Friday 3 April 2015

சுகன்யா... 92

அறைக்குள் நுழைந்த செல்வாவை தன் ஓரக்கண்ணால் கவனித்த சுனில் சுகன்யாவின் கையை தன் கரத்திலிருந்து எந்தவித பரபரப்புமில்லாமல் நிதானமாக விடுவித்தான். சுகன்யாவின் முகத்தைப்பார்த்தான். அவள் முகத்திலும் பதட்டேமேதும் இல்லை என்பதை உணர்ந்து மனதுக்குள் நிம்மதியானான்.

ஆனால் தன்னை நோக்கிய செல்வாவின் முகம் வினாடிக்கும் குறைவான நேரத்துக்கு சட்டென மாறியதையும் அவன் கவனிக்கத்தவறவில்லை. சட்டென தன்னைச் சுதாரித்துக்கொண்ட சுனில் தன் சீட்டிலிருந்து எழுந்து செல்வாவை விஷ் செய்தான்.

"குட்மார்னிங் சார்..."

"குட்மார்னிங் மிஸ்டர் சுனீல்... ஹவ் ஆர் யூ?"

செல்வா தன் மனதுக்குள் விருப்பமேயில்லாமல், சுனிலுக்குப் பதிலளித்தான். அறைக்குள் வராமல் வாயிலிலேயே சில வினாடிகள் நின்ற செல்வா, மேற்கொண்டு எதுவும் பேசமால் அங்கிருந்தே திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

"செல்வா... ஒன் செகண்ட்" சுகன்யா அவன் பின்னால் வேகமாக ஓடினாள்.



'சுகன்யா நீங்க மிஸ்டர் சுனிலோட பிஸியா இருக்கீங்கன்னு நினைக்கிறேன். நீங்க ஃபிரீ ஆனதும், கேன் யூ கால் மீ ப்ளீஸ்?" செல்வா அறைவாசலில் நின்றவாறே முகத்தில் ஒரு ஏளனப்புன்னகையுடன் பேசினான். அவன் பேசியதைக் கேட்ட சுனில் ஒரு நொடி தனக்குள் அதிர்ந்தபோதிலும், தன் அதிர்ச்சியை முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை.

"அயாம் நாட் பிஸி... நீ எதுக்கு வந்தேன்னு சொல்லாமலேயே திரும்பிப் போனா என்ன அர்த்தம்?" செல்வாவை நெருங்கிவிட்ட சுகன்யா மெல்லியக்குரலில் அவனிடம் பேச ஆரம்பித்தாள்.

"நான் என்ன சொல்லணும்ன்னு எதிர்பாக்கறே நீ?" செல்வாவின் குரலில் கேலியிருந்தது.

"நீ ஏதோ சொல்லவந்தேன்னு நான் நினைச்சேன்.."

"உன்னைப்பாக்க நான் உன் ரூமுக்கு வரக்கூடாதா? இல்லே வர்றதுக்கு முன்னாடீ உங்கிட்ட சொல்லிட்டுத்தான் வரணுமா?"

"என்ன ஆச்சு செல்வா உனக்கு? நீ ஏன் இப்டீல்ல்லாம் பேசறே?" சுகன்யாவின் குரலில் லேசான நடுக்கமிருந்தது.

"எனக்கு எதுவும் ஆகலே மேடம்... நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்..?"

"அப்ப நான் மாறிட்டேனா?"

சுகன்யாவின் குரல் தழுதழுக்க ஆரம்பிதது. அவள் கண்கள் இலேசாக கலங்கியது. இப்பல்லாம் எனக்கு ஏன் சட்டு சட்டுன்னு அழுகை வருது? சுகன்யா தன்னை கேட்டுக்கொண்டாள்.

"திஸ் யூ நோ பெட்டர் தேன் மீ..." சுகன்யாவை சீண்டிவிட்டோம் என்கிற திருப்தி அவன் கண்களில் நிலவியது.

"செல்வா... பிளீஸ்... என்னைக் கொல்லாதே?"

"உன்னை கொல்றதுக்கு நான் யாரு?"

