பட் அவங்க ரெண்டு பேரும் ரொம்ப மூத்தவங்க.. கிட்டத்தட்ட பல வருஷமா வேலை செய்யுறவங்க.... அவங்க எப்படி ஏமாத்த முடியும்..? தவிர எனக்கு கணக்கு வழக்கு எல்லாம் அவ்வளவா பார்க்க தெரியாது...
கார்த்திக் இதை கேட்டுவிட்டு "டேய்... என்னதான் உன் கழுத்தை ரெண்டு பக்கமா திருப்ப முடியும்னாலும் உன் முதுகை உன்னால பார்க்க முடியாது டா.... அதைத்தான் அண்ணி உனக்கு சொல்லி புரிய வெக்குறாங்க.... என்ன அண்ணி நான் சொல்லுறது கரெக்டா?.." என்று கார்த்திக் சொல்லி முடித்த பிறகு ராகவும் சந்கீதாவுன் ஒன்னும் புரியாமல் கார்த்திக்கை கொஞ்ச நேரம் அப்படியே பார்த்தார்கள்....
சரி விடுங்க நான் சொல்லுறது உங்களுக்கு புரியலைன்னு நினைக்குறேன்.... என்னதான் CEO வா இருந்தாலும் உன்னால எல்லாத்தையும் தெரிஞ்சிக்க முடியாது அதுக்கு பதிலா இன்னொருத்தர் பார்வைல இருந்து நீ தெரிஞ்சிக்கொன்னு சொல்ல வந்தேன்...... ஹ்ம்ம் ஒரு விஷயத்தை தெளிவா பேசி புரிய வைக்க முடியாதவன் முட்டாள்.. -
"நீங்க சொன்னது புரியல கார்த்திக்..." - என்று சாதாரணமாக சங்கீதா சொல்ல... "ஹா ஹா ஹா.." என்று சத்தமாக ராகவ் சிரித்தான்... நெத்தியில் முடி ஆட இருவரையும் திரும்பி திரும்பி பார்த்து முறைத்துவிட்டு "என் ப்ரேக்ஃபாஸ்ட் டயத்த வேஸ்ட் பண்ணது என் தப்பு.... நான் வரேன்.... என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாய் நடந்தான் கார்த்திக்....." அவன் போவதை கண்டு சிரித்துவிட்டு மீண்டும் இருவரும் பேச ஆரம்பித்தார்கள்....
யாரையும் எதுக்கு நம்புற ராகவ்?.... நீ தான் உன் கம்பனிக்கு CEO.. இன்னைக்கி உனக்கு நான் ஹெல்ப் பண்ணுறேன்.. எங்கேங்க ஒட்டைங்க இருக்குன்னு நான் உனக்கு காமிக்குறேன்.... அப்படி நன் நிரூபிச்சிட்டா அவங்கள என்ன செய்வ?...
"குட் கொஸ்டீன்...." என்று யோசித்துவிட்டு மெதுவாக "ஏதாவது ஒரு வழி பண்ணுறேன்...." என்று முனுமுனுத்துக் கொண்டான்....
IOFI வளாகத்தில்....
ஃபார்மாலிட்டிக்கு சஞ்சனா அனைத்து ஃபைல்களையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு ராகவிடம் குடுத்தாள்..
வெளியே சற்று உருமிக்கொண்டே ஒரு BENZ கார் ராகவ் காபின் முன்பு வந்து நின்றது..
அதில் இருந்து சஃபாரியில் இரண்டு முதியவர்கள்.. சுமார் 64 மற்றும் 67 வயதுடையவர்கள் இறங்கினார்கள்...
சங்கீதா... திஸ் இஸ் மிஸ்டர். வில்லியம்ஸ் & திஸ் இஸ் மிஸ்டர். கணேஷ்.. ஜென்டில்மேன் ஐ டேக் ப்ரைட் இன் இன்ட்ரட்யூசிங் சங்கீதா டு யூ.... எ பர்சன் ஹூ ஹேஸ் ரிச் நாளேட்ஜ் இன் ஃபைனான்ஸ்.
