Saturday, 28 September 2013

அசோக் காலிங் அசோக் 1


சூரியபகவான் டென்ஷனாகி கொதித்துக் கொண்டிருந்தார். காலையிலிருந்து நடுவானம் வரை நகர்ந்து வந்திருந்தவர், தன் உச்சபட்ச உக்கிரத்தை உலகிடம் காட்டிக் கொண்டிருந்தார். சித்ரலேகா (ஐந்து மாதமாக என் ஆசைக்காதலி) ஸ்கூட்டி ஓட்டிக் கொண்டிருந்தாள். நான் (அவளது ஆசைக்காதலன் வீணாப்போன அசோக்) பின்புற இருக்கையில் அமர்ந்திருந்தேன். எனது இரண்டு கைகளாலும் அவளது இடுப்பை இரண்டு புறமும் பிடித்திருந்தேன். சித்ரலேகாவுக்கு சிறுத்த சிக்கென்ற இடுப்பு..!! ஆனால்.. இடுப்புத்தான் சிறுத்துப் போயிருக்குமே ஒழிய, முன்புறமும் பின்புறமும்… ம்ம்ம்ம்.. போங்க பாஸ்.. எனக்கு வெக்கமா இருக்கு..!! அடித்த வெயிலுக்கு எனது உடம்பில் வியர்வை ஊறி கசகசத்தது. எனது வியர்வைதான் கசகசப்பாய் தோன்றியதே ஒழிய, எனக்கு முன்னால் அமர்ந்திருந்த லேகாவின் வியர்வை கவர்ச்சியாகவே என் கண்களுக்கு காட்சியளித்தது. சுடிதார் மறைக்காத அவளது முதுகில், முத்து முத்தாய் வியர்வை துளிகள் பூத்திருந்தன. சூரியக்கதிர்கள் அந்த வியர்வை முத்துக்களில் பட, வைரச் சிதறல்களாய் அவை மின்னின.

நான் என் முகத்தை அவளது முதுகுக்கு அருகில் எடுத்து சென்றேன். மூக்கை அந்த வியர்வை துளிகளுக்கு அருகில் வைத்து ஆழமாக சுவாசித்தேன். இவளுடைய வியர்வை கூட இவ்வளவு வாசமாயிருக்கிறதே என்று வியந்தேன். நான் அந்தமாதிரி வாசம் பிடித்துக் கொண்டிருக்கும்போதே, லேகா எரிச்சலாக சொன்னாள். "ப்ச்.. முதுகு அரிக்குதுன்னு இப்போ உன்கிட்ட சொன்னேனா..? சொறியுற..?" "இல்ல.. எனக்கு மூக்கு அரிச்சுது லேகா.. அதான்.." "ம்ம்ம்ம்... ஒன்னும் வேணாம்.. கொஞ்சம் தள்ளி உக்காரு..!! ஏற்கனவே நீ என் இடுப்பை புடிச்சிருக்குறதே எனக்கு ஒரு மாதிரி இருக்கு..!!" "ஏய்.. என்ன.. சும்மா இடுப்பை புடிச்சதுக்கே இப்படி சலிச்சுக்குற.. அவன் அவன் லவ் பண்ற பொண்ணை.. எதை எதையோ புடிக்கிராணுக..?" "எதை புடிக்கிராணுக..?" "நான் புடிச்சுடுவேன்.. உன் ஸ்கூட்டி புதுசா இருக்கேன்னு பாக்குறேன்.." "புடிக்கிறதுக்கும் புது ஸ்கூட்டிகும் என்ன சம்பந்தம்..?" "நான் புடிச்சதும் நீ ஷாக்காகி.. ஸ்கூட்டியை கொண்டு போய்.. முன்னாடி போற லாரிக்கு முத்தம் கொடுத்துட்டேன்னா..? அப்புறம் உன் ஸ்கூட்டிக்கு மூக்கு சப்பையாயிடும்..!! பரவாலையா.. புடிக்கவா..?" "அடச்சீய்.. தள்ளி உக்காரு அசோக்.. அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் புடிச்சுக்கலாம்..!!" அவள் அந்த மாதிரி எரிச்சலாக சொல்ல, நானும் சற்று கடுப்பானேன். அவளுடைய இடுப்பில் இருந்த கைகளை மெல்ல விலக்கிக் கொண்டேன். முகத்தை திருப்பி சாலையில் போகிற வருகிற வாகனங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ஒரு ஐந்து வினாடிகள் கூட ஆகியிருக்காது. லேகா ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்தினாள். தலையை என்பக்கமாக திருப்பியவள், ஹெல்மட் க்ளாஸை மேலே ஏற்றி விட்டுக் கொண்டாள். காதலும், போதையும் கலந்த மாதிரியான ஒரு குரலில் சொன்னாள். "மத்ததைத்தான கல்யாணத்துக்கு அப்புறம் புடிச்சுக்கலாம்னு சொன்னேன்..? இடுப்பை இப்போ புடிச்சுக்கோ.. பரவால.." சொல்லிவிட்டு அவள் அழகாக புன்னகைக்க, இப்போது நானும் இறுக்கம் தளர்ந்து புன்னகைத்தேன். இரண்டு கைகளாலும் அவளது இடுப்பை இறுகப் பற்றினேன். அவள் மீண்டும் வண்டியை ஸ்டார்ட் செய்து, மிதமான வேகத்தில் செலுத்தினாள். இந்த மாதிரி காதலியின் பின்னால் அமர்ந்து கொண்டு, வண்டியில் பயணம் செய்வதே இணையில்லா இன்பம் என்று தோன்றியது. அவளது இடுப்பை பிடித்துக் கொண்டு.. சாலையின் மேடு பள்ளங்களுக்கு அவள் மேலே சாய்ந்துகொண்டு.. எப்போதடா சடன் ப்ரேக் அடிப்பாள் என்று ஏங்கிக்கொண்டு..!! சுகமான பயணம்..!! இப்போது எதற்கு இந்த சுகப்பயணம் என்று தெரிந்து கொள்வதற்கு முன், கொஞ்சம் என்னைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நான் எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியரிங் மூன்றாமாண்டு படிக்கிறேன். லேகாவை எனக்கு ஒரு வருடமாகத்தான் தெரியும். வேறொரு கல்லூரியில் இரண்டாண்டுகள் படித்திருந்தவள், அங்கிருந்து ட்ரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு, போன வருடம் எங்கள் கல்லூரியில் வந்து சேர்ந்தாள். அவள் வந்த முதல் நாளன்று.. என்றைக்கும் எனக்கு அருகே அமர்ந்திருக்கும் ஏழுமலைக்கு, அன்று அதிர்ஷ்டவசமாக வாந்தி பேதி புடுங்கிவிட, காலியாக இருந்த இருக்கையில் இந்த தேவதை வந்து அமர்ந்தாள். ஹலோ சொன்னாள். கை குலுக்கினாள். அடுத்த நாள் வந்து, 'என் இடம்..' என்று ஏக்கமாக சொன்ன ஏழுமலையை நான் எட்டி எட்டி உதைத்து விரட்டினேன். எனக்கு அருகிலேயே லேகாவுக்கு நிரந்தர இடம் ஒன்று அமைத்துக் கொண்டேன். அவளுடைய மனதுக்குள்ளும் எனக்கு ஒரு நிரந்தர இடம் பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டேன். லேகா கூடிய விரைவிலேயே என்னிடம் மயங்கினாள். என்னுடைய அழகு (சிலர் என் முகத்தில் காறித் துப்பியிருக்கிறார்கள்.. அது இந்த கதைக்கு தேவையில்லாதது..), என்னுடைய அறிவு (எட்டே எட்டு அரியர்தான்..), என்னுடைய வீரம் (பல்லியைப் பாத்தா மட்டும் கொஞ்சம் பயம்..), என்னுடைய நகைச்சுவை உணர்வு (மொக்கைச்சாமி என்று எனக்கு ஒரு பட்டப் பெயர் கூட உண்டு..)..!! இதெல்லாம் பார்த்து லேகா என்னிடம் சொக்கிப் போனாள். ஐந்து மாதங்கள் முன்பு, நான் இல்லாவிட்டால் அவளுக்கு வாழ்க்கையே இல்லை என்று என் காலில் விழுந்து கதறினாள் (ஹலோ.. அதான் பொய் சொல்றேன்னு தெரியுதுல.. அடுத்த பாரா போங்க.. ப்ளீஸ்..). நானும் 'போ.. போ.. பொழைச்சுப்போ..' என்று அவளை காதலிக்க ஒத்துக் கொண்டேன் (ம்ம்ம்ம்.. சொன்னா கேட்க மாட்டீங்களா..?).இப்போது என்னுடைய பேக்ரவுண்டு (ஹலோ.. இதெல்லாம் உண்மைதாங்க..). நான் பிறந்தது கடலூருக்கு அருகில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். விவசாயம்தான் எங்கள் குலத்தொழில். அம்மா, அப்பாவுக்கு ஒரே பிள்ளை. 'அறிவு கெட்டவள்' என்று அப்பாவிடம் அடிக்கடி திட்டு வாங்கினாலும், அம்மா மிகவும் அன்பான பெண்மணி. அவளுக்கு வாழ்க்கையில் மிகவும் பிடித்தமான ஹாபியே.. ஒப்பாரி வைப்பதுதான்..!! டிவி சீரியல் மூலம் அழுவது பத்தாதென்று, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கண்ணீர் கொட்ட காத்திருப்பாள். சோறு கேட்டு வரும் பிச்சைக்காரனிடம் கூட, அவன் பிச்சைக்காரனான சோக கதையை கேட்டு, ஒரு பாட்டம் அழுது, மூக்கை சிந்திப் போட்டுவிட்டுத்தான் சாதத்தை தட்டில் போடுவாள்..!! என்னுடைய அப்பா... ம்ஹூம்.. அந்த ஆளைப் பற்றி நான் எதுவும் சொல்ல மாட்டேன். இப்போது லேகாவே அவரைப் பற்றி கேவலமாக சொல்வாள். கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்..!! "உன் அப்பா ஏண்டா இப்படி ஒரு கஞ்சப் பிசினாரியா இருக்காரு..?" "என்ன பண்றது லேகா.. அப்பன் அமைவதெல்லாம் ஆண்டவன் கொடுத்த வரம்.." "ம்ம்ம்.. இந்தக்காலத்துலலாம் ஒரு கொழந்தை பொறந்த உடனே.. அதுக்குன்னு ஒரு செல்போன் வாங்கிடுறாங்க.. அதுவும் 'தத்தக்கா.. பித்தக்கா..'ன்னு தாத்தா பாட்டிகிட்டலாம் பேசுது..!! நீ எஞ்சினியரிங் தேர்ட் இயர் படிக்கிற எருமை மாடு.. இன்னும் இன்லான்ட் லெட்டர்ல பேசிட்டு இருக்குற..!! செல்போன் வாங்கித் தர சொல்லி உன் அப்பாவை கேட்க வேண்டியதுதான..?" "கேட்டா வாங்கித் தந்தாத்தான..? லெட்டர் இருக்குறப்போ.. செல்போன் எதுக்குன்னு கேக்குறாரு..?" "லெட்டர்னா போய்ச்சேர ஒருவாரம் ஆகும்.. செல்போன்னா நீ பேசுறதை உடனே அவங்க தெரிஞ்சுக்கலாம்னு சொல்ல வேண்டியதுதான..?" "சொன்னேன் லேகா..!! 'உடனே தெரிஞ்சுக்க வேண்டிய அளவுக்கு.. நீ என்ன உலக சமாதானம் பத்தியா பேசப்போற..? உருப்புடாத விஷயத்தை பத்தித்தான் பேசப்போற.. அதை நான் ஒரு வாரம் கழிச்சே தெரிஞ்சுக்குறேன்'னு சொல்றார்.." "ஓஹோ..?? என் ஃப்ரண்ட்ஸ் எல்லாருமே செல்போன் வச்சிருக்காங்க.. எனக்கும் ஆசையா இருக்குப்பான்னு சொல்லிப் பாக்க வேண்டியதுதான..?" "சொன்னேன்.. அதுக்கு அவரு.. 'என் ஃப்ரண்ட்ஸ்லாம் பசங்களை பன்னி மேய்க்க அனுப்பிருக்கானுக.. நீயும் பன்னி மேய்க்க போறியா'ன்னு கேக்குறாரு.." "ஐயையே..!! சரி சரி விடு.. அவரு உனக்கு வாங்கித் தர வேணாம்.. நானே உனக்கு வாங்கித் தர்றேன்..!! லவ் பண்ண ஆரம்பிச்சு அஞ்சு மாசமாச்சு.. செல்போன் இல்லாம உன்னை லவ் பண்றது ரொம்ப செரமமா இருக்கு அசோக்..!! என் ப்ரண்ட்ஸ்க வேற.. 'உன் ஆளு ஓடஃபோன் யூஸ் பண்ணுறாரா.. ஓடாதஃபோன் யூஸ் பண்ணுறாரா..'ன்னு ரொம்ப கிண்டலடிக்கிறாளுக.." அவள் சோகமாக சொன்னாள். "யாரு.. அந்த சோடாபுட்டி ஷோபனாவா..?" "ம்ம்ம்... அவளும் ஆர்த்தியும்..!!" "ஓடஃபோன் இல்ல.. ஏர்செல்னு சொல்ல வேண்டியதுதான..?" "சொன்னேன்.. 'என்னது பார்சலா'ன்னு கேக்குறாளுக..? விட மாட்டேன்றாளுக..!!" "ம்ம்ஹ்ஹ்ம்ம்... அவளுகளுக்குலாம் என்னை மாதிரி ஒரு அப்பன் அமைஞ்சிருந்தா இப்படிலாம் கிண்டல் பண்ண மாட்டாளுக.. இருக்கட்டும் இருக்கட்டும்.. எல்லாத்துக்கும் அனுபவிக்கத்தான் போறாளுக.. ஏதாவது கஞ்ச பிசினாரிதான் அவளுகளுக்குலாம் ஹஸ்பண்டா வரப் போறானுக.. நீ வேணா பாரு.." சொல்லிவிட்டு நான் அமைதியானேன். ச்சே.. என் நிலைமை எவ்வளவு கேவலமாகி விட்டது..? பல்லி மாதிரி இருப்பவள்கள் எல்லாம் என்னைப் பார்த்து பழிப்பு காட்டுகிறார்கள். எல்லாம் என் பாழாப்போன தகப்பனால் வந்தது.அடுத்த ஐந்தாவது நிமிடம், லேகா அந்த செல்போன் ஷோரூம் முன்பாக வண்டியை நிறுத்தினாள். பெரிய ஷோ ரூம்..!! வெளிப்புறம் க்ளாஸ்களால் மூடப்பட்டிருக்க, கடையின் உட்புறம் வெளியே பளிச்சென்று தெரிந்தது. உள்ளே நுழைந்தோம். எந்தப்பக்கம் திரும்பினாலும் செல்போன்கள்..!! எல்.ஜிக்கள்.. நோக்கியாக்கள்.. சாம்சங்குகள்.. சோனி எரிக்சன்கள்..!! கூலி வேலை பார்ப்பவர்கள் வாங்கும் டப்பாஃபோன்கள் முதல், காரில் வருபவர்கள் வாங்கிச் செல்லும் ஐஃபோன்கள் வரை..!! 'வாங்க சார்..' என ஆங்கிலத்தில் முகம் முழுதும் சந்தோஷமாய் அழைத்தவனிடம் சென்றேன். நான் 'அதை காட்டுங்க.. இதை காட்டுங்க.. இதை அதுல போட்டுக்காட்டுங்க..' என்று அவனை டார்ச்சர் செய்ய, கொஞ்ச நேரத்திலேயே அவன் முகம் கொரங்கு மாதிரி ஆனது. கடுப்புடனே ஒவ்வொன்றாக எனக்கு எடுத்து காட்டினான். லேகா எனக்கு அருகே கைகட்டி, வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். சாம்சங் கேலக்ஸி சீரிஸில் ஒரு மொபைல் எனக்கு பிடித்திருந்தது. கொஞ்ச நேரம் அதை திருப்பி திருப்பி.. உருட்டி புரட்டி.. அமுக்கி ஆராய்ந்து விட்டு எடுத்துக் கொள்வதாக சொன்னேன். விலை கேட்டேன். அவனும் சொன்னான். அப்படியே திரும்பி, வாயெல்லாம் பல்லாக லேகாவிடம் விலையை சொன்னேன். "ஜஸ்ட் ட்வெண்ட்டி செவன் தவுசண்ட் லேகா.. எடுத்துக்கவா..?" அவள் எதுவும் பேசவில்லை. கொஞ்ச நேரம் என் முகத்தையும், என் கையில் இருந்தே செல்போனையுமே மாறி மாறி பார்த்தாள். 'பார்த்தாள்' என்று கூட அதை சொல்லக் கூடாது என்று நினைக்கிறேன். முறைத்தாள்..!! ஒரு ஐந்தாறு வினாடிகள்..!! அப்புறம் என் கையிலிருந்த செல்போனை பிடுங்கி, அந்த ஆளிடம் கொடுத்தாள். என் இடது கையை பற்றி, அந்த ஷோ ரூமுக்குள்ளேயே, ஆளில்லாத ஒரு மூலைக்கு, தரதரவென என்னை இழுத்து சென்றாள். நானும் பரபரப்பாக அவளை ஃபால்லோ செய்தேன். அந்த மூலைக்கு சென்றதும், சுற்றும் முற்றும் பார்த்தேன். கண்களை சுழற்றி பரபரப்பாக எதையோ தேடினேன். இப்போது லேகா குழம்பிப்போனாள். எதுவும் புரியாமல், என் புஜத்தை கீறிக்கொண்டே கேட்டாள். "டேய்.. என்ன தேடுற..?" "ச்சே.. இங்க ஒரு எடமும் இல்ல.." நான் சலிப்பாக சொன்னேன். "எடமா..? என்ன எடம்..??" "மறைவான எடம்.. முத்தம் கொடுக்கத்தான இப்போ அவசர அவசரமா என்னை இழுத்துட்டு வந்த..?" நான் அப்பாவியாய் கேட்க, அவள் டென்ஷன் ஆனாள். "அடச்சேய்..!! நெனைப்பை பாரு.. இவரு பெரிய மன்மதக்குஞ்சு.. இவரு செல்போன் செலக்ட் பண்ற அழகுல மயங்கி.. முத்தம் கொடுக்க இழுத்துட்டு வர்றாங்க..!! முத்தமாம் முத்தம்.. மூஞ்சில அப்படியே போட்டன்னா..?" "ஏன் லேகா திட்டுற..?" "பின்ன..??? ஏண்டா.. உனக்குலாம் கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லையாடா..?" அவள் இப்போது பரிதாபமாக கேட்டாள். "என்ன சொல்ற.. எனக்கு ஒன்னும் புரியலை.." "அவன் அவன் லவ் பண்ற பொண்ணை.. அஞ்சு பைசா கூட செலவழிக்க விட மாட்டேன்றாணுக..!! நீ என்னடான்னா.. உன்னை லவ் பண்ணுன இந்த அஞ்சு மாசத்துல.. எனக்கு இருபத்தாஞ்சாயிரம் செலவு இழுத்து வச்சிருக்க..!! இப்போ இன்னொரு இருபத்தேழாயிரத்துக்கு வேட்டு வைக்க ப்ளான் பண்ணுற..? கொஞ்சம் கூட உனக்கு மனசாட்சியே இல்லையா..?" "என்ன லேகா நீ..? லவ்ஸ்ல போய் அக்கவுண்ட்ஸ்லாம் பாக்குற..??" "அக்கவுன்ட்ஸா..? இதுக்கு பேரு அக்கவுன்ட்ஸா..?? அக்கவுண்ட்ஸ்னா வரவும் இருக்கணும், செலவும் இருக்கணும்.. அதுக்கு பேருதான் அக்கவுண்ட்ஸ்..!! செலவு மட்டுமே இருந்தா.. அதுக்கு பேரு அக்கவுண்ட்ஸ் இல்ல.. அட்ராசியஸ்..!!""