Monday, 30 March 2015

சுகன்யா... 80

செல்வாவும் ஒரு கணம் உள்ளுக்குள் அதிர்ந்துதான் போயிருந்தான். சே.. நான் இன்னைக்கு அறிவுகெட்டத்தனமா பைத்தியக்காரத்தனமால்ல நடந்துகிட்டேன்? அப்படி சுகன்யா என்ன சொல்லிட்டா..? நடந்ததைத்தானே அவ சொன்னா? ஆனா அதை அவ என் கிட்ட சொன்ன நேரம் சரியில்லே. சொன்னவிதம் சரியில்லே.

ம்ம்ம்.. நடந்தது நடந்து போச்சு. இப்ப எதுக்கு பழசை சுகன்யா ஞாபகப்படுத்தினா? என் அம்மாவும்தான் நாலு பேரு எதிர்லே நான் கோவத்துல உன்னை எதாவது தப்பா சொல்லியிருக்கலாம்... அதைக் கேட்டு உன் மனசு புண்பட்டு இருக்கலாம்... அதையெல்லாம் மனசுல வெச்சுக்காதேன்னு சொன்னாளே... அதை மட்டும் சுகன்யா ஏன் மறந்துட்டா?ஆயிரம்தான் இருந்தாலும் நான் இவளை முரட்டுத்தனமா தள்ளினது தப்புத்தானே? இப்ப இவ மூஞ்சை நான் எப்படி நிமிர்ந்து பாக்கறது? என்னை ரவுடிங்கறாளே? செல்வா தன்னுள் மருக ஆரம்பித்தான்.

ஒலகத்துல பொம்பளை தன் ஒடம்பால கொடுக்கற சுகம்தான் பெரிய சுகம்ன்னு சொல்றானுங்க.. என் கேஸ்ல என்னடான்னா... ஒரு பொம்பளை குடுக்கற சொகத்துக்கு நடுவுல இன்னொரு பொம்பளை இன்னைக்கு குறுக்கே வந்துட்டா...

இவளுக்கு நான் இன்னும் தாலி கூட கட்டலை. அதுக்குள்ள மாமியார், மருமவ சண்டை ஆரம்பிச்சிடிச்சி... உன் அம்மா இதைச்சொன்னா.. உன் தங்கச்சி அதைச் சொன்னா.. சை... கொடுமைடாப்ப்பா..

செல்வா, தன் முகத்தை, கழுத்தை, மார்பை, கைகளை நன்றாகத் துடைத்துக்கொண்டு ஈரத் துண்டை பால்கனி கொடியில் உதறிப் போட்டான்.

“அயாம் சாரி.. சுகன்யா,” அறையின் நடுவில் நின்றவாறு, தன் தலையை தடவிக்கொண்டிருந்த சுகன்யாவின் கையை, மீண்டும் பற்ற முயன்றான் செல்வா.

“என்னைத் தொடாதே நீ...” சுகன்யா வெடித்தாள். அவனிடமிருந்து பின்னுக்கு நகர்ந்தாள் அவள்.

அய்யோன்னு நெனைச்சா, ஆறுமாசப் பாவம் சுத்திக்கும்ன்னு சொல்றது சரியாத்தான் இருக்கு.. மனதுக்குள் எரிச்சல் அடைந்துகொண்டிருந்தான் செல்வா. பாக்கறதுக்கு கொஞ்சம் மூக்கும் முழியுமா, செவப்புத் தோலோட, கூடவே மாரும் சூத்தும் தெறிப்பா இருந்துட்டா பெரிய மசுருன்னு மனசுக்குள்ள நினைச்சுக்கறாளுங்க... அவன் மனது தறிகெட்டு ஓட ஆரம்பித்தது. உள்ளத்துக்குள் கொதிக்க ஆரம்பித்தான்.

போச்சு போச்சு... எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இப்பவே ஈகோ பிராப்ளம் ஆரம்பிச்சிடுச்சா.. எல்லாம் இவ சூத்தை தொறந்து பாக்கணுங்கற ஆசையில வந்த வெனை... செல்வா தன் மனதுக்குள் மேலும் மேலும் குமைந்து கொண்டிருந்தான்.

