Monday 30 March 2015

சுகன்யா... 81

மீனாவுக்குப் பிடித்த அடர்த்தியான நீல நிற ஜீன்சையும், வெள்ளை நிற காட்டன் சட்டையையும், அணிந்து கொண்டான் சீனு. போட்டிருந்த பனியனும், அதன் மேல் தொங்கும் மெல்லிய செயினும் சட்டை வழியாக வெளியில் தெரிந்தன.

கைகளை முறுக்கி, 'மீனா உன்கிட்ட விழுந்ததுலே என்னடா ஆச்சரியம்... கட்டாத்தான்டா வெச்சிருக்கே நீ உன் பாடியை' கண்ணாடியில் தெரியும் தன் உருவத்தைப் பார்த்த சீனு தன் உடலழகை ஒரு வினாடி மெய் மறந்து ரசித்தான். மனசுக்குள் சிறிய கர்வம் சட்டென எழுந்தது.

வெளியில் அடித்துக்கொண்டிருந்த புழுதிக்காற்றையும், மூடிக்கொண்டிருக்கும் வானத்தையும் நோக்கிய சீனுவின் மனதில் 'மழை வருது மழை வருது குடை கொண்டு வா.. மானே உன் மாராப்பிலே' மனசுக்குள் பாட்டு ஒலிக்கத் தொடங்க பாடி ஸ்ப்ரேயை அடித்துக்கொண்டான்.



பைக்ல போனா மூஞ்சி பூரா மண்ணு அடிக்கும்... வண்டி ஓட்டற மூடே கெட்டுப் போயிடும்... ம்ம்ம்.. கார்லே போயிடலாமா... ஒரு வினாடி யோசனைக்குப் பின் தோட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிவப்பு நிற ஐ-டென்னை கிளப்பி தெருவில் நிறுத்தியவன், வீட்டுக்கதவை பூட்டிக்கொண்டு, பூட்டை ஒரு முறை இழுத்துப்பார்த்தான்.

காரை வேகமாகக் கிளப்பி பறந்தவன் சுந்தரம் அய்யர் மெஸ்ஸுக்கு முன்னாடி நின்றான். அரை டஜன் மெது வடை சட்னி, சாம்பர் பேக் பண்ணிக்கொண்டான். மீனா... டார்லிங்க்... உனக்குப் பிடிச்ச மெதுவடையோட உன் மாமன் வந்துட்டேன்டீச் செல்லம்... மீண்டும் காரில் உட்கார்ந்து சீறிப்பறந்தான் சீனு.

அவனுடைய வருகைக்காகவே காத்திருப்பதுபோல் மல்லிகா, நடராஜன், செல்வா, அனைவரும் ஹாலில் உட்க்கார்ந்திருந்தனர். 'வெளியிலே கிளம்பற மாதிரி தெரியுது?' கையிலிருந்த வடைப்பார்சலை டீபாயின் மேல் வைத்தான். நடராஜனையும், மல்லிகாவையும் ஒரு முறைப்பார்த்தான்.

'அம்மா... என் மேல கோவமாம்மா... நீங்களே என் மேல கோச்சிக்கிட்டா நான் எங்கம்மா போவேன்...?"

தன்னுடைய முதல் பிட்டைப் போட்டுக்கொண்டே, மல்லிகாவின் காலடியில் தரையில் உட்க்கார்ந்துகொண்டு அவள் மடியில் தன் தலையைச் சாய்த்துக்கொண்டான். அவள் தாய்மை அந்தத் தருணத்தில் விழித்தது. தன் வலது கையால், சீனுவின் தலையை வருடிக்கொண்டே, வலது கையால் அவன் முதுகில் பொய்யாக அடித்தாள்.

"இந்த சினிமா டயலாக்கெல்லாம் என் கிட்ட வேணாம்... உன்னைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்..." மல்லிகா தன் முகத்தில் கோபத்தை கொண்டு வர முயற்சி செய்து முற்றிலுமாக சீனு தன் மீது வைத்திருக்கும் பாசத்தின் முன் தோற்றுப்போனாள்.

"என்னைப்பத்தி உங்களுக்குத் தெரியும்ன்னா... அப்புறம் எதுக்கு..." வார்த்தையை முடிக்காமல், தன் தலையை நிமிர்த்தி மல்லிகாவின் முகத்தைப் பார்த்தான். நடராஜன் முகத்தில் சிறிய புன்முறுவலுடன் அங்கு நடக்கும் டிராமாவைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

"எழுந்திருடா..."

