Saturday, 7 November 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 31

"actually உனக்கு நான் ஒரு surprise தரத்தான் போறேன்.."

"அதான் ரொம்ப நேரமா சொல்லுறியே... அது என்னன்னு சொல்லேன்?"

"Wait till tomorrow my sweet heart. சரி நான் இப்போ phone வைக்குறேன். நாளைக்கு காலைல sharp அ 10 மணிக்கு எனக்கு வண்டி அனுப்பிடு..சரியா?"

"நான் வேணும்னா 9 மணிக்கு அனுப்பவா?"

"ஹேய்... எனக்கு வீட்டுலயும் வேலை இருக்குடா.. சில விஷயங்கள முடிசிட்டுதான் உன் IOFI consultation வேலைய பார்க்க முடியும்."

"consultationக்கு மட்டுமே full டைம் ஒதுக்கிடாதே, கொஞ்சம் இந்த மக்கு ராகவ்க்கும் டைம் ஒதுக்கு."


"உனக்காக டைம் ஒதுக்குன்னு சொல்லு ஒத்துக்குறேன், ஆனா உன்னை மக்குன்னு சொல்லாத, உன் மூலைய வெச்சி உலகத்துல முடியாதது எதெல்லாம் இருக்குன்னு லிஸ்ட் போட்டு குடுத்தா ஒன்னு ஒன்னுத்தயும் என்னால மட்டும்தான் முடியும்னு சாதிச்சி காட்டிடுவடா மை ஸ்வீட் ராஸ்கல்."

"ஹா ஹா... board meetting ல என்னை மத்தவங்க புகழுறதை விடவும் நீ குடுத்த இந்த பாராட்டு செம நச்சுன்னு இருக்கு சரா..
இதுக்காகவே நான் அந்த surprise என்னன்னு உனக்கு சொல்ல ஆசைப் படுகிறேன்...." - உணர்ச்சி வசப் பட்டு வாய் வரை வார்த்தைகள் வந்தது ராகவ்க்கு..

"ஹ்ம்ம்.... சொல்லு சொல்லு சொல்லு...." - சங்கீதா அடக்க முடியாத ஆர்வத்தில் கேட்டாள்....

"ஹ்ம்ம்.. அது வந்து... வேணாம், நேர்லயே வந்து பார்த்துக்கோ... சொல்ல மாட்டேன்."

"சப்.. போடா.."

"ஹா ஹா... சரி நான் இப்போ வைக்குறேன், ரெஸ்ட் எடுத்துட்டு காலைல 10 மணிக்கு வண்டி வரும், கிளம்பி வா. மத்ததெல்லாம் நேர்ல பேசிக்கலாம்... good night honey."

"good night sweet heart, I love you so much. ummaahh..."

"my god....நம்ப முடியல... இன்னொரு தடவ அந்த ummaahh கிடைக்குமா? ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்...."

"ஹா ஹா.... ச்சீ போடா.... நாளைக்கு பார்க்கலாம். வைக்குறேன்."

சுத்தமாக மணம் இன்றி இருவருடைய விரல்களும் அவரவர் phone ல் உள்ள cancel பட்டனை அழுத்தியது.

ராகவ் குடுத்த புடவையை அடுத்த நாள் காலை IOFI க்கு கிளம்பும்போது கட்டிக் கொண்டிருந்தாள் சங்கீதா. அதற்கு பொருத்தமான blouse அணிந்து வழக்கம் போல இல்லாமல் தலை முடியை freeயாக விட்டு நடுவில் வகிடு எடுப்பதற்கு பதிலாக பக்கவாட்டில் வகிடு எடுத்து கொஞ்சம் hair dryer உதவியால் முடியின் நுனியில் curly ஸ்டைல் செய்து கொஞ்சம் வித்யாசமான designer வகை வளையல்களை அணிந்திருந்தாள்.

தன் காதலனுக்கு காண்பிக்கப் போகும் surprise எண்ணி மகிழ்ந்தாள்.

நேரம்: காலை 10:00 மணி.

டிங் டிங்.... - calling bell சத்தம் கேட்டு விரைந்தாள். வெளியே நின்றது டிரைவர் தாத்தா அல்ல, குமார்.


