Wednesday 13 August 2014

இனிஷியல் இல்லாதவர்கள் 10


தேன்மொழி, கூடத்துக்கு வந்து பெரியவங்க எல்லோரையும் ஒருதரம் நமஸ்காரம் பண்ணிக்கம்மா." தேன்மொழியின் தாய் வடிவாம்பாள், அவள் தோளில் நிற்பேனா என்று அடம்பிடித்த சேலை முந்தானையை நூறாவது முறையாக வாரி தன் முதுகில் வீசிக்கொண்டாள். "காலம் மாறிப்போச்சு. நமஸ்காரம் பண்ணதெல்லாம் நம்ம காலத்துக்கதை. அதெல்லாம் ஒண்ணும் வேண்டாங்க. கொழந்தையை எதுக்கு தொந்தரவு பன்றீங்க? தேன்மொழீ... இப்படி வந்து என் பக்கத்துல உக்காருமா." தேன்மொழி கூடத்திலிருந்தவர்கள் அனைவரையும் தன் கைகூப்பி ஒரு முறை வணங்கிவிட்டு தலை குனிந்து நின்றாள். தேன்மொழியை சட்டென தன் தோளுடன் அணைத்துக்கொண்டு, தன்னருகில் அமர்த்திக்கொண்டாள் தனலட்சுமி.

'ஹாய்... ஹவ் ஆர் யூ?" செந்தாமரை அவள் கையை தன் கைகளில் எடுத்துக்கொண்டு, அவள் காதில் என்னத்தையோ கிசுகிசுக்க, தேன்மொழியின் முகம் குங்குமாக சிவந்தது. "நீங்க எப்டி இருக்கீங்க?" தேன்மொழி, செந்தாமரையை குசலம் விசாரித்தாள். படிக்கற பசங்க... ஒரே வயசு... பாத்தியாடீ... சட்டுன்னு எப்படி ஒட்டிக்கிச்சுங்க? அவர்கள் இருவரையும் பார்த்த கிழவி ஒருத்தி தன் பொக்கை வாயைக்காட்டினாள். தேன்மொழியையே வைத்தக் கண்ணை வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் கல்யாணம். "என்ன தம்பி... எங்க தேம்மொழியை உங்களுக்குப் பிடிச்சிருக்கா?” வெள்ளையும் சள்ளையுமாக, நடுநெற்றியில் சந்தனமும், குங்குமமுமாய் கல்யாணத்தின் அருகில் உட்கார்ந்திருந்த பெரிசு ஒன்று தன் நரைத்தமீசையை முறுக்கியது. கல்யாணம் திரும்பவும் நனவுலகத்திற்கு வந்தான். "என்ன... ஒருத்தர் மூஞ்சை ஒருத்தர் பாத்துக்கிட்டு நிக்கறீங்க? சட்டுன்னு டிஃபன், காஃபியை கொண்டாங்க." மற்றொரு பெரிசு மறுபுறம் திரும்பி வீட்டுப்பெண்களை அதட்டியது. “தாத்தா... டிஃபன் காஃபில்லாம் இருக்கட்டும். டிஃபன் சாப்பிடவா நான் இங்க வந்திருக்கேன். முதல்ல எனக்கு மிஸ் தேன்மொழியோட ஒரு ரெண்டு நிமிஷம் தனியா பேசணும்.” கல்யாணம் தன் மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பெரியவரின் காதைக்கடித்தான். "நல்லாருக்கே தம்பி... நீங்க பேசறது? எங்க வீட்டுக்கு வந்துட்டு கை நனைக்காம போறதாவது? நீங்க மரியாதைக்கு சொன்னாலும், எங்க வீட்டு மொறைன்னு ஒண்ணு இருக்குல்லே? உங்களை நாங்க விட்டுடுவோமா? இன்னொரு பெரிசு தன் தொப்பையை தடவிக்கொண்டது. "அப்பா... மாப்பிள்ளைப்பையன் சொல்றதும் எனக்கு சரின்னுதான் படுது. இந்தக்காலத்துல, பசங்கல்லாம் படிச்சிடுச்சீங்க. தங்க மனசுக்குள்ள ரொம்பத் தெளிவா இருக்காங்க. படிச்ச புள்ளைங்க ரெண்டு பேரும், ஒருத்தருக்கு ஒருத்தர் மொதல்லே அவங்களுக்குள்ள ரெண்டு வார்த்தை பேசிக்கட்டும்." தேன்மொழியின் தகப்பன் கணபதி பெரிசுகளின் பஞ்சாயத்தில் நடுவில் பாய்ந்தார். "அம்மா வடிவு... மாப்பிள்ளை பையன் நம்ம தேமொழிகிட்ட என்னமோ பேசணுங்கறாரு. கொழந்தைகூட நம்ம கற்பகத்தையும் அனுப்பு."

சினிமாவில் நாட்டாமை வேஷத்தில் வரும் விஜயகுமாரைப் போல் தன் மார்பு முழுவது சந்தனம் பூசிக்கொண்டிருந்தவர் தன் நரைத்த மீசையை திருகிக்கொண்டு, தன் மருமகளை பார்த்து தன் அடித்தொண்டையில் கனைத்தார். நான் தனியா பேசணுங்கறேன்.. இந்த கிழம் என்னடான்னா, தேன்மொழிகூட ஒரு கற்பகத்தையும் சேத்து அனுப்பறேங்கறாரு? மனதுக்குள் எரிந்து போனான் கல்யாணம். “மேரேஜுக்கு அப்புறம் வாழ்க்கைப் பூரா கட்டிக்கிட்டவ சொல்றதைத்தானே ஆம்பிளைங்க நாம கேக்கறோம்? இன்னைக்கு ஒரு நாளைக்கு, மாப்பிள்ளை பேசறதை நம்ம பொண்ணும்தான் கேக்கட்டுமே? என்ன சொல்றீங்க நீங்க? தேன்மொழியின் அப்பா கணபதியும் தன் பாதி நரைத்த மீசையை முறுக்கிக்கொண்டு, கல்யாணத்தின் தந்தையை நோக்கி சிரித்தார். “தம்பி... டிஃபனெல்லாம் ஆறிப்போகுது. பெரியவங்க காத்துக்கிட்டு இருக்காங்க. சொல்ல நினைக்கறதை சட்டுன்னு சொல்லிட்டு, கீழே இறங்கி வந்துடுங்க." கல்யாணத்தை நோக்கி மிதமாக சிரித்தாள் கற்பகம். கல்யாணம் மாடிப்படிக்கட்டில் ஏற ஆரம்பித்தான். "தேனூ... நல்ல சான்ஸ்டீ... இவனை உனக்கு பிடிக்கலேன்னு கூடத்துல நாலு பேரு முன்னாடி எதுக்கு சொல்றது? படிச்சப்பொண்ணு நீ... உன் மனசுல இருக்கறதை பக்குவமா இவன் கிட்டவே சொல்லிடுடீ. நான் சொல்றது