Saturday 7 November 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 32

நேரம் காலை 10 மணி

சங்கீதா டிங்....டிங்.... என்று சத்தம் கேட்டு வந்தது யாரென்று பார்க்க குமார் உள்ளே வந்தான். சங்கீதாவின் கேள்விகளுக்கு பதில் ஏதும் கூறாமல் கதவை அழுத்தமாக சாத்திக்கொண்டான் குமார். பிறகு சங்கீதா IOFI Benz ல் கிளம்பினாள்.

வெளியில் கார் கிளம்பும் சத்தம் கேட்டது. வீட்டில் நிசப்தம். வெளியே வந்தான், வீட்டுக்கு பின் பக்க கதவு, படுக்கை அறை கதவு அனைத்தையும் சாத்தினான். வாசல் கதவை அழுத்தமாக சாத்தி தாழ்ப்பாள் போடாமல் வைத்திருந்தான். ஒரு காரணத்திற்காகத் தான் அதை செய்தான். ஆடைகளை அகற்றி, குளியல் அறைக்கு சென்று ஒரு பக்கெட் தண்ணீரை எடுத்து தலையில் ஊத்திக் கொண்டு துடைத்த ஈரத் துண்டுடன் பூஜை அறைக்கு முன் சென்று அமர்ந்தான்.
ஜன்னல்கள் கதவுகள் அனைத்தும் அடைக்கப் பட்டிருந்ததால் வீட்டினுள் வெளிச்சம் மிகவும் கம்மியாக இருந்தது, கிட்டத்தட்ட இருட்டுதான். ஓடி க் கொண்டிருந்த fanஐ நிறுத்தினான். காரணம் சில்லென்று உடல் மீது காற்று படுவதை விரும்பவில்லை. அடி வயிற்றினில் இருந்து ஒரு விதமான பயம். உடல் முழுதும் ஒரு விதமான கிறக்கம், உஷ்ணம், வெறி பரவி இருந்தது. பூஜை அறையின் முன் குமார் பேச ஆரம்பித்தான்.

"என்ன பார்க்குறீங்க? எல்லாரும் காலைல என் பொண்டாட்டி வெச்ச பூவுல ரொம்ப அழகாத்தான் இருக்கீங்க... ஆனா நான் மனசளவுல ரொம்ப நொந்திருக்கேன். ஆனா எனக்கு இன்னைக்கி நிம்மதி கிடைக்க ஒரு வழி கிடைச்சி இருக்கு. ஆமா... காரணம்.. இன்னைக்கி வரைக்கும் என் வாழ்க்கைல நான் செய்ய பயந்த ஒரு விஷயத்தை இன்னைக்கி நான் செய்ய துனிஞ்சிட்டேன். Yes, நான் நவீனை இன்னைக்கி சாயும்காலம் கொலை பண்ண போறேன். அவன் செத்தாதான் எனக்கு நிம்மதி. அவன் இருக்குற வரைக்கும் எனக்கு நிம்மதி கிடையாது. இது நான் ஏதோ திடீர்னு எடுத்த முடிவு கிடையாது, கடந்த ஒரு வாரமா தினமும் 20 ல் இருந்து 30 பாக்கெட் சிகரட் பிடிச்சி பிடிச்சி ஆழ்ந்து சிந்திச்சி உறுதியா எடுத்த முடிவு. இப்போ உங்களுக்கு சந்தோஷமா? சொல்லுங்க சந்தோஷமா?" ஆனா நான் செய்யத்தான் போறேன். அது ஒண்ணுதான் எனக்கு நிம்மதி தரப் போகுது. ஏன் எதுக்குன்னு என்னை கேள்வி கேட்க்குறீங்களா? சொல்லுறேன்.. ஆனா என் முடிவை நான் மாத்திக்க மாட்டேன்.

குமார் பேசிக் கொண்டிருக்க, மேலே ஒரு பள்ளி சாமிப் படத்தின் பின்னால் நகர, படத்தின் மீதிருக்கும் பூ ஒன்று தரையில் விழுந்தது.

"ஆஹா, நீயே சம்மதிச்சிட்ட இனி எனக்கு தடை இல்ல.. ஆனா நான் ஏன் இந்த முடிவுக்கு வந்தேன்னு நீ தெரிஞ்சிக்க ஆசை படல? எனக்கு தெரியும் நீ தெரிஞ்சிக்க ஆசை படுறன்னு, சொல்லுறேன் கேளு, இந்த உலகத்துல நீ மட்டும்தான் இப்போதிக்கு நான் எது சொன்னாலும் பதில் பேசாம கேட்கக்கூடிய ஜீவன்."