ரொம்ப சலிச்சுக்காத லேகா..!! எனக்கு மட்டும் உனக்கு செலவு பண்ணனும்னு ஆசை இல்லையா..? என்ன பண்றது.. எல்லாம் என் நெலமை..!! உன் அப்பா ஒரு இண்டஸ்ட்ரி ஓனரு.. என் அப்பா ஒரு இத்துப் போனவரு.. " "அதனால..?" "உன் அப்பாதான் உனக்கு செலவுக்கு எக்கச்சக்கமா காசு கொடுக்குறாருல..? அதான் உன்னை செலவு பண்ண சொல்றேன்.." "ப்ச்.. முன்னமாதிரிலாம் இல்ல அசோக்..!! ரெஸஸன்.. காஸ்ட் கட்டிங்னு என் பாக்கெட் மணிலயும் கை வச்சுட்டாரு..!! ரொம்ப கஷ்டத்துல இருக்குறேண்டா..!! சத்தியமா சொல்றேன்.. எங்கிட்ட அவ்வளவு பணம்லாம் இல்ல..!!" "அப்புறம்..? எவ்வளவு வச்சிருக்க..?" "ஒரு நாலாயிரம் இருக்கு.. அதுக்குள்ளே ஒரு ஃபோன் ச்சூஸ் பண்ணிக்கோடா..!! ப்ளீஸ்.. என் செல்லம்ல..??" அவள் கெஞ்சினாள். "நாலாயிரமா..? நாய் புடிக்கிறவன்லாம் இப்போ நாலாயிரம் ரூபா செல்போன் வச்சுட்டு சுத்துறான் லேகா.. நான் வச்சுக்கிட்டா நல்லாவா இருக்கும்..??" நான் மிஞ்சினேன். "அதுலாம் நல்லாத்தான் இருக்கும்..!! இப்போதைக்கு இதை வாங்கிக்கோ.. அடுத்த வருஷம் நான் உனக்கு ஆன்ட்ராய்ட் ஃபோன் வாங்கித் தர்றேன்..!! சரியா..?" "சத்தியமா..??" "சத்தியமா வாங்கித் தர்றேன்.. இப்போதைக்கு இதை வாங்கிக்கோ..!! ப்ளீஸ் அசோக்..!!" அவள் பரிதாபமாக கெஞ்ச, எனக்கும் அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்ல மாட்டாள். நிஜமாகவே பணம் இல்லை போலிருக்கிறது. இதற்கு மேலும் மிஞ்சினால், இந்த நாலாயிர ரூபாய் ஃபோனும் கிட்டாமல் போக வாய்ப்பிருக்கிறது. வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொண்டேன். அதே சாம்சங்கில் வேறொரு ஃபோன் வாங்கிக் கொண்டேன். வெளியே வந்ததும் லேகா கேட்டாள். "சரிடா.. நான் உன்னை ட்ராப் பண்ணவா..? இல்ல.. நீயா ஆட்டோ புடிச்சு உன் ரூமுக்கு போயிக்கிறியா..?" அவள் பரபரப்பாக கேட்க, நான் பதட்டமே படாமல் தலையை சாய்த்து சூரியனை பார்த்தேன். மணிக்கட்டை திருப்பி ஒரு முறை பார்த்தேன் (இதுவரை நான் வாழ்க்கையில் வாட்சே கட்டியதில்லை என்பது வேறு விஷயம்.. இருந்தால்தானே கட்டுவதற்கு..?) அப்புறம் புதிதாக வாங்கிய அந்த செல்போனையே அமுக்கி மணி பார்த்தேன். முகமெல்லாம் சிரிப்புடன் லேகாவிடம் சொன்னேன். "லஞ்ச் டைம் ஆயிடுச்சு போல இருக்கு லேகா.. எங்கயாவது சாப்பிட்டு போயிடலாமா..?" நான் படுகேஷுவலாக அப்படி கேட்க, லேகாவின் முகமோ படு கலவரத்துக்கு போனது. பிட் அடித்து மாட்டிக் கொண்டவள் மாதிரி திருதிருவென விழித்தாள். அவஸ்தையாக நெளிந்தாள். பேதி மாத்திரை சாப்பிட்டுவிட்டு, வெயிட்டிங்கில் இருப்பவள் போல காணப்பட்டாள். அவளுடைய திருட்டு முழியை பார்த்து நான்தான் திரும்பவும் கேட்டேன். "ஏய்.. என்னாச்சு.. முழிக்கிற..?" "கா...காசு இல்லடா.." லேகா பரிதாபமாக சொன்னாள். "என்னது..???" நான் சற்று குரலை உயர்த்த, "காசு இல்லடா..!!!!" அவளும் சத்தமாக சொன்னாள். "காசு இல்லையா..? எங்க பர்சை கொடு.. பாக்கலாம்.." சொல்லிக்கொண்டே நான் அவளுடைய பர்சை பறிக்க, "ஐநூறு ரூபாதான் இருக்கு.." அவள் அவசரமாக சொன்னாள். "ஐநூறு ரூபா இருக்குல.. அது போதும்.. வா..!! அதுக்குள்ளே அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிட்டுக்குறேன்..!!" "ஐயோ.. இதை வச்சுத்தான் இன்னும் ஒரு வாரத்துக்கு ஓட்டனும்டா.. ப்ளீஸ்டா அசோக்..!!" "ப்ச்.. பசிக்கிற நேரத்துல பணத்தைப் பத்தி பொலம்பாத லேகா.. வா..!! அந்த சோடா புட்டி கிட்ட கடன் வாங்கிக்கோ.. நான் சொன்னேன்னு சொல்லு.. கொடுப்பா..!!" "நீ சொன்னேன்னு சொன்னா.. பணம் கெடைக்காது.. வேற ஏதாவதுதான் கெடைக்கும்.." "வேற எதாவதுனா..?""செருப்பு.. வெளக்குமாரு.. 'அவனை தலை முழுகித் தொலை'ன்னு வண்டி வண்டியா அட்வைஸ்..!!" "ப்ச்.. அவளுக சொல்ற பேட் அட்வைஸ்லாம் கேட்டுக்காத லேகா..!! இப்போ என்ன.. எனக்கு சாப்பாடு வாங்கித் தர முடியுமா..? இல்லையா..?" நான் டென்ஷன் ஆனேன். "சரி..சரி.. கத்தாத..!! போகலாம்..!!" அவள் வழிக்கு வந்தாள். "தேங்க்ஸ்டா செல்லம்.. ரொம்ப பசிக்குதும்மா.. பிரியாணி சாப்பிடனும்னு ரொம்ப ஆசையா இருக்குது.." நானும் இப்போது குழைந்தேன். 'ம்ம்ம்ஹ்ஹ்ம்ம்.. நீ நார்மலா தின்னாலே நாலு பிரியாணி தின்னுவ.. பசிக்குதுன்னு வேற சொல்ற.. பத்து பிரியாணி வேணுமடா.. என்ன ஆகப் போகுதோ இன்னைக்கு..' என அவள் வாய்க்குள் முணுமுணுத்தது என் காதில் தெளிவாக விழுந்தது. ஆனால் அதை நான் கண்டுகொள்ளவில்லை. லேகா ஹெல்மட் மாட்டிக்கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்ய, நான் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டேன். வண்டி கிளம்பியது. மீண்டும் ஒரு சுகப் பயணம்.. அடுத்த பத்து நிமிடங்களுக்கு..!! அப்புறம் அந்த செட்டிநாடு உணவகம் முன்பு வண்டியை நிறுத்தினாள். ஏற்கனவே ஓரிரு முறை நானும் லேகாவும் இங்கே வந்திருக்கிறோம். சாப்பிட்டிருக்கிறோம் (யார் காசில் என்று இப்போது உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்க வேண்டும்.. இல்லாவிட்டால் கதையை ஆரம்பத்தில் இருந்து இன்னொரு முறை வாசித்து விடுங்கள்..) இந்த உணவகத்தில் சாப்பாடு நன்றாக இருக்கும். அதே நேரம் அதிக கும்பலும் இராது. மதிய உணவு நேரம் இப்போதுதான் ஆரம்பிக்கிறது என்ற காரணத்தால், அங்கும் இங்கும் என சிலரே அமர்ந்திருந்தனர். நாங்கள் யார் கண்ணிலும் சிக்காத வகையில் ஒரு கார்னர் டேபிள் சென்று அமர்ந்து கொண்டோம். ஆர்டர் எடுக்க வந்த பையனிடம், நண்டு சூப்.. ப்ரான்ஸ் பிரியாணி.. செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் வறுவல்.. ஆர்டர் செய்தோம். பத்து நிமிடம் காத்திருக்க சொல்லிவிட்டு, அவன் நகர்ந்தான். காத்திருந்த நேரத்தில்.. சற்று முன் வாங்கிய புது செல்போனை எடுத்து நான் பார்த்துக் கொண்டிருந்தேன்..!! அதன் அழகில் வாயைப் பிளந்தவாறு.. இரண்டு புறமும் புரட்டி புரட்டி பார்த்தவாறு.. அங்கங்கே இருந்த பட்டன்களை அமுக்கியவாறு.. கை வைத்து தடவி அதன் ஸ்மூத்னசை அறிந்தவாறு.. கவர் ரிமூவ் செய்து உள்ளே என்னவெல்லாம் இருக்கிறது என்று உற்று உற்று பார்த்தவாறு..!! கிட்டத்தட்ட.. புதுப்பொண்டாட்டியை புருஷன் ஆராய்ச்சி செய்வது போல..!! ஹிஹி..!! "போதும் அசோக்.. விடு.." எனது செய்கையை சகியாமல் லேகா சொன்னாள். "ஏன் லேகா..?" "பின்ன என்ன.. பட்டிக்காட்டான் ஃபாரீன் பிகரை பாத்தது மாதிரி.. அப்டியே ஜொள்ளுவிட்டு செல்போனை பாத்துக்கிட்டு இருக்குற..?" "ஹ்ஹாஹ்ஹா.. போ லேகா..!! ம்ம்ம்.. என் ஃபோன் ரொம்ப அழகா இருக்குல..?" "ம்ம்.. உனக்கு புடிச்சிருந்தா சரிதான்.." "எனக்கு புடிச்சிருக்கு..!! அதுசரி.. ஸிம் எப்போ ஆக்டிவேட் ஆகும்..?" "ஈவினிங் ஆக்டிவேட் ஆயிடும்னு சொன்னான்.." "ஓகே ஓகே.." "இங்க பாரு அசோக்.. ஆக்டிவேட் ஆனதும் மொதல்ல எனக்குத்தான் நீ மெசேஜ் அனுப்பனும்.. மொத கால் எனக்குத்தான் பண்ணனும்.. ஓகேவா..?" "ஓகே லேகா.. பண்ணிட்டா போச்சு.." "அப்பாடா..!! ஒரு வழியா இன்னைக்கோட ஒரு பிரச்னை தீரப் போகுது.. இனிமே நைட்லாம் உன்கூட மணிக்கணக்கா கதையடிக்கலாம்..!!" "ஹாஹா..!! ஆமாம் லேகா.. நெனச்சுப் பாத்தா.. எனக்கும் ஒரே கிளுகிளுப்பாதான் இருக்கு..!!" "டெயிலி நைட்டு நான் ஃப்ரீ ஆனதும்.. உனக்கு மிஸ்ட் கால் கொடுக்குறேன்.. நீ திரும்ப எனக்கு கால் பண்ணி பேசு.. ஓகேவா..?" அவள் கூலாக சொல்ல, "என்னது மிஸ்ட் காலா..? ம்ஹூம்.. அதெல்லாம் வேலைக்காவாது.. நீயே கால் பண்ணிடு லேகா.." நான் பதறினேன்."அய்யோ.. கஞ்சூஸ்..!! காசுக்காக பாக்காத.. டெயிலி நான் உன் நம்பருக்கு டாப்பப் பண்ணிடுறேன்.. மிஸ்ட் கால் வந்தா நீயே கால் பண்ணு.. ஓகேவா..?" "ஓ..!! டாப்பப் பண்ணிடுறியா.. அப்போ டபுள் ஓகே..!! ஆமாம்.. என் நம்பருக்கு டாப்பப் பண்ணி மிஸ்ட் கால் கொடுக்கிறதுக்கு பதிலா.. உன் நம்பருக்கு டாப்பப் பண்ணி.. நீயே பேசிடலாம்ல..?" "ப்ச்.. அதுலாம் உனக்கு புரியாது.. இதுலாம் பொண்ணுங்களுக்கு ஒரு ஈகோ.." "என்ன ஈகோ..??" "ம்ம்ம்ம்.. 'பாருடி.. நான் மிஸ்ட் கால் கொடுத்தா.. என் ஆளு அவரே கால் பண்ணி விடிய விடிய என்கூட பேசுவாரு' அப்டின்னு என் ப்ரண்ட்ஸ்கிட்டலாம் நான் பெருமையா சொல்லிக்குவேன்.." 'த்தூ.. இப்படி ஒரு கேவலப்பட்ட பொழப்பு உனக்கு தேவையா..?' என்று லேகாவிடம் கேட்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அவளுடைய இந்த கேவலப்பட்ட பொழப்பிற்கு காரணமே நான்தான் என்ற உண்மை உறைத்ததும், வாயை இறுக மூடிக் கொண்டேன். பேச்சை மாற்றும் எண்ணத்துடனும், வேறு மாதிரி எண்ணம் மனதில் தோன்றியவனாகவும் கொஞ்சலான குரலில் அவளை அழைத்தேன். "லேகா.." "ம்ம்ம்.." "லேகா..!!!" "சொல்லுடா...!!!!" "நீ எனக்கு மொபைல் வாங்கிக் கொடுத்தேல..?" "ம்ம்.." "அதுக்கு நான் பதிலுக்கு ஏதாவது பண்ணனும் போல இருக்கு.." "ச்சே.. இதுல என்ன இருக்குடா..? யாரோ ரோட்ல போற பிச்சைக்காரனுக்கா நான் மொபைல் வாங்கிக் கொடுத்தேன்.. என் பாய் ஃப்ரண்டுக்குத்தான..? அதெல்லாம் ஒன்னும் வேணாம் விடு.." ஒருவேளை அவள் என்னைத்தான் பிச்சைக்காரன் என்று மறைமுகமாக சொல்கிறாளோ என்று கூட எனக்கு ஒரு சின்ன டவுட் வந்தது. ஆனால் காதல் மயக்கத்தில் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை நான். "என்னதான் இருந்தாலும்..?? உன்னை மாதிரி கேர்ள் பிரண்ட் கிடைக்க நான் எவ்ளோ கொடுத்து வச்சிருக்கணும் தெரியுமா..?? எனக்காக எவ்வளவு செலவு பண்ணிருக்க நீ..?? கண்டிப்பா உனக்காக நான் ஏதாவது பண்ணியே ஆகணும்.. இல்லனா.. எனக்கு மனசு உறுத்திக்கிட்டே இருக்கும்.." "ப்ச்.. அதான் எதுவும் வேணாம்னு சொல்றேன்ல அசோக்..?" "நோ நோ.. நான் கொடுக்குறதை நீ வாங்கித்தான் ஆகணும்.. இல்லனா நான் மனசு உடைஞ்சு போயிடுவேன்.." "ம்ம்ம்ம்.. சொன்னா நீ கேட்க மாட்ட..? சரி.. அப்படி என்ன பதிலுக்கு பண்ணப் போற..?" அவள் கேட்டதும் நான் பட்டென அமைதியானேன். கண்களில் உடனடியாய் ஒரு செயற்கை போதையை வரவழைத்துக் கொண்டு, அவளையே குறுகுறுவென பார்த்தேன். உதட்டை ஒருமாதிரி மடித்து, நாவால் நக்கிக் காட்டினேன். பின்பு அந்த உதடுகளை குவித்து வைத்தவாறு, அவளிடம் சொன்னேன். "உனக்கு ஒரு உம்மா கொடுத்து.. உன்னை சந்தோஷப்படுத்தப் போறேன்.." நான் காதலுடன் சொல்ல, அவளோ கடுப்புடன் கத்தினாள். "செருப்பு..!!!""என்ன லேகா திட்டுற..??" "பின்ன என்ன..? ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்க ட்ரை பண்ணுறியா..? செல்போன் பத்தாதுன்னு.. இப்போ என் உதட்டை வேற கடிச்சு வைக்க ப்ளான் பண்ணுறியா..? ஒன்னும் வேணாம் போ.." "ச்சேச்சே.. அன்னைக்கு மாதிரி கடிக்கலாம் மாட்டேன்.. சும்மா.. லைட்டா.. வச்சுட்டு எடுத்துடுறேன்.. ஓகேவா..?" "ப்ச்.. சும்மா மூடிட்டு உக்காரு அசோக்.. யாராவது பாத்துடப் போறாங்க..?" "யாரு பாக்கப் போறா..? உக்காந்திருக்குறதே ரெண்டு மொண்ணை நாயிங்க.. அதுங்களும் வெறி புடிச்ச மாதிரி சிக்கனை கடிச்சு குதறிட்டு இருக்குதுங்க.. அதுங்க எங்கே நம்மளைலாம் பாக்கப் போகுதுங்க..? வா லேகா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.." "வேணான்னு சொல்றேன்ல.. விடு.." "என்ன நீ.. என்னவோ கிஸ் பண்றதே புடிக்காத மாதிரி ஆக்டிங் குடுக்குற..?" "நான் புடிக்காதுன்னு சொல்லல.. ஆனா கிஸ் பண்றதுக்கு நீ ஒரு காரணம் சொன்னியே.. அதைத்தான் என்னால சகிச்சுக்க முடியலை.." "என்ன சொன்னேன்..?" "ம்ம்ம்ம்... என்னவோ நான் உன் கிஸ்க்காக தவமா தவம் கெடக்குற மாதிரியும்.. அதுக்காகத்தான் இருபத்தொம்பதாயிரம் உனக்கு செலவு பண்ணின மாதிரியும்ல சொல்ற..?" அவ்வளவு கோவத்திலும் அவள் அக்கவுன்ட் சரியாக மெயின்டெயின் செய்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்படி அவள் உஷ்ணமானதில், நான் சற்று மிரண்டுதான் போனேன். ஆனால் அவளுடைய உதட்டைக் கவ்வி உறிஞ்சும் ஆசை என் மனதில் எக்கச்சக்கமாய் ஏறியிருந்தது. வேறு வழியில்லாதது போல தோன்றவும், வெட்கம் விட்டு கெஞ்ச ஆரம்பித்தேன். "ஸாரி ஸாரி ஸாரி.. சாரிடா செல்லம்.. நான் அப்படி சொல்லிருக்க கூடாது.. தப்புத்தான்..!! அதுக்காக கிஸ் முடியாதுன்னு சொல்லிடாத.." அவளும் இப்போது சற்று மனம் இறங்கினாள். "ம்ம்ம்ம்.. அது..!! கிஸ் வேணும்னா இப்படி கெஞ்சிக் கேக்கணும்.. புரியுதா..? அதிகாரம்லாம் பண்ணக் கூடாது..!!" "ஓகே ஓகே.. இனிமே இப்படிலாம் அதிகாரம் பண்ணல.." "சரி.. இங்க வேணாம்.. வெளில எங்கயாவது போயிடலாம்.." "நோ நோ.. எனக்கு இப்போவே வேணும்.." "ப்ச்.. இது பப்ளிக் ப்ளேஸ்டா.." "பரவால.. யாரும் நம்மள நோட் பண்ணல.. வா லேகா.." நான் சொல்லவும், லேகா இப்போது அவஸ்தையை நெளிந்தாள். விழிகளை சுழற்றி சுற்றும் முற்றும் பார்த்தாள். அங்காங்கே கிடந்த இரு டேபிள்களில், அவரவர் இலைகளில் கிடந்ததிலேயே முழுக்கவனமும் இருந்தவர்களை பார்த்ததும், முத்தத்திற்கு ஓரளவு தயாரானவள் போல காணப்பட்டாள். எனக்கும் இதுதான் சரியான சந்தர்ப்பம் என தோன்றவே, சட்டென பாய்ந்து சென்று அவளது செவ்விதழ்களை கவ்விக் கொண்டேன். 