Thursday 2 April 2015

சுகன்யா... 90

'அம்மா நான் சுகன்யாவை லவ் பண்றேன். எனக்கு கல்யாணம்ன்னா அது அவகூடத்தான், இல்லேன்னா இப்படியே இருந்திடறேன்...' மெல்லிய குரலில் ஆனால் உறுதியுடன் தன் மகன் சம்பத் பேசியதை கேட்ட ராணி தன் மனதால் மட்டுமில்லாமல், உடலாலும் ஒரு நிமிடம் அதிர்ந்துபோனாள்.

ஆண்டவா.. என் குடும்பம் தழைக்கணுமே? என் புள்ளை ஏன் இப்படி மூர்க்கனாட்டாம் பேசறான்? இது ஆகற கதையா? இவன் மனசை மாத்தி இவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சாகணுமே? சுகன்யாவோட நிச்சயதார்த்ததுக்கு இவனும்தானே வந்தான்.? இப்ப எல்லாம் நடந்து முடிஞ்சதுக்கப்புறம், கட்டினா அவளைத்தான் கட்டுவேன்னு ஏன் உளர்றான்?

சுகன்யா என்னை மதிக்கலே. நான் கருப்பா இருக்கேன்னு அவ என் கையை புடிச்சி குலுக்கலேன்னான். அவளுக்கு ஆப்பு வெச்சேன்ன்னு குதிச்சான். அவளை எச்சையிலைன்னு சொல்லி கொக்கரிச்சவன் கூட புத்தியில்லாம நானும் சேர்ந்து சிரிச்சேன்.



நானே ஒரு எச்சையிலைங்கறது தெரியாம என் புருஷனைத் தப்பா பேசினானேன்னு ஒரு அறைவிட்டேன். நான் பேசினது தப்பும்ம்மான்னு அழுதான். இவன் திருந்திட்டான்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன். திரும்பவும் என் நெஞ்சுல ஏறி மிதிக்கறானே? இப்ப நான் எண்ணப்பண்ணுவேன்? ராணி தன் மனம் கலங்கி போனாள்.

இவன் என்ன குழந்தையா? நல்லாப் படிச்சு, கை நிறைய சம்பாதிச்சுக்கிட்டு இருக்கற ஒரு இருபத்தெட்டு வயசு பையன் பேசற பேச்சா இது? கல்யாணம் நிச்சயமான ஒரு பொண்ணை காதலிக்கறேங்கறான். ஏன் இப்படி பைத்தியக்காரத்தனமா பேசறான்?

இருளடித்த முகத்துடன், தன்னருகில் மவுனமாக, மனதில் குழப்பத்துடன் அமர்ந்திருந்த கணவரை ஒரு முறை ஏறெடுத்துப்பார்த்தாள் ராணி. தங்கள் மகன் இது மாதிரி அர்த்தமில்லாமல் பேசுவான் என அவர்கள் சுத்தமாக எதிர்ப்பார்க்கவேயில்லை.

ஒரு நிமிடம் மகனிடம் என்ன பேசுவதென்று புரியாமல், தன் மடியில் தலைவைத்து கிடந்த சம்பத்தின் வெற்று முதுகை பரிவுடன் இதமாக தடவிக் கொடுக்க ஆரம்பித்தாள் ராணி. சம்பத்திடம் ஏதோ சொல்ல முனைந்த தன் கணவனை 'நீங்க பேசமா இருங்க, இவனை நான் சமாளிக்கிறேன் என தன் கண்களால் அவரிடம் சைகை செய்தாள். இரண்டு நிமிடங்களுக்குப்பிறகு தன் தொண்டையைக் கனைத்துக்கொண்டு நிதானமாக பேச ஆரம்பித்தாள்.

"கண்ணு... சம்பத்து... என் பரம்பரைச்சொத்தும், உன் முறைப்பொண்ணும், நம்ம கையை விட்டு நழுவிப்போகுதேங்கற ஆதங்கத்துல, சுகன்யாவை இன்னொருத்தனுக்கு எப்படி நீங்க கட்டிக் கொடுக்கலாம்ன்னு, வெட்டித்தனமா சுந்தரிகிட்ட நான் சண்டை போட்டது என்னவோ உண்மைதான்டா..."

"ஆயிரம்தான் இருந்தாலும் அவகிட்ட நான் சண்டை போட்டது தப்புடா. ஏன்னா... சுகன்யா ஒருத்தனை லவ் பண்றா. இந்தக்கல்யாணம் என் தம்பி குமாரோ அவன் பொண்டாட்டியோ பாத்து அரேஞ்ச் பண்ணது இல்லே. சுகன்யாவே அவ விருப்பட்டு தேடிகிட்ட கல்யாணம். என் கோவமே ஒருவிதத்துல ஞாயமேயில்லே."

"சுந்தரியைப்பத்தி எனக்கு நல்லாத்தெரியும். தான் காதலிச்சி கட்டிக்கிட்ட புருஷனை விட்டுட்டு பதினைஞ்சு வருஷம் தனியா ஒத்தையா வாழ்ந்துகிட்டு இருந்தா. அவங்களுக்குள்ள ஆயிரம் பிரச்சனை இருந்துருக்கும். வீட்டுக்கு வீடு வாசப்படி. ஆனா யாருமே அவளைப்பாத்து ஒரு விரலை ஒசத்திட முடியாத அளவுக்கு நெருப்பா வாழ்ந்தா. அவ பெத்து வளத்தப்பொண்ணு சுகன்யா. இதனாலத்தான் நான் அங்க சம்பந்தம் பண்ணவே போனேன்."

"எல்லாவிதத்துலேயும் சுகன்யா உனக்கு பொருத்தமாயிருப்பான்னு நான் நினைச்சேன். அவ இன்னொருத்தனை காதலிக்கறான்னு தெரிஞ்சதும், அவளை என் மருமகளா ஆக்கிக்கற என் ஆசையை விட்டுட்டேன். உங்கப்பாவும் இதைத்தான் சொன்னார். ஆனா பொம்பளைக்கே இருக்கற குணம்... சொந்தம் விட்டுப்போயிடக்கூடாதுங்கற ஆதங்கம் எனக்கு இப்பவும் இருக்கு. கழுதை அதுபாட்டுல அது ஒரு பக்கம் இருக்கட்டும்."


"அப்பாடா... இப்பத்தாண்டி எனக்கு நிம்மதியாச்சு. எங்கே நீ திரும்பவும் இவன் கூட சேந்து முருங்கை மரம் ஏறிடுவியோன்னு நினைச்சேன்?" நல்லசிவம் நீளமாகப் பெருமூச்சு விட்டார்.

"சம்பத்து... எந்தக்காலத்துலேயும், எந்தக்காரணத்துக்காகவும், ஒரு பொம்பளையை வற்புறுத்தி, கட்டாயப்படுத்தி, அவ மனசை கல்யாணத்துக்குன்னு திசை திருப்பக்கூடாதுப்பா. அது ரொம்பத் தப்பு. இன்னொருத்தனை தன் மனசுக்குள்ள வெச்சிருக்கற பொண்ணோட நீ எப்படிடா சந்தோஷமா குடும்பம் நடத்த முடியும்?"

"அம்மா அவளை நான் என் வாழ்நாள் பூரா என் மனசுக்குள்ளவே காதலிச்சுக்கிட்டு இருப்பேம்மா. எந்தவிதத்துலேயும் அவளுக்கு நான் தொந்தரவு கொடுக் கமாட்டேம்மா..." சம்பத் குரலில் உயிரில்லாமல் முனகினான்.

"இது மகாகொடுமைடா... இந்தக்கொடுமையை நானே அனுபவிச்சு இருக்கேன்டா." ராணியின் குரல் கிசுகிசுப்பாக வந்தது.

"என்னம்மா சொல்றே நீ?"

"கண்ணு... நானும் படிக்கற காலத்துல ஒருத்தனை என் மனசார விரும்பினேன். அவன் நம்ம ஜாதியில்லே. அவன் ஒரு கோழை. நம்ம ஜாதி ஜனங்களுக்கு பயந்து, அவங்க அவனை ஒரு தரம் அடிச்சிட்டதுக்கு பயந்து, என்னை அம்போன்னு நட்டாத்துல கைவிட்டுட்டான். ஒரு பேடியை காதலிச்சோமேன்னு நான் வெக்கமும் பட்டிருக்கேன். எப்படியோ, என் காதல் நிறைவேறலை. என்னைப் பெத்தவங்க உங்கப்பாவை எனக்கு வற்புறுத்தி கட்டி வெச்சாங்க.

"ராணி... இப்ப எதுக்கு நீ பழங்கதையை ஆரம்பிக்கறே?"

"காரணத்தோடத்தான் நான் பேசறேன்... என்னைத் தடுக்காதீங்க. ப்ளீஸ்..."

"கல்யாணத்துக்கு முன்னாடி என் காதலன் கூட இருட்டுல சினிமா பாத்து இருக்கேன். நம்ம ஊரு ரெயில்வே ஸ்டேஷன் மதகுக்கு கீழே நின்னு அவனை கட்டிப்புடிச்சி முத்தம் குடுத்து இருக்கேன். முப்பது வருஷத்துக்கு முன்னாடி இது ரொம்ப பெரிய விஷயம்டா."

"என் உறவுகள் என்னைப்பாத்து சிரிச்சுது. 'த்தூன்னு'ன்னு என் மூஞ்சியில காறித்துப்புச்சு. என்னைப் பெத்தவ தொடப்பக்கட்டையாலேயே என்னை அடிச்சு நொறுக்கினா. என் மனசும் நொறுங்கிச்சி... தொடப்பக்கட்டையும் முறிஞ்சிப்போச்சு. எங்கப்பன் என்னை வெட்ட வந்தாரு. நம்ம ஜாதிக்காரன் அத்தனைப்பேரும் ஆன்னா ஊன்னா அருவாளைத்தான் கையிலத் தூக்குவான்... என் அத்தை குறுக்கே வந்து என் உசுரைக் காப்பாத்தினா."

