Thursday, 19 November 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 40

"வித விதமா நிறைய சாப்பிடுற வரைடீஸ் வெச்சி இருப்பாங்க.... நமக்கு எது வேணுமோ அதை கொஞ்சகொஞ்சமா எடுத்து வெச்சி சாப்டுக்கலாம்.... இன்னொரு விஷயம் சொல்லவா?.... நல்லா கொட்டிகனும்னு வர்றவங்க ஒரு ஜாதி... அது கூட பரவாயில்ல.. என்ன சாப்பிடுரதுன்னே தெரியாம பேந்த பேந்த முழிச்சி கடைசியா ஏதாவது புடிச்ச்சதை சாப்டுட்டு மீதிய தட்டுல வெச்சிட்டு வேஸ்ட் பண்ணுறது இன்னொரு ஜாதி...." - இதை அவள் சொல்லும்போது கார்த்திக் ஒரு திருட்டு முழி முழித்தான்.. அதை கவனித்த சஞ்சனா.. "ஹா ஹா... ச்சீ லூசு நான் உன்னை சொல்லல.... அதான் நான் உங்கூட இருக்கேன்ல எது எது என்னன்னு உனக்கு நான் சொல்லாமலையா போய்டுவேன்....? முதல்ல நான் சொன்ன ரெண்டு தரப்பினர விடவும் எல்லாத்தையும் கொஞ்சகொஞ்சமா ஒரு ருசி பார்த்துட்டு எது ரொம்ப பிடிச்சி இருக்கோ அதை கடைசியா கொஞ்சம் தட்டுல அதிகம் வெச்சி திருப்தியா சாப்டுட்டு போறவங்களுக்குதான் இந்த புஃப்பே கரெக்ட்டா இருக்கும்...." என்றாள்....

"சரி உனக்கு எது பிடிச்சி இருக்குன்னு சொல்லு.." என்றாள் சஞ்சனா..

"ஹ்ம்ம்.... நமக்கெல்லாம் நாக்குல எது பட்டாலும் உடனே ஜிவ்வுன்னு காரமா இருக்கிறதுதான் வேணும்.... என்று கார்த்திக் சொல்ல "ஹா ஹா.... நீயும் என் ஜாதிதான்... வா.." என்று சொல்லி ஸ்பைசி சில்லி க்ரேவியும் மெத்தென்று இருக்கும் ருமாலி ரொட்டியையும் வைத்து லேசாக மூக்கிலும் கண்களிலும் தண்ணி வரும்விதம் சாப்பிடுவதைப் பார்த்து இருவரும் ஒருவருக்கொருவர் மெதுவாக சிரித்துக் கொண்டார்கள்....

சாப்பிடும்போது ஆரம்பத்தில் கார்த்திக் எப்படி சஞ்சனாவின் தோற்றத்தை ரகசியமாக ரசித்தானோ அதே போல இப்போது சாப்பாட்டில் ஆழ்திருக்கும் அவனை அவனுக்கே தெரியாமல் சஞ்சனா அவன் முகத்தில் தெரியும் ஒரு விதமான வெகுளித்தனத்தயும் வசீகரத்தையும் ரகசியமாக கவனித்து ரசித்தாள். நடுவில் அவனுக்கு சற்று பொரை ஏற.... உடனே அவளது இருக்கையில் இருந்து எழுந்து அவன் பக்கம் வந்து நின்று தலையில் தட்டும்போது அவனை நெருங்கி நின்றாள். அப்போது அவனது முகம் லேசாக அவளது இடுப்பில் உரசியது.. அந்த ஒரு நொடி ஏற்பட்டபட்ட உணர்வு என்ன உணர்வு என்று அவனாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை..ஆனால் அவளுடைய இந்த பரிவும், நட்பும், அரவணைப்பும் அவன் மனதில் ஒரு விதமான சந்தோஷத்தைக் குடுத்தது.... அவளின் கையை தன் தலை மீது பிடித்து "போதும்" என்று சொல்லவந்து அவளுடைய மென்மையான ஸ்பரிசத்தை தொட்டபோது சில நொடிகளில் பொறை தானாகவே நின்றது அவனுக்கு.. அவன் கைகள் தன் கை மீது பட்டபோது அவளும் செயலற்று நின்றாள். இருவரும் ஒருவருக்கொருவர் ஒன்றும் பேசாமல் சில நொடிகள் பார்த்துக்கொண்டிருக்க "ஹஹா.. ஆன்னு வாய திறந்துகிட்டு இருக்காத... ஈ போய்ட போது.. ஃபர்ஸ்ட் வாய க்ளோஸ் பண்ணு..." என்று லேசாக வெட்கத்தில் சிரித்து கண்களை நேராக அவனை பார்ப்பதை தவிர்த்து கீழே பார்த்து அவளது இருக்கைக்கு சென்று அமர்ந்தாள்.." அவளது சிரிப்பை சந்தோஷமாக வைத்த கண் வாங்காமல் பார்த்து வாயை மெதுவாக அசை போட்டுக்கொண்டு இருந்தான் கார்த்திக்....

