"அவனுக்கு, உள்ளே மெதுவான சத்தம் கேட்டது.."
"நானும் விடிய விடிய யோசிச்சிட்டேண்டா, என் மனசுக்கு ஒரு விதத்துல நிம்மதி கிடைக்க போகுது.. ஆமாம் உறுதியா கிடைக்க போகுது...."
"அப்போ டாக்டர் கிட்ட சிகிச்சை எடுத்துக்க போறியா?"
"இல்ல வேற வழியில எனக்கு நிம்மதி கிடைக்க போகுது டா.."
"என்ன சொல்லுற?"
"ஆமாம்... உன்னை கொள்ளுறதுதான் டா எனக்கு ஒரே வழி you blody bastard."
"டேய் குமார் என்ன பேசுற?. எனக்கு பயமா இருக்குடா, இந்த மாதிரி எல்லாம் பேசாத.." - நவீன் உடனே வாசல் கதவை நோக்கி விரைந்தான் அப்போது தான் தெரிந்தது கதவு உள் பக்கம் பூட்டி இருக்கிறதென்று...
"ஹா ஹாஹ்.. ஓடாதடா நாயே, இன்னைக்கி உன் உயிர் உன்னை விட்டு பிரிய போகுது உன் இஷ்ட தெய்வம் ஏதாவது இருந்தா உன் கடைசி பிரார்த்தனையை பண்ணிக்கோ, உனக்கு சொர்க்கம் கிடைக்கணும் னு வேண்டிக்கோ."
குமார் நவீனை இறுக பிடித்துக் கொண்டான், "டேய் விடு டா என்னால முடியல டா நான் உன் friend டா, நான் வேணும்னா உன்னை பத்தியும் துறையைப் பத்தியும் வெளியே சொல்லாம இருக்கேண்டா. கொஞ்சம் யோசி டா பொறுமையா இருடா கொலை கார பாவி."
"ஆங்... நான் கொலை கார பாவி தான் ஆனா இன்னைக்கி ஒரு நாள் மட்டும்தான் என் வாழ்க்கைல கொலை செய்ய போறேன். நாளைல இருந்து நான் ரொம்பவும் சுத்தமான ஆளா இருப்பேன்." சொல்லிக் கொண்டே கையில் ஒரு கத்தியை எடுத்தான் குமார்.
"வேணாம்டா வேணாம்டா,,ப்ளீஸ் டா என்னால உன் பிடியில இருந்து விலக முடியல டா பாவி... என்னை கோ கோ.... கொல்லாத டா நான் புள்ளகுட்டி காரண்டா... படு பாவி வேணாம்டா டேய் வேணாம் டா.... எனக்கு பயமா இருக்கு டா வேண்டாம் டா ப்ளீஸ் டா வேண்டாம் டா." - நவீன் கெஞ்சினான், கதறினான், குமாரின் கையில் இருந்து விலக முயற்சி செய்யும்போது கத்தி தவறி கீழே விழ, ஈவு இறக்கம் இன்றி நவீனின் கழுத்தை பிடித்து அருகில் உள்ள சுவரில் மிகவும் பலமாக ஒரே இடி இடிக்க நெத்தியில் இருந்து ரத்தம் வழிந்தது..
"அடப்பாவி என்னையும் சேர்த்து இடிச்சிட்டியே டா... பரவாயில்ல என் உயிர் போனாலும் சரி, உன் உயிர் போகணும் டா bastard... உன் ....உன் உயி.....போ...bas..d...." மயக்கத்தில் ரத்தத்துடன் கீழே விழுந்தார்கள்.
கொஞ்ச நேரத்துக்கெல்லாம் போலீஸ் siren சத்தம் கேட்டு அக்கம் பக்கம் வீட்டின் உள்ளே இருந்தவர்கள் எழுந்து சத்தம் கேட்டு வெளியே வந்தார்கள். இஸ்திரி போடும் பையன் பத்து நிமிடத்துக்கு முன்பாக புகார் கொடுத்ததின் பெயரில் போலீஸ் விரைந்தது. அதற்க்கு முன் கூட்டம் கூடி இருந்தது. நிர்மலா சங்கீதாவின் பசங்களை கூட்டிக் கொண்டு ஓடி வந்தாள்.