"உங்கப்பா என்னைப் பொண்ணு பாக்க வந்தாரு. நான் மாட்டேன்னு அப்பன் ஆத்தாகிட்டே மல்லாடி நின்னேன். பட்டினி கிடந்து பாத்தேன். ஒண்ணும் நடக்கலே."

"என் ஒடம்பு அழகுல மயங்கிப்போன உங்கப்பா கட்டிக்கிட்டா என்னைத்தான் கட்டிக்குவேன்னு நாலு தரம் ஊர்ல இருக்கற வெள்ளை வேஷ்டி கட்டினவன் அத்தனை பேரையும் மாத்தி மாத்தி அனுப்பி வெச்சாரு.. இவரை மட்டுமில்லே எவனையும் கட்டிக்க மாட்டேன்னு தீத்து சொன்னேன். வீட்டை விட்டு ஓடிடுவேன்னு சொன்னேன்.. என் உடம்பு துணியை உருவிட்டு அம்மணமா இருட்டு ரூம்லே அடைச்சு சோறு போட்டாங்க."

"ஹூகூம்... என்னைப் பெத்தவங்க என்னை மிரட்டி மிரட்டியே என் மனசை சுக்கு நூறா உடைச்சிட்டாங்கடா. கூண்டோட கிணத்துல குதிச்சிடுவோம்ன்னு பயமுறுத்தினாங்க. எண்ணையை ஊத்தி கொளுத்திக்குவோம்ன்னாங்க; எனக்கு விருப்பமேயில்லாம கட்டாயக்கல்யாணம் நடந்தி வெச்சாங்க..."

"உங்கப்பாவுக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது. கல்யாணத்துக்கு அப்புறம் என்னைக்குமே நான் உடம்பால இந்த மனுஷனுக்குத் துரோகம் பண்ணதில்லே. ஆனா மனசாலே துரோகம் பண்ணியிருக்கேன்டா." ராணி விம்ம ஆரம்பித்தாள்.

"ராணீ... போதும்மா... உன் மேல எனக்கு எந்த வருத்தமும் இல்லேம்மா..." நல்லசிவம் முனகிக்கொண்டே தன் மனைவியின் தலையை மெல்ல வருட ஆரம்பித்தார்.

"ரொம்ப நாள்... ஏன்... நீ பொறந்ததுக்கு அப்புறமும் அந்த பயந்தாங்கொள்ளியை என்னால மறக்கவே முடியலே. ஏன்னா அது என்னோட அறியாத பருவத்துல வந்த கன்னுக்குட்டி காதல். முதல் காதல்."

"ஒரு பொண்ணுக்கு தன்னோட மனசுலேருந்து, தோல்வியில முடிஞ்ச முதல் காதல் அழியறதுக்கு ரொம்ப நாளாகும். மனசுக்குள்ள ஒருத்தனோடவும், உடம்பால ஒருத்தனோடவும் வாழறது ஒரு பொண்ணுக்கு ரொம்பக்கஷ்டம்டா. இது பொம்பளைக்கு மட்டுமில்லே. ஆம்பிளைக்கும் கொடுமையான விஷயம்டா..."

"உனக்கு சம்பத்குமார்ன்னு ஏன் பேர் வெச்சேன் தெரியுமா? அவன் பேருலேயும் 'சம்பத்'ங்கற சொல் இருந்திச்சி. அந்த பாவி மேல இருந்த தீராத ஆசையினாலத்தான் வெக்கம் கெட்டுப்போய் உனக்கு நான் அவன் பேரை வெச்சேன். உன்னை சம்பத்ன்னு ஆசையா கூப்பிடும் போதெல்லாம் அவனை நான் என் மனசுக்குள்ள நெனைச்சுக்குவேன்."

சம்பத் தன் தாயின் மடியிலிருந்து எழுந்து உட்கார்ந்தான். தன் முகம் கருத்து, குரல் தழுதழுத்து, கண்கள் கலங்க, மனதில் எழும் பழைய வலிகளுடன் பேசிக்கொண்டிருக்கும் தன் தாயையும், கன்னத்தில் ஒரு கையையும், மறு கையால் அவள் தலையை வருடிக்கொண்டிருக்கும் தன் தந்தையையும் அவன் மாறி மாறிப்பார்த்தான். 

"எங்கக்கல்யாணம் முடிஞ்சி, ஒரு மாசம் வரைக்கும், என் மேல அன்பை பொழிஞ்ச இவர் விரல் கூட என் மேல படவிடாம, இந்த நல்ல மனுஷனை, நான் பழிவாங்கறதா நெனைச்சுக்கிட்டு, என்னையே நான் பழிவாங்கிக்கிட்டு இருந்தேன்."

"ராணீ.. இவன்கிட்ட எதுக்குமா இதெல்லாம்?" நல்லசிவம் தன் முகத்தை சுளித்தார். இது நாள் வரை அவர்கள் யாருக்கும் தெரியாமல் கட்டிக்காத்து வந்த தங்கள் அந்தரங்கம் வயது வந்த தன் மகனுக்கு மெல்ல மெல்ல தெரியவருவதை நினைத்து சற்றே வெட்கத்துடன் தலை குனிந்தார்.

"நீங்க ஏங்க தலை குனியறீங்க? ஒரு பொண்ணு மனசு இவனுக்கு புரியணுங்க. சுகன்யாவை மறந்துட்டு என் புள்ளை நல்லபடியா வாழணுங்க. இவன் அவளை உண்மையா காதலிக்கலாம். ஆனா இவனோட காதல் என்னைப் பொறுத்தவரைக்கும் சரியில்லே. விருப்பமில்லாத ஒரு கல்யாணத்துலே ஆணும் பெண்ணும் எப்படி கஷ்டப்படுவாங்கன்னு இவன் தெரிஞ்சிக்கணும். இவன் மனசை மாத்தறதுக்கு என் கதையை நான் இவனுக்குச் சொல்லித்தான் ஆகணும். "

"அம்மா... நீ சொல்றதெல்லாம் ஏதோ கதையில வர்ற மாதிரியிருக்கும்மா."

"தாலி கட்டிக்கிட்ட ஒரு மாசத்துக்கு அப்புறமும், நான் கன்னி கழியாம இருக்கேங்கற விஷயம் தெரிஞ்ச என் அம்மா, நான் தூக்குபோட்டுகிட்டு சாகறேன்னு தாம்புக்கயித்தை கையில எடுத்துக்கிட்டு வீட்டைவிட்டு ஓடினா. என் அப்பா விஷம் குடிச்சுட்டு உயிரை விடறேன்னு என் தம்பியையும் இழுத்துக்கிட்டு, நம்ம வயக்காட்டுப்பக்கமா ஓடினாரு."

"என் மனசுல என் காதல் நிறைவேறலையேங்கற எரிச்சல்; கோபம்; வெறுப்பு பொங்கி வழிஞ்சிது. இதுல சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் நான் பழிவாங்கறதுன்னு முடிவெடுத்தேன். அதுக்கு ஒரே வழி என் புருஷனை என்கிட்டேயிருந்து தூரமா நிக்க வெக்கறதுன்னு நினைச்சேன். நிக்க வெச்சேன். என்னைத் தொடவிடலே..."

"தன் புள்ளை கல்யாணத்துக்கு அப்புறமும் பிரம்மச்சாரியா இருக்கானேங்கற என் மாமியாரோட வெறுப்பு; என் மாமனார் கண்ணுல தெரிஞ்ச விரக்தி.. இதையெல்லாம் என்னால சகிச்சிக்கமுடியலே. உங்கப்பாவை பெத்தவங்க அத்தனை நல்ல குணம் உள்ளவங்க... எங்க ரெண்டு பேரு பிரச்சனையில தலையிடவேயில்லே... இதுதான் எங்கத்தலையெழுத்துன்னா இருந்துட்டு போகட்டும்ன்னு பொறுமையா இருந்தாங்க."

"தினம் தினம் பொழுது விடிஞ்சி பொழுது போனா என் குடும்பத்தோட மெரட்டல் மெரட்டல். எத்தனை மிரட்டல்? மெரட்டறவங்க நிஜமாவே எக்குத்தப்பா எதாவது பண்ணிட்டா; என் குலை நடுங்கிப்போச்சு. ஒரு பொம்பளை எத்தனை நாளைக்குத்தான் இத்தனை டென்ஷனைத் தாக்குப்பிடிக்க முடியும்.? நான் உங்கப்பாவோட மனசில்லாம, என் ஒடம்பாலேயும் வாழ ஆரம்பிச்சேன். நீயும் பொறந்தே."

"அம்மா என்னை நீ மனசுக்குள்ள ஆசையில்லாமத்தான் ஒரு இயந்திரமா பெத்துக்கிட்டியா?"

சம்பத்தின் குரலில் லேசான நடுக்கமிருந்தது. தன் பிள்ளையின் கேள்வியால் கதிகலங்கிப்போனாள் ராணி. மகனின் வலதுகையை தன் கையில் எடுத்துக்கொண்டாள். நடுங்கிக்கொண்டிருக்கும் அவன் விரல்களை ஆதரவாகத் தடவிக்கொடுத்தாள்.