'சர்ர்ர்..' என உறிஞ்சினேன். என்னுடைய இரண்டு கைகளும் லேகாவுடைய பட்டுக் கன்னங்களை தடவிக் கொண்டிருந்தன. எனது இரு உதடுகளும் அவளுடைய உதடுகளை இறுகக் கவ்வி சுவைத்தன. முத்தத்தில் கிடைத்த சுகத்தில் லேகாவுக்கு கண்கள் செருகிக் கொண்டன. சட்டையோடு சேர்த்து என் மார்பை கொத்தாகப் பற்றி பிசைந்தவாறு, சத்தமே போடாமல் தன் இதழ்களை என் வசம் இழந்திருந்தாள். எங்கள் இருவரது உதடுகளும் எசகுபிசகாய் சிக்கிக்கொண்டிருக்க, எங்கள் நாக்குகள் மெல்ல ஒன்றை ஒன்று தீண்டிப் பார்த்தன..!! தடவின..!! மாற்றி மாற்றி எச்சில் பூசி விளையாடின..!! சும்மா வைத்து எடுக்கிறேன் என்று நான் சொல்லியிருந்தாலும், அவளது உதடுகளை கடித்தே சுவைத்தேன். முடியாது என்று லேகா பிகு பண்ணியிருந்தாலும், முழு ஒத்துழைப்பையும் என் முத்தத்திற்கு வழங்கினாள். நாங்கள் இருவரும் சூழ்நிலை மறந்து, சுவையான முத்தத்தில் கட்டுண்டு கிடந்தோம். அரை நிமிடம் அவளுடைய உதட்டுத்தேனை திகட்ட திகட்ட உண்டுவிட்டு திரும்பியபோது... ஆவி பறக்கும் நண்டு சூப்புடனும், ஆவேன பிளந்த வாயுடனும் சர்வர் பையன் நின்றிருந்தான். எதோ பேயிடம் பலமாக அறை வாங்கிவன் மாதிரி அதிர்ந்து போய் அசைவின்றி நின்றிருந்தான். அவ்வளவுதான்..!! லேகா உடனே வெட்கப்பட்டு தலையை கவிழ்ந்து கொண்டாள். எனக்குத்தான் என்ன செய்வதென்றே புரியவில்லை. அந்த சர்வரைப் பார்த்து 'ஈஈஈஈ'' என இளித்தபடி, லூசுத்தனமாய் எதோ உளறினேன். "அ..அது ஒன்னுல்லப்பா.. அவங்களுக்கு உதட்டுல தூசி விழுந்துடுச்சு.. ஊதி விட்டுட்டு இருந்தேன்.. நீ ஒன்னும் தப்பா நெனச்சுக்காத.." அப்புறம் அரை மணி நேரம்.. ஆர்டர் செய்த ஐட்டங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்க, நாங்கள் சாப்பிட்டோம். லேகா முத்தமிட்டு மாட்டிக்கொண்ட வெட்கம் நீங்காமல், கொஞ்சம் கொஞ்சமாய் கொறித்தாள். எனக்குத்தான் வெட்கம், கூச்சம் ஒரு எழவும் கிடையாதே..? என் இஷ்டத்திற்கு எல்லாத்தையும் மேய்ந்தேன். அந்த சர்வர் பையன் கொஞ்ச நேரத்திற்கு பித்துப் பிடித்தவன் மாதிரியே சுத்திக் கொண்டு இருந்தான். சூப்பர்வைசரிடம் கெட்ட வார்த்தையில் திட்டு வாங்கினான். பாவமாக இருந்தது..!! சாப்பிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினோம். லேகாவே என்னை எனது ரூம் வரை வந்து ட்ராப் செய்தாள். கிளம்புகையில் கையால் உதட்டை தொட்டு காற்றில் ஒரு முத்தத்தை பறக்க விட்டு சென்றாள். நானும் அதைப் பிடித்து என் கக்கத்தில் வைத்துக்கொண்டு மாடிப்படியேறி என் அறைக்கு சென்றேன். காலிங் பெல் அடித்துவிட்டு காத்திருந்தேன். கருப்பு நிறமும், கனத்த தேகமும் கொண்ட அந்த பெண்மணி வந்து கதவை திறந்தாள். "வா அசோக்கு.. லேகா பாப்போவோட ஊர் சுத்தினு வர்றியா..?" அவள் 'ஈஈ' என இளித்தவாறு கேட்க, "இ..இல்லத்தை.. ஆ..ஆமாத்தை.." என நான் உளறினேன். அந்தப்பெண்மணி வேறு யாரும் இல்லை. என் ரூம்மேட் ஜான்சனின் தூரத்து சொந்தம். அத்தை முறை வேண்டும் என்று என்னிடம் சொல்லியிருக்கிறான். இதே ஊரில்தான் இருக்கிறாள். அவ்வப்போது வந்து ஜான்சனை பார்த்துவிட்டு செல்வாள். "ஜானியை எங்கத்தை.. ஆளைக்காணோம்.." என்றேன் நான். "குளிச்சுட்டு வர்றேன்னு பாத்ரூம் போயிருக்கான் கண்ணு..!! நீ வா.. உக்காரு..!! காபி போடவா..? சாப்பிடுறியா..?" "இல்லத்தை.. இப்பத்தான் பிரியாணி சாப்பிட்டேன்.. வேணாம்.." அப்புறம் நானும் ஜானியின் அத்தையும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். ஒரு ஐந்து நிமிடத்திலேயே ஜானி குளித்துவிட்டு வெளியே வந்தான். அவன் வந்த கொஞ்ச நேரத்தில் அவனுடைய அத்தையும் கிளம்பினாள். அவள் கிளம்பியதும் இவன் டிவி ஆன் செய்து, எம் டிவியில் அலறிய பாடல் ஒன்றுக்கு 'ஏ.. ஏ.. ஏ..' என்று கத்தியவாறு என் அருகில் வந்து அமர்ந்தான். ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. நைசாக என்னிடம் தூண்டில் போட்டுப் பார்த்தான். "அப்புறம் மச்சி.. லேகா குட்டி என்ன சொல்லுச்சு..?" அவன் நக்கலாக கேட்க, நான் கடுப்பானேன். "த்தா.. இனிமே அவளை குட்டி, பொட்டி, ஜட்டின்னுலாம் சொன்ன.. கடுப்பாயிடுவேன் நான்.." "ஹேய்.. இப்போ ஏன் டென்ஷன் ஆவுற..? புடிக்கலைன்னா சொல்ல வேண்டியதுதான..? சரி விடு.. இனிமே அப்படி கூப்பிடலை..!! லேகா மேடம் என்ன சொன்னாங்கங்க...?" என்று உடனே அவன் போலி மரியாதை காட்டினான். "ஒ..ஒன்னும் சொல்லலை.. சும்மா லஞ்ச் சாப்பிட்டு வந்தோம்.. அவ்ளோதான்.." "ம்ம்ம்ம்.... பாக்கெட்டு ஏதோ பல்ஜாயிருக்குற மாதிரி இருக்கு.. இன்னாது அது..? எதுனா வாங்கித் தந்தாளா..?" "ப்ச்.. அதுலாம் எதுக்கு உனக்கு..?" "ஏய்.. சும்மா சொல்லுடா.. அதை தெரிஞ்சுக்கிட்டு நான் என்ன பண்ணப் போறேன்..??" அவன் கேஷுவலாக கேட்க, நான் அவனை ஏறிட்டு முறைத்தேன். நான் ஏன் முறைக்கிறேன் என்று உங்களுக்கு அவ்வளவாக விளங்காது. அந்த இம்சை எனக்கு மட்டுமே தெரியும். 'அதை தெரிஞ்சுக்கிட்டு நான் என்ன பண்ணப் போறேன்' என்று அலட்சியமாக கேட்டான் அல்லவா..? இந்த மாதிரி விஷயங்களை தெரிந்து கொள்ளத்தான் இவன் இந்தப் பிறவியே எடுத்திருக்கிறான். அடுத்தவர்களுடைய ரகசியங்களை அறிந்து கொள்வதில் அப்படி ஒரு ஆர்வம்..!! ஆனால் அவனுக்குள் இருக்கும் ஆர்வம், அவனது குரலில் தெரியாது. இது இரண்டு வருடங்களாக இவன் கூட இருந்ததில் நான் அறிந்து கொண்ட விஷயம்.ஜானியைப் பற்றி கொஞ்சம் சொல்லுகிறேன். என்னுடைய க்ளாஸ்மேட்தான்..!! ஆள் பார்ப்பதற்கு ஆறடி உயர மாடு மாதிரி இருப்பான். ஆண்ட்ரூ ப்ளிண்டாஃபுக்கு அரைக்கால் டவுசர் மாட்டிவிட்டது மாதிரி காட்சியளிப்பான். முகத்தில் எப்போதுமே ஒரு அலட்சியம். முள் முள்ளாய் தலை முடியும், அதே முள் முள்ளாய் தாடியும்..!! 'முட்டாக்கூ.. கேனைக்கூ.. லூசுக்கூ..' என்று தொண்டைத்தண்ணி வற்றும் அளவிற்கு எவ்வளவு கேவலமாக திட்டினாலும் கூட, 'ஹேஹே.. அப்புறம்..?' என்று கேனைத்தனமாக சிரிக்கக் கூடிய கேரக்டர் அவன். எனக்காவது வெட்கம் மட்டுந்தான் கெடயாது. அவனுக்கு மானம், சூடு, சொரணை என அந்த கேட்டகரியில் வரும் எந்த விஷயமுமே கெடயாது. அவனைப் பற்றி இந்த அளவு புரிந்து வைத்திருந்தாலும், அவனிடம் எந்த ரகசியத்தையும் என்னால் மறைக்க முடியாது. உளறிக் கொட்டிவிடுவேன். நான் எப்படிப்பட்ட ஓட்டை வாய் என்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள். இப்போதும் அப்படித்தான். லேகா செல்போன் வாங்கித் தந்த மேட்டரை கறந்து விட்டான். 'கொடுத்து வச்சவன்டா நீ..' என்றான்.. 'போடா.. கோணப்பூ..' என்று திட்டினேன். 'தண்ணி வாங்கித்தாடா..' என்றான். 'போடா.. சுண்..' என்று திட்டிவிட்டு என் ரூமுக்கு வந்தேன். மெத்தையில் விழுந்தேன். உறங்கிப் போனேன். உண்ட பிரியாணிக்கு உறக்கம் உடனே வந்தது. வாயைப் பிளந்தவாறு தூங்கிப் போனேன். மாலை ஐந்து மணி வாக்கில் எழுந்தேன். முகம் கழுவிவிட்டு வெளியே வந்தேன். நானும் ஜானியும் கீழே இருக்கும் டீக்கடை சென்று டீ சாப்பிட்டுக்கொண்டே, புகை விட்டோம். பின்பு மீண்டும் மாடியேறி மேலே வந்தோம். நான் என் அறைக்குள் நுழைந்து கொண்டேன். எனக்கு தம்மடிப்பது, தண்ணியடிப்பது, பெண்களிடம் வழிவது என நிறைய கெட்ட பழக்கங்கள் இருக்கின்றன. ஆனால் எனக்கும் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. என்னவென்று சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். அது.. தினமும் டைரி எழுதுவது..!! கடந்த ஐந்து வருடங்களாக இதை நான் செய்து வருகிறேன். எஸ்.எஸ்.எல்.சி படிக்கும்போது, எஸ்தர் என்ற அழகான டீச்சர் கேட்டுக்கொண்டதற்காக ஆரம்பித்த பழக்கம். அதுமட்டுமில்லாமல் எழுதிய டைரிகளை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். அவ்வப்போது அதை எடுத்து, எப்போதோ நான் செய்த கோணங்கித்தனங்களை படித்து ரசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஹாபி..!! ரூமுக்குள் நுழைந்ததுமே எனது இந்த வருட டைரியை எடுத்துக்கொண்டு மெத்தையில் படுத்தேன். இன்று நடந்தவற்றை பற்றி எழுத ஆரம்பித்தேன். 'அன்புள்ள டைரி.. இன்று என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.. என்னுடைய முதல் செல்போனை இன்றுதான் நான் வாங்கினேன்..' நான் எழுதிக் கொண்டிருக்கும்போதே, "ஆமாம்.. இவரு பெரிய ஆளவந்தான் கமலஹாசன்.. டைரியை லவ்வாங்கி பண்றாரு..!!" சத்தம் கேட்டு நான் திரும்பிப் பார்த்தேன். 'ஈஈ..' என்று இளித்தவாறு ஜானி நின்றிருந்தான். தன் வலது கையால் ஷார்ட்சுக்குள் இருந்த தன் தம்பியை பிடித்து கசக்கியவாறு நின்றிருந்தான். எனக்கு எப்படி டைரி எழுதுவது ஒரு ஹாபியோ.. அதுமாதிரி இவனுக்கு இடுப்புக்கு கீழே இருப்பதை பிடித்து கிட்டார் வாசிப்பது ஒரு ஹாபி..!! அவனைப் பார்த்து நான் பயங்கர கடுப்பானேன். கத்தினேன். "ஏய்.. என்னடா வேணும் உனக்கு இப்போ..?" "ஒன்னும் வேணாம் மச்சி.. நீ எழுது.. நான் டிஸ்டர்ப் பண்ணல.." "ங்கோத்தா.. அறிவே இல்லையாடா உனக்கு..? நிம்மதியா ஒரு டைரி கூட எழுத விட மாட்டியா நீ..?" "ஏன் மச்சி திட்டுற..?" அவன் பரிதாபமாக கேட்டான். "திட்டுறதா..? இப்போ நீ போகலை.. மிதிக்கிற மிதில.. கொட்டை ரெண்டும் கோலிக்குண்டு மாதிரி தெறிச்சுடும்..!!" "என்னடா.. ரொம்ப கோவமா இருக்கியா நீ..? சரி சரி.. நீ எழுது.. நான் அப்புறமா எடுத்து படிச்சுக்குறேன்.."கொஞ்சம் கூட சொரணையே இல்லாமல் அவன் சொல்லிவிட்டு நகர, 'இவனை என்ன செய்வது..?' என்று நான் கொஞ்ச நேரம் கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் அன்று நடந்த மிச்ச கதைகளை எழுத ஆரம்பித்தேன். செல்போன் ஷோரூமில் லேகா கெஞ்சியது.. ரெஸ்டாரண்டில் அவளுடன் உதடுகள் உரசிக் கொண்டது.. அந்த சர்வர் பையனை கொஞ்ச நேரம் மந்திரித்து விட்ட கோழி மாதிரி ஆக்கியது.. எல்லாம் எழுதினேன்..!! எழுதி முடித்துவிட்டு நிமிர்ந்தபோது, புதிதாய் வாங்கிய என் செல்போன் 'கிணி கிணி கிணி..' என்று கத்தியது. அதற்குள் ஆக்டிவேட் ஆகிவிட்டதா..? நான் டைரியை மூடி வைத்துவிட்டு, ஓடிச்சென்று என் செல்போனை எடுத்தேன். ஆசையுடன் என் செல்போனைப் பார்த்தவன், பதறிப்போனேன்..!! 'பளிச்.. பளிச்.. பளிச்..' என மின்னல் வெட்டியது மாதிரி வெட்டிக்கொண்டு கிடந்தது என் செல்போனின் திரை..!! 'கீ.. கீ.. கீ..' என்று கிள்ளிவிட்ட குழந்தை மாதிரி அலறியது..!! ஐயையோ.. என்னாயிற்று இதற்கு..?? வாங்கிய முதல் நாளே புட்டுக் கொண்டதா..??? நான் கலவரமாய் பார்த்துக் கொண்டிருந்தபோதே, அது கொஞ்சம் கொஞ்சமாய் சாந்தமானது. வெட்டிக்கொண்டிருந்த திரை ஒருவழியாய் ஓரிடத்தில் நின்றது. பளீரென வெளிச்சத்தை வாறி இறைத்தது. கோல்டன் கலரில் அந்த எழுத்துக்கள் திரையில் மின்னின. 'ASHOKTEL'..!! என்ன இது..?? AIRTEL என்றுதானே வரவேண்டும்..?? அதற்குள் யாராவது ஏர்டெல் கம்பெனியை வாங்கி விட்டார்களா..? ஒன்றும் புரியவில்லை எனக்கு..?? குழம்பிப் போனவனாய் என் செல்போனையே பார்த்துக் கொண்டிருக்க, அந்த கால் வந்தது..!! 'ASHOK CALLING..' என்று பளிச் பளிச்சென மின்னியது. காலிங் நம்பர் இருக்க வேண்டிய இடத்தில் கன்னாபின்னாவென்று பூஜ்யங்கள்..!! என்ன எழவுடா இது..? நான் யாருடைய காண்டாக்டும் இதுவரை இதில் ஸேவ் செய்யவே இல்லையே..?? என்ன நடக்கிறது இங்கே..?? என்ன ஆயிற்று என் செல்போனுக்கு..??? இந்த காலை அட்டன்ட் செய்யலாமா வேணாமா..??? எதுவுமே புரியவில்லை.. நான்கைந்து வினாடிகள் யோசித்தவன், அப்புறம் காலை அட்டன்ட் செய்யலாம் என்று முடிவுக்கு வந்தேன். பிக்கப் செய்து காதில் வைத்தேன்.

