Saturday, 4 April 2015

சுகன்யா... 99

இரவு பதினோரு மணி வாக்கில்தான் செங்கல்பட்டிலிருந்து நடராஜனும், மல்லிகாவும் வீடு திரும்பினார்கள். வெராண்டாவில் படுத்திருந்த செல்வாதான் எழுந்து தெருக்கதவை திறந்தான்.

“ஏண்டா இங்கே படுத்திருக்கே?” மல்லிகா உண்மையான கரிசனத்துடன் கேட்டாள்.

“ஏன்? இங்கே நான் படுக்கக்கூடாதா?” செல்வா இடக்காக பதில் கொடுத்தான்.

“அவன் எங்கப்படுத்தா உனக்கென்னடி? அர்த்த ராத்திரியிலே அவங்கிட்ட உனக்கு என்னடிப்பேச்சு?” நடராஜன் முணுமுணுக்க ஆரம்பித்தார்.

"மீனா ஒழுங்கா சாப்பிட்டாளாடா? ரெண்டு பேரும் ஸ்டேஷனுக்கு போய்ட்டு வந்தீங்களா? குமார் அண்ணன் உங்க கல்யாண விஷயத்தைப்பத்தி எதாவது சொன்னாரா? சுந்தரிகிட்ட பேசினியா?சுகன்யாவை வழியணுப்ப சென்ட்ரலுக்கு யார்ல்லாம் வந்தாங்க? அவ என்ன சொல்லிட்டுப்போனா? மல்லிகா கேள்வி மேல் கேள்வியாக மூச்சுவிடாமல் அடுக்கிக்கொண்டே போனாள்.

ஹாலில் நின்றபடியே நடராஜன் தான் கட்டியிருந்த வேஷ்டி சட்டையை நிதானமாக களைந்து கொண்டிருந்தார். மனைவியின் கேள்விகளுக்கு செல்வா சொல்லப்போகும் பதிலுக்காக காதுகளை தீட்டிக்கொண்டு நின்றார்.



"சாயந்திரம் சீனு வந்திருந்தான். அவன் கூட மீனா மட்டும் போய்ட்டு வந்தா." அத்தனை கேள்விக்கும் ஒரே வரியில் விட்டேற்றியாக ஒரு பதிலைச்சொன்ன செல்வாவின் வாயிலிருந்து நீளமான கொட்டாவி ஒன்று வெகு வேகமாக வெளிவந்தது.

"நீ போவலையாடா?" மல்லிகா முகத்தில் எழுந்த ஆச்சரியத்துடன் செல்வாவைப் பார்த்தாள்.

"போவலே..." தன் இடுப்பிலிருந்து நழுவிய லுங்கியை இறுக்கிக் கட்டிக்கொளவதில் முனைப்பாக இருந்தான் அவன்.

"மே மாசத்து வெயில்லே, உன் புள்ளைக்கு பைத்தியம் புடிச்சிருக்கு. மரியாதைங்கறதுக்கு அர்த்தம் அவனுக்கு மறந்து போயிருக்கு. இவனுக்கெல்லாம் கல்யாணம் பண்ணி வெக்கணும்ன்னு நீ துடியா துடிச்சிக்கிட்டு இருக்கே? பத்து தரம் படிச்சு படிச்சி சொல்லிட்டுப்போனேன். சம்பந்தி வீட்டுல நம்பளைப்பத்தி என்ன நினைப்பாங்க?"

“ஊர்ல யாரு வேணா என்ன வேணா நெனைச்சுப்பாங்க. இதுக்கெல்லாம் இவர் ஏன் வீணா கவலைப்படறாரும்மா? எனக்கு ஒடம்பு முடியலே நான் போவலே. இந்த சின்ன விஷயத்தை இப்ப எதுக்கு இந்த அளவுக்கு பெரிசு படுத்தறீங்க?” செல்வா தன் அறைக்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்டான்.

"சரி சரி... ராத்திரி நேரத்துல நீங்க மூச்சைப்பிடிச்சிக்கிட்டு கூவ ஆரம்பிக்காதீங்க. காலையில என்ன ஏதுன்னு அவனை நான் விசாரிக்கறேன்."

"அவனைக் கெடுத்து குட்டிச்சுவரா ஆக்கறேடீ நீ?"

"மணியாச்சுங்க. நீங்க ட்யர்டா இருக்கீங்க. எதுவாயிருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம். இப்ப போய் படுங்கன்னு சொல்றேன். என் பேச்சை நீங்களாவது கேளுங்களேன்." மல்லிகா அவர் முதுகில் கையை வைத்து தங்கள் படுக்கையறையை நோக்கி நெட்டித் தள்ளினாள்.

* * * * *

"சீக்கிரமே நான் ஹார்ட் அட்டாக்லேதான் போவப்போறேன்டீ. நிச்சயமா அதுக்கு காரணம் உன் புள்ளையாத்தான் இருப்பான். இன்னைக்கு சொல்றேன்... நீ எழுதி வெச்சிக்கோ." தன் மார்பில் வந்து விழுந்த மல்லிகாவின் கரத்தை விருட்டெனத் தள்ளிவிட்டு சுவரைப்பார்த்து ஒருக்களித்து படுத்தார் நடராஜன்.

"எதுக்கு இப்ப அச்சாணியமா பேசறீங்க? உங்க புள்ளை மேல இருக்கற கோவத்தை என் மேல ஏன் காட்டறீங்க?"

"...."

"திரும்புங்களேன் என் பக்கம்..." மல்லிகா அவர் முதுகில் மெல்ல குத்தினாள்.

"எனக்கு தூக்கம் வருதுடீ.." நடராஜன் சிணுங்கினார்.

மல்லிகா அவரை விருட்டெனத் தன் புறம் திருப்பி அவர் கழுத்தைக்கட்டிக்கொண்டு தன் கன்னத்தை அவர் கன்னத்தில் மென்மையாக உரசினாள். மனைவியின் ஆதரவான அணைப்பில் நடராஜனின் கோபம் லேசாகக் குறைய ஆரம்பித்தது. மல்லிகாவின் முகத்தை நிமிர்த்தியவர் அவள் உதடுகளை வெறியுடன் கவ்விக்கொண்டார்.

"ஹார்ட் அட்டாக்குல சாகப்போற ஆளுக்கு பொம்பளை மேல இவ்வளவு வெறி வருமா?" மல்லிகா அவர் முதுகை இதமாக வருடிக் கொண்டிருந்தாள். தன் உதடுகளை விரித்தாள். நாக்கை சுழற்றி சுழற்றி அவர் நாவை வளைத்தாள்.

"மருமக வர்றதுக்குள்ள, மனசுல இருக்கற ஆசையெல்லாத்தையும் ஓரேவழியா தீத்துக்கணும்ன்னு நினைக்கறேன்டீ" நடராஜனின் கரம் மல்லிகாவின் மார்பை அழுந்தப்பிடித்தது.

"ஏன்... அதுக்கப்புறம் சாமியாரா ஆயிட்டு, காசி ராமேஸ்வரம்ன்னு எங்கேயாவது டூர் அடிக்கப்போறீங்களா?" களுக்கென சிரித்த மல்லிகா தன் கணவனின் உதடுகளில் ஆசையுடன் முத்தமிட்டாள்.

"நம்மக் கல்யாணத்துக்கு அப்புறம், என் அப்பா திண்ணையிலத்தான் படுத்தார். உனக்கு ஞாபகமில்லையா?" மல்லிகாவின் மீது சட்டெனப் படர்ந்த நடராஜன் அவள் முகமெங்கும் ஆசையுடன் முத்தமிட ஆரம்பித்தார்.

"அந்த வூட்டுலே திண்ணை இருந்திச்சி... இங்கே திண்ணை எதுவும் இல்லீங்களே?" மல்லிகா தன் கைகளால் அவர் இடுப்பை இறுக்கிக்கொண்டாள். அவர் முகத்தை தன் மார்பில் தேய்த்துக்கொண்டு, தன் சந்தேகத்தை அவரிடம் மனதில் எழுந்த சிரிப்பை முகத்தில் காட்டாமல், சொன்னாள்.

"திண்ணை இல்லேன்னா என்னடீ? வெரண்டா இருக்குல்லே? ஓரே வழியா அங்க செட்டிலாயிடவேண்டியதுதான்?"

"ஏங்க இப்டீல்லாம் அர்த்தமில்லாம பேசறீங்க? நானும் இப்பவே சொல்லிட்டேன். நடுராத்திரியிலே வரண்டாவுக்கெல்லாம் வந்து உங்களை நான் கட்டிப்புடிக்கமாட்டேன்... ஆமாம்.." தன் உதடுகளை சுழித்து, கண்களை விரித்து அழகாக சிரித்தாள்.

"மல்லீ... இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்கேடீ.." மனைவியின் கன்னத்தை வெறியுடன் கடித்தார் நடராஜன்.

"மனுஷ மனசை புரிஞ்சுக்கவே முடியலீங்க." மல்லிகா தன் கணவனின் இறுக்கமான அணைப்பில் கிறங்க ஆரம்பித்தாள்.

"மொதல்லெ இந்த நைட்டியை கழட்டி எறிடீ. அப்புறமா மனுஷ மனசைப்பத்தி மெதுவா ஆராய்ச்சி பண்ணலாம்." நைட்டியின் கொக்கிகளை சட்டென விடுவிக்க முடியாமல் நடராஜன் எரிச்சல் பட்டார்.

"கிழிச்சிடாதீங்க... இது ஒண்ணுதான் இப்போதைக்கு கொக்கியோட உருப்படியா இருக்குது." மல்லிகா அவர் கன்னத்தை கடித்தாள்.

"இனிமே என் கூட படுக்கும்போது கொக்கி இருக்கற நைட்டியெல்லாம் போட்டுக்காதேடீ... கழட்டறதுக்குள்ளே உயிர் போய் உயிர் வந்துடுது.”

“நான் உங்க கூட மட்டும்தாங்க படுக்கறேன்.” மல்லிகா குறும்பாக சிரித்தாள்.

“நக்கலாடீ?” நடராஜன் அவள் வலது மார்பை வெறியுடன் கடித்தார்.

“இந்த நாய் புத்தி எப்பத்தான் உங்களை விட்டு ஒழியுமோ?

மல்லிகா தன் மார்புகளை மாற்றி மாற்றி, தன் கணவன் கடிப்பதற்கு தோதாக காட்டிக் கொண்டிருந்தாள். தன் கண்கள் கிறங்க, கணவனை மார்பின் மேல் போட்டுக்கொண்டு நிதானமாக தன் இடுப்பை மேல் நோக்கி அசைக்க ஆரம்பித்தாள். நடராஜனின் பருத்த தண்டு தன்னுள் வேகமாகத் துடிக்கும் போது தன் அசைவை நிறுத்தினாள். கணவன் தன்னை சுதாரித்துக்கொண்டதும், மீண்டும் நிதானமாக அசைய ஆரம்பித்தாள். அசைவை நிறுத்தினாள். மீண்டும் பரபரப்பில்லாமல் அசைய ஆரம்பித்தாள்.

“மல்லீ... இதுக்கு மேல முடியாது போல இருக்குடீ... நடராஜனின் முழு உடலும் நடுங்க ஆரம்பித்தது. நெற்றியில் வியர்வை முத்துக்கள் எட்டிப்பார்த்தன.

“எனக்கு கிடைச்சிட்டுதுங்க... எனக்குப்போதும். நீங்க வந்துடுங்க...” மல்லிகா தன் இடுப்பை வேகமாக மேலே தூக்கினாள்.

நடராஜன் வேக வேகமாக மல்லிகாவை புணர ஆரம்பித்தார். தன்னைத் தளர்த்திகொண்டவர், முக்கலும், முனகலுமாக நீளமாக மூச்சிறைத்து, அன்பு மனைவியின் மார்பின் மேல் சரிந்து விழுந்தார். மல்லிகாவின் மார்பில் பொங்கிய் வியர்வை ஈரத்தில் தன் மார்பின் சூடு மெல்ல மெல்ல தணிவதை உணர்ந்தவர், அவள் மார்பிலிருந்து சரிந்து அவளருகில் விழுந்தார். 

"கடைசியா நீ என்னதான்டா சொல்றே?" மல்லிகாவுக்கு கோபத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க செல்வாவிடம் கூச்சலிட்டுக்கொண்டிருந்தாள்.

“காலையில எழுந்ததுலேருந்து ஏன் என் உயிரை வாங்கறீங்க? நான்தான் நூறு தரம் சொல்லிட்டேன். எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம். எனக்கு அவளைப் பிடிக்கலை.” செல்வா கல்லுளிமங்கனாக சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான்.

"சுகன்யாவைப் பிடிக்கலையா? இல்லே; வேற யாரையாவது உனக்கு பிடிக்க ஆரம்பிச்சிடிச்சா?" நடராஜனும் தன் பங்குக்கு அவரும் கூவிக்கொண்டிருந்தார்.

“இங்கே பார்டா, எனக்கு இவளைத்தான் புடிக்குது; இவளைத்தான் கட்டுவேன்னு நீ தலைகீழா நின்னே; அதுக்கு அப்புறம்தான் இந்த கல்யாணத்துக்கே நான் ஒத்துக்கிட்டேன். இப்போ என்னடா புதுசா கதை சொல்றே? யாரைக் கேட்டுக்கிட்டு மோதிரத்தை கழட்டி அந்த கொழந்தை கையில கொடுத்தே? நிச்சயம் பண்ண கல்யாணத்தை கேன்சல் பண்றதுக்கு நீ யாருடா? எந்த தைரியத்துல அந்த பொண்ணுகிட்ட வீண் பேச்சு பேசிட்டு வந்திருக்கே நீ? மல்லிகாவின் குரலில், அவள் முகத்தில் கோபம் பூரணமாக குடியேறியிருந்தது.

“வாழப்போறது நான்தானே? அப்போ சரின்னு தோணிச்சு; மோதிரத்தை போட்டேன். இப்போ சரியா வரும்னு தோணலை. கழட்டி எறிஞ்சிட்டேன். உறவை முறிச்சிக்கிட்டேன்.” செல்வா தன் முகத்தில் உணர்ச்சிகள் எதுவுமில்லாமல் பேசினான்.

“என்னடா மூர்க்கனாட்டம் பேசறே? என்னடா ஆச்சு உனக்கு? நீ நெனைச்சா போடுவே, நெனைச்சா கழட்டுவே... உன் மனசுக்குள்ள என்னதான் நினைச்சுக்குட்டு இருக்கே? ஒரு பொண்ணோட மனசை ஒடச்சிட்டு வந்து எதுகை மோனையில பேசறயே உனக்கு கொஞ்சமாவது புத்தி இருக்காடா?"

"என் மனசை அவ நொறுக்கினாளே... அதைப்பத்தி யாராவது ஒருத்தர் கவலைப்படறீங்களா?"

"எதுவாயிருந்தாலும் எங்கக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்லே? சுகன்யாவை நம்ம வீட்டுக்கு வரச்சொல்லி, என்னடி இதெல்லாம்ன்னு நான் கேட்டிருப்பேன்லா? இப்ப அவங்க மூஞ்சியிலே முழிக்கமுடியாதபடி பண்ணிட்டியேடா பாவி?" செல்வாவின் தலை முடியை பிடித்து ஆத்திரத்துடன் உலுக்கினாள் மல்லிகா.

“ப்ச்ச்... உன் ஆசை பொண்ணு, நான் மோதிரத்தை கழட்டி போட்டதை மட்டும்தான் உன்கிட்ட சொன்னாளா? அவ ஆஃபீசுல, தன்னோட மானம், மரியாதை எல்லாத்தையும் காத்துல பறக்கவிட்டுட்டு, இன்னொருத்தன்கூட குஜால அடிச்ச கூத்தையெல்லாம் சொல்லலியா?”

"செல்வா... ஒரு நல்லப்பொண்ணை எக்குத்தப்பா பேசாதடா?" மல்லிகா அவனிடம் மன்றாடினாள்.

"என் மருமவ மூக்கும் முழியுமா இருக்கான்னு அவளை உன் தலை மேல தூக்கி வெச்சிக்கிட்டு ஆடினியே? ரீசண்ட்டா, அவளோட முழு நேர வேலை ஆஃபிசுல என்னான்னு உனக்குத் தெரியுமா?"

"அன்னைக்கும் சுகன்யாவைப்பத்தி நீ தான் ஆஹா ஒஹோன்னு சொன்னே... நீ சொல்றதை கேட்டுத்தான் அவளை உனக்கு நிச்சயம் பண்ணோம். இன்னைக்கும் நீதான் அவளைத் தாறுமாறா கன்னா பின்னான்னு பேசறே." நடராஜன் எரிச்சலுடன் முனகினார்.

"சம்பத்துன்னு அவளுக்கு ஒரு அத்தைப்புள்ள இருக்கான். அத்தான்... அத்தான்னு அவனை செல்லுல கொஞ்சி குலாவறதை தவிர வேற எந்த உருப்படியான வேலையும் அவ செய்யறது இல்லே; இதை அவளோட ஆஃபிசர், என் மூஞ்சியில காறி துப்பாத கொறையா துப்பினா."

"ப்ச்ச்ச்... " மல்லிகா சூள் கொட்டினாள்.

"நான் சொல்றதுல உனக்கு நம்பிக்கையில்லேன்னா, உன் ஃப்ரெண்டு சாவித்திரியை போய் கேளு; சாவித்திரிதான் அவளோட ஆஃபீசர். நான் பண்ணதை மட்டும் உனக்கு வத்தி வெச்சாளே, இந்த விஷயத்தையெல்லாம் உன் செல்லப்பொண்ணு உங்கிட்ட சொல்லலையா?" செல்வா முழு மூர்க்கனாக மாறியிருந்தான்.

“இதோ பாருடா... நம்ம வீட்டுலேயும் வயசுக்கு வந்த ஒரு பொண்ணு இருக்கா. நாளைக்கு அவளும் வேலைக்கு போகப்போறா. போற எடத்துல நாலு ஆம்பிளைகிட்ட அவளும் பேசித்தான் ஆகணும். இன்னொருத்தர் வீட்டுப் பெண்ணைப்பத்தி பேசறப்ப, இதெல்லாத்தையும் மனசுல வெச்சுக்கிட்டு மரியாதையா பேசணும்." நடராஜன் தன் அடித்தொண்டையில் உறுமினார்.

"நான் சொல்றதை நீங்க யாருமே ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க?" செல்வா சீற்றத்துடன் தன் தலையில் கையை வைத்துக்கொண்டான்.

"சீனுவை நேத்து நீ மரியாதை இல்லாமே பேசினியாமே? யானை கொழுத்தா, அது தன் தலையிலே தானே மண்ணை வாரி போட்டுக்குமாம்; உன் கல்யாணத்தை நீயே பைத்தியக்காரத்தனமா நிறுத்திக்கிட்டே. இப்ப உன் தங்கச்சி கல்யாணத்தையும் ஏண்டா நிறுத்தப்பாக்கறே?" மல்லிகா சீறினாள்.




"அம்மா... உன் பொண்ணுகிட்ட அப்பவே நான் சாரீன்னு சொல்லிட்டேன். முடிஞ்சு போன விஷயத்தை திரும்ப திரும்ப கிளறாதே." செல்வா தான் உட்கார்ந்திருந்த இடத்திலேயே நெளிந்தான். எதிரில் உட்கார்ந்திருந்த மீனாவை முறைத்தான்.

"சரிடா... நீ சொல்றது எல்லாம் சரி. மீனா என் பொண்ணாயிட்டா; அவளுக்கும் உனக்கும் எந்த உறவுமில்லே; அப்படியே இருக்கட்டும்.."

"அம்மா... என்னை யாருமே ஏம்மா புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க?"