இன்னிக்கி வரைக்கும் லாப நஷ்ட கணக்குல நீங்க என்ன சொல்லுரீன்களோ அதை நான் அப்படியே பார்த்துட்டு கையெழுத்து போட்டுடுவேன்.. பட் இவங்க எனக்கு ரொம்ப வேண்டியவங்க..
வேண்டியவங்கன்னா?.... - வில்லியம்ஸ் அவர் வயதுக்கே உரிய நக்கலுடன் சிரித்துக்கொண்டே கொஞ்சம் இழுத்தார்.. ஆனால் ராகவ் அதற்கெல்லாம் இடம் குடுக்காமல் கொஞ்சம் விறைப்பாக "லெட்ஸ் கெட் பேக் டு தி வரக் ஜென்டில்மேன்...." என்று சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தான்..
"என் மேல உள்ள அக்கறையில...." ராகவ் இதை சொல்லும்போது முதியவர்கள் இருவரும் முழித்தார்கள்..."ஐ மீன்... தப்பா எடுத்துக்காதீங்க.... உங்கள போல இவங்களும் என் மேல உள்ள அக்கறையில..." என்று சரியாக வாக்கியத்தை தொடர்ந்த பிறகு இருவரும் "சப்.. ஒஹ்... " என்று சாதாரணமாக கவனிக்க தொடங்கினார்கள்... ராகவ் தொடர்ந்தான்... "இவங்களும் இந்த கணக்கு வழக்கு எல்லாத்தையும் ஒரு தடவ அலசி ஆராயனும்னு விரும்புறாங்க.... இஃப் யூ டோன்ட் மைன்ட்...." என்று அவர்களைப் பார்க்கும்போது ஒன்றும் பேசாமல் இருவரையும் பார்த்தார்கள் அந்த பெருசுகள்...
எனி அப்ஜக்க்ஷன்?... என்றான் ராகவ்..
ஒன்றும் பேசாமல் "நோ அப்ஜக்ஷன்" என்று லேசாக கண்களை இருக்கி தலையை மட்டும் அசைத்து பதில் சொன்னார்கள் அந்த இரு பெரியவர்களும்..
"சங்கீதா... டேக் யுவர் ஓன் டைம்...." என்று சொல்லிவிட்டு அவளை தனிப்பட்டு ஆடிட் செய்ய சொன்னான் ராகவ்...
சில நேரத்துக்கு பிறகு தன் சொந்த ஆய்வில் சில முறைகேடுகள் இருப்பதை சங்கீதா தெளிவாக சுட்டி காமித்தாள். அதைப்பற்றி ராகவ் மிகவும் கண்ணியமாக மரியாதையுடன் அந்த இரு பெரியவர்களிடம் கேள்வியாக எழுப்பினான்..
முதலில் வயதுக்குரிய ஈகோ... அடுத்து அவன் தந்தை காலத்தில் இருந்து பணி புரிந்து அங்கேயே பழம் தின்னு கொட்டை போட்ட மனிதர்கள்... இவனையும், இவனது வயதையும் எண்ணி வந்த கேள்விகளை மனதளவில் கொஞ்சம் கடுமையாக கருதி அவனிடம் கோவத்தை காமித்தார்கள். "நாங்க யாருன்னு தெரிஞ்சிதான் பேசுறியா?" என்று வில்லியம்ஸ் மெதுவான குரலில் கேள்வியை எழுப்ப.. ஃபைனான்ஸ்ல ஸ்ட்ராடஜிக் திங்கிங் இருக்க உனக்கு?... லாபம்னா அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? என்று கணேஷ் சங்கீதாவை நோக்கி சற்று மெதுவாக சீற.... ராகவ்கு கொஞ்சம் சூடேறியது...
