Thursday 5 November 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 25



பொதுவாகவே பலருடைய மனதில் இருக்கும் Paradox psychological thinking இது, அதாவது சில விஷயங்களை ப் பொருத்தவரை நாம் அதில் இறங்கினால் நம்மை மிஞ்ச ஆள் கிடையாது என்று ஒரு சுய விமர்சனத்தை ஏற்கனவே நமது மணம் முடிவு செய்து வைத்திருக்கும். அப்படி இருக்க, அதை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் பல நிகழ்ந்தும் நாம் அதை inhibition (காரணமில்லா புறக்கணிப்பு (அல்லது) தடைக் கட்டு) காரணமாக பயன் படுத்திக்கொள்ள மறுத்து விட்டோம் என்றால் மனதில் "Regrets" என்கிற வில்லன் வீடு கட்டி தங்கி permanent ஆக இருந்து விடுவான். "சின்ன விஷயத்துக்கு தானே regrets" என்று ஒரு புறம் மனதை நாம் என்னதான் தடவிக்குடுத்து பொய் சொல்லி சமாலித்தாலும், அது அவ்வபோழுது எட்டி பார்த்து நம்மை மிருகம் போல கவ்வும். எந்த ஒரு தனிப்பட்ட விஷயத்துக்கு regrets இருக்ககூடாது என்று நம் மணம் அழுத்தமாக சிந்திக்கிறதோ அவ்வளவு அழுத்தமாக அந்த குறிப்பிட்ட காரியத்தை செய்ய வேண்டுமென்று நம்முடைய மனது வார்த்தைகள் இல்லாமல் மெளனமாக ஏங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அப்படி தத்தளித்துக் கொண்டிருந்தது சங்கீதாவின் மனது. இது போன்ற மண ஓட்டங்களை கண்களாலேயே பார்த்து படித்து விடுவதில் ராகவ் கில்லாடி.
சங்கீதா சில உணர்வுகளை மனதுக்குள் என்னதான் அழுத்தமாக மூடி மறைத்து வைத்தாலும் ராகவ் மட்டும் எப்படித்தான் அவைகளை சாவி போட்டு திறந்து பார்க்கிறானோ என்று மனதில் அவளுக்கு ஒரு ரகசிய ஆச்சர்யம். கூடவே அவன் பேசும் வார்த்தைகளும் அந்த குரலுக்கும் அந்த (power of convincing) சக்தி உண்டு என்பதும் அவளுக்கு நன்றாக தெரியும்.

சங்கீதா, you are the best, I am confident you can do this very well. இருக்குற மொத்த function time ல stage time occupay பண்ணுறது highly demanding stuff. மத்த performers எல்லாம் அடிச்சிக்குறாங்க. இப்போ கூட நான் எனக்கு தெரிஞ்சவங்க என்கிற முறைல உங்க கிட்ட வந்து இதை கேட்கல. உங்க கிட்ட உண்மையாவே திறமை இருக்கும் னு எனக்குள்ள ஒரு confidence இருந்துச்சி. கூடவே dance is something which should be pleasure for others to watch. actually இன்னைக்கி kala மாஸ்டர் book பண்ணி இருந்த dancer னால வர முடியல. அப்போதான் அவங்க அந்த 10 minutes slot ல வேற ஏதாவது program list ல exculde பண்ணி இருந்தா include பண்ணிக்கோங்க னு சொன்னாங்க. அப்போதான் நான் உங்களை மனசுல வெச்சி பார்த்தேன். உங்களை காமிக்குறேன்னு சொல்லி இவங்களை கூட்டிக்குட்டு வந்தேன் & you know she was pleased to see you. யாரையும் இவங்க சுலபத்துல ok னு சொல்லிட மாட்டாங்க. இப்போ கூட உங்களை கட்டாய படுத்தல. அந்த dancer க்கு பதிலா வேற யாரவது இருக்காங்களா னு ஒரு தடவ யோசிக்கிறோம், அப்படி இல்லேன்னா last option உங்க கிட்ட வந்து request பண்ணுறோம். - என்று ராகவ் சொல்லும்போது "last option" என்ற வார்த்தையை சங்கீதா விரும்பவில்லை, கூடவே அவள் மனது கிட்டத்தட்ட 80% இதை செய்ய வேண்டுமென்றும் உள்ளுக்குள் மெளனமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தது.

ராகவ் ஒரு புறம் யாருக்கோ phone செய்துகொண்டிருக்க "Raghav one minute.." - என்றாள் சங்கீதா.

சொல்லுங்க சங்கீதா....

.....இஸ்ஹ்ம்ம்.....(சத்தமின்றி மூச்சு விட்டு கொஞ்சம் மெளனமாக தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் )

என்ன ஆச்சு சங்கீதா? சொல்லுங்க....

I am fine Raghav.... - ரகாவின் கண்களை நேருக்கு நேர் பார்த்து அழுத்தமாக சொன்னாள் சங்கீதா (மனதுக்குள் "what may come, let it come but I will not have anymore regrets என்று தனது சிந்தனையில் தெளிவானாள் சங்கீதா)

சங்கீதா.. I admire your courage, this is what real sangeetha is.... - என்று ராகவ் சிலிர்த்தான்.


