Tuesday, 13 October 2015

கனியும் ஒரு காதல்.. 2

நாட்கள் பறந்தன...

ஒரு மீட்டிங்க அதுவும் ஆல் இந்தியா ல்வெல்ல பன்னுரது எவ்வளவு கஷ்டம்னு அப்பதான் மோகனுக்கு புரிந்தது....ஒரு பெரிய லிஸ்ட் எடுத்து அவங்க கம்பனியுடன் வைத்த turnover.. மற்றும் கொள்முதல்.. அதை சரி செய்து லிஸ்ட் கொடுத்து அதுல மாற்றம், அப்புரன் செக்;லிஸ்ட்... அப்புறம் அது முடிவடைந்து இறுதி வடிவம் கொடுக்க...
இன்விடேசன் அடிக்க... யார் யார் வராங்க அவங்களுக்கு மெயில் அனுப்பி கன்ப்ர்ம் பண்ணி, ரூம் புக் பண்ணி... மெனு செக் பண்ணி

என்ன என்ன புராடக்ட் கொண்டு போகனும் லிஸ்ட்.... அதுக்கு தேவையான மற்ற உப கரணங்கள்... ete..etc... ஒரு வாரம் பெண்டு நிமித்தி விட்டது மோகனுக்கு.. இதற்கிடையில் சாட்டாவது ஒன்னாவது.. எல்லாம் பரன்ல தூக்கி போட்டாச்சு...
அந்த நாளும் வந்தது.....அது ஒரு வியாழக்கிழமை.... இரவு 9.30 பாண்டியன் எக்ஸ்பிரஸ்... எல்லாருக்கு 3 டயர் ஏ சி.. கோச்...எல்லாம் நம்ம
கிட்டத்தட்ட 60 பேர்... மீதம் உள்ள சிலர் நேரடியாக மதுரை வருவதாக சொல்லி இருந்தனர்...சிலர் மறு நாள் மாலை நேரடியாக ஹோட்டலுக்கு
வருவதாக சொல்லி விட்டனர்..

அகிலா தன் பேக்கை தூக்கி கொண்டு வர பின்னால் பியூன் ஒரு பெரிய ட்ராலி பேக்க இழுத்து கொண்டு வந்தான்..அகிலா அந்த டிராலி பேக்கை கொடுத்து இது உன் பொறுப்பு என்றாள்..

இழுத்து பார்த்தான் செம கனம்...

என்ன அகிலா இது பொனம் மாதிரி கனக்குது...

ஆமா அத ரெம்ப அடிச்சாலும் பொனம் தான்...

என்னது...

ஆமாடா... ஃபுல்லா பாட்டில் எல்லாம் ஃபாரின் அயிட்டம்...எம் டி கொடுத்து வுட்டார்... பொறுப்பா அங்க கொண்டு வந்துடு..
மவனே இடைலை யாராவது கைய வச்சா.. அவ்வளவு தான்.. நீ குடிப்பியா..

மோகன்.. மண்டைய ஆட்டினான்..

என்ன ஒன்னு ஆமான்னு ஆட்டு இல்லை இல்லைன்னு ஆட்டு பொத்தம் பொதுவா ஆட்டினா என்ன அர்த்தம்...

இல்லை எப்பவவாவது....

சரி தான் பாலுக்கு பூனை காவல்... சிரித்தாள்...

எல்லாரும் வந்தாச்சான்னு பாரு... டிக்கெட் இந்தா... சொல்லி விட்டு அவளுக்கு என்று இருந்த பெர்த்தில் போய்
உட்கார்ந்து கொண்டாள்... அவளுடன் இன்னொருத்தி சேல்ஸ் ல உள்ளவ.. அவளுடன் இணைந்து கொண்டாள்...

வண்டி கிளம்பியது... ம்ம்ம் செக்கிங்க் முடிந்து... பாண்டியன் செங்கல் பட்டு தாண்டியது.....இரவை கிழித்துக் கொண்டு...

வந்தார் G.M. Sales... என்ன மோகன் சரக்கு எங்க என்றார்..

சார் அந்த டிராலில இருக்கு சார்..

போ மோகன் போய் ஒரு பாட்டில் எடுத்துட்டு வா.. மெல்ல கொண்டு வா சத்தம் போடாம ..ம்ம்ம்

நான் வாசல் கிட்ட் இருக்கேன்... கதவை திறந்து வாஷ் பேசின் பக்கம் போய் நின்று கொண்டார்....

போனான் எடுத்தான் வந்தான்.. கையில் ஒரு BECCADY.... WHITE RUM... அவ்ர் கையில் கொடுத்தான்..

