Friday 19 September 2014

இனிஷியல் இல்லாதவர்கள் 20


இவ ஒருத்தி... என்னடீ பண்றதுன்னு இவளைப் போய் கேட்டனே? என் மனசை கொழப்பிட்டு இவ நிம்மதியா தூங்கறா... மைதிலியை ஒரு முறை திரும்பிப்பார்த்தவள் ஒருக்களித்து சுவரை நோக்கி படுத்துக்கொண்டாள். இரண்டே நிமிடங்களில் புரண்டு படுத்தாள். மீண்டும் புரண்டாள். இறுக கண்ணை மூடிக்கொண்டாள். "ஐ லவ் யூ தேனு..." கல்யாணம் அவளை தூங்கவிடுவதாக இல்லை. "சனியன் புடிச்சவன் திரும்ப திரும்ப இவன் ஏன் என் மனசுக்குள்ள வர்றான்...?" மார்பிலிருந்த போர்வையை உதறினாள். பால்கனிக்கு வந்து நின்றாள். தெருவே அமைதியாக இருந்தது. இருட்டில் பால்கனியில் இருந்த சேரில் உட்கார்ந்து கொண்டாள்.

"மச்சான்... என் ஆள்கிட்ட நாளைக்கு கண்டிப்பா ப்ரப்போஸ் பண்ணிடலாம்ன்னு இருக்கேன்டா..." ஆர்வத்துடன் ஒரு குரல் பேசியது. "கிழிஞ்சுது கிருஷ்ணகிரி... நீயாவது... அவகிட்ட பேசறதாவது...? போறப்போக்கைப் பாத்தா அவளுக்கு கல்யாணம் ஆகி... அவளே பேரன் பேத்தி எடுத்துடுவா போலருக்கு..." இன்னொரு குரல் நக்கலாக வந்தது. இந்த இரண்டு குரலைத் தொடர்ந்து இன்னொரு குரல் கேலியாக சிரிப்பதும் கேட்டது. உட்கார்ந்த இடத்திலிருந்து தெருவை எட்டிப்பார்த்தாள். மூன்று இளைஞர்கள் நடந்துகொண்டிருந்தார்கள். மூவரின் வாயிலும் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. நாட்டுல எவனுக்கும் ப்ரப்போஸ் பண்றதை தவிர வேற வேலையே இல்லையா? தேன்மொழிக்கும் சட்டென சிரிப்பு வந்தது. பொங்கி வந்த சிரிப்பை அடக்கமுடியாமல் ரசித்து சிரித்தாள். தெருவில் நடந்தவர்கள் சட்டென நின்று சிரிப்பொலி எங்கிருந்து வருகிறதென அறியாமல் இங்குமங்கும் பார்த்தார்கள். * * * * * சட்டென எழுந்து அறைக்குள் வந்த தேன்மொழி தன் செல்லை எடுத்தாள். மணி பத்தரை ஆகியிருந்தது. கட்டிலில் படுத்தவளின் விரல்கள் கல்யாணத்தின் படத்தை வெகு இயல்பாக ஸ்க்ரீனுக்கு கொண்டு வந்தன. ஜூம் செய்து அவனைப் பார்த்தாள். தீடிரென அவன் கண்கள் சிறியதாக இருப்பதைப் போல் அவளுக்குத் தோன்றியது. கல்யாணம் தூங்கிட்டு இருப்பானா? குட் நைட்ன்னு ஒரு மெசேஜ் அனுப்பினா என்ன? அவள் மனதில் எழுந்த எண்ணத்தை அவளால் அடக்கிக்கொள்ள இயலாமல் தவித்தாள். செல்லின் ஸ்கிரீனில் அவளுடைய விரல்கள் வேக வேகமாக இயங்கின. "விஷ் பண்ணேலேன்னு கோவமா? சாரிப்பா...? வென் ஆர் யூ கமிங் டு சென்னை? குட் நைட் டியர்..." மெசேஜை ஒரு முறைப்படித்தாள்... படித்தவள் எழுதியதை அவனுக்கு அனுப்ப தயங்கினாள். அயாம் சாரி... இதுக்கு மேல உங்களை நான் எதுக்காகவும் தொந்தரவு பண்ண மாட்டேன்... யூ மே ஃபர்கெட் த ஹோல் எபிஸோட் அட் ஒன்ஸ்... சட்டென அவன் அனுப்பிய மெசேஜ் நினைவுக்கு வர, தான் எழுதிய வார்த்தைகளை ஒவ்வொரு எழுத்தாக அழித்தாள். செல்லை தலை மாட்டில் தலையணையின் பக்கத்தில் வைத்தாள். தலையணையில் தன் மார்புகள் அழுந்த கவிழ்ந்து படுத்துக்கொண்டாள். மனம் வெறுமையாக இருப்பது போல உணர ஆரம்பித்தாள். * * * * * ஏன்டீ... அவன் உன்கிட்ட நேத்து ராத்திரி என்னடீ சொன்னான்? ஆறுமாசம் டயம் கேட்டவனுக்கு ஆறுமணி நேரம் பொறுமையா இருக்க முடியலையா? நேத்து உன்னை காதலிக்கறேன்னான்... நீ என்ன சொன்னே? என்னை நீ முழுசா பாத்து அரைமணி நேரம் கூட ஆகலே... அதுக்குள்ளே ஒருத்தரைக் காதலிக்கறது எப்படீன்னு நான் சிரிச்சேன்? அதுக்கு அவன் என்ன சொன்னான்? தேனூ... உன்னை நான் ரொம்ப ரொம்ப காதலிக்கறேன்னு அவன் கதைவிட்டான். பனிரெண்டு மணி நேரத்துல... எல்லாத்தையும் மறந்துடுன்னு எனக்கு மெசேஜ் குடுக்கறான்... இந்தப் பசங்களே லூசுங்கடீன்னு மைதிலி சொல்லி சொல்லி சிரிக்கறாளே.. அது