நான் பேசி இருந்தாள் கூட உங்களை convince பண்ணி இருக்க முடியுமான்னு தெரியல, but Mr.Raghav did it seemlessly (பக்காவாக) - என்றாள் நடன இயக்குனர் கலா.

This is dressing room right, நான் கொஞ்சம் உள்ளே வரலாம் இல்ல? - என்று கலா தயங்கி க் கேட்க, ராகவ் அங்கிருந்து நாகரீகம் காக்க மெதுவாக நகர்ந்து சென்றான். ராகவ் அங்கிருந்து நடந்து செல்கையில் ஒரு நொடி சங்கீதாவை திரும்பி ப் பார்த்தான், சங்கீதாவின் கண்கள் அவளின் அனுமதி இன்றி ரகாவின் கண்களையே நோக்கியது. அப்படிப்பட்ட ஒரு hypnotic eyes ராகவ்னுடயது.

dressing room உள்ளே வந்த கலாவைப் பார்த்து நிர்மலா, ரம்யா, ஆகியோருக்கு ஆச்சர்யம். சஞ்சனாவுக்கு IOFI award விழாவுக்கு celebreties வருவதில் ஆச்சர்யம் இல்லை, ஏன் என்றாள் ஏற்கனவே நிறைய ப் பேரைப் பார்த்து இருக்கிறாள்.

கலா சங்கீதாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு "Its going to be very simple and நீங்க மட்டும் solo dance performance பண்ண போறீங்க. உங்க கூட வேற எந்த model ம் ஆடப் போறதில்ல" - என்றாள் கலா..

இதைக் கேட்டு ரம்யாவும், நிர்மலாவும் ஒரு நொடி ஆச்சர்யமானார்கள், சஞ்சனா excitement உச்சத்துக்கு போய் "Is our Sangee going to do dance on stage... woooowwwww" - என்று அதிக சத்தத்தில் அடித்தொண்டையில் இருந்து சத்தம் வரும் விதம் கத்தினாள். ரம்யா சங்கீதாவின் அருகில் வந்து "இன்னைக்கி வரைக்கும் நல்ல படியா பொழப்பை ஒட்டிக்குட்டு இருக்கும் பல heroines இந்த நடனத்தைப் பார்த்தால் மடியில நெருப்பை கட்டிக்குவாங்க." என்று பெருமிதம் கொண்டு புகழ்ந்தாள். அப்போது கலா குறுக்கிட்டு ஒரு ஆச்சர்யமான விஷயத்தை சொன்னாள் "இன்னைக்கி உண்மையிலேயே சினிமா உலக ஜாம்பவான்கள் வருவார்கள்.... only selected few heros & 4 legends are coming" என்றாள் கால.. இதைக் கேட்டு shock ஆனால் சங்கீதா... ரம்யவும்தான்... ஏதோ விளையாட்டுக்கு சொன்னது நிஜமாக நடக்கப் போகிறதே என்று எண்ணி அவளும் shock ஆனாள்.

சஞ்சனாவுக்கு யார் யார் வரப்போகிறார்கள் என்று தெரிந்திருந்தும் சங்கீதாவிடம் கூறவில்லை, ஏன் என்றால் நீண்ட நாட்களுக்கு பிறகு முதல் முதலாய் ஒரு மிகப்பெரிய stage மீது ஏறும்போது இது போன்ற விஷயங்களை சொல்லாமல் மேடை மீது தள்ளிவிட்டு பின்பு மெதுவாக கூறுவதுதான் சரி என்று அவள் மனதில் பட்டதால் எதுவும் பேசாமல் இருந்தாள். இப்போது சஞ்சனா சங்கீதாவிடம் வந்து "Yes dear, few important celebreties are going to come for this function, I hided it from you.... sorry" என்று கொஞ்சும் விதத்தில் சொன்னாள். சங்கீதாவுக்கு படபடப்பு எகுரியது. இருந்தும் நிர்மலா, ரம்யா, சஞ்சனா ஆகியோர் தொடர்ந்து குடுக்கும் தைரியத்தில் சற்று மணதிடம் அடைந்தாள் சஞ்சனா.



if you are ready, we shall practice the moves now, time அதிகம் இல்லை நமக்கு. - என்று கலா விளக்க மற்றவர்கள் dressing ரூமுக்குள் அனைத்தையும் முடித்துவிட்டு குளிக்க சென்றார்கள். வேறு ஒரு set of dress போட்டுக்கொண்டு அலங்காரம் செய்துகொண்டு சங்கீதாவுக்கு mental support குடுக்க உடன் இருந்தார்கள்.

"உங்க கிட்ட appealing feature உங்க இடுப்புதான், very curvy - என்று கலா சொல்ல, ரம்யா "உய்ய்...." என்று விரலை மடக்கி வாயில் வைத்து விசில் அடித்தாள். அறையில் உள்ள அனைவரும் (beauticians உட்பட சங்கீதாவின் நடன rehersal பார்த்து கை தட்டினார்கள்.) பாடலின் நடுவே இடுப்பை மெதுவாக ஆட்டி ஆட்டி ஒரு கட்டத்தில் வேகமாக குலுக்கி belly dancers போல ஒரு step போட வேண்டும். அதற்க்கு கொஞ்சம் சிரமப்பட்டு மீண்டும் மீண்டும் செய்து பார்க்க கிட்டத்தட்ட ஒரு 40 நிமிடத்திற்கும் மேல் practice செய்து ஒரு வழியாக கலாவே ஒரு கட்டத்தில் "superrrr" என்று மணம் திருப்தி அடைந்து கத்தினாள்.


