தா என்ன ? என்று மெசேஜ் செய்தான் ..
உனக்கு இதெல்லாம் புரியாது பொண்ணா இருந்ததான் தெரியும் என்று மெசேஜ் செய்தால் ..
அவனுடைய போன் ரிங்க்டோன் ஒலித்தது அவனுடைய அப்பா போன் செய்திருந்தார் .. Train எறிடியா என்று கேட்டார் ? ஏறியாச்சு என்றான் .. சரி அவ கூட சண்ட போடாதடா கல்யாணம் ஆன புதுசுல பொண்ணுங்க அடிகடி அவங்க அப்பா வீட்டுக்கு poganumnu சொல்லத்தான் செய்வாங்க இவ்ளோவ் வருஷம் வேற ஒரு வீட்டுல வாழ்ந்துட்டு இப்ப இங்க வாழ்றது கஷ்டம்தான், நீதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும் , பொண்ணுங்க ரொம்ப sensitive, சண்ட போடாம ஒழுங்கா போயிடு வா, போய் சேந்தபுரம் போன் பண்ணு என்று சொல்லி விட்டு போனை கட் செய்தார் ..
யாரு போன்ல என்று ? அவள் மெசேஜ் செய்தால் ..
யாரா இருந்தா உனக்கென்ன? என்றான் .. சிறிது நேரம் கழித்து அப்பா போன் பண்ணார் என்று மெசேஜ் செய்தான் .. அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை ..
என்ன பதிலே கானம் என்று மெசேஜ் செய்தான் .. Reply வராததால் .. போனில் இருந்த torch lightai அவள் முகத்தில் அடித்து பார்த்தான் முழித்து கொண்டுதான் இருந்தால் .. அவள் பார்த்ததும் போன் பிளாஷ் lightai off செய்தான் ..
சிறிது நேரம் கழித்து போன்ல என்ன சொன்னார் ? என்று மெசேஜ் செய்தால் .
உன்ன உங்க அப்பா வீட்டுலே விட்டுட்டு வர சொல்லிட்டார் என்று மெசேஜ் செய்தான் .. அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை..
மறுபடியும் phone lightai அடித்து பார்த்தான் அவள் அழுது கொண்டிருந்தால் ..
சும்மா சொன்னேன் உன்னோட சண்ட போடா வேணாம்னு சொன்னாரு என்று மெசேஜ் செய்தான் ... என்ன இப்ப உனக்கு பிடிக்க மாடிகிதுல லவ் பண்றப என்னலாம் சொன்ன இப்பதான் தெரியுது நீ என்னை லவ் பண்ணவே இல்லன்னு .. இப்பவும் சொல்றேன் நா உன்ன லவ் பண்றேன் ஆனா உனக்கு பிடிகலனா பரவா இல்ல , diverse பண்ணிட்டு வேற யாரையாச்சு கல்யாணம் பண்ணிக்கோ . என்று மெசேஜ் செய்தால் ..
சும்மதாண்டி சொன்னேன் இப்ப எதுக்கு இவ்ளோவ் scene போடுற , அழுது என்னோட மானத்த வாங்காத .. நான்தான் இப்ப உன்னோட அப்பா வீட்டுக்கு வரேன்ல .வேற என்ன உனக்கு பிரச்சன . என்று மெசேஜ் செய்தான் ..
அவளிடம் இருந்து எந்த பதிலும் வர வில்லை ஆனால் அவள் அழுது கொண்டுதான் இருக்கிறாள் என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது ..
Sorry dont crynu type பண்ணி ஒரு பத்துவாட்டி மெசேஜ் செஞ்சான் .. அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை ..
Sorry இனிமேல் இந்த மாதிரி நடக்காது . உங்க அப்பவ பாக்க எப்ப வேணும்னாலும் போலாம் .. 7 ஜென்மதுளையும் உன்னையே நான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறேன் ஆனா இப்படி அழுது மட்டும் என்ன சாவடிகாதடி வேணும்னா ஒருவாட்டி கன்னத்துல கூட அரஞ்சுகோ ..... i love u ... என்று மெசேஜ் செய்தான் ..
சிறிது நேரம் கழித்து OK என்று ஒரு மெசேஜ் அவளிடம் இருந்து வந்தது .. Ok na என்ன ? லவ் பண்றியா இல்லையான்னு சொல்றி என்று மெசேஜ் செய்தான் ...
அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை .. மறுபடியும் போன் lightai அவள் முகத்தில் அடிதான் அவனை பார்த்து கண்ணடித்து விட்டு சிரித்தால் சத்தமில்லாமல் i love u என்று வாயசைத்தால் , இவனும் சிரித்துவிட்டான் ... பக்கத்தில் upper berthil இருந்த அந்த இளைஞன் இறங்கி bath roomku சென்றான் .. அவன் இறங்குவதை பார்த்ததும் phone lightai off செய்து விட்டு தூங்குவது போல் நடித்தான் .. Ok மீதி காலைல நேர்ல பேசிக்கலாம் good night என்று மெசேஜ் செய்தான் .. good night என்று இவளும் மெசேஜ் செய்தால் .. இருவரும் மகிழ்ச்சியாக தூங்க தொடங்கினார்கள் ........... ……………………..
அந்த இளைஞன் முகத்தை கழுவி விட்டு கதவை திறந்து வெளியே பார்த்து கொண்டே வந்தான் .. தன்னுடைய போனை எடுத்து பார்த்தான் contacts il முதல் no. Amma என்று இருந்தது அதை பார்த்த உடன் அடக்க முடியாமல் கதறி அழுதான் இனி தினமும் போன் செய்து சாப்டியா எப்டி இருக்க என்று கேட்க அம்மா இல்லையே என்று துடித்தான் .. இன்று மதியம் அவனுடைய போனுக்கு அவனுடைய மாமா போன் செய்து அவனுடைய அம்மா மூச்சு விட முடியாமல் இறந்து விட்டதாக கூறினார் .. கேட்ட அடுத்த நொடி அவன் அதை தாங்க முடியாமல் மயக்கம் போட்டு விழுந்தான் ... அவனுடன் வேலை பார்க்கும் மற்றவர்கள் தண்ணீர் தெளித்து எழுப்பினர் .. நடந்தது கனவாக இருக்க வேண்டும் என நினைத்து கொண்டிருக்கும்போதே அவனுடைய மாமாவிடம் இருந்து மறுபடியும் போன் வந்தது அவனுடைய நண்பர் வாங்கி பேசினான் .. அவனுடைய மாமா சொன்னதை கேட்டு அவனுடைய நண்பனும் அதிர்ச்சி அடைந்தான் .. நட்பது கனவு இல்லை என்று உணர்ந்த அவன் இந்த உலகையே வெறுத்து அழுது துடித்தான் .. தன்னுடைய வயது 22 ஒரு companyil வேலை பார்க்கிறோம் என்று அவனுக்கு எதுவும் ஞாபகமில்லை அழுது துடித்து மயக்கம் அடைந்தான் .. அந்த companyin மேனேஜர் முயற்சியில் இந்த train ticketai வாங்கினார் .. இனி இந்த உலகில் எனக்காக கவலை பட யாருமில்லை என்று நினைத்தான் .. அழுது அழுது அவனது கண்ணீர் தீர்ந்தது .. உயிரோடு இருக்கும்போதே இதயத்தை வெளியே எடுக்கும் மரண வேதனயான தருணங்கள் .. இந்த உலகத்தில் காதல் கடவுள் என அனைத்தையும் விட தலை சிறந்தது அம்மா .. அவனுடைய அம்மாவுக்கு அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்பதுதான் ஆசை .. இப்பொழுதுதான் வேலைக்கு சேந்து ஒரு நல்ல நிலைமைக்கு வந்து அம்மாவையும் இங்கு கூட்டி வர வேண்டும் என நினைத்தான் .. Beachai காட்ட வேண்டும் சென்னையை சுற்றி காட்ட வேண்டும் என பல கனவுகள் கண்டான் .. இனி இந்த உலகத்தில் எனக்கென்று யார் இருக்கிறார் என்று நினைக்கும்போது அம்மாவை தன்னிடமிருந்து பிரித்த அந்த கடவுளை கொள்ள வேண்டும் இந்த trainil இருந்து கீழே குதித்து செத்து விட வேண்டும் என்று அவன் அழுது துடித்தான் . பக்கத்தில் இருந்த வரைக்கும் பெரிதாக தெரிய வில்ல ஆனால் இப்போலோது அம்மா இனி இல்லை அழுதால் ஆறுதல் சொல்லவும் ஆளில்லை வென்றால் பெருமிதம் கொள்ளவும் யாருமில்லை .. இனி யாருக்காக வாழ போகிறேன் ...
அம்மா உங்கள நா மறுபடியும் பாக்க முடியுமா எவ்ளோவ் தப்பு செஞ்சாலும் மன்னிசிருவியே , நீ சொல்லி கேட்காம செஞ்ச எந்த விஷயமும் நல்லபடியா முடுஞ்சதிள்ள ... எனக்கு உங்கள இவ்ளோவ் பிடிகும்னாச்சு உங்களுக்கு தெரியுமா .. உங்க கூட இருந்த வரைக்கும் நா ஒரு நாள் கூட பாசமா பேசுனதில்ல அப்படி நீ பேசுனா மொக்கைனு கூட சொல்லி இருக்கேன் .. இனி உன்னோட பேசவே முடியாதுள உன்ன கடைசியா ஒரு வாட்டி பாக்கணும் நா என்னோட கடமைய உனக்கு செஞ்சே ஆகணும் என்று கண்ணீர் விட்டு தொடர்ந்து அழுது கொண்டே இருந்தான் ....................................................................................................


அடுத்தநாள் காலையில் அனைத்து நாளிதழ்களின் தலைப்பு செய்திகளும் இதுதான் ..
"சென்னை TO மதுரை EXPRESSIL குண்டு வெடிப்பு 50 கும் மேற்பட்டவர்கள் பலி "
S6 பெட்டியில் இருந்த அனைவரும் இறந்து விட்டதாக எழுதி இறந்தது ... இந்த குண்டு வெடிப்பை செய்தது நாங்கள்தான் என்று ஒரு தீவிரவாத இயக்கம் மாருதட்டி கொண்டது .. அதில் அவர்களுக்கு என்ன பெருமை .. அதில் இறந்தவர்களில் முக்கால் வாசி மக்களுக்கு இப்படி ஒரு தீவிரவாத இயக்கம் இருபதே தெரியாது .. இவர்களை கொன்று அவர்கள் என்ன சாதித்துள்ளனர் இப்படிப்பட்ட ஒரு கேவலமான செயலை செய்து விட்டு அதை செய்தது தாம்தான் என்பது மன்னிக்க முடியாத குற்றம் .. அனைத்து கட்சியினரும் கண்டனம் மட்டும் தெரிவித்தனர் .. நாளிதழில் தலைப்பு செய்தியை படித்து பரிதாபப்பட்ட சிலரும் நாளிதழின் 4 வது பக்கத்தில் "பிரபல நடிகை திருப்பதியில் திடீர் கல்யாணம் " என்று போடிருபதை பார்த்து விட்டு இந்த செய்தியை மறந்துவிட்டு அந்த நடிகையின் செய்தியை பற்றி பேச தொடங்கிவிட்டனர் ... நடிகர் கமல் சொல்வதுபோல் இந்தியாவின் தேசிய நோய் உண்மையிலே மறதிதான்.
காவல்துறை சிலரை கைது செய்தது .. ஆனால் யார் மீதும் குற்றம் நிரூபிக்க படவில்லை .. இறந்தவர்கள் அனைவரும் எந்த தவறும் செய்யாத சாதாரண மக்கள் ... இதுவே ஒரு மினிஸ்டரோ கிரிக்கேடேரோ சினிமா ஸ்டாரோ அந்த குண்டு வெடிப்பில் இறந்திருந்தால் இந்தியாவே அதிர்ந்திருக்கும் மக்களும் கொதிபடைந்திருபார்கள் , எதிர் கட்சிகளும் அரசியல் ஆதாயத்துக்காக பல போராட்டங்களை நடத்தி இருக்கும் .. ஆனால் இறந்தது சாதாரன வெகு ஜன மக்கள்தானே .. அதில் இறந்த 50 உயிருக்கும் மதிப்பில்லை .. உயிர் என்பது சாதாரண மக்களுக்கும் சினிமா ஸ்டார்கும் கிரிக்கேடேற்கும் ministerku எல்லாத்துக்கும் பொதுதானே பிறகு ஏன் இந்த பாரபட்சம் .. தான் ஏன் இறந்தோம் என்று தெரியாமலே அந்த 50 உயிர்களும் இறந்துள்ளது .. அங்கு இறந்தது அந்த 40per மட்டுமல்ல அவர்குலடைய ஆசை , கனவு , லட்சியம் அவர்களையே நம்பி இருந்த குடும்பங்களும்தான் .. உயிர் என்பது அனைவருக்கு ஒன்றுதான் ... நாளை இதே நிலைமை இந்தியாவில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும் , ஏற்கனவே நம்மை கொள்ள பல bacteriavum virusum சுதிகொண்டுள்ளது இது மட்டுமில்லாம இயற்கை அசம்பாவிதங்கள் வேறு இவர்கள் அனைவரிடமிருந்து தப்பித்தால் கொள்வதற்கு பெயர் தெரியாத பல தீவிரவாத கூடங்கள் இருக்கின்றன புதிதாக முளைக்கவும் செய்யும் ..
இப்படி நம்மை சுற்றி எங்கும் கொலை முயற்சி நடந்து கொண்டிருக்கும்போது நாம் ஏன் மற்றவர்கள் மீது பொறாமையோ கால்புனற்சியோ வளதுகொள்ள வேண்டும் …வாழ போகும் சிறு காலத்தை நிம்மதியாக வாழ்ந்து விட்டு செல்வோமே 