"ஹலோ..!!!" என்றேன். "ஹலோ.. இஸ் திஸ் அசோக்..?" என்றது கரகரப்பான மறுமுனை. "ஆமாம்.. நீங்க யாரு..?" நான் கேட்டதுதான் தாமதம். "வாவ்...!!!!!!!!!!!!! ஐ கான்ட் பிலீவ் திஸ்..!!!! திஸ் இஸ் அமேசிங்..!!!!! ஹே.. ஹே.. ஹே.. ஹே..!!!!!!!" என்று லூசுத்தனமாய் கத்த ஆரம்பித்தான் அந்த ஆள். நான் எரிச்சலானேன். "ஹலோ.. யாருங்க நீங்க..? யாரு வேணும் உங்களுக்கு..? இந்த நம்பர் எப்படி உங்களுக்கு தெரியும்..??" "ஹேய் ஹேய்.. டென்ஷன் ஆகாத..!! நான் யாருன்னு உனக்கு தெரியலையா..?" "சொன்னாதானங்க தெரியும்.. உங்க பேரை சொல்லுங்க.." "மை நேம் இஸ் அசோக்..!!" "ஓ.. உங்க பேரும் அசோக்கா..? என் பேரும் அதுதான்..!!" நான் அப்பாவியாய் சொல்ல, "ஹஹாஹஹாஹஹா...." அந்த ஆள் அடல்ட்ஸ் ஒன்லி ஜோக் கேட்டது மாதிரி கனைத்தான். "ஏங்க லூசு மாதிரி சிரிக்கிறீங்க..??" "பேர் மட்டும் ஒண்ணு இல்ல அசோக்.. ஆளும் ஒண்ணுதான்..!!" "என்னங்க சொல்றீங்க.. எனக்கு எதுவும் புரியலை.." "ஐ மீன்.. நீதான் நான்.. நான்தான் நீ..!! ஆனா நான் வேற ஒரு டைம் பீரியட்ல இருந்து பேசுறேன்..!! உனக்கு ப்யூச்சர் டைம்ல இருந்து பேசுறேன்..!! இட் மீன்ஸ்.. இப்போ நீயே உன்கூட பேசிட்டு இருக்குற..!! நீ 2011-ல இருக்குற.. நான் 2035-ல இருந்து பேசுறேன்..!! இப்போ உனக்கு தெளிவா புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்..!! ஹஹாஹஹாஹ...!!!" சொல்லிவிட்டு அந்த ஆள் மறுபடியும் குதிரை மாதிரி கனைக்க ஆரம்பித்தான். அவன் என்ன சொல்லுகிறான் என்று எனக்கு சத்தியமாக புரியவில்லை. உங்களுக்கு ஏதாவது புரிகிறதா..???அந்த ஆள் எனக்கு பேச வாய்ப்பே தராமல் நெடுநேரம் 'ஹ்ஹ்ஹாஹ்ஹாஹ்ஹா..' என வெறி பிடித்தவன் மாதிரி சிரித்துக் கொண்டே இருந்தான். எனக்கோ தலையை சுற்றி ஸ்டார்ஸ் பறப்பது மாதிரி ஒரு உணர்வு..!! கஸ்டமர் கேர்-இல் இருந்து ஹனி வாய்ஸில் ஒரு ஃபிகர் பேசி.. என் செல்போனுக்கு திறப்புவிழா நடத்தும் என்று எதிர்பார்த்திருந்தேன். இப்படி கழண்டுபோன கேஸ் ஒன்று கரகர வாய்ஸில் பேசி.. கழுத்தறுப்பு ஓப்பனிங் கொடுக்கும் என்று, கனவிலும் நான் நினைக்கவில்லை. எதோ பைத்தியக்கார ஆஸ்பத்திரியில்.. டாக்டர்கள் தம்மடிக்கப்போன கேப்பில்.. நர்ஸின் செல்போனை திருடித்தான் இந்த ஆள் பேசுகிறான் என்று ஆரம்பத்தில் எனக்கு தோன்றியது. ஆனால் அதே நேரம்.. அந்த ஆள்தான் லூசு என்றாலும், என் செல்போனுக்கு என்னாயிற்று..? இது ஏன் பிசாசு பிடித்த பீஸ் போல பிஹேவ் செய்கிறது..? ஏர் டெல்லுக்கு பதிலாய் ஏதேதோ டெல் காட்டுகிறது..? நான் எதோ கன்னிப்பெண் மாதிரி பளிச் பளிச்சென என்னைப் பார்த்து கண்ணடிக்கிறது..? நடுராத்திரி நாய் மாதிரி ஊளையிட்டு கிலி கிளப்புகிறது..? என்ன இது சின்னப்புள்ளத்தனமாக இருக்கிறது..?? அதுமில்லாமல் அந்த ஆள் வேறு என் பெயரை அசோக் என்று சரியாக சொன்னானே..? இன்றுதான் செல்போன் வாங்கினேன். இன்னும் ஸிம் கூட ஆக்டிவேட் ஆகவில்லை. அதற்குள் எப்படி..??? ஒருவேளை இது ஏதோ மாந்தீரிக சமாச்சாரமாக இருக்குமோ..? யாராவது என் செல்போனுக்கு பில்லிசூனியம் வைத்துவிட்டார்களா..? இது எதற்கடா வம்பு..? பேசாமல் காலை கட் செய்துவிடலாம்.. நாளை பாடிகார்ட் முனீஸ்வரன் கோயிலில் வைத்து பூஜை செய்த பிறகு யூஸ் பண்ண ஆரம்பிக்கலாம்..!! யோசனை வந்த அடுத்த வினாடியே, நான் காலை கட் செய்தேன். இல்லை இல்லை.. கட் செய்ய முயற்சி செய்தேன். ஆனால் கால் கட் ஆகவில்லை..!! அந்த ஆள் கனைப்பது கன்டின்யுவசாக கேட்டுக் கொண்டே இருந்தது. நான் பதறிப் போனேன்.!! ஐயையோ.. என்ன ஆயிற்று என் செல்போனுக்கு..?? "கால் கட் பண்ண ட்ரை பண்ணுறியா அசோக்..?" அந்த ஆள். "ஆ..ஆமாம்.. உனக்கு எப்படி தெரியும்..?" "எனக்கு எல்லாம் தெரியும்.. காலை அவ்ளோ சீக்கிரமா கட் பண்ண முடியாது.. ஹ்ஹ்ஹாஹ்ஹா..." "ஏ..ஏன்..?" "அதென்ன க்ளாஸ் கட் பண்ற மாதிரி அவ்வளவு ஈசியா நெனச்சுக்கிட்டியா..?? முடியவே முடியாது..!! வேணுன்னா நல்லா ட்ரை பண்ணிப் பாரு..!!" ம்ஹூம்.. இது வேலைக்காகாது..!! ஸ்விட்ச் ஆஃப் பண்ணிவிட வேண்டியதுதான்..!! செல்போனின் நடுமண்டையில் இருந்த அந்த பட்டனை அமுக்கு அமுக்கென்று அமுக்கினேன்..!! ஐயையோ.. ஸ்விட்ச் ஆஃப் பண்ணவும் முடியவில்லை..!! என்ன எழவுடா இது சாமி..??? டென்ஷனாகி கத்தினேன். "யோவ்.. ஸ்விட்ச் ஆஃப் பண்ணக் கூட முடியலையா..!!" "நான்தான் சொல்றேன்ல..? நான் இங்க கனெக்ஷன் கட் பண்ணாம.. அங்க கட் ஆகாது..!!" அந்த ஆள் கூலாக சொல்ல, நான் கடுப்பானேன். "யோவ்.. யார்யா நீ..? கூறு இல்லாத குட்டிச்சாத்தான் மாதிரி.. ஏன்யா இப்படி என் உசுரை வாங்குற..? காலை கட் பண்ணித் தொலையா..!!" எரிச்சலில் கத்தினேன். "ஓகே ஓகே.. கூல் கூல்..!! ஏன் இப்போ டென்ஷன் ஆகுற..?" "டென்ஷன் ஆவாம..? யார்யா நீ..?" "நான்தான் சொன்னனே.. நீதான் நான்.. நான்தான் நீ.." "ஐயோ ஐயோ.. ராமா ராமா.. என்னால முடியலை.. இப்போ நீ காலை கட் பண்ணலை.. நான் போனை உடைச்சு கடாசிடுவேன்.." "ஹே ஹே அசோக்.. ப்ளீஸ் ப்ளீஸ்.. அப்டிலாம் பண்ணிடாத.. அப்புறம் இத்தனை நாள் நான் கஷ்டப்பட்டதுலாம் வேஸ்ட்டா போயிடும்..!!" அந்த ஆள் இப்போது கெஞ்ச ஆரம்பித்தான். "இல்ல.. இப்படியே நீ பேசிட்டு இருந்தேனா.. நான் உடைக்கத்தான் போறேன்.." "ப்ளீஸ் அசோக்.. அப்டி மட்டும் பண்ணிடாத..!! உனக்கு இதோட இம்பார்ட்டன்ஸ் இன்னும் புரியலை.. உன்கிட்ட பேசுறதுக்காக நான் இருபத்து நாலு வருஷமா வெயிட் பண்ணிட்டு இருக்குறேன் அசோக்..!!" அந்த ஆள் ஃபீலிங்காக சொல்ல, "இருபத்துநாலு வருஷமா வெயிட் பண்ணுறியா..? நான் பொறந்தே இருபது வருஷந்தான்யா ஆகுது..!! லூசு லூசு..!!" நான் புலம்பலாய் கத்தினேன். "புரியாம பேசாத அசோக்.. இன்னும் ஒரு வாரத்துல உனக்கு ஒரு பேராப்பு வரப்போகுது..!! அதுல இருந்து உன்னை காப்பாத்ததான் இவ்ளோ கஷ்டப்பட்டு உனக்கு கால் பண்ணுறேன்.." "என்னது பேராப்பா..? அது பேராபத்துன்னுதான சொல்வாங்க..?" நான் இப்போது சற்றே ஆர்வமானேன். "இல்ல இல்ல.. ஆப்புதான்..!! 2020ல தமிழ் அகராதில சில கரெக்ஷன் பண்ணினாங்க.. அதுல நெறைய வேர்ட்ஸ் மாறிப்போச்சு.. ஆபத்துன்றதை ஆப்புன்னு மாத்திட்டாங்க..!! 'ஆப்பிலே அறியலாம் அருமை நண்பனை'ன்னு பழமொழியை கூட மாத்திட்டாங்கப்பா..!!" "ஓஹோ..? அப்படி என்ன எனக்கு பேராப்பு வரப் போகுது..? லேகா இனிமே எனக்கு செலவே பண்ண மாட்டேன்னு சொல்ல போறாளா..?" "அதில்ல.." "அப்போ.. அப்பா ஊர்ல இருந்து கெளம்பி வர்றாரா..?" "ம்ஹூம்.." "ம்ம்ம்ம்.. அந்த சோடாபுட்டி ஷோபனா எங்கிட்ட லவ் ப்ரொபோஸ் பண்ண போறா..!! கரெக்டா..?" "ஐயையோ.. அதெல்லாம் இல்லப்பா.." "அதுவும் இல்லனா.. வேற என்ன..? இந்த ஜானிப்பையன் சைக்கோபாத் ஆகப் போறானா..?" "உஷ்ஷ்ஷ்...என்னை கொஞ்சம் பேச விடுறியா..?" "என்ன ஆப்புன்னு சீக்கிரம் சொல்லித் தொலையா..!! எனக்கு ஒரே டென்ஷனா இருக்கு..!!" "நோ..!! அதை நான் இப்போ சொல்ல மாட்டேன்..!!" "வேற எப்போ சொல்லுவ..? ஆப்பு வச்சு.. அதை உருவி.. ஆயின்ட்மன்ட்லாம் அப்ளை பண்ணப்புறம் சொல்வியா..?" "அசோக்.. மொதல்ல உனக்கு என் மேல நம்பிக்கை வரணும்.." "அது இந்த ஜென்மத்துல வராது.." "வரும்..!! மொதல்ல ஒன்னு புரிஞ்சுக்கோ.. உனக்கு நல்லது பண்றதுக்குத்தான் நான் இவ்ளோ கஷ்டப்படுறேன்..!!" "எனக்கு ஏதாவது நல்லது பண்ணனும்னு நீ நெனச்சேன்னா.. நர்ஸ்கிட்ட புடுங்குன அந்த செல்போனை அவங்ககிட்டயே திருப்பி கொடுத்துட்டு.. டாக்டர்ங்க ஷாக் ட்ரீட்மன்ட் குடுக்குறதுக்கு முன்னாடி.. பெட்ல போய் மூடினு படுத்துக்கோ..!!""ஐயோ... என்னை லூசுன்னு முடிவே பண்ணிட்டியா..? அவசரப்படாம.. நான் சொல்றதை கொஞ்ச நேரம் பொறுமையா கேக்குறியா..?" அந்த ஆள் இப்போது டென்ஷனாக, நான் சற்று அடங்கினேன். "சரி கேக்குறேன்.. சொல்லித்தொலை.." "டைம் மெசின் கேள்விப்பட்டிருக்கியா..?" "டைம் மெசினா..? அப்டினா..? வாட்சா..??" "ஷ்ஷ்ஷ்ஷ்.. ப்பா... முடியலை..!! உனக்கு நான் எப்படி சொல்லி புரிய வைக்கிறது..? ம்ம்ம்ம்.. ஆங்.. டெர்மினேட்டர் படம் பாத்திருக்கேல..?" "ம்ம்ம்.." "அதுல அர்னால்ட் ஃப்யூச்சர் டைம்ல இருந்து.. ப்ரசன்ட் டைமுக்கு வந்து.. ஒரு சின்னப்பயனை காப்பாத்துவாருல..?" "ஆமாம்.. அந்தப்பையனோட அம்மா ஒரு சப்பை ஃபிகர் இருக்கும்.. அதையும் சேர்த்து அறிவில்லாம காப்பாத்துவாரு..!!" "அந்த மாதிரி.. ஒரு டைம் பீரியட்ல இருந்து இன்னொரு டைம் பீரியட்க்கு ட்ராவல் பண்றதுக்கு யூஸ் பண்ணுற மெசினுக்கு பேர் தான் டைம் மெசின்..!!" அந்த ஆள் சொல்ல சொல்ல, அந்தப் படத்தில் சொல்ல வந்த மேட்டர் என் மனதுக்குள் ஓடியது. "ஓஹோ..?" என்றேன் ஓரளவு புரிந்தவனாய். "அதே மாதிரி நான் ஒரு மெசின் கண்டுபிடிச்சிருக்கேன்..!!" "அதென்ன மெசின்..?" "எலக்ட்ரோ மேக்னடிகோ அல்ட்ரா ஹை ஃப்ரிக்வன்சி ட்ரான்ஸ்மிட்டர் ஆஃப் மல்டிப்பில் அண்ட் பேரலல் டைம் ட்ரா.." "யோவ்.. யோவ்.. இரு..!! என்னவோ பெடக்ஸ்ல கை வச்ச ஃப்ரெஞ்ச் ஃபிகரு மாதிரி.. எதுக்கு இப்போ என்னை திட்டுற..??" "ஐயோ.. திட்டல அசோக்..!! அது நான் கண்டு பிடிச்ச மெசினோட பேரு.." "அடத்தூ..!!! பேரே இவ்ளோ கேவலமா இருக்கே.. அந்த மெசின் எவ்ளோ கேவலமா இருக்கும்..? அதை கண்டுபுடிச்ச நீ எவ்ளோ கேவலமான ஆளா இருப்ப..? ஏன்யா.. உங்களுக்குலாம் அறிவே இல்லையா..? கையை வச்சுக்கிட்டு சும்மா இருக்காம.. கண்டதையும் கண்டு பிடிச்சு தொலைக்க வேண்டியது.. எங்களை மாதிரி ஸ்டூடண்ட்ஸ்க உசுரை வாங்க வேண்டியது..!! இந்தப்பேரை எல்லாம் என் மெமரில ஏத்துனா.. என் மூளை தாங்காதுய்யா..!!" "ஓகே அசோக்.. மெசின் பேரை வேணா.. சின்னதா, கேட்சியா மாத்திர்றேன்... இப்போ அந்த மெசின் பத்தி நான் சொல்றதை கொஞ்சம் கேக்குறியா..?" "ம்ம்ம்.. சொல்லு..." "இந்த மெசின்ல ட்ராவல்லாம் பண்ண முடியாது..!! ஆனா.. கடந்த காலத்துல இருக்குறவங்க செல்போனுக்கு கால் பண்ணி பேசலாம்..!! அது மூலமாத்தான் நான் இப்போ 2035ல இருந்து.. 2011ல இருக்குற உன்கூட பேசிட்டு இருக்குறேன்..!! எப்பூடி..?" "ஓ.. ஓஹோ.. அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீ..??" "கலாய்க்காத அசோக்.. என்னதான் இருந்தாலும் நான் ஒரு எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியர்னு மறந்துட்டு பேசாத.." "ஹை.. நீயும் எலக்ட்ரானிக்ஸா..? நானும் எலக்ட்ரானிக்ஸ்தான்..!!" "ஐயோ அசோக்..!!! நீதான் நான்னு ஆரம்பத்துல இருந்து சொல்லிட்டு இருக்கேன்..? அதை ஏன் புரிஞ்சுக்காமலே பேசிட்டு இருக்குற..? எஞ்சினியரிங் முடிச்சுட்டு ரேடியோ பிசிக்ஸ்ல டாக்டரேட் வேற பண்ணிருக்கேன்..!! அப்போ இருந்து என் ஆராய்ச்சியை ஆரம்பிச்சு.. இந்த மெசினை டிசைன் பண்ணி.. இன்னைக்குத்தான் என் ஆராய்ச்சி சக்சஸ் ஆயிருக்கு..!! ஒரு பெரிய சாதனையை நான் இன்னைக்கு பண்ணிருக்கேன்..!! ஐ மீன்.. ஃப்யூச்சர்ல இதுலாம் நீ பண்ணப் போற..!!" "யாரு.. நான்..? ஃப்யூச்சர்ல பி.