தள்ளுங்கயா... தள்ளுங்க... - head constable உள்ளே வந்தார்.
யாருக்காவது ஏதாவது தெரியுமா? இவங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது இருக்கீங்களா?
கூட்டத்துடன் கூட்டமாக நின்றிருந்த நிர்மலா பதறி அடித்து உடனே சங்கீதாவின் நம்பரை க் குடுத்து அழைத்து விஷயத்தை சொல்ல சொன்னாள்..
"ஹலோ.." - constable அழைத்தார்.
"எம்மா, யாரும்மா சந்கீதாவா?"
"ஆமாம் சொல்லுங்க, நீங்க யாரு?"
"நான் உங்க தெரு முனை police station ல இருக்குற ஏட்டு மா.. எனக்கு அதிகம் பேச முடியாது, inspector நிறைய வேலை சொல்லி இருக்காரு, சீக்கிரமா கிளம்பி உங்க வீட்டுக்கு வாங்க, இங்கே ஒரு பெரிய அசம்பாவிதம் நடந்து இருக்கு. நேருல வாங்க உங்க கிட்ட பேசணும்.
"ஹலோ என்ன அசம்பாவிதம், சொல்லுங்க ப்ளீஸ் சொல்லுங்க என்ன அசம்பாவிதம் நடந்துது... சொல்லுங்க ப்ளீஸ்.... - பதறினாள் சங்கீதா."
"கி... கி... கி... கி........." - constable phone கட் செய்து விட்டார்.
சற்று நேரத்தில் ராகவின் BMW வந்து நின்றது. சங்கீதா என்னமோ ஏதோ என்று பதறி அடித்து ஓடினாள். "அய்யோ அம்மா.." என்று. அதற்குள் ஆம்புலன்ஸ் வந்திருந்தது. அதில் குமார் எற்றப்பட்டான்..
"என்ன ஆச்சு என்ன ஆச்சு இவருக்கு..."
"ஒன்னும் இல்ல பதறாதீங்க. காப்பதிடலாம்.. " - ambulance டிரைவர் கூறினார்.
ராகவ் சங்கீதாவின் தோளுக்கு பக்கத்தில் உறுதுணையாய் நின்றான். inspector ஜீப்பில் விறைப்பாய் வந்து இறங்கினார்.
"ஒத்து ஒத்து.. ஹ்ம்ம் ஒத்து" - குரல் பலமாக லட்டியுடன் ஒலித்துக் கொண்டே வருவது தெரிந்து கூட்டம் வழி விட்டது.
"you are sangeetha right?" - சத்தமாக கேட்டார் inspector.
"ஆமாம் சார்.." - இன்னும் அழுகை நிற்க வில்லை.
"அவர் யாருமா?"
"என் கணவர்.."
"யோவ் constable, எண்ணத்த புடிங்கிக்குட்டு இருக்க?... வந்து சொல்லுற பதிலை நோட் பன்னுயா.. constable பதறி அடித்து ஓடி வந்தார். "சார் வீட்டுக்குள்ள ஒருத்தர் தான் இருந்திருக்காரு"
"கணவர் பெரு என்னமா?"
"குமார்.."
"முழு பெரு என்னமா?"
நவீன்குமார்!
Inspector அனைவரையும் கொஞ்சம் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார். கூடி இருந்த கூட்டங்கள் மெதுவாக கலைய ஆரம்பித்தன. கூட்டம் கலையும் தருணத்தில் பல விதமான குரல்கள் எழுந்தன.. "என்ன மனுஷனோயா...... சரியான ஆளு..... எப்போவுமே ஒரு மார்கமாதான்யா திரிவான்..... வெட்டி பய...." என்று கொஞ்சம் கொஞ்சமாக முணுமுணுத்துக் கொண்டே கூட்டம் கலைய, இஸ்திரி பையன் ராமு அங்கேயே நின்றுகொண்டிருந்தான்.