நேரம் ஓடிக்கொண்டே இருக்க, மணி ஐந்தை த் தொட்டது. இப்போது. beauticians சுனாமியை மிஞ்சும் வேகத்தில் சங்கீதாவுக்கு hair style செய்தார்கள். ஒருவள் முகத்துக்கு என்னென்ன cream apply செய்ய வேண்டுமோ அதை செய்தாள், மற்றொருவள் தலைமுடிக்கு curly hair style செய்து கொண்டிருந்தாள். கைகளுக்கு wrist முதல் பாதி முழம் கை வரை pearls and stone designed வளையல்கள் மாட்டி விட்டு. கிட்டத்தட்ட மாலை 6:00 மணி அளவில் சங்கீதா என்கிற அழகு ப் பெண்ணை உண்மையாகவே ஒரு தேவதையாக உருவாக்கி இருந்தார்கள். உண்மையில் அழகு சாதனங்களுக்கு இவளின் முகத்தால் அழகு சேர்ந்தது என்று சொன்னாள் அது மிகையாகாது.

ராகவ் சில நேரத்திற்கு பிறகு வந்து கதவை த் தட்ட கதவைத் திறந்தாள் சஞ்சனா.. சஞ்சனாவும் நிர்மலாவும், ரம்யாவும் என்னதான் attractive ஆக dressing செய்திருந்தாலும் சங்கீதா உண்மையில் ராகவின் கண்களுக்கு இன்று வரை நான் பார்த்த சந்கீதவா இது என்று பிரமிப்பு அடையும் விதம் பார்த்தவுடன் ஒன்றும் பேச தோணாமல் அப்படியே நின்றான்.

"ராகவ்...." - என்று மெதுவாய் அடக்கமாக மற்றவர்களுக்கு தெரியாத வண்ணம் அழைத்து "எப்படி?" என்று வார்த்தையால் கேள்வி எழுப்பாமல் கண்களால் தன் உடையை மெதுவாய் அசைத்து கேட்டாள்.

ராகவும் அடக்கத்துடன், சத்தமின்றி புருவங்களை உயர்த்தி "beautiful" என்று காற்று கலந்த குரலில் மெதுவாய் சொன்னான்.

okay shall we proceeeeed.....? - என்று program organiser சஞ்சனா சத்தமாக சொல்ல, சங்கீதாவுக்கு மணம் படபடத்தது.

மேடைக்கு செல்லும் முன்பு ராகவ் சங்கீதாவிடம் "You are the best, believe in that, you are the best. No need to get nervous, we all will be there with you to cheer you up" - என்று ராகவ் பேசிய நம்பிக்கை தரும் வார்த்தைகள் சங்கீதாவுக்கு அந்த நேரம் முக்கியமாக த் தேவைப் படும் மருந்தாக இருந்தது.

இப்போது ஆடிட்டோரியம் dressing room வழியாக behind the stage மேடைக்கு வருவதற்கு ஒரு வழி இருந்தது. அந்த வழியின் கூரையில்(roof) மின்னும் சிறிய மஞ்சள் விளக்குகள் மிதமான வெளிச்சத்தில் மின்னியது. கையில் "Addressing the crowd" என்று சஞ்சனா எழுதி கொடுத்திருக்கும் காகிதம் தான் programன் முதல் பேச்சு, அதை அவள் கையில் பத்திரமாக வைத்திருந்தாள். ஒரு முப்பது அடி நீளத்துக்கு அந்த பாதை இருந்தது. இன்னும் சில நொடிகளில் சங்கீதாவின் image ஐ ஆயிரக்கணக்கானவர்களின் மனதில் புரட்டிப் போடும் நேரத்தை தொடுவதற்கு பாதை குறைந்து கொண்டே வந்தன. சஞ்சனா, ரம்யா, நிர்மலா, ஆகிய அனைவரும் சங்கீதாவின் கண்ணத்தில் முத்தம் குடுத்து, "All the best dear, you are going to rock, just perform well dont think about anything.... we will be standing just behind you only.... go go go.... its time.." என்று தோழிகள் சொல்லி முடிக்க அடுத்த பாதத்தை எடுத்து வைத்தாள் சங்கீதா. இப்போது அங்குள்ள ஒரு பணிப்பெண் curtains எடுத்து விட மேடையின் மீது காலடி எடுத்து வைத்தாள் அந்த தேவதை.

ஆடிட்டோரியம் அரங்கம் முழுவதும் மக்கள் நிறைந்திருந்தனர். காரணம் இந்த awards வழங்கும் விழா வெறும் IOFI பணியாளர்களுக்கு மட்டும் அல்ல. கடந்த 20 ஆண்டுகளாக ராகவின் தந்தை Mr.Mahesh Yadhav பலதரப்பட்ட VIP களுடன் வைத்திருந்த நட்பை பாராட்டி அந்த விழாவுக்கு வந்திருந்தார்கள். அதில் சில முக்கிய திரையுலக நட்சத்திரங்களும் வந்திருந்தார்கள். அவர்களை கௌரவிக்கும் விதம் சில விருதுகளும் வழங்கும் திட்டம் இருந்தது அந்த விழாவில்.