எச்.டி-லாம் பண்ணப் போறனா..?" "ஆமாம்.." "யோவ்.. போய்யா..!! உன் மேல இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் எனக்கு இப்போ சுத்தமா போயிடுச்சு.. நானே எட்டு அரியரு பத்து அரியரா மாறிடக் கூடாதுன்னு.. எல்லையம்மன் கோயிலுக்கு கூழ் ஊத்துறதா வேண்டிருக்கேன்..""ஐயோ.. எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் அசோக்.. அப்புறம் நீ என்னை மாதிரி பிரில்லியண்டா மாறிடுவ.." "உன்னை மாதிரி..???" "ஆமாம்.." "போய்யா லூசு.. போனை கட் பண்ணுயா..!! இன்னும் கொஞ்ச நேரம் உன்கிட்ட பேசினேன்.. நானும் உன்னை மாதிரி மெண்டல்தான் ஆவேன்.." "அசோக் ப்ளீஸ்.. டென்ஷன் ஆகாத..!! ம்ம்ம்ம்ம்ம்... ஓகே..!! நான் உன் வழிக்கே வர்றேன்.. நீதான் நான்னு நம்புறதுக்கு.. நான் என்ன பண்ணனும்னு சொல்லு.. பண்ணுறேன்..!!" அந்த ஆள் அப்படி சீரியசான குரலில் சொல்லவும் நான் ஒருகணம் அமைதியானேன். நிதானித்தேன். சற்றே யோசித்தேன். ஒரு வேளை இந்த ஆள் சொல்வதிலும் உண்மை இருக்குமோ..? நான்தான் இந்த ஆளோ..? எவ்வளவு கேவலமாக திட்டினாலும் வெட்கமே இல்லாமல் வேறு பேசிக் கொண்டிருக்கிறான்..?? ஜானியின் எஃபக்டில்.. எதிர்காலத்தில் நான் இப்படி ஆகி விட்டேனோ..?? என்னுடைய எரிச்சல் குறைந்து, சற்றே இயல்பான குரலில் கேட்டேன். "சரி.. நான் கொஞ்சம் கேள்விலாம் கேக்குறேன்.. பதில் சொல்றியா..?" "ம்ம்.. கேளு..!!" "என் குடும்பத்தை பத்தி சொல்லு.. அவங்க பேர், கேரக்டர்லாம் சொல்லு.." அந்த ஆள் சொல்ல ஆரம்பித்தான். என்னைப்பற்றி.. என் அப்பா, அம்மா பற்றி.. தாத்தா, பாட்டி பற்றி..!! அவன் சொன்ன விஷயங்கள் எல்லாம் துல்லியமாக இருக்க, நான் கொஞ்சம் கொஞ்சமாய் ஆச்சரியத்தில் மூழ்க ஆரம்பித்தேன். மேலும் மேலும் நிறைய கேள்விகள் என்னைப் பற்றி கேட்டேன். எனக்கு மட்டுமே தெரிந்த சில ரகசியங்கள் பற்றி கேட்டேன். (எ.கா) என் உடலில் அந்தரங்க இடங்களில் இருக்கும் மச்சங்கள்..!! ஹிஹி..!! எல்லாமே 'பட்.. பட்.. பட்..' என அடித்தான். அப்புறம் நான் கேட்காமலே, என் வாழ்க்கையில் சிறுவயதில் நடந்த சில சம்பவங்களை, அவனாகவே சொன்னான். ஒண்ணாவது படிக்கையில்.. அடுத்த வீட்டு அபிக்குட்டியுடன் அப்பா, அம்மா விளையாட்டு விளையாடியது..!! அஞ்சாவது படிக்கையில்.. கிரிக்கெட் பால் பட்டு என் குஞ்சாமணி வீங்கியது..!! எஸ்.எஸ்.எல்.சி படிக்கையில்.. என்னிடம் டைரி எழுதச்சொன்ன எஸ்தர் டீச்சரிடம்.. 'ஐ லவ் யூ.. டீச்சர்..' எழுதிக் காட்டி அறை வாங்கியது..!! இன்னும் கூட சில விஷயங்கள் சொன்னான். அதெல்லாம் சென்சார்ட்..!! அதெல்லாம் சொன்னால் என் மீது நீங்கள் வைத்திருக்கும் நல்ல அபிப்ராயம் நாசமாக போகி விடும். ('இப்போது மட்டும் என்ன வாழுதாம்' என்று கேட்காதீர்கள்) அதையெல்லாம் கேட்டபிறகு, என்னால் அந்த ஆளை நான்தான் என்று நம்பாமல் இருக்க முடியவில்லை. ஆரம்பத்தில் அந்த ஆள் மீது இருந்த கோபமும், எரிச்சலும், பயமும் கொஞ்சம் கொஞ்சமாய் என்னை விட்டு விலகின. மிக இயல்பான குரலிலேயே அவரிடம் பேச ஆரம்பித்தேன். "சரிய்யா.. நீ இவ்ளோ சொன்னப்புறம்.. நீதான் நான்னு எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கு.."

"தேங்க்ஸ் ஜூனியர்..!!" "என்னது..? ஜூனியரா..?" "ஆமாம்.. ரெண்டு பேர் பேரும் ஒண்ணா இருக்குறதால.. படிக்கிறவங்களுக்கு குழப்பம் வந்துடக் கூடாது பாரு.. அதனால இனிமே நான் உன்னை ஜூனியர்னு கூப்பிடுறேன்.. நீ என்னை சீனியர்னு கூப்பிடு.. ஓகேவா..?" "ம்ம்ம்ம்.. எல்லாம் என் நேரம்.. சரி.. கூப்பிட்டு தொலைக்கிறேன்..!! ஆனா.. உன் மேல முழுசா இன்னும் நம்பிக்கை வரலை மவனே.." "ஏன்..??" "என்னைப் பத்தி டீடெயில் சொன்ன.. சரி..!! ஆனா.. நீ ஃப்யூச்சர்ல இருந்துதான் கால் பண்ணுறேன்னு நான் எப்படி நம்புறது..? அதையும் ப்ரூவ் பண்ணிக்காட்டு.." "ஹ்ஹாஹ்ஹா.. அது சப்பை மேட்டர் ஜூனியர்.. இரு வர்றேன்.." சொல்லிவிட்டு சீனியர் அமைதியானார். நான் செல்லுக்கு காது கொடுத்தவாறு காத்திருந்தேன். சில வினாடிகளில் அந்தப்பக்கம் ஏதோ பேப்பர் புரட்டப்படும் சத்தம் கேட்டது. நான் பொறுமை இல்லாமல் கத்தினேன். "சீனியர்.. என்னை இந்தப்பக்கம் லைன்ல வெயிட் பண்ண சொல்லிட்டு.. நீ அந்தப்பக்கம் நியூஸ் பேப்பர்ல ராசிபலன் பாத்துட்டு இருக்கியா..?""ஐயோ.. எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் அசோக்.. அப்புறம் நீ என்னை மாதிரி பிரில்லியண்டா மாறிடுவ.." "உன்னை மாதிரி..???" "ஆமாம்.." "போய்யா லூசு.. போனை கட் பண்ணுயா..!! இன்னும் கொஞ்ச நேரம் உன்கிட்ட பேசினேன்.. நானும் உன்னை மாதிரி மெண்டல்தான் ஆவேன்.." "அசோக் ப்ளீஸ்.. டென்ஷன் ஆகாத..!! ம்ம்ம்ம்ம்ம்... ஓகே..!! நான் உன் வழிக்கே வர்றேன்.. நீதான் நான்னு நம்புறதுக்கு.. நான் என்ன பண்ணனும்னு சொல்லு.. பண்ணுறேன்..!!" அந்த ஆள் அப்படி சீரியசான குரலில் சொல்லவும் நான் ஒருகணம் அமைதியானேன். நிதானித்தேன். சற்றே யோசித்தேன். ஒரு வேளை இந்த ஆள் சொல்வதிலும் உண்மை இருக்குமோ..? நான்தான் இந்த ஆளோ..? எவ்வளவு கேவலமாக திட்டினாலும் வெட்கமே இல்லாமல் வேறு பேசிக் கொண்டிருக்கிறான்..?? ஜானியின் எஃபக்டில்.. எதிர்காலத்தில் நான் இப்படி ஆகி விட்டேனோ..?? என்னுடைய எரிச்சல் குறைந்து, சற்றே இயல்பான குரலில் கேட்டேன். "சரி.. நான் கொஞ்சம் கேள்விலாம் கேக்குறேன்.. பதில் சொல்றியா..?" "ம்ம்.. கேளு..!!" "என் குடும்பத்தை பத்தி சொல்லு.. அவங்க பேர், கேரக்டர்லாம் சொல்லு.." அந்த ஆள் சொல்ல ஆரம்பித்தான். என்னைப்பற்றி.. என் அப்பா, அம்மா பற்றி.. தாத்தா, பாட்டி பற்றி..!! அவன் சொன்ன விஷயங்கள் எல்லாம் துல்லியமாக இருக்க, நான் கொஞ்சம் கொஞ்சமாய் ஆச்சரியத்தில் மூழ்க ஆரம்பித்தேன். மேலும் மேலும் நிறைய கேள்விகள் என்னைப் பற்றி கேட்டேன். எனக்கு மட்டுமே தெரிந்த சில ரகசியங்கள் பற்றி கேட்டேன். (எ.கா) என் உடலில் அந்தரங்க இடங்களில் இருக்கும் மச்சங்கள்..!! ஹிஹி..!! எல்லாமே 'பட்.. பட்.. பட்..' என அடித்தான். அப்புறம் நான் கேட்காமலே, என் வாழ்க்கையில் சிறுவயதில் நடந்த சில சம்பவங்களை, அவனாகவே சொன்னான். ஒண்ணாவது படிக்கையில்.. அடுத்த வீட்டு அபிக்குட்டியுடன் அப்பா, அம்மா விளையாட்டு விளையாடியது..!! அஞ்சாவது படிக்கையில்.. கிரிக்கெட் பால் பட்டு என் குஞ்சாமணி வீங்கியது..!! எஸ்.எஸ்.எல்.சி படிக்கையில்.. என்னிடம் டைரி எழுதச்சொன்ன எஸ்தர் டீச்சரிடம்.. 'ஐ லவ் யூ.. டீச்சர்..' எழுதிக் காட்டி அறை வாங்கியது..!! இன்னும் கூட சில விஷயங்கள் சொன்னான். அதெல்லாம் சென்சார்ட்..!! அதெல்லாம் சொன்னால் என் மீது நீங்கள் வைத்திருக்கும் நல்ல அபிப்ராயம் நாசமாக போகி விடும். ('இப்போது மட்டும் என்ன வாழுதாம்' என்று கேட்காதீர்கள்) அதையெல்லாம் கேட்டபிறகு, என்னால் அந்த ஆளை நான்தான் என்று நம்பாமல் இருக்க முடியவில்லை. ஆரம்பத்தில் அந்த ஆள் மீது இருந்த கோபமும், எரிச்சலும், பயமும் கொஞ்சம் கொஞ்சமாய் என்னை விட்டு விலகின. மிக இயல்பான குரலிலேயே அவரிடம் பேச ஆரம்பித்தேன். "சரிய்யா.. நீ இவ்ளோ சொன்னப்புறம்.. நீதான் நான்னு எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கு.." "தேங்க்ஸ் ஜூனியர்..!!" "என்னது..? ஜூனியரா..?" "ஆமாம்.. ரெண்டு பேர் பேரும் ஒண்ணா இருக்குறதால.. படிக்கிறவங்களுக்கு குழப்பம் வந்துடக் கூடாது பாரு.. அதனால இனிமே நான் உன்னை ஜூனியர்னு கூப்பிடுறேன்.. நீ என்னை சீனியர்னு கூப்பிடு.. ஓகேவா..?" "ம்ம்ம்ம்.. எல்லாம் என் நேரம்.. சரி.. கூப்பிட்டு தொலைக்கிறேன்..!! ஆனா.. உன் மேல முழுசா இன்னும் நம்பிக்கை வரலை மவனே.." "ஏன்..??" "என்னைப் பத்தி டீடெயில் சொன்ன.. சரி..!! ஆனா.. நீ ஃப்யூச்சர்ல இருந்துதான் கால் பண்ணுறேன்னு நான் எப்படி நம்புறது..? அதையும் ப்ரூவ் பண்ணிக்காட்டு.." "ஹ்ஹாஹ்ஹா.. அது சப்பை மேட்டர் ஜூனியர்.. இரு வர்றேன்.." சொல்லிவிட்டு சீனியர் அமைதியானார். நான் செல்லுக்கு காது கொடுத்தவாறு காத்திருந்தேன். சில வினாடிகளில் அந்தப்பக்கம் ஏதோ பேப்பர் புரட்டப்படும் சத்தம் கேட்டது. நான் பொறுமை இல்லாமல் கத்தினேன். "சீனியர்.. என்னை இந்தப்பக்கம் லைன்ல வெயிட் பண்ண சொல்லிட்டு.. நீ அந்தப்பக்கம் நியூஸ் பேப்பர்ல ராசிபலன் பாத்துட்டு இருக்கியா..?" "நியூஸ் பேப்பர் இல்ல ஜூனியர்.. டைரி..!!" "டைரியா..?" "ம்ம்.. என்னோட 2011 டைரி.. ஐ மீன் நாம எழுதின டைரி.." "எது..? நான் இப்போ அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி எழுதினேனே.. அந்த டைரியா..?" "ஆமாம்.." "இருபத்து நாலு வருஷமா.. இன்னும் அதை பத்திரமா வச்சிருக்கியா..?" "யெஸ் யெஸ்..!! அந்த டைரியை வச்சுத்தான் நீ கரெக்டா செல்போன் வாங்கின டேட்டுக்கு என்னால கால் பண்ண முடிஞ்சது.. அதுமில்லாம அந்த செல் நம்பரும் இந்த டைரி மூலமாத்தான் ஞாபகப் படுத்திக்கிட்டேன்..!! இரு.. அதுல நாளைக்கு என்ன எழுதிருக்கேன்னு பாத்து சொல்றேன்..!! நாளைக்கு அது நடக்குதா இல்லையான்னு பாரு..!! நடந்துச்சுனா என்னை நம்பு..!!" என்ன நடக்கிறது என்று இப்போது எனக்கு இப்போது ஓரளவு தெளிவு வந்திருந்தது. ஐந்து நிமிடங்கள் முன்புதான் இன்று நான் செல்போன் வாங்கிய மேட்டரையும், என் செல்போன நம்பரையும் அந்த டைரியில் எழுதியிருந்தேன். அது இருபத்து நான்கு ஆண்டுகள் கழித்து, என் சீனியர் என்னிடம் கால் பண்ணிப் பேசுவதற்கு யூஸ் ஆகியிருக்கிறது. நான் அந்த மாதிரி தீவிரமாக திங்கிங் செய்து கொண்டு இருந்தபோதே, சீனியரின் குரல் கேட்டது. "நாளைக்கு உனக்கு சண்டேதான ஜூனியர்..?" "ஆமாம்.." "ஒரே ஒரு மேட்டர் தான் எழுதிருக்கு.. இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் மேட்ச் பத்தி இருக்கு.. இந்தியா ஜெயிச்சிருக்காங்கன்னு எழுதிருக்கேன்..!!" "நெஜமாவா சொல்ற..? நாளைக்கு இந்தியா ஜெயிக்கப் போவுதா..?" நான் சந்தோஷத்தை கட்டுப்படுத்த முடியாமல் கேட்டேன். "ஆமாம் ஜூனியர்.. கண்டிப்பா ஜெயிக்கும்.." சீனியர் உறுதியாக சொல்ல, எனக்கு சந்தோஷத்தோடு சேர்த்து மனதுக்குள் வேறுமாதிரி எண்ணங்களும் விறுவிறுவென ஓடின. அது என்னவென்று சொல்கிறேன்.. நாங்கள் தங்கியிருக்கும் வீட்டின் ஹவுஸ் ஓனருக்கு ஒரு பெண் இருக்கிறாள். அவள் பெயர் பிங்கி..!! கல்லூரி முதலாண்டு படிக்கிறாள். சரியான