"எனக்குத் தலை வலி உயிர் போகுது செல்வா. கேண்டீனுக்கு போகலாம் வா. எனக்கு காஃபி குடிச்சே ஆகணும். வில் யூ கம் வித் மீ?" சுகன்யா அவன் முகத்தை கூர்ந்து நோக்கினாள்.

"என்னோட நீ மட்டும்தானே வருவே?"

"பின்னே?"

"இல்லே ஒருவேளை உனக்கு ஒரு எடுபிடி கிடைச்சிருக்கானே; அவனும் நம்மகூட வருவானோன்னு நினைச்சேன்." செல்வாவின் முகத்தில் இப்போது ஒரு கூரூரப்புன்னகை நிலவுவதாக சுகன்யா நினைத்தாள்.

"செல்வா.. ப்ளீஸ்..." செல்வாவின் முழங்கையை இறுக்கமாகப் பிடித்த சுகன்யா அவனை இழுத்துக்கொண்டு கேண்டீனை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

*****

இங்க என்ன நடந்து போச்சுன்னு நினைச்சு, இப்ப இவன் சில்லியா தன் லவ்வர் கிட்ட பிஹேவ் பண்றான்? நாங்க என்ன ஒருத்தரை ஒருத்தர் கட்டிப்புடிச்சிக்கிட்டு முத்தமா கொடுத்துக்கிட்டு இருந்தோம்?

லவ் பண்ற ஸ்டேஜ்லேயே இவனுக்குத் தன்னை சின்சியரா காதலிக்கற பிகரு மேலே நம்பிக்கையில்லையே? இந்தக் கேணயன்ல்லாம் எப்படி கடைசீ வரைக்கும் தன்னை கல்யாணம் பண்ணிக்கப்போறவளை சந்தோஷமா வெச்சிருக்கப்போறானுங்க? ஆனா பஜ்ரங்பலி இவனை மாதிரி மொக்கைங்களுக்குத்தான் சுகன்யா மாதிரி டீசன்டான, அழகான, புத்திசாலியான, பொண்ணுங்களை கோத்துவுடறான்? சுனில் மனதுக்குள் சலித்துக் கொண்டான்.

செல்வா, சுகன்யாவை பாக்க வந்தாலும் சரி; நான் அவன் ரூமுக்கு அஃபீஷியலா போனாலும் சரி; ஏன் என்னை அலட்சியப்படுத்தறான்? எப்பவுமே ஒரு மாதிரி திமிராப் பேசறானே? ஆமாம். இவனுக்கு என்னைப்பத்தி என்னத் தெரியும்? இவன் மயிரான் என்னைப்பத்தி என்ன வேணா நினைச்சுக்கிட்டு போகட்டும். சுகன்யா நோஸ் மீ வெல்.

சுகன்யாவை நான் மயக்கிடுவேன்னு இந்த கம்மினாட்டி செல்வா நினைக்கிறானா? என் பர்சனாலிட்டியைப் பாத்து பயப்படறான் போல இருக்கு. நான் சிரிச்சி சிரிச்சி பேசறதுனால, சுகன்யாதான் என்னை லவ் பண்ண ஆரம்பிச்சுடுவாளா? இவன் என்னை நம்பாம போகலாம். ஆனா இவன் லவ்வரை இவன் நம்பணுமில்லே. ஹீ ஈஸ் ரியலி எ ஃபூல்.

சுகன்யாவுக்குத்தான் எவ்வளவு சென்ஸ் ஆஃப் ஹூயுமர்? மூட் அவுட்டாயிருந்த சுகன்யாவை, என் கலீக்கை, நான் சிரிக்கவெச்சேன். பதிலுக்கு அவ ஃப்ரெண்ட்லியா என் தோளை தட்டினா? இட் ஈஸ் அ சிம்பிள் மேட்டர். அவ்வளவுதானே? சுகன்யா மாதிரி ஒரு லேடிக்கு இப்படி ஒரு லவ்வரா?

"செல்வா மஸ்ட் பீ அன் இடியட்...?" தன் மனதுக்குள் சிரித்துக்கொண்ட சுனில், நீளமாக தன் உதட்டிலிருந்து ஒரு பெருமூச்சை வெளியேற்றினான்.