"ஏய்.. என்னடா பார்க்குற?" - Inspector விறைப்பாக கேட்டார்.
"அவன்தான் சார் கம்ப்ளைன்ட் குடுத்தான்" - constable பவ்யமாக பேசினார்.
"என்னடா பார்த்த.." - Inspector முறைத்துக் கேட்டார்.
"வெளியிலதான் சார் நின்னுகிட்டு இருந்தேன், உள்ளே போய் எதுவும் பார்கல. நிறைய சத்தம் கேட்டுது." - பயந்து பேசினான்.
"என்னென்ன கேட்ட?" - கையில் லட்டி சுழன்று கொண்டே இருந்தது.
"ஒருத்தருக்கொருத்தர் ரொம்ப கத்தினாங்க சார், ஒருத்தன் இன்னொருத்தனை கொல்ல போறேன்னு கத்தினான், ஒருத்தன் உயிர் பயத்துல விட்டுடு விட்டுடு ன்னு கெஞ்சினான்.. சாமானை தூக்கி எறிஞ்ஜாங்க, கத்தி எடுத்து வீசுன சத்தம் கூட கேட்டுது சார்."
"சப்.... ரெண்டுமே ஒருத்தந்தாண்டா.. வேற ஏதாவது கேட்டுச்சா?" - inspector சலித்துக் கொண்டே கூறினார்.
"அதுக்கப்புறம் ஏதோ துரைன்னு சொன்னான் சார்.."
இன்ஸ்பெக்டர் இப்போது கொஞ்சம் உஷாராகி அவனை கூர்ந்து கவனித்தார். "என்ன துரை?"
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், வீட்டினுள் மற்ற constables குமாருக்கு சம்மந்தமான பொருட்களை எடுக்கும்போது அவனது ஆபீஸ் id card எடுத்தார்கள். அதைக் கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த ராகவ் கவனிக்க தவறவில்லை. சற்று வீட்டினுள் சென்று நெருங்கி எட்டிப் பார்த்தான். IOFI employee id card தான் அது.
"நீயும் துறையும் சேர்ந்து செய்யுற தப்பை நான் வேணும்னா வெளியே சொல்லாம இருக்கேன்டா என்னை விட்டுடு விட்டுடு ன்னு கெஞ்சினான் சார்." - ராமு போலீசிடம் பயந்து கூரிக் கொண்டிருந்தான்.
"ராகவ் இந்த வார்த்தைகளை கேட்டு இஸ்திரி பையன் ராமுவிடம் நெருங்கி வந்தான்."
"நீங்க யாரு சார்? உங்களுக்கு என்ன வேணும்?" - ராகவைப் பார்த்து inspector பேசினார்.
"நான் ராகவ், IOFI CEO" - தனது visitiing card குடுத்து, இன்ஸ்பெக்டரிடம் கண்ணியமாக கை குலுக்கினான். கூடவே தனது சித்தப்பா IG யாக இருப்பதையும் விளக்கினான். இன்ஸ்பெக்டர் இப்போது ராகவிடம் எழுந்து நின்று பேச ஆரம்பித்தார்.
"சொல்லுங்க சார் உங்களுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?" - மென்மையாக சிரித்து தன்மையாக பேசினார்.