கிரிக்கெட் பைத்தியம். கிரிக்கெட் உருவான காலத்தில் இருந்து இன்று வரை.. எல்லா புள்ளி விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பாள். கட்டினால் கபில்தேவ் மாதிரி ஒரு ஆளைத்தான் கட்டுவேன் என்று கனவில் இருக்கிறாள். எனக்கும் கிரிக்கெட் பிடிக்கும். அவளும் நானும் அடிக்கடி கிரிக்கெட் சம்பந்தமாக பெட் கட்டி விளையாடுவோம். எல்லாம் அஞ்சு ரூபா, பத்து ரூபா பந்தயந்தான். ஆனால் ஒருநாள் கூட நான் ஜெயித்ததே இல்லை. ஏற்கனவே நடந்த மேட்ச்களை பற்றி அவள் சரியாக ஞாபகம் வைத்திருப்பதால் பாதியை இழந்திருக்கிறேன். நடக்கப் போகும் மேட்சுகளை பற்றியும் சரியாக கணிப்பதால் மீதியை இழந்திருக்கிறேன். இழந்தவற்றை மீட்க இப்போது ஒரு கோல்டன் ஆப்பர்ச்சூனிட்டி..!! நாளைக்கு எனக்கு வரவு வரப்போவதை எண்ணி இப்போதே நான் குஷியானேன். சீனியரிடம் கேட்டேன். "சீனியர்.. உன் பேங்க் பேலன்ஸ் எவ்வளவுன்னு கொஞ்சம் சொல்லேன்.." "ஏன் கேக்குற..?" "சும்மா சொல்லு.. ஏன் கேட்டேன்னு நாளைக்கு சொல்றேன்.." "அஞ்சரை கோடி அப்பீஸ்..!!" "என்னது..? அப்பீஸா..? உன் நாக்குல பல்லி மூச்சா போயிடுச்சா சீனியர்..? ருப்பீஸை அப்பீஸ்னு சொல்ற..?" "ஐயோ.. அது அப்பீஸ்தான்டா..!! அஞ்சு வருஷம் முன்னாடி.. உலகத்துல இருக்குற எல்லா கரன்சியையும் ஒண்ணா மெர்ஜ் பண்ணிட்டாங்க.. இப்போ அப்பீஸ்தான் யுன்வர்சல் கரன்சி..!!" "ஓ..!! உலகம் ஃபுல்லா ஒரே கரன்சியா..? நம்பவே முடியலையே... ஆமாம்.. யார் இந்த தேவையில்லாத வேலைலாம் பண்றது..?" "எல்லாம் அந்த அமெரிக்காகாரனுகதான்..!!" "அப்பீஸ்னா என்ன மீனிங்காம்..?" "அப்பீஸூக்கு மீனிங் கேட்டா.. அணுகுண்டு போட்ருவோம்னு மெரட்டிருக்கானுக.." "கிழிஞ்சது.. இருபத்தஞ்சு வருஷம் ஆகியும் இன்னும் திருந்தலையா அவனுக..?" "ம்ஹூம்..!!" "சரி.. அப்பீஸோட கரன்சி மதிப்பு என்ன சீனியர்..?" "ம்ம்ம்ம்.. கிட்டத்தட்ட.. 2011ல இருந்த ருப்பீஸோட மதிப்புதான்..!!" "ஓகே சீனியர்.. அப்போ.. நாளைக்கு மேட்ச் முடிஞ்சதும் நான் உனக்கு ஒரு மிஸ்ட் கால் தர்றேன்.. நீ எனக்கு கால் பண்ணு.. சரியா..?" நான் அப்படி சொல்ல, சீனியர் டென்ஷனானார். "என்னது..? எனக்கு நீ மிஸ்ட் கால் தர்றியா..? என் நம்பர் தெரியுமா உனக்கு..?" "பத்து ஜீரோவோ.. பனிரெண்டு ஜீரோவோ இருந்ததே.. அதான உன் நம்பர்..?" "ஜூனியர்.. நீ ஒரு வெத்துவேட்டு முண்டம்னு எனக்கு தெரியும்.. ஆனா வெளங்காத தண்டம்னு இப்போத்தான் தெரியுது.." "ஏன் சீனியர் திட்டுற..?" "பின்ன..? பனிரெண்டு சைஃபர் போட்டு டயல் பண்ணுனா.. உடனே எனக்கு கால் வந்துடுமா..? 'நம்பரை சரி பாருடா நாதாரி நாயே'ன்னு ஏதாவது பொண்ணுதான் சிச்சுக்கிட்டே சொல்லுவா.." "அப்போ எப்படி உனக்கு கால் பண்ணுறது..?" "நீ எனக்கு கால் பண்ண முடியாது ஜூனியர்.. நான்தான் உனக்கு கால் பண்ண முடியும்.. ஏன்னா.. என்கிட்டதான் இந்த.." "கருமம் புடிச்ச மெசின் இருக்குது.." "பரவால.. வெளங்கிடுச்சு உனக்கு..!! மேட்ச் முடியுற டைம் குத்துமதிப்பா எனக்கு தெரியும்.. நானே அந்த டயத்துல கால் பண்ணுறேன்.. ஓகேவா..?" "ஓகே சீனியர்.." "அப்புறம் இன்னொரு விஷயம் ஜூனியர்.. நான் உனக்கு கால் பண்ணின விஷயம்.. வேற யாருக்கும் தெரியக் கூடாது.." "ஏன்..?" "அதனால பல குழப்பங்கள் வரலாம்.. உன்னோட எதிர்காலம், என்னோட நிகழ்காலம்.. எல்லாமே பாதிக்கப்பட சான்ஸ் இருக்கு.. அதெல்லாம் நான் அப்புறமா உனக்கு எக்ஸ்ப்ளெயின் பண்ணுறேன்.. இப்போதைக்கு இந்த விஷயத்தை பத்தி யார்கிட்டயும் மூச்சு விடாத.. புரியுதா..?" "புரியுது.. நான் யார்கிட்டயும் சொல்லலை.." "ஓகே குட் நைட்..!!" "ஆங்.. குட் நைட்..!!" சீனியர் காலை கட் செய்ய, என் செல்போன் அமைதியானது. திருப்தியான முகத்துடன் திரும்பியவன், எனக்கு பின்னால் 'ஈஈ..' என்று இளித்தவாறு நின்ற ஜானியை பார்த்ததும் பக்கென ஷாக்கானேன். ‘ஐயையோ.. இந்த லூசு எப்போது வந்தது..????’ நான் திகைப்பாய் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவனோ அவனுடைய வலது கையை ஷார்ட்சுக்குள் விட்டு, ஹேண்டில் பிடித்து கியர் மாற்றிக் கொண்டே கேட்டான். "யார் மச்சி ஃபோன்ல..? லேகாவா..?" "ம்ம்ம்.. உங்க ஆயா..!!" "என் ஆயாவா..? அது என்ன சொல்லுச்சு உன்கிட்ட..?" "ம்ம்ம்.. உன் புடுக்குல பூரான் வுட சொல்லுச்சு .." "ஏன் மச்சி திட்டுற..?" "பின்ன என்ன..? ங்கொய்யால.. எப்பப்பாரு கையை உள்ள விட்டுகினு..?? அதென்ன கழண்டு கீழயா விழுந்துடப் போவுது..? சும்மா சும்மா.. இருக்கா இல்லையான்னு தொட்டுப் பாத்துக்குற..?" "ஸாரி மச்சி.. அப்டியே பழக்கமாயிடுச்சு.." இளித்தவாறு சொல்லிக்கொண்டே அவன் கையை வெளியே எடுத்தான். எடுத்தவன், "மச்சி.. இதான் அவ வாங்கித் தந்த ஃபோனா..? எங்க கொடு.. மாடல் பார்ப்போம்.." சொல்லிக்கொண்டே அந்த சொறிந்த கையாலேயே என் கையை தொட, நான் பட்டென தட்டிவிட்டேன். "ம்ம்ம்.. மசுரைப்பாரு..!! மொதல்ல போய் கையைக் கழுவுடா கருமம் புடிச்சவனே..!!" என்று அவனை அடித்து விரட்டினேன். அறைக்கதவை அறைந்து சாத்திக் கொண்டேன். சற்றுமுன் எழுதிக்கொண்டிருந்த அந்த டைரியை இப்போது வித்தியாசமாகவும், ஆச்சரியமாகவும் பார்த்தேன். கொஞ்ச நேரத்தில் என்னுடைய ஸிம் ஆக்டிவேட் ஆன மெசேஜ் வந்தது. லேகா கேட்டுக்கொண்டது மாதிரி, 'ஹாய் டியர்..' என முதல் மெசேஜ் அவளுக்கு அனுப்பிவிட்டு, உடனே கால் செய்தும் பேச ஆரம்பித்தேன். முதன்முறை இந்தமாதிரி பேசுவதால், அன்று இரவு இரண்டு மணி வரை இருவரும் மொக்கை போட்டோம். அடுத்தநாள் காலை.. நான் தம்மடிக்க மொட்டை மாடிக்கு சென்றேன். அங்கே குண்டு பூசணிக்காய் ஒன்று குதித்து குதித்து விளையாடிக் கொண்டிருந்தது. அது வேறு யாருமல்ல.. பிங்கிதான்..!! 'தொம்.. தொம்.. தொம்..' என்ற சப்தத்துடன் ஸ்கிப்பிங் போட்டுக்கொண்டு இருந்தாள். நான் வருவதை பார்த்தும், அதை கண்டுகொள்ளாமல் '22.. 23.. 24..' என்று கவுண்டிங்கிலே கவனமாக இருந்தாள். நான் அவளுக்கருகில் சென்று தம் பற்ற வைத்து புகை விட, அவள் கவுண்டிங்கை நிறுத்திவிட்டு கத்த ஆரம்பித்தாள். "ஸ்கிப்பிங் பண்றேன்ல..? அப்டி தள்ளிப்போய் ஸ்மோக் பண்ணு அசோக்.." கவுண்டிங்கை நிறுத்தினாலும், ஸ்கிப்பிங்கை நிறுத்தாமல் கண்டின்யூ செய்தாள். "பிங்கி.. நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே..?" நான் கிண்டலான குரலில் கேட்டேன். "கேளு.." "நீயுந்தான் டெயிலி மார்னிங்கும் ஈவினிங்கும் இங்க வந்து குதிக்கிற.. ஆனா.. குதிக்க குதிக்க குண்டாயிட்டே போறியே ஏன்..?" "ஏய்.. கிண்டலா..? என்னைப் பாத்தா எப்படி இருக்கு உனக்கு..?" "ம்ம்ம்.. முட்டைகோஸூக்கு மூக்கு கண்ணாடி போட்டது மாதிரி இருக்கு.." "போடா.. எருமை மாடு.." "பாத்து பிங்கி.. குதிக்கிறேன்னு ஃப்ளோர்ல ஓட்டை போட்டு.. கீழ கிச்சன்ல நின்னுட்டு இருக்குற உன் அம்மா தலைல போய் விழுந்துடப் போற..?" சொல்லிவிட்டு நான் 'ஹெஹேஹெஹேஹெ..' என்று சிரிக்க அவள் செம கடுப்பானாள். குதிப்பதை நிறுத்திவிட்டு, 'கேலி பண்ணுவியா.. கேலி பண்ணுவியா..' என்று கத்தியவாறு அந்த ஸ்கிப்பிங் கயிறினாலேயே என்னை விளாச ஆரம்பித்தாள். என் மேல் அடி படவே இல்லை. ஆனாலும் நான் சும்மா வலிப்பது மாதிரி 'ஆ.. ஊ..' என்று கத்தினேன். கொஞ்ச நேரத்தில் அவள் டயர்டாகி கயிறை கீழே போட்டுவிட்டு மூச்சு வாங்கினாள். "ரெண்டு பஃப் இழுக்குறியா பிங்கி..? மூச்சுத்தெணறலுக்கு ரொம்ப நல்லது.." நான் சிகரெட்டை அவளிடம் நீட்ட, "போடா பொறுக்கி.." அவள் திட்டினாள். நானும் பிங்கியும் இப்படித்தான். ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொள்வோம்.. அடித்துக் கொள்வோம்.. திட்டிக் கொள்வோம்..!! ஆனால்.. சிறிது நேரத்திலேயே சமாதானம் ஆகி சேர்ந்து விடுவோம்..!! இப்போதும் அப்படித்தான். தம் பற்ற வைக்கும்போது ஆரம்பித்த சண்டை, தம் முடியும் போது முடிந்தும் போனது..!! நான் நினைத்து வந்த விஷயத்தை மெல்ல ஆரம்பித்தேன். "இன்னைக்கு மேட்ச் இருக்கு போல பிங்கி..?" "ஐயோ அப்பா.. நான்லாம் இன்னைக்கு மேட்ச் பாக்குற மாதிரி இல்லை.." "ஏன்..?" "எப்படியும் நம்மாளுங்க தோக்கப் போறாங்க.. அதை வேற நாள் முழுக்க உக்காந்து பாக்க சொல்றியா..??" ஆஹா.. இப்படி அவளாக வந்து என் வலையில் சிக்குவாள் என்று நான் நினைக்கவே இல்லையே..!! "இல்ல.. இன்னைக்கு நம்மாளுக ஜெயிக்கிறாங்க..!! என்ன பெட்..??" "ஏய்.. டெஸ்ட் மேட்ச்ல வாங்கி கட்டிக்கிட்டதை பாத்தேல..? நம்மாளுக ஜெயிக்கலாம் வாய்ப்பே இல்ல.." "அப்போ பெட் கட்டு.." "ப்ச்.. பத்து ரூபாதான..? மேட்ச் முடிஞ்சதும் நானே வந்து உன்கிட்ட வாங்கிக்கிறேன்..!!" அவள் கூலாக சொன்னாள். "இல்லை.. இந்தத்தடவை கொஞ்சம் பெரிய அமவுண்ட் வச்சு வெளையாடுவோம்.." நான் சொன்னதும் அவள் லேசாக அதிர்ந்தாள். "பெரிய அமவுண்டா..?? சரி.. எவ்வளவுன்னு நீயே சொல்லு.."உடனே சமாளித்துக்கொண்டு அவள் பட்டென சொன்னாள். ஆனால் எவ்வளவு பெட் வைக்கலாம் என்று என்னால்தான் உடனே ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. யோசித்தேன்..!! மூணு குவாட்டரு.. ஒரு லிட்டர் ஸ்ப்ரைட்.. பிளாஸ்டிக் கப்.. ஊறுகா பாக்கெட்.. சிகரெட்..!! ஒரு ஐநூறு ரூபாய் இருந்தால் போதும் என்று தோன்றியது..!! "ஐநூறு ரூபா..!!" நான் சொன்னதும், அவள் என்னை ஒருமாதிரி வித்தியாசமாக பார்த்தாள். "என்னடா.. லேகா அக்காகிட்ட இருந்து லம்பா ஒரு அமவுண்ட் ஆட்டையை போட்டுட்டியா..?" "ஏய் அரிசி மூட்டை.. ஐநூறு ரூபாலாம் உங்க ஊர்ல லம்ப் அமவுண்டா..? அப்பன்னா லட்சம், கோடிலாம் நீ என்ன சொல்லுவ..?" "இல்ல.. இவ்ளோலாம் நீ பெட் கட்டினது இல்லையே.. அதான் கேட்டேன்.." அவள் கூர்மையாக கேட்க, இப்போது நான் சற்று திணறினேன். "அ..அது.. இன்னைக்கு என்னவோ இந்தியா வின் பண்ணிடும்னு எனக்கு ரொம்ப கான்ஃபிடண்டா இருக்கு.. அதான்.." "ம்ம்ம்ம்... சரி ஓகே.. பந்தயத்துக்கு நானும் ரெடி.." "அப்போ.. ஐநூறு ரூபா எடு.." "என்ன.. இப்போவே கேக்குற..?" "ஹாஹா.. எப்படியும் நீதான் தோக்கப் போற... எனக்கு இன்னைக்கு கொஞ்சம் செலவு இருக்கு.. அதான் முன்னாடியே கேக்குறேன்.." "ஒருவேளை நான் ஜெயிச்சுட்டா..?" "ஜெயிச்சாத்தான..? ஓகே.. நீ ஜெயிச்சிட்டா தவுசண்ட் ரூபீஸா நான் கொடுத்திடுறேன்.." "அவ்ளோ காசை நீ தருவேன்னு நான் எப்படி நம்புறது..?" அவள் சந்தேகமாக கேட்க, இப்போது நான் என் பாக்கெட்டில் இருந்து செல்போனை உருவி அவளிடம் காட்டினேன். "ஹேய்.. இது என்னன்னு பாத்தியா..? புது செல்போன்.. நாலாயிரம் ரூபா.. நான் தோத்துட்டா.. இந்த செல்போனை நீ எடுத்துக்கோ.. ஓகேவா..?"