புரியாதாடீ உனக்கு? தேன்மொழியின் காதில் கிசுகிசுத்த கற்பகம் அவள் இடுப்பை அர்த்தத்துடன் மெல்ல ஒரு முறைக் கிள்ளினாள். "சரிங்க அண்ணீ.." நான் எதுக்கு இவனை பிடிக்கலேன்னு இவன் கிட்டவே சொல்லணும்? அது எனக்கு நாகரீகமா படலையே? அதைவிட என்னை இவனுக்கு பிடிக்கலேன்னு இவனைவிட்டே சொல்ல சொல்லிட்டா, என் பிரச்சனை மொத்தமா முடிஞ்சுடுமே? தீடிரென இந்த எண்ணம் அவள் மனதில் உதித்தது. தேன்மொழி தன் தலையை திருப்தியுடன் ஆட்டிக்கொண்டாள். மாடியை நோக்கி மெல்ல நடந்தாள். தேன்மொழியின் வீட்டுக்குப் பின்னாலிருந்த மாமரம் நெடுக வளர்ந்து, அதன் கனமான கிளைகள் மொட்டைமாடிக்குள்ளும் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தன. கைக்கெட்டும் தூரத்தில் ஒட்டு மாங்காய்கள் சரம் சரமாக காய்த்துத் தொங்கிக்கொண்டிருந்தன. அணில்களும், கிளிகளும் காய்களை கடித்து கடித்து துப்பிக்கொண்டிருந்தன. வீட்டு மொட்டைமாடியில் அவர்கள் இருவரும் தனியாக விடப்பட்டிருந்தார்கள். வீட்டின் பின்னாலிருந்த தென்னந்தோப்பிலிருந்து வந்த இதமான குளிர்ந்த காற்று அவர்களை தழுவிக்கொண்டு சென்றது. கல்யாணம் தன் முகத்தில் படிந்திருந்த சிறிய வெட்கத்துடன் தன்னை நோக்கி வருபவளையே நோக்கிக்கொண்டிருந்தான். புடவைக்கு வெளியில் தெரிந்த வென்னிற பாதங்களையே வெறித்துக்கொண்டிருந்தான். “சொல்லுங்க, எங்கிட்ட என்னப் பேசணும் உங்களுக்கு?" தேன்மொழியே மெல்ல பேச்சை ஆரம்பித்தாள். அவனை நோக்கி புன்னகைத்தாள். தேன்மொழியின் புன்னகையில் மெலிதான கேலி இருப்பது போல் கல்யாணத்துக்கு தோன்றியது. தேன்மொழி புன்னகைக்கும் போதெல்லாம், அவளுடைய கீழுதட்டின் விளிம்பிலிருந்த சிறிய கருப்பு மச்சம், உதட்டின் மடிப்பில் மறைந்தும், வெளிப்பட்டும், கண்ணாமூச்சி ஆடிய அழகில் கல்யாணம் தன் மனதை பறிகொடுத்துக் கொண்டிருந்தான். அவன் மனசு காற்றில் பறக்கும் இலவம் பஞ்சாக மாறிக்கொண்டிருந்தது. தேன்மொழி தன் இடுப்பை, கட்டியிருந்த புடவை முந்தானையால் வெகு நளினமாக இறுக்கி சுற்றியிருந்தாள். இறுக்க சுற்றப்பட்டிருந்த முந்தானையையும் மீறி அவளுடைய மெல்லிய மாநிற இடுப்பு அங்காங்கு பிதுங்கிக்கொண்டு கல்யாணசுந்தரத்தின் கண்களை கட்டி இழுத்துக்கொண்டிருந்தது. தனிமை தந்த அசட்டுத்துணிச்சலில், கல்யாணத்தின் மனதுக்குள் சிறிதளவு திருட்டுத்தனம் எழ ஆரம்பித்தது. தனக்குள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டவனாய், தேன்மொழியின் முகத்தில் நிலைத்திருந்த தன் பார்வையை, அவள் கழுத்துக்கு கீழ் நாசுக்காக ஓடவிட்டான் அவன். கல்யாணம் அவளிடம் தேடிக்கொண்டிருந்த 'மேட்டர்' மட்டும் அவன் கண்களுக்கு சுலபத்தில் தென்படுவதாக இல்லை. அவன் தேடும் மேட்டர் அவளிடம் நிறையவே இருப்பது போலவும் அதே நேரத்தில் சுத்தமாக இல்லாதது போலவும் அவனுக்கு தோன்றியது. தேன்மொழியின் தோளில் கிடந்த புடவை முந்தானை அவனை ஏமாற்றிக்கொண்டிருந்தது. ஒண்ணுமே சரியா புலப்படமாட்டேங்குதே? மனதுக்குள் அழுது புலம்பிக்கொண்டான். கல்யாணத்தின் பார்வை போன இடங்களை உணர்ந்துகொண்ட தேன்மொழி, வெகு இயல்பாக தன் இடுப்பில் செருகப்பட்டிருந்த முந்தானையை உருவி தன் முழு உடம்பையும் மூடிக் கொண்டாள். இந்த பொண்ணுங்களே கில்லாடியா இருக்காளுங்கப்பா? ஆம்பிளை பார்வையிலேயே அவன் மனசுல ஓடறதை படிச்சுடறாளுங்க. என்னை மூஞ்சியில அடிக்கறமாதிரி, சட்டுன்னு தன் உடம்பை மொத்தமா போத்திக்கிட்டாளே? இந்த 'மொலையார்' விஷயம் மட்டும் கன்ஃபார்ம் ஆகமாட்டேங்குதே?" இவ சைசு மட்டும் தெரிஞ்சிட்டா இப்பவே 'ஓ.கே' சொல்லிடலாம்னு நினைச்சேன். கல்யாணம் மனசுக்குள் அல்லாடிக்கொண்டிருந்தான். "டேய் காண்டு... உனக்கு ரொம்பவே அதுப்புடா? இவ சைசு தெரியலன்னா இவளை வேணாம்ன்னு சொல்லிடுவியாடா நாயே? இவளை வேணாம்ன்னு சொல்லப்போற நீ? இவளை எதுக்குடா தனியா கூப்பிட்டே? ஏன்டா இப்படி வெக்கமில்லாம, நாக்கைத் தொங்கப்போட்டுக்கிட்டு அலையறே? கல்யாணத்தின் 'டபுள்' அவனை பார்த்து நக்கலாக இளித்தது. "சொல்லுங்க கல்யாணம்." தேன்மொழி தன் தொண்டையை செருமினாள். தேன்மொழி வெகு இயல்பாக கல்யாணத்தின் முகத்தைப்பார்த்து இனிமையாக புன்னகைத்தாள். தன் சிவந்த நாக்கை சுழற்றி தன் உதடுகளை ஈரமாக்கிக் கொண்டாள். தன் இருகைகளையும் தன் மார்பின் குறுக்கில் அவள் கட்டிக்கொள்ள, அவளுடைய