Saturday, 7 March 2015

சுகன்யா... 35


"டேய் செல்வா ... நீ வந்து சாப்ட்டீனா என் வேலை முடியும். மணி எட்டாச்சு. எனக்கு நேரத்துல தூங்கணும்..." மல்லிகாவுக்கு அவனை கூப்பிட்டு கூப்பிட்டு அலுத்துப் போயிற்று.

"அம்மா ... எனக்கு பசிக்கும் போது நான் சாப்பிட்டுக்கிறேன் ... நீ போய் நிம்மதியா தூங்கு ... தூங்கறதை விட்டா உனக்கு வேற என்ன கவலை?" மதியமே அவனுக்கு சாப்பிட பிடிக்கவில்லை. வேண்டா வெறுப்பாக மல்லிகா போட்டதை, எதுவும் பேசாமல் அவசர அவசரமாக விழுங்கியிருந்தான்.

"எல்லாம் உன் இஷ்ட்டம்ன்னு சொல்லியாச்சு ... அப்புறம் ஏண்டா நீ என் கிட்ட வீண் பேச்சு பேசறே?"

"அம்மா ... நீங்க ரெண்டு பேரும் திருப்பியும் ஆரம்பிச்சிடாதீங்க ... என்னை கொஞ்ச நேரம் படிக்க விடுங்க; அவன் கேக்கும் போது அவனுக்கு நான் ரெண்டு தோசை ஊத்திக் குடுக்கறேன்; நீ போய் படும்மா... " மீனா ஒரு வாரத்துக்கு பிறகு அன்றுதான் தன் கல்லூரிப் புத்தகத்தை கையில் எடுத்திருந்தாள்.

மல்லிகா, கிச்சனை சுத்தம் செய்துவிட்டு, முகத்தையும், பின் கழுத்தையும், நன்றாக சோப்பு போட்டுக் கழுவிக்கொண்டவள், தன் சேலை முந்தானையால் முகத்தைத் துடைத்தவாறே, மறு கையில் பால் சொம்புடன் படுக்கையறைக்குள் நுழைந்தாள்.

***

செல்வா மனதுக்குள் சுண்ணாம்பாய் வெந்து கொண்டிருந்தான். நெலமை புரியாம அம்மா இப்பத்தான் சாப்பிடு சாப்பிடுன்னு என் உயிரை எடுக்கிறா? நேரத்துக்கு புள்ளை சாப்பிடலேயேன்னு அம்மா மனசு கஷ்டப்படுது. அது எனக்கு புரியலையா? என் மனசு கனத்துப் போயிருக்குது. மனசுல இருக்கற பாரத்தை எறக்கற வரைக்கும் எனக்கு எப்படி பசிக்கும்? என் பாரத்தை நான் யார் தோள்ல எறக்கி வெப்பேன்?



மதியம் சுகன்யாவிடம் சந்தோஷமாக கல்யாண விஷயத்தை சிக்ஸர் அடிக்க முயற்சி பண்ண எனக்கு, என் கல்யாண நாடகத்துல புதுசா சீனுக்குள் வந்த பௌலர் சம்பத் போட்ட கூக்ளியில், என் நடு ஸ்டம்ப் எகிறி க்ளீன் போல்ட் ஆகி, பெவிலியனுக்கு திரும்ப வந்திருக்கிற என் மன வேதனையை நான் யார்கிட்ட சொல்லி அழறது?

சம்பத் சொன்ன கதையை கேட்டதுலேருந்து, மொத்தமா என் மனசு குழம்பி சேறாகிப் போயிருக்கேன்? இப்ப எனக்கு சோறு ஓண்ணுதான் கேடா? ஒரு வேளை தின்னலன்னா செத்தா போயிடுவேன்?

செல்வா தன் மனதுக்குள் எரியாமல் புகைந்து கொண்டிருந்தான். மெதுவாக எழுந்து வெரண்டாவிற்கு வந்த செல்வா, தன் முகத்தில் அடித்த இதமான குளிர் காற்றை நீளமாக இழுத்து, மார்பை முழுமையாக நிறைத்துக்கொண்டான். குளிர்ந்த காற்று நெஞ்சுக்குள் பரவியதும், மனம் ஓரளவிற்கு இலேசாகியதாக உணர்ந்தவன் அங்கேயே வெறும் தரையில் நீளமாக படுத்துக் கொண்டான். உஷ்ணமான உடம்புடன், ஜில்லென்ற தரையில் கிடந்தவன் மனதின் எண்ணப் பறவைகள் மீண்டும் சிறகடிக்க ஆரம்பித்தன.

முதல்லே வித்யா, சுகன்யாவை எவனோ ஒரு சம்பத் பொண்ணு பாக்க போறான்னு ஒரு சின்ன கல்லைத் தூக்கி என் தலையில போட்டா; நான் சொல்றது உண்மையா இல்லையா? அதான் முக்கியம்; யார் சொன்னதுங்கறது முக்கியமில்லேன்னு புதிரா பேசினா; அப்ப அது அவ்வள பெரிய விஷயமா எனக்குத் தோணலை.

எப்படியோ இங்க அங்க அலைஞ்சு அவ இருக்கற எடத்தை கண்டுபிடிச்சி போனைப் போட்டா ... வித்யா சொன்ன அந்த சம்பத்தே, சிவதாணு வீட்டுல போனை எடுத்து ... என் தலை மேல பெட்ரோலை ஊத்தி நெருப்பை அள்ளிக் கொட்டி, மொத்தமா என் கரண்ட்டை புடுங்கிட்டான். அப்ப வித்யா சொன்னது முழு உண்மைதானே?

சுகன்யாவா? என் சுகன்யாவா இப்படி பண்ணியிருக்கா? சுகன்யா என்னை காதலிக்கறதுக்கு முன்னாடி, அவளுக்கு இன்னொரு ஆணுடன் பழக்கம் இருந்திருக்கிறதா? ஒருத்தன் அவளை எட்டு வருஷமா காதலிச்சிருக்கான். இந்த விஷயத்தை முழுசா மறைச்சு என் கிட்ட அவ பழகியிருக்காளே? என்னால இதை நம்பவும் முடியவில்லை. நம்பாம இருக்கவும் முடியலையே?

செல்வா ... அப்படியே சுகன்யா யார்கூடவாது பழகியிருந்தா உனக்கு என்னடா? அது முடிஞ்சுப் போன விஷயம். இப்ப அவ உன் மேல உயிரையே வெச்சிருக்கா? அதுதானேடா முக்கியம்? அவளோட பழசை நினைச்சு நீ ஏண்டா அர்த்தமில்லாம கவலைப் படறே?

சுகன்யா ஒருத்தன்கூட பழகினதிலே எனக்கு எந்த பிரச்சனையும் இல்லே? அவ அதை என் கிட்ட ஏன் மறைச்சா? அதுதான் இப்ப என் மனசுக்குள்ள முள்ளா இருந்துகிட்டு குத்துது? கடைசியிலே என் சுகன்யாவும், சராசரி பெண்களில் ஒருத்திதானா? அவ மேல நான் என் உயிரையே வெச்சிருக்கேனே?

எனக்கு ஆக்ஸிடெண்ட் ஆச்சு; அடிபட்டுக்கிட்டவன் அப்படியே போயிருக்கக் கூடாதா? நடு ரோடுல செத்திருந்தா கூட பரவாயில்லே? நான் எதுக்காக பொழைச்சு வந்தேன்? என்னை சந்திக்கறதுக்கு முன்னாடியே, சுகன்யாவுக்கும் இன்னொருத்தனுக்கும் பழக்கம் இருந்தது; நடுவுல அவங்க பிரிஞ்சிட்டங்கான்னு தெரிஞ்சுக்கறதுக்கா? எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகப் போற நேரத்துல, சம்பத்துக்கு சுகன்யா மேல இன்னும் காதல் இருக்குன்னு அவனே எங்கிட்ட சொல்லி, அதை நெனைச்சு நெனைச்சு நான் இப்படி மனசுக்குள்ளவே புழுங்கறதுக்கா பொழைச்சுக்கிட்டேன்?

சுகன்யா ஒருத்தன் கூட நட்பா பழகியிருந்திருக்கலாம். அது தப்பில்லே? ஆனால் அதை என் கிட்ட எப்பவும் சொன்னதேயில்லையே? அவர்களுடைய நட்பு எது வரைக்கும் போயிருந்திருக்கும்? எதனால அவர்கள் நட்பு நடுவில் நின்று போனது? சம்பத் அந்த நட்ப்பை மீண்டும் ஏன் புதுப்பிக்க விரும்புகிறான்? இதில் சுகன்யாவுக்கு எந்த அளவுக்கு உடன்பாடு? டேய், செல்வா, போதும் நிறுத்துடா. உன் மனசை அலைய விடாதே! இதுக்கு மேல இதை நோண்டாதே.... இப்போதைக்கு சும்மா இரு. சும்மாவா சொல்றாங்க? அம்பட்டன் குப்பையை கிளறினா மசுருதாண்டா மிஞ்சும்ன்னு?

சுகன்யாவும்தான் எதுக்காக என்னைப் பொழைக்க வச்சா! எதுக்காக? இப்படி என்னை கொல்லாம கொல்றதுக்கா? டேய் பைத்தியக்காரா! சும்மா சும்மா ஏண்டா சாவைப் பத்தியே நினைக்கிறே? இப்ப என்னடா ஆயிடிச்சி? இன்னும் நிச்சயதார்த்தம் கூட நடக்கலை. உன் அப்பாவும், இந்த கல்யாணத்துல எங்களுக்கு முழு சம்மதமுன்னு சுகன்யா வீட்டுக்கு இன்னும் கன்ஃபார்ம் பண்ணலை. அப்புறம் என்னடா? எத்தனை எடத்துல, தாலி கட்டறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னே கல்யாணம் நின்னுப் போயிருக்கு. அவங்கல்லாம் திரும்பவும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழலையா? ஆசைப்பட்ட ஒரு பொண்ணு உனக்கு கிடைக்கலன்னா, உன் வாழ்க்கையே முடிஞ்சுப் போச்சா? நீ எதுக்கு சாவைப் பத்தி இப்ப நினைக்கணும்? 

டேய் செல்வா! நில்லுடா ... நில்லுடா! காலையிலத்தான் கன்யாவை விட்டா வேற எவளையும் திரும்பிப் பாக்கமாட்டேன்னு நடுக்கூடத்துல உக்காந்து சத்தியம் பண்ணே? சபதமெடுத்து இன்னும் முழுசா எட்டு மணி நேரம் கூட முடியலை. கல்யாணம் நின்னா என்னன்னு எப்படிடா உன்னால நினைக்க முடியுது?

மீனா உனக்காக அம்மாகிட்ட எவ்வளவு தூரம் ஆர்க்யூ பண்ணா? மீனா கிட்ட சம்பத்து சொன்னதை சொல்லுவியா? சுகன்யாவை இன்னொருத்தனும் கல்யாணம் பண்ண டிரை பண்ணிக்கிட்டு இருக்கான்? அவங்களுக்குள்ள ஏற்கனவே பழக்கம் இருந்திருக்கும் போலத் தெரியுது. இது எனக்கு மனசை உறுத்தறதுன்னு உன் தங்கைக்கிட்ட உன்னால சொல்ல முடியுமா? சுகன்யா இப்ப அவளோட பெஸ்ட் ஃப்ரெண்ட் ஆயிட்டா; அவ கிட்ட அவளைப் பத்தி எடக்கு மடக்கா பேசினா, தூ ... நீயும் ஒரு சராசரி ஆம்பிளைத்தானா என் மூஞ்சி மேலேயே காறித் துப்பினாலும் துப்புவா ...? இந்த விஷயத்தை இவ கிட்ட பேசக்கூடாது. செல்வா தன் மனதிலிருந்து தன் தங்கை மீனாவின் பெயரை அழித்தான்.

உன் அப்பா, எப்பவும் அனாவசியமா எதுக்கும் வாயைத் தொறக்காத மனுஷன். அவரு எப்பவும் உன் அம்மா பேச்சை தட்டாம, அவ சொல்றதுக்கு அதிகமா மறுப்பு சொல்லாமா ஸ்மூத்தா லைபை ஓட்டிக்கிட்டு இருக்கறவரு. அவரே முதல் தரமா, உன் கல்யாண விஷயத்துல, தன் பொண்டாட்டிங்கறதுக்காக அவ பேச்சை கேக்காம, உன் பக்கம் இருக்கற ஞாயத்தை எடுத்துப் பேசியிருக்கார்.

உன் அப்பனுக்கு வார்த்தைதான் முக்கியம். பேசின வார்த்தைக்கு முக்கியத்துவம் குடுக்கற ஆளு அவரு. பொண்டாட்டி புள்ளை எல்லாமே கொடுத்த வார்த்தைக்கு அப்புறம்ன்னு நெனைக்கற ஆளு. அவரு ஏற்கனவே, உன் சித்தப்பா, உன் மாமா எல்லார்கிட்டவும், உன் கல்யாண விஷயத்தைப் பத்தி பேசிட்டாரு. உன் உறவு முறையில என்பது சதவீதம் பேருக்கு உன் கல்யாணம் பத்தி தெரிஞ்சு போச்சு. இப்ப போய் நீ ஏதாவது வில்லங்கம் பண்ணே; மவனே; இதுக்கு மேல உன் கிட்ட அந்தாளு பேசறதையே நிறுத்திடுவாரு. மானமுள்ள மனுஷன் அவரு; ஞாபகம் வெச்சுக்க. ஸோ ... நீ இந்த விஷயத்தை அவருகிட்டவும் பேச முடியாது. நடராஜன் பெயரும் செல்வாவின் மனதிலிருந்து அடிக்கப்பட்டது.

உன் அம்மாவுக்கு, சுகன்யா தன் கல்யாணத்துக்கு முன்னயே, உடம்பு அரிப்பெடுத்து, உன் கூட தனியா இருந்தான்னு ரொம்ப மனக்குறை. அவ தன் அழகை காமிச்சி உன்னை மயக்கிட்டான்னு ரொம்பவே எரிச்சல். அம்மா அவ மேல இந்த விஷயத்துல, அவ நடத்தை மேலே கொஞ்சம் நல்ல அபிப்பிராயம் இல்லாம இருக்காங்க. நீ உன்னைத் தவிர சுகன்யா யாரையுமே திரும்பியே பாத்தது இல்லைன்னு காலையில் நடுக்கூடத்துல நாலு பேரு முன்னாடி கற்பூரம் கொளுத்தி சத்தியம் பண்ணே? உன் பேச்சைக் கேட்டுக்கிட்டு, அவங்களும் கடைசியா எக்கேடோ கெட்டுப் போடான்னு தன் முடிவுலேருந்து உனக்காக இறங்கி வந்திருக்காங்க.

சம்பத் சுகன்யாவை எட்டு வருஷமா காதலிக்கற கதை அவங்களுக்கு தெரிஞ்சா, இந்த வீடு குருஷேத்திரமா ஆயிடும். அது மட்டுமா, பழைய குருடி கதவை தொறடிங்கற மாதிரி, உன் அம்மா சுகன்யாவை எடுபட்டவ, கூறு கெட்ட சிறுக்கின்னு, கூப்பாடு போடுவாங்க. அதை உன்னால் நிஜமா தாங்கிக்க முடியுமா? அம்மா கிட்டவும் இந்த விஷயத்தை பேசமுடியாது.

ம்ம்ம் ... எல்லாத்துக்கும் மேல, முந்திரிகொட்டை மாதிரி, நானே என் வாயாலே, சுகன்யா மாமன் ரகுகிட்டே, என் அம்மா எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்கண்ணு டமுக்கு அடிச்சிட்டேன். அத்தோட வுட்டனா? அந்தாளுக்கிட்டவே சுகன்யா கிட்ட பேசறேன்னு நெம்பரை வாங்கி, சம்பத் பேச்சைக் கேட்டுக்கிட்டு, சுகன்யாகிட்ட இதுவரைக்கும் பேசாம, பொட்டைப் பயலாட்டாம் பதுங்கி கிடக்கிறேன்? அந்தாளு சுகன்யா கிட்ட பேசி, கல்யாணத்துக்கு என் அம்மா சம்மதம் சொன்னதை இன்னேரம் சொல்லிக் கூட இருக்கலாம். அப்படி அவரு சுகன்யா கிட்ட சொல்லியிருந்தால், இன்னேரம் சுகன்யா எனக்கு போன் பண்ணி இருக்க மாட்டாளா?

நான் ஒரு முண்டம். சுகன்யா போன் பண்ணுவான்னு நெனைச்சுக்கிட்டு இருக்கேன்? அவதான் பிடிவாதமா, ஒரு வாரமா என் கிட்ட பேசறதை நிறுத்தி வெச்சிருக்காளே? எல்லாத்துக்கும் மேலே ஏற்கனவே நான் வீட்டுக்கு வந்தது அவளுக்கு தெரிஞ்சும் வீம்பா பேசாமலே இருக்கா.

ம்ம்ம்... சத்தியமா சுகன்யாகிட்ட இந்த விஷயத்தை கேக்கறதுக்கு எனக்கு மனசுல தைரியமில்லே? தைரியம் என்ன? இஷ்டமும் இல்லே? ஆனா இந்த பாழும் மனசு என்னை அலைக்கழிக்குதே? இப்ப நான் என்னப் பண்றது? இந்த வேதனையை வெளியில சொல்லாம மனசுக்குள்ள வெச்சுக்கவும் என்னால முடியலையே? யார்கிட்டவாவது இதை சொல்லித்தான் ஆகணும். இல்லேன்னா எனக்கு பைத்தியம் பிடிச்சிடும்? இதை யார் கிட்ட சொல்றது?

சுகன்யாவோட ரகுவிடமோ அல்லது அவ அம்மா கிட்ட இந்த மாதிரி ஒரு விஷயம் எனக்கு தெரியவருதுன்னு ... நோ ... நோ ... என்னால என் சுகன்யா கிட்டவே பேச தைரியமில்லாம இருக்கப்ப அவங்க வீட்டுல யாருகிட்ட பேசறது? வேற வினையே வேணாம்.

எனக்காக இப்ப என் அப்பா முழுசா கல்யாண வேலையில இறங்கியாச்சு? இப்ப கல்யாணத்தை கொஞ்ச நாள் தள்ளிப் போடுங்கன்னோ, இல்லை வேண்டாம்ன்னோ, எப்படி நான் சொல்லப் போறேன்? என்னக் காரணத்தை சொல்லுவேன்? பேசாம சுகன்யாவை நேரா போய் பாத்துடலாமா?

என்னன்னு சொல்லிட்டு வீட்டை விட்டு வெளியில போறது? சுகன்யாவை பாக்கப் போறேன்னா ... எல்லாம் துணியை வழிச்சுக்கிட்டு சிரிப்பாங்க ... நாலு நாளுலே கும்பகோணம் போகத்தான் போறோம்பாங்க... அய்யோ! என் மனசுல இருக்கறதை யாருகிட்டவாவது சொல்லாட்டா எனக்கு தலை வெடிச்சுடும் போல இருக்கே! என் மன வேதனையை இப்ப நான் யார்கிட்ட சொல்லுவேன்? ஒரே ஒருத்தன் கிட்ட நான் நம்பிக்கையா பேசலாம். இப்ப அவன் எங்கே இருக்கானோ?
காலம் சென்ற, நிலக்கிழார், ஸ்ரீமான் கீழப்பந்தல் வெங்கிடேசவரதரங்கன் சீனுவாசன், தன் சீமந்த பேரனுக்கு, தன் தாத்தாவின் பெயரான, பாற்கடலில் பள்ளிக்கொண்டவன் திருநாமத்தை "சீனிவாசன்" என ஆசையுடன் சூட்டி, தன் மார்பின் மேல் புரண்டு வளர்ந்த குழந்தைக்கு, அவனுடைய இரண்டு வயதிலேயே ஆண்டாள் அருளிய திருப்பாவையை அறிமுகம் செய்து வைத்தார். அவருடைய முன்னோர்கள், தன் காலால் மூவுலகையும் அளந்தவனுக்கு, கோவில் எழுப்பி சேவகம் செய்த பெருமையை உடையவர்கள். பரம்பரை பரம்பரையாக காஞ்சி வரதராசனுக்கு கருட சேவை உற்சவத்தை வெகு காலம் உபயதாரர்களாக இருந்து நடத்தியவர்கள். 


