Thursday, 19 November 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 39

டிக் டிக்... என்று நேரம் பத்து மணியை தொட அந்த பழைய கடிகாரத்தின் முட்கள் சற்று சோம்பேறியாக சுத்திக்கொண்டிருந்தது.... அப்போது "உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்.." என்று அந்த இடத்தில் ரேடியோ மட்டும் உற்சாகமாக பாடிக்கொண்டிருக்க "யாராவது அத கொஞ்சம் கம்மி பண்ணுங்கயா...." என்று தலையில் கை வைத்து ஏதோ வருத்தி எடுக்கும் சிந்தனையில் ஆழ்ந்திருக்க.. "உயர்ந்தாலும் தாழ்ந்தாலும், தலை வணங்காமல் நீ வாழலாம்.." என்று மீண்டும் சத்தம் குறையாமல் பாடிக்கொண்டிருந்தது.. "யோவ்.. யாராவது நிறுத்துறீங்களா? இல்ல அந்த எழவ தூக்கி போட்டு உடைக்கட்டுமா?".... என்று இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் அடித்தொண்டையில் இருந்து கத்தினார்.... "நல்ல பாட்டுதானே அதுக்கு ஏன் இந்த மனுஷன் இப்படி கத்துறாரு...." என்று முணுமுணுத்துக்கொண்டே ஹெட் கான்ஸ்டபிள் அந்த ரேடியோவில் சத்தத்தை திருகி குறைத்தார்.. அப்போது "ட்ரிங்.... ட்ரிங்...." என்று மேஜையின் ஓரத்தில் உள்ள ஃபோன் ஒலித்தது....
ஹலோ" - கணீர் குரலில் பேசினார் ராஜேந்திரன்..

"ஹலோ.. போலீஸ் ஸ்டேஷன்?" - ஹாஸ்பிட்டலில் இதற்கு முன்பு கேட்ட அதே குரல் இப்போது ராஜேந்திரனுக்கு கேட்டது..

"ஆமா... போலீஸ் ஸ்டேஷன் தான்.... நீ... அன்னிக்கி..." - என்று ராஜேந்திரன் பேசும்போது குறுக்கிட்டான்..

"சார் நான் யாருங்குறதை அப்புறம் பார்த்துக்கலாம்.... அன்னிக்கி நீங்க ஹாஸ்பிட்டல்ல தப்ப விட்ட ஆளு இன்னைக்கி ரயில்வே டேஷன்ல இருக்கான்.." - படபடப்புடன் பேசினான் அவன்...
"நீ யாருங்குறதை முதல்ல சொல்லு...." - இன்ஸ்பெக்டர் எரிச்சலுடன் கத்தினார்...

"இப்போ உங்களுக்கு மேல விவரம் சொல்லவா இல்லை ஃபோன் வெச்சிடவா?" - பயந்த குரலில் சத்தம் குறைவாகவும் அதே சமயம் கோவமாகவும் பேசினான்..

"ஏய்.. இரு இரு... சொல்லு விஷயம் என்ன?" - ஒரு புறம் எப்படியாவது அவனை இன்னும் கொஞ்சம் பேச விட்டு அவனது குரலை டாப் செய்ய அருகே உள்ள கான்ஸ்டபிளை அவசரமாக கையசைத்து சத்தம் இல்லாமல் அமைதியாய் அழைத்து செய்கை காட்டினார்....

"அந்த ஆளு ப்லாட்ஃபார்ம் எட்டுல ஒரு எஸ்.டி.டீ பூத் கிட்ட இருக்கான். அவன் கைல ஒரு பொட்டி இருக்கு..கூடவே ஒரு கேமரா வெச்சிருக்கான்...." - பேச்சுக்கு இடையே அதிகம் மூச்சு வாங்கியது அவனுக்கு..

"முதல்ல நீ யாருங்குறது..." - இன்ஸ்பெக்டர் பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்டான்..

"சார்.. அதான் வேணாம்னு சொல்லுறேன்ல.. நான் வெக்குறேன்..." - இந்த முறை நன்றாகவே கத்தினான்..

"இரு இரு.. நான் கேக்கல.. கேக்கல... ஹலோ.. இருக்கியா?.. ஹலோ... ஹலோ...." - இன்ஸ்பெக்டரின் கடைசி ஹலோவுக்கு குரல் உயர்ந்தது..

"சீக்கிரம் சொல்லுங்க..." - பதட்டம் இன்னும் அதிகம் ஆனது அவன் குரலில்

"நீ யாருன்னு சொல்லலைன்னா பரவாயில்ல... ஆனா நாங்க தேடுற ஆள் அவந்தான்னு எப்படி தெளிவா சொல்லுற?" - கோவத்தை அடக்கி அமைதியாக பேச முயற்சித்தார் ராஜேந்திரன்...

"அவன் ஸ்டேஷன் உள்ள போறதுக்கு முன்னாடி ஒரு பப்ளிக் டாய்லட் கிட்ட ஒரு கருப்பு கவர்ல நீங்க போன தடவ ஹாஸ்பிடல்ல அவனை தப்பிக்க விட்டப்போ போட்டிருந்த வார்டன் டிரஸ்லாம் தூக்கி எறிஞ்சிட்டு போனான்... என்னால அதிகம் பேச முடியாது.. முடிஞ்சா புடிச்சிக்கோங்க.... நா கெளம்புறேன்..."