இரண்டு நிமிடம் தன் சீட்டிலேயே ஒருவிதமான குற்ற உணர்வுடன் உட்கார்ந்திருந்தான் சுனில். காலையில் அவன் அலுவலகத்துக்குள் நுழைந்த போது தன் மனதில் இருந்த உற்சாகம், அமைதி இரண்டுமே இப்போது காணாமல் போயிருப்பதாக அவன் உணர ஆரம்பித்தான். தன் இருகைகளையும் தலைக்குமேல் உயர்த்தி சோம்பல் முறித்தான்.

சாவித்ரி வேர்க்க விறுவிறுக்க அறைக்குள் நுழைந்தாள்.

"குட்மார்னிங் மேடம்" சுனில் இயந்திரமாக அவளை நோக்கி புன்னகைத்தான். சாவித்ரி, தன் டிராயரை இழுத்தாள். அதனுள்ளிருந்து அழுக்காக இருந்த ஒரு சிறிய வெள்ளை டவலால் தன் முகத்தை துடைத்துக்கொண்டிருந்தாள். அழுக்கான டவல் மேலும் அழுக்காகியது.

சுனில், தன் டேபிளின் மேல் கிடந்த சுகன்யாவின் சுத்தமான கர்சீஃபை ஒரு முறை வெறித்து நோக்கினான். எழுந்து அறைக்கு வெளியில் வந்தான். கேன்டீனை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தான். 

"இரண்டு பஜ்ஜி. இரண்டு காஃபி" சுகன்யா ஐம்பது ரூபாய் தாளை எடுத்து கவுண்டரில் நீட்டினாள்.

"சுகன்யா வெயிட்... எனக்கு பஜ்ஜி வேண்டாம். மெது வடை வேணும்."

செல்வா பஜ்ஜியைத்தான் எப்போதும் விரும்பி சாப்பிடுவான். அவன் மறுப்பைக்கேட்டதும், சுகன்யாவின் விழிகள் விரிந்தன. புருவங்கள் உயர்ந்தன. சுகன்யாவும், செல்வாவும் கேண்டீனை விட்டு வெளியில் வந்தார்கள். ஒரு மரத்தடியில், புல்தரையில் எதிரெதிராக உட்கார்ந்துகொண்டார்கள்.

"செல்வா... உனக்கு பஜ்ஜிதானே பிடிக்கும்?"

"யெஸ்... பிடிச்சுது. ஆனா இப்ப பிடிக்கலை. நேத்துவரைக்கும் எனக்கு பிடிச்சதெல்லாம் இன்னைக்கும் எனக்கு பிடிக்கணும்ன்னு என்ன அவசியம் இருக்கு?" செல்வா மெல்ல சிரித்தான். சிரிப்பதாக நினைத்தான். அவன் சிரிப்பில் சிடுசிடுப்பின் சாயை இருப்பதை சுகன்யா உணராமலில்லை.

"ஐ சீ.." சுகன்யாவின் வாயிலிருந்து வார்த்தை வெளிவரவில்லை.

சற்று நேரம் அவர்கள் இருவருக்குமிடையில் இறுக்கமான மவுனம் நிலவியது. இருவருமே ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல், தங்கள் கையிலிருந்த காஃபியை கடனே என உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். சுகன்யா தன் கையிலிருந்த பேப்பர் கிளாஸை தரையில் வைத்தாள். தன் உதட்டை முந்தானையால் துடைத்துக்கொண்டாள்.

"செல்வா... உனக்கு பஜ்ஜியை பிடிக்கலேன்னா அது பெரிய விஷயம் இல்லே. நேத்து வரைக்கும் என்னை உனக்கு பிடிச்சிருந்தது. இன்னைக்கு உனக்கு என்னை பிடிக்குதா? இது ரொம்ப ரொம்ப முக்கியம். ஆர் யூ ஸ்டில் லவ்விங் மீ? ஆர் யூ ஷ்யூர் அபவுட் யுவர் லவ்." சுகன்யாவின் முகத்தில் உணர்ச்சிகள் இல்லை.