செல்வா... கன்ட்ரோல் யுவர் செல்ஃப்... சுகன்யா நீ காதலிக்கறப் பொண்ணுடா... உன் மனைவியாக ஆகப்போறவ... அவளைப் போய் இவ்வளவு மட்டமா நினைக்கறே... அவ உன் குணத்தைத்தானே சொன்னா... அதுவும் நீ வற்புறுத்தி விடாம கேக்கவேதானே சொன்னா... அவ சரியா... நீ சரியா? நிதானமா வீட்டுக்குப் போய் நடந்து என்னன்னு யோசனைப் பண்ணுடா? 


சனிக்கிழமை காலை. சீனு இன்னும் படுக்கையிலிருந்து எழுந்தபாடில்லை. சுகமாக போர்வையை கால் முதல் தலைவரை இழுத்துப் போர்த்திக்கொண்டு நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தான்.

"ஒரு நிமிஷம் எழுந்து வந்து தெருக் கதவை தாப்பா போட்டுக்கடா... நாங்க கிளம்பணும்.. எங்களுக்கு நேரமாச்சு."

உஷா சீனுவை முதுகில் தட்டி எழுப்பினாள். ராகவன், பத்மா, உஷா மூவரும், ஆதிகேசவ பெருமாளை தரிசனம் செய்ய, காலை ஐந்து மணிக்கெல்லாம் ஸ்ரீபெரும்புதூருக்கு அவசர அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள்.

"இன்னைக்கு லீவு தானே.. கொஞ்சம் நேரம் தூங்கவிடுங்கத்தே.." முனகினான் சீனு.

"ஒரு நிமிஷம் எழுந்து வாடா...கண்ணு..." அவள் தன் பட்டுப்புடவை மடிப்புகளை சரிசெய்து கொண்டே, சீனுவிடம் கெஞ்சினாள்.

"வெளியிலேருந்து பூட்டிக்கிட்டு போங்களேன்.." சீனு சோம்பல் முறித்தவாறு கட்டிலில் எழுந்து உட்கார்ந்தான்.

"அவன் ஒரு கும்பகர்ணன்.. அவ பின்னால நீ ஏம்மா நிக்கறே? உஷா... சட்டுன்னு வாம்மா... பஸ் கிளம்பிடும்." ராகவன் வெரண்டாவிலிருந்து சலிப்புடன் குரல் கொடுத்தார்.

பத்து, பனிரெண்டு குடும்பங்கள், அவர் வயதையொத்த நண்பர்கள், தங்கள் குடும்பத்தினருடன் சிறிய டெம்போ ட்ராவலரை ஏற்பாடு செய்து கொண்டு, மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று சென்னையைச் சுற்றியிருக்கும் வைஷ்ணவ தலங்களுக்கு சென்று பெருமாள் தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.

"வந்துட்டேன்ண்ணா.. டேய் சீனூ... பிளாஸ்க்ல காஃபி போட்டு வெச்சிருக்கேன்... தோசை மாவு இருக்கு... மொளகா பொடி இருக்கு... டிஃபனுக்கு ரெண்டு தோசையை ஊத்திக்கடா..." உஷா வேகமாக கீழே இறங்க ஆரம்பித்தாள்.

சீனு, மீனாவின் இடுப்பில் தன் கையைப் போட்டவாறு, கொடைக்கானலில் உல்லாசமாக சுற்றியலையும்போது, அவனைத் தட்டி எழுப்பி, அவனுடைய இனிமையான விடியல் நேரத்து இன்பக்கனவை கலைத்துவிட்ட அத்தையின் மேல் அவனுக்கு தாங்க முடியாத எரிச்சல் கிளம்பியது.

"ஒரு செட் சாவியை எடுத்துக்கிட்டீங்கள்லா...?" தெருவில் இறங்கி நடந்தவர்களிடம் கூவினான், சீனு.

"இருக்குடா..." ராகவன் தலையை ஆட்டிக்கொண்டே நடந்தார். தெரு முனையில் அவர்களுக்காக டிராவலர் காத்துக்கொண்டிருந்தது. 