இரு மோகன் இதோ வந்துடுறென்.. மீண்டும் உள்ளே போனார்...மமோகன் வாஷ் பேசன் கிட்ட நிற்க...

இப்பத்தான் சனி விளையாடியது.... ஏ சி கதவு திறந்தது.. வந்தவள்.. அகிலா...

பாத்ரூம் போக வந்தவள் மாட்டிக் கொன்டான்... கையில் பாட்டில் ... முழித்தான்...

நான்.. இல்ல.. ஜிம் ஜிம் உளரினான்... அவர் தான் .. உள்ள போயிருக்கார்..வர்ரார்...

யாரு அவன் அந்த சொட்டை தலையனா... அடிக்கட்டும்... நீ மட்டும் அடிச்சே... அப்புறம் அவனை முறைத்த படி

டாய்லெட் போக....மோகன் அவஸ்தையாய் நெழிந்தான். இது என்ன டா வம்பு... அவ அடிக்காதாங்க்றா...இவர் அடிங்கிறார்...

என்ன பன்ன...

ஏசி கதவு திறந்தது.. GM, AGM SALES, AGM A/C... மூனு பேர் வந்தனர்....

சூப்பர் சரக்கு மச்சி... எப்படிடா இது...அவர்களுக்குள்.. எல்லாம் நம்ம பையன் இருக்க நாம் ஏன் கவலைப்படனும்.. என்னக் காட்டி கண்னடிக்க

அட பாவிகளா.. ஆபீச பொருத்த மட்டில் சேல்ஸ்... அக்கவுண்ட்ஸ்.. அடிச்சுகுவானுக.. இங்க வந்தா.. இப்படி குடிக்கரதுக்கு
கூடி கும்மியடிக்கிறாங்க....

டாய்லட் கதவு திறந்தது.. அகிலா வெளிய வந்தாள்.. அவர்களைப் பார்த்தாள் என்ன சார் இன்னும் தூங்கலையா...

இல்லம்மா கொஞ்சம் பேச வேண்டி இருக்குது.. அங்க எல்லாம் தூங்குறாங்க.. நீ போய் படு... நாங்க பேசிட்டு வறோம்..

அகிலா மோகனை முறைத்தவாறு அவனுக்கு கண்னால் எச்சரிக்கை விடுத்து விட்டு சென்றாள்....

சரி பாட்டில் இல்லை.. எப்படி அடிக்க போறங்க பார்போம்.. கொஞ்சம் நின்றான் மோகன்....

AGM வாட்டர் பாட்லை கொண்டு வந்திருந்தார்... அதில் முழுசும் தன்னீர்..
ஜி எம்... ரம் பாட்டிலை திறக்க.. மெல்ல்லிய வாசனை மூக்கைத்துளைத்தது.. அப்படியே கொஞ்சம் வார்யில் கவிழ்த்தார்...
வாட்டர் பாட்டிலை திறந்து அதையும் தன் வார்யில் விட்டு வாயிலேயே கலந்து முழுங்கிட்டாட்.. எமகாதகன்....இவனுக நம்ம குடி மகன் களையும் மிஞ்சிடுவாங்க போல.... நினத்துக் கொண்டான்....

அப்புறம் தண்ணி பாட்டில்ல கொஞ்சம் நல்ல ஊத்தி கலக்கினானுக ரெண்டு பாட்டிலைய்ம் மாத்தி மாத்தி கலந்தானுக தன்னனி ரெடி பண்ணி ..அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.... வண்டி மேல் மருவத்தூர் தாண்டியது....

இரண்டு பாட்டிலும் மாறி மாறி கைமாற.. கொறிக்க ஒரு சிப்ஸ் பாக்கட் அத வச்சே ....வடிவேல் மாதிரி கைய நக்கல அவ்வளவு தான்...
மற்றபடி அவனை விட மோசம்...

வண்டி விழுப்புரம் நெருங்கியது மணி கிட்டத்தட்ட 12.45...

ஸ்டேசன் வந்ததும் ஏ ஜீ எம் உடனே ஓடி போய் ஒரு 7 அப் 1.5 லிட் வாங்கி ஏறிக்கொள்ள...அதற்குள் ஒரு புல் பாட்டில் காலி... ஜி .ஏம் நாலைந்து கார வகை பாக்கட்டுகள்.... கையில்

அடப் பாவிகளா... மேல் மருவத்தூரில் ஆரம்பித்து விழுப்புரம் வரதுக்குள்ள ஒரு பாட்டிலா.. பிரியா கொடுத்தால் பினாயிலயே குடிப்பானுக போலிருக்கே.....