"சுகன்யா நீ சொல்ற மாதிரி பொண்ணு இல்லேடா; உன் மனசாட்சியை தொட்டு சொல்லு; நம்ம சுகன்யா இப்படியெல்லாம் தப்பு பண்றவளா? சாவித்திரி என் ஃப்ரெண்டுதான். ஆனா உனக்கு அவளைத் தெரிஞ்சதை விட எனக்கு அவளைப் பத்தி அதிகமா தெரியும்டா. யாரோ பேசறதையெல்லாம் கேட்டுக்கிட்டு, சுகன்யாவை நீ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கேடா." மல்லிகா தன் மகனின் முதுகை மெல்ல வருட ஆரம்பித்தாள்.

"அம்மா... ப்ளீஸ்... என் வாழ்க்கையை என் இஷ்டப்படி வாழவிடுங்களேன்." அவன் தன் தாயை கையெடுத்து கும்பிட்டான்.

"குமாரசுவாமிக்கு நான் என்னடா பதில் சொல்றது?" நடராஜன் தன் கையை பிசைந்து கொண்டிருந்தார்.

"அவர் என்னைக் கேக்கட்டும்... அவருக்கு நான் பதில் சொல்லிக்கறேன்."

"டேய் இந்த அளவுக்குத் திமிராப் பேசாதடா. திருமணங்கறது ஒரு மனுஷனோட நிம்மதியான வாழ்க்கைக்கு போடப்படற ஒரு அஸ்திவாரம்டா. உன்மேல உண்மையான அன்பு வெச்சிருந்த ஒரு பொண்ணோட மனசை அர்த்தமில்லாம புண்ணாக்கிட்டு வந்திருக்கே. இது தப்புடா." செல்வா அளவுக்கு அதிகமாக மிரள ஆரம்பித்ததும், நடராஜன் கெஞ்சலாக பேச ஆரம்பித்தார்.

"அப்பா... என் மனசு எவ்வளவு தூரம் புண்ணாயிருக்குன்னு உங்களால புரிஞ்சுக்க முடியலே..."

"என் தலையெழுத்து சுகன்யாவை பெத்தவர் முன்னாடி கூனி குறுகி நிக்கற மாதிரி ஆயிடுச்சி. தினம் தினம் நான் அவர் மூஞ்சைப் பாத்தே ஆகணும்... இதுவரைக்கும் யார் முன்னாடியும் என் தலை குனிஞ்சதேயில்லே... இப்ப உன்னால, அந்த ஆளு முன்னாடி என் தலை நிரந்தரமா குனிஞ்சு போச்சு."

"அப்பா.. உங்க புள்ளை நான் இருக்கும் போது, எதுக்காக நீங்க அவரு முன்னாடி கூனி குறுகி நிக்கணும்? அப்படிப்பட்ட வேலையே உங்களுக்கு வேணாம். அந்த கம்பெனி வேலையை விட்டுட்டு வீட்டுல வந்து உக்காருங்க. நான் கை நிறைய சம்பாதிக்கறேன். உங்களை நிம்மதியா, சந்தோஷமா, நான் வெச்சுக்கறேன்." செல்வா வீரமாக முழங்கினான்.

"தூ... விழுந்து விழுந்து உன்னை காதலிச்ச ஒரு பொண்ணை சந்தோஷமா வெச்சுக்கறதுக்கு உனக்குத் துப்பு இல்லே. என்னை, என் பொண்டாட்டியை, என் பொண்ணை, நீ சந்தோஷமா வெச்சு காப்பத்த போறியா? இப்படி பேசறதுக்கு உனக்கு வெக்கமா இல்லே. உன்னை என் புள்ளைன்னு சொல்லிக்கறதுக்கே, வெக்கமாயிருக்குடா. எங்கேயாவது கண்ணு மறைவா ஒழிஞ்சுத் தொலைடா." நடராஜன் தன் தோளில் இருந்த துண்டை உதறிப்போட்டுக்கொண்டார்.

நடராஜனுக்கு வந்த கோபத்தில் தான் என்ன பேசுகிறோம் என்பதை உணராமல் கூச்சலிட ஆரம்பித்தார். சாது மிரண்டதை கண்டதும், மல்லிகா பேச்சு மூச்சில்லாமல், தன் கணவனின் சிவந்த முகத்தை மவுனமாக பார்த்துக்கொண்டிருந்தாள்.

செல்வா விருட்டென எழுந்தான். தன் அறையை நோக்கி ஓடினான். கையில் கிடைத்த நாலு பேண்டையும் நாலு சட்டையையும் ஒரு தோள் பையில் திணித்துக்கொண்டான். காலில் செருப்பை மாட்டிக்கொண்டான். ஹாலில் உட்கார்ந்திருந்தவர்களை திரும்பிப்பார்க்காமல், வெராண்டாவை விட்டு கீழே இறங்கினான்.

"அண்ணா... இப்ப எங்கேடா கிளம்பிட்டே நீ?" மீனா செல்வாவின் பின்னால் ஓடி அவன் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.

"விடுடீ என்னை... நீங்களாவது சந்தோஷமா இருங்க... இல்லே என்னையாவது நிம்மதியா இருக்க விடுங்க. நான் எங்கயாவது, கண்ணு மறைவா ஒழிஞ்சு தொலைக்கறேன்." செல்வா தன் தங்கையின் பிடியை வேகமாக உதறினான்.

"செல்வா இப்ப நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்லேடா. அப்பா ஏதோ கோபத்துல பேசிட்டாரு. உன்னை ஒரு வார்த்தை சொல்ல அவருக்கு உரிமையில்லயா? இந்த நேரத்துல, அப்பாவும் அம்மாவும் மனசு ஒடைஞ்சு இருக்கும் போது, நீ வீட்டை விட்டு வெளியிலே போறது நல்லாயில்லே. சொன்னாக்கேளு. ப்ளீஸ்..." மீனா தன்னால் முடிந்தவரை அவனை வீட்டுக்குள் இழுத்தாள்.

"ஏய்.. மீனா... அவன் ரொம்பத்தான் பூச்சி காட்டறான். போகட்டும் விடுடி. இங்கே யாரும் யாரையும் நம்பி பொறக்கலே. தனியாத்தான் வந்தோம். தனியாத்தான் போகணும்." மல்லிகா தன் தலை முடியை முடிந்துகொண்டாள். சமையலறையை நோக்கி விறுவிறுவென நடந்தாள்.

செல்வா காம்பவுண்டு கேட்டை திறந்து கொண்டு வெளியில் நடந்தான். மீனா வெரண்டா கதவில் சாய்ந்துகொண்டு தன் அண்ணன் போன திசையையே வெறித்துக்கொண்டு நின்றிருந்தாள். நடுக்கூடத்தில், நடராஜன் தன் தலையில் இருகைகளையும் வைத்துக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தார்.

"அயாம் சாரிம்மா சுகன்யா..." தன் மனதுக்குள் அழுதுகொண்டிருந்தார் அவர். 

அலுவலக நேரம் முடிந்து குமாரசுவாமியின் பர்சனல் செகரட்டரி தன் வீட்டுக்கு கிளம்பிவிட்டிருந்தாள். குமார் தன் அறையில் மிகவும் கவனமாக ஏதோ ஒரு பைலில் மூழ்கியிருந்தார். நடராஜன் அவர் அறைக்குள் நுழைந்தார்.

"உள்ளே வரலாமா குமார்?"

"வாங்க நடராஜன்..." குமாரசுவாமி தன் டேபிளின் மேலிருந்த பைலை மூடிவிட்டு எழுந்தார். " உக்காருங்க... இன்னும் வீட்டுக்கு கிளம்பலியா?" சோஃபாவின் பக்கம் தன் கையை நீட்டினார்.

"கிளம்பணும்... ஒரு நிமிஷம் பர்சனலா பேசணும்"

"சொல்லுங்க..."

"அயாம் சாரி குமார். நடந்த விஷயத்தையெல்லாம், நேத்துதான் மீனா எங்ககிட்ட சொன்னா. சுகன்யா உங்க மகள் மட்டுமில்லே. அவ எங்களோட மகள். நிச்சயமா சுகன்யா மேல எந்த தப்பும் இருக்காதுன்னு நான் நம்பறேன். என் பொண்ணை நான் நம்பலேன்னா வேற யார் நம்புவாங்க? செல்வா அடிச்ச கூத்துக்கு, நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்." நடராஜனின் தலை தாழ்ந்திருந்தது.

"நோ... நோ... நடராஜன்.. ப்ளீஸ் உணர்ச்சி வசப்படாதீங்க. சுகன்யா உங்க பொண்ணுன்னா, செல்வா யாரு? அவன் எங்க வீட்டுப்பிள்ளை தானே? என் அப்பா சொல்ற மாதிரி ஏதோ போதாத வேளை... கெட்ட நேரம், கொழந்தைகளை ஆட்டிப்படைக்குது." பக்கத்திலிருந்த பிளாஸ்கை திறந்து இரு கோப்பைகளில் தேனீரை ஊற்றி நடராஜனின் பக்கம் ஒரு கோப்பையை நகர்த்தினார்.

"தேங்க் யூ குமார்..." நடராஜன் அவர் கையைப் பிடித்துக்கொண்டார்.

"கோவத்துல என் கண்ணு முன்னாடி நிக்காதடான்னு செல்வாவை கொஞ்சம் கடிஞ்சி பேசிட்டேன். நேத்து காலையில பத்து மணிக்கு வீட்டை விட்டு போனவன் இப்பவரைக்கும் வீட்டுக்கு திரும்பி வரலே. இதை யாருகிட்ட சொல்லி அழறதுன்னு எனக்கு தெரியலே. என்னப்பண்றதுன்னும் புரியலே.?" நடராஜனின் குரல் தழுதழுத்தது.

"நான் வேணா செல்வா கிட்ட பேசிப்பாக்கட்டுமா?" குமாரசுவாமி, நடராஜனின் தோளில் தன் கையைப் போட்டுக்கொண்டார்.

"வேண்டாம் குமார்.. என் மேல இருக்கற கோவத்துல அவன் உங்களை எதுவும் தப்பா பேசிடக்கூடாது.."

"தென்.. சீனு மஸ்ட் பீ த கரெக்ட் பர்சன். செல்வா வீட்டுக்கு வரலேங்கற விஷயம் அவனுக்குத் தெரியுமா?"

"தெரியாது.."

"டாக் டு ஹிம்.. பிளீஸ்... "

"குமார்... எத்தனை நாளானாலும், சுகன்யாதான் என் மருமகளா என் வீட்டுக்குள்ள நுழைய முடியும். என் மனைவியோட முடிவும் இதுதான்." நடராஜன் தேனீர் கோப்பையை டீப்பாயின் மேல் ஓசையெழுப்பாமல் வைத்தார்.

"ஹூம்ம்ம்ம்..." நீளமாக பெருமூச்செறிந்தார் குமாரசுவாமி.

"செல்வா மேல எனக்கு வருத்தம் இருக்கறது உண்மை. ஆனா அவன் மேல நிச்சயமா கோபம் இல்லே. அவனும் சின்னப்பையன்தானே? வாழ்க்கையை அவன் இன்னும் சரியா புரிஞ்சுக்கலே. இப்போதைக்கு சுந்தரிக்கு அவன் மேல கொஞ்சம் கோபமிருக்கு. சுகன்யாவோட நடத்தையை செல்வா சந்தேகப்பட்டான்னு தெரிஞ்சதும் அவ ரொம்ப பதறிப்போயிட்டா..."

"சுகன்யாவோட தாயாச்சே? அவங்க கோபம் நியாயமானதுதான்." நடராஜனுக்கு குமாரின் முகத்தைப்பார்க்க தெம்பில்லை.

"சுகன்யா, கடைசியா ஸ்டேஷன்ல, செல்வாவை இப்பவும் நான் வெறுக்கலேன்னுதான் மீனாகிட்ட சொன்னா. ஆனா சுகன்யா இப்ப மனசால ரொம்ப அயர்ந்து போய் இருக்கா. கொஞ்சநாள் அவளை அவளோட போக்குல விட விரும்பறேன். செல்வா அவனா திரும்பி வரட்டும். அந்த நேரத்துல சுகன்யாவும் செல்வாவை கல்யாணம் பண்ணிக்க விருப்பப்பட்டால் மட்டுமே இந்தக் கல்யாணம் நடக்கும். அப்பத்தான் அவங்க சுகமாயிருப்பாங்கன்னு நினைக்கிறேன்."



"குமார்... நீங்க சொல்றது எனக்குப் புரியுது. திரும்பவும் சொல்றேன். சுகன்யாவோட எடத்துல வேற யாரையும் என்னால வெச்சுப் பாக்க முடியாதுன்னு மல்லிகாவும் முடிவெடுத்திருக்கா. எங்க மனசுல இருக்கறதை, உங்க வைப் சுந்தரிகிட்டவும் தெளிவா சொல்லுங்க... பத்து நாள் போகட்டும். நானே வந்து அவங்களை நேர்ல பாத்து இதை சொல்றேன்.!

"நடராஜன் நீங்க சொல்றதை கேக்கறதுக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா நாம இப்ப கொஞ்சம் பொறுமையா இருக்கறது நல்லதுன்னு எனக்குத் தோணுது.

"யெஸ்... வேற வழியில்லே."

"நடராஜன்... இந்த நேரத்துல உங்ககிட்ட ஒரு ரிக்வெஸ்ட் பண்ண விரும்பறேன். ஆஃபிசுல எப்பவும் போல நீங்க இயல்பா உங்க வேலையைப் பாக்கணும். நம்ம ரெண்டுபேருக்கும் இடையில இருக்கற சுமுகமான உறவுக்கு நடுவுல, அது அலுவலக உறவாயிருந்தாலும் சரி; தனிப்பட்ட நட்பாயிருந்தாலும் சரி; செல்வா எடுத்த முடிவு, எந்த மாத்தத்தையும் எப்பவும் உண்டு பண்ணாது."

"தேங்க் யூ குமார்..." நடராஜன் தன் நண்பரின் கையை அழுத்தமாக குலுக்கினார்.

"நடராஜன்... செல்வா உங்க வீட்டுக்கு இன்னைக்கே வந்து சேருவான். நானும் சீனுகிட்டே பேசறேன்... கவலைப்படாம வீட்டுக்குப் போங்க." குமார் மென்மையாக சிரித்தார்.


சுகன்யா... 98

“ரகு நீ எழுந்திருடா. இவ சொல்ற கதையை நாம என்னக் கேக்கறது? இவரோட ஆசை பொண்ணுகூட உக்காந்து அவரு நிதானமா யோசிச்சு ஒரு முடிவுக்கு வரட்டும். இந்தக்கொடுமையையெல்லாம் என்னால பாத்துக்கிட்டு இருக்க முடியாது. சம்பந்தி வீட்டுக்கே போய் என்ன ஏதுன்னு நேர்லேயே ஒரு வார்த்தை கேட்டுட்டு வந்துடலாம்?

சுந்தரியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது. தன் வாழ்க்கையில் வந்ததைப் போன்ற எந்த பிரச்சனையும் தன் பெண்ணின் வாழ்க்கையிலும் வந்துவிடக்கூடாது என அவள் அஞ்சினாள்.

“அக்கா... நீ சும்மா இருக்கியா ஒரு நிமிஷம்? சுகன்யா... உங்களுக்குள்ள என்னப் பிரச்சனைங்கறது எங்களுக்குத் தெரிஞ்சுத்தான் ஆகணும். ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரிச்சிப் போறதுக்குப் பேருதான் வாழ்க்கை. நாலு பேரு நடுவுல அவங்க கொடுத்த சீர்வரிசையை கூரியர்ல்ல அனுப்பிடலாம். போஸ்ட்ல அனுப்பிடலாம்ன்னு, எடுத்தமா, கவுத்தமான்னு இப்படில்லாம் நீ பேசறது நல்லாயில்லே.” ரகு தன் தன் மருமகளுக்கு புத்தி சொல்ல ஆரம்பித்தார்.



"மாமா... எங்களுக்குள்ள ஆயிரம் வேறுபாடுகள் இருக்கு. எனக்கு பிடிச்ச விஷயங்கள் அவனுக்குப் பிடிக்காம இருக்கலாம். அவனுக்கு இன்ட்ரெஸ்ட் இருக்கற சில சமாச்சாரங்கள்ல்ல எனக்கு பிடிப்பு இல்லாமல் போகலாம். இதெல்லாம் பரவாயில்லே. என்னால அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியும். ஆனா அவன் என்னைச் சந்தேகப்படறான்."

"சந்தேகப்படறானா? என்னம்மா சொல்றே?" குமாரசுவாமி முகத்தில் அதிர்ச்சியுடன் சுகன்யாவை நோக்கினார்.

"அப்பா... நான் ஓப்பனா சொல்றேன். அவன் என் நடத்தையைச் சந்தேகப்படறான். சந்தேகப்படற ஒருத்தன் கூட வாழ்க்கை நடத்தறது ரொம்பக் கஷ்டம்பா." சுகன்யா தன் முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டாள்.

"நீங்க ஒருத்தரை ஒருத்தர் காதலிச்சீங்கம்மா. இவ்வளவு நாள்லே, நீங்க ஒருத்தரை ஒருத்தர் கொஞ்சமாவது புரிஞ்சுகிட்டு இருக்கணுமே? என்ன இப்படி பேசறே நீ?"

"உண்மைதான். என் கூட வேலைசெய்யறவன் கூட பேசினா, அவன்கிட்ட நீ ஏன்டீ சிரிச்சிப் பேசறேங்கறான். அவனோட ஏன்டீ நீ டீ குடிக்கப் போனேங்கறான்? இவனோட நீ ஏன் உக்காந்து சாப்பிடறேங்கறான்? என்னையும் எங்கூட வேலை செய்யற சுனில்ங்கறவனையும் இணைச்சு தப்புத்தப்பா பேசறான்.

"இது என்னடீ கொடுமை..?" கனகா தன் தலையை தோளில் நொடித்தாள்.

"சம்பத் அத்தான் எனக்கு போன் பண்ணா, அவங்கூட ஏன் பேசறேங்கறான்? நான் யாருகூட பேசணும்... பேசக்கூடாதுங்கறதை இவன் யாரு சொல்றதுக்கு?"

"அவன் உன் புருஷனாகப் போறவண்டீ?" சுந்தரி குதித்தாள்.

"அம்மா... அவனைப்பத்தி உனக்கு ஒண்ணும் தெரியாதும்மா? பாட்டி... என் ஆஃபீசுல எவனோ ரெண்டு பேரு என் பின்னாடி சுத்தினான். நான் அவனுங்களை திரும்பிகூடப் பாத்ததில்லே. அந்த வெறுப்புலே அவனுங்க எதையோ என்னையும், என் கலீக்கையும் சம்பந்தப்படுத்தி பேசினாங்கன்னு சொல்லி இவன் என் நடத்தையை சந்தேகப்படறான். இவன் கூட எப்படி நான் வாழமுடியும்... நீயே சொல்லு?" சுகன்யாவுக்கு மூச்சு இறைத்தது.

"அப்புறம்..?" சுந்தரி பொரிந்தாள்.

"நாளைக்கு கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம், பால்காரன், கேஸ்காரன், இஸ்திரி போடறவன், ஆட்டோ ஓட்டறவன், இவங்க கூடல்லாம் நான் பேசலாமா கூடாதான்னு அவனைக் கேட்டேன்."

"நான்தான் இவளுக்கு வாய்கொழுப்பு அதிகம்ன்னு தலை தலையா உங்கக்கிட்ட அடிச்சுக்கறேனே? அது கரெக்ட்டுதான்னு உங்க பொண்ணு உங்களுக்கு காமிச்சிட்டாளா? உங்க அழகு பொண்ணை உங்க கூடவே ஆயுசு முழுக்க வெச்சுக்கிட்டு கொஞ்சிக்கிட்டு இருங்க. இவளுக்கு தேவையில்லாத அளவுக்கு செல்லம் குடுக்கறீங்க..." சுந்தரி பாட்டுக்கு தன் மகளின் மீது இருக்கும் எரிச்சலை தன் கணவரின் மீது காண்பித்தாள்.