"ஹலோ.. ஹலோ..." கீ.. கீ.. கீ.. கீ....- ஃபோன் துண்டிக்கப்பட்டது...

"ச்ச.. என்ன எழவுயா இது.... வாங்கையா.."

ராஜேந்திரன் உடனே ஹெட் கான்ஸ்டபளிடம் என்னென்ன செய்ய வேண்டுமென்று ஜீப் ஏறிக்கொண்டே கைகளை அசைத்து அசைத்து "புரிஞ்சிதாடா வெலக்கென்ன.." என்று கடித்துக்கொண்டே விளக்க "ஆங் ஆங்.. ரைட்.." என்று சுய கெளரவம் எதுவும் பார்க்காமல் அதே சமயம் ஒழுக்கம் தவறாமல் இன்ஸ்பெக்டருக்கு பதில் அளித்துக்கொண்டே பவ்யமாக உடன் சென்றார்....

ஃபோனில் ஹெட் கான்ஸ்டபிள் யார் யார் எங்கெங்கே மஃப்டியில்

நிற்க வேண்டுமென்று அவசரமாக சொல்லிக்கொண்டே இருக்க ஸ்டேஷன் வந்தது.. ஒரு கான்ஸ்டபிள் சிகப்பு நிற டீ ஷர்ட் மற்றும் வேஷ்டியில் நின்றுகொண்டு சாதாரணமாக பீடி பிடித்துக்கொண்டிருந்தார்.... அவரிடம் முன்கூட்டியே தகவல் சொல்லியாகிவிட்டது..

ஸ்டேஷன் உள்ளே டூ வீலர் மற்றும் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் ஒரு ஐந்து அடி சுவர் தடுப்பு இருந்தது.. அங்கே குனிந்து மெதுவாக ராகவ்கு ஃபோன் செய்தார் ராஜேந்திரன்..

"ஹலோ ராஜேந்திரன்.. சொல்லுங்க..என்ன விஷயம்.." - சீரியஸாக கவனித்தான்.. ராகவ்....

"சார் நீங்க அடையாளம் சொன்ன ஆளை கண்காணிச்சோம், அவன் இப்போ ரயில்வே ஸ்டேஷனில் இருக்கான். கைல ஒரு பெட்டியும் கூடவே ஒரு சின்ன வீடியோ கேமராவும் இருக்கு. கூடவே இன்னொரு முக்கிய விஷயம் சொல்லணும்..."


"சொல்லுங்க...."

"அன்னிக்கி ஹாஸ்பிட்டல்ல எங்க கான்ஸ்டபிள் ஒருத்தனை சுட்டுட்டு ஓடின ஆசாமியோட உருவங்க எல்லாமே இவனோட நல்லா பொருந்துது சார்.."

"ரியல்லி ஃபன்டாஸ்டிக்.. நீங்க எல்லா என்ட்ரன்ஸ்லையும் உங்க ஆளுங்கள போட்டுடுங்க.. நான் உடனே கிளம்பி அங்க வரேன்.... அவன் எனக்கு என் கஸ்டடியில வேணும். அப்புறம்...அவன் பார்க்க கொஞ்சம் வாட்டசாட்டமா இருந்தானா?.."

"ஆமா சார்..."

கண்களை மூடி தீவிரமாக யோசித்தான்.."ஹ்ம்ம்... எனக்கும் அந்த உருவம் பொருந்துது.."

"நீங்க எதை சொல்லுறீங்க.."

"ஒன்னும் இல்ல நேர்ல வந்து சொல்லுறேன்..."

அதன் பிறகு ராகவின் கார் சிறுத்தையை போல சீறிப் பாய்ந்ததெல்லாம் நமக்கு ஏற்கனவே தெரியும்..

சற்று நேரத்துக்கெல்லாம் மீண்டும் ராஜேந்திரன் ஃபோன் செய்தார்..

சொல்லுங்க ராஜேந்திரன்...

நீங்க மெதுவா உள்ளே டூ வீலர் சைக்கிள் பார்கிங் இருக்குற இடத்துக்கு வந்துடுங்க.... முடிஞ்ச வரைக்கும் கூட்ட நடமாட்டத்தோட சேர்ந்து முகம் காமிச்சிகாம வந்து சேருங்க... ஒரு நாற்பது அம்பது அடி கடந்து வந்தா எங்க ஆளுங்க சத்தம் குடுக்காம நின்னுட்டு இருப்பாங்க... அங்க வந்து அடையாளம் பார்த்துக்கோங்க...

சரி சரி.. நீங்க சொன்ன மாதிரியே வரேன்...