மோகன் இன்னோறு பாட்டில் எடுத்திட்டு வாப்பா.....

பாண்டியன் மீண்டும் நகர ஆரம்பிக்க.....

முழித்தான் மோகன்... எப்படி எடுக்க....

மறுபடியும் உள்ள போய் மெல்ல டிராலி திறந்து எடுத்து மூடி.. சத்தம் இல்லாமல் வர..

அட இது வோட்கா பாட்டில்.... ஸிம்ரனாஃப் ( SMIRANOFF) 1 Lr...
"சார் இருட்ல தெரியல சார் இது வோட்கா சார்...."
"பரவால்லைப்பா.. கொண்டா.. ரெண்டும் ஒன்னு தான்...."

அதையும் கலந்தார்கள் 7 அப் உடன்... இப்ப தான் ரெண்டு பாட்டில் இருக்கே....மோகன் அவர்களுடன் நின்றான்....

"என்னே மோகன் நீ அடிக்க வே இல்லையே...."
"இல்ல சார் பழக்கம் இல்லை.. நீங்க கேட்டீங்கன்னு தான் எடுத்து வந்தேன்...."
"இல்லை மோகன்.. இது சும்மா நல்லா இருக்கும் அடித்து பார்.."

சொல்லி விட்டு... 7 அப் பாட்டில மோகனிடம் கொடுக்க.. அவன் தயங்கிய படி வாங்க... ம்ம்ம் ஷியர் அப் மேன்... ஜி ம் அக்கவுன்ட்ஸ் சொல்ல வேத வாக்காய் எடுத்து அவன் வாய் அருகில் கொண்டு போக....
ஏ சி கதவு திறந்தது.... வந்தவள் .. சாட்சாத் அகிலா தான்....

மோகனை பார்தவள்.. ஜி எம் பார்த்தாள் ஓன்றும் சொல்லாமல் டாய்லெட் போனாள்.. அவள் போகும் வரை
அமைதியாய் இருந்தவர்கள்... அவள் திரும்பி போன வுடன்.... ஜி எம் சேல்ஸ் சொன்னார்.". இவளுக்கு என்ன சுகர் இருக்கா
இப்படி அடிக்கடி பாத்ரூம் போறா....." சொன்னவுடன் அனைவரும் சிரித்தனர்.. கொல்லென்று....

மோகனுகு வலித்தது.... ம்ம்ம் அவள் நான் குடிகிறேனான்னு செக் பண்ண வரா.. அத போய் இந்த கிழடுகள்... அவ மக வயசு இருக்கும் இப்படி சொல்லுதுகளே.. நினைததவன்...

"சார் இத புடிங்க.. நான் ட்ராலி லாக் பண்னாம வந்திட்டேன்... வேற எவனாவது எடுத்து வச்சிக்கிட்டான்ன நாளைக்கு என் தலை தான் உருளும் " சொல்லி விட்டு ஏ சி திறந்து உள்ளே போனான்...

அவன் எதிர் பார்த்த மாதிரியே.. அகிலா அங்க அவன் பெர்தில் உட்கார்ந்திருக்க.....

அவள் அருகில் போய் " என்ன அகிலா தூங்கலையா... "
"இல்லடா தூக்கம வரலை..."
"ஏன்.. அதுக்கு என் பெர்த்ல வந்து உக்காந்து இருக்கீங்க..."
"உன்னது தான் சைடு லோயர்.. போதுமா... குடிச்சியா.... அவங்க கூட..." அவள் குரலில் கலக்கம்...
"இல்லை அகி நான் குடிக்கலை.... "அவன் அவளை அகி என்று சுருக்கி கூப்பிட்டது அவளுக்கு தெரிந்தும் அவன் அப்படி சொன்னதை அவள் பெரிசா எடுத்துக்கலை...

"நம்ம ஸ்டாப் நாளக்கு எதுன்னாலும் நாம தான் பதில் சொல்லனும்... அது தான் அவங்க கூட இருக்கேன்..."

"நீ சொன்ன பிறகு நான் குடிப்பேனா... குடிக்க மாட்டேன் அகிலா..."
"இல்லை நாளைக்கு நிறைய வேலை இருக்குடா.. நீ இப்படி அவங்க கூட இருந்தா.. எப்படி நாளைக்கு வேலை செய்வ...."
அவள் கேட்டதும் அவனுக்கு அவள் தன் மேல் கொண்டிருந்த அக்கரை வெளிப்பட்டது....

