Friday 20 September 2013

அன்புள்ள ராட்சசி 3


வீங்கிப்போன முகத்துடன், அசோக்குக்கு மூக்கும் சேர்ந்து கிழிந்திருந்தது. அவனுடைய உருண்டையான நீளமான மூக்கின் மையப்பகுதியில், குறுக்குவாக்கில் ஒரு கீறல். தோல் பெயர்ந்து வந்திருக்க, அதன் வழியே ரத்தம் துளிர்த்திருந்தது. அன்டர்டேக்கர் தன் விரலில் அணிந்திருந்த மண்டையோடு மோதிரம்தான் அதற்கு காரணமாயிருக்க வேண்டும். அசோக் மூக்கை இருபுறமும் பிடித்துக்கொண்டு, 'உஷ்.. உஷ்.. உஷ்..' என உதடுகள் குவித்து காற்று ஊதிக்கொண்டிருந்தான். மீரா தன் பேகை கையிலெடுத்து பக்கவாட்டு ஜிப்பை திறந்தாள். உள்ளே விதவிதமாய் மாத்திரைப் பட்டைகள்.. ஒன்றிரண்டு ஆய்ன்மென்ட்கள்.. பேண்டேஜ்.. பிளாஸ்டர்..!! "ம்ம்.. கையை எடு..!!" மீரா சொல்ல, அசோக் மூக்கிலிருந்து கைகளை விலக்கிக் கொண்டான். மீரா அசோக்கின் மூக்கில் கொஞ்சமாய் கொப்பளித்திருந்த ரத்தத்தை பஞ்சால் துடைத்து சுத்தம் செய்தாள். அப்புறம் ப்ளாஸ்டர் பிரித்து, சரக்கென இழுத்து, அசோக்கின் மூக்குக்கு குறுக்காக அழுத்தமாக ஒட்டிவிட்டாள். "ஹ்ஹ்ஹ்ஹா..!!" வேதனையில் முனகினான் அசோக்.
"ப்ச்.. ரொம்ப பெனாத்தாத..!! ஒன்னுல்ல.. ஒரே நாள்ல சரியாயிடும்..!!" மீரா கூலாக சொல்லிக்கொண்டிருக்க, அந்தப்பக்கம் அண்டர்டேகரும், ஜான் ஸீனாவும் சாப்பிட்டு முடித்து எழுந்தார்கள். நடந்து இவர்களை நெருங்கியவர்கள், அசோக்கின் முதுகை செல்லமாக தட்டினர். "வாய் ப்ராப்பர் இல்லே உன்க்கு.. அதான் மூக்லே ப்ளாஸ்டர்..!!" என்றான் அண்டர்டேகர். "டேக் கேர் பாய்..!!" என்று கிண்டலாக சொன்னான் ஜான் ஸீனா. கேஷுவலாக சொல்லிவிட்டு இருவரும் திரும்பி நடந்தார்கள். "ஏய்.. போங்கடா..!! மூக்கை பேத்துட்டு.. டேக் கேராம்.. டேக் கேர்..!!" மீரா அவர்களுடைய முதுகை பார்த்து சீறினாள். டேபிளில் கிடந்த மிளகாய் துகள் பாக்கெட்டுகளை அள்ளி, அவர்கள் மீது வீசினாள். அவர்கள் இருவரும் அவளை கண்டுகொள்ளமல் அங்கிருந்து அகன்றனர். அண்டர்டேகர் மட்டும் திரும்பிபார்த்து ஒருமுறை 'க்யா..??' என்று வாயை பிளந்தான். "ப்ச்.. விடு மீரா.. அவனுகளை எதுக்கு திட்டுற..??" அசோக் சலிப்பாக சொன்னான். "ஏன்.. திரும்ப வந்துடுவானுகனு பயமா..??" மீராவின் குரலில் ஒரு நக்கல். "இல்ல.. அவனுக மேல எதுவும் தப்பு இல்லைன்னு எனக்கு தோணுது..!!" "ஓ..!! இது எப்போ இருந்து..?? அவனுக ரெண்டு அப்பு அப்புனதுல இருந்தா..??" "இல்ல.. அதுக்கு முன்னாடியே ஒரு மைல்ட் டவுட் வந்தது.. நான்தான் கொஞ்சம் மெதப்புல பேசிப்புட்டேன்..!!" "எ..என்ன சொல்ல வர்ற..??" "உண்மைய சொல்லு மீரா.. நீதான அவனுகளை பாத்து கண்ணடிச்ச..??" அசோக் அந்த மாதிரி நேரிடையாகவே கேட்டுவிட, இப்போது மீரா கண்களை இடுக்கி அவனை முறைத்தாள். "ஏன்.. அவனுகள்ட்ட வாங்குனதுலாம் பத்தலையா..??" என்று முஷ்டியை முறுக்கினாள். அசோக் நொந்து போனான். "ஐயோ தாயே.. ஆளை விடு.. உன்னை நான் ஒன்ன்ன்னும் கேக்கல..!!" என்றவாறே அவன் கைகூப்ப, மீராவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. "ஹாஹாஹாஹா..!!" கலகலவென சிரித்தாள். "அவனுக குடுத்ததே மூஞ்சிலாம் வின்வின்னுனு தெறிக்குது..!!" அசோக் சோகமாக சொல்ல, மீரா இப்போது அவனை சற்றே பரிதாபமாக பார்த்தாள். "ரொம்ப வலிக்குதா..??" அவளுடைய குரலில் புதிதாக ஒரு கனிவு. "ம்ம்.. முடியல..!! அவனுகட்ட இருக்குறது கையா தும்பிக்கையான்னு தெரியல..!!" "ஹாஹா.. சரி.. இரு.." சிரிப்புடன் சொன்ன மீரா, பேகிற்குள் கைவிட்டாள். சிவப்பாய் இருந்த இரண்டு மாத்திரகளை எடுத்து அசோக்கிடம் நீட்டினாள்."இந்தா.. இதை இப்போ ஒன்னு போட்டுக்கோ.. நைட்டும் பெயின் இருந்தா இன்னொன்னு போடு.. பெயின் தெரியாது.. மார்னிங் யூ வில் பீ ஆல்ரைட்..!!" "ஹ்ம்ம்.. அது சரி.. இதென்ன.. பைக்குள்ளயே ஒரு ஃபார்மஸி வச்சிருக்குற..??" மாத்திரைகளை வாங்கிக்கொண்டே, அசோக் அந்த மாதிரி இயல்பாக கேட்கவும், மீராவின் முகம் இப்போது பட்டென வாடிப்போனது. குப்பென ஒரு சோகம் எங்கிருந்தோ அவளது முகத்தில் வந்து அப்பிக்கொண்டது. உதடுகளை மடித்து பற்களால் கடித்துக் கொண்டவள், தலையை மெல்ல குனிந்து கொண்டாள். அசோக் எதுவும் புரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒருசில வினாடிகள் அமைதியாக இருந்த மீரா, பிறகு குரலில் புதுவிதமாய் ஒரு சோகம் வழிந்தோட, திக்கி திணறி சொன்னாள். "எ..எனக்கு.. எனக்கு 'அரித்மொஜெனிக் வென்ட்ரிகுலார் டிஸ்ப்ளேசியா' அப்டின்னு.. ஒ..ஒரு டிஸீஸ் இருக்கு அசோக்..!!" மீரா சொல்ல அசோக்கிடம் ஒரு சீரியஸ்னஸ். குழப்பமாய் நெற்றியை சுருக்கினான். "வா..வாட்ஸ் தேட்..?? அ..அரித்மேடிக்..??" "ப்ச்.. அரித்மேடிக்கும் இல்ல.. அல்ஜீப்ராவும் இல்ல.. அரித்மொஜெனிக்..!! ரொம்ப ரொம்ப ரேரான ஹார்ட் டிஸீஸ்..!! ஸா..ஸாரி.. உன்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கணும்.. மறைச்சுட்டேன்.. ஸாரி..!!" அசோக்கின் முகத்தில் இப்போது ஒருவித கலவரம். "வெ..வெளையாடாத மீரா..!!" "இதுல வெளையாடுறதுக்கு என்ன இருக்கு..??" "ரொ..ரொம்ப.. ரொம்ப மோசமான வியாதியா அது..??" "ஆமாம்.. ஹார்ட் ப்ராப்பர் ஷேப்ல இருக்காது.. ஒரு சைட் மட்டும் ஓவரா வீங்கிருக்கும்.. ஹார்ட் பீட் ரொம்ப அப்னார்மலா இருக்கும்.. ப்ளட் ஸர்க்குலேஷன் ஒழுங்கா இருக்காது..!!" "ஓ..!! இ..இதை சரி பண்ண முடியாதா மீரா..?? ச..சர்ஜரி ஏதாவது பண்ணினா..??" "ம்ஹூம்.. இந்த டிஸீஸ்கு எந்த ட்ரீட்மன்ட்டும் இல்ல..!! இ..இப்போ.. இப்போ நான் ரொம்ப க்ரிட்டிக்கல் ஸ்டேஜ்ல வேற இருக்கேன் அசோக்.. இத்தனை நாளா என் ஹார்ட் துடிச்சுட்டு இருந்ததே பெரிய அதிசயம்.. இ..இன்னும் எத்தனை நாளைக்குன்னு தெரியல.. எப்போவேனா ஹார்ட் அட்டாக் வந்து.. நா..நான் மண்டையை போட்டுடலாம்..!!" மீரா பரிதாபமாக சொல்ல, அசோக் அப்படியே துடித்து போனான். "பச்.. எ..என்ன மீரா நீ..?? இ..இப்படிலாம் இனிமே பேசாத ப்ளீஸ்..!! எதை இழந்தாலும்.. நம்பிக்கையை மட்டும் இழக்க கூடாது.. தெரியுமா.?? உ..உனக்கு.. உனக்கு ஒன்னும் ஆகாது மீரா.. நான் உனக்கு ஒன்னும் ஆக விடமாட்டேன்.. என்னை நம்பு.. நான் இருக்கேன்ல..?? நான் எப்படியாவது.. ஏதாவது செஞ்சு.. உ..உன்னை நான்.. உன்னை.." அசோக் அவள் மீதான காதலுடன் பதற்றமாய் பேசிகொண்டிருக்க, மீரா அவனுடைய முகத்தில் மிதந்த உணர்சிகளையே ஒருசில வினாடிகள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம், "ச்சோ.. ச்வீட்..!!" என்றாள் திடீரென ஒரு அழகுப் புன்னகையுடன். "என்ன நீ.. சும்மா சும்மா ஸ்வீட் காரம்னுட்டு..??" அசோக் இப்போது பேசுவதை நிறுத்திவிட்டு, அவளை குழப்பத்துடன் பார்த்தான். "ஹாஹாஹாஹா..!!" அவளோ எளிறுகள் தெரிய சிரித்தாள். "ஏ..ஏன் சிரிக்கிற..??" "ஹாஹா.. பின்ன என்ன..?? என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா..?? புத்ஹூ..!! நான் சும்மா லுல்லுலாயிக்கு சொன்னேன்..!!" "என்னது..?? லுல்லுலாயிக்கா..??" அசோக் எரிச்சலாக கேட்டுக் கொண்டிருக்கும்போதே, "ஹ்ம்ம்.. என்னைப் பாத்தா என்ன ஹார்ட் ப்ராப்ளம் இருக்குறவ மாதிரியா இருக்கு..?? ம்ம்..??" என்றவாறே மீரா இப்போது சரக்கென நிமிர்ந்து அமர்ந்தாள்..!! ஷோல்டர்கள் இரண்டையும் சற்றே பின்னுக்கு தள்ளி.. அவள் அந்த மாதிரி விறைப்பாக நிமிரவும்.. அவ்வளவு நேரம் பம்மிக்கொண்டு கிடந்த அவளது மார்புப் பந்துகள் ரெண்டும்.. இப்போது குபுக்கென நிமிர்ந்து நின்றன..!! அவள் அணிந்திருந்த மெல்லிய மஞ்சள் நிற டிஷர்ட்டுக்குள்ளாக.. தங்களது கண.. மற்றும்.. கன.. பரிமானங்களையும் காட்டிக்கொண்டு.. திம்மென விம்மிப்போய் காட்சியளித்தன..!! அந்த காட்சியை மிக அருகில் இருந்து பார்த்த அசோக்குடய ஹார்ட்.. உடனடியாய் ஒரு அட்டாக் வாங்கி துடிதுடியென துடித்தது..!! 'உப்' என்று மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்ட அசோக்.. அப்புறம் சிறிது நேரத்திற்கு அப்படியே மூர்ச்சையாகிப் போனான்..!! அவளுடைய அரைக்கோள வடிவழகில் இருந்து பார்வையை அகற்றிக்கொள்ள.. அரும்பாடு பட வேண்டியது இருந்தது அசோக்கிற்கு..!! திணறினான்.. தடுமாறினான்..!! "எ..என்ன.. ஒண்ணுமே சொல்ல மாட்டேன்ற..??" அசோக் அட்டாக் வந்து அரண்டு போயிருப்பதை மீரா அறியவில்லை. இன்னுமே தனது அங்கங்களின் எழுச்சியை அவள் அடக்க முயலவில்லை. "இ..இல்ல.." அசோக் திருதிருவென விழித்தவாறே சொன்னான். "என்ன இல்ல..??"எ..எதும்.. ப்ராப்ளம் இருக்குற மாதிரி இல்ல..!!" திணறலாக சொன்னபோதே அசோக்கின் பார்வை, திருட்டுத்தனமாய் அவளது நெஞ்சை மேய்ந்தது. "ஹ்ம்ம்.." மீரா இப்போது விறைப்பு நீங்கி இயல்பாக அமரவும்.. அவளுடைய மார்புகள் ரெண்டும் திமிர் அடங்கிப்போய்.. மீண்டும் பனியனுக்குள் பதுங்கின..!! அசோக்குக்கு அப்புறம்தான் சுவாசம் சீரானது..!! "யப்பாஆஆ...!!" என்றான் நிம்மதி பெருமூச்சுடன். "என்ன யப்பா..??" "ஒ..ஒன்னுல்ல..!!" "என்ன ஒன்னுல்ல.. சம்பந்தமில்லாம யப்பான்னுட்டு.. அப்புறம் ஒன்னுல்லன்ற.. லூஸா உனக்கு..??" "ம்க்கும்.. எனக்கு லூஸா..?? உனக்குத்தான் ரொம்ப டைட்டு..!!" "வாட்..????" மீரா முகத்தை சுளித்து கத்தினாள். "ஹையோ.. ஒன்னுல்லன்னு சொன்னா விடேன்..!! அதையே நோண்டி நொண்டி கேட்டுட்டு இருப்ப..?? சரி.. நான் கேட்டதுக்கு இன்னும் பதிலே சொல்லலையே..??" "என்ன கேட்ட..??" "பேக்ல எதுக்கு இவ்வளவு டேப்லட்ஸ் வச்சிருக்குறன்னு கேட்டேன்..!!" "ப்ச்.. அதுவா.?? ஸ்பெஷலாலாம் எதும் ரீஸன் இல்ல.. அது ஜஸ்ட் என் ஹேபிட்..!! நமக்கு திடீர்னு கோல்ட் வரலாம்.. ஹெட்-ஏக் வரலாம்.. இல்லனா யாராவது ஓங்கி நம்ம மூஞ்சில பன்ச் விட்டு.. மூக்கை பஞ்சர் ஆக்கலாம்.. ஹாஹாஹா.." மீரா பேச்சுக்கு இடையே நக்கலாக சிரிக்க, "ம்ம்.. ம்ம்.." அசோக் மூக்கு ப்ளாஸ்டரை தடவிக்கொண்டே அவளை முறைத்தான். "ஹ்ம்ம்.. அந்த நேரத்துல பக்கத்துல ஃபார்மஸி இருக்குதோ இல்லையோ.. அதான் பைக்குள்ளயே ஒரு மினி ஃபார்மஸி..!!" "ஓ..!! நல்ல ஹேபிட்தான்..!!" "இப்போ.. திடீர்னு எனக்கு சூசயிட் பண்ணிக்கனும்னு தோணுச்சுனு வச்சுக்கோயேன்.. ஒரு டென்ஷனும் இல்ல..!! தூக்கமாத்திரை டப்பா ஒன்னு இருக்குது.. அதை அப்படியே வாய்க்குள்ள கொட்டிட்டா போதும்.. மேட்டர் முடிஞ்சது.. கதம் கதம்..!!" மீரா சொல்லிவிட்டு நாக்கை வெளியே துருத்தி காட்ட, அசோக்கால் ஏனோ அவளுடைய பேச்சை ரசிக்க முடியவில்லை. "ஐயே.. என்ன பேச்சு இது..?? தூக்க மாத்திரை அது இதுன்னுட்டு..??" என்றான் எரிச்சலாக. "அட.. என்னப்பா நீ.. தூக்க மாத்திரையை இப்படி சீப்பா சொல்லிட்ட..?? சூசயிட் பண்ணிக்கிறதுக்கு தூக்க மாத்திரைதான் பெஸ்ட் ஆப்ஷன் யு நோ..!! மத்ததெல்லாம் ச்சால பெயின்ஃபுல்..!!" "ஷ்ஷ்ஷ்... ப்பாஆஆ.. முடியல..!!" "என்ன.. ரொம்ப முடியலையா..?? நான் குடுத்த பெயின் கில்லர் போட்டுக்கோ.. அப்புறம் மூக்கு வலிக்காது..!!" "நான் மூக்கை சொல்லல.. உன் மொக்கையை சொன்னேன்..!! தா...ங்க முடியல மீரா..!! வேற ஏதாவது பேசுறியா..??" "வேற.. வேற என்ன பேசுறது..?? வேற ஒன்னுல்ல போ..!! சரி.. எனக்கு டைம் ஆச்சு.. நான் கெளம்புறேன்..!!" "ஹேய்.. இரு இரு.." "என்ன..??" "நா..நாளைக்கு.. நாளைக்கு இங்கயே இதே டைம்ல மீட் பண்ணலாம்ல..??" "ஹாஹா.. நாளைக்கா..?? நாளைக்கு சான்சே இல்ல..!!" "ஏன்..??" "நாளைக்கு நான் வர மாட்டேன்..!!" "அதான் ஏன்னு கேக்குறேன்..??" "ஏன்னா.. என்ன சொல்றது..?? நாளைக்கு எனக்கு வேற அப்பாயிண்ட்மண்ட் இருக்கு..!!" "வே..வேற என்ன அப்பாயிண்ட்மண்ட்..??""ஆக்சுவலா நாளைக்கு.." என்று ஆரம்பித்த மீரா, உடனே பட்டென நிறுத்தினாள். ஏதோ யோசனையாய் நெற்றியை கீறினாள். கட்டைவிரலை பற்களுக்கு இடையில் வைத்து கடித்தாள் . பிறகு குரலில் ஒரு புதுவித உற்சாகத்துடன் கத்தினாள். "ஹேய் அசோக்.. உன்கிட்ட பைக் இருக்குன்னு சொன்னேல..??" "ம்ம்.." "அப்போ.. இப்படி பண்ணலாமா..??" "எப்படி..??" "நாளைக்கு நாம ரெண்டு பேரும் ஜா...லியா ஊர் சுத்தலாமா..??" அவள் அவ்வாறு கண்களில் ஒரு மின்னலுடன் கேட்கவும்.. அசோக்கிற்கு குப்பென்று இருந்தது... குளுகோஸ் சாப்பிட்டது மாதிரி.. எனர்ஜியுடன் நிமிர்ந்து அமர்ந்தான்..!! விழிகள் ஆச்சரியத்தில் விரிய.. வாயெல்லாம் பல்லாக கேட்டான்..!! "மீரா.... எ..என்ன மீரா சொல்ற நீ..??" "ஹ்ம்ம்.. உனக்கு ஓகே வா..?? நாளைக்கு ஃபுல் டே.. நீயும் நானும் மட்டும்.. யார் டிஸ்டர்பன்ஸும் இல்லாம.. தனித்தனியா..!!!" "என்னது..??? தனித்தனியாவா..???" அசோக் படக்கென முகம் சுருங்கிப்போனவனாய் கேட்டான். "ஐயோ.. தனியா..!!!! நீயும் நானும் மட்டும் தனியான்னு சொன்னேன்..!! உனக்கு ஓகேவா..??" "எ..என்ன கேள்வி இது மீரா..?? உ..உன்கூட தனியா ஊர் சுத்துறதுனா.. எவ்ளோ ஜாலியா இருக்கும்.. அதை எப்படி நான் வேணாம்னு சொல்வேன்..?? எனக்கு டபுள் ஓகே..!! நீ.. நீ... உ..உன்னை.. எப்போ எங்க வந்து பிக்கப் பண்ணனும்னு மட்டும் சொல்லு..!!" "ம்ம்ம்ம்ம்... நாளைக்கு காலைல.. ஒரு ஒன்பது மணிக்குலாம் வடபழனி பஸ் ஸ்டாண்ட்க்கு வந்துடுறியா..??" "ஓகே.. டன்..!!" "ம்ம்ம்.. அப்புறம்.. இன்னொரு மேட்டர்..!!" "என்ன..??" "உன் பைக் எவ்ளோ போகும்..??" "அது என்ன.. ஒரு லிட்டருக்கு முப்பத்தஞ்சு.. நாப்பது கிலோமீட்டர் போகும்..!!" "ஐயோ.. நான் அதை கேக்கல..??" "அப்புறம்..??" "அதை வித்தா.. எவ்ளோக்கு போகும்னு கேட்டேன்..??" மீரா கேஷுவலாக கேட்க, அசோக்குக்கு சுருக்கென்று இருந்தது. "என்னது..?? வி..வித்தாவா..?? அ..அதுலாம் ஏன் கேக்குற..??" "அட சும்மாபா.. எந்த மாதிரி பைக்குனு எனக்கு ஒரு ஐடியா வேணும்ல.. அதுக்கு கேட்டேன்..!!" "அ..அதுக்கு.. எந்த கம்பனி பைக்னு கேட்கலாம்ல..??" "எனக்கு பைக் கம்பனி பத்திலாம் ஐடியா இல்ல.. அதான் பைசா பத்தி கேக்குறேன்..!!" "ஓ..!! ம்ம்ம்... அது ஒரு நாப்பதாயிரம், அம்பதாயிரம் போகும்..!!" "ஓ.. ஓகே ஓகே..!! எனக்கும் டபுள் ஓகே..!!" முகம் முழுதும் பிரகாசமாகிப் போக, மீரா இப்போது அழகாக சிரித்தாள். "ச்சலோ..!!" என்றவாறு பேக் எடுத்துக்கொண்டு எழுந்தாள். இருவரும் ஃபுட் கோர்ட் விட்டு வெளியே வந்தார்கள்.. 'பை.. ஸீ யு டுமார்ரோ..' சொல்லிக்கொண்டார்கள்..!! மீரா வடபழனி பஸ்டாண்ட் இருந்த திசையை நோக்கி நடக்க.. அசோக் அவனுடைய ஆபீஸ் இருந்த பக்கமாய் திரும்பினான்..!! அப்புறம் சிறிது நேரம் கழித்து.. அசோக்கின் ஆபீஸில்.. "ஃபுட்கோர்ட்ல.. ஸ்டெப்ஸ் விட்டு எறங்குற எடத்துல.. சைடுல ஒரு டோர் இருக்குதுல..??" அசோக் கேட்க, "ஆமாம்..!!" அவனை சுற்றி அமர்ந்திருந்த நண்பர்கள் மூவரும் கோரஸாக சொன்னார்கள். "செனைப்பன்னிங்க மாதிரி ரெண்டு பேர்டா.. கொஞ்சம் கூட அறிவே இல்ல அவனுகளுக்கு.. நான் இந்தப்பக்கம் இருக்குறது தெரியாம.. படார்ர்ர்னு கதவை தள்ளிட்டானுக மச்சி..!! யப்பா.. செம அடி.. மூஞ்சிலயே.. மூக்கு வேற கிழிஞ்சு போச்சு..!! அவனுக ரெண்டு பேரும் 'ஸாரி ஸார்.. ஸாரி ஸார்..'ன்னு.. கால்ல விழாத கொறையா கெஞ்சுனானுக.. அவனுகளை அப்படியே ரெண்டு விடலாம் போல ஆத்திரம் எனக்கு..!! ப்ச்.. என்ன பண்றது.. ஆக்ஸிடன்ட் மாதிரி ஏதோ ஆகிப் போச்சு.. அவனுகளை அடிச்சு நமக்கு என்ன கெடைக்கப் போவுது சொல்லு..?? 'பரவால பாஸ்.. ஃப்ரீயா விடுங்க..'