சங்கீதா mike பிடித்து மெதுவாக பேச ஆரம்பித்தாள். அப்போது stage மேலே ஒரு focus light ஒன்று வெறும் சங்கீதா நிற்கும் இடத்தை மட்டும் குறி வைத்து வட்டமாக வெளிச்சம் அடிக்க அவள் மாட்டி இருக்கும் அந்த தக தகவென மின்னும் gagra choli பார்பவர்களின் கண்களுக்கு மின்னியது. இப்போது அவள் பேச ஆரம்பிக்கும் தருவாயில் பல நூறு கணக்கில் flash lights camera மூலம் அவளின் முகம் மீது விழுந்தது. ஒரு நொடி முகத்தை நிமிர்த்தி கூட்டத்தை ப் பார்த்தாள் சங்கீதா. பெரும்பாலும் இருட்டாக இருந்தது ஆடிட்டோரியம், மிதமான சிறு வெளிச்சத்தில் அலை கடல் போல அமர்ந்திருக்கும் கூட்டாம் கண்ணுக்கு தெரிந்தது அவளுக்கு. ஒரு நொடி இதயத் துடிப்பு அதிகரித்தது. நிமிர்ந்து பார்தவளின் முகத்துக்கு மேலே இன்னும் இரு மடங்காக paparazzi ( சரமாரியான camera clicking தொல்லை என்று பொருள்) போல camera flash lights விழ என்ன நடக்கிறதென்றே தெரியாமல் சில நொடிகள் மெளனமாக நிற்க, பின்னாடி இருந்து சஞ்சனா குரல் குடுத்தாள் "start sangeetha start... dont wait... start start.." என்று கத்த அடித் தொண்டையில் எச்சிலை முழுங்கிக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.



Dear Ladies & Gentlemen,

(சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி அமைதியானது. அதில் வெறும் camera கிளிக் ஆகிக்கொண்டிருக்கும் சத்தம் மட்டும் கேட்டது.)

இந்த ஆண்டு IOFI Annual awards function க்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் இனிமையான மாலை வணக்கங்கள். என் பெயர் சங்கீதா. (புதியவள் என்பதால் கரகோஷம் சற்று மெதுவான சத்தத்தில் கேட்டன. கடந்த ஆண்டு compere செய்த நடிகை ஷோபனா, கீழே அமர்ந்திருந்தாள்) சென்ற ஆண்டு விழாக்களைக் காட்டிலும் இந்த ஆண்டு மிகவும் சிறப்பானவை. காரணம் IOFI fashion நிறுவனம் 25 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. (கரகோஷம் பலமாக ஒலித்தன..) இன்னும் வெற்றிகரமாக இதன் வேர்களை உலகின் பல இடங்களுக்கு மின்னல் வேகத்தில் பரவியும் வருகின்றன. இந்த நேரத்தில் IOFI நிறுவனம் உருவான கதையை சற்று பின் நோக்கி ப் பார்ப்போம். (சஞ்சனா பின்னாடி இருந்து மெதுவாக அழைத்து, "smile the crowd and continue, dont continuously bend down your head...") என்று tips சொல்ல.. சுதாரித்துக் கொண்டு அவள் சொன்னது போலவே செய்தாள் சங்கீதா..

(கூட்டத்தைப் பார்த்து மென்மையாக சிரித்துவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்...)

எந்த ஒரு உறுதியான மரத்துக்கும் அதன் வேர் தான் காரணம் என்று சொல்வார்கள். அந்த வகையில் IOFI என்கிற மரத்துக்கு விதை போட்ட மாமனிதர் Mr.Mahesh Yadhav வை நாம் யாரும் மறக்க முடியாது. முற்றிலும் உழைப்பால் உயர்ந்தவர். தற்போதிய CEO Mr.Raghav Yadhav னுடைய தந்தைதான் இவர். (இப்போது, கூட்டாம் முழுவதும் சங்கீதா பேசுவதைக் கேட்பதற்காக நல்ல அமைதி நிலவியது..)