வாங்க.. ராத்திரி எங்கே தங்கி" - சங்கீதா பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்டான்.

"எங்கயோ தங்கினேன், தயவு செய்து என்னை எதுவும் கேட்க்காத. நீ உன் வேலைய பாரு" - சங்கீதா அவன் முகம் கொஞ்சம் அதிகம் வேர்த்திருப்பதை கவனித்தாள்.

குமாரிடம் மீண்டும் ஏதோ கேட்க முனையும்போது மீண்டும் "டிங் டிங்" சத்தம்... "என்ன மேடம்.. ரெடியா?" - என்று டிரைவர் தாத்தா வாசலில் நின்று கேட்க..

"இருங்க வந்துடுறேன்." - என்று சொல்லிவிட்டு குமாரை ஒருமுறைப் பார்த்தாள். அவன் தன் அறைக்கு சென்று கதவை "டமால்" என்று பலமாக சத்தம் வரும்விதம் சாத்திக் கொண்டான்.

"எதுவும் சொல்லாமல் சங்கீதாவும் அங்கிருந்து கிளம்பினாள்."

IOFI Benz கார் ராகவ் cabin அருகே சென்று நின்றது. சந்கீதாவைப் பார்த்ததும் sheila ki jawani பாடலுக்கு மேடையில் சங்கீதா ஆடியதைப் போல குறும்பாக இடுப்பை ஆட்டி பாவனை செய்து "ஹாய் சங்கீ" என்று முக மலர்ச்சியுடன் சிரித்து வரவேற்றாள் சஞ்சனா.

"ஹா ஹா... போதும் நிறுத்துடி, எங்கே ராகவ்?"

"வர வர IOFI உள்ள வந்தாலே எடுத்தவுடன் ராகவ் ராகவ் ராகவ், ஏன் எங்க முகம் எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா?"

"ஹேய்.... அப்படி இல்லடி இன்னைக்கி consultation இருக்கு, அதான்.."

"சரி சரி புரியுது, அய்யா மீட்டிங் ல இருக்காரு, கொஞ்சம் இருங்க...." - மீண்டும் குறும்பாக சிரித்து சொல்லிவிட்டு சென்றாள்.

சஞ்சனா ராகவின் meeting அறையை விட்டு வெளியே வந்து சங்கீதாவை உள்ளே அழைத்தாள்.

"நல்ல ஜில்லென்று AC காற்றும், மேல்தரத்து மஞ்சள் விளக்கு வெளிச்சம் கொண்ட அதி நவீன மர வேலை பாடுகள் கொண்ட மேஜைகளும், நாற்காலிகளும் இருந்த அந்த அறைக்குள் சங்கீதா நடந்து வருகையில் ராகவின் கண்களுக்கு உண்மையில் ஒரு தேவதை நடந்து வருவது போல தான் உணர்ந்தான். சங்கீதா உள்ளே சென்றதும் கோட் சூட் உடையில் அமர்ந்திருக்கும் மரியாதை நிமித்தமான மனிதர்கள் அனைவரும் ஒரு முறை தங்களது கழுத்தை நிமிர்த்தி, புருவங்களை உயர்த்தி ஒரு முறைப் பார்த்தால் பத்தாது என்று அவர்களின் கண்கள் கெஞ்சும் விதம் மீண்டும் சிறிது சங்கோஜத்துடன் குனிந்து ஒருவருக்கொருவர் தெரியாத வண்ணம் சரா தேவதையை அவ்வப்பொழுது நோட்டம் விட்டார்கள்.