ன்னு சொல்லிட்டேன்..!! மீராதான் பாவம்.. எனக்கு அடிபட்டுச்சுன்னு தெரிஞ்சதும்.. அப்படியே துடிச்சு போயிட்டா தெரியுமா..?? அவ கண்ணுல அப்படியே பொலபொலன்னு கண்ணீர் வந்துடுச்சு மச்சான்..!! ஹ்ம்ம்.. அப்புறம் அவதான் காயத்தைலாம் க்ளீன் பண்ணி.. இந்த ப்ளாஸ்டர் போட்டுவிட்டா..!!" மனசாட்சியே இல்லாமல் புழுகிய அசோக், "ப்ளாஸ்டர் நல்லா அழகா போட்டு விட்ருக்காள்ல..??" என்று வெட்கமே இல்லாமல் இளித்தான். நண்பர்கள் மூவரும் எதுவும் பேசவில்லை. அசோக் பேசியதை எல்லாம் அமைதியாக கேட்டுக்கொண்டவர்கள், அதற்கு எந்த ரியாக்ஷனும் காட்டிக்கொள்ளாமல், இவனையே ஒருமாதிரி முறைத்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தனர். ஒருவித நமுட்டு சிரிப்பு சிரித்தார்களே ஒழிய, நம்பிக்கை என்பது துளி கூட அவர்கள் முகத்தில் தென்படவில்லை. அவர்கள் அமைதியாக இருந்ததில் இருந்தே, அவர்களுடைய எண்ணத்தை அசோக் புரிந்து கொண்டான். இப்போது முகத்தையும், குரலையும் ஒரு மாதிரி பாவமாக மாற்றிக்கொண்டு சொன்னான். "ஏய்.. சத்தியமா அவ அடிக்கலடா..!!" "கன்ஃபார்ம்ட் மச்சி..!! சத்தியமே பண்ணிட்டான்.. அப்படினா சத்தியமா அவதான் சாத்து சாத்துன்னு சாத்திருக்கா..!! ஹாஹா..!!" சாலமன் சொல்லிவிட்டு சிரித்தான். "த்தா.. சத்தியம் பண்றேன்.. அப்புறமும் நம்ப மாட்டீங்களாடா..??" "சத்தியந்தான..?? நாங்க எவ்ளோ சத்தியம் பண்ணிருப்போம்.. எங்களுக்கு தெரியாதா சத்தியம் பண்ணினா என்ன மீனிங்னு..??" வேணுவும் கிண்டலாகவே சொன்னான். "போங்கடா வெண்ணைகளா.. நடந்ததுலாம் உள்ளது உள்ளபடி சொல்லிருக்கேன்.. அதுக்கு மேலயும் நீங்க நம்பலைன்னா நான் என்ன பண்றது..??" "நீ நம்புறது மாதிரி எதுவுமே சொல்லலையே மச்சி..!! அந்த டோர் மேட்டர் கூட பரவால.. ஆனா.. உனக்கு அடிபட்ருச்சுனதும் அப்படியே அவ துடிச்சு போயிட்டான்ற.. கண்ணுல அப்படியே கண்ணீரா கொட்டுச்சுன்ற.. எதுவுமே நம்புறது மாதிரியே இல்லையடா..?? ஷகீலா சாமி கேரக்டர்ல நடிக்கிறாங்கன்ற மாதிரி இருக்கு..!!" - இது கிஷோர். "ஏன்டா..?? எனக்கு அடிபட்டுச்சுனா அவ துடிக்க மாட்டாளா...?? அன்னைக்கு எவன் மேலயோ இருந்த கோவத்துல, என் மூஞ்சி முன்னாடி செருப்பை நீட்டிட்டா.. நேத்து ஏதோ ஒரு அவசரத்துல ரெண்டு நம்பர் மாத்தி சொல்லிட்டா.. அதுக்காக அவளுக்கு என் மேல ப்ரியம் இல்லன்னு ஆயிடுமா..?? என்மேல அவ எவ்வளவு லவ் வச்சிருக்கான்னு.. நான் நல்லா புரிஞ்சுக்கிட்டேன்.. உங்களுக்குக்குத்தான் இன்னும் புரியல..!! உங்களுக்கு இன்னொன்னு சொல்லவா..??" "என்ன..??" "நாளைக்கு நானும் அவளும்.. ஃபுல்டே ஜாலியா ஊர் சுத்தப் போறோம்..!!" அசோக் அவ்வாறு பெருமையாக சொல்ல, இப்போது மற்ற மூவருடைய முகமும் படக்கென இருண்டு போனது. மூவரும் அசோக்கையே ஒருவித பொறாமையும், நம்பிக்கையின்மையுமாய் ஒரு பார்வை பார்த்தனர். "எ..என்னடா மச்சி சொல்ற..??" வேணு பரிதாபமாக கேட்டான். "நம்ப மாட்டின்கன்னு தெரியும்.. நாளைக்கு போயிட்டு வந்து என்னோட எக்ஸ்பீரியன்ஸ் சொல்றேன்.. அப்போ நம்புனா போதும்..!! அப்புறம்.. இந்த ஊர் சுத்துற ஐடியா ப்ரோபோஸ் பண்ணினது யார்னு நெனைக்கிறீங்க.. சத்தியமா நான் இல்ல.. அவளேதான்..!! ஹ்ஹ.. அவளைப் பத்தி நீங்க புரிஞ்சுக்க வேண்டியது நெறைய இருக்குடா..!! ம்ம்ம்ம்... நாளைக்கு காலைலேயே கெளம்புற மாதிரி ப்ளான்.. அப்படியே பார்க், பீச், மூவின்னு கவலையே இல்லாம சுத்திட்டு, திரும்ப வர்றதுக்கு எப்படியும் லேட்நைட் ஆயிடும்னு நெனைக்கிறேன்.. ஸோ.. நாளைக்கு என்னால ஆபீஸ் வர முடியாது..!!""ஹேய்.. நாளைக்கு அந்த 'பேச்சி பெருங்காயம்' ஷூட்டிங் இருக்குடா.. நீ பாட்டுக்கு ஊர் சுத்தப் போறேன்ற..??" சாலமன் திடீரென ஞாபகம் வந்தவனாய் சொன்னான். "ஆமாண்டா.. நாளைக்கு விட்டா.. அப்புறம் பரவை முனியம்மா கால்ஷீட் கெடைக்கிறது ரொம்ப கஷ்டம்..!! அப்புறம்.. அந்த மோகன்ராஜ் கெடந்து தையதக்கான்னு குதிப்பான்.. பே..பேசாம நீ ப்ளானை கேன்ஸல் பண்ணிடு மச்சி..!!" என்றான் வேணு, எப்படியாவது அசோக்கின் ஆசையில் மண்ணை போட்டுவிடவேண்டும் என்ற எண்ணத்துடன். "ஹேய்.. அதான் கிஷோர் இருக்கான்ல.. எல்லாம் அவன் பாத்துப்பான்..!! ஏன்னா.." அசோக் கேஷுவலாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே, "அவன்தான் இளிச்சவாயன்..!!!!" என்றான் கிஷோர் கடுப்புடன். "என்ன மச்சி இப்படி சொல்லிட்ட.. என் உயிர் நண்பன்னு சொல்ல வந்தேண்டா..!!" "ம்க்கும்.. ரெண்டும் ஒண்ணுதான்..!!" "ஹேய்.. ப்ளீஸ்டா..!! ஃபர்ஸ்ட் டைம் நானும் அவளும் வெளில போறோம்.. கொஞ்சம் உன் ப்ரோக்ராம் கேன்ஸல் பண்ணிட்டு இதை கவனிச்சுக்கோயேன்.. ப்ளீஸ்..?? நீயும் சங்கியும் ஊர் சுத்த போறப்போலாம்.. எத்தனை தடவை உன்னோட வேலையும் சேர்த்து நான் கவனிச்சிருப்பேன்.. அதெல்லாம் கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கோ மச்சி..!!" "சரி சரி.. போய்த்தொலை.. ஐ வில் டேக் கேர்..!!" "தேங்க்ஸ் மச்சி..!!" அசோக் கிஷோரிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சாலமன் இப்போது ஒரு பெருமூச்சுடன் சொன்னான். "ஹ்ம்ம்.. உங்க வண்டி ஓவர் ஸ்பீடா போற மாதிரி எனக்கு தோணுது அசோக்.. பாத்து.. எங்கயாவது ஆக்சிடண்ட்னு முட்டிக்கிட்டு நிக்கப் போவுது..!!" "என்னடா சொல்ற..??" "ஆமாம்.. பேசுன மொத நாளே ஐ லவ் யூ சொல்லிக்கிட்டிங்க.. இப்போ மூணாவது நாளே ஊர் சுத்த கெளம்பிட்டிங்க.. ரொம்ம்ப ஸ்பீடா போறீங்கடா.. அதான் சொல்றேன்..!!" சாலமனின் பேச்சில் பொறமை மிதமிஞ்சிப் போயிருந்தது. அதை புரிந்து கொண்ட அசோக் நக்கலான குரலில் சொன்னான். "ஹாஹா..!! பொறாமை..???? ஹ்ம்ம்.. இருக்கட்டும் இருக்கட்டும்.. ஆனா அதுக்குலாம் நாங்க ஒன்னும் செய்ய முடியாது..!! ம்ம்ம்.. இந்த ரெண்டு நாள்லயே அவளைப் பத்தி நான் எவ்வளவோ புரிஞ்சுக்கிட்டேன்.. அதேமாதிரி.. இனிமே வர்ற ஒவ்வொருநாளும் அவளைப் பத்தி இன்னும் என்னன்னவோ புரிஞ்சுக்கப் போறேன்..!! யு ஜஸ்ட் வெயிட் அண்ட் ஸீ..!!"நாள் - 3 காலை 9.45 மணி..!! அசோக்கும் மீராவும்.. அடையாறு கஸ்தூர்பா நகரில்.. ஏழாவது மெயின் ரோடும், எட்டாவது மெயின் ரோடும்.. முட்டிக்கொள்கிற இடத்தில் சாலையோரமாக நின்றிருந்தார்கள்.!! "குட் மார்னிங்.. நான் வினோபா அநாதை விடுதில இருந்து வர்றேன்..!! எங்க.. சொல்லு பார்ப்போம்..??" "கு..குட் மார்னிங்.. நா..நான் அனோபா விநாதை விடுதில.." அசோக் சொல்லி முடிக்கும் முன்பே, அவனுடைய தலையில் நறுக்கென்று குட்டு வைத்தாள் மீரா. "ஆஹ்ஹ்ஹ்....!!!!" அசோக் வலி தாங்காமல் தலையை தேய்த்துக் கொண்டான். "த்தூ.. இத்தனை வயசாச்சு.. இன்னும் பேச கத்துக்கல நீ..!! ஒரு நாலுவரி.. அதை மனப்பாடம் பண்ண வக்கு இல்ல..??" "ஷ்ஷ்ஷ்.. ஸாரி மீரா.. டங் ஸ்லிப் ஆயிடுச்சு.. இரு.. திரும்ப சொல்றேன்..!!" "ம்ம்.. சீக்கிரம்..!! டைம் வேஸ்ட் ஆகிட்டு இருக்கு..!!" "கு..குட் மார்னிங்.. நா..நான் வினோபா அநாதை விடுதில இருந்து வர்றேன்.. எங்க விடுதி சார்பா ஒரு பெரிய இசை நிகழ்ச்சி நடத்த நெனைச்சிருக்குறோம்.. எ..எங்க விடுதில இருக்குற மாற்று திறனாளிகளை மட்டும் வச்சே.. இந்த இசை நிகழ்ச்சியை நடத்தப் போறோம்.. ரொம்ப ரொம்ப வித்தியாசமான.. நீங்க கட்டாயம் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி..!! அ..அதுக்கான என்ட்ரன்ஸ் டிக்கெட்தான் ஸார் இது.. ஒரு டிக்கெட்டோட விலை.. ஜஸ்ட் பிஃப்ட்டி ருபீஸ்தான்..!! இதை நீ வாங்கிகிட்டா.. உங்களோட ஒரு நாள் ஈவினிங்க சந்தோஷமா கழிச்ச மாதிரியும் இருக்கும்.. எங்க விடுதில இருக்குற நெறைய ஆதரவற்ற குழந்தைங்களுக்கு உதவி செஞ்ச மாதிரியும் இருக்கும்..!! ப்ளீஸ் ஸார்.. உங்களோட உதவி எங்களுக்கு தேவை..!!" அசோக் தட்டுதடுமாறி சொல்லி முடிக்க, "ஹ்ம்ம்... குட்..!! இந்தா.. இதுல நூறு டிக்கெட் இருக்கு.. நீ இந்தப்பக்கம் இருக்குற ஏரியாலாம் எடுத்துக்கோ.. நான் அந்தப்பக்கம்.. ஈவினிங் ஆறு மணிக்கு திரும்ப இதே எடத்துல மீட் பண்ணுவோம்.. சரியா..??" "ம்ம்..!!" "நல்லா ஞாபகம் வச்சுக்கோ.. ஆறு மணிக்குள்ள எல்லா டிக்கெட்டையும் வித்துட்டு.. ஐயாயிரம் ரூபா பணத்தோட வரணும்.. இல்லனா உன் பைக்கை காயலான் கடைல போட்டு காசை எடுத்துக்க வேண்டியதா இருக்கும்.. புரிஞ்சதா..??" மீரா பைக் சாவியை சுழற்றிக்கொண்டே சொன்னாள். "இ..இதுலாம் நல்லா இல்ல மீரா..!!" அசோக் பரிதாபமாக சொன்னான். "எதுலாம்..??" "பார்க் பீச்னு சுத்தப் போறோம் நெனச்சுட்டு ஆசையா வந்தேன்.. இப்படி பாட்டுக்கச்சேரி டிக்கெட் விக்க சொல்றியே.. அதுவும் தெருத்தெருவா.. தனித்தனியா..!! அட்லீஸ்ட் சேர்ந்தாவது போகலாம்ல..??" "நாம என்ன கொள்ளையடிக்கவா போறோம்.. சேர்ந்து போக சொல்ற..?? டொனேஷன் கேக்க போறோம்.. தனித்தனியா போனாத்தான் நெறைய பேரை மீட் பண்ணலாம்.. நெறைய பேரை மீட் பண்ணாத்தான் நெறைய டிக்கெட்டும் விக்க சான்ஸ் இருக்கு..!!" "ப்ளீஸ் மீரா..!!" "ப்ச்.. பைக் திரும்ப வேணுமா வேணாமா உனக்கு..??" "வேணும்..!! "அப்போ கெளம்பு..!!"நீ பண்றது கொஞ்சம் கூட சரி இல்ல மீரா.. ஜாலியா ஊர் சுத்தலாம்னு கூட்டிட்டு வந்துட்டு.. இப்படி என் பைக்கை வாங்கி வச்சுட்டு மெரட்றியே..?? நீ பண்றதுலாம் தப்புன்னு உனக்கு தோணல..??" "இல்ல.. தப்பு இல்ல.. நாலு பேருக்கு நல்லது நடந்தா.. எதுவுமே தப்பில்ல..!!" மீரா 'நாயகன்' கமல் போல சொல்ல, "அய்யயையைய்யயே...!!" என்று அசோக் 'காதல்' பரத் போல தலையில் அடித்துக் கொண்டான். அன்று முழுதும் அசோக் வீதி வீதியாக அலைந்து திரிந்தான்..!! அடையாறு ஏரியாவின் இண்டு இடுக்கு, சந்து பொந்தெல்லாம்.. தெள்ளத் தெளிவாக தெரிந்து கொண்டான்..!! ஒவ்வொரு டிக்கெட்டையும் விற்று தீர்ப்பதற்குள்.. அசோக்குக்கு.. தாவு தீர்ந்தது.. தவிடு தின்ன வேண்டி இருந்தது.. தழை கீழாக நின்று டகீலா அடிக்க நேர்ந்தது..!! இலவசம் என்றதும் 'ஈஈ' என இளிக்கிற மனித இனம்.. நன்கொடை என்றதும் நாயைப் போல பார்க்கிற நிதர்சனத்தை.. கண்கூடாக கண்டு கொண்டான்..!! "இல்லைங்க.. எதுவும் வாங்கறது இல்ல..!!" என்ன ஏது என்று, நின்று கேட்க கூட நேரமின்றி, அசோக்கின் முகத்தில் கதவை அறைந்துவிட்டு, தியாகம் சீரியல் பார்க்க விரைந்தாள் ஒரு இல்லத்தரசி. "என்க்கு டமில் வராது.. ஐ டோன்ட் நோ இங்க்லீஷ் டூ..!!" வாய் கூசாமல் பொய் சொன்னான் ஒரு நடுத்தர ஆசாமி. "ச்சே.. லீவ் நாள் ஆனாலே கையில நோட்டு எடுத்துட்டு கெளம்பி வந்துடுறானுக..!!" அசோக்கின் முதுகுக்கு பின்னால் முணுமுணுத்த முறுக்கு மீசை பெரியவர், அவனை பிச்சைக்காரன் போலத்தான் பாவித்தார். அசோக் அவ்வளவு அவமானங்களையும் தாங்கிக் கொண்டுதான் ஒவ்வொரு டிக்கெட்டாக விற்க வேண்டி இருந்தது. அடுத்தவர்களுடைய ஏளனப் பார்வை அவனுடைய தன்மானத்தை கிளறி விட்டாலும், மீரா மீதிருந்த காதலுக்காக பொறுத்துக் கொண்டான். ஆனால்.. அவனுடைய பொறுமையை ஒரு பேச்சிலர் பையன், மிக அதிகமாகவே சோதித்து விட்டான். 'விடுதியில் எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள்.. என்னென்ன வசதிகள் இருக்கின்றன.. எப்படி எல்லாம் நிதி திரட்டுகிறார்கள்..' என்பது மாதிரி ஆயிரெத்தெட்டு கேள்விகள் கேட்டான். அசோக்கும் மீரா தந்த பிரவுசர் உதவியுடன் அவனுக்கு பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தான். பத்து நிமிடங்களுக்கு மேல் அசோக்கை கேள்வியால் துளைத்து எடுத்தவன், பிறகு "ஸாரி பாஸ்.. ஆக்சுவலா நீங்க சொன்ன டேட்ல எனக்கு ஒரு முக்கியமான அப்பாயின்ட்மன்ட் இருக்கு.. இல்லனா கண்டிப்பா இந்த டிக்கெட் வாங்கிருப்பேன்..!! நீங்க ஒன்னு பண்ணுங்க.. நெக்ஸ்ட் டைம் இந்த மாதிரி ஏதாவது ப்ரோக்ராம் நீங்க நடத்தினா.. அப்போ வந்து என்னை மீட் பண்ணுங்க.. நான் கண்டிப்பா வாங்குறேன்.. ஓகேவா..??" என்று கூலாக சொல்லிவிட்டு பீர் டின் எடுத்து உறிஞ்ச ஆரம்பித்தான். அசோக்கோ வெறியாகிப் போனான். "ஏண்டா.. நீ குடிக்கிற எம்பது ரூவா பீரு, இன்னும் அரை மணி நேரத்துல பாத்ரூம்ல மூத்திரமா போயிரும்.. ஆதரவு இல்லாத அநாதை புள்ளைங்களுக்கு, அம்பது ரூவா செலவழிக்க மாட்டியா நீ..??" என்று அவனுடைய உச்சந்தலையிலே ஓங்கி அறைய வேண்டும் போலிருந்தது. தான் பிரதிநிதியாக வந்திருக்கிற அநாதை விடுதியின் பெயர் கெட்டுப் போகக் கூடாதே என்பதற்காக, பொறுமையாக எழுந்து வந்தான். ஆறுமணிக்கு அசோக்கும் மீராவும் மீண்டும் சந்தித்துக் கொண்டார்கள். மீரா அனைத்து டிக்கெட்டுகளையும் விற்று முடித்திருந்தாள். அசோக்கின் கையில்தான் ஆயிரம் ரூபாய்க்கான டிக்கெட் மீதம் இருந்தது. ஆனால் மீரா அதற்காக அவனை திட்டவில்லை. "குட் அசோக்.. யு ஹவ் டன் ரியல்லி எ க்ரேட் ஜாப்..!!" என்று மனதார பாராட்டினாள். "சரி.. மிச்ச டிக்கெட்லாம் குடு..!!" என்று மீரா கேட்டபோது, அசோக் தரவில்லை. மாறாக பர்ஸில் இருந்து ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து நீட்டினான். "இந்தா..!!" "ஹேய்.. பரவால.. விக்க முடியலைன்றதுக்காக நீ பணம் தரவேண்டியது இல்ல.. அடுத்தவங்க வாங்கலன்னா அதுக்கு நீ என்ன பண்ணுவ..??" "இல்ல மீரா.. இன்னைக்கு பூரா அலைஞ்சு திரிஞ்சதுல.. நான் ஒரு விஷயம் கத்துக்கிட்டேன்..!!" "என்ன..??" "நல்லது செய்ங்கன்னு நாலு பேர்ட்ட உதவி கேக்குறதுக்கு முன்னாடி.. நாம அதுக்கு தகுதி உள்ளவங்களா இருக்கணும்..!! அதுக்காகத்தான் மிச்ச டிக்கெட்லாம் நானே வாங்கிக்கிறேன்னு சொல்றேன்.. என் ஃப்ரண்ட்ஸ், ஃபேமிலி எல்லாரும் கூட்டிட்டு நான் அந்த பங்க்ஷன்க்கு போக போறேன்..!! இந்தா.. பணத்தை வச்சுக்கோ..!!" அசோக் மீராவின் கையில் பணத்தை திணிக்க, அவள் "ச்சோ.. ச்ச்வீட்..!!" என்றாள் அசோக்கின் கண்களை கூர்மையாக பார்த்தவாறு. பணத்தை வாங்கி பேகில் மொத்தமாக வைத்தவள், உள்ளே இருந்து அந்த பொம்மையை எடுத்து அசோக்கிடம் நீட்டினாள். "ம்ம்.."ஹேய்.. என்ன இது..??" "ஆயிரம் ரூபா டிக்கெட்டை நீங்க ஒரே ஆளே மொத்தமா வாங்கினதால.. உங்களோட தாராள குணத்தை பாராட்டி.. எங்க விடுதி சார்பா நாங்க தர்ற ஒரு நினைவுப்பரிசு.. எங்க குழந்தைங்க தேங்கா நார்லயே செஞ்ச.. மூக்கு செவந்த கொரங்கு பொம்மை..!!" "ஹாஹா.. இட்ஸ் க்யூட்..!!" அசோக் புன்னகையுடனே அந்த குரங்கு பொம்மையை கையில் வாங்கிக்கொண்டான். "சரி.. கெளம்பலாம்... அர்பனேஜ் போய் பணத்தை ஹேண்ட் ஓவர் பண்ணிடலாம்..!!" "கெளம்பலாம்.. ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு உன்கூட சேர்ந்து ஏதாவது சாப்பிடனும் மீரா..!!" அசோக் சற்றே ஏக்கமாக சொன்னான். "அவ்வளவுதான..?? சாப்பிட்டா போச்சு.. வா.. நான் உனக்கு ட்ரீட் தர்றேன்..!!" மீராவும் உற்சாகமாகவே சொன்னாள். அன்று அவளுடன் சேர்ந்து ரோட்டோர தள்ளு வண்டிக்கடையில் குடித்த தேநீர், தேவாமிர்தமாய் தோன்றியது அசோக்கிற்கு..!! மூன்றாம் நாளில் அசோக் புரிந்து கொண்டது: மீரா அப்படி ஒன்றும் புரிந்து கொள்ளவே முடியாத புதிர் அல்ல. நாள் - 8 இடம்: ஃபுட்கோர்ட் "ஹையோ.. ஸ்பூன் கீழ விழுந்துடுச்சு அசோக்.. கொஞ்சம் எடுத்து தர்றியா..??" மீரா அவ்வாறு சொன்னதும், சாப்பிட்டுக்கொண்டிருந்த அசோக் எழுந்தான். கீழே குனிந்து அமர்ந்தான். அந்த ஸ்பூனை பார்வையாலேயே தேடி, கையை வைக்கவும் மீரா தன் காலை நகர்த்தி அவன் கைக்கருகே வைக்கவும் சரியாக இருந்தது. இவனுடைய கை அவளுடைய காலை தொட, "பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழனும் மகனே.." அசோக் தலையை நிமிர்த்தி பார்த்தான். மீரா தன் கைகள் இரண்டையும் உயர்த்தி அசோக்கை ஆசீர்வாதம் செய்து கொண்டிருந்தாள். அவள் முகத்தில் ஒரு குறும்புப் புன்னகை. அந்த அற்புதக் காட்சியை, தூரத்தில் இருந்த அசோக்கின் நண்பர்களும் கண்டுவிட்டனர். "ஹாஹா..!! அவ்ளோ பேர் இருக்குற பப்ளிக் ப்ளேஸ்ல.. அவ கால்ல விழுந்து கெஞ்சுற அளவுக்கு என்னடா மச்சி தப்பு பண்ணின நீ..??" ஆளாளுக்கு அசோக்கை கலாய்த்தனர். "ஹேய்.. அவ கால்லலாம் விழடா.. நம்புங்கடா..!!" அசோக் கதறியதை யாருமே பொருட்படுத்தவில்லை. நாள் - 12 "எப்படி இருக்கு..?? நல்லா இருக்கா..?? பிடிச்சிருக்கா உனக்கு..??" அசோக் தன் தலையை இப்படியும் அப்படியுமாய் திருப்பி, தன் காதுகளை மீராவிடம் ஆசையாக காட்டினான். அவனுடைய இரண்டு காதுகளிலும் சிவப்பு நிறத்தில் இரண்டு வளையங்கள்..!! 'ஹேய் அசோக்.. எனக்கு.. இந்த காதுல வளையம் போட்டுக்குற பசங்களலாம் ரொம்ப பிடிக்கும்.. நீயும் அந்த மாதிரி போட்டுக்குறியா..?" என்று அதற்கு முன்தினம்தான் மீரா அசோக்கிடம் சொல்லியிருந்தாள். அதன் விளைவுதான் இது..!! ஆனால் நேற்று அப்படி சொன்னவள், இன்று அசோக்கின் காதுகளை பார்த்ததும் குபீரென்று சிரித்துவிட்டாள். "ஹாஹாஹாஹா..!!!" அசோக் எதுவும் புரியாமல் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருக்க, அவளோ எதைப்பற்றியும் கவலை இல்லாமல் அவனை பார்த்து கைகொட்டி சிரித்துக் கொண்டிருந்தாள். "ஏ..ஏன் மீரா சிரிக்கிற..?? நல்லா இல்லையா..??" அசோக் பாவமாய் கேட்டான்.