சற்று நேரத்திருக்கு பின் "சரி வா டெஸர்ட்க்கு போலாம்.." என்று அவள் சொல்ல ஒன்றும் புரியாமல் முழித்தான்.. அதைப் பார்த்து "ஹா ஹா... டெஸர்ட்னா சாப்டு முடிச்ச பிறகு ஜூஸ் இல்லைனா ஐஸ்க்ரீம் போல எடுத்துக்குற வஸ்த்துங்க.. வேணாமா உனக்கு?" என்று சிரித்து கேட்க.. உடனே மடக் மடக் என்று தண்ணியை குடித்துவிட்டு "ஐ கம் யூ குய்க்லி" என்று ஏதோ இங்லீஷ்ல உளற "நீ என்ன சொல்ல வந்த...." என்று புரியாமல் சஞ்சனா கேட்க... "அய்யோ உடனே உன் கூட வரேன்னு சொன்னேன்.... கொஞ்சம் இங்லீஷ் பேசிடக்கூடாதே" என்று வாயில் துணியை வைத்துத் துடைத்துக் கொண்டே அவளுடன் ஐஸ்க்ரீம் பக்கம் சென்றான். வேண்டிய அளவுக்கு இருவரும் ஒன்றிரண்டு ஸ்கூப் வைத்துக் கொண்டு அதை ருசித்துக் கொண்டே அமரலாம் என்று மேஜைக்கு செல்லும்போது "கார்த்திக்... இங்கேயே வேணாம்.. வெளியே லான் நல்லா இருக்கும்.. அங்க போலாம் வா.." என்று சொல்லி ஒரு மிதமான வெளிச்சம் இருக்கும் இடத்தில் நல்ல ஜில்லென்ற காற்று அளவாக அடித்துக்கொண்டிருக்கும் இடத்தில் இருவரும் அருகருகே அமர்ந்தார்கள்.

"கார்த்திக்.... உனக்கு எப்படி ராகவ் க்ளோஸ் ஆனான்...."

"அது பெரிய கதை...."

"சும்மா சொல்லேன்.." அவன் பக்கம் தலை சாய்ந்து சிரித்து கேட்கையில் அவளுடைய சிரிப்பும் கண்களும் காதில் மின்னும் சிறிய அழகான கம்பல்களும் அவனை ஈர்த்தது....

"ஹலோ.. அப்போ அப்போ நீ திடீர்னு ஆஃப் ஆயிடுற.. நான் உன்னை ஆன் செஞ்சி பேச வேண்டியதா இருக்கு...போ...." - என்று சொல்லி செல்லமாய் அவனுடைய தோளில் உரிமையாய் குத்தினாள்.... அவள் நெருக்கத்தில் இருக்கும்போது அவள் மீதிருக்கும் ஒரு விதமான நறுமணம் கார்த்திக்கு பிடித்திருந்தது...
"எனக்கு அவன் மணசு ரொம்ப பிடிக்கும்...." என்று சஞ்சனாவை ரகசியமாக ரசித்துக் கொண்டே பேச தொடங்கினான்....

"எதனால?..." மீண்டும் அதே அழகான சிரிப்புடன் கேட்டாள்...

"எனக்கு ஒரு 7 வயசிருக்கும்..." என்று சொல்லும்போது கீழே ஒரு புல்லை எடுத்து வைத்து காற்றில் சுருள் சுருளாக சுத்தினான்..

"ஹா ஹா ஹா.... போதும் புல்லு தேஞ்சிட போது மேல சொல்லு..." என்று அவன் தோளில் தட்டினாள்...

"நான் ரெண்டாங்கிளாஸ்ல இருந்தப்போ என் பெஞ்சுக்கு பின்னாடி பென்ச்சுல ராகவ் இருந்தான்... அன்னிக்கி நாங்க ரெண்டு பேரும் நல்லா ஒரு கட்டு கட்டிட்டு வந்து எங்க இடத்துல உட்கார்ந்தோம்.... எங்களுக்கு பிடிக்காத கணக்கு வாத்தியார் வந்தப்போ எனக்கு அவசரமா உச்சா வர மாதிரி இருந்துச்சி.... நானும் எழுந்து மரியாதையா "சார்.. நான் போயிட்டு வந்துடுறேன்னு சொன்னேன்.." அவரு "நான் உள்ள வந்துட்டா யாரும் வெளியே போகக் கூடாதுன்னு" சவுண்ட் உட்டாரூ.... நான் திரும்பி எழுந்து நின்னு "சார்... மோசமான நெலமைல இருக்கேன்னு சொன்னேன்... அதுக்கும் அந்த ஆளு ரொம்ப பிகூ பண்ணிகிட்டான் ... அப்புறம் எண்ணத்த செய்ய ஆத்திரத்துல ஒரு மனுஷன் மிரட்ட ஆரம்பிச்சிடுவான்... அந்த மாதிரி கடைசியா நான் அவரை கூப்பிட்டு "சார் இதுக்கு மேல என்னால முடியாது...அப்புறம் இருக்குற இடம் நாறிட்டா என்ன எதுவும் சொல்லாதீங்கன்னு சொன்னேன்..... அதுக்கு என் கிட்ட வந்து 'இன்னொரு தடவ தைரியம் இருந்த பர்மிஷன் கேளுன்னு சொன்னார்....' இதுக்கு என்ன சார் தைரியம் வேணும்?.... வருது சார்... போயிட்டு வந்துடுறேன்னு பாவமா கெஞ்சி கேட்டேன். அதுக்கு அவர் பிரம்பை எடுத்து ஓங்கி அடிக்க வந்தாரு.. அப்போ என் ரெண்டு கண்ணையும் இறுக்கி மூடிட்டு நின்னேன்.... கொஞ்ச நேரம் எந்த சத்தத்தையும் காணும்.. அப்போ ஒரு கண்ணை மட்டும் மெதுவா திறந்து பார்த்தேன்... எல்லாரும் என்னை சுத்தி ஒரு அஞ்சு அடி டிஸ்டன்ஸ்ல நின்னாங்க.... கீழ என்னோட சொந்த அருவி ஓடிட்டு இருந்துச்சி...." என்று அவன் சொல்லி முடிக்க... "ஹா ஹாஹ் ஹா.... ச்சீ.... நாட்டி பாய்....." என்று சில நொடிகள் சிரித்தாள் சஞ்சனா...