"ஆரம்பத்துல உங்கப்பாக்கூட விருப்பமில்லாமத்தான் படுத்தேன்டா. அவர் எங்கிட்ட காமிச்ச அன்புல, பாசத்துல என் மனசு கொஞ்சம் கொஞ்சமா அவர் பக்கம் சாய ஆரம்பிச்சுது. அவரோட கள்ளமில்லாத மனசும், அவரோட அருமையும் புரிய ஆரம்பிச்சுது. ஆனாலும் அவனோட நினைவுகள் என் மனசோட ஒரு மூலையில இருந்திச்சிங்கறதும் மறுக்கமுடியாத ஒரு உண்மைதான்டா... இதை சொல்றதுக்கு நான் வெக்கப்படலே."

"ராணீ... மனசால யாருமே ஆணோ, பெண்ணோ, முழுசா சுத்தமா இருக்க முடியாதும்ம்மா.. இதை நான் உனக்கு எத்தனையோ தரம் சொல்லிட்டேன்." நல்லசிவம் ஆதரவாக ராணியை தன் தோளில் சாய்த்துக்கொண்டார். தன் வளர்ந்த மகனின் எதிரில் அவள் நெற்றியில் எந்த தயக்கமும் இல்லாமல் அன்புடன் முத்தமிட்டார்.

"உனக்கு ரெண்டு வயசுடா. உங்கப்பா அலமாரியில எதையோ தேடும்போது, என் புடவைகளுக்கு அடியில கிடந்த, என் காதலோட ஒரே அடையாளம்... அவன் போட்டோ, பிளாக் அண்ட் வொயிட்ல, என் புருஷன் கையில கிடைச்சிட்டுது. நான் ஒடம்பாலேயும், மனசாலேயும் ரொம்பத் திமிரா இருந்த காலம் அது.

"ராணீ... இது யாரும்மா... ஹேண்ட்சம்மா இருக்கானே? வெகுளித்தனமா கேட்டாரு. நான் திமிரா இவன் என் லவ்வர்ன்னு சொன்னேன். இன்னும் என் மனசுல ஒரு ஓரத்துல அவன் நெனைப்பு இருக்குன்னு சொன்னேன். நான் எதையும் என் புருஷன் கிட்ட மறைக்கல. என் காதல் விஷயத்தை புட்டு புட்டு வெச்சிட்டேன்... இவரு ஒரு நிமிஷம் இடிஞ்சிப்போயிட்டார்."

"உங்கப்பா என்னைத்திட்டலே... அடிக்கலே... எந்த ஆம்பிளையா இருந்தாலும், தன் புள்ளைக்கு வேற ஒருத்தன் பேரை வெச்ச என்னை மாதிரி பொட்டைச்சியை வெட்டி கூறு போட்டு இருப்பான்; ஆனா இவரு என்னைப் பாத்து அனுதாபப்பட்டார்."

"ராணீ... சத்தியமா நீ ஒருத்தனை காதலிச்ச விஷயம் எனக்குத் தெரியாது... தெரிஞ்சிருந்தா உன் வீட்டுக்கே உன்னைப் பெண் கேட்டு வந்திருக்கமாட்டேன்னு எங்கிட்ட மன்னிப்பு கேட்டார். உடம்பால உங்கப்பா கருப்புடா... மனசால சொக்க தங்கம்டா." 




ராணி பேசுவதை நிறுத்தினாள். தன் மூக்கை உறிஞ்சினாள். கண்களைத் தன் புடவை முந்தானையால் துடைத்துக்கொண்டாள். தன் கணவனை நெருங்கி அவர் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

"அப்பா... இவ்வளவு நல்ல மனுஷனா நீங்க?"
சம்பத் தன் தந்தையை, அவர் முகத்தை ஒரு நிமிடம் வெறித்துக்கொண்டிருந்தான். சட்டென எழுந்து அவர் பக்கத்தில் உட்கார்ந்து அவருடைய தோளில் தன் முகத்தை புதைதுக்கொண்டான்.

"மெத்து மெத்துன்னு இருக்கற இலவம் பஞ்சு மெத்தையில உன்னை என் பக்கத்துலப் போட்டுக்கிட்டு, தூக்கமேயில்லாம பொரண்டுக்கிட்டு இருப்பேன் நான். மனசுல விருப்பமில்லாத உன்னை உன் கழுத்துல தாலி கட்டிட்டேங்கற காரணத்துக்காக உன்னை நான் தொடமாட்டேன்னு தனியா தரையில படுத்துக்கிட்டு நிம்மதியா தூங்குவாரு இவரு. உங்கப்பாவுக்கு கொடுமை பண்ணியிருக்கேண்டா நான்."

"எத்தனை ஜென்மம் எடுத்தாலும், எந்த ஜென்மம் எடுத்தாலும் இவருதான் எனக்கு ஆம்பிளையா வரணும்ன்னு தினம் தினம் சாமியை வேண்டிக்கறேண்டா நான். இவரை நான் என் மனசார வெரட்டறது இல்லேடா... எங்களுக்குள்ள இருக்கற ஒரு விளையாட்டுடா அது... இப்ப உனக்கு அது புரியாது." ராணி மீண்டும் விசும்ப ஆரம்பித்தாள்.

"அம்மா அழாதேம்மா ப்ளீஸ்..." இப்போது சம்பத் தன் தாயை நெருங்கி உட்கார்ந்தான். அவள் தலையைத் தன் தோளில் சாய்த்து ஆதரவாக அணைத்துக்கொண்டான்.

"உன் அப்பா உன்னை ஆசையாத் தூக்கி தன் மார்லே, தோள்லே, போட்டுக்கிட்டு 'சம்பத்து... நீ என் சம்பத்துடா... நீ என் செல்வம்டான்னு கொஞ்சுவாரு. ஆனா என்னைத் தீண்டறதுக்கு மட்டும் அவர் முயற்சி பண்ணதே கிடையாது; என் புருஷனோட கட்டுப்பாட்டை பாத்தேன். அவரோட மனசு உரத்தைப் பாத்தேன்; மெள்ள மெள்ள உன் அப்பாவை என் முழுமனசோட நேசிக்க ஆரம்பிச்சேன்டா."

"உங்கப்பா என்னை எப்பவுமே வெறுத்ததேயில்லடா; ஒரு வார்த்தைக்கூட என்னையோ, என்னை கைவிட்டுட்டு ஓடிப்போனவனைப்பத்தியோ தப்பா பேசினதேயில்லை; அந்த ஒரு வருஷக்காலத்துல, உங்கப்பா தனக்குத்தானே அவர் போட்டுக்கிட்ட கோட்டைத் தாண்டி என்னை தொட்டது இல்லையேத் தவிர வேற எந்தக்குறையும் வெக்கலேடா. இந்த மாதிரி நல்ல மனுஷனை நான் அலைக்கழிச்சதை நினைச்சு ஒரு தரம் செத்துப்போயிடலாமாங்கற முடிவுக்கு வந்தேன். ஆனா உன்னை விட்டுட்டு போறதுக்கு எனக்கு மனசு வரலேடா"

"ராணீ...போதும்டீ..." நல்லசிவம் தன் கண்களைத் துடைத்துக்கொண்டார்.

"அப்ப நான் இருபத்தஞ்சு வயசு பொண்ணுடா; என் ஒடம்பும் அந்த வயசுக்கே உண்டான, இயற்கையான, இயல்பான, ஆம்பிளை சுகத்துக்கு அலைஞ்சுது. என் உடம்பு தினவை என்னால தாங்கிக்க முடியாம, என் புருஷனோட அணைப்புக்கும் ஆதரவுக்கும் ஏங்கினேன். எப்படியோ ஒரு வருஷம் நானும் பல்லைக்கடிச்சுக்கிட்டு பொறுமையா இருந்தேன். உங்கப்பா தான் எடுத்த முடிவுல நிலையா உறுதியா நின்னாரு."

"உனக்கு மூணாவது பொறந்த நாள்; நூறு பேரை வீட்டுக்கு கூப்பிட்டு தாம் தூம்ன்னு உன் பொறந்த நாளை கொண்டாடினாரு. அன்னைக்கு ராத்திரி எனக்கு இவர்கிட்ட இருந்த உரிமையை நான் நிலைநாட்டிக்கிட்டேன். உங்க அன்பு இல்லாம என்னால வாழமுடியாதுங்கன்னு இவரை கட்டிப் புடிச்சிக்கிட்டேன். இவரு பெரிய விஸ்வாமித்திரன் மாதிரி ஒதுங்கி ஒதுங்கிப்போனாரு." ராணி தன் கணவனைப்பாத்து விஷமத்தனமாக சிரித்தாள்.

"அப்புறம் என்னம்மா ஆச்சு?" சம்பத் வெட்கத்துடன் தன் தந்தையைப்பார்த்தான்.

"அப்பனை மாதிரிதானே புள்ளே நீயும் இருப்பே... வெக்கம் கெட்டவனே. அப்புறம் என்னாங்கறியேடா? இதுக்கு மேல சொல்றதுக்கு இன்னும் என்னடா பாக்கி இருக்கு?"

"அம்மா சொல்லும்மா..."

"உங்கப்பன் பெரிசா பந்தா காட்டினாரு. விடுவனா நான்? அஞ்சு நிமிஷம் டயம் குடுக்கறேன்... வந்து கட்டில்லே என் கூட ஒழுங்கு முறையா படுக்கணும் இல்லே... உங்க புள்ளை கழுத்தை நெறிச்சி கொண்ணுட்டு நானும் செத்துடுவேன்னு கூச்சப்போட்டு சீன் காட்டினேன். பயந்துட்டாரு மனுஷன்."

"நான் ஒண்ணும் பயப்படலேடா... சும்மா கதை வுடறா உங்காத்தாக்காரி..."

