Saturday, 21 November 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 47

சிவப்பு நிற டபுள் டெக்கர் பஸ்சில், மேலே அமர்ந்து இருபுறமும் தெரியும் லண்டன் வீதிகளை பார்த்தபடியே விக்டோரியா ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இங்கிலாந்து ராணியின் பக்கிங்ஹம் அரண்மனையை நோக்கி சென்றுகொண்டிருந்தார்கள் சங்கீதாவும் ராகவும்..

ராகவின் கைகளை இறுக கட்டி அனைத்து அவன் தோள் மீது சாய்ந்திருந்தாள் சங்கீதா.. "ஹேய் பொற்கி.. நேத்து ராத்திரி நீ குடுத்த சர்ப்ரைஸ் என்னாலா என்னிக்கும் மறக்கவே முடியாது டா.. நீ செஞ்சதெல்லாம் நினைச்சி நினைச்சி மனசுல ஓட்டி பார்த்துட்டே இருக்கேன்..

"பிடிச்சி இருந்துதா?.." - சங்கீதாவின் தோள்களை பிடித்து அழுத்தமாய் அணைத்தபடி அமர்ந்திருந்தான் ராகவ்.

"என்னடா கேள்வி இது.. மக்கு?.... இட் வாஸ் கிரேட் டா.. நான் என் லைஃப்ல ரெண்டு புள்ளைங்க பெத்திருந்தாலும், அந்த சுகத்தை நேத்து உன் கிட்ட அனுபவெச்சதுபோல இதுக்கு முன்னாடி ஒரு தடவ கூட அனுபவெச்சதில்ல.. அந்த பெரிய ரூம், அதுக்கு மேல ஒரு டூம், அங்க ஒரு கண்ணாடி.. ஹஹா..கடைசியா அந்த கண்ணாடிய மேல பார்க்கும்போது நீ ஒன்னும் இல்லாம.. ஹஹ்ஹா...ஹீஹி- மேற்கொண்டு சொல்வதற்கு வெட்கப்பட்டாள் சங்கீதா..

"சரி சரி.. ஒரு தடவ நடந்தத மட்டுமே எத்தினி தடவ நினைச்சி பார்த்துட்டே இருப்ப?.." இன்னும் நிறைய வாட்டி புது புது தினுசா ட்ரை பண்ண வேணாமா?.." அவளின் மென்மையான கன்னங்களின் மீது தன் உதடுகள் உரச சொன்னான் ராகவ்..

"ஆத்தி.. நீ ரொம்ப ஆச படுறன்னு சொல்லிதான் உனக்காக இன்னொன்னு பெத்துக்க நான் ஒத்துகிட்டேன்.. அதுக்கும் மேல இன்னொன்னு எல்லாம் எனக்கு தாங்காதுப்பா சாமி.."

"ஊஹும்.. அதெல்லாம் முடியாது..இன்னும் ஒன்னு.. ப்ச்...ப்ச்..."- என்று ராகவ் சங்கீதாவை கொஞ்சும்போது அவன் செல் ஃபோன் சிணுங்கியது.. அதில் உள்ள ரிமைன்டர் "IOFI இன்டெர்வியூ, கால் சஞ்சனா" என்று காண்பித்தது.."ஹைய்யோ.. இன்னிக்கி சஞ்சனாவுக்கு சில வேலைகள் முக்கியமா சொல்லியாகனும்.. ஒரு நிமிஷம் டா.." என்று சொல்லிவிட்டு அவளுக்கு கால் செய்தான் ராகவ்..

"ஹலோ"

"ஹ்ம்ம்.. ராகவ்.. சொல்லுடா.. என்ன ஆச்சர்யமா திடீர்னு போன்
பண்ணி இருக்க?.. லண்டன்ல நடந்த ஃபேஷன் ஷோல நம்ம பிராண்ட் பத்தியெல்லாம் நல்லா பேசினாங்களா?" - அதிகாலை தூக்கத்தில் மெதுவான குரலில் கேட்டாள் சஞ்சனா..

"ஹ்ம்ம்.. அதெல்லாம் நல்ல படியா முடிஞ்சிது.. கூடவே ஏகப்பட்ட அட்வெஞ்ச்சர்ஸோட முடிஞ்சிது.."

"நீ இருக்குற இடத்துல உன்ன சுத்தி அட்வென்ச்சர்ஸ் நடக்கலன்னா தான் ஆச்சர்யம்.. அது சரி.. அக்காவ பத்திரமா பார்த்துக்கோடா.."

"ஹ்ம்ம்.. அத நீ சொல்லனுமாக்கும்.. அதை விட லண்டன்ல எனகென்ன வேல.. இன்னைக்கி கம்பெனில இன்டெர்வியூ இருக்கு.. அதோட கூட அந்த குரூப் டிஸ்கஷன் மறந்துடாத.."

"இல்ல இல்ல மறக்க மாட்டேன்.. நீ அதெல்லாம் மறந்துட்டு நிம்மதியா அக்கா கூட இருந்துட்டு வாடா.."

"ஹஹா.. தேங்க்ஸ் டா.. சரி அந்த வாத்து உனக்கு உதவியா இருக்குறானா?..:"

"ஹ்ம்ம்.. தேவைப்பட்டா வந்து ஹெல்ப் பண்ணுவான் டா.. பட் மீட் பண்ணிக்குறதே ரொம்ப அபூர்வமா இருக்கு.. அவன் கூட டெய்லி ஃபோன்ல தான் பேசிட்டு இருக்கேன்.. அவன்கிட்ட பேசும்போது டைம் போறதே தெரியல.. ஸ்வீட் பாய்.." - என்று கார்த்திக் பற்றி பேசும்போது படுக்கையில் சாய்ந்திருந்தவள் சற்று உற்சாகமாய் நிமிர்ந்துகொண்டு பேசினாள்....