"ரொம்ப கேவலமா இருக்கு..!! யாராவது ஏதாவது சொன்னா.. அப்படியே செஞ்சுடுவியா..?? உன் மூஞ்சிக்கு எது செட் ஆகும்னு உனக்கே தெரியாதா..?? ஹையோ ஹையோ..!! ஹாஹாஹாஹா..!!!" மீரா சிரித்துக்கொண்டே இருக்க, அசோக் அப்படியே நொந்து நூலாய் போனான். அசோக் புரிந்து கொண்டது: என்னை அசிங்கப்படுத்தி பார்ப்பதில் மீராவுக்கு ஏனோ ஒரு அலாதி ப்ரியம். நாள் - 16 இடம்: அதே ஃபுட்கோர்ட் "ஹேய்.. வாங்கடா.. பயப்படாதிங்க..!! நீங்க நெனைக்கிற மாதிரி இல்லடா.. அவ ரொம்ப நல்லவ... உங்களை ஒன்னும் செய்ய மாட்டா... உங்களை பத்தி எல்லாம் நல்ல விதமா சொல்லி வச்சிருக்குறேன்.. உங்களை மீட் பண்ண அவ எவ்வளவு ஆசையா இருக்குறா தெரியுமா..? வாங்கடா.. வாங்க..!!" தயங்கிய நண்பர்களை அசோக் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று மீரா முன்பாக நிறுத்தினான். அவர்களும் அறுக்கப் போகிற ஆடு மாதிரி, மிரள மிரள விழித்துக் கொண்டே, நடுக்கத்துடன் அவள் முன் சென்று நின்றனர். "இ..இவங்கதான் என் ஃப்ரண்ட்ஸ் மீரா.. காலேஜ்ல எல்லாம் ஒரே க்ளாஸ்.. அப்போ இருந்தே நாங்க ரொம்ப க்ளோஸ்..!!" அசோக் ஆரம்பித்து வைக்க, "ஹாய்.. ஐ'ம் கி..கிஷோர்..!!" கிஷோர் ஒரு தயக்கத்துடனே கை நீட்டினான். மீரா முகமெல்லாம் பிரகாசமாய் சேரை விட்டு எழுந்தாள். கிஷோரின் கையைப் பற்றி குலுக்கிக் கொண்டே சொன்னாள். "ஹாய்.. நீங்கதான் கிஷோரா..?? அசோக் உங்களை பத்தி நெறைய சொல்லிருக்கான்..!! உங்களுக்கு ஃபோடாக்ராஃபில ரொம்ப இன்ரஸ்டாமே..??" "ஹ்ம்ம்.. யெஸ்..!! அதெல்லாம் சொல்லிருக்கானா இவன்..??" கிஷோர் இளித்தான். "ம்ம்..!! காலேஜ் படிக்கிறப்போ.. லேடீஸ் ரெஸ்ட் ரூம் எப்படி இருக்கும்னு, போட்டோ எடுத்துட்டு வர்றதா ஃப்ரண்ட்ஸ்ட்ட பெட் கட்டி.. உள்ள ஏறி குதிச்சு.. அங்க எதிர்பாராத விதமா உங்க பிரின்ஸிபால் மேடத்தை மீட் பண்ணி.. கைல கேமராவோட கையும் களவுமா மாட்டிக்கிட்டு.. காலேஜ் மொத்தமும் உங்க மூஞ்சில காறி துப்புச்சாமே..??" மீரா சிரிப்புடனே சொல்ல, கிஷோரின் முகம் பட்டென இருண்டது. பக்கவாட்டில் திரும்பி அசோக்கை முறைத்தான். அவனோ பாக்யராஜ் மாதிரி ஒரு அசட்டு பாவனையை வெளிப்படுத்தினான். "எவ்வளவு கேவலப்பட்டாலும் பரவாலன்னு.. இன்னும் அந்த கேமராவை விடாம, கெட்டியா பிடிச்சிருக்கீங்க பாத்திங்களா..?? ரியல்லி யு ஆர் க்ரேட்..!!" என்ற மீரா, வேணுவிடம் திரும்பி, "நீங்க..??" என்றாள். "ஐ'ம் வேணு..!!" கிஷோருக்கு நேர்ந்ததை பார்த்து வேணுவிடம் அல்ரெடி ஒரு உதறல். "ஓ.. நீங்கதானா அது..?? வாவ்.. என்ன ஒரு மனவலிமை ஸார் உங்களுக்கு..?? அப்படி ஒரு சூழ்நிலைல கூட... ச்ச.. சான்ஸே இல்ல..!!" "நீ..நீங்க எதை பத்தி சொல்றீங்க..?? எ..எனக்கு புரியல..!!" "அதான் ஸார்.. நீங்க கோவா டூர் போயிருந்தப்போ.. லேடீஸ் மசாஜ் பார்லர்னு நாக்கை தொங்கப் போட்டுட்டு போய்.. கடைசில அவங்க எல்லாத்தையும் உருவிட்டு, உங்களை ஜட்டியோட விட்டுட்டு போயிட்டாங்களே.. அந்த இன்ட்ரஸ்டிங் இன்சிடண்ட் பத்தி சொல்லிட்டு இருக்குறேன்..!!" இப்போது வேணு திரும்பி அசோக்கை முறைத்தான். அவன் வேணுவிடம் பார்வையாலே 'ப்ளீஸ் மச்சி.. கொஞ்சம் பொறுத்துக்கோ..' என்பது மாதிரி கெஞ்சினான். "கோவால.. கொட்டுற பனில.. இடுப்புல வெறும் ஜட்டியோட.. அஞ்சு கிலோமீட்டர் நடந்தே, ஹோட்டல்க்கு திரும்ப வந்து சேர்ந்திங்களாமே..?? வரே வா.. என்ன ஒரு அஞ்சா நெஞ்சு ஸார் உங்களுக்கு.. அப்படியே புல்லரிக்குது எனக்கு..!!" அடுத்து என்ன நேரப் போகிறது என்று, சாலமனுக்கு இப்போது புரிந்து போனது. நைசாக அங்கிருந்து நழுவ முயன்றான். அதை கவனித்துவிட்ட மீரா, அவசரமாய் அவனை அழைத்தாள். "ஹலோ.. மிஸ்டர் சாலமன்.. எங்க ஓடுறீங்க.. வாங்க இங்க ..!!" "அ..அது எப்படி..?? எல்லார்ட்டயும் 'நீங்கதானா அது.. நீங்கதானா அது..'ன்னு கேட்டிங்க.. என்னை மட்டும் நான்தான் சாலமன்னு கரெக்டா கண்டுபுடிச்சுட்டிங்க..??" "ஹலோ.. மிச்சம் இருக்குறது நீங்க மட்டுந்தான..?? நீங்க இவ்வளவு பெரிய அதிபுத்திசாலியா இருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல..!!" "ஆ..ஆமால்ல.. ஸாரி..!!" "ஆனா.. நீங்க ஒரு பயங்கர தைரியசாலின்னு எனக்கு நல்லா தெரியும்.. அசோக் சொல்லிருக்கான்..!!" "ஓ..!! இஸ் இட்..?? அப்டிலாம் அவன் சொல்லிருக்க சான்ஸ் இல்லையே..??" சாலமன் இளித்தான். "சொன்னானே..?? நல்லா தண்ணியடிச்சுட்டு.. ஃபுல் மப்புல.. போலீஸ் ஜீப்பை நிறுத்தி லிஃப்ட் கேட்டு.. கான்ஸ்டபில் மடியிலயே படுத்து தூங்கி, போலீஸ் ஸ்டேஷன் வரை போய்.. நைட் ஃபுல்லா தங்கி இருந்து நல்லா வாங்கிட்டு வந்தீங்களாமே..??" சாலமன் இப்போது திரும்பி முறைப்பான் என்று அசோக் அல்ரெடி உணர்ந்திருந்தான். நடப்பதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதவன் போல, எங்கேயோ பார்வையை திருப்பிக் கொண்டான். "அதுலயும்.. போலீஸ் ஜீப்ல கான்ஸ்டபில் மடியிலயே படுத்து தூங்கிட்டு போனீங்க பாத்திங்களா.. அந்த பார்ட்தான் வெயிட்டு.. ச்ச.. என்னா கெத்து ஸார்..??" அசோக் மீராவிடம் நண்பர்களை பற்றி நல்லவிதமாக சொன்னதற்காக, நண்பர்களும் அன்று ஆபீஸ் திரும்பியபிறகு அவனை நல்லவிதமாய் கவனித்தனர். "அண்ணா.. கதவை தெறங்கண்ணா.. எங்களுக்கு பயமா இருக்குண்ணா.. ப்ளீஸ்ண்ணா..!!!" என அசிஸ்டன்ட் பையன்கள் இருவரும், கதவை 'படார் படார்' என்று தட்டி அலறிக்கொண்டிருக்க, உள்ளே அசோக்கிற்கு அந்த மதிய நேரத்தில் மண்டல பூஜை நடந்து கொண்டிருந்தது. அசோக் புரிந்து கொண்டது: இங்கே இருப்பதை அங்கே சொல்வது, இஞ்சூரியஸ் டூ ஹெல்த். நாள் - 21 அசோக்கும் மீராவும் ட்ரெயினில் சென்று கொண்டிருந்தார்கள். இருவரும் அடுத்தடுத்த சீட்டில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தார்கள். மீராவுடைய தோளுடன் தனது தோள் அவ்வப்போது உரசுவதையும், அதில் எழுகிற புதுவித சுகத்தினையும், ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தான் அசோக். அப்போதுதான் அவனுடைய கன்னத்தில் சப்பென்று அறை விழுந்தது. அறைந்தது வேறு யாருமல்ல.. மீராதான்..!! "என்ன மீரா..??" கன்னத்தை தடவிக் கொண்டே அசோக் கேட்டான். "பெரியவங்க நிக்கிறாங்கள்ல..?? எந்திரிச்சு எடம் குடு..!!" மீரா சீற்றமாக சொன்னாள். அப்புறம் கிண்டி வரும் வரைக்கும், அந்த தாத்தா மீராவினருகில் அமர்ந்து கடலை போட்டுக்கொண்டே வர, இவன் கம்பியை பற்றியவாறே கடுப்புடன் அந்த காட்சியை பார்த்துக் கொண்டு வந்தான். நாள் - 23 போத்தீஸில் ஷாப்பிங்கையும்.. சரவணபவனில் சாப்பாட்டையும் முடித்துகொண்டு.. அசோக்கும் மீராவும் சௌத் உஸ்மான் சாலையில் நடை போட்டுக் கொண்டிருந்தனர்..!! அவர்களுக்கு சற்று முன்பாக.. தலையில் ஒரு பெரிய கூடையுடன் நடந்து சென்று கொண்டிருந்தாள்.. கர்ப்பிணி பெண் ஒருத்தி..!! மீராவின் கண்களில் அந்தப் பெண் பட்டதுதான் தாமதம்.. அவசரமாக அவளிடம் ஓடிச் சென்றாள்..!! "அம்மா அம்மா.. இருங்க..!! நீங்க எங்க போகணும்..??" "அதோ.. அந்த பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் போகணும்மா..!!" "ஓ.. சரி.. கொஞ்சம் கூடையை எறக்குங்க.. பஸ் ஸ்டாண்ட் வரை என் பாய் பிரண்ட் தூக்கிட்டு வரட்டும்..!!" அவ்வளவுதான்..!! அப்புறம்.. "வியாபாரம்லாம் எப்படிமா போகுது..??" "என்னத்த.. பைசாக்கு பிரயோஜனம் இல்ல.." மீராவும் அந்த பெண்ணும் கதையடித்தவாறே முன்னால் நடக்க.. ஜீன்ஸ், டி-ஷர்ட், கேன்வாஸ் ஷூ, கூலிங் க்ளாஸ் சகிதத்துடன்.. தலையில் கடலைக் கூடையோடு அசோக் அவர்களை பின் தொடர்ந்தான்..!! அசோக் புரிந்து கொண்டது: அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். நாள் - 27 அசோக்கும் மீராவும் அந்த பார்க் பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள். மீரா அசோக்கின் செல்போனை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். அசோக் அவளுடைய அருகாமை தந்த போதையில் திளைத்துக் கொண்டிருந்தான். அவள் தோள் மீது கைபோடலாம் என்று எண்ணியவன், மெல்ல தன் வலது கையை உயர்த்தினான். அப்போதுதான் மீரா சரக்கென எழுந்தாள். இவனை கண்டுகொள்ளாமல் விறுவிறுவென எங்கோ நடந்தாள். அசோக்கும் 'எங்கே செல்கிறாள் இவள்..?' என்று எதுவும் புரியாமல் அவளை பின் தொடர்ந்தான். சற்றே மறைவாக இருந்த அந்த புதரை அடைந்ததும் மீரா நின்றாள். மறைவுக்கு அந்தப்புறமாக ஒரு குட்டிப்பெண்ணை இறுக்கி அணைத்த நிலையில் இருந்தான், வாலிபன் ஒருவன். "ஏய்.. இங்க என்ன பண்ணிட்டு இருக்குற.. யார் இந்த பையன்..??" மீரா அந்தப் பெண்ணை நன்றாக தெரிந்தவள் போல பேச ஆரம்பித்தாள். அவர்கள் இருவரும் இவளை அடையாளம் தெரியாமல் திகைத்தார்கள். "உன் அப்பாவுக்கு இதுலாம் தெரியுமா..?? அவருக்கு கால் பண்ணி சொல்லவா..??" என்றவாறு மீரா அசோக்குடைய செல்போனில் ஏதோ சில பட்டன்களை அழுத்த, இப்போது அந்தப்பையன் அவசரமாய் எழுந்தான். அங்கிருந்து ஓடிவிட முயன்றான். மீரா சுதாரித்துக் கொண்டு அந்தப் பையனை எட்டிப் பிடித்தாள். அவனுடைய கன்னத்திலேயே 'சப்.. சப்.. சப்..' என்று அறைய ஆரம்பித்தாள். நான்கைந்து அறை வாங்கியதுமே, அந்தப் பையன் மீராவின் பிடியில் இருந்து தப்பித்து, அந்த இடத்தை விட்டு விழுந்தடித்துக் கொண்டு ஓடினான். மீராவின் செய்கையை கண்டு அந்த குட்டிப்பெண் மட்டுமில்லாது, அசோக்குமே அதிர்ந்து போனான். "ஹலோ.. யார் நீங்க..?? உங்களை யார்னே எனக்கு தெரியாதே..??" அந்தப்பெண் மீராவிடம் சீற, "நான் யார்ன்றது இருக்கட்டும்.. விழுந்தடிச்சு ஓடுறானே.. அவன் யாருடி..??" மீரா கேட்டுக்கொண்டே அந்தப்பெண்ணின் பேகை எடுத்து நோண்டினாள். "அ..அவர்.. அவர் என் பாய் ஃப்ரண்ட்..!!" சொல்லி முடிப்பதற்கு முன்பே அவளுடைய கன்னத்தில் பளாரென்று அறை விழுந்தது. "பத்தாவது படிக்கிறப்போவே பாய் ஃப்ரண்ட் கேக்குதா உனக்கு..??" ரௌத்திரமாக மாறியிருந்த மீராவின் கையில் அந்த பெண்ணின் ஸ்கூல் ஐடி கார்ட். அந்த ஐடி கார்டில் இருந்த ஸ்கூல் போன் நம்பரையும், அந்தப் பெண்ணின் வீட்டு நம்பரையும் அசோக்கின் செல்போனில் ஸேவ் செய்து கொண்டாள் மீரா. "அக்கா.. ப்ளீஸ்க்கா.. என் ஐடி கார்ட் குடுத்திடுங்கக்கா..!!" அவள் கெஞ்ச ஆரம்பித்திருந்தாள். "இரு.. மொதல்ல உன் ஸ்கூலுக்கும், அப்பாவுக்கும் போன் பண்ணி சொல்லிட்டு.. அப்புறம் தர்றேன்..!!" "ஐயோ.. வேணாம்க்கா.. உங்க கால்ல வேணா விழுறேன்.. அப்பாக்கு தெரிஞ்சா என்னை கொன்னே போட்ருவாரு..!! இனிமே இந்த மாதிரி தப்பு பண்ண மாட்டேன்க்கா.. ப்ளீஸ்க்கா..!!" இப்போது அவளுடைய கண்களில் தாரை தாரையாய் கண்ணீர்..!! மீரா அவளையே சில வினாடிகள் வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம்.. "படிக்கிற வயசுல ஏண்டி இந்த வேலைலாம் பண்ணிட்டு அலையுற..?? ஒரு போன் பண்றேன் சொன்னதும்.. எப்படி அலறியடிச்சுட்டு ஓடுறான் பாரு.. அவன்லாம் எங்கடி கடைசி வரை உன்கூட வர போறான்..?? மொளைக்கிறதுக்கு முன்னாடியே, ஆம்பளை புடிக்கிற வேலையை விட்டுட்டு.. ஒழுங்கா படிச்சு முன்னேர்ற வழியைப் பாரு.. போ..!!" என்று வெறுப்பாக சொன்னவள், ஐடி கார்டை அவள் முகத்தில் விட்டெறிந்தாள். அசோக் புரிந்து கொண்டது: தான் மட்டுமல்ல.. மீராவிடம் அறைபட நிறைய பேர் பிறந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. நாள் - 33 "விடுடா.. பாத்துக்கலாம்.." "இல்ல மாமு.. ஒரு தம்மாத்துண்டு டாமாக்கோழி அவன்.. நம்மையே டபாய்ச்சுட்டு இருக்கான்..!! போனை ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டா.. எஸ்கேப் ஆயிடலாம்னு பாக்குறானா அவன்..?? த்தா.. அவனை கண்டுபுடிச்சு அவன் மெயினை ஸ்விட்ச் ஆப் பண்றனா இல்லையான்னு பாரு..!!" KFC உணவகத்தில் மீராவுக்கு தீனி வாங்கிப்போட வந்திருந்த அசோக், அருகில் கேட்ட பேச்சு சப்தத்திற்கு திரும்பி பார்த்தான். பார்த்ததுமே குலை நடுங்கிப் போனான். அவர்கள்.. அன்று டாட்டோ சுமோவில் பார்த்த அதே தாடி மீசைகள்.. கரடு முரடான காட்டுப் பயல்கள்.. கையில் கத்தியும், மனதில் கொலை வெறியுமாய் அலைபவர்கள்..!! "ரொம்ப பீல் பண்ணாதடா.. எங்க போயிறப் போறான்.. பாத்துக்கலாம் விடு.." "என்னால அப்படி இருக்க முடியல மாமு.. அப்டியே நெஞ்செல்லாம் திகுதிகுன்னு எரியுது எனக்கு..!! இப்போ சொல்லிக்கிறேன் கேட்டுக்கோ.. த்தா.. அவனை போட்டுட்டு.. அதுக்கப்புறந்தான் என் பொண்டாட்டியை.." அவன் வீராவேசமாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே, "டேய்ய்ய்.." என்று மற்றவர்கள் அவசரமாய் கத்தினர். உடனே அவன் அப்போது லோ வாய்ஸில்.. "ஊர்ல இருந்து கூட்டிட்டு வரணும்னு சொன்னேன் மாமு..!! ஒரு பொடிப்பயலை போடத் துப்பு இல்ல.. உனக்குலாம் எதுக்கு பொண்டாட்டின்னு.. கோச்சுக்கிட்டு அப்பன் வூட்டுக்கு போயிட்டா மாமு அவ..!!" என்றான். அப்புறந்தான் மற்றவர்கள் 'ஷ்ஷ்ஷபாஆஆ..' என்று நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். "ஹேய்.. மீரா.. வா கெளம்பலாம்.." அசோக் மீராவிடம் கிசுகிசுப்பாக சொன்னான். "இரு.. இன்னும் ஒரு பீஸ்தான்..!!" "ப்ச்.. வான்னு சொல்றேன்ல..??"வறுத்த சிக்கனை கவ்விய வாயுடனே, மீராவை வலுக்கட்டாயமாக எழுப்பி இழுத்து சென்றான் அசோக். வாசலுக்கு சென்றதும், அசோக்கின் கையை உதறினாள் மீரா. சிக்கனை அசை போட்டுக்கொண்டே கேட்டாள். "வாட்ஸ் ராங் வித் யூ..?? எதுக்கு இப்படி அவசரமா இழுத்துட்டு போற..??" "மீரா.. நா..நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு..!! அதோ.. அங்க உக்காந்திருக்கானுகள்ல.." "எங்க..??" "நாம உக்காந்திருந்ததுக்கு பின்னாடி டேபிள்.. தடித்தடியா நாலு பேரு..!!" "ம்ம்.. யார் அவங்க..??" "அன்னைக்கு உன்கிட்ட சொன்னேன்ல.. என்னை போட்டு தள்றதுக்காக.. டாட்டா சுமோல அலைஞ்சுட்டு இருக்கானுகனு.. அவனுகதான் அது..!!" "ஓ.. இவனுகதானா..??" "வா.. கெளம்பிடலாம்.. இங்க நிக்கிற ஒவ்வொரு செகண்டும் ஆபத்து..!!" அசோக் பதற்றமாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே, "ஹாய்.. மிஸ்டர் மஞ்ச சட்டை.." என்று அந்த ரவுடி ராஜாக்களை பார்த்து மீரா கத்தினாள். "ஏய்.. என்ன பண்ற நீ..??" அசோக் மிரண்டு போய் அலறியதை அவள் பொருட்படுத்தவில்லை. "ஹலோ உங்களதான் ஸார்.. வெளக்கெண்ணையை குடிச்ச மாதிரி உக்காந்திருக்கிங்களே.. நீங்கதான்..!! நீங்க தேடிட்டு இருக்குற ஆளு இவன்தான்.. வாங்க வாங்க.. ஓடிறப் போறான்.. வந்து புடிச்சுக்கோங்க.." அவள் அவ்வாறு கத்தியது தங்களைப் பார்த்துதான் என்பதை தாமதமாக உணர்ந்துகொண்டு.. அந்த நால்வரும் எதுவும் புரியாமல் குழப்பத்துடன் வாசலை திரும்பி பார்த்தபோது.. அசோக் ஸ்டெப்ஸ் எல்லாம் தவ்விக்குதித்து.. ட்ராஃபிக் எல்லாம் தாண்டிப்பறந்து.. தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று.. அரை கிலோமீட்டர் தூரத்திற்கு அந்தப்பக்கம் ஓடிக்கொண்டிருந்தான்..!! அசோக் புரிந்து கொண்டது: மீரா ஒரு சென்ஸ்லஸ் **சென்ஸார்ட் பை ஸ்க்ரூட்ரைவர்** நாள் - 37 அசோக்கும் மீராவும் கிழக்கு கடற்கரை சாலையில் அந்த மல்டிப்லக்ஸ் வாசலில் நின்றிருந்தனர். "தலைவர் படம் பாக்கலாம் மீரா.. சரியா..??" "சொல்றேன்ல.. தனுஷ் படத்துக்கு போலாம்..!!" "ப்ளீஸ் மீரா.. எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு.. இந்த ஒருதடவை எனக்காக.. ப்ளீஸ்..!!" அசோக் கெஞ்சலாகத்தான் சொன்னான். அதற்கே மீராவுக்கு சுருக்கென்று கோவம் வந்தது. "ஓ.. அப்போ.. நான் சொல்றத கேட்க மாட்டேல..?? உனக்கு உன் விருப்பம் மட்டுந்தான் முக்கியம்.. அடுத்தவங்க விருப்பத்தை பத்தி எந்த அக்கறையும் இல்ல.. அப்படித்தான..??" என்று சீறினாள். அப்புறம்.. இருவரும் தனுஷ் படத்தைத்தான்.. ஒருவருக்கொருவர் பேசாமல் முறைத்துக் கொண்டே.. முழுவதும் பார்த்து முடித்து வெளியே வந்தார்கள்..!!நாள் - 39 "என்ன சாப்பிடுற..??" மீரா மெனுகார்ட் புரட்டிக்கொண்டே கேட்டாள். "உனக்கு புடிச்சதை ஆர்டர் பண்ணு மீரா.. எனக்கு எதுனாலும் ஓகே..!!" இரண்டு நாட்கள் முன்பு தியேட்டரில் கிடைத்த அனுபவத்தால் அசோக் இப்போது உஷாராக சொன்னான். ஆனால்.. மீரா இன்று என்ன நினைத்தாளோ..?? மெனு கார்டை மூடி வைத்துவிட்டு, அசோக்கை எரித்து விடுவது போல பார்த்தாள். "எ..என்னாச்சு மீரா..??" அசோக் பதற்றமாக கேட்டான். "எதுனாலும் ஓகேன்னா.. அரை கிலோ புண்ணாக்கு கொண்டு வர சொல்றேன் சாப்பிடுறியா..?? ஏன்.. உனக்குன்னு விருப்பு, வெறுப்பு, இன்டிவிசுவாலிட்டி.. எதுவும் இல்லையா..?? எல்லாத்தையும் தொலைச்சிட்டியா..??" மீரா படபடவென பொரிய, அசோக்குக்கு தலை வலிப்பது மாதிரி இருந்தது. அசோக் புரிந்து கொண்டது: மீராவும் கழுதையும் ஒன்று. முன்னாடி போனால் கடிக்கிறாள். பின்னாடி போனால் உதைக்கிறாள்.நாள் - 42 "ஹையோ.. நீ தப்பா புரிஞ்சுக்கிட்ட மீரா.. நான் ஒன்னும் கடைசி வரை இந்த சுடர்மணி பனியன் ஜட்டியோடவே நின்னுட போறது இல்ல..!! சினி இண்டஸ்ட்ரில நொழைய ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.. இன்னும் கொஞ்ச நாள்ல.. ஐ'ம் கோன்ன பி எ ஃபில்ம் மேக்கர் யு நோ..??" "வாவ்.. ரியல்லி..??" "எஸ்..!! அல்ரெடி மூணு ஸ்க்ரிப்ட் பக்காவா ரெடி.. யாராரை நடிக்க வைக்கிறது.. எங்கங்க ஷூட் பண்றது.. எல்லாமே டிஸைட் பண்ணிட்டேன்..!!" "ம்ம்.. காசு போடுறதுக்குத்தான் எந்த லூசும் சிக்கலையாக்கும்..??" "ஹிஹி.. ஆமாம்..!!" "ஏன் அசோக்.. நீ டைரக்டர் ஆயிட்டா.. நீ சொன்ன பொண்ணைத்தான ஹீரோயினா போடுவாங்க..??" "பின்ன..?? எல்லாமே என் டிசிஷன்தான்.. என்னோட சுதந்திரத்துல யாராவது தலையிட்டா.. அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்..!!" "ஹேய்.. அப்போ ஏன் நீ என்னையே ஹீரோயினா போட கூடாது..?? எனக்கு சின்ன வயசுல இருந்தே சினிமால நடிக்கனும்னு ரொம்ப ஆசை..!!" "ஹ்ஹ.. ஹீரோயின்தான..?? போட்டுட்டா போச்சு..!! நீயும் அந்த கேரக்டருக்கு ரொம்ப பொருத்தமா இருப்பேன்னு எனக்கு தோணுது மீரா..!!" "ஓ.. இஸ் இட்..?? என்ன மாதிரி ஸ்டோரி..??" "ரொம்ப திகிலான பேய்க்கதை மீரா.. ஈவு இரக்கமே இல்லாத ஒரு பேய் பண்ற அட்டகாசம்தான் படம்..!!" "ஹை இன்ட்ரஸ்டிங்..!! எனக்கு என்ன ரோல்..?? ஐ மீன்.. ஹீரோயின் என்ன பண்றா.. அந்தப்பேயோட அட்டகாசத்தை அடக்குறாளா..??" "இல்ல.. அந்த பேய்தான் ஹீரோயினே..!!" அசோக் அப்பாவியாக சொல்லிவிட்டு இளிக்க, மீரா அவனை எரித்து விடுவது போல முறைத்தாள். அப்புறம் அவனுடைய உச்சந்தலையிலேயே ஓங்கி ஒரு குட்டு வைத்தாள். அசோக் 'ஆஆஆஆ' என்று தலையை தேய்த்தவாறே அலறினான். அப்புறம் மீராவுக்கு தான் எழுதி வைத்திருக்கிற ஸ்க்ரிப்ட் பற்றி விலாவாரியாக எடுத்துரைத்தான். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட மீரா, அசோக்கின் திறமை கண்டு நிஜமாகவே அதிசயித்துப் போனாள். "வாவ்..!! இம்ப்ரசிவ்..!! நல்ல டேலன்ட் உனக்கு..!!" என்று மனதார பாராட்டினாள். அசோக் குளிர்ந்து போனான். "தேங்க்ஸ் மீரா..!! ஆக்சுவலி எங்க வீட்ல ஆளாளுக்கு ஒரு டேலன்ட் இருக்கு தெரியுமா.. எனக்கு மூவி மேக்கிங்ல..!! அதுசரி.. உனக்கு இந்த மாதிரி ஏதாவது டேலன்ட் இருக்கா..??" "ஏன் இல்லாம..?? நான் கவிதை சூப்பரா எழுதுவேன்..!!" "ஓ.. இஸ் இட்..?? நீ எழுதுனதுல ஏதாவது கவிதை சொல்லு பார்ப்போம்..??" "ஏற்கனவே எழுதுனது எதுக்கு.. உனக்காகவே ஸ்பெஷலா ஒன்னு எழுதி தர்றேன்..!!" கூலாக சொன்ன மீரா, பேக்கில் இருந்து பேப்பரும் பேனாவும் எடுத்தாள். இமைகளை மூடி, நெற்றியை பேனாவால் தேய்த்தவாறே, ஏதோ யோசித்தாள். அசோக் அவளையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நிமிடம் கூட ஆயிருக்காது. மீரா சரசரவென பேப்பரில் ஏதோ கிறுக்கினாள். கிறுக்கி முடித்து அசோக்கிடம் சரக்கென நீட்டினாள். அசோக் அதை அவசரமாக வாங்கி, ஆசையாக பார்த்தான். அகப்பொருளுல் ஒன்றினை.. முதற்பொருள் செய்த மூடா..!! உரிப்பொருளுல் ஒன்றானபின்.. இறுதிப்பொருள் செய்த இராட்சசா..!! உந்துதல் தணிக்கவே.. முகர்ந்தாயோ என் புணர்புழை..?? வெந்து எரியுதடா.. வெட்டி எறிந்திடவோ..?? நரமாமிசத்துக்குட்புறம் நரம்புண்டு.. நரம்புக்குள்ளோடும் உதிரமுண்டு.. உதிரத்துக்குள்ளாடும் உணர்வுமுண்டு.. அறிவாயோ நீ அற்பப்பதரே..?? புறப்பொருள் போதுமோடா.. போகப்பொருள் கசந்தேனோடா.. கருப்பொருள் ஒன்றிருக்குதடா.. காவுக்காய் காத்திருக்குதடா..!! கவிதையை படித்துமுடித்த அசோக்கிற்கு, கடுகளவு கூட அதன் பொருள் புரியவில்லை. 'காதல் ரசம் சொட்ட சொட்ட ஏதோ எழுதி நீட்ட போகிறாள் என்று எதிர்பார்த்தால்.. கன்னாபின்னாவென்று திட்டியிருக்கிறாளே..?? ஆளவந்தானில் கமலஹாசன் 'சிற்பமான பெண்டிரென்று' என ஆரம்பிப்பாரே.. அந்த எஃபக்டில் இருக்கிறது..??' அர்த்தம் புரியாமல், அசோக் திருதிருவென விழிக்க.. "என்ன.. ஒண்ணுமே சொல்ல மாட்டேன்ற..?? நல்லாருக்கா..??" மீரா ஆர்வமாக கேட்டாள். "ஹ்ம்ம்.. ந..நல்லா.. நல்லாருக்கு மீரா.. சூ..சூப்பர்.. பெண்டாஸ்டிக்..!!" "தேங்க்ஸ்..!!" "ஆனா.. கவிதைல எனக்கு ஒரு சின்ன சந்தேகம் மீரா..!!" "என்ன..??" "இல்ல.. நான் இந்த ஆவக்காய், கோவக்காய்லாம் கேள்விப் பட்ருக்கேன்.. அதென்ன காவக்காய்..??" அசோக் கேட்டுவிட்டு அப்பாவியாக இளித்தான். மீரா இப்போது முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு, அசோக்கையே கண்களை இடுக்கி முறைத்தாள். ஓரிரு வினாடிகள்..!! அப்புறம் அவனுடைய கன்னத்திலே 'சப்.. சப்.. சப்..' என்று அறைய ஆரம்பித்தாள். "ஹேய்.. மீரா.. ஐயோ... என்ன.. என்னாச்சு..??" "அர்த்தமே புரியல.. நல்லாருக்குன்னு பீலா விடுறியா..?? பிச்சுப்புடுவேன் பிச்சு..!!" அன்று மாலை.. அசோக் அந்த கவிதையை தன் நண்பர்களிடம் காட்டி.. பெருமைப் பட்டுக் கொண்டான்..!! "ச்சே.. இந்த மீரா என்னமா கவிதை எழுதுறா மச்சி.. சான்சே இல்லடா.. அவளுக்குள்ள இப்படி ஒரு திறமை இருக்குறது.. இத்தனை நாளா நமக்கு தெரியாம போச்சு பாரேன்..??" "ஹ்ம்ம்.. இவ்வளவு பாராட்டுறியே..?? எங்க.. இந்த கவிதைக்கு கொஞ்சம் அர்த்தம் சொல்லு..??" கிஷோர் கடுப்புடன் கேட்க.. அசோக் மீண்டும் வசமாக சிக்கிக்கொண்டான்..!! 