ராகவ் ஒரு நொடி எழுந்து நின்று அனைவரையும் பார்த்து "Gentlemen I am glad to introduce sangeethaa to you all, a true banking expert, since this is our finance related meeting, I requested her to join with us all" என்று சொல்ல ஹலோ, வெல்கம், ஹாய் என்று பலதரப்பட்ட வார்த்தைகள் கதம்பமாக வந்து விழுந்தது சங்கீதாவின் காதில். ராகவ் தன் இருக்கைக்கு அருகே வந்து அமருமாறு முக பாவனை செய்ய, அடக்கமாக சென்று ராகவின் பக்கத்தில் அமர்ந்தாள் சங்கீதா. மீண்டும் பேச்சுகள் தொடர்ந்தன. பேச்சுகளுக்கு இடையே ராகவ் ஒரு நொடி ஏதோ காகிதத்தில் பேனாவால் எழுதி கசக்கி சங்கீதாவின் காலருகே போட, அதை அவள் எடுத்து பிரித்து பார்த்தாள். அதில் "Sara, you are so gorgeous" என்று எழுதியதைப் பார்த்து சிரிக்காமல் மிக அழகாக வெறும் கண்களால் கூட வெட்கப் பட முடியும் என்று ராகவ்க்கு காண்பித்தாள் சரா. 


மீட்டிங் முடியும் நேரம் நெருங்கியது, அனைவருக்கும் கை குலுக்கிவிட்டு ராகவ் சங்கீதாவை தனது BMW காரில் அமரவைத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு பக்கத்தில் உள்ள coffee day கடைக்கு கூட்டி சென்று இரு cold coffee ஆர்டர் செய்தான். ராகவின் கண்கள் சங்கீதாவின் கண்களை ஊடுருவியது. இருவரும் இதற்கு முன்பு முதல் முதலாக ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளும்போது இந்த இடத்தில் அமர்ந்ததை எண்ணி மகிழ்ந்தார்கள்.

"ஏய்.... என்ன அப்படி பார்க்குற?"

'என் தேவதைய நான் பார்க்குறேன்."

"தொடர்ந்து அப்படி உத்து பார்க்காத ராகவ், ஒரு மாதிரி இருக்கு."

"சார், ரென்டு cold coffee" - ஆர்டர் செய்த ஐடம் வந்தது.

ராகவ் அவனது coffeeயை குனிந்து குடிக்கும்போது சங்கீதா ராகவைப் பார்ப்பதும், அவள் coffeeயைக் குடிக்கும்போது ராகவ் விடாமல் அவளுடைய தலை முடி, வளையல், புடவை ஆகியவற்றை கவனிப்பதும் தொடர்ந்து இருவருடைய coffee முடியும்வரை நடந்தது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் கண்ணும் கண்ணும் வைத்து பார்க்க, அப்படியே சில நொடிகள் திரும்பாமல் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் சந்கீதாவால் முடியாமல் குனிந்துவிட்டாள்.

"நீ ரொம்ப மோசம் ராகவ்."

"நான் என்ன செஞ்சேன்?"

"உக்கும்.... ஒன்னும் செய்யல.. என்னதான் இவ்வளோ நாள் உன்னைப் பார்த்தாலும் இப்போ உன்னை நேருக்கு நேர் இப்படி பார்க்கும்போது கொஞ்சம் கூச்சமா இருந்துச்சி, அதான் சொன்னேன்." - லேசாக வெட்கத்தில் சிரித்தாள் சங்கீதா.

"மீண்டும் ஒன்றும் பேசாமல் அப்படியே சங்கீதா பேசுவதை பார்த்துக் கொண்டே இருந்தான் ராகவ்."

"சரி, இப்படி உத்து பார்க்குற அளவுக்கு என்னதான் காணாதத கண்டுட்ட இன்னைக்கி என் கிட்ட?"

"ஒன்னும் இல்ல உன் முடியைப் பார்த்தேன் அதுல கொஞ்சம் மயங்கிட்டேன், அப்போ ஒரு சின்ன காதல் கதை நியாபகம் வந்துச்சி."

"என்ன காதல் கதை?.." - கைகளை கோத்து தனது வாயின் கீழ் வைத்து மேஜையின் முன் வந்து புருவங்களை உயர்த்தி உற்சாகமாய் க் கேட்டாள் சங்கீதா.