அந்த சம்பவம் நடந்து முடிஞ்ச பிறகு என் கூட பையனுங்களும் சரி பொண்ணுங்களும் சரி ஒரு வாரத்துக்கு பேசவே இல்ல.... அப்போ ஒரு நாள் இந்த எனிமி என் கிட்ட வந்து "டேய் கார்த்தி.... எல்லாரும் சில விஷயங்கள சொல்லத்தான் டா செய்வாங்க.. ஆனா யாரும் செயல்ல காமிக்க மாட்டாங்க... ஆனா நீ அன்னிக்கி தைரியமா நம்ம வாத்தி கிட்ட சொன்னதை எல்லார் முன்னாடியும் செஞ்சி காமிச்ச வீரண்டானு சொல்லி என் மனசுல முதல் முதல்ல ஒரு உயரிய இடத்தை பிடிச்சான்.... அதுக்கப்புறம் எந்த ஒரு விஷயத்துலயும் நானும் அவனும் சேர்ந்துதான் இருப்போம்... அவனும் யார் யார் கூடவோ பழகி இருக்கான்.. ஆனால் யாருமே அவனை சரியா புரிஞ்சிக்காம விட்டுட்டு போய்டுவாங்க... நானும் பலரோட பழகி இருக்கேன்... ஆனா யாருமே என் ஆழ் மனசை ராகவ் அளவுக்கு புரிஞ்சி பழகினது இல்ல.... அதெல்லாம் விட அவன் காலேஜ் படிக்கும்போது அவனுக்கு வீட்டுல முதல் ரெண்டு வருஷம் ஃபீஸ் கூட குடுக்கல... அவனுக்கு பண கஷ்டம்னா என்னன்னு காமிக்க அவன் அப்பா அவனை முடிஞ்சா படிச்சி வெளியே வா அப்படின்னு சொல்லி சவால் விட்டாரு.. அப்போ ஹின்துஸ்த்தான் லீவர் நிறுவனத்துல ஒரு உறுப்பினரா சேர்ந்து அவங்களோட ப்ராடக்ட்ஸ் எல்லாத்தையும் ஜனங்க கிட்ட கொண்டு போய் பேசி பேசியே சூப்பரா மார்கெட்டிங் பண்ணுவான்... அதுக்கு நிறைய யுக்திகளை பயன்படுத்தினான்.. ஆன எப்படின்னு யார் கேட்டாலும் ரகசியம்னு சொல்லிட்டு கண் அடிச்சி சிரிச்சிட்டு போய்டுவான்.. "இவன் கிட்ட இருக்குற இந்த மார்கெட்டிங் திறமையை பார்த்துட்டுதான் கம்பனியில கூட இப்போ இவன் இருக்குற பதவிக்கு என்னதான் இவன் சின்ன வயசு பையன்னாலும் லாபம் கெட்டுடக் கூடாதேன்னு நினைச்சி இவனை யாரும் கேள்வி கேக்குறதில்ல.. இவனுக்கு ரெண்டு அண்ணனுங்களும் இருக்காங்க தெரியுமா?.." என்று கார்த்திக் கூலாக சொல்ல "என்ன சொல்லுற?..." என்றாள் சஞ்சனா.. ஹ்ம்ம்.. இருக்காங்க... ஆனா வெளி நாட்டுல படிக்குறாங்க.. நம்ம தலைவர் இங்க வேலை செஞ்சி செஞ்சி கம்பெனி லாபத்தை பெருக்குவாறு.. அவனுங்க படிப்பானுங்க... கூடவே செலவு செஞ்சி ஊரும் சுத்துவானுங்க.. அவங்களும் கம்பெனிக்கு போர்டு ஆஃப் மெம்பர்ஸ்.. சரி அதை விடுங்க.. நான் மேட்டருக்கு வரேன்.. ஒரு வருஷம் முழுக்க ரொம்ப திறமையா பல ஹின்துஸ்தான் லீவர் பொருள் எல்லாத்தையும் வித்து அதுல அவனுக்கு கிடைச்ச கமிஷன் வெச்சி அவன் படிப்புக்கு முதல் ரெண்டு வருஷம் அவனே செலவு செஞ்சிக்கிட்டான்.. அது போக மீதி அவன் கிட்ட ஒரு நாப்பதாயிரத்துக்கு பணம் இருந்துச்சி... அப்போ அதை வெச்சி ஒரு சூப்பரான பைக் வாங்கனும்னு ஆசை பட்டான்... அப்படி இருக்கும்போது எனக்கு வீட்டுல கொஞ்சம் பணம் தட்டுப் பாடு... காலேஜ் முடிக்குற நேரத்துல எனக்கு ஒரு செமெஸ்டர் பாக்கி இருந்துச்சி.. அதுக்கு ஃபீஸ் கட்ட பணம் இல்லாம தவிச்சப்போ தலைவர் வந்து பணத்தை நீட்டினார்... அதுலதான் இன்னிக்கி வரைக்கும் என் வாழ்க்கை சக்கரம் ஓடிட்டு இருக்கு. இல்லைனா அன்னிக்கே பஞ்சர் ஆகி இருக்கும்... சுருக்கமா சொல்லனும்னா எங்க நட்பு டயருக்கு ஏத்த வீலா அமைஞ்சி இருக்கு...." என்று படபடவென பேசி முடித்தான்