வடிவான முலைகள் தங்கள் இருப்பை அவனுக்கு சட்டென காட்டி மறைந்தன. கல்யாணம் அந்த நொடியில், அவன் கண்களில் பளிச்சிட்ட, அவள் முன்னழகில் தன் உடல் சிலிர்த்தான். கல்யாணம்... சைஸ் டஸ் நாட் மேட்டர்ன்னு நீ படிச்சதில்லையாடா? இவளுக்கு சின்னதா இருந்தலும், கவர்ச்சியா இருக்கு. அசிங்கமா இல்லாம அட்ராக்டிவா, கச்சிதமா இருக்குது. சின்னது, பெரிசு இதெல்லாம் மனசுல இருக்கற மாயைடா. இதுக்கு மேல உன் மனசுக்குள்ள என்னடா யோசனை? இவளோட உண்மையான சைசு, பர்ஸ்ட் நைட்ல, உனக்கு தன்னால தெரியத்தான் போவுது? உன் தங்கச்சி சொன்னமாதிரி, தேன்மொழி சூப்பரா இருக்கா. தேன்மொழிங்கற பேருக்கு ஏத்த மாதிரி தேன் மாதிரி பேசறா. மொகத்துல பரு இல்லாம, பளபளன்னு இருக்கா. நடை அழகா இருக்கு. ஜீன்ஸ் போட்டாள்ன்னா டக்கரா இருப்பா. கல்யாணத்துக்கு இதுவரை மிக மிக முக்கியமாக தோன்றிக்கொண்டிருந்த அந்த 'மொலையார்' விஷயம், தேன்மொழி அவனைப்பார்த்து இனிமையாக ஒரு புன்னகை புரிந்து, 'சொல்லுங்க கல்யாணம்' என்றதும், முற்றிலும் அர்த்தமேயில்லாமல் போய்விட்டது. கல்யாணம்... பெரிசுங்க உனக்கு குடுத்திருக்கற அஞ்சு நிமிஷத்துல நாலு நிமிஷம் இவளோட அழகை ரசிக்கறதுலேயே ஏற்கனவே முடிஞ்சிப்போச்சு. பேச நினைக்கறதை சட்டுன்னு இவகிட்ட பேசித்தொலைடா நாயே?" அவன் டபுள் அவனிடம் மீண்டும் துள்ளிகுதித்தது. "உங்களை நான் தேனூன்னு கூப்பிடலாமா?" வாயிலிருந்து முற்றிலுமாக தன் குரலை எழுப்பமுடியாமல, உதடுகளிலேயே முனகினான் கல்யாணம். "இதை கேக்கறதுக்குத்தான் என்னை தனியா கூப்பிட்டீங்களா?" களுக்கென சிரித்தாள் அவள். அவள் குரல் தெளிவாக வந்தது. பற்கள் வெண்மையாக மின்னின. "நேர்ல பாக்கும் போது நீங்க ரொம்பவே அழகாயிருக்கீங்க. ரியலி யூ ஆர் பியூட்டிஃபுல். உங்க செல் நம்பரை கொஞ்சம் குடுங்களேன்." வாயெல்லாம் பல்லாக வழிய ஆரம்பித்தான் கல்யாணம். "நீங்கதான் நேராவே எங்கிட்ட பேசிக்கிட்டு இருக்கீங்களே? இப்ப செல்நம்பர் உங்களுக்கு எதுக்கு?" தேன்மொழி அவன் முகத்தை சீரியஸாகப் பார்த்தாள். "பாத்தீங்களா? கிண்டல் பண்றீங்களே? ஒரு அஞ்சு நிமிஷம்தான் உங்க வீட்டு பெரிசுங்க டயம் குடுத்திருக்காங்க. வீட்டுக்கு போனதுக்கப்புறம் கொஞ்சநேரம் உங்கக்கிட்ட மனசுவிட்டு பேசலாம்ன்னு நினைச்சேன். சென்னைக்கு எப்ப வரப்போறீங்க நீங்க? டிக்கெட்டலாம் புக் பண்ணிட்டீங்களா?" கல்யாணம் ஒரு பரவசநிலையில் மிதந்து கொண்டிருந்தான். "ஏன்?" "இல்லே வண்டியிலப் போகும் போது ரெண்டு பேரும் ஓண்ணாப் ஜாலியா பேசிக்கிட்டே போகலாமேன்னு கேட்டேன்." "கல்யாணம்... நீங்க பேச நினைக்கறதை இங்கேயே இப்பவே பேசுங்களேன்?" "என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா தேனூ...?" தேன்மொழியின் பெயரை திரும்ப திரும்ப சொல்லுவதில் கல்யாணம் தன் மனதுக்குள் அதீதமான ஆனந்தத்தை அடைந்து கொண்டிருந்தான். ஓரடி இடைவெளியில், பக்கம் பக்கமாக அவர்கள் இருவரும் நின்றிருந்தார்கள். தேன்மொழியின் உடலிருந்து புறப்பட்ட ரோஜா செண்டின் வாசம் அவனுக்கு கிளர்ச்சியூட்டிக்கொண்டிருந்தது. கல்யாணம் படும் அவஸ்தையைக்கண்டு களுக்கென சிரித்த தேன்மொழி அவனை ஒருவித மிடுக்குடன் பார்த்தாள். அவள் விழிகளிலிருந்த மிடுக்கில், சிறிது அதிகார தோரணையும் ஒளிந்திருப்பதாக அவனுக்கு தோன்றியது. அவளுடைய இந்த கிண்டலான சிரிப்பையும், பார்வையையும், தாங்கமுடியாமல், சற்றே அவன் திணறினான். "தேன்... தலையை லேசா திருப்பி பாத்து பேசும்போது, நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க." தன் தலையை குனிந்துகொண்டு மீண்டும் வழிய ஆரம்பித்தான் கல்யாணம். அய்யோ பாவம் இவன்? பத்து நிமிஷத்துக்குள்ள இவன் உறவையே மொத்தமா கட் பண்ணி விடற முடிவுல நான் இருக்கேன். இது தெரியாம இவன் என் செல் நம்பரை கேக்கறான்? எந்த வண்டியிலே சென்னைக்கு திரும்பறே.. நானும் உன்கூடவே வர்றேங்கறான். இவன் என்னை எந்த பேருல கூப்பிட்டா எனக்கென்ன? இங்கே இருக்கற இந்த கொஞ்சநேரம் இவன் சந்தோஷமா இருந்துட்டு போகட்டுமே? இப்ப எதுக்கு நான் இவன் மனசை தேவையில்லாம புண்படுத்தணும்? தேன்மொழி அவன் முகத்தை இப்போது எந்தவித தயக்கமும் இல்லாமல் நேராகப் பார்த்தாள். அந்தப்பார்வையில் சிறிதளவு இரக்கமும் இருந்தது. "தேன்மொழீ... என்னை உனக்கு