Friday 10 May 2013

செல்வா 06


என்னடி இப்போ நடந்தத சொல்லுறிய இல்ல என் கிட்ட அடி வாங்கிறியா" என்று திவ்யாவை பார்த்து உறும, திவ்யா பயத்துடன் "அம்மா சொல்றது உண்மை. நாந்தான் மாத்தி சொல்லிட்டேன். சாரி அக்கா", என்று தயங்கி சொல்ல, ஒரு கணம் என்ன செய்வது என்று கலங்கி நின்றாள் காயத்ரி. இதற்குள் செந்தமிழ், பூஜாவுடன் வீட்டுக்குள் வர, பூஜா காயத்ரியை பார்த்து "எப்படி இருக்க?" என்று நலம் விசாரித்து விட்டு, நடந்ததை சுருக்கமாக சொன்னாள். "உச்சித் பிரச்னையை முடிச்சுட்டு உன்கிட்ட சொல்லனும்னு செல்வாவுக்கு ஆசை. அதுனால உன்கிட்ட எதையும் சொல்லலை. உச்சித் அவன் தோட்டத்தில கஞ்சா பயிர் பண்ணுறான். அதை விற்று வரும் பணத்தில் தீவிரவாதிகளுக்கு ஹவாலா மூலம் கொடுத்து வருகிறான் என்ற தகவல் இன்பார்மர் மூலம் கிடைத்தது. அதை ரகு நண்பரான DSP மூலம் அவனை பிடிக்க இவ்வளவுநாள் ஆனது. இப்போ உனக்கு ஹாப்பி தான. எங்க செல்வா?" என்று பூஜா, செந்தமிழ் தேட "இல்லை அவர் வெளிய போயிருக்கார்" என்று சமாளித்தாள்.

"சரி நாங்க கெளம்புறோம், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்" என்று சொல்லி வாழ்த்தி விட்டு இருவரும் விடை பெற்றனர். "இந்தாடி உனக்கு ஒரு பரிசு கொடுக்கணும்னு மாப்பிள்ளை கல்யாணத்துக்கு முன்னாலே என் கிட்ட கொடுத்து இருந்தார்" என்று அந்த கவரை கொடுக்க, அதில் இருந்து ஒரு கடிதமும் அதை தொடர்ந்த ஒரு application இரண்டும் விழுந்தன. கடிதத்தை படித்த காயத்ரியின் முகத்தில் மாற்றம், அவளுக்கு அடக்க முடியாமல், கண்களில் கண்ணீர் வழிய தொடங்கியது. காஞ்சனாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அதை பிடுங்கி படிக்க தொடங்கினாள். "காயத்ரி நமது திருமண வாழ்க்கை நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. ஒரு வேளை தவிர்க்க முடியாத காரணங்களால் நாம பிரிய வேண்டி வந்தா உனக்கு உதவியா இருக்கும்னு இந்த விவாக ரத்து பத்திரத்தில கையெழுத்து போட்டு இருக்கேன். உனக்கு என்ன காரணம் போட்டுக்கணும்னு தோணுதோ அதை போட்டுக்கோ. நீ அதுக்கப்பறம் யாரை வேணாம்னாலும் கல்யாணம் பண்ணிக்க. உன்னோட சந்தோஷம் எனக்கு முக்கியம். ஆனா என்னோட வாழ்க்கைல இனி எந்த பொண்ணுக்கும் இடம் கிடையாது. அன்புடன் செல்வா" இதை படித்த காயத்ரியின் நிலையோ கவலைக்கிடம் ஆனது. அழுது அழுது கண்கள் வீங்கி விட்டன. ஒரு நிலையில் அவள் மயக்கம் போட்டு விழ காஞ்சனா அவளை கட்டிலில் படுக்க வைத்து நாடி துடிப்பை பார்க்க அது அவருக்கு சந்தோசமான செய்தியை சொன்னது. அவளுக்கு மயக்கம் தெளிய "ஏண்டி நீயே ஒரு குழந்தை மாதிரி தான். உனக்கு ஒரு குழந்தை வரப் போகுதா?" என்று ஆச்சர்யத்துடன் கேட்க காயத்ரிக்கு முகம் குங்கும பூவாய் சிவந்தது. இந்த வேளையில் "என் செல்வா அருகில் இல்லையே? அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லையே" என்று மனம் நொந்தாள். வீட்டில் இருந்து கிளம்பி, காஞ்சனாவுடன் பேசி விட்டு பைக்கை அதன் போக்கில் விட்டு விட்டான் செல்வா. பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்த கடையில் உட்கார்ந்து யோசித்து கொண்டிருந்தான். "நிச்சயம் அத்தை விவாகரத்து application னை கடிதத்துடன் கொடுத்துரிப்பார். காயத்ரி என்ன முடிவு செய்தாலும் எனக்கு சம்மதமே. ஆனால் அவள் இல்லாமல் நான் எப்படி இருப்பேன். வீம்புக்கு சொல்லிவிட்டு வந்தாலும், இரண்டு மாதங்கள் ஒன்றாக வாழ்ந்த பிறகு அவள் இல்லாத வாழ்கையை நினைத்து பார்க்கவே முடியவில்லை" நேரம் ஓடியதே தெரியவில்லை. மதியம் சாப்பிட தோணவில்லை. கடல் அலைகள் அவனுக்கு ஆறுதல் தந்தன. சரி இப்போ வீட்டுக்கு கிளம்பலாம் என்று மாலை ஆறு மணி அளவில் வீட்டை அடைந்தான். கதவு பூட்டி இருக்க காலிங் பெல் அழுத்த, சில நிமிடங்களில் கதவு திறந்தது. கதவை திறந்த காயத்ரிக்கு செல்வாவை பார்த்த உடன் நம்ப முடியவில்லை. சிலையாக சமைந்து போனாள். உள்ளே நுழைந்து அவள் தோளை பிடித்து உலுக்க காயத்ரி மயக்கம் அடைந்து கீழே சாய, அவளை கை தாங்கலாக அணைத்து சென்று படுக்கையில் கிடத்தினான். தண்ணீர் கொண்டு அவள் முகத்தில் தெளிக்க, எழுந்த காயத்ரி அவன் மார்பில் சாய்ந்து தன் கண்ணீரால் அவன் சட்டையை நனைத்தாள். "ஏன் செல்வா என்ன விட்டுட்டு போனிங்க. நான் முட்டாள்தனமா பேசுனா, அதுக்காக நீங்க இப்பிடியா என்னை தவிக்க விட்டு போறது. இனிமே நீங்க எங்கயும் போக கூடாது. ஏன்னா இப்போ நான் ஒரு உயிரில்ல ரெண்டு உயிர்" என்று சொன்னாள். செல்வாக்கு நம்ப முடியவில்லை. "உண்மையா சொல்லுற". "ஆமாங்க, நீங்க என்ன விட்டு போறேன்னு சொன்னாலும் நான் உங்கள விட மாட்டேன்". அவனை கட்டி அணைத்து "என்ன நீங்க மன்னிச்சு ஏற்று கொள்வீர்களா?" என்று பாவமாக அவன் முகத்தை பார்க்க, அந்த பார்வை அவன் மனதை அறுத்தது. "இல்ல கண்ணா நீ இல்லாத வாழ்கையை நான் நினச்சு கூட பார்த்தது இல்லை. நான் முட்டாள்தனமா எழுதின கடிதத்தை மன்னிச்சுடு."