சொந்த வீடு


இந்த நாட்டுல இருக்க ஒவ்வொரு மிடில் கிளாஸ் மக்களோட குரஞ்சப்ச கனவு ஆசை எல்லாமே எப்படியாச்சு ஒரு சொந்த வீடு வாங்கணும்னுதான் ..... வேலைகிடச்சு தன்னோட சொந்த ஊற விட்டு வேலை கெடச்ச ஊர்ல வாடகைக்கு இருக்குறவங்க படர கஷ்டம் கொஞ்சநஞ்சமில்ல . செவத்துல ஒரு ஆனி அடிகரதுல இருந்து தண்ணி புடிக்க மோட்டார் போடுற வரைக்கும் எல்லாத்துக்கும் ஹவுஸ் ஓணர்கிட்ட கேடுதான் செய்யணும் .. ஹவுஸ் owner எப்ப சொன்னாலும் வீடு காலிபனிட்டு போகணும் .. என்னோட அப்பா இந்த ஊருக்கு 20 வருஷத்துக்கு முன்னாடி வந்தாரு அவர் dunlopla அச்குண்டண்ட வேல பாதரு .. இந்த இருபது வருஷத்துல நாங்க ஒம்போது வீடு மாறிட்டோம் .. எங்க அப்பாவும் எப்படியாவது ஒரு சொந்த வீடு வாங்கனும்னு ரொம்ப கஷ்டபட்டாறு ..அந்த டிமேல அவடில அர -கிரௌண்ட் 50000 ருபாய் அதை எப்படியாவது வாங்கனும்னு பல எடத்துல பணம் கேடு பார்த்தார் எங்கயும் கிடைகள , அவர் தனியார் கம்பெனில வேலை பதனால அவருக்கு எந்த பண்களையும் லோன் கிடைகள , அதனால எனக்கு அவர் ரொம்ப கஷ்டப்பட்டு அரசு வேலை வாங்கிதந்தார் . ஏழு வருஷத்துக்கு முன்னாடி அவர் இறந்துட்டார் .. அப்பா இறந்து 2வரஸ்ஹதுல எங்க அம்மாவும் இறந்துட்டாங்க .. இப்ப அவடில அர -கிரௌண்ட் 3 லட்சத்துக்கு மேல இருக்கும் .. என்னோட friend மூலமா ஒரு நல்ல எடம் இருக்குனு கேள்வி பட்டேன் அந்த எடத்துல இருந்து 10நிமிஸ்ஹ தொலைவுலையே பஸ் ஸ்டாண்ட் இருந்துச்சு ,தண்ணியும் நல்ல இருந்துச்சு எபடியசு இந்த எடாத வாங்கனும்னு முடிவு பண்ணுனேன் .. நானும் என் friendum இடதுகாரர்ட பேசி கடைசில ரெண்டே -முக்கள் லட்சத்துக்கு அந்த நிலத்தை ok பண்ணுனோம் .. என்னோட சேவிங்க்ஸ் , அப்பாவோட சேவிங்க்ஸ் , அம்மொவோட நகைன்னு எல்லாத்தையும் வச்சு இடாத வாங்கிட்டேன் ஆனா அதுல வீடு கட்ட என்கிட்ட சுத்தமா பணமில்ல ...


இபோதைக்கு சின்னதா ஒரு ஹால் ஒரு பெட்ரூம் ஒரு கிட்சேன் பாத்ரூம் கட்டணும்னு நெனச்சாகூட கொறஞ்சது 2அரை லட்சமாச்சு வேணும் . பாங்க்ல லோன் கேட்டதுக்கு ஒன்ற லட்சத்துக்கு மேல தரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க .. என்னோட மனைவியோட நகஎல்லாம் வச்சகூட 50000 ரூபாய்க்கு மேல கிடைக்க வாய்பில்ல .. Personal லோன் ஒரு 25000 ரூபாய்க்கு வந்கிகேல்லாம் மீதி பணத்துக்கு எங்கயாவது வட்டிகுதன் வாங்கணும் . . என்னோட friend இந்த மாதிரி கடன் வாங்கி வீடு கட்டுனான் கடைசில கடன கட்ட முடியாம வாங்குன வீட்டையே வித்து கடன எல்லாம் அடச்சான் , அதை நினைக்கும்போது கடன் வாங்கி வீடு கட்டலாம இல்லன ஒரு 5வருஸ்ஹம் கழிச்சு கட்டலாம்னு நெனச்சேன் ஆனா 5 வருஷத்துல செங்கல் சிமெண்ட் விலை எல்லாமே ஏறிடும் அபவீடு கட்னாலும் கடன் வாங்கிதான் கட்டனும் அதை இபவே செஞ்ச மாசம் மாசம் வாடகை பணமாவது மிஞ்சும்னு நெனச்சு சொந்த காரங்க friendunga கிட்ட கடன் வாங்கிக்கலாம் அப்பவும் பதளன கடைசியா கந்து வட்டிக்கு பணம் வாங்கிக்கலாம்னு முடிவு பண்ணினேன் .. முதலில் பாங்க்ல லோன் கேட்டு வந்த காசுல அஸ்திவாரம் போடு ஆரம்பிச்சோம் .. வீடு கட்ட ஆரம்பிச்ச கொஞ்சனலுக்கு பிறகுதான் நா நெனச்சத விட மேல 50000 எக்ஸ்ட்ரா செலவாகும்நு தெரிஞ்சுச்சு .. பேங்க் லோன்ல கெடச்ச amountla பில்லர் போட்டு sidela சுவர் எழுப்பி கீழ பாதி வீடு கட்டி முதுசொம் . மனைவியோட நகைய வச்சதுல கெடச்சத வச்சு மேல தளம் போட்டாச்சு .. நல்ல tilesa போடணும்ன விலை அதிகமாகும்னு சொன்னங்க வீடு கட்ட போறது ஒரு வாட்டி நல்லதே போட்டுடுவோம்னு முடிவு பண்ணி வீட்டுக்கு தேவையான எல்லாத்தையும் நானே பாத்து பாத்து வாங்குனேன் .. Personal லோன் , friends சொந்த கறங்கிட வாங்குன பணத்துல முக்காவாசி வீட்ட கட்டி முடுசுடேன் ..


இன்னும் 50000 இருந்ததன் வீடு fulla கட்டி முடிகமுடயும் . கந்துவட்டிக்கு பணம் வாங்குறத தவற எனக்கு வேறவழி இல்லை .. எங்க ஊர்ல இருந்தவர்ட வட்டிக்கு காசு வங்கி வீட்ட கதவுக்கு ஜன்னலுக்கு தேவையான மரம் வாங்குனோம் , வீட்டுக்கு sea blue கலர்ல பெயிண்ட் அடுசோம் .. இவ்ளோவ் கஷ்டப்பட்டு வீடு கட்டிட்டேன் ஆனா அதுக்கு க்ரஹா பிரவேஷம் பண்ண முடியலன்னு நெனச்சு கிட்டு இருக்கும்போதுதான் வாடக வீடுகரர்ட எங்க அப்பா குடுத்திருந்த 7000ரூபாய் advance பணத்த கேக்கலாம்னு முடிவு பண்ணி கேட்டான் அவரும் பெரிய மனசோட வீடு காலி பண்றதுக்கு முன்னாடியே குடுத்தாரு .நாளைக்கு என்னோட சொந்த வீட்டுக்கு க்ரஹா பிரவேஷம் .. இன்னிக்கு nightudhan நா வாடகை வீட்ல தூங்குற கடைசி night ஆனா தூங்குவனணு தெரியல .. எங்க அப்பா கண்ட கணவ நாளைக்கு நா நெனவாகபோறேன் .. ஒரு சின்ன சொந்த வீடு கட்னதுக்கு இவ்வளவு சீன் போடணுமான்னு மத்தவங்க யோசிக்கலாம் ஆனா ஒரு சொந்த வீட்டோட மதிப்பு வாடக வீட்ல இருகவங்களுகும் , இருந்தவங்களுகும்தன் தெரியும் ....................................................................................

“உன்னருகே நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்


“உன்னருகே நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் ...............................”
அன்னகி மதியானம் 12 மணிக்கு banglore பஸ் ஸ்டாப்ல செம climate, சாயந்திரம் 6 மணி மாதிரி இருட்டா இருந்துச்சு .. நா சென்னைக்கு போற பஸ்ல என்னோட சீட்ல bag வச்சுட்டு கீழ வந்து இந்த climateku ஒரு டி குடுச்சா சூப்பரா இருக்கும்னு கீழ இறங்குனேன் , ஆனா அது மழைக்கு பொறுக்காம கீழ இறங்கி ரெண்டு steps நடக்குங்காட்டி மழை வேகமா பெய்ய ஆரம்பித்தது ..
ஒரு டீக்கு ஆசைப்பட்டு fulla நனையனுமானு யோசிச்சு மறுபடியும் பஸ்லயே ஏறி உட்காந்தேன் .. மழை பெய்தாலே நம்ம எல்லார் மனசுக்குள்ளயும் ஒரு சின்ன சந்தோஷம் வந்திருதுல .. அதுவும் பஸ்ஸோட ஜன்னல் சீட்ல உட்காந்து வெளிய அந்த மழைய பாத்து ரசிச்சிகிட்டே நம்ம இளையராஜாவோட பாட்டுங்கள போன்ல போட்டு விட்டு கேட்க ஆரம்பிச்சோம்னா சும்மா அபிடியே சொர்க்கம் மாதிரி இருக்கும் ..