சரிதான் போலருக்கு... இவனும் ஒரு லூசுதானா? கவிழ்ந்து படுத்திருந்த தேன்மொழி மல்லாந்தாள். சரி இப்ப என்னப் பண்ண போறே நீ? அதான் புரியலே... மனசுக்குள் எங்கேயோ வலித்தது. தேன்மொழி புரண்டாள். மீண்டும் கவிழ்ந்து படுத்தாள். இப்ப எதுக்குடீ நீ இவ்ளோ ஃபீல் பண்றே? அவன்கிட்டே சாரி சொல்லணும்ன்னு இந்த அளவுக்கு ஏன் துடிச்சுப் போறே? அப்டீ என்னடீ தப்பு பண்ணிட்டே நீ...? ட்ரெயின்ல வரும்போது யார்கூடவோ பேசிகிட்டு இருந்தே; பேச்சு சுவாரசியத்துல அவனுக்கு பதில் மெசேஜ் அனுப்ப மறந்துட்டே; மதியானத்துக்கு மேல ஒரு அரைமணி நேரம் கண்ணசந்துட்டே; அவனுக்கு ஏன்டீ உன்மேல பொத்துக்கிட்டு வருது கோவம்...? என்ன இருந்தாலும் நான் இந்த அளவுக்கு ரெக்லெஸ்ஸா இருந்திருக்கக்கூடாது..?! ஆஃப்டர் ஆல்... பேசிக் கர்டஸி டிமான்ட்ஸ் ப்ராம்ட் ரிப்ளை... ஐ ஷுட் ஹேவ் ரிப்ளைட் ஹிம்... அட்லீஸ்ட் ஒன்ஸ்... ஷுட் நாட் ஐ? தேன்மொழி தனக்குள் ஒரு சின்னக்கேள்வியை எழுப்பிக்கொண்டாள். ஏன்டீ நீ மாய்ஞ்சு போறே? நீ பதிலுக்கு ஏன் விஷ் பண்ணலேன்னு தெரிஞ்சுக்க அவன் முயற்சி பண்ணானா? இல்லையே? நேத்து ராத்திரிதானேடீ உன்னை புரிஞ்சுக்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் குடுன்னு உன்கிட்ட அவன் கேட்டான்...? நாம ஃப்ரெண்ட்ஸ்ஸா பழகலாம்ன்னு அவன்தானே ப்ரப்போஸ் பண்ணான்...? நீயும் அவன் ரீசனபிளா பேசறானேன்னு நெனைச்சே...! ஆனா அந்த அவசர குடுக்கை, முந்திரிக்கொட்டை, ஒரு ஃப்ரெண்டை புரிஞ்சுக்கறதுக்கு முன்னாடியே இப்படி எரிச்சல்படலாமா? தேன்மொழியின் கேள்விக்கு உடனே விடையும் அவளுக்கு கிடைத்தது. இப்ப தேவையில்லாத டென்ஷன் எனக்கு... எல்லாம் இந்த அம்மாவால வந்த டென்ஷன்... இவன் என் வீட்டை விட்டு எழுந்து போனதுமே இவனை நான் சுத்தமா மறந்துட்டேன்... எனக்கு இந்த கல்யாணமே வேணாம்ன்னு சொன்னேன்.. என் பேச்சை யாராவது என் வீட்டுல கேட்டாங்களா? ராத்திரி பூரா என் பக்கத்துல வந்து படுத்துக்கிட்டு, தேனூ... என் கண்ணூ... என் மூக்கு... என் வாயி... ஆம்பிளைக்கு கொணம்தான்டீ முக்கியம்ன்னு ஒரே உபதேச மழை பொழிஞ்சாங்க... துருப்பிடிச்ச கத்தியால என் கழுத்தை ஒரு மணி நேரம் டார் டாரா அறுத்தாங்க. உங்கப்பனை பாருடீ... உங்கண்ணனைப் பாருடீ... என்னைப் பாருடீ... உங்கண்ணியைப் பாருடீ... அவனுங்கள்ளாம் பெரிய அழகனுங்களா? நாங்கள்ல்லாம் சந்தோஷமா இவனுங்கக்கூட குடும்பம் நடத்தலையா..? புள்ளை பெத்துக்கலையா? ஒரே மொக்கை... தாங்க முடியலே! நல்ல குடும்பத்து சம்பந்தம் கிடைக்கறது கஷ்டம்ன்னு என்னை அரிச்சி அரிச்சி எடுத்தாங்க..! இவனுக்கு நல்ல கொணமாம்? சரியான லூசுப்பயலால்லா இருக்கான்...? இதுக்குமேல இவனைப் புரிஞ்சுக்கிட்டு நான் என்னப் பண்ணப்போறேன்? லாஸ்ட் நைட்கூட என்னை உன் ஃப்ரெண்டா ஆக்கிக்கோன்னு இவன்தானே வழிஞ்சான்..?. நான் அப்பவே நீயும் வேணாம்... உன் ஃப்ரெண்ட்ஷிப்பும் வேணாம்ன்னு மூஞ்சியில அடிச்சிருக்கணும்...? நேற்றிரவு, என் நிலைமையை, என் மனசுல இருக்கறதை இவனுக்கு நான் தெளிவு படுத்திடணும்ன்னு நினைச்சு இவனுக்குப் போன் பண்ணது தப்பாப் போச்சு. பிரச்சனையும் அங்கேருந்துதான் ஆரம்பிச்சிது. நீயும் நானும் ஆறுமாசம் நண்பர்களா பழகலாம். உனக்கு என் மேல எந்தப் பிரியமும் வரலேன்னா நான் சீன்லேருந்தே போயிடறேன்னான். ராத்திரியானா தூங்க முடியலை... ஐ லவ் யூ... ஐ லவ் யூன்னு இளிச்சிக்கிட்டு வந்து என் மனசை கெடுக்கறான்... எனக்குத் தேவைதானா இதெல்லாம்...? இவனைப்போய் ஒரு பொருட்டா மதிச்சி இவனுக்கு போன் பண்ண என் புத்தியை ஜோட்டால அடிச்சுக்கணும்? எழுந்து பாத்ரூமுக்கு