"அப்பா... நான் சொல்றதை நீங்க கேளுங்கப்பா... ரகு மாமா என் வீட்டுக்கு வந்தா, அவர் கிட்டவாவது நான் பேசலாமா கூடாதான்னு கேட்டேன். இதுவும் வாய்க்கொழுப்பா? நான் கேட்டதுல என்னத்தப்பு இருக்கு?"

"ம்ம்ம்... என்னம்மா இது? அவன்தான் எதையோ சொன்னான்னா நீயும் கண்டபடி பேசிட்டு வந்திருக்கியே? இதெல்லாம் நல்லாவா இருக்கு?" குமாரசுவாமி தன் தலையில் கையை வைத்துக்கொண்டார்.

"நான் அவனோட மனஉணர்வுகளை புரிஞ்சிக்கலையாம்? சுகன்யா நான் உன் புருஷனாகப் போறேன்... அதனலா நான் சொல்றபடிதன் நீ நடக்கணும். என் விருப்பப்படிதான் எல்லாம் நடக்கும். உனக்கு இது பிடிக்கலேன்னா, நம்ம உறவை முறிச்சிக்கலாம்ன்னு சொல்லி மோதிரத்தை கழட்டி வீசி எறிஞ்சிட்டான்."

"ஆம்பிளைத் துணையில்லாம, ஒரு பொம்பளை வாழமுடியாதா? ஏம்மா பதினைஞ்சு வருஷம் அப்பா இல்லாமே நீ தனியா வாழலையா? மாமா மேரேஜ் பண்ணிக்காமலேயே தனியா தன் வாழ்க்கையை நிம்மதியா வாழலையா? என்னாலேயும் தனியும் வாழமுடியும். எனக்கு எந்த ஆம்பிளையோட துணையும் தேவையில்லை." சுகன்யா கொதித்துக்கொண்டிருந்தாள்.

"சிவ... சிவா... கண்ணு சுகன்யா, நான் சொல்றதை கேளும்மா... கோவத்துல குழந்தைத்தனமா பேசாதேம்மா. பொறுமையா இரு... குமாரு நீ போய் அந்த நடராஜனை என்ன ஏதுன்னு கேட்டுட்டு வாடா." சிவதாணு தன் பேத்தியின் தலையை வருட ஆரம்பித்தார்.

"அப்பா... என் மனசுல இருக்கறதை நான் முடிவா சொல்லிட்டேன். நாளைக்கு நான் டில்லிக்கு கிளம்பியாகணும். என் கேரீரையாவது என்னை நிம்மதியா பர்சூயு பண்ண விடுங்க. இப்போதைக்கு எந்தப்பிரச்சனையையும் உண்டு பண்ணாதீங்க. நீங்க எப்ப வேணா அவங்க வீட்டு சீர் வரிசையை திருப்பிக்கொடுத்துடுங்க. இனிமே அதை நான் என் கையாலத் தொடமாட்டேன்.

நீங்க அந்தப்பார்சலை கூரியர் மூலம் அனுப்புவீங்களோ? நேராப்பாத்து குடுத்துட்டு வருவீங்களோ... ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன். நீங்க நேராப்போனா உங்களையும் அவன் மரியாதையில்லாம பேசினாலும் பேசலாம். அவன் பழைய செல்வா இல்லே; இதுக்கு அப்புறம் உங்க இஷ்டம்." சுகன்யா விருட்டென எழுந்து தன் அறையை நோக்கி நடந்தாள். 

சுகன்யா தில்லிக்கு கிளம்பிய தினத்தன்று, மருத்துவமனையில், கவலைக்கிடமான நிலையில், அனுமதிக்கப்பட்டிருந்த நெருங்கிய உறவினர் ஒருவரின் நலம் விசாரிப்பதற்காக நடராஜனுக்கு செங்கல்பட்டு வரை போகவேண்டியிருந்தது. தன்னுடன் மல்லிகாவும் வருவதால், தங்களால் சுகன்யாவை வழியணுப்ப ஸ்டேஷனுக்கு வரஇயலாது என்பதனை அவர் வருத்தத்துடன் முதல் நாளே சுகன்யாவிடம் போன் மூலமாக தெரிவித்திருந்தார்.

செல்வாவுக்கு என்னாச்சு? காலையிலேருந்து குளிக்காம கூட, வெரண்டா பெஞ்சிலேயே சோம்பேறித்தனமா படுத்துக்கிடக்கறானே? லஞ்சுல சாப்பிடக்கூப்பிட்டதுக்கும், சரியா பதில் எதுவும் சொல்லலே; சாப்பிடவும் இல்லே; மொகத்தை கடுவன் பூனை மாதிரி உர்ன்னு ஏன் வெச்சிருக்கான்? எனக்குத்தெரிஞ்சு, இரண்டு மூணு நாளா சுகன்யாவோட போனும் வரலே. திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடிச்சா? செல்வாவுக்கும், சுகன்யாவுக்கும் நடுவுல லடாயோ என்னவோ தெரியலியே? மனதிற்குள் அவனிடமோ, சுகன்யாவிடமோ இதைப்பற்றி பேசுவதற்கு தயங்கிக்கொண்டிருந்தாள் மீனா.

"அண்ணா... மணி அஞ்சரைக்கு மேல ஆவுது. எழுந்து குளியேன். ஸ்டேஷனுக்கு போகவேணாமா?" செல்வாவின் கையில் சூடான காஃபி டம்ளரைத் திணித்தாள் மீனா. மெல்லிய பழுப்பு நிற ஷிஃபான் சாரியும், வெள்ளை நிறத்தில் ஸ்லீவ்லெஸ் ரவிக்கையுமாக, அன்று வெகு சிரத்தையாக தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள் அவள்.

"நான் வரல்லே. உனக்கு எங்கேயாவது போயே ஆகணும்ன்னா, சீனுவை துணைக்கு கூப்பிட்டுக்கிட்டு போ." காஃபியை இரண்டே விழுங்கில் குடித்த செல்வா, மீண்டும் அதே பெஞ்சில் சுருண்டுப் படுத்துக்கொண்டான்.

* * * * *

"மச்சான்... உடம்பு கிடம்பு சரியில்லையாடா?" சீனு செல்வாவை உலுக்கினான்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லே மாப்ளே." செல்வா முனகியவாறு எழுந்து உட்கார்ந்தான்.

"டேய்... இன்னைக்கு உன் ஆள் டெல்லிக்கு கிளம்பறடா? மறந்துட்டியா?" சீனு அவன் முதுகில் விளையாட்டாகக் குத்தினான்.

"யாரு எங்கப் போனா எனக்கென்னா? ஆளைக் கொஞ்சநேரம் நிம்மதியா இருக்க விடுடா." செல்வா தன் முகவாயை சொறிந்துகொண்டான்.

"யாரு எங்கப் போனா உனக்கென்னவா? என்ன மச்சான்... எங்கிட்டவே நீ ஃபிலிம் காட்டறே? எனக்கு காது குத்தி, பூ சுத்தற ஐடியாவை மட்டும் நீ தயவு செய்து விட்டுடு. சுகன்யா உன்னை கலாய்க்கறாளா? இல்லே நீ அவளை கலாய்க்கறியா? அடிக்கடி நீங்க ரெண்டு பேரும் இந்த மாதிரி சண்டை போட்டுக்கிட்டாலும், அந்த சண்டைக்கு சுத்தமா மதிப்பில்லாம போயிடும்." சீனு அவன் தலை முடியை கலைத்தான்.

"ப்ளீஸ்... என்னைத் தொந்தரவு பண்ணாதேன்னு ஒரு தரம் சொன்னா உனக்குப்புரியாதா?" செல்வா அவன் முகத்தைப் பார்க்கவில்லை.

"என் மூஞ்சைப்பாத்து பேசுடா. திரும்பவும் உங்களுக்குள்ள எதாவது அடிதடியா? அடிச்சது யாரு; அடி வாங்கினது யாரு?" சீனு கிண்டலாக சிரித்தான்.

"என் பர்சனல் விஷயத்துல, யாரும் அனாவசியமா தலையிடாம இருந்தா நல்லதுன்னு நான் நினைக்கிறேன்." விருட்டெனத் தன் தலையை உயர்த்தி மீனாவை ஒரு முறை முறைத்த செல்வா, தான் உட்கார்ந்திருந்த பெஞ்சை விட்டு எழுந்து, மாடிப்படிக்கட்டை நோக்கி நடந்தான். வேப்பமரத்தின் நிழலில், மாடிப்படிக்கட்டின் கைப்பிடியில் சாய்ந்துகொண்டு, தன் வலது கை விரல்களின் நகத்தை அவசர அவசரமாக கடித்து துப்ப ஆரம்பித்தான். சீனுவின் முகத்தில் ஈயாடவில்லை. விருட்டென திரும்பி மீனாவின் முகத்தை ஒருமுறைப்பார்த்தான் அவன்.

"அண்ணா... இவரு உனக்கு க்ளோஸ் ஃப்ரெண்டா இருக்கலாம். நீங்க ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது, உங்களுக்குள்ள எப்படி வேணா பேசிக்குங்க. என்ன வேணா பேசிக்குங்க. அதைப்பத்தி எனக்கு கவலையில்லே. இவரு இந்த வீட்டு மாப்பிள்ளையா ஆகப்போறவர். என் எதிர்ல இவர்கிட்ட நீ கொஞ்சம் மரியாதையா பேசினா நல்லாயிருக்கும். இனிமே பேசறதுக்கு முன்னே, யார்கிட்ட என்ன பேசறோம்ங்கறதையும் கொஞ்சம் யோசனை பண்ணி பேசு." மீனாவுக்கு சட்டென அவள் மூக்குக்கு மேல் கோபம் வந்தது.

"பேசாம இருடீ..." கண்களால் பேசிய சீனு மீனாவின் இடது முழங்கையைப் பிடித்து அழுத்தினான்.

"வெல்... அயாம் சாரி மீனா... இனிமே இன்னொரு தரம் இப்படி நடக்காது. ஆனா இப்ப... ப்ளீஸ் லீவ் மீ அலோன்." செல்வா தன் இடது கை விரல்களிலிருந்த நகங்களை கடிக்க ஆரம்பித்தான். 



சென்ட்ரல் ஸ்டேஷனில், சுகன்யா தன் அலுவலக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தாள். சற்று தள்ளி குமாரசுவாமியும், சுந்தரியும், ரகுவுடன் நின்றிருந்தார்கள். மீனாவும், சீனுவும் வந்ததையே கவனிக்காததுபோல், தொங்கிப்போன முகத்துடனிருந்த அவர்களை கண்டதும், செல்வாவுக்கும் சுகன்யாவுக்கும் இடையில் நிச்சயமாக ஏதோ நடந்திருக்க வேண்டும், அதனால்தான் செல்வா ஸ்டேஷனுக்கு வராமல் இருந்துவிட்டானோ என்கிற பயம் மீனாவின் மனதில் எழுந்தது.

"குட் ஈவீனிங் அங்கிள்... அத்தே நீங்க எப்படியிருக்கீங்க?" மீனா சுந்தரியின் பக்கத்தில் சென்று வெகு நெருக்கமாக நின்றாள். சீனு, குமாரசுவாமியின் கையை குலுக்க ஆரம்பித்தான்.

"ஆண்டவன் விட்ட வழின்னு இருக்கோம்மா... நீ நல்லாயிருக்கியாம்மா? உங்க வீட்டுல யாருக்கு உடம்பு சரியில்லை? உங்கம்மாவும் செங்கல்பட்டுக்கு போயிருக்காங்களா?" சுந்தரி தன் குரலில் உயிரில்லாமல் பேசிக்கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தாள். அவள் செல்வாவைத்தான் தேடுகிறாள் என்பது மீனாவுக்கு தெளிவாகப்புரிந்தது.

"ஆமாம் அத்தே, எங்க அப்பாவோட தாய் மாமாவை ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணியிருக்காங்க. அவரைப்பாத்துட்டு, நேரா இங்கே வந்துடறேன்னு அப்பா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எனக்கு போன் பண்ணார்.."

"பாவம்.. அவருக்கு எதுக்கு வீண் அலைச்சல்? அதான் நீங்க ரெண்டு பேரும் வந்திருக்கீங்களே?" சுந்தரியின் கண்கள் பிளாட்ஃபாரத்தின் நெடுக அலைபாய்ந்து கொண்டிருந்தது.

"அலைச்சல் எல்லாம் ஒண்ணுமில்லே; சுகன்யா தில்லிக்கு போறாளேன்னு டல்லாயிருக்கீங்களா அத்தே? மூணு மாசம்தானே? மூணு வாரமா ஓடிடும்; கவலைப்படாதீங்க." மீனா, சுந்தரியின் இடுப்பைக்கட்டிக்கொண்டாள்.

"அதெல்லாம் இல்லேம்மா?"

"அப்புறம் ஏன் உம்முன்னு இருக்கீங்க? அங்கிள் எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருப்பார். இன்னைக்கு என்னமோ அவரும் ரொம்பவே மூட் அவுட் ஆன மாதிரி இருக்கார்?" சுந்தரியை மீனா விடாமல் துருவ ஆரம்பித்தாள்.

அதற்குமேல் சுந்தரியால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளமுடியவில்லை. தன் மனதில் இருக்கும் கொதிப்பை யாரிடமாவது கொட்ட நினைத்தாள். கடந்த வாரம், செல்வாவுக்கும், சுகன்யாவுக்கும் இடையில் நடந்ததை தணிந்த குரலில் மீனாவிடம் சொல்ல ஆரம்பித்தாள். திடுக்கிட்டுப்போன மீனா, சீனுவை தன்னருகில் வரும்படி சைகை செய்தாள். நடந்ததை அறிந்ததும் அவனும் அதிர்ந்து போய் என்ன பேசுவதென தெரியாமல் நின்றான். சுகன்யா நின்ற திசையில் திரும்பிப்பார்க்க, இப்போது அவளும், குமாரசுவாமியும் மட்டும் தனியாக நின்றிருந்தார்கள். சீனு அவர்களை நோக்கி நடந்தான்.

"என்ன சீனு... உன் ஃப்ரெண்டை பொறுப்புள்ள பையன்னு நினைச்சேன். இப்படி பண்ணிட்டானே?" குமாரசுவாமி வருத்தமாக பேசினார்.

"சுகன்யா... செல்வா ஒரு முட்டாள். இந்த நிமிஷம் அவனை என் ஃப்ரெண்டுன்னு சொல்லிக்கவே எனக்கு வெக்கமாயிருக்கு. அயாம் சாரி. கொஞ்ச நாளைக்கு அவன் கிட்ட எந்தக் காரணத்துக்காகவும் நீங்க வாயைத்திறக்காதீங்க. லெட் ஹிம் ரியலைஸ் ஹிஸ் மிஸ்டேக். அப்பத்தான் அவனுக்கு உங்க அருமை புரிஞ்சு புத்தி வரும்."

"அயாம் சாரி அங்கிள். என்ன சொல்றதுன்னே எனக்குத் தெரியலே; நீங்க பெரியவங்க, உங்களுக்குத் தெரியாதது இல்லே, கொஞ்சம் பொறுமையா இருங்க."

"சுகன்யா... லெட் த டஸ்ட் செட்டில் இன். ப்ளீஸ் கிவ் மீ எ சான்ஸ். செல்வாகிட்ட நான் பேசறேன். எல்லாம் நல்லபடியா நடக்கும். " சீனு சுகன்யாவிடம் மெல்ல முணுமுணுத்தான்.

"வேண்டாம் சீனு... நீங்க வீணா சிரமப்படவேண்டாம். செல்வா இப்ப யார் பேச்சையும் கேக்கற மனநிலையிலே இல்லே." சுகன்யா தன் உதடுகள் துடிக்க மேலே எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.

"சுகன்யா... என் அண்ணண் உன்னை வெறுக்கறேன்னு சொல்லியிருக்கலாம். ஆனா நீ அவனை தயவு செய்து வெறுத்துடாதே. ப்ளீஸ்... சொல்லு சுகன்யா. அவனை நீ வெறுக்கமாட்டேன்னு எனக்கு பிராமிஸ் பண்ணு." சுகன்யாவின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்ட மீனாவின் கண்கள் கலங்கியிருந்தன.

"இல்லே மீனா. நிச்சயமா இல்லே. என் காதலை நானே எப்படி வெறுக்க முடியும்?" சுகன்யா தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

"தேங்க்யூ சுகன்யா... தேங்க்யூ... இது போதும் எனக்கு."

மீனாவும் கலங்கும் தன் விழிகளைத் துடைத்துக்கொண்டாள். ஒரு முறை மூக்கை உறிஞ்சினாள். பக்கத்தில் நின்றிருந்த சுந்தரியின் கையை பிடித்தாள். அத்தே... என் அண்ணன் சுகன்யாகிட்ட அறிவுகெட்டத்தனமா நடந்துகிட்டு, உங்க எல்லோரோட மனசையும் புண்படுத்திட்டான். அதுக்காக நான் உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்."

அங்கிள், செல்வா மேல நிச்சயமா உங்களுக்கு கோபம் இருக்கும். என் அண்ணன் பண்ணதை நினைச்சு, எங்கப்பா மேல நீங்க கோபப்பட்டுடாதீங்க. சுகன்யா எப்ப எங்க வீட்டுக்கு வரப்போறான்னு அவர் காத்துக்கிட்டு இருக்கார்." மீனாவால் அதற்கு மேல் பேசமுடியாமல் உதடுகளை கடித்துக்கொண்டாள்.



"சே..சே.. என்னப்பேசறே மீனா? இது நடந்து ஒரு வாரமாச்சு. நடந்து போனதுக்கு உங்க அப்பா என்ன பண்ணுவார்? இல்லே.. உங்கம்மாதான் என்ன பண்ணுவாங்க? யார் மேலேயும் எங்களுக்கு கோவமில்லேம்மா. உங்கப்பா ஏற்கனவே ரெண்டு நாளா டென்ஷன்ல இருக்கறது எனக்கு நல்லாத்தெரியும். அவங்க யாரையோ பேஷண்ட்டைப் பாத்துட்டு வர்றாங்க... நீ தெரிஞ்சுக்கிட்டதையெல்லாம், இன்னைக்கே உங்க வீட்டுல சொல்லி, உன் பேரண்ட்சையும் மனவேதனை படவெச்சிடாதே. " அவள் தலையை மென்மையாக வருடினார் குமாரசுவாமி.

"சரி அங்கிள்.."

"மொதல்லே நீ அழறதை நிறுத்தும்மா. நீ அழறதைப்பாத்து உன் ஃப்ரெண்டும் அழறாப்பாரு." குழந்தைபோல் அழும் மீனாவை சுந்தரி தன் தோளோடு சேர்த்தணைத்துக்கொண்டாள். '


சுகன்யா... 97

"சுகன்யா, மணி என்னடி ஆகுது?"

அனுராதாவின் குழந்தைத்தனம் மாறாத குரல் அறைக்குள்ளிருந்து கிசுகிசுப்பாக வந்தது. சுகன்யா சட்டெனத் திரும்பிப்பார்த்தாள். அனு கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள். பால்கனி கதவை மூடிக்கொண்டு குதிநடையாக அறைக்குள் வந்தாள் சுகன்யா.

இந்த நாலு நாள்ல, நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் வாடீ போடீன்னு கூப்பிடற அளவுக்கு நெருக்கமாயிட்டோம். நிறைய விஷயங்கள்லே எங்க ரெண்டுபேருக்கும் கருத்துகள் ஒத்துப்போகின்றன. அனுராதாவும் சிரிச்சி சிரிச்சி பேசறா. பேசும்போதும், சிரிக்கும் போதும், இவளுக்கு முகம் மத்தாப்பூவா மலர்ந்து போகுது. எந்த சந்தர்ப்பத்துக்கும் ஏத்த மாதிரி, இவ உதட்டுல ஒரு ரெடிமேட் சிரிப்பை வெச்சிருக்கா. இவ சிரிப்பைப் பாத்தா என் மனசு நெறைஞ்சு போவுது.