"நான் பேசுறதை வெச்சி என்னை நீ பயித்தியம் னு சொல்லாத. நான் நவீனை கொலை செய்யுற காரியத்துக்கு நீதான் எனக்கு உதவ போற. அதுல உனக்கும் பங்கு உண்டு. அதனால நான் பேசும்போது எதுவும் பேசாம நான் சொல்லுறதை கேளு. அதுக்கப்புறம் நான் தீர்மாநிச்சது சரியா தப்பா னு மட்டும் சொல்லு. எனக்கு நாலு வயசு இருக்கும், நான் ஒரு விதத்துல பூச்சியை ப் போல, யாராவது என்னை ஒரு தடவ என்னை உத்துப் பார்த்தால் அப்படியே என்னோட அனைத்து சகல உணர்ச்சிகளையும் உள்ளே இழுத்துக்குட்டு ஒன்னும் பேசாம உள்ளுக்குள்ள கொஞ்சம் அதிகமாவே தனிமைய விரும்பி தனியா எங்கயாவது ஓடிடுவேன். என் வாழ்க்கைல நான் இன்னிக்கி வரைக்கும் அதி பயங்கர ரோஷம் உள்ள ஆளா இருந்ததில்லை, அதே சமயம் மத்தவங்களுக்கு உபத்திரம் தரா மாதிரியும் இருந்ததில்லை. நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்திருக்கிறேன். அவ்வளோதான்."


நேரம் காலை 10 மணி

சங்கீதா டிங்....டிங்.... என்று சத்தம் கேட்டு வந்தது யாரென்று பார்க்க குமார் உள்ளே வந்தான். சங்கீதாவின் கேள்விகளுக்கு பதில் ஏதும் கூறாமல் கதவை அழுத்தமாக சாத்திக்கொண்டான் குமார். பிறகு சங்கீதா IOFI Benz ல் கிளம்பினாள்.

வெளியில் கார் கிளம்பும் சத்தம் கேட்டது. வீட்டில் நிசப்தம். வெளியே வந்தான், வீட்டுக்கு பின் பக்க கதவு, படுக்கை அறை கதவு அனைத்தையும் சாத்தினான். வாசல் கதவை அழுத்தமாக சாத்தி தாழ்ப்பாள் போடாமல் வைத்திருந்தான். ஒரு காரணத்திற்காகத் தான் அதை செய்தான். ஆடைகளை அகற்றி, குளியல் அறைக்கு சென்று ஒரு பக்கெட் தண்ணீரை எடுத்து தலையில் ஊத்திக் கொண்டு துடைத்த ஈரத் துண்டுடன் பூஜை அறைக்கு முன் சென்று அமர்ந்தான். ஜன்னல்கள் கதவுகள் அனைத்தும் அடைக்கப் பட்டிருந்ததால் வீட்டினுள் வெளிச்சம் மிகவும் கம்மியாக இருந்தது, கிட்டத்தட்ட இருட்டுதான். ஓடி க் கொண்டிருந்த fanஐ நிறுத்தினான். காரணம் சில்லென்று உடல் மீது காற்று படுவதை விரும்பவில்லை. அடி வயிற்றினில் இருந்து ஒரு விதமான பயம். உடல் முழுதும் ஒரு விதமான கிறக்கம், உஷ்ணம், வெறி பரவி இருந்தது. பூஜை அறையின் முன் குமார் பேச ஆரம்பித்தான்.