போய்வந்தாள். ஃப்ளஷ்ஷில் பெருக்கெடுத்த நீரின் சத்தம் கேட்டு ஒரு நொடி விழித்தாள் மைதிலி. "என்னடீ தேனூ... தூங்கலியாடி செல்லம்...?" இவள் பதிலுக்கு காத்திராமல் மீண்டும் தூங்க ஆரம்பித்தாள் மைதிலி. தேன்மொழிக்கு தூக்கம் வரவேயில்லை. பாக்கியம்… பாகீ...” குரலில் ஆசை ததும்ப, இனிமையை ஏற்றி மனைவியை கொஞ்சினார் சங்கரன். “என்ன வேணும் இப்ப?” அவள் பதிலில் எரிச்சலிருந்தது. “எப்பவும் ஏன்டீ... என்கிட்ட எரிஞ்சு விழறே?” பக்கத்தில் படுத்திருந்த பாக்கியத்தின் தோளை இலேசாக தொட்டார். நுனி விரல்களால் அவள் கழுத்தை மெல்ல வருடினார். சங்கரன் கழுத்தில் முத்தமிட்டால் பாக்கியத்துக்கு மிகவும் பிடிக்கும். தன் கணவனின் மேல் எவ்வளவுதான் கோபமிருந்தாலும் சட்டென திரும்பி அவரை கட்டிக்கொள்வாள் அவள். இன்று அவர் தொட்டதை, அவர் வருடலை, அவள் பொருட்படுத்தாததால், அவளுடைய தொடையின் மேல் தன் இடது காலை போட்டவர், அவளை சமாதானப்படுத்தும் எண்ணத்தில் அவள் கழுத்தில் அழுத்தமாக முத்தமிட்டார். "ஆரம்பிச்சிட்டீங்களா.. நவுந்துப் படுங்க..." கணவனின் காலை விருட்டெனத் தன் இடுப்பிலிருந்து நகர்த்தினாள். மனதில் எரிச்சலுடன் அவரை உதறியவள் கட்டிலிலிருந்து புரண்டெழுந்து அறை விளக்கைப் போட்டவள் அவரை எரித்துவிடுவது போல் முறைத்தாள். "ஏன்டீ இப்படி படுத்தறே..? நான் உனக்குத் தாலி கட்டின புருஷன்டீ.. உன்னை நான் தொடக்கூடாதா?" சங்கரன் பரிதாபமாக அவளைப் பார்த்தார். "நான் உங்க பொண்டாட்டீங்கற நெனைப்பும், இது குடும்பம் நடத்தற வீடுங்கற நெனைப்பும் உங்களுக்கு இன்னைக்காவது வந்துச்சே?"பாக்கியத்தின் குரலில் எகத்தாளம் எல்லை மீறியிருந்தது. “என்னடீ சொல்றே? என் குடும்பத்தை நான் என்னைக்கும் மறந்தது இல்லே...” சங்கரன் இலேசாக தன் குரலை உயர்த்தினார். இடுப்பில் தாறுமாறாக நழுவியிருந்த வேஷ்டியை இறுக்கிக்கொண்டார். "நிஜமாவே அந்த நெனைப்பு இருந்தா... காசுக்கு காலைதூக்கற கழிசடை எவளையோ இந்த வீட்டுக்குள்ள கூப்பிட்டுக்கிட்டு வந்து கூத்தடிச்சி இருப்பீங்களா?" "நடந்தது நடந்து போச்சு... பசி எடுத்திச்சி... சாப்பிட்டுட்டென்.. இதையே எத்தனை தரம் சொல்லிக்காட்டுவே...?" “இன்னும் கொஞ்ச நாள், இந்த ரூம்லே உங்கக்கூட பக்கத்துல படுத்தா எங்கே நான் மனநோயாளியா ஆயிடுவேனோன்னு எனக்கு பயமா இருக்கு..." “பாகீ... எப்பத்தான்டீ ஒரு பொண்டாட்டியா உன் புருஷனோட தேவையை நீ புரிஞ்சுக்குவே?” “மனுஷனா இருந்தாத்தானே உங்க தேவைக்கு ஒருத்தியாலே ஈடு குடுக்க முடியும்...? நீங்க ஒரு மிருகம்... ஒடம்பு... ஒடம்பு... ஓடம்பு... பொம்பளையோட... ஒடம்புதான் உங்கக் கண்ணுக்குத் தெரியுது... பொண்டாட்டியோட மனசு உங்களுக்குப் புரிஞ்சாத்தானே?” "உன் மனசை புரிஞ்சுக்காமலா இத்தனை வருஷம் இந்த வீட்டுல குடும்பம் பண்ணேன்..?" "நீங்க குடும்பமா பண்ணீங்க..?. ராத்திரி பகலா அந்த வெக்கம் கெட்ட சுமித்ரா பின்னாடி அலைஞ்சீங்க... அவ பேரைச் சொல்லிக்கிட்டு என்னைக் கட்டிபுடிச்சீங்க?" "பாக்கியம் நீ பேசறது சரியில்லே... என் ஃப்ரெண்டுக்கு புள்ளை குடுன்ன்னு நீதானேடீ என்னை அவகூட படுக்கச்சொன்னே?" சுவரில் சாய்ந்திருந்தவளை, நோக்கி எழுந்து வந்தார் சங்கரன். சட்டென அவளை இழுத்து தன் தோளில் சாய்த்துக்கொண்டு அவள் தலையை வருடத்தொடங்கினார். "என் புருஷனுக்கு கொழந்தை பொறக்காது... பிரச்சனையை வெளியே சொன்னா வெக்கக்கேடு... ஹெல்ப் பண்ணுடீன்னு கெஞ்சினா... கூடப்படிச்சவளாச்சே... நல்ல ஃப்ரெண்டாச்சேன்னு... ஒரு தரம் சரின்னேன்... அந்த திருட்டு நாய் என் குடும்பத்தையே கெடுத்து குட்டிச்சுவராக்குவான்னு எனக்கென்ன தெரியும்...?" "நான் மெஷின் இல்லேடீ... ஒரு