அந்த சந்தோஷமான தருனத்த கெடுகின்ற விதமா யாரோ போன் பண்ணாங்க போன எடுத்து பார்த்தா என்னோட மாமா attend பண்ண உடனே hellonu கூட சொல்லாம பஸ் ஸ்டோப்கு போய்டியா இல்லையான்னு ? கேட்டாரு .. இது அவர் இன்னிக்கி இதோட 5vadhu வாட்டி எனக்கு போன் பண்ணி கேட்குறாரு .. இப்ப பஸ்லதான் உட்காந்துட்டு இருக்கேனு சொன்னேன் .. அவர் இப்படி என்கிட்ட கேக்குறதுக்கு காரணம் நா சென்னைய விட்டு bangloreku வந்து 2 வருஷமாச்சு ஆனா இது வரைக்கும் ஒரு வாட்டி கூட சென்னைக்கு போகல அதான் ..
சரி மாமாவையும் அக்காவையும் கேட்டதா சொல்லு அப்றம் போன உடனே வந்துறாத ஒரு 10 நாள் இருந்துட்டு வா ஆபீஸ்ல நா சொல்லிகிறேனு சொன்னார் .. சரி மாமா நா சென்னைல இறங்குனப்புரம் போன் பண்றேன் என்று சொல்லிவிட்டு கட் செய்தேன் .. பஸ் புறப்பட்டது .. என்னதான் சொர்கமாவே இருந்தாலும் ஒரு அரை மணி நேரம் கழித்து அதுவும் போர் அடிக்க தொடங்கிவிடும் ..
அதேபோல் அந்த மழையும் போர் அடிக்க தொடங்கியது .. பக்கத்தில் உட்காந்திருன்தவன் ஏதோ ஹிந்தி பாட்டை கேட்டு கொண்டே வந்த வேலையே அவசரமாக தொடங்கினான் அதான் கொறட்டை விட்டு தூங்க தொடங்கினான் .. அவன பாக்கும்போதுதான் இந்தியா ஒரு சுதந்திர நாடுனே தோணுது .. ஒரு தமிழன் பேச்சு துணை இல்லாமல் பயணம் செய்வது என்பது கௌதம் மேனன் இங்கிலீஷ் கலக்காமல் தமிழ் படம் எடுப்பது போல ரொம்ப கஷ்டமான விஷயம் ..
கண்ணை மூடி தூங்கலாம்னு நெனச்சா என்னோட சக சிட்டிசன் கொறட்டைய இப்ப 4 வது கியர்ல ஓட்டிக்கிட்டு இருந்தார் .. போன்ல full sound வச்சேன் .. பேச்சு துணைக்கும் ஆளில்ல, தூங்கவும் முடியல வேற வலி என்னோட வாழ்க்கைல நா பாத்த, அனுபவித்த விஷயங்கள மறுபடியும் மனசுல ஓட விட வேண்டியதுதான் .. என்னோட பேரு பாலச்சந்தர் , ஆனா யார் என்கிட்ட பேர கேட்டாலும் சந்த்ருனுதான் சொல்லுவேன் .. மத்தவங்களும் என்ன அப்டிதான் கூப்பிடனும்னு ஆசை படுவேன் ..
அதுக்கு காரணம் நா பாலச்சந்தர்னு என்னோட பேர சொன்னவுடனே k.பாலச்சந்தராநு? கேட்டுட்டு மொக்கையா சிரிப்பாங்க .. என்னோட வாழ்க்கைல எதையாவது மாத்தணும்னு நெனச்சா நா முதல்ல என்னோட பேர்தான் மாத்துவேன் .. என்னோட friendungalaam என்ன பாலானு கூப்பிடுவாங்க இல்ல சந்த்ருனு கூப்பிடுவாங்க ஒரே ஒரு நாதாரிய தவிர அவன் என்னோட ஸ்கூல் friendu அந்த நாய் மட்டும் என்ன வெருப்பெதுரதுகாகவே பாலச்சந்தர்நுதன் இன்னிக்கு வரைக்கும் கூபிடுறான் .. அதுவும் வெளிய திற்றேகு , ஹோடேல்குலாம் செமைய டிரஸ் பண்ணி கூலிங் glasslaam போட்டு கிட்டு பொண்ணுங்க முன்னாடி போகும்போது என்ன பாலச்சந்தர்னு சத்தம் போட்டு கூப்டு கேவல படுத்துவான் .. இதனாலேயே இந்த பேரு மேல எனக்கு செம கடுப்பு ..
ஒரு சராசரி சென்னை மிடில் கிளாஸ் பையனோட வாழ்க்கைல இருக்கும் அதே ஆசை , கனவு , சந்தோஷம் , ஏமாற்றம்னு எல்லாம் என்னோட சின்ன வயசுலயும் நா அனுபவுசேன் .. இந்த உலகத்துல இருக்க எல்லாருக்கும் காதல் வந்திருக்கும்னு சொல்ல முடியாது ஆனா ஸ்கூல் படிக்கிற நாட்கள்ல எல்லாருக்குமே ஸ்கூல்லையோ இல்ல வீடு கிட்டயோ யார்மேலயாவது ஒரு விதமான ஈர்ப்பு வரும் , அவங்க நம்மள விட்டு பிரிஞ்சிட்டா அது ஈர்பாகவே போய்டும் , ஆனா ஒரு வேல நம்ம கூடவே இருந்தா அந்த ஈர்ப்பு காதலா மாறிடும் எனக்கு நடந்ததும் அதுதான் ..... ……………………………………………..
என்னோட அப்பா போலீஸ் ஆபீசர் என்னோட அம்மா ஸ்கூல் டீச்சர் .. நா 6 வது படிக்கும்போது போலீஸ் கோர்டேர்ஸ்ல இருந்து மாறி பகதுலையே வீடு கட்டி எங்க சொந்த வீட்டுக்கு வந்தோம் .. அன்னகி எங்க வீடோட க்ரஹா பிரவேஷம் அன்னக்கிதான் நா முதல் முறையா ப்ரியாவ பாத்தேன் .. அவ அப்போ 5 வது படிச்சிட்டு இருந்தா .. மாடியில சாப்பாடு போட்டோம் .. அவளும் அவளோட அப்பா அம்மா தங்கச்சி எல்லோரும் உட்காந்து சாப்டு கிட்டு இருந்தாங்க ..
நா யாருக்கும் தெரியாம 6 வது ஐஸ் கிரிம சாப்டு கிட்டு இருந்தேன் .. நா சாபிட்ரத பாத்துட்டு எனக்கும் ஐஸ் கிரீம் வேணும்னு அவளோட அம்மாகிட ப்ரியா கேட்டா .. வழக்கம்போல ஐஸ் கிரீம் சாப்டா சளி பிடிக்கும்னு சொல்லி அவல அவங்க அம்மா off பண்ணிடாங்க .. இதை பார்த்து கொண்டிருந்த என்னோட அம்மா ஒரு ஐஸ் கிரீம்தான சாபிடட்டும்னு சொல்லிடு ,நா ஏற்கனவே சேகரிச்சு வச்சிருந்த ஐஸ் சரியாமல இருந்து ஒன்ன புடுங்கி அவ கிட்ட குடுத்தாங்க .. அவளும் சந்தோஷமாக சாப்பிட தொடங்கினால் .. நான் அந்த ஒரு ஐஸ் கிரிமின் இழப்பை ஈடு கட்ட ஐஸ் கிரீம் டப்பாவிலிருந்து 2 ஐஸ் கிரீமை எடுத்து கொண்டேன் ..
அதுகபுரம் தினமும் நானும் அவளும் அந்த தெருவுல இருந்த மத்த பசங்களோட சேந்து iceboy, busciness,chess, carrom board, video gamesnu எல்லாம் விளையாடுவோம் .. தீபாவளி பொங்கல்னு எல்லா பண்டிகையும் சேர்ந்தே கொண்டாடுவோம் .. அது வரைக்கும் அவ மேல எனக்கு எந்த ஈர்ப்பும் இல்ல .. நாட்கள் நகர்ந்தன நா 9 தகு வந்தேன் இப்ப நறைய தமிழ் படங்கள் பார்த்து என்னோட general knowledge ரொம்பவே வளந்துடுச்சு .. என்கூட ஸ்சூல படிக்கிற பசங்கல்லாம் லவ் பண்ண ஆரம்பிச்சாங்க ..
சினிமா tv schoolnu எங்க பாத்தாலும் காதல் .. Classla எவன்லாம் லவ் பண்றானோ அவன எல்லாரும் கெத்தா பாத்தாங்க . என்னோட friendunga நீ யார லவ் பண்றனு என்ன கேட்பானுங்க .. லவ் பண்ணலேன்னு சொன்னா மதிக்க மாட்டாங்கனு நானும் லவ் பண்றேன்னு சொன்னேன் .. யார பண்றனு கேட்டானுங்க ? வீடு பக்கதுல ஒரு பொண்ணுன்னு சொன்னேன் ...
எனக்கும் mathskum ரொம்ப தூரம் . எந்த maths examlayum 10 மார்க்குக்கு மேல வாங்க மாட்டேன் .அப்படி தப்பி தவறி 10 மார்க்கு மேல வாங்குனான அதுக்கு காரணம் நிச்சயமா எனக்கு முன்னாடி உட்காந்து exam எழுதுற என்னோட friendaaladhan.ஒரு முறை maths சொல்லி குடுக்க என்னோட friendu ஏன் வீட்டுக்கு வந்திருந்தான் .அப்ப ப்ரியா என்னோட வீட்டுக்கு எங்க அம்மாகிட டம்ளர்ல தயிர் வாங்க வந்தா .நானும் என்னோட friendum படிச்சிட்டு இருந்தத பாத்துட்டு . கலகுற சந்துரு இந்த வாட்டி mathsla சென்டம்தான் போலன்னு நக்கலா சிரிசிகிடே சொன்னா .நீ மூடிட்டு போடின்னு சொல்லிடு ரூம் கதவ சாதிடேன் .. என்னோட friendu உன்னோட ஆளு செம அழகா இருக்காடா பேரேன்னணு கேட்டான் ?.. அவன் சொன்னதுக்கு இல்லன்னு சொன்னா யார லவ் பண்ற காட்டுன்னு சொல்லுவான் அதுக்கு இவளையே லவ் பண்றேன்னு நம்ப வச்சிடலாம்னு நெனச்சு ப்ரியான்னு சொன்னேன் ..
அடுத்தநாள் ஸ்கூலுக்கு போனா எல்லாரும் என்ன ப்ரியான்னு கூப்டு கிண்டல் பண்ண ஆரம்பிச்சுடானுங்க .. முதல கடுப்பா இருந்தாலும் அப்பறம் அது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு .. பொதுவா இந்த லவ் பண்றவங்கள கலாய்ச்சா கோபம் வர மாதிரி நடிபானுங்க ஆனா உண்மையா உள்ள அவனுங்களுக்கு செம சந்தோஷமா இருக்கும் .. அதுகபுரம் எனக்கு பிரியா மேல ஒரு ஈர்ப்பு வந்துச்சு ..