'ஹிஹிஹி..' என்று அசட்டுத்தனமாய் இளித்தான்.. 'கவிதை சொன்னா அனுபவிக்கனும்.. அர்த்தம்லாம் கேட்க கூடாது..' என்று சப்பைக்கட்டு கட்ட முயன்றான்..!! ஏற்கனவே அவன் ஒருமாதத்தில் இருபது முறைக்குமேல்.. காதல் உல்லாசம் படத்தை திருட்டுத்தனமாக பார்த்திருப்பதை அறிந்திருந்த நண்பர்கள்.. அன்று கற்பனையில் துப்பியது போல.. இன்று நிஜமாகவே துப்பினர்..!! "த்தூ.. த்தூ.. த்தூ..!!!" "இப்போ எங்கடா போச்சு உன் ஒரிஜினாலிட்டி.. என் வெளக்கெண்ணை..??" வேணுதான் ரொம்ப வேகமாக இருந்தான். அசோக் புரிந்து கொண்டது: மீரா எழுதிய கவிதையை படிக்க தமிழ் டூ தமிழ் டிக்சனரி தேவை. நாள் - 44 "Sexy lady on the floor.. keep you coming back for more..!!" தனது பெட்ரூமில் இருந்து செல்போன் அலற, சாப்பிட்டுக்கொண்டு இருந்த அசோக் பதறியடித்துக்கொண்டு, எழுந்து உள்ளே ஓடினான். அப்பா கையில் வைத்திருந்த புத்தகம் பறந்தது. அம்மா அடுக்கி வைத்த துணிமணிகள் சிதறின. அவன் தனது செல்போனில் மீராவுக்கென ஸ்பெஷலாக செட் செய்து வைத்திருக்கிற ரிங்டோன்தான் அது.. அவள் எப்போதாவதுதான் அசோக்கிற்கு கால் செய்வாள்.. அப்படி எப்போதாவது கால் செய்கிற போதெல்லாம்.. அசோக் இப்படித்தான் மாறி விடுவான்..!! பாரதிதான் அசோக்கின் முதுகைப் பார்த்து எரிச்சலாக கத்தினாள்..!! "டேய்.. பொறுமையா போயேண்டா.. அப்படி என்ன அவசரம்..??" "ஹையோ.. அவன் மெண்டல் ஆயிட்டான் மம்மி..!! அவன் ரூம்ல ஒரு கொரங்கு பொம்மை வச்சிருக்கான்.. அது மூக்கை எனக்கு பாக்கவே சகிக்கல.. இவன் என்னடான்னா.. எந்த நேரம் பாத்தாலும் அதுக்கு மொச்சு மொச்சுன்னு முத்தம் குடுத்துட்டே உக்காந்திருக்கான்..!! உன் புள்ளைக்கு என்னவோ ஆயிடுச்சு..!!" சங்கீதா காதில் இருந்த ஹெட்போனை கழட்டிவிட்டு அம்மாவுக்கு சொன்னாள். ஆனால்.. இங்க நடப்பதை எல்லாம் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல்.. அசோக் தனது பெட்ரூமில்.. கால் பிக்கப் செய்து.. "ஹலோ.. மீரா..!!" என்று இளிப்பாக சொன்னான், குருமா ஒட்டியிருந்த விரலை வாய்க்குள் வைத்து சுவைத்துக்கொண்டே..!! நாள் - 47 : மீரா வரவில்லை. அசோக்கை செல்போனிலும் அழைக்கவில்லை. நாள் - 48 : மீரா வரவில்லை. அசோக்கை செல்போனிலும் அழைக்கவில்லை. நாள் - 49 : மீரா வரவில்லை. அசோக்கை செல்போனிலும் அழைக்கவில்லை. அசோக் புரிந்து கொண்டது: ஸாரி.. சத்தியமாக அவனுக்கு எதுவும் புரியவில்லை..!!வயலினும், புல்லாங்குழலும் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்து தேனிசையை கசிய.. கூடவே 'திம்.. திம்.. திம்..' என்று ட்ரம்ஸின் மெலிதான தாளமும் சேர்ந்து கொள்ள.. ஒரு ஆணுடைய மெலிதான, ஹஸ்கியான, ஏக்கமான குரலில் ஆரம்பமானது அந்தப் பாடல்..!! 'என்னோடு வந்திடு எனதுயிரே.. என் வாழ்வை நிரப்பிடு எனதுறவே..!!' வீட்டு சுவரேறி வெளியே குதித்த அவள்.. தடுமாறி கீழே விழுந்தாள்..!! உடனே எழுந்து.. முழங்கையில் ஏற்பட்ட சிராய்ப்பை தடவிக்கொண்டே.. உற்சாகமாக ஓடி வந்தாள்..!! அவன் கிக்கரை உதைத்தான்.. ஆக்சிலரேட்டரை முறுக்கினான்..!! அவள் ஓடி வந்து பின் சீட்டில் அமர்ந்து கொண்டு.. 'போ.. போ..' என்று அவனுடைய தோளை தட்டி அவசரப் படுத்தினாள்.. பைக் பறந்தது..!! மொட்டைமாடியில் நின்று.. யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டிருந்த அவளுடைய அரசியல்வாதி அப்பா.. எதேச்சையாக இந்த காட்சியை காண நேரந்ததும்.. உடனடியாய் அவரிடம் ஒரு பதற்றம்..!! ஆத்திரம் அப்பிய முகத்துடன் படிக்கட்டில் தடதடவென இறங்கினார்.. தன்னுடைய அடியாட்களை அழைத்து.. கையை அப்படியும் இப்படியுமாய் ஆட்டி ஆட்டி.. கோபம் கொப்பளிக்க சில உத்தரவுகள் பிறப்பித்தார்..!! பிறகு அவர்களுடன் அந்த டாடா சுமோவில் வேகமாய் கிளம்பினார்..!! குறுக்கும் மறுக்குமாய் வாகனங்கள் வர.. அதற்குள் லாவகமாக புகுந்து ஓடியது பைக்.. அந்த பைக்கை விடாமல் துரத்தியது டாடா சுமோ..!! அவனுடைய இடுப்பை அவள் இறுக்கி பிடித்துக்கொள்ள.. சர்ரென சீறிப்பறந்த பைக் சென்றதுமே.. படக்கென விழுந்தது சிவப்பு சிக்னல்..!! 'ச்சே..' என்று வெறுப்பாக தொடையை தட்டிக் கொண்டார் அரசியல்வாதி அப்பா..!! இருபுறமும் பச்சை பசேலென அடர்த்தியான மரங்களுடன்.. நேர்வகிட்டு கூந்தல் போல நீளமாய் கிடந்த.. அந்த அழகான ஆளரவமற்ற தார்ச்சாலையில்.. அவன் பைக்கை கவனமாக செலுத்திக் கொண்டிருக்க.. இவள் கைகள் இரண்டையும் அகலமாய் விரித்து.. அப்படியே ஆனந்தத்தில் திளைத்தாள்..!! 'என்னோடு வந்திடு எனதுயிரே.. என் வாழ்வை நிரப்பிடு எனதுறவே..!!' குண்டும் குழியுமான கிராமத்து சாலையில் சென்றது பைக்..!! தலையில் தண்ணீர் குடம் சுமந்து.. சாலையோரமாக சென்று கொண்டிருந்தாள் கர்ப்பிணி பெண் ஒருத்தி.. அவளை கடக்கையில் பைக்கின் பின் சீட்டில் இருந்தவள் 'ஹேய்..' என்று கை நீட்டி கத்தினாள்..!! அந்த கர்ப்பிணி பெண்.. குடத்தை சாய்த்து தண்ணீரை சரிக்க.. இவர்கள் இருவரும் கைகளை ஒன்று சேர்த்து.. தண்ணீரை தாங்கி சேகரித்து குடித்தனர்..!! கையில் ஒட்டியிருந்த நீர்த்திவலைகளை அவன் அவளுடைய முகத்தில் உதற.. அவள் போலிக் கோபத்துடன் அவனை அழகாக முறைத்தாள்.. முஷ்டியை மடக்கி அவனுடைய முகத்தில் குத்தினாள்..!! அவன் விலகிக்கொள்ள.. அவளுடைய கை பைக் கண்ணாடியை குத்தியது.. அவள் வலியில் முகத்தை சுருக்க.. இவன் பதறிப் போனான்..!! அவளுடைய கையை மென்மையாக பற்றி.. முகத்தை அவளுடைய கைக்கருகே எடுத்து சென்று.. உதடுகள் குவித்து இதமாக காற்று ஊதினான்.. மெலிதாக முத்தமிட்டான்.. அவனுடைய கனிவை கண்டு.. அவள் காதலும் பெருமிதமும் பொங்குகிற மாதிரி.. அவனே அறியாத வகையில்.. அவனை ஒரு பார்வை பார்த்தாள்..!! கர்ப்பிணி பெண் டாட்டா காட்ட.. மீண்டும் சர்ரென சீறியது பைக்..!! மஞ்சள் நிற வானுடன் மாலை நேரம்..!! மிதமான வேகத்தில் பைக் சென்றுகொண்டிருக்க.. அவனுடைய ஹெல்மட்டை தனது தலையில் கவிழ்த்திருந்த அவள்.. இமைகளை மூடி.. அவனுடைய இடுப்பை இறுக்கமாக கட்டிக்கொண்டு.. அவனுடைய முதுகில் முகம் சாய்த்து.. குழந்தையொன்று நிம்மதியாக உறங்குவது போல படுத்திருந்தாள்..!! அவன் தலையை மெல்ல சாய்த்து.. தனது இடுப்பை வளைத்திருந்த அவளுடைய கைகளை.. பெருமை பொங்கிட பார்த்தான்.. புன்னகைத்தான்..!! 'என்னோடு வந்திடு எனதுயிரே.. என் வாழ்வை நிரப்பிடு எனதுறவே..!!' டாட்டா சுமோவின் கதவுகள் திறக்கப்பட்டு சாலையோரமாய் நின்றிருக்க.. தன் மகளுடைய புகைப்படத்தை காட்டி.. அந்த கர்ப்பிணி பெண்ணிடம் ஏதோ கேள்வி கேட்டார் அரசியல்வாதி அப்பா..!! அவள் 'எனக்கு தெரியாது.. நான் பாக்கலை..' என்பது போல தலையை அசைத்தாள்.. எரிச்சலான அப்பா கடுப்புடன் காரில் கிளம்ப.. கர்ப்பிணி பெண் இப்போது கண் சிமிட்டி குறும்பாக சிரித்தாள்..!! 'ச்ச்சோ'வென்று மழை கொட்டுகிற அந்தி சாயும் நேரம்..!! சாலையோர டீக்கடையின் தகரம் வேயப்பட்ட கூரைக்கு கீழே.. அவனுடைய ஜெர்கினுக்குள் அவளும் அவனும்.. நெருக்கமாக..!! ஆளுக்கொரு கையில் டீ க்ளாஸ் தாங்கி.. கூதலுக்கு நடுங்கியவாறே.. உதடுகள் படபடக்க தேனீர் உறிஞ்சினர்..!! பிறகு அவர்கள் இருவரும் அவுட் ஆஃப் போகஸில் தெரிய.. பளிச்சென்று பார்வைக்கு வந்தது.. மழையில் நனைந்து கொண்டிருந்த அந்த சிவப்பு நிற பைக்..!! மழை நீர் நனைத்த மண் சேறாகி போயிருக்க.. அந்த சேறுக்குள் சிக்கி, மீள முடியாமல்.. சக்கரம் சுழற்ற திணறியது டாடா சுமோ..!! 'தள்ளுங்கடா.. தள்ளுங்கடா..' என்பது போல.. தனது அடியாட்களின் முதுகில்.. ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டிருந்தார் அந்த அரசியல்வாதி அப்பா..!! 'என்னோடு வந்திடு எனதுயிரே.. என் வாழ்வை நிரப்பிடு எனதுறவே..!!' சடசடவென மழை பெய்து கொண்டிருந்த அந்த சாலையில்.. விர்ரென பறந்தது அந்த சிவப்பு பைக்..!! பின் சீட்டில் அமர்ந்திருந்த அவள்.. தனது துப்பட்டாவை விரித்து பிடித்திருக்க.. அது காற்றில் தடதடத்தபடி.. பைக்குடன் சேர்ந்து பறந்தது..!! பைக் தூரமாய் செல்ல செல்ல.. மெல்ல மெல்ல பார்வைக்கு மங்கியது..!! திரையில் எழுத்துக்கள் பளிச்சிட்டன..!! "காதலின் முடிவிலா பயணம்.. கவாஸாகியுடன்..!!!!" பட்டென திரை இருண்டது. உடனே மோகன்ராஜ் தனது மணிக்கட்டை திருப்பி, நேரம் பார்த்தார். மெலிதாக புருவம் சுருக்கியவர், பிறகு தலையை நிமிர்த்தி சொன்னார். "Exactly thirty two seconds..!!" கிஷோரும், வேணுவும், சாலமனும்.. ரிசல்ட் தெரிந்து கொள்வதற்காக.. மோகன் ராஜின் முகத்தையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர்..!! அசோக்கோ எதைப்பற்றியும் அக்கறை இல்லாதவனாய்.. எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தான்..!! சில வினாடிகள் எந்த உணர்ச்சியும் காட்டாமல்.. முகத்தை இறுக்கமாக வைத்திருந்த மோகன் ராஜ்.. பிறகு உதட்டில் ஒரு புன்னகை அரும்ப சொன்னார்..!! "Great job guys.. Fantastic work.. I am thoroughly impressed..!!! Bravo.. Bravo..!!!!" மனதார பாராட்டியவர், 'பட்.. பட்.. பட்..' என க்ளாப் செய்தார். அப்புறந்தான் கிஷோருக்கும், வேணுவுக்கும், சாலமனுக்கும் மூச்சே வந்தது. முகம் பட்டென மலர்ந்து போக, சந்தோஷமாக சிரித்தார்கள். மோகன் ராஜ் கட்டை விரலை உயர்த்திக்காட்ட, இவர்களும் அதையே ஒருவித பெருமிதத்துடன் செய்தார்கள். ஆனால்.. அசோக் மட்டும் அந்த சந்தோஷத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லாதவனாய், உர்ரென்று அமர்ந்திருந்தான். அதை கவனித்துவிட்ட மோகன் ராஜ், இப்போது குழப்பத்தில் சுருங்கிப்போன முகத்துடன் கிஷோரை கேட்டார். "என்னடா ஆச்சு அவனுக்கு..??" "ம்க்கும்.. அவனையே கேளுங்க..!!" தன்னுடைய தாயின் சாகசம்.. அம்மாவின் அப்பாவையும், மீராவின் அப்பாவையும் ஒன்றிணைத்து ஒரு காதல் வில்லன்.. நிஜத்தில் தன்னை துரத்துகிற டாடா சுமோ.. அந்த சிக்னல்.. மீராவுடன் முதல் நாள் பைக்கில் சுற்றிய அனுபவம்.. அன்று சாலையோர கடையில் அருந்திய டீ.. மழைக்காக ஒதுங்கிய தகர கூரை.. கடலை கூடையை தலையில் சுமத்திய கர்ப்பிணி.. எல்லாவற்றிற்கும் மேலாக மீராவின் மீது அவனுக்கிருந்த ஆழமான காதல்.. என.. கடந்த சில நாட்களாக தனக்கு நேர்ந்த அனுபவங்களை கொண்டே.. அந்த விளம்பர படத்தை வடிவமைத்திருந்தான் அசோக்..!! அவனுக்கும் அந்த விளம்பர படத்தில் மிகுந்த திருப்திதான்.. ஆனால்.. நான்கு நாட்களாக மீராவை காணாத ஏக்கம் அவனிடம் மிகுந்து போயிருக்க.. எதையோ பறிகொடுத்தவன் போல சந்தோஷம் செத்துப்போய் அமர்ந்திருந்தான்..!! மோகன் ராஜ் இப்போது சேரில் இருந்து எழுந்தார். நடந்து அசோக்கை நெருங்கினார். அவனுடைய தோளில் கைபோட்டவர், மென்மையான குரலில் கேட்டார். "என்னடா ஆச்சு..??" "ஒ..ஒன்னுல்ல..!!" "அப்புறம் ஏன் ஒருமாதிரி இருக்குற..?? இப்படி ஒரு பிரம்மாதமான ஃபில்ம் எடுத்துட்டு.. கம்முனு உக்காந்திருக்குற..?? கமான்.. சியர் அப் மேன்..!! இத்தனை நாளா.. இதுதாண்டா உன்கிட்ட மிஸ்ஸிங்.. உன் ஃபில்ம் என்னதான் க்ரியேட்டிவா இருந்தாலும்.. ஒரு டெப்த் ஃபீல் இல்லாம இருந்தது.. அந்த ஃபீல்க்காகத்தான இத்தனை நாளா உன்கூட சண்டை போட்டுட்டு இருந்தேன்..?? இப்போ பாரு.. எங்க இருந்து வந்தது.. இந்த மாதிரி நைஸ் ஃபீலோட ஒரு ஆட் ஃபில்ம்..?? இதைத்தான்டா இத்தனை நாளா உன்கிட்ட கேட்டுட்டு இருந்தேன்..!! கமான்.. சியர் அப்..!!" "ம்ம்.." அசோக் இப்போது மெலிதாக புன்னகைக்க முயன்றான். "நீ ச்சூஸ் பண்ணின பேக்ரவுண்ட் ம்யூசிக்.. லோகேஷன்ஸ்.. ஆக்டர்ஸ்.. அவங்க பெர்ஃபாமன்ஸ்.. அந்த பையனுக்கும், பொண்ணுக்கும் நடுவுல அந்த லவ்வபிள் கெமிஸ்ட்ரி.. இட்ஸ் ஜஸ்ட் ப்ரில்லியன்ட்..!! இவ்வளவும் நான் அலாட் பண்ணின அந்த சின்ன பட்ஜட்குள்ளன்னு நெனைக்கிறப்போ.. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.. இட்ஸ் ஆவ்ஸம்..!! உனக்கு நல்ல ப்யூச்சர் இருக்குடா.. இப்போ எனக்கு அதுல எந்த டவுட்டும் இல்ல..!! ஹேய்.. மொத மொதல்ல வாய்விட்டு பாராட்டுறேன்.. கொஞ்சம் சிரியேன்டா.. கமான்.. சிரி..!!" அசோக் போலியாக ஒரு புன்சிரிப்பை உதிர்க்க, மோகன் ராஜ் இப்போது திருப்தியானார். 'குட்' என்றார் புன்னகையுடன். அவர்களிடம் வெளிப்படுத்தியதை விட அதிகமான திருப்தியிலேயே மோகன்ராஜ் இருந்தார். அசோக்குடைய இந்த உழைப்பு, அவருக்கு வாங்கித் தரப்போகிற பாராட்டையும், பணத்தையும் எண்ணி, மனதுக்குள் ஆனந்தப்பட்டுக் கொண்டார். மனதுக்குள் இருந்த அவரது ஆனந்தம், வேறு வகையில் வெளியே வந்தது. மேலும் சில வேலைகளை அசோக்கின் கம்பனியிடம் ஒப்படைக்க சந்தோஷமாக ஒப்புக்கொண்டார். இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களில், எந்த தயக்கமும் இல்லாமல் கையொப்பமிட்டார். அசோக்கின் நண்பர்கள் அனைவரும் ஆனந்தத்தில் பூரித்து போயினர். அதுவும் அவர்கள் கிளம்பும்போது.. "ஹேய்.. அப்புறம்.. நைட் ஒரு ஏழு மணி போல க்ரீன் பார்க் ஹோட்டல் வந்துடுங்க.. இன்னைக்கு என்னோட பார்ட்டி.. உங்களுக்கு மட்டும் ஸ்பெஷலா..!! சரியா..??" என்று மோகன்ராஜ் சொன்னபோது அந்த ஆனந்தம் இரட்டிப்பானது. அன்று ஆறரை மணிக்கெல்லாம் அசோக்கின் நண்பர்கள் ஆபீஸில் இருந்து ஷோக்காக கிளம்பினார்கள். குடித்து கும்மாளமிடப் போவதை எண்ணி, அனைவரும் குதூகலத்தில் இருந்தார்கள். அவரவர்கள் காதலியிடம் அல்ரெடி அனுமதி பெற்று இருந்தனர். அசோக்கால்தான் அவர்களுடைய ஆனந்தத்தில் பங்கு கொள்ள முடியவில்லை. அனுமதி கேட்பதற்கு அவனுடைய காதலி தற்சமயம் தொடர்பில் இல்லையே..!!"டாஸ்மாக்ல போட்டீ வறுவலோட ட்ரீட்னு சொன்னாலே.. டாக் மாதிரி நாக்கு தொங்கப்போட்டு வருவியே மச்சி..?? ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல ஃபாரீன் சரக்கோட பார்ட்டிடா.. அந்த மீரா நெனைப்பை கொஞ்ச நேரம் ஓரமா ஒதுக்கி வச்சுட்டு.. கெளம்பி வா..!! அப்புறம்.. மிஸ் பண்ணிட்டோமேனு நாளைப்பின்ன ரொம்ப ஃபீல் பண்ணுவ.. கமான்.. கெளம்பு..!!" சாலமன் வற்புறுத்த, அசோக்கிடம் எந்த அசைவும் இல்லை. "இல்லடா.. எனக்கு மூட் இல்ல.. நீங்க போயிட்டு வாங்க..!!" "ப்ச்.. அப்படிலாம் சொல்லப்படாது..!! சரி.. வேணும்னா இப்படி பண்ணுவோமா..??" "எப்படி..??" "நாங்கள்லாம் சந்தோஷத்தை கொண்டாட குடிக்கிறோம்.. நீ வேணா உன் சோகத்தை மறக்க குடி..!! எப்பூடி..???" சாலமன் கேட்டுவிட்டு இளிக்க, அசோக் அவனை ஏறிட்டு முறைத்தான். "நானே வெறுப்புல இருக்கேன்.. செருப்படி வாங்காத.. போயிடு..!!" அப்புறம் யாரும் அசோக்கை வற்புறுத்தவில்லை. அவனுடைய மனநிலையை புரிந்து கொண்டவர்கள், அதற்கு மேலும் அவனை வற்புறுத்துவதில் அர்த்தமில்லை என்று முடிவு செய்தார்கள். அவனை மட்டும் தனியே ஆபீசில் விட்டுவிட்டு, வேணுவின் காரில் பார்ட்டிக்கு கிளம்பினர். அசோக்குக்கு அவர்களுடன் செல்ல ஆசைதான். ஆனால் ஏதோ ஒன்று அவனை தடுத்தது. தன்னுடைய மனதில் இருக்கிற சோகம், நண்பர்களின் மகிழ்ச்சியான மாலைப்பொழுதை பாதித்துவிட கூடாது என்கிற எண்ணமாக இருக்கலாம். அனைவரும் சென்றபிறகு.. ஆபீஸை உள்பக்கமாய் இழுத்து பூட்டிவிட்டு.. எடிட்டிங் ரூமில் இருக்கிற பெரிய திரையில்.. காதல் உல்லாசம் படத்தை ஓடவிட்டு.. அக்கடா என அமர்ந்துவிட்டான் அசோக்..!! கொஞ்ச நேரத்திலேயே உருகிப்போய்.. படத்துடன் அப்படியே ஒன்றிவிட்டான்..!! அரை மணி நேரம் கூட ஆகியிருக்காது.. அவனுடைய செல்போன் திடீரென ஒலித்தது..!! ரிங்டோன் கேட்டதுமே.. அவனுடைய இதயம் குபுக்கென்று ஒரு உற்சாக ரத்தத்தை, உடலெங்கும் சரக்கென பம்ப் செய்தது.. தேகமெங்கும் ஜிவ்வென்று ஒரு சிலிர்ப்பு அவனுக்கு..!! மீரா..!!!! பாய்ந்து சென்று செல்போனை கைப்பற்றினான். அவசரமாய் கால் பிக்கப் செய்து காதில் வைத்தவன், அடுத்த முனையில் இருந்து குரல் ஒலிப்பதற்கு கூட அவகாசம் தராமல்.. "ஹலோ.. மீரா... எ..எப்படிமா இருக்குற.. எங்க போயிட்ட நீ.. ஒரு ஃபோன் கூட இல்ல.. ஏன்மா இப்படி பண்ற..?? நா..நாலு நாளா நீ இல்லாம நான் எப்படி தவிச்சு போயிட்டேன் தெரியுமா..?? ப்ளீஸ் மீரா.. இனிமேலாம் இப்படி.." அசோக் அவ்வாறு தவிப்பாக சொல்லிக் கொண்டிருக்கையிலேயே.. "எங்க இருக்குற இப்போ..??" மீரா இறுக்கமான குரலில் கேட்டாள். "ஆ..ஆபீஸ்லதான்.. ஏன் கேக்குற..??" "நான் இங்க ஆதித்யா ஹோட்டல் முன்னாடி நின்னுட்டு இருக்குறேன்.. பைக் எடுத்துட்டு கொஞ்சம் சீக்கிரம் வா..!!' "அ..அது இருக்கட்டும்.. நாலு நாளா எங்க போயிட்ட நீ..??" "ப்ச்.. அதான் இன்னும் கொஞ்ச நேரத்துல நேர்லயே பாக்க போறோம்ல..?? இங்க வந்து கேளு.. வா..!!" சொல்லிவிட்டு மீரா படக்கென காலை கட் செய்தாள். அவளுக்கு மூட் சரியில்லை என்று அசோக் உடனடியாக புரிந்து கொண்டான். ஆனால் அதற்காகவெல்லாம் அவன் கவலைப்படவில்லை. மீரா திரும்ப வந்ததே அவனுக்கு அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்திருந்தது. நான்கு நாட்களாக அவனிடம் காணாமல் போயிருந்த உற்சாகம், இப்போது உச்ச பட்சமாக அவனை தொற்றிக் கொண்டது. ஆபீஸை அடைத்துவிட்டு அவசரமாய் பைக்கில் கிளம்பினான். அடுத்த ஐந்து நிமிடங்களுக்கெல்லாம் மீரா முன்பாக ப்ரேக் அடித்து நின்றான். "ஹ்ம்ம்.. இப்போவாவது சொல்லு.. எங்க போயிட்ட.. ஒரு ந்யூசும் சொல்லாம..??" அசோக் ஆர்வமாக கேட்க, "சிக்னல் போடப் போறான்.. வண்டியை எடு..!!" மீரா அலட்சியமாக சொன்னாள். அசோக் சலிப்பாக தலையை அசைத்துக் கொண்டான். 'இவ ஏன் இப்படி இருக்குறா..??' என்று எப்போதும் அவன் மனதுக்குள் கேட்டுக்கொள்கிற கேள்வியை, இப்போதும் கேட்டுக் கொண்டான். மீரா பின் சீட்டில் அமர்ந்ததும், கியர் மாற்றி வண்டியை முடுக்கினான். "சிக்னல் தாண்டி.. ஸ்ட்ரெயிட்டா.. இல்ல லெஃப்.." அசோக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, "ரைட்ல போ..!!" மீராவிடம் இருந்து படக்கென பதில் வந்தது. வடபழனி சிக்னலில் வலது புறமாக திரும்பினான் அசோக். மேலும் ஐந்து நிமிடங்கள்..!! மீராவின் மூட் அறிந்து.. எதுவும் பேசாமல் அமைதியாகவே வண்டியை செலுத்தியவன்.. அசோக் பில்லரை கடந்தபோது.. மனதை அரித்த அந்த கேள்வியை.. அதற்கு மேலும் அடக்க முடியாமல்.. அவளிடமே கேட்டுவிட்டான்..!!எங்க போறோம் இப்போ..??" "ஏதாவது பாருக்கு போ..!!" மீரா கூலாக சொல்ல, அசோக் குப்பென்று ஷாக் ஆனான். சர்ர்ரக்கென ப்ரேக் அடித்து பைக்கை நிறுத்தினான். "என்னது..????" என்று முகம் அஷ்டகோணலாகி போனவனாய் அவளிடம் திரும்பி கேட்டான். "ப்ச்.. காதும் போச்சா..?? ஏதாவது பாருக்கு போன்னு சொன்னேன்..!!" "ஏ..ஏன்.. எ..எதுக்கு இப்போ.. திடீர்னு..??" "எனக்கு மனசு சரியில்ல.. தண்ணியடிக்கனும் போல இருக்கு.. அதான்..!!" "எ..என்ன மீரா நீ..?? ப..பசங்கதான் இப்படிலாம்.. மனசு சரியில்லன்னு.." "ஏன்.. பசங்க மட்டுந்தான் குடிக்கனுமா..?? பொண்ணுக குடிக்க கூடாதா..?? போ..!!" "அ..அதுக்காக இல்ல.. இப்படி.. எ..எங்கிட்ட வந்து.." "உன்கிட்ட வந்து சொல்லாம வேற யார்ட்ட போய் சொல்றது..?? குடிகாரப்பயதான நீ..?? சென்னைல இருக்குற பார்லாம் ஒன்னுவிடாம போய் குடிச்சிருக்கேல..?? அதுல ஏதாவது ஒரு டீசண்ட் பாருக்கு என்னை கூட்டிட்டு போ..!!" "இ..இல்ல மீரா.. நான் என்ன சொல்ல வர்றேன்னா.. எ..எனக்கென்னவோ இது.." "ஷ்ஷ்ஷ்...!!!! இப்போ நீயா கூட்டிட்டு போறியா.. இல்லனா.. நானா எங்கயாவாது போய் குடிச்சுக்கட்டுமா..??" மீரா சீற்றமாக சொல்ல, அசோக் மனதுக்குள் 'சர்தான்..!!' என்று நினைத்துக் கொண்டான். ஹெல்மட் கண்ணாடியை இறக்கிவிட்டுக்கொண்டு, வண்டியை கிளப்பினான். அப்புறம் பார் சென்று சேரும் வரை இருவரும் அதிகமாக பேசிக்கொள்ளவில்லை. "காசு வச்சிருக்கியா..??" கேட்டாள் மீரா. "கார்ட் வச்சிருக்கேன்..!!" சொன்னான் அசோக். "ஏற்கனவே ட்ரிங்ஸ்லாம் சாப்ட்ருக்கியா..??" கேட்டான் அசோக். "ம்ம்.. சாப்ட்ருக்கேன்.. சாப்ட்ருக்கேன்..!!" சொன்னாள் மீரா. அவ்வளவேதான்..!! கத்திப்பாரா ஜங்கஷனில் இடதுபுறம் திரும்பி.. சற்றே வேகமெடுத்து சர்தார் படேல் சாலையில் திரும்பியதுமே.. வெள்ளை வெளேர் என்று.. உயரமாகவும், கம்பீரமாகவும் காட்சியளித்தது.. அந்த மூன்று நட்சத்திர ஹோட்டல்..!! அசோக் பைக்கை உள்ளே செலுத்தி பார்க் செய்தான்..!! இருவரும் இறங்கி.. பக்கவாட்டில் இருந்த பார் பகுதிக்கு சென்றனர்..!! நண்பர்களுடன் குடிக்கிற வாய்ப்பு மிஸ் ஆனதில்.. அசோக்கின் மனதோரமாக ஒரு ஏக்கம் இருந்தது.. பிறகு மீரா திரும்ப வந்ததில்.. அந்த ஏக்கம் எப்போதோ காணாமல் போயிருந்தது.. இப்போது அவளுடன் சேர்ந்து மது அருந்தப் போவது.. அவனுடைய மனதில் ஒரு புதுவித கிளர்ச்சியை உண்டு பண்ணியிருந்தது.. மிகவும் சந்தோஷமாகவே காணப்பட்டான்..!! ஆனால்.. மீராதான் முகத்தை ஏனோ உர்ரென்று வைத்துக்கொண்டு அவனுடன் நடந்தாள்..!! மஞ்சள் நிற வெளிச்சத்தில் குளித்து.. பளிச்சென்று இருந்தது அந்த பார்..!! சிவப்பு நிற வெல்வெட் நாற்காலிகள்.. தேக்கு மர மேஜைகள்..!! அங்கொன்றும் இங்கொன்றுமாய்.. குடிக்க வந்திருந்த குரூப்கள்..!! இளையராஜாவின் இன்ஸ்ட்ருமென்டல் இசை.. இதமாய் கசிந்து.. காற்றை இனிமையாய் மாற்றிக் கொண்டிருந்தது..!! "என்ன சாப்பிடுற..??" "சம்திங் ஸ்ட்ராங்.. வெரி ஸ்ட்ராங்..!! எது பயங்கர ஸ்ட்ராங்கா இருக்குமோ அதை ஆர்டர் பண்ணு..!!" "பயங்கர ஸ்ட்ராங்னா பட்டை சாராயம்தான்..!!" "இங்க கெடைக்குமா..??" மீரா சளைக்காமல் கேட்க, அசோக் அரண்டு போனான். "ஆத்தாடீஈஈ..!! ஒரு முடிவுலதான் இருக்குற போல இருக்கு..?? அ..