"என்னம்மா..?"

“எழுந்திருடான்னா...”

“ம்ம்ம்...” முனகிக்கொண்டே எழுந்தான் சீனு.

"இப்படி சோஃபாவுல உக்காரு..." தன்னருகில் உக்கார்ந்த சீனுவின் தோளில் ஆசையுடன் தன் கையைப் போட்டுக்கொண்டாள்.. அவன் முகத்தைப் பாசம் பொங்கப் பார்த்தாள்.

"அம்மா... மீனா மாதிரி ஒரு நல்லப் பொண்ணை, அதுவும் என்னை ஆசைப்படற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா சந்தோஷமா இருக்கலாம்ன்னு நினைச்சேம்ம்மா... அது தப்பாம்ம்மா.."

சீனு தன்னுடைய அடுத்தப் பிட்டை எடுத்து அழகாக வீசினான். அவன் எதிர்பார்த்தபடியே அந்த பிட்டும் தன் வேலையைச் சரியாக செய்தது. மல்லிகா உதடுகளால் எதுவும் பேசமுடியாமல் அவன் முகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

நடராஜனும் வாயைத் திறக்காமல் மனதுக்குள் நெகிழ்ந்து கொண்டிருந்தார். மீனா தன் அறையிலிருந்து வெளியில் வந்து தன் தந்தையின் பக்கத்தில் நின்றாள்.

"மீனா இப்படி வாயேன்.. அம்மா, அப்பா, நீங்க ரெண்டு பேரும் எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்களேன்.." சீனு சட்டென எழுந்து, மீனாவின் வலது கையைப்பிடித்தான். மீனாவும் அவனும் ஒருவரை ஒருவர் நெருங்கி நின்று அவர்கள் முன் குனிந்தார்கள்.

"முருகா.. சந்தோஷமா இருங்க..." நடராஜனின் குரல் தழுதழுத்தது. மல்லிகா அவர்கள் இருவரையும் ஒரு சேர தன்னுடன் சேர்த்துக்கொண்டாள்.

"சீனு உங்க வீட்டுல நீங்க ரெண்டு பேரும் லவ்வற விஷயத்தை சொல்லிட்டியா..? மல்லிகா மெல்ல கனைத்துக்கொண்டு பேசத் தொடங்கினாள்.

"ம்ம்ம்.... சொல்லிட்டேம்மா... மீனாவையும் போனவாரம் எங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போய் எல்லாருக்கும் இன்ட்ரொட்யூஸ் பண்ணிட்டேன்... மீனாவுக்கு பரிட்சை முடிஞ்சதும் உங்ககிட்ட பேசறேன்னு சொல்லியிருக்காரு... அத்தையும், அம்மாவும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்கப்பா.."

“இவ்வளவு தூரம் எல்லாத்தையும் பண்ணிட்டு எங்கக்கிட்ட எதையும் சொல்லாமா இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருந்திருக்கேடீ நீ...” மல்லிகா தன் பெண்ணை முறைத்தாள்.

"அப்பா ரொம்பத் தேங்க்ஸ்ப்பா... மீனா தன் தந்தையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவர் கன்னத்தில் முத்தமிட்டாள். அடுத்த நொடி... கோச்சிக்காதேம்மா... நீ என்ன சொல்லுவியோன்னு பயந்தேம்மா.. அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டாள். செல்வாவின் கையைப் எடுத்து அவன் புறங்கையில் முத்தமிட்டாள்.

"எல்லாருக்கும் குடுத்துட்டே... எனக்கு குடுக்க மாட்டியா?" சீனு மீனாவை நோக்கி தன் கன்னத்தைக் காண்பித்து கண்ணடித்தான்.

"சனியனே... என் மானத்தை வாங்காதே... உனக்கு ஒதைதான் குடுப்பேன்..." மீனா அவன் முதுகில் செல்லமாக அடித்தாள்.

"பாருங்கப்பா... இப்பவே என்னை இப்படி அடிக்கறாளே... போவப் போவ இவகிட்ட நான் என்னப் பாடு படணுமோ?" சீனுவின் முகத்தில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது.