"சம்மந்தம் இல்லை, ஆனா என் கம்பெனி IOFI சம்மந்தம் ஆகி இருக்கு. இந்த குமார் என் கம்பனியில் வேலை செய்றவன். இந்த பையன் ராமு சொல்லுறதை வெச்சி பார்க்கும்போது யாரோ துரைன்னு ஒருத்தன் இவன் கூட சேர்ந்து, ஏதோ என் கம்பெனில தப்பு பண்ணி இருக்கான். (சில நொடி மௌனத்துக்கு பிறகு ராகவ் inspector தோளில் கை போட்டு மெதுவாக பேச ஆரம்பித்தான்) இந்த விஷயம் வெளியில மீடியா க்கு தெரியக் கூடாது. இது என்னுடைய personal request. ஆனா அதே சமயம் நீங்க உங்க விசாரணைய சத்தம் இல்லாம மெதுவா செய்யுங்க, ஏதாவது துரை பத்தின விஷயம் தெரிய வந்தா உடனடியா சொல்லுங்க. I hope you understand my position in this issue" - என்று சொல்லி inspectorஐ கூர்ந்து பார்த்தான்.
"எனக்கு புரியுது சார், நான் பார்த்துக்குறேன். நீங்க போயிட்டு வாங்க. ( சில நொடி மௌனத்துக்கு பிறகு) சார் இது என்னோட கார்டு.. உங்க சித்தப்பா கிட்ட குடுத்து வையுங்க.. ஹா ஹா.." - என்று கழுத்தில் செயின் மினுக்க கொஞ்சம் போலியாக சிரித்தார்.
ராகவ், ஒன்றுமே புரியாமல் நிற்கும் சங்கீதாவை, குமார் அட்மிட் ஆகி இருக்கும் hospital லில் இறக்கி விட அழைத்து செல்லும்போது நிர்மலா அவளது பசங்களை தன் வீட்டினில் தங்க வைத்துக் கொண்டாள்.
அக்கம் பக்கம் இருந்தவர்கள் யாவரும் கலைந்து சென்றுவிட்டார்கள். ராகவ் inspector ரிடம் எடுத்து கூறி சங்கீதாவின் வீட்டிற்கு ஒரு constable ஐ காவலாக போடுமாறு தெரிவித்திருந்தான். hospital வராந்தாவில் emergency unit முன்பாக சங்கீதா ஈர விழிகளுடன் நின்று கொண்டிருந்தாள். ராகவ் அவள் அருகினில் சென்றான்.
"ராகவ்... ஸ்ஹாஆ" - என்று வாயில் கை வைத்து அழுது கொண்டே ராகவின் தோள்களில் ஆறுதலைத் தேடி சாய்ந்தாள் சங்கீதா.
"சரி.... சரி.... come on, என்னது இது, சின்ன குழந்தை மாதிரி.. ஒன்னும் ஆகல, எல்லாம் சரி ஆகிடும், கவலைப் படாத சரா." - என்று ராகவின் குரலில் இந்த வார்த்தைகளைக் கேட்கும்போது அவளுக்கு உண்மையில் மனதுக்கு பலம் தென்பட்டது.
"உன்னைப் பார்க்க பார்க்க தான் எனக்குள்ள கொஞ்சம் தெம்பு வருது ராகவ்." - இன்னும் அழுத குரலில் பேசினாள்.
"patient க்கு நீங்க என்ன வேணும்?" - டாக்டர் வெளியே வந்து கேட்டார்.
"நான் அவரோட மனைவிங்க, My name is Sangeetha."
"தலைல பலமா அடி, உள்காயம் கொஞ்சம் அதிகம் ஆகி இருக்கு, operation பண்ண வேண்டிய நிர்பந்தம் இருக்கு, கொஞ்சம் நிறைய செலவு ஆகும்." - என்று தன் மூக்கு கண்ணாடியை சரி செய்து கொண்டு இயந்திரமாக பேசினார் டாக்டர்.
"எவ்வளவு ஆனாலும் சரி, குணப் படுத்த முடிஞ்சா போதும், காசைப் பத்தி கவல படாதீங்க" - என்று சற்றும் யோசிக்காமல் கூறினான் ராகவ்.