"என்ன பார்க்குறீங்க? எல்லாரும் காலைல என் பொண்டாட்டி வெச்ச பூவுல ரொம்ப அழகாத்தான் இருக்கீங்க... ஆனா நான் மனசளவுல ரொம்ப நொந்திருக்கேன். ஆனா எனக்கு இன்னைக்கி நிம்மதி கிடைக்க ஒரு வழி கிடைச்சி இருக்கு. ஆமா... காரணம்.. இன்னைக்கி வரைக்கும் என் வாழ்க்கைல நான் செய்ய பயந்த ஒரு விஷயத்தை இன்னைக்கி நான் செய்ய துனிஞ்சிட்டேன். Yes, நான் நவீனை இன்னைக்கி சாயும்காலம் கொலை பண்ண போறேன். அவன் செத்தாதான் எனக்கு நிம்மதி. அவன் இருக்குற வரைக்கும் எனக்கு நிம்மதி கிடையாது. இது நான் ஏதோ திடீர்னு எடுத்த முடிவு கிடையாது, கடந்த ஒரு வாரமா தினமும் 20 ல் இருந்து 30 பாக்கெட் சிகரட் பிடிச்சி பிடிச்சி ஆழ்ந்து சிந்திச்சி உறுதியா எடுத்த முடிவு. இப்போ உங்களுக்கு சந்தோஷமா? சொல்லுங்க சந்தோஷமா?" ஆனா நான் செய்யத்தான் போறேன். அது ஒண்ணுதான் எனக்கு நிம்மதி தரப் போகுது. ஏன் எதுக்குன்னு என்னை கேள்வி கேட்க்குறீங்களா? சொல்லுறேன்.. ஆனா என் முடிவை நான் மாத்திக்க மாட்டேன்.

குமார் பேசிக் கொண்டிருக்க, மேலே ஒரு பள்ளி சாமிப் படத்தின் பின்னால் நகர, படத்தின் மீதிருக்கும் பூ ஒன்று தரையில் விழுந்தது.

"ஆஹா, நீயே சம்மதிச்சிட்ட இனி எனக்கு தடை இல்ல.. ஆனா நான் ஏன் இந்த முடிவுக்கு வந்தேன்னு நீ தெரிஞ்சிக்க ஆசை படல? எனக்கு தெரியும் நீ தெரிஞ்சிக்க ஆசை படுறன்னு, சொல்லுறேன் கேளு, இந்த உலகத்துல நீ மட்டும்தான் இப்போதிக்கு நான் எது சொன்னாலும் பதில் பேசாம கேட்கக்கூடிய ஜீவன்."

"நான் பேசுறதை வெச்சி என்னை நீ பயித்தியம் னு சொல்லாத. நான் நவீனை கொலை செய்யுற காரியத்துக்கு நீதான் எனக்கு உதவ போற. அதுல உனக்கும் பங்கு உண்டு. அதனால நான் பேசும்போது எதுவும் பேசாம நான் சொல்லுறதை கேளு. அதுக்கப்புறம் நான் தீர்மாநிச்சது சரியா தப்பா னு மட்டும் சொல்லு. எனக்கு நாலு வயசு இருக்கும், நான் ஒரு விதத்துல பூச்சியை ப் போல, யாராவது என்னை ஒரு தடவ என்னை உத்துப் பார்த்தால் அப்படியே என்னோட அனைத்து சகல உணர்ச்சிகளையும் உள்ளே இழுத்துக்குட்டு ஒன்னும் பேசாம உள்ளுக்குள்ள கொஞ்சம் அதிகமாவே தனிமைய விரும்பி தனியா எங்கயாவது ஓடிடுவேன். என் வாழ்க்கைல நான் இன்னிக்கி வரைக்கும் அதி பயங்கர ரோஷம் உள்ள ஆளா இருந்ததில்லை, அதே சமயம் மத்தவங்களுக்கு உபத்திரம் தரா மாதிரியும் இருந்ததில்லை. நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்திருக்கிறேன். அவ்வளோதான்."



"சரி என்னென்ன எண்ணங்கள் னு சொல்லு.."

"அவனிடம் சொன்னேன், எல்லா எண்ணங்களையும் சொன்னேன். பிறந்தது, வளர்ந்தது, சிறு வயதில் இருந்தே பயத்துடன் வாழ்ந்தது, சிறு வயதில் செய்யாத தவறுகளுக்கு சில நேரங்களில் வீட்டில் திட்டு வாங்கி அசிங்க பட்டது. எந்த ஒரு விஷயத்திலும் மற்றவர்கள் முடிவு அதிகம் பேசப்படும் ஆனால் என்னுடைய முடிவு நிராகரிக்கப் படுவது, கிட்டத்தட்ட என்னை ஒரு பூச்சி போல மற்றவர்கள் பார்ப்பது. கல்யாணத்துக்கு பிறகு அழகான மனைவி ஒருவள் வருகிறாள்.. அவள் எதிரிலும் என்னை என் பெற்றோர்கள் என்னை அசிங்கப் படுத்துவது. மேலும் வேலை செய்யும் இடங்களில் என் சிந்தனைக்கு மாறாக எது நடந்தாலும் உடனடியாக நான் அங்கே உணர்ச்சி வசப் பட்டு அவர்களின் சட்டையைப் பிடித்து சண்டை போடுவது என்று சகலத்தையும் சொன்னேன். ஒவ்வொரு இரவும் அன்று நாள் முடிவதை தூங்குவதற்கு முன்பு எண்ணிப் பார்க்கையில் என் மனதுக்கு சிறிதளவு கூட நிம்மதி கிடைத்ததில்லை என்று மனதில் உள்ள கொந்தளிக்கும் உணர்வுகள் அனைத்தையும் கொட்டி தீர்த்தேன்."