அதுலாம் இங்க கெடைக்காது.. நான் வேணா உனக்கு ஏதாவது ஃபாரீன் விஸ்கி ஆர்டர் பண்றேன்.. ஜஸ்ட்.. ஸ்லீக் அண்ட் ஸ்மூத்..!!" "ஹ்ம்ம்.. ஓகே.. ஸ்வீட்..!!" மீராவும் ஒப்புக்கொள்ள, அசோக் ஜானிவாக்கர் விஸ்கி இரண்டு லார்ஜ் ஆர்டர் செய்தான். தொட்டுக்கொள்ள வெஜ் ஷீக் கபாப்..!! பத்தே நிமிடத்தில் ஆர்டர் செய்த வகையாறாக்கள் வந்து சேர்ந்தன. அசோக்கே மீராவுக்கும் சேர்த்து மிக்ஸிங்செய்து.. கோப்பையை அவள் பக்கம் நகர்த்தினான்..!! "சியர்ஸ்..!!"சொல்லிவிட்டு.. மீராவுடன் ஜென்டிலாக கோப்பை இடித்துவிட்டு.. விஸ்கியை உதட்டுக்கு கொண்டு சென்றான்..!! கண்ணாடி விளிம்பில் உதடுகள் பதித்து.. கொஞ்சமாய் உறிஞ்சி.. நாக்கின் சுவையுணர்வு மொட்டுகளுக்கு விஸ்கியின் சுவையை காட்டி.. அப்படியே மிடறு விழுங்கி.. மெல்ல தொண்டைக்குள் அனுப்பி.. குரல்வளை வழியாக சுருசுருவென அனல் பரப்பிக்கொண்டு.. அந்த திரவம் அடி வயிறு நோக்கி இறங்குவதை.. இமைகள் செருக அசோக் அனுபவித்து ரசித்துக் கொண்டிருக்கும்போதே.. "டமார்..!!" என்று காதை அறைந்தது அந்த சப்தம். அசோக் பதறிப்போய் இமைகளை பிரித்தான். மீரா கண்ணாடி கோப்பையை டேபிளில் வைத்த சப்தம்தான் அது..!! கோப்பையில் தளும்ப தளும்ப இருந்த மொத்த விஸ்கியையும்.. ஒரே கல்ப்பில் கப்பென்று அடித்திருந்தாள்.. அடித்து முடித்து காலி கோப்பையைத்தான் அந்த மாதிரி "டமார்..!!" என்று டேபிளில் வைத்திருந்தாள்..!! இப்போது கண்களை இறுக்க மூடிக்கொண்டு.. முகத்தை ஒருமாதிரி சுளித்தவாறு.. "க்க்ஹ்ஹ்ஹாஹாஹ்..!!!!" என்று கனைத்தாள். கனைத்தவள், சிறிது நேரம் அப்படியே கண்களை மூடிக்கொண்டு, தலையை கவிழ்த்தவாறு அமர்ந்திருந்தாள். வாயை மட்டும் அவ்வப்போது திறந்து, 'ஹா.. ஷ்ஷ்ஷ்.. ஹா..' என்று காற்று வெளிப்படுத்தினாள். அசோக் அவளையே ஒருமாதிரி மிரட்சியாக பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு சற்றே தயக்கத்துடன்.. "மீ..மீரா.. மீரா.. என்னம்மா ஆச்சு..??" என்றான். மீரா இப்போது தலையை சிலுப்பிக்கொண்டு எழுந்து அமர்ந்தாள். விழிகளை படக்கென திறந்தாள். அசோக்கை கண்டு கொள்ளாமல், பின்பக்கமாய் திரும்பி.. பேரரை பார்த்து.. "ரிப்பீட்..!!" என்றாள் காலி கோப்பையை ஒற்றை விரலால் தட்டிக் காட்டியவாறே. "மீ..மீரா எதுக்கு இப்போ.." அவளை தடுக்க முயன்ற அசோக்கை, "ஷ்ஷ்ஷ்ஷ்..!!" என்று உதட்டில் விரல் வைத்து அடக்கினாள். அசோக் 'சர்தான்..!!' என்றான் மனதுக்குள். பேரர் மீண்டும் ஒரு லார்ஜ் கொண்டு வந்து டேபிளில் வைத்தான். அசோக் தயங்கி தயங்கி மீண்டும் மிக்ஸிங் கலந்தான். மீரா கோப்பையை எடுத்து மீண்டும் ஒரே கல்ப்பில் அடித்தாள். மீண்டும் டேபிளோடு ஒரு 'டமார்'.. மீண்டும் கனைப்பாக ஒரு 'க்க்ஹ்ஹ்ஹாஹாஹ்'.. மீண்டும் கண்கள் மூடி சிறிது நேர நித்திரை..!! அசோக்கிற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.. தலை கவிழ்ந்து கிடந்தவளையே பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தான்..!! "மீரா.. ரொம்ப தாகமா இருந்தா வாட்டர் வேணா வயிறு முட்ட குடிச்சுக்கோ.. இப்படி விஸ்கிலாம் தாகத்துக்கு குடிக்கிற மாதிரி குடிக்க கூடாது..!!" "வேற எப்படி குடிக்கணும்..??" மீரா தலையை நிமிர்த்தி கேட்டாள். "இந்தா.. என்னை மாதிரி.. லைட்டா.. ஒவ்வொரு சிப்பா.." "ப்ச்.. அதுலாம் உன்னை மாதிரி கொய்ந்தைங்க குடிக்கிறதுடா.. நமக்குலாம்.." சொன்னதை முடிக்காமல் அவள் இழுக்க, "ம்ம்.. உனக்குலாம்..??" அசோக் கேள்வியாக அவளை பார்த்தான். மீரா அசோக்குக்கு பதில் சொல்லவில்லை. கண்களை இடுக்கி அசோக்கின் முகத்தையே கூர்மையாக பார்த்தாள். பிறகு தலையை திருப்பாமலே.. அவனது முகத்தை பார்த்த பார்வையை நகர்த்தாமலே.. "ரிப்பீட்..!!!!" என்று பெரிய குரலில் கத்தி, பேரருக்கு ஆர்டர் கொடுத்தாள். "ஹேய்.. என்ன நீ..?? பத்து ரூபாய்க்கு நாலுன்னு பானிபூரி மாதிரி.. வாங்கி கபால் கபால்னு உள்ள விட்டுட்டு இருக்குற.. ஃபாரீன் சரக்குமா இது.. என்ன ரேட் தெரியுமா.?? கொஞ்சமாவது அதுக்குண்டான மரியாதையை குடு..!!" "ஏய்.. எல்லாம் எனக்கு தெரியும்.. மூட்றா..!!" மீரா அலட்சியமாக சொல்ல, அசோக் நெற்றியை பிசைந்து கொண்டான். "ஏன் மீரா.. நெ..நெஜமாவே.. நீ முன்னப்பின்ன குடிச்சிருக்கியா.. இல்ல.." "ஏன் கேக்குற..??" "எ..எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு..!!" "சந்தேகந்தான..?? தீத்துட்டா போச்சு..!! டோன்ட் வொர்ரி.. ஐ வில் கிளியர் ஆ....ல் யுவர் டவுட்ஸ்..!! நவ்.. ரைட் நவ்..!!" மீராவுக்கு நன்றாக போதை ஏறிவிட்டது என்பதை அசோக்கால் இப்போது புரிந்து கொள்ள முடிந்தது. குழறுகிற வாயுடன், அவள் ஆங்கிலத்துக்கு தாவியதிலேயே அதனை அறிந்து கொள்ள முடிந்தது. மீராவும் அதை உறுதி செய்தாள். மூன்றாவது லார்ஜை பேரர் கொண்டு வர.. 'உன் டவுட்டை இப்போ கிளியர் பண்றேன் பார்..' என்றவள், மிக்ஸிங் கலக்காத விஸ்கியை எடுத்து, அப்படியே ராவாக வாய்க்குள் ஊற்றினாள்..!! அசோக் 'ஆ'வென்று வாயை பிளந்து பதறிப் போனான்..!! "ஐயோ.. என்ன பண்ற நீ..?? அப்படியே ராவா.." "ஏ..ஏன்.. குடிச்சா என்ன..??" அடர்த்தியான ஆல்கஹாலுக்கு முகத்தை சுளித்தவாறே மீரா கேட்டாள். "ஹாட்டா இருக்கும்..!!" "ஹாஹா.. இந்த மிர்ச்சிக்கே ஹாட்டா..???" என்று கெத்தாக கேட்டவள்.. தட்டில் அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருந்த.. அந்த தடித்த முழுநீள பச்சை மிளகாயை எடுத்து.. அப்படியே கடித்து நறநறவென மெள்ள ஆரம்பித்தாள்..!! அசோக் டென்ஷனாகிப் போனான்.. 'யோசனை இல்லாமல் இவளை இங்கே அழைத்து வந்துவிட்டோமோ' என்று முதன்முறையாக அவனுக்கு ஒரு கிலி கிளம்பியது..!! "ஹேய்.. உனக்கு என்ன லூஸா..?? விஸ்கியை ராவா குடிச்ச.. இப்போ பச்சை மிளகாயை அப்படியே.." "ஹ்ஹ.. இதுலாம் என்னை ஒன்னும் செய்யாது மச்சி.. ஐம் மிர்ச்சி மச்சி.. மிர்ச்சி..!!" "அறிவில்லாம பேசாத..!! இந்தா.. இந்த தண்ணியை கொஞ்சம் குடி.. வயிறை ஏதாவது பண்ண போகுது..!!" "ம்ஹூம்.. எனக்கு இந்த தண்ணி வேணாம்..!! பேரர்.." "அப்படியே அறைஞ்சிடுவேன் மீரா..!!" "ஹ்ஹ.. நீ என்னை அறைய போறியா..?? அவ்ளோ தைரியமா உனக்கு..??" "ஆமாம்.. இப்போ இதை குடிக்கல.. அதான் நடக்கப் போகுது..!! குடி.. குடின்றேன்ல..??" அசோக் மீராவின் வாயைப் பிடித்து வலுக்கட்டாயமாக அவளுக்கு குளிர்ந்த நீர் புகட்டினான். "கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு..?? இப்படிலாம் சாப்பிட்டா குடல் வெந்து போயிடும்..!!" அவளை திட்டிக்கொண்டே நீர் புகட்டினான். மீராவும் ஒரு க்ளாஸ் நிறைய இருந்த தண்ணீர் மொத்தத்தையும் மடக் மடக்கென குடித்துவிட்டாள். குடித்து முடித்ததும், 'ஏவ்..' என்று எதுக்களிப்பை வெளிப்படுத்தியவள், பிறகு உதடுகளை சப்பிக்கொண்டே.. "ச்சோ.. ச்ச்வீட்..!!" என்றாள் திடீரென. அவள் எதை சொல்கிறாள் என்று ஒருகணம் குழம்பிய அசோக், ஒருவேளை தண்ணீரில் சக்கரை விழுந்துவிட்டதோ என காலி க்ளாஸை பார்க்க, மீரா இப்போது ஒரு கெக்கலிப்புடன் சொன்னாள். "ஹ்ஹ.. தண்ணிய சொல்லலடா லூசுப்பயலே.. உன்னைய சொன்னேன்..!!" சொல்லிவிட்டு அசோக்கை பார்த்து கண்ணடித்தாள். அவனுக்கோ இப்போது உடனடியாய் ஒரு வெட்கம். உதட்டில் அழகான புனனகையுடன், "ஆமாம்.. அடிக்கடி இது ஒன்னை சொல்லிடு.. 'ச்சோ ச்ச்வீட், ச்சோ ச்ச்வீட்'ன்னு..!!" என்றான். "ஹையோ.. வெக்கத்தை பாரு.. என் ஹனிபனிக்கு..!!" இளிப்புடன் சொன்ன மீரா, படக்கென சேரில் இருந்து எழுந்தாள். ஹஸ்கியான செக்ஸியான குரலில் அவள் பாட்டுக்கு பாட ஆரம்பித்தாள். "யூ'ஆர் மை பம்கின்.. பம்கின்.. ஹெலோ ஹனிபனி..!! ஐ'ம் யுர் டம்ளிங்.. டம்ளிங்.. ஹெலோ ஹனிபனி..!! ஃபீலிங் சம்திங்.. சம்திங்.. ஹெலோ ஹனிபனி.. ஹனிபனி.. டோகோ டோகோ..!!" இடுப்பில் ஒரு கையும், தலையில் ஒரு கையுமென.. மாறி மாறி வைத்துக்கொண்டு.. தனது பின்புறத்தை இப்படியும் அப்படியுமாய் அழகாக அசைத்து அசைத்து.. இமைகளை படக் படக்கென வெட்டியவாறே.. அசோக்கை பார்த்து பாடிக்கொண்டே அவள் ஆட.. இப்போது பாரில் இருந்த அனைவரும் திரும்பி அவளை பார்த்தனர்.. 'உய்ய்ய்..' என்று கத்தியவாறே உற்சாகமாக கைதட்டினார்கள்..!! அசோக்கிற்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது..!! "ஹேய்.. என்ன பண்ற நீ..?? எல்லாரும் பாக்குறாங்க.. உக்காரு மீரா.. ப்ளீஸ்.. உக்காரு..!!" அவளுடைய தோள்களை பற்றி அழுத்தி, அரும்பாடு பட்டு அவளை அமரவைக்க வேண்டியதிருந்தது அசோக்குக்கு..!!அப்புறம் சிறிது நேரம் மீரா அடித்த கூத்துக்கும், செய்த ரகளைக்கும் அளவே இல்லை. அசோக்தான் நொந்து போனான். அவளை கண்ட்ரோல் செய்வதே கடினமான காரியமாக இருந்தது. ஏற்றிய கொஞ்ச நஞ்ச போதையும் இறங்கிப்போனது. நான்காவது லார்ஜ் கொண்டு வந்து ஊற்றிய பேரர், "என்ஜாய் யுவர் டிரிங் மேடம்..!!" என்ற மாமூலான டயலாக்கை உதிர்க்க, மீரா "ரிப்பீட்..!!" என்றாள். இன்னொரு லார்ஜ் கேட்கிறாளோ என்று அந்த ஆள் குழம்ப, "இல்ல.. இப்போ நீங்க 'என்ஜாய் யுவர் டிரிங்'னு ஸ்டைலா சிச்சுக்கிட்டே சொன்னீங்கள்ல.. அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. இட்ஸ் ச்சோ.. ச்ச்வீட்..!! ரிப்பீட் ப்ளீஸ்..!! இன்னொரு மொறை சொல்லுங்க..!!" என்று மீரா இளித்தாள். அந்த பேரர் ஓரிரு வினாடிகள் திருதிருவென விழித்தான். அப்புறம்.. "எ..என்ஜாய் யுவர் டிரிங் மேடம்..!!" என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு சொன்னான். "வாவ்... ச்சோ.. ச்ச்வீட்..!! இன்னொரு மொறை இன்னொரு மொறை.. ப்ளீஸ் ப்ளீஸ்.. ரிப்பீட்..!!" அந்த ஆள் இப்போது அசோக்கை பரிதாபமாக பார்த்தான். 'எப்படியாவது இந்த இம்சைட்ட இருந்து என்னை எஸ்கேப் பண்ணி வுடு ராசா..' என்பது போல இருந்தது அவன் பார்வை..!! "ஹேய்.. விடு மீரா அவரை..!! ஸார்.. நீங்க போங்க ஸார்..!!" என்று அசோக்தான் அந்த பேரரை காப்பாற்றினான். ஐந்தாவது லார்ஜ் வந்தபோது.. "ஜானிப்பயல சும்மா சொல்லக்கூடாது.. ஜம்முனு இருக்குறான்..!!" என்று திடீரென சொல்லி, அசோக்கை குழம்ப வைத்தாள். "யாரு ஜானிப்பய..??" "இதோ இவன்தான்..!!" விஸ்கியை தட்டிக்காட்டிய மீரா, "வாக்கர்னு பேரை வச்சுக்கிட்டு.. உள்ளபோய் என்னமா தடதடன்னு ஓடுறான்..!!" கருவிழிகளை சுழற்றிக்கொண்டே சொல்ல, "ஷ்ஷ்.. ப்பா.. இப்போவே கண்ணை கட்டுதே..!!" சலிப்பானான் அசோக். விஸ்கியை உள்ளே ஊற்றிவிட்டு.. கடித்துக்கொள்ள ஷீக் கபாபை கையில் எடுத்தவள்.. வாயென்று நினைத்து மூக்கில் திணித்துக் கொண்டாள்..!! அசோக் பதறிப் போனான்..!! "ஹேய்.. மூக்கு அது..!!" "ஓ.. மூக்கா இது..?? அப்போ வாய் எங்க..?? வேர் இஸ் மை வாய்.. வேர் இஸ் மை வாய்..??" என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டவள்.. இடது கையால் தன் முகத்தை தடவி.. வாயை கண்டுபிடித்து.. இரண்டு விரல்களால் வாயை திறந்து.. மூடி விடாமல் பிடித்துக்கொண்டு.. வலது கையிலிருந்த ஷீக் கபாபை வாய்க்குள் லபக்கென்று போட்டாள்..!! போட்டுவிட்டு.. "எப்பூடி..??" என்றாள் பெருமையாக. "கிழிஞ்சது..!!" தலையில் அடித்துக்கொண்டான் அசோக். ஆறாவது லார்ஜ் குடிக்கும்போது வேறொரு பிரச்சினை..!! சற்று தூரத்தில் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்த நான்கு கல்லூரி மாணவர்களில் ஒருவன்.. எதேச்சையாக இவளை திரும்பி பார்த்துவிட்டான் போலிருக்கிறது.. மீரா கொதித்து போய் விருட்டென எழுந்தாள்..!! "ஒய்.. என்னடா இங்க லுக்கு..?? இங்க என்ன படமா காட்றாங்க..??" என்று காலி க்ளாஸை கையில் எடுத்தாள். அந்தப் பையன் மிரண்டு போய் அந்தப்பக்கம் திரும்பிக் கொண்டான். மீராவுடைய செய்கையில் அசோக்கும் அதிர்ந்து போயிருக்க, பேரர் அவசரமாக இவர்களை நோக்கி ஓடி வந்தான். "ஸார்.. கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணுங்க ஸார்.. இது டீசன்டான பார்.. ரொம்ப இன்டீசண்டா போறாங்க..!!" "ஹேய்.. உக்காரு மீரா.. சொல்றேன்ல.. உக்காரு..!!" மீராவை அதட்டிய அசோக், "ஸாரி பாஸ்.. நான் பாத்துக்குறேன்.. நீங்க போங்க..!! நான் பாத்துக்குறேன் பாஸ்.. இனிமே இப்படி நடக்காது..!!" பேரரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தான். அப்புறம் எழுந்து எதிரே இருந்த மீராவுக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டான். அவளுடைய புஜத்தை இறுகப் பற்றியவன், சற்றே எரிச்சலான குரலில் கேட்டான். "எ..என்ன மீரா இது.. எல்லாரும் நம்மை பத்தி என்ன நெனைப்பாங்க..?? ச்ச..!!" "என்ன வேணா நெனச்சுக்கட்டும்.. எனக்கு கவலை இல்ல..!!" "ப்ச்.. என்னாச்சு உனக்கு.. ஏன் இப்படிலாம் பண்ற..??" அசோக் இப்போது சலிப்பாக கேட்க, "எனக்கு மனசே சரி இல்ல அசோக்.. அதான்..!!" மீரா பாவமாக சொன்னாள். "அதுக்காக..??" "யாரையாவது புடிச்சு சப்பு சப்புன்னு அறையணும் போல இருக்கு..!!"ஹ்ம்ம்.. அவ்வளவுதான..?? சரி.. என்னை அடி.. எவ்ளோ வேணா என்னை அடிச்சுக்கோ.. உன் கோவத்தை என் மேல காட்டு..!! ம்ம்.. கமான்..!!" அசோக் சீரியஸாக சொல்ல, மீரா இப்போது சிரித்தாள். "ஹ்ஹ.. உன்னை எதுக்கு அடிக்கணும்..?? நீ... என் செல்...ல ஹனிபனி..!!" என்று கண்சிமிட்டியவள், உடனே அந்த கல்லூரி பையனை நோக்கி கைநீட்டி.. "எனக்கு அவனைத்தான் அடிக்கனும்.. அவன் ஃபேஸ்-கட்டே எனக்கு சுத்தமா பிடிக்கல..!! ப்ளீஸ் அசோக்.. ரெண்டே ரெண்டு அறை.. அவனை போய் அறைஞ்சுட்டு வந்துர்றேன்.. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்..!!" என்று கெஞ்சலாக கேட்டவாறே எழ முயல, அசோக் அவளை பிடித்து அமுக்கினான். "என்ன வெளையாடுறியா.. உக்காரு மீரா..!!" "ப்ளீஸ் அசோக்..!!" "ப்ச்.. சொல்றேன்ல..?? வேணுன்னா என்னை அறைஞ்சுக்கோ..!!" "உன்னை அறைய மாட்டேன் போ.. யு ஆர் எ குட்பாய்..!!" "ஹாஹா.. யாரு.. நானா..??" அசோக் சிரிப்புடன் கேட்டான். "யெஸ்ஸ்ஸ்..!! அசோக் இஸ் எ குட்பாய்..!! மீரா இஸ் எ பேட் கேர்ள்.. வெரி வெரி பேட் கேர்ள்..!!!" மீரா திடீரென அவ்வாறு சீரியஸான குரலில் சொல்ல, அசோக் அப்படியே உருகிப் போனான். "ஹேய்.. ஏன் இப்படிலாம் சொல்ற..??" "யெஸ்.. இட்ஸ் ட்ரூ..!!" "ப்ச்.. அதுலாம் ஒன்னுல்ல.. மீரா ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு.. எனக்கு நல்லா தெரியும்..!!" மீராவின் கலைந்திருந்த கூந்தல் கற்றையை சரி செய்தவாறே, அசோக் காதலாக சொன்னான். மீரா இப்போது எதுவும் பேசாமல், அசோக்கையே அமைதியாக பார்த்தாள். இமைகளை அசைக்காமல்.. ஒருவித சலனமற்ற பார்வை..!! பிறகு.. "உனக்கு நான் ரொம்ப கஷ்டம் கொடுத்திட்டேன்ல..?? ஸாரி..!!" என்றாள் இரக்கமாக. "ஹேய்.. மீரா.. எ..என்ன இது..??" "தப்பான நம்பர் குடுத்து பிரச்னைல மாட்டிவிட்டு.. டிக்கெட் விக்க சொல்லி தெருதெருவா அலையவிட்டு.. கடலை கூடைலாம் உன் தலைல தூக்க வச்சு..!! எல்லாம் உனக்கு தேவை இல்லாத கஷ்டம்ல.. ஸாரிடா.. ஸாரி..!!" "ப்ச்.. என்ன மீரா நீ..?? உன்னை நான் எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா..?? உனக்காக இது கூட பண்ண மாட்டேனா..?? அதில்லாம.. அர்பனேஜ்ல அந்த கொழந்தைங்க.. ட்ரெயின்ல அந்த தாத்தா.. அந்த ப்ரக்னன்ட் லேடி.. எல்லாரும் அவங்க மனசார எனக்கு தேங்க்ஸ் சொன்னப்போ.. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா..?? அந்த மாதிரி ஒரு சந்தோஷத்தை நான் அனுபவிச்சதே இல்ல.. அதெல்லாம் உன்னாலதான..?? இ..இன்னும் சொல்லப் போனா.. உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சதே.. நீ இந்த மாதிரி பண்ற இம்சைதான்.. தெரியுமா..?? உன்கிட்ட சொன்னதில்ல.. பட்.. ஐ ஜஸ்ட் லவ் தட்..!!" மீராவுக்கு இதமளிக்குமாறு அசோக் அவ்வாறு சொல்ல, அவள் இப்போது பட்டென முகம் மலர்ந்து போனாள். "ரியல்லி..????" என்றாள் கண்களில் ஒரு மின்னலுடன். "யெஸ்..!!!" "வாவ்..!! ஐ'ம் ஸோ ஹேப்பி நவ்..!!!" மீராவின் குழந்தைத்தனமான குதுகலம் அசோக்கிற்கு சிரிப்பை வரவழைத்தது. "ஹாஹா..!!" "ஓகே.. இந்த சந்தோஷத்தை கொண்டாட.. எனக்கு ஒரு ஜானி ரிப்பீட் சொல்லேன்..!!" "ப்ச்.. போதும்.. ஏற்கனவே உனக்கு ரொம்ப ஓவராயிடுச்சு..!! சாப்பிட்டுட்டு கெளம்பலாம்.. நீ வேற வீட்டுக்கு போகணும்ல..??" "ம்ஹூம்.. வீடு வேணாம்.. நோ வீடு.. வீடு எனக்கு புடிக்கல..!!" "என்ன வெளையாடுறியா.. வீட்டுக்கு போகலனா உன்னை தேட மாட்டாங்க..??" "தேட மாட்டாங்க.. வீட்ல யாரும் இல்ல.. நான் மட்டுந்தான்..!!" "ஓ.. எங்க போயிருக்காங்க..??" "ம்ம்ம்ம்.. ஊர்ல திருவிழா..!!" "நீ போகலையா..??" "போனேன்.. புடிக்கலன்னு நான் மட்டும் வந்துட்டேன்..!!" "ஓஹோ.. திருவிழா போயிட்டுத்தான்.. மூணு நாளா மேடம் எனக்கு கால் பண்ணலையா..??" "ம்ம்.. ஆமாம்..!!" "ஹ்ம்ம்.. வீட்ல யாரும் இல்லன்னதும் தண்ணியடிக்க ஆசை வந்துடுச்சாக்கும்..??" "ஹாஹா.. ஆமாம் ஆமாம்..!!" மீரா பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டினாள். "பரவால.. வீட்ல யாரும் இல்லனாலும் பரவால.. நான் கொண்டு போய் ட்ராப் பண்ணிர்றேன்..!! நீயாச்சு.. உன் வீடாச்சு..!!" "ஏன்.. உன்கூட தங்க வச்சுக்க மாட்டியா..?? உன் ஆபீஸ்லதான் யாரும் இருக்க மாட்டாங்களே..??" மீரா ஒருவித குறும்பு சிரிப்புடன் கேட்டாள். "ஹ்ஹ.. நீ எதுக்கு இந்த கேள்வி கேக்குறேன்னு எனக்கு நல்லா தெரியும்..!! உனக்கு சந்தேகமே வேணாம்.. நான் ஒன்னும் அலைஞ்சான் இல்ல.. எனக்கு அப்படிலாம் எதும் ஆசை இல்ல.. எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் நடந்தா போதும்..!!" "ச்சோ.. ச்ச்வீட்..!!" "ஹாஹா.. போதும் போதும்.. இன்னைக்கு நெறைய 'ச்சோ ச்ச்வீட்' சொல்லிட்ட..!!" சொல்லிவிட்டு அசோக் புன்னகைத்தான். மீராவும் போதை ஏறிய கண்களுடன், பற்கள் தெரிய பளீரென்று சிரித்தாள். அப்புறம் திடீரென முகத்தை சீரியசாக மாற்றிக்கொண்டு, "அ..அசோக்.." என்றாள். "ம்ம்..!!" "நா..நான்.. நான்.. உன்கிட்ட.." "என்கிட்ட..??" "ஒ..ஒரு உண்மையை மறைச்சுட்டேன்.. ஸாரி..!!" மீரா சொல்ல, அசோக் இப்போது குழப்பமாக அவளை ஏறிட்டான். "எ..என்ன.. எதை மறைச்சுட்ட..??" "ஆக்சுவலா.. நான் மறைக்கனும்னு மறைக்கல..!!" "எ..என்னன்னு சொல்லு..!!" "சொ..சொன்னா உனக்கு ஷாக்கா இருக்கும்.. நம்பவே மாட்ட..!!" "ப்ச்.. ப்ளீஸ் மீரா.. வெ..வெளையாடாத.. என்னன்னு சீக்கிரமா சொல்லு..!!" "ம்ம்ம்ம்... நா..நான்.. அல்ரெடி ட்ரிங்க்ஸ்லாம் சாப்பிட்ருக்கேன்னு சொன்னேன்ல.. அது பொய்.. இதுதான் எனக்கு ஃபர்ஸ்ட் டைம்..!!" மீரா அவ்வாறு சொல்ல, அசோக்குக்கு பொசுக்கென்று போனது. "ம்க்கும்.. இவ்வளவுதானா..?? இதுல ஷாக் ஆகுறதுக்கு என்ன இருக்கு.. 'இங்க பட்டை சாராயம் கெடைக்குமா'ன்னு நீ கேட்டப்போவே எனக்கு அது தெரிஞ்சு போச்சு..!!" "ஓ..!!" "ஃபர்ஸ்ட் டைம் அதுவுமா.. சொல்ல சொல்ல கேட்காம, கன்னாபின்னான்னு குடிச்சிருக்க.. ஹ்ம்ம்... என்ன ஆகப் போகுதோ..??" அசோக் இருவருக்கும் ஃப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்தான். ஆர்டர் செய்தபோது 'அப்படி இருக்க வேண்டும்.. இப்படி இருக்க வேண்டும்..' என்று பேரருக்கு ஆயிரம் நிபந்தனைகளும், குறிப்புகளும் கொடுத்த மீரா, ஃப்ரைட் ரைஸ் வந்தபோது கூட ஆர்வமாகவே சாப்பிட ஆரம்பித்தாள். ஆனால்.. இரண்டு வாய் எடுத்து வைத்ததுமே.. "எனக்கு போதும்.. பசிக்கல..!!" என்று முகத்தை சுளித்தாள்.. முரண்டு பிடித்தாள்..!! "ப்ச்.. ட்ரிங்ஸ் அடிச்சா நல்லா சாப்பிடனும்... இல்லனா வயிறு கெட்டு போயிடும்..!! இந்தா.. சாப்பிடு.. சாப்பிடுன்றேன்ல..??" அசோக்கே அவளுக்கு ஊட்டி விட வேண்டியது இருந்தது. ஒருவழியாக சிணுங்கிக் கொண்டே மீரா சாப்பிட்டு முடித்தாள்.. அசோக்கும் சாப்பிட்டு முடித்து, பில் கொண்டு வர சொன்னான்..!! சாப்பாடு உள்ளே சென்றதில் இருந்தே.. மீராவிடம் சாமியாட்டமும் அதிகமாகவே இருந்தது..!! மொத்தமாய் உள்ளே தள்ளிய விஸ்கி எல்லாம்.. இப்போது ஒன்றுகூடி முழு வீரியத்தில் வேலையை காட்டின..!! அவளுடைய கூந்தல் எப்போதோ கலைந்து போயிருந்தது.. முடிக்கற்றைகள் எல்லாம் அதது இஷ்டத்திற்கு அலைபாய்ந்தன..!! கண்கள் முக்கால்வாசி செருகிப் போயிருக்க.. தலை ஒரு இடத்தில் நில்லாமல், அங்கும் இங்கும் அல்லாடியது..!! கீழுதட்டை வேறு அவ்வப்போது வாய்க்குள் மடித்து வைத்து.. 'பச்சக்.. பச்சக்..' என சுவைத்துக் கொண்டாள்..!! பில் கொடுத்த பேரருக்கு, அசோக் கார்ட் கொடுத்தான். தேய்த்து முடித்த கார்டை மீண்டும் பில்புக்குக்குள் இட்டு, பேரர் டேபிளில் வைத்து சென்றான். கார்டை கலெக்ட் செய்து கொண்ட அசோக், டிப்ஸ் பணத்தை புக்குக்குள் செருகிக் கொண்டிருக்கும்போதுதான்.. "டமார்..!!" என்று டேபிள் சப்தம் எழுப்பியது. இந்தமுறை காலிக்ளாஸ் வைக்கப்பட்டதால் வந்த சப்தம் அல்ல.. மீராவின் கபாலம் சென்று மோதியதால் எழுந்த சப்தம்..!! போதை மிகுந்து போய்.. டேபிளிலேயே தலைகுப்புற மட்டை ஆகியிருந்தாள் மீரா..!! அசோக் பதறிப் போனான்.. உடனடியாய் அவளை அள்ளி கையிலெடுத்தான்.. அவளுடைய கன்னத்தில் பட் பட்டென தட்டியவாறே கேட்டான்..!!