"ஹா ஹா.... வாவ்.... உங்க நட்பை பார்க்கும்போது எனக்கே பொறாமையா இருக்கு.... எனக்கு அப்படி யாரும் இல்ல கார்த்திக்..." - என்று அவள் சொல்லும்போது அவளின் குரலில் ஒரு விரக்தி இருப்பதை உணர்ந்தான் கார்த்திக்....

ஏன் என்ன ஆச்சு?" என்றான் பணிவாக...

"அவளிடம் இருந்து ஒரு நீண்ட மௌனம்...."

"சொல்ல விருப்பம் இல்லையா? இல்ல...." - என்று கார்த்திக் பேசும்போது சஞ்சனா பேச ஆரம்பித்தாள்....

"எல்லாத்தையும் சொல்லணும்னு விரும்புறேன்... என் மனசுல இருக்குற குப்பைகள கொட்டனும்னு நினைக்கிறேன்.." சொல்லும்போது அவள் கண்கள் ஒரு விதமான ஏக்கத்தில் இருப்பதை உணர்ந்தான் கார்த்திக்.

உரிமையாக அவளின் தோள்கள் மீது கை வைத்து அவளை நிமிர்த்தி உட்காரவைத்து "எல்லாத்தையும் கொட்டு... வாங்கிக்குறதுக்கு இந்த ஓனிக்ஸ் லாரி இப்போ ஓப்பனா இருக்கு... கம் ஆன்.... ஸ்டார்ட்" என்று அவன் சொல்ல.. "ஹா ஹா..." என்று கொஞ்சம் சோகம் கலந்த கண்களுடன் சிரித்தாள்.

பல நேரத்துல ஏன்தான் பொண்ணா பொறந்தேனொன்னு கஷ்டமா இருக்கும் கார்த்திக்.... அந்த அளவுக்கு நிறைய வலிகளை அனுபவிச்சி இருக்கேன்..சின்ன வயசுல இருந்தே எந்த காரியத்துலயும் நல்லா வெறியோட இறங்குவேன்.. எல்லாத்துலயும் ஜெயிப்பேன்... போக போக குடும்ப வறுமை, அப்புறம் எங்க மாமாதான் என்னை ஃபேஷன் டிசைனிங் படிக்க வெச்சி சம்பாதிக்குற அளவுக்கு கொண்டு வந்தாரு. அப்பாவோட நடத்தகெட்ட காரியங்களால எங்க அம்மாவுக்கு நெஞ்சழுத்தம் அதிகம் ஆச்சு... நான் ஸ்கூல் படிக்கும்போதே அந்த கஷ்டத்துல உடம்பு பாதிச்சி சரியான மருந்து மாத்திரை கூட இல்லாம கஷ்டப் பட்டாங்க... "ஹ்ம்ம்.." பேசும்போது திடீரென கொஞ்சம் அமைதியாகி கண்களில் லேசாக கண்ணீர் எட்டும்போது மீண்டும் பேசினாள்.. ஒரு நாள் காலைல நான் ஸ்கூலுக்கு கிளம்பிட்டு இருந்தேன்.. நான் அப்போ வயசுக்கு வந்து ஒரு வாரம் முடிஞ்சி இருந்துச்சி.. ஒரு ஒரு நாளும் காலைல என் அம்மா என் முகத்தைப் பார்த்து 'இப்போதாண்டா உன்னை பெத்தெடுத்தா மாதிரி இருக்கு அதுக்குள்ள வளர்ந்துட்ட..' அப்படின்னு சொல்லி சொல்லி முத்தம் குடுத்துட்டு அனுப்பி வெப்பாங்க.. அப்போ எல்லாம் நேரம் ஆகுதும்மா நான் ஸ்கூலுக்கு போகனும்னு சொல்லி சலிச்சிகிட்டே அவங்க கையை ஓதரிட்டு ஓடிடுவேன்.." பேசும்போது கண்களில் வரும் கண்ணீரை கட்டுப் படுத்த முடியாமல் மெதுவாக அழுதாள்.... "இப்படி ஒரு நாள் காலைல நான் கிளம்பும்போது இதே மாதிரி முத்தம் குடுத்துட்டு அனுப்பி வெச்சாங்க...அப்புறம் சாயந்தரம் சாவகாசமா ரோட் சைட்ல விக்குற ஐஸ் எல்லாம் வாங்கி சாப்ட்டுட்டே எதுவும் புரியாம வீட்டுக்கு வந்துட்டே இருந்தேன்.... காலைல கிளம்புற அவசரத்துல என் அம்மாவோட முத்தத்துல கிடைக்குற அன்பை அனுபவிக்க நேரம் பார்ப்பேனே தவிர வீட்டுக்கு வந்துட்டா கிழவிங்க பேசுறா மாதிரி எல்லாத்த பத்தியும் பேசிகிட்டு அவங்க மடியிலதான் கிடப்பேன்.. அன்னிக்கி சாயந்தரம் வீட்டுக்கு வந்து பார்த்தா யாருமே இல்ல... பக்கத்துலயும் யாரும் இல்ல... கொஞ்ச நேரம் எல்லாரும் எங்கயோ வெளியே போய் இருக்காங்கன்னு நினைச்சி படுத்துட்டேன்.. அப்புறம்தான் வீட்டுக்கு எல்லாரும் கொஞ்சம் தொங்க போட்ட முகத்தோட வரும்போது 'காலைல நெஞ்சு வலின்னு உங்கம்மா துடிச்சிதும்மா.... ஆஸ்பெத்ரிக்கு எடுத்துட்டு போனோம்... பாவிமவ இன்னும் கொஞ்ச காலம் இருக்குறதுக்கு கூட குடுத்து வெக்கல போய் சேர்ந்துட்டான்னு' சொன்னாங்க.." சொல்லி முடித்த பிறகு ஒன்றும் பேசாமல் மெளனமாக இருந்தாள்.. அவளின் உதடுகள் விம்மியதை கவனித்தான் கார்த்திக்.. அவள் வாயில் இருந்து வார்த்தைகள் வர கஷ்டப்பட்டது.