பொம்பளையோட ஒரு தரம் படுத்தா அவ கர்ப்பமாயிடுவாளா?" "அவளுக்கு தரிக்கலேன்னா... விட்டுட்டு வரவேண்டியதுதானே... அவ பின்னாடியே திரும்ப திரும்ப நீங்க ஏன் போனீங்க...?" "பாக்கியம்... நான் மனுஷன்டீ... அவளும் ஒரு மனுஷிடீ... மனுஷன் ரத்தம், சதை, எலும்பு, மனசுன்னு ஆனவன்டீ... பத்து தரம் ஒரு பொம்பளையோட படுத்ததும்... என் மனசுக்குள்ள ஒரு பந்தம் வந்திடிச்சிடீ... அவ மேல ஒரு பிரியம் வந்திடிச்சி... அப்புறம் அவளை எப்படிடீ விடமுடியும்?" பாக்கியத்தின் இடுப்பில் மீண்டும் தன் கையை தவழவிட்டு அவளை தன் புறம் இழுத்தார். "விடுங்க... என்னை விடுங்ங்ங்க்க...?" சங்கரனை உதறிவிட்டு அவள் படுக்கையில் சென்று விழுந்தாள். "என்னடி பைத்தியம் மாதிரி உளர்றே? உன்னை விட்டுட்டு நான் எங்கேடீ போவேன்..?" “நான் பைத்தியம்தான்... என்னையும் என் பொண்ணையும் தனியா விட்டுடுங்கன்னு சொல்றேன்...” பாக்கியம் உறுமினாள். உறுமியவள் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். "தனியா விட்டுடுன்னா...என்னடி அர்த்தம்...? நானும் பாக்கறேன் நீயும் அளவுக்கு மேல போய்க்கிட்டே இருக்கே..." பாக்கியம், காலையில் தஞ்சாவூரிலிருந்து வந்ததிலிருந்தே அவர்கள் இடையில் நடந்து கொண்டிருக்கும் பனிப்போருக்கு ஒரு முடிவு கட்ட நினைத்தார். பாக்கியத்தின் மேல் பொங்கிக்கொண்டிருந்த எரிச்சல், இப்போது கோபமாக அவரது மனக்குகையின் மூடியைத் திறந்துகொண்டு வெளிவர ஆரம்பித்தது. சங்கரனும் விடாமல் அவள் பக்கத்தில் சென்று உட்கார்ந்தார். அவள் தோளில் கையைப் போட்டுக்கொண்டார். "ராத்திரி நேரத்துல சும்மா நீங்க எனக்கு மண்டைக் குடைச்சலை கொடுக்காதீங்க..." தன்னருகில் அவர் உட்கார்ந்ததும் அவள் எழ, அவர் அவள் கையைப் பிடிக்க பாக்கியத்தின் புருவங்கள் நெளிந்து சுருங்கியது. பக்கத்திலிருந்த தலையணையை எடுத்து வேகமாக அவர் மூஞ்சியில் விசிறி அடித்தாள் அவள். "பாக்கியம்.. என்னம்மா இது...?" இன்னும் பொறுமையை முழுவதிலும் விட்டுவிடாத சங்கரன் அவள் தோளை தொட்டார். "சொல்லிகிட்டே இருக்கேன்.. என்னைத் தொடாதீங்கன்னு... திரும்ப திரும்ப என்னைத் தொடறீங்க..?"

சங்கரன் திகைத்துப்போனார். என்னாச்சு இவளுக்கு? நிஜமாவே இவளுக்கு பைத்தியம் பிடிச்சிப்போச்சா? சட்டென அவர் கோபம் அடங்கி, கோபம் பயமாக மாறி, மனதில் எழுந்த பயம் அவருடைய தொண்டையை அடைக்க, குப்பென வியர்த்தார் சங்கரன். "என் தேவையை நீ புரிஞ்சுக்கலேடீ... என் தேவையை நீ பூர்த்தி செய்யலேடீ. அதனாலத்தான் நான் சுமித்ராவை தேடறேன். அவ இல்லேன்னா காசுக்கு வர்றவளை தேடறேன்... நான் ஆசையோட கூப்பிட்டா நீ அதுக்கு வரமாட்டேங்கறே தேவைங்கறப்ப நீ வரணும்... ஆனா... நீ வர்றது இல்லே; அதனாலத்தான் என்னைத் தேடி வர்றவளுங்க பின்னாலே நான் போறேன்.." தன் கணவன் சுமித்ராவுடன் வைத்திருந்த உறவைக்கூட பாக்கியத்தால் ஓரளவுக்கு பொறுத்துக் கொள்ளமுடிந்தது. ஆனால் தன் மீது குற்றம் சுமத்தி, தன் செயலை தன் கணவன் ஞாயப்படுத்துவதைத்தான், பாக்கியத்தால் சகித்துக்கொள்ள முடியவில்லை. "உங்க தேவை என்னைக்குத்தான் ஒரு முடிவுக்கு வரும்? என்னால தினம் தினம் அவுத்துப்போட்டுட்டு உங்க கூட படுக்கமுடியாது." "கட்டிக்கிட்ட பொண்டாட்டி இதை செய்துதான்டீ ஆகணும்... புருஷன் கூப்பிட்டா அவுத்து போட்டுட்டு படுத்துத்தான் ஆகணும்.." சங்கரன் ஈனஸ்வரத்தில் முனகினார். "என்னாது... நீ கூப்பிட்டா உடனே நான் அவுத்து போடறதுக்கு நான் என்ன தொழில் பண்ற தேவடியாளா? நான் உன் பொண்டாட்டிடா... இதை நீ மறந்து எத்தனையோ காலம் ஆச்சு; ஆனா நீ மறந்துட்ட அந்த உறவும், இந்த நிமிஷத்தோட முடிஞ்சு