அவள் கொஞ்ச நேரம் அந்த செல்போனை உற்றுப் பார்த்தாள். சில வினாடிகள் யோசித்தாள். அப்புறம் சமாதானம் ஆனவளாய், "ஓகே.. என் பர்ஸ் கீழ இருக்கு.. அப்புறமா வந்து ஐநூறு ரூபா வாங்கிக்கோ..!!" என்றாள். "ஓகே பிங்கி.. அப்போ இன்னைக்கு லன்ச் முடிச்சுட்டு எங்க ரூமுக்கு வந்துடு.. ஃபுல் மேட்சும் எங்க ரூம்லேயே பாக்கலாம்.." "உன் ரூமுக்குலாம் நான் வரலைப்பா.. அந்த ஜானி இருப்பான்.." "ஏன்.. அவன் இருந்தா என்ன..?" "அவன் இருந்தா நான் வர மாட்டேன்.." "ஆமாம்.. உன்கிட்ட ஒன்னு கேட்கனும்னு நெனச்சேன்.. ஏன் கொஞ்ச நாளா அவன் மேல கடுப்பா இருக்குற..? என்ன பிரச்னை உங்களுக்குள்ள..?" "அவனைப் பத்தி பேசாத அசோக்.. சரியான பொறுக்கி அவன்.." "என்னாச்சு பிங்கி..? ஜானி ஏதும் உனக்கு நூல் வுட்டுட்டானா..?" "எனக்கு வுட்டாலும் பரவால.. என் அம்மாவுக்கு வுடுறான்.." அவள் ரொம்ப ஃபீலிங்காக சொல்ல, "என்னது...????? உன் அம்மாவுக்கா..????" சத்தியமாய் நான் ஷாக்காகி போனேன். "ஆமாம் அசோக்.. அவங்க வாசல் தெளிக்க வர்றப்போ லுக் விடுறது.. செடிக்கு தண்ணி ஊத்துறப்போ கண்ணடிக்கிறது.. 'அஞ்சரைக்குள்ள வண்டி படம் பாத்திருக்கீங்களா ஆண்ட்டி'ன்னு வழியுறது..!! ரொம்ப அட்டகாசம் பண்றான் அசோக்.." பிங்கி இப்போது கண்கள் கலங்க சொன்னாள். "ம்ம்..." எனக்கு பேச்சே வரவில்லை."என் அம்மா என்ன மாதிரி இல்ல அசோக்.. ரொம்ப சாஃப்ட் டைப்..!! என்கிட்டே எப்படிலாம் பொலம்புறாங்க தெரியுமா..? 'அவன் பார்வையே சரியில்லடி.. வீட்டை விட்டு வெளில போகவே பயமா இருக்குடி..' அப்டின்னு என் மடில படுத்து 'ஓ'ன்னு அழறாங்க.." "அச்சச்சோ..!!" "அவன்கிட்ட சொல்லி வையி அசோக்..!! இவன் பண்ற டார்ச்சர்ல என் அம்மா ஏதாவது ஏடாகூடமா பண்ணிக்கிட்டாங்க.. அப்புறம் நான் அவனை சும்மா விட மாட்டேன்..!! ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்.. என் அப்பா மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா.. எங்கம்மாவுக்கு இப்படி ஒரு நெலமை வந்திருக்குமா..? " பிங்கி என் தோளில் சாய்ந்து கொண்டு புலம்ப, நான் அவளுக்கு ஆறுதல் சொன்னேன். இந்த மாதிரி டயலாக்குகளை நிறைய தமிழ் படங்களில் கேட்டிருக்கிறேன். இப்படி என் நிஜ வாழ்க்கையில், எதிர்பாராத ஒரு கேரக்டரின் வாயில் இருந்து கேட்பேன் என்று நினைத்தே பாத்ததில்லை. ஜானியை நினைத்தால் பயங்கர கடுப்பாக வந்தது. கேட்பது எல்லாம் அமெரிக்க பாப் பாடல்கள்.. பார்ப்பது எல்லாம் ஐம்பதை நெருங்கும் பெண்மணிகள்..!! என்ன எழவு ரசனையோ..?? நான் பிங்கியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தேன். ஜானியை கண்டிப்பதாகவும், அவன் இனிமேல் அவளுடைய அம்மாவின் ரூட்டில் க்ராஸ் செய்ய மாட்டான் என்றும் சொல்லி அனுப்பினேன். ரூமுக்கு சென்றதும் ஜானியிடம் இதுபற்றி விசாரித்தேன். அவனோ கூலாக ஆப்பை திருப்பி எனக்கு வைத்தான். "என்ன மச்சி.. நீயுந்தான் அவங்கம்மாவை சைட் அடிக்கிற.. அதுலாம் நான் ஏதாவது கண்டுக்கிட்டனா..?" "ஏய்.. நான் எப்போடா சைட்டடிச்சேன்..?" உச்சபட்ச டென்ஷனில் கத்தினேன். "பொய் சொல்லாத மச்சி.. எல்லாம் எனக்கு தெரியும்..!! சைட்டடிக்கிற.. டெயிலி நைட்டு அவங்களை நெனச்சு.." "டேய்..!!!!!!!!!!!!!" அவன் மேற்கொண்டு எதுவும் சொல்லிவிடக் கூடாது என்று நான் அலறினேன். "ப்ச்.. அதுலாம் உன் இஷ்டம் மச்சி..!! உனக்கு புடிச்சிருக்கு.. பண்ணுற..!! இதலாம் போய் நான் பிங்கிட்ட போட்டுக் கொடுப்பேன்னு நெனைக்காத.. நான் ரொம்ப டீசண்டு..!!" அவன் கேஷுவலாக சொல்லிவிட்டு, ஷார்ட்சுக்குள் கைவிட்டு சொறிந்தவாறே நகர்ந்து செல்ல, நான் அவனை என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருவென விழித்தவாறு நின்றிருந்தேன். அவன் என்ன சொல்ல வருகிறான் என்று உங்களுக்கே புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இனிமேல் இந்த விஷயத்தில் நான் தலையிட்டால், இல்லாததும் பொல்லாததுமாக என்னைப் பற்றி பிங்கியிடம் போட்டுக் கொடுப்பேன் என்று மறைமுகமாக மிரட்டி விட்டுப் போகிறான்..!! ஏற்கனவே என் முகத்திற்காகத்தான் இன்னும் எங்களை இந்த வீட்டில் வைத்திருக்கிறார்கள். இப்போது இவன் சென்று என்னைப் பற்றி வைத்தி வைத்தால்.. அவ்வளவுதான்..!! வீட்டை காலி பண்ண சொல்லி விடுவார்கள். ஜானிக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. அவனுடைய அத்தையுடன் சென்று தங்கிக் கொள்வான். நான்தான் நடுத்தெருவில் நிற்க வேண்டும்..!! ம்ஹூம்..!! ஜானியை பகைத்துக் கொள்வது நல்லது இல்லை என்று தோன்றியது. அவனிடம் கொஞ்சம் இறங்கிப் போகலாம் என்று முடிவு செய்தேன். புதிதாக பாசம் பிறந்தவனாய்.. அவனிடம் சென்று ஐஸ் வைத்தேன். தண்ணி வாங்கித் தருவதாக சொன்னேன். அவ்வளவுதான்..!! 'நண்பேன்டா..!! என்று என்னை கட்டிக் கொண்டான். 'காசு ஏது..?' என்று கேட்டான். பிங்கியிடம் பெட் கட்டிய மேட்டர் பற்றி சொன்னேன். படியிறங்கி கீழே சென்று பிங்கியிடம் ஐநூறு ரூபாய் வாங்கிக்கொண்டேன். அவள் வரும்போது ‘ஆன்ட்டியிடம் வடை, பஜ்ஜி போட சொல்லி எடுத்து வருமாறு’ சொன்னேன். அவள் ‘ஜானியை எங்காவது அடித்து விரட்டுமாறு’ சொன்னாள். நானும் ஜானியும் வெளியே சென்று சரக்கு வாங்கி வந்தோம். எனக்கு இரு குவார்ட்டர்..!! அவனுக்கு ஒன்று..!! வீட்டுக்கு வந்து எல்லாவற்றையும் பரப்பி வைத்து விட்டு காத்திருந்தோம். கொஞ்ச நேரம் கழித்து சட்டி நிறைய வடை, பஜ்ஜியுடன் பிங்கி உள்ளே நுழைய.. "மச்சி.. சைடிஷ் வந்துடுச்சுடா..!!" என்று ஜானி உற்சாகமாக கத்தினான். "அடப்பாவி..!!! நீங்க தண்ணியடிக்க சைடிஷ்க்காகத்தான்.. என் மம்மியை வடை பஜ்ஜி போட சொன்னியா?..?" பிங்கி உஷ்ணமாக என்னை முறைத்தாள். "கோச்சுக்காத பிங்கி..!! வா வா.. மேட்ச் ஆரம்பிக்கப் போகுது.. இந்தியா டாஸ் வின் பண்ணிருக்கு.. இங்கிலாந்து பேட்டிங்..!!" நான் அவளை சமாதானப் படுத்தினேன்.அவள் எனக்கும் ஜானிக்கும் நடுவில் வந்து அமர்ந்து கொள்ள, நாங்கள் குவார்ட்டரின் கழுத்தை திருகி, உள்ளே உள்ள யெல்லோ நிற திரவத்தை பிளாஸ்டிக் கப்பில் ஊற்றினோம். 'ஜானியை ஏன் அடித்து விரட்டவில்லை..' என்று பிங்கி என்னிடம் ஜாடையில் கேட்டாள். 'அட்ஜஸ்ட் பண்ணிக்கோ பிங்கி..' என்று நான் பார்வையாலேயே கெஞ்சினேன். மேட்ச் ஆரம்பித்தது. நாங்களும் சியர்ஸ் சொல்லி ஆரம்பித்தோம்..!! (நாங்களும் = நானும், ஜானியும்..!! பிங்கிக்குலாம் அந்தப் பழக்கம் இல்ல..!!) "ஆண்ட்டியை கூட்டிட்டு வரலையா பிங்கி..?" ஜானி கேட்டான். "அவங்க எதுக்கு..?" பிங்கி கடுப்பாக கேட்டாள். "அவங்க இருந்தா ஜாலியா இருக்குமேன்னு சொன்னேன்.." "என்னது..????" பிங்கி சூடானாள். "இல்ல.. எல்லாரும் ஜாலியா கிரிக்கெட் பாக்கலாம்னு சொன்னேன்.." குடிபோதையில் ஜானி உளற, பிங்கி அவனையே கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். என்னிடம் திரும்பி 'முடியலைடா..!!' என்பது போல முகம் சுளித்தாள். நான் இருவருக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு விழித்தேன். யாருக்கும் சப்போர்ட் பண்ண முடியாத சூழ்நிலை. மேட்ச் பார்த்து இந்தியாவுக்காவது சப்போர்ட் செய்யலாம் என்று பார்த்தால், நம்மாட்கள் போட்ட பந்தை அவர்கள் சுளுக்கெடுத்தார்கள். கீஸ்வேட்டர் என்று ஒருத்தன் வந்து கிழிய கிழிய அடித்தான் (பந்தைத்தான்..!! ஹிஹி..!!). குக் என்பவன் வந்து குமுறு குமுறு என குமுறினான். பின்பு பீட்டர்சன் வேறு வந்து பிரித்து மேய்ந்தான். நமது பவுலர்கள் கதிகலங்கிப் போனார்கள். ஒரு வழியாய் இங்கிலாந்து இன்னிங்க்ஸ் முடிந்தது. 50 ஓவரில் 325 ரன்கள் அடித்து விட்டார்கள். இங்கே நாங்களும் வாங்கி வந்த குவார்ட்டர்களை அடித்து காலி செய்திருந்தோம். ஜானி மட்டையாகி இருந்தான். போதை உச்சத்துக்கு ஏறி 'ஆண்ட்டி வடை சூப்பர்..!!' என்று டபுள் மீனிங்கில் பேசி, பிங்கியிடம் அறை வாங்கியவன், அப்படியே சாய்ந்து விட்டான். நானும் உச்ச பட்ச போதையில் தத்தளித்துக் கொண்டிருந்தேன். பிங்கி மட்டும் சிகரெட் நெடி தாங்காமல் மூக்கைப் பொத்தியவாறு கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் இந்தியா பேட்டிங் ஆரம்பமானது. முதல் ஓவரிலேயே முட்டை கிடைத்த சந்தோஷத்தோடு சேவாக் வெளியேறினார். 'நண்பன் இல்லாமல் நான் ஆட மாட்டேன்' என்றவாறு கவுதம் கம்பீரும் கம்பெனி கொடுக்க சென்று விட்டார். 50 ரன்களுக்குள்ளாகவே 4 விக்கெட்டுகள் போய்விட்டன. ஆனால்.. அதற்காகவெல்லாம் நான் கலங்கவில்லை. சீனியர்தான் சொல்லியிருக்கிறாரே.. நாமதான் இன்று ஜெயிக்கிறோம்..!! பிங்கி குஷியாக மேட்ச் பார்க்க.. நானும் சந்தோஷமாகவே பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் என் சந்தோஷம் நெடுநேரம் நீடிக்கவில்லை. ராகுல் டிராவிட்டிற்கு ராங்காக LBW கொடுக்க, எனக்கு மனதுக்குள் லேசாக ஒரு நடுக்கம் ஏற்பட்டது. ‘எதோ ஒரு லூசு சொன்னதை நம்பி செல்போனை பெட்டாக கட்டிவிட்டேனோ..?’ என்று உதறலெடுக்க ஆரம்பித்தது. பிங்கி வேறு ஒவ்வொரு விக்கெட்டுக்கும், என் செல்போனை திரும்பி பார்த்து ஆசையாக லுக் விட்டுக் கொண்டிருந்தாள். ஐயையோ.. ஒருவேளை இந்தியா தோற்றுவிட்டால், செல்போனை இவளிடம் இழப்பதுடன், லேகாவிடம் வேறு செவுளிலேயே அறை வாங்க வேண்டுமே..?? கடவுளே.. என்ன இது சோதனை..?? கோஹ்லியும், டோனியும் மட்டும் கொஞ்ச நேரம் டொக்கு வைத்து ஆடினார்கள். மற்றவர்கள் எல்லாம் 'வந்தார்கள்.. நின்றார்கள்.. சென்றார்கள்..' ஆயினர். நேரம் ஆக ஆக எனக்கு வயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்தது. எட்டு விக்கெட், ஒன்பது விக்கெட்டானது. இன்னும் 50 பந்துகளில் 122 ரன்கள் எடுக்க வேண்டும். இவ்வளவு நேரம் லுக் விட்டுக் கொண்டிருந்த செல்போனை, பிங்கி இப்போது தொட்டு தொட்டு பார்க்க ஆரம்பித்திருந்தாள். எனக்கு சுத்தமாக நம்பிக்கை போய் விட்டது. குடித்த போதை எல்லாம் குப்பென்று இறங்கிப் போயிருந்தது. குலுங்கு குலுங்கி அழ வேண்டும் போலிருந்தது. அப்போதுதான் என் செல்போனுக்கு அந்த கால் வந்தது. 'ASHOK CALLING..!!!!' அதைப் பார்த்ததும் நான் செமக் கடுப்பானேன். 'மவனே.. உன்னால்தான் எல்லாம்..' என்று மனதுக்குள் கருவியவாறு என் செல்போனை எடுத்தேன். 'இதோ.. வந்துர்றேன் பிங்கி..' என்று அவளிடம் சொல்லிவிட்டு, மொட்டை மாடிக்கு ஓடி வந்தேன். கால் பிக்கப் செய்ததும் கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்தேன். "யோவ்.. கேனை.. லூசு.. மெண்டல்..!! இப்படி பண்ணிட்டியேயா..?" "ஏன் ஜூனியர் திட்டுற..? அப்படி என்ன பண்ணிட்டேன் நான்..?" சீனியர் எதுவும் புரியாதவராய் கேட்டார். "பின்ன..? இந்தியா ஜெயிக்கும்னு சொன்னியேயா..?" "ஆமாம்.." "போய்யா.. இந்தியா தோக்கப் போகுதுயா..!!" "தோக்கப் போகுதா..? அப்புறம் எதுக்கு இந்தியா ஜெயிச்சதுன்னு நான் எழுதி வச்சிருக்கேன்..?" "ஆமாம்.. அதை எங்கிட்ட வந்து கேளு..!! அது நீ ஏதாவது மப்புல எழுதிருப்ப..?" "ஜூனியர்.. இன்னும் கொஞ்ச நேரத்துல.. அதை நீயும் எழுதப் போறேன்னு ஞாபகம் வச்சுக்கிட்டு பேசு..!! மப்புல எழுதிருப்பேன்ற..? அப்டினா.. நீ இப்போ மப்புல இருக்கியா..??" சீனியர் சீரியாசான குரலில் கேட்க, "ஆ..ஆமாம்..!!! அ..அதெப்படி உனக்கு தெரியும்..???" நான் திணறினேன். இப்போது சீனியரும் குழம்பினார். "ஐயையோ.. ஒருவேளை குடிபோதைல.. இந்தியா ஜெயிச்சிருச்சுன்னு தப்பா எழுதிட்டமோ..?" "நான் எங்கேயா எழுதினேன்..? நீதான் எழுதிருக்குற..!! எனக்கு ஒன்னும் ரொம்பலாம் மப்பு இல்ல.. ஜானிதான் நெறைய குடிச்சுட்டு.. பிங்கிட்ட அறை வாங்கிட்டு மட்டையாயிட்டான்..!!" "ஹேய் ஹேய்.. இரு இரு.. இப்போ எனக்கு ஞாபகம் வருது..!! நான், ஜானி, பிங்கி மூணு பேரும் உக்காந்து பார்த்தோமே.. பிங்கியோட அம்மா கூட வடை, பஜ்ஜிலாம் போட்டுக் கொடுத்தாங்களே.. அந்த மேட்சா இது..?" "ஆமாம்யா..!! அந்த மேட்ச்தான்..!!" "ஜூனியர்.. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.. அந்த மேட்ச்ல இந்தியாதான் ஜெயிச்சது..!!" "யோவ் போய்யா..!! ஒன்பது விக்கெட் போயிடுச்சு.. இனிமே எங்க ஜெயிக்க போறானுக..?" "ஒரு நிமிஷம் இரு.." சொன்ன சீனியர் கொஞ்ச நேரம் அமைதியானார். அப்புறம் அந்தப் பக்கம் அவர் டைரி புரட்டும் சப்தம் கேட்டது. நான் அமைதியாக காத்திருந்தேன். சிலவினாடிகளில் சீனியர் உற்சாகமாக சொன்னார். "அந்த மேட்ச் இந்தியாதான் ஜெயிச்சிருக்கு ஜூனியர்.. முனாஃப் படேல் முப்பது பால்ல செஞ்சுரி அடிச்சு ஜெயிக்க வச்சிருக்காரு.." அவர் சொல்ல சொல்ல, எனக்கு மயக்கம் வராத குறைதான்..!! "என்னது..??? முனாஃப் படேல் முப்பது பால்ல செஞ்சுரி அடிச்சாரா..? என்னய்யா சொல்ற நீ..??" "ஆமாம் ஜூனியர்.. அவர் வெளையான்டதை நீ பார்த்தியா..?" "எங்கேயா பார்த்தேன்..? அப்போதான் வந்து இறங்குனாரு.. அதுக்குள்ளதான் உன் கால் வந்துடுச்சே..?" "ஓஹோ..? மேட்சை முழுசா பார்க்காமத்தான்.. எங்கிட்ட வந்து கத்திக்கிட்டு இருக்கியா..? போய் மொதல்ல மேட்சை முழுசா பாரு.. நான் அப்புறம் கால் பண்ணுறேன்..!!" சொல்லிவிட்டு சீனியர் கனெக்ஷனை கட் செய்ய, நான் விழுந்தடித்துக் கொண்டு கீழே ஓடினேன். எங்கள் அறைக்கதவை உள்ளே தள்ளியவன், அங்கே பிங்கி அமர்ந்திருந்த போஸை பார்த்து அதிர்ந்து போனேன். சிப்ஸ் அரைபட்ட வாயை மூடக்கூட தோன்றாமல், 'ஆ' வென பிளந்தவாறு வைத்திருந்தாள். டிவியை வெறித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய நிலையை பார்த்து நான்தான் பயந்து போய் கேட்டேன். "பிங்கி.. என்னாச்சும்மா..? ஏதோ பேய்கிட்ட ஃப்ளையிங் கிஸ் வாங்குனவ மாதிரி உக்காந்திருக்குற..?" "இங்க பாருடா இந்தக்கொடுமையை..!!" அவள் டிவி நோக்கி கை நீட்டினாள்.நான் திரும்பி டிவியை பார்த்தேன். ஆக்ஷன் ரீப்ளே ஓடிக்கொண்டிருந்தது. ஆண்டர்சன் வீசிய ஒரு பந்தை, அசால்டாக சிக்சருக்கு அனுப்பிக் கொண்டிருந்தார் முனாஃப் படேல்..!! அப்புறம் கொஞ்ச நேரம் டிவியில் ஓடிய விஷயங்களை எங்களால் நம்பவே முடியவில்லை. இங்கிலாந்து பவுலர்கள் போட்ட பந்துகளை முனாஃப் படேல் பவுண்டரியும், சிக்சருமாய் விளாசு விளாசு என்று விளாசினார். இங்கிலாந்து ப்ளேயர்கள் இனிமா குடித்தவர்கள் மாதிரி விழித்தார்கள். ஒருபக்கம் இஷாந்த் ஷர்மா சிங்கிள் எடுத்துக் கொடுக்க, ஒற்றை ஆளாய் செஞ்சுரி அடித்து இந்தியாவை ஜெயிக்க வைத்தார்.. முனாஃப் படேல்..!! தான் செல்போன் இழந்ததை இன்னும் நம்ப முடியாமல், பிங்கி பித்துப் பிடித்தவள் மாதிரி ஒரு நடை நடந்து, வீட்டை விட்டு வெளியேறினாள். நான் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனேன். பிரசன்டேஷன் செர்மனி பார்த்துக்கொண்டே சீனியரின் காலுக்காக வெயிட் பண்ணினேன். கால் வந்ததும் மொட்டை மாடிக்கு சென்று, பிக்கப் செய்து பேசினேன். சந்தோஷத்தில் கத்தினேன். "ஹாய் சீனியர்.. கலக்கிட்டீங்க சீனியர்.." "என்ன ஜூனியர்.. இந்தியா வின் பண்ணிடுச்சா..?" "வின்னோ வின்னுன்னு வின் பண்ணிடுச்சு.. என்னால நம்பவே முடியலை.." "இப்போவாவது என் மேல நம்பிக்கை வந்ததா..?" "நம்பிக்கை வந்ததாவா..? தெய்வம் சீனியர் நீ..!! இனிமே நீ என்ன சொன்னாலும்.. கண்ணை மூடிக்கிட்டு நான் அதை நம்புவேன்..!!" "ஹாஹா.. இந்தியா வின் பண்ணினதுல ரொம்ப சந்தோஷமா இருக்குற போல..?" "ஆமாம் சீனியர்.. ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்குறேன்..!! அதே மாதிரி உனக்கும் நான் ஒரு ஹேப்பி ந்யூஸ் வச்சிருக்கேன்.." "எனக்கு ஹேப்பி ந்யூஸா..? என்னது அது..?" அவருடைய குரலில் ஏகப்பட்ட ஆர்வம். "உன் பேங்க் பேலன்ஸ் அஞ்சரை கோடி அப்பீஸ்னு சொன்னியே.. இப்போ அதுல ஒரு ஐநூறு ஆட் ஆகியிருக்கும்.. செக் பண்ணிப் பாரு.." "என்ன சொல்ற நீ..? என் பேங்க் பேலன்ஸ் நாலே கால் கோடி அப்பீஸ்தான..?" அவர் சொல்ல, இப்போது நான் சற்று குழம்பினேன். "நே..நேத்து அஞ்சரை கோடின்னு சொன்னியேயா..??" "அப்படியா சொன்னேன்..??? ம்ம்ம்ம்ம்ம்...." என்று கொஞ்ச நேரம் சிந்தனையில் ஆழ்ந்த சீனியர், பின்பு சீரியசான குரலில் கத்தினார். "ஹேய்.. இப்போ எனக்கு புரியுது..!! என் ஃபினான்ஷியல் ப்ளாக் இம்பாக்ட் ஆற மாதிரி.. நீ பாஸ்ட்ல ஏதோ வேலை பண்ணிருக்குற..? என்ன அது..? ஐநூறு அப்பீஸ் ஆட் ஆகும்னு சொன்னியே என்னது அது..??" "அ..அது.. இந்தியா இன்னைக்கு வின் பண்ணுதுன்னு பிங்கிட்ட பெட் கட்டி ஐநூறு ருப்பீஸ் ஜெயிச்சேன்.. அது உன் பேங்க் பேலன்ஸ்ல ஆட் ஆகும்னு நெனச்சேன்.." நான் தயங்கி தயங்கி சொல்ல சீனியர் சிரித்தார். "ஹஹாஹா...!! உனக்கு புரியலை ஜூனியர்.. இட் வோன்ட் வொர்க் இன் தட் வே..!!" "அப்புறம்..?" "சொல்றேன்.. நான் சொல்றதை கொஞ்சம் கவனமா கேளு ஜூனியர்..!! நீ பெட் கட்டி ஐநூறு ருப்பீஸ் ஜெயிச்சதால.. என்னோட கடந்த காலத்தை சேன்ஜ் பண்ணி.. ஒரு ஃபினான்ஷியல் இம்பாக்ட் கொடுத்திருக்குற..!! அந்த இம்பாக்ட் ஃப்யூச்சர்ல ரெஃப்லக்ட் ஆகுறப்போ.. பாசிட்டிவாவும் இருக்கலாம்.. நெகடிவாவும் இருக்கலாம்..!! இந்த கேஸ்ல நெகடிவா ஆகிடுச்சு.. என்னோட ஒரிஜினல் பேங்க் பேலன்ஸ் குறைஞ்சு போச்சு..!! இனிமே எங்கிட்ட கேட்காம.. இந்த மாதிரி வேலைலாம் நீ பண்ணக் கூடாது.. சரியா..?" "ஓ..!!!! ஸாரி சீனியர்..!! உன் பேங்க் பேலன்ஸ் கம்மியாக நான் காரணமாயிட்டேன்..!! கோடி அப்பீஸ் கொறைஞ்சு போச்சேன்னு ஃபீல் பண்ணுறியா சீனியர்..?" "ஹாஹா.. இல்ல ஜூனியர்..!! என் பேங்க் பேலன்ஸ் நாலே கால் கோடி அப்பீஸ்தான்னு என் மெமரி எப்போவோ அப்டேட் ஆயிடுச்சு.. அஞ்சரை கோடின்றது எதோ கனவு கண்ட மாதிரிதான் என் மெமரில இருக்குது.. அதனால ரொம்பலாம் நான் ஃபீல் பண்ணல..!!" "அது எப்படி..?""அதுலாம்.. ரியல்லி காம்ப்ளிகேட்டட் டூ எக்ஸ்ப்ளெயின் ஜூனியர்..!! பேரலல் யுனிவர்ஸ்.., பட்டர்ஃப்ளை எஃபக்ட்.., ஆல்டர்னேட் ஹிஸ்டரி.., அப்டேஷன் ஆஃப் மெமரின்னு.. நெறைய ஃபினாமினா இருக்கு..!!" "என்னது.. பிலோமினாவா..?" "பிலோமினா இல்ல ஜூனியர்.. ஃபினாமினா..!!" "ஓஹோ..?? எனக்கு இன்னும் ஒரு விஷயம் புரியலை.. நான் இப்போ உன்கிட்ட பேசிட்டு இருக்குறது கூட பாஸ்ட்டை சேன்ஜ் பண்றதுதான..? அதனால உனக்கு எதுவும் இம்பாக்ட் இருக்காதா..?" "இம்பாக்டோட அளவை பொறுத்துதான் ஃப்யூச்சர்ல எஃபக்ட் இருக்கும் ஜூனியர்..!! இப்போ என்கூட நீ பேசலைன்னா என்ன பண்ணிருந்திருப்ப..? சும்மா ரூம்ல படுத்திருந்திருப்ப..!! ஸோ.. அதனாலலாம் ஃப்யூச்சர்ல பெரிய எஃபக்ட் வந்திடாது..!!" "ம்ஹூம்.. சுத்தமா புரியலை..!!" "இரு.. புரியுற மாதிரியே சொல்றேன்..!! உனக்கு நெட்வொர்க்ஸ் சப்ஜக்ட் எடுப்பானே.. ஒரு டப்பா தலையன்.. அவன் பேரு கூட ரொம்ப நீளமா இருக்குமே.." "ம்ம்.. கோவிந்த நமசிவாய அரோகர ஐயப்பன்..!!" "அவன் நாளைக்கு க்ளாஸ் எடுக்குறேன்ற பேர்ல நல்லா மொக்கை போடப் போறான்னு நான் உன்கிட்ட சொல்றேன்னு வச்சுக்கோ.. அதைக்கேட்டுட்டு நீ நாளைக்கு க்ளாஸ்ல படுத்து தூங்கிட்டேனா.. அதனால எனக்கு ஃப்யூச்சர்ல எதுவும் ப்ராப்ளம் இல்லை.." "ஓ..!! அவன் க்ளாசை கவனிக்குறதும் ஒண்ணுதான்.. தூங்குறதும் ஒண்ணுதான்.. ஃப்யூச்சருக்கு யூஸ் ஆகாதுன்னு சொல்ற..?" "ஆமாம்..!! அதே நேரம்.. அவன் போடுற மொக்கை தாங்காம.. அவன் டப்பா மண்டையை நீ ரெண்டா பொளந்துட்டேன்னு வச்சுக்கோ.. அது போலீஸ் கேஸ் ஆயிடும்.. அதனால என் ஃப்யூச்சரும் ரொம்ப பாதிச்சிடும்..!! உன்கிட்ட இப்போ கால் பண்ணி பேசிட்டு இருக்குறதுக்கு பதிலா.. கம்பி கூட எண்ணிட்டு இருக்கலாம்..!! இப்போ புரியுதா..?" "ம்ம்.. புரியுது..!! கடந்த காலத்தை மாத்திட கூடாதுன்னு சொல்ல வர்ற.." "இல்ல அசோக்..!! கடந்த காலத்தை மாத்தக் கூடாதுன்னு சொல்லல..!! மாத்துறதுக்கு முன்னாடி கவனமா இருக்கணும்னு சொல்றேன்..!! சொல்லப்போனா.. என்னோட கடந்த காலத்தை மாத்துறதுக்காகத்தான்.. இவ்ளோ கஷ்டப்பட்டு இப்படி ஒரு மெசினையே நான் கண்டுபிடிச்சேன்..!! ஆனா.. அதை என்னால மட்டும் மாத்த முடியாது.. உன்னோட ஹெல்ப் வேணும்..!!" "உனக்காக நான் என்ன வேணா பண்ணுவேன் சீனியர்.. என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லு.." "சொல்றேன்.. ஆனா நீ டென்ஷன் ஆகாம.. நான் சொல்றதை பொறுமையா கேட்கனும்..!!" அவர் சொன்னதைக் கேட்டு எனக்கு இப்போது நிஜமாகவே லேசாக டென்ஷன் ஏற ஆரம்பித்தது. "என்னய்யா சொல்ற..? நீ சொல்றதைப் பாத்தா.. ஏதோ ஒரு பெரிய மேட்டர் சொல்லப் போற போல..?" "ஆமாம்.. கொஞ்சம் சீரியசான மேட்டர்தான்..!!" "இரு.. நான் ஒரு தம் பத்த வச்சுக்குறேன்..!! அதுதான் டென்ஷனுக்கு வசதியா இருக்கும்..!!" நான் சொல்லிக்கொண்டே பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை எடுத்து என் உதட்டில் பொருத்தினேன். "உன்கிட்ட இன்னொன்னு சொல்லணும் ஜூனியர்.." "சொல்லு சீனியர்.." சொல்லிக்கொண்டே நான் சிகரெட்டை பற்ற வைத்தேன். "இந்த தம் அடிக்கிறதை கொஞ்சம் கொறைச்சுக்கோ.. முடிஞ்சா சுத்தமா விட்டுடு..!!" "ஏன் சீனியர்..? நான் தம்மடிக்கிறதுல உனக்கு என்ன பிரச்னை..??" நான் புரியாமல் கேட்க, "இல்ல ஜூனியர்.. இப்போலாம் எனக்கு எந்திரிக்க கொஞ்சம் லேட் ஆகுது..!!"அவர் பரிதாபமாக சொன்னார். அவருடைய குரலிலேயே அவர் படும் கஷ்டம் எனக்கு தெளிவாக புரிந்தது. ஆனால் அவருக்கு என்ன பதில் சொல்வதென்றுதான் எனக்கு எதுவும் விளங்கவில்லை. ஒரு வழியாய் சாந்தமாக சொன்னேன்.

"ஓகே சீனியர்.. கொறைச்சிக்கிறேன்..!! நீ மேட்டருக்கு வா..!!" "அ..அது.. அது.. இந்த மேட்டர்.. லே..லேகா சம்பந்தப்பட்டது..!!" அவர் தயங்கி தயங்கி சொல்ல, நான் ஆச்சரியமானேன். "லேகாவா..? லேகாவை உனக்கு தெரியுமா..?" "தெரியுமாவா..? அவ கூடத்தான் இருபத்து நாலு வருஷமா குடும்பம் நடத்திக்கிட்டு இருக்குறேன் ஜூனியர்..!!" அவர் சொன்னதைக் கேட்க எனக்கு எக்கச்சக்க சந்தோஷமாய் இருந்தது. நான் இப்போது புதிதாக உற்சாகம் கிளம்பியவனாய் கேட்டேன். "ஹையோ சீனியர்.. சொல்லவே இல்ல..!! ச்சே.. உன்கூட இவ்வளவு பேசிட்டு.. இந்த முக்கியமான மேட்டரையே கேட்காம விட்டுட்டனே..?? ம்ம்ம்ம்... அப்போ.. லேகாதான் நம்ம பொண்டாட்டியா..?" "ச்சீய்... அசிங்கமா பேசாத ஜூனியர்..!!" "அசிங்கமாவா..? நான் கரெக்டாத்தான பேசுறேன்..??" "நீ சொன்னதுல பொருட்குற்றம் இல்ல.. ஆனா சொற்குற்றம் இருக்கு..!! 'நம்ம பொண்டாட்டியா..?' ன்னு நீ கேக்குறது நாராசமா என் காதுல விழுது.." "அதானால என்ன சீனியர்.. நமக்குள்ளதான பேசிக்கிறோம்..? வேற யாராவது கேட்டாத்தான் தப்பா எடுத்துக்குவாங்க..!! ம்ம்ம்.. அப்புறம்.. நமக்கும் லேகாவுக்கும் எத்தனை கொழந்தைங்க பொறந்துச்சு..?" "ஒரே ஒரு பையன்தான்..!!"

"ஓஹோ..? என்ன பண்றான் இப்போ..?" "சந்திர மண்டலத்துல.. ஒரு சாப்ட்வேர் கம்பெனில வொர்க் பண்ணுறான்..!!" "சந்திர மண்டலத்துலையா..? என்னய்யா சொல்ற..??" நான் நம்பமுடியாமல் கேட்டேன். "இதையே நம்ப மட்டேன்றியே.. அவன் யூ.கே.ஜி படிக்கிறதுக்கு யூ.கே போனான்னு சொன்னா.. நீ நம்புவியா..?" "சத்தியமா நம்ப முடியலைய்யா..!!" "ம்ம்ம்.. உலகம் இப்போ ரொம்ப சுருங்கிப் போச்சு ஜூனியர்.." "ம்ம்ம்.. சரி சீனியர்..!! லேகாவைப் பத்தி ஏதோ மேட்டர்னு சொன்னியே.. என்ன அது..?" "நான் சொல்றேன்.. ஆனா அவசரப் பட்டு என்னை நீ திட்டக் கூடாது..!!" "சேச்சே.. அது உன்னைப் பத்தி தெரியிறதுக்கு முன்னாடி.. உன்னை லூசுன்னு திட்டிருப்பேன்.. அதுலாம் நீ மனசுள் வச்சுக்காத..!! இனிமே உன்னை நான் அந்த மாதிரி திட்ட மாட்டேன்..!! தைரியமா சொல்லு..!!" "அ..அது.. அது.." "ம்ம்ம்ம்...??" "அ..அது.. அது வந்து.." சீனியர் தயங்கினார். "ம்ம்ம்.. சொல்லு சீனியர்.. ஏன் இப்படி தயங்குற..?" நான் அவரை தூண்டினேன். "லே..லேகாவை" "ம்ம்.. லேகாவை..?" "லேகாவை நீ கழட்டி விட்டுடனும்..!!" என் காதில் வந்து விழுந்த வார்த்தைகளை என்னால் நம்பவே முடியவில்லை. என்ன சொல்லுகிறான் இந்த ஆள்..? சுய நினைவுடன்தான் சொல்கிறானா..? இல்லை போதையில் உளறுகிறானா..? திரும்ப ஒருமுறை கேட்டேன். இப்போது என் வார்த்தைகளில் எக்கச்சக்க டென்ஷன்..!! "யோவ்.. என்னய்யா சொல்ற நீ..?" "ஆ..ஆமாம் அசோக்.. லேகாவை நீ கழட்டி விடனும்..!! அவ நமக்கு வேணாம் அசோக்..!!" சீனியர் தெள்ளத்தெளிவாகவும், அழுத்தம் திருத்தமாகவும் சொல்ல.. நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன்..!!

No comments:

Post a comment