"மீரா..!! ஹேய் மீரா.. ஹேய்.. என்னாச்சுமா..??" அவன் கேட்பதை புரிந்து கொண்டு பதில் சொல்கிற சுவாதீனம் எல்லாம் மீராவுக்கு இல்லை. விழிகளை திறந்து மலங்க மலங்க பார்த்தாள். உதட்டை உள்ளே மடித்து சப்பு கொட்டினாள். பிறகு மீண்டும் இமைகள் செருகிக் கொள்ள, மயக்கத்திலோ நித்திரையிலோ மூழ்க ஆரம்பித்தாள். "ஹேய் மீரா.. ஹேய்.. கண்ணை தொறந்து பாரு..!!" அசோக் திரும்ப திரும்ப அவளுடைய கன்னத்தை தட்டி, அவளுக்கு விழிப்பு கொணர முயன்றான். ம்ஹூம்..!! ஒரு புண்ணியமும் இல்லை..!! அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.. அவளுடைய நிலையிலும் எந்த முன்னேற்றமும் இல்லை..!! நடுவில் ஒருமுறை வாய்திறந்து 'ரிப்பீட்..!!' என்று உளறியதோடு மட்டும் சரி..!! அசோக்குக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அவஸ்தையாய் நெற்றியை பற்றி பிசைந்தான். 'இப்படி ஃப்ளாட் ஆகி கிடக்கிறாளே.. இவளை எப்படி வீட்டுக்கு கொண்டு போய் சேர்க்கப் போகிறேன்..?? அட்லீஸ்ட் அட்ரஸ் தெரிந்தாலாவது.. ஆட்டோவில் அள்ளிக்கொண்டு போய் போடலாம்..?? அதுவும் தெரியாதே..?? என்ன செய்யலாம் இப்போது..??' அப்போதுதான் திடீரென அசோக்குக்கு அந்த ஐடியா மூளையில் உதித்தது. உடனே மீராவுடைய பேகை எடுத்தான். உள்ளே இருந்த செல்போனை எடுத்தான். கான்டாக்ட் லிஸ்ட் திறந்தான். 'இவளுடைய ஃப்ரண்ட்ஸ் யாருக்காவது ஃபோன் செய்து உதவி கேட்கலாம்.. அட்ரஸ் தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம்..!!' என்பது மாதிரியான ஐடியா. கான்டாக்ட் லிஸ்ட் திறந்து பார்த்தவன்.. ஒருகணம் குழம்பிப் போனான்.. அப்படியே 'பே' என்று செல்ஃபோனையே பார்த்தான்..!! 'மட்டி, மடையன், முட்டாள், மூடன்' என.. பதிவு செய்யப்பட்டிருந்த கான்டாக்ட்கள் எல்லாமுமே.. பரமார்த்த குரு சீடர்களின் பெயர்கள் ரேஞ்சுக்கு இருந்தன..!! அசோக் இப்போது பக்கவாட்டில் திரும்பி, மீராவை பார்த்து முறைத்தான்..!! "ஆனாலும் உனக்கு இவ்வளவு கொழுப்பு ஆகாதுடி..!!" என்று வாய்விட்டே சொன்னான். 'சரி.. இத்தனை பேரில் இப்போது யாருக்கு கால் செய்வது..??' ஓரிரு வினாடிகள் யோசித்த அசோக், பிறகு 'ஓகே.. கேனைப்பயலிடம் ஹெல்ப் கேட்கலாம்..' என்று முடிவுக்கு வந்தான். கேனைப்பயல் என்ற பெயரில் இருந்த கான்டாக்டுக்கு கால் செய்தான்.. ரிங் சென்றது.. அதே நேரம்.. "Sexy lady on the floor.. Keep you coming back for more..!!" என அசோக்கின் செல்போனும் அலறியது. 'அடிங் கொய்யால..' என்பது போல அசோக் நொந்து போனான்..!! 'நான்தான் அந்த கேனைப்பயலா..??' என்று மீராவின் பக்கமாய் திரும்பி, முன்பை விட அதிகமாக அவளை முறைத்தான். 'அன்-கான்சியஸாதான கெடக்குறா.. அப்படியே கொமட்டுல நாலு குத்து குத்தினா என்ன..??' என்று கூட தோன்றியது. அப்புறம் எழுந்த எரிச்சலை அடக்கிக் கொண்டு, லிஸ்டில் அடுத்ததாக இருந்த மஞ்சமாக்கானுக்கு கால் செய்தான். மீண்டும் அசோக்கின் செல்போனில் இருந்து பாட்டு சப்தம்..!! அப்புறந்தான் அசோக்கின் மூளையில் ஒரு பொறி தட்டியது. உடனே கான்டாக்ட் லிஸ்ட் மொத்தத்தையும் கவனமாக ஆராய்ந்தான். சீக்கிரமே அந்த உண்மையை கண்டறிந்தான். எல்லா கான்டாக்டுகளுமே ஒரே எண்ணைத்தான் கை காட்டின.. அசோக்கின் எண்..!! ஒரே நம்பரையே விதவிதமான பெயர்கள் கொண்டு ஸேவ் செய்திருந்தாள். குட் பாய்.. ஸ்வீட் பாய்.. ஹனிபனி.. என ஒருசில பெயர்கள் தவிர்த்து.. மற்ற எல்லாமே.. அரை லூஸு.. அடுப்பு வாயன்.. ஆஃப்ரிக்கா கொரங்கு.. என்பது மாதிரிதான் இருந்தன..!! அசோக்குக்கு சிரிப்பதா, தலையில் அடித்துக் கொள்வதா என ஒன்றும் புரியவில்லை. 'என்ன பெண் இவள்..?? இந்த மாதிரி லூஸுத்தனமான வேலை எல்லாம் செய்து கொண்டு.. என்னை கேனையன் என்கிறாள்..??' என்ன செய்வது என்ற குழப்பத்துடன், அசோக் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தான். "இங்கயே ரூம் எடுத்துக்கங்க ஸார்.. எந்த ப்ராப்ளமும் வராது..!!" "நீ..நீங்க.. எங்களை தப்பா புரிஞ்சுக்கலைல..??" "சேச்சே.. எனக்கு உங்க சிச்சுவேஷன் நல்லா புரியுது ஸார்.. அதான் சொல்றேன்.. இந்த நெலமைல இவங்களை வெளில கூட்டிட்டு போறது நல்லது இல்ல.. நைட் இங்கயே ஸ்டே பண்ணிட்டு காலைல கெளம்புங்க..!! இது டீசண்டான ஹோட்டல்.. நீங்க எதும் பயப்பட தேவை இல்லன்னு சொன்னேன்..!!" பேரர் தந்த நம்பிக்கையில், அன்று இரவு அங்கேயே தங்கிக் கொள்வது என்று அசோக் முடிவு செய்தான். வீட்டுக்கு ஃபோன் செய்து, 'கொஞ்சம் வேலை இருக்கு மம்மி.. நைட் ஆபீஸ்லயே தங்கிக்கிறேன்..' என்றான். மீராவுடைய பேகை தோளில் மாட்டிக் கொண்டான். அவளை பூப்போல அள்ளி, கைகளில் ஏந்திக் கொண்டான். ரூம் சர்வீஸ் பையன் வழி நடத்த, மீராவை தூக்கிக் கொண்டே மாடிப்படிகள் ஏறினான். "ஏ..ஏன்.. படிக்கட்டுல.. பைக் ஓட்டுற..??" மீரா உளறிக்கொண்டே வந்தாள். அறைக்குள் நுழைந்ததும் அசோக் அவளை மென்மையாக மெத்தையில் கிடத்தினான். பருவச்செழிப்புடன் படுக்கையில் மல்லாந்திருந்த மீராவிடமிருந்து.. பார்வையை அகற்ற முடியாமல்.. ஏக்கமாய் பார்த்த ரூம் சர்வீஸ் பையனை.. 'ஏய்..' என்று அதட்டினான்..!! "வே..வேற.. வேற எதும் வேணுமா ஸார்..??" அவன் சமாளித்துக் கொண்டு கேட்டான். "கொஞ்சம் தண்ணி மட்டும் குடு..!!" "ஓகே ஸார்..!!" அந்தப்பையன் கதவு திறந்து வெளியேறும் வரை, அசோக் அவனையே முறைத்துக் கொண்டிருந்தான். அப்புறம் கதவை லாக் செய்யலாம் என்று வாசல் நோக்கி நடந்தான். திடீரென அவனுடைய முதுகுப்புறம் இருந்து.. "அ..அசோக்..!!" என்று சத்தம் கேட்டதும், அப்படியே நின்றான். திரும்பி பார்த்தான். மீரா இப்போது படுக்கையில் எழுந்து அமர்ந்திருந்தாள். இமைகளை பிரிக்க முடியாமல் பிரித்து, அந்த அறையை சுற்றும் முற்றும் பார்த்தாள். பிறகு தலையை பரபரவென சொறிந்து கொண்டே.. "எ..எங்க இருக்கோம்..??" என்றாள். "ஹோட்டல் ரூம்..!!" "அப்போ.. வீடு..??" "அதான் உன் வீட்டுல யாரும் இல்லன்னு சொன்னேல.. நைட்டு இங்க தங்கிட்டு காலைல போலாம்..!!" அசோக் அவ்வாறு சொன்னதுமே மீராவின் முகம் பட்டென மாறியது. ஒருமாதிரி பரிதாபமாக முகத்தை மாற்றிக் கொண்டாள். அவளுடைய மூக்கு திடீரென விசும்பியது. கண்கள் பட்டென கலங்கிப்போக, அழ ஆரம்பித்தாள். "ம்ஹ்ம்.. ம்ஹ்ம்.. ம்ஹ்ம்.. ம்ஹ்ம்.." "ஹேய்.. மீரா.. எ..என்னாச்சு.. ஏன் அழற..??" அசோக் சற்றே பதறிப்போய் அவளிடம் ஓடினான். "அழனும் போல இருக்கு..!!" "ஏன்..??" இரு கைகளாலும் அவளுடைய முகத்தை மென்மையாக தாங்கி பிடித்தவாறு அசோக் கேட்க, "எ..எனக்கு.. எனக்கு யாரும் இல்ல அசோக்..!!" மீரா கேவலுடன் பரிதாபமாக சொன்னாள். "ஹையோ.. என்ன பேசுற நீ..?? அதான்.. உனக்கு.." "எ..எனக்கு அழுகை அழுகையா வருது.. போ..!!" "ப்ச்.. என்னமா நீ.. அழாத ப்ளீஸ்.. கண்ணை தொடைச்சுக்கோ..!! எ..என்ன பிரச்னை இப்போ..??" "என்னை பத்தி கவலைப்பட யாரும் இல்ல.. என் மேல அன்பு காட்டுறதுக்கும் யாரும் இல்ல.. எனக்குன்னு யாருமே இல்லடா..!!" "ச்சே.. என்ன பேச்சு இது..?? வீ..வீட்ல எதாவது பிரச்னையா..??" "ம்ம்..!!" "அதுக்காக இப்படிலாம் பேசுறதா..?? நா..நான்.. நான் ஒருத்தன் இருக்குறப்போ.. இப்படிலாம் பேசாத மீரா..!! உன் மேல நான் எவ்வளவு ப்ரியம் வச்சிருக்கேன்னு உனக்கு புரியலையா..?? நான் இருக்கேன்டா.. நான் இருக்கேன் உனக்கு..!!" அசோக் சொல்ல, மீரா இப்போது அவனை சற்று வித்தியாசமாக பார்த்தாள். "நெஜமா..??" "ம்ம்..!!" "என் மேல ப்ரியமா இருப்பியா..??" "இருப்பேன்..!!" "எப்போவும் என் கூடவே இருப்பியா..??" "இருப்பேன்டா..!!" அசோக் உறுதியாக சொல்ல, முகத்தில் ஒரு நம்பிக்கை ஒளியுடன் மீரா அவனையே பார்த்தாள். ஒரு சில வினாடிகள்..!! பிறகு மீண்டும் அவளுடைய முகம் பட்டென இருண்டது. கண்களில் முணுக்கென்று நீர் துளிர்க்க.. "இ..இல்ல.. நீ இருக்க மாட்ட.. போயிடுவ..!!" என்று விசும்பலாக சொன்னாள். "ஹையோ.. நான்தான் சொல்றேன்ல..?? சாகுற வரை உன்கூடவேதான் இருப்பேன்.. சத்தியம்..!! போதுமா..??" அசோக் தன் தலைமீது கைவைத்து சத்தியம் செய்தான். மீரா இப்போது அழுகையை நிறுத்தினாள். மூக்கு மட்டும் விசும்ப, அசோக்கின் முகத்தையே அமைதியாக பார்த்தாள். பிறகு என்ன நினைத்தாளோ.. உதடுகள் பிரித்து.. மெல்ல.. "அசோக்..!!" என்றாள் ஏக்கமாக. "ம்ம்.." "என்னை கட்டிப் புடிச்சுக்கோ..!!" கைகள் ரெண்டையும் அசோக்கை நோக்கி நீட்டி.. 'என்னை தூக்கிக்கோ மம்மி..' என்று சிறுகுழந்தை ஒன்று தாயிடம் கெஞ்சுவது போல.. ஏக்கமாக சொன்னாள் மீரா..!! அசோக்கின் மனதுக்குள் இப்போது காதல் வெள்ளம் கரை புரண்டு ஓட.. கனிவாக அவளை ஒரு பார்வை பார்த்தான்..!! இதுவரை மீராவை அவன் கட்டியணைத்ததே இல்லை. அவன் மனதுக்குள் ஆசையிருந்தும், மீராவின் குணமறிந்து அந்த ஆசையை அவன் வெளிப்படுத்தியதே இல்லை. வீதியில் நடந்து செல்கையில் விரல்களை கோர்த்துக் கொள்ள கூட, அவளும் அனுமதித்தே இல்லை. இப்போது அவளே தன்னை அணைத்துக்கொள் என்று அழைப்பு விடுக்க, ஆரம்பத்தில் சிறிது தயங்கிய அசோக், பிறகு அவளை ஆரத் தழுவிக் கொண்டான். அவளும் அதற்காகத்தான் காத்திருந்தது மாதிரி அவனை அப்படியே இறுக்கிக் கொண்டாள். தனது மூக்கினை அவனுடைய மார்பில் வைத்து சரக் சரக்கென தேய்த்தவள், பிறகு அந்த மார்பிலேயே முகம் சாய்த்து படுத்துக் கொண்டாள். "என் மேல உனக்கு கோவம் இல்லைல..??" "ம்ஹூம்..!!" "என்னை விட்டு போயிட மாட்டேல..??" "ம்ஹூம்..!!" "நான் என்ன பண்ணாலும்..??"
"ஹஹ.. நீ என்ன பண்ணாலும் உன்னை விட்டு போக மாட்டேன்.. போதுமா..??" "ம்ம்ம்ம்..!!" மீரா இப்போது இன்னும் இறுக்கமாக அசோக்கை அணைத்துக் கொண்டாள். மழையில் நனைந்திட்ட ஆட்டுக்குட்டியென, அவள் தன் மார்போடு அண்டியிருப்பது, அசோக்கிற்கு ஆனந்தமாகவே இருந்தது. அவளுடைய கூந்தலை மென்மையாக வருடி கொடுத்தான். அவனுடைய மனதில் ஒருவித ஆச்சரியம்..!! எந்த நேரமும் முகத்தில் முறைப்பும், பேச்சில் திமிருமாக தெரிகிற மீராவுக்குள்.. இப்படி அன்புக்கு ஏங்குகிற ஒரு குழந்தை இருக்கிறாள் என்பது.. முதன் முறையாக அவனுக்கு தெரிய வந்ததுதான் அந்த ஆச்சரியத்துக்கு காரணம்..!! 'பாவம்.. இவளுடைய குடும்பத்தினர் இவளை புரிந்து கொள்ள தவறிவிட்டனர் போலும்.. அன்பை வெளிக்காட்டுகிற கலையை அவர்கள் அறியவில்லை போலும்.. எப்படி ஏங்கிப்போய் கிடக்கிறாள்..?? இவளுடைய முரட்டுத் தனத்துக்கெல்லாம் அதுதான் காரணமா..?? அன்பு கிடைக்காத ஏக்கம் எல்லாம் ஆத்திரமாய் வெளிப்படுகிறதோ..?? கலங்காதே கண்மணியே.. நானிருக்கிறேன் உனக்காக.. உன்னை நேசிக்க.. உன் குணங்களை பூஜிக்க..!! எனக்கென உன் சுயத்தை நீ இழக்க வேண்டாம்.. திட்டுவாய்.. வாங்கிக் கொள்கிறேன்.. அடிப்பாய்.. தாங்கிக் கொள்கிறேன்..!! உன் கோபம் பொறுக்கிறேன்.. உன் ஆத்திரத்தை அலட்சியம் செய்கிறேன்.. எனது அன்பை உனக்கு உணர்த்துகிறேன்.. என் அம்மா சொன்னது போல..!!' "ஸார்.. தண்ணி..!!" இயல்பாக சொல்லிக்கொண்டே அறைக்குள் நுழைந்த ரூம் சர்வீஸ் பையன், அசோக்கும் மீராவும் இருந்த கோலத்தை கண்டு, அப்படியே மிரண்டு போனான். அவனையும் அறியாமல் அவனுடைய வாய் 'ஓ'வென பிளந்து கொண்டது. அசோக்கிடமும் உடனடியாய் ஒரு பதற்றம். எந்தக் கவலையும் இல்லாமல் அவனை இறுக்கிக் கொண்டு கிடந்த மீராவின் பிடியில் இருந்து, அவசரமாய் விலகிக் கொள்ள முயன்றான். "ஹேய்.. மீரா.." "ம்ஹூம்..!!" அவள் அவனை இன்னும் அதிகமாகவே இறுக்கினாள். "ப்ச்.. விடு..!!" "ம்ஹூம்..!!" "ப்ளீஸ் மீரா.. விடுன்றேல..??" மீராவை வலுக்கட்டாயமாக உதறிக்கொண்டு அசோக் எழுந்தான். நடந்து சென்று பையனின் கையிலிருந்த தண்ணீர் ஜாடியை வாங்கிக் கொண்டான். "வே..வேற ஏதாவது..??" கேட்கும்போதே அவனின் பார்வை கட்டில் மீதிருந்த மீராவிடம் போய் வந்தது. அதை கவனித்து எரிச்சலான அசோக், "ப்ச்.. ஒன்னும் வேணாம்.. கதவை லாக் பண்ணிட்டு கெளம்பு.. காலைல வரை இந்தப் பக்கமே வராத..!!" என்றான் கடுப்பாக.ம்ம்.. புரியுது ஸார்.. வர்றேன்..!!" அவன் ஒரு நமுட்டு புன்னகையுடன் சொல்லிவிட்டு நகர முயல, "ஹேய்.." அசோக் அவனை நிறுத்தினான். "என்ன ஸார்..??" "நீ.. நீ நெனைக்கிற மாதிரிலாம் இங்க ஒன்னும் இல்ல.. பு..புரியுதா..??" "ஹிஹி.. சரி ஸார்.. புரியுது.. ஹிஹி..!!" அவன் நக்கலாக சிரித்துவிட்டு கிளம்பியதிலேயே, நம்பவில்லை என்பது அசோக்கிற்கு புரிந்து போனது. 'ப்ச்..' என்று சலிப்பானவன் தலையை சொறிந்து கொண்டான். கதவு சரியாக லாக் ஆகியிருக்கிறதா என, ஒருமுறை சென்று உறுதி செய்து கொண்டான். கையிலிருந்த ஜாடியை கொண்டு போய் டேபிளில் வைத்தான். வைத்துவிட்டு திரும்பியவன், சற்றே ஷாக் ஆனான். மீரா அவனுக்கு வெகு நெருக்கமாக நின்று கொண்டிருந்தாள். அவளுடைய உடல் போதையில் தள்ளாடிக் கொண்டிருக்க, முகத்தில் ஏதோ ஒரு அவஸ்தை..!! "எ..என்ன மீரா..??" "வா.." முடிக்கும் முன்பே 'உப்ஹ்' என்று அவளுக்கு எதுக்களிப்பு ஏற்பட, முகத்தை சுருக்கி கண்களை மூடிக் கொண்டாள். "வாட்டர் வேணுமா..??" மீரா இப்போது பேசவில்லை. 'ம்ஹூம்' என்பது போல தலையை அசைத்தவள், முகத்துக்கு முன் கையை வைத்து சுழற்றி சைகையால் ஏதோ சொல்ல முயன்றாள். அசோக்குக்கு புரியவில்லை. "பு.புரியல மீரா.. என்னன்னு வாயை தெறந்து சொன்னாத்தான புரியும்..??" "வா..வாமிட்.." சொல்லி முடிக்கும் முன்பே.. மீராவின் நெஞ்சுக்குள் இருந்து ஒரு உந்துதல்..!! மார்பின் மீது கைவைத்து பிடித்துக் கொண்டவள்.. 'ஓவ்..!!' என்று.. வாய் திறந்து வாந்தியே எடுத்துவிட்டாள்.. அப்படியே தன் முன் நின்ற அசோக்கின் மீது..!! அவன் வலுக்கட்டாயமாக அவளுடைய வாய்க்குள் திணித்த உணவெல்லாம்.. ஆல்கஹாலுடன் சேர்ந்து வாந்தியாக வெளிப்பட்டிருந்தது.. அசோக்கின் முகம்.. அவனுடைய டி-ஷர்ட்.. பேன்ட்.. எல்லாம்..!! செய்வதறியாது திகைத்த அசோக்.. முகத்தை ஒருமாதிரி சுளித்தவாறு.. பரிதாபமாக நின்றிருந்தான்..!! "ஸாரி அசோக்.. ஸாரி..!!" குற்ற உணர்ச்சியுடன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே.. மீராவுக்கு மீண்டும் குடலை புரட்ட.. வாயை மூடிக்கொண்டு 'உப்ஹ்' என்று மீண்டும் ஒரு குமட்டல்..!! அவள் திரும்பவும் வாந்தி எடுக்கப் போகிறாள் என்பதை.. இந்தமுறை அசோக் முன்கூட்டியே புரிந்து கொண்டான்..!! ஆனால்.. நின்ற இடத்தை விட்டு அவன் அசையவில்லை.. கண்களை மட்டும் இறுக்கி மூடிக் கொண்டான்..!! "ஓவ்வ்..!!!!" மீரா மறுபடியும் அவன் மீது வாமிட் செய்தாள். அடுத்த நாள் காலை.. மீராவுக்குத்தான் முதலில் விழிப்பு வந்தது. விழிகளை திறப்பதற்கு முன்பே 'வின்வின்'என்று தலை வலிப்பதை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. தலையை பிடித்துக்கொண்டு, கண்களை சுருக்கிப் பார்த்தாள். இடம் புதிதாக இருப்பதை அறிந்து ஒருகணம் துணுக்குற்றாள். இரவு மூன்று ரிப்பீட் வரை அவளுக்கு ஞாபகம் இருந்தது. மற்றவை எல்லாம் நினைவடுக்குகளில் சரியாக பதிந்திருக்கவில்லை. 'என்ன ஆயிற்று அதன் பிறகு..?? எப்படி இங்கே வந்தேன்..??' மீரா குழப்பத்துடனே தலையை திருப்ப, கீழே தரையில் படுத்திருந்த அசோக் பார்வையில் பட்டான். இவளுக்கு முதுகு காட்டி படுத்திருந்தான். மேலே போற்றியிருந்த போர்வை விலகியிருந்தது. இடுப்பில் ஒரு ஜட்டியை தவிர, வேறெதுவும் அவன் அணிந்திருக்கவில்லை. குளிரை தாங்க முடியவில்லை போலிருக்கிறது. கால்கள் இரண்டையும் மடக்கி வைத்து, கைகள் ரெண்டையும் ஒன்றாக்கி தொடைகளுக்குள் செருகி, குழந்தை போல படுத்திருந்தான். வெறும் ஜட்டியுடன் அவன் படுத்திருந்த கோலம்.. மீராவின் மூளையை சுரீர் என்று தாக்கியது.. சுருசுருவென ஒரு ஆத்திரம் அவளுக்குள்.. என்ன நடந்தது என்று நினைவில் இல்லாத குழப்பம்.. ஏதாவது நடந்திருக்குமோ என்று ஒரு பயம்.. தனது மயக்க நிலையை உபயோகப்படுத்தியிருப்பானோ என்று ஒரு சந்தேகம்.. எல்லாம் ஒன்று சேர்ந்து அவளை சூடாக்கி விட.. படுக்கையில் இருந்து விருட்டென எழுந்தாள்..!! கோல்கீப்பர் ஃபுட்பாலை ஓடிவந்து உதைப்பது போல.. அசோக்கின் புட்டத்திலேயே ஓங்கி ஒரு உதை விட்டாள்..!! "எந்திரிடா..!!!" "ஆஆஆஆ..!!" அசோக் பதறியடித்துக் கொண்டு எழுந்தான். எழுந்ததுமே.. தன் எதிரில் மீரா நிற்பதையும்.. தன் உடலில் ஜட்டி தவிர வேறு ஆடை இல்லை என்பதையும்.. உடனடியாய் உணர்ந்து கொண்டான்..!! வெட்கத்தில் கூசிப்போய்.. தரையில் கிடந்த போர்வையை வாரி சுருட்டி எடுத்தான்.. தன் உடம்பில் அவசரமாய் சுற்றிக் கொண்டான்..!! மீராவின் பார்வைக்கு பயந்து.. சற்றே நகர்ந்து.. சுவரோரமாய் சென்று பம்மினான்..!!"என்னடா பண்ணின என்னை..??" மீரா சீற்றமாக கேட்டாள். "என்ன பண்ணேன்னா..??" "நைட் என்ன பண்ணின என்னை..??" "நைட்டா..?? ஒ..ஒன்னும் பண்ணலையே..??" "ஏய்..!! பொய் சொன்ன.. அப்படியே கழுத்தை நெறிச்சு கொன்னுருவேன்..!! உண்மையை சொல்லு..!!" "ஐயோ.. சத்தியமா மீரா.. ஒன்னும் பண்ணல..!! நைட்டு உனக்கு ரொம்ப ஓவராயிடுச்சு.. உன்னால நடக்க கூட முடியல.. அதான் இங்கயே ரூம் எடுத்து.. உன்னை அந்த கட்டில்ல படுக்க வச்சுட்டு.. நான் தரைல படுத்துக்கிட்டேன்.. அவ்வளவுதான்.. வேற எதுவும் பண்ணல..!!" "அப்புறம் ஏன் ட்ரஸ் இல்லாம கெடக்குற..??" "நான்தான ட்ரஸ் இல்லாம கெடக்குறேன்.. நீ ட்ரஸ் இல்லாம கெடந்தாத்தான் தப்பு..!!" "ப்ச்.. கேட்டதுக்கு பதில் சொல்லு.. எங்க உன் ட்ரஸ்லாம்..??" "அதோ.. அங்க.." சேரில் காய்ந்து கொண்டு கிடந்த உடைகளை நோக்கி, அசோக் கை நீட்டினான். மீராவும் திரும்பி பார்த்தாள். "அதை எதுக்கு அங்க அவுத்து போட்ருக்குற..??" மீரா இன்னுமே கோவம் குறையாமல் கேட்க, "ம்ம்.. வேண்டுதலு..!!" அசோக் சலிப்பாக சொன்னான். "இப்போ அறை வாங்க போற நீ..!!" "ஹையோ..!! நைட்டு என் ட்ரஸ் ஃபுல்லா நீ வாமிட் பண்ணிட்ட.. போதுமா..?? பயங்கர ஸ்மெல்.. அதோட எப்படி படுக்குறது.. அதான் அலசி காயப்போட்டுட்டு படுத்திருந்தேன்..!!" "ஓ..!! வாமிட் பண்ணிட்டனா..??" "ஆமாம்..!! அதோ.. அங்க பூரா..!! யப்பா.. எல்லாம் க்ளீன் பண்ணிட்டு படுக்குறதுக்குள்ள.. என்னால முடியல..!! பாத்ரூம்குள்ள போய் பாரு.. உனக்கே புரியும்.. உன் நர்ர்ர்றுமணம்..!!" அசோக் அந்த மாதிரி படபடப்பாக சொன்னதும்தான், மீராவின் கோபம் சற்று தணிந்தது. "அ..அவ்வளவுதான..?? வேற எதுவும் பண்ணலைல..??" "வேற.. உனக்கு வாய், மூஞ்சிலாம் கழுவிவிட்டு.. பெட்ல படுக்க வச்சேன்..!!" "ப்ச்.. அதை கேக்கல..!!" "அப்புறம்..??" "வேற எதுவும்..??" "வேற எதுவும்னா..??" "ஹையோ..!! என்னை டச் பண்ணுனியான்னு கேட்டேன்..!!" "டச்னா..?? ம்ம்ம்.. அ..அது.. ஒ..ஒரே ஒரு தடவை.." "ஒரே ஒரு தடவை..??" "உ..உன்னை ஹக் பண்ணினேன்..!!" அசோக் தயங்கியவாறே சொல்ல, மீரா உடனடியாய் உக்கிரமானாள். "என்னது..?? எவ்ளோ தைரியம் உனக்கு..??" என்று அசோக்கின் தலைமுடியை பிடித்து ஆய்ந்தாள். "ஆஆஆ..!!! ஐயோ.. ஹக்தான் மீரா.. ஹக்கு..!!" "அதான்.. ஏன் பண்ணின..??" "நீதான் பண்ண சொன்ன.. கெஞ்சின..!!" "பொய் சொல்லாத...!!!" "சத்தியமா.. ஆஆஆ..!!! சத்தியமா மீரா.. நம்பு.. ப்ளீஸ்..!!" அசோக் கதற, மீராவுக்கு இப்போது சற்று நம்பிக்கை வந்தது. அவனுடைய தலை முடியை விடுவித்தாள். "ஒழுங்கா உண்மையை சொல்லு.. நானா ஹக் பண்ண சொன்னேன்..??" "நீதான் மீரா.. கையை நீட்டிக்கிட்டு ஏக்கமா சொன்ன..!!" "ஓ.. வேற என்னலாம் சொன்னேன்..??""என்னன்னவோ சொன்ன.. அசோக் குட் பாய், மீரா பேட் கேர்ள்.. என் மேல அன்பு காட்ட யாருமே இல்ல அசோக்.. எப்போவும் என் கூடவே இரு அசோக்.. அப்டி இப்டின்னு..!! நைட் உன்னை பாக்கவே ரொம்ப பாவமா இருந்தது மீரா..!!" அசோக் சொல்ல சொல்ல, மீராவுக்கு இரவு நடந்ததெல்லாம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் நினைவுக்கு வந்தது. நினைவு வர வர.. 'ப்ச்' என்றவாறு தலையை பிடித்துக் கொண்டாள். "ஓ.. காட்..!!!" என்று சலிப்பாக சொன்னாள். சில வினாடிகள் அசோக்கின் முகத்தையே அவஸ்தையாக பார்த்தவள், அப்புறம் திரும்பி நடந்தாள். 'ஓ மை காட்.. ஓ மை காட்..' என்று ஆதங்கமாக முனுமுனுத்தவாறே சென்று, தனது பேகை திறந்தாள். ஏதோ இரண்டு மாத்திரை பட்டைகளில் இருந்து, இரண்டு மாத்திரைகளை கிழித்து எடுத்தாள். வாய்க்குள் போட்டுக்கொண்டு, ஜாடி எடுத்து தண்ணீரை தொண்டைக்குள் சரித்துக் கொண்டாள். "எ..எதுக்கு இப்போ டேப்லட்...??" அசோக் குழப்பமாக கேட்க, "ம்ம்..?? எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு இருக்கனுமா..??" மீரா எரிந்து விழுந்தாள். கொஞ்ச நேரம் அப்படியும் இப்படியுமாய், சலிப்புடன் தலையை அசைத்துக் கொண்டிருந்தாள். அப்புறம் ஏதோ நினைத்தவளாய், அசோக்கிடம் சாந்தமான குரலில் சொன்னாள். "இங்க பாரு அசோக்.. அதுலாம்.. நேத்து ஏதோ போதைல சும்மா உளர்னது.. எதையும் சீரியஸா எடுத்துக்காத.. ஓகே..??" மீரா அவ்வாறு சொன்னதும், அசோக்கின் முகம் பொசுக்கென வாடிப் போனது. "என்னது..?? உளர்னியா..??" "ஆமாம்..!!" "இ..இல்ல.. நம்ப மாட்டேன்.. நீ ஏதோ மறைக்கிற..!! நேத்து நீ கட்டிப் புடிச்சுக்கோன்னு சொன்னப்போ.. அப்படியே.." "ப்ச்.. அதான் சும்மா உளர்னதுன்னு சொல்றேன்ல..?? தேவை இல்லாம அதையே நெனைச்சுட்டு இருக்காத..!! புரியுதா..??" மீரா சீற்றமாக சொல்ல, அசோக் கடுப்பாகிப் போனான். அவளையே சில வினாடிகள் முறைப்பாக பார்த்தான். அப்புறம் தலையை குனிந்து கொண்டு, அவளுக்கு கேட்காமல் வாய்க்குள்ளேயே முணுமுணுத்தான். 