சுகன்யாவின் அப்பட்டமான, ஒளிவு மறைவில்லாத கேள்வியை செல்வா சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் முகத்தில் எழுந்த சுருக்கம் தெளிவாக சொல்லியது.

"நானும் இந்த கேள்விக்கான பதிலைத்தான் ஒரு வாரமா தேடிகிட்டு இருக்கேன்."

"நமக்குள்ள இந்த கேள்வியும் பதிலும் நிஜமாவே தேவைதானா? சுகன்யாவுக்கு சற்றுமுன் குடித்த காஃபி தொண்டையில் கசப்பது போலிருந்தது. எச்சிலை மெல்ல விழுங்கினாள் அவள்.

"சுகன்யா... உன்னை நான் ஏன் காதலிக்க ஆரம்பிச்சேன் தெரியுமா?"

"சொல்லு..."

"நீ அமைதியா இருந்தே. உன் கிட்ட ஆரவாரமான பேச்சோ, சிரிப்போ எப்பவும் இருந்ததேயில்லை. எப்பவும் தனியாத்தான் இருப்பே. யார்கிட்டவும் தேவையில்லாம நீ பேசினதே கிடையாது."

"சுத்தி வளைச்சுப் பேசாதே செல்வா. நேத்து நான் என் அத்தான்கிட்ட பேசினது உனக்குப்பிடிக்கலே. நீ என் ரூமுக்குள்ள வர்றதுக்கு முன்னாடி என் கலீக் சுனிலோட நான் சாதாரணமா சிரிச்சி பேசிகிட்டிருந்தேன். அதை நீ விரும்பலே."

"நேத்து என் அத்தானை நீ இன்ஸல்ட் பண்ணே? இன்னைக்கு சுனிலை இன்ஸல்ட் பண்ணே? ஆனா ஒரு விஷயத்தை நீ மறந்துட்டே."

"என்னன்னு அதையும் சொல்லிடு..."

"நீ அவங்களை மட்டும் தேவையே இல்லாம அவமானப்படுத்தலே... என்னையும் தான் பண்றே.." தன் மனதில் இருப்பதை அவனுக்கு தெளிவாக உணர்த்த வேண்டும் என அவள் முடிவெடுத்துவிட்டாள்.

"இன்னும் எதாவது சொல்ல வேண்டியது பாக்கியிருக்கா?" செல்வா தன் கையிலிருந்த பாதி காஃபியை ஒதுக்கிவைத்தான். தன் உதடுகளைத் துடைத்துக்கொண்டான்.

"உன்னைத்தவிர வேறு எந்த ஆம்பிளையோட நான் பேசறதும், சிரிக்கறதும் உனக்குப்பிடிக்கலே. இதானே விஷயம்?" சுகன்யா தாழ்ந்த குரலில் பேசினாலும், ஒரு தீர்மானத்துடன் பேசிக்கொண்டிருந்தாள்.

"வெல்... யூ ஆர் அப்சொல்யூட்லி ரைட். யெஸ்... நீ சம்பத்தோட பேசறது எனக்கு பிடிக்கலே. இப்ப நீ சொல்றமாதிரி சுனிலோட பேசறதும் பிடிக்கலே."

"ஏன்?"

"சம்பத் உனக்கும் எனக்கும் நடுவுல வெச்ச ஆப்பைப் பத்தி உனக்குத் தெரியாதுடீ... ஐ ஹேட் ஹிம். என் காதலுக்கு நடுவுல வர்ற யாரையும் எனக்கு பிடிக்கலே. எனக்கும் உனக்கும் நடுவுல வர்ற யாரையும் எனக்கு பிடிக்கலே." செல்வாவின் குரலில் சூடு ஏறியது.

"செல்வா... சம்பத் தான் பண்ணத்தப்புக்காக உன்கிட்ட மன்னிப்பு கேட்டதும் எனக்குத் தெரியும். நீ அதை இவ்வளவு சீக்கிரம் மறந்துட்டியே?" அவள் முகத்தில் சட்டென ஒரு புன்னகை எழுந்து மறைந்தது.