"நிச்சயம் நீ ஒரு மனோதத்துவ நிபுனரை சந்திக்க வேண்டும். நான் சொல்லுறது உன் நல்லதுக்கு தான், புரிஞ்சிக்கோ ப்ளீஸ்." என்று வலியுறுத்தினான் நவீன்.

"டேய், எனக்கு எந்த மனோதத்துவ நிபுணரும் தேவை இல்லை டா. நான் கடவுள் கிட்டே நேரடியா பேசி இருக்கேன் தெரியுமா? எனக்கு இந்த உலகில் கடவுள் ஒருவர் மீது மட்டும்தான் நம்பிக்கை உள்ளது. அதுக்கு ஆதாரமும் இருக்குது."

"இதோ பார் நான் கடவுளுக்கு எழுதின கடிதம்"

பெயர்: கடவுள்.
விலாசம்: எங்கும்.

"கடவுளே, எந்த ஒரு விஷயத்துலயும் சந்தேகம், நாட்டம் இல்லாமல் இருப்பது, எதிலும் விரக்தி, பயம் உள்ள கனவுகள், மனதை பிசையும் எண்ணங்கள் என்று பல ரூபத்தில் வந்து தாக்குகிறது. நீங்கள் இருப்பது நிஜம்தானே? உண்மை என்றால் எனக்கு பதில் கடிதம் போடுங்கள் ப்ளீஸ்."

விலாசம்: குமார். ஜே.ந.
4வது பிரதான சாலை,
சாஹிப் காலனி, வெஸ்ட் ஸ்ட்ரீட், சென்னை..

இப்படி நான் எழுதியதுக்கு எனக்கு கடவுளிடம் இருந்து பதிலும் வந்தது, அதைத் தான் இன்று வரை ஆதாரமாக வைத்திருக்கிறேன். என்னை யாரும் நிஜமாக பைத்தியம் என்று சொல்லி விடக் கூடாது இல்லையா?

"இஸ்ஹ்ம்ம்...." ஒன்றும் பேசாமல் பெரு மூச்சு விட்டான் நவீன்.

"பார்.... இந்த கடிதத்தைப் பார். எவ்வளவு அழகான கையெழுத்தில் வந்திருக்கிறதென்று பார்."

அன்புள்ள குமார். ஜே.ந,

உன் கடிதம் கிடைக்கப் பெற்றது, உன் மனக் குழப்பங்களுக்கும் எண்ணங்களுக்கும் காரணம் அனைத்தையும் படைத்த நான்தான். அவை அனைத்துக்கும் நானே ஒரு தகுந்த நேரம் பார்த்து முற்றுப் புள்ளி வைக்கிறேன். நான் இருக்கிறேன் என்பதை நீ நம்புவாய் என்பதற்கு இந்த கடிதம் ஒன்றே போதும் அல்லவா?

"இப்போ இதுக்கு என்ன சொல்லுற?"

"சரி சரி.. நானும் நம்புறேன், கடவுள் உனக்கு கடிதாசி போட்டு இருக்காரு. ஓகே, பட் நீ ஒரு தடவ எனக்காக மனோதத்துவ நிபுணர் ஒருத்தரைப் பாரத்துடன்டா ப்ளீஸ். எனக்காக ஒரு தடவ கேளு டா? ப்ளீஸ். அதனால ஒன்னும் தப்பில்ல. உனக்கு ஒன்னும் இல்லடா, இருந்தாலும் அதை அந்த நிபுணரும் சொல்லிட்டா நல்லதுதானே? கொஞ்சம் யோசிடா..