"ஹ்ம்ம்.. டெய்லி ஃபோன்ல அரட்டை நடக்குதோ... நடத்துங்க நடத்துங்க.. இரு உங்கொக்கா கிட்ட குடுக்குறேன் பேசு.." - என்று அவன் நண்பனையும் சஞ்சனாவையும் நக்கலடித்துவிட்டு சங்கீதாவிடம் ஃபோன் குடுக்கும்போது வேறு ஒரு நம்பரில் இருந்து கால் வருவதை பார்த்து அட்டென்ட் செய்தான் ராகவ்..

Raghav: hello

John: Hey how you doing?.. john here.. did you get to see my mms video clip in your mobile yesterday night?
(தமிழில்: எப்படி இருக்க?.. ஜான் பேசுறேன்.. நேத்து ராத்திரி நான் அனுப்பின எம்.எம்.எஸ். வீடியோ கிளிப் உன் செல் ஃபோன்ல பார்த்தியா?)

Raghav: yeah.. I saw it.. hey john, so did you guys know where sampath is right now?
(தமிழில்: பார்த்தேன்.. இப்போ சம்பத் எங்க இருக்கான்னு சொல்ல முடியுமா?)

John: yeah.. he is just outside of Buckingham Palace. karen is here with me, we just need a plan to execute..
(தமிழில்: பக்கிங்ஹம் அரண்மனைக்கு வெளியிலதான் இருக்கான்.. என் கூட கேரன் இருக்கா.... அவன பிடிக்குறதுக்கு எதாவது ஒரு திட்டம் வேணும்..)

Raghav: okay cool.. let me come there..

கால் கட் செய்தவுடன் அவர்கள் இறங்க வேண்டிய ஸ்டாப் வந்தது.. இறங்கியவுடன் சங்கீதாவிடம் "கொஞ்சம் இங்கயே இரு.. நான் இதோ இப்போ வந்துடுறேன்.." என்று சொல்லிவிட்டு பக்கிங்ஹம் அரண்மனையை நோக்கி விரைந்தான் ராகவ்..


ராகவ் முன்பே ஒருமுறை சொன்ன காஸ்ட்யூம் டீடைல்ஸ் படி கேரன் அந்த இடத்தில் முக்கல்வாசி கால் வழுவழுப்பாக தெரியும்விதம் மிகவும் குட்டையாக ஒரு ஸ்கர்ட் மற்றும், மேலே மார்பகங்கள் விம்மியபடி அழுத்தமாக தெரியும்விதம் ஒரு டி-ஷர்ட் அணிந்து நடந்து செல்லும் டூரிஸ்டுகளில் இளைஞர்களின் பார்வையை ஈர்த்துக்கொண்டிருந்தாள்.. அவள் இடுப்பில் தொப்புள் வளையம் குத்தி, மார்பிடுக்கில் பச்சை குத்தியுள்ள பட்டாம்பூச்சி இவள் சுவாசிக்கும்போது அதுவும் அங்கே சுவாசித்துக்கொண்டிருந்தது.

ராகவ் அவர்கள் இருக்குமிடத்துக்கு அருகில் வந்து ஒரு மறைவான இடத்திலிருந்து அவர்கள் செல்லுக்கு அழைத்து அவன் இருக்குமிடத்துக்கு வரவழைத்தான்.. அங்கே கேரன் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக விளக்கினான்.. இப்போது மூவரும் பிரிந்து கூட்டத்துடன் கூடமாக வெவ்வேறு இடங்களை நோக்கி நகர்ந்தார்கள்.

அரண்மனையின் முன் இருக்கும் பார்க்கில் சம்பத் ஒரு ஓரமாக அவன் சூட்கேசுடன் தலையில் தொப்பியும், கண்ணுக்கு கூலர்ஸ்சும் அணிந்து அமர்ந்திருக்க, அவன் அருகில் நன்கு நெருங்கி சென்று அமர்ந்தாள் கேரன்... அவளது காலழகும், மார்பழகும் எப்பேர்பட்ட ஆணின் பார்வையையும் சுண்டி இழுக்கும். அதற்க்கு சம்பத் ஒன்றும் விதிவிளக்கல்ல..!!

கூடவே கேரன் அவளது ஹான்ட் பாக் ஜிப் சற்று திறந்து வைத்திருந்தாள்.... வேண்டுமென்றே காட்டுகிறேன் என்ற அர்த்தத்தில் இல்லாமல் தான் ஒரு அஜாக்ரதையான பெண் என்பதுபோல தன் உடல்மொழி அவனுக்கு புரியும்விதம் நடந்துகொண்டாள்.. பாதியாய் திறந்த அவளது ஹான்ட் பாகினுள் கட்டு கட்டாக பணம் இருப்பது அவன் கண்ணுக்கு தெரியும் விதம் அவனருகில் வைத்திருந்தாள்....

"ஹாய்ய்.." - வசியமான குரலில் பேசினாள் கேரன்..

"ஹ்ம்ம்.." - சற்று பயத்தில் இறுக்கமாக பேசினான் சம்பத்..

"Are you from India?..." - நேராக பார்த்து மார்பழகு தெரியும்விதம் பேசினாள்..

"yes.." என்று சொல்லி சற்று அவளைப் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டான்..

"My hubby is too bad.. he is an indian too.." என்றாள்..

"oh.." என்றான்..

"you know something?... but still I love indians.. they are good in everything.."

"nice.."

"oh,, my goodness.. pls have an eye on my bag I will get a candy and come quickly.." - என்று சொல்லி அருகில் உள்ள கடைக்கு சென்றாள் கேரன்..

சம்பத் அவளுடைய ஹான்ட் பாக் மீது ஒரு கண் வைத்திருந்தான், அந்த பாக் மீது கை வைக்க ஆரம்பத்தில் ரொம்பவே தயங்கினான்.. பின் சில நிமிடங்கள் கடந்தும் அவள் திரும்பி வராமல் இருப்பதைப் பார்த்து மெதுவாக அவளது ஹான்ட் பாக் திறந்து எவ்வளவு தேறுமென்று எண்ணினான்..

Candy shop வரை சென்று வருகிறேன் என்று சென்றவளை ஒரு முறை எட்டிப் பார்த்தான்.. இன்னும் அங்கேயே தான் இருந்தாள். அந்த கடையில் பரபரப்பாக எதோ பேரம் பேசி வாங்கிக் கொண்டிருந்தாள்.. 