எங்க வீட்டு bed room ஜன்னல்ல இருந்து பாத்தா ப்ரியா வீடோட ஹால் தெரியும் .. அடிகடி அவங்க வீடு ஹால்ல அவ இருகாலானு பாப்பேன் .. நாளுக்கு நாள் அவ எனக்கு ரொம்ப அழகா தெரிஞ்சா .. முன்னாடி மாதிரி அவ கூட என்னால சகஜமா பேச முடியல .. அவல தூரத்துல இருந்து அவளுக்கு தெரியாமையே அவல பாத்து கிட்டே இருப்பேன் .. சாயந்திரம் எப்பவும் எங்க ரோட்ல shuttle cork விளையாடுவோம் .. அவதான் எப்பவும் எங்க வீட்டுக்கு வந்து விளையாட கூபிடுவா .. நானும் வேண்டா வெறுப்பா போவேன் .. ஆனா இப்பலாம் மதியத்துல இருந்தே விளையாடுறதுக்கு ரெடி ஆகி அவ எப்ப வந்து கூப்டுவானு wait பண்ணிகிட்டே இருப்பேன் ..
மழை காலம் வந்தாலே எனக்கு செம கடுப்பா இருக்கும் காரணம் ரோடு fulla தண்ணி தேங்கிகும் அவ கூட என்னால shuttle cork விளையாட முடியாது .. அவ என்ன சந்த்ருனு கூப்டும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் .. அவ கூட நறையநேரம் பேசுனம்னு தோணும் ஆனா பேச பயமா இருந்துச்சு .. அந்த timela வந்த படங்கள பாத்துட்டு நானும் அவளோட photova மறைச்சு வச்சு அப்ப அப்ப எடுத்து பாப்பேன் .. எப்பவும் ஒரு மாதிரி கனவுலேயே சுத்திக்கிட்டு இருந்தேன் அவ கூட பேசும்போது மட்டும்தான் இந்த உலகத்துக்கே வருவேன் .. அந்த ஒரு வருஷத்துல அவ மேல எனக்கிருந்த attraction எப்படி காதலா மாறுச்சுன்னு எனக்கே தெரியல ..
இந்த உலகத்துல யாராலையும் தனக்கு எந்த நொடில காதல் வந்துச்சுன்னு மட்டும் கரெக்டா சொல்லவே முடியாது .. இப்ப நா 10th ஏற்கனவே நா படிப்புல புலி இதுல காதல் வேற முதல் டெஸ்ட்ல எந்த சப்ஜெக்ட்ளையும் 10 மார்க்கு மேல வாங்க முடியல .. என்னோட அப்பாவையும் அம்மாவையும் ஸ்கூல கூப்டு இப்படியே விட்டா உங்க பையன் நிச்சயமா 10th பப்ளிக் exaamla பாஸ் பண்ண மாட்டான் .. பேசாம tc வாங்கிட்டு போயடுங்கனு மிரட்ட ஆரம்பிச்சாங்க .. பிரின்சிபால் ரூம்ல என்ன நிக்க வச்சு எல்லா டீசெரும், பிரின்சிபாலும் என் அப்பா அம்மா முன்னாலேயே திட்ட ஆரம்பிச்சாங்க, என்னோட அப்பாவும் அம்மாவும் அவமானத்துல தலைய குனுன்ஜாங்க .. அவங்கள அப்படி பாத்ததும் அங்கேயே அழ தொடங்கினேன் .. கடைசியாக அடுத்த டெஸ்டில் பாப்போம் எதுவும் improvement தெரியலேனா அபாரம் என்னால ஒன்னும் ஹெல்ப் பண்ண முடியாதுனு பிரின்சிபால் என்னோட parentskitta சொன்னார் ..
அதுகபுரம் எங்க வீட்ல என்ன வீட்ட விட்டு வெளியபோகவே விடல .. சாயந்திரம் shuttle corkum விளையாட விடல .. புக் கூடவே படுத்து புக் கூடவே எந்திரிப்பேன் .. ஆனா என்னால படிப்புல கவனம் செலுத்தவே முடியல .. எங்க வீடு Bed room ஜன்னல் வழியா அவ அவங்க வீட்டு ஹாலுக்கு வருவாளான்னு அங்கேயே பாத்துகிட்டு இருப்பேன் ..எப்பயாச்சு அவ என்னோட வீட்டுக்கு வருவா .. அந்த சில நிமிடங்கள் மட்டும் சந்தோஷமா இருக்கும் அப்பறம் மறுபடியும் புக் குள்ள தலைய விடனும் .. ஒரு வழியா அடுத்த டெஸ்ட்ல எல்லா subjectlayum 50 மார்க் கிட்ட வாங்குனேன் ஆனா அந்த mathsla மட்டும் fail aagiten .. இப்ப எங்க வீட்ல என்ன maths tutionla சேர்த்து விட்டாங்க .. ஸ்கூல் விட்டு வந்த உடனே tutionku போய்டுவேன் .. அவ கிட்ட பேச கூட எனக்கு சந்தர்பம் கிடைகள .. அடிகடி ஜன்னல் வழியா மட்டும் அவல பாப்பேன் .. அவ மேல இருந்த காதல் மட்டும் எனக்கு குறையவே இல்ல ..
10th result வரதுக்கு முன்னாடி நாள் எனக்கு செம பயம் .. நா fail ஆகிட்டா என் life wastaagidumdradha விட என்னோட parents என்ன சொல்லுவாங்க ?, அதோட ப்ரியாகுலாம் தெரிஞ்சா ரொம்ப கேவலமைடுமேனு பயம் மனசுக்குள்ள வந்து வந்து போயிடு இருந்துச்சு ..அடுத்த நாள் காலைல இருந்து bedlaye படுத்துகிட்டு எப்படியும் mathsla fail ஆகிடுவோம் நமக்கு இந்த படிபுலாம் ஒத்து வராது , பேசாம வேற ஊருக்கு போய் வேளைக்கு போலாம்னு முடிவு பண்ணி bedlaye படுத்திருந்தேன் ..
ஒரு வழியா result வந்துச்சு என்னோட அப்பா resulta பாத்துட்டு பாஸ் ஆகிடனு சொன்னபுரம்தன் எனக்கு உயிரே வந்துச்சு .. எந்த புண்ணியவான் என்னோட maths papera கரெக்ட் பண்ணானோ அவன் 100 வருஷம் நல்லா வாழணும்னு தோனுச்சு .. உடனே chocklate pocket வாங்கிட்டு பிரியா வீட்டுக்கு போனேன் .. அவளோட அப்பா tv பாது கிட்டு இருந்தாரு .. Uncle நா பாஸ் ஆகிடேனு சொன்னேன் .. Oh மோத கைய குடுன்னு சொல்லி கை குடுத்துட்டு எவ்ளோவ் percentagenu கேட்டாரு .. Percentage போன்ற அளவுகேல்லாம் எனக்கு maths தெரிஞ்சா நா ஏன் இப்படி இருக்கேனு தோனுச்சு .. இன்னும் percentage calculate பண்ணலன்னு சொன்னேன் .. ப்ரியாவோட அம்மா ஒரு கைல மாவோட வாப்பா பாஸ் பண்ணிட போலன்னு சொல்லிடு chocklate எடுத்துட்டு உள்ள பிரியவும் மானசாவும் இருக்காங்க போய் குடுபானு சொன்னாங்க .. நா உள்ள ரூம்குள்ள போறப்ப , ப்ரியாவோட அம்மா தெலுங்குல ப்ரியாவோட அப்பாகிட ஏதோ சொன்னாங்க .. ஆனா அவங்க சொன்ன modulationa வச்சு பாக்கும்போது அவன் பாஸ் ஆனதே பெரிய விஷயம் அவன்கிட்ட போய் பெர்செண்டகேலாம் கேட்குரிங்கனு சொன்ன மாதிரிதான் எனக்கு தோனுச்சு ..
ரொம்ப நாள் கலுச்சு ப்ரியாவ பேச போற சந்தோஷத்துல உள்ள போனேன் .உள்ள அவளும் அவ தங்கச்சியும் chess விளையாடிட்டு இருந்தாங்க .. அவ என்ன பாத்தவுடனே ஆச்சர்யம் கலந்த சிரிப்புடன் கலகுற சந்துரு பாஸ் பண்ணிடயானு சொல்லி கை குடுத்தா .. உண்மையிலேயே நா பாஸ் ஆனதுகாக அபதான் ரொம்ப சந்தோஷ பட்டேன் .. அடுத்து என்ன group எடுக்க போர்னு கேட்டா நா தெரியலன்னு சொன்னேன் .. நா 10th பாஸ் பன்னுவேன்னே எனக்கு நம்பிக்கை இல்ல இதுல groupa பதிலாம் யாரு யோசிச்சா .. அவளோட தங்கசிகும் சாக்லேட் குடுத்துட்டு .. கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டு எங்க வீட்டுக்கு வந்துட்டேன் ..
அடுத்தநாள் காலைல நா எங்க வீடு மாடில நின்னுகிட்டு இருந்தேன் .. அவ ஸ்கூல் uniformlaam போட்டு கிட்டு வெளிய வந்தா , heynu காத்திடு ஒழுஞ்சுகிடேன் .. அவ சுத்தி சுத்தி யார்னு பாத்துகிட்டு இருந்தா .. ரெண்டாவது வாடி கத்தும்போது பாத்துட்டு சிரிச்சா .. என்ன இப்பவே ஸ்கூல் ஆரம்பிசுடாங்கலானு கேட்டேன் .. ஆமா 10thku இப்பவே class ஆரம்பிச்சுடாங்க .. Ok late ஆகிடுச்சு bye nu சொல்லிடு கெளம்பிட்டா .. இப்ப 11th fullaa நா freeya இருந்தேன் ஆனா அவ 10th நாள எப்ப பாத்தாலும் படுசிகிடே இருந்த ..
எப்பயாவது பாத்தா சிறிபா நாலு வார்த்த பேசுவா அந்த நாலு வார்த்த பெசுரதுகாகவே அவ எப்ப வெளிய வருவான்னு wait பண்ணிகிட்டே இருந்து நானும் correcta வெளிய வருவேன் .. 11th la நா வேற schooluku போனேன் .. எல்லாரும் Computer science group எடுக்க சொன்னாங்க நானும் அதே எடுத்தேன் .. அங்க நறைய புது friendslaam கேடசாங்க , அவனுங்கதான் எனக்கு sigarette, beerunu பல நல்ல விஷயங்கள கத்து குடுத்தானுங்க .. Naanum அந்த நல்ல விஷயங்கள வீட்டுக்கு தெரியாம அப அப செஞ்சுகிட்டு இருந்தேன் .. 11thla என்ன சுத்தி நிறைய மாற்றங்கள் ஆனா அவ மேல இருந்த காதல் மட்டும் மாறல ..
அவளோட தங்கச்சி அடிகடி எங்க வீட்டுக்கு வருவா . . அவ priyaavuku opposite எப்ப பாத்தாலும் பேசிகிட்டே இருப்பா .. அவ தங்கசிகிட mostly அவளோட அக்காவ பத்திதான் கேட்டு கிட்டு இருப்பேன் .. அவ என்ன அண்ணன்னு கூப்டுவா அந்த ஒரு விஷயம்தான் ரொம்ப கடுப்பா இருக்கும் .. எத்தனையோ தடவ சொல்லி பாத்துட்டேன் என்னோட பேர solli கூப்டு இல்ல அசிங்கமா கேட்ட வார்த்தைல கூட கூப்டுக்கனு , ஆனா அவ என்ன அண்ணன்னு கூபுடரத மாத்திக்கவே இல்ல .. என்னோட பிரிண்டுங்க அவ அப்படி கூபிடரத பாத்து அவளுக்கு நீ அண்ணன்னா அப்ப அவளோட அக்காக்கும் நீ அண்ணன்தான மச்சி nu சொல்லி கடுபெதுவானுங்க .. அடுத்து நா 12th வந்தேன் முன்னாடி நா படுச்ச schoola விட இந்த school ரொம்ப strictunu நா 12th வந்தப்புறம்தான் தெரிஞ்சுச்சு ..
அந்த school principaldhan என்னோட முதல் எதிரி அவனுக்கு ஏன் மேல அவளா பாசம் , 12th முடிகருதுக்குள்ள என்னோட parentsa principal atleast ஒரு 10 வாடியாசு வர சொல்லி tc வாங்கிட்டு போயடுங்கனு சொல்லி இருப்பான் .. இத கேட்டு கேட்டு சனியன் புடிச்சவனுங்க tc குடுத்துட்டா வேற ஏதாவது வேலையாச்சு பாக்கலாம்னு கூட எனக்கு தோணும் .. 12thla நல்லா படிக்காத பசங்களுக்கு nightu 10 மணி வரைக்கும் coaching class வச்சு சாகடிபாங்க ..
கோபிநாத் இவன்தான் என்னோட இரண்டாம் எதிரி இவன்தான் என்னோட 12th maths teacher.. அவன் நின்னா என்னோட shoulder கிட்டகூட வரமாட்டான் .. நா heighta இருக்கேனு கடுப்போ என்னமோ தெரியல ஓயாம என்ன அடுசுகிடே இருப்பான் .. அவன் boardla sum போடும்போது அவனுக்கு correcta அன்ச்வேர் வரலேன கூட சனியன் புடிச்சவன் என்னைய வந்து அடிப்பான் .. அவன் chinna vayasula kaththu கிட்ட foot ball, volley ballalam என்னோட உடம்புலதான் விளையாடுவான் ..
ஒவ்வொரு test முடுஞ்சு maths paper குடுகும்போதும் என்ன design designa அடிப்பான் எங்க class பசங்களுக்கு செம entertainmenta இருக்கும் .. அவன் எவ்ளோவ் அதுசாலும் நா மத்தவங்க மாதிரி அழ மாட்டேன் அடிவாங்கிட்டு அமைதியா நிப்பேன் அதனாலேயே நா classla கேத்தைடேன் .. ஆனா அந்த கெத்த maintain பண்றதுக்கு நா ரொம்ப கஷ்ட பட்டு இருக்கேன் .. கடைசி revision test exam முடுஞ்சு maths papera எடுத்துகிட்டு கோபிநாத் வந்தான் .. வந்த உடனே என்னோட பேரையும் என்ன மாதிரியே மார்க் வாங்குன மத்த பசங்களையும் கூப்டு class முன்னாடி நிக்க வச்சான் ..
முதல் papere என்னோடதுதான் 3 மார்கோ 4 மார்கோ வாங்குனேன்னு நினைக்கிறன் என்னோட papera கிளுச்சு என்னோட மூஞ்சில இருந்ஜான் .. என்னோட tie ya இறுக்கி புடுச்சான் நா போட்டு இருந்த கண்ணாடிய அவனே கழட்டி table மேல வச்சுட்டு அடிக்க ஆரம்பிச்சோம் அவனுக்கு என்னோட கன்னம் எட்டல அதனால ஒரு கைல என்னோட tie ya புதுசு jump panni jump panni அடுசான் .. இத பாது கிட்டு இருந்த பசங்களுக்கு சிரிப்பு வந்து சத்தமா சிரிக்க ஆரம்பிச்சுடாங்க .இதனால அவன் ரொம்ப கடுப்பாகி ரெண்டு கையாளும் மாறி மாறி கண்டபடி அடிக்க ஆரம்பிச்சான், tablela இருந்த ஸ்டீல் scale எடுத்து கண்ணா பின்னான்னு அடிச்சான் classla இருந்த பசங்க எல்லாருமே பயத்துல அப்படியா silenta உட்காந்திருந்தாங்க அவன் ஒரு 5nimisham தொடர்ந்து அடிச்சான் அபாரம் அடுத்த பையன வர சொன்னான் . .
என்னால வலி தாங்க முடியல , புடுச்சு இழுத்ததுல tie ye பிஞ்சுருசு , என் வாழ்க்கைல அந்த மாதிரி அடி நா யார்கிட்டையும் வாங்குனதிள்ள .. பசங்க எல்லாம் என்ன பரிதாபமா பாக்குறத பாதபுரம் எனக்கு அழுகை வந்திருச்சு .. தரையை பாத்துகிட்டே கண்ணா தொடசுகிட்டு அழாம இருக்க ட்ரை பண்ணேன் ஆனா control பண்ண முடியாம அழுதுட்டேன் .. 12th முடுஞ்சபுரம் அவன கொலை பண்ண பல திட்டங்கள போட்டு வச்சிருந்தேன் ..
ஆனா அவனோட அதிஷ்டம் அவன் என்னோட கண்ணுல படவே இல்ல .. விசாரிச்சதுல அவன் வேற ஊருக்கு போய்டதா கேள்வி பட்டேன் ..12th maths public examla எனக்கு முன்னாடி உட்காந்திருன்தவன் எனக்கு 40 choosekum answer சொன்னான் .. ஏதோ அவன் புண்ணியத்துலயும் gopinaathoda அடிக்கு பயந்து நா கொஞ்சம் படுச்சனாளையும் எப்படியும் பாஸ் பண்ணிடுவேன்னு தெயர்யமா இருந்தேன் ..
ரிசல்ட் வரதுக்கு ஒரு நாளைக்கு முன்னாடியே chocklatelaam வாங்கி வச்சுட்டேன் .. ஆனா அன்னகி முன்னாடி நாள் nightu அவ familyoda hyderabadku ஏதோ கல்யாணத்துக்கு போய்டா .. அடுத்தநாள் ரிசல்ட் வந்துச்சு பாஸ் ஆகிட்டேன் . . Friendungalukellam சொச்க்ளடே குடுத்தேன் ஆனா அவ ஊர்ல இல்லாதனால நா பாஸ் ஆனது எனக்கு 10thla பாஸ் ஆனா அளவுக்கு சந்தோஷமாவே இல்ல .. அப்பறம் கொஞ்ச நாள் கலுச்சு அவ வந்தா , பாக்கும் போதெல்லாம் படிப்ப பதியே பேசுவா .. எனக்கு அவ பேசுறது கொஞ்சம் கூட புடிகலன்னு சொல்றதவிட புரியலனுதான் சொல்லணும் இருந்தாலும் சிரிச்சே சமாளிப்பேன் .. நாளுக்கு நாள் ரொம்ப அழகா தெரிஞ்சா , அதே மாதிரி நாளுக்கு நாள் அவ என்கூட பேசுறதும் ரொம்ப கம்மியாச்சு .. 12th la நறைய மார்க் எடுக்கணும்னு எப்ப பாத்தாலும் படிசிகிட்டே இருந்தா ..