தனது வண்டியை ஸ்டேஷன் உள்ளே கூட நிறுத்தாமல் வெளியே நிறுத்திவிட்டு நால்வருமே தங்களது முகங்களுக்கு தொப்பியோ துணியையோ கட்டிக்கொண்டு ஓரளவுக்கு முகம் தெரியாத விதம் நாலா பக்கமும் பிரிந்து தனித்தனியே இன்ஸ்பெக்டர் சொன்ன இடத்துக்கு சாதாரணமாக சத்தமோ ஆர்பாட்டமோ இன்றி வந்து சேர்ந்தனர்... பார்கிங் என்ட்ரன்ஸ் அருகே பாவமாக ஏதோ கொஞ்சம் பச்சை நிறத்தில் வெளிச்சம் கொடுத்துக்கொண்டிருக்கும் டியூப் லைட் இவர்கள் சேர்ந்தடையும் இடத்தை முக்கியமாக கருதி இருட்டாகவே வைத்திருந்தது.. அனைவரும் ராஜேந்திரனுடன் ஒன்று சேர்ந்தனர்..

"சார்.." - என்று ராகவ் மெதுவாக நெருங்க..

"ஷ்ஷ்.. மெதுவா பேசுங்க" என்று அமைதி படுத்தினார் ராஜேந்திரன்..

"நேரா போய் துப்பாக்கிய காமிச்சி சுத்தி வளைச்சி பிடிக்க வேண்டியதுதானே?...." - சத்தமின்றி ராகவ் ராஜேந்திரனுடன் கேள்வி எழுப்ப.... "எனக்கும் போலீஸ் மூளை கொஞ்சம் இருக்கு சார்...." என்று ராகவை நோக்கி தனது கோவத்தை அடக்கி அதே சமயம் பவ்யமாக பேசினார்....

இடுப்பில் சற்று லூசான பேன்டை மேலே தூக்கிவிட்டு கண்கள் சுருங்க சற்று கோவமாக.... "அதானே... நீங்க உங்க வேலைய பாருங்க சார்..." என்று சொல்லி ராகவை நோக்கி "அவர் போலீஸ் டா... சும்மா குவிஸ் ல உன் பேச்சை கேட்டு நான் அசிங்க பட்ட மாதிரி இங்கே உன் பேச்சை கேட்டு வேல செஞ்சி இங்கே இருக்குற கான்ஸ்டபிள்ஸ் முன்னாடி அவரு அவமானப்படனும்னு பார்க்குரியா?"

பேசிக்கொண்டிருக்கும்போது காலில் யாரோ எத்தி உதைப்பதை உணர்ந்து "அம்மே..." என்று கத்தினான்... "சாரி சாரி..." என்றாள் சங்கீதா... வழக்கம் போல பொறுமையே இல்லாமல் போலீஸ் கிட்ட கூட வாதாடுறானேன்னு எண்ணி ராகவின் மீதுள்ள கோவத்தில் ராகவை அடிக்க போக அது கார்த்திக்கின் காலில் பட்டுவிட்டது....

மீண்டும் இடுப்பில் நறுக்கென்று ஏதோ கிள்ளியது போல உணர்ந்தான் "இஸ்... எப்பா..." என்று லேசாக அலறினான்... "அறிவு கெட்ட லூசு பின்னாடி கால் எடுத்து வெக்கும்போது ஏண்டா என் கால நசுக்குற...." என்று சஞ்சனா கொஞ்சம் கடித்தாள்.... "ஊருல இருந்து கிளம்பும்போதே வாசப்படியாண்ட பூனை குறுக்கால ஓடுச்சி... அப்போவே என் அம்மா கூட அடுத்த நாள் கெளம்பி போடான்னு சொல்லுச்சி.... கேக்கல... நான் கேக்கல... யோசிச்சி இருக்கணும்... இந்த எனிமிய நான் பார்க்க வந்திருக்ககூடாதுன்னு அப்போவே யோசிச்சி இருக்கணும்.. தப்பு பண்ணிட்டேன்.."


"சார் கொஞ்சம் பேசாம இருக்கீங்களா?" - இன்ஸ்பெக்டர் கொஞ்சம் கடுப்பாகி கார்த்திக்கை நோக்கி பேச.... "உக்கும்.. வீட்டுல நாய் காணாம போச்சுன்னு கம்ப்ளைன்ட் குடுக்க வர்றவங்க கிட்ட நாய் படத்தை பேப்பர்ல விளம்பரம் குடுங்கன்னு சொல்லுற போலீசயெல்லாம் கூட்டிட்டு வந்தா இப்படிதான் டென்ஷன்ல கத்துவாங்க.... இந்நேரம் அவங்க கிட்ட இருக்குற மோப்பம் புடிக்குற நாய கூட்டியாந்திருந்தா கூட அது போய் அவன் ரெண்டு காலுக்கும் நடுவுல இருக்குற பொடலங்காவ கடிச்சி மேட்டர் முடிச்சி இருக்கும்..... இங்கே சும்மா செவுத்துக்கு பின்னாடி கூடி நின்னுக்கிட்டு சவுண்ட் உட்ராறு...." என்று மெளனமாக வானை நோக்கி முணுமுணுக்க.. "என்ன சொன்னீங்க?...." - என்று இன்ஸ்பெக்டர் ஆத்திரமாக கேட்க.. "இன்னைக்கி நீங்கதான் சார் அவனுக்கு எமன்...." என்று சத்தமாக சொடக்கு போட்டு மரியாதையாக அவரைப் பார்த்து சொல்ல.. கொஞ்சம் கார்த்திக்கை முறைத்துக்கொண்டே ராகவ் பக்கம் திரும்பி பேச ஆரம்பித்தார் ராஜேந்திரன்.. "சார்.... அவனை பிடிச்ச பிறகு நீங்க சொல்லுறா மாதிரி உங்க கஸ்டடியில எல்லாம் எங்களால ஃபார்மாலிட்டி படி அவனை ஒப்படைக்க முடியாது சார்.... முதல்ல ஸ்டேஷனுக்கு தான் கூட்டிட்டு போகணும்...."