அப்போது சற்று உஷாராக, மீண்டும் விட்ட இடத்திலிருந்து எவ்வளவு இருக்கிறதென்று அந்த பணத்தை எண்ணினான்.. அப்போது அந்த பணக்கட்டினுள் ஒரு சின்ன காகிதம் இருந்தது.. அதைப் படித்துப் பார்த்தவனுக்கு அதிர்ச்சி.. அதில்: "இந்த பணம் உனக்கு தான்.. ஆனா இதை எடுத்துக்குறதுக்கு முன்னாடி துரை உனக்கு ஒரு விஷயம் சொல்ல சொல்லிருக்கான்.... அதை தெரிஞ்சிக்க அந்த பாக் எடுத்துட்டு சைலண்டா நான் நிக்குற இடத்துக்கு வா.." என்று எழுதி இருந்தது..

அதைப் படித்தவுடன் அவனுக்குள் ஒரு படபடப்பு ஏற்பட்டது உடனே அவளை பார்க்க முயற்சித்தான்.. ஆனால் அந்த Candy shop அருகே அவளை காணவில்லை.. இருக்கும் குளுரிலும் அவனுக்கு இப்போது வியர்க்க தொடங்கியது.. மீண்டும் அவள் எங்கே இருக்கிறாள் என்று அங்கும் இங்கும் திரும்பி திரும்பி பார்த்தான்.. ஆனால் அவன் பார்வைக்கு அவள் தென்படவில்லை..

அவன் இருக்கும் இடத்தில் இருந்து அந்த candy shop இரண்டு நிமிடமாவது நடந்து செல்ல வேண்டுமென்ற தூரத்தில் இருந்தது.. அப்போது அவன் சூட்கேசுடன் அவளது ஹான்ட் பாகையும் எடுத்து மெதுவாக கூட்டத்துடன் கூட்டமாக நடக்க துவங்கினான்.. அவன் கிட்ட தட்ட மெதுவாக நடந்து அந்த கடை இருக்குமிடம் வறை சென்று விட்டான்..

அவள் எங்கே இருக்கிறாள் என்று அங்கே தேடுகையில் அவனுக்கு பின்னால் இருந்து உரத்த குரலில் ஒரு பெண் "That bastard has taken my hand bag and running away.. please catch him.. please.. he is stealing my bag..somebody please catch him please" என்று அலரி கத்துவது அவன் காதுகளுக்கு கேட்டு அங்கிருந்து ஓடுவதற்குள் டூரிஸ்ட் செக்யூரிட்டி ஆட்கள் அவனை மடக்கி பிடித்தார்கள்..

அப்போது ராகவ் அங்கே என்ன நடந்ததென்று தெரியாதது போல் வந்தான்.. அங்கே உள்ள செக்யூரிட்டி ஆபீசர்கள் இடையே சில நிமிடங்கள் தனியே சென்று சம்பத்தின் IOFI duplicate Identity card காண்பித்து தானும் யார் என்பதை விளக்கி, கேரன் அவனிடம் விளையாட்டாக எதோ செய்த விஷயம் என்றும், அவர்கள் அனைவரும் IOFI ஊழியர்கள்தான் என்று விளக்கி அங்கே சம்பத்தை அவர்களிடமிருந்து விடுவித்து அவனை தனியாக அழைத்து வந்தான்.. அருகே John சம்பத்தின் தோளில் அவனது இரும்பு கைகளை போட்டு அங்கிருக்கும் கூட்டத்துக்கு நண்பர்கள் நடந்துசெல்வதுபோல நடந்து அவன் எங்கும் ஓடாமலிருக்க அவனை ஒட்டி வந்தான்.

நால்வரும் அந்த அரண்மனை வீதியின் ஓரத்தில் இருக்கும் ஒரு பெரிய வேன் ஒன்றில் ஏறி.. அமர்ந்தார்கள்..

உள்ளே இவர்களின் பிடியில் இருக்கும் சம்பத் என்ன செய்வதென்று தெரியாமல் எப்படியாவது எதாவது ஒரு கதவை திறந்து ஓட முயற்சிக்கும்போது ஜான் அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட.. இன்னும் திமுறிக்கொண்டு தப்பிக்க முயற்சித்தான்.. ஆனால் பலன் இல்லை.. என்னதான் காட்டானாக இருந்தாலும், நம்மூர் காட்டான்களுக்கெல்லாம் ஜாம்பவான் போல இருக்கும் ஜானின் பிடியில் அவன் கைகள் பின்புறம் முறுக்கி மடக்கி வைக்கப்பட்டு இருந்தது.. அவன் எவ்வளவு முயற்சி செய்தும் ஒரு இன்ச் கூட அவனுடைய பிடியில் இருந்து நகர முடியவில்லை..

கருப்பு நிற கண்ணாடியை கொண்ட நான்கு கதவுகளும் மூடப்படிருந்ததில் உள்ளே என்ன நடக்கிறதென்று யாருக்கும் தெரியவில்லை.. சம்பத்தின் சத்தமான கூச்சலும் காரின் உள்ளேயே அடங்கியது..

"எதுக்கு என்ன கொல்ல வந்த?" - ராகவ் அவன் கண்களை உத்து பார்த்து கேள்வி எழுப்பினான்..

"அது எனக்கு துரை குடுத்த வேல... அவ்வளோதான்.." - வசமாக மாட்டி இருந்தாலும் மூர்கமான முகத்தோடு திமிரான குரலில்தான் பதில் வந்தது சம்பத்திடமிருந்து....


"ஆஸ்பெத்ரியில குமார எதுக்கு துரை கொல்லனும்?.... அன்னிக்கி ராத்திரி அங்க ஒரு வார்டன் டிரஸ்ல காம்பவுண்ட் சுவர் ஏறி குதிச்சி ஓடினது நீதான?.."

சம்பத்திடம் ஒரு நீண்ட மௌனம்...