"இல்லை அகி நான் மேனஜ் பன்னிகிறேன்... நீ இனிமே இந்த பக்கம் வராதே.. அந்த பக்கம் போ......"
சொல்லிட்டு விடு விடுவென்று கதவை நோக்கி நடந்தான்... மோகன்.... அகிலாக்கு அவன் சொன்னது பிடித்திருந்தது... தன்னை ஏதோ கிண்டல் பண்ணி பேசி இருக்கிறார்கள்.. அது தாங்காமல் அவன் உள்ள வந்து தன்னை சமாதானம் பண்ணி... திரும்ப போய்....

இரண்டு நாள் முன்னாள் .. அவள் பின்னோக்கி போனாள்...

ஆபிஸ்... மோகன் சீட்டில் இல்லை.. ஒரு மிக முக்கியமான ரிப்போர்ட்... பாக்கனும் அது மோகன் கம்பூட்டர் ல இருக்கு.. பார்தாள்.. அவன் கம்புய்ட்டர ஓப்பன் பன்னியவள்.. அதிர்ந்தாள்.. மெஸஞ்சர் ஓபன் ஆகி அவள் ஐடி காட்டியது... அவள் அனுப்பிய மெஸஜ் எல்லாம்... அவன் ஐடி ல.....அதிர்ந்தவள்.. சுதாரித்தாள்... ஆக.. இவன் தான் அவன்... அவள் முகத்தில் மெல்லிய புன் முறுவல்..

படவா என் கிட்டயே வாஅ... உனக்கு மட்டும் தான் தெரியுமா.. அப்படி ஆக்ட் பண்ண.... நான் சாவித்திரி டா.. அத விட நல்லா ஆக்ட் கொடுப்பேன் பாக்குரியா... ம்ம்ம்ம் யோசித்தபடி வந்து தன் இருக்கையில் அமர்ந்தாள்....

ம்ம்ம்ம்ம்.... அது தான் இப்ப மனசில் ஓடியது.....மனசு அவளை கேள்வி கேட்டது....அவன் குடிக்க கூடாது .. ஏன் இப்படி அவனை நீ காதலிக்கிறாயா.. மனசு இடித்தது......

இல்லை அவன் என் அசிஸ்டண்ட்....
சோ வாட் அடிமை இல்லையே.....
ஆனா அவன் குடிக்க கூடாது....
அப்ப அவனை நீ காதலிக்கிற அப்படித்தானே.....
இல்லை
அவனை புடிச்சிருக்கா.....
ம்ம்ம்ம்ம் ஆமா....
இப்பவா இல்லை முன்னாடியேவா...
இல்லை இப்பத்தான் கொஞ்ச நாளா...அவனை புடிக்க ஆரம்பிதிருக்கு....
ஏன்...
தெரியலை.. ஆனா அவன் கூட பேச புடிக்குது... அவன் கூட சுத்த பிடிக்குது....
அப்ப அவனை நீ காதலிக்கிற...
இல்லை..... இன்னும் இல்லை....அவனை புடிச்சிருக்கு....
என்ன இது அவனை புடிச்சிருக்கு ஆனா அவனை காதலிக்கலை.... என்ன இது....
அது தான் எனக்கும் தெரியலை..... அவனை புடிச்சிருக்க அவ்வளவு தான்...
மனசு அவளிடம் சண்டை போட்டது........
அப்படியே அவன் பெர்த்தில் தூங்க ஆரம்பிததாள் அகிலா.....
மோகன் திரும்பி வந்தான்..

அதற்குள் 1/4 பாட்டில் காலி... ம்ம்ம் அவர்கள் பேச தொடங்கினார்கள்...A/C GM பேச்சு வாக்கில் GM sales கிட்ட அவர் என்ன பண்னுரார்னு போட்டு வாங்க பாக்கிறார்.....
சேல்ஸ் ஜி ம் அக்கவுண்ட்ஸ் ஜி எம் கிட்ட் வாய கிழருறாறு... இப்ப மோகனுக்கு ஒன்று நன்றாக புரிந்தது... ஒருத்தன் வாய ஒருத்தன் கிளரி.. அவனுக ப்ண்னுர கோல் மால் எல்லாம் அவனவன் வாயில வரவைக்க தான் இந்த் உத்தி.. இந்த கூட்டு குடி எல்லாம்... அடப்பாவிகளா.. இப்ப மட்டும் ஒரு கத்திய அவனவன் கையில கொடுத்து விட்டா தெரியும் சேதி...

ஒருத்தன ஒருத்தன் குத்திகுவாங்க போல... ஆனா வாய் மட்டும் அழகா பேசி சிரிச்சு.. உலக மகா நடிப்புடா.. சாமி...

திடீர்னு ஜிம் அக்கவுண்ட்ஸ்...