"அய்யோ.... முதல்ல நீங்க அவனை புடிங்க சார்...." - இன்ஸ்பெக்டரை நோக்கி கூலாக கார்த்திக் இதை சொல்ல "ஹி இஸ் ரியலி இரிடேட்டிங் மீ...." என்று தன் லத்தியை கார்த்திக் நோக்கி கான்பித்து ராகவிடம் கடித்துக்கொண்டார் ராஜேந்திரன்....

தயவு செஞ்சி கொஞ்சம் பேசாம இருடா.... என் லைஃப் டா இது - என்று ராகவ் சொல்ல கார்த்திக் கொஞ்சம் அமைதி ஆனான்..

"எட்டாவது பிளாட்ஃபார்மில் ட்ரெயின் வரும்போது எஸ்.டீ.டி பூத்துக்கு முன்னாடி "S5" கம்பார்ட்மென்ட் நிக்கும் சார்... அப்போ அதுல எங்க ஆள் ஒருத்தன் மஃப்டியில் நிப்பான்.. சாதாரணமா இறங்குற மாதிரி நெருங்கி வந்து அவனை பிடிக்கிற ப்ளான் இருக்கு, அப்போ கீழையும் பூத் கிட்ட ஒரு ஆள் சிகப்பு டீ ஷர்ட்டில் நின்னுட்டு இருப்பான்.. பிடிக்க கஷ்டம் இருக்காது.. அப்படியே தப்பினாலும் அவனை ஸ்டேஷன் என்ட்ரன்ஸ் முன்னாடி பிடிக்க ரெண்டு பேரையும்...., பயணிங்க வெளியே போற எக்சிட் பக்கமும் ரெண்டு பேரையும் போட்டிருக்கேன்.. நீங்க சொல்லுறா மாதிரி எடுத்தோம் கவுத்தோம் னு சொல்லி துப்பாக்கிய தூக்கிட்டு அவன் முன்னாடி போய் நின்னு சினிமாவுல வர மாதிரியெல்லாம் பண்ண முடியாது... எப்படியும் அவன் தப்பிக்க மாட்டான் சார்... நம்புங்க...." - என்று ராஜேந்திரன் பேசும்போது அவரது பேச்சை விடவும் அவரது உடல் மொழி மிகவும் நம்பிக்கை தரும்விதம் இருந்தது ராகவ்கு....

இன்னும் பத்து நிமிடத்தில் ரயில் வருமென்று ஸ்டேஷன் ஸ்பீக்கர்கள் ஒலித்தன... நிமிடங்கள் குறைந்தது.... இன்னும் இரண்டு நிமிடங்கள்தான் பாக்கி... நேரம் வந்து விட்டது...

தூரத்தில் இருந்து இன்ஜின் மீதிருக்கும் ஹெட்லைட் வெளிச்சம் தண்டவாளத்தின் மீது படர்ந்து பளபளத்தது... நெஞ்சம் படபடக்க, நெற்றி வியர்க்க... போலீசும், ராகவும், அவன் உடன் இருந்தவர்களும் அவர்களுக்கு பின்னாடி ஒரு கொலையே விழுந்தாலும் திரும்பி பார்க்கபோவதில்லை என்பது போல வைத்த கண் வாங்காமல் அந்த டெலிஃபோன் பூத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர்.... சம்பத்தும் நீண்ட நேரம் அந்த இடத்தை விட்டு விலகவில்லை... என்ஜின் மெதுவாக நிற்க நேரும்போது ஆமை வேகத்தில் அந்த பூத்தை S1..... S2..... S3...... என்று கம்ப்பார்ட்மென்ட்ஸ் மெதுவாக கடந்து செல்ல S5.... வந்து நின்றது... ராஜேந்திரன் ராகவின் கைகளை லேசாக அழுத்திப் பிடித்தார்... "ஐ குட் சீ மை மேன் இன் தட் கம்பார்ட்மென்ட்..... ஹி வில் கெட் ஹிம்....." என்று மெதுவாக தன்னம்பிக்கை குரலில் ராகவிடம் பேசினார்....