"இல்லைங்க அந்த கடிதம் நீங்க என் மேல வச்ச அன்ப காட்டுது. அம்மா வந்தாங்க நடந்ததை சொன்னாங்க. பிறகு செந்தமிழ் அண்ணா, பூஜாவோட வந்து உச்சித் விஷயத்தை சொன்னாங்க" என்று சொல்லி அவனை பார்த்தாள். "ஏன் அந்த விஷயத்தை நீங்க என்கிட்ட சொல்லலை". "எனக்கு குன்னூர்ல அவன பாத்த உடனே சந்தேகம். அதுதான் உடனே செந்தமிழ், ரகு ரெண்டு பேர் கிட்டயும் பேசி முடிக்க சொன்னேன்" "உங்களுக்கு என்கிட்ட அவன பத்தி கேக்கனும்னு தோணலையா." "சொல்லனும்னு நினைச்சா நீயே சொல்லிருப்ப. அதோட அவன் ஒரு மட்டமான ஆளு அவனுக்கு நீ பயந்து ஓடுறது, மூட்டபூச்சிக்கு பயந்து வீட்ட கொளுத்துற மாதிரி. உன்னோட பழைய வாழ்க்கைய பத்தி எனக்கு கவலை இல்ல. நாம ரெண்டு பேரும் இப்ப வாழுற வாழ்க்கைல ஒருத்தருக்கு ஒருத்தர் உண்மையா இருப்போம். அது போதும்" என்றான்"ஆமா நீங்க ஏதோ எனக்கு பிறந்த நாள் பரிசு குடுக்கிறேன்னு சொன்னிங்க. அது என்ன?" ஒருநிமிஷம்என்றுகுனிந்துகட்டிலுக்குஅடியில்இருந்துஅவளுக்குபிடித்த 22 கதைகள்அடங்கியபார்சலைகொடுத்தான். பிரித்துபார்த்துவிட்டு "அதுஎன்ன 22" என்றுகேட்க "அது உன்னோட வயசு", "ஆமால்ல எனக்கு 21 முடிஞ்சு 22 தொடங்குது" அவனை அருகில் இழுத்து ஒரு முத்தம் கொடுத்தாள். "இது சரியில்ல" என்று சொன்ன செல்வாவை, "என்ன" என்று கண்ணாலே அவள் கேட்க "உனக்கு எத்தனை புத்தகம் பரிசா கிடைச்சிருக்கு". "ம்ம் 22 . ஒன்னு குடுத்த மீதி 21 எங்க?" "அதுதான் இது" என்று சொல்லி விட்டு சிரித்தாள். செல்வாவும் சிரித்தான். "சரி இந்த ஐ போடில 1000 பாட்டுக்கு மேல இருக்கு, சில சிறப்பான ஆனா இது வரைக்கும் கேட்காத பாடல்களும் இருக்கு. எனக்கு பிடிச்சிருக்கு. உனக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன்". பாடலை அவன் சுழல விட, ஹான்ட்ஸ் ப்ரீ காதில் மாட்டி கொண்டு அவர்கள் கேட்ட முதல் பாடல், ஜெயச்சந்திரன் வாணிஜெயராம் பாடி, கமல் சுஜாதா நடித்த அந்த மெலடி (Movie-Idhaya malar). "அன்பே உன் பேர் என்ன ரதியோ ஆனந்த நீராடும் நதியோ"

No comments:

Post a Comment