சீனு என்கிற "கீழப்பந்தல் நாராயணன் சீனுவாசன்" தன் வலக்கையில் விஸ்கி கிளாசும், இடக்கையில் புகையும் சிகரெட்டுமாக, தன்னை மறந்து, தன் சுற்றுப்புறத்தை மறந்து, பிரம்மாண்டமான ஆனந்தஜோதியில் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டிருந்தான் (கட்டிங் விட்டதுக்கு பிறகு தனக்கு கிடைப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் போலியான மன நிம்மதியை "ஆனந்த ஜோதி" என சொல்லுவது சீனுவின் வழக்கம்). சீனு எப்படி கட்டிங்குக்கு அடிமையானான்? ஏன் அடிமையானான் என்பது இந்த கதைக்கு தற்போது அவசியமில்லாத ஒன்று. 

அவனருகில் இந்திரா நகரின் இளைய தளபதிகளாக தங்களை நினைத்துக்கொண்டிருக்கும், இரண்டு மூன்று பேர், "வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு..." என எம்பி3 ப்ளேயரிலிருந்து வந்து கொண்டிருந்த இன்னிசை மழையில் குளிர குளிர நனைந்து கொண்டிருந்தார்கள். ஒருவன் இடுப்பிலிருந்த லுங்கி நழுவி பட்டை போட்ட அண்டிராயர் பளிச்சிட, பாட்டுக்கு, நடனமாடுவதாக நினைத்து தன் உடலை வருத்திக்கொண்டிருந்தான். மற்றவர்கள் மட்டையாக போய்க் கொண்டிருந்தார்கள். 

வேலாயுதம் குடியிருந்த வீட்டுக்காரரும், அவர் மனைவியும் தங்கள் பெண்ணின் பிரசவத்திற்காக பத்து நாட்களுக்கு வெளியூர் சென்றிருந்த காரணத்தால், அவன் தங்கியிருந்த மாடியறையில் கசப்புத் தண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஆறாக ஓடிக்கொண்டிருந்தது. 

சரக்கில் மிக்ஸ் செய்வதற்காக வாங்கி வைத்திருந்த பெப்ஸி பாட்டில் ஒன்று கவிழ்ந்து விழுந்து, கருமை நிறத்தில் வழிந்து ஓடிக்கொண்டிருப்பதை கூட லட்சியம் செய்யாமல், வெண்ணையில் பளபளக்கும் சிக்கன் மசாலாவில் மிதந்து கொண்டிருந்த லெக் ஃபீஸ் ஆணுடையதா இல்லை பெண்ணுடையதா என அன்றைய சோம பானக் கச்சேரியின் உபயதாரர் திருவாளர் வேலாயுதம் தன் மனதுக்குள் ஒரு தீவிரமான ஆராய்ச்சியில் மூழ்கியிருந்தான். கடைசியில் விவேக் தின்ற காக்கா காலா இல்லாம இருந்தா சரிதான் என்று தன் ரிசர்ச்சை தற்காலிகமாக நிறுத்தினான். 

ஏறக்குறைய, மூன்றாவது லார்ஜ் உள்ளே இறங்கியபின், இதோடு நிறுத்திக்கலாமா இல்லை இன்னோரு சின்ன ரவுண்டு போகலாமா, என மனதுக்குள் வாத பிரதி வாதம் செய்து கொண்டே, சீனு தன் பிரத்யேகமான ஜோதியில் ஐக்கியமாகியிருந்த வேளையில், உடுக்கை இழந்தவனுக்கு கையாக மாறி இடுக்கண் களைபவன் நண்பன் என்ற முதுமொழிக்கிணங்க, நமது கதாநாயகன் செல்வா, தன் மனக்கவலையை போக்கி, தனக்கு ஒரு வழி காட்ட வல்லவன் இந்த வையகத்தில் ஒருவன் இருக்கிறானென்றால அது தன்னுடைய அத்தியந்த நண்பன் சீனு ஒருவனே என ஏக மனதாக முடிவெடுத்து, அலைபேசியில் அவனை அழைத்தான். 

"டிங்க் ...டிடிட்ட் ..டிங்க் .... டிங்க் ...டிடிட்ட் ..டிங்க் ...."

"சீனு ... உன் போன் அடிக்குது மாப்ளே..."

"யார்ரா அவன் பூஜை வேளையில கரடி வுடறான்..." சீனு போனை எடுத்து வேலாயுதத்திடம் எறிந்தான் ... என் ஆபீசா இருந்தா நான் செத்துட்டேன்னு சொல்லு ..." 

"மாப்ளே ... யாரோ செல்வின்னு கூப்பிடறா மாப்ளே ...வேலாயுதம் போதையில் தன் வாயெல்லாம் பல்லாக மாற, பக்கத்திலிருந்தவன் அவன் கையிலிருந்து போனை பிடுங்கி "ஹெல்லொ ... நீங்க யார் பேசறது" என வடிவேல் ஸ்டைலில் தன் வாயை கோணினான். 

"டேய் தறுதலை வெல்லாயுதம் ... இது நம்ம செல்வாடா ...செல்வாவை ஒரே நாள்லே செல்வியாக்கிட்டியேடா? "ஹோ ... ஹூ" என அவர்கள் கொக்கரித்தார்கள்.

"டேய் ... சீனு ... செல்வா பேசறேன்..."



"சொல்லுடா மச்சி ... எப்படியிழுக்கே" சீனுவின் குரலில் உற்சாகம் மிதமிஞ்சியிருந்தது. அவனுடைய நாக்கு இலேசாக குழற ஆரம்பித்திருந்தது. 


"மாப்ளே! எங்கடா இருக்கே?" சீனுவின் உளறலை கேட்டவுடனேயே, அவன் இன்றைக்கு வெற்றிகரமாக எவனுடைய பாக்கெட்டுக்கோ ப்ளேடு போட்டு "கட்டிங்" உற்சவம் நடத்திக் கொண்டிருக்கிறானென்று செல்வாவுக்கு புரிந்துவிட்டது

"நம்ப வெல்ல்லாயுதம் இருக்கான்ல;" சொல்லிவிட்டு நிறுத்தினான் சீனு

"சொல்லித் தொலைடா... குடிகாரனுக்கு சஸ்பென்ஸ் என்னடா சஸ்பென்ஸ்?" செல்வா அவன் மீது எரிந்து விழுந்தான்.

"தரமணியில ஷிப்ட்டு டூயுட்டிக்கு போற ஐ.டி. பிகர் ஒண்னை கரெக்ட் பண்ணிக்கிட்டு இருந்தானேடா?"

"யாருக்குடா தெரியும் .. ஊர்ல ஆயிரம் ஐ.டி. பிகருங்க அலையறாளுங்க..."

"அதாண்டா "கோம்ஸ்" டா மாமா ... ஹாங் ..ஹாங் ... அதான் கோமதிதான்; அவ இவன் ப்ரப்போசலுக்கு ஓ.கே சொல்லிட்டாளாம்; ரொம்ப வேண்டப்பட்ட நம்ம பசங்களுக்கு ஒரு சின்னப்பார்ட்டி குடுக்கறாண்டா..."

"சீனு ... இதே வேலாயுதம் அவளை டென்னிஸ் கிரவுண்டுன்னு நக்கல் பண்ணிக்கிட்டு இருந்தான்டா!" 

"செல்வா ... ஒண்ணு சொல்றேன் கேளு ..."

"சொல்லுடா ..."

"அவனும் அலைஞ்சு அலைஞ்சு பாத்தான்... சரியா ஒண்ணும் கரெக்ட் ஆவலை அவனுக்கு! அவனுக்கு வயசாயிகினே போவுது! எவ்வள நாளைக்குத்தான் கையில புட்சிக்கினு கவுந்தடிச்சி பட்த்துக்குவான்?"

"ம்ம்ம்ம்... அதுக்காக?"

"மாப்ளே! மேல கிரவுண்டு எப்படி இருந்தாலும் பரவால்லே ... கீழ கிரவுண்டுல புல்லு முளைச்சு பொத்தல் இருக்கா?... இப்ப வுட்டு ஆட்டறதுக்கு அதாண்டா முக்கியம்ன்னு வெல்லாயுதம் அபிப்பிராயப்படறான். இது அவன் பர்ஸனல் மேட்டர்! இதுல நாம எதாவது சொல்றதுக்கு இருக்கா?" சீனு தன் பஞ்சாயத்தை ஆரம்பித்தான். 
"டேய் அவன் பக்கத்துல இருக்கறானா? ஏண்டா இப்படி குடிச்சிட்டு தாறு மாறா பேசறே?"
"இருந்தா என்னாடா? என் உயிர் நண்பண்டா அவன்! சரிடான்னு நான்தான் ரெண்டு பேரையும் கோத்துவுட்டுட்டேன்!" 
"கோத்து வுட்டியா? என்னடா சொல்றே?'
"அதாம்பா ரெஜிஸ்ட்ரார் ஆபீசுல நோட்டீஸ் குடுத்து ... சாட்சி கையெழுத்து போட்டு இருக்கேன்ல்லா?" அடுத்த மாசம் பத்தாம் தேதி கல்யாணம்டா.."

"இவ்வள தூரம் கதை நடந்து இருக்குது? அந்த வேலாயுதம் ... கம்மினாட்டி எனக்கு சொல்லவேயில்லை?"

"மச்சான் ... சாயங்காலம் ஆனா எங்களுக்கு செக்கு ... சிவலிங்கம் எல்லாம் ஒண்ணுதான்!. நீ எப்பவும் போதி மரத்துக்கு கீழ உக்கார்ர புத்தரு! உனக்குத்தான் "கட்டிங்" வுடறவங்களைப் பாத்தாலே பத்திக்குதே?"

"ம்ம்ம்ம்...." 

"அதுக்கு மேல நீ நடக்கற நெலமையிலா கீறே!... உன்னை நான் ஒரு ஆட்டோ வெச்சுத்தான் ஓட்டிக்கிணு வரணும்; வந்தா மட்டும் நீ என்னாப் பண்ணப் போறே? ஒரு கிளாசுல பெப்ஸியை ஊத்திகிணு ஆகாசத்தை பாத்துக்கிட்டு குந்திகினு இருப்பே? குடிக்கறது தப்புன்னு ... பாடம் நட்த்துவே? எங்களுக்கு இதெல்லாம் தேவைதானா? அதான் நயினா கூப்புடலை உன்னை..."

"சரிடா ... சரிடா ..."

"ஒரு விசியம் க்ளீன்னா தெரிஞ்சுக்கோ? ஃப்ரெண்ஸ்ங்களுக்குள்ள குழப்பம் இருக்கக்கூடாது."

"என்ன எழவுடா அது குழப்பம் ... சீக்கிரம் சொல்லுடா"

"வெல்லாயுதம் உன்னை பார்ட்டிக்கு கூப்ப்புறேன்னான்; நான் தான் வேணாம் வுற்றான்ன்னேன்; செல்வா நம்ம ஜிகிரி தோஸ்த்து ...அவனுக்கு நான் சொல்லிக்க்க்க்கிறேன்... ஒண்ணும் பிரச்சனை பண்ணமாட்டான்னேன்.."

"டேய் சீனு ... என்னை கொஞ்சம் பேச வுடுடா..."

"மன்சுல எத்தையும் வெச்சுக்காதே ப்ரொ ... இத்தைப் பத்தி நேரா பாக்கும்போது பேசிக்கலாம்..." 

"மாப்ளே ... சீனு .. உன்னை நான் உடனே பாத்தாவணும்டா.."

"டேய் செல்வா ... இப்பத்தாண்டா லேசா சுதி ஏறுது!"

"டேய் நாயே ... உன் சுதி, ராகம் எல்லாத்தையும் நிறுத்திபுட்டு இப்பவே கிளம்பி என் வீட்டுக்கு வா.."

"மச்சான் என்னடா ஆச்சு ... எதுக்குடா என்னை நாயேங்கறே?"

"சீனு ... மாப்ளே .. நான் ரொம்ப நொந்து போயிருக்கேண்டா"

"என்ன மச்சான் ... சுகன்யாக்கிட்ட எதாவது லொந்தாயிப்போச்சா...?"

"சீனு என்னை வெறுப்பேத்தாதே! உன் நாத்தவாயை மூடிக்கிட்டு இன்னும் பத்து நிமிஷத்துல நீ இங்க வரலே ... நடக்கறதே வேற பாத்துக்கோ ..." செல்வா உறுமினான்..

"என்ன மச்சான் ... ரொம்பவே சூடாவறே?

"குடிகாரனுங்க நடுவுல என் ஆள் பேரை நீ ஏண்டா எடுக்கறே?"

"சாரி ... சாரி ... பிரதர் ... மன்னிச்சுக்கப்பா"

"சரி சரி ... எப்ப வர்றே? .. 

"செல்வா ... ஒரு ஆட்டோ புட்ச்சித்தான் வர்ரணும் ... பைக் வீட்டுல கிடக்குடா ... ஒரு அரை மணி நேரத்துல வர்றேனே"

"சீனு கோச்சிக்காதேடா ... என்னமோ வெறுப்புல உன்னை நாயேன்னுட்டேன்."


"ம்ம்ம் ... ஒ.கே மச்சான்.."

"சாரிடா சீனு! உன்னை விட்டா எனக்கு வேற ஃப்ரெண்டு யாருடா இருக்கான்...?"

"சரிடா ... சும்மா பொலம்பாதேடா .. நான் வரேண்டா ." 

"எப்படியாவது வந்து தொலைடா ... ஒரு முக்கியமான மேட்டர் டிஸ்கஸ் பண்ணணும்..."

"அம்மா முழிச்சிட்டு இருக்காங்களா?"

"இப்ப எந்த அம்மாவை கேக்கறடா?"

"டேய் செல்ல்வா எனக்கு ரெண்டு அம்மா; ஒண்ணு என் அம்மா; என்னைப் பெத்து வளத்த அம்மா; இன்னொன்னு உன் அம்மா... என்னை பெக்காத அம்மா; ஆனா ஆசையா எப்ப வந்தாலும் உக்கார வெச்சு சோறு போடற அம்மா; உன் அம்மா என் அம்மா ... எப்படி..? ரைமிங்கா பேசறேன்ல்ல்லா.."

"டேய் சீனு அடங்குடா ... பொத்திக்கிட்டு சீக்கிரம் வந்து சேருடா...."



"மச்சான் நான் இன்னும் சாப்புடலேடா"

"நம்ம வீட்டுல சாப்பிட்டுக்கலாம் வாடா... உனக்கில்லாத சோறா?" 

செல்வா காலை கட் பண்ணினான். என் புத்தியை செருப்பால அடிச்சுக்கணும்... இவனை போய் இந்த நேரத்துல கூப்பிட்டிருக்கேன். யாருக்குத் தெரியும் இவன் கட்டிங் வுடறான்னு? போன் பண்ணதுக்கு அப்புறம்தான் தெரியுது? இவன் வந்து என் கதையை கேட்டு, எனக்கு என்னா வழி காட்டுவான்? வந்தான்னா சட்டுன்னு மாடி ரூமுக்கு ஓட்டிக்கிட்டு போய்; அங்கேயே படுக்க வெச்சிடணும் ... "

சுகன்யா... 34

நான் பாம்பேயில, பெங்களூர்ல பாக்காத பிகருங்களா? சீரங்கம் ஜிகிடிலேருந்து பாம்பே சேட்டு பொண்ணுங்க வரைக்கும் தொட்டு, தடவியிருக்கேன். எவளாயிருந்தாலும் மொதல்ல கொஞ்சம் பீட்டர் வுட்டு ஜுலும்பு காட்டுவாளுங்கதான்; ஆரம்பத்துல நாமதான் கொஞ்சம் மகுடியை அடக்கி வாசிக்கணும். 

முதல் நாள் எல்லா பொண்ணுங்களும் கண்ணகி, சீதா பிராட்டியார் ரேஞ்சுலத்தான் ஆக்டிங் குடுப்பாளுங்க. ஒரு அம்பது ரூபாவுல, கண்ணாடி பேப்பர்ல சுத்தின ரோஜா கொத்து ஒண்ணு வாங்கி கையில கொடுத்து, யூ ஆர் சோ க்யூட், உங்களை பாத்ததுலேருந்து தூக்கமே வரலைன்னு அடுத்த சந்திப்புல சின்னதா பிட்டை போட்டு கோடு போடணும். 

அப்பவே தெரிஞ்சு போயிடும். இது படியுமா படியாதான்னு? படியற மாதிரி தெரிஞ்சா, அடுத்த மீட்டீங்க்ல, சிஸ்டருக்குன்னு இம்போர்டட் ஜீன்ஸ், நமக்கு தெரிஞ்ச ஒரு பையன் கிட்ட சொல்லி கொரியாவுலேருந்து வரவழைச்சேன். அண்ணா, சைஸ் கொஞ்சம் பெரிசா இருக்குதேன்னு என் தங்கச்சி ஃபீல் பண்றா; வேற யாருக்கும் குடுக்க மனசு வரலை. சட்டுன்னு உங்க நினைப்புத்தான் எனக்கு வந்தது. நீங்க வேணா டிரை பண்ணுங்களேன்!. இப்படி போட்ட கோட்டு மேல இன்னொரு கோடு கொஞ்ச்ம் அழுத்தமா போடணும்.

குடும்ப பொண்ணா இருந்தா வேண்டாம்ன்னுதான் சொல்லுவா ... நடு நடுவுல நாம போடற கோடு கொஞ்சம் கோணலா கூட போவும். தளர்ந்து போவக்கூடாது. வேணாம்ன்னு சொன்னா விடக்கூடாது. ரெண்டு மூணு தரம் ஸ்ட்ரெஸ் பண்ணணும். கொஞ்சம் மூஞ்சை தேவதாஸ் கணக்குல சோகமா வெச்சுக்கணும்; அதுல மடிஞ்சா, இவ முடிஞ்சான்னு அர்த்தம். இப்ப நீ ஏற்கனவே போட்ட கோட்டை கொஞ்சம் நீட்டா இழுக்கலாம். ஆனா பொண்ணுக்கு புடிக்கலையா, இஷ்டமில்லையா, சட்டுன்னு சாரின்னு சொல்லிட்டு விட்டுடணும். எப்பவும் ரப்சர் பண்ணக்கூடாது. சுத்தமா ஒதுங்கி நீ வேணாம்ன்னு சொல்றவளை தொடறதுல கண்டிப்பா சுகம் இல்லே.