"ஏய்ய்.. சஞ்சனா.. ரிலாக்ஸ்... ப்ளீஸ் ரிலாக்ஸ்...." - என்று கார்த்திக் சொல்ல.... "சாரி டா... கொஞ்சம் எமோஷ்னல் ஆய்டேன்..." என்று தன் கர்சீஃப் வைத்து கண்களை துடைத்துகொண்டாள்

உரிமையாய் மெதுவாக அவனிடம் நெருங்கி வந்து "இஃப் யூ டோன்ட் மைன்ட்" என்று சொல்லி அவனின் தோள்களில் சாய்ந்தாள் சஞ்சனா.. அவள் சாயும்போது ஒருவிதமான நெருக்கம் இவளுடன் உருவாவதை மனதுக்குள் ரகசியமாய் உணர்ந்தான் கார்த்திக். "அடுத்த நாள் காலைல எந்திரிச்சி ஸ்கூலுக்கு கிளம்பும்போது... இஸ்ஷ்" என்று மூக்கை உறிந்து கொண்டே பேசினாள்.. "கிளம்பும்போது அ.. அம்மா..உன் முத்தத்த குடுமா .... எனக்கு ஸ்கூலுக்கு எவ்வளோ லேட் ஆனாலும் பரவாலமானு சொல்லி சொல்லி தனியா உட்கார்ந்து அழுது தேம்பி புலம்பி இருக்கேன்.... அந்த இழப்பு என் உயிர்ல பாதி போனா மாதிரி இருந்துச்சி. அப்புறம் தான் என் வாழ்க்கைல ஒரு தருத்திரம் வந்துச்சி" என்று ஆரம்பித்து மித்துனை சந்தித்ததையும் அவனால் ஆரம்பத்தில் எப்படி அவள் தன் பெண்மையை இழந்தாள் என்பதையும், அதன் பிறகு எப்படி சங்கீதாவை தன் சொந்த அக்காவாக பார்த்தாள் என்பதையும், எப்படி ராகவ் அவளுக்கு வாழ்க்கையில் ஒரு ப்ரேக் குடுத்தான் என்பதையும் சொல்லி முடிக்கும்போது அவள் கண்களில் இருந்த கண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக காய ஆரம்பித்து மீண்டும் பழைய சஞ்சனாவாக சகஜ நிலைக்கு திரும்பினாள்.

"கார்த்திக்..."

"ஹ்ம்ம்.. சொல்லு சஞ்சனா.." என்றான்...