ராகவ் ஜானைப் பார்த்து மெதுவாக கண் அசைக்க.. சம்பத்தின் கைகளை கொஞ்சம் அழுத்தமாக முறுக்கினான் ஜான்..

"ஆஹ்ஹ்ஹ்ஹ.." வலியில் கதறினான் சம்பத்..

"சொல்லுறியா?.. இல்ல... உன் கைய முருக்கியே மொத்தமா எடுத்துட சொல்லவா?...."

"சொல்றேன் சொல்றேன்.." என்று வலி தாங்காமல் மேலும் தொடர்ந்தான்.. "துரைக்கு ஆஸ்பெத்ரியில குமாரை கொல்லுறதுக்கு நான் தான் எல்லா ஏற்பாடும் பண்ணி குடுத்தேன்.. ஆனா அவன் எதுக்கு குமாரை கொல்லணும்னு எனக்கு தெரியாது.."

"ஒரு நாள் நடு ராத்திரி என் கார் பின் புற கண்ணாடியில கல் எறிந்சதும் நீதான?.." என்றான் ராகவ்..

"ஆமா.. எதையுமே நான் செய்யல.. என்னை செய்ய வெச்சாங்க.."

"ராகவிடம் ஒரு மௌனம்.. எதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.. சில வினாடிகள் கழித்து.. "எதுக்கு துரை ராத்திரி நேரத்துல குமார கொல்லுறதை நீ ஒழிஞ்சி இருந்து வீடியோ எடுத்து வெச்சிருக்க?"

சம்பத்திடம் ஒரு அதிர்ச்சி.. அந்த வீடியோ பற்றி எப்படி ராகவுக்கு தெரியுமென்று எண்ணி அவன் முகம் வேர்த்தது..

"அதெப்படி உனக்கு தெரியும்?.. எந்த வீடியோ பத்தி பேசுற?.." - என்று மீண்டும் எகிறினான் சம்பத்..

"உன் கைய திரும்பவும் முறிக்க வெக்காத.... சீக்கிரம் சொல்லு.." - என்று ஜானைப் பார்த்து ராகவ் மீண்டும் கண் அசைக்க.. ஜான் ஏதும் செய்வதற்குள் சொல்லிவிடலாம் என்று பேச ஆரம்பித்தான் சம்பத்..

"நான் துரை சொன்ன எந்த ஒரு விஷயத்துக்கும் மாட்டேன்னு சொன்னதில்ல.. ஆனா எனக்கு சரியான கூலி தர்றதா சொல்லி ஏமாத்திட்டான்.. அவன் கிட்ட இருந்து எனக்கு வர வேண்டிய பணத்தை வாங்குறது எப்படின்னு புரியல.. அப்போ அவனை மிரட்டுறதுக்கு எனக்கு ஏதாவது ஒரு விஷயம் தேவைப் பட்டுது.. அதுக்காக எடுத்து வெச்ச வீடியோதான் அது.."

"இன்ட்ரஸ்டிங்.. ஹ்ம்ம்.." - மீண்டும் சற்று ஆழ்ந்து யோசித்தான் ராகவ்..

"அந்த மரத்துன்டு பத்தி உனக்கு எதாவது தெரியுமா?.." - இந்த கேள்விக்கு ரொம்ப ஆர்வமாக சம்பத்திடம் இருந்து பதிலை எதிர்பார்த்தான் ராகவ்..

"அது..." - என்று சம்பத் சொல்ல ஆரம்பிப்பதற்குள் ராகவின் செல்ஃபோன் சிணுங்கியது.. சங்கீதா நீண்ட நேரம் ஆகியும் ராகவ் எங்கிருக்கிறான் என்று தெரிந்துகொள்ள அழைத்திருக்கிறாள்..

"oh.. my goodness.. John.. my wife is coming towards this place.. I dont want her to see me.. so please have this bastard under your custody, I want to take him alive to India soon.. he is very important to me.. got it?" - என்று அவசரமாக சொல்லிவிட்டு ஜானின் கையில் ஒரு தொகையை குடுத்துவிட்டு அங்கிருந்து நழுவி வேறொரு பக்கமாக சென்று சங்கீதாவின் பின்னால் வந்து நின்றான் ராகவ்..


"எங்கடா போயிட்ட பொற்கி.. எவ்வளோ நேரமா தேடிட்டு இருக்கேன்..?.. உனக்கு அக்கறையே இல்ல என் மேல.. போ.." என்று அவள் சிணுங்க.. அப்படியே அவள் உதடில் தன் உதடை பதித்து ப்ச் ப்ச் ப்ச் என்று லிப் கிஸ் செய்து பேசிக்கொண்டே இருந்த அவளது லிப்பை லாக் செய்தான் ராகவ்..

முத்தத்தில் ஆழ்ந்திருக்கும்போது சங்கீதாவின் பின் பக்கம் அந்த வேன் மெல்ல நகர்ந்து செல்வதைப் பார்த்தான்... அப்போது ராகவின் செல்லில் ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது.. "Dont worry, I will have him with me, come and take him whenever you can - John" என்ற மெசேஜ் பார்த்து சற்று தெம்படைந்து மீண்டும் தன் காதல் மகாராணி சராவுடன் இங்கிலாந்து மகாராணியின் அரண்மனையை சுத்தி பார்க்க பக்கிங்ஹம் பாலஸ் உள்ளே குஷியாக சென்றான் ராகவ்....

(இப்போது அதே நாள்.... லண்டனில் இருந்து நம் தாயகத்துக்கு வருவோம்.. இங்கே நம் வாத்தும் சஞ்சனாவும் என்ன செய்கிறார்களென்று பாப்போம்..)

காலையில் எழுந்த போதிருந்தே கார்த்திக்கின் மனமும் உடலும் பரபரப்பாய் இயங்கியது. மனதில் ஓடிய இளைய ராஜாவின் பாடலை ஹம் செய்து கொண்டே தன் லூசான உடைகளை அணிந்து கண்ணாடியில் பெருமை பொங்க தன் அழகை ரசித்தான்.