"Alright, அப்போ நான் நாளைக்கே அவருக்கு treatment ஆரம்பிச்சிடுறேன் & அடுத்த 48 மணி நேரம் நீங்க மட்டும் வேணும்னா அவர் கூட இருக்கலாம். மத்தவங்க allowed கிடையாது." - என்று டாக்டர் சந்கீதாவைப் பார்த்து கூறிவிட்டு அங்கிருந்து விலகினார்.
"நீ ஏன் இந்த காசு விஷயத்துல commit ஆகுற? நான் கேட்டேனா?"
"நீ ஏன் இவ்வளோ நாளா என் கிட்ட ஒரு விஷயத்தை மறைச்ச?"
"எது டா?"
"குமார் IOFI ல வேலை பார்க்குறார்னு சொல்லி இருக்கலாம் இல்ல?"
சங்கீதாவிடம் இருந்து மௌனம்....
"நிஜத்தை சொல்லனும்னா எனக்கு இப்போதான் உன் மேல அவ்வளோ மரியாதையும் அதிகமான காதலும் வருது. நீ நினைச்சி இருந்தா என் கிட்ட இருக்குற நெருக்கத்தை பயன் படுத்தி, குமாருக்கு இன்னும் கொஞ்சம் பெரிய பதவி குடுக்க சொல்லி சம்பளத்தை ஏத்த சொல்லி, இன்னும் என்னென்னவோ கேட்டிருக்கலாம். ஆனா அதெல்லாம் ஒண்ணுமே செய்யல, you are a highly self esteemed women, உன்னை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு" - அவளின் கரங்களைப் பிடித்து சொன்னான் ராகவ்.
என்ன பேசுவதென்று தெரியாமல் ஈர விழிகளுடன் குனிந்து மௌனமாய் தன் மருதாணி கரங்களில் ராகவின் பெயரைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கீதா.
"எவ்வளோ professional அ நடந்துகிட்ட. உன்னை காதலிக்குறதை நினைச்சி பெருமை படுகிறேன் சரா." - ராகவ் இதைக் கூறியதும் ஒரு நிமிஷம் நிமிர்ந்து பார்த்தாள் சங்கீதா.
"I am sorry, எந்த இடத்துல என்ன பேசுறதுன்னு தெரியாம பேசிட்டேன். I am sorry sangeetha...."
"its okay da...."
"டாக்டர் கிட்ட காசு விஷயத்துல நீ கேட்டுதான் நான் பதில் சொல்லனுமா? உன் கஷ்டம் என்னன்னு தெரிஞ்சி நானே முன் வந்து உதவ எனக்கு உரிமை இல்லையா?" - சங்கீதாவிடம் உரிமையுடன் கேட்டான் ராகவ்.
என்ன சொல்வதென்று தெரியாமல் சில நொடிகளுக்கு பிறகு "ஏன்டா இப்படி இருக்கே?" - என்று அவனை திட்டவும் முடியாமல் திட்டாமல் இருக்கவும் முடியாமல் தவித்து பேசினாள்.
"சரா, நான் இப்போ உன்னை இந்த நிலைமைல இங்கே தனியா விட்டுட்டு போக விரும்பல, நான் வேணும்னா...." - ராகவ் பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்டாள் சங்கீதா.
"நீ ஏற்கனவே நிறைய சிரமப்பட்டுட்ட ராகவ், வீட்டுக்கு போய் கொஞ்சம் ஓய்வு எடு. நான் பார்த்துக்குறேன். இங்கே ஒரு நாள் குமார் கூட இருக்க போறேன், அவ்வளோதான் டா. நடுவுல என்னை வந்து பாரு. இப்போதிக்கு எனக்கு மனசளவுல ஒன்னும் பயம் இல்லை. அப்படியே இருந்தாலும் என் கை உடனே உனக்கு phone செய்யும். கவல படாத. நான் தான் எப்போவும் உன் நெஞ்சுல இருக்கேனே.." - அழுகையுடன் ராகவின் நெஞ்சில் அவன் சரா என்று பச்சை குத்தி இருக்கும் இடத்தை காமித்து கூறினாள்.