"ஒரு சின்ன ஏழ்மையான குடும்பம். காதலனுக்கு கையில் ஒரு கை கடிகாரம் இருக்கும் ஆனால் அதில் ஒரு மணி வாங்கி கோக்கணும் னு ஆசை படுவான், ஆனால் காசு இருக்காது. அவனுடைய காதலிக்கு உன்னை போல ரொம்ப அழகான முடி இருக்கும். ஆனால் வாருவதர்க்கு நல்ல சீப்பு இருக்காது. ஒரு நாள் காதலர் தினம் வரும். அப்போ ரெண்டு பேரும் அவங்கவங்க ஆசை பட்ட பொருளை பரிசா குடுக்கலாம் னு எண்ணி குடுப்பாங்க. காதலன் அவனுடைய கை கடிகாரத்தை வித்து அவளுடைய தலை முடி வாருவதர்க்கு உயர் ரக சீப்பு வாங்கி இருப்பன். காதலியோ, தனது முடிகளை வெட்டி அதை விற்று தன் காதலனுக்கு அவனுடைய கை கடிகாரத்தில் கோக்கும் மணியை வாங்கி இருப்பாள். "

"ஹேய்... so sweet da...." - பலருக்கு இந்த கதை தெரிந்திருந்தாலும் சங்கீதாவுக்கு இந்த கதை தெரியாது. அதுவும் தன் காதலன் சொல்லி இதை அவள் கேட்க்கும்போது மிகவும் ரசித்தாள்."இருவரும் ஒருவருக்கொருவர் குடுத்த பரிசுகளை உபயோகிக்க முடியாத நிலையில் இருந்தாலும் தன்னை காதலிக்கும் ஜீவன் நமக்காக எவ்வளவு தூரம் சென்றிருக்கிறதென்று உணரும்போது இருவரும் கட்டி அனைத்து அவர்களுடைய காதலை உணர்வார்கள். என் மனசுக்கு அந்த விஷயம் நியாபகம் வந்துச்சி உன் தலை முடியைப் பார்த்தப்போ." - என்று ராகவ் சொல்ல..

"சும்மா இரு நீ இன்னும் உன் surprise என்னன்னு எனக்கு காமிக்கவே இல்ல. I am excited to see what that is" - அழகான புன்னகை சிரிப்புடன் கூறினாள் சங்கீதா.

"ஹா ஹா பார்க்கத் தானே போற.... lets go.."

ராகவ் தனது வண்டியை அவனது personal vip visitor room முன்பு நிறுத்தினான்.

சங்கீதாவை உள்ளே அழைத்து சென்றதும் அவள் அந்த இடத்தின் ரம்யமான தோற்றத்தில் கொஞ்சம் அசந்தாள். முழுக்க முழுக்க நாளா புறமும் வெள்ளை நிற சுவர்கள், நடுவினில் கண்ணாடியில் செய்த மேஜையும், இரு நாற்காலியும் மட்டும் இருந்தது. சுவர் அருகே ஒரு படம் silk துணியால் போர்த்தி மூடி வைக்கப் பட்டு இருந்தது. ரூமின் மூலையில் கண்ணைப் பறிக்கும் விதம் artificial fountain வைக்கப் பட்டிருந்தது. அதில் இருந்து கொட்டும் செயற்கை நீர் வீழ்ச்சியின் சத்தம் கேட்பதற்கு இனிமையாக இருந்தது. chair இருந்தும் இருவரும் அமரவில்லை. மேஜையின் இரு பக்கம் நின்று ஒருவருக்கொருவர் மீண்டும் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.

"ஏய்.."

"சொல்லுடா.."

"ரொம்ப அழகா இருக்கே டி.."

"இஸ்ஹ்ம்ம்.." ( தலையை குனிந்து மென்மையான சிரிப்புடன் பெரு மூச்சு விட்டாள் சரா.... நேராக பார்க்க முடியாமல்.)

"உன்னோட surprise பத்தி சொல்ல மாட்டியா?"

"சொல்லாம எப்படி இருக்க முடியும் சரா, I am excited to say, அதனாலதான் இங்கே கூட்டிட்டு வந்தேன்."

"உன்னோடய surprise பத்தி சொல்லேன்" - ராகவ் சற்று நெருங்கி வந்து கேட்டான்.

"நான்தானே முதல்ல கேட்டேன்?"

"சரி சரி, ladies first ஒகவா? ப்ளீஸ்...."

"நீ கண்ணை மூடு.."

"எதுக்கு?"