நிஜமாவே அனுராதா மனசுலேருந்து சிரிப்பு இயற்கையா பொங்கி பொங்கி வருது. இவ நிச்சயமா போலியாக பொய்யாக சிரிக்கலை. சிரிக்கறது நல்லதுதானே. இதுவரைக்கும் எவனையும் இவ காதலிச்சு இருக்கமாட்டான்னு தோணுது! அதான் இவளுக்கு மனசுலேருந்து சிரிப்பு வருது! இப்போது சுகன்யாவுக்கு சிரிப்பு வந்தது.



சீனுவின் முகம் சுகன்யாவின் மனதுக்குள் வந்தது. அவனும் இப்படித்தான் எதுக்கெடுத்தாலும் சிரிப்பான். அவன் சிரிக்கற சிரிப்பை பாத்துத்தான் நான் அவன்கிட்ட மயங்கிட்டேன்னு மீனா ஒரு தரம் சொன்னா. சீனுவோட மூஞ்சியில சீரியஸ்னெஸ்ஸைப் பாக்கவே முடியாது. மீனா ரொம்பவே குடுத்து வெச்சவ.

சுகன்யா அறைக்குள்ளேயே தன் உடலை ஸ்ட்ரெச் செய்து கொண்டிருந்தாள். நின்ற இடத்திலிருந்தே அனுவின் பக்கம் திரும்பினாள். மெல்லிய போர்வையை காலிலிருந்து தலை வரை இழுத்துப் போர்த்திக்கொண்டு, கட்டிலில் உருண்டு கொண்டிருந்தாள் அவள். இவளால எப்படி கவலையே இல்லாம இப்படி பொழுது விடிய விடிய தூங்கிக்கிட்டே இருக்க முடியுது? சுகன்யாவின் உதட்டில் மீண்டும் புன்னகை எழுந்தது.

என் மனசு ஏன் இன்னைக்கு இப்படி பேயா அலையுது? ஏ மனமே சும்மாயிரு! தன் கூந்தலை முழுவதுமாக அவிழ்த்து முதுகில் படரவிட்டுக்கொண்டவள், தன் தலையில் மெல்ல ஒரு குட்டு குட்டிக்கொண்டாள். ஒரு மாதத்துக்கு பிறகு மனம் விட்டு சிரித்தாள்.

கண்களை மூடிக்கொண்டு, குளிர்ந்த காற்றை நெஞ்சு நிறைய இழுத்து நிறுத்தி மெல்ல காற்றை ஒருமுறை வெளியேற்றினாள். சுகன்யாவின் மார்புகள் மேலும் கீழும் சீரான லயத்துடன் ஏறி இறங்கின. பிரஷ்ஷில் பேஸ்ட்டைத் தடவிக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தாள். பல்துலக்கி முகம் கழுவியதும் தன் முகத்தில் குளிர்ந்த நீரை வாரி வாரி அடித்துக்கொண்டாள். பாத்ரூமை விட்டு வெளியில் வந்தாள். அனுராதா இன்னமும் கட்டிலை விட்டு எழுந்திருக்கவில்லை.

"அனு... தூங்கினது போதும்... எழுந்திருடி..." மனதில் எழும் உற்சாகத்துடன் அவள் புட்டத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டாள் சுகன்யா.

"அடியேய்ய்ய்ய்ய் வலிக்குதுடீய்ய்ய்ய்ய்." உரக்க சிணுங்கிய அனு எழுந்து உட்கார்ந்து சோம்பல் முறித்தாள். நைட்டியின் முதல் இரண்டு பொத்தான்கள் அவிழ்ந்து கிடந்தன. தன் கைகளை உயர்த்தி முதுகை பின்னுக்குத்தள்ளியதும், முன்னெழுந்த அவளுடைய செழிப்பான மார்புகளின் அழகை காணமுடியாமல் சுகன்யா தன் முகத்தை சட்டெனத் திருப்பிக்கொண்டாள்.

"என்னடி சுகா.. நீயும் பொம்பளை... நானும் பொம்பளை... என் உடம்பைப்பாத்து ஏண்டி இப்படி வெக்கப்படறே? அவள் உரக்கச்சிரித்துக்கொண்டே கட்டிலை விட்டு இறங்கி தன் மார்போடு சுகன்யாவை இறுக்கிக்கட்டிக்கொண்டாள். சுகன்யாவின் கன்னத்தில் அழுத்தமாக தன் உதடுகளைப்பதித்தாள்.

"என்னை விடுடீ... என்னடிப் பண்றே நீ? பல்லு கூட துலக்கலே...? மொகம் கழுவிட்டு வந்திருக்கேன்... மூஞ்சை எச்சிலாக்கறே? மொதல்லே உன் நைட்டியோட பட்டனை ஒழுங்காப் போட்டுத்தொலைடி." சுகன்யா அவளை விருட்டென உதறினாள்.

"சுகா... நீ ரொம்ப அழகா இருக்கேடீ... அனுராதா தன் கண்களை அகலமாக விரித்து புருவங்களை உயர்த்தினாள்.

"ஹேய்... போதும்டீ... என் அழகு என்னான்னு எனக்கு நல்லாத்தெரியும்... நான் வாக்கிங் போறேன்... நீ வர்றயா... இல்லையா? அதைச் சொல்லுடி நீ?"

சுகன்யா நைட்டியை உதறிவிட்டு, வெளிர் காக்கி நிற ஜூன்ஸை மாட்டிக்கொண்டு இடுப்பில் பட்டனை அழுத்தினாள். சிவப்பு நிற டாப்சுக்குள் தன் தலையை நுழைத்தாள். வெளேரேன்றிருந்த ஸ்போர்ட்ஸ் ஷூவின் லேசை தளர்த்த ஆரம்பித்தாள்.

"சுகா... கிவ் மீ டூ மினிட்ஸ்... நானும் உங்கூட வர்றேன்டீ." பாத்ரூமுமை நோக்கி துள்ளி ஓடினாள் அனுராதா.


நுழைவாயிலில், பார்க்கில் நடப்பவர்களின் வசதிக்கென அமைக்கப்பட்டிருந்த நடைபாதையின் சுற்றளவு ஒன்றரை கிலோமீட்டர்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. தோழிகள் இருவரும் சீரான வேகத்தில் பார்க்கை மவுனமாக இருமுறை சுற்றிவந்தார்கள்.

"சுகா... இன்னைக்குத்தானே முதல்நாள்... இரண்டு ரவுண்டு போதும்டீ..." அனு ஒரு மரத்தின் நிழலில் தன் காலை நீட்டியவாறு உட்கார்ந்துகொண்டாள்.

"நாளையிலேருந்து, நான் தினமும் பார்க்குக்கு வரப்போறேன்." சுகன்யா சீராக வெட்டிவிடப்பட்டிருந்த புல்தரையில் சவாசனத்தில் கிடந்தாள்.

"காலையிலே சரியா ஆறுமணிக்கு வந்தாக்கூட போதும். நிதானமா நடந்துட்டு, ரூமுக்கு போய் குளிச்சுட்டு, ஃபிரேக்பாஸ்ட் முடிச்சுட்டு, கிளாஸுக்கு டயமுக்கு போயிடலாம்." அனு சொன்னதை சுகன்யாவும் ஆமோதித்தாள். உதட்டின் மீது பூத்திருந்த வியர்வை முத்துக்களை புறங்கையால் மெல்லத் துடைத்துக்கொண்டாள்.

"திஸ் ஈஸ் ரியலி... ப்யூட்டிஃபுல் ப்ளேஸ். அயாம் வெரி வெரி ஹேப்பி டுடே.." சுகன்யா எழுந்து உட்கார்ந்தாள். அவளுடைய முன் நெற்றியிலும் வியர்வை முத்துக்கள் அரும்பியிருந்தன.

"ரூம்ம்ம்ம்ம்... ரூம்ம்ம்ம்ம்ம்ம்..." அனுவின் செல் வண்டாக ரீங்காரமிட்டது.

* * * * * *

"அனு... குட்மார்னிங் அயாம் செல்வா ஹியர்.. ஹவ் ஆர் யூ?"

"ஹாய்... செல்வா... குட்மார்னிங்... குட்மார்னிங்... வாட் எ சர்ப்ரைஸ்? எங்கேருந்து பேசறே நீ?" அனுவின் முகம் மத்தாப்பூவாகி, கண்களும், உதடுகளும் ஒருங்கே தாமரையாக மலர்ந்தன. பக்கத்தில் உட்கார்ந்திருந்த சுகன்யாவை ஒருமுறை பார்த்த அனு, மீண்டும் தனக்கு வந்த 'கால்'லில் தன் கவனத்தை செலுத்தினாள்.

இது எந்த செல்வா? அனுவுக்கு என் செல்வாவைத் தெரியுமா? 'செல்வா குட்மார்னிங்' என அனு கத்தியதும், சுகன்யாவின் முகம் சட்டென மாறியது. முகத்தில் இருந்த களை சட்டென இறங்கியது. அவள் தன் உதடுகளை கடித்துக்கொண்டாள்.

"சென்னையிலிருந்துதான் பேசறியா? மை டியர் தமிழ்செல்வன், நவ்... அயாம் இன் தில்லி... கேப்பிட்டல் ஆஃப் இண்டியா. கியா ஹால் ஹை ஆப்கா? டிக் டாக்? அயாம் அட்டெண்டிங் மேன்டேட்டரி ட்ரெய்னிங். சப் டீக் தோ ஹைன்னா? உனக்கெப்படி என் ஞாபகம் திடீர்ன்னு வந்திச்சி?" அனு ஹிந்தி, தமிழ், இங்லீஷ் என மாறி மாறி வார்த்தையாடினாள்.

"அனு... நீ தில்லியிலே இருக்கறது தெரிஞ்சுதான் உங்கிட்ட பேசறேன். எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் வேணும்."

"சொல்லுடி செல்லம்... உனக்கு இல்லாத ஹெல்ப்பா? சொல்லு என்ன வேணும்?" அனு தன் கண்களை சுழற்றிக்கொண்டு ஜாலியாக பேசிக்கொண்டிருந்தாள். சுகன்யா அவள் முகத்தையே உற்று நோக்கிக்கொண்டிருந்தாள்.

"அனு... இங்கே சென்னையிலேருந்து மிஸ் சுகன்யான்னு ஒரு தமிழ் லேடி... ஷீ ஈஸ் டேரக்ட் அஸிஸ்டெண்ட்... அவங்களும் தில்லிக்கு ட்ரெயினிங்க்காக வந்திருக்காங்க..."

"ஆமாம்... இந்த பேச்சுலே... மொத்தமே இரண்டு பேர்தான் தமிழ்நாட்டிலேருந்து ட்ரெய்னிங் அட்டண்ட் பண்றோம். சுகன்யான்னு சென்னையிலேருந்து ஒருத்தி வந்திருக்கா. அவளைப்பத்தி நீ எதுக்காக விசாரிக்கறே? நீயும் சென்னையிலே அவ ஆஃபிஸ்லேதானே வொர்க் பண்றே? அவ செல் நம்பர் உங்கிட்ட இல்லையா?" அனு சுகன்யாவை பார்த்து தன் கண்ணை சிமிட்டினாள்.

அனுவிடம் பேசிக்கொண்டிருப்பது அவளுடைய செல்வாதான் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல், இப்போது சுகன்யாவுக்கு விளங்கிவிட்டது. அனுராதா பாண்டிச்சேரியிலிருந்து பயிற்சிக்காக வந்திருந்தாள். செல்வா இரண்டு மூன்று வாரங்கள் பாண்டிச்சேரிக்கு மாற்றலில் போனதும் சட்டென அவள் நினைவுக்கு வந்தது.

'அவ செல் நம்பர் உங்கிட்ட இல்லையா?' என அனு செல்வாவைக் கேட்டதும், அவள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சுகன்யா விருட்டென எழுந்தாள். எழுந்தவளின் கையை இறுக்கிப்பற்றி, அவளைத் தன்னருகில் அமர்த்திக்கொண்டாள் அனு. தன் உதட்டின் மேல் ஒரு விரலை வைத்து அவளை அமைதியாக இருக்கும்படி கண்களால் சொன்னாள். தன் செல்லின் ஸ்பீக்கரை ஆன் செய்தாள்.

"யெஸ்... யெஸ்... அவங்க போன் நம்பர் எங்கிட்ட இருக்கு... ஆனா அனு... ப்ளீஸ்... லிசன் டு மீ.. நான் சுகன்யாவைப் பத்தி உங்கிட்டே விசாரிச்சேன்னு அவங்களுக்கு தயவு செய்து தெரியவேண்டாம்."

"செல்வா... என்ன மேன் இது? நீ பேசறதுல கொஞ்சமாவது ஞாயம் இருக்கா? நீ ஒரு அழகான பொண்ணைப்பத்தி எங்கிட்ட விசாரிக்கறே? நீ விசாரிக்கற விஷயம் அவளுக்கு தெரியக்கூடாதுங்கறே? உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல சம்திங்க்... சம்திங்ங்கா? அனு கொக்கரித்தாள்.

"அனு... ப்ளீஸ்... அயாம் கொய்ட் சீரியஸ்... நீ உன் வழக்கம்போல என்னை நக்கலடிக்காதே? அவங்க எப்படி இருக்காங்கன்னு மட்டும் சொல்லேன்?

"எப்படி இருக்காங்கன்னா?"

"ம்ம்ம்... சாதாரணமா கலகலப்பா சிரிச்சி பேசிகிட்டு இருக்காங்களா? இல்லே மூட் அவுட் ஆன மாதிரி இருக்காங்களா?

"செல்வா... இதெல்லாம் நான் எப்படி சொல்லமுடியும்? ஒரு பொண்ணோட மூடு ஒரு நாளைக்கு பத்து தரம் மாறும்? நீ ஏன் அவகிட்ட பேச தயங்கறே?"

"ப்ளீஸ்... நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்க அனு.." செல்வா கெஞ்சினான்.

"என்ன புரிஞ்சுக்கணும்? எதையோ நீ என்கிட்ட மறைக்கறே? கிளியரா சொல்லு... உனக்கு என்ன வேணும்? சுகன்யாவோட பேசணுமா உனக்கு? உன் நம்பரை கொடுத்து அவளை உங்கிட்ட பேச சொல்லவா?"

"நோ... நோ... அந்தமாதிரி எதுவும் பண்ணிடாதேடி தாயே?

"ஹேய்... எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலை.. அதுக்குள்ளே என்னை அம்மாவாக்கிட்டியே?" அவள் அவுட் சிரிப்பு சிரித்தாள்.

"அனு... பீ சீரியஸ்... நான் பேச விரும்பினாலும், சுகன்யா என்கிட்ட பேசமாட்டாங்க. ஜஸ்ட் அவங்க எப்படி இருக்காங்கன்னு மட்டும் எனக்கு தெரிஞ்சா போதும். ஈஸ் ஷி டூயிங் பைன்..? ஸே... அவங்களோட ஹெல்த் எப்படியிருக்கு? நார்த்திண்டியன் சாப்பாடெல்லாம் அவங்களுக்கு ஒத்துக்குதா? வெயில்லே ஒண்ணும் கஷ்டப்படலியே?"

செல்வாவின் குரல் தழுதழுப்பாக வந்தது. அனு சுகன்யாவின் முகத்தைப்பார்த்தாள். சுகன்யா தான் பேசமாட்டேன் என தன் தலையை இடவலமாக ஆட்டினாள். தன் கீழுதட்டைக் கடித்துக்கொண்டிருந்தவளின் கண்கள் கலங்கிக்கொண்டிருப்பதை போல் இருந்தது அனுவுக்கு.

"உனக்கு சுகன்யாகிட்ட பேசவேண்டாம்... ஆனா அவ எப்படி இருக்கான்னு தெரிஞ்சா மட்டும் போதும்...? ஐ ஃபீல் உன் மேட்டர்ல... சம்திங்க் ஈஸ் ராங் செல்வா.. கம் ஸ்ட்ரெய்ட். நீ அவளை லவ்வறியா? ஒன் சைட் காதலா?" அனு பட்டாசாக வெடிச்சிரிப்பு சிரித்தாள்.

"அனு... ப்ளீஸ்... அவ நல்லா இருக்காளா? அதை மட்டும் சொல்லேன்.. ப்ளீஸ்" செல்வா மீண்டும் கெஞ்சினான்.

"சுகன்யாவுக்கு என்னக்கொறைச்சல்? அவ ரொம்ப நல்லா இருக்கா... ஆனா அவகிட்ட ஒரு சின்னப்பிரச்சனை..."

"என்ன அனு?"

"எப்பவும் படிச்சுக்கிட்டே இருக்கா.. ரொம்ப ரொம்ப ஸ்ட்ரெய்ட் அண்ட் சீரியஸ் வுமன்... என்னை மாதிரி அனாவசியமா யாருகிட்டவும் வழியறதெல்லாம் இல்லே."

"யெஸ்.. ஐ நோ..."

"சரி.. இப்ப நீ ஒழுங்கா விஷயத்துக்கு வா... வாட் ஈஸ் கோயிங் ஆன் பிட்வீன் யூ அண்ட் ஹர்? அயாம் யுர் குட் ஃப்ரெண்ட்... என்னைப்பத்தி உனக்கு நல்லாத் தெரியும்... என் கிட்ட பொய் மட்டும் சொல்லாதே? நேரா சுகன்யாகிட்ட போய் என்ன ஏதுன்னு கேட்டுடுவேன்?" அனு சீரியஸாக பேசினாள்.

"அனு... வீ வேர் டீப்லி லவ்விங் ஈச் அதர்... எங்க நிச்சயதார்த்தமும் முடிஞ்சிட்டுது.. கல்யாணத்துக்கு நாள் குறிக்க வேண்டியதுதான் பாக்கியா இருந்திச்சி." செல்வா முனகினான்.

"இப்ப என்ன ஆச்சு...?"

"இப்ப நாங்க பிரிஞ்சுட்டோம்..?"

"யாரு காரணம்? நீயா? இல்லே அவளா?"

அனு சுகன்யாவின் முகத்தை நோக்கினாள். சுகன்யாவின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. அனுவின் முகம் சட்டென கல்லாகிப்போனது. சுகன்யாவை அவள் தன் தோளோடு அணைத்துக்கொண்டாள்.

"செல்வா... யூ ஆர் மை ஃப்ரெண்ட்... செர்டன்லி ஐ கேன் ஹெல்ப் யூ. அண்ட் சார்ட் அவுட் யுவர் ஃப்ராப்ளம்.... உண்மையைச் சொல்லுப்பா...?" அனு நிதானமாக கேட்டாள்.

"ஐ டோன்ட் நோ அனு... ஆனா நான்தான் காரணம்ன்னு என் வீட்டுல கூட யாருமே எங்கிட்ட பேசறது இல்லே. எனக்கு பைத்தியமே பிடிச்சுடும் போல இருக்கு. நடந்தது நடந்து போச்சு..."

"அப்டீன்னா...?"

"பிரிஞ்சது பிரிஞ்சதுதான்... ஒடைஞ்சு போன மண் பானையை எப்படி திரும்பவும் ஒட்ட வெக்கறது?"

"ஒடைஞ்சதை ஒட்டமுடியாதுன்னா... இப்ப எதுக்கு அவளைப்பத்தி எங்கிட்டே கேக்கிறே நீ?" அனுவின் குரலில் சூடு ஏறியிருந்தது.

"அனு... என் மேல சுகன்யா அவ உயிரையே வெச்சிருந்தா; ஒரு மாசமா நான் வீராப்பா இருந்துட்டேன்; இப்ப என் மனசு கேக்கலே; அதான் உன்னைத் தொந்தரவு பண்ணிட்டேன். அயாம் சாரி... " மறுமுனையில் செல்வாவின் குரல் கேவியது.