"நீங்க பேசிட்டு இருக்கிறது இந்த நிர்வாகத்தோட CEOக்கு உதவி செய்ய வந்த எக்ஸ்டர்னல் கன்ஸல்டன்ட் கிட்ட.... சோ லெட்ஸ் டூ தி ஜாப் ப்ரோஃபஷ்னலி" - என்று கொஞ்சம் தொழில் தர்மம் கருதி ராகவ் சற்று முறைத்து பேசினான்..
உண்மையில் அந்த கணக்கில் ஓட்டை இருப்பது அந்த இரண்டு பெரியவர்களுக்கும் தெரியும்.... ஆனால் அதற்கு பதில் சொல்லும் நிலையில் அவர்கள் இல்லை.... அதை சமாளிக்க "உனக்கு வயசு கம்மி.... மத்தவங்க சொல்லுறதை கேட்டு ஏன் ஆடுற? இத்தன வருஷம் நாங்க பார்த்து வளர்ந்த கம்பெனி இது... இப்போ என்ன திடீர்ன்னு வெளியில இருந்து ஆளுங்கள கூட்டிட்டு வந்து ஆடிட் பண்ணுற?... மனசுல ஏதாவது புதுசா செயுரோம்னு நினைச்சி இருக்குறதை கெடுத்துகாத.... அவ்வளோதான் நான் சொல்ல முடியும்..." என்று கணேஷ் கொஞ்சம் காரசாரமாக பேச...
"நீங்க ரெண்டு பேருமே கணக்கு வழக்குல வல்லவங்கதான்.... ஒத்துக்குறேன்.. அப்போ நான் கேக்குற கேள்விங்களுக்கு பதில் சொல்லலாமே... அதுக்கு ஏன் தயங்குறீங்க? உங்களுக்குதான் கணக்கு வழக்குல ஸ்ட்ராடஜிக் திங்கிங் இருக்க.... லாபம்னா என்ன?... நஷ்டம்னா என்ன?... அப்படிங்குற பெரிய வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் தெரியும்...." என்று ராகவ் கூலாக கேள்வி எழுப்ப.... பதிலுக்கு கணேஷ் "ஒரு CEO வா உனக்கு இந்த கம்பனியில எப்படி டிசைன் உற்பத்தி அதிகரிக்கணும்னு தெரியுமா? எப்படிபட்ட பாதைல இந்த நிர்வாகத்தை வழி நடத்தனும்னு உனக்கு எல்லாம் தெரியுமா?.. சும்மா ஏதோ சின்னவன்னு நினைச்சு மரியாதை குடுத்து பதில் சொல்லலாம்னு நினைச்சா ஓவரா பேசுற...." என்று கணேஷ் கொஞ்சம் கோவமாக கத்த... வில்லியம்ஸ் கொஞ்சம் குறுக்கிட்டு "ஒரே ஒரு விஷயம்.... ஒரு காலத்துல உங்கப்பனே எண்கள கெஞ்சிதான் இந்த கம்பனியில வேலைக்கு சேர்த்துகிட்டான்... போதுமா?" என்று கொஞ்சம் திமிராக பேசிவிட்டு அமைதியாக அமர்ந்தான்..
காளிதாஸ் ராகவ் அருகே வந்து காதில் மெதுவாக "இவங்க அந்த காலத்துல செஸ் விளையாட்டு சாம்பியன்ஸ்பா....
அப்போதுல இருந்தே இவங்களுக்கு கொஞ்சம் மண்டகர்வம் ஜாஸ்த்திதான்...." என்று சொல்லும்போது... வில்லியம்ஸ் "என்ன எங்களுக்கு ஃபைனான்ஸ்ல அறிவு இல்ல... செஸ் மட்டும் விளையாட தெரியும்னு அந்த கிழவன் காதை கடிக்குறானா?" என்று நக்கலாய் கேட்க...
அப்போ உங்க கிட்ட இருக்குற உண்மையான திறமை செஸ் விளயாடுறதுதான்.... இல்ல?....
ஹாஹ் ஹா.... திறமைன்னு சொல்லாதப்பா.... நாங்க க்ராண்ட் மாஸ்டர்ஸ்.... என்று வில்லியம்ஸ் சிரித்து கொஞ்சம் அதே வழக்கமான திமிரில் சொன்னார்....