தெருக்கதவை தாழிட்டுக்கொண்டு வந்த சீனு மீண்டும் ஹாலில் சோஃபாவில் நீளமாகப் படுத்துக்கொண்டான். உஷா அவனை முதுகில் ஓங்கி அறைந்து எழுப்பிய போது, சீனு தன் இளம் மனைவி மீனாவுடன் தேன்நிலவிற்காக, ஊட்டி, கொடைக்கானல் என்று ஜாலியாக சுற்றிக்கொண்டிருந்தான். ஊட்டியில் ரெண்டு நாட்களை கழித்தப்பின் அங்கிருந்தே மைசூர் போகவும் அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள்.

சோஃபாவில் படுத்துக்கொண்டு, பாதியில் விட்ட இடத்திலிருந்து தன் கனவைத் தொடங்க நினைத்த சீனுவுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. மீண்டும் கனவு வருவேனா என முரண்டு பிடித்தது. கனவுதான் வரலே. தூக்கமாவது வந்து தொலைக்கக்கூடாதா? அவன் தன் கண்ணை இறுக மூடிக்கொண்டு புரண்டு புரண்டு படுத்தான். தூக்கமும் வந்தபாடில்லை.

விடியற்காலையில கண்ட கனவு பலிக்கும்ன்னு சொல்லுவாங்களே. கனவுல, மீனாவும் நானும் ஹனிமூனுக்கு போயிருந்தோம்ன்னா, மீனா வீட்டுல எந்தப் பிரச்சனையும் எழாம, எங்க கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுப் போச்சுன்னுதானே அர்த்தம். இதை நினைக்கும் போதே அவனுக்கு மனசெல்லாம் இனித்தது. இன்னைக்கு மீனாவைப் போய் பாத்துட்டு வரலாமா?

சீனுவுக்கு எழுந்திருக்கவும் மனம் வரவில்லை. சோஃபாவில் படுத்தபடியே ரிமோட்டை எடுத்து டீ.வி.யை ஆன் செய்தான். ஒரு சேனல் பாக்கியில்லாமல், எல்லாச் சேனல்களிலும், கழுத்தில் கொட்டையைக் கட்டிகொண்டு, பட்டையடித்து இருந்தவர்கள், நெற்றியில் நாமத்தை சூட்டியிருந்தவர்கள், பச்சை, ஆரஞ்சு, கருப்பு, நீலம் என வித விதமான வண்ணங்களில், இடுப்பில் வேட்டி அணிந்தவர்கள், வெள்ளை, கருப்பு, ஸ்படிகம், என கழுத்தில் மணிமாலைகளை அணிந்து கொண்டு, தங்கள் ஞானப்பழங்களிலிருந்து, பக்தி ரசத்தை பிழிந்து எடுத்து, பக்தகோடிகளின் இக பர நல்வாழ்க்கைக்காக, ஆறாக வெள்ளமாக, ஓடவிட்டுக்கொண்டிருந்தார்கள். கேள்விகளை அவர்களே கேட்டு, பதிலையும் அவர்களே சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

சில சேனல்களில் வயதானவர்கள், ஆண் பெண் என்ற வித்தியாசமே இல்லாமல், ஒரு பெரிய பந்தலின் கீழ், தனித் தனியாக பிளாஸ்டிக் பாய், அதன் மேல் பெட்ஷீட் விரித்துக்கொண்டு, பெரிய பெரிய தொப்பைகளுடன் ஆண்களும், நடப்பதற்கே சிரமப்படும் பிருஷ்டம் பெருத்த பெண்களும், கும்பலாக நின்றும், கிடந்தும், ஓடிக்கொண்டும், குதித்துக்கொண்டும், யோகா என்ற பெயரில் தங்கள் உடம்பை வருத்திக்கொண்டிருந்தார்கள்.

சை.. என்னக் வேடிக்கைடா இது...? நொந்துகொண்டான் சீனு. இந்த சேனல்களை பாக்கற கோமாளிங்ககூட நாட்டுல இருக்கானுங்களா..? சீனு வியப்படைந்தான். கையிலிருந்த ரிமோட்டை எதிரிலிருந்த டீபாயின் மேல் வீசியெறிந்தான். வெறுப்புடன் எழுந்து டீ.வியை அணைத்தான். 