"இல்லேன்னா என்னை நீங்க கொண்ணுடுங்கோன்னு நடு ராத்திரியில டிராமா போட்டேன்.. பக்கத்துவூட்டுகாரங்க எழுந்து வந்துட்டாங்க..." ராணி ஹோவென சிரித்தாள். நல்லசிவமும் சிரித்தார்.

"எட்டு தரம் என் வூட்டுக்கு ஆள் அனுப்பி என்னை கட்டிக்கிட்டவரு என்னைக் கொண்ணுடுவாரா? இல்லே என்னை விட்டுட்டுத்தான் ஓடிடுவாரா? அப்படி இவரை ஓடத்தான் நான் விட்டுடுவேனா? சும்மா பொழுது போகமா கதை சொல்றாரு. நானும் சரி சரின்னு தலையாட்டிக்கிட்டு இருக்கேன்."

"அம்மா நிஜமாவே எங்கப்பாவும் நீயும் சூப்பர் ஜோடிம்மா... அப்பா உன் மேல கோவப்பட்டதே கிடையாதாம்மா?"

"சுகன்யாவை நீ எச்சையிலைன்னு சொன்னியே; உன் மேல இருக்கற கண்மூடித்தனமான பாசத்துல, நானும் உன் கூட சேர்ந்து அர்த்தமில்லாம சிரிச்சனே; அன்னைக்குத்தான்டா உங்கப்பாவுக்கு என் மேல நிஜமான கோவம் வந்திச்சி..."

"ம்ம்ம்... ஆமாம்மா அன்னைக்கு நானும் அப்பாவைப் பாத்து நிஜமாவே பயந்துட்டேன்."

"உன் கல்யாணத்துக்கு முன்னாடீ நீயும்தானே உன் காதலனை கட்டிகிட்டு கொஞ்சியிருக்கே; என்னைக்குமே உன்னை நான் எச்சையிலைன்னு சொன்னதில்லையேடீ? அப்படியிருக்கும் போது இன்னொரு பொண்ணைப்பாத்து அசிங்கமா நீ சிரிக்கலாமா; அது ஞாயமாடீன்னு என் மேலக் கோவப்பட்டார்... வீட்டைவிட்டு போறன்னு கிளம்பினாரு... நான் எப்படி அவரை நிறுத்தினேன்னு மட்டும் என்னைக் கேட்டுடாதே?" ராணி மீண்டும் உரத்த குரலில், தன் கணவரைப்பார்த்து நமுட்டுத்தனமாக சிரித்தாள்.

"புரியுதும்மா... எல்லாம் எனக்கு புரியுதும்மா"

"சம்பத்து... என் ராஜா... உனக்கு எல்லாம் புரிஞ்சா, சுகன்யாவை காதலிக்கறேன்னு சொல்றதையெல்லாம் விட்டுட்டு, அவளை சுத்தமா மறந்துட்டு, நாங்க சொல்ற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்... சரியா?" ராணி தன் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டாள்.

"அம்மா... என்னை ஒரு சினேகிதனா நெனைச்சு இவ்வளவு நேரம் உங்க அந்தரங்கத்தை சொன்னீங்க... அதே மாதிரி நானும் ரெண்டு நிமிஷம் உங்கக்கிட்ட பேசலாமா?" சம்பத் புன்னகையுடன் பேசினான்.

"சொல்லுடா கண்ணு..." தாய் பிள்ளையை ஆதரவாக பார்த்தாள்.

"அம்மா... தப்போ சரியோ ஒரு பொம்பளை உடம்பு ஒரு ஆம்பிளைக்கு தர்ற சுகத்தை, நான் என் கல்யாணத்துக்கு முன்னாடியே அனுபவிச்சிட்டேன். பொம்பளையோட உடல் அழகு என்னன்னு எனக்கு நல்லாத்தெரியும். ஒரு பொம்பளையோட மனசைப்பத்தி முழுசா தெரியலேன்னாலும் சுகன்யாவோட மனசை ஓரளவுக்கு நான் புரிஞ்சிகிட்டு இருக்கேம்மா."

"ம்ம்ம்.. நீ மொத்தமா உன் மனசுல இருக்கறதை சொல்லி முடிச்சுடுப்பா"

"சுகன்யா அழகா இருக்காம்மா. அவளுக்கு ஒடம்பு மட்டும் அழகு இல்லேம்மா. அவ மனசு அவ ஒடம்பை விட ரொம்ப அழகும்மா. அவ ஒடம்பு அழகைப்பாத்து நான் அவளை காதலிக்கல்லேம்மா. அழகான பொண்ணுங்க இந்த நாட்டுல நிறைய இருக்காங்க."

"ப்ச்ச்ச்ச்... நீ எந்தக்காரணத்துக்காக அவளை காதலிச்சாலும் உன் காதலை நான் சரின்னு சொல்லமாட்டேன். புத்தியிருக்கற எவனும் சரின்னு சொல்லவே மாட்டான். நீ பண்றது, பேசறது எதுவுமே சரியில்லேடா.." நல்லசிவம் தன் முகத்தை சுளித்துக்கொண்டார்.

"கொஞ்சம் பொறுமையாத்தான் அவன் சொல்றதை முழுசா கேளுங்களேன்.." ராணி கெஞ்சலாக அவர் முகத்தைப் பார்த்தாள்.

"நான் குழந்தையில்லேம்மா. நீங்க நினைக்கற மாதிரி ஒரு பைத்தியக்காரனும் இல்லேம்மா. ஒரு நல்லப்பொண்ணை, ஒரு அன்பான பொண்ணை, மென்மையான மனசு உள்ள ஒரு பொண்ணை, என்னை சினேகிதமா பாத்த ஒரு பொண்ணை, எங்கிட்ட எதையுமே எதிர்பாக்கமா, வெறும் நேசத்தோட என் கையைப்பிடிச்சி குலுக்கன ஒரு பொண்ணை, காதலிக்கற சாதாரண மனுஷம்மா."

"சுகன்யாவோட உண்மையான பர்சானாலிட்டியை புரிஞ்சிக்கிட்டதுக்கப்புறம்தான் அவளை நான் காதலிக்க ஆரம்பிச்சேம்மா. ஒரே நாள்லே அவ மேல எனக்கு காதல் எப்படி வந்திச்சின்னு மட்டும் என்னை கேட்டுடாதீங்க. இதுக்கு பதில் என்கிட்ட இல்லே."

"எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என் அப்பாதான் உங்களுக்கு புருஷனா வரணும்ன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க சொன்னீங்களா இல்லையா?"

"ஆமாம்டா..."

"என் மனசுலேயும் அதே மாதிரியான ஒரு உணர்வுதாம்மா பூரணமா நிரம்பியிருக்கு. ரொம்ப காலமா சுகன்யாவை எனக்குத் தெரியுங்கற ஒரு ஃபீலிங் எப்பவும் என் மனசுக்குள்ள இருந்துகிட்டேயிருக்கு. தற்காலிகமாக நாங்க ஒருத்தரைவிட்டு ஒருத்தர் பிரிஞ்சி இருக்கோம்ங்கற ஒரு உணர்ச்சி என் மனசுக்குள்ள இருக்கும்மா. இப்போதைக்கு அவ யாரை வேணா விரும்பலாம். அவளுக்கு யார்கூட வேணாலும் நிச்சயதார்த்தம் முடிஞ்சு போய் இருக்கலாம். அதைப்பத்தி எனக்கு கவலையில்லே. அவளுக்காக நான் பொறுமையா காத்திருப்பேம்மா.."

"இதோ பாருடா சம்பத்... முப்பத்தஞ்சு வருஷம் என் கூட உன் அம்மா வாழந்ததுக்கு அப்புறம் அவ மனசுல இருக்கறதை அவ சொன்னாடா... அதை நீ அப்படியே கட் பேஸ்ட் பண்ணிடாதேடா... இது உனக்கு நல்லது இல்லேடா..." நல்லசிவம் பேசியதை பொறுமையுடன் சம்பத் கேட்டுக்கொண்டான். அவருக்கு அவன் உடனடியாக எந்த பதிலும் சொல்லவில்லை.

"அம்மா.. நான் சுகன்யாவோட காதல் வாழ்க்கையில தேவையில்லாம ஒரு குழப்பத்தை ஒரு தரம் உண்டு பண்ணிட்டேன். அந்த என் அறிவுகெட்ட செய்கைக்காக அவகிட்ட நான் பர்சனலா மன்னிப்பு கேட்டுட்டேன்."

"ம்ம்ம்.."

"அந்த நேரத்துல என் மனசுக்குள்ள, சுகன்யா மேல இருந்த காதலை சொல்லாமலும் இருக்க முடியலேம்மா. என் அன்பையும், காதலையும், நம்ம ஊர் ரயில்வே ஸ்டேஷன்லதாம்மா அவகிட்ட சொன்னேன்."



"நல்லாருக்குடா நீ சொல்ற கதை; உன் அம்மாவும் ரயில்வே ஸ்டேஷன்லதான் காதலிக்க ஆரம்பிச்சா; இப்ப அவ புள்ளை நீயும் அதே எடத்துலேருந்துதான் காதலிக்க ஆரம்பிச்சேங்கறே... . என் பொண்டாட்டி அதிர்ஷடம் எங்க வாழ்க்கை நல்லபடியா முடிஞ்சுப்போச்சு. உன் தலையில என்னா எழுதியிருக்குன்னு எனக்கென்னத் தெரியும்?" நல்லசிவத்தின் பொறுமை காற்றில் பறந்து கொண்டிருந்தது. 

"என்னங்க நீங்களும் ஏன் அவன் கிட்ட சின்னப்புள்ளைத்தனமா கொக்கரிக்கறீங்க?"