"ஓ... அந்த பொறுக்கி நாய்... என்கிட்ட மன்னிப்பு கேட்டதை உன்கிட்ட சொல்லி, உன் பார்வையில, உன் மதிப்புல அவன் பெரிய மனுஷனாயிட்டானா? அவன் உன்கிட்டவும் மன்னிப்பு கேட்டிருக்கலாம். அதனால அவன் உனக்கு என்னை விட முக்கியமா போயிட்டானா? என் உணர்வுகளை விட அவன் உன் கிட்ட சொன்ன கதையும், உன் கிட்ட கேட்ட மன்னிப்பும் உனக்கு பெரிசா தெரியுதா?"

"எனக்கும் உணர்வுகள் இருக்கு செல்வா... அதை நீயும் மதிக்க வேணாமா?"

"என் உணர்வுகளுக்கு நீ முதல்லே மதிப்பு குடு... உனக்கு மதிப்பு தன்னாலே கிடைக்கும்..." செல்வாவின் குரலில் ஆண் எனும் ஆணவம் தெறித்தது.

"செல்வா... சம்பத்தைப்பத்தி உனக்கு தெரிஞ்சதை விட எனக்கு அதிகமாத் தெரியும். யார்தான் தப்பு பண்ணலே? நீ தப்பு பண்ணதேயில்லையா? இனிமே என் அத்தானைப்பத்தி பேசும் போது நீ கொஞ்சம் மரியாதையா பேசினா நல்லாருக்கும்."

"அயாம் சாரீ மேடம்... நான் என்னத் தப்பு பண்ணேன்? இல்லே பண்றேன்?"

"உன்னை உயிருக்கு உயிரா நேசிக்கற என்னை நீ சந்தேகப்படறியே? என் நடத்தையை நீ சந்தேகப்படறியே? இதுக்கு மேல வேற எந்த தப்பை நீ பண்ணணும்?"

"சுகன்யா... தன் லவ்வருக்குன்னு ஒருத்தன் ஆசை ஆசையா வாங்கிக்கொடுத்த கைக்குட்டையை இன்னொருத்தன் மோந்து பாக்கறது அவனுக்கு சுத்தமா பிடிக்காது? உன் காதலனோட மனஉணர்வை நீ முதல்லே புரிஞ்சுக்கோ..."

"செல்வா.."

"தன் காதலி இன்னொருத்தன் தோள்லே கையை போட்டுக்கிட்ட நிக்கறதை எந்த மானமுள்ள ஆம்பிளையாலும் பொறுத்துக்க முடியாது." செல்வாவின் முகம் சிவந்து போயிருந்தது.

"செல்வா... அங்கே என்ன நடந்திச்சின்னு முழுசா தெரிஞ்சுக்காம கன்னாபின்னான்னு பேசாதே... சுனில் ஒரு பக்கா ஜெண்டில்மேன். உன் காதலியை, என்னை நீ மட்டமா எடை போடாதே?"

"நீயும் சம்பத்தும் பேசினதை என் காதாலே கேட்டேன். நீயும் சுனிலும் கொஞ்சி விளையாடிக்கிட்டு இருந்ததை என் கண்ணாலப் பாத்தேன்..."

சுகன்யாவின் செல் ஒலித்தது. சம்பத் லைனில் வந்து கொண்டிருந்தான். சுகன்யாவும் தன் மனதுக்குள் ஒரு முடிவு எடுத்துவிட்டாள். பதட்டமில்லாமல் செல்லை ஆன் செய்தாள்.

"சொல்லுங்க அத்தான்... நேத்தே உங்களுக்கு போன் பண்ண நினைச்சேன். முடியலே. நேத்து ராத்திரியெல்லாம் தூங்கவேயில்லை நான். "

"நானும்தான் தூங்கலே சுகன்யா" சம்பத்தின் குரலில் இருந்த துக்கம் அவள் காதில் இடியாக இறங்கியது.