'ம்க்கும்.. அதை நெனைக்காம வேற எதை நெனைக்கிறதாம்.. அம்பது நாள் லவ்ல நேத்துதான் ஒரு குட்டி ரொமான்ஸ்.. அதையும் நெனைக்காம.. இந்த சிடுமூஞ்சியை மட்டும் நல்லா ஞாபகம் வச்சுக்கனுமாக்கும்..?? போதை தெளிஞ்ச உடனேயே மரம் ஏறிடுச்சு.. போக்கிரி வேதாளம்..!! கல்யாணத்துக்கு அப்புறம்லாம் குவார்ட்டரை ஊத்திவிட்டாத்தான் மேட்டரே போல..?? எல்லாம் என் தலையெழுத்து..!!' "எய்.. என்ன மொனங்குற..??" மீரா முறைப்பாக கேட்க, "ஒன்னுல்ல..!!" அசோக் சலிப்பாக சொன்னான். "சரி.. எனக்கு ஒரே தலை வலியா இருக்கு.. கீழ போய் ஒரு டீ வாங்கிட்டு வா..!!" "ம்க்கும்.. ஆர்டர் போடுறதுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல..!!" "என்ன ஆச்சு இப்போ உனக்கு..?? சும்மா சும்மா மொனங்குற.. மொறைக்கிற..??" "ஒன்னும் ஆகல..!! டீ வேணும்னா.. நீயே ரிஷப்ஷனுக்கு கால் பண்ணி சொல்லு.. கொண்டு வருவாங்க..!!" "ஓ..!! சரி.. உனக்கு டீ வேணுமா..??" "ஆமாம்..!!! ஸ்ட்ராங்கா..!!!!!" அசோக் வெறுப்பாக சொன்னான். மீரா டெலிபோனை அணுகி ரிஷப்ஷனுக்கு கால் செய்தாள். இரண்டு டீ கொண்டு வருமாறு சொன்னாள். சாவி பார்த்து அறை எண் குறிப்பிட்டாள். பிறகு ரிசீவரை வைத்து விட்டு அசோக்கிடம் திரும்பினாள். "சொல்லிருக்கேன்.. அஞ்சு நிமிஷத்துல கொண்டு வருவாங்க..!!" "சரி.. என் ட்ரஸ்லாம் இந்தப்பக்கம் தூக்கி போடு.. அந்தப் பையன் வந்துடப் போறான்..!!" "எந்தப் பையன்..??" "ரூம் சர்வீஸ் பையன்.. ஏற்கனவே அவனுக்கு ஒரு சந்தேகம்..!!" "என்ன சந்தேகம்..??" "நாம வேற எதுக்கோ ரூம் போட்டு தங்கிருக்கோமோனு..!!" ஓ..!! அவனுக்கு சந்தேகம் வர்ற மாதிரி நீ என்ன பண்ணின..??" மீரா கூலாக கேட்க, அசோக் நிஜமாகவே டென்ஷன் ஆகிப் போனான். "நான் என்ன பண்ணினேன்..?? எல்ல்ல்லாம் நீதான் பண்ணின..!! ச்சை.. என் ட்ரஸ் எடுத்து போடு..!! நான் வேற.. தமிழ் சினிமால ரேப் பண்ண தங்கச்சி கேரக்டர் மாதிரி உக்காந்திருக்கேன்.. இந்த நெலமைல என்னை பாத்தான்னா அவ்வளவுதான்.. கன்ஃபார்மே பண்ணிருவான்..!!" "ஹாஹாஹாஹா..!!!" மீராவால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. சேரில் காய்ந்த அசோக்கின் உடைகளை எடுத்து, அவனிடம் வீசினாள். மீரா எதுவும் தன் வெற்றுடலை பார்த்துவிடப் போகிறாளோ என்ற வெட்கத்துடன்.. பயந்து பயந்து.. மூடிய போர்வைக்குள்ளேயே ஆடை அணிந்து கொண்டான் அசோக்..!! அவனுடைய செய்கைகளை ஓரக்கண்ணால் பார்த்த மீரா.. தன் மனதுக்குள்ளேயே ரகசியமாக சிரித்துக் கொண்டாள்..!! சிறிது நேரத்தில் அந்தப் பையன், ஒரு ப்ளாஸ்டிக் ப்ளேட்டில் இரண்டு டீ கப்புகளுடன் வந்தான். மீராவும் அசோக்கும் ஆளுக்கொரு கப் எடுத்துக் கொண்டார்கள். அவனுடைய முகத்தை ஏறிட கூட விருப்பம் இன்றி அசோக் வேறெங்கோ பார்வையை திருப்பிக் கொண்டான். மீராதான் 'இவன்தான் அவனா..?' என்பது போல அந்தப் பையனை ஏற இறங்க பார்த்தாள். இவள் பார்த்ததும் அந்தப் பையன் ஒரு நமுட்டு சிரிப்பை உதிர்த்தான். மீரா உடனே கடுப்பானாள். "ஏய்.. என்ன சிரிப்பு..??" என எரிச்சலாக கேட்டாள். "ஒ..ஒன்னுல்ல மேடம்..!!" "என்ன ஒன்னுல்ல..?? இங்க பாரு.. நீ நெனைக்கிற மாதிரிலாம் எதுவும் இல்ல..!! அவன் கீழ படுத்துக்கிட்டான்.. நான் மேல..!! புரியுதா..??" "ஹிஹி.. ஹிஹி.. ம்ம்.. புரியுது..!!" அவன் அதற்கும் ஒரு இளிப்பை வெளிப்படுத்திவிட்டு வெளியேறினான். எதற்காக அவன் சிரிக்கிறான் என்று குழம்பிய மீரா, அவன் போகும் வரை அவனது முதுகையே எரிச்சலாக பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு அசோக்கிடம் திரும்பி, "இந்தப் பையன் என்ன லூஸா..?? சும்மா சும்மா சிரிக்கிறான்..??" என்று கேட்டாள். அசோக் ஏற்கனவே தலையில் கைவைத்தவாறு நொந்து போய் அமர்ந்திருந்தான். இப்போது மீராவிடம் சலிப்பாக சொன்னான். "ம்ம்.. ஏன் சிரிக்க மாட்டான்..?? நான்தான் தத்தின்னா.. நீ என்னை விட பெரிய தத்தியா இருக்குற மீரா..!!" "எ..என்ன சொல்ற..??" "நான் என்னத்த சொல்றது..?? நீ அவன்கிட்ட என்ன சொன்னன்னு.. கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாரு..!!" அசோக் சொல்லிவிட்டு எழுந்து செல்ல, 'அப்படி என்ன நான் தப்பா சொன்னேன்..?' என்று, மீரா இப்போது தலையை சொறிய ஆரம்பித்தாள். வடபழனி பேருந்து நிலையத்தை ஒட்டி செல்கிற குமரன் காலனி மெயின் ரோட்டில்தான் இருக்கிறது அந்த அரசு பொது மருத்துவமனை. அசோக்கின் ஆபீஸில் இருந்து நடக்க ஆரம்பித்தால் பத்தே நிமிடங்களில் மருத்துவமனையை அடைந்துவிடலாம். கொத்து கொத்தாக மனித தலைகளுடன் மருத்துவமனையின் முன்புறம் எப்போதும் பிஸியாகவே இருக்கும். பக்கவாட்டில் செல்கிற அந்த அகலமான சிமெண்ட் சாலையிலேயே சென்றால்.. ஆள் நடமாட்டம் அதிகமற்ற.. அமைதியான சூழலுடன் கூடிய.. மருத்துவமனையின் மறுபுறத்தை காண நேரிடும்..!! அங்குதான் இருக்கிறது அரசுக்கு சொந்தமான அந்த பொது மையம்.. தற்கொலை தடுப்பு ஆலோசனை மையம்..!! மன அழுத்தம்தான் தற்கொலைக்கு மிக முக்கிய காரணம்..!! எதிர்பாராத ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்படும்போது.. எந்த மனிதனுக்குமே அந்த மாதிரியான மன அழுத்தம் உருவாக வாய்ப்பு உள்ளது..!! அந்த அழுத்தத்தை அடக்கி ஆள முடியாதவர்கள்.. உடைந்து போய்.. உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்..!! யாரும் பல நாட்களால யோசித்து முடிவெடுத்து.. பிறகு தற்கொலை செய்து கொள்வதில்லை..!! எதிர்பாராத ஒரு சூழ்நிலை.. எதிர்காலம் சூனியமாகிவிட்டது போன்றதொரு தோற்றம்.. அதை நினைத்து நினைத்து அதிகரிக்கிற மன அழுத்தம்.. கண நேர முடிவுடன் கயிறு தேட ஆரம்பித்து விடுகிறார்கள்..!! மனிதர்களின் மன அழுத்தத்துக்கு மனோதத்துவ ஆலோசனை வழங்குவதுதான் அந்த மையத்தின் நோக்கம். தற்கொலை எண்ணம் தோன்றுபவர்களும், தற்கொலையில் இருந்து தப்பி பிழைத்தவர்களும் அங்கு கவுன்சிலிங் பெறுவர். வாழும் கலையை கற்றுக் கொடுக்க, வகுப்புகள் நடைபெறும். உடற்பயிற்சி, தியானம், யோகா போன்ற மனதை லேசாக்கும் பயிற்சிகளும் உண்டு. கிஷோரின் அக்கா பவானி.. ஒரு மனோதத்துவ நிபுணி..!! அவள்தான் மேலே குறிப்பிட்ட அந்த மையத்தின் தலைமை நிர்வாகி..!! இப்போது.. தனது அலுவலகத்துக்கு தன்னை தேடி வந்திருக்கும் தம்பிக்கும்.. தம்பியின் நண்பன் அசோக்கிற்கும்.. தேநீர் அளித்து உபசரித்துக் கொண்டிருந்தாள்..!! மூவரும் அமைதியாக தேநீர் உறிஞ்சினர். சிறிது நேரம் அங்கு நிலவிய மவுனத்தை பவானிதான் முதலில் உடைத்தாள்.. அசோக்கை பார்த்து சற்றே கேலியான குரலில் கேட்டாள்..!! "ஹ்ம்ம்.. தொரையை இப்போலாம் பாக்கவே முடியிறது இல்ல.. வீட்டுப்பக்கம் வர்றதே இல்ல..??" பவானியின் கேள்விக்கு அசோக் பதில் சொல்வதற்கு முன்பே, கிஷோர் முந்திக்கொண்டு சொன்னான். "அவனுக்கு எங்கக்கா இப்போலாம் வீட்டுக்கு வர நேரம் இருக்கு..?? அதான்.. லவ் பண்ண ஆரம்பிச்சுட்டார்ல..?? அந்தப் பொண்ணோட ஊர் சுத்தவே நேரம் சரியா இருக்கு..!!" "ஹ்ம்ம்.. பொண்ணு என்னடா பண்றா..??" "இஞ்சினியரிங் முடிச்சுட்டு.. கம்ப்யூட்டர் கோர்ஸ் பண்ணிட்டு இருக்குறா..!!" இப்போது அசோக்கே பவானிக்கு பதில் சொன்னான். "ஓ.. கல்யாணம் எப்போ பண்ணிக்கிறதா ஐடியா..?? உனக்காக என் தம்பிய வேற வெயிட்டிங் லிஸ்ட்ல போட்டு விட்டுட்டிங்க..??" "இப்போத்தான பழக ஆரம்பிச்சிருக்கோம்.. அதுக்குள்ள கல்யாணம்னா..?? இன்னும் அவ கேரக்டரையே நான் முழுசா புரிஞ்சு முடிக்கல.. அதுக்கே இன்னும் அஞ்சு வருஷம் ஆகும் போல இருக்கு..!!" "அவ்வளவு காம்ப்ளிக்கேட்டட் கேரக்டரா அவ..??" "நீங்க சைக்யாட்ரிஸ்ட்தான..??" "ம்ம்..!!" "கொஞ்ச நாள் அவகூட பழகி பாருங்க.. சைக்கோவா மாறிடுவிங்க..!!" "ஹாஹா.. அப்படி என்ன பண்றா..??" "என்னத்த சொல்றது.. எந்த நேரம் என்ன பண்ணுவான்னே ஒன்னும் புரியாது.. ஏன் இப்படிலாம் பண்றேன்னு கூட கேள்வி கேட்க முடியாது.. ஏதாவது கேட்டோம்னா பொசுக்குன்னு கோவம் வந்துடும்.. அப்புறம் ஒருபய பக்கத்துல நிக்க முடியாது.. அரை கிலோமீட்டருக்கு அந்தப்பக்கம்தான் நிக்கணும்..!!" "ம்ம்.. கோவில்பட்டி பொண்ணுல.. அப்டித்தான் கோவமா இருப்பாங்க..!!" பவானி இயல்பாக சொல்ல, அசோக் புருவத்தை சுருக்கினான். "கோ..கோவில்பட்டியா..?? யாரு கோவில்பட்டி..??""உன் ஆளுதான்டா.. கோவில்பட்டிதான அவ சொந்த ஊரு..?? பேர் கூட ஏதோ வீரலட்சுமின்னு கிஷோரும் சாலமனும் அன்னைக்கு சொன்னாங்களே..??" என்ற பவானி தம்பியிடம் திரும்பி, "என்னடா.. கரெக்ட்தான..??" என்றாள். கிஷோர் அல்ரெடி வேறெங்கோ பார்வையை திருப்பி இருந்தான். அசோக் இப்போது பக்கவாட்டில் திரும்பி நண்பனை முறைத்தான். 'ஏண்டா.. என் கேர்ள் ஃப்ரண்டுக்கு நீங்க நிக் நேம் வச்சு வெளையாடுறீங்களா..?? கோவில்பட்டி வீரலட்சுமியா..?? அவ முன்னாடி ஸ்டெடியா நிக்க கூட உங்களுக்குலாம் துப்பு இல்ல.. அவளுக்கு பட்டப்பேர் வச்சு கேலி பண்றீங்களா..?? குடுக்குறண்டா.. அவகிட்ட உங்களை போட்டுக் குடுக்குறண்டா..!!' என்று மனதுக்குள்ளேயே கருவிக் கொண்டான். அப்புறம் பவானியிடம் திரும்பி, "இல்லக்கா.. அவ சொந்த ஊரு கோவில்பட்டிலாம் இல்ல.. காரைக்குடி..!! அவ பேரு மீரா..!!" என்றான். "ஹையோ.. அசோக்..!! உனக்கு எத்தனை தடவை சொல்றது.. இனிமே அக்கான்னு கூப்பிடாதன்னு..?? மொறையை மாத்தாதடா..!!" பவானி பேச்சை வேறுபக்கம் திருப்பும் விதமாக சொன்னாள். அசோக்கோ பட்டென டென்ஷனாகிப் போனான். "யாரு..?? நானா மொறையை மாத்தினேன்..?? உங்க தம்பி மாத்திட்டான்க்கா..!! எட்டு வருஷமா உங்களை அக்கான்னு கூப்பிட்டுட்டு இருக்கேன்.. இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் நீங்க எனக்கு அக்காதான்.. என்னை பொறுத்தவரை ஃப்ரண்டோட சிஸ்டர் எப்போவும் எனக்கு சிஸ்டர்தான்..!! சில கருகாலிப்பயலுகளுக்கு வேணா அதுலாம் ஒரு மேட்டரே இல்லாம இருக்கலாம்..!!" அசோக் அவ்வாறு சொன்னதும், கிஷோருக்கு சுருக்கென கோவம் வந்தது. "ஹேய்.. யாருடா கருங்காலி..??" என்று அசோக்கிடம் சீறினான். "உன்னைத்தாண்டா சொல்றேன் வெண்ணை..!!" அசோக்கும் பதிலுக்கு சீறினான். "நான் என்னடா தப்பு பண்ணினேன்..?? எதுக்கெடுத்தாலும் என்னையே வந்து நொட்டை சொல்லிட்டு இருக்குற..?? ஏன்.. உன் தங்கச்சியை போய் இதெல்லாம் கேக்குறதுதான..?? சும்மா இருந்தவன் மனசுல ஆசையை வளர்த்து.. கெடுத்து குட்டிச்சுவர் ஆக்குனது உன் தங்கச்சிதான்.. ஞாபகம் வச்சுக்கோ..!!" "ஹ்ஹ.. இந்தக்கதையலாம் வேற யார்ட்டயாவது போய் சொல்லு..!! நீ எந்த மாதிரிலாம் ஐஸ் வச்சு.. என் தங்கச்சி மனசுல ஆசையை கிண்டி விட்டன்னு எனக்கு நல்லா தெரியுன்டா..!! ஃப்ராடுப்பயலே..!!" "யாரு.. நானா ஃப்ராடு..?? என்னை சொல்றியே.. உன் ஆளு எழுதுன மொக்கை கவிதைக்கு அர்த்தம் கூட தெரியாம.. ஆஹா ஓஹோன்னு அவளை பாராட்டுனியே.. அதை என்ன சொல்றது.. நான் ஃப்ராடுன்னா.. நீ 420-டா ..!!" "அப்போ நீ மொள்ளமாறி..!!" "நீ முடிச்சவிக்கி..!!" "அடச்சை.. நிறுத்துங்கடா.!!" பவானி அந்த மாதிரி பொறுமையற்று கத்தியதும்தான், அசோக்கும் கிஷோரும் அமைதியானார்கள். "ஏண்டா.. கவர்மண்ட் ஒரு பெரிய பொறுப்பை என்னை நம்பி ஒப்படைச்சிருக்கு.. நான் அதை உங்களை நம்பி ஒப்படைச்சிருக்கேன்.. நீங்க என்னடான்னா சின்னப்புள்ள மாதிரி சண்டை போட்டு இருக்கீங்க..??" "................" கிஷோரும் அசோக்கும் வாயை மூடிக்கொண்டு உர்ரென்று அமர்ந்திருந்தனர். "நான் சொல்றதை கொஞ்சம் கவனமா கேளுங்க.. 'Suicide Prevention Awareness' பத்தி நீங்க எடுக்கப் போற இந்த டாகுமன்ட்ரிய.. இந்தியால இருக்குற எல்லா லாங்குவேஜ்லயும் டப் பண்ணப் போறாங்க.." "ம்ம்.. தெரியும் தெரியும்.. 'ஒரிஸா மாநிலத்தை சேர்ந்த இவர் கூறுகிறார்..' அப்டின்னு சரோஜ் நாராயணஸ்வாமி சொல்வாங்களே.. அந்த மாதிரிதான..??" அசோக் மெல்லிய குரலில் கேலியாக சொல்ல, பவானி அவனை முறைத்தாள். "என்ன.. கிண்டலா இருக்கா..?? இந்தியால இருக்குற மூலை முடுக்குலாம் உங்க டாகுமன்ட்ரி ஓடப் போகுது.. டிவின்னா என்னன்னே தெரியாத பழங்குடி கிராமத்துல கூட ப்ரொஜக்டர் வச்சு ஓட்டப் போறாங்க.. எவ்வளவு பெரிய விஷயம் இது.. எவ்வளவு பெரிய ஆப்பர்ச்சூனிட்டி உங்களுக்கு..?? நீங்க என்னடான்னா கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம..??" "இங்க பாருங்க பவானிக்கா.. மத்த விஷயத்துல நாங்க எப்படியோ.. ஆனா வேலை விஷயத்துல கரெக்டா இருப்போம்.. அதுலாம் நீங்க வொர்ரி பண்ணிக்க வேணாம்..!!" அசோக் அந்த மாதிரி சமாளிப்பாக சொன்னதும், பவானி இப்போது சற்றே சாந்தமானாள். "சரி.. வேலையை எப்போ ஆரம்பிக்கிறீங்க..??" "இன்னைக்கே..!!" "எப்போ முடியும்..??" "இன்னும் பத்து நாள்ல..!!"ஏண்டா.. பத்து நிமிஷம் ஓடுற டாகுமன்ட்ரிக்கு.. பத்து நாள் டைம் வேணுமா உனக்கு..??" "ரெண்டு மணி நேரம் ஓடுற படத்தை.. ரெண்டரை வருஷமா எடுக்குறது இல்லையா.. அந்த மாதிரிதான் இதும்..!! பர்பஃக்ஷன் ரொம்ப முக்கியம்க்கா..!!" "ஹ்ம்ம்.. சரி.. டாகுமன்ட்ரி எந்த மாதிரி ஷூட் பண்ணப் போறேன்னு.. ஏதும் ஐடியா வச்சிருக்கியா..??" பவானிக்கு அசோக் பதில் சொல்வதற்குள், கிஷோர் இடையில் புகுந்து சொன்னான். "ம்க்கும்.. இவன்கிட்டயா ஐடியா கேக்குற..?? 'ஓப்பன் பண்ணதுமே.. தவுசண்ட் ஃபீட் ஹைட்ல இருந்து ஒருத்தர்.. அப்படியே தலைகுப்புற விழுந்து தற்கொலை பண்ணிக்கிறதை.. டாப் ஆங்கிள்ள காட்டுறோம்.. அப்புறம் அந்த ஆள் தலை ரெண்டா பொளந்து.. செவப்பு கலர்ல ப்ளட் குபுகுபுன்னு வர்றதை க்ளோசப்ல போய் காட்டுறோம்..'னு சொல்வான் பாரு..!!" கிஷோரின் கிண்டல் அசோக்கிற்கு எரிச்சலை கிளப்பி விட்டது. "ஏய்.. அடங்குடா..!! எங்க க்ரியேட்டிவா இருக்கனும்.. எங்க இன்ஃபர்மேடிவா இருக்கனும்னு.. எங்களுக்கு தெரியும்..!! இமேஜின் பண்ணினதை இன்ரஸ்டிங்கா சொல்லவும் தெரியும்.. நாட்டுல உள்ள பிரச்சனையை நச்சுன்னு அப்பட்டமா காட்டவும் தெரியும்..!!" "ஹஹ.. கிழிச்ச..!!" "நீ மூடு..!!" மறுபடியும் அவர்களுக்குள் வாய்ச்சண்டை மூள, பவானி எரிச்சலுற்றாள். "ஐயயே.. ஒரு நிமிஷம் கூட கேப் விடாம சண்டை போடுறீங்க.. எப்படிடா எட்டு வருஷம் ஃப்ரண்டா இருக்கீங்க..??" "ஹ்ஹ.. நீங்க வேணா பாப்புலர் சைக்யாட்ரிஸ்டா இருக்கலாம் பவானிக்கா.. ஆனா பசங்க சைக்காலஜிலாம் உங்களுக்கு புரியாது.. விட்டுடுங்க.. இது வேற உலகம்..!!" "ஹ்ம்ம்.. எப்படியோ போங்க.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க.. டாகுமன்ட்ரி பத்தி என்ன ப்ளான் வச்சிருக்கீங்க..??" "நான்தான் ஃபோன்லயே சொன்னேன்லக்கா.. இங்க கவுன்சிலிங் வர்றவங்க கூட நான் பேசணும்.. அப்படி பேசினா எனக்கு கொஞ்சம் ஐடியா கெடைக்கும்.. அதுக்கு மொதல்ல அரேஞ்ச் பண்ணுங்க..!!" "ம்ம்.. ஓகே..!!" சொன்ன பவானி டெலிபோன் எடுத்து எண்களை அழுத்தினாள். 'ஹலோ மும்தாஜ்..' என்றாள். 'சொன்னேன்ல.. அவங்க வந்திருக்காங்க..' என்றாள். இரண்டு மூன்று 'ஓகே'களை உதிர்த்தாள். 'அதனால பரவால..' என்றாள் இடையில் ஒருமுறை. இறுதியாக 'சரி.. அப்போ கெளம்பி வர்றோம் மும்தாஜ்.. என்ன விஷயம்னு நீங்க எல்லார்ட்டயும் கொஞ்சம் எக்ஸ்ப்ளைன் பண்ணி வச்சிருங்க.. தேங்க்ஸ் மும்தாஜ்..' என்றுவிட்டு ரிஸீவரை அதனிடத்தில் வைத்தாள். "யாருக்கா அது.. மும்தாஜ்..??" அசோக்கின் குரலில் ஒருவித எள்ளல் தொனித்தது. "இங்க கவுன்சிலிங் வர்றவங்களுக்கு.. ஆர்ட் ஆஃப் லிவிங் க்ளாஸ் எடுக்குற ட்யூட்டர்..!!" "ஓ..!! இந்த.. 'வாழ்க்கை ரொம்ப அற்புதமான விஷயம்.. தற்கொலை பண்ணிக்கிறது பாவம்..' அப்டின்னு அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றவங்களா..?? நான் கூட 'மல மல மருதமல'ன்னு டவல் வச்சுட்டு டான்ஸ் ஆடுவாங்களே.. அவங்களோன்னு நெனச்சுட்டேன்.. ஹிஹி..!!" கிஷோரின் கிண்டலை பவானி ரசிக்கவில்லை. கண்களை இடுக்கி கடுமையாக அவனை முறைத்தாள். பிறகு இறுக்கமான குரலில் சொன்னாள். "மும்தாஜ் ஒரு காலத்துல என்னோட பேஷன்ட்.. மும்பை கலவரத்துல பாதிக்கப்பட்ட பொண்ணு.. அவ குடும்பத்துல எல்லார் கண் முன்னாடியும் கேங் ரேப் பண்ணப்பட்டவ.. அப்புறம் இவ கண் முன்னாடியே குடும்பத்துல இருக்குற எல்லார் கழுத்தையும் கத்தியால அறுத்து போட்டாங்க.. இவ கழுத்தையும்தான்..!! இவ மட்டும் பொழைச்சுக்கிட்டா.. அதுக்கப்புறம் அஞ்சு தடவை சூசயிட் பண்ணிக்க ட்ரை பண்ணிருக்கா.. ஆயுசு கெட்டி.. எல்லா தடவையும் யாரோ காப்பாத்திட்டாங்க..!! அங்க இங்க சுத்தி.. கடைசியா ட்ரீட்மன்ட்டுக்கு இங்க வந்து சேர்ந்தா.. நான்தான் அவளுக்கு ட்ரீட்மன்ட் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமா மாத்தினேன்.. இங்க ட்யூட்டரா வேலையும் வாங்கி குடுத்தேன்..!! இப்போ.. தன்னம்பிக்கையோட ஒரு வாழ்க்கை வாழறா.. 'தற்கொலை பண்ணிக்கிறது தப்பு..'ன்னு, இங்க வர்றவங்களுக்கு புரிய வைக்கிற புனிதமான காரியத்தை செஞ்சுட்டு இருக்கா..!! உங்களுக்கு கிண்டலா இருக்குல..??" "..............." ஸ்தம்பித்துப் போன நிலையில் இருந்த அசோக்குக்கும், கிஷோருக்கும் பேச வார்த்தையில்லை. "இந்த மாதிரி இங்க இன்னும் நெறைய பேர் இருக்காங்க.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கதை.. உங்களுக்கு இதுலாம் புரியாதுடா.. இது வேற உலகம்.. இந்த உலகத்துல இருக்குற வலியும், வேதனையும் ஒரு பர்சன்டேஜ் கூட உங்களுக்கு புரியாது..!! உங்களை நம்பி இந்த டாகுமன்ட்ரி வேலையை குடுத்திருக்கேன்.. என்ன லட்சணத்துல எடுத்து வைக்கப் போறீங்களோ தெரியல.. எந்திரிச்சு வாங்க..!!" படபடவென பொரிந்து தள்ளிய பவானி, படக்கென சேரை விட்டு எழுந்தாள்.. அசோக்கும் கிஷோரும் உர்ரென்ற முகத்துடனே உடன் எழுந்தார்கள்..!! அந்த நீளமான காரிடாரில்.. பவானி விடுவிடுவென கம்பீரமாக நடந்து செல்ல.. அவளுக்கு இரண்டடி இடைவெளிவிட்டு.. அசோக்கும் கிஷோரும் ஆளுக்கொரு புறமாய்.. அவளை பின் தொடர்ந்தனர்..!! பவானி ஆதங்கத்துடன் பேசிக்கொண்டே முன்னால் நடக்க.. இவர்கள் அமைதியாக 'உம்' கொட்டியவாறே உடன் நடந்தனர்..!!"சூசயிட்ன்றது.. டெம்போரரி ப்ராப்ளத்துக்கான பெர்மனன்ட் சொல்யூஷன்தான்..!! பட்.. டெம்போரரியா இருந்தாலும், அந்த ப்ராப்ளத்தை நாம அசால்ட்டா நெனைக்க கூடாது..!!" ".........." "தற்கொலை பண்ணிக்கிறவங்கலாம் முட்டாளுங்க.. கோழைங்க.. லைஃபோட மீனிங் தெரியாதவங்கன்னு.. ஈஸியா சொல்லிட்டு நாம க்ராஸ் பண்ணி போயிட முடியாது..!! வேர்ல்ட் வைடா.. வருஷத்துக்கு பத்து லட்சம் பேர் சூசயிட் பண்ணிக்கிறாங்க.. ஃபார்ட்டி செகண்டுக்கு ஒரு உயிரை சூசயிடால இழந்துட்டு இருக்கோம்.. அட்டம்ப்ட் பண்ணினவங்க எண்ணிக்கை, செத்துப் போனவங்களோட எண்ணிக்கையை விட பத்து மடங்காவது இருக்கும்..!! அவ்வளவு பேரும் முட்டாளா.. அவ்வளவு பேரும் கோழைங்களா..?? I Don't Buy That..!!" ".........." "சின்ன சின்ன விஷயங்களுக்காக தற்கொலை பண்ணிக்கிறவங்க இருக்கத்தான் செய்றாங்க.. ஆனா நெறைய தற்கொலைகளுக்கு பின்னாடி.. ஸ்ட்ராங்கான காரணம் இருக்கு.. இந்த சமுதாயத்தோட பங்கு இருக்கு..!! சமுதாயத்தை எங்களால மாத்தமுடியாது.. ஆனா.. சாக நெனைக்கிற அந்த பாவப்பட்ட மனுஷங்க மனசை மாத்த முடியும்.. தன்னம்பிக்கையை கொடுக்க முடியும்.. அதைத்தான் இங்க பண்ணிட்டு இருக்குறோம்..!!" ".........." காரிடாரின் வலதுபுறம் திரும்பியதுமே, முதலில் இருந்த அந்த அறைக்குள் பவானி நுழைந்தாள். அசோக்கும் கிஷோரும் அவளை பின் தொடர்ந்தனர். "இவங்கதான் மும்தாஜ்..!!" என்று பவானி அந்த நடுத்தர வயது பெண்ணை அறிமுகப் படுத்தி வைக்க, அசோக்கும் கிஷோரும் அவர்களையும் அறியாமல் அந்த மும்தாஜிற்கு கைகூப்பி வணக்கம் வைத்தனர். அப்புறம் கொஞ்ச நேரம் அந்த மும்தாஜுடன் பேச்சு. பிறகு அவளுடைய உதவியுடன், அன்று கவுன்சிலிங் வந்திருந்தவர்களுடன், தனித்தனியாக தனியறையில் மீட்டிங். 'எந்த மாதிரியான சூழ்நிலையால் தற்கொலைக்கு தள்ளப்பட்டார்கள்..? எந்த மாதிரியான முயற்சியை மேற்கொண்டார்கள்..? அவர்களுக்கு பிடித்தமான உலகம் எப்படி இருக்க வேண்டும்..?' என்பது மாதிரியான கேள்விகளை அசோக் கேட்க, அவர்கள் பதில் சொன்னார்கள். அவர்களுடைய அனுமதியுடன் கிஷோர் அதை படம் பிடித்துக் கொண்டான். "எனக்கு படிப்பு வரலண்ணா.. அதுக்கு நான் என்ன பண்ணுவேன்..?? எல்லாரும் எவ்வளவு கேவலமா பேசுவாங்க தெரியுமா..?? எதுக்கெடுத்தாலும் அதையே சொல்லி சொல்லி, குத்தி காட்டிட்டு இருப்பாங்க.. 'எருமை மாடு மேய்க்கத்தான் இவன் லாயக்கு.. எப்படித்தான் திங்கிற சோறு உனக்கு செரிக்குதோ..' அப்டி இப்டின்னு..!! 'இவன் படிக்காத பையன் இவன்கூட சேர்ந்தா நீ கெட்டு போயிடுவ'ன்னு சொல்லி.. என் ஃப்ரண்ட்சை கூட எங்கிட்ட இருந்து பிரிச்சுட்டாங்கண்ணா.. எனக்குன்னு யாருமே இல்லாம, நான் என்னண்ணா பண்ணுவேன்..?? சத்தியமா சொல்றேண்ணா.. 'இந்தத்தடவை எப்படியாவது பாஸ் ஆயிடனும்'னு.. நைட்லாம் கண்ணுமுழிச்சு ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சேன்.. அப்படியும் ஃபெயில் ஆயிட்டேன்.. அதுக்கு நான் என்னண்ணா பண்ணுவேன்..?? படிப்பு வராதது பாவமா..?? உலகத்துல வாழ்றதுக்கு எனக்கு அருகதை இல்லையா..??" எஸ்.எஸ்.எல்.ஸி எக்ஸாமிலும் அதைத்தொடர்ந்து தற்கொலை முயற்சியிலும் தோல்வியடைந்த, அந்த அரும்பு மீசை மாணவன் கேட்ட கேள்விகளுக்கு, அசோக்கிடம் சரியான பதில் இல்லை. திகைப்பாக அவனையே பார்த்துக் கொண்டிருந்த போதுதான், அசோக்கின் செல்போன் கிணுகிணுத்தது. எடுத்து பார்த்தான். மீரா அழைத்திருந்தாள். கால் பிக்கப் செய்தான். இவன் "ஹலோ" என்றதுமே, "ஆவிச்சி ஸ்கூல்.. அஞ்சு நிமிஷம் டைம்.. கெளம்பி வா..!!"