"சும்மா இருடீ... இவன் காதல் எங்கப்போய் முடியப்போவுதோ? சுந்தரிக்கும், அவ புருஷனுக்கும் நம்ம மேல மதிப்பும், மரியாதையும் இருக்கவேதானே, நேரா நம்ம வீட்டுக்கு வந்து சுகன்யா கல்யாணத்துக்கு மொறையா மரியாதையோட தாம்பூலம் வெச்சாங்க?"

"சரி... இப்ப எதுக்காக நீங்க இப்படி குதிக்கறீங்க...?" ராணி தன் குரலை உயர்த்தினாள்.

"என்னாடீ நீ புரியாம பேசறே? இவன் சொல்ற கதையெல்லாம் சுகன்யாவோட அப்பனுக்கு தெரிஞ்சா என்னை கால் காசுக்கு மதிப்பானாடீ? என்னையும் உன்னையும் நிக்க வெச்சு செருப்பால அடிப்பான். இவன் பண்ண வேலைக்கு என்னடீ அர்த்தம்? கொஞ்சமாவது இவனுக்கு புத்தி இருக்க வேணாம்? இவனும் இவன் காதலும்.. எக்கேடோ கெட்டு குட்டிச்சுவராப் போங்க..." நல்லசிவம் வெறுப்புடன் பேசிகொண்டே அந்த இடத்தை விட்டு எழுந்தார்.

"சுகன்யா என்னடா சொன்னா..?"

"அத்தான்... ஒரு ஆறு மாசம் முன்னாடி உங்க அன்பை எங்கிட்ட சொல்லியிருந்தா... உங்க காதலை நான் ஏத்துக்கிட்டு இருப்பேன்... இப்ப நேரம் கடந்து போச்சுன்னா..."

"ம்ம்ம்.. சுகன்யா ஞாயமாத்தான் பேசியிருக்காடா ..." ராணிக்கு அவன் சொன்னதைக்கேட்டதும் சந்தோஷமாக இருந்தது.

"எனக்கு அண்ணன் தம்பி இல்லே; எனக்கு ஒரு கஷ்டம்ன்னா நீங்கள்லாம்தான் எனக்கு கை கொடுக்கணும்; உங்களை நான் என்னோட உறவா மட்டும் நினைக்கலே; என்னோட நல்லா நண்பனாவும் டீரீட் பண்றேன். இந்த நிமிஷத்துலேருந்து நாம ரெண்டு பேரும் உண்மையான ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம்ன்னு சொன்னா..."

"புத்திசாலி பொண்ணு... சரியாத்தான் சொல்லியிருக்கா; இதுக்கு மேல வேற என்னச்சொல்லுவா? இவன் கிட்ட ஐ லவ் யூன்னா சொல்லுவா..." நல்லசிவத்தின் மனதில் சுகன்யா மேலிருந்த மதிப்பு மேலும் கூடியது.

"அம்மா... என் காதலை அவகிட்ட சொன்னதுக்கு அப்புறமா, இன்னும் ஒரு தரம் கூட பேசலைம்மா... அவளும் எங்கிட்ட பேசலை. என் காதலை என் மனசுக்குள்ளத்தான் வெச்சிக்கிட்டு இருக்கேன்... நான் எங்கேயோ இருக்கேன்... அவ எங்கேயோ இருக்கா? என் மனசுக்குள்ள இருக்கற காதலாலே யாருக்கு என்னப்பிரச்சனைம்மா?"

"சத்தியமா சொல்றேம்மா.. சுகன்யாவோட கல்யாண வாழ்க்கையில நான் எந்த பிரச்சனையையும் எப்பவுமே உண்டு பண்ணமாட்டேன்.. என் மனசுல இருக்கற காதலைப்பத்தி யார்கிட்டவும் எப்பவும் பேசமாட்டேன்... நீங்க சொல்ற மாதிரி அவளை சட்டுன்னு என்னால மறந்துட முடியாதும்மா. கொஞ்ச நாளைக்கு என்னை என் போக்குல விட்டுங்கம்மா"

"சரிப்பா... எங்க மனசுல இருக்கற ஆசையையும் நீ புரிஞ்சுக்கோ... எங்க குழந்தையும் மத்தவங்களை மாதிரி சந்தோஷமா வாழணும்ன்னு நாங்க விரும்பறது தப்பா?. உன் குழந்தையை நாங்க தூக்கி கொஞ்சனும்ன்னு நினைக்கறது தப்பா? நம்ம வம்சம் வளரணும்டா.." ராணி தன் மனதில் இருப்பதை பொறுமையாக சொன்னாள்.

"ப்ச்ச்ச்.. சாத்தான் கிட்ட நீ வேதம் ஓதறடீ... எழுந்திருடி அடுத்த வண்டியைப் பிடிச்சு ஊருக்கு போய் சேருவோம்.."

"அப்பா... தயவு செய்து நீங்க சும்மா "ப்ச்ச்ச் ப்ச்ச்ச்சுன்னாதீங்க... நீங்க உங்க வாழ்க்கையில ஒரு விஷயத்துல பிடிவாதமா இருந்தீங்கன்னு இப்பத்தான் என் அம்மா சொன்னாங்க; அவங்களும் ஒரு நேரத்துல ஒரு விஷயத்துல உங்கக்கிட்ட பிடிவாதமா இருந்து இருக்காங்க... நான் உங்க பிள்ளை... என்னை சும்மா வெறுப்பேத்தாதீங்க... அவ்வளவுதான் நான் சொல்லுவேன்." அதுவரை பொறுமையாக இருந்த சம்பத் விருட்டென எழுந்து தன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். 



சுகன்யா... 89

முதல் நாளிரவு வெகுநேரம் தூக்கம் பிடிக்காமல், குஷ்வந்த் சிங்கின் 'தி போர்ட்ரெய்ட் ஆஃப் எ லேடி' யைப் படித்துக்கொண்டிருந்த சம்பத், பின்னிரவு மூன்று மணியளவில்தான் தூங்க ஆரம்பித்தான்.

ஜன்னல் திரையையும் மீறி அறைக்குள் சூரியவெளிச்சம், மெலிதாக வந்து கொண்டிருந்தது. பொழுது விடிந்து மணி பத்தை நெருங்கிக்கொண்டிருந்த போதிலும் சோம்பேறித்தனமும் , தூக்க கலக்கமும், அவனை விட்டு முற்றிலுமாக நீங்காததால், அரைத்தூக்கத்திலேயே படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான் அவன்.

இளம் வெயில் அவன் உடலுக்கு இதமாக இருந்ததென்றாலும் போர்வையை தன் காலிலிருந்து கழுத்துவரை இழுத்து போர்த்திக்கொண்டான். இன்னைக்கு சண்டேதானே? சீக்கிரமா எழுந்து மட்டும் என்னத்தை வெட்டி முறிக்கப்போறேன்?


அரைமணி நேரத்துக்குப்பின் படுக்கையிலிருந்தவாறே கைகளை தலைக்கு மேல் உயர்த்தி சோம்பல் முறித்தான். நீளமாக ஒரு முறை கொட்டாவி விட்டான். வயிறு கபகபவென அவனுக்குப் பசித்தது. எது தப்பினாலும் தப்பிடுது. ஆனா நேரம் தவறாம, அலாரம் வெச்ச மாதிரி, பசி மட்டும் எப்படி கரெக்டா எனக்கு வருது? அவனுக்கு இந்த விஷயம் வியப்பைக் கொடுத்தது.

சம்பத்து... ஒருத்தன் ஆரோக்கியமா இருக்கறான்னா, அதுக்கு அறிகுறியே அவனுக்கு நேரத்துக்கு வர்ற பசிதாண்டா; எப்போதும் வெள்ளையாகச் சிரிக்கும் தந்தை நல்லசிவத்தின் முகம் அவன் கண்ணுக்குள் ஒரு நொடி வந்து போனது. அப்பாவோட சிரிப்பைப்பாத்து ஒரு மாசமாச்சு. மனதுக்குள் பாசம் எட்டிப்பார்த்தது.

உன்னைப் பாத்து ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்குதுடா. நீ என் கண்ணுலேயே இருக்கடா . வாராவாரம் எதாவது வேலையா சென்னைக்கு வர்றே. மாசத்துல ஒரு தரம், அப்படியே ஒரு நடை எங்களை எட்டிப்பாத்துட்டு போவக்கூடாதா? ரெண்டு நாளைக்கு முன் அம்மா செல்லில் புலம்பியதும் அவன் நினைவுக்கு வந்தது. அப்பா தன்னோட மனசுல இருக்கறதை சட்டுன்னு வெளியில சொல்ல மாட்டார். அம்மா என் மேல தன் உயிரையே வெச்சிக்கிட்டு இருக்காங்க; அதை தெனமும் நாலு தரம் சொல்லியும் காட்டுவாங்க. அவன் முகத்தில் ஒரு புன்சிரிப்பு எழுந்தது.

வீட்டுல இருந்தா, இந்த நேரத்துக்கு அம்மா தளர தளர பசும் நெய்யை உருக்கி ஊத்தி, வெண்பொங்கல், வடை, தேங்காய் சட்னின்னு, சுட சுட அமக்களமான ஒரு டிஃபனைப் பண்ணி என் கையில குடுத்திருப்பாங்க. பல வருடங்களாக நல்லசிவத்தின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை காலைபொழுது பொங்கல் வடையுடன்தான் விடியும். அவன் நாக்கின் சுவை மொட்டுகள் சட்டென விழித்துக்கொண்டன. பொங்கலின் சுவை நாக்கில் எச்சிலை ஊறவிட சம்பத் போர்வையை உதறிவிட்டு விருட்டென எழுந்து கட்டிலில் உட்கார்ந்தான். 