ராஜேந்திரன் எதிர்பார்த்தது போலவெ மஃடியில் இருக்கும் போலீஸ் சாதாரணமாக ரயிலை விட்டு இறங்கும்போது பார்ப்பவர்கள் யாவருக்கும் அவன் போலீஸ் என்று தெரியாத வண்ணம் இறங்கினான்.... சம்பத் அந்த ரயிலில் பயணம் செய்ய இருந்தான்... இருப்பினும் தன்னை சுத்தி என்ன நடக்கிறதென்று அந்த ரயிலில் இருந்த கூட்டம் இறங்கும்போது கண்காணிக்காமல் இல்லை.... கம்பார்ட்மெண்டில் இருந்து ம்ஃடியில் இறங்கியவன் கீழே இருக்கும்போது பீடி பிடித்துக்கொண்டிருக்கும் போலீசை பார்த்து ஒரு கண நொடி ஏதோ சின்ன செய்கை கொடுக்க... என்ன கெட்டநேரமோ.. அதை சம்பத் பார்த்துவிட்டான்... அவனுக்கும் இதைப் பார்த்ததில் தன்னை சுற்றி ஏதோ நடக்கிறதென்று ஒரு அபாய மணி ஒலிக்க ஆரம்பித்துவிட்டது...

உள்ளே ஏறலாம் என்று மெல்ல நடந்து வந்தவன் சற்று அமைதியாய் அப்படியே ஸ்டில்லில் நிற்க.. மஃடியில் இருக்கும் மீதி இருவரும் ஒரு நிமிடம் அவனை அப்படியே கூர்ந்து கவனித்தனர்.. மூவரும் அப்படியே அங்கும் இங்கும் நகராமல் சற்று நிமிடங்கள் உறைந்து நின்றனர்.... நின்றனர்... நின்றனர்.... ஒருவருக்கொருவர் பார்த்தார்கள்.... மீதி இருவரும் லேசாக அசரும் வேலையில் உடனே அதிவேகமாக அங்கிருந்து வேகம் பிடித்து ஓட ஆரம்பித்தான் சம்பத்.... உடனே மீதி இருவரும் அவனை கூட்டத்தில் பின் தொடர்ந்து ஓடிப் பிடிக்க முயற்சித்தார்கள்.. கிட்டத்தட்ட நெருங்கி விட்டார்கள்.. ராஜேந்திரனுக்கு "ச்ச எவ்வளோ சொல்லியும் சொதப்பிட்டாங்களே.." என்று கடித்துக்கொண்டார்... சம்பத்தை அவனுக்கு பின்னாடி மிகவும் நெருங்கி ஓடி வந்து பிடிக்க முயற்சித்த இருவரை யாருமே எதிர்பார்க்காத வண்ணம் அவன் கையில் இருக்கும் கேமராவில் ஒரு பட்டனை அழுத்த.... லென்ஸ் இருக்கும் வழியே அந்த இருவரின் கால்களில் புல்லெட் பாய்ந்தது... அவன் சுடும் வரை அனைவருமே அது கேமரா என்றுதான் எண்ணி இருந்தார்கள்.. ஆனால் அது கேமராவை போல தோற்றம் கொண்ட துப்பாக்கி என்பது யாருக்கும் தெரியவில்லை....


இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் உடனே அந்த சுவரை எகிறி குதித்துக் கொண்டு "யூ ஆல் பீ ஹியர் சேஃப்லி...." என்று கத்திக் கொண்டே சம்பத்தை நோக்கி ஓட.... ஸ்டேஷன் என்ட்ரன்ஸ் அருகே மஃடியில் நின்றிருந்த இரண்டு போலீஸ்காரர்கள் அவனை பிடிக்க நேரும்போது ஒருவனுடைய கையில் மட்டும் சம்பத் சிக்கினான்... ஆனால் பிடித்தவன் கையை தன் கேமரா போன்ற துப்பாக்கியை வைத்து பிடித்தவன் தோளில் ஓங்கி குத்தி அவன் பிடியில் இருந்து தப்பி எஸ்கேப் ஆகி விட்டான்...

சில நேரம் கழித்து ராகவும் அவன் உடன் இருந்தவர்களும் ராஜேந்திரனை நோக்கி சென்று என்ன ஆனதென்று கேட்க.... "வெறி சாரி சார்.... " என்று இன்ஸ்பெக்டர் சொல்ல "உக்கும் நான் தான் அப்போவே சொன்னேனே...." என்று கார்த்திக் முணுமுணுத்தான்.. "எப்படியும் முயற்சி பண்ணி திருப்பி அவனை பிடிக்கிறோம்...." என்று ராஜேந்திரன் சொல்ல.... ராகவ் ஒன்றுமே பேசாமல் சில நிமிடம் இன்ஸ்பெக்டரை தொடர்ந்து மெளனமாக பார்த்தான்.. "என்ன சார் யோசிக்குறீங்க?.. சொல்லுங்க" என்றார் ராஜேந்திரன்... மீண்டும் ஒன்றும் பேசாமல் அங்கிருந்து மெல்ல நகர்ந்தான்.... "மிஸ்டர் ராகவ்.. நீங்க ஏதோ சொல்ல வந்தீங்களே?..." என்று மீண்டும் இன்ஸ்பெக்டர் கேட்க ஒரு நொடி யோசித்துவிட்டு "இல்ல.. ஒண்ணுமில்ல..." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மெதுவாக விலகி சென்றான் ராகவ். அப்போது "சார்..." என்று கார்த்திக் போலீஸ் அருகே சென்று மெதுவாக அழைக்க... "என்ன?.." என்று வாயால் கேட்காமல் பார்வையால் பார்த்து கேட்டார் இன்ஸ்பெக்டர்.... "என்னோட சேர்ந்து சொல்லுங்க.... ஆல் இஸ் வெல்.... ஆல் இஸ் வெல்...." என்று அவரின் நெஞ்சில் கை வைத்து கார்த்திக் சொல்ல.. கடுப்பின் உச்சத்துக்கு சென்று "ஷட் அப்...." என்று கத்தினார்.. அப்போது "அடுத்த தடவ உங்க கிட்ட மோப்பம் பிடிக்குற நாய்ங்க ரெண்டு மூணு இருந்தா கூட்டிட்டு வாங்க சார்.. மஃப்டில இருக்குறவங்களை விட அது உங்களுக்கு அதிகமா உதவி செய்யும் சார்...." என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து மெதுவாக இன்ஸ்பெக்டரின் முறைப்புக்கு பயந்து ஓடினான்....