"சப்.. மூடுன்னா மூடு..."

"சரி சரி.. மூடிட்டேன்... "

ராகவின் காதுகளில் சரா தனது கைகளை லேசாக உயர்த்துகிறாள் என்பதை அவளின் வளையல் ஓசை தெரிவித்தது.

"கண்ணைத் திற.. என்றாள் அவனின் தேவதை."

திறந்தான், பார்த்து வியந்தான். "wow..so beautiful. எப்படி சரா?" - அவளது இரு கைகளின் உள்ளங்கையில் ராகவ் என்று பெயரை எழுதி அதை சுத்தி பூக்கள் போன்ற designs வரைந்து அந்த பெயரே தெரியாத வண்ணம் மருதாணி வைத்திருந்தாள். இருந்தும் ராகவ் அதை கண்டு பிடித்துவிட்டான்.


"பிடிச்சி இருக்கா?" - ராகவின் முகத்தை நேராக பார்த்து கேட்காமல் தனது கரங்களை மட்டுமே வெட்கத்துடன் பார்த்து கேட்டாள் சங்கீதா.

ராகவின் கண்ணில் அவள் மீதிருக்கும் காதல் அப்பட்டமாக தெரிந்தது. பாராட்ட வார்த்தைகள் வரவில்லை அவன் வாயில் இருந்து. நேராக அவளது உள்ளங்கையில் அவனது பெயரின் மீது மென்மையாக ஒரு முத்தம் குடுத்தான். அவனது மீசை அவளது உள்ளங்கையில் உரச, டக்கென முகத்தை வேறு பக்கம் திருப்பி உததுகளை உள்ளே இழுத்து பற்களால் கடித்து கண்களை மூடி வெட்கத்தில் மிக அழகாக மென்மையாக சிரித்தாள் ராகவின் தேவதை சரா.

"north ல பொம்பளைங்க அவங்க மணசு விரும்பின ஆம்பளைங்களோட பெயரை இப்படிதான்.." - சங்கீதா முடிப்பதற்குள் ராகவ் குறுக்கிட்டு "தெரியும் சரா.... நான் அவ்வளோ மக்கு இல்ல.." - என்று சொல்ல இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்தார்கள் - அவர்களின் சிரிப்பு சத்தம் இருவருடைய காதுகளுக்கும் இனிமையான சங்கீதமாக இருந்தது.

"என்னோட surprise என்ன தெரியுமா?" என்றான் ராகவ்

"waiting to listen... சீக்கிரம் சொல்லுடா ப்ளீஸ்."

ராகவ் அருகினில் வந்தான். அவனுடைய ஒரு ஒரு அடியும் முன்னுக்கு வர சாராவின் பாதங்கள் ஒவ்வொரு அடியாக பின் நோக்கி நகர்ந்தது. கடைசியாய் ஒரு கட்டத்தில் சுவரில் சாய்ந்தாள். ராகவ் அவளுக்கு முன்பாக நெருங்கி நின்று அவளது கண்களைப் பார்த்தான். சந்கீதாவே நல்ல உயரம், ஆனால் அவளே நிமிர்ந்து பார்க்கும் விதம் ஆண்மையுடன் கம்பீரமாக அவள் முன் நின்றான். மனதில் சற்று தைரியம் வர வைத்து சங்கீதாவும் ராகவின் பார்வையைப் பார்க்க முயன்றாள். ஆனால் ஏனோ தெரியவில்லை சில நொடிகளுக்கு மேல் அவனுடைய ஊடுருவும் அந்த பார்வையை அவளாள் பார்க்க முடியவில்லை. என்னதான் அவன் கண்கள் இவளது கண்களை மட்டுமே பார்த்தாலும் தலை முதல் பாதம் வரை கிறங்க வைக்கும் powerful மன்மதனின் பார்வை அது.

"ஹாஹ் ஹா." - என்று கண்களை மூடி வெட்கத்தில் சிரித்து வாயில் கை வைத்து மூடி வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.

"என்னோட surprise ல நான் உனக்கு ஒரு விஷயம் சொல்ல போறேன்." - என்று கேசாக குனிந்து சங்கீதாவின் காதருகே சொன்னான் ராகவ்.