வாயைக்கொப்பளித்துக் கொண்டு, டைனிங் டேபிளின் ஓரத்தில், பளபளக்கும் பிளாஸ்கில் நிறைக்கப் பட்டிருந்த ஆவி பறக்கும், பில்டர் காஃபியை, ஒரு சில்வர் டம்ளர் நிறைய ஊற்றிக்கொண்டு, வெராண்டாவிற்கு வந்தான். குளிர்ந்த காற்று முகத்தில் வேகமாக வந்து அடிக்க மனசுக்குள் ஒரு நிம்மதி படருவதை உணர்ந்தான். நீளமாக காற்றை நெஞ்சுக்குள் இழுத்து வெளியேற்றினான்.

மீனாவின் சிரித்த முகம் அவன் கண்ணில் வந்து நின்றது. மீனா தூங்கி எழுந்துட்டு இருப்பாளா... ஒரு வாரமாச்சு அவளைப் பாத்து... வெளியில வர்றியாடீன்னு கூப்பிட்டுப் பாக்கலாமா? இனிமே பீச்சுக்கு வரமாட்டேன்னு தீத்து சொல்லிட்டா.. சினிமாவுக்கு வருவாளா? அங்கே இருட்டாத்தானே இருக்கும்...? சீனு.. உனக்கு மண்டையில களிமண்ணுடா.. பரிட்சைக்கு படிச்சுக்கிட்டு இருக்கறவ வெளியில உன் கூட வருவாளா?

போன வாரம் எவ்வளவு ஜாலியா இருந்திச்சி.. அவ வீட்டுக்குப் போய் மீனாவை கூப்பிட்டதும், ஒரு கேள்வி கேக்காம செல்வா அவளை என் கூட அனுப்பி வெச்சான். அதே மாதிரி அவளோட அம்மா அனுப்பி வெப்பாங்களா?
ஆயிரம்தான் இருந்தாலும் என் நண்பன் செல்வா.. செல்வாதான்.. செல்வா ஜிந்தாபாத்.. செல்வா ஜிந்தாபாத்.. சீனுவின் மனம் அவனுக்கு நன்றி சொல்லியது.

சே.. பாவம் படிக்கறவளை எதுக்காக தொந்தரவு பண்ணணும்..? மீனாவை பார்க்க அவன் மனம் துடித்தது. செல்வாவை போய் பாக்கற சாக்குல, தோட்டத்துல, கூடத்துல, இல்லே மாடியிலேன்னு மீனாவை எங்கேயாவது அவ வீட்டுலேயே மடக்கி, சட்டுன்னு கட்டிப்புடிச்சி, சின்னதா ஒரு கிஸ் அடிச்சுட்டு, அவகிட்டேருந்து ஒரு கிஸ் வாங்கிட்டு வந்துடலாமா?

மீனாவின் வலுவான தேகமும், அவள் அங்கங்களின் மென்மையும், குழந்தைத்தனமான அவள் விழிகளின் வெளுப்பும், கருமையும், கூந்தல் வாசனையும், அவளுடைய உடலின் மென்மையான சந்தன வாசனையும் அவனை அமைதியாக இருக்கவிடவில்லை.

சுகன்யா ஊர்லேருந்து வந்துட்டா.. கம்மினாட்டி செல்வா அவளை தள்ளிக்கிட்டு அவ பின்னால எங்கேயாவது சுத்தப் போயிடுவான்.. இன்னைக்கு எப்படி பொழுதை ஓட்டறது... சீனு தன் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தான். வீட்டுலதான் யாரும் இல்லே... சரி.. வேலாயுதத்தை கூப்பிடலாமா? சீனுவுக்கு சட்டென அவன் ஞாபகம் வந்தது.

வேலாயுதத்தை நினைத்தவுடன் அவன் கை அரித்தது. மனதுக்குள் ஒரு ஏக்கம் வேகமாக எழுந்து உடலெங்கும் ஒரு நமைச்சல் எடுத்தது.. ஒரு மாசமாச்சு.. கட்டிங் வுட்டு.. இந்த எண்ணம் மனதில் வந்த அடுத்த நொடி கடந்த சண்டே அன்று மீனா தன் வீட்டிலிருந்தே, தன் செல்லில், வேலாயுதத்துக்கு லாடம் கட்டிய சீன் அவன் ஞாபகத்துக்கு வந்தது...