அஞ்சாயிரத்துல, புஸ்தகம் சைசுல, ஒரு சைனீஸ் மேக் செல்லை, பர்மா பஜார்ல வாங்கி கையில குடுத்துட்டு, இன்னைக்கு எனக்கு பர்த் டே; ஏஸி தியேட்டர்ல டிக்கெட் புக் பண்ணியிருக்கேன்; நம்ம பசங்க கட்டிங் வுடலாம்ன்னு சொன்னானுங்க; எனக்கு தண்ணியடிக்கறதெல்லாம் புடிக்காதுங்க. நீங்க ஃப்ரியா இருந்தா, சொல்லுங்க ஒரு நல்ல ரெஸ்டாரண்ட்ல டிஃபன் சாப்பிட்டு, படத்துக்கு போகலாம்ன்னு அடுத்த பிட்டு போடணும். அவ உடனே ஹேப்பி பர்த் டே டு யூ ன்னு கண்டிப்பா கையை புடிச்சி குலுக்குவா!


புது செல்லுக்கு, அதுவும் ஃப்ரீயா கிடைக்கற போனுக்கு, மயங்காதவ யாரு இருக்கா இன்னைக்கு ஊர்லே? அவ கேக்காமலே அவ சிம்முக்கு ரெண்டு தரம் ரீஜார்ஜ் பண்ணிடணும். தயங்கி தயங்கி பைக்ல ஏறி உக்காருவா. நம்ம முதுகு மேல அவ உடம்பு பட்டாக்கூட, முன்ன தள்ளி ஒக்காந்து ரோடைப் பாத்து வண்டியை ஓட்டணும். தியேட்டர் இருட்டுல தவறிப் பட்டுட்ட மாதிரி கையை கழுத்துல போடு, இடுப்புல போடு இல்லே தொடையிலயே போடு; பரவாயிலலே ஆனா, ரோட்டுல நல்லப்புள்ள மாதிரி ஒரு சீன் போடணும். பொண்ணு பேரு நம்மளால கெட்டுப் போவக்கூடாது. 

இப்ப இன்னா ஆவும்? நீ போட்ட சிம்பிள் கோடு ரோடாயிடும்! எப்பவும் தார் ரோடு, சிமிண்ட் ரோடு போடாதே. மண்ணு ரோடுதான் சவுகரியம். கொஞ்சம் ரப்சர் ஆயிடிச்சின்னா, இந்த கோட்டை அழிச்சிட்டு, அடுத்த கோடு போட்டுக்கலாம். 

அடுத்த வாட்டி மீட் பண்ணும் போது, அவளா வண்டியில ஏறி உக்காந்து, ரோடுல மேடு பள்ளம் வர்றதுக்கு முன்னாடியே, அப்ப அப்ப நம்ம முதுகுல தன் உடம்பை அழுத்தி உனக்கு சிக்னல் குடுப்பா. ஒவ்வொருத்திக்கு ஒரு வலை இருக்கு. ஒரு வலையில சிக்கற மீனு அடுத்த வலையில சிக்காது. சின்ன மீனு சிக்கலன்னா, போவட்டும்ன்னு வுட்டுட்டு பெரிய மீனா புடிக்கணும். எத்தனை பேரை இப்படி ப்ளான் பண்ணி கவுத்து இருப்பேன்? ஜாக்கிரதையா இருக்கணும், சட்டுன்னு உன்னையே கவுக்கறவளும் இருக்காளுங்க? 

எனக்கென்னமோ இந்த கல்யாணத்துல எல்லாம் அவ்வளவா நம்பிக்கை இல்லே. மனசுக்கு புடிச்சுதா, பொண்ணை பட்டுன்னு கேட்டமா, அவ ஓ.கே. ன்னா, தொட்டு பாரு; கட்டிபுடிச்சி அனுபவி... வுட்டுட்டு போய்கிட்டே இருக்கணும். ரொம்ப கமிட்மெண்ட்ஸ் வெச்சுக்கக்கூடாது. இங்கே என்னடான்னா, பூவை தொடவேயில்லை. அதுக்குள்ள கையில முள்ளு குத்தும் போல இருக்குது. 

அம்மா ரொம்பவே சொன்னாளேன்னு வந்தேன். சுகன்யா நம்ம உறவுகார பொண்ணுடா. சிவதாணு தாத்தாவோட பேத்தி. குமார் மாமாவுக்கு இருக்கற ஒரே பொண்ணு; தாத்தா சொத்து, குமார் சம்பாதிச்சு வெச்சிருக்கறது எல்லாத்துக்கும் ஒரே வாரிசு. அதுமட்டுமில்லே; அவளோட அம்மா சுந்தரியும், ஸ்கூல் டீச்சரா கை நிறைய சம்பாதிச்சுக்கிட்டு இருக்கா. 

சுகன்யாவோட தாய் மாமன் கல்யாணம் பண்ணிக்கலை. அவன் அக்கா வீட்டுலதான் கூடவே இருக்கான். அவனுக்கும் வீடு, நீர், நில புலன்னு எல்லாம் இருக்கு. அவனுக்கு பின்னால அதெல்லாமும் இவளுக்குத்தான். எல்லாத்துக்கும் மேல சுகன்யாவே நிரந்தரமான கவர்ன்மெண்ட் உத்தியோகத்துல, நல்லா கை நெறைய சம்பாதிக்கறா. இவளை கட்டிக்கறவனுக்கு நல்ல தனயோகம்தான். 

நான் உன் அம்மாடா; உன் கிட்ட நான் இப்படி பேசக் கூடாது? ஆனாலும் சொல்றேன். சுகன்யா சும்மா ஜவுளி கடை பொம்மை மாதிரி எடுப்பா இருப்பாடா. சுகன்யாவை உனக்கு குடுக்கறீங்களான்னு கேட்டு இருக்கேன். சுந்தரி பிடி கொடுத்து பேசமாட்டேங்கிறா. அவ புருஷன் குமாரும், என் பொண்ணுக்கு அப்படி ஒண்ணும் வயசாயிடலயே? ஒரு ரெண்டு வருசம் போகட்டும் ... அதுக்கப்புறம் பாக்கலாம்ன்னு நினைக்கிறோம்.... ராணி, நீ வேணா வேற எடம் பாக்கறதுன்னா பாரேன்னு நாசுக்கா ரெண்டு நாள் முன்னாடி போன் பண்ணி தட்டிக் கழிக்கறாரு. 

ஆத்தாளும் அப்பனும் ஒருத்தரை ஒருத்தர் காதலிச்சு, ஜாதி வுட்டு ஜாதி கல்யாணம் கட்டிக்கிட்ட மாதிரி, சுகன்யாவும் யாரையாவது தன் மனசுல நெனைச்சுக்கிட்டு இருப்பாளோன்னு நான் சந்தேகப்படறேன். இந்த காலத்துல வெளியில படிச்சுட்டு வேலைக்கு போற பொண்ணுங்களுக்கும், ஒண்ணு ரெண்டு பாய் ப்ரெண்ட்ஸ் கல்யாணத்துக்கு முன்னாடி இருக்கத்தான் செய்யறாங்க. நீயும் தான் கேர்ள் ப்ரெண்ட்ஸ் வெச்சிருக்கே. அவங்களையா கட்டிக்கப் போறே?

எவ்வள நாளைக்குத்தான் இப்படியே இவகூட; அவகூடன்னு சுத்துவே? காலாகாலத்துல கல்யாணம் பண்ணி செட்டில் ஆவணும்டா. கல்யாணம்ன்னு வரும் போது சுகன்யா மாதிரி பொண்ணைத்தான் பாக்கணும். இப்பத்தான் சுகன்யாவை, கனகா பாட்டி வீட்டு வாசல்ல பாத்தேன். ஜீன்ஸ், டாப்ஸ் போட்டுக்கிட்டு செப்பு சிலை மாதிரி நின்னுக்கிட்டு இருந்தாடா. 

உனக்கு மட்டும் என்னடா குறைச்சல்? ராஜா மாதிரி இருக்கே, ஒரு தரம் நீ அந்த பொண்ணை நேரா பாத்து கொஞ்ச நேரம் பேசிட்டு வாயேன். நேருக்கு நேரா பாத்தா, அவ மனசுல ஒரு வேளை, உன்னைப் பத்தி ஒரு இம்ப்ரஷன் வரலாம். அப்புறம் உன் இஷ்டம்... 

காலங்காத்தாலே அம்மா என் கிட்ட ரொம்பவே இவளைப் பத்தி புகழ்ந்து பேசவே, அப்படி என்னாத்தான் இவகிட்ட இருக்கு? ஒரு லுக்கு விட்டுத்தான் பாப்பமேன்னு வந்தேன். சும்மா சொல்லக்கூடாது. க்ராஸ் பிரீட் ஆச்சே? சான்ஸே இல்லே ... சுகன்யா நம்பளை பின்னி எடுக்கறாளே? கொஞ்சம் திமிர் பிடிச்சவளா இருக்கா?

நான் இங்கிலீஷ்ல, நீ அழகாயிருக்கேன்னு போட்ட முதல் பிட்டுக்கு, சுகன்யா ஒ.கே ஆன மாதிரிதான் தெரிஞ்சுது. பொறுமையா இருந்திருக்கணும். கொஞ்சம் கண்ணை இங்க அங்க அவ உடம்புல அவசரபட்டு மேயவிட்டது, தப்பா போயிடுச்சின்னு நினைக்கிறேன். 

நான் என்னப் பண்ணுவேன்? மால் டக்கரா இருக்கே? டக்குன்னு சுகன்யா குட்டி முழிச்சிக்கிட்டா. மாப்ளே! உனக்கு ராஜ களை! ஆனா திருட்டு முழின்னு - நம்ம நண்பணுங்க அடிக்கடி சொல்வாங்களே, என் கண்ணு அலைச்சலால இப்ப காரியம் கெட்டுப் போயிடும் போல இருக்கு? 

அம்மா பேச்சைக் கேட்டுக்கிட்டு ஒரு சான்ஸ் பார்க்கலாமேன்னு வந்தேன். சுகன்யா நிஜமாவே சூப்பரா லட்டு மாதிரி இருக்கா. இவ செட் ஆனா, பைனலா கல்யாணத்தை பண்ணிகிட்டு ஒரு வழியா லைப்ல செட்டில் ஆயிடலாம். எத்தனை நாளைக்குத்தான் இப்படி தெருவுல கண்ட லோலாயிங்க பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கறது? 

சுகன்யா ரொம்பத்தான் அல்டிக்கிறா ...? இவளுக்கு எந்த வலையை விரிக்கறது? இன்னும் ஒரு வாரம் நாம இங்கே இருக்கப் போறோம். அதுக்குள்ள ஏதாவது ஒரு வலையை ரெடி பண்ணி விரிச்சுப் பாக்க வேண்டியதுதான்.

சுகன்யாவுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லன்னா அதுவும் வசதிதான். எனக்கு என்ன நஷ்டமாயிடப் போவுது? பத்தோட பதினொன்னு; அத்தோட இதுவும் ஒண்ணு. சும்மா வண்டியை ஒரு டிரையல் பாத்துட்டு, டாட்டா ... பை பை ... சொல்லிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான். 

சுகன்யா இல்லன்னா, ஒரு சுசீலா. சுசீலாவை விட்டா ஒரு சுபத்ரா! சம்பத் தன் மனதுக்குள் சுகன்யாவுக்கான வலையைத் தேடிக்கொண்டிருந்தான்.

ரூமுக்குள்ள போன சுகன்யா என்ன பண்ணுவா? கீ ஹோல் வழியா பாக்கலாமா? டேய் ... உறவு காரன் வீட்டுல உக்காந்து இருக்கே. உடம்பை புண்ணாக்கிக்காதே? ஏதாவது எக்குத்தப்பா ஆச்சு ... உன் அப்பன் ஆத்தா கிராமத்துல வெளியில தலை காட்ட முடியாம போயிடும்! சம்பத்து ... கொஞ்சம் பொறுமையா இருடா. இன்னும் ஒரு வாரம் உங்கிட்ட டயமிருக்கு. கல்லெடுத்து அடி. மாங்கா விழுந்தா சரி ... ஆனா கல்லு உன் தலை மேல விழாம பாத்துக்கோ! சம்பத் தன் கன்னத்தை சொறிந்து கொண்டான். 


அம்மா எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட சந்தோஷமான சமாசாரத்தை சுகன்யா கிட்ட சொல்லனுமுன்னு நான் துடிக்கிறேன். என்னைத்தான் சனி புடிச்சு ஆட்டறானே? என் சனியன் புடிச்ச நேரம், நான் எங்க போனாலும் எனக்கு முன்னே அது போய் நிக்குது? சுகன்யாவை லைன்ல புடிக்கறதே பெரிய பாடா இருக்கே?

லீவுல இருக்கற அவளை, அவ பாஸ் சாவித்திரி, அஃபிஷியல் வேலை எதுக்காவது தொந்தரவு பண்ணப் போறான்னு, செல்லை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வெச்சிருக்காளா? அவ ஆஃபீஸ் வேலைக்கு எப்பவுமே பயப்பட்டதே கிடையாதே? லீவு நாள்ல கூப்பிட்டா கூட முகம் சுளிக்காம ஆஃபீஸுக்கு போறவளாச்சே? அவ செல்லு கெட்டு கிட்டு போயிடுச்சா? ம்ம்ம்... அப்படித்தான் எதாவது ஆயிருக்கணும். ஆனா எனக்கு இப்ப அவ கிட்ட எப்படியாவது பேசியே ஆகணும்.

எரிச்சலுடன் தன் தலையை சொறிந்து கொண்டிருந்த செல்வாவுக்கு, திடிரென சுகன்யாவின், மாமா ரகுவின் செல் நெம்பர் தன்னிடம் இருப்பது நினைவுக்கு வந்தது. நான் கையில வெண்ணையை வெச்சுக்கிட்டு நெய்யுக்கு அலையறேன்; ரகுராமன் கிட்ட பேசினா அவர் கும்பகோணத்து நெம்பர் ஏதாவது கொடுக்க மாட்டாரா? காலையிலேருந்து எனக்கு இது தோணவே இல்லையே? எப்பேர் பட்ட மாங்கா மடையன் நான்?

"சார் ... நான் செல்வா பேசறேன்" தயங்கி தயங்கி ரகுவிடம் பேசினான்.

"சொல்லுங்க தம்பி ... எப்படியிருக்கீங்க... வீட்டுக்கு வந்துட்டீங்கன்னு உங்கப்பா சொன்னார் .."

"ஆமாங்க ..."

அப்பாவும் இவரும் ஒருத்தரோட ஒருத்தர் பேசிக்கிறாங்களா என்ன? அப்பா என் கல்யாணத்தை கிடப்புல போட்டு வெச்சிருக்காருன்னுல்ல நான் நினைச்சுக்கிட்டிருக்கேன்? அவன் மனதுக்குள் மகிழ்ச்சி மத்தாப்பொன்று மின்னியது.

"கேக்கிறனேன்னு தப்பா நினைக்காதீங்க தம்பி ... சுகன்யா கிட்ட உங்களுக்கு என்ன கோபம்?"

"நோ ... நோ ... எனக்கென்ன கோபம் சார்? அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே?" அவசரமாக அவரை மறுத்தான்.

"ம்ம்ம் ... வீட்டுக்கு நல்லபடியா, ரெண்டு நாளைக்கு முன்னாடி நீங்க திரும்பி வந்ததை, சுகன்யா கிட்ட நீங்களே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் ... அவளுக்கு இந்த விஷயத்துல உங்க மேல கொஞ்சம் வருத்தம்தான் ..." அவர் குரலில் சிறிது ஏளனமிருப்பதாக செல்வா உணர்ந்தான்.

"சாரி சார் ... நான் சொல்றதை நீங்க நம்ப மாட்டீங்க ... காலையிலேருந்து நூறு தரம் சுகன்யா செல்லை டிரை பண்ணிட்டேன்.."

"அப்படியா.."

"ஆமாம் சார் ... சுகன்யா நெம்பர் எனக்கு கிடைக்கவே இல்லே.."

"ம்ம்ம்..."

"அதான் இப்ப உங்களைத் சிரமம் கொடுக்கிறேன்.."

"நான் என்ன பண்ணணும் இப்ப?"

"இன் ஃபேக்ட், சுகன்யா கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்ன்னு நான் துடிச்சிக்கிட்டிருக்கேன் .." அவன் தன் நிலையை அவருக்கு புரிய வைக்க முயன்றான்.

"ம்ம்ம் ... அப்படி என்ன ... முக்கியமான ... சாரி தம்பி ... என் கிட்ட நீங்க சொல்லலாம்ன்னு நினைச்சா சொல்லுங்களேன்?"

"கண்டிப்பா ... சார் ... எங்கம்மாவும் எங்க கல்யாணத்துக்கு ஓ.கே. சொல்லிட்டாங்க! இது பத்தி எங்கப்பா உங்க கிட்ட மேல் கொண்டு இன்னைக்கு பேசுவார்ன்னு நினைக்கிறேன்."

"அப்படியா ..."

"கல்யாண விஷயம் கொஞ்சம் நேரானதும், சுகன்யா கிட்ட பேசலாம்ன்னு ரெண்டு நாளா வெய்ட் பண்ணிகிட்டிருந்தேன் சார்..."

"நல்லது தம்பி ..."

"மத்தபடி என் சுகன்யா மேலே எனக்கென்ன கோபம் ...சார்?"

"ம்ம்ம் ... உன் சுகன்யா ... ம்ம்ம்..."ரகுவின் குரலில் மீண்டும் சிறிய கேலி தொனிப்பதாக செல்வா நினைத்தான்.

"சாரி சார் ... தப்பா எடுத்துக்காதீங்க சார் ... கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்.."

"செல்வா ... ரொம்ப சந்தோஷமான விஷயத்தை நீ சொல்லியிருக்கேப்பா! சுகா இதை கேக்கணுமின்னுத்தான் காத்துக்கிட்டு இருக்கா!

"சரிங்க சார் ..."

"சுகா இன்னைக்கு அவங்க தாத்தா வீட்டுக்குப் போயிருக்கா; நான் அவ தாத்தா சிவதாணுவோட செல் நெம்பர் தரேன் ..."

"குடுங்க சார் ... ரொம்ப நன்றி சார் .."

"தம்பி ... இன்னும் நீங்க என்னை 'சார்' ... 'சார்' ன்னு வேத்து மனுஷனாத்தான் நெனைக்கிறீங்களா?"

"இல்லே சார் ... சாரி சார் ... இல்லே மாமா ... ரொம்ப தேங்க்ஸ் மாமா ..." செல்வா ஒரு மன நிறைவும், உதட்டில் புன்னகையுமாக பேசினான். 

சினம் கொண்ட மனம், சீக்கிரத்தில் குளிர்ந்து தன் இயல்புக்கு வருவதில்லை. சம்பத்தின் மனம் சினத்துக்கும் அடுத்த கட்டமான வஞ்சினத்தின் வசத்திலிருந்தது. ஏண்டி சுகன்யா, நீ என் கையைத் தொட்டு குலுக்க முடியாத அளவுக்கு எந்த விதத்துல நான் மட்டமா போயிட்டேன்? நான் கொஞ்சம் கருப்பா இருக்கேன். என் கையை நீ தொட்டா என் கருப்பு உன் கையில ஒட்டிக்குமா? என் உடம்பு கருப்பு உன் கண்ணை உறுத்திடிச்சா? அது என் தப்பு இல்லடி.