பிடிச்சிருக்கா?" முகத்தில் சிரிப்புடன், உடல் சிலிர்க்க, கல்யாணம் புன்னகையுடன் அவளிடம் ஒருமையில், உரிமையுடன் பேச ஆரம்பித்தான். "மிஸ்டர் கல்யாணசுந்தரம், நம்ம பேரண்ட்ஸ் அவங்களுக்குள்ள முடிவு பண்ணியிருக்கற இந்த மேரேஜ்ல ஒரு சின்னப் பிரச்சனையிருக்கு.” “பிரச்சனையா? என்ன சொல்றீங்க? பிரச்சனை யாருக்கு?” எதுக்கு என்னை தீடீர்ன்னு இவ மிஸ்டர்ங்கறா? தன் பெயருக்கு முன்னல் தீடீரென மிஸ்டர் வந்து சேர்ந்ததும், வேறு வழியில்லாமல், அவளை அவனும் மீண்டும் பண்மையில் விளித்தான். “எங்க வீட்டுல யாருக்கும் பிரச்சனையில்லே. இன்ஃபேக்ட் பிரச்சனை எனக்குத்தான்.” தேன்மொழி தான் பேசுவதை நிறுத்திவிட்டு அவன் முகத்தை நேராக நிமிர்த்து பார்த்தாள். கல்யாணத்தின் முகத்திலிருந்த சிரிப்பு சட்டென மறைந்துகொண்டிருந்தது. என்ன சொல்றா இவ? ரெண்டு வீட்டுலேயும் ஓரளவுக்கு பேசி முடிச்சதுக்கு அப்புறம்தானே, பொண்ணு பாக்க வந்திருக்கோம். இப்ப இவளுக்கு பிரச்சனைங்கறாளே? தேன்மொழியின் பிரச்சினை என்னவாக இருக்குமென்று கல்யாணத்துக்கு சட்டென புரியவில்லை. அப்பப்ப என்னப்பாத்து எதுக்காக நமுட்டு சிரிப்பு வேற சிரிக்கறா? இவ என்னை பைத்தியக்காரன்னு நினைக்கிறாளா? அவனையும் அறியாமல் அவன் உள்ளத்தில் அவள் மீது சிறிதளவு ஆத்திரம் முளைவிட ஆரம்பித்தது. தேன்மொழி அவன் மனதில் ஓடும் எண்ணங்களை புரிந்துகொள்ளாமல் அவனுக்கு எதிர்திசையில் தன் பார்வையை ஓட்ட ஆரம்பித்தாள். "என்னை இவளுக்குப் பிடிக்கலையோ?" இந்த எண்ணம் கல்யாணத்தின் மனதில் திடீரென மின்னலாக எழுந்தது. இந்தக்கல்யாணத்தில் தனக்கு பிரச்சனையிருக்கிறது என்று சொல்லிவிட்டு, தேன்மொழி தன் முகத்திலிருந்து அவள் பார்வையை நகர்த்தியதும், கல்யாணத்தின் மனதுக்குள் ஒரு சிறிய நெறிஞ்சிமுள் ஒன்று குத்தியது. அவன் தன் பனியனுக்குள் வியர்க்க ஆரம்பித்தான். வலது மார்பு வலிப்பது போலிருந்தது அவனுக்கு. "என்னங்க? இந்தக்கல்யாணத்துல உங்களுக்கு என்னப்பிரச்சனை? என்னை உங்களுக்கு பிடிக்கலையா?" மெல்லிய குரலில் லேசான அச்சத்துடன் தேன்மொழியின் முகத்தைப் பார்த்தான் கல்யாணம். வேகமாக துடிக்கும் தன் இடது மார்பை தடவிவிட்டுக் கொண்டான். "சே...சே...அப்படீல்லாம் இல்லே." தேன்மொழி, அவன் முகத்தை மீண்டும் ஒருமுறை நோக்கியவள், சட்டென குனிந்துகொண்டாள். "பின்னே; அப்புறம் நான் கேட்டதுக்கு தெளிவா ஏன் ஒரு பதிலைச் சொல்லமாட்டேங்கறீங்க?" கல்யாணம் மனதில் பதட்டத்துடன் அவளைச் சற்றே நெருங்கினான். "கல்யாணம்... உங்க கிட்ட நான் ஒரு சின்ன ரிக்வெஸ்ட் பண்ணலாமா?" தேன்மொழி தன் தலையை நிமிர்த்தாமல் பேசினாள். "என்ன தேன்மொழி, எங்கிட்ட எதுக்கு ரிக்வெஸ்ட் அது இதுன்னு பேசறீங்க? உங்க மனசுல இருக்கறது எதுவாயிருந்தாலும் தயங்காம சொல்லுங்க." கல்யாணத்தை விட்டுப்போன உற்சாகம் மீண்டும் அவனைத்தொற்றிக்கொண்டது. தேன்மொழி பேசும்போது அழகாக அசையும் அவளுடைய மெல்லிய சிவந்த உதடுகளையே அவன் உற்று உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான். தேன்மொழி தன் நாக்கை சுழற்றி உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டாள். இவனுக்கு நெஞ்சில் ஜீலீரென்றது. "கல்யாணம், உங்களுக்கு என்னைப் பிடிச்சுடுச்சுன்னு நினைக்கிறேன்?" "யெஸ்... உங்களை எனக்கு டூ ஹன்ரட் பர்செண்ட் பிடிச்சிடுச்சு." உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு, இங்கேயே எல்லார் முன்னாடியும் சொல்லிடப்போறேன். கல்யாணம் சட்டென தேன்மொழியை நெருங்கி அவளுடைய இடது கையை பிடித்தான். அவள் தன் கரத்தை அவன் பிடியிலிருந்து மெதுவாக விடுவித்துக்கொண்டாள். "என்ன தேனு? உங்களை நான் தொடக்கூடாதா?" கல்யாணம் ஏக்கத்துடன் கொஞ்சினான். அசட்டுத்தனமான ஒரு சிரிப்பு அவன் முகத்தில் குடியேறியிருந்தது. தேன்மொழி எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தாள். இவனுக்கு என்னை ரொம்ப பிடிச்சுப்போயிருக்கு. மனசுக்குள்ள ரொம்பவே கனவுகளோட இருக்கான். இவன் மனசுல இருக்கற கனவுகள், ஆசைகள், இவனோட கண்ணுலே தெளிவாத்தெரியுது. மனசால இவன் வெள்ளை, வெகுளி. நான் சொல்ல நினைக்கறதை இவன் என்ன மாதிரி எடுத்துப்பான்? நிச்சயமா நான் சொல்றதை கேட்டு இவன் அப்செட் ஆயிடுவான்னுதான் தோணுது? இவன் அப்செட் ஆவான்னு