"செல்வா... செல்வா..." அனு கூவினாள். கால் கட்டாகிவிட்டிருந்தது. 

"சுகன்யா... என்னைத் தப்பா நினைக்கதே? நேத்து நைட் நீ சொன்னதெல்லாம் உண்மையா? செல்வாவா இப்படியெல்லாம் நடந்துகிட்டான்? இதையெல்லாம் என்னால நம்பவே முடியலேடீ.." மறுநாள் காலை, பார்க்கில் அனுவும், சுகன்யாவும் பரபரப்பில்லாமல் நடந்துகொண்டிருந்தார்கள். சுகன்யா ஒரு விரக்தியான புன்னகையை அனுவின் புறம் வீசினாள்.

"ம்ம்ம்... தில்லிக்கு கிளம்பற அன்னைக்கு எப்படியும் அவன் ஸ்டேஷனுக்கு வந்துடுவாங்கற ஒரு நப்பாசை என் மனசுக்குள்ள இருந்திச்சி. ஆனா அவன் வரவேயில்லை. செல்வாவுக்கு இனிமே என் வாழ்க்கையில் இடமில்லேன்னு அன்னைக்குத்தான் நான் என் மனசை திடப்படுத்திக்கிட்டேன். "

"ப்ப்ச்ச்ச்... அயாம் சாரீடீ சுகா.."

"இட்ஸ் ஆல் ரைட். இப்ப நான் என் காதல் வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமா மறக்க ஆரம்பிச்சிட்டேன். கூடிய சீக்கிரம் மொத்தமா எல்லாத்தையும் மறந்துடுவேங்கற நம்பிக்கை எனக்கு வந்திடிச்சி." சுகன்யா புல்தரையில் உட்கார்ந்துகொண்டு தன் கால்களை மெதுவாக அசைத்துக்கொண்டிருந்தாள்.

"ம்ம்ம்... சுகா... நீ தப்பா நினைக்கலேன்னா நான் வேணா செல்வாகிட்ட ஒரு தரம் பேசட்டுமா? நேத்து அவன் எங்கிட்ட செல்லுல பேசும்போது உடைஞ்சு போய் அழுததை நீதான் கேட்டியே?" சுகன்யாவின் இடதுகரத்தை அனு ஆதுரமாக பற்றிக்கொண்டாள்.

"இல்லேடீ... செல்வா சொன்னதும் சரிதான். ஒடைஞ்சு போன மண் பானையை எப்படி ஒட்ட வெக்கமுடியும்? தூளானாது தூளானதுதான். எந்த தண்ணியை ஊத்தி பிசைஞ்சாலும் அது திரும்பவும் ஒட்டாது."

"சே..சே... மனசை தளரவிடாதேடீ சுகா... உடைஞ்ச போன எதையும் ஒட்டறதுக்கு மார்க்கெட்ல க்யூக் ஃபிக்ஸ் வந்திடிச்சி..." அனு சிரித்து சுகன்யாவின் மூடை மாற்ற முயற்சித்தாள்.

"ஒடைஞ்சு போன மனசை ஒட்டறதுக்கு மட்டும் இன்னும் எந்த கோந்தும் கடையில வரலேடீ..." சுகன்யாவும் வாய்விட்டு சிரித்தாள்.

"சுகா... உங்களுக்குள்ள நடந்த முடிஞ்ச கசப்பான நிகழ்ச்சிகளெல்லாம் உன்னோட பேரண்ட்சுக்கு தெரியுமாடீ?"

"செல்வா, நான் போட்ட மோதிரத்தை கழட்டி எறிஞ்சு, எங்களுக்கு நடுவுல இருந்த உறவை மொத்தமா முறிச்சிட்டாங்கறதை தில்லிக்கு நான் கிளம்பறதுக்கு மொதல் நாள் என் வீட்டுலே சொல்லிட்டேன்.." சுகன்யா மெலிதாக முறுவலித்தாள்.

"சுகா... நான் கதை கேக்கறேன்னு நினைக்காதே. உன் மனசுல இருக்கற வலி எனக்கு நல்லாப்புரியுது. எல்லாத்துக்கும் நான் சிரிக்கறேனே; அது எதனால தெரியுமா?"அனுவின் உதடுகளில் ஒரு கள்ளப்புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது.

"சொல்லுடீ... நானும் உங்கிட்ட சிரிக்க கத்துக்கறேன்... சொல்லுடி அனு.." சுகன்யா எழுந்தாள். எழுந்தவள் குனிந்து அனுவின் கையைப்பிடித்து எழுப்பினாள். விடுதி அறையை நோக்கி அவர்கள் பரபரப்பில்லாமல் அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள்.

"சுகன்யா... நானும் என் வாழ்க்கையில ஒரு காதல் தோல்வியை சந்திச்சிருக்கேன். அந்த தோல்விலேயிருந்துதான், சிரிக்கறதுக்கு நான் கத்துக்கிட்டேன். வாழ்க்கையை எப்படி அர்த்தமுள்ளதா வாழறதுங்கறதையும் என் காதல் தோல்வியிலேதான் நான் கத்துக்கிட்டேன். எதையும், யாரையும் பார்த்து நான் சிரிக்க ஆரம்பிச்சிட்டேன். நவ் அயாம் ஹேப்பி." அனு தன் கையை சுகன்யாவின் தோளில் போட்டுக்கொண்டாள். 

மணி இரவு ஒன்பதாகியிருந்தது. சுகன்யா நைட்டிக்கு மாறியிருந்தாள். அனு ஒரு லூசான காட்டன் டிரவுசரும், சட்டையையும் அணிந்துகொண்டிருந்தாள்.

"சுகா... உன் அம்மாவுக்கும், அப்பாவுக்கும், உன் காதல் முறிஞ்சு போன விஷயம் அதிர்ச்சியை கொடுத்து இருக்குமே?" சுகன்யா தன் கட்டிலில் ஒருகளித்து படுத்திருந்தாள். சுகன்யாவின் அருகில் வந்து உட்கார்ந்தாள் அனு. சுகன்யாவின் தலையை தன் மடியில் வைத்துக்கொண்டு, அவள் நெற்றியை வருடிக்கொடுத்தாள். சுகன்யா தன் விழிகளை மூடிக்கொண்டாள்.

* * * * *



"எனக்கு மேரேஜ் வேண்டாம்மா. இப்ப எனக்கு முடிவு பண்ணியிருக்கற கல்யாணத்தை அப்படியே நிறுத்திடலாம். செல்வாவுக்கு நான் செய்யறது எதுவுமே சுத்தமா பிடிக்கலேங்கறான். நான் உக்காந்தா குத்தம்ங்கறான். எழுந்து நின்னா தப்புங்கறான். என் முகத்தை பாக்கவே பிடிக்கலேன்னு சொன்னான். முடிவா என்னை அவன் வெறுக்கறதாவும் சொல்லிட்டான். என்னை வெறுக்கறவனை நான் எப்படி கல்யாணம் பண்ணிக்கமுடியும்? அவன் என் மனசை நோகடிச்சுட்டு என்னை விட்டு பிரிஞ்சு போயிட்டான்.”

சுகன்யா, தனக்கு ஏற்பட்ட காதல் தோல்வியால் உண்டான, கோபத்தை, ஆத்திரத்தை, வெறுப்பை, ஏமாற்றத்தை, ஒரு வாரமாக மிகவும் சிரமப்பட்டு மனதுக்குள் அடக்கி வைத்திருந்தாள். தில்லிக்கு கிளம்புவதற்கு முன், அவள் மனதிலிருந்து உணர்ச்சிகள் கட்டுக்கு அடங்காமல் பீறீட்டுக்கொண்டு வெளியே வந்தன. அந்த வேகத்தில் அவள் செல்வாவை 'அவன்' 'இவன்' என பேசினாள்.

“என்னடீ சொல்றே?” சுந்தரி திடுக்கிட்டுப்போனாள்.

நிச்சயதார்த்தம் ஆனதிலிருந்து செல்வாவை ‘அவர்’ என்று மரியாதையுடன் பேசிக்கொண்டிருந்த சுகன்யாவின் வாயில், அன்று செல்வா ‘அவன்’ ஆக மாறியிருந்ததை கவனிக்கத் தவறாத சுந்தரி மனதுக்குள் வெகுவாக அதிர்ச்சியடைந்தாள்.

“எங்க காதல், நடந்து முடிஞ்சிருக்கற நிச்சயதார்த்தம், எங்களுக்குள்ள இருந்த எல்லா உறவும் மொத்தமா முறிஞ்சிப் போச்சுன்னு சொல்றேன்.”

“செல்வாவுக்கு உன்னைப் பிடிக்கலையா? அந்த மாதிரி அவன் சொல்ற அளவுக்கு நீ என்னடீப் பண்ணே? அதையும்தான் கொஞ்சம் சொல்லேன்?”

“அவன் மனசு ஒரு சாக்கடையாப் போயிடிச்சிம்மா. அந்த சாக்கடையை நம்ம வீட்டுல திரும்பவும் குத்திக் கெளற வேணாம்ன்னு பாக்கறேன் நான்.”

“இங்கே பாருடி... காதலிச்சது நீங்க... ஊர் சுத்தினது நீங்க... ஆனா உங்களுக்கு கல்யாணத்தை நிச்சயம் பண்ணது நாங்க... நீங்களா உங்க இஷ்ட்டத்துக்கு எந்த முடிவுக்கும் சட்டுன்னு வந்துட முடியாது; இதை நீ நல்ல ஞாபகம் வெச்சுக்கோ.” சுந்தரி உறுமினாள்.

“இந்தக் கதையை, உனக்கும் எனக்கும் எந்த ஒறவும் இல்லேன்னு சொல்லி, நான் போட்ட மோதிரத்தை கழட்டி என் மூஞ்சிலே விட்டெறிஞ்சுட்டுப் போனானே, அவன் கிட்ட போய் சொல்லு. சுகன்யாவும் தன் குரலை தனக்கு உரிமையுள்ள இடத்தில், தன் வீட்டில், தன் தாயிடம் உயர்த்தினாள்.

“என்னடி உளர்றே? மோதிரத்தை கழட்டி குடுத்துட்டானா?” சுந்தரியின் மனதில் செல்வாவின் பால் சீற்றமும், அவள் குரலில் அந்த கோபமும் வெளிவந்தது.

“நான் சொன்னது தப்பும்மா... அவன் கழட்டி என் கையில குடுக்கலை. என் மூஞ்சியிலே விசிறி அடிச்சான். நீ போட்ட நாலு சவரம் செயினு இன்னும் அவன் கழுத்துலத்தான் இருக்கு. வரப்போற என் மாப்பிள்ளை ரொம்ப ரொம்ப நல்லவன்னு, அவனைத் தலைக்கு மேலே தூக்கி வெச்சிக்கிட்டு குதிச்சது நீயும்... அப்பாவும்தான்.”

“சுகன்யா...” சுந்தரியின் முகம் சிவந்து போயிருக்க, அவள் இடது கை விரல்கள் நடுங்கின.

“இப்ப நீ இதுக்கெல்லாம் என்னடா அர்த்தம்ன்னு அவனை கேட்டீன்னா, அந்த செயினையும் கழட்டி உன் மூஞ்சியிலே அடிச்சாலும் அடிப்பான். போய் சந்தோஷமா எடுத்துக்கிட்டு வா...” சுகன்யாவின் உடலில் ரத்தம் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.

“சுகா... என்னம்மா ஆச்சு? என்ன விஷயம்? ஏதாவது உங்களுக்குள்ள சண்டையா?” முகத்தில் கலக்கத்துடன் கேட்டுக்கொண்டே உள் அறையிலிருந்து வெளியில் வந்த சிவதாணுவின் மனதுக்குள் வாலில்லாத ராகு படமெடுத்து எழுந்தான்.

“உன் கிட்ட போய் நான் பேசறேனே, என் புத்தியைத்தான் செருப்பால அடிச்சுக்கணும். நீயாச்சு... உனக்கு செல்லம் குடுக்கற உங்க அப்பனாச்சு. காலத்துக்கும் உன் கிட்ட என்னாலப் படமுடியாதுடீயம்மா...?"

சுந்தரி மேற்கொண்டு எதுவும் பேசாமல் சுகன்யாவை சுட்டு எரித்துவிடுவது போல் முறைத்தவள், மனதிலிருக்கும் கோபம் முகத்தில் பட்டவர்த்தனமாக தெரிய, தன் புடவை முந்தானையின் முனையை முறுக்கியபடி நின்றாள்.

“ப்ச்ச்ச்... சுந்து நீ சும்மா இரும்மா. சுகா... நீ சொல்ற மாதிரியெல்லாம் சட்டுன்னு கல்யாணத்தை எப்படி நிறுத்தறது? உங்களுக்குள்ள நடந்ததை நீ விவரமா சொன்னாத்தான் மேல என்னப் பண்றதுன்னு நாங்க ஒரு முடிவுக்கு வரமுடியும்.” இதுவரை அமைதியாக சுகன்யா கூச்சலிடுவதை கேட்டுக்கொண்டிருந்த குமாரசுவாமி, மெல்ல பேசினார்.



“அப்பா... அவங்க நிச்சயதார்த்தத்துல குடுத்த பட்டுப்புடவை, தங்கச்செயின் எல்லாத்தையும் பேக் பண்ணி ரெடியா வெச்சிருக்கேன். அந்த பார்சலை அவங்களுக்கு கூரியர்ல அனுப்பிட்டா, விவகாரம் முடிஞ்சுடும். நானும் நிம்மதியா டெல்லிக்குப் போற வேலையைப் பாப்பேன்.

“என்னம்மா இது? நீ படிச்சப் பொண்ணு. இப்படி ஒரே வழியா மொறைப்பா, அர்த்தமேயில்லாமா பேசினா எப்படீடா கண்ணு?”

கனகா பேத்தியை தன்னருகில் இழுத்து உட்காரவைத்துக்கொண்டு அவள் தலையை மெல்ல வருடினாள். இது வரை முறைப்பாக பேசிக்கொண்டிருந்த சுகன்யா, உதடுகள் துடிக்க, எதோ சொல்ல வந்தவள், சொல்லவந்ததை சொல்ல முடியாமல், தன் பாட்டியின் மடியில் தலையைப் புதைத்துக்கொண்டு, உடல் குலுங்க அழ ஆரம்பித்தாள். தன் ஆசை மகள் விம்மி விம்மி அழுவதைக் கண்டதும், சுந்தரியின் பெற்ற வயிறு பற்றி எரிந்தது. 


சுகன்யா... 96

கடற்கரையில், வெயில் நேரத்தில், சுழன்று சுழன்று அடித்தக்காற்றில், சுகன்யாவின் முந்தானை அவள் தோளை விட்டு பறக்க, ரவிக்கைக்கு வெளியில் பிதுங்கி வழியும் அவள் மார்புகளின் திண்மையை, சுகன்யாவின் பொங்கும் செழிப்பான முன்னழகை ரசிக்கும் மன நிலையில் செல்வா அன்று இல்லை. அவன் மனதில் மூர்க்கம் என்றுமில்லாத அளவிற்கு நிரம்பியிருந்தது.

"செல்வா... நீ நிஜமாத்தான் சொல்றியாடா?" சுகன்யா மீண்டும் ஒருமுறை வினவினாள்.

"ஆமாம். என் மனசுல இருக்கற உண்மையைத்தான் சொல்றேன். நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு எடுத்த முடிவை, ஏன் எடுத்தோம்ன்னு, இப்ப எனக்கு தோணுது."

"செல்வா.. ப்ளீஸ்... இப்படீல்லாம் பேசாதப்பா... நீ பேசறதைப் பாத்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கு.."



"நாம ஒருத்தரை ஒருத்தர் சந்திக்கவேயில்லை. நமக்குள்ள காதல் ஏற்படவேயில்லை. நமக்குள்ள நிச்சயதார்த்தமே நடக்கலைன்னு நினைச்சுக்கிட்டு, நாம பிரிஞ்சிடலாம்ன்னு சொல்றேன்." செல்வா பதட்டமில்லால் பேசினான்.

"செல்வா, நீ பேசறதுலே கொஞ்சம் கூட ஞாயமே இல்லடா... நமக்குள்ள நடந்த எல்லாத்தையுமே இல்லேன்னு ஒரே வினாடியிலே எப்படிடா என்னால மறக்கமுடியும்?" சுகன்யா அவனை நோக்கி நகர்ந்தாள். செல்வா அவளை விட்டு நகர்ந்தான்.

"அந்த சாவித்திரி நான் என் ரூம்ல இல்லாதப்ப எதையோ எதையோ சொல்லி உன் மனசை கலைச்சிருக்கா. எனக்கு உன்னைப்பத்தி நல்லாத்தெரியும். என் மூஞ்சைப்பாத்து இன்னொரு தரம் சொல்லு... உன்னால என்னை மறந்துட முடியுமா?" சுகன்யாவின் விசும்பல் சிறிது அதிகமாகியது.

"சுகன்யா... எனக்கென்ன காது கேக்கலையா? இந்த ஆஃபீசுல உன்னையும், அந்த சுனிலையும் இணைச்சு பேசற பேச்செல்லாம் என் காதுல விழுது. என் கண்ணு ரெண்டும் அவிஞ்சிப்போச்சா? நீயும் அந்த சுனிலும் அடிக்கற கூத்தை ஒரு மாசமா என் கண்ணால பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன். சாவித்திரி சொல்லித்தான் இப்படி நான் நடக்கிறேனா? இல்லேடீ. நிச்சயமா இல்லே. ஒரு மாசமா நீ ஆடற ஆட்டத்தையெல்லாம், தாங்கமுடியாமத்தான் இன்னைக்கு இந்த முடிவுக்கு வந்திருக்கேன். ப்ளீஸ் என்னை நீ விட்டுடு."

மனதுக்குள் அழுதுகொண்டிருந்த சுகன்யாவின் கண்களில் இப்போது கண்ணீர் வெள்ளமாக பொங்கியது. அவளுக்கு உடம்பு லேசாக உதறியது. கை விரல்கள் மெல்ல நடுங்கின. தன் நடுக்கத்தை அவனுக்கு காண்பிக்க விரும்பாமல் அவள் தன் கைகளை ஒன்றுக்குள் ஒன்றாக கோத்துக் கொண்டாள். தன் கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள். விழிகளிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து முத்து முத்தாய் வழிந்தது. தன்னைக் கட்டுக்குள் வைக்க முடியாமல் சுகன்யா குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.

"இங்கப் பாருடி... நாலு பேரு பாக்கற எடத்துல உக்காந்து இருக்கோம். இப்ப நீ அழுது சீன் போடாதே. சீன் போட்டு கூட்டத்தை கூட்டிடாதே. பொம்பளை அழுதா... என்ன ஏதுன்னு கேக்காம, யார் பக்கம் தப்பு இருக்குன்னு பாக்காம, அவ பக்கத்துல நிக்கற ஆம்பிளைக்கு தர்ம அடி குடுக்கறதுக்கு ஊர்ல நாப்பது ஞாயஸ்தன் இருக்கான். நான் ஒதை வாங்கறதை பாக்கறதுக்கு உனக்கு ஆசையிருந்தா... நீ நல்லா அழுவுடீ..."

"அய்யோ.. என்ன அழக்கூட விடமாட்டியாடா நீ?"

"நான் உன்னை கெஞ்சிக்கேட்டுக்கறேன். எங்கிட்ட கொஞ்சம் நீ மரியாதையா பேசு. இல்லே எனக்கு கெட்ட கோவம் வரும்... சொல்லிட்டேன்."

"செல்வா நான் என் காதலை காப்பத்திக்க உங்கிட்டே அழறேன்டா. உனக்கு அடிவாங்கி வெக்கறதுக்கு நான் அழலடா. நான் அழறது உனக்கு சீன் போடற மாதிரி இருக்கா? நீ மனுஷனே இல்லேடா." விருட்டென நகர்ந்து அவன் சட்டையை பிடித்து உலுக்க ஆரம்பித்தாள்.