சுகன்யா ... நீ கொஞ்சம் செவப்புத் தோலோட பொறந்திருக்கே? ஒத்துக்கறேன். அதுல உன் ரோல் என்னா இருக்கு? என்னா ... உனக்கு கொஞ்சம் மார் சதை புடைச்சுக்கிட்டு நிக்குது. உன் வயசுல யாருக்குத்தான் குத்திக்கிட்டு நிக்கல? உனக்கு தூக்கி கட்டாமேயே நிக்குது. நீ கண்ணுக்கு அழகா இருக்கே? சரி .. சந்தோஷம்! அதுக்காக இப்படி ஒரு அல்டாப்பா உனக்கு? எல்லாம் இருந்தும் என்னாடி பிரயோசனம்? உனக்கு மேனர்ஸ் இல்லையே?

உனக்கு இன்னும் புள்ளை பொறக்காததாலே வயிறும், சூத்தும் ஷேப்பா இருக்குது? நீ ஸ்கூட்டர் ஓட்டறே? ஒத்துக்கறேன். உனக்கு படிப்பு இருக்கு? அப்புறம் உன் கிட்ட பணமும் இருக்கு? ஒத்துக்கறேன். நீ உன் சொந்த கால்லே நிக்கறே? உன் கையாலே சம்பாதிக்கறே! ஒத்துக்கறேன். அவ்வளதானேடி?

இது எல்லாத்துலயும் எனக்கு என்னடி கொறைச்சல்? நான் உனக்கு எந்த விதத்துலேயும் தாழ்ந்து போயிடலை! நான் உனக்கு அத்தைப் புள்ளை! நீ எனக்கு மாமன் பொண்ணு! நான் உன் முறை மாப்பிள்ளை. ஒண்ணு விட்ட முறைதான். ஒத்துக்கறேன். உன் கையைப் புடிக்கற முதல் உரிமை எனக்குத்தாண்டி. இதுக்கு மேல என்னாடி வேணும்? இதுக்கு மேல நான் உன்னைத் தொடறதுக்கு எனக்கு என்ன உரிமை வேணும்? ஒரு உறவுக்காரன் முன்னாடி எப்படி நடக்கணும்ன்னு உனக்குத் தெரியலையே?

நீ நெனைக்கறப்ப, கிழிச்சி குப்பை கூடையில தூக்கி போடறதுக்கு நான் என்னா காலண்டர்ல, காத்துல ஆடிகிட்டு இருக்கற தேதி ஷீட்டா? அப்படித்தான் நீ என்னை கிள்ளு கீரையா நெனைச்சுக்கிட்டு ரூமுக்குள்ள போயிட்டியா? இந்த குருட்டு கெழவி என்னடான்னா, உறவுக்காரன் கிட்ட பழகறது எப்படீன்னு உனக்கு சொல்லிக் குடுக்காம, காப்பி குடிக்கிறியாடான்னு எனக்கு உபசாரம் பண்ணி என்னை வெறுப்பேத்தறா? என் ஆத்தாக்காரி திமிர் பிடிச்ச உன்னை தன் மருமகளா கொண்டாரணும்ன்னு துடிச்சிக்கிட்டு இருக்கா?

உன் மூஞ்சியில இன்னும் ஒரு இன்னொசென்ஸ் இருக்கு? உன் கிட்ட இருக்கறதுலேயே அதுதாண்டி எனக்கு ரொம்பப் பிடிக்குது! இன்னும் உன் மேல என்னை மாதிரியான சரியான ஆம்பளை கை படலைடி. எவனும் உன்னை அவுத்துப் போட்டு, இழுத்து இழுத்து ரெண்டு இடி சரியா உன்னை இடிக்கலைடி. அந்த திமிர்ல, உன் ஒடம்பு துள்ளுதா? ஆட்டி ஆட்டி நடந்து காட்டறே? ம்ம்ம் ... தேவடியா முண்டை ... அலட்சியமா என்னைப் பாத்து, உன் கயவாளித்தனம் எனக்குப் புரியுதுன்னு சொல்ற மாதிரி ஒரு நமுட்டு சிரிப்பு சிரிச்சிட்டு, அகம்பாவமா எழுந்து போய், கதவை மூடிக்கிட்டியே? ஒரு பொட்டை நாய்க்கு இவ்வளவு கொழுப்பா? அந்த கதவை உடைச்சுக்கிட்டு உள்ள வர எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்?

இது உனக்கும் பாட்டன் வூடு. எனக்கும் ஒரு விதத்துல பாட்டன் வூடு. கிழப்பய அசந்து போய் சோஃபாவில கிடக்கிறான். குடும்பத்துல மூத்தவனாச்சேன்னு மரியாதை குடுக்கறேன். இல்லேன்னா இப்பவே அவனை எழுப்பி ஒரு பஞ்சாயத்து வெச்சிடுவேன்? ம்ம்ம் ... அவன் கையில என்னா இருக்கு? உன் ஆத்தாளையும், அப்பனையும் வூட்டை வுட்டு தொரத்திட்டமே; கடைசி காலத்துல் எவன் எனக்கு தண்ணி ஊத்துவான்னு கிறங்கி போய் கிடக்கிறான் அவன். செத்த பாம்பை அடிச்சு என்னா பிரயோசனம்?

இதுவரைக்கும் என்னை வேணாங்கற பொண்ணுங்க கிட்ட நான் எந்த அழிச்சாட்டியமும் பண்ணதில்லே. சாரின்னு எவளாவது சொன்னா, நானும் ஜெண்டில் மேனா கூலா போயிகிட்டே இருந்திருக்கேன். ஆனா நீ, கெழவி கூட இருக்காங்கற தைரியத்துல என்னை எட்டி உதைச்சுட்டே இல்லே? இதை என்னால பொறுத்துக்க முடியாதுடி? நான் பொறுத்துக்க மாட்டேன்? என்னை நீ தேவையில்லாம சீண்டிப் பாத்துட்டே? அதுக்குண்டானதை நீ அனுபவிச்சித்தான் ஆகணும்.

நான் துரியோதனன். துரியோதனன் இளவரசன்டி. மகாபாரதம் தெரியுமா உனக்கு? நானும் ஒரு ராஜகுமாரன்தாண்டி. திரௌபதி துரியோதனனை அலட்சியமா பாத்து சிரிச்சா. நீ என்னைப் பாத்து கிண்டலா சிரிச்சுட்டுப் போறே? நெறைஞ்ச சபையில அவ துணியை அவன் அவுத்தான். அதுக்கப்புறம் பதினெட்டு நாள்ல ஊரே அழிஞ்சுது. அதெல்லாம் சரிதான்!

நான் ஒரு ரோஷமான ஆம்பிளை. என் ஆம்பிளை ஈகோவை நீ குத்திப் பாத்துட்டே? அந்த குத்தலை என்னால இப்ப தாங்கிக்க முடியலை. என் மனசு தவிக்குது. அந்த மாதிரி நீயும் தவிக்கணும். தவிச்சு தவிச்சு அந்த வலியை நீயும் என்னை மாதிரி அனுபவிக்கனும்.

நான் நினைச்சா ... பத்து நிமிஷத்துல என்னால உன் அழகை அழிச்சு உன் திமிரை அடக்க முடியும். ஆனா ஆயிரம் இருந்தாலும் நானும் படிச்சவன். சமூகத்துல நல்ல அந்தஸ்துல இருக்கற குடும்பத்தை சேர்ந்தவன். உன்னை அவமானப்படுத்தறதுக்காக பயித்தியக்காரன் மாதிரி ஒண்ணு கிடக்க ஒண்ணு புத்திக்கெட்டுப் போய் பண்ணிட மாட்டேன். நான் புத்திசாலி. உன் உடம்புக்கு எந்த தீங்கும் நான் பண்ணப் போறதில்லே. நீ உன் மனசால துக்கப்படணும். நீ உன் மனசுக்குள்ளவே வெளியில சொல்ல முடியாம அழுவணும்.

நான் நல்லவனுக்கு நல்லவன். கெட்டவனுக்கு கெட்டவன். நான் ஒரு விதத்துல கயவாளிதான். என் கயவாளித்தனத்தை நீயும் பாக்கணும். அடியே சுகன்யா, உன்னை என்னால தொட்டுப்பாக்க முடியலை; பரவாயில்லை. என்ன ஆனாலும் சரி... உன்னை அழவைக்காம நான் விடப்போறதில்லை... என்னாலத்தான் நீ அழறேன்னும் உனக்குப் புரியணும். என்னச் செய்யலாம்? சம்பத்தின் மனம் சக்ர வீயூகம் வகுக்க ஆரம்பித்தது. 




காப்பி கொண்டாறேன்னு உள்ளப் போனக் கிழவியை காணோம்? எவ்வளவு நேரம் இன்னும் நான் மோட்டு வளையைப் பாத்துக்கிட்டு உக்காந்து இருக்கறது? இங்க இருக்கற ஒவ்வொரு நிமிஷமும் என் இரத்தம் அழுத்தம்தான் அதிகமாகுது? ஒரு தம்மாவது அடிச்சுட்டு வரலாமா? சம்பத் யோசித்துக்கொண்டிருந்தான்.

"என்னடா சம்பத்து ... கனகா எங்கடா?" சிவதாணு தன் கோழித் தூக்கத்திலிருந்து விழித்தார்.

"கிச்சன்ல இருக்காங்க; காஃபி போட போயிருக்காங்க தாத்தா.."

"உக்காரு நீ ஏன் எழுந்துட்டே? இதோ நான் ஒரு நிமிஷம் பாத்ரூம் போயிட்டு வந்துடறேன்.."

"ம்ம்ம் ..."

சிவதாணு கூடத்திலிருந்து நகர்ந்ததும், செண்டர் டேபிளின் மேலிருந்த கேலக்ஸி மெல்ல சிணுங்கியது. சிணுங்கி அடங்கியது. மீண்டும் சிணுங்கத் தொடங்கியது. கிழவன் - கிழவிக்கும் போன் வருது? லேடஸ்ட் மாடல் வெச்சிருக்கான் ... பணம் கொழுத்துப் போயிருக்குது கிழவன் கிட்ட! பேத்தி துள்ளி விளையாடறா? எடுத்துப் பாக்கலாமா? வந்த எடத்துல நமக்கு எதுக்கு வீண் வம்பு?

வேலிப் பக்கம் ஒண்ணுக்கு அடிக்கப் போய்தான் ஒரு ஓணாணை நம்ம ஜீன்ஸூக்குள்ள வுட்டுக்குட்டு அவஸ்தை படறேன்? இப்ப இந்த செல்லை எடுத்துட்டு இன்னொரு ஓணாணையும் உள்ள் ஏன் வுட்டுக்குவானே? செல் விடாமல் மீண்டும் மீண்டும் சிணுங்கவே ... சம்பத் தயக்கத்துடன் செல்லை எடுத்து பேசினான்.

"ஹெலோ ..."

"மிஸ்டர் சிவதாணு சாரோட நெம்பர் தானே?"

"ஆமாம் நீங்க யாரு? சம்பத் அலட்சியமாகப் பேசினான்.

"ரகு ...சார்கிட்டேயிருந்து இந்த நம்பர் கிடைச்சுது ... "

"அது சரிய்யா ... நம்பர் நீங்க யாருக்கிட்ட வாங்கினீங்கன்னா நான் கேக்கிறேன்? ... உங்களுக்கு என்ன வேணும்?"

"சார் ... நீங்க என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டீங்கன்னு நெனைக்கிறேன்?"

"யோவ் இங்க யாருக்கும் இன்ஸூரன்ஸ் பாலிஸில்லாம் தேவையில்லை ... ஒருத்தன் மாத்தி ஒருத்தன் சும்மா தொந்தரவு பண்ணாதீங்க .."

"சார் ... நான் சொல்றதை கொஞ்சம் முழுசா கேளுங்களேன் ..."

"சொல்லுயா ... உனக்கு யாருகிட்டே பேசணும்?" சுகன்யா மீது இருந்த எரிச்சலை அவன் இவனிடம் காண்பித்தான்.

"சுகன்யா அங்க வந்திருக்கறாதா ரகு சொன்னார். சுகன்யா இருந்தா அவளை ... இல்லே அவங்களை கூப்பிடுங்களேன்...எனக்கு அவங்க கிட்டத்தான் பேசணும்.."

"சுகன்யா இங்கதான் இருக்கா ... நீங்க...?" சுகன்யாவின் பேரைக் கேட்டதும், சம்பத்தின் காதுகள் சிலிர்த்துக் கொண்டன. சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துக்கொண்டான். குரலை தாழ்த்தி பேசினான்.

"நான் செல்வா ... தமிழ் செல்வன் பேசறேன் ... நான் சுகன்யாவோட குளோஸ் ஃப்ரெண்ட் .." செல்வா தயங்கி தயங்கி பேசினான்.

"அப்படியா ... சாரி சார்... இன்னும் கூட அன்சொலிசிட்டட் கால்ஸ் வருது பாருங்க... அதான் நான் உங்களை தப்பா நெனைச்சுட்ட்டேன்" சம்பத் பம்மினான்.

சம்பத்துக்கு சுர்ரென்று ஏறியது ... அடியே சுகன்யா ... என்னமோ ஆம்பிளை காத்தே உன் மேல படாத மாதிரியும், நீ என்னமோ பெரிய பத்தினி மாதிரியும் என் கிட்ட பத்து நிமிஷம் முன்னேதான் ஃபிலிம் காட்டினே? "ங்கோத்தா" உனக்கு குளோஸ் ஃபிரண்டு வேற இருக்கானா? என் அம்மா சொன்னது சரியாதான் இருக்கு? ஜோக்கர் இல்லாம இவ்வள நேரம் உக்காந்து இருந்தேன். இனிமேல எடுக்கற சீட்டெல்லாம் ஜோக்கர் தான்.

நல்லா தெரிஞ்சுக்கோ! சம்பத்துக்கு கொஞ்ச்சம் கேப்பு கிடைச்சா போதும். வெச்சிடுவான் அவன் ஆப்பு... இப்ப வெக்கிறேண்டி உனக்கு நீட்டா ஆப்பு! டீ.ஆர் பாணியில் சிலிர்த்து எழுந்தான் சம்பத்.

"சார் ... " செல்வாவின் குரல் இப்போது சற்றே உயர்ந்தது.

"மிஸ்டர் செல்வா ... சுகன்யா ஈஸ் நாட் ஃபீலிங் வெல் ... ஷீ இஸ் டேக்கிங் ரெஸ்ட் ... அவங்க எழுந்ததும் நான் உங்களை கூப்பிட சொல்லட்டுமா?

"சுகன்யாவுக்கு உடம்பு சரியில்லையா? அவளுக்கு என்னாச்சு ... ரகு இதைப் பத்தி என் கிட்ட ஒண்ணும் சொல்லலியே? அவ கிட்ட நான் கொஞ்சம் அர்ஜண்டா பேசியே ஆகணும் ... கொஞ்சம் நீங்க கூப்பிடுங்களேன் அவளை ..."

சம்பத் ஒரு வினாடி திகைத்துத்தான் போனான். சுகன்யாவோட மாமனுக்கு வேண்டியவனா இவன்? சுகன்யாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னதும், அப்படியே துடிச்சுப் போறான். அதுக்கு மேல சுகன்யாவுக்கு என்னமோ தாலி கட்டிட்டவன் மாதிரி "அவங்கறான் ... இவங்கறான்" நிஜமாவே இந்த செல்வா யாரா இருப்பான்? நிதானமா பேசி விஷயத்தை தெரிஞ்சுக்கணும்.

"மிஸ்டர் செல்வா ...நீங்க ரொம்பவே உரிமையோட சுகன்யாவை "அவ" "இவ"ன்னு பேசறதைப் பாத்தா ... நீங்க அவங்க ப்ரெண்ட் மட்டும் இல்லேன்னு தோணுதே?"

"ஆமாம் சார் ... நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப் போறோம் ..." சொன்னபின் செல்வா தன் நாக்கைக் கடித்துக்கொண்டான். சுகன்யாகிட்ட பேசணுங்கற அவசரத்துல, என் கூட பேசறது யாருன்னு கேக்காம நான் பாட்டுக்கு பேசிகிட்டே போறேன்? நான் மடையன்னு சுகன்யா சொல்றது சரியாத்தான் இருக்கு ... செல்வா தன் கன்னத்தை சொறிய ஆரம்பித்தான்.

"ம்ம்ம் ..." சம்பத் ஒரு வினாடி யோசிக்க ஆரம்பித்தான்.

ஆப்பை வெச்சுட வேண்டியதுதானா? டேய் சம்பத் ஒரு தரம் முடிவெடுத்ததுக்குப் பின்னாடி என்னடா யோசனை? வெக்கறதை வெச்சுட்டு, கிழவி காப்பி குடுத்தா குடிச்சுட்டு சீக்கிரமா எடத்தை காலி பண்ணுடா.. சுகன்யா ... ஆட்டம் முடிஞ்சு போச்சு; ஆப்பை வெச்சுடறேன்; ஆனா நேரடியா உனக்கு இல்லே? உன் தமிழ்செல்வனுக்கு வெக்கிறேன்... அவன் அந்த ஆப்பை உருவி உனக்கு வெப்பான் ... அப்பத் தெரியுண்டி உனக்கு சம்பத்து யாருன்னு? அவன் மனசு அவனை அவசரப்படுத்தியது.

"ஆமாம் நீங்க யாரு? இவ்வளவு தூரம் என்னை கேள்வி மேல கேள்வி கேட்டு ஸ்கிரீனிங்க் பண்றீங்க? செல்வாவின் குரல் சற்றே எரிச்சலுடன் வந்தது.

"நானா?" கேள்வியை கேட்டுவிட்டு பதில் சொல்லமால் வேண்டுமென்றே கிண்டலாக சத்யராஜ் பாணியில் சிரிக்க ஆரம்பித்தான் சம்பத்.

"உங்களைத்தான் கேட்டேன் ... பதில் சொல்லாமா சிரிக்கிறீங்க?" செல்வா தன் பொறுமையை இழக்க ஆரம்பித்தான்.

"சுகன்யா எத்தனை பேரை கல்யாணம் பண்ணிக்கப் போறான்னு நெனைச்சேன்! ... சிரிப்பை அடக்க முடியலை! ... அதான் சிரிச்சேன்! ..." சம்பத் தன் ஆப்பை மெதுவாக கூராக்க ஆரம்பித்தான்.

"மிஸ்டர் ... நீங்க என்னப் பேசறீங்க? இது சிவதாணுப்பிள்ளையோட நெம்பர்தானே? ராங்க் நம்பர் ஒண்ணுமில்லேயே? சுகன்யாவோட தாத்தா வீட்டுல யாரு இப்படி சுகன்யாவைப் பத்தி தப்பா பேசுவாங்க? செல்வாவால் தன் காதுகளை நம்ப முடியவில்லை.

"தமிழ் செல்வா ... நீங்க சரியான நெம்பர்லதான் .. அதுவும் சரியான ஆள் கிட்டதான் பேசறீங்க ... என் பேரு சம்பத்குமார் ... என்னை ஆசையா எல்லாரும் சம்பத்துன்னு கூப்பிடுவாங்க; சுகன்யாவோட அத்தைப் பையன் நான் ... சுகன்யாவோட முறை மாப்பிள்ளை கிட்டத்தான் பேசிகிட்டு இருக்கீங்க.." கூராக்கிய ஆப்பில் சிறிது தேங்காய் எண்ணையையும் பூச ஆரம்பித்தான்.

"சார் ... ஆனா நீங்க சுகன்யாவைப் பத்தி தப்பா பேசற மாதிரி எனக்கு தோணுது?"

"என்னா நான் தப்பா பேசிட்டேன் இப்ப? கேக்கற உனக்கே கோவம் வருதுல்லே? சுகன்யாவை அவ ஸ்கூல் டேஸ்லேருந்தே என் மனசுக்குள்ள வெச்சிக்கிட்டு மருகிக்கிட்டு இருக்கேனே? அது தப்பாய்யா?"