போச்சு... என் வீட்டை விட்டு வெளியப் போடா நாயே..." மூச்சிறைக்கக் கூவினாள் பாக்கியம். உரத்தக்குரலில் கூவிய பாக்கியம் கட்டிலின் பக்கத்தில், முக்காலியின் மேல் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் ஜக்கை எடுத்து தரையில் வீசினாள். நான்கு வருடங்கள் முன் அவர்கள் இருவரும் சைனாவிலிருந்து பார்த்து பார்த்து, கல்யாண நாளன்று, வெகு ஆசையுடன் வாங்கி வந்த, அழகான பூ வேலைப் பாட்டுடனிருந்த அந்த தண்ணீர் குடுவை சுக்கு நூறாக உடைந்து, தண்ணீர் இங்குமங்கும் சிதறி அவர்கள் படுக்கையும் நனைத்தது. சரீடீ.. இந்த நாய் வீட்டை விட்டு வெளியேப் போயிட்டா உனக்கு பிடிச்சிருக்கற பைத்தியம் சரியாகிடுமா? ஈர வேஷ்டியை உருவி எறிந்துவிட்டு லுங்கியை எடுத்து இடுப்பில் சுற்றிக்கொண்ட சங்கரன் இப்போது கிண்டலாக சிரித்தார். "நான் பைத்தியம்தான்... பாக்கியத்துக்கு பைத்தியம் புடிச்சிடிச்சின்னு தண்டோரா போடு.. பேப்பர்ல விளம்பரம் குடு... எனக்கு கவலை இல்லே.. நீ இந்த வீட்டை விட்டு வெளியே போ..." இதுவரை சங்கரனுக்கு அவள் கொடுத்துக்கொண்டிருந்த மரியாதை காற்றில் பறந்து போயிருந்தது. "நான் போயிட்டா உன் பொண்ணுக்கு கல்யாணம் முடிஞ்சிடுமாடீ?" "என் பொண்ணுக்கு கல்யாணம் பண்றதுதான் எனக்கு முக்கியம்... நீ இந்த வீட்டுல இருந்தா... அவளுக்கு ஒழுங்கான சம்பந்தம் கூட எதுவும் வராது... அதனால..." "அதனால..." சங்கரனின் கேள்வி கிண்டலாக வந்தது. "நீ கொடுக்கற மெண்டல் டார்ச்சரை எங்களால தாங்க முடியலே....நீ எங்கேயாவது ஒழிஞ்சுத் தொலை... நானும் என் பொண்ணும் கொஞ்சம் நிம்மதியா இருக்கோம்.... உன் மூஞ்சை பாக்கறதுக்கே எங்களுக்கு வெறுப்பா இருக்கு..." "என்னடீ கதை விடறே? நீ சொன்னாப் போதுமா? என்னை வெறுக்கறேன்னு என் பொண்ணு சொல்லட்டும்... நீ போடான்னு சொன்னா நான் சம்பாதிச்சி கட்டின இந்த வீட்டை விட்டு உடனே போயிடணுமா? "இந்த வீட்டுல உன்னை நான் ஒரு அன்னியனாகத்தான் பாக்கறேன்... நீ என் கண்ணுக்கு எனக்குத் தாலி கட்டின புருஷனா தெரியலே... கொஞ்ச நாளாவே நீ எனக்கு மொகம் தெரியாத ஒருத்தனாத்தான் தெரியறே? நீ எனக்குப் பண்ணற துரோகம்தான் எனக்கு பெரிசா தெரியுது... ஓடிபோயிடு நீ.." "சரிடீ... சந்தேகமேயில்லாம உனக்கு பைத்தியம் முத்தித்தான் போயிருக்கு... தாலி கட்டினவனையே உனக்கு அடையாளம் தெரியலேங்கறே; ஒரு பைத்தியம் அடுத்தவனை எப்படி நினைச்சா அவனுக்கு என்ன? என்னை நீ எப்படி வேணா நெனைச்சுக்கோ... இப்ப என்னை இந்த ராத்திரி நேரத்துல எங்கடீ போக சொல்றே நீ?" சங்கரன் எகத்தாளமாக சிரித்தார். தன் இருகைகளையும் மார்பின் குறுக்கில் கட்டிக்கொண்டார். தன்னை கை நீட்டி அடிக்கமுடியாமல், தன் மனைவி பாக்கியம் தண்ணீர் ஜக்கை தரையில் அடித்து உடைத்ததுமே, தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது என்பதை அவரும் உணர்ந்துவிட்டார். "எத்தினி செட்டப்பு வெச்சிருக்கே? எவகிட்டவாவது போயேன்?" "பாக்கியம்.. நீ பேசறதுல கொஞ்சமாவது ஞாயமிருக்காடீ? பேசறது என்னன்னு புரிஞ்சுதான் நீ பேசறியா?" "உன் கையால தாலிக்கட்டிக்கிட்ட நான் இந்த வீட்டுல இருக்கும் போது... புதுசு புதுசா வாரத்துக்கு ஒருத்தி சூத்து பின்னால சுத்தினீயே? அது உனக்கு சரின்னா... நான் சொல்றதும் சரிதான்... இதுதான் எனக்குத் தெரிஞ்ச ஞாயம்... இதுல எந்தத்தப்புமில்லே... உனக்கு மானம், ரோஷம்... அப்டீன்னு எதாவது இருந்தா உடனே இந்த வீட்டை விட்டு நீ வெளியே போ..." "அப்டீ சொல்லுடீ என் ராஜாத்தீ... நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டவதானே? என் வூட்டுக்காரிதானே? சித்த நேரம் முன்னாடீ, நான் ஆசையா