"என்ன?" - காற்று கலந்த குரலில் அழகாக கேட்டாள் சரா.

"எனக்கு வாழ்க்கைல இனிமே என்ன காயம் ஏற்பட்டாலும் அதோட வலி எனக்கு தெரியாது."

"ஏன்?" - தலை திரும்பி இருந்தாலும் ஓரக்கண்ணால் ராகவை பார்த்து சிரித்து கேட்டாள் சரா.

ராகவ் தனது சட்டை மேல் button ஒன்றை கழட்ட

"ராகவ் ப்ளீஸ், என்ன பண்ணுற?" - சந்கோஜத்தில் நெளிந்தாள் சரா.

"ஒரு நிமிஷம் இரு... ஹ்ம்ம் இப்போ என் சட்டையை நெஞ்சின் பக்கம் லேசா தள்ளிட்டு பாரு" என்றான்.

"தனது மென்மையான கரங்களால் அவனது சட்டையை நெஞ்சின் ஓரம் லேசாக விளக்கி பார்த்தாள் சங்கீதா.. சாவியால் கீறி ஏற்பட்ட தழும்பின் மீது "சரா" என்று பச்சை குத்தி இருந்தான் ராகவ்."


பார்த்த அடுத்த கணமே சங்கீதாவின் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது.

"இதுக்குதான் நேத்து நீ உன் நெஞ்சுல பிளாஸ்டர் போட்டு இருந்தியா?"

"இல்ல.. இல்ல, என் நெஞ்சுல உன் பேருக்கு ஏற்கனவே கார் சாவியால underline போட்டுட்டேன், சோ அந்த லைன் மேல உன் பேரை பச்சை குத்திகுட்டேன். ஏன்னா என்னதான் வலிகள் என் வாழ்க்கைல வந்து என்னை கீறினாலும் அதுக்கு மேல என் சரா இருக்கா னு நான் ஒரு ஒரு தடவையும் கண்ணாடியில பார்த்துப்பேன். அது எனக்கு எந்த காயத்தையும் மனசளவுல நெருங்க விடாது.." - என்று ராகவ் சொல்லும்போது எந்த தயக்கமும் இல்லாமல் எதையும் யோசிக்காமல் ஒரு நொடி கூட காத்திராமல் அப்படியே ராகவை தன் நெஞ்சோடு இறுக்கி கட்டி அணைத்தாள் அவனுடைய சரா.

சற்று நேரம் ஒன்றும் பேசாமல் அமைதியாய் இருவரும் ஒருவருக்கொருவர் அவர்களது இதய துடிப்பை உணர்ந்தார்கள். அந்த நிசப்தமான மௌன சந்தோஷத்தை அழகு படுத்தும் விதம் சுவரில் உள்ள கடிகாரம் மாலை 5 மணியை நெருங்க கடிகாரத்தின் உள்ளே இரண்டு ஹார்ட்டின் வடிவம் கொண்ட பொம்மைகள் ஒன்றோடொன்று உரசிக்கொண்டது. அப்போது கடிகாரத்தின் ஓசை இவர்களின் மனதை வருடியது. சரா அதை ரசித்துப் பார்த்தாள். ராகவ் சாராவின் காதில் "மனசும் மனசும் எவ்வளவு அழகா உரசுது பார்த்தியா?" என்று காற்று கலந்த husky குரலில் காதலுடன் கூறினான். சங்கீதா அதைக் கேட்டபோது அவளின் கரங்கள் ராகவின் தோள்களை இன்னும் சற்று இறுகி பிடித்தது.

மீண்டும் சங்கீதாவின் காதோரம் ராகவின் காற்று கலந்த குரலின் சங்கீதம் தொடர்ந்தது.. " நீ மருதாநியால என் பேரை எழுதி இருக்கே நான் மெடிசின் மூலமா எழுதி இருக்கேன் அவ்லோதான் வித்யாசம். நம்முடைய காதலை தெரிவிச்சதுக்கு அப்புறம் நாம சந்திக்குற முதல் சந்திப்பு இது. எவ்வளவு இனிமையா கவிதையா அமைஞ்சி இருக்கு பார்த்தியா?"