"ம்ம்ம்..." செல்வா முனகினான்.

"என்னப் பண்றது? நான் கொஞ்சம் கருப்பா பொறந்துட்டேன் ... தமிழ் நாட்டுல கருப்பா இருக்கறவன் தாய்யா பெரிய மனுஷனா, வெள்ளையும் சள்ளையுமா உலாவறான். சுகன்யாகிட்ட செத்த நேரம் முன்னாடிதான் கிளாட் டு மீட் யூன்னு கை நீட்டினேன். சுகன்யாவுக்கு என் கருப்பு கையை புடிச்சு குலுக்கறதுக்கு இஷ்டமில்லே?

"சார் ... நீங்க சுகன்யாவை கூப்பிடுங்க ப்ளீஸ் ..."

"கண்டிப்பா கூப்பிடறேன் ... நீங்க தாராளமா உங்க லவ்வர் கிட்ட பேசுங்க ... நான் சொல்றதை கொஞ்சம் ஒரு பத்து செகண்ட் கேளுங்க.."

"ம்ம்ம் .." செல்வா இது என்னடா இது ஒரு பைத்தியக்காரன் கிட்ட மாட்டிக்கிட்டேன் போல இருக்கே ... என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தான்.

"நடுவுல என் தங்கம் ... காலேஜ் அது இதுன்னு வெளியூர்லல்லாம் போய் படிச்சாளா? மெட்றாஸ்ல்ல வேலை வேற கிடைச்சிடுத்து ... இப்ப நம்பளைப் பாத்தா பாக்காத மாதிரி ஒதுங்கறா ... சார்... நீங்களே சொல்லுங்க இது ஞாயமா? நான் எதாவது தப்பா சொல்றேனா? எல்லாத்துக்கும் மேல, என் கிட்டயே, நீங்க என் மாமன் பொண்ணை கட்டிக்கப்போறேன்னு நோட்டீஸ் குடுக்கறீங்க ... இது ரைட்டா?

"அயாம் சாரி மிஸ்டர் சம்பத் ... ஆனா இதுல நான் என்னப் பண்றது? ... சுகன்யா விருப்பம் தானே இதுல முக்கியம்? இப்ப உங்க கிட்ட என்ன சொல்றதுன்னு எனக்கு புரியலை?"

"நான் தெளிவா சொல்றேன் நைனா.. நீ நல்லா கேட்டுக்கோ ... காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் அடிச்சுட்டு போனானாம் ... இந்த கதை உனக்குத் தெரியுமா? எட்டு வருசமா நான் அவளை காதலிக்கறேன்! .. நேத்து வந்த நீ என் சுகன்யாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு சீர் வரிசை வாங்கிக்கிட்டு போவே? நான் என்னா உன் பஸ்ட் நைட்ல பக்கத்துல நின்னு வெளக்கு புடிக்கவா?" சம்பத் தன் ஆப்பை அழுத்தமாக செருகினான்.

"ம்ம்ம் ...."

"என்னம்ம்மா கண்ணு ... சத்தத்தையே காணோம் ...? ஹார்ட் அட்டாக்கா? போய் கீய் தொலைச்சுடாதே? சுகன்யா அப்புறம் ரொம்ப வருத்தப்படப் போறா?"

"மிஸ்டர் சம்பத் ..." செல்வாவின் குரல் நிஜமாகவே அவன் தொண்டையிலிருந்து எழவில்லை..

"கடைசியா ஒரே ஒரு வார்த்தை ... உன் தோலு என்னா செவப்பா? ... இல்லே கருப்பா? சுகன்யாவோட அப்பனும் ஆத்தாளும் அவளை எனக்கு கட்டி குடுக்க மாட்டேன்னு சொல்றாங்களே? அதுக்கு காரணம் நீதானா?



"பிளீஸ் .. உங்களால சுகன்யாவை கூப்பிட முடியுமா .... முடியாதா?"

"டேய் ... செல்வா ... நான் என்னா மாமா வேலையை பாக்கறேன்? சுகன்யாவை கூப்பிட்டு உன் கையில தாரை வாத்து குடுக்கறதுக்கு? மாசம் முழுசா சொளையா ஒரு லட்சம் சம்பாதிக்கற எஞ்சினீயர்டா! அமெரிக்காவுலேருந்து வாடா வாடான்னு நாலு கம்பெனிக்காரன் கூவுறான்! இப்ப லைனை கட் பண்ணு ... ரெண்டு நிமிஷம் கழிச்சி திருப்பியும் போடு! கிழவன் சிவதாணு கக்கூஸுக்கு போயிருக்கான்! வந்து சுகன்யாவை உனக்கு கூட்டி குடுப்பான் ... வெச்சிட்டா" சம்பத் செல்வாவின் பதிலுக்கு காத்திராமல் லைனை கட் பண்ணி ... ஞாபகமாக செல்வாவின் நம்பரை நோட் பண்ணிக்கொண்டு, செல்லை செண்டர் டேபிளின் மேல் வைத்தான்.

ஆப்பு அழகா எறங்கிடுச்சு ... வெச்ச எனக்கும் வலிக்கல ... வெச்சிக்கிட்டவனுக்கும் வலிக்கலை. நேரம் போவ போவ நான் போட்ட பிட்டை திருப்பி திருப்பி அந்த பைத்தியக்கார செல்வா மனசுக்குள்ளவே ரீவைண்ட் பண்ணிப் பாப்பான்... அப்ப வலிக்கும் ... சம்பத் தன் மனசுக்குள் திருப்தியுடன் சிரித்துக்கொண்டான். 



சுகன்யா... 33


'சுகா, நீ லஞ்ச்க்கு என்னப் பண்ணப் போறேம்மா?'

திங்கள் காலை, சுந்தரி தன்னுடைய ஸ்கூலுக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தாள். ஊதா நிற புடவையும் , அதற்கேற்ற மேச்சிங் ரவிக்கையும் அணிந்து, நிலைக்கண்ணாடியின் முன் நின்று, தன் புடவை மடிப்புகளை சீராக்கிக் கொண்டிருந்தாள். கைகளில் அணிந்திருந்த வளையல்கள் தங்கள் இருப்பை கிணுகிணுத்து, அவள் காதுகளில் இனிமையாக ஒலித்துக்கொண்டிருந்தன.

"நான் தாத்தா வீட்டுக்கு கிளம்பிக்கிட்டு இருக்கேன். ரெண்டு நாளைக்கு அங்கேயே இருக்கப் போறேன். நீ வீட்டைப் பூட்டிக்கிட்டு உன் சவுகரியப்படி எப்ப வேணா கிளம்பும்மா...' சுகன்யா தனக்குத் தேவையான துணிகளை ஒரு சிறிய ட்ராவல் பேகில் அடுக்கிக்கொண்டிருந்தாள்.



'என்னடி ... இது? வருந்தி வருந்தி கூப்பிட்டாலும், யார் வீட்டுக்கும் போகாதவ, இன்னைக்கு நீயா வெளியில கிளம்பறேங்கறே? பேத்திக்கு ரொம்பத்தான் பாசம் பொங்குது தாத்தா மேலே?"

'அதான் புரியலைம்மா ... அவங்க ரெண்டு பேரு கூடவே இருக்கணும் போல இருக்கும்மா எனக்கு..?

'சரி சரி ... இந்த ஆட்டமும் பாட்டமும் எத்தனை நாளைக்குன்னு பாக்கிறேன்! ... அப்ப வீட்டு சாவியில ஒரு செட் வெச்சுக்கறியா.. நீ?

'ம்ம்ம் ... மாமா எங்கே?

'ரகு, விடியற்காலையிலேயே புறப்பட்டு பாண்டிச்சேரிக்கு 'ஆஃபீஸ் விசிட்டுக்கு'ன்னு போயாச்சு. புதன் கிழமை ஈவினிங்தான் வரேன்னு சொல்லிட்டு போயிருக்கான். ஸ்கூட்டர் சும்மாதானே துருப்புடிக்குது வரண்டாவுல... சுகன்யாவை, இங்கே இருக்கற வரைக்கும், அதை எடுத்து ஓட்ட சொல்லுன்னு சொல்லிட்டுப் போயிருக்கான் உன் மாமன் ... நீ என்னை என் ஸ்கூல்ல டிராப் பண்ணிட்டு, வண்டியில பெட்ரோல் இருக்கான்னு செக் பண்ணிக்க; அப்படியே தாத்தா வீட்டுக்குப் போயிடேன்..."

'ம்ம்ம் ... அப்பா போன் பண்ணா என்னச் சொல்ல?'

'நீ தூங்கிக்கிட்டிருக்கும் போதே என் புருஷன் கிட்ட பேசவேண்டியதெல்லாத்தையும் நான் பேசி முடிச்சிட்டேன்! எங்க பேச்சாலே நீ டிஸ்டர்ப் ஆக கூடாது பாரு!"

சுகன்யா தன் தாயை சட்டென திரும்பி பார்த்தாள். சுந்தரி தன் கழுத்திலும், முதுகிலும் பவுடரை பூசிக்கொண்டிருந்தவள் நமட்டு சிரிப்புடன் அவளை ஓரக்கண்ணால் பார்த்தாள். சுந்தரியின் தலையில் மல்லிகைப்பூ கமகமத்துக்கொண்டிருக்க, கழுத்திலும், கையிலும் நேற்று மாமியார் போட்ட நகைகள் மின்னிக்கொண்டிருந்தன.

'ஏம்மா ... நேத்தே உன் கிட்ட "சாரி" சொல்லிட்டேன்!. அப்புறம் ஏன் இப்படியெல்லாம் பேசறே?" சுகன்யா தன் தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவள் முதுகில் தொங்கினாள்.

'விடுடி ... ஸ்கூலுக்கு கிளம்பறேன் ... கட்டிப்புடிச்சி வேணுமின்னே கட்டிக்கிட்டு இருக்கற காட்டன் புடவையை கசக்கறே?

'நீ என்னைப் பாத்து விஷமமா சிரிச்சா ... கிண்டலா பேசினா ... நானும் பதிலுக்கு பதில் அப்படித்தான் பண்ணுவேன்!

"போதுண்டி செல்லம் ... கழுத்து வலிக்குதும்மா.." சுந்தரி பெண்ணிடம் கெஞ்சினாள்.

"அம்மா ... நான் ஒண்ணு சொல்லட்டா ... கோச்சிக்க மாட்டியே?" சுகன்யாவின் கண்களில் குறும்பு கொப்பளித்துக்கொண்டிருந்தது.

"ம்ம்ம் ... எதுவாயிருந்தாலும் சீக்கிரம் சொல்லித் தொலை..."

'அப்பா வீட்டுக்கு வந்ததுலேருந்து உன் மூஞ்சே ஒரு பொலிவா இருக்கும்மா ... நாளுக்கு நாள் உன் அழகு கூடிக்கிட்டே போகுது; இன்னைக்கு நம்ம வீட்டு தோட்டத்து மல்லிப்பூ வேற உன் தலையில ஏறிக்கிச்சா, நீ வாசனையா இருக்கேம்ம்மா.." சொல்லிய சுகன்யா தாயின் பின் கழுத்தை முகர்ந்து நீளமாக தன் மூச்சை இழுத்தாள்.

பெண்ணின் பேச்சால், சுந்தரியின் உடல் சிலிர்த்து, அவள் முகம் சட்டென சிவந்து, அதில் ஒரு பெருமிதம் குடியேறியது.

'சுகா ரொம்ப வழியாதே! எனக்கு நேரமாச்சும்மா ... கிளம்புடிச் செல்லம்; டிபனுக்கு இட்லி, குருமா பண்ணியிருக்கேன்; இருக்கற குருமாவை ஒரு டப்பாவிலே போட்டுக்க; உனக்கு நாலு இட்லிதான் வெச்சிருக்கேன் ... அதையும் எடுத்துக்கோ; தாத்தா வீட்டுலயே போய் சாப்பிட்டுக்கோ..."

வாசலை நோக்கி வேகமாக நடந்த சுந்தரி, நடையில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரை, தள்ளிக்கொண்டுப் போய் தெரு வாசலில் நிறுத்தி சீட்டின் மேல் படிந்திருந்த தூசைத் துடைக்க ஆரம்பித்தாள்.

"ஒரு நிமிஷம் நில்லும்மா.. டிரஸ் மாத்திக்கிட்டு இதோ வந்துட்டேன்..."

வீட்டுக் கதவை பூட்டிக்கொண்டு வெளியில் வந்த, சுகன்யாவின் முகத்தில் பழுப்பு நிற கூலிங் கிளாஸ் ஏறியிருந்தது. நெற்றியில் பிந்தி காணமல் போயிருந்தது. அவள் ஆழ்ந்த சாம்பல் நிற ஜீன்சும், இள நீல நிற ஸ்லீவ்லெஸ் டாப்ஸும் அணிந்திருந்தாள். தோளிலிருந்து இறங்கிய சதைப்பிடிப்பான கைகளின் வெண்மை இளம் வெயிலில் மினுமினுக்க, காலிலிருந்த வுட்லேண்ட்ஸ் லெதர் ஷூ டக் டக்கென ஒலிக்க, தலை முடியை குதிரைவால் கொண்டையில் இறுக்கியிருந்தாள் அவள்.

'ஏண்டி ... இந்த டிரெஸ்சைப் போட்டுக்கிட்டு போறியே; உன் தாத்தா எதாவது நினைச்சுக்கப் போறார்டீ...??'

தன் பெண்ணின் தொடைகளோடு ஒட்டிக்கொண்டிருந்த இறுக்கமான ஜீன்சையும், அந்த இறுக்கம் அவள் இடுப்பிலும், இடுப்புக்கு கீழும் கொண்டு வந்த கவர்ச்சியையும், டாப்ஸில் மெலிதாக அசையும் அவள் மார்புகளையும் கண்டு, இந்த பொண்ணு ஏன் எதையும் ஒரு தரம் சொன்னா புரிஞ்சுக்க மாட்டேங்கறா... ? சற்றே அதிர்ந்தவளாக சுந்தரி முணுமுணுத்தப் போதிலும் தன் பெண்ணின் அழகு அவள் மனதுக்குள் ஒரு கர்வத்தையும் கொடுக்க, தன் உதடுகளை ஒரு முறை அழுந்த கடித்துக்கொண்டாள்.

'நீ சும்மா இரும்மா! எல்லாத்துக்கும் பயப்படுவே! வண்டி ஓட்டறதுக்கு ஜீன்ஸ்தான் சவுகரியம்! நீ ஜீன்ஸ் போட்டா வேணா உன் மாமனார் ஏதாவது நெனைச்சுப்பார். நான் பேத்தி போட்டுக்கிட்டா தாத்தா ஒண்ணும் சொல்ல மாட்டார்.." சுகன்யா சிரித்துக்கொண்டே பட்டனை அழுத்தி ஸ்கூட்டரை விருட்டென கிளப்பினாள்.

"ஆமாண்டி ... எனக்கு ஜீன்ஸ் ஒண்ணுதான் குறைச்சல்? .

"அம்மா ... நிஜம்மா சொல்றேன்... நீ மட்டும் ஜீன்ஸ் போட்டுக்கிட்டு ரோடுல நடந்து போ ... கும்பகோணம் பசங்க உன் பின்னாடி லைன்ல நிப்பானுங்க ..." சுகன்யா ஓவென சிரித்தாள்.

'சுகா, வாயை மூடிக்கிட்டு ரோடைப்பாத்து வண்டியை ஓட்டுடி நீ .." சுந்தரி சலித்துக்கொண்டாள்


சிவதாணு பிள்ளை, தன் வழக்கமான யதாஸ்தானத்தை தவிர்த்து, காம்பவுண்டு சுவரில் சாய்ந்து நின்று, காலை வெயில் முகத்தில் அடிப்பதையும் பொருட்படுத்தாமல் கிழக்கை நோக்கிக் கொண்டிருந்தார். யந்திரமாக அவர் மனம் சிவ நாமத்தை உச்சரித்துக்கொண்டிருந்தது.

'என்னங்க வெயில்ல என்னப் பண்ணறீங்க ... கல்லை அடுப்புல போடட்டுமா?' கனகா அவரருகில் சென்று நின்றாள்.

'இப்பத்தாண்டி வந்து நின்னேன்!... குழந்தை வராளான்னு பாக்கிறேன் ...'

'எட்டு ஆவறதுக்குள்ள பசி ... பசின்னு ஏலம் போடுவீங்க? ...' கனகா அவர் தோலை மெதுவாக உரிக்கத் தொடங்கினாள்.

"செத்த இருடி ... சுகன்யா வந்துடட்டும் ...?" அவர் அடிவயிறு கூவிக்கொண்டிருந்தது.

"வர்றவ நேத்து மாதிரி வீட்டுக்குள்ள வருவா ... நீங்க நிழலா வந்து சேர்ல உக்காருங்க... எதுலயும் எதிர்பார்ப்பே இருக்கக்கூடாதுன்னு பண்ற உபதேசம் எனக்கு மட்டும்தான்!" கனகா அவர் கையைப்பிடித்து அசைத்தாள்.

'சிவ சிவா .. சும்மா இரேண்டி கொஞ்ச நேரம் ...என்னை அதிகாரம் பண்ணிக்கிட்டே இருக்கணும் உனக்கு?" மெதுவாக நடந்து ஈஸிசேரில் உட்க்கார்ந்து கொண்டார்.."

"ம்ம்ம் ... என்னைச் சொல்லிட்டு நீ ஏன்டீ இப்ப வெயில்ல நிக்கறே? ... அப்புறம் தலை சுத்துதுன்னு புலம்பறதுக்கா?"

"பேத்தி வரலேன்னுதானே நின்னுகிட்டு இருந்தீங்க ...?"

"ம்ம்ம் ... "

"நீங்க செய்த வேலையை நான் கொஞ்ச நேரம் பாக்கறேனே?"

"அப்ப உனக்கும் சுகன்யா எப்ப வருவான்னு இருக்குதானே?"

"ம்ம்ம் ..."

"அப்புறம் என்னை ஏன் கிண்டலடிச்சே?"

"மனசு கேக்கலைங்க ... நேத்து அவ போனதுக்கு அப்பறம் ... வீடே வெறிச்சுன்னு ஆயிடுச்சி" கிழவி முனகினாள். முனகியவள் அவர் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.

"ஆமாம் ... இந்த வாரம் குமார் வந்தான்னா, மெட்ராஸ்ல வீடு பாத்துட்டானான்னு கேளுடி ... குழந்தை இருக்கற வீட்டை காலிபண்ணிட்டு நம்ம கூடவே வந்து இருக்கட்டும்..."

"ஆகற கதையைத்தான் நீங்க எப்பவும் பேச மாட்டீங்களே?" கனகா கிழவரின் இடது காலை அமுக்கிவிட ஆரம்பித்தாள்.

"அப்படித் தப்பா என்னத்தைடி இப்ப நான் சொல்லிட்டேன்?"

"குழந்தை கல்யாணத்தை பண்ணிக்கிட்டு நம்ம கூட இருப்பாளா?"

"என்னடி சொல்றே நீ ... "

"அப்ப நேத்து சுந்தரி சொல்லிக்கிட்டிருந்தது உங்க காதுல விழலையா"

"நீயும் உன் மருமவளும் என்னமோ குசுகுசுன்னு ரகசியம் பேசிக்கிட்டு இருந்தீங்க ... கேட்டா, பொம்பளைங்க ஏதோ எங்களுக்குள்ள பேசிக்கிறோம்பீங்க ... நான் எதுக்கு குறுக்குல; சிவ சிவான்னு அப்படியே கூடத்துல ஓரமா கிடந்தேன்."