உன்னைக் கட்டிக்கிட்டப்ப, என்னை ஏன்டீ நீ ஒதறி தள்ளினே? ஏன்டீ தலைகாணியாலே அடிச்சே...?" "பொண்டாட்டின்னா இருபத்து நாலு மணி நேரமும் வீட்டுக்குள்ள அவுத்துப்போட்டுட்டு இருக்கறவன்னு அர்த்தமில்லே..." "நான் உன் புருஷன்டீ... உனக்குத் தாலி கட்டின புருஷன், ராத்திரிலே கூட உன்னை நான் தொடக்கூடாதா...?" "திரும்ப திரும்ப நீ எனக்கு புருஷன்னு சொல்லாதே... உன்னை என் புருஷன்னு சொல்லிக்கவே எனக்கு வெக்கமாயிருக்கு.... வேணும்னா நீ கட்டினத்தாலியை கழட்டி குடுக்கறேன்... எடுத்துக்கிட்டு போய் சேரு..." சட்டென பாக்கியம் தன் கழுத்திலிருந்த தாலியை உருவி அவர் முகத்தில் வீசி எறிந்தாள். வீசி எறியப்பட்ட தாலி பால்கனி கதவின் அருகில் சென்று விழுந்தது. சங்கரனின் பேச்சு காணமால் போனது. பாக்கியமா தாலியை கழட்டி எறிஞ்சா?அவருக்கு பேச்சும், மூச்சும் ஒரு வினாடி நின்று போக, மனம் அதிர சிலையாக நின்றார் சங்கரன். "பாக்கியம்... சத்தியமா சொல்றேன்... உனக்கு பைத்தியம் புடிச்சி போச்சு... உனக்கு வைத்தியம் பாக்கறது ரொம்ப கஷ்டம்... உன்னை சமாதானப்படுத்த நினைச்சேன் பாரு.. என் புத்தியை நான் செருப்பால அடிச்சிக்கணும்...? நான் கட்டினத் தாலியை நீ கழட்டி எறிஞ்சிட்டே... எனக்கும் ஒனக்கும் இருக்கற ஒறவு நீ சொன்ன மாதிரி ஒரு முடிவுக்கு வந்திடிச்சி... ஆனா கடைசியா சொல்றேன்... ஓரே ஒரு தரம் என் பேச்சைக்கேளு.." "....." பாக்கியம் அன்று தன் கோபத்தில் தீயாக எரிந்துகொண்டிருந்தாள். அவள் உடல் சினத்தில் ஆடிக்கொண்டிருந்தது. அவள் சங்கரனுக்கு உடனடியாகப் பதில் ஏதும் சொல்லவில்லை. மூடிய அறைக்கதவின் மேல் அவள் பார்வை நிலைத்திருந்தது. "என் வேலை போயிடிச்சிடீ... இந்த நேரத்துல நீயும் என்னை என் வீட்டை விட்டே கழுத்தைப் புடிச்சி தள்ளறியே... " "இது எனக்கு எப்பவோ தெரியும்..." "என்னடி தெரியும் உனக்கு?" "பொண்ணுங்களை கூட்டிக்கொடுக்கற மாமா வேலை பாக்கறவனை, மானமுள்ளவன் எவனும் தன் ஆஃபிசுல வேலைக்கு வெச்சுக்க மாட்டான்..." "ஒரு நாள் இல்லே ஒரு நாள் இப்படித்தான் உன்னை மாதிரி ஆளை செருப்பால அடிச்சி தொரத்துவான்... " பாக்கியத்துக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. வேணு சொன்னதையே இவளும் சொல்றாளே? அசந்து போனார் சங்கரன். "நிறுத்துடீ ரொம்பத்தான் பேசறே நீ... சொல்லுடீ...? குடும்பத்துல இருக்கற எவளை நான் கையைப்புடிச்சி இழுத்தேன்? பணம் வேணும்ன்னு சம்பாதிக்க தெருவுக்கு வந்தவளுங்களைத்தான் நான் என் மொதலாளிக்கு கூட்டிக்கொடுத்தேன்..." "உனக்கு வெக்கமால்லே இப்படி பேசறதுக்கு?" "எதுக்காகடீ பண்ணேன்... எனக்காகவா? இல்லேடி உங்களுக்காக பண்ணேன்டீ.. எல்லாம் உங்களுக்காகத்தான்டீ பண்ணேன்... உங்களுக்காகத்தான்டீ சம்பாதிச்சேன்.." சங்கரன் வீறிட்டார். "மானங்கெட்ட வேலையை பண்ணி நீ சம்பாதிச்சி வெச்சிருக்கற பணமே எங்களுக்கு வேண்டாம்..." "சரிடீ... பணம் வேணாம்... ஆனா உனக்கு நான் கட்டின வீடு மட்டும் வேணுமா..?" "ஆமாம்... வீடு வேணும்... அடையாறு வீடு என் மாமானார் நேர்மையா உழைச்சி சம்பாதிச்சி உனக்கு குடுத்தது..." "இந்த வீடு நான் கட்டினதுதானே?" "நீ மாமாத்தனம் பண்றதுக்கு முன்னாடி கட்டின வீடு இது...." "ஒரு வீட்டை என் பேருக்கு மாத்திக்குடுடீ...!" "முடியாது... தாத்தா சொத்து பேரனுக்கு... அந்த வீடு என் பையனுக்கு... இந்த வீடு என் பொண்ணுக்கு... நீ எங்க வேணா போ எவ பின்னாடீ வேணாப் போ.. எந்த குட்டி சொவத்துல வேணா போய் முட்டுக்கிட்டு சாவு... எந்த வீட்டையும் உன் பேருக்கு பேருக்கு எழுதி தரமாட்டேன்..." பாக்கியம் பத்ரகாளியாக மாறி மூச்சிரைக்க