பரிதாபப்பட்டா என் நிலைமை என்ன ஆகறது? என் மனசுக்கு அப்பீலாகாத ஒருத்தனை நான் எப்படி திருமணம் பண்ணிக்க முடியும்? பெத்தவங்க சொல்றாங்களேன்னு, அவங்க பேச்சைக்கேட்டுக்கிட்டு, என் மனசுக்கு பிடிக்காதவனுக்கு என் கழுத்தை நீட்டிட்டா, வாழ்க்கை பூரா, இந்த அவசரமான முடிவு, என் நெஞ்சுக்குள்ள என்னை உறுத்திக்கிட்டே இருக்காதா? என் மனசு இவனை முழுமையாக விரும்பலையே? எனக்கு இவனைப் பிடிக்கலேன்னு சொல்றதைத்தவிர வேற வழி எதுவும் எனக்குத் தெரியலியே? சொல்றதை இவன் மனசு புண்படாம சொல்லணும். இப்ப அதுதான் முக்கியம். கல்யாணத்தை சற்றே நெருங்கி வந்தாள் தேன்மொழி. அவன் முகத்தை சில வினாடிகள் உற்று நோக்கியவள், மெல்ல பேசினாள். "என்னை உங்களுக்கு பிடிக்கலேன்னு, என் பேரண்ட்ஸ்கிட்ட உங்களால சொல்ல முடியுமா?" "வாட்..? தேன்மொழி நீ என்னப்பேசறே ? பேசறது என்னன்னு புரிஞ்சுக்கிட்டுத்தான் பேசறியா? கல்யாணம் முற்றிலுமாக அதிர்ந்தான். அவனுடைய அதிர்ச்சி, அவன் முகத்தில் தெளிவாக தெரிந்தது. அவன் நின்ற இடத்திலேயே அசௌகரியமாக இட வலமாக நெளிந்தான். அவசர அவசரமாக தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து கர்சீஃபை எடுத்து, தன் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டான். தன் மூக்குகண்ணாடியை முகத்தில் மாட்டிக்கொண்டான். ஒரு நொடி முட்டை முட்டையாகத் தெரிந்த அவன் விழிகளைக்கண்டு தேன்மொழி தன் கண்களை மூடிக்கொண்டாள். "நீங்க என்னைத் தப்பா நினைக்கக்கூடாது. எனக்கு இப்ப கல்யாணம் பண்ணிகறதுலே இஷ்டமில்லே. நான் இன்னும் மேல படிக்கலாம்ன்னு நெனைச்சுக்கிட்டு இருக்கேன்." "நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நீ படிக்கறதுலே எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லே தேனூ." கல்யாணம் வெள்ளந்தியாகப் பேசினான்.

"அயாம் சாரி.. மிஸ்டர் கல்யாணம்... என்னமோ தெரியலே? எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்கணுங்கற எண்ணம் சுத்தமா வரலே." தேன்மொழி கலக்கமாக பேசினாள். "தேன்மொழி... நவ் யூ ஆர் இன்ஸல்டிங் மீ?" மனதிலிருந்த உற்சாகம் மொத்தமாக வடிந்துபோய், முகம் தொங்கியவனாக, குரலில் சிறிது எரிச்சலுடன் சட்டெனப் பேசிவிட்டான் கல்யாணம். "சாரி... மிஸ்டர் கல்யாணம், உங்களை எந்தவிதத்துலேயும் இன்ஸல்ட் பண்ணணும்ங்கறது என் நோக்கம் இல்லே. அப்படி நான் நெனைக்கவும் இல்லே. ப்ளீஸ் தயவு செய்து என்னை நீங்க புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க." "என்ன முயற்சி பண்றது?" கடைசியாக தன் பொறுமையை இழந்து சிறிது எரிந்து விழுந்தான் கல்யாணம். "எனக்கு இப்ப மேரேஜ் வேணாங்கறதை, உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கற மூடுல இல்லேங்கறதை, நான் ஏற்கனவே என் அம்மாகிட்டே தெளிவா சொல்லிட்டேன். நீங்க எங்க வீட்டுக்கு வர்றதுக்கு கொஞ்சநேரத்துக்கு முன்னாடி, என் அண்ணிக்கிட்டவும் இதைச்சொன்னேன்." "ம்ம்ம்... அப்புறம்?" "என்னை அடிக்காத குறையா... எங்கம்மா என் மேல எரிஞ்சு விழுந்தாங்க. பொத்திகிட்டு மரியாதையா கூடத்துல வந்து உங்க எதிர்லே நில்லுடீன்னு என்னைத் திட்டினாங்க. நீங்க ஒரு பெண்ணாயிருந்தா என் அவஸ்தை உங்களுக்குப்புரியும்." "உங்கண்ணி என்ன சொன்னாங்க?" "உன் மனசுக்கு இந்த பிள்ளை ஏத்தவன்னு தோணலன்னா, 'நோ'ன்னு ஒரு ஸ்டேஜ்ல சொல்லித்தானேடீ ஆகணும். அதை இன்னைக்கே இப்பவே ஓப்பனா சொல்லிடுன்னு சொன்னாங்க. இதைவிட நாசுக்கா உங்ககிட்ட என் மனசுல இருக்கறதை எப்படி சொல்றதுன்னு எனக்குத் தெரியலீங்க. அயாம் சாரி.. மிஸ்டர் கல்யாணம். என்னை நீங்க மன்னிக்கணும்" தேன்மொழி தன் குனிந்திருந்த தலையை நிமிர்த்தவில்லை. "என்னை உங்களுக்கு பிடிக்கலேன்னா, எங்க குடும்பத்தை எதுக்காக உங்க வீட்டுக்கு வரச்சொன்னீங்க?" "மிஸ்டர் கல்யாணம், ஒரு விஷயத்தை நீங்க தெளிவா புரிஞ்சுக்கணும். உங்களை என்னை வந்து பாருங்கன்னு நான் கூப்பிடலே. என் பேரண்ட்ஸ் வரச்சொன்னாங்க. அவங்க சொல்லி நீங்க வந்திருக்கீங்க. என் மேல உங்களுக்கு கோவம் வர்றதுலேயும் ஒரு துளி ஞாயம் இருக்குன்னு நான் ஒத்துக்கறேன். இதுக்காக நான் உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்." "இட்ஸ் ஆல்ரைட்.. எங்களை வரச்சொன்னது, உங்கவீட்டுல உங்களை கலந்துக்காம எடுக்கபட்ட