"சுகன்யா... தள்ளி உக்காருடீ... சொல்லிக்கிட்டே இருக்கேன்.. " செல்வா அவள் பிடியை தன் சட்டையிலிருந்து வேகமாக உதறினான். அவன் உதறிய வேகத்தில் சுகன்யா அவனை விட்டு, ஓரடி தள்ளிப் போய் மணலில் விழுந்தாள். அவன் சட்டையின் மேல் பொத்தான் பிய்ந்து காற்றில் ஆடியது.

"செல்வா... இதுக்கு என்னடா அர்த்தம்?"

"நான் சொல்லிக்கிட்டே இருக்கேன். என்னை திரும்ப திரும்ப வாடா போடான்னு பேசி என் கோபத்தைக் கிளறாதேடீ. நான் சொல்றதை நல்லா காது குடுத்து கேட்டுக்கோ. நம்ம நிச்சயதார்த்தம் கேன்சல். நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா வாழமுடியாதுன்னு எனக்கு நல்லாத்தெரிஞ்சு போச்சு. எனக்கு நீயும் வேண்டாம். உன் காதலும் வேண்டாம். உனக்கும் எனக்கும் இடையில இனிமே எந்த உறவும் இல்லே. உன்னை நான் கையெடுத்து கும்பிடறேன். என்னை நீ விட்டுடு." செல்வா தன் கைகளை குவித்து அவளை கும்பிட்டான். அவனுக்கு மூச்சிறைத்துக்கொண்டிருந்தது.

முரட்டுத்தனமாக பேசிக்கொண்டிருந்த செல்வா, தன்னையும் மீறிய கோவத்தில், என்ன செய்கிறோம் என்பதனை உணராதவனாக, அவர்களுடைய நிச்சயதார்த்தத்தன்று, சுகன்யா அவனுக்கு ஆசையுடன் அணிவித்த தங்க மோதிரத்தை தன் விரலிலிருந்து விருட்டென உருவி, சுகன்யாவின் மடியில் வீசி எறிந்தான்.

"மிஸ் சுகன்யா, இனிமே நீங்க உங்க இஷ்டப்படி எவன் கூட வேணா பேசலாம். எவன் பின்னாடி வேணா பைக்ல உக்காந்துகிட்டு உங்க விருப்பப்படி இந்த ஊரைச் சுத்தி சுத்தி வரலாம். பேசலாம். சிரிக்கலாம். ஏன் கட்டிப்பிடிச்சிக்கிட்டு கூத்தடிக்கலாம். சத்தியமா நான் உங்க குறுக்கே வரமாட்டேன். குட் பை."

சுகன்யாவின் பதிலுக்காக செல்வா காத்திருக்கவில்லை. அவளைத் திரும்பிப் பார்க்காமல் அவன் வேகமாக நடந்தான். சுகன்யா திக்பிரமைப்பிடித்தவளாக பேச்சு மூச்சில்லாமல் தன் மடியில் வந்து விழுந்த மோதிரத்தையே வெறித்துக்கொண்டு பார்த்தவளாக உட்கார்ந்திருந்தாள்.

செல்வா கடற்கரை மணலில் வேகமாக இரண்டடிகள் நடந்திருப்பான். என்ன நினைத்தானோ சட்டென நின்றான். ஒரு முறை தான் நின்ற இடத்திலிருந்தே சுகன்யாவை திரும்பிப் பார்த்தான். நான் இவ்வளவு நேரம் பேசினதும், கடைசியா நாலு பேர் எதிர்லே, நல்லநேரத்துல அவ போட்ட மோதிரத்தை, தனிமையில இப்ப கழட்டி எறிஞ்சதும் சரிதானா? இந்த கேள்வி புயலாக அவன் மனதில் எழுந்தது. தன் மனம் எழுப்பிய வினாவிற்கு தன் மனதுக்குள்ளேயே ஒரு வினாடி விடையை தேடினான் அவன்.

செல்வா... நீ ஒரு முடிவை எடுத்துட்டேடா. அது சரியா? தப்பான்னு இப்ப எதுக்காக திரும்பவும் யோசனை பண்றே?

நீ ஒரு வழவழாகொழகொழான்னு சுகன்யா உன்னைப்பாத்து எத்தனை தரம் சிரிச்சிருக்கா. உன்னால சட்டுன்னு எந்த முடிவுக்கும் வரமுடியாதுன்னு மீனா எத்தனை தரம் சொல்லியிருக்கா? உன்னோட இருவது வருஷ ஃப்ரெண்ட்ஷிப்ல, சீனு உன்னோட இந்தக்குறையை எத்தனை தடவை முறை சொல்லி சொல்லி காட்டியிருப்பான்?

எத்தனை நாளைக்கு இன்னும் நீ அடுத்தவங்க சிரிப்புக்கு ஆளாகி நிக்கப்போறே? அந்த நொடியில், ஆண்மையின் அகங்காரம், மூர்க்கத்தனம், அர்த்தமில்லாத கோபம் அவனை முழுமையாக ஆக்கிரமித்திருந்தன.

சுகன்யாவுக்கு நான் வேணும்ன்னா, அவதான் என் பின்னாடி வரணும். என்னோட விருப்பபடித்தான் அவ நடக்கணும். செல்வா திரும்பவும் வேகமாக நடக்க ஆரம்பித்தான். 

சுகன்யாவின் அடிவயிற்றிலிருந்து மெல்லிய கேவலொன்று எழுந்தது. அந்தக்கேவல் அவள் தொண்டை வரை வந்து நின்று அவளுடைய மூச்சை அடைத்தது. அடுத்த வினாடி, பெருமூச்சாக அவள் கண்டத்திலிருந்து வெளியேறியது.

நானும் ஒரு சராசரி ஆண்தான். எனக்கு உரிமையுள்ளப் பெண்ணை சந்தேக கண் கொண்டு பார்ப்பது எனது பிறப்புரிமை என சொல்லிக்கொண்டு ஒரு கோழையாக என்னை விட்டு செல்வா ஓடுகிறான். இப்படி ஒரு கோழையை நான் காதலிச்சேனே? எல்லாம் என் நேரம்தான்.

தான் அணிவித்த மோதிரத்தை கழட்டியெறிந்துவிட்டு, வேகமாக ஓடியவன் சட்டென நின்றதும் சுகன்யாவின் மனதுக்குள் ஆத்திரமும், கோபமும் ஒருங்கே எழுந்தன. அவள் உடலெங்கும் ரத்தம் வேகமாக ஓட ஆரம்பிக்க, மேனியில் அனல் பரவியது. நரம்புகள் மெல்ல மெல்ல முறுக்கேறின. தானும் செல்வாவின் பின்னால் வேகமாக எழுந்து ஓடி, அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடலாமா என்ற கட்டுக்கடங்காத வெறி அவள் மனதில் எழுந்தது.

“செல்வா, ஒரு நிமிஷம் நில்லு. கடைசியா நான் சொல்றதை மட்டும் கேட்டுட்டு போ.” உரக்க கூவினாள் சுகன்யா.

செல்வா நின்ற இடத்திலிருந்தே சுகன்யாவைத் திரும்பிப்பார்த்தான். அவள் எழுந்து தன் பின்புறத்தில் ஒட்டியிருந்த மணலை தட்டிவிட்டாள். நிதானமாக அவனருகில் சென்று நின்றாள். அவன் முகத்தை உற்று நோக்கினாள்.

"எதுக்கு இப்ப என்னை நிக்க சொன்னே நீ?" செல்வா அவள் முகத்தைப்பார்க்க முடியாமல் திணறினான். திணறியவன் தன் முகத்தை திருப்பிக்கொண்டான். சுகன்யா அவன் வலது கரத்தை இறுக்கிப்பிடித்தாள்.

"செல்வா... நான் சொல்றதை கோவப்படமா கேளு. உனக்கு பிடிக்காதவங்க கிட்ட நான் இனிமே பேசமாட்டேன். பழகமாட்டேன். ஆனா இந்த சின்ன விஷயத்துக்காக, சாதாரண விஷயத்துக்காக, நீ என்னை லவ் பண்ணலேன்னு ஏன் பொய் சொல்றே? உண்மையிலேயே என்னை நீ காதலிக்கலையா? உன் மனசைத் தொட்டு சொல்லு?"

"நான் உன்னைக் காதலிச்சேன். அது உண்மைதான்."

"அப்படீன்ன இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னே நீ என்னை வெறுக்கறேன்னு சொன்னது பொய்தானே?"

"இல்லே. உன்னை காதலிச்சதும் உண்மைதான். இப்ப உன்னை வெறுக்க ஆரம்பிச்சிருக்கறதும் உண்மைதான்."

"செல்வா... ப்ளீஸ்... என்னை நீ காதலிக்க வேண்டாம். ஆனா, என்னை வெறுக்கறேன்னு மட்டும் சொல்லாதே; இதை என்னால தாங்கிக்க முடியலே. அப்படி என்னத்தப்பு நான் பண்ணிட்டேன்?"

"அயாம் சாரி.. மிஸ் சுகன்யா... உங்க மனசை நான் புண்படுத்திட்டேன்; ஆனா என் மனசு மேலும் மேலும் புண்படறதை தவிர்க்கறதுக்கு இதைத்தவிர வேற எனக்கு எந்த வழியும் இல்லே. ப்ளீஸ்..."

"செல்வா... வாழ்க்கைங்கறது, நாம படிக்கும் போது பள்ளிக்கூடத்துல போட்ட கழித்தல் கணக்கு இல்லே. இரண்டுல ஒண்ணு போனா மிச்சம் ஒண்ணுன்னு நெனைக்காதே. நம்ம ரெண்டுபேரோட காதல் வாழ்க்கையிலேருந்து ஒருத்தரை விட்டு ஒருத்தர், யாரைவிட்டு யாரு பிரிஞ்சு போனாலும், மிச்சம் ஒண்ணுமேயில்லை. ரெண்டு பேரு வாழ்க்கையும் ஜீரோ ஆயிடும். இதை நீ நல்லாப் புரிஞ்சுக்க." சுகன்யா அவன் கையை இறுக்கிப்பிடித்துக்கொண்டு அவனை நகரவிடாமல் தடுத்தாள்.

செல்வாவின் மனதில் இருந்த மூர்க்கத்தால், சுகன்யாவின் பேச்சிலிருந்த ஞாயத்தினை அவனால் பார்க்க முடியாமல், அவளுக்கு பதில் சொல்லமுடியாமல், அவன் ஊமையாக நின்றான். மூர்க்கம் அவன் கண்களில் பனிதிரையாகி அவன் பார்வையினை மறைத்திருந்தது.

சுகன்யா அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. சுகன்யாவுக்கு தன் முதுகை காட்டிக்கொண்டு பத்து நொடிகள் செல்வாவும் மவுனமாக நின்றான். அவர்களுக்கிடையில் கனமான, இறுக்கமான அமைதி நிலவியது. கடைசியில் அந்த மவுனத்தை செல்வாவே உடைத்தான்.

"சுகன்யா... யூ ஆர் எ வெரி வெரி நைஸ் லேடி. நான்தான் உனக்கு ஏத்தவன் இல்லே. ப்ளீஸ் என்னை நீ மன்னிச்சுடு. மெல்ல முணுமுணுத்த செல்வா அவள் கையிலிருந்து தன் கையை விடுவித்துக்கொண்டு மெல்ல அவளுக்கு எதிர்த்திசையில் தன் பைக்கை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவனால் வேகமாக மணலில் நடக்க முடியாமல் ஒரு வினாடி நின்றான். நின்ற இடத்திலிருந்தே சுகன்யாவைத் திரும்ப ஒருமுறை நோக்கினான்.

திரும்பி சுகன்யாவைப் பார்த்தவன் தன் கண்களைத் துடைத்துக்கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான். சுகன்யா தன்னைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிப்போய்க்கொண்டிருக்கும் செல்வாவின் முதுகையே பார்த்துக்கொண்டிருந்தாள். மனதில் எழுந்த உணர்ச்சிப்பெருக்கால், கால்கள் வலுவிழக்க, நிற்க முடியாமல் பக்கத்திலிருந்த ஒரு படகின் நிழலில் தொப்பென உட்கார்ந்தாள்.

சுகன்யா தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்தே தன் பார்வையை தனது வலப்புறம் திருப்பினாள். மணல் வீடு கட்டி விளையாடிக்கொண்டிருந்த அந்த அழகான குழந்தைகளை இப்போது அங்கு காணவில்லை. அந்தக்குழந்தைகள் வெகு அழகாக, வெகு முனைப்பாக கட்டிய, அந்த வீடு உருத்தெரியாமல் சிதறிப்போயிருந்தது.

சுகன்யாவுக்கு சட்டெனத் தான் கட்டிய அழகான காதல்கூட்டின் நினைவு வர, அவள் கண்களில் மீண்டும் கண்ணீர் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. 

செல்வா, சுகன்யா என்னும் இரு தனி மனிதர்களின் மன உணர்வுகளை பற்றிய கவலையில்லாமல், அலையும் நீலக்கடல், ஓயாமல், ஒழிவில்லாமல், அலைந்து அலைந்து, உயர்ந்து எழுந்து, கரையை வேகமாகத் தாக்கி, விருட்டென பின்னோக்கி சென்று எதிரில் வரும் அலையில் மோதி, அதன் வேகத்தை தணித்து, ஒன்றாகின. மீண்டும் அலைந்தன. உயர்ந்தன. எழுந்தன. தாழ்ந்தன. மோதின.

சுகன்யா மெல்ல எழுந்து, தண்ணீரை நோக்கி நடந்தாள். புடவையை இழுத்து தன் இடுப்பில் செருகிக்கொண்டாள். அலைகள் அவளுடைய அழகான வெண்மையான கால்களை தொட்டுத் தொட்டு வருடின. அவளுடைய பார்வை தொடுவானத்தில் நிலைத்திருந்தது.

நான் யாருகிட்டவும் என் வாழ்க்கையில அதிகமா பேசினதேயில்லை. யார்கூடவும் மனம் விட்டு பழகினதும் இல்லே. அதிகமா விளையாடிதில்லே. சிரிச்சதில்லே. நத்தையா ஒரு கூட்டுக்குள்ளே, ஆமையா ஒரு ஓட்டுக்குள்ளே, என்னை நானே சுருக்கிக்கிட்டு இருந்தேன்.

தீடிர்ன்னு, கிருஷ்ணவேணிங்கற ஒரு நல்ல சினேகிதி எனக்கு கிடைச்சா. சுகன்யா... நீ நினைக்கற மாதிரி ஆண்கள் எல்லோருமே ஒட்டுமொத்தமா கெட்டவங்க இல்லேன்னு எனக்கு சொல்லிக்கொடுத்தா. வாழ்க்கையின் அர்த்தத்தை உணரவெச்சா.



நானும் செல்வாவை மனசார விரும்பினேன். என்னை விட்டுட்டுப் போன என் அப்பா, அவரா வீட்டுக்குத் திரும்பி வந்தார். என் அம்மாவோட வாழ்க்கையில மீண்டும் வசந்தம் வந்தது. அப்பா வீட்டுக்கு வந்ததால, அம்மா தன் வீட்டுக்கு உரிமையோட போனாங்க.

என்னோட தொலைஞ்சு போன சொந்தங்கள், தாத்தா, பாட்டி, ஒண்ணுவிட்ட அத்தை, மாமா, அவங்களோட பிள்ளை, இப்படி எனக்கு நிறைய உறவுகள் திடீர்ன்னு கிடைச்சது. என் அம்மாவும், அப்பாவும் சந்தோஷமா இருக்கறதைப்பாத்து வயசான என் தாத்தாவும் பாட்டியும் சந்தோஷமாயிட்டாங்க. அவங்களைப்பாத்து நான் சந்தோஷப்பட்டேன்.

இப்பத்தான் ஒரு மாசமா, என் மனசோட ஒரு மூலையில, நிரந்தரமாக குடியிருந்த ஒரு அர்த்தமில்லாத பயம், அச்சம், கொஞ்சம் கொஞ்சமா என்னை விட்டு விலக ஆரம்பிச்சுது. மீனா, மல்லிகா, நடராஜன், சீனு அப்டீன்னு புதுசு புதுசா உறவுகள் எனக்கு கிடைச்சது. நான் சிரிக்க ஆரம்பிச்சேன்.

காதலிச்சவனையே கல்யாணம் பண்ணிக்கப் போறோங்கற நிம்மதி, பெருமிதம் எனக்குள்ள வந்திச்சி. மனசுக்குள்ள இருந்த இறுக்கமெல்லாம் கொறைஞ்சு, வாழ்க்கையில ஒரு பிடிப்பு உண்டாகி, சிரிக்கணும்; சிரிக்கறதுல இருக்கற மகிழ்ச்சியை, சந்தோஷத்தை முழுசா அனுபவிக்கணும்ன்னு நான் முயற்சி பண்ணும் போது எனக்கு இப்படி ஒரு சோதனையா?

நான் மனசுவிட்டு சிரிச்சி, பேசி பழகறது என் காதலனுக்கே பிடிக்கலை. நான் சிரிச்சது, என் காதலுக்கே வினையா மாறிடிச்சி. எல்லாம் என் தலையெழுத்து.

செல்வா போயிட்டான். என் வாழ்க்கையில வந்த மாதிரியே சட்டுன்னு திரும்பி போயிட்டான். என் செல்வா இந்தக் கடற்கரையிலத்தான் தன் காதலை என் கிட்டச் சொன்னான். அதே எடத்துல தன் மனசை எங்கிட்டேயிருந்து வலுக்கட்டாயமா, என் விருப்பமே இல்லாம, பிடுங்கிக்கிட்டுப் போயிட்டான்.

நானும் இதே எடத்துலத்தான் என் மனசை செல்வா கிட்ட தொலைச்சேன். இப்ப நான் என் காதலையும் இதே இடத்துல தொலைச்சுட்டேன். என் செல்வா... கொஞ்சம் கூட இரக்கமேயில்லாம, இவ்வளவு சுலபமா, என் மனசை மிதிச்சி, துவைச்சி, சுக்கு நூறாக்கிட்டுப் போயிட்டான்.

என் காதலுக்கு என்ன ஆச்சு? என் காதல் நிஜமாவே தோத்துப்போச்சா? கடைசீல சாவித்ரித்தான் ஜெயிச்சிட்டாளா?

இல்லை. நிச்சயமா இல்லே. செல்வா என்னை வெறுக்கறேன்னு சொன்னான். ஆனா அவனை நான் வெறுக்கலே. நான் செல்வாவை இன்னும் காதலிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். என் செல்வாவை நான் காதலிச்சுக்கிட்டு இருக்கும் போது என் காதல் தோத்துப்போச்சுன்னு எப்படி சொல்லமுடியும்? கல்யாணம் பண்ணிக்கிட்டு சேர்ந்து வாழ்ந்தாத்தான் காதல்லே ஜெயிச்சதா அர்த்தமா?

என் அத்தான் சம்பத்தும் என்னை காதலிக்கறேன்னு சொன்னார். என் வாழ்நாள் பூராவும் என்னைக் காதலிச்சுக்கிட்டே இருப்பேன்னு சொன்னார். தன்னோட மனசு விரும்பிய பெண்ணுக்காக, அவளோட காதலுக்காக தான் சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருப்பேன்னு சொன்னார். அது மாதிரி என் காதலை நான் என்னால என் மனசுக்குள்ளவே வெச்சிக்கிட்டு சந்தோஷமா இருக்க முடியாதா? காதலுக்கு ஒரு உருவம், ஒரு உடல், ஒரு அடையாளம் தேவையா?

சுகன்யாவின் மனம் தன் நிலையில் நிற்காமல் அலைந்து கொண்டிருந்தது. தன் விழிகளிலிருந்து வடியும் கண்ணீரைத் துடைக்கவும் முயற்சிக்காமல் அலைகளில் நின்றுகொண்டு, தன்னை மூழ்கடித்து விடுவது போல் தன்னை நோக்கி வரும் அலைகளை வெறித்துக்கொண்டிருந்தாள் அவள்.