சரி யாரைப் போய் பார்க்கணும்?

"Dr.Padmanaaban famous psychiatrist, நான் சொன்னேன்னு சொல்லி ஒரு தடவ அவரைப் போய் பாருடா. என்னோட கார்டு காமிடா அவர் கிட்ட."

"அன்று சாயும்காலம் நவீன் சொன்ன காரணத்துக்காக என் மனைவி கிட்ட கூட சொல்லாம வந்திருக்கேன். அவளுக்கு இது தெரிந்தால் எனக்கு மானக்கேடான விஷயமாக இருக்குமே? சரி ஒரு நாள்தானே, பார்த்துவிட்டு செல்வோம் என்று எண்ணினேன்.
மருத்துவமனையில்..

attender: சார் யாரு?

குமார்..

டாக்டரை எப்படி தெரியும்?

நவீன் சொல்லித்தான் நான் இங்கே வந்தேன். என் நண்பர். - என்று சொல்லி நவீனின் விசிடிங் கார்டை நீட்டினான்.

"attender ஒரு முறை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு, ஒரு நிமிஷம் பொறுங்க, டாக்டர் கிட்ட சொல்லிட்டு வரேன்." என்றான்.

"சரி.."

"உள்ள போங்க டாக்டர் கூப்பிடுறார்..."

"good evening, please take your seat.." - என்றார் பத்மநாபன்.

"டாக்டர், என்னுடைய பிரச்சினையே என்னோட எண்ணங்கள்தான், இரவு தூங்கும்போது பயப்படுத்தும் கனவுகள், தூக்கம் களைந்து எழுந்து வேலைக்கு கிளம்பினாலும் அன்று வீட்டுக்கு வந்து இரவு தூங்கும்போது மனதில் விரக்தி, எதிலும் ஈடு பாடில்லை. நடுவில் சந்தேகம் வந்து கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று பரிசோதித்து பார்க்க கடவுளுக்கு லெட்டர் போட்டேன் டாக்டர்..

"interesting" - டாக்டர் இப்போது தான் நிமிர்ந்து குமாரைப் பார்த்தார்.

"ஆமாம், இதோ பாருங்க கடவுளுடைய பதில் கூட இருக்கு." என்று குமார் சொல்ல டாக்டர் அதை வாங்கி பார்த்தார்.

எப்படி இங்கே வந்தீங்க? என்னை எப்படி தெரியும்?

இவர்தான் என்னை உங்க கிட்ட போக சொல்லி சொன்னார், என்னுடைய friend நவீன். - டாக்டரிடமும் நவீன் கார்டு காமித்தான் குமார்.

ஒஹ் ஐ சி.... - என்று சொல்லிவிட்டு டாக்டர் சற்று நேரம் மெளனமாக இருந்தார்.

என்ன டாக்டர்? எனக்கு ஏதாவது பிரச்சினையா? - சற்று பயமும் தயக்கமும் கலந்து கேட்டான் குமார்.

நோ நோ... நீங்க.... (சில நொடிகளுக்கு பிறகு கீழே டேபிள் பார்த்து தன் மூக்கு கண்ணாடியை துடைத்துக் கொண்டே சொன்னார்) you are alright - என்றார் டாக்டர்.

alright னா? - குமார் சந்தேகத்தில் பயத்துடன் மீண்டும் கேள்வி எழுப்பினான்..

alright means alright, what else?

அப்படின்னா நார்மல் னு சொல்லுங்க டாக்டர், எதுக்கு alright னு சொல்லுறீங்க? - பதட்டத்துடன் கேட்டான் குமார்.


ஓகே ஓகே, நீங்க நார்மல் தான். ஆனா ஒரு சின்ன request..

என்ன டாக்டர்?

ஒரு.. ("க்ஹரம்" என்று தொண்டையை கரகரத்துக் கொண்டு) ஒரு வாரம் இங்கே in patient அ அட்மிட் ஆக முடியுமா? - என்றார் டாக்டர்.

எதுக்கு டாக்டர்? நான்தான் நார்மல் னு சொன்னீங்களே?

ஆமாம் நீங்க நார்மல்தான், இருந்தாலும் தினசரி நான் உங்களுக்கு சில injection குடுக்கணும் னு விரும்புறேன்.. அது உங்களுக்கு நல்ல ஆழ்ந்த தூக்கம் தரும் அதுக்கு தான் சொல்லுறேன்.