"கய்ங்....கய்ங்...." என்று சதம் குடுத்துக் கொண்டே கார் கதவுகள் திறக்கப்பட்டன.. விரக்தியுடன் உள்ளே ஏறினான் ராகவ்.. நால்வரும் காரில் IOFI அலுவலகத்துக்குள் இருக்கும் வி.ஐ.பி லாஞ் செல்வதற்கு பதிலாக நேரத்தையும், தூரத்தையும் மனதில் கொண்டு அருகில் உள்ள தனது IOFI நிறுவனத்தின் வெளிநாட்டு விருந்தாளிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஐந்து நட்சதிர ஹோட்டல் வசதிகளைக் கொண்ட கெஸ்ட்ஹவுஸுக்கு சென்றார்கள். ராகவின் கோட்டா படி அவனுக்கு எப்பொழுதும் அவனுடைய சிறப்பு விருந்தாளிகளுக்கு என்று மூன்று அறை ஒதுக்கப் பட்டிருக்கும்...

"ஹலோ சார், ஹவ் ஆர் யூ?.... யூ நீட் த கீஸ்?" என்று அந்த இடத்தை கண்காணிக்கும் சீனியர் மேலாளர் ராஜேஷ் ராகவிடம் முகமலர்ந்து சிரித்து கை குலுக்கி வரவேற்றார்.. அப்போது "எஸ்... ப்ளீஸ்..." என்று சொல்லி சாவியைப் பெற்றுக் பெற்றுக்கொண்டான்.

"டேய் மச்சி.... சாவிய ஸ்டைலா வாங்கிட்டு நீ பாட்டுக்கு போகாதடா.... பசிக்குதுடா.... முதல்ல அதுக்கு வழி பண்ணு" - என்றான் கார்த்திக்..

"ஆங்.. ராஜேஷ்... எங்களுக்கு சாப்பிட... " என்று ராகவ் கேட்க..

"உங்க ரூமுக்கு அனுப்பிடவா சார்..." - என்றார் ராஜேஷ்

"இல்ல இல்ல... புஃப்பே (buffet) இன்னும் இருக்குல்ல?"

"ஒஹ் எஸ் இருக்கு...."

"அது போதும் நாங்க பார்த்துக்குறோம்...."

அவ்வளவாக பசி ஏதும் இன்றி வெறுமென ஒரு ஜூஸ் குடித்துவிட்டு தன் அறைக்கு சென்றான் ராகவ்.. அப்போது அவன் முகத்தில் உள்ள விரக்தியையும் பசி இல்லாமல் ஏதோ அவன் மனதை வாட்டுவதையும் கவனிக்க தவறவில்லை சங்கீதா..

மற்றொரு புறம் கார்த்திக்கும் சஞ்சனாவும் சாப்பிட தயாரானார்கள்....

கார்த்திக் சிட்டி பையன் கிடையாது. அவனுக்கு இந்த மேல்தட்டு பழக்க வழக்கங்கள் பற்றிய அறிவு சற்று கம்மிதான் என்றாலும் புஃப்பே என்றால் தானாகவே தட்டில் எது வேண்டுமோ அதை எடுத்து வைத்து சாப்பிடவேண்டுமென்ற விஷயம் அவனுக்கு தெரியும். வெளி நாட்டு விருந்தாளிகளுக்கு அவர்களின் ருசிக்கு ஏற்ப இந்திய உணவு மற்றும் சைணிஸ் வகை உணவுகளும் அங்கே வைக்கப் பட்டிருந்தன. "சாப்பாட்டுக்கு ஒரு வழி பன்னுடானா என்னை இப்படி பல வகையான சாப்பாடுக்கு மத்தில நிக்க வெச்சிட்டு ஒரு வழி பண்ணிட்டு போய்டானே.... எனிமி..எனிமி...." என்று எண்ணி ராகவை ககடிந்து கொண்டான். அவன் அருகே சஞ்சனா நின்றிருந்தாள். கொஞ்ச நேரம் அவள் எந்த உணவெல்லாம் அவளது தட்டில் எடுத்து வைக்கிறாள் என்று பார்த்து அதை எல்லாம் தானும் அப்படியே எடுத்து வைக்கலாம் என்று எண்ணி அப்படியே அவள் பின்னால் நின்றான்.