"சீனு... நானும் இவரை அப்பாங்கறேன்.. என்னை கட்டிக்கப்போற நீயும் அப்பாங்கறே... லாஜிக் கொஞ்சம் இடிக்கலே..." மீனாவின் முகம் மாலை வானமாக சிவந்திருந்தது. அவள் கண்ணும், வாயும், உதடும், ஏன் அவளுடைய முழு முகமும் தங்கமாக மின்னிக்கொண்டிருந்தன.

"மீனாட்சீ.. சீனுவை நீ இந்த வீட்டு மாப்பிள்ளையாக்கிட்டே... இருந்தாலும், அவனை நாங்க என்னைக்கும் எங்க பிள்ளையாத்தான் கொண்டாடுவோம்..." நடராஜன், சீனுவை இழுத்து அணைத்துக்கொண்டார். செல்வா சீனுவின் கையைப்பிடித்து குலுக்கியபடியே, அவனைத் தன் தோளோடு நெருக்கிக்கொண்டான். மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்தது அந்த வீடு. 

"மல்லிகா சீக்கிரமா டிஃபனை எடுத்து வைம்மா... ஒரு வாய் சாப்பிட்டுட்டு கிளம்பணும்... நேரமாவுதுல்லே"

"என்னம்மா.. அவசரமா வான்னு என்னைக் கூப்ட்டீங்க..?" சீனு வடையை மென்று தின்றுக்கொண்டிருந்தான்.

"இன்னைக்கு மீனாவுக்கு கேம்பஸ் இண்டர்வியூ இருக்குடா... சாரிப்பா.. சீனு... நீங்க இந்த வீட்டு மாப்பிளையா ஆகப்போறவர்.. உங்களை நான் இனிமே பழைய மாதிரி வாடா போடான்னுல்லாம் சொல்லக்கூடாது.." மல்லிகாவின் முகத்தில் புன்சிரிப்பு எழுந்தது.

“அம்மா நான் என்ன செய்யணும்ன்னு நீங்க ஆர்டர் போடுங்கம்மா... என் மேல உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு... இந்த வாங்க போங்க மரியாதையெல்லாம் எனக்கு வேண்டாம்.. அப்பா சொன்ன மாதிரி நான் என்னைக்கும் உங்க புள்ளைம்மா.. வாடா போடான்னு நீங்க என்னை எப்பவும் போல ஆசையா கூப்பிடுங்கம்மா..." சீனு உணர்ச்சி வசப்பட்டதால் அவன் குரல் கரகரப்பாக வந்தது.

"இந்த இண்டர்வீயுவை செகண்ட் ஸ்டேஜை காலேஜ்ல வெக்காம அவன் கம்பெனில வெச்சிருக்கானாம்.. மீனா கூட நான் போறதா இருந்தேன்... ஆனா எனக்கு மாமா மொறையில ஒருத்தர் இன்னைக்கு விடியற்காலம் தீடீர்ன்னு காலமாயிட்டார்... துக்கம் விசாரிக்க நாங்க திருக்கழுக்குன்றம் வரைக்கும் போயே ஆகணும்... செல்வா எங்கக்கூட வர்றான்... கார்லேயே போய்ட்டு வந்திடலாம்ன்னு பாக்கறோம்... நீங்க பைக்லதானே வந்திருக்கீங்க... துணைக்கு நீங்க மீனாகூடப் போயிட்டு வர்றீங்களா?”

"நீங்க கவலைப்படாமே போய் வாங்கம்மா... மழை வர்ற மாதிரி இருக்கேன்னு அப்பாவோட காரை நான் எடுத்துட்டு வந்திருக்கேன்...மீனாக்கூட நான் போய்ட்டு வர்றேம்மா...”

சீனு இதாண்டா நேரங்கறது... நடக்கற நேரத்துல எல்லாமே அது அதுவா கரெக்டா நடக்குது பாரு... ‘நீங்க சொர்க்கத்துல நல்லாயிருக்கணும் அய்யா...’ செத்துப்போன மல்லிகாவின் மாமவுக்கு தன் மனசுக்குள் ஆயிரம் முறை நன்றி சொன்னான் சீனு.



***


மீனா எப்போதுமே ஒரு சிறிய துள்ளலுடன்தான் நடப்பாள். இதற்கு அவளுடைய மெல்லிய உடல் வாகும், ஐந்தாறு வருடங்களாக அவள் அணியும் மிதமான ஹைஹீல்களுமே காரணம். அவள் ஹைஹீல்ஸ் அணிந்து நடக்க ஆரம்பித்ததிலிருந்து, அவளுடைய இடுப்பு குறுகியிருந்த போதிலும், இடுப்பின் கீழ்புறம் சிறிதே அகன்று அவளுடைய பின் மேடுகள் சதைப்பிடிப்புடன், செழிப்பாக மாறிக்கொண்டிருந்தன.