வெளியில் கார் ஹாரன் சத்தம் ஒலிக்க, அவசரமாய் கண்ணாடியை பார்த்து தலை வாரிக்கொண்டு, முகத்தை அங்கும் இங்குமாய் திருப்பிப் பார்த்துவிட்டு கடைசியாய் தன்னைப் பார்த்து தானே கண் அடித்து “செமையா இருக்க டா மாப்ள..” என்று கார்த்திக் தன்னைப் பார்த்து சொல்லிக்கொள்ளும் போது ஒரு வேலை அந்த கண்ணாடிக்கு உயிர் இருந்திருந்தால் தன் கண்களை இறுக்க மூடி கூச்சப்படிருக்கும்..!!

தான் அணிந்திருக்கும் பான்டுக்கு பெல்ட் போட்டு, ஷூவுக்குள் இரு கால்களையும் ஏனோ தானோ என்று சொருகிக்கொண்டு அவசரமாய் வண்டியில் ஏறினான்..

கார்த்திக் காரில் ஏறியபோது “பொன் மாலைப் பொழுது... இது ஒரு பொன் மாலைப் பொழுது.. வான மகள் நானுகிறாள், வேறு உடை பூணுகிறாள்..” – என்று IOFI Benz வண்டியில் உள்ள ஸ்பீக்கர்களில் நிழல்கள் பாட்டு ரம்யமாக ஒலிக்க, அதற்கு ஏற்ப விரல்களால் தாளம் போட்டுக்கொண்டே ஒரு புது உற்சாகத்துடன் சஞ்சனாவைப் பார்க்க சென்றுகொண்டிருந்தான் கார்த்திக்.

இன்று கார்த்திக் இவ்வளவு உற்சாகமாக இருப்பதற்கு காரணம் அவன் எனிமி ஊரில் இல்லாத போது சஞ்சனாவுடன் அதிக நேரம் நிம்மதியாய் கடல போடலாமே என்ற சந்தோஷம்தான் வேறென்ன.

“ஏன் தம்பி, கேக்குறேன்னு தப்பா நினைக்க கூடாது.. இந்த சைனீஸ் படங்கள்ல வரா மாதிரி லூசா பான்ட் ஷர்ட் போடுறீங்களே? இது உங்க ஊருல ஃபேஷனா?.. இல்ல நீங்க ஏதாவது ப்ரூஸ்லி ரசிகரா? ஹா ஹா..” – ட்ரைவர் தாத்தா கார்த்திக்கை ரியர் வியூ கண்ணாடியில் பார்த்து கிண்டலாய் கேள்வி எழுப்பினார்..

"நீங்க கூட அப்பப்போ சஞ்சனா கிட்ட மொக்கையா கடல போடுறீங்கன்னு கேள்வி பட்டிருக்கேன்.. அது உங்க வாலிப வயசுக்கேத்த கோளாறா Mr.டாம் க்ரூஸ்?.. ஏன் நீங்க முறைப்படி உங்க மனைவி கிட்ட சொல்லி அவளை பொண்ணு கேக்க கூடாது?.. பாவம் அந்த புள்ளையும் தனியாதான சுத்திட்டு இருக்கு.. என்ன நான் சொல்லுறது கரெக்ட் தான..?" – என்று டிவியில் காம்பியரிங் பண்ணும் பெண்களைப் போல கழுத்தை ஆட்டி ஆட்டி நக்கலாய் பேசினான் கார்த்திக்.

தாத்தா என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கார்த்திக்கைப் பார்த்து முழிக்க..

சிக்னல் போட்டுடாங்க, சீக்கிரம் வண்டி எடுங்க.. ஹ்ம்ம் ரைட் ரைட்.. என்றான் கார்த்திக்..“அந்த பொன்னே பரவாயில்ல போல இருக்கே..” என்று முனு முனுத்துக்கொண்டார் தாத்தா..

ஆடிஷனுக்கு காத்திருக்கும் அறைகுறை மாடர்ன் உடை இளம் பெண்களை பார்த்து ரசித்தபடி IOFI வளாகத்துக்குள் நுழைந்தான் கார்த்திக்..

கொய்யால நம்ம தூக்கத்தை கெடுக்க ஒவ்வொன்னும் தனித்தனியா வித விதமா வளத்து உட்டுருக்கானுக என்று அந்த பெண்களை பெற்ற அப்பன் மார்களை திட்டிக்கொண்டே சஞ்சனா இருக்கும் மீட்டிங் ஹாலுக்கு சென்றான்.

வேர் ஆர் யு என்ற இவனின் எஸ்.எம்.எஸ் க்கு “நான் ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கேன், நீ கொஞ்சம் வெயிட் பண்ணு என்று எஸ்.எம்.எஸ். அனுப்பி இருந்தாள் சஞ்சனா.. அதைப் பார்த்து விட்டு மீட்டிங் நடக்கும் கண்ணாடி அறையின் வெளியே அவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் கார்த்திக்..

அந்த அறையினுள், ஒரு பெரிய வெள்ளை போர்டில் உலக அளவிலான ரிசஷன் (Recession) என்ற தலைப்பு தெரிந்தது, கூடவே சுமார் இருவதில் இருந்து இருவத்தைந்து வயதுடைய ஸ்டைலீஷான பெண்களும் முன் புறம் உள்ள சொட்டையை சற்றே ஸ்பைக் ஸ்டைல் என்ற பெயருடன் மறைத்து நாகரீகமாக ஜொள்ளு விட்டுக்கொண்டிருக்கும் ஆண்களையும் பார்த்து தனக்குத் தானே சிரித்துக்கொண்டிருந்தான். ஆனாலும் அந்த பெண்களில் சஞ்சனா வித்தியாசமாக ஜொலிப்பதை அவனால் உணர முடிந்தது.

ஒரு சில நிமிடங்களில் சஞ்சனா கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துவிட்டு அனைவரையும் நோக்கி எதோ சொல்ல, ஒவ்வொருவரும் சூடான விவாதத்தில் இறங்கினார்கள்.