"அத்தான்... ஃப்ர்ஸ்ட் ஆஃப் ஆல், அக்சஃப்ட் மை அன் கண்டீஷனல் அப்பாலஜீஸ். நேத்து செல்வா எக்குத்தப்பா பேசினது உங்க காதுல விழுந்திருக்கலாம். அதுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்."

"சுகன்யா... திரும்பவும் சொல்றேன்... என்னைப்பத்தி எவன் கிட்டவும் நீ பேசவேண்டிய அவசியமில்லே." செல்வா அடித்தொண்டையில் கூவினான்.

"அத்தான்... நான் ரெண்டு செகண்ட்ல உங்களை நான் கூப்பிடறேன்.. பிளீஸ்..." சுகன்யா லைனை கட் செய்தாள்.

"செல்வா இது ஆஃபீஸ். ஒரு பொது இடத்துல நாம உக்காந்து இருக்கோம். நான் ஒரு கண்ணியமான பொம்பளை. இது உன் வீடு இல்லே. நாகரீகமில்லாமே நாலு பேரு என்னைத் திரும்பி பாக்கற கத்தாதே? பிஹேவ் லைக் எ ஜெண்டில்மேன்."

சுகன்யாவின் கண்களில் பெண்மைக்கே உரிய பிடிவாதம் அவள் முகத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. குரல் தீர்க்கமாக வந்தது. இதுவரை இல்லாத ஒரு வெறுப்பு அவள் கண்களில் குடியேறியிருந்தது.

"சுகன்யா... திஸ் இஸ் த எண்ட் ஆஃப் இட்... யூ கோ டு ஹெல்... அயாம் லீஸ்ட் பாதர்ட் அபவுட் யூ அண்ட்... அண்ட்... "

செல்வா தன் கையிலிருந்த பாதி வடையை வீசி தூரமாக எறிந்தான். வாயில் மென்றுகொண்டிருந்த பாதி வடையையும் 'தூ.." வென துப்பினான். கோபம் விஷத்தைப்போல் அவன் தலைக்கேறிக் கொண்டிருந்தது. அவன் பேச நினைத்ததை பேசமுடியாமல், அவன் சொல்லவந்ததை முழுவதுமாக சொல்ல முடியாமல், விருட்டென எழுந்து வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

சுகன்யாவின் கண்கள் பனித்தன. 

சம்பத்... அப்ப நாங்க கிளம்பறோம். ட்ரெய்னுக்கு நேரமாவுதே, எழுந்திருமா ராணீ?" நல்லசிவம் தன் பையை தோளில் மாட்டிக்கொண்டார்.

"அப்பா... ஸ்டேஷன் வரைக்கும் நானும் வர்றேன். உங்களை சீ ஆஃப் அனுப்பிட்டு அங்கேருந்தே என் ஆஃபீசுக்கு போயிடறேன்.." சம்பத் தன் தாயின் நெற்றியில் ஆசையுடன் முத்தமிட்டான்.

ஸ்டேஷனுக்கு போகும் வழியில் ராணி தன் மகனிடம் ஏதும் பேசவில்லை. அவன் இடது கையை தன் கைகளில் எடுத்துக்கொண்டு மெல்ல வருடிக் கொண்டேயிருந்தாள். டாக்ஸியில் மவுனமாகவே அவர்கள் பயணம் செய்தனர். ட்ரெயின் பிளாட்பாரத்துக்குள் இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை.

"ஏண்டா... நேத்து நீ சுகன்யாகிட்ட மன்னிப்பு கேட்டியாமே? என்னடா விஷயம்?"

"அப்பா சொன்னாரா?" சம்பத் மெல்லியக்குரலில் சிரிக்க ஆரம்பித்தான்.

"கண்ணு... என்னடா நடக்குது உங்களுக்குள்ளே?"

"அம்மா... என்னை நம்புமா. நேத்து முதல் தடவையா சுகன்யாவுக்கு நான் போன் பண்ணப்ப செல்வா அங்கே இருந்திருக்கான். நான் சுகன்யாவோட பேசினது அவனுக்கு பிடிக்காம, அவன் ஏதோ அவகிட்ட கடுப்பா சொன்னான்."