நார்மல் னு சொல்லும்போது எதுக்கு injection எடுக்கணும்?... அப்படியே இருந்தாலும் அதுக்கு நான் இங்கே ஒரு வாரம் in patient அ அட்மிட் ஆகணும்?

இஸ்ஸ்ஹா (சத்தம் இல்லாத பெருமூச்சு....) ஒகே, உங்க இஷ்டம்.. - என்றார் டாக்டர்.

அடுத்த நாள் அலுவலகத்துக்கு சென்றேன், அங்கே நவீன் இருந்தான்..

என்னடா? பார்த்தியா?

பார்த்தேன், நார்மல் னு சொல்லிட்டார்..

ஒஹ்ஹ்... வெரி குட் டா.. I am happy..

"ஆனா ஒரு வாரத்துக்கு in patient அ இருக்க சொல்லி சொன்னாரு அதுக்கு நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். அந்த ஒரு நாளே என் பொண்டாட்டிக்கு தெரியாம போயிட்டு வந்தேன், இன்னும் ஒரு வாரம் போய் தங்கிட்டு வந்திருந்தால் என்னை அவ மதிக்கவே மாட்டா."

"டேய் நீ மத்தவங்கள விட்டு தள்ளு, உன் பொண்டாட்டிய உட்பட, உன் உடம்பையும் ஆரோக்கியத்தையும் கவனிடா.. டாக்டர்ஸ் எதையும் நம்ம முகத்துக்கு நேரா சொல்ல மாட்டாங்க டா, அவர் உன்னை சமாதான படுத்துரதுக்கு நீ நார்மல் னு சொல்லி இருப்பாரு. அதை நீ சீரியஸா எடுத்துக்காதடா.."

"நானே சந்தோஷமா இருக்கேன். நீ ஏன் இவ்வளோ கஷ்ட படுற?"

இஸ்ஹா.. (விரக்தியில் பெரு மூச்சு விட்டான் நவீன்) சரிடா.... இன்னைக்கு உனக்கு ஒரு உண்மைய சொல்லுறேன், உனக்கு கடவுளிடம் இருந்து வந்த பதில் கடிதாசி நான்தான் போட்டேன். உன் மணசு நோகக் கூடாதுன்னு நானே உனக்கு தெரியாம செஞ்ச காரியம் அது. ஒரு தடவ நீ கடவுளுக்கு கடுதாசி போட்டு இருக்கேன்னு சொல்லிட்டு பதில் வரல பதில் வரலன்னு போலம்பின, அதுக்கு நானே எழுதி உன் வீட்டுக்கு போஸ்ட் பண்ணேன்.

"you blody bastard, ஏன் என் கிட்ட பொய் சொன்ன, எனக்கு பொய் சொன்னா பிடிக்காது டா துரோகி, அது உனக்கு தெரியும் இல்ல இதுக்கே உன்னை நான் கொல்லனும் டா. என்னோட சிந்தனைகளோடு விளையாடி இருக்கே ராஸ்கல்."

"டேய் குமார் நீ என் friend என்கிற ஒரே காரணத்துக்காக நானும் இன்னும் இதெல்லாம் பொறுமையா கேட்டுகுட்டு இருக்கேண்டா.. வேற யாராவதா இருந்தா நடக்குறதே வேற. இவ்வளோ பேசுறியே, பல நேரத்துல நீயே என் கிட்ட நிறைய விஷயங்கள சொல்லி இருக்கே, அதெல்லம் உனக்கு மறந்து கூட போகும் தெரியுமா?"

"என்ன சொல்லி இருக்கேன் அப்படி?"


"உன்னை துரை நல்லா use பன்னுராண்டா. அவன் பிடியில இருந்து உன்னால வெளியில வர முடியல, அப்போ அப்போ அதை என் கிட்ட சொல்லி கஷ்ட பட்டு இருக்கடா நீ."

"துறையைப் பத்தி தப்பா பேசாத டா. எனக்கு கெட்ட கோவம் வரும். அவர் எனக்கு கடவுள் மாதிரி. எனக்கு சம்பளம் வரும் அதே மாசம் ஒன்னாம் தேதி கூடுதலா நிறைய காசை போடுவாரு."