மிதுன் விஷயங்கள் அனைத்தையும் சொன்னதை எண்ணி மெதுவாக பேச ஆரம்பித்தாள் சஞ்சனா.... "ஒரு பொண்ணா நான் சில விஷயங்களை உன் கிட்ட இப்படி வெளிப்படையா வெட்கத்தை விட்டு சொல்லி இருக்க கூடாது... இருந்தாலும் உன் கிட்ட எனக்கு கிடைச்ச நட்புல எல்லாத்தையும் போட்டு உடைச்சிட்டேன்.. என் மனசுல நிஜமாவே கொஞ்சம் பாரம் இறக்கி வெச்ச உணர்வு இருக்குடா.." என்று சொல்லி அவன் கைகளை இன்னும் கொஞ்சம் இருக்கி பிடித்து அவன் தோள்களில் சாயும்போது "அந்த மிதுன் உன் கிட்ட நடந்த விதத்தை கேட்டப்போ அவன் மேல நிஜமாவே எனக்கு கொலவெறி வந்தது... ஆனா அதுக்கப்புறம் நீ அவனுக்கு திருப்பி குடுத்ததை கேட்டப்போ..." என்று கொஞ்சம் என்று நிறுத்தினான்.. "கேட்டப்போ?" என்று சொல்லி அவனை சஞ்சனா நிமிர்ந்து பார்த்தாள்.. "உன் மேல பயம் வந்தது..." என்று மெதுவாய் சொல்ல "ஹாஹ் ஹா...." என்று சிரித்து அவன் தோள்களில் குறும்பாய் குத்தினாள் சஞ்சனா.

அவன் முகம் சட்டென்று ஏதோ எண்ணிக்கொண்டிருக்கிறது என்று சஞ்சனாவுக்கு தெரிந்தது...

"சஞ்சனா.."

"சொல்லுடா.."

அவன் கொஞ்சம் சொல்ல தயங்கினான்.... அதை புரிந்துகொண்டு "ஹ்ம்ம் சொல்லு என்ன கேக்க வந்த.."

ஒன்னும் இல்ல... ரெண்டு தடவ அந்த மிதுன் கூட உனக்கு ஏற்பட்ட சமபவத்தப்போ.. உ... உனக்கு..

கார்த்திக் கைகள் மீது இருக்கி பிடித்த தன் கைகளை தளர்த்திக் கொண்டாள்.. காரணம் இதற்கு முன் சஞ்சனா தன்னிடம் பழகும் உண்மையான ஓரிரு நண்பர்களிடம் இதை சொன்னபோது இவளின் ஆழ் மனதை புரிந்துகொள்ளாமல் மேலோட்டமாக கேட்டுவிட்டு இவளை எளிதில் சீஃப்பாக நினைத்து விடுவார்கள். அதே போல இவனும் ஏதாவது சொல்ல வருகிறானோ என்று எண்ணி மனதை கல்லாக்கிக் கொண்டு பேசினாள்.. "பரவயில்ல கார்த்திக் சொல்லு...."

உன் ஒடம்பு அப்போ ரொம்ப வலிச்சிதா? ஏதாவது ரொம்ப ஓவரா பிஹேவ் பண்ணி உனக்கு காயம் உண்டு பன்னானா? நான் இப்படி கேக்குறது தப்பா சரியான்னு தெரியாது.... தோணுச்சி அதான் கேட்டேன்.... தப்புன்னா மன்னிச்சிடு....

இதற்கு முன்பு எந்த ஒரு ஃபிரன்டும்.... அதிலும் குறிப்பாக ஒரு ஆண், மிதுன் சம்பவத்தை கேட்ட பிறகு இப்படி ஒரு கேள்வியை சஞ்சனாவிடம் கேட்டதில்லை. பொதுவாக "மொத்தமா முடிஞ்சிடுச்சா?.... அபார்ஷன் பணிட்டியா?.... அல்லது சோ சாட்.. காட் ப்ளஸ் யூ.... என்று கொஞ்சம் நாகரீகமாக சொல்லிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவளுடன் பேசுவதை குறைத்து ஒரு கட்டத்தில் காணாமல் போய் விடுவார்கள். ஆனால் கார்த்திக்கின் இந்த கேள்வியில் அவளால் உணர முடிந்ததெல்லாம் அவனுடைய உண்மையான அக்கறையான உணர்வைத்தான்.

"கார்த்திக்.. "

"ஹ்ம்ம்.. சொல்லு..."

"மீதுன் பத்தி நான் சொன்னப்போ நீ என்னை கொஞ்சம் கூட தப்பா நினைக்கல?"

"வெகுளியா எல்லா பசங்களையும் நம்புற புள்ளையா இருக்காளேன்னு பாவப்பட்டேன்.." என்றான்....

"கோவம் வரல?.... எப்படி இவ்வளோ அஜாக்ரதயா ஒரு பையனோட போய் டிஸ்கோ ஆடினா அப்படின்னு தோணல?" ஆச்சர்யம் குறையாமல் கேட்டாள் சஞ்சனா..

"வெறும் டிஸ்கோவுக்கு போய் ஒரு பையன் கூட அந்த சுகத்தை மட்டும் அனுபவிக்குற பொண்ணுங்க இருக்காங்க.... ஆனா உன் கிட்ட அந்த குணாதிசயத்த பார்க்க முடியல..

எப்படி சொல்லுற?