"I love you my one and only sara, I love you..... I love you so much." - சங்கீதாவின் கண்களை உத்து பார்த்து கூறினான். அவனது பார்வையை நேருக்கு நேர் பார்க்க தயங்கி நின்ற சரா இப்போது அவனது அந்த காந்த பார்வையின் ஆழத்தில் விழுந்து கிடக்க ஏங்கி, வைத்த கண் வாங்காமல் ராகவின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"எ....என் மொத்த வாழ்க்கைலையே இந்த ஒரு நிமிஷம், இந்த ஒரு நொடியை நான் அனுபவிக்குறதுக்காகவே பிறந்திருக்கேன் னு தோணுது டா." - அளவு மிகுதியான சந்தோஷத்தில் கண்களில் பொங்கும் கண்ணீரை க் கட்டுப் படுத்த முடியாமல் அழுது கொண்டே பேசினாள் சரா.

சங்கீதாவின் தலையை தன் பரந்த நெஞ்சோடு அனைத்து அவளது தலையில் முத்தம் குடுத்து, "நான் உனக்கு ஒன்னு தரப் போறேன், சாதாரணமான பொருள் தான் ஆனால் அதுல உனக்கு ரொம்ப பெரிய சந்தோஷம் கிடைக்கும்." என்று சொல்லி ஒரு கவரைக் குடுத்தான் ராகவ். சரா அதைப் பிரித்துப் பார்த்தாள், அதில் IOFI function நடக்கும்போது மேடையில் சங்கீதா award வாங்கியபோது ராகவின் அருகில் நெருங்கி நிற்கும் புகைப்படம் ஒன்றை பெரியதாய் develop செய்து அதில் கீழே "for my one and only sweet heart" என்று எழுதி கை எழுத்து போட்டிருந்தான். உண்மையில் அதை பார்த்த ஒரு நிமிடம் சங்கீதாவுக்கு தன் கழுத்தில் தொங்கும் தாலிக்கு இணையாக மதிப்பு குடுத்து அதை பதிரமாக தன் handbag உள்ளே மடியாமல் கசங்காமல் வைத்துக் கொண்டாள். "உண்மையிலேயே இது எனக்கு ரொம்ப பெரிய பொக்கிஷம் டா" என்று ராகவின் முகம் பார்த்து சிரித்து சொல்லிக்கொண்டே உள்ளே வைத்தாள்.


"நான் உனக்கு குடுக்க ஒண்ணுமே செய்யலடா... சாரி" - என்று ஏக்கத்தில் சங்கீதா பேசும்போது குறுக்கிட்டு "நீ ஏற்கனவே எனக்கு குடுத்துட்ட சரா...." என்று சொல்லி சுவரின் மேல போர்த்தப் பட்டிருக்கும் silk துணியை சடாரென உருவினான் ராகவ், அதில் சங்கீதா ராகவ்க்கு தன் காதலை எழுதி தெரிவித்த கடிதத்தை மிக பிரம்மாண்டமாக பெரிய frame போட்டு நடுவினில் சிறியதாக இருக்கும் அவன் தேவதையின் கடிதத்தை க் காட்டினான். " எப்போவுமே காலைல எழுந்த உடனே என் வீட்டுல சாமி படத்தைப் பார்க்க சொல்லுவாங்க, ஆனான் நான் கண் விழிச்ச்சதும் பார்க்குற படம் இதுதான். இதைப் பார்த்துட்டு அந்த நாளை தொடங்கினா எனக்கு எந்த பிரச்சினையும் வராது. அப்படியே வந்தாலும் என் நெஞ்சுல இருக்குற சாராவை ஒரு தடவ தடவி பார்த்துக்குவேன், அதுக்கு அப்புறம் ரொம்ப சுலபமா எந்த காரியத்தையும் சாதிச்சிடுவேன்."