தீடீரென சுகன்யாவின் மனதில் செல்வாவின் முகத்தை உடனடியாக மறக்க வேண்டும் என்ற தீவிரமான ஒரு வெறி அவளுக்குள் எழுந்தது. இன்று செல்வா, தான் ஒரு ஆண் என்ற அகந்ததையில், தன்அகம்பாவத்தை என்னிடம் காட்டிவிட்டு போயிருக்கிறான். நாளை வேறு பெயருடன், வேறு ஒரு ஆண் என் வாழ்க்கையில் மீண்டும் வர முயற்சிக்கலாம். நானும் என் மதிமயங்கி அவனை நோக்கி நகரலாம். வருபவன் செல்வாவைப் போல் தன் அகம்பாவத்தை காட்ட முயலலாம்.

எந்த ஆண்மகனையும் நம்பி சுகன்யா இல்லை. என்னால் தனித்து வாழ முடியும். வாழ்ந்து காட்டுவேன். இதற்கு என்ன வழி? சுகன்யா மனமிருந்தால் மார்க்கம் உண்டடி... அவள் உதடுகளில் மெல்லிய புன்னகையொன்று எழுந்தது.

சுகன்யா மீண்டும், ஒரு நத்தை தன்னை தன் கூட்டுக்குள் சுருக்கிக்கொள்வது போல், ஒரு ஆமை தன் உடலை தன் ஓட்டுக்குள் இழுத்துக்கொள்வது போல், தன்னை, தன் மனதை தனக்குள் ஒடுக்கிக் கொள்ள விரும்பினாள். அவள் கண்களில் ஒரு தீவிரம் எழுந்தது. எழுந்த தீவிரம் மெல்ல மெல்ல பற்றி, கொழுந்து விட்டு உடலங்கும் எரிய ஆரம்பித்தது .

மனதுக்குள் ஒரு முடிவெடுத்ததும், தன் மூச்சு சீராவதை, சீரான மூச்சால், தன் உடல் தளருவதையும், தன் தேகத்தின் சூடு குறைவதையும், உணர்ந்தாள் சுகன்யா. தன் விழிகளை துடைத்துக்கொண்டாள். ஆர்ப்பாட்டமான அலைகளை விட்டு மெல்ல நகர்ந்தாள். தன் அலுவலகத்தை நோக்கி விறுவிறுவென நடக்க ஆரம்பித்தாள் சுகன்யா. 


நான்கைந்து வாரங்களுக்குப் பிறகு, அன்று இரவு சுகன்யா நேரத்துக்கு தூங்கினாள். நிம்மதியாக தூங்கினாள். காலை ஐந்தரைமணி வாக்கில் படுக்கையைவிட்டு எழுந்தபோது உண்டான பரவசமான புத்துணர்ச்சியை விழிமூடி மனதிற்குள்ளாகவே, சிறிதுநேரம் அனுபவித்தாள். உற்சாகத்துடன் கட்டிலை விட்டு குதித்து, ஹவாய் சப்பலை காலில் மாட்டிக் கொண்டு மெல்ல நடந்து பால்கனிக்கு வந்தாள்.

விடுதி பால்கனியிலிருந்து வெளியில் பார்த்தபோது, வெகு அழகான புல்தரை அவள் கண்களுக்குத் தெரிய மனம் சட்டென லேசாகியது. ஒரே அளவில், ஒரே உயரத்தில், புற்கள் சீராக வெட்டப்பட்டு, அழகான பச்சைப்பாயாக, பச்சைக்கம்பளமாக விரிந்திருந்த பார்க்கில், வயது வித்தியாசமில்லாமல் ஆண்களும் பெண்களும் வேர்க்க விறுவிறுக்க நடந்து கொண்டிருந்தார்கள். இளைஞர்களும், இளைஞிகளும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

நடுத்தர வயது குமரர்களும், குமரிகளும், தங்கள் உடல்களை வளைத்தும், நீட்டியும், மடக்கியும், யோகாப்பியாசம் செய்து கொண்டிருந்தார்கள். வயதானவர்கள் உட்கார்ந்த இடத்திலேயே தங்கள் கை கால்களை ஆட்டி அசைத்துக் கொண்டிருந்தார்கள்.

நீள் வட்டமாக வடிவமைக்கப்பட்டிருந்த பார்க்கின் நெடுகிலும், சரக்கொன்றை மரங்கள், தங்க நிறத்தில் பூத்து குலுங்கிக் கொண்டிருந்தன. தில்லியின் சாலைகளில், அடர்த்தியான நீலத்திலும், சிவப்பிலும், மஞ்சள் நிறத்திலும் மரங்கள் பூத்து குலுங்கிக்கொண்டிருந்தது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வீட்டு சுற்று சுவர்களுக்குள் ஆங்காங்கு மாமரங்களும் தங்கள் பங்குக்கு, காய்த்து காற்றில் ஆடிக்கொண்டிருந்தன.

மே மாதத்தின் மெல்லிய காலை நேரத்துக்காற்று சுகன்யா அணிந்திருந்த நைட்டிக்குள் புகுந்து வெளியேற, காற்றின் மென்மையான ஸ்பரிசம் அவள் மார்பையும் அடிவயிற்றையும் வருடிக்கொண்டு சென்றது உடலுக்கும் உள்ளத்துக்கும் மிக மிக இதமாக இருந்தது. காற்றில் இன்னும் சூடு ஏற ஆரம்பிக்கவில்லை.

தில்லிக்கு வந்ததுக்கு அப்புறம் இந்த ஒரு வாரமாத்தான் நிம்மதியா இருக்கறமாதிரி நான் ஃபீல் பண்றேன். சுகன்யாவுக்கு தன் மனதில் எழுந்த இந்த திடீர் உணர்வு வியப்பைக் கொடுத்தது. இடம் மாறினா மனசுல இருக்கற பாரமும், அழுத்தமும் குறையுமா என்ன?

வந்ததுலேருந்து இந்த மூணு வாரமா, ஒரு ரூம்லே தனியா இருந்தேன். இப்ப என்னையும் அனுராதாவையும் இந்த அறையிலே இரண்டு பேராக தங்க வசதி பண்ணிக் கொடுத்திருக்காங்க. என் வயசையொத்த ஒரு பெண் எனக்கு அறைத்தோழியா வந்ததும், தனிமையில இருக்கற நேரம் கொறையவே, அந்த பாவி செல்வாவை மனசுக்குள்ள நெனைச்சு நெனைச்சு நான் அழறதும் கொறைஞ்சு போச்சு.

செல்வாவை என்னால முழுசா மறக்கமுடியுமா? சுகன்யாவின் மனதில் இந்தக்கேள்வி அவள் அனுமதிக்கு காத்திராமல் சட்டென எழுந்தது. எவனை மறக்க நினைக்கிறேனோ அவன் நினைப்புதான் முதலில் எனக்கு வருகிறது. மனதின் ஆட்டத்தை நினைத்தபோது அவளுக்கு சிரிப்புத்தான் வந்தது.

சுகன்யா... இடம் மட்டும் முக்கியம் இல்லேடி. காலமும் மனுஷனோட வாழ்க்கையில மிக மிக முக்கியமான பங்கை வகிக்குது. நாள் ஆக ஆக, கொஞ்சம் கொஞ்சமா நீ உன் காதல் எபிசோட்டை மறக்க ஆரம்பிச்சுடுவே. மறந்துதானே ஆகணும்? உன் தாத்தா சொல்ற மாதிரி, மறதிங்கறது மனுஷனுக்கு இயற்கை கொடுத்திருக்கற மிகப்பெரிய வரப்பிரசாதம். மறதியையும் நீ அனுபவி. எஞ்சாய் இட். அவளுக்கு மீண்டும் சிரிப்பு வந்தது.



சுகன்யாவின் ரூம் மேட் அனுராதா மெல்லிய குறட்டையொலியை எழுப்பியவாறு இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். நிஜமாவே உடம்பின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கணுங்கற விழிப்புணர்ச்சி, தில்லியிலே படிச்சவங்க மத்தியிலே அதிகமாகவே இருக்கு. இல்லேன்னா, காலங்காத்தால, இவ்வளவு மனிதர்களை பூங்காவுல ஒருசேர பார்க்கமுடியுமா? கொஞ்சநேரம் நடந்துட்டு வரலாமா? அவளுக்கும் கால்கள் பரபரத்தன.

கல்லூரியின் ஹாஸ்டல் நாட்கள் மனதுக்குள் வந்தன. அந்த நாட்களில் அவளுடைய அறைத் தோழிக்கு நடக்கவேண்டும் என்று சொன்னாலே எரிச்சல் வந்துவிடும். அவசியமான வேலைகளுக்கு ஹாஸ்டலைவிட்டு வெளியில் போகவேண்டுமென்றாலும், முனகிக்கொண்டே, வேண்டா வெறுப்புடன்தான் அவள் கிளம்புவாள். ஒரு கிலோமீட்டர் போவதற்கும் ஆட்டோவைத்தான் அவள் தேடுவாள்.
காலை நேரத்தில் அவளை தொந்தரவு செய்யாமல், சுகன்யா ஜாகிங் சூட்டில், அறைக்கதவை வெளிப்புறமாக பூட்டிக்கொண்டு, கல்லூரி மைதானத்திற்கு கிளம்பிவிடுவாள்.

மீண்டும் ஒரு புது இடம். மீண்டும் ஒரு புது ரூம் மேட். ரெண்டு பேரும் ஒரு ரூம்ல செட்டில் ஆகி இன்னும் முழுசா ஒரு வாரம் ஆகலே. அனுவோடுதான் நான் அடுத்த இரண்டு மாதங்கள் இந்த அறையில் இருந்தாகணும். நடக்கிற விஷயத்துல இந்த அனுராதா எப்படியோ? வாக்கிங் போகலாம்ன்னு கூப்பிட்டா வருவாளா?

இன்னைக்கும், நாளைக்கும் விடுமுறைதானே? பார்க்குல காலாற நடந்துட்டு வந்து பகல் பூராத் தூங்கட்டுமே. யாரு வேணாங்கறது? அனுவை எழுப்பிப் பாக்கலாமா? யோசித்துக்கொண்டிருந்தாள் சுகன்யா.


சுகன்யா... 95

"Recap of the story". 

"மிஸ் சுகன்யா... உங்க கிட்ட ஒரு பத்து நிமிஷம் நான் பேசணும்.. உங்களால என்கூட வரமுடியுமா?"

"இப்ப எதுக்கு மிஸ் சுகன்யா.. மிஸ் சுகன்யான்னு பேசி என்னை அன்னியப்படுத்தறீங்க?"

"எங்கிட்ட மரியாதையா பேசுடீன்னு இன்னைக்கு காலையிலத்தான் நீங்க ஒரு ஆஃபிசருக்கு நோட்டீஸ் குடுத்ததா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடீ எனக்குத் தெரிய வந்தது. அதனால நான் கொஞ்சம் முன்னெச்சரிக்கையா இருக்கேன். அவ்வளவுதான்." செல்வாவின் வார்த்தைகளில் விஷம் வழிந்து கொண்டிருந்தது. 


மூன்று மாத பயிற்சிக்காக சுகன்யா டெல்லிக்கு வந்து பதினைந்து நாட்களுக்கு மேலாகிவிட்டது. எப்போதும் தன்னிடம் சிடுசிடுத்துக் கொண்டிருந்த சாவித்திரியின் முகத்தையும், சென்னை அலுவலகத்தில் பார்த்த மனிதர்களையே திரும்ப திரும்ப பார்க்க வேண்டியிராமல், எதற்கும் உதவாத பைல்களை கட்டிக்கொண்டு மாரடிக்காமல், வந்த இடத்தில் புது முகங்களைப் பார்ப்பதில், புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வதில், இறுகிப்போயிருந்த சுகன்யாவின் மனம் மெல்ல மெல்ல இலேசாகத் தொடங்கியது.


காலை பத்து மணிக்கு பயிற்சி வகுப்புக்குள் நுழைந்தால், மூச்சுவிட நேரமில்லாமல் தொடர்ந்து அடுத்த ஆறு மணி நேரத்துக்கு ஒருவர் மாறி ஒருவர் கொடுத்த லெக்சர்களை கேட்டு குறிப்பெடுப்பதில் அவளுக்கு நேரம் போவதே தெரியவில்லை.

மாலை ஆறு மணியளவில் விடுதியறைக்கு திரும்பி, முகம் கழுவிக்கொண்டு, தினமும் முனீர்கா, ராமகிருஷ்ணபுரம், சரோஜினி நகர், ஐ.என்.ஏ. என ஜாலியாக புது இடங்களில் அனுராதாவுடன் சுத்துவது வித்தியாசமான அனுபவமாக அவளுக்கு இருந்தது.

ஜாலியாக சுற்றிவிட்டு வந்ததும், பல மாநிலங்களிலிருந்து அவளைப்போல பயிற்சிக்கு வந்திருப்பவர்களுடன், ஆண் பெண் என்ற வித்தியாசமில்லாமல், கேலிச்சிரிப்புடன், கிண்டல் பேச்சுடன், அரட்டையடித்துக்கொண்டு, விடுதியில் பரிமாறப்படும் சூடான, ரொட்டி, தால், சாவல் என இரவு உணவை, உண்டுவிட்டு, ஹாயாக படுக்கையில் படுத்து உருள்வதும் அவளுக்கு வெகு சுகமாக இருந்தது.

அடுத்த மூன்று மாதங்களுக்கு சமையல் செய்யும் வேலையும், பாத்திரங்களை துலக்கி கழுவும் வேலையும் சுத்தமாக இல்லை என்று நினைக்கும் போதே அவள் மனம் உற்சாகத்தில் சிறகடித்து பறந்தது.

டெல்லி ட்ரெய்னிங் இன்ஸ்டிட்யூட்டில் மிக மிக அருமையான நூலகம் இருந்தது. அவள் வெகு நாட்களாக படிக்கவேண்டும் என்று நினைத்திருந்த புத்தகங்கள் அழகான கண்ணாடி அலமாரிகளில் நிரம்பி வழிந்தன. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு, இரவு உணவுக்குப்பின், தனக்கு கிடைக்கும் நேரத்தை சுகன்யா மீண்டும் படிப்பதில் செலவிட ஆரம்பித்தாள்.

சுகன்யா தனக்குப்பிடித்த புத்தகங்களை மனதில் ஆழ்ந்த விருப்பத்துடன், படிக்கவேண்டும் என்ற முனைப்பில் படிக்க ஆரம்பித்ததால், அவ்வப்போது, மனதுக்குள் வந்து போகும் செல்வாவின் நினைப்பை, வரவிடாமல் தடுத்து நிறுத்துவதில், அவள் சிறிது வெற்றியும் பெற்றாள்.

ஒரு மனுஷி எத்தனை நேரம்தான் படிப்பதில் தன் கவனத்தை செலுத்தமுடியும்? இரவில் படுத்துதானே ஆகவேண்டும். சற்று நேரம் விழிகளை மூடித்தானே ஆகவேண்டும்.

இரவில் தூங்குவதற்கு முன், தினமும் தவறாமல், தன் மனதில் வரும் செல்வாவின் நினைப்பையும், அவனுடன் உல்லாசமாக திரிந்த காலத்தின் இன்பமான நினைவுகளையும் மட்டும், வராமல் தடுப்பதில் சுகன்யாவால் வெற்றிபெறமுடியாமல் போனது. இந்த ஒரு தோல்வியால் அவள் தவித்தாள். திணறினாள்.

சென்னையிலிருந்து கிளம்பும்போதே செல்வாவை மீண்டும் நினைக்கக்கூடாது, அவனை முற்றிலுமாக மறந்துவிட்டு வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தில் நுழைய வேண்டும் என்ற முடிவை அவள் எடுத்திருந்தாள். ஆனால் அதை செயலில் காட்டமுடியாமல், இரவு நேரங்களில், படுக்கையில் ஓசையில்லாமல் அழ ஆரம்பித்தாள்.

என் காதலனோட நான் கழிச்ச இனிமையான நேரங்களைத்தான் என்னால மறக்கமுடியலே. ஒருவிதத்துல அது சரிதான். சந்தோஷம். சந்தோஷம். சந்தோஷம். மனுஷ மனம் எப்பவும் சந்தோஷமா இருக்க விரும்புகிறது. மனசோட இயல்பே அதுதானே.

சந்தோஷம் எங்கே எங்கேன்னு மனசு எப்பவும் அதை மட்டும்தானே தேடிக்கிட்டே இருக்கு. மனுஷன் அனுபவிக்கற எந்த சுகமும் சட்டுன்னு ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது. ஆனால் துக்கங்கள் மட்டும் வெகு நாட்களுக்கு அவன் மனதுக்குள் தங்களின் கசப்பை விட்டுவைக்கின்றன. மனிதன் எப்போதும் துக்கத்தை விரும்பறதேயில்லை. இதுவும் மனிதனின் மன இயல்பு.

திராட்சை ருசிக்கிறது. அதன் இனிப்பை மனசு விரும்பி சுவைக்கிறது. பாகற்காய் கசக்கிறது. உடல் ஆரோக்கியத்திற்கு அது நல்லதென்றாலும் கசப்பை மனிதன் விரும்புவதில்லை. சுகன்யாவின் மனம் இரவில், ஓய்வில்லாமல், கரையை நோக்கி அலையும் கடல் அலைகளைப் போல், இது போன்ற எண்ணங்களில் மிதந்து கொண்டிருந்தது.

எங்களுடைய காதல் முறிஞ்சு சிதறுண்டு போனதுக்கு அப்புறமும் செல்வாவை என்னால் ஏன் சட்டென மறக்கமுடியவில்லை? அவனை நான் கொஞ்சமாவா காதலிச்சேன்..? மனசாரக் காதலிச்சேனே? பாவி... எல்லாத்தையும் மறந்துட்டு என் மனசை சுக்கு நூறா உடைச்சி எறிஞ்சிட்டானே? சுகன்யா தன்னையே வெறுத்துக்கொண்டாள்.

காதலிச்சுட்டு பிரியறது இருக்கே அது பெரிய கொடுமை. மனசுக்கு அது பெரிய வலி. வலியை வார்த்தைகளால சொல்லி புரிய வெக்க முடியாது. வலி என்றால் என்ன என்பதை ஒருவன் சுயமாக அனுபவித்துத்தான் புரிந்துகொள்ளவேண்டும்.

சுகன்யா இரவு நேரங்களில் செல்வாவின் நினைவில், காதலின் நினைவில், இப்படியெல்லாம் யோசனை செய்துகொண்டு தவித்துப்போனாள். உறக்கம் வராமல் கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தாள். இரவு வருவதே அவளுக்கு பிடிக்கவில்லை. தூக்கம் வந்தாலும் அது நிம்மதியான தூக்கமாக இல்லை. திடீரென நள்ளிரவில் விழிப்பது அவளுக்கு வழக்கமாகிப்போனது.

சே… நினைவுகள்தான் மனுஷனுக்கு எதிரி. மனசார ஒருத்தனைக் காதலிச்சிட்டு காதலிச்சவனை விட்டு பிரிஞ்சி மனசுக்குள்ள வர்ற அவன் நினைப்பை வராதேன்னு சொல்றது எவ்வளவு பெரிய கொடுமை? மனதுக்குள் நொந்து போவாள். தனக்கு வந்த இந்த நிலைமை வேற எந்த பொண்ணுக்கும் வரக்கூடாதென சுகன்யா நினைக்கும்போதே, அவள் கண்கள் ஈரமாகி, மவுனமாக ஓசையில்லமால் அவள் அழத்தொடங்குவாள்.