காலைல எக்ஸிபிஷன்ல நீ என் கூட பேசின விதம், அப்புறம் புஃப்பேல நான் சாப்பிடும்போது கஷ்ட்டப் பட்டப்போ எனக்கு உதவின விதம், உன் இயல்பான பேச்சு, அப்புறம் எனக்கு பொறை ஏரினப்போ அக்கறையா தலையில தடவினது, அதெல்லாத்தையும் விட உன் மனசுல இருக்குற எல்லாத்தையும் ஒளிவுமறைவில்லாம உண்மையா ஷேர் பண்ண விதம்.... அதுலயும் ரொம்ப முக்கியமா உன் தன்மானம் சம்மந்த பட்ட விஷயத்தையும் கூட ரொம்ப உண்மையா என் கிட்ட பகிர்ந்தப்போ என் கிட்ட இப்படி உண்மையா பழகுறதுக்கு ஒருத்தி கிடைச்சிருக்காளேன்னு எனக்குள்ள நினைச்சேனே தவிர உன் மேல கோவம் வரல.... என்று கார்த்திக் பேசும்போது அவன் பேச்சில் உள்ள உண்மையை அவன் கண்களில் பார்த்து தெரிந்து கொண்டாள் சஞ்சனா..

இப்போது கார்த்திக்கின் கைகளில் இருந்து தளர்த்தி வைத்திருந்த தன் கைகளை மீண்டும் இருக்கி அணைத்துக் கொண்டு "கார்த்திக்..." என்று அவன் தோள்களில் சாய்ந்து மெதுவாக சொல்ல..

சொல்லு சஞ்சனா.. என்றான்..

ரொம்ப நாளுக்கு பிறகு.. இன்னைக்கிதான் என் வாழ்க்கைல பெஸ்ட் டே னு சொல்ல தோணுது..

ஒஹ்...

ஏன்னு கேக்க மாட்டியா?

ஏன்?

உன்ன பார்த்ததுல ரொம்ப சந்தோஷப் படுறேன்.. இன்னைக்கி வரைக்கும் இவ்வளோ வித்யாசமா நான் ஃபீல் பண்ணதில்லடா... ஐ அம் சோ ஹாப்பி.... என்று சொல்லிவிட்டு அவன் முகத்தைப் பார்த்தப்போது அவனின் கண்கள் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தது...

எண்ணத்த அப்படி பார்க்குரான்னு சஞ்சனா திரும்பி பார்க்கையில அங்கே ஒரு வெளிநாட்டு பெண் நீச்சல் உடையில் நீந்துவதற்கு தாயார் நிலையில் இருந்தாள்.. நம் தலைவர் வாத்தின் காதுகள் சஞ்சனா பேசுவதைக் கேக்கையில் கண்கள் அந்த பெண்ணின் மீது ஓட்டி இருந்திருக்கிறது.. அதைப் பார்த்த சஞ்சனா.. வெடுக்கென உரிமையில் கோவித்துக் கொண்டு அவன் தலையில் செல்லமாக தட்டிவிட்டு அங்கிருந்து விறு விறுவென நடக்க ஆரம்பித்தாள். அப்போது கார்த்திக் சற்று முன் சஞ்சனா சொன்ன வார்த்தைகளை சொன்னான்..

உன்ன பார்த்ததுல ரொம்ப சந்தோஷப் படுறேன்..

அதே வேகத்துடன்..நடந்தாள்

இன்னைக்கி வரைக்கும் இவ்வளோ வித்யாசமா நான் ஃபீல் பன்னதில்ல....

கொஞ்சம் வேகம் குறைவாக நடந்தாள்....

ஐ அம் சோ ஹாப்பி.... - என்று கத்தினான்....

இப்போது சாதாரணமாக நடக்க ஆரம்பித்தாள்...

"ஏய்ய் சஞ்சு...." என்று கடைசியாய் அவன் கத்திய குரலைக் கேட்டு சடன் ப்ரேக் போட்டு நின்றாள். அவள் பெயரை சுருக்கி செல்லமாக சஞ்சு என்று கார்த்திக் அழைத்தது அவள் மனதில் ஒரு விதமான கிச்சி கிச்சு கலந்த சந்தோஷத்தை குடுத்தது... அவனை திரும்பி பார்த்து நின்றாள்... "நமக்கு கூட வெட்கம் வருதே....."ன்னு மனதில் ரகசியமாக எண்ணி அதை முடிந்த வறை காட்டிக் கொள்ளாமல் வேகமாக அவனை நோக்கி நடந்து வந்தாள்.... அவள் வேகத்துக்கு ஏற்ப அவன் பின்னாடி நகர்ந்து சென்றான்... ஒரு கட்டத்தில் நின்றான் கார்த்திக்... "கோவமா?.. " என்று அவன் கேட்க... "இல்ல..." என்று சிரித்து சொல்லி அவனை அப்படியே பின்னாடி இருக்கும் நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டு "அவ கிட்ட உட்கார்ந்து பேசு..." என்று சொல்லி மெதுவாக சிரித்துக் கொண்டே அங்கிருந்து வேகமாக நடந்து தன் அறைக்கு சென்றாள்....

இப்போது ரகாவின் அறையில்....

தனியாக தனது அறையில் மேஜையின் முன் அமர்ந்து ஒரு காயின் வைத்து டாஸ் போட்டு போட்டு காற்றில் சுழலவிட்டு கையில் பிடித்து ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருந்தான் ராகவ்.. மீண்டும் காய்ன் காற்றில் மேலே சுழன்றது.... திடீரென ஏதோ ஒரு சிந்தனை அவனைப் பிடித்து அப்படியே நிறுத்தியது... உடனே தனது செல்ஃபோன் எடுத்தான். அதில் ராஜேந்திரனுக்கு ஃபோன் போட்டான்..