அவளுடைய பின் மேடுகளின் புஷ்டி அவளுக்கு கவர்ச்சியைத் தந்தது மட்டுமன்றி, அவள் புடவையணியும் போது அவளை கோவில் சிலையாக மாற்றிக் காட்டியது. பார்க்கும் ஆண்கள் வயது வித்தியாசம் இல்லாமல், ஒரு வினாடி நின்று திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு அவள் அழகு கவர்ச்சியாகவும், அவளுடையது.

மீனாவுடன் படிக்கும் அவள் கல்லூரித் தோழிகளில் சிலரே அவளுடைய இந்த கொழுத்த வனப்பைப்பார்த்து 'மீனா... உனக்கு முன்னாடி கொஞ்சம் சின்னதுனாலும், பின்னாடி வடிவா, அழகா, சூப்பரா இருக்குடீ... இப்ப உன் ஒடம்புக்கு ஏத்த அளவுல இருக்குதுங்க... நீ நடக்கும் போது அழகா அசையுதுங்க... ஆனா இதுக்கு மேல பெருக்க விட்டுடாதே... பொறாமையில் தங்கள் கண்கள் சிறுத்து பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.

மீனு... இவளுங்க பேசறதெல்லாத்தையும் கண்டுக்காதேடீ.. டேட் இட் ஈஸீ... உனக்கு வர்றவன் கையைப் போட்டு மாரை அழுத்திப் புடிச்சான்னா பத்து நாள்லே உனக்கு முன்னாடியும் பெருத்துடும்.. அவள் நெருங்கியத்தோழி செல்வி அவள் காதில் அவ்வப்போது முனகும் அந்த நேரங்களில், தன் அழகை நினைத்து, மார்பு துடிக்க, தன் முலைக்காம்புகள் தடிக்க, முகத்தில் சிவக்கும் மீனா மனதுக்குள் பெருமிதத்துடன் ஆகாயத்தில் பறப்பாள்.

நேர்முகத் தேர்வுக்காக மீனா கருநிற ஃபார்மல் பேண்ட்டும், ப்யூர் வெள்ளை நிறத்தில் முழுக்கைச் சட்டையை 'இன்' செய்து, லைட் க்ரே நிறத்தில் பெல்ட்டை இடுப்பில் இறுக்கி, காலில் கருநிற கட் ஷூவும், கழுத்தில் மெல்லிய நீல வண்ண 'டையும்' அணிந்து கொண்டிருந்தாள்.

முதல்கட்ட நேர்முகத்தேர்வை இரண்டு நாட்களுக்கு முன் அவள் சரியாக அணுகியிருந்தாள். தேர்வு பட்டியலில் அவள் பெயர் முதன்மையாக இருந்தது. அதனால் இன்றையத் இரண்டாவது கட்டத் தேர்வையும் தன்னால் சிறப்பாக எதிர்கொள்ளமுடியும் என்ற தன்னம்பிக்கை தந்த கர்வத்தில், அவள் நடையில் இருந்த துள்ளலுடன், மனம் முழுவதும் நிறைந்திருந்த மகிழ்ச்சியும் ஒன்று சேர்ந்து கொண்டது.

வீட்டிலிருந்து, தெருவில் நின்றிருந்த காரை நோக்கி நடந்தபோது மீனாவின் இளமைகளும் சந்தோஷத்தில் பூரித்து திமிறிக்கொண்டிருந்தன. அவள் நடந்து வந்த ஸ்டைலையும், அவள் மார்புகள் அசைந்த விதத்தையும், அவள் முகத்திலிருந்த தன்னம்பிக்கையையும் கண்ட சீனு நிலைகுலைந்து போய் ஸ்டீயரிங் வீலின் முன் உட்க்கார்ந்திருந்தான்.