நேத்து ஈவினிங் பார்ட்டிக்கு போன ரமேஷ் திரும்பி வந்தானா? நிச்சயமாத் தெரியும். விடிகாலம் மூணு மணி வரைக்கும் அவன் வரலே. ஓசியில கிடைச்சா மூச்சு முட்டற வரைக்கும் குடிப்பான். மொடாக்குடியன்; நேத்தும் கழுத்து வரைக்கும் குடிச்சுட்டு வாந்தி எடுத்து இருப்பான்; அங்கேயே கட்டையை போட்டுட்டு இருப்பான்.

முன் தினம் மாலை ஏழுமணிக்கு அவன் ரூம் மேட் ரமேஷ், மழமழவென ஷேவ் பண்ணிய முகத்துடன், இடுப்பில் ஈர டவலுடன், உடலில் சோப்பு வாசனையுடன், சம்பத்தின் எதிரில் பரபரப்பாக வந்து நின்றான்.

"மாப்பு... நீயூஸ் தெரியும்லே? கடேசீல நம்ம சொட்டை வெங்குடுக்கும் கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிடிச்சிடா. அதுக்காக இன்னைக்கு பார்ட்டி குடுக்கறான். நேத்து உன்னை நெறைய தடவை செல்லுல டிரை பண்ணானாம். உன் லைன் கிடைக்கலயாம். உன்னையும் கண்டிப்பா அழைச்சிட்டு வரச்சொல்லியிருக்கான். கிளம்புடா?" தெத்துப்பல் தெரிய சிரித்தான்.

"ப்ச்ச்ச்... அவன் சொட்டைன்னா, உன்னை என்னடா சொல்றது?"

"மச்சான்... முப்பது வயசுலே, என் தலையில இன்னும் நாலு முடியாவது பாக்கி இருக்குதுடா? அவன் சீப்பு வாங்கியே நாலு வருஷம் ஆச்சாம்... இந்தக்கதை தெரியுமா உனக்கு? ரமேஷ் தன் ஈரத்தலைமுடியை இருகைகளாலும் கோதி விட்டுக்கொண்டான்.

"வேற யாரையெல்லாம் கூப்ட்டுருக்கான்?"

"நம்ம கேங் மட்டும்தான்... வீ ஆர் ஆல் ஸ்பெஷல் இன்வைட்டீஸ்.."

"அப்றம்.. பார்ட்டில பிகருங்க உண்டா..." சம்பத் கூகுளில் எதையோ மும்முரமாகத் தேடிக்கொண்டிருந்தான்.

"நம்ம அக்கவுண்ட்ஸ்லேருந்து அந்த ஒட்டடைக்குச்சி வசுதா வர்றாளாம்... மணியோசை முன்னாடி வந்தா... யானை பின்னாடி வந்துதானே ஆவணும்? வசுவோட ஃப்ரெண்ட் குண்டச்சி கல்பனாவும் வரமாட்டாளா? கூடவே அவளுங்க கோஷ்ட்டியும் நிச்சயமா வந்துடும்.. அந்த கல்பனாவோட சைசு என்னான்னு டேரக்டா அவகிட்டவே கேட்டுடாலாம்ன்னு இருக்கேன்... நீ என்னா சொல்றே?"

"டேய் இவளுகளையெல்லாம் பிகருன்னு சொல்றேயே அதுப்புதானே உனக்கு?" சம்பத் நக்கலாக சிரித்தான்.

"மச்சி... நம்பளைப் பொறுத்த வரைக்கும் மேல ரெண்டு சாத்துக்கொடியும், கீழே உப்பலா ஒரு ஓட்டை வடையும் இருந்தா அவ பிகருதாம்மா.." ரமேஷ் வாய் முழுவதும் பல்லானான்.

"என்னை ஏண்டா உன் கூட சேத்துக்கறே? டொச்சுங்க பின்னாடி நான் எப்பவாவது ஜொள்ளுவுட்டு அலைஞ்சதை நீ பாத்திருக்கியாடா நாயே?" சம்பத் எரிந்து விழுந்தான்.

"மாப்பு... சும்மா அப்பாடாக்கர் மாதிரி பேசாதே; உன்னை நோட் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன்; பார்ட்டின்னா நாக்கைத் தொங்கப்போட்டுக்கிட்டு நாய் மாதிரி தலை தெறிக்க என் கூட ஓடியாந்தவன்தானே நீ? மேட்டரு இன்னான்னு தெரியலே; ஒரே குன்சா இருக்குது; கொஞ்சநாளா ஏண்டா தனியா உன் வண்டியை ஓரங்கட்டி பார்க் பண்றே?"

"வெறுத்து போச்சுடா..."

"காதுல பூ சுத்தாதே நயினா... இந்த வயசுல பொம்பளை வெறுத்துப் போச்சுன்னா... டவுட்டே இல்லாம ஒம்போதுன்னு சீல் குத்திடுவானுங்க... உஷாரா இரு..."

"அமுக்குடா... பார்ட்டிக்கு வர்ற அட்டு பிகருங்க எனக்கு அலுத்துப்போச்சுன்னு சொன்னேன்."

"என்னா மச்சான்... ஒரே சுஸ்தா இருக்கே? எவகிட்டவாவது கவுந்திட்டியா?"

"யெஸ்... அயாம் இன் லவ்..." சம்பத் முகத்தில் வெட்கத்துடன் சிரித்தான்.

"யார்ரா மாப்பு... இந்த ஊர்லதான் இருக்காளா?"

"பொண்ணுன்னா இவ பொண்ணுடா... பிகருன்னா இவ பிகரு; இக்கடச் சூடு..." சம்பத் முகத்தில் பெருமிதம் பொங்கிக்கொண்டிருந்தது.. லேப்டாப்பில் சுகன்யா வெண்மையாக சிரித்துக்கொண்டிருந்தாள்.

"மச்சான்... நெஜமாவே சூப்பர் டூப்பர் பிகருடா..." ரமேஷ் வாயைப் பிளந்தான்.

"வாயைப் பொத்துடா... கொசு... கிசு பூந்துடப்போவுது... இவ என் மாமா பொண்ணு..." ரமேஷின் வழுக்கையில் கடம் வாசித்தான் சம்பத்.

"மனசுல இருக்கறதை சொல்லிட்டியா?"

"ம்ம்ம்..."

"அவளும் ஓ.கே. ன்னுட்டாளாக்கும்?" பொறாமையில் அவன் கண்கள் விரிந்து சுருங்கியது.

"அவட் ரைட்டா மாட்டேன்னுட்டா..."

"அப்புறம் என்னா மசுருக்குடா... 'இக்கடச் சூடு'? ரொம்பத்தான் துள்றே?" ரமேஷ்க்கு இப்போது நிஜமாகவே எரிச்சலும், சந்தோஷமும் ஒன்றாகக்கிளம்பியது.

"என் ஆளு... இன்னொருத்தனை டீப்பா லவ் பண்றாடா; அவங்க ரெண்டு பேருக்கும் எங்கேஜ்மென்ட்டும் முடிஞ்சிடிச்சி" சம்பத் நிதானமாக பேசினான்.

"மாப்பு... உனக்கு மண்டையில ரெண்டு ஸ்குரூ லூசாயிடிச்சின்னு நினைக்கறேன்... ஜல்தியா டைட் பண்ணிக்க... இல்லேன்னா"

"இல்லேன்னா?"

"இதுக்கு மேல இங்க நின்னா... என் தலையில இருக்கற நாலு மசுருல ரெண்டு கொட்டினாலும் கொட்டிப்போயிடும்..." ரமேஷ் தன் தலையைச் சொறிந்து கொண்டு அவசரமாக அறையை விட்டு வெளியில் ஓடினான்.

ஹோவென ஓங்காரமான குரலில் நகைத்த சம்பத்தின் முகத்தில் சிரிப்புடன் இலேசாக விரக்தியும் படர்ந்தது. என் மனசுக்கு பிடிச்ச பொண்ணை நான் லவ் பண்ணக்கூடாதா? இவன் எதுக்கு இவ்வளவு காண்டாவறன்? என்னை பைத்தியம்ன்னு சொல்லாம சொல்லிட்டுப் போறான்? என்னோட உண்மையான காதலைப்பத்தி இந்த மயிரானுக்கு இன்னா தெரியும்? 


"டிங்க்...டிங்க்க்...டிங்க்..." வாசலில் காலிங் பெல் ஒலித்தது.

'யாராக இருக்கும்? ரமேஷ்கிட்டத்தான் வீட்டோட டூப்ளிகேட் சாவி இருக்கே? என்ன மசுருக்கு மணியடிக்கறான்..? தொறந்துகிட்டு வரவேண்டியதுதானே? இடுப்பில் லுங்கியை இறுக்கிக்கொண்டு வாசலுக்கு விரைந்தான் சம்பத். கதவைத் திறந்தவன் ஆச்சரியமானன். ராணியும் நல்லசிவமும் நின்று கொண்டிருந்தார்கள்.

"என்னம்மா? சொல்லாமா கொள்ளாமா வந்து நிக்கறீங்க?" பெற்றவர்களைக் கண்ட மகிழ்ச்சியில் மனம் கங்கை வெள்ளமாக பொங்கியது.

“ஏன்டா உன்னைப் பாக்கணும்ன்னா அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்கிட்டுத்தான் வரணுமா?” பிள்ளையின் கன்னத்தை ஆசையுடன் வருடினாள் ராணி.



“அப்பா... எப்டி இருக்கீங்கப்பா... நீங்க வர்றீங்கன்னு தெரிஞ்சா ஸ்டேஷனுக்கு வந்திருப்பேன்ல்லா...”