"இது வரைக்கும் நான் உங்க பேச்சைக் கேட்டுக்கிட்டு இந்த வூட்டுல குப்பை கொட்டிட்டேன்."

"ம்ம்ம் ... இதுக்கு மேல வேற எங்கே போய் பெருக்கி மொழுகப் போறே?"

"இந்த வாய்தான் வேணாம்ன்னு சொல்றேன் நான்..?

"சரிடி நீ விஷயத்துக்கு வா?"

"சுகன்யா, தன் கூட வேலை செய்யற ஒரு பையனை ஆசைப்படறாளாம்..."

"ம்ம்ம் ..."

"அந்தப்பையன் நம்ம ஜாதியில்லையாம் ..."

"சிவ சிவா; சுகன்யா ஜாதகத்துல ஏழுல ராகு உக்காந்து இருக்கான்னு உனக்கு நான் எப்பவோ சொல்லி வெச்சிருக்கேன்டி..."

"உங்க ஜாதகத்துல ரெண்டுல சனி படுத்துக்கிட்டு இருக்கான்னும் சொல்லி இருக்கீங்க"

"ஏண்டீ... எனக்கே நீ ஜோஸ்யம் கத்துக்குடுக்கறீயா?"

"சிவ சிவா; அந்த தப்பை நான் பண்ணுவனா; உங்களுக்கு யாரு எதை கத்துக்குடுக்க முடியும்?"

"ம்ம்ம்ம் ... அப்புறம்.."

"அதனாலத்தான் உங்க திருவாயைக் கொஞ்சம் மூடிக்கிட்டு இருங்கோன்னு சொல்றேன் ... இருபத்தஞ்சு வருஷத்துக்கு அப்புறம் என் மருமவ என் வூட்டுக்கு வந்திருக்கா ..."

"புரியுதுடி ..."

"கடைசிக் காலத்துல அவ கையால ஒரு வாய் தண்ணி குடிச்சிட்டு மூச்சை வுடணும்ன்னு பாக்கிறேன் நான்.."

"சிவ சிவா; நான் மட்டும் என்னா கடைசீல பால் பாயசம் குடிச்சிட்டு மூச்சை வுடணும்ன்னா சொல்றேன்?"

"இந்த ராகு அங்க இருக்கான்; கேது இங்க இருக்கான்ற கதையெல்லாம் ஒரு ஓரமா மூட்டைக்கட்டி வெச்சுட்டு, கல்யாணத்துக்கு கூப்பிட்டாங்களா; ஒழுங்கு மரியாதையா பெரிய மனுஷனா சபையில உக்காந்தமா; அந்த குழந்தைங்க தலையில ரெண்டு அட்சதையை போட்டமா; மனசார ஆசீர்வாதம் பண்ணமான்னு இருங்க; புரியுதா நான் சொல்றது?"

"அப்புறம் ..."

"அந்த புள்ளையைப் பெத்தவளும், ஜாதி ஜாதிங்கறளாம் ... அவ ஜாதகத்துலேயும் வாக்குல சனியோ என்ன எழவோ தெரியலை ... இந்த கல்யாணம் கூடாதுன்னாளாம்."

"சிவ சிவா;"

"புள்ளை சுகன்யாவைத்தான் பண்ணிக்குவேன்னு ஒத்தைக்கால்லே நிக்கறானாம் ... ரெண்டு மூணு நாள்லே அந்த பையனை பெத்தவங்க கும்பகோணத்துக்கு வரலாம்ன்னு சுந்தரி சொன்னா?

"ம்ம்ம் ..."

சிவதாணு நீளமாக ஒரு பெருமூச்சை விட்டவாறு தன் கண்களை மூடிக்கொண்டவர் தன் வலது கையால் தலையைத் சொறிந்து கொண்டார். கனகா தன் தலையை முடிந்துகொண்டு சுற்று சுவர் அருகில் வந்து சுகன்யா வரும் வழியைப் பார்க்க ஆரம்பித்தாள்.

"உன் பேத்தி வர்றாளாடி...?"

"பேத்தி வரலே; பேண்ட் - ஷர்ட், ஷூவோட இப்ப ஸ்கூட்டர் ஓட்டற பேரனே வந்தாச்சு ..."

க்றீச்ச்ச் ... வேகமாக வந்த சுகன்யா, வீட்டு சுற்று சுவரை ஒட்டி ஸ்கூட்டரை நிறுத்தினாள். ம்ம்ம் ... இந்த ட்ரெஸ்ல ... "சுட்டும் விழி சுடரே ... சுட்டும் விழி சுடரே" ன்னு பாட்டு பாடிக்கிட்டு டேன்ஸ் ஆடுவாங்களே, படம் பேர் ஞாபகத்துல வரலே; அந்த பாட்டுல வர்ற பொண்ணு மாதிரியில்லா இருக்கா என் பேத்தி! ... சுகன்யாவை ஜீன்ஸில் பார்த்த கனகாவின் வாயெல்லாம் பல்லாகியது.

"சிவ சிவா ... என்னடிச் சொல்றே .." சிவதாணு தன் கண்களை விழித்தார்.

"கண்ணு ... வண்டியை காம்பவுண்டுக்குள்ளே ஏத்தி நிழல்ல நிறுத்திடும்மா..." சுகன்யா வீட்டுக்குள் நுழைய, கனகா பின்னால் நின்று குரல் கொடுத்தாள்.

"சரி பாட்டீ ... 'சாரி' தாத்தா ... அம்மாவை ஸ்கூல்ல விட்டுட்டு வர்றேன்; கிளம்பறதுக்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சி ... "

"அதனால என்னம்மா?"

"நீங்க சாப்டீங்களா இல்லையா?" சுகன்யா தாத்தாவின் கைகளை பற்றிக்கொண்டாள்.

"இல்லம்ம்மா ... உனக்காகத்தான் வெய்ட் பண்றோம்..."

ம்ம்ம் ... குழந்தை ஜாதகத்துல ராகு ஏழுல இருக்கான் ... ஏழுக்குடையவன் லக்னத்துல இருக்கான். மனதுக்குள் சட்டென மின்னலடிக்க - சிவதாணுவின் மங்கிய கண்கள், சுகன்யாவின் தலையிலிருந்து கால் வரை ஒரு முறை தங்கள் பார்வையை வீசின. சிவ சிவா ... எப்போதும் போல அவர் மனம் உணர்ச்சிகளின்றி முனகியது.

"பாட்டி ... நீங்க ரெண்டு பேரும் சாப்பிட வேண்டியதுதானே?"

என் மேல எவ்வளவு பாசமிருந்தா, நான் வரேன்னு சொன்னதுக்காக, பாட்டி வெயில்ல நான் வர்ற வழியைப் பாத்துக்கிட்டு நிப்பாங்க? நினைத்தவளின் மனம் சந்தோஷத்தில் பூரித்தது. எவ்வளவு ஆசையிருந்தா,எனக்காக வயசானவங்க சாப்பிடாம காத்துகிட்டு இருக்காங்க? அவங்களை இப்படி தேவையில்லாம காத்திருக்க வெச்சிட்டோமே? இந்த நினைப்பு மனதுக்குள் வந்ததும், சுகன்யாவின் உள்ளம் சற்றே குற்ற உணர்ச்சியுடன் வருந்தவும் தொடங்கியது.

ம்ம்ம்... நடந்தது ஒரு நிகழ்ச்சி. அந்த ஒண்ணே எனக்கு மகிழ்ச்சியையும், வருத்தத்தையும் ஒரு சேரக் கொடுக்குதே? அப்படின்னா மகிழ்ச்சின்னா என்ன? இதைப் பத்தி தாத்தாக்கிட்ட சாப்பிட்டதும் ஆற அமர கேக்கணும்; சுகன்யா மனதுக்குள் யோசிக்கத் தொடங்கினாள். 


சிவதாணுவும், கனகாவும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். சுகன்யா அவர்களுக்கு சூடாக தோசை வார்த்து போட்டுக் கொண்டிருந்தாள்.

"கனகா, குருமா நல்லாருக்குடி ...கசா கசா, தேங்கா எல்லாம் அரைச்சு ஊத்தி, அமிர்தமா பண்ணியிருக்கா உன் மருமவ ... இன்னொரு ஸ்பூன் போட்டுக்கோம்மா ..."

"போதுங்க ... குழந்தைக்கும் கொஞ்சம் மிச்சம் வைங்க ... குருமாவை நீங்களும் திட்டமா தொட்டுக்குங்க; சும்மா குடிக்காதீங்க ... அப்புறம் ஜீரணம் ஆகலே! எனக்கு நெஞ்சை கரிக்குதுன்னு என் உயிரை எடுக்காதீங்க..."

"பாட்டி ... நல்லாயிருந்தா சாப்பிடட்டும் பாட்டி ... நீங்களும் ஊத்திக்கோங்க ... எனக்கு இட்லி - தோசைக்கு மிளகாய் பொடிதான் ரொம்ப பிடிக்கும் ..."

ஸ்டவ்வை அணைத்துவிட்டு வந்த சுகன்யா, கனகாவின் தட்டில் குருமாவை எடுத்து ஊற்றினாள். தாத்தாவின் பக்கத்தில் உட்கார்ந்து நிதானமாக உண்ண ஆரம்பித்தாள். எல்லோரும் சாப்பிட்ட தட்டுகளை சுத்தமாக கழுவி கிச்சனுக்குள் வைத்தாள். மூவரும் பில்டர் காஃபியை ருசித்து குடிக்கும் போது வாசலில் காலிங் பெல் அடித்தது.

"பாட்டி நீங்க உக்காருங்க ... நான் பார்க்கிறேன் யாருன்னு...?"

மூடியிருந்த கம்பிக் கதவுக்குப் பின்னால், மா நிறத்துக்கு சற்றே குறைவாக, ஆனால் களையான சிரித்த முகத்துடன், ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான். காம்பவுண்டுக்கு வெளியில் அவளுடைய ஸ்கூட்டரின் பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஹோண்டா மோட்டார் சைக்கிளில் அவன் வந்திருக்க வேண்டும்.

வாளிப்பான உடல். பரந்த மார்பு. கருகருவென சுருட்டையான முடி, க்ளோசாக வெட்டப்பட்டிருந்தது. கண்களில் கருப்பு கூலிங் க்ளாஸ். அழகாக டிரிம் செய்யப்பட்ட மீசை. பளபளக்கும் கருப்பு பேண்ட் போட்டிருந்தான், பேண்டில் செருகப்பட்டிருந்த வெள்ளை நிற டீ ஷர்ட்டில் பிதுங்கிக்கொண்டிருக்கும் திடமான கைகள், அவன் ஜிம்மில் தினசரி கணிசமாக ஒரு நேரத்தை செலவு செய்கிறான் என்பதை காட்டின.

உண்மையிலேயே முதல் பார்வைக்கு ஆள் ஸ்மார்ட்டா, ஹேண்ட்சம்மாத்தான் இருக்கான். டிப்-டாப்பா இவன் போட்டிருக்கற ப்ராண்டட் டிரஸ்சைப் பாத்தா சேல்ஸ்மேன் மாதிரித் தெரியலை சினிமாவில வர்ற தொப்பையில்லாத இளம் போலீஸ் ஆஃபீசரைப் போல் அவன் இருப்பதாக சுகன்யாவின் மனதில் பட்டது.

"யார் வேணும் ...உங்களுக்கு?"

"ம்ம்ம் ... மிஸ் சுகன்யா கதவைத் தொறங்க ..." அணிந்திருந்த கருப்பு கண்ணாடியை அவன் கழற்றிக்கொண்டே அவன் பேசினான்.

என் பேரு இவனுக்கு எப்படித் தெரியும்? இவ்வளவு தீர்மானமா, உறுதியா, முகத்துல தன்னம்பிக்கையோட எப்படி பேசறான்? கண்ணாடியை கழட்டினதுக்கு அப்புறம், இவன் கண்ணுல ஒரு திருட்டுத்தனம் இருக்கற மாதிரி படுதே? கண்ணுங்க ஒரு இடத்துல நிக்காம எதையோ தேடற மாதிரி இருக்கே? இவனை இதுக்கு முன்னாடி எங்கேயாவது பார்த்திருக்கேனா?



சுகன்யா தன் நினைவுகளில் அவனைத் தேடி அடையாளம் காண முயன்றாள். அவன் யார் என கண்டுபிடிக்கமுடியாமல் முடிவில் அவள் மனம் தோற்று நின்றது. அவள் முகத்தில் ஓடிய உணர்ச்சிகளை புரிந்து கொண்டவனாக அவன் சிரித்தவாறு பேச ஆரம்பித்தான்.

"சுகன்யா, உங்களுக்கு நிச்சயமா என்னைத் தெரியாது. நீங்க முதல் தரமா என்னைப் பாக்கறீங்க. ஆனா உங்களை பத்தி எனக்கு கொஞ்சம் தெரியும்." அவன் உற்சாகமாக புன்னகைத்தான்.

ஹீ ஈஸ் சம்வாட் இன்ட்ரஸ்டிங் ... ஒரு நொடி, அவன் உற்சாகம் சுகன்யாவைத் தொற்றிக்கொண்டது. ஒரே வினாடிதான். எல்லாம் சரி - முதல் தடவையா நான் இவனைப் பாக்கிறேன், ஆனா இவன் பார்வை என் முகத்துல நிக்காம, ஏன் என் மார்லேயே சுத்தி சுத்தி வருது? இவன் கண்ணுல இருக்கறது திருட்டுத்தனம் மட்டுமில்லே ... சதை வேட்க்கையும் அதிகமாகவே இருக்கு.

இவன் உதடுகள்ல வார்த்தைகள் மேனர்ஸோட வருது; ஆனா மனசுல அது கம்மியோ? வேஷம் அதிகமோ? யார் இவன்? அவன் புன்னகையில் மெலிதான அலட்சியமும், கர்வமும் கலந்திருப்பதாக சுகன்யாவுக்குப் பட்டது. தன் மனதுக்குள் மெலிதாக அதிர்ந்தாள் சுகன்யா. அதிர்ந்தவள் மெதுவாக கதவையும் திறந்தாள்.

"வாப்பா உள்ள வா ... நீ மட்டும் தான் வர்றயா? உன் அம்மா வரலையா?" தன் பின்னால் பாட்டியின் குரல் வந்ததும், பாட்டிக்கு வழி விட்டு, சுகன்யா சற்றே வரண்டாவில் ஒதுங்கி நின்றாள்.

"பாட்டீ ... நீங்க முதல்ல, நான் யாருன்னு உங்க பேத்திக்கிட்ட சொல்லுங்க; அவங்க என்னை உங்க வீட்டுல திருட வந்தவனோன்னு சந்தேகத்தோட பாக்கறாங்க" அவன் இப்போது கலகலவென சிரித்தான்.

"உனக்கு எல்லாத்துலேயும் கிண்டல்தாண்டா; நீ யாருன்னு சுகன்யாவுக்கு எப்படித் தெரியும்? அவ கதவைத் தொறக்க தயங்கினதுல தப்பே இல்லே? பேசியவாறே கனகா வீட்டுக்குள் நடந்தாள்.

"சுகன்யா ... யூ ஆர் வெரி ப்ரெட்டி அண்ட் ஸோ ஸ்வீட் இன் திஸ் ட்ரெஸ்! நீங்க இவ்வளவு மாடர்னாவும் ட்ரெஸ் பண்ணுவீங்கன்னு எனக்குத் தெரியாது..." சுகன்யாவுக்கு மட்டும் கேட்கும் அளவுக்கு, அவளை நெருங்கி, தன் அடித்தொண்டையில் கிசுகிசுத்த அவன் உதடுகளில் ஒரு அசாத்தியமான கவர்ச்சி இருந்தது.

அவன் பேச்சைக் கேட்டதும் சுகன்யா ஒரு வினாடி தன் நிதானத்தை இழந்தாள்; இருந்த போதிலும் முதலில் அவன் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவளை மனதில் அலைக்கழிக்க அவளும் மெல்லிய குரலில் ஒரு மரியாதைக்காக "தேங்க் யூ" என முணுமுணுத்தவள், தன் பாட்டியின் பின்னால் நடக்க ஆரம்பித்தாள்.

அடுத்த நொடி நான் ஏன் இந்த ஸ்டுபிட்டோட காம்பிளிமென்ட்டுக்கு தேங்க்ஸ் சொன்னேன்? சுகன்யாவுக்கு தன் மீதே சட்டென எரிச்சல் எழுந்தது. வர வர நானும் ஒரு இடியட்டாத்தான் பிஹேவ் பண்றேன்.

"ஓ மை காட் ..." வந்தவன் இதயம் ஒரு வினாடி நின்றது. பின் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது.

தன் முன்னால் மெதுவாக நடந்த சுகன்யாவின் சீராக அசைந்த இடுப்பையும், வாளிப்பான அவளுடைய பருத்த தொடைகளையும், அவள் கால்களின் வீச்சையும், அதனால் அவளுடைய பின்னெழில்கள் ஆடிய நடனத்தையும் கண்ட சம்பத், சுகன்யாவின் பின்னழகை முழுமையாக ரசிக்க எண்ணி, தன் மனம் சிலிர்க்க, வீட்டுக்குள் செல்லாமல் கதவருகிலேயே நின்றுக்கொண்டிருந்தான்.

வந்தவன் கதவருகில் நின்று தன் குறுகுறுக்கும் கண்களால், திருட்டுப் பார்வையால், தன் உடலை முழுதுமாக ஸ்கேன் செய்வதை சுகன்யா நன்றாக உணர்ந்தாள். அவள் மனதிலிருந்த எரிச்சல் மெல்ல மெல்ல சினமாக உருவெடுக்க தொடங்கியது. 


"என்னங்க ... நம்ம ராணியோட பையன் சம்பத் வந்திருக்கான் ..."

"வாப்பா ... நல்லாயிருக்கியா ... இப்ப பெங்களூர்லதானே நீ வேலை செய்யறே? லீவுல வந்திருக்கியா?" சிவதாணு சோஃபாவில் சாய்ந்திருந்தார்.

"நல்லாயிருக்கேன் தாத்தா ... நீங்க எப்படி இருக்கீங்க? வீட்டுக்குள் வந்தவுடன், தனக்கென்னவோ சுகன்யாவிடம் அதிக உரிமை கிடைத்துவிட்டது போல், அவளை அவன் இப்போது நேராகப் பார்த்தான். அவன் பார்வை மீண்டும் மீண்டும் அவள் மார்பில் சென்று படிந்தது. அவன் திருட்டுப் பார்வையை கண்டதும், எழுந்து சென்று அவனை ஓங்கி அறையலாமா என்றிருந்தது சுகன்யாவுக்கு.

சுகா, ராணின்னு நம்ம உறவுல உனக்கு ஒரு அத்தை இருக்கறதை நீ கேள்வி பட்டு இருப்பே; ஆனா பாத்து இருக்க மாட்டே. ராணியோட பிள்ளை இவன்; பேரு சம்பத்; பெங்களூர்ல இஞ்சீனியரா வேலை செய்யறான். உங்கம்மாவுக்கு ராணியை நல்லாத் தெரியும்; ரெண்டு பேரும் ஓரே காலேஜ்ல படிச்சவங்களாம். பாம்பேயிலே வேலையாய் இருந்த இவன் அப்பா இப்பத்தான் ரிடையராகி இங்க வந்து செட்டிலாயிருக்கான். சம்பத், பாம்பேயில அப்பா அம்மா கிட்டவும், இங்கே இவனோட தாத்தா வீட்டுலேயும் அல்லாடிக்கிட்டு கிடந்தான். இங்க ஊருக்கு வரும் போதெல்லாம் எங்களை ஒரு தரம் தவறாம பாத்துட்டு போவான்.