சில நிமிடங்கள் கழித்து நான்கு இளைஞர்கள் வேறு அறைக்கு சென்றார்கள். அமர்ந்திருந்த மீதி இளசுகளில் கூர்மையான கண்களும், நீளமான வழு வழு முடியும் கொண்டு திமிரான பார்வையில் ஒரு பெண் சஞ்சனாவிடம் எதோ வாக்குவாதம் நடத்துவது தெரிந்தது... அப்போது சஞ்சனா எதேர்ச்சையாக திரும்பவும் அவளைப் பார்த்து “வந்துட்டேன்” என்று சிக்னல் குடுத்தான் கார்த்திக்..

"ஹேய் கார்த்தி.. அவ்வளோ சீக்கிரம் வந்துட்ட?.. என்ன பண்ற இங்க?.." – உள்ளே இருப்பவர்களிடம் எக்ஸ்யூஸ் கேட்டு கார்திக்கை பார்த்தவுடன் எதோ ஒரு பரவசத்தில் வெளியே வந்து பேசினாள் சஞ்சனா..

"ரூம்ல போர் அடிச்சுது, கூடவே நீயும் இன்னிக்கி உனக்கு கொஞ்சம் வேலை கம்மின்னு சொல்லி இருந்த இல்ல, அதான் என்ன பண்ணுறதுன்னு தெரியாம உன் பாய் ஃபிரன்டுக்கு ஃபோன் பண்ணி என்னை இங்க கூட்டிட்டு வர சொன்னேன்.." என்றான் நக்கலாக..

அவன் பாய் ஃபிரன்டு என்று சொன்னவுடன் எதோ சிந்தனையில் சஞ்சனா லேசாக குழம்பினாள்.. பின் அவனுக்கு பின்னால் நிற்கும் டிரைவர் தாத்தாவைப் பார்த்துவிட்டு மென்மையாக சிரித்தாள்..

“அடங்கவே மாட்ட டா நீ..” – என்னதான் சிரித்த முகமாக பேசினாலும் அவள் முகத்தில் ஒரு டென்ஷன் இருப்பதை உணர்ந்தான் கார்த்திக்..

"ஆமா என்ன நடக்குது உள்ள.. சூடா வாக்கு வாதம் நடக்குறா மாதிரி தெரியுது.. ஏதாவது பிரச்சினையா?"

"ச்சே ச்சே.. அதெல்லாம் ஒன்னும் இல்லடா.. உள்ள இருக்குறவங்க பெரிய பெரிய ஃபேஷன் ஸ்கூல்ல இருந்து IOFI ல சேருரதுக்கு இன்டெர்வியூக்கு வந்திருக்காங்க.. ராகவ் எப்போவுமே இந்த மாதிரி புதுசா வர்றவங்களுக்கு பேசுற திறமை எப்படி இருக்குன்னு பார்க்க குரூப் டிஸ்கஷன் வெக்க சொல்லுவான்.. அவன பொறுத்த வரைக்கும் என்னதான் திறமை இருந்தாலும் வாய் ரொம்ப முக்கியம்னு சொல்லுவான் அதுக்குதான் இந்த செஷன்..

"ஹ்ம்ம்.. வாயிலேயே வடசுட்டு CEO ஆனவனாச்சே..!! இல்லன்னா அந்த எனிமி எப்படி இந்த பொசிஷன்ல இருக்க முடியும்..?"

"ஹஹா.. நல்லா பேசுறடா லூசு கிறுக்கா, கொஞ்சம் வெயிட் பண்ணு உள்ள கொஞ்சம் டிஸ்கஷன் முடிச்சிட்டு வந்துடுறேன்.." - என்று சஞ்சனா சிரிக்கையில் அவளது சிரிப்பை அப்பட்டமாக அவளுக்கு தெரியும் விதம் வாய் அகல விரிய பார்த்து ரசித்தான் கார்த்திக்.

"டேய் வாத்து.. மவுத் க்ளோஸ் பண்ணு.. ஈ உள்ள போய்ட போவுது.. ஹஹா.." - என்று கார்த்திக் தன்னைப் பார்த்து ஊத்துவதை உணர்ந்து நக்கலடித்தாள்..

"ச்சே.. ச்சே.. அதெல்லாம் ஒன்னும் இல்லையே.. ந...நான் எதோ உன்ன பார்த்து ஜொள்ளு விடுறேன்னு தப்பா நினைச்சிகாத.." என்று சமாளித்தான்..

"நான் அப்படி எதுவும் சொல்லவே இல்லையே.." – ஓரக்கண்ணால் பார்த்து சிரித்தாள் சஞ்சனா....

"நீ சொல்லலதான்.. இருந்தாலும் அப்படி ஒரு எண்ணம் உனக்கு வந்துட கூடாதுன்னு முன் கூட்டியே நான் உனக்கு சொல்லிட்டேன்." – என்னதான் கார்த்திக் உதடுகள் மெனக்கெட்டு பேசினாலும் அவன் கண்கள் சொல்வது என்னவென்று புரிந்து மெளனமாக அவனை பார்த்து சிரித்துவிட்டு உள்ளே சென்றாள் சஞ்சனா..

சில நிமிடங்கள் கழித்து மூடிய கண்ணாடி அறையை தாண்டியும் சத்தம் சற்று வெளியே கேக்கும்விதம் இருந்தது கார்த்திக்கின் காதுகளுக்கு.

"எக்ஸ்கியூஸ் மீ சஞ்சனா.. எதாவது பிரச்சினையா?" – கதவை லேசாக திறந்து கேட்டான் கார்த்திக்..

"ஒன்னும் இல்ல கார்த்திக் கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணு.. நான் வரேன்.." – என்று சஞ்சனா சொல்வதைக் கேட்டு கார்த்திக் கதவை சாத்துவதற்குள் மீண்டும் அந்த பெண் சற்று குரலை உயர்த்தினாள்.. அதைக் கேட்ட பிறகு அங்கிருந்து செல்ல மனமில்லாமல் உரிமையுடன் மீண்டும் அந்த அறையின் உள்ளேயே வந்து சஞ்சனாவிடம் “என்ன பிரச்சினை சஞ்சனா” என்றான்..