“நேத்து சென்னையில ஒரு கல்யாணம்ன்னு வந்திருந்தோம்... உங்காத்தாக்காரி உன்னை பாத்தாதான் ஆச்சுன்னு ஒத்தைக்கால்லே நின்னா... தாம்பூலம் கூட வாங்கிக்கலே... கிளம்பி வந்துட்டோம்.” நல்லசிவம் பிள்ளையின் முகத்தை பாசத்துடன் பார்த்தார்.

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடீ உங்க ரெண்டு பேரையும் நினைச்சுக்கிட்டேம்மா" பிள்ளை தாயின் இடுப்பைக்கட்டிக்கொண்டு கொஞ்சியது.

"சும்மா ஊத்தாதேடா நீ? நீ மொளை விட்டதுலேருந்து உன்னை நான் பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்.." தாய் மகனின் கன்னத்தை வருடி ஆசையுடன் முத்தமிட்டாள்.

"நிஜம்மா சொல்றேம்மா... இன்னிக்கு ஞாயித்துக்கிழமையாச்சா? நீ பண்ற பொங்கல், வடை ஞாபகம் வந்திடிச்சிம்மா.."

"உன் புள்ளைக்கு நம்ம நினைவு வரலேடி.. நீ பொங்கற பொங்கல் ஞாபகம் வந்திச்சாம்... சந்தோஷம்தானே உனக்கு...?" நல்லசிவம் பேண்டிலிருந்து வேஷ்டிக்கு மாறிக்கொண்டிருந்தார். உள்ளத்தில் இருக்கும் நிறைவு முகத்தில் வருவதை அவரால் மறைத்துக்கொள்ள முடியவில்லை.

"பொங்கல்தானேடா வேணும்... இப்பவே நான் பண்ணிக்குடுக்கறேன்.."

"நீங்க குளிங்கம்மா... குளிச்சுட்டு ரெஸ்ட்டா உக்காருங்க; பத்தே நிமிஷத்துல நான் டிஃபன் வாங்கிட்டு வந்திடறேன்.." சம்பத் வேகமாக வெளியில் ஓடினான். 

"எங்கடா உன் ரூம் மேட் ரமேஷைக்காணோம்?" நல்லசிவம் தன் தலையின்கீழ் இரண்டு கைகளையும் செருகிக்கொண்டு, ஹாலில் வெறும் தரையில் படுத்திருந்தார்.

"நேத்து ராத்திரி எதோ பார்ட்டின்னு போனான்.. இன்னும் காணோம்..." ஒரு தலையணையை அவரிடம் நீட்டினான் சம்பத்.

"ம்ம்ம்... நீ போகலையாடா?" பார்ட்டின்னா எதையும் யோசிக்காமா எவ்வள்வு தூரம் வேணாலும் போறவனாசசே இவன்? மனதில் ஆச்சரியத்துடன், தன் கண்களை சுருக்கிக்கொண்டு மெல்லியக்குரலில் தன் மகனை உற்று நோக்கினார்.

"இல்லேப்பா. ஒரு மாசமாச்சு. பார்ட்டிகெல்லாம் போறதை நான் நிறுத்திட்டேன்."

"கேட்டீங்களா அவன் சொல்றதை? ரொம்ப சந்தோஷமா இருக்குடா எனக்கு.” தன் கணவரை பெருமிதத்துடன் பார்த்த ராணியின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்திருந்தது.

"நீ உன் புள்ளையை மெச்சிக்கறது ஒரு பக்கம் இருக்கட்டும்டீ; வீட்டுலேருந்து கொண்டாந்த அந்த பொண்ணு போட்டோவை இவனுக்கு காமிச்சியா?"

கடந்த ஐந்து வருடங்களில் தன் ஆசை மகன் எத்தனை முறை பார்ட்டிக்கு போவதை நிறுத்தியிருக்கிறான்? காலையில் தண்ணியடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று சொல்பவன், அதே நாளில், அதே ராத்திரியில் மீண்டும் எத்தனை முறை திரும்பவும் தன் கையில் கிளாசை எடுத்திருக்கிறான் என்பது நல்லசிவத்துக்கு நன்றாகத் தெரியும்.

"உங்க பேக்லதான் வெச்சிருந்தீங்க. எழுந்து எடுங்களேன். வந்த எடத்துல நீளமா கையை காலை விரிச்சிக்கிட்டு, அனந்த சயனத்துல போஸ் குடுக்கறீங்க? பெத்தப்புள்ளைக்கிட்ட அன்பா, பாசமா ஒரு வார்த்தை பேசுவோம்ங்கற எண்ணம் உங்களுக்கு கொஞ்சமாவது இருக்கா?"

"சும்மாரும்மா... நீ எதுக்குமா எப்பப்பாத்தாலும் அப்பாவை வெட்டியா வெரட்டிக்கிட்டு இருக்கே?"

"கேளுடா... நல்லாக் கேளுடா நாலு வார்த்தை நல்லா உறைக்கற மாதிரி கேளுடா. உங்கம்மாளுக்கு நான் ரொம்ப எடம் குடுத்துட்டேன். ஒரு நாள் நிம்மதியா இருக்கவுடமாட்டேங்கறா? தொணப்பு தாங்கலே. எங்கேயாவது ஒழியணும் போல இருக்குதுடா...".

"சும்மாயிருங்கப்பா நீங்களும்.. நச்சு நச்சுன்னு கொறை சொல்லிக்கிட்டே இருக்கீங்க..."

"இதோ பார்டா... ஒண்ணு பண்ணு; இவளை உன் கூடவே கொஞ்ச நாளைக்கு வெச்சுக்கோ. அப்பத்தான் தெரியும் உனக்கு உன் அம்மாவோட பெருமை. நான் கொஞ்ச நாளைக்கு தனியா இருக்கணும்ன்னு நினைக்கறேன்." பேசிக்கொண்டே தன் தோள்பையிலிருந்து, போஸ்ட்கார்ட் சைசில் ஒரு புகைப்படத்தை எடுத்து சம்பத்திடம் நீட்டினார் நல்லசிவம்.

"ஒரு கல்யாணத்தைப் பண்ணி வெச்சுட்டு...உங்க கடமை முடிஞ்சதும் எங்கே வேணாப் போங்க... உங்களை யாரும் இங்க புடிச்சி கம்பத்துல கட்டி வெச்சில்லே.."

"நீ நில்லுன்னாலும் இன்னொரு தரம் நான் நிக்கப் போறது இல்லேடீ? நான் போனதுக்கு அப்புறம்தான் புரியும்..." நல்லசிவம் முனகிக்கொண்டார். சம்பத் தன் கையில் இருந்த புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். போட்டோவில் குறையே இல்லாமல்தான் இருந்தாள் அந்தப்பெண்.

"சம்பத்து இவளைப் புடிச்சிருக்காடா:? நமக்கு தூரத்து சொந்தம். நீர் நிலம்ன்னு ஒரு குறையும் இல்லே. வசதியா வளர்ந்த பொண்ணு. நாம மட்டும் என்னக்குறை வெக்கப்போறோம்? அண்ணன் அமெரிக்காவுல இருக்கானாம். இவளும் படிச்சிட்டு சென்னையில வேலை பாக்கறாளாம்." ராணியின் குரலில் ஆவலும் ஆர்வமுமாகப் பேசினாள்.

"இப்ப எனக்கு கல்யாணம் வேண்டாம்மா..." சம்பத் தன் தாயின் முகத்தைப் பார்க்காமல் சொன்னான். கையிலிருந்த புகைப்படத்தை தந்தையின் பக்கம் நகர்த்தினான்.

"சொல்றதைக் கேளுப்பா. சுந்தரி உன் பயோடாட்டவை அவ புருஷனுக்கு அனுப்ப சொன்னா. குமாரசுவாமி மேனேஜரா இருக்கற கம்பெனில நாலு எடம் காலியா இருக்காம். நீ வாங்கற சம்பளத்தை கரெக்டா மென்ஷன் பண்ணுன்னு சொன்னா. ஒரு போஸ்ட்டை உனக்கு வாங்கிடலாம்ன்னு சொல்றா."

"யார் தயவுலேயும் நான் இல்லே? சென்னைக்கு நான் வர்றதா இல்லே?"

"இப்படி மொரட்டுத்தனமா பேசினா எப்டீடா கண்ணு?"

"பின்னே எப்படி பேசணுங்கறே?" சலித்துக்கொண்டான் அவன்.

"எல்லாம் கூடி வர்ற மாதிரி இருக்கு. பெண்ணுக்குன்னு அவ பேருலேயே வீடு வாங்கி வெச்சிருக்காங்க. இப்போதைக்கு வாடகைக்கு விட்டு இருக்காங்களாம்."

"என்னை எவ்வளவுக்கு வெலை பேசியிருக்கே நீ?"

"டேய்... பெரிய அறிவாளி மாதிரி நீ பேசாதே.. கேட்டக்கேள்விக்கு நேரா பதில் சொல்லு... பொண்ணை புடிச்சிருக்கா இல்லையா?"

"நேரா சொன்னாலும் அதான்... கோணலாச்சொன்னாலும் அதான். எனக்கு இப்ப கல்யாணம் வேணாம்."

"ஏன்டீ... நீ மல்லுக்கு நிக்கறே? அவன் பொண்ணை பிடிக்கல்லேன்னா சொல்றான்.. கல்யாணம் இப்ப வேணாங்கறான்?" ஓய்வு பெற்ற சட்ட அறிஞர் நல்லசிவம் அவர்கள் பேச்சில் நுழைந்தார்.