போடலங்கா... உன் குணத்தை நல்லா use பண்ண தெரிஞ்ச முதல டா அவன். அவன் சொல்லிதானே நீ நம்ம IOFI வளாகத்துள இருக்குற கழிவு நீர் பொருட்கள மூட்டை கட்டி துறையோட laboratory ல குடுத்து அந்த மரத்த துண்டுகள செய்ய உதவுற? அது எனக்கு தெரியாதுன்னு நினைக்குரறியா? என்னிக்கி இருந்தாலும் ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் பிரச்சினை பெருசானா விசாரணை கமிஷன் வெச்சி கண்டு புடிக்கும்போது நீ கண்டிப்பா மாட்டுவ டா.

"இதெல்லாம் கூட உன் கிட்ட சொல்லிட்டேனா?"

"டேய் பயப்படாத டா, நான் உன் friend டா, காட்டி குடுக்க மாட்டேன். ஆனா நீ மனசளவுல ரொம்ப குழம்பி உன் ஆரோக்கியத்தை கெடுத்துகுட்டு இருக்கே டா.. அதுக்காகவாவது உன்னை ஒரு டாக்டர் கிட்ட காமிச்சி சிகிச்சை எடுத்து வாழ்க்கைல நிம்மதியா தேடுடா.. உன்னை நம்பி உன் பொண்டாட்டி மட்டும் இல்ல உனக்கு ரெண்டு பசங்களும் இருக்காங்கடா. கொஞ்சம் யோசி டா...

குமார் கொஞ்சம் மௌனமாக யோசித்தான்.

"இன்னொரு விஷயம் சொன்னா தப்பா நினைக்காத டா."

"சொல்லு.."

"சங்கீதா மாதிரி ஒரு பொண்டாட்டி கிடைக்க நீ ரொம்பவும் குடுத்து வெச்சி இருக்கணும் டா. சில சமயத்துல நீ அவ கிட்ட எப்படி எல்லாம் கோவப்படுறன்னு சொல்லுரதைக் கேட்க்கும்போது எனக்கு ஒண்ணுதான் தோணும்."

"என்ன தோணும்?"

"அவளை மாதிரி ஒரு பொண்ணோட குடும்பம் நடத்த வக்கிலாதவன்னு தோணும்... நான் சொல்லுறதை தப்பா எடுத்துக்காத டா. நீ உண்மையாவே அவ மேல பாசம் வெக்கணும் னு நினைச்சா வெக்கலாம். இன்னும் நல்லாவே குடும்பம் நடத்தி சந்தோஷமாக வாழலாம். நான் சொல்லுறது எல்லாமே உன் நல்லதுக்கு தாண்டா.."

"குமார் அன்றைய தினத்தின் கடைசி சிகிரெட் எடுத்து பற்ற வைத்து நவீனைப் ப் பார்த்து புகை இழுத்துக் கொண்டே சற்று நேரம் ஏதோ யோசித்தான்..

"என்னடா யோசிக்குற?"

"ஒன்னும் இல்ல டா... நான் இன்னைக்கு உன் கூட கொஞ்சம் தங்கலாம் னு நினைக்குறேன்.. உனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லையே?"

"என்னடா fool, இந்த அலுவலகத்துலையே என் ஒருத்தன் கிட்ட தான் நீ நல்லா பழகுற, அதுலயும் நான் உன்னோட நல்ல நண்பன் னு நிரூபிக்க எனக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் குடுக்குற, வாடா போலாம்." - என்று பேசி விட்டு IOFI staff dormentary ல் அன்று இருவரும் தூங்கும்வரை பேசிக் கொண்டிருந்தார்கள்.

"குமார் தனது மொபைல் எடுத்து சங்கீதாவுக்கு "I wont come home today also, I will stay with my friend tonight" என்று sms அனுப்பினான்.


sms அனுப்பிவிட்டு, குமார் மனதுக்குள் மெதுவாக எண்ணினான் "என்னுடைய ரகசியங்களை தெரிந்திருக்கிறாய், கூடவே கடவுள் பதில் போட்டதாக சொல்லி என்னை ஏமாற்றி இருக்கிறாய், கூடவே என் மனைவியுடன் வாழ வக்கில்லாதவன் என்றும் சொல்லி இருக்கிறாய்... உன்னை சத்தியமாக கொள்வதில் தப்பில்லை டா.. ஆனா எங்க வெச்சி கொள்ளுறது?.... office... ச்ச.. ச்ச... பிரச்சினை ஆயிடும். ஏதாவது வெளியூர்? அப்புறம் நான் உன் கூட பிரயாணம் வேற செய்யணும், அதுவும் ரிஸ்க்...." நீண்ட சிந்தனைக்கு பிறகு..." என் வீடுதான் கரெக்ட், yes உன்னை நான் அங்கேதான் கொல்ல போறேன்."