முடிவுன்னு நீங்க சொல்லவர்றீங்க. இது எனக்குப்புரியுது. இதுக்காக நீங்க என்கிட்ட மன்னிப்பு கேக்க வேண்டிய அவசியம் இல்லே." "கல்யாணம், கிவ் மீ ஒன் மோர் மினிட். ரொம்பவே ஆர்த்தடாக்ஸ் குடும்பம் எங்களோடது. என்கிட்ட நீங்க தனியா பேசணும்ன்னு சொன்னதும், உங்க விருப்பத்துக்கு என் அப்பா எப்படி சட்டுன்னு ஒத்துகிட்டாரு... இதுவே எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு." “நீங்க சொல்றது எனக்குப் புரியுது தேன்மொழி. ஆனா பெரியவங்க நம்ம கல்யாண விஷயத்துல அவங்களுக்குள்ள ஒரு பாசிட்டிவான முடிவுக்கு ஏற்கனவே வந்துட்டாங்கன்னு எனக்குத் தோணுது.” கல்யாணத்தின் முகத்தில் சட்டென ஒரு பெருமிதம் தோன்றியது. “யெஸ்... எனக்கும் அப்படித்தான் தோணுது. ஒரு ஃபார்மாலிட்டிக்காகத்தான் என்னைப் பெத்தவங்க எனக்கு உங்க போட்டோவை அனுப்பியிருக்காங்க. அதனாலத்தான் உங்கக்கிட்ட நான் ரிக்வெஸ்ட் பண்றேன்.” “சொல்லுங்க...” “நம்ம ஜாதியிலே, நம்ப வீடுகள்லே, இன்னும்கூட திருமணங்கற விஷயத்துலே, ஒரு பெண்ணோட மனவிருப்பங்களுக்கு, எந்த அளவுக்கு அவளைப் பெத்தவங்க மதிப்பு கொடுக்கறாங்கங்கற விஷயம் உங்களுக்கும் நல்லாவேத் தெரிஞ்சிருக்கும். என் வீட்டுலேயும் என் விருப்பம் என்னன்னு கேக்கலை. என் விருப்பத்தைச் சொன்னாலும் அதை யாரும் நிச்சயமா மதிக்கப் போறது இல்லே." "என் பேரண்ட்ஸ் என்னை சென்னை மாதிரி ஊருலே, இந்த அளவுக்கு படிக்கவெச்சு, வேலை செய்ய அனுமதிச்சதே பெரிய விஷயம்ன்னு நான் நினைக்கறேன். அஞ்சு வருஷமா தனியா ஹாஸ்டல்லே இருந்து படிச்சு, ஒரு வருஷாம சுதந்திரமா வேலை செய்யற எனக்கு, இந்த உலகத்தை என்னோட பார்வையில பார்த்ததாலே, என் மனசுக்குள்ளவும், என் திருமண வாழ்க்கையை பற்றிய சில கனவுகள், சில ஆசைகள், சில எதிர்பார்ப்புகள் என்னையும் அறியாமலேயே வந்திடுச்சி. இது ஒண்ணும் தப்பு இல்லையே" "உங்கத்தரப்புல நீங்க சொல்றது ரொம்ப ரொம்ப சரி. இப்ப எங்கிட்ட நீங்க என்ன எதிர்பார்க்கறீங்க? அதைச்சொல்லுங்க." கல்யாணம் தன் பொறுமையை இழக்க ஆரம்பித்தான். "உங்களை என் வீட்டுக்கு கூப்பிடறதுக்கு முன்னாடி, தேன்மொழி, இந்த கல்யாணத்துல உனக்கு பூரண சம்மதமா? பையனை உனக்கு எல்லாவிதத்துலேயும் பிடிச்சிருக்கா? உன்னோட விருப்பம் என்னன்னு, யாருமே என்னை கேக்கலே. உங்க பேரண்ட்ஸ்ஸும் இதைப்பத்தி கவலைப்படலே. ஏன் நீங்கக்கூட என்னைப்பத்தி, என் மனசுல என்ன இருக்கும்ன்னு, கவலைப்பட்டிருக்க மாட்டீங்கன்னுதான் நான் நினைக்கிறேன்." "யெஸ்... யூ ஹேவ் எ பாய்ண்ட். உங்களை நானும் ஒரு விதத்துலே தேவையில்லாத ஒரு சங்கடத்துல ஆழ்த்திட்டேன்னு நினைக்கிறேன். அயாம் சாரி." கல்யாணம் இக்கட்டாக நெளிந்தான். "ஐ திங்க் யூ அண்டர்ஸ்டுட் மை பொஸிஷன். " "யெஸ்... பெர்ஹாப்ஸ் டு சம் எக்ஸ்டண்ட்..." கல்யாணம் தன் நெற்றியைத் தடவிக்கொண்டான். "நீங்க ஒரு ஆண். நான் ஒரு பெண். உங்களை எனக்குப் பிடிக்கலேன்னு நான் சொல்றதைவிட, உங்களுக்கு என்னை பிடிக்கலேன்னு நீங்க சொன்னா, எங்க வீட்டுலேயோ, இல்லே உங்கவீட்டுலேயோ அதிக பிரச்சனையா இது பார்க்கப்படாதுன்னு நான் நெனைக்கிறேன்." "என்னை நீங்க ஒரு தர்மசங்கடத்துல மாட்டிவிடறீங்க..." "நம்ம இனத்துல இன்னைக்கும் ஒரு ஆண்... ஆண்தான். வீட்டுல எல்லாவிஷயத்துலேயும் ஆணுக்குத்தான் முதல் உரிமை. தன் மனசுல இருக்கறதை வெளிப்படையா அவனால மட்டும்தான் சொல்ல முடியும். ஒரு ஆணோட விருப்பம்தான் எல்லா இடத்துலேயும் செல்லுபடியாகுது. இதை நம்ம வீட்டு பெண்களும் சரி சரின்னு ஒத்துக்கறாங்க. ஒரு ஆண் சொல்றதுக்கு கண்ணை மூடிக்கிட்டு தங்களோடத் தலையை ஆட்டறாங்க.” "ம்ம்ம்ம்..." “கல்யாணம், நீங்க என்னை உங்களுக்கு பிடிக்கலேன்னு சொல்லிடறீங்களா?" “தேன்மொழி, என் மனசுல இருக்கறதை, உங்கக்கிட்ட சொல்றதுக்கு எனக்கொரு சந்தர்ப்பம் கொடுப்பீங்களா?" கல்யாணத்தின் குரல் இப்போது தெளிவாக வந்தது. "சொல்லுங்க கல்யாணம்..." அவனை ஆதரவாகப் பார்த்த தேன்மொழி, அவன் வலது கையை சட்டென பிடித்துக் கொண்டாள். தேன்மொழி, கல்யாணத்திற்கு வெகு அருகில், அவன் தோளோடு, தன் தோள் உரசிவிடும் தூரத்தில் நின்று கொண்டிருந்தாள். ஒரு வயது வந்த அழகான பெண் தன் கையை ஆதுரமாகப் பிடித்ததும், தன் மேல் மழைச்சாரல் அடித்ததைப் போல் உணர்ந்தான் கல்யாணம். தன் கரத்தை