அப்ப engineering ரொம்ப populara இருந்த time யார கேட்டாலும் engineeringdhaan படிகிறேனு சொல்லுவாங்க .. எங்க வீட்லயும் என்ன engineering படிக்க சொன்னாங்க .. எதுல வேணும்னாலும் சேர்த்து விடுங்க படிக்க போறவன்தான் அதை பதிலாம் கவலை படுவான் , நா எதுக்கு அதெல்லாம் யோசிசுகிட்டுன்னு அவங்க இஷ்டத்துகே விட்டுட்டேன் .மார்க் கம்மியா இருந்தனால councellingla கிடைகள ஒன்ற லட்சம் donation அழுது management quotaa la mechanical engineering செந்தேன் .. வீட்ல அடம்பிடுச்சு ஒரு cell phone வாங்குனேன் ..
நா போன் வாங்கிடேனு அவளுக்கு காடுரதுகாக மாடிக்கு வந்து சத்தமா பாட்டு கேட்பேன் இல்லாட்டி customer careku போன் பண்ணி பேசுவேன் .. ஒரு வாடி நா phone பேசிக்கிட்டு இருக்கும்போது பாத்து சிரிச்சா .. நா உடனே phone கட் பண்ணிட்டு சிரிச்சேன் .. கலகுற சந்துரு phonelaam வாங்கிட போலன்னு சொன்னா .. ஆமான்னு சிரிச்சுகிட்டே சொன்னேன் .. என்ன model எவ்ளோவ்னு கேட்டா .. நானும் கீழ போய் அவ கிட்ட phone குடுத்தேன் அவளும் ஆர்வமா வாங்கி பாத்துட்டு என்னோட phone no. வாங்கிகிட்டா ..
இதனை வருஷமாதான் maths படிக்கச் சொல்லி சாகடுசானுங்கனா இப்ப என்கிநீரிங்க்ளையும் maths படிக்க சொன்னானுங்க .. மோத வருஷத்துல 4 subject arrier அதுல ரெண்டு subject maths..
அவ 12thla நறைய மார்க் வாங்கி ஒரு பெரிய collegela computer engineering சேந்தா.. இது வரைக்கும் school uniformla பாத்ததுக்கும் இப்ப collega போனப்புறம் அவ இன்னும் ரொம்ப அழகா இருந்தா .. அவ கூட pesuradhu ரொம்ப கம்மி ஆகிடுச்சு பாக்கும்போது siripaa apparam அவளோட வேலைய பாத்துட்டு போய்டுவா .. Naa என்னோட வீட்ல படிகிறேனு சொல்லிடு ஜன்னல் வழியா அவல உக்காந்து பாத்து கிட்டே இருப்பேன் .. தான் லவ் பண்ற பொண்ண தூரத்துல இருந்து பாத்து ரசிக்கிற சுகமே தனிதாங்க அது லவ் பன்றவனுகுதான் தெரியும் ..
அவ phone வாங்கிட்டான்குற விஷயமே அவளோட தங்கச்சி மூலமாதான் எனக்கு தெரியும் .. அவ கிட்ட எப்படி no. வாங்குறதுன்னு யோசிச்சேன் .. ஒரு நாள் ava மாடில head set மாடி பாட்டு கேட்டு கிட்டு இருந்தா .. நானும் பாட்டு கேட்கற மாதிரி எங்க வீட்டு மாடிக்கு போனேன் .. என்ன பாத்து சிரிச்சா .. போன்லாம் வாங்கிட போலன்னு கேட்டேன் .. ஆமான்னு சொல்லிடு என்னோட no.ku hi nu ஒரு msg அமுச்சா .. அந்த msg save பண்ணி வச்சுட்டு அப்ப அப்ப பாத்து சந்தோஷ பட்டுகுவேன் ..
ரெண்டாவது வருஷம் முடிகுங்காடி 4 arriera இருந்தது 9 arriera மாறிடுச்சு அதுல 4 சுப்ஜெக்ட் maths.. எந்த engineer அவ வீட்ட design பண்ணானோ தெரியல அந்த நல்லவனுக்குதான் நா thanks சொல்லணும் அவன் புன்னியதாலதான் நா dailyum எங்க வீட்டு ஜன்னல் வழியா அவல பாக்க முடியுது .. ஒரு நாள் படிப்புலாம் எப்படி போகுதுன்னு கேட்டா ?.. பரவா இல்ல ஏதோ போகுதுன்னு சொன்னேன் .. அவ maths3 ரொம்ப கஷ்டமா இருக்குனு சொன்னா .. oh maths2 va விட maths3 easy யாச்சேன்னு சொன்னேன் .. ஆனா நா maths2 maths3 ரெண்டுதளையும் fail அது வேற விஷயம் ..
தெரியில எனக்கு maths3dhan கஷ்டமா இருக்குனு சொன்னா .. நல்லவேள அவ என்ன சொல்லிகுடுக்க சொல்லிடுவாலோனு பயந்து silentaa இருந்துட்டேன் .. அவ first year all clear பண்ணிட்டா எங்க வீட்ல இருந்தவங்க பேசாம அவளை வேனா maths சொல்லிகுடுக்க சொள்ளட்டுமானு சொன்னாங்க .. அதெல்லாம் ஒன்னும் வேணாம் என்ன அசிங்க படுத்தாம இருங்கன்னு சொல்லிடு வழக்கம்போல bedroomku போய் ஜன்னல் pakkathula உக்காந்து அவ வீட்ட பாக்க ஆரம்பிச்சேன் .. Dailyum forward message அனுப்புவேன் ஆனா அவகிட்ட இருந்து எப்பயாச்சு ஒன்னு ரெண்டு forward message வரும் அந்த msgellaam store பண்ணி வச்சு அடிகடி பாதுகுவேன் ..
எங்க வீட்டுக்கு பின்னாடி இருந்த landla புதுசா வீடு கட்டி ஒரு குடும்பம் குடி வந்தாங்க .. அன்னகி மாடில நின்னுகிட்டு இருக்கும்போது .. அந்த புது வீட்டு மாடில நின்னு ஒருத்தன் தம் பிடிச்சிட்டு இருந்தான் .. ரெண்டு மூணு நாள் கழுச்சு நா பஸ் stopla ஒரு டி கடைல மறஞ்சு நின்னு தம் அடிச்சிட்டு இருந்தேன் .. அன்னகி மாடில நின்னு தம் அடிச்சிட்டு இருந்தவனும் தம்ம வாங்கிகிட்டு என்ன பாத்து சிரிச்சிட்டு தம் அடிக்க ஆரம்பிச்சான் ..
தம் அடிக்கிற விஷயம் வீட்டுக்கு தெரியாதான்னு கேட்டான் .. ஆமா உங்க வீட்டுக்கு தெரியுமான்னு கேட்டேன் தெரியாதுன்னு சொன்னான் .. எப்பவுமே தம்மடிக்கிற ரெண்டு பெரும் சரி குடிகாரனுங்க ரெண்டு பெரும் சரி ரொம்ப சீக்கிரம் friend ஆகிடுவாங்க .. நாங்களும் அப்படிதான் .. அவன் பேரு மோகன் computer engineering போன வருஷம்தான் முடுச்சதா சொன்னான் .. Hcl la place ஆகிட்டேன் call letterkaaga wait பண்ணிட்டு இருக்கறதா சொன்னான் .. நானும் என்ன பத்தி சொன்னேன் .. அதுகபுரம் dailyum எங்க அப்பா அம்மா office போனப்புறம் திருட்டு தம் அடிக்க எங்க வீட்டுக்கு வருவான் .. நானும் எனக்கு ஒரு தம் freeya வாங்கி தரான்னு நெனச்சு நானும் அவன வீடுக்குள்ள விட்டேன் ..
பாக்குறதுக்கு பண கார வீடு பையன் மாதிரி வெள்ளையா மீசை இல்லாம கொஞ்சம் அழகாவே இருப்பான் .. ஒரு வேல ப்ரியாவ அவன் கரெக்ட் பண்ணிடுவானொன்னு கூட தோணும் .. ஆனா இவன் அவல கண்டுக்கவே இல்ல .. என்கூட அவ பேசிகிட்டு இருக்கறத பாதா கூட அவன் கண்டுக்காம அவன் வேலைய பாத்து போய்டே இருப்பான் .. அப்பறம் கொஞ்ச நாள் கழிச்சுதான் சொன்னான் அவனோட collegela படிச்ச ஒரு பொண்ண லவ் பன்றதாகவும் அவளும் இவன லவ் பன்றதாவும் சொன்னான் .. அப்பாட எனக்கு பிரச்சனை இல்லன்னு நா சந்தோஷமா இருந்தேன் .. ஒரு நாள் என்னோட friendu birthday treatkaaga பார்க்கு போனோம் அப்ப மோகன் அங்க தண்ணி அடுச்சுட்டு வண்டிய எடுக்க முடியாம விழுந்து கடந்தான் .. நானும் என்னோட பிரிண்டுகளும் சேந்து என்னோட வீட்டுக்கு மோகன கொண்டு பொய் வச்சிருந்தோம் . .
தெளிஞ்சபுரம் என்ன ஆச்சு ஓவரா அடுசிடிங்க போலன்னு கேட்டேன் .. அவன் லவ் பண்ண பொண்ணுக்கு கல்யானமைடுசுனு solli அழுதான் .. கொஞ்ச நாளுகபுரம் normal ஆனான் ஆனா அவனால அவன் லவ் பண்ண பொண்ண மறக்க முடியல dailyum வந்து ஒரு தம் அடிச்சிட்டு என்கிட்ட பொலம்பிட்டு போவான் ..
ஒரு நாள் நானும் அவனும் எங்க வீடுகிட்ட நின்னு தம் அடிக்க போலாமான்னு பேசிகிட்டு இருந்தோம் .. அப்ப ப்ரியா எங்கம்மாகிட அவங்க வீட்டு சாவிய வாங்க வந்தா .. என்கிட்டே ஏதோ புரியாத மொழில ஏதோ software இருக்கானு கேட்டா .. அவ என்ன கேட்டானே எனக்கு புரியல .. இல்லன்னு சொன்னேன் .. மோகன் என்கிட்ட இருக்கு நா தரேன்னு சொன்னான் .. Oh thanksnu சொன்னா .. Computer engineering படிகிரியானு கேட்டான் .. அவளும் ஆமான்னு சொன்னா .. நானும் Computer engineeringதான் last year தான் முடுச்செனு சொல்லிட்டு நிறுத்தாம, Hcl ல place ஆனதையும் சொன்னான் ..
நா அவங்க ரெண்டு பெரும் பேசிக்கிட்டு இருக்கும்போது மாறி மாறி அவங்க வாயவே பாத்துகிட்டு இருந்தேன் .. அவ எவ்ளோவ் cgp நு கேட்டா? இவன் 83nu சொன்னான் .. அவ நா இப்ப வரைக்கும் 85 வச்சிருக்கேன் ஆனா கோரஞ்சிடும்னு நேனைகிறேன்னு சொன்னா .. என்னோட cgp ya கேட்டுரவாங்கலோனு பயந்து கிட்டு இருந்தேன், எனக்கு அதா எப்டி calculate பன்றதுனே தெரியாது .. எனக்கு நிறைய doubt இருக்குனு சொல்லிடு ஏதோ linked லிஸ்ட், heap sortnu என்னனமோ பேச ஆரம்பிச்சாங்க .. நா அங்க எதுக்கு நிக்கிறேனே தெரியாம நின்னுகிட்டு இருந்தேன் .. அவன் கடைசியா அப்பறமா பாக்கலாம்டநு சொல்லிட்டு அவ கூடவே அவ வீட்டுக்கு போனான் ..
அவனாச்சு பரவா இல்ல bye nu சொல்லிடு போனான் ஆனா இவ என்ன ஒரு மனுஷனா கூட மதிகள .. அதுக்கப்புறம் அவன் எங்க வீட்டுக்கு தம் அடிக்கவே வரல .. ஒரு நாள் மாடில இருந்து பாக்கும்போது அவளும் அவனும் அவ வீட்டுகிட்ட நின்னு பேசிட்டு இருந்தாங்க .. இப்பதான் அவனுக்கு லவ் failure ஆச்சு அவன் எப்படியும் அவல லவ் பண்ண மாட்டான்னு கொஞ்சம் நம்பிக்கை இருந்துச்சு .. இன்னொரு நாள் அவ அவன்கூட bikela எங்கயோ போனா .. இதுவரைக்கும் நா அவள மத்த பசங்க கூட பேசியே பாத்ததில்ல ஆனா இப்ப ...
அப்ப கூட மனசுல ஒரு ஓரத்துல அவங்க ரெண்டு பெரும் friendsaadhaan இருப்பாங்கனு நெனச்சு மனச தேத்திகிட்டேன் .. ஆனா அன்னகி ஒரு நாள் அவளோட தங்கச்சி மூலமாதான் தெருஞ்சுகிட்டேன் அவங்க ரெண்டு பேரும் லவ் பன்றான்கனும் அவங்க ரெண்டு பேரு வீட்லயும் சம்மதுசுடாங்க ஆனா கல்யாணம் மட்டும் இன்னும் ரெண்டு வருஷம் கலுச்சு வச்சுக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கறதா சொன்னா ..
நா 7 வருஷமா நெனவாகும்னு நெனச்சு நா மனசுல கட்டி வச்சிருந்த கனவு அந்த ஒரு secondla கனவாவே போய்டுச்சு .. எனக்கு அழறதுக்கு சின்ன வயசுல இருந்தே பிடிக்காது .. என்னோட வாழ்க்கைல எப்பவுமே நா second option வச்சிருப்பேன் .. அவ என்ன லவ் பண்ணலேனா தண்ணி அடுச்சு தம் அடிச்சுட்டு அவளுக்காகவே காத்துகிட்டு இருந்து என்னோட life waste பண்ற அளவுக்கு நா த்யாகியும் இல்ல காதலுக்காக வால்கயவே விடற அளவுக்கு என்னோட காதலும் worthilla.. Manasa thethikitu yennoda velaya paathukitu irundhen..
அவ வீட்ல கல்யானதுகாக இப்பவே வீட்டுல modificationlaam பண்ண ஆரம்பிச்சாங்க .. அவனும் அவளும் அடிகடி வண்டியில வெளிய போக ஆரம்பிச்சாங்க .. ஒரு நாள் நா வெளிய போகும்போது அவங்க ரெண்டு பெரும் மாடில நின்னு பேசிட்டு இருந்தாங்க .. என்ன பாத்ததும் ரெண்டு பெரும் சிரிசிகிட்டே கை ஆடுனாங்க நானும் பதிலுக்கு கஷ்டப்பட்டு சிரிச்சேன் .. இதனை வருஷமா அவ கூட இருந்தோம் ஆனா அவளுக்கு என் மேல லவ் வரல ஆனா அவன் இங்க வந்து ஒரு வருஷம்கூட ஆகல ஆனா அவன அவ லவ் பண்ணிடாலேன்னு யோசிச்சேன் ..
பய பாக்குறதுக்கு வேற ஹிந்தி பட hero மாதிரி இருக்கான் , IT கம்பெனில வேலை பயனும் நல்லவன் நல்ல குடும்பம் வேற எந்த போன்னுகுதான் பிடிக்காம போகும்னு தோனுச்சு .. என்ன விட எல்லா விதத்துலயும் அவன் betternu தோனுச்சு ..
ரெண்டு பெரும் தெலுங்கு கம்முநிட்டிதான் அதனால அவங்க ரெண்டு பேரோட வீட்லயும் பிரச்சனை இல்ல .. என்னதான் நா மனச தேதிகிட்டாலும் அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா போறத பாக்கும்போது தாங்க முடியல .. எப்படியாச்சு arriera ச்லேஅர் பண்ணிட்டு வேற ஊருக்கு வேளைக்கு போய்டனும்னு முடிவு பண்ணேன் ..
காதலிச்சவ கல்யாணத்துக்கு போய் வாழ்த்திட்டு அர்ச்சதை போட்டுட்டு வாழ்த்திட்டு வர அளவுக்கு நா ஒன்னும் விக்ரமன் படத்துல வர ஹீரோ அளவுக்கு நல்லவன் இல்ல .. எல்லா arrierayum clear பண்றதுக்கு ஒரு வருஷமாச்சு .. என்னோட மாமாகிட்ட ஏற்கனவே என்னோட வேலைய பத்தி கேட்டு இருந்தேன் .. Arrier clear பண்ணிட்டு வா வாங்கிதரேன்னு சொன்னாரு .. Clear பண்ண உடனே bangloreku கெளம்புனேன் அவரும் அவருக்கு தெரிஞ்ச ஒரு companyla வேலை வாங்கி குடுத்தாரு .. Banglore எனக்கு வேற வாழ்கைய கத்து கொடுத்துச்சு .. நாட்கள் நகர நகர இந்த உலகத்துல எவ்ளோவ் பெரிய கஷ்டமும் சாதாரணமா மாறிடும் .. ஒரு வருஷத்துல அவல சுத்தமா மறந்துட்டேன் இருந்தாலும் "கலக்குற சந்துரு" விளம்பரம் பாகுரபலாம் அவ ஞாபகம்மட்டும் வரும் ..
அப சேரிச தெருஞ்சது இப்ப நெனச்சா செம காமெடியா இருக்கு .. இது தான் என்னோட காதல் கதைன்னு சொன்னா எல்லாரும் சிரிகிறாங்க..ஒரு பய்யன் ஒரு பொண்ண லவ் பன்னுவாறான் ஆனா அந்த பொண்ணு அவனோட frienda லவ் பண்ணுவாளாம் போய் வேலைய பாருடா , இதெல்லாம் காதல் கதைன்னு வெளிய சொல்லிராதநு சொல்லி சிரிப்பாங்க, இந்த கதையதான் பல வருஷங்களா தமிழ் சினிமால எடுத்துகிட்டு இருக்காங்க .. அவங்க அப்படி சொல்றாங்கன்றதுகாக நா வேற ஒருத்தரோட காதல் கதையவா சொல்ல முடியும்..
பஸ் கோயம்பேடு பஸ் stopkulla வந்துச்சு .. இறங்கி 70A பஸ் புடுச்சு அம்பத்தூர் வந்து செந்தேன் .. ரெண்டு வருஷத்துல எதுவுமே மாரல அந்த தெரு .. மேடு பள்ளமான ரோடு .. டாஸ்மாக் கடைல சண்டை எல்லாம் அப்படியே இருந்துச்சு .. வீடுக்குள்ள போன உடனே என்னோட அப்பா அம்மாக்கு ரொம்ப சந்தோஷம் ..
Baga என்னோட bed roomla வச்சுட்டு , அந்த ஜன்னல பாத்தேன் அந்த ஜன்னலும் அது பக்கத்துல இருந்த டேபிள் chairum அதே இடத்துல இருந்துச்சு .. பல நாட்கள் அந்த chairla உட்காந்து அவ வீட்டையே பாத்து கிட்டு இருந்தத நினைக்கும்போது சிரிப்பா இருக்கு ..