சற்று அக்கம் பக்கம் பார்த்துவிட்டு ராகவ் கண்ணியமாக அவன் சாராவின் கரங்களில் ஒரு மென்மையான முத்தம் ஒன்றை குடுத்துவிட்டு, கைகளைப் பிடித்து "take care sara, நான் எப்போவுமே என்னோட phone கைல வெச்சிகிட்டு இருப்பேன், எது தேவைனாலும் உடனே phone பண்ணு, அடுத்த நிமிஷம் இங்கே இருப்பேன்." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தன் வீட்டிற்கு கிளம்பினான்.
வீட்டிற்கு செல்ல மனம் இன்றி ராகவ் அன்று மதியம் சங்கீதாவுடன் இருந்த தனது personal VIP Lounge உள்ளே நுழைந்தான். கொஞ்சம் relax செய்துகொள்ள melodious western music on செய்து அங்கே உள்ள ஃசோபா மீது சாய்ந்தான். சங்கீதாவின் காதல் நினைவு ஒரு புறம், கூடவே தனது கம்பெனியில் நிகழும் மர்மம் ஒரு புறம், குமாருக்கு உடந்தையாக இருக்கும் துரை யாரென்று அது ஒரு புறம், இப்படி சிந்தனைகள் நாலா பக்கமும் வந்து தாக்கியது. தனிமையை இந்த ஒரு கனம் அவன் சுத்தமாக விரும்பவில்லை, யாராவது துணை கிடைப்பார்களா என்று அவன் மனம் ஏங்கியது. எழுந்து சென்று குளிக்கலாம் என்று என்னும்போது ராகவ் ஃபோன் சினுங்கியது.
"ஹலோ.."
"ஹேய்.. சஞ்சனா டா..."
"சொல்லு சஞ்சனா.."
"ஏதோ சங்கீதா அக்கா வீட்டுல பிரச்சினை னு கேள்வி பட்டேன். என்ன ஆச்சு டா?"
"இஸ்ஹா.." ( லேசான பெருமூச்சு விட்டு பேச ஆரம்பித்தான்) "சஞ்சனா, if you dont mind கொஞ்சம் நான் இருக்குற இடத்துக்கு வர முடியுமா? நான் கொஞ்சம் நேருல பேசுறேன்.. ப்ளீஸ்.. I need some company here" என்றான்.
"ஏண்டா?.. என்ன ஆச்சு?... சரி இரு... I will be there in another 5 mins da.." - அருகினில் உள்ள IOFI கெஸ்ட் ஹவுஸில் இருந்து ராகவ் இருக்கும் இடத்துக்கு வர அதிக நேரம் ஆகாது.
சஞ்சனா ராகவ் இருக்கும் இடத்துக்கு வந்தாள். "ராகவ்...." என்று அவள் அழைக்க வராந்தாவில் இருந்து "இங்கே இருக்கேன் சஞ்சு ...." என்று குரல் குடுத்தான் ராகவ்.
என்னதான் seceratory யாக இருந்தாலும் அவளது மனதில் அவன் மீதிருக்கும் பழைய காதல் இன்னும் ஒரு ஓரத்தில் இருக்கத்தான் செய்தது.
ஒரு தோழியாக அவளது கைகளைப் பிடித்து "மனசுல நிறைய விஷயங்க இருக்கு சஞ்சனா... கொஞ்சம் கொட்டணும் போல இருக்கு, உன் கிட்ட நான் பேசியே ரொம்ப நாள் ஆகது"
"என்னடா இப்படி சொல்லுற, பேசு டா, எல்லாத்தையும் சொல்லு."