எப்பா.. வேண்டவே வேண்டாம்.. வேலாயுதம்கூட சகவாசம் வெச்சிக்கிட்டேன்னு மீனாவுக்கு தெரிஞ்சா... என்னை பீஸ் பீஸா கிழிச்சுடுவா... இப்பல்லாம் மீனாவோட அராஜாகம் அதிகமாயிட்டே போவுது.. காதலி வேணும்ன்னா கொஞ்ச நாளைக்கு நண்பனைத் தியாகம் பண்ணித்தான் ஆகணுமா?

வாலு போனாத்தான் கத்தி வருமா? ஒரு நஷ்டத்துலதான் ஒரு லாபத்தைப் பாக்கமுடியுமா? ஒண்ணைக் குடுத்தாத்தான் ஒண்ணு கிடைக்குமா? டேய்... சீனு... நீ ஒரு ஞானிடா... சட்டுன்னு வாழ்க்கையை புரிஞ்சுக்கிட்டியேடா? அவன் மனசு 'ஓ' வென கூச்சலிட்டது.

வாசல் படியில் உட்கார்ந்திருந்த சீனு மெல்ல எழுந்து கைகளை தலைக்கு மேல் உயர்த்தி சோம்பல் முறித்தான். ஹாலுக்குள் நுழைந்தபோது அவன் செல் ஒலித்தது... ஸ்கீரீனில் மீனாவின் புகைப்படம் பளிச்சிட்டது. 
வாவ்... வாடீச் செல்லம்... பழம் தானா நழுவி பால்லே அதுவா விழுதே... சீனு... நீ இனிமே இன்னைக்கு கனவு காண அவசியமில்லேடா... உன் மீனா டார்லிங் போன்ல வந்துட்டா.. ஏதாவது பிட்டைப் போட்டு, அவளைப் பிக்கப் பண்ணி உன் வீட்டுக்கு தள்ளிட்டு வந்துடு..

சாயந்திரம் நாலு மணி வரைக்கும் இன்னைக்கு உன் வீடு காலிதான்.. மூணு பெட் ரூம் இருக்கு... எதுலே இஷ்டமோ அதுல அனுபவி ராஜா அனுபவின்னு ஜாலியா இரு.. கோடையில் குற்றால அருவியில் குளிப்பது போலிருந்தது அவனுக்கு..

"சொல்லுடீ மீனா டார்லிங்... எப்படியிருக்கேடீ செல்லம் நீ... ஒரு வாரமாச்சும்மா உன் குரலைக்கேட்டு?” சீனு உற்சாகமான் குரலில் கொஞ்ச ஆரம்பித்தான்.

"டாய்... சீனு.. முண்டம்.. நான் உன் டார்லிங்கை பெத்தவடா… உன் ஒடம்பு எப்படி இருக்குது, ராத்திரி எங்கேயாவது பார்ட்டீ கீர்ட்டீனு போய் வந்தியா... குடிச்சுட்டு வந்த போதை இன்னும் தெளியலையா உனக்கு...

"அம்ம்ம்மமா.. சாரீம்ம்ம்மா..."

"நான் கேட்ட கேள்விக்கு பதிலைச்சொல்லுடா.. அதுக்கப்புறம் என் பொண்ணு மீனா... உனக்கு டார்லிங் ஆயிட்டாளா... கட்டை உனக்கு ரொம்பத்தான் துளுத்துப் போயிருக்குது... ? வீட்டுக்கு வருவேல்லா.. வா வாடா வா.. அவ எப்படியிருக்கான்னு உனக்கு நான் சொல்றேன்..."

மறுபுறத்திலிருந்து மல்லிகாவின் குரல் கணீரென வந்தது. பேசிக்கொண்டே மல்லிகா தான் பேசிக்கொண்டிருந்த செல்லின் ஸ்பீக்கரை ஆன் செய்தாள். அவளுடன் நடராஜனும், செல்வாவும் உட்கார்ந்து இருந்தார்கள். மீனா குளித்துக்கொண்டிருந்தாள்.

"அம்ம்மா... மீனா நம்பர்லேருந்து கால் வரவே.. அவளை கலாய்க்கலாம்ன்னு... காமெடி பண்ணிட்டேம்மா... சாரிம்ம்மா... தப்பா நெனைச்சுக்காதீங்கம்மா" சீனு உண்மையிலேயே உள்ளூரப் பயத்துடன் உடல் நடுங்க உளறினான்.