கார்த்திக்கின் அருகே வந்து மெதுவாக பேசினால் சஞ்சனா.. “நடந்த குரூப் டிஸ்கஷன்ல இவங்கள நான் ரிஜக்ட் பண்ணிட்டேன்.. அந்த வெறுப்புல உனக்கு மட்டும் ரிசஷன் டாபிக் பத்தி என்ன பேச தெரியும்?... சும்மா கண் துடைப்புக்கு குரூப் டிஸ்கஷன்னு ஒன்னுத்த வெச்சி யார் யாரை ஏற்கனவே செலக்ட் பண்ணணுமோ அவங்கள மட்டும் செலக்ட் பண்ணிட்டு இந்த ரவுண்ட்ல எங்கள எலிமினேட் பண்ணுறதுதான உங்க பிளான்.. அப்படி.. இப்படின்னு அவ பாட்டுக்கு இஷ்டத்துக்கு கத்திட்டே போறா.. நான் இதுக்கெல்லாம் பதில் பேசினா, IOFI பேருதான் கெடும்....”

"அதுக்காக நீ எதுவும் பேச கூடாதுன்னு அர்த்தம் இல்லையே?" – அந்த பெண்ணை நக்கலாக பார்த்தபடி கார்த்திக் சஞ்சனாவிடம் இதை சொல்ல..


"ஹலோ.. மிஸ்டர்.. வாட் இஸ் யுவர் ப்ராப்லம்?...." என்று கார்த்திக்கையும் நோக்கி பாய்ந்தாள் அந்த பெண்....

"பொறுமை.. பொறுமை.. மிஸ்.மாடர்ன் நீலாம்பரி.." – மீண்டும் அதே நக்கல் சிரிப்புடன் பார்த்தான் கார்த்திக்..

"வாட் தி ஹெல் யூ திங்க் ஆஃப் யூவர்செல்ஃப்?.. ஹொவ் டேர் யூ வில் கால் மீ லைக் தட்?...." - இன்னும் சீறினாள்..

"ஷ்ஷ்ஷ்.. கார்த்திக்.. முட்டாள் மாதிரி அவ கூட கூட பேசாத.. கொஞ்சம் வெளியே இரு.. இவங்கெல்லாம் இன்னைக்கி ஒரு நாள்தான் உள்ளே இருக்க போறாங்க.. இவங்க கிட்டெல்லாம் பேச்சு வெச்சிகிட்டா வெளியே போயி பேர கேடுப்பாங்க.. ஏன் புரிஞ்சிக்காம அவள வம்பிழுக்குற?.. ராகவ் ஊருல இல்லாத வரைக்கும் நான்தான் டா எல்லாத்தையும் இங்க பார்த்துக்கணும்.. அந்த பொறுப்பு எனக்கு இருக்கு.. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ.." – கார்த்திக்கின் கைகளை மெதுவாய் பிடித்து சொன்னால் சஞ்சனா..

"ஹ்ம்ம்.. அந்த பருப்பு ஊற சுத்திகிட்டு உனக்கு பொறுப்பு குடுத்துட்டு போவான்.. அப்போ இந்த மாதிரியான சம்பவங்கள் நடந்தா எனக்கு வெறுப்பு மட்டும் வந்துட கூடாது... இல்ல?.."

சற்று சுதாரித்துக்கொண்டு அந்த பெண்ணை நோக்கி “மிஸ்.. உங்களுக்கு அப்ஜக்ஷன் இல்லன்னா அதே ரிசஷன் பத்தி நான் சுருக்கமா சொல்லி காட்டவா?” என்றான்..

அந்த பெண் எதுவும் பேசாமல் சலிப்பு கலந்த பார்வையுடன் கார்த்திக் சஞ்சனா இருவரையும் பார்த்தாள்.. அப்போது கார்த்திக் தொடர்ந்தான்..

"ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டலுக்கு ஒரு பணக்காரன் தங்குறதுக்கு வந்திருக்கான்.. அப்போ அவன் பர்ஸ்ல இருந்து ஒரு 100 டாலர் பணம் கீழ விழுந்திருக்கு...“

"அந்த ஹோட்டல் மேனேஜர் ஆபத்துக்கு பாவம் இல்லைன்னு சொல்லிட்டு அவன் டிரைவர் கிட்ட வெச்சி இருக்குற 100 டாலர் கடனை குடுத்துடுறான்.."

"அதே 100 டாலரை அந்த டிரைவர் ஒரு விலை மாது கிட்ட குடுத்து அவன் கடனை செட்டில் பண்ணிட்டான்.."

"அந்த விலை மாது அதே 100 டாலரை ஒரு ப்ரோவிஷன் ஷாப்ல குடுத்து அந்த வாரத்துக்கு தேவையான வீட்டு சாமான்களை வாங்கிட்டா."

"அந்த ப்ரோவிஷன் ஷாப் முதலாளி அவருடைய சப்ளையர் கிட்ட அதே 100 டாலரை குடுத்து அவன் கடன் தீர்த்துட்டான்..."

"அந்த சப்ளையர் கடைசியா அந்த ஹோட்டல் மேனேஜர் கிட்ட அதே 100 டாலர் குடுத்து அவர் கிட்ட இருந்த கடனை தீர்த்துட்டான்."

"இப்போ அந்த பணக்காரன் ஹோட்டலுக்கு இரவு நேரம் உள்ள வரும்போது அந்த மேனேஜர் "இது உங்க காசுதான்" னு சொல்லி திருப்பி குடுத்துடுறான்."

"ஒரு சில மணி நேரத்துல ஒருத்தருக்கு ஒருத்தர் கடன் வெச்சி இருந்த பல பேரோட பண பிரச்சினை தீர்ந்துடுச்சி.. ஆனா நடந்ததெல்லாம் என்னென்னா ஒரு 100 டாலர் அந்த பணக்காரன் பர்ஸ்ல இருந்து வெளியேறி மேனேஜர், டிரைவர், விலை மாது, ப்ரோவிஷன் ஷாப் முதலாளி, சப்ளையர்னு சுத்தி கடைசியா அந்த மேனேஜர் கைக்கு வந்து அந்த பணக்காரன் பர்ஸ் உள்ளயே போய் அம்சமா உட்கார்ந்துடுச்சி.."