சரியான தூக்கமில்லாமல், காலையில் தினமும் தலைவலியோடு படுக்கையைவிட்டு எழுவதும் அவளுக்கு வாடிக்கையாகிவிட்டது. எத்தனை நாளைக்கு அவனை மறக்கமுடியாம நான் அழணும்? இந்த கேள்விக்கு மட்டும் அவள் மனம், அவளுக்கு சரியான விடையைத் தரவில்லை.

சுகன்யா அன்று இரவும் செல்வாவின் நினைவால் அழ ஆரம்பித்தாள். மனம் வெகு வேகமாக டில்லியிலிருந்து சென்னையை நோக்கி ஓடியது. டில்லிக்கு வருவதற்கு முன் சென்னையில் நடந்ததை மனம் அசைபோட ஆரம்பித்தது. 

"மிஸ் சுகன்யா... நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லலே." செல்வா அவள் முகத்தை வெறித்துக்கொண்டிருந்தான்.

"சாரி... இப்ப எனக்கு தலைக்கு மேல வேலையிருக்கு. நீங்க நினைச்ச நேரத்துக்கெல்லாம் என்னால எங்கேயும் வரமுடியாது."

"உண்மைதான். பத்து நிமிஷத்துல லஞ்ச் டயம் ஆரம்பமாயிடும். இப்ப நீங்க என்கூட வந்துட்டா, உங்க புது ஃப்ரெண்ட் சுனிலுக்கு சோறு ஊட்டற முக்கியமான வேலையை யார் செய்வாங்க?" செல்வா தன் நாக்கை வாய்க்குள் சுழற்றிக்கொண்டான். கண்களில் அளவில்லாத எகத்தாளமிருந்தது.

செல்வா, சுகன்யாவை தன் வார்த்தைகளால் குதறியதும், சுகன்யாவுக்கு காலிலிருந்து தலைவரை பற்றி எரிந்தது. அவனுக்கு சூடாக பதில் கொடுக்க எத்தனித்தவள், சட்டெனத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

"செல்வா... உங்களுக்கு என் மேல கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா? உங்க மனசு என்ன கல்லாயிடுச்சா?"

"மேடம்... என் மனசு கல்லா, இரும்பா, இந்த ஆராய்ச்சியை நீங்க ஓய்வா இருக்கும் போது வெச்சுக்குங்க; உங்க ஆசை அத்தானோட போன் வேற இப்ப லஞ்ச் அவர்ஸ்ல வரும். அதை நீங்க முக்கியமா அட்டண்ட் பண்ணணும் இல்லையா? அப்படியிருக்கும்போது, நான் கூப்பிட்டா நீங்க என் கூட வருவீங்களா? சே.. சே... நீங்க உங்க டயத்தை வேஸ்ட் பண்ணிகிட்டு இங்கே நிக்காதீங்க. கிளம்புங்க; கிளம்புங்க." செல்வா அவளை கிண்டலும், நக்கலுமாக பார்த்து சிரித்தான்.

"ஓ.கே.. ஓ.கே.. செல்வா நான் ரெடி... யெஸ் அயாம் ரெடி.. எங்க போகணும் சொல்லுங்க?" வெடித்துவிடும் போலிருந்த தன் நெற்றியை ஒருமுறை இறுக நீவிக்கொண்டாள் சுகன்யா.

*****

சுகன்யாவும், செல்வாவும், கடற்கரையில் தாங்கள் வழக்கமாக சந்தித்துக்கொள்ளும் இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள்.

சுகன்யா, செல்வாவின் முகத்தைப் பார்க்காமல் சற்றுத் தொலைவில், கவலையே இல்லாமல் கடற்கரை மணலில், வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்த சிறு குழந்தைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். குழந்தைகளினருகில், ஜோடியாக தங்களை மறந்து, அந்த உலகத்தையே மறந்து, ஒரு நடுத்தர வயது ஜோடி, ஒருவர் முகத்தை ஒருவர், தங்கள் பார்வையாலேயே விழுங்கிக்கொண்டிருந்தனர். செல்வாவும் அவர்களையேதான் பார்த்துக்கொண்டிருந்தான்.



"செல்வா.. அந்த குழந்தைங்க ரொம்ப அழகா இருக்காங்க இல்லே?" அந்த இக்கட்டான நேரத்திலும், தன் மனதில் இருந்த எரிச்சலிலும், கோபத்தையும், மறந்தவளாக, சுகன்யா கள்ளமற்ற அந்த குழந்தைகளின் முகத்தில் இருக்கும் சிரிப்பை, மகிழ்ச்சியை ரசித்தாள். தன் மனதில் எழுந்த உணர்வை தன் மீது கோபமாக இருக்கும் தன் காதலன் செல்வாவுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினாள்.

"ப்ச்ச்ச்..." செல்வா சூள் கொட்டினான். தன் பார்வையை திருப்பிக்கொண்டான்.

“செல்வா... சரிப்பா... நான் சொல்றது, செய்யறது எதுவுமே உனக்கு பிடிக்கலே; ஓ.கே. முக்கியமா ஏதோ பேசணும்ன்னு சொன்னீங்க; நானும் வந்ததுலேருந்து பாக்கறேன்; கடலையே வெறிச்சுக்கிட்டு இருக்கீங்க; என்ன விஷயம்?"

சுகன்யா சிரிக்க முயன்றாள். தன் முயற்சியில் தோற்றாள். சுகன்யாவின் முகத்தில் வந்த அந்தப் புன்னகை, அவள் விரும்பாத நேரத்தில், அவள் விரும்பாத விருந்தாளி, அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல், அவள் வீட்டுக்குள் வந்தவுடன், வலுக்கட்டாயமாக அவள் முகத்தில் அணிந்து கொள்ளும் புன்னகையாக இருந்தது.

செல்வாவும் சங்கடத்துடன் சுகன்யாவின் எதிரில் சற்று நெளிந்தான். ஆஃபீசை விட்டு, கடற்கரைக்கு வந்தபின் அவன் முகத்தில் இருந்த இறுக்கம் சிறிது குறைந்திருந்தது போல் அவளுக்குத் தோன்றியது.

இந்த சங்கடமான தருணத்துக்கு காரணம் நான் இல்லை என்று செல்வா தனக்கு சமாதானம் சொல்லிக்கொண்டாலும், அவன் மனதுக்குள் இனம் தெரியாத ஒரு குற்ற உணர்வு எழுந்து கொண்டிருந்தது. நான் பேசப் போற விஷயத்தை இவள் எப்படி எடுத்துக்கொள்வாள்? இவள் மனம் அதிகமாக புண்படாதவாறு நான் என்ன பேசவேண்டும், என் மனதில் இருப்பதை எப்படி சுருக்கமாக பேசவேண்டும், என அவன் தன் மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் சொல்ல வந்ததை உடனடியாக அவளிடம் சொல்லி விடவும் அவனுக்குத் தைரியம் வரவில்லை.

"செல்வா... ப்ளீஸ்... எனக்கு ஆஃபீசுல நிறைய வேலை இருக்குங்க. நீங்க சொல்ல நினைக்கறதை சீக்கிரமா சொல்லுங்க."

"உங்களுக்கும், உங்க எடுபுடி சுனிலுக்கும் நடுவுல ஏதோ ‘மேட்டர்’ இருக்கறதா இந்த ஆஃபீஸ் பூரா ஒரு கிசுகிசு ஓடிக்கிட்டு இருக்கு. உங்களுக்கு இதைப்பத்தி தெரியுமா?" செல்வா தன் முகத்தை சுளித்துக்கொண்டான். 

"ஊர்ல இருக்கறவன் என்ன வேணா பேசுவான்... செல்வா... இதையெல்லாம் நீங்க நிஜம்ன்னு நம்பிக்கிட்டு என்னை சந்தேகப்பட்டு என்னை தப்பா நினைக்கறீங்களே; வாய்க்கு வந்ததைப் பேசி உங்க வார்த்தையாலேயே என்னைச் சித்திரவதை பண்றீங்களே; உங்களுக்கு கொஞ்சமாவது சுயபுத்தி இருக்கா?"

"சுகன்யா... எனக்கு புத்தி இருக்கவேதான் உடனடியா இதைப்பத்தி உன் கிட்ட தெளிவாப் பேசிடணுங்கற முடிவுக்கு வந்திருக்கேன்.."

"செல்வா... என்னைப் பத்தி எவன் என்னப் பேசறான்னு நான் கவலைப்படலே; என்னைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க; இப்ப அதுதான் எனக்கு முக்கியம். நான் ஒழுக்கமானவள்னு எனக்குத் தெரியும். என் மனசாட்சிக்குத் தெரியும். என் குடும்பத்துக்கு தெரியும். உங்களுக்கும் தெரியும்ன்னு இந்த நிமிஷம் வரைக்கும் நம்பிக்கிட்டு இருக்கேன். அந்த நம்பிக்கையை நீங்க மோசம் பண்ணீடாதீங்க."

"நாம விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்த சொசைட்டியோட, நடுத்தரக்குடும்பத்து வேல்யூசை மதிக்கணும்ன்னு ஒரு பத்து நாள் முன்னாடி நீ எனக்கு லெக்சர் குடுத்தே; இப்ப இந்த சொசைட்டி உன்னோட நடத்தையைப்பத்தி, என்ன பேசுதுங்கறதைப் பத்தி, நீ கொஞ்சம்கூட கவலைப் படமாட்டேங்கறியே? இது உனக்கு கொஞ்சம் வினோதமா படலியா?

"செல்வா... நான் அன்னைக்கு எந்த கான்டெக்ஸ்ட்ல இப்படி பேசினேன்? கல்யாணத்துக்கு முன்னாடி நமக்குள்ள உடல் உறவு வேணாங்கறதைப்பத்தி பேசும்போது சொன்னேன். இப்ப நீ எந்த கான்டெக்ஸ்ட்ல சொசைடியோட வேல்யூசைப் பத்தி பேசறேங்கறதை புரிஞ்சிகிட்டுத்தான் பேசறியா?" சுகன்யா இப்போது ஒருமைக்கு வந்திருந்தாள்.

"சுகன்யா... திரும்பவும் சொல்றேன். நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலே. சம்பத்தோட நீ பேசறது, சுனிலோட கேண்டீன்ல சிரிச்சிக்கிட்டு நிக்கறது, தேவையில்லாம அவன் கூட ஊர் சுத்தறது, இதெல்லாம் எனக்கு பிடிக்கல்லே; நம்ம கல்யாணத்தை எதிர்ல வெச்சிக்கிட்டு, இப்படியெல்லாம் அடுத்தவனுங்களோட நீ கண்டபடி கூத்தடிக்கறது, நடுத்தர குடும்பத்துல பொறந்த எனக்கு, நடுத்தர குடும்பத்து வேல்யூசை மதிக்கற எனக்கு சுத்தமா பிடிக்கலே.”

“செல்வா...? நான் யாருகிட்டப் பேசணும்? நான் எங்க, யார்கூட போகணும், யார் கிட்ட சிரிக்கணும்? யார்கிட்ட மூஞ்சை சுளிக்கணும்? எந்த இடத்துல டீ குடிக்கணும்? எப்ப டீ குடிக்கணும்? அதையும் யார் கூட குடிக்கணும்? இதெல்லாத்தையும் இனிமே நீதான் முடிவு பண்ணப் போறியா?”

"நான் சொல்றதை நீ கொஞ்சம் கேட்டா, என் விருப்பங்களை, என் உணர்வுகளை, நீ மதிச்சா, அதுல உனக்கு எதாவது நஷ்டமா?"

"நீ சொல்றதை அப்படியே நான் கேட்டு நடந்தா எனக்கு என்ன லாபம்ன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?"

"உங்கிட்ட எனக்கு எந்த உரிமையும் இல்லையா... சுகன்யா?"

"எந்த உரிமையில இந்த அளவுக்கு நீ என்னை கட்டுப்படுத்தறேன்னு அதையும் சொல்லிடேன்... செல்வா?"

"என் கையால நீ தாலிகட்டிக்கறதாகவும், உன்னை நான் என் மனைவியா ஏத்துக்கறதாகவும், நாலு பேரு முன்னாடி, நாம ரெண்டுபேரும் மனசொத்து முடிவெடுத்ததை, இவ்வளவு சீக்கிரம் நீ மறந்துடுவேன்னு நான் நெனைக்கலை. கொடுத்த வாக்குறுதிக்கு நீ வெக்கற மரியாதையைப் பாக்கும்போது எனக்கு என் வாழ்க்கையே வெறுத்துப் போவுது."

"என் வாக்குறுதியை நான் எந்தவிதத்துல பங்கப்படுத்திட்டேன்?"

"சுகன்யா நீ வீணாப்பேசி என் நேரத்தை வேஸ்ட் பண்ணாதே? நீ எந்த விதங்கள்லே உன் வாக்குறுதியை காத்துல பறக்கவிடறேங்கறது உனக்கே நல்லாத் தெரியும்."

"ஒஹோ... என் கிட்ட பேசறதே; உன் நேரத்தை வேஸ்ட் பண்றதா உனக்கு தோண ஆரம்பிச்சிடுச்சா?"

"ஆமாம். என்னை உன் புருஷனா ஏத்துக்கறேன்னு உன் ஊர்ல சொல்லிட்டு, இங்கே வந்ததுலேருந்து, கண்டவனுங்களோட உன் நேரத்தை செலவு பண்றது சந்தேகமில்லாம வேஸ்டுதான்னு எனக்குத் தோணுது."

"சரி இன்னைக்கே, இப்பவே நான் அவங்க கிட்ட பேசறதை, பழகறதை நிறுத்திடறேன்."

"ரொம்ப சந்தோஷம். ஆனா இது ஒரு காலம் கடந்த முடிவு..."

"அப்படியா? எனி வே, நாம பேச ஆரம்பிச்சதை முழுசா பேசிடாலாமா?


“யெஸ்... பேசு...”

“நாளைக்கு, நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நான் காய்கறி வாங்க மார்கெட் போகணும். காய் விக்கறவன் எங்கிட்ட சிரிச்சுப் பேசுவான். பால் விக்கறவன் சிரிச்சுப் பேசலாம். என் புடவைக்கு இஸ்திரி போடறவன்; காஸ் சப்ளை பண்றவன்; ஆட்டோ ஓட்டறவன், இப்படி இவங்க எல்லாருமே இந்த ஊருல ஆம்பிளைங்கத்தான்."

"சுகன்யா... என் மனசை உன்னால புரிஞ்சுக்க முடியலேன்னாலும் பராவயில்லே. ஆனா... ப்ளீஸ் நீ ரொம்ப புத்திசாலித்தனமா பேசறேன்னு நினைச்சுக்கிட்டு என்னை தயவு செய்து வெறுப்பேத்தாதே."

“செல்வா... இன்னும் ஒரே ஒரு நிமிஷம் என்னை பேசவிடு...”

“ப்ச்ச்ச்.. பேசிடும்மா... உன் மனசுல இருக்கறதை எல்லாம் உன் ஆசை தீர இன்னைக்கு நீ பேசிடு...” செல்வா மூர்க்கமாக பேசினான். குதர்க்கமாக சிரித்தான்.

"நம்ம மேரேஜ்க்கு அப்புறம், என் தாய் மாமா ரகு நம்ம வீட்டுக்கு வந்து என் கிட்ட சிரிச்சி பேசலாம். உரிமையா என்னைத் தொட்டு பேசலாம். நம்ம வீட்டுக்கு வர்ற என் மாமாகிட்ட நான் பேசலாமா? கூடாதா?”

“சுகன்யா... திஸ் இச் நாட் கோயிங் டு ஹெல்ப் யூ இன் எனி வே...” செல்வா தன் தலையைப் பிடித்துக்கொண்டான்.

“சீனு இன்னைக்கு உன் ஃப்ரெண்ட். நாளைக்கு உன்னோட தங்கையை கல்யாணம் பண்ணிக்கப் போறவன். உனக்கு மச்சான். எனக்கு நெருங்கின என் குடும்பத்து உறவினனாக மாறப்போகிறவன். இன்னைக்கு சம்பத்துக்கு, அதான் என் அத்தான், அவருக்கு எங்கிட்ட என்ன உரிமையோ, என்ன உறவோ, அதே உரிமையோட, உறவு தரும் பலத்தோட, சீனு எங்கிட்ட சாதாரணமா பேசலாம். ஏன் சமயத்துல சிரிச்சும் பேசலாம்.”

“ஒரு செகண்ட்... பொறு செல்வா... முகத்தை சுளிக்காதே... எப்படி நான் என் கலீக் சுனிலோட தோளை நட்பா தொட்டு பேசினேனோ அப்படி அவர் முதுகையும் தட்டி நான் பேசலாம். சிரிக்கலாம். ஏன்னா என் மனசுல எந்தவிதமான திருட்டு எண்ணங்களும் இல்லை. நான் அவர்கிட்ட பேசித்தானே ஆகணும்? நம்ம வீட்டு மாப்பிள்ளை சீனுகிட்ட நான் பேசலாமா? கூடாதா? இந்த மாதிரி சூழ்நிலைகள்லே நான் எப்படி ஃபிஹேவ் பண்ணணுங்கறதை, கிளியரா நடுத்தரக் குடும்பத்துல பொறந்த நீ இப்பவே எனக்கு கிளாரிபை பண்ணிட்டா ரொம்ப உதவியா இருக்கும்.”

"சுகன்யா நீ வரம்பை மீறி தேவையே இல்லாத விஷயங்களை யெல்லாம் பேசறே?"

"அப்படீன்னா, இனிமே என் வாழ்க்கையில என் வரம்பை நிர்ணயிக்கப் போறது நீ மட்டும்தானா? என் வரம்பு எது? எனக்கு எது எல்லைக்கோடு? இதையெல்லாம் யோசிக்கறதுக்கு, நிர்ணயிச்சுக்கறதுக்கு எனக்கு எந்த உரிமையும் இல்லையா?"

"ஆமாம். ஆமாம். நான் உன் புருஷனாகப்போறவன். உன் வரம்புகளை நிர்ணயிக்க என்னை விட தகுதியானவன் வேற யாரும் இங்கே இல்லே."

"இதை நான் மறுத்தால்?" சூடாக எழுந்தது சுகன்யாவின் குரல்.

"நம்ம உறவை முறிச்சிக்கவேண்டியதை தவிர வேறு எந்த வழியும் எனக்குத்தெரியலே." தீடிரென செல்வாவின் குரலில் ஒரு இனம் தெரியாத அமைதி வந்துவிட்டிருந்தது.

"செல்வா நீ பேசறது என்னான்னு புரிஞ்சுதான் பேசறியா?" ஆற்றாமையுடன் கேட்டாள் சுகன்யா.

"ஆமான்டீ சனியனே... எனக்கு வர வர உன்னைப் பார்க்கவே வெறுப்பா இருக்குடீ?" சலித்துக்கொண்டான் செல்வா. எரிச்சலுடன் தன் முகத்தையும் திருப்பிக்கொண்டான்.



"நான் உனக்கு சனியனாயிட்டேனாடா? என் மொகத்தைப்பாத்து சொல்லுடா நீ" சுகன்யா தன் அடித்தொண்டையில் கூவினாள்.

"ஆமாம். உன் ஆட்டத்தையும் பாட்டத்தையும் என்னாலத்தாங்க முடியலே. தினம் தினம் உன்கூட என் மனசுக்குப் பிடிக்காத ஒரு தொல்லையை இப்படி அனுபவிக்கறதைவிட, மொத்தமா உன்னைவிட்டு பிரிஞ்சிட்டாலே, அது எனக்கும், உனக்கும் ஒருவிதத்துல நல்லதுன்னு நான் நெனைக்கிறேன்." செல்வாவின் குரலில் ஒரு தீர்மானம் ஒலித்தது.

சுகன்யா தன் தலையை குனிந்து கொண்டிருந்தாள். அவள் விழிகள் கண்ணீரில் நனைந்து கொண்டிருக்க உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.

"செல்வா... நீ உண்மையாத்தான் சொல்றியாடா? என்னை நீ வெறுக்கறீயா? சுகன்யா விசும்பினாள். விம்மினாள்.