ராகவ் சற்று நேரம் அமைதியாய் யோசித்தான்....
என்ன?.... இவங்களுக்கு ஃபைனான்ஸ் அறிவு இல்லாதப்போ எப்படி வெறும் செஸ் விளையாட்டு திறமைய வெச்சி வேலைக்கு எடுத்துகுட்டங்கன்னு யோசிக்குறியா?...
ச்ச.... ச்ச......அப்படியெல்லாம் யோசிப்பனா? நீங்க இல்லைன்னா கம்பெனியே திவாலாகி இருக்குமே?.... என்று கொஞ்சம் அவனுக்கே உரிய நக்கலுடன் பதில் சொன்னான் ராகவ்....
ஆனா இப்போ ஒரு பொறுப்புள்ள CEO வா ஒரு முடிவு செஞ்சி இருக்கேன்... ஒரு வேல நான் உங்க ரெண்டு பேரையும் செஸ் விளையாடி ஜெய்ச்சிட்டா நான் உங்கள விட பெஸ்டுன்னு அர்த்தம்....கரெக்ட்? - என்று ராகவ் சீரியசாக கேள்வி எழுப்ப... அந்த இரு பெருசுகளும் கொஞ்ச நேரம் இடை விடாது சிரித்தார்கள்....
ஐ அம் நாட் ஜோக்கிங் ஹியர் ஜென்டில்மேன்..... உங்க ரெண்டு பேரையுமே ஒரே சமயத்துல விளையாடி நான் ஜெயிச்சி காமிச்சா நீங்க உங்க பதவிய விட்டு விலகிடனும்.... தோத்துட்டா நான் என் பதவியில இருந்து நீங்கிடுறேன்.... சவாலுக்கு நீங்க தயாரா? - என்று ராகவ் ஓப்பனாக கேட்க..... வில்லியம்ஸ் சிரிப்பை நிறுத்திவிட்டு "காளிதாஸ்" என்று சத்தமாக கத்த அந்த முதியவர் உடனே அந்த இரு பெருசுகளின் அரிதான இரண்டு செஸ் போர்டுகளை எடுத்து வந்து வைத்தார்....
என்னதான் அறுவது வயதை தாண்டினாலும் வில்லியம்ஸ் கொஞ்சம் வாட்ட சாட்டமான மனிதர்தான், ராகவின் அருகே வந்து நிற்கும்போது முகத்துக்கு முகம் பார்க்கும் உயரம் இருந்தது அவருக்கு. ராகவின் எதிரே வந்து நின்று "கணேஷ்" என்று கத்தினார்... கணேஷும் வந்து நின்றார்.... "ராகவ்... ஐ அப்ரிஷ்யேட் யுவர் கட்ஸ்.... ஒன்னு எங்கள ஜெய்ச்சி காமி அப்படியும் இல்லைன்னா மேட்ச் ட்ரா பண்ணு.. ஆனா தோத்துட்டா... நீ சொன்ன வார்தைகள நியாபகம் வெச்சிக்கோ.. அதாவது..." என்று வில்லியம்ஸ் முடிப்பதற்குள் ராகவ் பேசினான்..
தோத்துட்டா இன்னிக்கே என்னோட பதவிய நான் ராஜினாமா பண்ண தயார்.. அதுக்கு சாட்சி காளிதாஸ்... என்று சொல்லி காளிதாசை திரும்பி பார்த்தான் ராகவ்.. வில்லியம்ஸும் கணேஷும் கூட காளிதாசைப் பார்த்தார்கள். காளிதாஸ் மூவரையும் பார்த்து "ஹச்.... நான் எல்லாருக்கும் ஒரே மாதிரிதான்.... ஆரம்பிக்கலாமா?" என்றார்..
"ஹ்ம்ம்.. போச்சு.... கிழவன் தும்பிட்டான்.... நல்ல சகுனம்.... இனி ஜெயிச்சா மாதிரிதான்.." - என்று கார்த்திக் முனு முணுத்துக் கொண்டான்....