சங்கீதாவிடம் பேச வார்த்தைகள் இல்லாமல் மெளனமாக நிற்க ராகவ் அவளது மணசு சந்தோஷத்தில் கனத்து இருப்பதை உணர்ந்தான். அப்போது அவனுடைய சாராவும் அவனும் ஒருவருக்கொருவர் லேசாக நெருங்கினார்கள். இன்னும் நெருங்கினார்கள். ஒருவருக்கொருவர் உச்சகட்ட அன்பின் அடையாளமாக தங்களின் காதல் முத்தத்தை ஒருவர் மற்றொருவருடைய இதழ்களில் பதிக்க இருவருமே ஒரு நிமிடம் இவ்வுலகில் தங்களின் சகலத்தையும் மறந்தார்கள். ராகவின் கரங்கள் சங்கீதாவின் கரங்களைப் பற்றியது. மென்மையான இருவருடைய உதடுகளும் ஒன்றோடொன்று உரசி அறிமுகப் படுத்திக் கொண்டது. அழகாக முத்தத்துடன் நிறுத்தி இணைந்த இதழ்கள் பிரிந்து ஒருவருக்கொருவர் தங்களின் முகத்தைப் பார்த்து மென்மையாக சிரிக்கும்போது அலறியது சங்கீதாவின் மொபைல்..

"டிரிங்...டிரிங்..."

ஹலோ..

எம்மா, யாரும்மா சந்கீதாவா? - பேசும் குரலுக்கு அருகே நிறைய கூட்டம் சத்தம் போடுவது கேட்டது. police siren சத்தம் கேட்டது.

"ஆமாம் சொல்லுங்க, நீங்க யாரு?" - பதறி பேசினாள் சங்கீதா.

"நான் உங்க தெரு முனை police station ல இருக்குற ஏட்டு மா.. எனக்கு அதிகம் பேச முடியாது, inspector நிறைய வேலை சொல்லி இருக்காரு, சீக்கிரமா கிளம்பி உங்க வீட்டுக்கு வாங்க, இங்கே ஒரு பெரிய அசம்பாவிதம் நடந்து இருக்கு. நேருல வாங்க உங்க கிட்ட பேசணும்."

"ஹலோ என்ன அசம்பாவிதம், சொல்லுங்க ப்ளீஸ் சொல்லுங்க என்ன அசம்பாவிதம் நடந்துது... சொல்லுங்க ப்ளீஸ்...." - பதறினாள் சங்கீதா.
"கி... கி... கி... கி........." - constable phone கட் செய்யப் பட்டது.


"சங்கீதா என்ன ஆச்சு?"

"உடனே என் வீட்டுக்கு போகணும் ராகவ்" - பயத்தில் அழுதாள் சங்கீதா.. மனதில் பல கலவரம், பசங்களுக்கு என்ன ஆச்சோ? குமார் ஏதாவது ஆத்திரத்துல வீட்டுக்கு வந்த பசங்கள ஏதாவது செஞ்சிடானா?.. ஒன்றும் விளங்க வில்லை சங்கீதாவுக்கு. அவளுக்கு இப்போதிக்கு பலமாய் இருந்தது ராகவின் தோள்கள் மட்டுமே.

"dont worry, இப்போவே போகலாம் சரா, கவல படாத.. - என்று சொல்லி ராகவ் தனது BMW காரை அசுர வேகத்தில் start செய்தான். கார் வேகம் என்று வந்தால் அதில் ராகவை முந்துவதற்கு ஒருவன் பிறந்து வர வேண்டும். அப்படி ஒரு வேகத்தில் ராகவ் சங்கீதாவின் வீட்டை நோக்கி ஜெட் வேகத்தில் பறந்தான்.

இதே நாள், காலை நேரம் 10:00 மணி அளவில் சங்கீதா வீட்டை விட்டு கிளம்பியதும் குமார் வீட்டின் உள்ளே நுழைந்தான். எப்படி ஒரு புறம் தனது மணம் விரும்பிய காதலனின் காதலை உணர்ந்து அவளது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு இனிமையான நினைவு ஏற்பட்டதோ அதற்கு இணையாக மற்றொரு அதிர்ச்சி அவளுக்கு அன்று மாலை நடக்க போகிறதென்று எண்ணி இருக்க மாட்டாள். நடந்தது என்ன என்று சற்று நேரத்தைப் பின் நோக்கி அன்று காலை அவளது வீட்டில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.


No comments:

Post a comment