Mr.Mahesh Yadhav ஒரு திறமையான வியாபாரி. ஆரம்ப கட்டத்தில் வெறும் தையல் வேலை பார்த்தவர், நாடகங்களில் நடிப்பவர்களுக்கு துணிகளை தைக்க ஆரம்பித்து, பின் low budget படங்களுக்கு costume designer ஆக பணியாற்றி, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து 2000 மாவது வருடத்தில் இருந்து ஹிந்தியிலும் கால் பதித்து, இன்று அகில இந்தியா முழுவதும் பிரபலமாகி ஒரு நிறுவனத்தை மாபெரும் வெற்றிக்கு கொண்டு சென்றார். இவர் ஆரம்பித்த இந்த IOFI நிறுவனம் இன்று உலகில் எங்கெல்லாம் அதி நவீன கலை நிகழ்ச்சிகள், costume designing, நடக்கிறதோ அங்கு மட்டும் இல்லாமல், Industries, corporates, மற்றும் அதிக பொருட்செலவில் எடுக்கப் படும் இந்திய த் திரைப்படங்களும் உட்பட பல இடங்களில் எங்கெல்லாம் fashion எண்ணும் வார்த்தைக்கு இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் தனது கால்களைப் பதித்து இருக்கிறார். இந்த நிறுவனத்தின் செயலாளராக இருந்த இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு இந்த நிறுவனத்தை தலைமை தாங்குவது Mr.Raghav, அவருடைய தவப் புதல்வன். புலிக்கு பிறந்தது பூனை ஆகாது என்பது போல தன் தந்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் வருமானத்தை சேகரித்ததைக் காட்டிலும் அதைவிட 80% நிறுவனத்தின் லாபத்தை இவர் அதிகரித்துள்ளார். (கரகோஷம் பலமாக ஒலித்தன. அப்போது சங்கீதா மென்மையாக கூட்டத்தைப் பார்த்து சிரித்து கை தட்டல்கள் அடங்க சில நொடிகள் குடுத்து மீண்டும் ஆரம்பித்தாள்.) "பல முறை என்னையே முந்திவிட்டான் எனது தவப்புதல்வன்" என்று பெருமைப் பட்டு மார்தட்டிக் கொள்ளும் தந்தையை நாம் இங்கே நம் கண் முன் காணலாம். - என்று சங்கீதா பேசி முடிக்க camera Mr.Mahesh Yadhav மீது பாய, stage ல் உள்ள ஒரு பெரிய screen மீது projector உதவியால் அவருடைய முகம் திரையில் தெரிய அனைவரும் அதிக சத்தம் கேட்கும் வண்ணம் பலமாக கை தட்டினார்கள்.

இப்போது அவர் மேடையில் சில வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்வர் என்று அழைப்பு விடுத்ததும்... (கை தட்டல்கள்.)

Mr.Mahesh Yadhav பேசத் தொடங்கினார்....

விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். ஒரே ஒரு வரியை சொல்லிக்கொள்கிறேன். 25 ஆண்டுகளுக்கு முன் IOFI, Mahesh என்கிற ஒரு ஏழையை மட்டும் கொண்டு வாழ்ந்தது, இப்போது உலகம் முழுக்க கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேருக்கும் மேல் France, Germany, London, USA, Italy, India, Australia ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. நான் அதிகம் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, மற்றவர்களின் programs நடக்கட்டும். மீண்டும் ஒரு முறை இந்த IOFI சிகரத்தை எட்டுவதற்கு உலகம் முழுதும் இருந்து எனக்கு உதவி வரும் பல முக்கிய பிரமுகர்களுக்கும் பல ஜாம்பவான் நண்பர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதில் குறிப்பிட்டு நான் நன்றி சொல்ல கடமைப் பட்டவர்கள் ஹிந்தி கலை உலகை சேர்ந்த BibB அவர்களுக்கும் அசாத்திய சிந்தனை வாய்ந்த படைப்பாளி Aamir Khan அவர்களுக்கும், மற்றும் தமிழ் நாட்டை சேர்ந்த கலை உலக ஜாம்பவான்கள் ரஜினி, கமல் ஆகியோருக்கும் எனது ஆழ் மனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.... - என்று அவர் சொல்லும்போது கூட்டத்தில் கரகோஷம் காதைக் கிழித்தது. இப்போதுதான் சங்கீதாவுக்கு அவர்களும் கூட விழாவுக்கு வந்திருக்கிறார்கள் என்று தெரிந்து ஒரு நொடி மனதுக்குள் திடுக்கிட்டாள். (பின்னாடி திரும்பி சஞ்சனாவைப் பார்த்து "அப்படியா?" என்று சங்கீதா கண்களால் கேள்வி எழுப்ப, சஞ்சனா குறும்பாக சிரித்துக் கொண்டே "ஆமாம்" என்பது போல முகபாவனை செய்தாள்)..


இப்போது அவர் கீழே இறங்கியதும். சங்கீதா பேசத் தொடங்கினாள் "நன்றிகள் திரு Mahesh Yadhav அவர்களே. விழா என்றாள் அதற்க்கு பல விஷயங்கள் உயிர் சேர்க்கும், அவைகள், பாடல்கள், இசைகள், நடனங்கள். அந்த வகையில் நமக்கெல்லாம் காதுகளில் மிகவும் இதமாக ஒலிக்க ஒரு பாடலை தரவிருக்கிறார் பாடகர் திரு உண்ணி கிருஷ்ணன் அவர்கள். (மேடையில் விளக்குகள் அனைய பாடகர் உன்னி கிருஷ்ணன் தோன்றும்போது மீண்டும் விளக்குகள் எரிந்தன.... கரகோஷம் மிதமாக எழுந்தன. - அவர் பாடிய பாடல் (click here to listen) ..... - இந்த உன்னதமான பாடலில் "சாமி தவித்தான், தாயையை ப் படைத்தான்" என்ற வரி வரும்போது கேட்கும் அனைவரது கண்களிலும் சற்று நீர்த்துளிகள் லேசாக பணித்தன. - (வாசகர்களும் இதைக் கேட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.)