சஞ்சனாவும் சங்கீதாவும் ராகவைப் பார்த்து ஆல் த பெஸ்ட் என்று கட்டை விரலை உயர்த்தி செய்கையால் சொல்லிவிட்டு அமர்ந்தார்கள்.
இரண்டு காபின் இருந்தது.... ஒரு ஒரு காபின் உள்ளேயும் வில்லியம்ஸும் கணேஷும் அமர்ந்திருந்தனர்.... கண்ணாடியால் செய்யப்பட்ட அந்த உயர் ரக செஸ் போர்டில் க்லவுஸ் அணிந்து ப்ரோஃபஷ்னலாக காளிதாஸ் காயின்ஸ் அடுக்கி வைக்க... இரு பெருசுகளும் ஹவர் கிளாஸ் கவுத்து வைத்து நேரத்தைக்குறித்துக் கொண்டார்கள். நடுநிலையாக டைம் கவனிக்க காளிதாசையே முன்நிறுத்தினார்கள்....
இப்போது அனைத்தும் தயார்.... வில்லியம்ஸ் ராகவை நோக்கி "ராகவ்.... ஆர் யூ ஷூவர் யூ வான்ட் டு ப்ளே திஸ் கேம்?.... தோத்துட்டா இன்னியோட உன் மொத்த ஆட்டமும் காலி.... இந்த விளையாட்டோட முடிவுல இருக்குற சீரியஸ்னஸ் உனக்கு புரியுது இல்ல....? தோத்ததுக்கு அப்புறம் திரும்பி வந்து கெஞ்ச கூடாது....
"ஹஹ்ஹாஹா.... இந்த விதி முறை உங்களுக்கும்தானே?...." என்று ராகவ் பதிலுக்கு கூலாக கேள்வி எழுப்ப.... ஒரு வில்லத்தனமான புன்னகை மட்டுமே வில்லியம்ஸ் முகத்தில் தவழ்ந்தது..
வில்லியம்ஸ், கணேஷ், காளிதாஸ், ராகவ்... அனைவரும் நேரத்தைப் பார்த்துக் கொண்டனர்... காளிதாஸ் "லெட்ஸ் ஸ்டார்ட்" என்று சொல்ல...
இப்போது ஆட்டம் தொடங்கியது...
வில்லியம்ஸ் போர்டில் அவர் பக்கம் இருந்தது வெள்ளை நிற காயின்ஸ்.... ராகவ்கு கருப்பு..
கணேஷின் போர்டில் கணேஷுக்கு இருந்தது கருப்பு நிற காயின்ஸ்.... ராகவ்கு வெள்ளை...
விதி முறைகளின் படி முதலில் வில்லியம்ஸ் வெள்ளை காயின்ஸ் வைத்திருப்பதால் அவர் போர்டில் அவர்தான் முதல் மூவ் வைக்க வேண்டும்... வைத்தார்.... அதன் பின் ராகவ்..
இப்போது ராகவ் அதே விதி முறைகளின் படி கணேஷின் போர்டில் அவனுக்கு வெள்ளை நிற காயின்ஸ் இருப்பதால் அவன்தான் முதல் மூவ் வைக்க வேண்டும்.... வைத்தான்... அதன் பின் கணேஷ்...
ஆட்டம் ஆரம்பித்து முதல் பத்து நிமிடங்கள் நன்றாக சூடு பிடித்தது.. ஆளாளுக்கு இரு பெருசுகளும் அதி புத்திசாலித்தனமாக மூவ்ஸ் வைத்து ஜெயிப்பதற்காக வைத்திருந்த முக்கிய திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக தவிடுபொடியானது....
நேரம் முப்பது நிமிடங்கள் முடிந்திருந்தது.... இப்போது கிட்டத்தட்ட சம நிலையில் காயின்ஸ் வைத்து இன்னும் ஆழ்ந்து சிந்தித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்... மற்றொரு புறம் பதவி பறிபோகும் பயமும் அந்த இரு பெருசுகளின் சிந்தனைக்கு முட்டுக் கட்டையாக அமைந்தது....