நானே என் வாயைக்குடுத்து காரியத்தைக் கெடுத்துட்டேனே... எல்லாம் என் தலையெழுத்து... 'சனி பகவான்' இன்னைக்கு என்னைக் காலங்காத்தாலேயே புடிச்சிக்க ஆசைபடறானே? கொஞ்சம் கூட அவனுக்கு என் மேல இரக்கமே இல்லையே? சீனுவுக்கு நொடியில் தேகமெங்கும் வியர்த்தது.

கடைசீல... எதிர்வீட்டு ராமசாமி அய்யரு... நாங்க கிஸ்ஸடிச்ச மேட்டரை அம்மாக்கிட்ட போட்டுக்குடுத்துட்டாரா? மீனாவோட அம்மாவுக்கு நாங்க லவ்வற விஷயம் தெரிஞ்சிப் போச்சா? அம்மாவுக்கு தெரிஞ்சிருந்தா.. அவ அப்பாவுக்கும் தெரிஞ்சிருக்குமே?

“என்னடா... சத்தத்தையே காணோம்...” மல்லிகா குரலை உயர்த்திப் பேசினாள்.

“அம்மா... எல்லாரும் கோவிலுக்கு ஸ்ரீபெரும்புதூர் வரைக்கும் போயிருக்காங்க... நான் மட்டும்தான் வீட்டுல இருக்கேன்...?”

“நான் அதைக் கேக்கலடா... உன் வாய்ல என்ன கொழுக்கட்டையா... அதைப் பத்திக் கேட்டேன்...”

“சாரீம்ம்மா... பிளீஸ்...”

"உன்னைப் பெத்தவங்க நல்லவங்க... கோயிலுக்குப் போயிருக்காங்க... நீ என்னடான்னா.. கோவில் மாடு மாதிரி சுத்திக்கிட்டு... ஃப்ரெண்டு தங்கச்சியை டார்லிங்ன்னு சொல்லிகிட்டு, அவன் அம்மாகிட்டவே அவ நல்லாயிருக்காளான்னு கேள்வி வேறே கேக்கறே..

"பிளீஸ்ம்ம்மா.. தப்புத்தம்ம்மா... " .

“டேய்... நீ உடனே புறப்பட்டு இங்க வாடா... உனக்கு கச்சேரியை நான் நேர்ல வெச்சுக்கறேன்?”

மல்லிகாவின் உதடுகளில் மெல்லிய புன்முறுவல் எட்டிப்பார்த்தது. முகத்தில் அலாதியான ஒரு சந்தோஷம் நிரம்பியிருந்தது. பக்கத்திலிருந்த நடராஜன், அவளை நிமிர்ந்து பார்த்து ஓசையில்லாமல் சிரித்தார்.

“அம்மா... என்ன சொல்றீங்கம்மா..?” சீனுவுக்கு என்ன பேசுவதென்று புரியாமல் விழித்தான்.

"நீ பண்ணியிருக்கற வேலைக்கு..."

"அம்மா... நான் பண்ணது தப்புதான்னு ஒத்துக்கறேம்மா.. பிளீஸ்... கோச்சிக்காதீங்கம்மா.."

சீனு கெஞ்ச ஆரம்பித்தான். மல்லிகா அவனுக்கு எதற்காக போன் செய்தாள் என்பதை கேட்காமல் தன் மனதில் இருக்கும் குற்ற உணர்ச்சியில் சீனு தொடர்ந்து உளற ஆரம்பித்தான்.

"நீ பண்ணது தப்புன்னு உனக்கேத் தெரியுதுல்ல.. அதுக்கு நான் உன்னை கோச்சிக்கக்கூடாதா? உன்னை கட்டி வெச்சி ஒதைக்கணும்டா..?!"

"அம்மா.. நீங்க என்னை கோச்சிக்கலாம்.. தாராளமா என்னை அடிக்கறதுக்கே உங்களுக்கு உரிமையிருக்கும்மா... உங்க வீட்டுல உங்க கையால சாப்பிட்டு வளந்தவன்ம்மா நான்.."

"அப்புறம்... ரொம்ப ஓட்டாதேடா நீ.. உன்ன நான் இன்னைக்கு நேத்தாப் பாக்கிறேன்.."