"அவனைப் பொறுத்தவரைக்கும் அவன் பண்ணது சரிதானேடா? நீ ஏண்டா இந்த மாதிரி கண்டவன் முன்னால அவமானப்படறே?" ராணியின் முகம் தொங்கிப்போனது.

"விடும்மா... உன் காதலுக்காக நீ எவ்வளவு அவமானத்தை பொறுத்துக்கிட்டே?" சம்பத் சந்தோஷமாக சிரித்தான்."

"உன்னோடது ஒருதலைக்காதல்டா. இது எந்தவிதத்துலேயும் சரியில்லே? யாருக்கும் பிரயோசனமில்லே." நல்லசிவம் பெருமூச்சுவிட்டார்.

"சம்பத்து..."

"சொல்லும்மா..." சம்பத் தன் தாயை நெருங்கி நின்றுகொண்டான்.

"அப்ப இந்த பொண்ணு வீட்டுக்கு நான் என்ன பதில் சொல்றது?"

"அம்மா... என்னை தொந்தரவு பண்ணாதேன்னு உனக்கு நான் எத்தனை தடவை சொல்லணும்?"

"என் மனசு கேக்கலடா ராஜா. நீ சரீன்னு சொல்லுவேன்னு ரொம்ப நம்பிக்கையோட வந்தேன்டா..." ராணி ட்ரெயினில் ஏறி உட்கார்ந்தாள். ட்ரெயின் கிளம்பும் வரை சம்பத் தன் தாயின் அருகில் உட்கார்ந்துகொண்டு அவள் கரத்தை அன்புடன் வருடிக்கொண்டிருந்தான். 

"சுகன்யா... திஸ் இஸ் த எண்ட் ஆஃப் இட்... யூ கோ டு ஹெல்... அயாம் லீஸ்ட் பாதர்ட் அபவுட் யூ அண்ட்... அண்ட்... " என தன் வாய் குளற கோபமாக தன் காதலியிடம் உளறிவிட்டு வந்த செல்வா, அன்று இரவு தூக்கம் வராமல், தன் வீட்டு மொட்டை மாடியில் குறுக்கும் நெடுக்குமாக உலவிக்கொண்டிருந்தான்.

டேய் செல்வா... இந்த நிலைமை உனக்கு தேவையாடா? நீயெல்லாம் படிச்சவன். நேத்துதான், மீனாவால, ஒரு வாரத்துக்கு அப்புறம் சுகன்யா மூஞ்சியில சிரிப்பையே பாக்க முடிஞ்சுது. ஒரே நாள்லே இரக்கமேயில்லாமா, அவளை திரும்பவும் அழ வெச்சிட்டியேடா பாவி? நீயும் நிம்மதியா இருக்காதே? உன் பிகரையும் நிம்மதியா இருக்க விடாதே? உனக்கெல்லாம் ஒரு காதல் தேவைதானாடா? அவன் மனது அவனை இரக்கமில்லாமல் நக்கலடித்துக்கொண்டிருந்தது.

சுகன்யா என் வாழ்க்கைத்துணையாக ஆகப்போகிறவள். எனக்கு மனைவியாக வரப்போகும் பெண்ணுடைய மனசு, உடம்பு, அழகு எல்லாமே எனக்குத்தானே சொந்தம். என் ஒருவனுக்குத்தானே அவளிடம் முழுமையான உரிமையும், அதிகாரமும் இருக்கமுடியும்?

சுகன்யாவோட அழகை, இனிமையான பேச்சை, நட்பை அடுத்தவர்களுடன் எதற்காக நான் பகிர்ந்து கொள்ள வேண்டும்? அவளை எனக்கென நிச்சயம் செய்தபின், அவள் என் விருப்பப்படி நடக்க வேண்டுமென நான் நினைப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்? இந்த மிகச்சிறிய விஷயத்தை சுகன்யா ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறாள். உன்னாலும் இதை ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை? செல்வா இலக்கண சுத்தமாக தன் மனதிடம் வாதிட்டுக் கொண்டிருந்தான்.

மனசுக்கு ஏது இலக்கணம். அது அதன் போக்கில் அவனுக்கு பதில் கொடுத்தது.