நாற்பது நிமிடங்கள் முடிந்தது.... இப்போது உண்மையில்... உண்மையில்.... உண்மையில்.... அந்த இரு பெருசுகளும் நம்ப முடியாத விதத்தில் உடல் வியர்க்க... கைகள் உதற.... அவர்கள் அதிர்ச்சி அடையும் விதம் அதிருப்தியாக ஆட்டம் ட்ராவில் முடிந்தது....
காளிதாஸ் அதிகார பூர்வமாக அதைப் பார்த்து ஊர்ஜிதப் படுத்தினார்.
வில்லியம்ஸ் தன் இருக்கையில் இருந்து எழுந்து ராகவிடம் கை கூட குலுக்காமல் "திஸ் இஸ் மை லாஸ்ட் விசிட் டு IOFI" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விறுவிறுவென கிளம்பினார்... வில்லியம்ஸாவது பரவாயில்லை.... கணேஷ் ரகாவின் முகத்தைக் கூட பார்க்காமல் ஆட்டத்தில் தோத்ததை என்னமோ அவரை மானபங்கப் படுத்திவிட்டது போல எண்ணி மிகவும் இறுகிய முகத்துடன் ஆத்திரத்தில் மேஜையின் மீதிருந்த போர்டினை கைகளால் காயின்ஸ் சிதரும்விதம் தள்ளிவிட்டு கோவமாக அங்கிருந்து கிளம்பினார்.
காளிதாஸிடம் ராகவ் "அடுத்து என்னென்ன மாற்றங்கள் அதிகார பூர்வமா செய்யணுமோ அதையெல்லாம் செய்யுங்க...." என்று சொல்லி முடித்ததும் சங்கீதா, சஞ்சனா, மற்றும் கார்த்திக் ஆகிய மூவரும் ஆச்சர்யமாக ராகவிடம் வந்தார்கள்.. "டேய் மச்சி... உனக்கு செஸ் என்ன ரேஞ்சுல தெரியும்ன்னு எனக்குதான் தெரியும்.... சத்தியமா சொல்லு எப்படி ஜெயிச்ச?...." என்று கேள்வி கேட்க ராகவ் காளிதாஸ் இவர்கள் அனைவரையும் கவனிப்பதைப் பார்த்தான்... "சார் உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா நாங்க கொஞ்சம் தனியா பேசிக்கலாமா?..." என்று சொல்ல.... "ஹச்... ஓகே ஓகே..." என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினார் பெரியவர்...
இந்த கிழவன் தும்பியும் நீ ஜெயிச்சி இருக்க.... மவனே மரியாதையா சொல்லு எப்படி ஜெயிச்ச? - என்று கார்த்திக் புலம்ப..
மச்சி... எப்பேர்ப்பட்ட அதி புத்திசாலியையும் ஏதாவது ஒரு சின்ன சில்லித்தானாம விஷயத்த வெச்சி முட்டாள் ஆக்குறது ரொம்ப சுலபம்.. கொஞ்சம் சிம்பிளா ரெண்டு பேரையும் ஏமாத்தினேன் அவ்வளோதான்....
என்ன பண்ணி ஏமாத்தினடா என்று சஞ்சனா ஆர்வமாக கேட்க....
வில்லியம்ஸ் போர்டுல அவர்தான் முதல் மூவ் வெக்கனும்... ஏன்னா அவர்தான் ஒயிட் காயின் வெச்சிருந்தார்.... முதல்ல அவர் எனக்கு வெச்ச மூவ் என்னன்னு பார்த்துட்டேன்... அதுக்கு பதில் மூவ் வேக்குறதுக்கு முன்னாடி கணேஷோட போர்டுல நான்தான் ஃபர்ஸ்ட் மூவ் வெக்கணும்... ஏன்னா நான் அவர் போர்டுல ஒயிட் காயின்ஸ் வெச்சிருந்தேன்.. அப்போ நான் கணேஷுக்கு வெச்ச முதல் மூவ் என்ன தெரியுமா?