கத்தினாள். கத்தியவள் அறைக்கதவை தடதடவென இடித்தாள். "கொஞ்சம் கூட உன் மனசுல ஈவு... இரக்கம்... எதுவுமே இல்லாமே பேசறியே? நான் எங்கடீப் போவேன்..??" சங்கரன் தன் மனைவியின் தோளை வேகமாக பிடித்து தன் புறம் திருப்ப முயன்றார். "என்னைத் தொடாதடா நாயே?." விருட்டென அவர் கையைத் தட்டிவிட்டாள் பாக்கியம். அவள் போட்ட கூச்சல் நாலு வீட்டுக்கு கேட்டிருக்கும். சங்கரனால் பாக்கியத்தை அன்று சமாதனப்படுத்தவே முடியவில்லை. அவர்கள் குடும்பத்தில் விரிசல் விட்டுப்போனது. "பாக்கியம்... இது கொடுமைடீ... இந்தக்கொடுமை உனக்கு அடுக்காது... என்னை நாய்ங்கறே... இத்தனை வருஷமா நான் சம்பாதிச்சிப் போட்ட சோத்தை தின்னுட்டு, நான் வாங்கி கொடுத்த பட்டுப்புடவையை, நகைகளை கட்டி மினுக்கிக்கிட்டு, சங்கரன் பொண்டாட்டி, சங்கரன் பொண்டாட்டின்னு, சொகுசா கார்ல போயிட்டு வந்துட்டு... கொஞ்சம் கூட நன்றியே இல்லாம என்னை நாய்ன்னு சொல்லித் தொரத்தறியே...?" "தூ... நன்றியைப் பத்தி நீ பேசாதேடா..." "நீதான் ஒரு குடும்ப பொம்பளையா...? காசுக்கு காலை தூக்கினவகூட தன் தொடை ஈரம் காயற வரைக்கும் நன்றியோட இருப்பா... ஆனா நீ... உன்னைப்பத்தி கொஞ்சம் யோசனை பண்ணுடீ...? நாய் நான் இல்லே... நன்றிகெட்ட நாய் நீ...." "அப்பா... ப்ளீஸ்... போதும்... இந்தப் போராட்டத்தை கொஞ்சம் நிறுத்தறீங்களா? உங்க மனைவியோட, என் அம்மாவோட, மனசை புரிஞ்சுக்குங்கப்பா... வீ ஆர் ட்யர்ட் அன்ட் சிக் ஆஃப் யுவர் வுமனைசிங். ஐயம் அஃப்ரைட் தட் ஐ வுட் ஆல்சோ பிகம் எ சினிக்... வீ டூ நாட் விஷ் டு ஸி யுவர் ஃபேஸ்... டிரை டு அண்டர்ஸ்டேன்ட் அஸ்..." "கண்ணூ... பாரூ நீயுமா இப்படி பேசறே?" "அப்பா... நல்ல படிப்பை கொடுத்தீங்க... நான் கண்ணால பாத்ததையெல்லாம் எனக்காக வாங்கி குவிச்சீங்க... நீங்க என்னை வசதியா வாழ வெச்சீங்க... நல்ல பொஸிஷன்லே இருக்கேன் நான்... ஆனா சந்தோஷமா இல்லேப்பா... இதை நீங்க புரிஞ்சுக்கணும்..." மகள் பார்வதி பெட்ரூம் வாசலில் தன் இருகைகளையும் கூப்பியவளாக நின்றுகொண்டிருந்தாள். சங்கரன் தன்னை பேயறைந்தது போல் உணர்ந்தார். மனதில் மெல்ல மெல்ல இனம் தெரியாத ஒரு கிலி பரவி தலைக்குள் கிறுகிறுப்பாக வந்தது. "நிஜமாத்தான் சொல்றியா பாரூ..? இந்த வீட்டுல நீ சந்தோஷமா இல்லையா?" சங்கரனுக்கு தன் குரலே மறந்து போயிருந்தது. "அம்மா.. ஏம்மா இவருகிட்ட இந்த வீட்டுக்காக சண்டை போட்டுக்கிட்டு இருக்கே...? எனக்கு என் அப்பாவே வேணாம்ன்னு ஆனதுக்கு அப்புறம் அவருடைய சொத்தோ பணமோ எதுவுமே எனக்கு வேண்டாம்ம்மா... நீயும் கெளம்பும்மா... நாம ரெண்டுபேரும் இந்த வீட்டை விட்டுப் போயிடுவோம்... இந்த உலகம் ரொம்ப பெருசும்மா... அதுல நமக்கு நிச்சயமா நெறைய இடமிருக்கு..." பார்வதி தன் தந்தையை ஒரு முறை ஆழ்ந்து நோக்கினாள். அதற்கு மேல் எதுவும் பேசாமல் மாடியை விட்டு இறங்கி தன் அறையை நோக்கி நடந்தாள். சங்கரனுக்கு வியர்த்துப்போனது. பாத்ரூமுக்குள் நுழைந்தார். முகத்தை கழுவிக்கொண்டார். ஹேங்கரில் மாட்டியிருந்த அழுக்கு சட்டை ஒன்றை எடுத்து போட்டுக்கொண்டார். அறைக்குள் நுழைந்தவர் சுவரில் இருந்த அலமாரியை திறந்தார். அடுக்கப்பட்டிருந்த பாக்கியத்தின் புடவை, பாவாவடை ஜாக்கெட்டுக்களை, எடுத்து கீழே வீசினார். பிளாஸ்டிக் பேப்பரை உயர்த்தி அதன் கீழ் குப்பையாக கிடந்த ரூபாய் நோட்டுக்களை ஒரு துண்டில் அள்ளி போட்டு சுற்றிக்கொண்டார். மதியம் ஆஃபிசிலிருந்து வந்தபோது கொண்டு வந்திருந்த ஃபீரீப் கேஸில் அந்த துணி மூட்டையை பரப்பி வைத்தார். இடுப்பிலிருந்த லுங்கியை கழற்றி எறிந்தார். கண்ணில் தென்பட்ட பேண்டில் நுழைந்தார்.