டேய்... செல்வா... நீ நினைக்கறதெல்லாம் சரிதான்டா. ஒரு சின்ன விஷயத்தை புரிஞ்சுக்கோ? சுனில் யாருடா? சுகன்யாவோட கலீக். வேலை நேரத்துல அவ அவன் பேசித்தானே ஆகணும்? சுனிலோட, சுகன்யா சிரிச்சி பேசிட்டா, உன்னைவிட அவன் சுகன்யாவுக்கு முக்கியமாயிடுவானா? எதுக்குடா நீ கேனத்தனமா காலையில சுகன்யாகிட்ட கன்னாபின்னான்னு உளறினே?

"சுகன்யாவுக்கு என் மேல உண்மையான ஆசையிருக்குன்னா, அவ நான் சொல்றதை ஏன் கேக்கக்கூடாது? எனக்கு பிடிக்காதவங்ககிட்ட அவ ஏன் பேசணும்? பழகணும்? நான் அவளை எவ்வள லவ் பண்றேன்னு உனக்குத் தெரியாதா? இருபத்து நாலு மணி நேரமும் நான் அவளைத்தான் நெனைச்சுக்கிட்டு இருக்கேன்."

"நிறுத்துடா உன் பீலீங்கை. அந்த பொண்ணுகிட்ட நீ இப்படியெல்லாம் பூச்சிக்காட்டலாம்; ஆனா உன் பருப்பு எங்கிட்ட வேவாது. உன் பேச்சைக் கேக்கற ஒரு அடிமைதான் உனக்கு வேணும்ன்னா, வேலைக்குப்போற ஒரு பொண்ணை நீ ஏண்டா காதலிச்சே?" அவன் மனம் அவனை கூறு போட ஆரம்பித்தது.

"ரெண்டு பேரு சம்பாதிச்சாத்தான் இப்ப காலத்தை தள்ளமுடியும்?"



"நீ ஆம்பிளைதானே? உன்னை நம்பி வர்றவளுக்கு நீதானேடா சோறு போடணும்? உங்கப்பனுக்கு இருந்த தைரியம் உனக்கு இருக்காடா? உங்கம்மாவை சவுகரியமா வீட்டுல உக்காரவெச்சி அவரு குடும்பம் நடத்தலே? உன்னைப்படிக்க வெக்கலே, உன் தங்கச்சியைப் படிக்க வெக்கலே; வீடு கட்டலே; கார் வாங்கலே; வாழ்க்கையை ஆரம்பிக்கும் போதே ஏண்டா இப்படி இன்செக்யூர்டா ஃபீல் பண்றீங்க...?"

"அவரு காலம் வேற; இப்ப இருக்கற காலம் வேற; சுகன்யாவை சந்தோஷமா என்னால வெச்சுக்கமுடியாதுன்னுல்லாம் ஒண்ணும் இல்லே; நாட்டுல எல்லாப்பயலும் வேலை செய்யற பொண்ணைத்தான் சைட் அடிக்கறான். கல்யாணம் பண்ணிக்கறான். எல்லாத்துக்கும் மேல பொண்ணுங்களுக்கு வீட்டுல உக்கார புடிக்கலை. ஊரோட நானும் ஒத்து வாழவேணமா?"

'அப்ப வேலைக்கு போற பொம்பளைங்க, தங்களோட வாய்க்கு பூட்டு போட்டுகிட்டு சாவியை புருஷன் கிட்டவா குடுத்துட்டுப் போறாளுங்க?"

"ஓ.கே. ஓ.கே... இந்த லாஜிக்கெல்லாம் எங்களுக்கும் தெரியும்..."

செல்வா தன் மனதிடம் சிணுங்கினான். இங்கும் அங்கும் நழுவிக்கொண்டிருந்தான். சரிடா.. உன்னைப்பத்தி எனக்கு நல்லாத்தெரியும். கொஞ்சம் பொத்திகிட்டு நான் சொல்றதை கேளு. அவனுடைய மனம் அடுத்த அம்பை அவன் மேல் எறிந்தது. 


No comments:

Post a Comment