"அப்படியா பாட்டி; ராணி அத்தை ரெண்டு மூணு தரம் எங்க வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட பேசிட்டு போறதை நான் பாத்து இருக்கேன். நான் அவங்க கிட்ட அதிகமா பேசினது இல்லே; இவரைப் பத்தியும் எனக்கு தெரியாது." சுகன்யா மையமாக பேசிக் கொண்டே தன் செல் போனை ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்து எடுத்தவள், திடுக்கிட்டு போனாள்.

"டேய் சம்பத்து, என் பையன் குமாரோட பொண்ணு இவ; எங்க பேத்தி, மெட்ராஸ்ல வேலை செய்றா..." கனகா அவர்களை ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்தாள்.

மை காட் .. என் செல் ஆஃப் ஆகி கிடக்கு. என் செல்லை எப்ப நான் ஆஃப் பண்ணேன்? ரெண்டு நாள் முன்னே செல்வா மேல இருந்த எரிச்சல்ல, போனை டேபிள் மேல தலையை சுத்தி விசிறி எறிஞ்சேன். அதுக்கு அப்புறம் இன்னைக்கு காலையிலத்தான் அம்மா ஸ்கூலுக்கு போறாளே, அவசரத்துக்கு இருக்கட்டும்ன்னு தேடி எடுத்துகிட்டு வந்தேன். அப்போ ரெண்டு நாளா இது ஸ்விட்ச் ஆஃப் ஆகிக் கிடக்கா? என்னாச்சு இதுக்கு; ஆன் ஆக மாட்டேங்குது; என்னப் பிராப்ளம் இதுல? சனியன் ... கெட்டு கிட்டு போச்சா?

நேத்து செல்வா எனக்கு போன் பண்ணியிருந்தால்...? போனை கெடுத்து வெச்சுட்டு நான் என்னமோ செல்வாவை தேவையில்லாமா திட்டிக்கிட்டு இருக்கேன். ஆனா போன் கெட்டுப் போன கதையெல்லாம் சனி, ஞாயிறு ரெண்டு நாளாத்தானே? அந்த தீவெட்டி தடியன் செல்வாதான் ஒரு வாரமாவே எங்கிட்ட பேசலையே? செல்வாவின் நினைவு மனதுக்குள் வந்த பின், தன் பாட்டி பேசியது எதுவும் சுகன்யாவின் காதில் ஏறவேயில்லை.

"சுகன்யா... க்ளாட் டூ மீட் யூ"

சம்பத் தன் வலது கையை அவள் பக்கமாக நீட்டிக்கொண்டு எழுந்தான். சம்பத்தின் கையை குலுக்குவதை விரும்பாத சுகன்யா, அவனை நோக்கி சட்டென தன் கைகளை கூப்பினாள். இவன் வீட்டுல என்னைக் கேட்டு வந்த ப்ரப்போசல் எப்பவோ முடிஞ்சி போன விவகாரம். எந்த உறவுகாரனைப் பத்தியும் எனக்கென்ன கவலை? எவன் உறவு கெட்டாலும் எனக்கு பரவாயில்லை.

நான் எவன் முன்னாடியும் நிக்க மாட்டேன்னு, என் முடிவை அம்மாகிட்ட தீத்து சொல்லிட்டேன். அப்பாவும் நம்ம வீட்டு முடிவை ராணி அத்தைக்கிட்டே சொல்லியாச்சு; அப்புறம் இப்ப இவன் கையை மரியாதைக்காககூட நான் ஏன் குலுக்கணும்? அப்படி குலுக்கி எனக்கென்ன ஆவப் போவுது? எனக்கு மேனர்ஸ் இல்லேன்னு இவன் நினைச்சா நினைச்சிட்டுப் போறான்.

அம்மா கிட்ட எவன் எதிர்லேயும் சீவி சிங்காரிச்சுக்கிட்டு இளிக்க மாட்டேன்னு சொன்னேன். ஆனா என் போதாத வேளை, நான் அழகா டிரஸ் பண்ணிக்கிட்டு நல்ல மூடுல இருக்கும் போது இந்த பொறுக்கி வந்து என் எதிர்ல நிக்கறான். இவன் முழியே சரியில்லைன்னு நான் நினைச்சது ரொம்ப கரெக்ட். சரியான பொம்பளை பொறுக்கி. வந்ததுலேருந்து பத்து தரம், கண்ணாலேயே என்னை ரேப் பண்ணிட்டான். பாட்டி என்னமோ இப்பத்தான் இவன் ஹிஸ்டரி, ஜியாகிராஃபி எல்லாத்தையும் என் கிட்ட ஒப்பிக்கிறாங்க.

"எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் சம்பத் ... பீ கம்ஃபர்டபிள் ஹியர்! ... நீங்க பாட்டிகிட்ட பேசிகிட்டு இருங்க.." என்ற ஒற்றை வரியுடன் அவனை ஒதுக்கிவிட்டு, சுகன்யா விருட்டென ஹாலில், சோஃபாவில் கிடந்த தன் டிராவல் பேகை எடுத்துக்கொண்டு, ஹாலை ஒட்டியிருந்த தாத்தாவின் படிக்கும் அறைக்குள் நுழைந்து கதவை மூடிகொண்டாள்.

மூஞ்சியில அடிக்கிற மாதிரி கையை கூட குலுக்காம எழுந்து போயிட்டாளே? போனதுதான் போனா, ரூமுக்குள்ளே போய் கதவையும் மூடிக்கிட்டாளே? ரொம்ப திமிர் பிடிச்சவளா இருக்காளே? இவ பண்ண காரியத்துக்கு என்ன அர்த்தம்? உன்னை எனக்கு பிடிக்கலைன்னுதானே சொல்றா? சம்பத்துக்கு உடம்பில் சடாரென சூடு ஏறி முகம் சிவந்தது. சுகன்யாவோட ட்ரஸ்தான் மாடர்னா இருக்கு. மனசால ஒரு வேளை இவ ரொம்ப ட்ரெடிஷனலா இருப்பாளோ? என் பார்வையைப் பாத்து பயந்துட்டாளா?

கனகாவுக்கும் தன் பேத்தி சுகன்யா, இப்படி வீட்டுக்கு வந்த விருந்தாளியை, உறவுக்காரனை, உதாசீனப்படுத்திவிட்டு சட்டென அறைக்குள் போனது மனதுக்கு சிறிது சங்கடத்தைக் கொடுத்தாலும், உள் மனதில் கிழவிக்கும் ஏதோ கொஞ்சம் புரிந்தது போல்தான் இருந்தது. தன் வாழ்க்கையில் இது போன்று எத்தனை தருணங்களை அவள் பார்த்திருப்பாள்?

இன்னைக்கு இந்த சம்பத்து பார்வையில ஒரு வித்தியாசம் இருக்கே? என்னமோ பேண்ட் போட்ட பொண்னை இன்னைக்குத்தான் மொதல் தரமா பாக்கற மாதிரி, கொஞ்சம் வெறியோட பாத்த மாதிரியிருந்ததே? திருட்டு முழில்லா முழிக்கிறான். சுகன்யாவுக்கு அப்புறம்தான் எனக்கு மத்த உறவெல்லாம். என் பேத்திக்கு இவனைப் புடிக்கலைன்னா, இவனை முதல்ல வெளியில அனுப்பித்தான் ஆகணும்.

"என்னடா சம்பத்து ... காஃபி குடிக்கிறியா?"

"வேணாம் பாட்டி ... இப்பத்தான் நான் குடிச்சிட்டு வந்தேன் ... நீங்க ஏன் சிரமப் படறீங்க?"

"எனக்கென்னடா சிரமம் ... ஏற்கனவே இறக்கின டிக்காஷன் இருக்கு.. பாலை காய்ச்சினா வேலை முடிஞ்சது ... ஒரு நிமிஷம் உக்காரு, இதோ வரேன்" கனகா கிச்சனில் நுழைந்தாள்.



சிவதாணு இன்று அவர் பசிக்கு மேல், ருசிக்காக ஒரு தோசை எக்ஸ்ட்ரா சாப்பிட்டதால், உண்ட மயக்கத்தில் வந்த சன்னமான குறட்டையுடன் சோஃபாவில் சாமியாடிக் கொண்டிருந்தார். அவருக்கு தன் ஒன்று விட்ட சகோதரி லட்சுமி குடும்பத்துடன் ஆரம்பத்திலிருந்தே அவ்வளவாக ஒட்டுதல் கிடையாது. ஆனாலும் உறவு முறைக்காக அவர்கள் தன் வீட்டுக்கு வந்து போவதை சகித்துக்கொண்டிருந்தார்.

சம்பத் விட்டத்தை பார்க்க ஆரம்பித்தான். சுகன்யா உள்ளே சென்று மூடிக்கொண்ட அறைக் கதைவை ஒரு நிமிடம் கண்களை அகல விரித்துப் பார்த்தான். நடக்கறது நடக்கட்டும். சட்டுன்னு உள்ளே போய், சுகன்யாவை கட்டிபுடிச்சி அவ ஒதட்டுல ஒரு கிஸ் அடிச்சுட்டு வந்துடலாமா? அவன் மனதில் மிருக வெறி ஒரு நொடி கிளம்பியது. இவ எனக்கு உறவு முறையா போயிட்டா, கதை இத்தோட முடியாதே? இதை நினைத்து தன்னை ஒருவாறு கட்டுப்படுத்திக்கொண்டவனின் மனது மட்டும் அலைய ஆரம்பித்தது. 


சுகன்யா... 32


கனகா, சிவதாணுவை மணந்து அந்த வீட்டுக்கு வந்த நாளிலிருந்து, தன் கணவனைத் தவிர வேறு யாரையும் அறியாதவள். அவர் சொன்னதுதான் அவளுக்கு "வேதம்". அவர் சொல்லுவதுதான் அவளுக்கு "கீதை". அதற்கு மேல் அவள் எதையும் யோசித்ததேயில்லை. "நடக்கறதெல்லாம் நல்லதுக்கே" என நினைக்கும் மிக மிக எளிதான மன நிறைவு கொண்ட பெண் அவள்.

நாலு நாளாவே எதையோ மனசுக்குள்ள வெச்சுக்கிட்டு மருகிக்கிட்டு இருக்கிறாரு. கேட்டாலும் வாயை விட்டு சொல்லலை. தீடீர்ன்னு இன்னைக்கு மருமவளைப் போய் பாக்கலாங்கறார். கடைசியில, அந்த சிவம் தான், இவரு மனசை மாத்திட்டான் போல இருக்கு. எப்படியோ, வீட்டுக்குள்ள மருமக வந்தாள்ன்னா போதும். வர்ற தைக்கு எனக்கு எழுபது முடிஞ்சிடும். மருமக கிட்ட எல்லாத்தையும் குடுத்துட்டு, அக்கடான்னு உக்காரணும்ன்னு எவ்வள நாளா நானும் ஏங்கறேன்? அதுக்கான நேரம் வந்திடுச்சி. கனகா வேகமாக தலையில் தண்ணீரை ஊற்றிக்கொண்டாள்.



கனகா குளித்ததும், அவசரஅவசரமாக இட்லி குக்கரை அடுப்பில் ஏற்றினாள். பட்டுப்புடவையொன்றை எடுத்து உடலில் சுற்றிக்கொண்டு, ஈரத்தை இழுக்க ஒரு பருத்தி துண்டை தலையில் சுற்றியவாறு தெரு வரந்தாவிற்கு வந்தாள். மணி எட்டரை ஆயிடுச்சு. பசி தாங்க மாட்டாரே? சத்தத்தையும் காணோம், உக்காந்துக்கிட்டே தூங்கிட்டாரா? கிச்சனுக்கு சென்று வெந்த இட்லிகளை எடுத்து ஹாட் கேசில் வைத்து மூடினாள்.

கனகா திரும்பி வந்து பார்த்தப்போதும் சிவதாணு தூங்கிக்கொண்டிருந்தார். சிவதாணுவின் விழிகள் மூடியிருந்தது. சன்னமான குறட்டையொலி அவர் கண்டத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. தலை நிற்காமல் ஆடிக்கொண்டிருந்தது. பத்து நிமிடம் இப்படி தூக்கத்திலிருப்பார். தெருவில் ஸ்கூட்டர் வேகமாக சத்தத்துடன் போகும். சடக்கென விழித்துக்கொள்வார். சிவா சிவா; என் அப்பனே, வாய் முனகும்.

மனைவியை கூப்பிடுவார். "என்ன வேணும்?" குரல் மட்டும் வரும். கனகா வரமாட்டாள். கனகா டிவியில் எதையாவது பார்த்துக்கொண்டிருப்பாள். கூப்பிட்ட குரலுக்கு பதில் கிடைத்தால், "நீ இருக்கியான்னு பார்த்தேன் என்று முனகுவார்". பக்கத்திலிருக்கும் கைவிசிறியை மெதுவாக சுழற்றிக்கொண்டிருப்பார். பின் தேவாரம், திருவாசம் என்று ஏதாவது ஒரு திருமுறையை கையில் எடுத்துக்கொள்வார். தூங்கி வழிவார். புத்தகம் கையிலிருந்து நழுவி கீழே விழும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை இந்த நாடகம் தவறாமல் அரங்கேறும்.

கம்பிக்கதவை திறந்துகொண்டு, காம்பவுண்டுக்குள் நின்றவாறு தலையை உலர்த்த ஆரம்பித்தாள் கனகா. தலை தும்பைப் பூவாக வெளுத்திருந்தது. நெற்றியில் விபூதியும், குங்குமம் பளபளத்தன. கைகள் அசையும் வேகத்திற்கேற்ப, மூன்று ஜோடி தங்க வளையல்கள் ஒன்றின் மேல் ஒன்று மோதி கிணுகிணுத்தன. கிழவியின் கழுத்தில் பத்து சவரனுக்கும் குறையாத கனத்தில் தாம்புகயிறு செயின் ஆடிக்கொண்டிருந்தது. அம்பாள் டாலருடன் அதை விட இன்னோரு மெல்லிய செயின் அதனுடன் பின்னி கொண்டு இளம் மஞ்சள் வெயிலில், மினுமினுத்துக்கொண்டிருந்தது. மஞ்சள் கயிற்றில் கோத்திருந்த தாலி மட்டும் ரவிக்கைக்குள் கனகாவின் மார்பில் எப்போதும் உறவாடிக்கொண்டிருக்கும்.

பேத்தியின் பிறந்த நாள் வரும். கனகா ஒரு தங்க காசை வாங்கி அவளுக்கென தனியாக வைத்து விடுவாள். பொங்கல், தீபாவளி, பண்டிகை நாட்க்கள், கணவருக்கு கிடைத்த போனஸ், சிறுக சிறுகத் தங்கமாக மாறி லாக்கரில் பேத்தியின் வரவை நோக்கி காத்திருந்தன. இதுவரைக்கும் எனக்கு இது வேணும் அது வேணும்ன்னு கேட்டது இல்லை. என்னவோ பண்ணிட்டுப் போறா? சிவதாணு தன் மனைவியின் இந்த விஷயத்தில் எப்போதும் தலையிட்டதில்லை.

எல்லாம் பேத்திக்குத்தான். என்னைக்காவது வீட்டுக்கு வரமாட்டாளா? பாட்டீன்னு ஆசையா கூப்பிடமாட்டாளா? இந்த ஒரு ஆசையைத் தவிர கனகாவின் மனதில் வேறு எந்த விருப்பமும் இல்லை. கனகாவுக்கு எதிலும் ஆசையில்லை. பற்றில்லை. எல்லாவற்றையும் உதறிவிட்டு ஓடுவதற்கு மனம் துடித்துக்கொண்டிருந்தது.

சீறிக்கொண்டு வந்த ஆட்டோ, எதிர் வீட்டு வாசலில் கீறிச்சிட்டு நின்றது. கனகா நிமிர்ந்தாள். ம்ம்ம்... விருந்து வருதுடீன்னு சொல்லிக்கிட்டு இருந்தார். காக்கா பட்டு மாமி வீட்டைப் பாத்து கரைஞ்சிருக்கு. அவங்க வீட்டுக்கு விருந்தாளி வந்திருக்காங்க. கனகாவின் உதடுகளில் புன்னகை மலர்ந்தது.

ஆட்டோவிலிருந்து இறங்கிய, மஞ்சள் நிற சுடிதாரும், பச்சை நிற கமீஸும் அணிந்திருந்த இளம் பெண், பர்ஸைத் திறந்து பணம் எடுத்துக்கொண்டிருக்க, சிவப்பு பட்டு உடுத்தி, வெள்ளை நிற ஜாக்கெட்டில், ஒரு நடுத்தர வயது பெண்மணி கையில் பையுடன் இறங்கிக்கொண்டிருந்தாள். யாருன்னுத் தெரியலையே, ஆள் தெரியுது, முகம் தெரியலையே ... கண்ணாடி போட்டாத்தான் முகம் தெரியற நிலைக்கு பார்வை வந்தாச்சு... பகவானே இன்னும் எத்தனை நாளைக்கு ... இதெல்லாம்..? கனகாவின் மனம் நொந்துகொண்டது.

ஆட்டோ நகர்ந்ததும், தெருவின் இரு புறத்தையும் பார்த்துக்கொண்டே, அவர்கள் சிவதாணுவின் வீட்டை நோக்கி, சாலையை கடக்க ஆரம்பித்தவுடன், கனகாவின் மனம் துள்ளியது... நம்ம வீட்டுக்குத்தான் விருந்தாளியா ... அவர் சொன்னது சரியாப் போச்சே? யாரு? ... சுந்தரி மாதிரி தெரியுதே? சுந்தரிதானா? அப்ப கூட வர்றது ... சுகன்யாவா? என் பேத்தியா? அவள் கண்களை அவள் நம்பவில்லை. உடல் பரபரக்க காம்பவுண்டு கதவை நோக்கி ஓடினாள் கிழவி.

"வாம்மா கண்ணு... சுகன்யா ... வாடி என் கண்ணு ... சுந்தரி ... நீயும் உள்ள வாம்மா ... வா.." கனகா, பதட்டத்தில் குரல் தடுமாற காம்பவுண்ட் கதவை திறந்து, சுகன்யாவை இழுத்து தன் மார்போடு அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள்.

"நல்லாயிருக்கீங்களா அத்தை ..." சுந்தரி பரிவுடன் வினவினாள்.

"எனக்கென்னம்மா ... நீ நல்லாயிருக்கியா ... அதைச் சொல்லும்மா.." தன் மருமகளை ஒரு கையால் தன் புறம் இழுத்துக்கொண்டாள்.

"என்னங்க ... தூங்கினது போதும் ... எழுந்துருங்க ... யார் வந்திருக்கறதுன்னு பாருங்க ... நீங்க கொஞ்சம் தப்பா சொல்லிட்டீங்க; நீங்க சொன்ன மாதிரி விருந்தாளி வரலீங்க நம்ம வீட்டுக்கு; இந்த வீட்டுக்கு முழு உரிமை உள்ளவங்க வந்திருக்காங்க .." கிழவி சின்னப் பெண்ணாக துள்ளினாள்.