அந்த chairla உட்காந்து அதே மாதிரி அவ வீட்ட பாத்தேன் .. அவளோட அப்பா எப்பவும்போல உட்காந்து tv பாத்து கிட்டு இருந்தாரு ..
ஜில்லுனு ஈர காத்து முகம் முழுக்க வீசுச்சு, காத்துல எங்க வீட்டு தென்ன மரம் அசஞ்சுகிடு இருந்துச்சு அந்த தென்ன மரத்தையே பாத்து கிட்டு இருந்தேன் .. "பொதுவா ஒரு பொண்ணு அழகா இருந்தா நாம impressaagiduvom அவ மட்டும் நம்ம பக்கத்து வீடா இருந்தா உடனே காதலிக்க ஆரம்பிசுடுவோம்னு " கொஞ்ச நாளுக்கு முன்னாடி hari krishnanu ஒருவர் எழுதுன கதைல வரும் .. அது ரொம்ப correctunu தோனுச்சு ..
தமிழ் நாட்டுல இருக்க ஒவ்வொரு தெருவுலயும் இந்த மாதிரி சொல்லபடாத அழகான காதல் கதைகள் இன்னமும் வாழ்ந்துகிடுதான் இருக்கு .. என்னதான் என்னோட காதல் தோல்வில முடுன்ஜாலும் அத ஒவ்வொரு வாட்டி நெனச்சு பாக்கும்போதும் மனசு லேசாகிடுது .... வைரமுத்து சொன்னது போல் "உன்னருகே நானிருந்த ஒவ்வொரு மணி துளிகளும் மரண படுக்கையிலும் மறவாது கண்மணியே ... ............"

இது ஒரு பொன்மாலை பொழுது



அன்று மாலை பூந்தமல்லி பஸ் ஸ்டாபில் 65B பஸ் வந்து நின்றது .. நாலாபுரதிலிருந்தும் மக்கள் சீட்டை பிடிபதுற்கு ஓடி வந்து கொண்டிருந்தனர் .. பஸ்ஸில் இருந்தவர்களை இறங்க விடாமல் அவசரம் அவசரமாக மக்கள் எறி சீட்டை பிடித்து கொண்டிருந்தனர் .. சிலர் பைகலயும் கர்சீபுகலயும் ஜன்னல் வழியாக போட்டு சீட்டை பிடிதுகொண்டிருந்தனர் .. இதை பக்கத்து பஸில் ஜன்னல் சீட்டில் உட்காந்து பார்த்து கொண்டிருந்த எனக்கு என் அம்மாவிடமிருந்து ஃபோன் வந்தது எடுதவுடன் என்ன ஆச்சு நு கேட்டாங்க ? ஆப்டிடியூட் டெஸ்ட் பாஸ் பண்ணிட்டேன் நாளைக்கு காலைலதான் HR இன்டர்வியூ நு சொன்னேன் .. சரி இப்ப எங்க இருகனு கேட்டாங்க .? . இப்பதான் பூந்தமல்லிக்கே வந்தேன் இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்னு சொன்னேன் . சரி வா நு சொல்லிட்டு போன வச்சாங்க.... ஒரு வயதானவர் கை கால்கள் நடுங்க பஸ்ஸில் ஏறி அனைவரிடமும் பிச்சை கேட்டு கொண்டிருந்தார் .. சிலர் ஒரு ரூபாய்யோ ரெண்டு ரூபாய்யோ சில்லரயா தந்தனர் ,சிலர் இல்லை என்று தலை ஆடினார் , சிலர் ஜன்னல் வழியாக வெளியே பார்த்து கொண்டே இவரை பார்க்காததுபோல் நடிதனர் .. என்னிடம் வந்து கேட்டார் இல்லை என்று தலை ஆடினேன் .. எனக்கு பின்னாடி சீட்ல இருந்த இருவரிடம் போயி கேட்டார் ஒருவர் 2 ரூபாய் தந்தார் .,ஜன்னல் பக்கத்தில் உட்காந்திருந்தவர் 20ரூபாய் எடுத்து குடுத்தார் .. அதை வாங்கிய அந்த வயதானவர் தன்னுடய இரு கைகளாலும் கடவுளை பார்த்து கும்பிடுபவற்போல் அவரை நடுங்கிய கைகளுடன் வணங்கிவிட்டு பஸ்ஸில் இருந்து இறங்கி கீழே கொஞ்ச நேரம் உட்காந்து இருந்து விட்டு அடுத்த பஸ்ஸில் ஏறினார் ...