வில்லியம்ஸ் உனக்கு வெச்ச மூவ்.... - என்றாள் சங்கீதா உடனடியாக....
"கரெக்ட்... சோ சிம்பிள் யூ சீ.... ஹா ஹா.... அதுக்கப்புறம் கணேஷ் எனக்கு என்ன பதில் மூவ் வெச்சாரோ அதை நான் வில்லியம்ஸுக்கு வெச்சேன்..... சோ.... ஆக மொத்தத்துல விளையாட்டு ரெண்டு கிழவனுங்களுக்குள்ள தான் நடந்து இருக்கு... வெறும் காய் நகர்த்தி வெச்சதுதான் நான்.... ஆனா இவங்க ரெண்டு பேரும் என் கிட்ட விட்ட சவால்ல சீரியஸா விளையாடும்போது நான் செஞ்ச இந்த சின்ன விளையாட்ட கவனிக்கல...." என்று சொல்லி சிரிக்கும்போது மூவருமே ராகவை "கேடி... ஃப்ராடு" என்று குறும்பாக திட்டிக்கொண்டு இருக்க மீண்டும் காளிதாஸ் உள்ளே வந்தார்...
"சார்... முக்கியமான இன்விடேஷன்... இந்தாங்க.." என்று குடுக்கையில் அதை வாங்கி பிரித்து பார்த்தான் ராகவ். அதில்.... "Considering you as an highly esteemed guest, we take pleasure in inviting you for the International fashion meet to be held at Croydon city London. RSVP" (தமிழில்: உலக அளவில் நடக்க இருக்கும் நவ நாகரீக ஆடை அலங்கார கண்காட்சிக்கு உங்களின் வருகை எங்களுக்கு கௌரவத்தை சேர்க்கும் என்கிற எண்ணத்துடன் உங்களை அழைப்பதில் பெருமை கொள்கிறோம்..) என்று எழுதி இருந்தது.
இதைப் பார்த்துவிட்டு ராகவ் காளிதாஸிடம் "இந்த தடவ ஒரு டிக்கெட் இல்ல சார்.... ரெண்டு டிக்கெட்....ஏன்னா நான் என் பொண்டாட்டியோட சேர்ந்து லண்டன் போகணும்...." என்று சொல்லி ராகவ் இருக்கும் இடத்தை கூட மறந்து அவன் சாராவை இழுத்து அணைக்க.... "நாம கொஞ்சம் டீசன்ட்டா கழண்டுக்கலாம்...." என்று கார்த்திக் முனு முன்னுக்க.... "கரெக்டா சொன்னடா... வா போலாம்..." என்று சஞ்சனாவும் கூறினாள்.. அதைத் தொடர்ந்து அனைவரும் வெளியே வந்த பிறகு ராகவையும் சந்கீதவையும் தனியே அனுப்பிவிட்டு இவர்கள் இருவரும் வேறு பக்கம் சென்றார்கள்.... காளிதாஸும் அங்கிருந்து அடுத்த வேலைகளை கவனிக்க சென்றார்.... கடைசியாக மூடி இருந்த ராகவ் காபின் உள்ளே காளிதாஸ் அவரின் செல்ஃபோனை அங்கேயே மறந்து வைத்து சென்றுவிட்டார்..
ராகவ் ஏதோ முக்கியமாக பேச காளிதாசை அழைக்க அவர் செல்ஃபோனில் ராகவ் காபின் உள்ளே கணீரென ஒலித்தது இந்த பாடல்.. "உன்னை அறிந்தால்.... நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்.... உயர்ந்தாலும்... தாழ்ந்தாலும்.. தலை வணங்காமல் நீ வாழலாம்... ஹோ ஹ் ஹோ ஹோ ஹோ ஹோ...லா ல லா ல லா....." (மீண்டும் லண்டனில் சந்திப்போம்....)