நம்ம மோகன் இருக்கான்ல பா.. ஒரு நாள் என்ன நச்சு நச்சுன்னு படுத்தி எடுத்தான் அந்த இம்போர்ட்ர்க்கு எக்ஸேஜ் கட்ட சொல்லி நான் கூட அவன தப்ப நினைச்சேன் .. பையன் ஏதோ கட்டிங்க் வாங்கி... நம்மள படுத்திறானேன்னு... ஆனா பாருய்யா.... ஒரே நாள்ல 5 கோடி லாபம் சம்பாதிச்சு கொடுத்திட்டான்... ஒரு நயா பைசா செலவு இல்லாமல்.....

மோகனுக்கு திக்கென்றது... அவர் நம்மை பாராட்டுகிறாரா.. இல்லை சேல்ஸ் ஜி எம் ம கிண்டல் பன்னுரார... நீயும் இருக்கியீனு... குத்தி காட்டுராறா.. புரியலை அவனுக்கு...

சேல்ஸ்... ஏ ஜி எம்... இல்லை அக்கவுண்ட்ஸ்... அது அவனுக்கு ஒரு லக்... நாங்க லக் நம்பி போறது இல்லை... 1 ம் தேதில விதை போட்டாத்தான் 30ம் தேதி ஆர்டர் கிடைக்கும்... அப்புறம் தான் உங்களுக்கு டப்பு.. இல்லேன்னா நீங்க எப்படி அந்த பணத்த இம்போர்டருக்கு கொடுத்திருப்பீங்க...ம்ம்ம்.. பையன் மச்சக்காரன் தான்... சீனியர் வேற அவனை மிரட்டுரத பாத்தீங்கல்ல....

என்ன் சார்.. சொல்லுரீங்க

சும்மா இருப்பா மோகன்.. அவ வந்தா... வந்து உன்ன க்ண்னை காட்டி குடிக்காத ந்னு சொன்னத எல்லாம் நான் கவனிச்சேன்.... என்ன உன் கிட்ட கவுந்திட்டாளா...

இப்படி பச்சையா கேட்டவுடன் ஆடி போய்டான் மோகன்....

சார்... அவங்க என் கிட்ட ஆபிஸ்ல வச்சே சொல்லிட்டாங்க... நீ குடிக்கனும்னு தோனுச்சின்னா.. திரும்பி இங்க வந்து குடி
நான் வாங்கித்தறென்... ஆனா டூர்ல குடிக்காத... ஏன்னா நாம தான் எல்லாத்தையும் ஆர்கனைஸ் பண்ணனும் சொன்னாங்க
சார்.. அது தான் பார்த்திட்டு போறாங்க.. தப்பா நினைகாதீங்க சார்... இன்னும் இரண்டு மாசத்தில அப்ப்ரைஸல் இருக்கு....
அதுக்கு வேட்டு வச்சிடுவீங்க போல இருக்கு சார்.. நீங்க சொல்லுரது....

உடனே அக்கவுன்ட்ஸ்... மோகன் உனக்கு இங்கிரிமேண்ட் கன்ஃப்ர்ம்டா...... அடுத்த மாசமே.. வருது பார்....எம் டி சொல்லிட்டார்...

உன் மெயில ஊருக்கு போன உடனே செக் பன்னு.... அவனை பார்த்து கண்ணடித்தார்....

பேசிக் கொன்டே பாட்டில வாயில் கவுத்திக் கொண்டார்...

மணி 3.00 நெருங்கியது... தட தட வென்று சத்தம்.... காவேரி.. பாலத்தை கடக்கிறது பாண்டியன்....

அட திருச்சி வருது...


சார் திருச்சி வந்திருச்சு நான் போய் படுக்க போறென் சார்....

போப்பா.. போய் உன் சீனியர் மானத்த காப்பாத்து யாரோ கமண்ட் அடிக்க..


அவன் , அடப்பாவிகளா..ஏ ஸி டிக்கட் எடுத்துட்டு கக்கூஸ் பக்கம் நின்னு கிட்டு திருச்சி வரை.... தண்ணி....காசுடா.. காசு உங்க காசாயிருந்தால் செய்வீங்களா... அதுவும் தண்ணி அடிக்க... மனசுக்குள் இவனுகளை எஞ்சின் பக்கம் ஜெனரல் கம்பார்ட்மெடண்ட்ல போட்டு கூட்டிக்கிட்டு வந்திருக்கனும்.. கருவினான் மோகன்...

அவன் படுக்கும் போது.. பாண்டியன் திருச்சியவிட்டு மெதுவா கிளம்பியது......

No comments:

Post a comment