பின் சீட்டில் இருந்தவர் ஜன்னல் சீட்டில் உட்கார்ந்து இருந்தவரிடம் என்ன ஸார் 20 ரூபாய் குடுத்துடிங்க ? பூந்தமல்லிள இருக்க எல்லா பிச்ச காரங்களுக்கு இப்படி பாவ பட்டு 20 ரூபாய் குடுத்தா அப்பறம் பஸ்கு டிக்கெட் எடுக்க காசு இல்லாம நாமளும் அவங்க கூட சேர்ந்து பிச்சத்தான் எடுக்கணும் என்றார் .. அதற்கு அந்த ஜன்னல் சீட்டில் உட்கார்ந்திருந்தவர் அப்படி இல்ல ஸார் நா எல்லாருக்கும் 20ரூபாய்ய எடுத்து குடுக்க மாட்டேன் .. அந்த வயசானவர் குடும்பத்தோட என்னோட நண்பர் வீட்லத்தான் வாடகைக்கு இருந்தார் அவரோட பையன் ஒரு கம்பெனில வேல செஞ்சுட்டு இருந்தான் இவர் ரிடயர் ஆகி வீட்ல இருந்தார் .. ரெண்டு வருஷதுக்கு முன்னாடி நடந்த ரயில் குண்டு வெடிப்புல அவரோட மனைவி ஒரே பையன் ரெண்டு பேருமே இறந்துடாங்க .. அதுக்கபுரம் அவர் பைத்யமாய்ட்டாருனு எல்லாரும் சொன்னாங்க .. பாவம் கடைசில இப்ப பிச்ச எடுத்துட்டு இருக்காரு .. அவருக்கும் என்னோட அப்பா வயசுதான் இருக்கும் .. Naalaiku இதே நிலமை என்னோட அப்பாவுக்கும் வரலாம் ஆப என்ன மாதிரி யாராவது ஒருத்தர் அட்லீஸ்ட் அவருக்கு டீ குடிக்கவாச்சு காசு குடுபாங்கள அதான் .. எல்லாம் ஒரு சின்ன சுயநலம்தான் ஸார் endraar .... Oh அப்படியா சார் என்று பக்கத்தில் இருந்தவர் அந்த வயதானவரை ஒரு முறை பரிதாபமாக எட்டி பார்த்தார் ... நானும் அந்த வயதானவரை ஒரு முறை திரும்பி பார்த்தேன் , ச்ச நாம கூட ஒரு 10ரூபாய் குடுதிருக்கலாம்னு நெனச்சேன் .............. ஹெட் செட்ட மாட்டி பாட்டு கேட்க ஆரம்பிச்சேன் .. வீட்டுக்கு போனதிலிறிந்து எல்லாரும் நாளைக்கு HR இண்டெர்வீவ்லா எண்ணலாம் question கேட்பாங்க அதுக்கு எப்படிலாம் பதில் சொல்லணும்னு ஆளுக்கு ஒரு advice சொன்னாங்க ,எல்லார்க்கும் மனசுக்குள்ள பெரிய சந்தோஷம் ,சொந்தக்காரங்க எல்லாருக்கும் ஃபோன் செய்து வேலை கிடைச்சிடுசுனே சொல்லிட்டாங்க .
அந்த வேலை கெடச்சா மாசம் 20000 ரூபாய் சம்பளம் என் life மட்டும் இல்ல என்னோட குடும்பத்தோட life செட்டில் ஆகிடும் கடன் எல்லாத்தையும் ஒரு 4 வருஷத்துல அடச்சிடலாம்னு எங்க அப்பாவும் அம்மாவும் கணக்கு போட்டுகிட்டு இருந்தாங்க .. எங்க அப்பா 20000 ரூபாய் சம்பளம் வாங்க 20 வருடமாச்சு உலகம் எவ்ளோவ் மாறிபோச்சு பாருன்னு ஆச்சர்யபட்டு பொலம்பிக்கிட்டு இருந்தாரு .. அந்த வேலைய பத்தியே எல்லாரும் பேசிக்கிட்டு இருந்தாங்க .. ஒரு வழியா நாளைக்கு சீக்கிரம் எழுந்திருகனும்னு கஷ்டப்பட்டு கண்ணா மூடி தூங்குனேன் .. காலைல என்னோட அம்மா என்ன எழுப்பி விட்டாங்க .. "இது ஒரு பொன்மாலை பொழுது " பாட்டு சன் Tv la ஓடிக்கிட்டு இருந்துச்சு .. இன்னிக்கு evening எனக்கு நிஜமாவே பொன் மாலை பொழுதாதான் இருக்கும்னு மனசுக்குள்ள சிரித்தபடியே அவசரம் அவசரமா கிளம்புனேன் .. Interview காலைல 8 மணிக்குதான் ஆரம்பிக்கும் அதுவும் ஸ்ரீ பெரம்பதூர் தாண்டி இருக்கு அதனால என்னோட அண்ணனோட பைக் எடுத்துகிட்டு வீட்ல இருந்து கிளம்புனேன் .. காலைல 6 மணிநால ரோடு வெறுச்சோடி இருந்துச்சு .. பைக்ல இப்படி வேகமா போகணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை எல்லாமே இன்னகிதான் நடக்கணும்னு எழுதி இருக்கு போலன்னு தோனுச்சு .. என்னோட வாழ்கைலையே ரொம்ப சந்தோஷமான நாள் மாதிரி மனசுக்குள்ள தோனுச்சு .. கோவர்தணகிரி தாண்டி வந்துகிட்டு இருக்கும்போது .. எனக்கு முன்னாடி போன லாரில இருந்து ஏதோ சத்தம் கேட்டுச்சு . லாரிய slow பண்ணுனான் .. அப்பறம் சைடு வாங்கி வேகமா போய்டான்.. ஏதோ வண்டி கீழ விழுந்து கடக்கர மாதிரி தெரிஞ்சிச்சு .. கிட்ட போன பிறகுதான் தெரிஞ்சுச்சு முன்னாடி போயிடு இருந்த tvs 50ya லாரிகாரன் இடுச்சிட்டு நிக்காம போயடானு .. 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கீழே விழுந்து கிடந்தார் . ..
வண்டிய நிறுத்தி கீழ இறங்காம வண்டில உக்காந்தே பாத்தேன் .. அவருடைய தலையிலிருந்து ரத்தம் வெளியே வந்து கொண்டிருந்தது . அவருடைய வெள்ளை சட்டை முழுவதும் ரத்தம் தெரிதிருன்தது .. என்னுடைய இதய துடிப்பு அதிகமாச்சு .. இதுக்கு முன்னாடி என் வாழ்க்கைல நா இந்த மாதிரி கொடூரமான ரோடு accidentலாம் நேர்ல பாத்ததில்ல .. படத்துல பாக்குற accident மாதிரி இல்ல உண்மையான accidenta பாக்கும்போது நமக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துரும் .. அவர் உடம்பில் எந்த அசைவும் இல்லை . ஒரு வேல செத்து போயடாரோனு தோனுச்சு .. சுற்றி எல்லா பக்கமும் பார்த்தேன் கண்ணுகெட்டியவரை யாரையும் காணவில்லை .. தூரத்தில் ஒருவர் cyclela வந்து கொண்டிருந்தார் .. நமக்கு எதுக்கு வம்பு ,யாரும் பாக்குறதுக்கு முன்னாடி இந்த இடத்த விட்டு கேளம்பிடுவோம்னு நெனச்சு வண்டிய ஸ்டார்ட் பண்ணி அங்க இருந்து திரும்பி பாக்காம போனேன் .. வண்டியோட side mirror la பாக்கும்போது அவரோட கால் அசைர மாதிரி தெருஞ்சுசு .. சைடு mirrorla பாத்துகிட்டே போனேன் .. என்னோட மனசுல நேத்து என் பின்னாடி உட்காந்து இருந்தவர் சொன்னதுதான் உருத்திகிடே இருந்துச்சு .. நாம இன்னிக்கு அவருக்கு ஹெல்ப் பண்ணா நாளைக்கு இதே நிலைமை எனக்கோ என்னோட அப்பாவுக்கோ வந்தா வேற யாராவது ஹெல்ப் பண்ணு வாங்கனு தோனுச்சு .. மணி 6.30 தான் ஆனது அவர ஹோச்பிடெல்லா செத்துட்டு கூட interview போய்டலாம்னு முடிவு பண்ணி வண்டிய திருப்பி அந்த இடத்துக்கு போனேன்.. அவர் ஏதோ அனத்துவது தெளிவாக கேட்டது .. நல்லவேளை உயிர் இருக்கு என்று நினைத்தேன் அனால் அவரை hospiteluku எப்படி தூக்கி கொண்டு போவது என்று புரியவில்லை .. Cycleil வந்தவர் கிட்ட வந்தார் .. எப்டி சார் ஆச்சுனு கேட்டார் .. லாரி காரன் இடுசிடான் , பக்கதுல எதாச்சு hospitel இருக்கானு கேட்டேன் ..
பக்கதுல ஆவடி மார்க்கெட்ல s.k. hospitel இருக்குபா .. நரையா ரத்தம் போய்டே இருக்கு ஆம்புலன்ஸ் வரதுக்குள்ள நாம hospitalke போகிடலாம் தூக்குப்பா என்றார் .. அவர் தன்னுடைய சைக்கிளை ஓரமாக நிறுத்தினார் . அடிப்படவரின் பாக்கெட்டில் இருந்து சின்ன டைரி கீழே விழுந்து கிடந்தது அதை எடுத்து என்னிடம் குடுத்தார் .. அவரை நாங்கள் இருவரும் சேர்ந்து தூக்கி என் பைக்கில் ஏற்றி கொண்டு சென்றோம் .. அவருடைய தலை என் தோள்மேல் பட்டு கொண்டு இருந்தது .. அவர் தலையிலிருந்து என் தோளிலும் முதுகிலும் ரத்தம் ஒட்டிகொள்ளுமே என்று நினைத்தேன் .. அடுத்த சில நிமிடங்களில் hospitelai அடைந்தோம் .. என் பின்னால் உட்காந்திருன்தவர் stretcher எடுத்துட்டு வாங்க என்று கத்திகொண்டே இருந்தார் .. வண்டியை நிறுத்தி சில நொடிகளில் அங்கிருந்த சிலர் ஓடி வந்து அவரை இறக்குவதற்கு உதவினர் .. Strecheril வைத்து உள்ளே எடுத்து சென்றோம் .. டாக்டர் உடனே அவருக்கு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார் .. எப்படியாச்சு? என்று சுற்றி நின்றவர்கள் கேட்டு கொண்டே இருந்தனர் .. அவர்களிடமும் நடந்ததை கூறி முடிக்கும் முன்பே , டாக்டர் வெளியே வந்து accident caseலப்பா, நா treatement பண்றேன் நீங்க போய் policeku inform பண்ணிட்டு வந்துருங்க என்றார் .. அவர் சொன்னதை கேட்டவுடன் என் தலையே சுத்துவதுபோல் இருந்தது எனக்கு போலீஸ் ஸ்டேஷன்கெல்லாம் போகணுமென்று தெரியாது தெரிஞ்சிருந்தா வந்திருக்கவே மாட்டேன் .. போலீஸ் ஸ்டேஷன் போகணும் என்று நினைத்த உடனே என் மனதில் பயம் தொற்றி கொண்டது .. என் கூட வந்தவர் என்னபா முழிக்கிற இந்த ரோடு கடைசிலதான் போலீஸ் ஸ்டேஷன் போய் complaint பண்ணிட்டு வாப்பா என்றார் .. சார் எனக்கு அதெல்லாம் தெரியாது சார் என்று கூறிவிட்டு அமைதியாக நின்றேன் .. நான் பயப்படுகுறேன் என்று அவருக்கு புரிந்தது ..
இதுகெல்லாம் ஏன்பா பயபடுற சரி நீ இங்க இருந்து அவர பாத்துக்கோ நா போய் complaint பண்ணிட்டுவரேன் என்று சொல்லி விட்டு கிளம்பினார் .. கொஞ்ச நேரம் ICU முன்னாடியே நின்னுகிட்டு இருந்தேன் .. மணி 7.30 ஆனது .. ச்ச போனவர் வந்தா அவர்ட சொல்லிடு interviewku எப்படியாச்சு போய்டலாம் ஆனா அவரை இன்னும் காணமே என்று பார்த்து கொண்டே இருந்தேன் .. அப்பொழுதுதான் கவனித்தேன் என் சட்டை முழுவதும் ரத்தகரை இருந்ததை .. Bathroomku ஓடினேன் அங்கு தண்ணீரை தெளித்து துடைத்து பார்த்தேன் ஆனால் ரத்த கரை போகவே இல்லை .. சரி friend சட்டைய வாங்கி போட்டு கிட்டு interview attend பண்ணிக்கலாம் என்று மனதை தேற்றிக்கொண்டேன் ..என் நண்பனிடம் இருந்து போன் வந்தது .. எடுத்த உடன் எங்கடா இருக்க என்றான் .. வரதுக்கு கொஞ்சம் லேட் ஆகும் போல இருக்கு மச்சி . கொஞ்சம் லேட் ஆனா பரவைல்லைல ? என்றேன் .. 12 மணிக்கு interview முடியறதுக்கு முன்னாடி எப்படியாச்சு வந்துருடா என்றான் .. ம்ம் சரிடா என்று கட் செய்தேன் அவன் சொன்னதை கேட்ட உடன்தான் எனக்கு கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது .. போனை பாக்கெட்டில் வைக்கும்போதுதான் அந்த அடிபடவரின் டைரியை கவனித்தேன் .. டைரியில் முதல் பக்கத்தில் வீட்டு நம்பர் எழுதி இருந்தது .. அந்த போன் no.ku போன் பண்ணி விஷயத்தை சொல்லிவிட்டு interviewku கிளம்பலாம் என்று நினைத்து .. அந்த no.ruku போன் செய்தேன் .. ரிங் போனது உடனே கட் செய்துவிட்டேன் , இந்த விஷயத்தை எப்படி சொல்வது?, சொன்ன உடன் கேட்பவருக்கு ஏதாவது ஆகி விட்டால் என்ன செய்வது அதோடு இந்த மாதிரி விஷயதெல்லாம் நாசூகாதான் சொல்லனும் .. அங்கு நின்று கொண்டிருந்த ward boyai கூப்பிட்டு விஷயத்தை சொல்ல சொன்னேன் .. ரிங் போனதும் ward boyidam குடுத்து விட்டு .. நகர்ந்து நின்றேன் ..