மீனா முன் சீட்டில் அவனருகில் உட்கார்ந்ததும், கையிலிருந்த கோட்டை பின் சீட்டில் ஏறிந்தாள். கதவை மூடிக்கொண்டாள். 'மை காட்... சத்தியமா சொல்றேன்டீ... இந்த மாதிரி நீ டிரஸ் பண்ணே... இண்டர்வியூல உன்னைப் பாக்கற அந்தக் கிழப்பசங்க அங்கேயே செத்தானுங்க... ஒண்ணுமே பேசாம வேலையைத் தூக்கி உன் கையில கண்டிப்பா குடுத்துடுவானுங்கடீ செல்லம்...' அவள் மார்பின் மேல் வைத்த தன் கண்களை திருப்ப முடியாமல் திணறினான் சீனு.

"என்னப்பா.. நீயே கண்ணு போட்டா எப்படீ..." மீனா சிணுங்கினாள்.

"கோழி மெதிச்சி குஞ்சு சாகுமா...?"

"எந்த குஞ்சைச் சொல்றே நீ? மீனா தன் உதட்டைக் குவித்து குறும்பாகக் கண்ணடித்தாள்.

"அடிப்பாவீ... அம்மாத் தாயே... மீனாட்சீ... நீ ரொம்பவே முத்திட்டே... கெட்டு குட்டி சுவராப் போயிருக்கேடீ..!! இப்படீல்லாம் கூட உனக்கு பேசத் தெரியுமாடீ.." சீனு அவள் இடுப்பில் கிள்ளினான்.

"உன் கூட சேந்தேன்ல்லா அதான்... கையை எடுடா சனியனே... கதவாண்டை அப்பா நின்னுக்கிட்டு இருக்கார்.."

கார் ஈ.ஸீ.ஆர் ரோடில் வெண்ணையாக வழுக்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தது. ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திய சீனு, 'மீனு... கிட்டவாடிச்செல்லம்.." குழைந்தான்.

"இப்ப எதுக்கு வண்டியை நிறுத்தினே நீ"

"ஒரு வாரம் ஆச்சுல்லே.. ஒண்ணே ஒண்ணு குடுடீ கண்ணு.... பெட்ரோல் போட்டாத்தான் வண்டி ஓடும்.." வெட்கமில்லாமல் சிரித்தான் சீனு.

"வேணம்பா... ரோட்ல வண்டிங்கள்ளால்லாம் நிறையப் போவுதுல்லே.."

"ப்ளீஸ்... போறவன் போறான்.. வர்றவன் வர்றான்... நீ ஒண்ணே ஒண்ணுடீ...."

"நான் உன் கிட்ட வந்தா... என்னை நீ கட்டிப்புடிப்பே.. அப்புறம் என் சட்டையெல்லாம் கசங்கிப்போயிடும்.. இண்டர்வியூவுக்கு போகணுமில்லே..."

மீனா சிணுங்கியபோதிலும், சீனுவின் கண்களில் இருந்த உல்லாசம் அவளையும் பட்டெனத் தொற்றிக்கொண்டது. சீனுவின் உதடுகள் தரும் இதமான சூட்டுக்கு அவள் பெண்மை அலைந்தது. மீனா காரின் கண்ணாடியின் வழியாக முன்னும் பின்னும் ஒருமுறைப்பார்த்தாள்.



சீனுவின் கழுத்தை தன் இடது கையால் மனதில் பொங்கும் ஆசையுடன் வளைத்தாள். சீனுவைத் தன் புறம் இழுத்து அவன் நெற்றியில் ஆவலுடன் முத்தமிட்டாள். புருவங்களில் முத்தமிட்டாள். அவன் உதடுகளில் அழுத்தமாக முத்தமிட்டாள். தன் இதழ்களில் வழியும் ஈரத்தை, தன் இதழ்களை கவ்வி உறிஞ்சிய சீனுவின் இதழ்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினாள். அவன் உதடுகள் தந்த அழுத்தத்தை மனம் சிலிர்க்க, உடல் சிலிர்க்க விழி மூடி அனுபவித்தாள்.

"தேங்க்யூடீச் செல்லம்.." சீனுவும் சிலிர்த்தான்.

சீனு தன் உதடுகளைத் துடைத்துக்கொண்டு வண்டியைக் கிளப்பினான். கார் ஓட ஓட, மீனா அவன் தோளில் தன் தலையைச் சாய்த்துக்கொண்டாள். அரை நிமிடத்திற்கு ஒருதரம் தன் முகத்தைத் திருப்பி திருப்பி, அவன் கன்னத்தில் தன் உதடுகளை மென்மையாக ஒற்றி எடுத்துக்கொண்டிருந்தாள். 



No comments:

Post a Comment