பிடித்துக்கொண்டு நிற்கும் அவளை, சட்டெனக் கட்டிப்பிடித்து முத்தமிட்டுவிடலாமென்று அவன் மனதுக்குள் எழுந்த வெறியை அவன் மிகுந்த சிரமத்துடன் கட்டுப்படுத்திக்கொண்டாண். "ஒரு தரம் இல்லே, இரண்டு தரம் இல்லே; நூறு தரத்துக்கு குறையாம, உங்களை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்குன்னு, என் வீட்டுல, என் பெத்தவங்ககிட்ட சொல்லிட்டுத்தான், ஃபார்மலா உங்களைப் பொண்ணு பாக்கறதுக்கு இங்கே வந்திருக்கேன்." "ஓ.. மை காட்.." "நோ... நோ... தேன்மொழி உங்களுக்கு ஏன் இந்த சுயபரிதாபம்? ஓ மை காட்ன்னு ஏன் சொல்றீங்க? என்னை மாதிரி ஒரு சராசரி இளைஞன் எவனும் உங்களை பிடிக்கலேன்னு சொல்லவே மாட்டான்.." "ஐ சீ..." "எஸ்.. நீங்க என் ஜாதி... பாக்கறதுக்கு அழகா இருக்கீங்க... படிசிருக்கீங்க.. எனக்கு ஈக்வலா சம்பாதிக்கறீங்க... உண்மையைச்சொன்னா என்னைவிட நீங்க பர்சானலிட்டியா இருக்கீங்க... என் குடும்பத்துல இருக்கற அத்தனை பேருக்கும் உங்களை ரொம்பப்பிடிச்சிருக்கு. எல்லாவிதத்துலேயும், என் மனைவியா, எங்க வீட்டு மருமகளா வரக்கூடிய எல்லாத்தகுதியும் உங்கக்கிட்ட இருக்கு. உங்களை வேணாம்ன்னு சொல்ல எனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?" "ம்ம்ம்ம்.." "இன்ஃபேக்ட் என் தங்கை செந்தாமரை என்னச்சொன்னாத் தெரியுமா?" "சொல்லுங்க கல்யாணம்.." "கல்யாணம்... எந்தக்காரணத்தைக்கொண்டும் தேன்மொழியை நீ நழுவவிட்டுடாதேன்னு சொன்னா..." "ம்ம்ம்.." "திரும்ப திரும்ப ம்ம்ம்... ம்ம்ம்ம்..ன்னு சொன்னா என்ன அர்த்தம்? இப்ப தீடீர்ன்னு உங்கப்பேச்சைக் கேட்டுக்கிட்டு, உங்களை நான் வேணாம்ன்னு சொல்லணும்ன்னா, ஒரு சரியான காரணத்தை, அதுவும் என் பெற்றவர்கள் நம்பற மாதிரியான ஒரு காரணத்தை, நான் எங்க வீட்டுலே சொல்லணுமில்லையா?” கல்யாணம் தன் கரத்தை, தேன்மொழியின் பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டான். தேன்மொழியின் முகத்தில் சிறிதளவு கலக்கம் வந்திருந்தது. “நான் ஏற்கனவே ஒருத்தனை லவ் பண்றதா சொல்லிடுங்களேன். இது ஒரு சரியான காரணமாயிருக்காதா?” அவள் குழந்தையைப்போல், யோசிக்காமல், தயக்கமேதும் இல்லாமல் பட்டென தனக்கு பதில் சொன்னதும், அவள் யாரையும் நிஜத்தில் காதலித்துக்கொண்டிருக்கவில்லை, தன்னை அவள் தவிர்க்க நினைப்பதற்கு வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கவேண்டும் என்பது கல்யாணத்துக்கு தெளிவாக புரிந்துவிட்டது. “தேன்மொழி... ரொம்ப ஈஸியா கொஞ்சம் கூட உண்மையே இல்லாத ஒரு காரணத்தை நீங்க சொல்லிட்டீங்கன்னு நான் நினைக்கிறேன்" கல்யாணம் அவளை நோக்கி வெகு இனிமையாக புன்னகைத்தான். "என்ன சொல்றீங்க நீங்க...? நான் யாரையும் காதலிக்கக்கூடாதா?" அவள் முகம் சுருங்கியது. "வொய் நாட்... உங்களை மாதிரி ஒரு அழகான பொண்ணுக்கு இதுவரைக்கும் காதலன் இல்லேங்கறது என்னோட அதிர்ஷ்டம்ன்னு நான் சொல்றேன். தேன்மொழியின் வலதுகையை தன் கரத்தில் எடுத்துக்கொண்டான் கல்யாணம். நீளமாக சிரித்தான். "ப்ளீஸ்... கல்யாணம் இப்ப எதுக்கு இந்த சிரிப்பு?" தேன்மொழி அவன் கையை உதறாமல் நின்றாள். இவனை ஒதுக்குவதற்காக பொய்யான ஒரு காரணத்தை நான் சொல்லுகிறேன்; அதை இவன் எப்படி பொய்யென கண்டுபிடித்தான் என அவள் தன் மனதுக்குள் வியந்துகொண்டிருந்தாள். தேன்மொழி, ஒரு உண்மையைச் சொல்லட்டுமா? உங்க போட்டோவை பாத்ததுமே, உங்களை நான் லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். உங்களை நேர்ல பாத்ததும், அந்த முடிவு எனக்குள்ள இன்னும் உறுதியாயிடுச்சு." "கல்யாணம்... நீங்க என்ன சொல்றீங்க?" தேன்மொழி விக்கித்துப்போய் நின்றாள். "யெஸ்... ஐ லவ் யூ தேன்மொழி... ஐ லவ் யூ வெரி மச்..." "என் போட்டோவை பாத்துட்டு என் மேல உங்களுக்கு லவ் வந்திடிச்சா? என்னால இதை சுத்தமா நம்பமுடியலே?" தேன்மொழி பதைத்தாள். அவள் இமைகள் பட்டாம்பூச்சியாக அடித்துக்கொண்டிருந்தன. "என் மனசுல இருக்கற உணர்வுகளை அப்படியே சொல்றதுக்கு எனக்குத் தெரியலீங்க. நான் ரொம்ப ரொம்ப சிம்பிளான மனுஷன். என் மனசுல இருக்கறதை அப்படியே சொல்ல முயற்சி பண்றேன். உங்களை நான் காதலிக்க ஆரம்பிச்சிட்டேன். இப்ப என் மனசு பூரா நீங்கதான் இருக்கீங்க. உங்களை வேணாம்ன்னு என் வாயால நான் எப்படிங்க