ஆரம்பத்தில் அவள் ஒரு சிறிய கப்பில் லெமன் கோரியாண்டர் சூப் எடுத்தாள். அவனும் அதையே எடுத்தான். கொதிக்க கொதிக்க இருந்த அந்த சூப்பில் ஒரு ஸ்பூன் சிப் செய்து அவள் குடிப்பதை கவனித்தான். இருவரும் ஒரு சிறிய மேஜையில் இருவர் மட்டும் அமரும் இருக்கையில் அமர்ந்தார்கள். உள்ளே இருந்த இன்டீரியர் டிசைன்கள் கண்களை கொள்ளை கொண்டது... மெதுவாக சத்தம் கேட்கும் பியானோ இசை காதுகளுக்கு இதமாக இசைத்துக் கொண்டிருந்தது. மேஜையில் அவனுக்கு எதிரில் சஞ்சனா வந்தமர்ந்தாள். இருவரின் தலைக்கும் மேலே ஒரு சிறிய மஞ்சள் நிற வெளிச்சம் தரும் விளக்கு எறிந்து கொண்டிருந்தது. டார்க் பிரவுன் நிற பளபளக்கும் மர மேஜையின் மீது சஞ்சனாவின் கைகள் மிக அழகாக தெரிந்தது. மெல்லிய சில்வர் காப்பு, சிறிதளவும் ரோமம் இல்லாத பளபளப்பான கைகள். காலையில் இருந்து மாலை ஸ்டேஷனில் இருந்து கிளம்பும்வரை அவளின் முகத்தை அவன் பெரியதாய் கவனிக்கவில்லை. சங்கீதா அளவுக்கு உயரமோ நிறமோ அவளிடம் கிடையாது. இருந்தாலும் அவளைப் பார்த்தால் "ஏ ப்ரிட்டி வுமன்" என்று யாருமே சொல்லக் கூடிய தோற்றம் அவளுடையது. அவளுக்கே தெரியாமல் அவளின் முகத்தை சற்று நேரம் அயர்ந்து பார்த்துக் கொண்டு கொதிக்கும் சூப்பை அப்படியே கவனிக்காமல் வாயில் ஒரு சிப் வைத்தான். "அய்யோ.." என்று ஒரு சிறிய சத்தம் குடுத்து ஸ்பூனை மேஜை மீது தொப்பென்று போட.... "ஹா ஹா..." என்று மெதுவாக சிரித்து அவனை பார்த்தாள் சஞ்சனா.. "இல்ல கொதிக்குறதை கவனிக்கல.. அதான்.. இல்லனா..." என்று இழுத்தவனை நோக்கி "கார்த்திக் நீ என்னை இன்னும் உன் ஃபிரெண்டா பார்க்கலைன்னு நினைக்குறேன்..." என்று சொல்ல "ச்ச.... ச்ச.... அப்படியெல்லாம் இல்ல.. ஏன் அப்படி கேக்குறீங்க..."


"ஃபர்ஸ்ட்... இந்த நீங்க வாங்க போங்க வேணாம்.... ஓகே?...." என்று அளவை சிரித்து சொன்னாள் சஞ்சனா....

"ஹ்ம்ம் ஓகே.." - சந்தோஷமாய் ரிப்ளை குடுத்தான் கார்த்திக்..

"நீ இதுக்கு முன்னாடி புஃப்பே ல சாப்டதில்லையா?" - இஷ் என்று சூப்பை உறிந்து கொண்டே கேட்டாள் சஞ்சனா..

"......" சில நொடிகள் மெளனமாக இருந்தான்... இல்லை என்று சொன்னால் தனக்கு ஒன்றும் தெரியவில்லை என்று எண்ணி விடுவாளோ என்கிற யோசனை ஒருபுறமிருக்க.... ஹ்ம்ம் பரவயில்ல.. உண்மையா இதெல்லாம் தெரியாதுன்னு சொல்லிடலாமா.... என்று அமைதியாய் எண்ணிக் கொண்டிருக்க...

"ஹலோ கார்த்திக்.... நான் உன் கிட்டதான் பேசுறேன்.." என்றாள் சஞ்சனா.

"ஆக்ச்சுவல்லி...அது வந்து... " ஆரம்பத்தில் சற்று தயங்கி.."எனக்கு இது புதுசு.. இதுக்கு முன்னாடி இப்படி சாப்டதில்ல..." என்று கார்த்திக் மெதுவாய் உண்மையை சொல்ல....