"இதுல நடுவுல யாராவது ஒருத்தர் கிட்ட அந்த பணம் அடுத்த கட்டத்துக்கு போகாம இருந்திருந்தா அங்க பண வீக்கம் எட்டி பார்த்திருக்கும்.. கரெக்டா?.. என்று சொல்லிவிட்டு சஞ்சனாவை பார்த்து கண் அடித்தான் கார்த்திக்.."


"அவன் சொன்னதைக் கேட்டு ஒரு நிமிடம் ஒன்றும் பேசாமல் அவனையே கவனித்தாள் அந்த பெண்.."

"ஆர் யூ கண்வின்ஸ்ட் மிஸ்..?" – என்று அந்த பெண்னை பார்த்து சிரித்தபடி சொல்லிவிட்டு சஞ்சனாவின் காதுகளில் மெதுவாக "யோசிக்குறாங்கலாம்....ஹிஹி.." என்று அந்த பெண் எதிரிலேயே நக்கலாக சிரித்துவிட்டு வெளியே சென்று அமர்ந்தான் கார்த்திக்..

அவன் முகம் கூட பார்க்காமல் தனது ஹான்ட் பாக் எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பெண்ணிடம் “இவளுக்கு பேச தெரியுமான்னு கேட்டா எவனோ ஒருத்தன் வந்து பேசறான்....ச்சே"

"ஹேய் யூ?...." - என்று சஞ்சனாவை நோக்கி விடை பெறுவதற்கு முன் எதோ விறைப்பாக சொல்ல அருகில் வந்தாள் அந்த பெண்..

"மை நேம் இஸ் சஞ்சனா.." - பெயர் தெரியாதவளுக்கு சிறிதும் பின் வாங்காமல் நேருக்கு நேர் அவள் கண்களைப் பார்த்து தன் பேரை சொன்னாள் சஞ்சனா....

"என்ன நெனச்சிட்டு இருக்க?.. எங்கள ரிஜக்ட் பண்ணதுக்கு உன்னதான பேசி காமிக்க சொன்னோம்...? உன்னால முடியலைனா உனக்கும் நல்ல கம்யூனிகேஷன் திறமை இல்லன்னுதான் அர்த்தம்... ஆனா நீ உள்ள இருக்க.. நாங்க இல்ல.. அவ்வளோதான் வித்யாசம்.." - என்று அந்த பெண் சற்று உறும, அவள் அருகில் அவளைப்போலவே டென்ஷனாக இருக்கும் மற்றொரு ஜீவன் "விடுடி... அவ ஆளா இருப்பான்.. அதான் திடீர்னு உள்ள பூந்து பேசிட்டு போறான்... ஃபேஷன் கம்பெனில ஜாயின் பண்றதுக்கு IT கம்பெனி மாதிரி குரூப் டிஸ்கஷன் வெக்குறாங்க.. ச்சே" என்று சஞ்சனா காது பட அவர்கள் முணுமுணுத்துக்கொண்டே வெளியேறும்போது சஞ்சனாவின் இயல்புக்கு அவர்கள் சொன்ன வார்த்தைகளால் இயற்கையாக கோவம்தான் வர வேண்டும்.. மாறாக “அவ ஆளா இருப்பான்” என்று மற்றொரு பெண் கார்த்திக்கை குறி வைத்து சொன்னது அவள் மனதுக்குள் எழுந்த கோவத்தையெல்லாம் அணைத்துவிட்டு ஒரு இனம் புரியா சந்தோஷத்தை எட்டிப் பார்க்க வைத்தது....

"ஹலோ.." - கதவை மீண்டும் மெதுவாக திறந்து அந்த இரு ஓய்யாரிகளும் போய்டாங்களா என்று எட்டிப் பார்த்தான் கார்த்திக்..


"ஆங்.. சொல்லுடா.." - கார்த்திக் உள்ளே வந்து சஞ்சனாவை சற்று உலுக்க, எதோ ஒரு இன்ப மயக்கத்தில் இருந்தவள் சுதாரித்துக்கொண்டாள்....

"என்ன ஆச்சு? அப்படியே நிக்குற? திரும்பி எதாவது சொன்னாளா?.. கூப்டு கலாய்கவா?.."

"ஹேய்.. ஒன்னும் சொல்லல டா நீ பேசாம வா.." - உதடில் ஒரு மெல்லிய சிரிப்புடன் சொன்னாள் சஞ்சனா..

இருவரும் IOFI வளாகத்தில் சஞ்சனாவின் வீட்டை நோக்கி நெடும் பாதையில் எதிர் திசையில் ஜில்லென்ற காற்றடிக்க மரங்கள் தரும் நிழலில் நடந்தார்கள்.... அப்போது அவனை ஒரு நிமிடம் உற்று கவனித்தவள் "கார்த்தி, ஒரு நிமிஷம் இரு.." என்று சொல்லிவிட்டு தன் காபினுக்கு சென்றாள்... சற்று நேரம் கழித்து மீண்டும் தனது முதுகில் மாட்டிக்கொள்ளும் பாக் உள்ளே ஏதோ ஒன்றை வைத்து ஜிப் போட்டு மூடியபடி நடந்து வந்தாள்...

அடிக்கும் காத்துக்கு முடிகளை தன் கைகளால் கோதிவிட்டு காலரை சற்று கேஷுவலாக தூக்கி விட்டபடி அவள் வருவதைப் பார்த்துக்கொண்டிருக்கும் கார்த்திக்கிடம் ரொம்பவும் பெரிய அளவிலான பர்சனாலிட்டி இல்லையென்றாலும் பார்த்தவுடன் பளிச்சென தென்படும் ஒரு வசீகரத்தை ரசிக்க தவறவில்லை சஞ்சனா..No comments:

Post a comment