"நவீன்..."

"என்னடா.."

நாளைக்கு சாயும்காலம் ஒரு 5 மணிக்கு என் வீட்டுக்கு வாயேன். நீ என் வீட்டுக்கு வந்து ரொம்ப நாள் ஆகுது.

"கண்டிப்பா வரேண்டா.... நீ என்கூட இப்போ சகஜமா பேசுறதே மனசுக்கு சந்தோஷமா இருக்குடா"

"ஹ்ம்ம் thanks டா.." - சற்று மென்மையாக முறைத்துக் கொண்டு மனதில் எண்ணினான் "உனக்கு என் கையாலதான் சாவுடா.." என்று மனதில் எண்ணிக்கொண்டு படுத்துவிட்டான்.

"என்னைப் பற்றி இப்படி எல்லா உண்மைகளையும் தெரிஞ்ச ஒருத்தனை இன்னைக்கி நான் perfect plan போட்டு கொல்ல போறேன். அதுக்கப்புறம் யாராவது என்னை பிடிச்சா கூட சாட்சி இருக்காது."

"இப்போ சொல்லுங்க.. என் பொண்டாட்டி வெச்ச பூவுல அழகா தெரியுற கடவுள்களே நான் எடுத்த முடிவுல என்ன தப்பு? இன்னைக்கி நவீன் வருவான், அவனை நான் கண்டிப்பா போட்டு தள்ளுவேன். அதுக்கு அப்புறம் என்னை பற்றியும் என் ரகசியங்கள் பற்றியும் தெரிந்த அந்த ஒரு bastard இன்னியோட போய் சேர்ந்துடுவான். அதுக்கப்புறம் நான் என் குடும்பத்தோட "happily lived ever after னு கதை புத்தகத்துல வரா மாதிரி board மாட்டிக்குவேன்... ஹா ஹா ஹாஹ் ஹா.." சத்தமாக சிரித்தான் குமார்.

"டேய் குமார்...." - நவீன் அழைத்தான்.

கடவுளைப் பார்த்து "வந்துட்டான், நான் அவனை கொல்ல போகுறதுக்கு நீங்க மட்டும்தான் இந்த உலகத்துல சாட்சி.. ஹா ஹா.. " என்று குரூரமாக சிரித்தான் குமார்.


"வாடா நவீன்.."

"என்னடா வீடு முழுக்க இருட்டா இருக்கு, மணி சாயந்தரம் 5, door எல்லாம் துறந்து கொஞ்சம் லைட் போடலாம் இல்ல..

"correct போடணும் டா. அதுக்கு முன்னாடி கொஞ்சம் கதவை சாத்திட்டு வரேன் இரு.." - கதவை இப்போது சாத்தி தாழ்பாள் போட்டான் குமார். வீட்டில் அனைத்து கதவுகளும் சாத்தி இருந்தது. அதை மறு முறை ஊர்ஜிதப் படுத்திக் கொண்டான் குமார்.

குழந்தைகள் பள்ளியில் வந்த பிறகு வீடு பூட்டி தான் இருக்கிறதென்று எண்ணி நிர்மலாவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அங்கே நிர்மலா குடுத்த பாலை க் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெளியில் சங்கீதாவின் வீட்டு முனையில் ராமு என்று ஒரு இஸ்திரி பையன் இருப்பான். ஒவ்வொரு தாய்மார்களும் தங்களின் குழந்தைகளுக்கு "தத்தி சோம்பேறி" என்கிற வார்த்தைக்கு அர்த்தம் கற்பிக்க அந்த இஸ்திரி போடும் பையனைத் தான் கூறுவார்கள். அவ்வளவு சோம்பேறி. ஆனால் அன்று அவன் காலை முதல் மாலை வரை தூங்கி விட்டு சங்கீதாவின் வீட்டின் முன் துணி கேட்பதற்காக மாலை 5 மணிக்கு வந்திருக்கிறான்.



No comments:

Post a Comment