என்று அவசரமாய் சொன்ன மீரா, உடனே காலை கட் செய்தாள். அசோக் 'ப்ச்..' என்று எரிச்சலானான். மீண்டும் அவளுக்கு கால் செய்தான். "ஹலோ.." - இது மீரா "ஹேய் மீரா.. நான் இங்க கொஞ்சம் வேலையா.." "ப்ச்.. வான்னு சொல்றேன்ல.. வா..!!" அவ்வளவுதான்..!! மீண்டும் கால் கட்..!! அசோக் திரும்ப அவள் எண்ணுக்கு தொடர்பு கொள்ள, செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப் பட்டிருந்தது..!! 'ஷப்பாஆஆ.. முடியல..' என்று தலையை சொறிந்து கொண்டான். பிறகு கிஷோரை திரும்பி பரிதாபமாக பார்த்தான். அவனுடைய நிலைமையை உடனடியாய் புரிந்துகொண்ட கிஷோர், "சரி கெளம்பு.. நான் பாத்துக்குறேன்..!!" என்றான். அதன்பிறகு ஒரு அரை மணி நேரம் கழித்து.. பூந்தமல்லி ஹைரோடில் போரூரை தாண்டியதும்.. வலதுபுறம் திரும்பினால் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் வந்து சேரும் அந்த ஏரி..!! ஏரியின் ஒருபக்கம் சாலை.. அடுத்த பக்கம் எங்கிலும் அடர்த்தியாய் பச்சை பசேலென்ற மரங்கள்..!! குளுமையாக.. பசுமையாக.. அமைதியாக இருந்தது அந்த பகுதி..!! ஏரியின் இந்தப்புறம் இருந்து அந்தப்புறம் செல்வதற்காக.. மரப்பலகைகளால் ஆன பாலம் அமைக்கப்பட்டிருந்தது..!! இருபுறமும் மூன்றடி உயரத்திற்கான கைப்பிடி தடுப்புகளுடன்.. இக்கரையில் இருந்து அக்கரை வரை நீண்டிருந்தது.. அந்த மரப்பாலம்..!! ஏரியில் நீர் நிறைந்து போயிருக்க.. இப்போது நீரின் மேற்பரப்புக்கும், பாலத்தின் அடிப்பரப்புக்கும்.. ஐந்து அடிகளே இடைவெளி..!! அசோக் பைக்கை நிறுத்தியதும், மீரா கீழே இறங்கிக் கொண்டாள். அவனை எதிர்பார்க்காமல் பாலத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். பைக்குக்கு ஸ்டாண்ட் இட்டு நிறுத்திய அசோக், மெல்ல அவளை பின்தொடர்ந்தான். பாலத்தில் ஏறுவதற்கு முன்பாக, கீழே கிடந்த சில கற்களை மீரா கைகளில் பொறுக்கிக் கொண்டாள். பாலத்தில் ஏறியதும், அந்தக் கற்களை ஒவ்வொன்றாக, நீருக்குள் தூரமாய் வீசி எறிந்தாள். 'பொலக்.. பொலக்..' என்ற சப்தத்துடன் கற்கள் நீருக்குள் மூழ்கிப் போவதை, இங்கிருந்தே ரசித்தாள். குழந்தைத்தனமான அவளுடைய செய்கையை, ஒரு புன்னகையுடன் பார்த்தவாறே அசோக் அவளுக்கு பின்னால் நடந்து கொண்டிருந்தான். கற்கள் தீர்ந்து போனதும். மீரா திடீரென திரும்பி அசோக்கிடம் சொன்னாள். "அந்த கவாஸாகி ஆட் நேத்து டிவில பார்த்தேன்டா.. செமையா இருந்தது..!! நீதான் அந்த ஆட் ஷூட் பண்ணினதுன்னு.. சத்தியமா என்னால நம்பவே முடியல..!! கிரேட் வொர்க் மேன்..!!" "தேங்க்ஸ்..!!" அசோக் மெலிதாக புன்னகைத்தான். "ஹ்ம்ம்.. தென்..?? வாட் எபவுட் த நெக்ஸ்ட் ப்ராஜக்ட்..??" "சூசயிட்..!!" "சூசயிடா..?? என்ன.. நீ அடுத்து எழுத போற ஸ்க்ரிப்டுக்கு டைட்டிலா..?? என் படத்தை பாக்குறதும்.. இதுவும் ஒண்ணுதான்னு சிம்பாலிக்கா சொல்லப் போறியா..?? ஹாஹாஹாஹா..!!" சொல்லிவிட்டு மீரா சிரிக்க, அசோக் கடுப்பானான். "ஹிஹி.. வெரி ஃபன்னி..!!" என்று பலிப்பு காட்டினான். "பின்ன என்ன..?? சும்மா சூசயிட்னா என்ன அர்த்தம்..??" "ஒரு டாகுமன்ட்ரி பண்ணப் போறோம் மீரா.. 'Suicide Prevention Awareness' பத்தி..!!" "ஓ..!! யாரு க்ளையன்ட்..??" "கவர்மண்ட்..!!" "ஹ்ம்ம்.. என்ன திடீர்னு.. அட்வர்டைஸ்மன்ட் விட்டுட்டு டாகுமன்ட்ரில எறங்கிட்ட..??" "அதனால என்ன..?? நல்ல காரியம்னு தோணுச்சு.. அதான்..!! நீ கால் பண்றப்போ கூட அந்த சென்டர்ல தான் இருந்தேன்.. அங்க கவுன்சிலிங் வந்தவங்ககூட பேசிட்டு இருந்தேன்..!! ச்சே.. அவங்கல்லாம் எவ்வளவு பாவம் தெரியுமா.. ஒவ்வொருத்தர் பின்னாடியும் ஒவ்வொரு கதை இருக்கு மீரா.. நாமலாம் எவ்வளவோ லக்கி..!! இப்போ நாம பேசிட்டு இருக்குற இந்த நிமிஷத்துல கூட.. உலகத்துல ஏதோ ஒரு மூலைல யாரோ ஒருத்தர் சூசயிட் பண்ணிட்டு இறந்திருப்பாங்க..!! நான் எடுக்கப்போற இந்த டாகுமன்ட்ரி பாத்து.. அட்லீஸ்ட் ஒருத்தராவது அந்த தற்கொலை எண்ணத்தை கைவிட்டா.. அது எவ்வளவு பெரிய விஷயம்..??" "ஹ்ம்ம்.. சூசயிட் பத்தி நெறைய விஷயம் தெரிஞ்சுக்கிட்ட போல இருக்கு..??" "ம்ம்.. ஆமாம்.. ஒரு இன்ட்ரஸ்டிங் கோட் கூட தெரிஞ்சுக்கிட்டேன்..!!" "என்ன அது..??" "Suicide is permanent solution to a temporary problem..!!" "ஹாஹா.. நைஸ் கோட்..!!" மெலிதான புன்சிரிப்புடன் சொன்ன மீரா, பட்டென அமைதியானாள். அசோக்கின் முகத்தையே ஒருவித சலனமற்ற பார்வை பார்த்தாள். அசோக்குக்கு அவளுடைய பார்வையின் அர்த்தம் புரியவில்லை. "ஹேய்.. என்னாச்சு..??" என்றான் புன்னகையுடன். "இல்ல.. ஒன்னுல்ல..!!" சொன்ன மீரா அவன் முகத்தில் இருந்து பார்வையை விலக்கிக் கொண்டாள். அகலமாக விரிந்திருந்த ஏரியையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் திடீரென திரும்பி , "ஹேய் அசோக்.. இந்த எடத்துல எவ்வளவு ஆழம் இருக்கும்..??" என்றாள் குரலில் ஒரு புது உற்சாகத்துடன். "ஏன் கேக்குற..??" "சொல்லேன்..!!" "ம்ம்.. எப்படியும் ஒரு இருபது இருபத்தஞ்சு அடி இருக்கும்னு நெனைக்கிறேன்..!!" "அப்போ.. இங்க இருந்து உள்ள குதிக்கிறவங்க செத்து போயிருவாங்களா..??" "நீச்சல் தெரியலன்னா சாக வேண்டியதுதான்..!!" "எனக்குத்தான் நீச்சல் தெரியாதே..??" "நீதான் உள்ள விழலையே..??" "இதோ.. இப்போ குதிக்கப் போறேனே..??" "என்னது..???" "நீ சூசயிட் பத்தி பேசுனியா.. எனக்கு உடனே சூசயிட் பண்ணிக்கணும்னு ஆசை வந்துடுச்சு..!!" "ஹாஹா.. வெளையாடாத மீரா..!!" "இல்ல.. சீரியஸா..!! நீ சொன்னல.. 'Suicide is permanent solution to a temporary problem..!!'ன்னு.. பெர்மனன்டா இப்படி ஒரு சொல்யூஷன் இருக்குறப்போ.. எதுக்காக சாப்பாடு, பணம், ட்ரஸ், வீடு, வசதின்னு.. தெனம் தெனம் டெம்போரரி ப்ராப்ளம்ஸ் கூட போராடனும்..?? பேசாம எல்லாரும் சூசயிட் பண்ணி செத்துப் போயிட்டா.. எல்லாருக்கும் நிம்மதிதான..?? நான் முடிவு பண்ணிட்டேன்.. சூசயிட் பண்ணிக்கப் போறேன்..!!" மீரா அந்த மாதிரி பேசியது, அசோக்குக்கு சிரிப்பையே வரவழைத்தது. "ஹாஹா.. லூஸு மாதிரி ஏதாவது உளறிட்டு இருக்காம.. கெளம்பு.. டைம் ஆச்சு..!!" சிரிப்புடன் சொல்லிவிட்டு, அசோக் கேஷுவலாக முன்னால் நடந்தான். ஒரு ஐந்து எட்டு கூட எடுத்து வைத்திருக்க மாட்டான். அவனுக்கு பின்னால் இருந்து, 'டமார்..' என எதுவோ நீரில் விழுகிற சப்தம் பெரிதாக கேட்டது. அசோக் படக்கென திரும்பி பார்த்தான். பாலத்தில் மீரா இல்லை..!!! அவ்வளவுதான்.. பக்கென அதிர்ந்து போனான்.. பரபரப்பு தொற்றிக்கொண்டது அவனை.. அட்ரினலின் ஜிவ்வென சுரந்து உடலெங்கும் தாறுமாறாய் ஓடியது..!! "மீரா..!!!!!" என்று அலறியவாறே ஓடினான். கைப்பிடி தடுப்பை பற்றிக்கொண்டு ஏரியை குனிந்து பார்த்தான். நீரலைகள் அமைதி குலைந்து போய், வட்ட வட்டமாய் விலகி ஓடிக் கொண்டிருந்தன. மீரா கண்களுக்கு தட்டுப்படவில்லை. அசோக் அதன்பிறகும் ஒரு நொடி கூட தாமதிக்கவில்லை. கைப்பிடி தடுப்பில் கால்வைத்து ஏறி, சரக்கென ஏரிக்குள் குதித்தான். குத்தித்த மறுநொடியே, உடலை சுழற்றி நீருக்குள் மீராவை தேடினான். நீருக்குள் மூழ்கி மூழ்கி தேடியவன், பிறகு மேற்பரப்புக்கு வந்து கத்தினான். "மீரா..!!!!!" அவனுடைய முகத்தில் அப்படி ஒரு பதற்றம்.. உடம்பில் அப்படி ஒரு நடுக்கம்.. 'அவளுக்கு என்ன ஆனதோ' என்ற பயம்..!! தலையை அப்படியும் இப்படியும் திருப்பி, மீராவின் முகம் கண்டுவிட துடித்தான்..!! "மீரா..!!!!! மீரா..!!!!!" கத்திவிட்டு மீண்டும் நீருக்குள் மூழ்கினான். தண்ணீருக்குள் அவள் தட்டுப்படுகிறாளா என நீந்தி நீந்தி பார்த்தான். அவனையும் அறியாமல், கண்களில் நீர் சுரந்து தண்ணீரோடு கலந்து ஓடியது. மனம் முழுதும் பயமும் படபடப்புமாய்.. கையையும் காலையும் அசைத்து அசைத்து.. நீருக்குள் நீந்தி நீந்தி.. முடிந்தவரை மூச்சை அடக்கி.. காதலியின் உருவம் காண தவித்தான்..!! மூச்சை அதற்கு மேல் அடக்க முடியாது என்பதை உணர்ந்ததும்.. சர்ரென நீர் மட்டத்துக்கு வந்து.. ஆவி துடிக்க அலறினான்...!! "மீரா..!!!!!" ஒரு இரண்டு நிமிடத்திற்கு அந்த மாதிரி அசோக் அங்கும் இங்கும் அலை பாய்ந்திருப்பான். அப்புறம் எதேச்சையாக பாலத்தை ஏறிட்டவன், ஒரே நேரத்தில் எரிச்சலுக்கும், எல்லையில்லா ஆனந்தத்துக்கும் உள்ளானான். மீரா மரப்பாலத்தின் மீது, நனைந்த உடலுடன் நின்று கொண்டிருந்தாள். இவன் வேதனையுடன் துடித்த துடிப்பை, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். இவனைப் பார்த்து 'ஹாய்' என்று விரல்கள் அசைத்தாள். அவளுக்கு நீச்சல் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். அசோக் இந்தப்பக்கம் குதித்ததும், அவள் அந்தப்பக்கமாய் மேலே சென்றிருக்க வேண்டும். அசோக்குக்கு சில வினாடிகள் என்ன செய்வது என்றே புரியவில்லை. சோர்ந்து போனவனாய் இங்கிருந்தே மீராவை பரிதாபமாக பார்த்தான். பிறகு மெல்ல நீரில் நீந்தினான். மரத்தூணை பிடித்து மேலேறினான். தடுப்பு தாண்டி பாலத்தில் குதித்தான். முகத்தில் சிரிப்புடன் நின்று கொண்டிருந்த மீராவை, முறைத்து பார்த்தவாறே அவளை நோக்கி நடந்தான். அவனுடைய மனதில் ஒருவித ஆத்திரம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. "ஹஹா.. என்னடா நீ.. பேசிட்டு இருக்குறப்போவே, திடீர்னு தண்ணிக்குள்ள குதிச்சு மீன் பிடிக்க போயிட்ட..?? மீன் சிக்குச்சா..?? மீரா மீன்..??" மீரா குறும்பாக கண் சிமிட்டியவாறே கேட்டாள். ஆனால் அவளை நெருங்கிய அசோக், "நீ என்ன பொண்ணா.. இல்ல பிசாசா..??" என்று சீற்றமாக கேட்டான்.ஹேய்.. என்ன.. கொழுப்பா.. அப்டியே போட்டன்னா..??" உடனடி கோவத்துடன் மீரா புறங்கையை உயர்த்தினாள். "அடி மீரா..!! அடி..!! எதுக்கெடுத்தாலும் கையை ஓங்குறதும்.. கன்னத்துல அறையுறதும் தவிர வேற உனக்கு என்ன தெரியும்..?? என் மனசு பத்தி தெரியுமா.. என் மனசுல உன் மேல வச்சிருக்குற காதல் பத்தி தெரியுமா..?? இப்போ.. கொஞ்ச நேரம் என் உசுரு எங்கிட்ட இல்ல.. அதாவது உனக்கு தெரியுமா..??" அசோக் ஆதங்கத்துடன் கேட்க, மீரா உயர்த்திய கையை மெல்ல கீழே இறக்கினாள். அவளுடைய முகம் பட்டென மாறிப்போய், ஒருவித குற்ற உணர்ச்சியுடன் அசோக்கை பார்த்தாள். அவனோ குமுறுகிற இதயத்துடன் தொடர்ந்து பேசினான். "உ..உன் வெளையாட்டுக்குலாம் ஒரு அளவே இல்லையா..?? என்னை லவ் பண்றேன்னும் சொல்லிட்டு.. நான் எப்படிப்பட்ட ஆளுன்னு தெரிஞ்சுக்க.. ஒவ்வொரு நாளும், எனக்கு டெஸ்ட் மேல டெஸ்ட் வைக்கிற.. இல்ல..??” "............." “எனக்கு எல்லாம் தெரியும் மீரா.. நீ ஏன் இப்படிலாம் நடந்துக்குறேன்னு தெரியும்..!! இப்போ என்ன.. உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா நான் என்ன பண்றேன்னு.. என்னை டெஸ்ட் பண்ணனும்.. அவ்வளவுதான.. அதுக்காகத்தான இந்த வெளையாட்டு..?? பாத்துட்டியா.. தண்ணிக்குள்ள குதிச்சு, பைத்தியக்காரன் மாதிரி உன்னை தேடினேன்.. பாத்துட்டியா.. சந்தோஷமா..??" அசோக்கின் சீற்றத்தில் மீரா வெலவெலத்து போனாள். அவனுடைய கண்கள் கசிந்த வெப்பத்தை தாங்கிக் கொள்ள முடியாதவளாய், தலையை மெல்ல கவிழ்த்துக் கொண்டாள். "இத்தனை நாள் நீ பண்ணினதுலாம் பரவால மீரா.. என்னை அடிச்ச.. அதிகாரம் பண்ணின.. அசிங்கப் படுத்தின..!! அதுலாம் பரவால மீரா.. உன் மேல இருந்த லவ்ல அதுலாம் எனக்கு பெரிய விஷயமா தெரியல..!! ஆனா.. இது அப்படி இல்ல.. உனக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு.. அந்த வேதனை.. அந்த பயம்.. அந்த துடிப்பு.. சத்தியமா இந்த மாதிரி ஒரு வேதனையை நான் அனுபவிச்சதே இல்ல..!! கொஞ்ச நேரம்.. அப்படியே செத்துட்டேன் மீரா..!!" அசோக் கண்களில் வழிகிற நீருடன் வெடித்து சிதறினான். "............." மீரா அமைதியாய் தரை பார்த்து குனிந்திருந்தாள். "நீ என்கிட்ட ஐ லவ் யூ சொல்லி ரெண்டு மாசத்துக்கு மேல ஆச்சு.. சத்தியமா சொல்றேன்.. இந்த நிமிஷம் வரை.. நீ என்னை உண்மையா லவ் பண்றியா இல்லையான்னு கூட என்னால சரியா புரிஞ்சுக்க முடியல.. நான் புரிஞ்சுக்குற மாதிரி நீயும் நடந்துக்கல..!! ஆனா நான் அப்படி இல்ல மீரா.. உன் மேல உயிரையே வச்சிருக்கேன்.. உன் மேல பைத்தியமா இருக்கேன்..!! உன் மேல நான் எவ்வளவு லவ் வச்சிருக்கேன்னு.. ஒவ்வொரு நாளும் உன்கிட்ட எக்ஸ்ப்ரஸ் பண்ணிட்டுத்தான இருக்குறேன்.. உன்னால புரிஞ்சுக்க முடியலையா மீரா..?? புரிஞ்சுக்கிட்டா இப்படிலாம் எனக்கு டெஸ்ட் வைப்பியா..??" "............." "நல்லா சொல்றேன் கேட்டுக்கோ.. நம்புறதும் நம்பாததும் உன் இஷ்டம்..!! என் உயிரை விட நான் உன்னை அதிகமா நேசிக்கிறேன்.. நீ இல்லன்னா நான் செத்துப் போயிடுவேன்..!! இதுக்கு மேல என் காதலை எப்படி சொல்றதுன்னு எனக்கும் தெரியல.. தயவு செஞ்சு இனிமேலும் இந்த மாதிரிலாம் டெஸ்ட் வச்சு.. என் காதலை கேலி செய்யாத..!! ப்ளீஸ்.. உன்னை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்குறேன்..!!" அசோக் படபடவென பேசி முடித்தான். மீரா எதுவும் பதில் பேசாமல் குனிந்த தலை குனிந்தவாறே நின்றிருந்தாள். ஆவேசத்துடன் பேசி முடித்த அசோக்குக்கு, அவளுடைய அமைதி ஒருவித எரிச்சலை உண்டாக்கியது. ஒரு சில வினாடிகள் அவளுடைய வார்த்தைகளுக்காக காத்திருந்து ஏமாந்தவன், அப்புறம் கோபத்துடன் அவளை நெருங்கினான். அவளுடைய புஜத்தை இறுகப் பற்றி, கொதிப்புடன் கேட்டான். "நான் இவ்வளவு பேசுறேன்.. நீ எதுவுமே சொல்ல மாட்டியா..?? என்னோட ஆதங்கத்துக்கும், வேதனைக்கும் நீ குடுக்குற மதிப்பு இவ்வளவுதானா..?? கமான்.. ஏதாவது சொல்லு.. உன் ஃபோன்ல போட்டு வச்சிருக்கியே.. கேனைப்பய.. மஞ்சமாக்கான்.. ஏதாவது சொல்லு..!! ம்ம்ம்.. பேசு மீரா..!!" "............." அவள் அப்புறமும் அமைதியாக இருக்க, அசோக் பொறுமை இழந்தான். "கேக்குறேன்ல..?? பேசுடி..!!! வாயை தொறந்து ஏதாவது சொல்லு..!!!" என்று பற்களை கடித்து கத்தினான். இப்போது மீரா சரக்கென தன் தலையை திருப்பி, அசோக்கின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தாள். ஒரு மாதிரி அனல் கக்குகிற செந்நிற பார்வை..!! என்னவென்று புரிந்து கொள்ள முடியாத ஒருவித உணர்ச்சி, அவளுடைய முகத்தின் ஒவ்வொரு ரேகையிலும்..!! வெடுக்கென்று உதறி தன் கையை அசோக்கிடம் இருந்து விடுவித்துக் கொண்டாள்..!! அசோக் சற்றே மிரட்சியாய் அவளுடைய கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான்..!! உள்ளுக்குள் பொங்குகிற ஏதோ ஒரு உணர்வை அடக்க முயலுபவள் போல மீரா காட்சியளித்தாள்..!! அவளுடைய உதடுகள் அப்படியே படபடத்தன.. பற்களால் அந்த உதடுகளை அழுத்தி கடித்துக் கொண்டாள்..!! அவ்வாறு கடித்ததுமே முணுக்கென்று அவளுடைய கண்களில் நீர் வெளிப்பட்டு ஓடி வந்தது.. அவசரமாய் அந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்..!! முகத்தை வேறெங்கோ திருப்பி.. மூக்கை ஒருமுறை உறிஞ்சிக்கொண்டு.. உதடுகள் படபடக்க.. உடைந்து தழதழத்துப் போன குரலில் சொன்னாள்..!! "ச்சோ.. ச்ச்வீட்..!!!!"

No comments:

Post a Comment