"அம்மா... என்னை ஆசைப்படறேன்னு மீனாதான் மொதல்ல சொன்னாம்மா... அதுக்கப்புறம்தான் நான் சரின்னேம்மா?" இன்னைக்கு என் தலை தப்பிக்கனும்ன்னா இதுதான் சரியான வழியென நினைத்து மீனாவை போட்டுக்குடுத்தான் சீனு..

"அவளுக்குத்தான் புத்தியில்லே.. சின்னப்பொண்ணு... உங்கிட்ட எதையாவது அர்த்தமில்லாத உளறினான்னா... நீ என்னடாப் பண்ணியிருக்கணும்? எங்கிட்ட சொல்லியிருக்கலாம்ல்லியா? அவளை கண்டிச்சு இருப்பேன்ல்லா... உனக்கு எங்கடாப் போச்சு புத்தி...?"

"அம்ம்மா… மீனாவைத் திட்டாதீங்கம்மா... அவ பாவம்ம்மா...”

"என் பொண்ணை திட்டு... திட்டாதேன்னு சொல்றதுக்கு நீ யாருடா?"

"என் மனசுக்குள்ள எனக்கேத் தெரியாம அவ மேல ஒரு ஆசையிருந்திருக்கும்மா... அதான் நானும் சரீன்னு சொல்லிட்டேன்..."

"ஆசை... தோசை.. நீ இங்க வாடா மொதல்லே.. உன் தோலை உரிக்கணும்ண்டா?"

"அம்மா.. நான் நேர்லேயே வந்து உங்கக்கிட்ட எல்லாத்தையும் சொல்லிடறேம்ம்மா... இப்போதைக்கு அப்பாகிட்ட மட்டும் இந்த விஷயத்தைப் போட்டுக் குடுத்திடாதீங்கம்மா" சீனு குரலில் நடுக்கத்துடன் பேசினான்.

"எந்த அப்பாகிட்ட சொல்ல வேணாம்...?" போலியான கோபத்தைக்காட்டினாள், மல்லிகா.

"நீங்க என் அம்மான்னா.. மிஸ்டர் நடராஜன் என் அப்பாதானேம்மா?" தூண்டிலில் கொழுத்தப் புழுவை குத்தி, அதை வளைத்துப் போட்டான் சீனு...

"ஏன்டா... எப்போதுலேந்துடா நீ என் புருஷனுக்கு மிஸ்டர் போட ஆரம்பிச்சிருக்கே?" தன் புருஷனை சீனு அப்பாவென அழைத்ததும், மல்லிகாவுக்கு உச்சி குளிர்ந்து போனது.

"அம்ம்மா... எது சொன்னாலும் இப்படீ நீங்க என்னை கேட்டு போட்டு மடக்கினா நான் என்னாப் பண்ணுவேம்மா... நீங்களே சொல்லுங்கம்மா?" சீனுவின் குரல் கரகரப்பாக வந்தது.

"ஏன்டீ அவனை சும்மா கலாய்க்கறே... நீ? சட்டுன்னு அவனை கிளம்பி வரச்சொல்லுடி... எனக்கு நேரமாவுது... நான் கிளம்பணும்..."

நடராஜன் மல்லிகாவின் பக்கத்திலிருந்து பேசியது, சீனுவுக்கு தெளிவாகக் கேட்டதும்... அவனுக்கு மெல்ல மெல்ல விஷயம் புரிய ஆரம்பித்து. மல்லிகா தன்னை கலாய்த்துக்கொண்டு இருக்கிறாள் என்பதை உணர்ந்ததும், அவனுக்கு போன மூச்சு திரும்பி வந்தது.

மல்லிகாம்மா பேசறதைக் கேட்டு நான் ரொம்பவே பயந்து போயிட்டேனே? செல்வாவோட அப்பா நார்மலாத்தானே பேசறார்! அப்படீன்னா என் காதலுக்கு அங்கேயும் கீரின் சிக்னல்தானா? தன் உதட்டை மடித்து நீளமாக தன் மனசுக்குள் "விஷ்" ஷென நீளமாக ஒரு விசில் அடித்தான், சீனு. 