கல்லாய், முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் கட்டிலின் மேல் அமர்ந்திருந்த பாக்கியத்தின் அருகில் வந்தார். அவள் முகத்தை மெல்ல நிமிர்த்தினார். ஒரு நொடி அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். நீளமாக பெருமூச்சு விட்ட சங்கரன் அவள் நெற்றியில் மிருதுவாக ஒரு முறை முத்தமிட்டார். ஆபிசுல ஒருத்தி இன்னைக்கு என்னை பழிவாங்கினா... மனசுக்கு ஆறுதல் கிடைக்கும்ன்னு வீட்டுக்கு வந்தேன்... நீயும் என்னை பழிவாங்கிட்டே... நான் நாய்தான்... ஆனா நன்றியுள்ள நாய்... யார்கிட்டவும் நன்றியில்லாம நான் நடந்துகிட்டது இல்லே... நீங்க எங்கேயும் போகவேண்டாம்... இந்த வீட்டுலேயே நீ நல்லாஇருடீ... சந்தோஷமா இருடீ.... நான் போறேன்... பிச்சை எடுத்து பொழைப்பேன்... இன்னொரு தரம் இந்த வீட்டு வாசப்படி மிதிக்கமாட்டேன்... போறேன்... நீ நல்லாயிரு.... கதவைத்திறந்துகொண்டு வெளியில் வந்தார் சங்கரன். பார்வதி ஹால் சோஃபாவில் உட்கார்ந்திருந்தாள். பார்வதி... நல்லாயிருடா கண்ணு... உன் அம்மாவை பாத்துக்கோ... போறேண்டா கண்ணு.... திரும்பி பார்க்காமல் வீட்டை விட்டு வெளியில் வந்தார். செல்லை எடுத்து நேரத்தைப்பார்த்தார். பதினொன்று ஆகியிருந்தது. சொல்லி வைத்தது போல் செல் சிணுங்கியது. "என்னங்க... நான் ஆஃபிசுல கேள்விபட்டதெல்லாம் உண்மையா? இப்பத்தான் கந்தசாமி போன் பண்ணி சொன்னாரு..." சுமித்ரா விசும்பினாள். "ம்ம்ம்.... உண்மைதான்..." "இப்ப எங்க இருக்கீங்க...?" "நடுத்தெருவுல நிக்கறேன் சுமி..." "என்னங்க சொல்றீங்க..."சுமித்ராவின் உடல் நடுங்கியது. "பாக்கியம் என்னை போடா நாயேன்னு வீட்டை விட்டு தொரத்திட்டாடீ.... நடுத்தெருவுல நிக்கறேன்... கொழந்தை பார்வதி என்னை கையெடுத்து கும்பிடறா... என் மூஞ்சை பாக்கக்கூட அவளுக்கு இஷ்டம் இல்லையாம்... நடுத்தெருவுல நிக்கறேன்டீ..." சங்கரன் குரல் குளறிக்கொண்டு வந்தது. "என் வீட்டு கதவு தொறந்து இருக்குங்க..." "எத்தனை நாளைக்கு...?" சங்கரன் சிரித்தார். "இந்த நிமிஷத்தைப்பத்தி பேசுவோங்க... நேரா இங்கே வாங்க... ப்ளீஸ்... உங்களுக்காக தெரு வாசல்லேயே நிப்பேன்... தயங்காம வாங்க..." "...." "என்னங்க பேசமாட்டேங்கறீங்க...?" சுமித்ரா இப்போது தேம்பிக்கொண்டிருந்தாள். "வேண்டாம் சுமி... நீ நன்றியுள்ளவ... என் மேல நீ வெச்சிருக்கற பாசம், அன்பு, எனக்கு புரியுது சுமி... என் வீட்டு கதவு தொறந்து இருக்குன்னு சொன்னியே... கேக்கவே சந்தோஷமா இருக்கு சுமி... என் மனசுக்குள்ள பெரிய தெம்பு வந்திடிச்சி... தைரியம் வந்திடிச்சி... இந்த சந்தோஷமே எனக்கு போதும்..." "என்னங்க... என்னன்னமோ பேசறீங்களே... எனக்கு உங்களை உடனே பாக்கணுங்க... வீட்டுக்கு வாங்க... " சுமித்ரா வீறிட்டாள். செல்லை அணைத்தார் சங்கரன்... தெருவில் இறங்கி மெல்ல நடக்க ஆரம்பித்தார். தெரு நாய் ஒன்று அவர் பின்னால் குரைத்தபடி ஓடி வந்தது... வேகமாக நடந்தார். காலில் கல் ஒன்று இடித்தது. நகம் பெயர்ந்து இரத்தம் கொட்ட ஆரம்பித்தது. காலில் செருப்பும் இல்லாமல் கிளம்பியிருக்கிறோம் என்பதை அப்போதுதான் உணர்ந்தார் சங்கரன். எதிரில் வந்த ஆட்டோவை நிறுத்தினார். "எங்கே சார்...?" "எக்மோர் போப்பா..." "ஸ்டேஷனுக்கா சார்...."

"ஆமாம்ப்பா..?" "இப்ப எதுவும் வண்டி இருக்காதே சார்?" "ம்ம்ம்... பரவாயில்லே... நீ போ..." "சார்... குடும்பத்து பொண்ணு ஒண்ணு இருக்கு... சொல்லுங்க... அவன் சட்டென திரும்பி அவரைப்பார்த்து சினேகிதமாக சிரித்தான். "சரி... அங்கேதான் போ... " சொல்லிய சங்கரன் சீட்டில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார். கண்களை மூடிக்கொண்டார். 99

No comments:

Post a Comment