இந்த பாடல் பாடும் தருவாயில் கிடைத்த சிறிய gap ல் சங்கீதா சஞ்சனாவை அருகே அழைத்து காதைத் திருகி "ஏண்டி இவ்வளோ பேர் வரப் போறாங்கன்னு "எனக்கு முன்னாடியே சொல்லல?" என்று செல்லமாக கோவித்துக் கொண்டாள். ஆஹ்ஹ்ஹ் வலிக்குது வலிக்குது.... சொல்லி இருந்தா நீங்க மேடை ஏறி இருப்பீங்களா? இப்போ பாருங்க ரெண்டு வார்த்தை பேசினதுக்கு அப்புறம் மணசு கொஞ்சம் relaxed ஆக இருக்குமே?....- என்று சொல்லிவிட்டு dressing room ல் மறந்து வைத்த mobile phone ஐ சங்கீதாவிடம் குடுத்தாள் சஞ்சனா.

உண்ணி கிருஷ்ணன் பாடல் முடிந்ததும், மீண்டும் மேடைக்கு சென்று பேசத் தொடங்கினாள் சங்கீதா..

"IOFI இன்று வரை வளர்ந்து வருவதற்கு முக்கிய காரணம் ஆடை அலங்காரம்தான் என்பது நமக்கெல்லாம் தெரியும். இருப்பினும் சமீபமாக design செய்த ஓரிரு ஆடைகளுக்கு நல்ல வரவேற்ப்பு இருப்பதை மனதில் வைத்து இந்த நபருக்கு நாம் பரிசளிக்க போகிறோம்." என்று ஒரு envelope பிரித்து படித்தாள். "இந்த விருதை வழங்க Mr.Mahesh Yadhav மற்றும் CEO Mr.Raghav அவர்களையும் மேடைக்கு அழைக்கிறேன். (கரகோஷம் ஒலித்தன..) இருவரும் மேடைக்கு வந்தார்கள். ராகவ் கண்களில் ஒரு பெரிய excitement கலந்த சிரிப்பு தெரிந்தது. அதற்க்கு காரணம் இப்போது தெரியும்..

And the winner is (சந்கீதவால் நம்ப முடியவில்லை. அவளுக்கு மூச்சு பேச்சில்லை ஒரு நொடி.) "come on sangeetha... read.. dont delay.... start saying the name..." - என்று பின்னாடி இருந்து சஞ்சனா மெதுவாக கத்த பெயரைப் படித்தாள் " And the winner is சங்கீதா குமார்".. (பேப்பரை அப்படியே mike அருகே போட்டுவிட்டு கண்களில் லேசான நீர்துளிகளோடு கரகோஷம் எழும்பும் சத்தத்துடன் கேட்டு அதிர்ச்சியும் சந்தோஷமும் கலந்து என்ன பேசுவதென்றே தெரியாமல் நின்றாள்.) ராகவ் "Come on sangeetha" என்று கூலாக சங்கீதாவை கை பிடித்து மேடையின் நடுவில் கூட்டி நிற்க வைத்தான். இப்போது உரிமையுடன் தானே மைக் எடுத்து பேச ஆரம்பித்தான் ராகவ்.

"Everybody must be thinking why this compere women is getting the award, ஹா ஹா, let me explain. She is a young energetic manager in a reputed Bank & (அமைதியில் echo ஒலித்தது) recently when sangeetha came to my office for an official purpose, she was making some designs in her dairy & when she left for the day she left her dairy too. At that time when I come to see that, I was viewing those designs with focused interest & thought to bring my visualization to reality by making these designs in cloths & it shooked the sales in certain northern parts of india. I have basically chosen her name for this award because she is the initiator of such designs & she deserves it. even though she is not an employee of our organization. Also I would like to take this moment to encourage the working come family womens to indulge in such activities like what sangeetha did and who knows........ even your design might get selected in IOFI" - என்று ஆங்கிலத்தில் stylish ஆக பேசி முடித்து தன் தந்தையிடம் மேடையிலேயே சங்கீதாவுக்கு கௌரவ அறிமுகம் செய்து வைத்தான் ராகவ். அவனது தந்தை Mahesh Yadhav awardஐ க் குடுக்கும்போது சங்கீதாவின் கண்களில் நீர்த்துளிகள் தேங்கி இருந்தவை லேசாக கண்ணத்தில் வழிந்தது. காரணம் இத்தனை கணக்கான மக்களுக்கு மத்தியில், அவளுக்குள் ஏதோ ஒரு திறமை இருப்பதை உணர்ந்து அதை அங்கீகரித்து அவளுக்கு மேடையில் பரிசு குடுக்கும்போது இன்று வரை இப்படி ஒரு உணர்வை அவள் உணர்ந்ததில்லை, அவளுடைய மனதில் ராகவை ஒரு நொடி மகானாக கருதினாள். 