சூப் ஸ்பூனை மேஜையின் ஓரத்தில் வைத்துவிட்டு கைகளை கட்டி கார்த்திக்கின் கண்களை சில நொடிகள் கூர்ந்து பார்த்தாள் சஞ்சனா... "சரி.... இன்னில இருந்து என்னையும் உன் நல்ல ஃபிரெண்டா ஏத்துக்கோ.... மனசுல எது பட்டாலும் ஓப்பனா பேசு... என் கிட்ட உனக்கு எந்த தயக்கமும் தேவ இல்ல? சரியா?...." என்று அவள் பேசுவதை கேட்கையில் ஒரு விதமான சந்தோஷத்தை உணர்ந்தான் கார்த்திக்.... அப்போது பதில் ஏதும் பேசாமல் அவளின் பார்வையைப் பார்த்தவன் அதில் அப்படியே பதில் ஏதும் சொல்ல முடியாமல் அமைதியாய் இருந்தான்... இதை கவனித்த சஞ்சனா மென்மையாக அவனைப் பார்த்து சிரித்து கைகளை அசைத்து மீண்டும் "ஹல்ல்லோ.. ஹால்லல்லோ" என்று தலை அசைத்து மென்மையாக சிரித்து புருவங்கள் உயர்த்தி பாட்டு பாடும் விதத்தில் சொல்ல "ஆங்... சொல்லுங்க.. சொல்லுங்க.." என்று எதுவும் பெரிதாய் கவனிக்காதவன் போல ஒரு சிறிய ஆக்ட் குடுத்தான் கார்த்திக்.... "ஹா ஹா... ஆளப்பாரு...." என்று சிரித்துக் கொண்டே "நான் உங்கிட்ட இன்னில இருந்து என்னையும் உன் நல்ல க்ளோஸ் ஃபிரெண்டா ஏத்துக்கோ.... என் கிட்ட உனக்கு எந்த தயக்கமும் தேவ இல்ல?.. அப்படின்னு சொன்னேன்.. சரியா?...."

"ஹ்ம்ம்.. கண்டிப்பா.... நீங்க ரொம்பவே குடுத்து வெச்சவங்க....எங்கம்மா அடிக்கடி சொல்லும்... உன் கூட ஃபிரெண்டா இருக்குறவங்க உண்மையாவே குடுத்து வச்சவங்கடா.... உன்னை மாதிரி அவங்களுக்கு ஒரு ஆள் கிடைக்காதுன்னு...."

"ஹா ஹா... ராகவ் லக்கிதான் அதான் அவனுக்காக எல்லா உதையையும் நீயே வாங்கிக்குறியே" என்று சஞ்சனா சிரிக்க கார்த்திக் பாவமாக அமைதியானான்..

"சரி என் கூட வா.... நான் ஸ்வாரஸ்யமான சிலதெல்லாம் உனக்கு சொல்லுறேன்..." உண்மையில் சஞ்சனாவின் கண்களில் ஒரு உற்சாகம் தெரிவதை கவனித்தான் கார்த்திக்.. அது அவனுக்குள் ஒரு உற்சாகத்தைக் குடுத்தது..

"எப்போவுமே புஃப்பேல முதல்ல சூப் வெச்சி இருந்தா அதை எடுத்துக்கணும்.. காரணம் எதுக்குன்னா முதல்ல ஆற அமர எல்லாரும் சூப்பை ஊதி குடிச்சி முடிச்ச பிறகு பசி நல்லா எடுக்கும்னு சொல்லித்தான் இந்த பழக்கம் இருக்கு.."

"குடிக்கலைனா கூட எனக்கு நல்லாவே பசி எடுக்குமே...." என்று கார்த்திக் பதில் சொல்ல..

"சப்.... என்ன பேசி முடிக்க விடுடா வாத்து.." என்று மெதுவான கடுப்பில் ஒரு நிமிடம் லேசாக கடித்துக் கொள்ள... கார்த்திக் பாவமாக அவளைப் பார்த்து கொஞ்சம் உரிமையுடன் லேசாக முறைத்தான்..

"சரி சரி... ஐ அம் சாரி.... ஐ அம் சாரி... ஏதோ நினைப்புல சொல்லிட்டேன்... கோச்சிகாத சரியா.... ஹா ஹா... சோ ச்வீட்... இப்போ உன் மூஞ்சிய பார்க்க செம காமெடியா இருக்குடா...."

"போதும் போதும் மேல சொல்லு.... சாப்புட வர்றதே பசி எடுக்குறதாலதான்...அங்க வேற வந்து சூப்பை குடிச்சி எக்ஸ்ட்ரா பசி வர வெச்சிப்பாங்கலாம்.... நல்ல கூத்து டா" என்று முணுமுணுத்தான் கார்த்திக்..

அவனிடம் புஃப்பே எதார்த்தங்களை எடுத்துக் கூறுவதை கூட ஒரு நிமிடம் மறந்து அவன் வெகுளியாக பேசும் விதத்தை அவளது ஆழ் மனதில் ரசித்தாள் சஞ்சனா... கடந்த சில ஆண்டுகளாக அவளிடம் போலியாக பேசியவர்கள் அதிகம்.... ஆனால் இப்படி யாரும் அவளிடம் மனம் விட்டு உண்மையாய் பேசியதில்லை.... அதை கார்த்திக்கிடம் உணர்ந்து ரசித்தாள் சஞ்சனா..



No comments:

Post a Comment