சொல்லுவேன்?” கல்யாணம் தழுதழுத்தான். “கல்யாணம்... என் மனசையும் நீங்க புரிஞ்சிக்கோங்க... உங்களை நான் காதலிக்கலேயே?" "இட்ஸ் ஆல்ரைட்... என்னைப்பாத்ததும், உங்க மனசுல காதல் வரணும்ன்னு அவசியம் இல்லே. அந்த அளவுக்கு நான் பெரிய ஆணழகனும் இல்லே. ஆனா உங்க மனசுல என்னதான் இருக்குன்னு நான் தெரிஞ்சுக்க விரும்பறேன்? நீங்க சொல்ல விரும்பலேன்னா உங்களை நான் வற்புறுத்தமாட்டேன்." "க்கூம்ம்ம்ம்." தேன்மொழி அர்த்தமில்லாமல் எதையோ முனகினாள். விருட்டென தன் உடலைத் திருப்பியவாறு, அவனுக்கு தன் முதுகைக் காட்டிக்கொண்டு நின்றாள். "தேன்மொழி... உங்களுக்கு என்னை ஏன் பிடிக்கலே?" கல்யாணம் அவள் தோளைத்தொட்டு மெல்ல அவளைத் தன்புறம் திருப்பினான். "ப்ளீஸ்... என்னை இதுக்கு மேல எதுவும் கேக்காதீங்க." தேன்மொழி கல்யாணத்தின் முகத்தை நிமிர்ந்து பார்ப்பதை தவிர்த்தாள். தன் மார்பின் மீது வந்து விழிந்திருந்த தன் தலைப்பின்னலை முதுகில் தள்ளி விட்டுக்கொண்டாள். “சரிங்க. நீங்க இப்ப எதுவும் சொல்லவேண்டாம். என் கேள்வியை கொஞ்சம் மாத்திக்கேக்கறேன். இதுக்காவது பதில் சொல்லுங்க. நிஜமாவே நீங்க யாரையாவது லவ் பண்றீங்களா?” இந்தக்கேள்வியைக் கேட்டுவிட்டு, தேன்மொழி யாரையும் காதலித்துக்கொண்டு இருக்கக்கூடாது என கல்யாணம் தனக்குத் தெரிந்த அனைத்து தெய்வங்களின் பெயர்களையும், ஒன்றன்பின் ஒன்றாக, தன் மனதுக்குள் உச்சரிக்க ஆரம்பித்தான். அவள் சொல்லப்போகும் பதிலை எதிர்பார்த்து கல்யாணத்தின் இதயம் வெகு வேகமாக துடிக்க ஆரம்பித்தது. தேன்மொழி ஒரு வினாடி தன் உடல் சிலிர்க்க நின்றாள். அந்த நிமிடம் வரை தேன்மொழி யாரையும் காதலித்ததும் இல்லை. அவளையும் யாரும் காதலிக்கிறேன் என்று அவளிடம் சொன்னதுமில்லை. நான் யாரையும் காதலிக்கவில்லை என்ற உண்மையை அவள் சொன்னால், கல்யாணத்தை அவளுக்குப் பிடிக்கவில்லை என்று அர்த்தமாகிவிடும். கல்யாணத்தை ஏன் பிடிக்கவில்லை என்ற அடுத்தக்கேள்வி கட்டாயமாக எழும். தன் முகத்தை கொஞ்சமும் சுளிக்காமல், மனதுக்குள் எழும் கோபத்தை துளியும் வெளிக்காட்டாமல், மிகவும் பொறுமையாக, தன்னிடம் இதமாக பேசும் கல்யாணத்தை, எல்லாவற்றிற்கும் மேலாக, தன்னைக் காதலிக்கிறேன் என்று முதன் முதலாக தன்னிடம் சொல்லும் ஒரு ஆணிடம், 'உன் கண்களை பார்க்க எனக்கு பயமாக இருக்கிறதென்று' அவன் முகத்திலே அடிப்பது போல் பட்டென சொல்லிவிடவும், தேன்மொழிக்கு விருப்பமில்லை. தன்னிடம் மனம்விட்டு உண்மையைப் பேசும் ஒருவனிடம், தான் ஒருவனை காதலிக்கறேன் என்று பொய் சொல்லவும் அவளுக்கு இஷ்டமில்லை. கல்யாணத்தின் கேள்விக்கு உடனடியாக என்ன பதில் சொல்லுவதென்று தெரியாமல் தேன்மொழி விழித்துக்கொண்டிருந்தாள்.

> “தேன்மொழி... என்னம்மா பேசி முடிச்சிட்டீங்களா?” கற்பகத்தின் குரல் முன்னால் வந்தது. குரல்கொடுத்துவிட்டு, கற்பகம் மொட்டைமாடியின் வாசலில் வந்து நின்றாள். “மிஸ்டர் கல்யாணம்... நான் சொல்றதை நீங்களாவது கேளுங்க. தயவு செய்து உங்களுக்கு, என்னைப்பிடிக்கலேன்னு சொல்லிடுங்க. ப்ளீஸ்...” தேன்மொழி கல்யாணத்திற்கு மட்டும் கேட்க்குமளவிற்கு முனகிக்கொண்டே கற்பகத்தை நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தாள். தேன்மொழியின் அழகான கருநிற கண்களில் தேங்கியிருந்த கெஞ்சலைக்கண்ட கல்யாணம் தன் மனதுக்குள் ஒரு நொடி உருகினான். அடுத்த நொடி மருகினான். அதற்கடுத்த நொடியில் இளகினான். நீளமாக தன் மூச்சை இழுத்தான். தேன்மொழியின் உடலிலிருந்து வந்த ரோஜா வாசம் அவன் நெஞ்சை நிறைத்திருந்தது. தன் மனதுக்குள் ஒரு முடிவுக்கு வந்து விட்டவனைப்போல், தேன்மொழியின் பின்னால் நிதானமாக நடக்க ஆரம்பித்தான். “ஓ மை காட்...” தேன்மொழி அணிந்திருந்த ரவிக்கைக்கும், கட்டியிருந்த புடவைக்கும் நடுவில் தெரிந்த வெற்று முதுகின் தாமிர நிறமும், வனப்பான ஒரே ஒரு மடிப்பும், அதன் பளபளப்பும், கல்யாணத்தின் கண்களை ஓங்கி அறைந்தன. தேவதை மாதிரி அசைஞ்சு அசைஞ்சு நடக்கிறாளே? தேன்மொழியின் பின்னழகில் தன்னை, தன் மனதை, அந்த தருணத்தில் முழுவதுமாக பறிகொடுத்து நின்றான் கல்யாணம். இவ்வளவு அழகான பெண்ணை, நான் மனசாரக் காதலிக்கற பெண்ணை, எனக்குப் பிடிக்கலேன்னு எப்படி நான் பொய் சொல்லுவேன்? கல்யாணம் தன் மனதுக்குள் ஒரு கணம் நிலைகுலைந்து போனான்.

No comments:

Post a Comment