எ.. என.... இஸ்ஸ்ஹ்ஹ்..( கண்களில் நீர் வர லேசாக விசும்பி வார்த்தைகள் வர கஷ்ட்டப்பட்டது அவள் வாயிலிருந்து.) என்ன சொல்லுரதுன்னு தெரியல... Thanks.. Thank you so much.. Thanks a lot - என்று பேசுகையில் Taare Zameen Par படத்தில் தனக்கு கடைசியாக ஓவியம் வரைந்ததற்கு முதல் பரிசு தரும்போது அந்த குழந்தை எப்படி உணர்ச்சி வசப்பட்டு ஓடி வந்து aamir khan ஐக் கட்டிக்கொள்ளுமோ அதைப்போலவே மேடையிலேயே சங்கீதா அதீத சந்தோஷத்தில் ஒரு நொடி ராகவை க் கட்டி அனைத்து நன்றிகள் தெரிவித்தாள். இதையும் camera க்கள் க்ளிக்கிக்கொண்டன.


கொஞ்சம் கரகோஷத்துக்கு இடம் குடுத்து, தன்னையும் சுதாரித்துக் கொண்டு மீண்டும் mike ல் பேச தொடங்கினாள் சங்கீதா..

இப்போது IOFI நிர்வாகத்துக்கான ஓரிரு சொற்ப விருதுகளையும் சந்கீதவைத் தொடர்ந்து சிலருக்கு வழங்கிய பிறகு மேடைக்கு சென்று மீண்டும் அடுத்த நிகழ்ச்சிகளைப் பற்றி பேசத்தொடங்கினாள் சங்கீதா..

கலையை ரசிக்காத மானிடர் உண்டோ இவ்வுலகில்? அப்படி இருக்க அந்த கலையுலகில் நமது உதவியுடன் கலக்கிய சில சினிமா நட்சத்திரங்களுக்கு நாம் விருதுகள் வழங்க மாபெரும் ஆட்களாக இல்லாதவர்களாக இருக்கலாம், இருப்பினும் நட்பின் அடிப்படையில் அவர்களுக்கு சில விருதுகள் குடுத்து கௌரவிக்க IOFI award jury members தேர்வு செய்திருக்கிறார்கள். அதற்கான விருதுகளைப் பார்ப்போம்.

முதலாவது: IOFI - Best manly appearance award. இந்த விருதை வாங்கப்போகும் நபர் யார்? இந்த வீடியோ கிளிப்பிங் பார்க்கவும்.

Best Manly appearance award.. (Click to view)

இந்த விருதுக்கு உரியவர் நடிகர் திரு ஆர்யா.. (கரகோஷம் ஒலித்தது.) மேடை எரிய ஆர்யா இதற்கான விருதை நண்பர் ராகவிடம் வாங்கிக்கொண்டார்.

மேடையில் விருதை வாங்கிய பின் ஓரிரு வார்த்தைகளை பேசினார் ஆர்யா. "IOFI க்கு எனது நன்றிகள். தவிர ராகவை எனக்கு நன்றாக தெரியும், அவருடன் எனக்கு நெருக்கமான நட்பு உண்டு, மதராசபட்டினம் shooting போது emy jackson க்கு அவர்தான் உடைகள் suggest பண்ணார், அதுக்கு அப்புறம் என்னோட பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துக்கும், வேட்டை படத்துக்கும் பாடல்களில் வரும் உடைகளை அவர்தான் எனக்கு வடிவமைச்சார், நண்பர் ராகவ் இன்னும் மேலும் மேலும் உயர எனது வாழுத்துக்கள். நன்றி" - என்று பேசி முடித்து விடை பெரும்போது அரங்கத்தில் "yo macho man" என்கிற சத்தத்துடன் கரகோஷம் ஒலித்தன.

நன்றி திரு ஆர்யா.. இப்போது நாம் காண இருப்பது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகைக்கான விருது.

IOFI - Best performance by female lead artist. இந்த விருதை வாங்கப்போகும் பெண் யார்? இந்த வீடியோ கிளிப்பிங் பார்க்கவும்.

Best performance by female lead artist (Click to view)

மேடை எரிய நடிகை ரிச்சா, விருதை நடிகர் ஆர்யாவிடம் பெற்றுக் கொண்டார். (கரகோஷம் எழும்பி அடங்கியது.)

இந்த விருதை எனக்கு பரிந்துரைச்சதுக்கு IOFI க்கு முதல்ல எனது நன்றிகளை த் தெரிவிச்சிக்குறேன். மற்றபடி இந்த விருதுக்கு காரணமானவர் director செல்வ ரகாவந்தான். creativity is by him, I just simply executed that, thats all. other than that I love all my fans in chennai, this is all because of youuuuu... ummaahhh.... (என்று சத்தமாக mike ல் richa கத்தி பேசி ரசிகர்களை நோக்கி காற்றில் flying kiss குடுக்க, அனைத்து இளசுகளும் சத்தமாக விசில் அடித்தார்கள்) & I love chennai chennai chennai.... ( என்று தமிழ் நடிகைகளுக்கே உரிய தீர்க்க தரிசனமான வார்த்தைகளை formality க்கு சொல்லிவிட்டு மேடையை விட்டு இறங்கினாள் நடிகை richa)

Thank you Richa.. - என்றாள் சங்கீதா..