ஆபீசில் மரத்துண்டு விவகாரம் பற்றியும், சங்கீதா அதைப் பற்றி ஆரம்பத்தில் கண்டு பிடித்தது பற்றியும், அதைத் தொடர்ந்து சங்கீதாவுக்கு வந்த ஆபத்தைப் பற்றியும், IOFI function முடியும் தருவாயில் சங்கீதா bank ல் பணி புரியும் பியூன் கோபியை காப்பாற்றி விட்டதையும், அதன் பிறகு சங்கீதா வீட்டில் துரை என்கிற யாரோ ஒருவன் குமாருடன் இணைந்து இந்த செயலில் ஈடு பட்டிருக்க முடியும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் தெளிவாகவும் நிதானமாகவும் பேசிக் கொண்டிருந்தான்.
"நான் சொன்னதெல்லாம் வெச்சி பார்க்கும்போது உனக்கு யார் மேலயாவது சந்தேகம் வருதா?" - என்று சஞ்சனாவைப் பார்த்து கேட்டான் ராகவ்.
மனதில் நிறைய எண்ணங்கள் ஓடின, ஆனால் ராகவிடம் எதுவும் காமித்துக் கொள்ளவில்லை சஞ்சனா.
"இப்போதிக்கு தோணல ராகவ், எனக்கு கொஞ்சம் டைம் குடு, யோசிக்குறேன்..... நீ சாப்டியா?" - என்றாள் அக்கறையாக.
"உம்.. நீ?"
"எனக்கு முடிஞ்சிது.... நீ போயி ரெஸ்ட் எடுத்துக்கோ. நான் அப்புறம் உன் கிட்ட பேசுறேன். இப்போ நான் கிளம்புறேன்." என்றாள்.
அலை போன்ற களைந்த முடியுடன் ராகவ் தனது இரு கைகளிலும் casual ஆக shirt துணியை மடித்து விட்டு தசை முறுக்கு தெரியும்விதம் வசீகரமாக மெல்லிய வெளிச்சத்தில் வராந்தாவில் நின்று கொண்டிருந்தான்.
கிளம்பும்போது கதவருகே நின்றுகொண்டு ராகவை ஒரு பார்வை ஏறிட்டு பார்த்தாள் சஞ்சனா.
"என்ன ஆச்சு சஞ்சு? ஏன் அப்படி பார்க்குற?" - மென்மையாய் சிரித்து கேட்டான் ராகவ்.
சஞ்சனா மென்மையாக புன்னகைத்து ஒரு நொடி ராகவைப் பார்த்து மெதுவாக அவன் அருகே வந்து அவன் கன்னங்களில் அவள் கரங்களால் ஒரு நொடி தடவினாள்.
"என் கண்ணுக்கு இப்போ CEO ராகவ் தெரியல, என் ஆழ் மனசுல இருந்த அந்த cute ராகவ் ஒரு நிமிஷம் நியாபகத்துக்கு வந்தான். அதான் அவனை ஒரு நிமிஷம் நின்னு தரிசிச்சிட்டு போகலாம் னு நின்னேன்." - அவளையும் அறியாது அவள் விழிகளின் ஓரம் நீர்த்துளிகள் வந்தது.
"sorry டா.. ஏதோ கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டேன். I..I am..sorry.... நான் வரேன் டா." ராகவ் அவளின் கைகளை ஒரு நிமிடம் பிடித்தான். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சில நொடிகள் பார்த்துக் கொண்டனர். பின்பு ராகவ் அவளது கைகளை மெதுவாக விடுவித்து ஒன்றும் பேச முடியாமல் சற்று சங்கடத்தில் திரும்பிக் கொண்டான்..
ராகவ் அவனுக்குப் பின் புறம் அவள் வேகமாக இறங்கி செல்கிறாள் என்பதை டோக் டோக் என்று சஞ்சனாவின் ஹீல் ஸ்லிப்பெர்ஸ் குடுக்கும் சத்தத்தில் தெரிந்து கொண்டான்.