அந்த wardboy விஷயத்தை சொல்லி விட்டு போனை என்னிடம் குடுத்தான் .. அவங்க பாண்டிச்சேரில இருப்பாங்க போல சார் வரதுக்கு எப்படியும் 4 மணி நேரமாச்சு ஆகும் என்றான் .. டாக்டர் வெளியே வந்து ஆபரேஷன் பன்னனும்பா போலீஸ்க்கு inform பண்ணியாச்சா என்றார் . Inform பண்ண போகி இருக்கார் சார் அவர் எப்படி சார் இருக்கார் என்று கேட்டேன் . Crictical situationdhaampa போலீஸ் வந்தப்புறம் எனக்கு inform பண்ணுங்க என்றார் .. மணி 9 ஆனது போலீஸ் constable உடன் அவரும் வந்தார் .. இவர்தான் சார் முதல பாத்தார் என்று என்னை காட்டினார் . போலீசை பார்த்த உடன் மறுபடியும் எனக்குள் பயம் பற்றி கொண்டது .. நடந்ததை முதலிலிருந்து அவரிடம் மறுபடியும் சொன்னேன் .. lorry, Tvs 50yoda நம்பர நோட் பண்ணிங்களா என்று கேட்டார் ? இல்ல சார் TVS 50 இன்னும் அங்கேதான் சார் இருக்கு என்று பக்கத்தில் இருந்தவர் சொன்னார் .. சரி நா spotku போய் பாத்துட்டு வரேன் நீங்க இங்கயே இருங்க என்றார் .. சரி சார் என்று தலையாட்டினேன் .. என்னோட சைக்கிள் அங்கதான் சார் இருக்கு நானும் வரேன் சார் என்று பக்கத்தில் இருந்தவரும் அவருடன் சென்றுவிட்டார் .. அங்கிருந்த chairil உட்காந்து கொண்டு வாட்சையே பார்த்து கொண்டிருந்தேன் .. நேரம் ஆகா ஆகா interview attend பண்ண முடியாதோ என்று பயம் வந்தது .. என்னுடைய போனில் இருந்து அவருடைய குடும்பத்துக்கு போன் செய்ததால் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் அந்த குடும்பம் போன் செய்து அவர் எப்படி இருக்கிறார் என்று கேட்டு கொண்டே இருந்தனர் , பாவம் அவர்கள் வேதனை அவர்களுக்கு .. 10 மணி அளவில் அந்த போலீஸ் மட்டும் வந்தார் வந்து என்னுடன் ஒரு பேப்பரில் sign வாங்கிகொண்டு , என்னுடைய போன் நம்பரை எழுதி கொண்டு என்னை அனுப்பினார் .. இன்னும் இரண்டு மணி நேரம்தான் இருக்கு அதனால் வண்டியில் வேகமாக போய் கொண்டே இருந்தேன் ...
பூந்தமல்லி தாண்டி சென்று கொண்டிருந்தபோது போன் ஒலித்தது . என்னோட frienduதான் போன் பண்ணி இருந்தான் .. மச்சி எங்கடா இருக்க என்று கேட்டான் ? இன்னும் 45 minutesla வந்துருவேன் மச்சி .. Ok சீக்கிரம் வாடா HR interviewla வெறும் tell about urself மட்டும்தான் கேக்குறாங்க .. Aptitude பாஸ் பண்ண எல்லாரையுமே செலக்ட் பண்ணிடுவாங்கன்னு பேசிகிறாங்க மச்சி . சீக்கிரம் வா என்றான் . Ok da என்று போனை கட் செய்து விட்டு வண்டியை சந்தோஷத்துடன் வேகமாக ஓட்டினேன் .. மறுபடியும் போன் வந்தது வண்டிய நிறுத்தாம அப்படியே attend பண்ணுனேன் .. நா ஆவடி போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து பேசுறேன்னு சொன்னாங்க .. வண்டிய ஓரமாய் நிறுத்தி விட்டு சொல்லுங்க சார்னு சொன்னேன் .. அவரோட டைரி உங்ககிட்ட இருக்கறதா சொல்லி இருந்திங்கள, இப்ப எங்களுக்கு அது தேவபடுதுப்பா அத hand over பண்ணாமையே போயடின்களே என்றார் .. ஆமா சார் என்கிட்டதான் இருக்கு என்றேன் .. சீக்கிரம் hospiteluku வந்துருங்க நா அங்கதான் இருக்கேன் என்றார் .. நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன்.. உடனே வாப்பா நா இத முடுசிட்டு courtuku வேற போகணும் சீக்கிரம் கிளம்பி வாப்பா என்றார் .. எனக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது .. போலீஸ் கூப்பிடும் போது எனக்கு முக்கியமான வேலை இருக்கு இப்ப வர முடியாதுனு சொல்ற அளவுக்கு எனக்கு தெய்ரியம் இல்லை .. சரி யோசிச்சு டைம் வேஸ்ட் பண்றதுக்கு சீக்கிரம் போய் குடுத்துட்டு வந்துடலாம்னு முடிவு பண்ணி வேகமா hospitalku போனேன் .. கரயாஞ்சாவடில ஏதோ tanker lorry ரிப்பேர் ஆகி நிக்கிதாம் அதனாலே சுதிக்கிட்டுதான் போகணும்நு சொன்னாங்க .. வாட்சை பார்க்காமல் வேகமாக சென்றேன் .. Hospitalai அடைந்தபோது மணி 11.15 ஆகிவிட்டது .. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு போலீஸ் இல்லை .. எனக்கு ரொம்ப கோபம் வந்து விட்டது .. அவருக்கு போன் செய்தேன் எடுத்தவர் இதோ பகதுலதான் இருக்கேன் 5 minutesla வந்துர்வேன்பா என்றார் .. 10 நிமிடம் ஆகியும் அவர் வரவில்லை .
மறுபடியும் அவருக்கு போன் செய்தேன் ஆனால் அவர் எடுக்கவே இல்லை .. எனக்கு தெரிந்து அன்று நான் திட்டிய அளவுக்கு தமிழ் நாட்டு போலீசை இது வரை யாரும் திட்டி இருக்க மாட்டார்கள் .. அவரிடமிருந்து எனக்கு போன் வந்தது என்னால வர முடியலப்பா நீ திரிய receptionla குடுத்துடுப்பா நா collect பண்ணிக்கிறேன் என்றார் . டைரியை கொண்டு போய் குடுத்து விட்டு வாட்சை பார்த்தேன் மணி 12 அடித்தது . என் நண்பனிடம் இருந்து interview over என்று ஒரு மெசேஜ் வந்துச்சு . தலையில் கையை வைத்து கொண்டு கண்ணை மூடி கொண்டு அங்கிருந்த chairil உட்காந்தேன் .அப்பாக்கும் அம்மாக்கும் என்ன பதில் சொல்ல போறேன் .மாசம் 20000 சம்பலமாச்சே எங்க குடும்பத்தோட கஷ்டமெல்லாம் தீர்ந்திருகுமே .. நா செஞ்சதுக்கு இப்ப இந்த உலகம் எனக்கு என்ன சிலையா வைக்க போகுது .. கேக்குறவன் என்ன இழுச்ச வாயனுதான சொல்லுவான் , இல்ல உனக்கு எதுக்கு இந்த ஹீரோ வேலைலாம்னு சொல்லி சிரிப்பாங்க ........ அமைதியாக உட்கார்ந்திருந்தேன் ..அந்த wardboy அவர general wardku மாத்தியாச்சு என்றார் . சரி என்றேன் .எழுந்து அவரை பார்க்க போனேன் தலை முழுவதும் கட்டு போடபட்டு இருந்தது ...எனக்கு அவரை பார்த்து திட்டுவதா பரிதாப படுவதா என்று புரியாமல் நின்று கொண்டிருந்தேன் .. அந்த அடிபடவரின் மனைவியிடமிருந்து போன் வந்தது இப்ப எப்படிப்பா இருக்கார் என்று கேட்டாங்க ... இனி ஒன்னும் பிரச்சனை இல்ல general wardku மாத்திடாங்கனு சொன்னேன் .. பக்கதுல வந்துடோம்பா இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவோம் அது வரைக்கும் கொஞ்சம் பார்த்துகோப்பா என்றார் ... நானும் வீட்டுக்கு போய் என்ன சொல்றதுன்னு தெரியாம இருந்தேன் , wait பண்றேன் வாங்க என்றேன் ... அவர் பக்கத்தில் கொஞ்ச நேரம் உட்காந்திருந்தேன் பிறகு அந்த hospitela இருந்த கான்டீன்ல டீ குடிக்க போனேன் .. எங்க அம்மாகிட்ட இருந்து போன் வந்தது . என்ன சொல்வதுனு தெரியல call attend செய்யாமல் . அங்கு இருந்த chairil உட்காந்து டீ குடிக்க தொடங்கினேன் . மறுபடியும் என் அம்மாவிடமிருந்து போன் வந்தது என்னால் அடக்க முடியாமல் வெறுப்பில் , முன்னே இருந்த டேபிளில் கை வைத்து முகத்தை மறைத்து படுத்தேன் ..என்னை விட இந்த உலகத்துல பெரிய ஏமாளி இருக்க மாட்டான்னு நெனச்சேன் ... ஏன் அப்பாவிடமிருந்தும் அம்மாவிடமிருந்தும் மாறி மாறி போன் வந்து கொண்டே இருந்தது பாவம் அவங்க நேத்து night fulla எவ்ளோவ் கனவு கண்டிருபாங்க அவர்களை நினைக்கும்போது என் கண்ணிலிருந்து லேசாக கண்ணீர் வந்தது ... அப்படியே தூங்கிவிட்டேன் ... எவ்ளோவ் நேரம் தூங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை ...........
சார் சார் என்று யாரோ கூபிடுவதுபோல் உணர்ந்தேன் எழுந்து பார்த்த போது அங்கு ward boyum ஒரு 40 வயது மதிக்க தக்க ஒரு பெண்ணும் இரண்டு சிறுமிகளும் வந்திருந்தனர் . அந்த wardboy இவர்தான் இங்கு வந்து அவரை சேர்த்தார் என்று என்னை பார்த்து சொன்னார் , இவங்கதான் அவரோட மனைவி இரண்டு மகள்கள் என்று சொன்னார் .. அந்த அடிபடவரின் மனைவி என் இரு கையையும் பிடித்து நே வயசுல சின்னவனா இருக்க தம்பி இல்லாட்டி உன்னோடு கால விழுந்திருவேன் எங்க வாள்கையவே நீ காப்பாத்தி இருக்க , அந்த மனுஷன நம்பிதான் நாங்க 3 பெரும் இருக்கோம் .. ரொம்ப நன்றிப்பா நீ ரொம்ப வருஷம் நல்லா இருபப்பா என்று கூறிக்கொண்டே அளதொடன்கினால் .. அந்த இரு பெண்களும் ரொம்ப thanks anna என்று கூறிக்கொண்டே இருந்தனர் .. அங்கு canteenil இருந்த அனைவரும் என்னையே பார்த்தனர், அவர்கள் என்னை அப்படி பார்த் போது பெருமையாக இருந்தது .. இதுல என்னமா இருக்கு நீங்க போய் firstu அவர பாருங்க . அவர பாத்துட்டேன்பா உனக்கு நா எப்படி நன்றி சொல்றதுனே தெரியில அந்த ஆண்டவன்தான் உன்னோட ரூபத்துல இங்க வந்திருகாருப்பா ஏதாவது சாப்பிடுப்பா ? என்றால் .. சாப்ட்டேன்மா நீங்க அவர போய் பாருங்க என்றேன் . மணி பாத்தேன் 3.30 மணி ஆனது timaachu நா கிளம்புறேன் என்றேன் , அப்படியாப்பா அவருக்கு குணமான பிறகு உனக்கு போன் பண்றேன்பா நீ கண்டிப்பா வீட்டுக்கு வரணும்பா என்றார் ..அந்த குடும்பம் நான் பைக்கை எடுத்து கொண்டு வெளியே போகும் வரைக்கும் என்னுடனே வந்தனர் ..வண்டியில் உட்காந்து ஸ்டார்ட் செய்து விட்டு கடைசியாக ஒருமுறை திரும்பி வரேன் என்று தலை அசைத்தேன் ..அந்த குடும்பத்தில் இருந்த அனைவரின் கண்களிலும் ஒரு கண்ணீர் கலந்த சந்தோஷம் .. அவருடைய உயிர் அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று அப்பதான் புரிந்தது, வீட்டுக்கு புறப்பட்டேன் .. மலை வருவதை போன்று இருந்தது மனதிற்குள் இனம் புரியாத சந்தோஷம் அந்த குடும்பத்தினரின் முகங்கள் மனதிற்குள் வந்து வந்து சென்றது , என் கண்களில் சிறிய கண்ணீர் துளி அது வேலை கிடைக்காத சோகத்தினால் அல்ல , அந்த குடும்பத்தினரின் கண்ணில் இருந்த சந்தோஷம் என்னால் என்பதால் ...


இப்போது என் மனதில் வேலை கிடைக்காத சோகம் துளியும் இல்லை .. ஒரு மனுஷன் சக மனுஷனுக்கு இந்த உதவி கூட பண்ணலேனா அவன் நல்லா வாழ்ந்து என்ன பண்ண போறான்னு தோனுச்சு ...... மேகம் இருண்டுகொண்டு வந்தது .. குளிர்ந்த காற்று முகத்தை உரசி சென்றது .. பக்கத்தில் ஒரு டீ கடை ரேடியோவில் "இது ஒரு பொன்மாலை பொழுது ................... " பாடல் ஓடிகொண்டிருந்தது .. நான் காலையில் நினைத்த மாதிரி இன்னிக்கு எனக்கு இந்த மாலை பொழுது ஒரு பொன்மாலை பொழுதுதான் ... நானும் அந்த பாடலை சந்தோஷமாக முனு முணுத்துக்கொண்டே போனேன் ........" இது ஒரு பொன்மாலை பொழு