ஹலோ சார்.. சொல்லுங்க என்ன இந்த நேரத்துக்கு..

உங்க கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்..

சொல்லுங்க ராகவ்....

அமைதியாய் இருந்தான் ராகவ்....

என்ன கேக்க போறீங்க? - கொஞ்சம் பதட்டத்துடன் கேட்டார் இன்ஸ்பெக்டர்..

மீண்டும் அமைதியாய் இருந்தான் ராகவ்..

அதான் அவனை எப்படியும் பிடிச்சிடலாம்னு சொன்னேனே சார்.. நீங்க கவலைய விடுங்க.. - என்று நம்பிக்கை தரும்விதம் பேச முயற்சித்தார் இன்ஸ்பெக்டர்...

இப்போதும் அமைதியாய் இருந்தான் ராகவ்....

சார்.... இருக்கீங்களா?...

யார் கிட்ட எவ்வளோ காசு வாங்கின?.... - சற்று மெதுவான குரலில் கையில் இருக்கும் காய்னை மீண்டும் காற்றில் டாஸ் போட்டுக் கொண்டே பேசினான்..

என்ன காசு.... என்ன பேசுறீங்க?....

சப்.... ஒழுங்க உண்மைய சொல்லு.... யார் கிட்ட எவ்வளோ காசு வாங்குன?

என்ன நீ வா போ னு மரியாதை தேயுது...

கோவத்தில் மீண்டும் அமைதியாய் இருந்தான் ராகவ்

ஹலோ.... வாட் இஸ் யுவர் இன்டென்ஷன் ராகவ்?....

மரியாதையா யார் கிட்ட எவ்வளோ வாங்குனன்னு சொல்லுடா....

ஹலோ.. என்ன டா போட்டு பேசுற?...

ராகவ் ஒன்றும் பேசவில்லை

இன்ஸ்பெக்டர் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு "சரி.. எதுக்கு இப்போ மரியாத குறைவா பேசுறீங்க?" என்று அவர் கொஞ்சம் மரியாதையாக(பயத்தில்) பேசினார்....

என்னை கடுப்பேத்தி பாக்காத... ஒழுங்கா உண்மைய சொல்லு... என்னை யாரும் முதுகுல குத்தினா பிடிக்காது.

இன்ஸ்பெக்டர் அமைதியா இருந்தார்...

நீ ஒன்னும் பேசாம இருக்குறதுலையே தெரியுது நீ தப்பு பண்ணி இருக்கேன்னு... ஒழுங்கா உண்மைய சொல்லு...

எதை வெச்சி நாங்க என்னமோ வேணும்னே அவனை தப்பிக்க விட்ட மாதிரி பேசுறீங்க?

என்ட்ரன்ஸ்ல உன்னோட ஆளுங்க மஃப்டியில ரெண்டு பெர் அவனை பிடிக்க முயற்சி செஞ்சப்போ ஒருத்தன் பிடிக்கிறா மாதிரி பிடிச்சி தப்பிகிறவன் கையால அடி வாங்குற மாதிரி வாங்கி ரொம்ப எதார்த்தமா வலிக்கிற மாதிரி நடிச்சி அவனை ஓட விட்டத நான் கவனிச்சேன்...

இன்ஸ்பெக்டர் அமைதியாய் இருந்தார்...

சார்... வ.. வந்து....

நான் உனக்கு ஒன்னும் ஆகாம பார்த்துப்பேன்... என் மேல நம்பிக்க வெச்சி உண்மைய சொல்லு..

காசு வாங்கல சார்.... ஆனா ரயில்வே டேஷனுக்கு வர்றதுக்கு முன்னாடி ஒரு கடுதாசி வந்துச்சி... அதுல ராகவ் இழுக்குற இழுப்புக்கெல்லாம் நீ ஆட்டம் போட்டா காலேஜ்ல படிக்குற உன் பொண்ணயும் ஸ்கூல் போற உன் பையனையும், அம்மா வீட்டுல தங்கி இருக்குற உன் பொஞ்சாதியையும் ஒரே நேரத்துல

பொணமா பார்ப்ப... எப்படின்னு கேக்காத எனக்கு ஆளுங்க இருக்காங்க.. தைரியம் இருந்தா சோதிச்சி பாருன்னு போட்டிருந்துச்சி சார்.. அப்படியே கீழ துரை கையெழுத்து போட்டிருந்துச்சி... உண்மைய ஒத்துக்குறேன் அந்த கடுதாசிய மீறி உங்களுக்கு உதவி செய்ய எனக்கு தைரியம் வரல சார்.. என்னை விட்டுடுங்க சார்.. உங்களுக்கு இல்லாத ஆளுங்க இல்ல
வேற யாரையாவது வெச்சி பார்த்துக்கோங்க... என்னை விட்டுடுங்க என்று சொல்லிவிட்டு ராகவின் பதில் என்னவென்று கூட கேட்காமல் உடனே லைன் கட் செய்தார் ராஜேந்திரன்....No comments:

Post a comment