இரவு 10 மணி நெருங்கிக் கொண்டிருந்தது. சஞ்சனா அவளது வீட்டினுள் வந்தவள், நேராக கட்டிலில் தொப்பென விழுந்தாள். நீண்ட நேரம் படுக்கையில் படுத்தவாறு பலரையும் அலசி ஆராய்ந்தாள். IOFI function நடந்த போது மிதுன் பார்வையில் பொங்கிய பொறாமையும், பொதுவாக அவன் ராகவ் மீது கொண்டிருக்கும் வெறுப்பும் அவளுக்கு நினைவுக்கு வந்தது. இந்த சம்பவத்தில் கண்டிப்பாக அவனுக்கும் ஏதாவது ஒரு பங்கு இருக்கலாம் என்று அவளது ஆழ் மனது சொல்லியது. கூடவே துரை, அந்த துரைப் பற்றியும் அவனுக்கு ஏதேனும் தெரிய வாய்ப்பு உள்ளது. அவனிடம் மீண்டும் பேச வேண்டும். ஆனால் IOFI function நடந்த போது கூட அவன் நம்மிடம் ஏதோ பேச வந்து நாம் கதவை செருப்பால் அடிப்பது போல டமால் என்று சாத்தி விட்டதை எண்ணி "கொஞ்சம் சொதப்பிடோமே" என்று வருந்தினாள். மீண்டும் கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்தாள். "அவனுடன் பேசி பழக வேண்டும், அது மட்டும் இல்லாமல் எனக்கு அவன் குடுத்த வலிக்கு நான் இன்று வரை அவனுக்கு திருப்பி குடுக்கவில்லை. இப்போ ராகவ் கிட்டயும் அவன் ஏதோ ஒரு விஷயத்துல விளயாடுறான்னா நிச்சயம் சும்மா விடக் கூடாது. let me think...." என்று சிந்தித்தாள்.
ஒரு பத்து நிமிடம் கழித்து, நீண்ட ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு முகத்தை கழுவினாள். வெகு நாட்களுக்கு பிறகு தனது ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் அமர்ந்து மெல்லிய வெளிச்சம் தரும் மஞ்சள் விளக்கை போட்டு கண்ணாடியில் தன் அழகை தலை முதல் கால் வரை கண்களால் அளந்தாள்.
மெது மெதுவாய் தனது மேல் சட்டை பட்டன்களை கழட்டினாள். முகத்தினை கூர்மையான பார்வைகளால் கண்ணாடியில் பார்த்தவாறு அவளது கைகள் பின்புறம் முதுகுக்குக் கீழ் சென்று முட்டி வரை அணிந்திருந்த pencil skirt zipஐ பின் புறம் மெதுவாக கழட்டினாள். ஒரு கட்டத்தில் இறுக்கம் தளர்ந்து அவளது இடுப்பில் இருந்து விலகி தொப்பென்று கீழே விழுந்தது அவளது skirt. வெறும் உள்ளாடைகளுடன் கண்ணாடியின் முன் நின்றிருந்தவள் கண்களில் தீப்பொறிக்கும் எண்ணங்கள் ஓடின, மூச்சு வாங்கியது அவளுக்கு, தன் கரங்களால் அவளது மார்பு, இடுப்பு கால் என அனைத்தையும் தடவி பார்த்து "இதை நீ கண்டிப்பாக செய்ய வேண்டுமா?" என்று உள்ளுக்குள் கேள்வி எழுப்பினாள்.... "ஆமாம், செய்யனும், முன்பு மித்துனுடன் நடந்த சம்பவம் ஒன்றும் அறியாத சஞ்சனாவுடன், இன்று நடக்க போவது அவனுக்கு நான் பழி தீர்க்கும் நாள், எனக்குள் இருக்கும் இன்னொரு சஞ்சனாவைக் காமிக்க ஒரு சந்தர்ப்பம். கூடவே என் அக்கா சங்கீதாவுக்கும், ராகவ்கும் சேர்த்துதான் இது...." என்று மனதில் எண்ணினாள்.