இப்போது நாம் அனைவரும் ஒரு சிறிய நடனத்தைப் பார்க்கப் போகிறோம் அதற்க்கு அடுத்து வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் surprise என்று சொல்லியவுடன் பெரிய விளக்குகள் மட்டும் அணைக்கப் பட்டது. stage ல் மட்டும் இப்போது விளக்கு பளிச்சென எரிய stage ன் கூரையில் இருந்து ஒரு opening தரப்பட்டு அதில் இருந்து ஒரு இயந்திரம் stylish சங்கீதாவை இறக்கி விட, அதைப் பார்த்து அனைத்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம், இவ்வளோ நேரம் gagra choli ல இருந்தவளா இவ? - என்று அனைவரும் மூக்கின் மீது விரல் வைத்தனர்.


இப்போது கலா மாஸ்டர் கற்றுக் குடுத்த இடுப்பு நடனத்தை அவர் சொல்லித்தந்த விதம் ஆடுகையில், முகத்தினில் அப்படி ஒரு சந்தோஷம் சங்கீதாவுக்கு, இப்படியெல்லாம் நடக்கும் என்று அவளது வாழ்கையில் அவள் கணவு கூட கண்டதில்லை, இந்த நடனத்தை க் கீழே ராகவ் (கீழே குறிப்பிட்டுள்ள videoவில் salman னை கற்பனை செய்துகொள்ளவும்....) ரசித்து பார்த்து கைதட்டி குதூகலப்படுத்தினான். அதை சங்கீதாவும் ரசித்தாள், அப்போது பின்னாடி சஞ்சனவுடன் அவளது மகள் ஸ்நேஹாவும் பார்த்து கைத் தட்டுவதைப் பார்த்து சந்தோஷப்பட்டாள். பாராட்டுக்கும், கரகோஷத்துக்கும், ஏங்கும் மானிடர்களுக்கு மத்தியில் சங்கீதா விதிவிலக்கல்ல....

(சங்கீதாவின் அரங்கம் அதிரும் நடனம் - please watch and proceed further)

(இந்த நடனத்தில் sheila என்கிற பெயருக்கு பதில் சங்கீதா என்று நீங்களே மனதில் எண்ணிக்கொள்ளுங்கள் - இது அனைத்து வாசகர்களும் முழுமையாக பார்க்க வேண்டிய நடனம்.)

இப்போது நடனம் முடிந்து சில நிமிடங்களுக்கு பிறகு நடனம் ஆடிய அதே costume ல் mike பிடித்து பேச வந்தாள் சங்கீதா..

அடுத்ததாக நாம பார்க்க இருக்கிறது சிறந்த வில்லனாக நடித்த கதாப்பாத்திரத்துக்கு குடுக்கப்போகும் விருது.

IOFI award - Best villain performance by a Hero. இந்த விருதை வாங்கப்போகும் hero யார்? இந்த வீடியோ கிளிப்பிங் பார்க்கவும்.

Best villan performance by a Hero.. (Click to view)

வீடியோ முடிந்ததும், மூளை முடுக்குகளில் இருந்தும் தல தல என்று கூச்சலும், விண்ணைத் தொடும் விதம் விசில்களும் பறந்தன. அனைத்தையும் அன்புடன் பெற்று அமைதியாய் வெள்ளை நிற வேஷ்டி சட்டையில் மேடை ஏறினார் ultimate star அஜித்.

தனது விருதை ஹிந்தி நடிகர் Aamir khan னிடம் இருந்து பெற்றார் அஜித்.

மெதுவாக பேச ஆரம்பித்தார் - "இந்த விழாவுக்கு நான் வந்ததுக்கு காரணம் Mr.Mahesh Yadhav மேல எனக்கு இருக்குற மரியாதையும் , ராகவ் கிட்ட எனக்கு இருக்குற நட்பும் அவர் நான் நடிச்ச பில்லா படத்துல costume designer ஆக வேலைப் பார்த்த போது அவர் கிட்ட நான் பார்த்த தொழில் அற்பனிப்பும்தான். அதற்க்கு எனது பாராட்டுகள். மேலும் பல வெற்றிகள் அடைய வாழுத்துகிறேன். நன்றி." - என்று சிறிதளவில் பேசிவிட்டு மேடையில் இருந்து இறங்கும்போதும் அதே சத்தமான கரகோஷம்.


நன்றிகள் திரு அஜித் அவர்களே - என்றாள் சங்கீதா.

அடுத்ததாக சிறந்த cool action performance வரிசையில், இந்த விருதை வாங்கப்போகும் hero யார்? இந்த வீடியோ கிளிப்பிங் பார்க்கவும்.

IOFI - Best cool action performance award.... (Click to view)

திரையில் வீடியோ கிளிப்பிங் முடிந்ததும், விசில்கள் மூளை முடுக்குக்கும் பறந்தது. "தளபதிதிதி" என்று உற்சாக குரல்கள் ஆடிட்டோரியம் முழுவதும் அனைவரது காதுகளையும் துழாவி எடுத்தது. கை தட்டி ஆரவாரித்து ரசிகர்கள் தங்களது பாசத்தை இளையதளபதி மேடைக்கு வருகையில் கொட்டினார்கள்.

மேடையில் தனக்கான விருதை நண்பர் அஜித்திடம் மகிழ்ச்சியாய் ப் பெற்றார் விஜய்.





No comments:

Post a Comment