"சரிடா இவளைப் பிடிக்கலைன்னா விடு. உனக்கு எவளையாவது பிடிச்சிருந்தா சொல்லு. நம்ம ஜாதியா இல்லேன்னாலும் பரவாயில்லே. அவளைப் பண்ணி வெச்சிடறோம்..." ராணியின் குரல் கரகரப்புடன் வந்தது.

"ஆமாம்டா... இப்பத்தான் நம்ம குடும்பத்துலேயே ஜாதி, மொறை, ஊரு, உறவுன்னு பாக்காம வெளியே போக ஆரம்பிச்சாச்சே?" நல்லசிவம் சம்பத்தை நெருங்கி உட்கார்ந்து கொண்டார்.

"யாரை சொல்றீங்கப்பா?"

"வேற யாரைப்பத்தி சொல்றாரு. உன் மொறைப்பொண்ணு சுகன்யாவை, ஊர் பேர் தெரியாத ஒரு ஓட்டாண்டிக்கு தாரை வாத்து குடுங்கறாங்களே... அந்தக்கூத்தைப் பத்தித்தான் சொல்றாரு."

"ப்ச்ச்ச்... முடிஞ்ச கதைக்கு மோளமும் தாளமும் எதுக்கு?" ஒரேயடியாக அலுத்துக்கொண்டான் சம்பத்.

"நீ சொல்றே முடிஞ்சிப்போச்சுன்னு. போன வாரம் உங்கம்மா அந்த சுந்தரியை உண்டு இல்லேன்னு ஒரு சண்டை வலிச்சிட்டு வந்திருக்காடா; அந்தக்கதை தெரியுமடா உனக்கு?"

"ஏம்மா இப்படி பண்ணே? சுகன்யாவுக்கு தெரிஞ்சா அவ நம்பளைப்பத்தி என்ன நினைப்பா?"

"பொத்திக்கிட்டு கிடடா? அவ கிடக்கறா நேத்து பொறந்தவ... என் ஒறவு அறுந்து போச்சேன்னு நான் கவலைப்படறேன்... நீ என்னடான்னா சுகன்யா உன்னைப்பத்தி என்ன நினைப்பான்னு கவலைப்படறே? என்னைக்காவது, அப்பனுக்கோ இல்லே புள்ளைக்கோ என் மேல ஒரு உண்மையான அக்கறை இருந்தாத்தானே? என் மனசுல இருக்கறது உங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சமாவது புரிஞ்சாத்தானே?"

தன் கைகளை ஆட்டிப்பேசியவளின் தலை முடி அவிழந்து அவள் தோளிலும் மார்பிலும் விழுந்தது. ராணி வேக வேகமாக கைகளை உயர்த்தி தன் கூந்தலை அழுத்தி முடிந்துகொண்டாள். புடவை முந்தானை விலகியது. இடுப்பின் வெண்மையும், குழைவான தொப்புள் குழியும், அடிவயிறும் மின்னலாகப் பளிச்சிட்டன. ராணியின் எதிரில் உட்கார்ந்திருந்த சம்பத்தால், தன் தாயின் பளிச்சிட்ட இடுப்பை பார்க்க முடியாமல் சட்டெனத் தன் கண்களை இறுக்கி மூடிக்கொண்டான்

அம்மாவுக்கு அம்பத்தஞ்சு வயசுன்னு சொன்னா நம்பமுடியுமா? இந்த வயசுலேயும் எவ்வளவு இளமையா, அழகா இருக்காங்க? அப்பாவுக்கு என்ன புத்தி கெட்டுப்போச்சா? அப்பாவுக்கு அறுபது வயசு ஆயிடிச்சே? இவங்களுக்குள்ள இன்னும் தாம்பத்ய உறவு நீடிச்சுக்கிட்டு இருக்குமா? அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடுவுல உடலுறவுல எதாவது பிரச்சனை இருக்குமா? எப்பவும் இவங்களை விட்டுட்டு ஓடத்துடிக்கறாரே மனுஷன்?

அப்பாவுக்கு என்னக்கேடு? இன்னும் வாட்ட சாட்டமாத்தனே இருக்கார்? தலை மொத்தமா நரைச்சுப்போச்சு... முடி நரைச்சா பொம்பளை ஓடம்பு மேல இருக்கற ஆசை விட்டுப்போயிடுமா என்ன? அறுவது வயசு ஆனா ஒரு ஆம்பளை தன் குஞ்சை அறுத்து போட்டுடணுமா என்ன? மனதுக்குள் திடீரென இந்தக்கேள்வி எழுந்ததும், கூடவே அவன் முகத்தில் ஒரு நமட்டு சிரிப்பும் எழுந்தது.

டேய்... சம்பத்.. உனக்கு ஏண்டா இந்த வம்பெல்லாம்? எங்க கதையில நீ உள்ளே வராதேன்னு உன் அம்மாதான் உன் மூஞ்சியிலே அடிச்சாளே?

நான் சந்தோஷமா இருக்கணும்ன்னு அவங்க நினைக்கறப்ப, என்னைப் பெத்தவங்க சந்தோஷம இருக்கணும்ன்னு நான் நினைக்கக்கூடாதா? அடுத்தக் கேள்வியும் அவன் மனதில் எழுந்தது.

தாய் அறியாத சூல் எங்கேயாவது இருக்கிறாதா? தன் மகனின் பார்வை போன இடத்தையும், சட்டென அவன் தன் விழிகளை திருப்பிக்கொண்டதையும், தன் கேள்விக்கு பதிலளிக்காமல் எதையோ மனதில் குருட்டுத்தனமாக யோசித்துக் கொண்டிருப்பதையும், முடிவில் அவன் உதட்டில் மலர்ந்த புன்னகையையும் கண்ட ராணிக்கு எரிச்சல் வந்தது.

"டேய்... உங்கப்பாவுக்கும் எனக்கும் நடுவுல எந்தப்பிரச்சனையும் இல்லே.. ஒடம்புல இன்னும் தெம்பு நிறைய இருக்குது... இன்னைக்கும் நாங்க மனசார சந்தோஷமாத்தான் இருக்கோம். உன் மனசுல இருக்கறதை சொல்லுடான்னா... எங்களைப்பத்தி நீ ஏண்டா கவலைப்படறே?"

"அம்மா..." தன் தாய் எவ்வளவு புத்திசாலி... என் மனசுல ஓடறதை அப்படியே படம் படிச்சுட்டாளே? சம்பத் மிக அழகாக வெட்கப்பட்டான். அவன் முகம் சிவந்து போனது.

"சொல்லுடா கண்ணு... உன் மனசுக்குள்ள யாரையாவது நெனைச்சிக்கிட்டு இருக்கியா?"

"என் மனசுல இருக்கறவளும் நம்ம ஜாதிதான்... நீரு நெலம், ஊரு ஒறவு எல்லாம் அவளுக்கும் இருக்குது. ஆனா அவளை உன்னால உன் மருமவளா ஆக்கிக்கமுடியாதும்மா" சம்பத் தன் தலையை குனிந்து கொண்டான்.

"டேய்.. உன் அம்மாவைப் பத்தி உனக்குத் தெரியாதுடா? எந்த விஷயத்துலேயும் கடைசீ வரைக்கும் முட்டிப்பாக்கறவடா நான்."

"உன்னைப்பத்தி எனக்கு நல்லாத் தெரியும்..." மகன் சிரித்தான்.

"என்னடா தெரியும் உனக்கு என்னப்பத்தி?" சிடுசிடுத்தாள் தாய்.



"பின்னே... சுந்தரி மாமிகிட்ட சுகன்யாவை எனக்கு ஏன் கட்டிக்குடுக்கலேன்னு சண்டையும் போட்டுட்டு... அவங்க ஹஸ்பெண்ட் கம்பெனியிலேயே எனக்கு வேலையும் ஏற்பாடு பண்ணறயே? சம்பத் தன் தாயை ஆசையுடன் கட்டிபிடித்துக்கொண்டான்.

"இதுதாண்டா உறவு... அதை நீ நல்லாப் புரிஞ்சுக்கோ. பெத்தவளை நக்கலடிக்கறியா நீ? அவளுக்கு உறவு மொறை எதுவும் மறந்து போயிடல. நான் உரிமையா சண்டைப்போட்டதை சுந்தரி தப்பாவே எடுத்துக்கலே."

"அப்புறம்..."

"அக்கா.. என் பொண்ணு என் கையை மீறி போயிட்டா. எனக்கு புடிச்சவனை நான் கட்டிக்கிட்டேன்.. இப்ப எந்த மூஞ்சை வெச்சிக்கிட்டு அவ வழியிலே நான் குறுக்கே நிக்கறதுன்னு என் கையை பிடிச்சிக்கிட்டா.."

"சரிம்மா நான் சும்மா கலாய்ச்சேம்ம்மா... கோச்சிக்காதேம்மா?"

"நீ என்னை கொஞ்ச வேணாம்... முடிவா என்ன சொல்றே?"

"என்னைத்தப்பா நினைக்காதம்மா. நான்... நான் நம்ம சுகன்யாவைத்தான் லவ் பண்றேம்மா. கல்யாணம் பண்ணிக்கிட்டா அவளைத்தான் பண்ணிக்குவேன். இல்லேன்னா கடைசிவரைக்கும் இப்படியே இருந்துடறேம்மா."

சம்பத்தின் குரல் தழுதழுத்தது. விருட்டென நகர்ந்து
தன் தாயின் மடியில் தன் தலையை புதைத்துக்கொண்டான். அவன் உடல் இலேசாக குலுங்கியது.

வேதாளம் திரும்பவும் முருங்கை மரம் ஏறிடிச்சி... நல்லசிவம் தன் இரு கைகளையும் தலையில் வைத்துக்கொண்டார்.