மீனாதான் லவ்வை மொதல்லே சொன்னான்னு அனாவசியமா அம்மாக்கிட்ட அவளைப் போட்டுக்குடுத்துட்டேனே... என்னை நம்பி என் கையைப் புடிச்சவளை அவசரப்பட்டு மாட்டிவுட்டுட்டேனா? இந்த மேட்டர் அந்த குட்டி பிசாசுக்கு தெரிஞ்சா என்னை உண்டு இல்லேன்னு ஆக்கிடுவாளே... சை.. என் புத்திய செருப்பால அடிச்சிக்கணும்.. பக்கத்துல இப்ப அவளும்தானே இருப்பா..?

அம்மா பவுலிங்கை முடிச்சதும்.. பொண்ணு ஆரம்பிப்பாளா...? சரி நடக்கறதெல்லாம்... நல்லதுக்குத்தான் நடக்குது... தலைக்கு வருதுன்னு நினைச்சேன்.. ஆனா தலைப்பாவோட போயிடிச்சி... மீனாகிட்டவும் ஒரு கும்பிடு போட்டுட வேண்டியதுதான்...

'சனி பகவான்' ஆரம்பத்துல தொந்தரவு பண்ணுவான்... ரொம்பவே சோதிப்பான்... ஆனா கடைசீல எப்பவும் நல்லதைத்தான் பண்ணுவான்னு பெரியவங்க சொல்லி கேட்டிருக்கேன்... என் விஷயத்துல இது கரெக்டா இருக்குதே...

இப்பவே நேரா போய் ஆசீர்வாதம் பண்ணுங்கம்மான்னு மல்லிகாம்மா கால்லே விழுந்துட வேண்டியதுதான்... இதைவிட்டா எனக்கு ஒரு நல்ல சான்ஸேக் கிடைக்காது...

டேய் சீனு... பைத்தியக்காரா.. இன்னும் அம்மா என்னடா அம்மா... 'அத்தே'ன்னு உறவைச் சொல்லி கூப்புடுடா... அவங்க வீட்டுல நுழையும் போதே அத்தேன்னு கூப்பிட்டுக்கிட்டே மாப்பிள்ள மாதிரி உரிமையா நுழைடா... சீனு குதூகலமானான்.

"அம்மா.. டிஃபன் கிஃபன் பண்ணீட்டிங்களா? இல்லே வர்ற வழியிலே எதாவது புடிச்சிக்கிட்டு வரவா? சீனு தன் வழக்கமான பாணியில் மல்லிகாவிடம் குழையடிக்க ஆரம்பித்தான்.

"டேய்... என்னடா சொல்றே?"

"லீவு நாள்லே.. நீங்க காலையில கிச்சனை ஒட்டடை அடிச்சி... நல்லாத் தொட்சி... தரையெல்லாம் க்ளீன் பண்ணுவீங்க... டிஃபன் வெளியிலேருந்துதானே வாங்கிட்டு வருவான் செல்வா.. அதான் கேட்டேன்.." அந்த வீட்டின் நடைமுறையெல்லாம் தெரிந்த அவன் மனதுக்குள் மகிழ்ச்சியுடன் குழைந்தான்."டேய் சீனு.. நான் உங்கிட்ட சீரியஸா பேசிக்கிட்டிருக்கேன்.. உன் கொழையடிக்கற வேலையெல்லாம் எங்கிட்ட வெச்சுக்காதே... அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வரும்..." மல்லிகா சிரிக்க ஆரம்பித்தாள்.. அவளால் அதற்கு மேல் சீனுவின் மேல் கோபமாக இருப்பதைப் போல் நடிக்க முடியவில்லை.

"பசிக்குதும்மா..." சீனு தன் ட்ராக்கை கெட்டியாகப் பிடித்துக்கொண்டான்.

"சீனூ... உனக்கு இன்னைக்கு ஆஃபீஸ் லீவுதானே... உனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்குடா... உனக்கு இல்லாத டிஃபனா? டிஃபன்ல்லாம் நான் பண்ணித்தர்றேன்.. சீக்கிரம் வாடா.." மல்லிகாவின் குரலில் மிதமிஞ்சியப் பாசம் எட்டிப்பார்த்தது.

"எம்மா... ஒண்ணு ரெண்டுன்னு எண்ணிகிட்டே இருங்க... தோம்ம்மா... குளிச்சிட்டு பதினைஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்..." சீனு பாத்ரூமை நோக்கி தன் கால்கள் தரையில் பாவாமல் ஓடினான். 


No comments:

Post a comment