"தாத்தா ... உங்களைப் பாக்கறதுக்கு நான் சுகன்யா வந்திருக்கேன் தாத்தா ..."

"வாடா கண்ணு ... சுகன்யா ... உன் அம்மா வல்லியாம்மா? கிழவர் பரபரத்தார்.

"வந்திருக்காங்க தாத்தா; இதோ பின்னாடி வர்றாங்க.." சுகன்யா, ஈஸிசேரிலிருந்து தட்டுத் தடுமாறி எழுந்த தன் தாத்தாவின் கையை பிடித்துக்கொண்டாள். சிவதாணுவின் உடல் சிலிர்த்தது. என் ரத்தம் இது. என் ரத்தம் என்னைத் தொட்டதும், என் உடம்பு அடையாளம் கண்டுகிச்சே? சுகன்யாவின் புறங்கையில் பாசமுடம் முத்தமிட்டார் சிவதாணு.

சுந்தரி காம்பவுண்ட் கதவை மூடிக்கொண்டு தன் வீட்டுக்குள் நுழைந்தாள். வாசல் படியில் ஒரு நொடி தயங்கி நின்றாள். அன்னைக்கு தாலி கட்டிக்கிட்டு, என் புருஷனோட இந்த இடத்துலதான் வந்து நின்னேன்! அப்ப இந்த கம்பி கதவு எதுவும் இல்லே; என் மாமனாரும், இன்னைக்கு எங்க நிற்கிறாரோ அங்கதான், கொஞ்சம் பின்னாடி, தலையில கையை வெச்சிக்கிட்டு, ஏதோ குடிமுழுகிப் போன மாதிரி, அந்த சுவத்துல சாய்ஞ்சு உக்காந்து இருந்தார். அன்னைக்கு எனக்கு இந்த வீட்டுல எந்த வரவேற்பும் இல்லை. இன்னைக்கு ... சுந்தரியின் மனது பழைய நினைவில் ஒரு நொடி மூழ்கி நின்றது. அவள் கால்கள் சற்றேத் தயங்கி நின்றன.

"அம்மா சுந்தரி, ஏம்மா தயங்கி தயங்கி இன்னும் வெளியிலேயே நிக்கறே; உள்ள வாம்மா; இது உன் வீடும்மா; உள்ளே வாம்மா..." அன்று உள்ளே வராதே என்று சிங்கமாக கர்ஜித்தவர், இன்று கன்றுகுட்டியாக தன் குரல் தழுதழுக்க சுந்தரியை வீட்டுக்குள் அழைத்தவாறு அவளை நோக்கி ஒரு தப்படி எடுத்து வைத்தார். சுந்தரியை நோக்கி நடக்க ஆரம்பித்தவர், உடல் பரபரத்து நடை தடுமாறி, தன் மருமகளை நோக்கி இருகைகளையும் கூப்ப முயற்சித்தார்.

"மாமா ... நான் தான் வந்துட்டேனே மாமா ... நீங்க உக்காருங்க; தன்னை நோக்கி உயர்ந்த அவர் கரங்களை சுந்தரி தன் கையால் வேகமாகப் பிடித்துக்கொண்டாள். மருமகளின் கை தன் உடலில் பட்டதும், சிவதாணுவின் உடல் நடுங்கியது. சுந்தரி அவரை ஈஸிசேரில் உட்க்கார வைத்தாள். தானும் அவர் பக்கத்தில் தரையில் உட்க்கார்ந்து கொண்டாள். கண்கள் குளமாக உணர்ச்சிப் பெருக்கில் இருந்த தன் மாமானாரின் கையை தன் கைகளால் மெல்ல வருடினாள்.

"அம்மா சுந்தரி, நான் உன்னை தப்பா பேசிட்டேம்ம்மா... எங்க கிட்ட நீ கோவமா இருந்ததுல ஞாயமிருக்கு.... சிவதாணுவின் நாக்கு பேச முடியாமல் குழறியது. தன் இடது கையால் தன் மருமகளின் தலையை பாசத்துடன் வருடியவாறு பேசினார்.

"மாமா ... ப்ளீஸ் ... மாமா! நீங்க எனக்கு எந்த விளக்கமும் குடுக்க வேண்டாம். நீங்க தான் என்னை மன்னிக்கணும். அஞ்சு வருஷம் முன்னாடியே நீங்க என்னை ரகு மூலமா வீட்டுக்கு வான்னு கூப்பிட்டீங்க. அன்னைக்கே நான் இந்த வீட்டுக்குள்ள வந்திருக்கணும். ஆனா நான் தான் பிடிவாதமா வரலே. தப்பு என்னுதுதான். ஆனா அதுக்கு ஒரு காரணமிருந்தது."

"என்னம்மா சொல்றே நீ"

"அப்ப உங்க மகன் என் கூட இல்லை. நான் எந்த உரிமையில நான் இந்த வீட்டுல நுழையறதுன்னு தயங்கினேன். ஆனா உங்க மகன், என் புருஷன் இப்ப என் கிட்ட திரும்பி வந்துட்டார். நானும் உடனே உங்களைப் பாக்க, உங்க பேத்தியையும் அழைச்சுக்கிட்டு ஓடி வந்துட்டேன். ப்ளீஸ் ... இப்ப நீங்க எதுவும் பேச வேண்டாம். எனக்கு உங்க மேல எந்த கோபமும் இல்லை. சிவதாணு தன் கண்களைத் துடைத்துக்கொண்டு அமைதியாக தன் மருமகளைப் பாசத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

"கண்ணு சுந்தரி ... அன்னைக்கும் என் பேத்தி உன் கூடத்தான்ம்மா இருந்தா ... அந்த ஒரு உரிமை உனக்கு இந்த வீட்டுல எப்பவும் நுழையறதுக்கான பாஸ்போர்ட்ம்ம்மா ... எப்படியோ நேரம் வந்தாத்தான் எதுவும் நடக்கும்ம்மா ... பழசெல்லாம் எதுக்கு இப்ப ... நீ வந்துட்டே .. அதுவே எனக்குப் போதும் ...."

"மாமா, ஒரு நிமிஷம் எழுந்து இப்படி நில்லுங்களேன். அத்தை நீங்களும் இப்படி மாமா பக்கத்துல வந்து நில்லுங்க..."

"என்னங்க... உள்ளே கூடத்துக்கு வாங்க ... இப்பத்தான் நான் சுவாமிகிட்ட விளக்கேத்தி வெச்சுட்டு வந்திருக்கேன். உள்ள வந்து குழந்தைகளை ஆசிர்வாதம் பண்ணுங்க." மருமகளின் மனதில் ஓடிய எண்ணத்தைப் மின்னலாகப் புரிந்து கொண்டாள் மாமியார். சுகன்யாவின் கையை பிடித்துக்கொண்ட சுந்தரி, தன் வீட்டுக்குள் உரிமையுடன் தலை நிமிர்ந்து, பெருமிதத்துடன் நுழைந்தாள். சிவதாணுவும், கனகாவும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு மனதில் மகிழ்ச்சியுடன் சுந்தரியின் பின் வீட்டுக்குள் நடந்தனர்.

முதலில் சுந்தரி தன் மாமனார், மாமியார் கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்து எழுந்தாள். சிவதாணு, சிவாய நம ... உதடுகள் முணுமுணுக்க அவள் நெற்றியில் விபூதியை ஒரு கீற்றாக பூசினார். குங்குமத்தை, தன் மருமகளின் நெற்றியில் வைத்த கனகா ... நல்லாயிரும்மா நீ ... சொல்லிக்கொண்டே தன் கழுத்தில் கிடந்த தாம்புகயிறு சங்கிலியை உருவி தன் மருமகளின் கழுத்தில் போட்டாள். கையிலிருந்து ஒரு ஜோடி வளையலையும் கழட்டி சுந்தரியின் கையில் பூட்டினாள்.

"அத்தை ... இப்ப எதுக்கு இதெல்லாம் எனக்கு ..."

"சுந்தரி, இங்க இருக்கறது எல்லாமே உங்களுக்குத்தான் ... ஆனா இப்ப என் மனசு குளுந்து இருக்கும்மா ... நான் குடுக்கறதை வேண்டாம்ன்னு நீ சொல்லாதேம்ம்மா" கனகா மனம் நெகிழ்ந்து பேசினாள்.

"சுகா ... என்னடி பாத்துக்கிட்டு நிக்கறே; பெரியவங்க கால்லே விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கடி ..."

"பாட்டி ... எனக்கு என்ன குடுக்கப் போறீங்க நீங்க ... எல்லாத்தையும்தான் அம்மா கழுத்துலயும், கையிலேயும் போட்டுட்டீங்களே?" சிரித்தவாறு நமஸ்காரம் செய்து எழுந்த சுகன்யா, தன் பாட்டியை கட்டிக்கொண்டு, கனகாவின் கன்னத்தில் ஆசையுடம் முத்தமிட்டாள். கனகா, சுகன்யாவை தன்னுடன் அணைத்துக்கொண்டவள் அவள் காதில் ரகசியம் சொன்னாள்... உனக்கு நான் நிறைய வெச்சிருக்கேன் ... கவலைப்படாதே ... இப்போதைக்கு இதுங்களை போட்டுக்கோ ... தன் கழுத்தில் கிடந்த டாலர் செயினையும், ஒரு ஜோடி வளையலையும் கழட்டி அவள் கையில் கொடுத்தவள், தன் பேத்தியின் கன்னத்தில் ஆசையுடன் முத்தமிட்டாள். அவள் உச்சி முகர்ந்தாள்.

"சுகன்யா, ரெண்டு கையிலேயும் பை வெச்சிருந்தியே .. தாத்தாவுக்கு என்னம்ம்மா கொண்டாந்து இருக்கே?'

"தாத்தா ... உங்களுக்கு பொங்கல், வடை பிடிக்கும்ன்னு ... அம்மா செய்து கொண்டாந்து இருக்காங்க. சாப்பிடலாம் வாங்க தாத்தா ..."

"கனகா ... இனிமே உன் தயவு எனக்கு வேணாம்டி ... என் மருமவ வந்துட்டா ... எனக்கு பிடிச்சதை அவகிட்ட கேட்டு நான் சாப்பிட்டுக்கிறேன் ... உப்பு இல்லாம, புளிப்பு இல்லாம, உறைப்பு இல்லாம, நீ பொங்கிப் போடறதுலேருந்து எனக்கு விடுதலை கிடைச்சாச்சு."

"ஆமாம். நாளைக்கு திங்கக்கிழமை ... உங்க மருமகளுக்கு ஸ்கூல் உண்டு... சுவத்து கீரையை வழிச்சு போடுடின்னு ... நாளைக்கு திரும்பியும் நீங்க இந்த கனகாகிட்டத்தான் வரணும் ... மனம் நிறைந்திருந்த கிழவி, கிழவரை கிண்டல் செய்து சிரித்தாள். சுந்தரியும் சுகன்யாவும் அவள் சிரிப்பில் சேர்ந்து கொண்டார்கள். அன்று சிவதாணுவின் வீட்டில் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது.

இன்னைக்கு ஞாயித்துக்கிழமை ... சாயந்திரம் என் குழந்தைகளை ஒண்ணா நிக்க வெச்சு சுத்திப் போடணும் ... என் கண்ணே பட்டுடக்கூடாது. கனகா தன் மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.



இரவு சாப்பாடு முடிந்தது. சுகன்யா நாடாக் கட்டிலை நடு மாடியில் விரித்தாள். மெல்லிய வாடைக்காற்று சிலு சிலுவென வீசிக்கொண்டிருந்தது. அடித்தக்காற்றில் அணிந்திருந்த நைட்டி உடலின் மேடு பள்ளங்களில் ஒட்டிக்கொண்டது. இன்னும் பத்து நாள்ல குளிர ஆரம்பிச்சிடும். இப்படி திறந்த வெளியில ஹாயா நிக்கறதோ, படுத்துக்கறதோ சிரமம்தான். காற்றில் பறந்த தன் முடிக்கற்றைகளை முகத்திலிருந்து ஒதுக்கி காதுக்குப்பின்னால் தள்ளிக்கொண்டாள்.

தோட்டத்திலிருந்து காற்றில் அடித்த துளசி, பவழமல்லியின் வாசம் அவள் நாசியைத் தாக்கி மனதில் அமைதியைத் தந்து கொண்டிருந்தது. கைப்பிடி சுவரில் சாய்ந்து கொண்டு கீழே தோட்டத்தை எட்டிப்பார்த்தாள் சுகன்யா. சுந்தரியின் வியர்வை தோட்டத்தில் வாழையாக குலைத் தள்ளி, முருங்கையாக காய்த்து, செம்பருத்தியாகவும், நந்தியாவட்டையும், மல்லிகையுமாக மலர்ந்திருந்தன.

எவ்வளவு பூ பூத்துக்குலுங்கினாலும், சுந்தரி ஒரு நாள் கூட தன் தலையில் சூடிக்கொண்டதில்லை. எல்லாம் அந்த தெரு கோடி பிள்ளையாருக்குத்தான் கிள்ளி மாலையாக்கி சமர்ப்பித்துக்கொண்டிருந்தாள். கடைசியில் அந்த கணேசரும், தன் கண் திறந்து குமாரை அவளிடம் திருப்பி அனுப்பிவிட்டார்.

அப்பா வந்துட்டார். அப்ப வினாயகர் கோட்டா முடிஞ்சுப் போச்சா? நவகிரகத்தை சுத்தற வேலையை அம்மா விட்டுடுவாளா? இனிமேலாவது அம்மா தன் தோட்டத்து மல்லியை தலையில வெச்சுக்குவாளா? அம்மா சாப்பிட்டுட்டு மாடிக்கு வரட்டும் ... கேக்கிறேன்? சுகன்யாவின் முகத்தில் கேலிப்புன்னகையொன்று தவழ்ந்தது.

கிராமத்துக்கு வந்தால் சுகன்யாவின் வாசம் எப்போதும் மாடி அறையில்தான். அது என்னவோ தெரியவில்லை மாடியறை கோடைக் காலத்தில், பகலில் தகிக்கும் செங்கல் சூளையாயிருந்தாலும், மாடி அறைகள்தான் அவளுக்கு மிகவும் பிடிக்கிறது. ஹாஸ்டலில் தங்கிப் படித்தக் காலத்தில், விடுமுறையில் வீட்டுக்கு வந்த போதும், படித்து டிகிரி வாங்கி, வேலைக்காகத் முயற்சி செய்து கொண்டிருந்த காலத்திலும், சுகன்யா இந்த மாடியில்தான் தன் நேரத்தைக் கழிப்பாள்.

"சுகா, நாலு நாளைக்கு மேல வீட்டுல சேந்தாப்பல இருக்கறது இல்லே நீ. அந்த நாலு நாள்லேயும் ஏண்டி எப்பவும் அந்த மாடியில போய் ஏறிக்கிறே? செத்த நேரம் ஹால்லே உக்காந்து வாயாடினா எனக்கும் பொழுது போகுமில்லே?" சுந்தரி புலம்புவாள்.

"இத்தனை நாள்தான் படிக்கிறேன் படிக்கிறேன்னு கதை சொல்லிக்கிட்டு இருந்தே? கிச்சன்ல கூட மாட நின்னு வீட்டு காரியங்களையும் கொஞ்சம் கொஞ்சம் பழகினாத்தான், கல்யாணம் ஆகி இன்னொரு வீட்டுக்கு போனா சுலபமா இருக்கும்." சுந்தரியின் பொருமல்கள் பெண்ணின் முன் விழலுக்கிறைத்த நீர்தான். சுகன்யா தாயின் முனகல்களை காதில் வாங்கிக் கொள்ளாமல், கள்ளக்குரலில் சினிமா பாடல்களை முனகியவாறு, மாடியில் நடை பழகுவாள் ... தனிமையில் இன்பம் கண்டுக் கொண்டிருப்பாள்.

சுகன்யா தலையணையை இரண்டாக மடித்து, தலைக்கு கீழே, உயரமாக போட்டு வசதியாக சாய்ந்து கொண்டாள். சென்னையிலும், மாணிக்கத்தின் வீட்டு மாடியில் அவள் விருப்பத்துக்கேற்றவாறு இடம் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அவளுக்கு. செல்வா வீட்டு மாடியில இப்படி ஒரு ரூம் இருக்கான்னு அவனை கேக்கணும்? அந்த ரூமை எங்களுக்குன்னு வெச்சுக்கணும். அடியே சுகன்யா, நீ இப்பவே பைத்தியம் மாதிரி என்னன்னமோ பகல் கனவு காணறே? மல்லிகா மனசுல என்ன ஓடிகிட்டு இருக்குன்னு யாருக்கும் தெரியலை.

செல்வாவை பார்த்துட்டு வந்த அப்பா, "வெரி குட் செலக்ஷன்"ன்னு முதுகை தட்டிக்குடுத்து சிம்பிளா பேச்சை முடிச்சுட்டார். அம்மா கேட்டதுக்கு, "எனக்கு ஒரு பெண் இருக்கா, அவளை உங்கப் பையனுக்கு பிடிச்சிருந்தா பாருங்கன்னு" சொன்னேங்கறார் - சுகன்யா என் பொண்ணுதான்னு ஒப்பனா நடராஜன் கிட்ட ஏன் சொல்லலை? ஏன் அப்பா இப்படி புதிரா பேசிட்டு வரணும்? இது மட்டும் சுகன்யாவுக்கு பிடிபடவில்லை.

கீழே ஹாலில் மாமா ரகுவிடம் அம்மா சத்தமாக பேசிக் கொண்டிருந்தாள். குரலில் மகிழ்ச்சியும், உல்லாசமும் கரைபுரண்டு கொண்டிருந்தது. முகம் சிவந்து பெருமிதத்தில் பளபளத்திருந்தது. கணவன், சென்னையில் தானாக திடீரென தன்னைப் பார்க்க வந்தது! மூவருமாக காஞ்சீபுரம் காமாட்சியம்மனைத் தரிசனம் பண்ணியது! ஆசை ஆசையாக தனக்கும், தன் பெண்ணுக்கும், பட்டுப் புடவைகள் வாங்கிக் கொடுத்து, மாமல்லபுரத்துக்கு அழைத்து சென்றது! தங்களுடன் குமார் விதவிதமாக போட்டோக்கள் எடுத்துக்கொண்டது! பெண்ணுடன் கடல் நீரில் குதித்து விளையாடியது என சுந்தரி தம்பியிடம் ஒன்று விடாமல் பெருமையடித்துக் கொண்டிருந்தாள்.

சுகன்யா, மல்லாந்து படுத்து வானத்தைப் பார்க்க ஆரம்பித்தாள். நிலவை ஏன் இன்னும் காணவில்லை? வானம் முழுவதும் எண்ணற்ற நட்சத்திரங்கள் சிறிதும் பெரிதுமாக அவளைப் பார்த்து கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. நட்சத்திரத்தை எண்ணிக்கொண்டிருந்தான்னு கதையில எழுதறாங்களே உண்மையிலேயே எண்ணிப் பார்க்க முடியுமா? நட்சத்திரங்களை எண்ணியவர்கள் யாராவது இருக்கிறார்களா? மொத்தம் ஆகாசத்துல எத்தனை நட்சத்திரங்கள் இருக்குதுன்னு கணக்கு இருக்கா?

கூகூள்லதான் தேடிப் பாக்கணும். சுகன்யா நட்சத்திரங்களை ஒன்று, இரண்டு, மூன்று என்று நிதானமாக எண்ணத்தொடங்கினாள். முப்பது வினாடிகளுக்குள் பொறுமையிழந்து எண்ணுதலை நிறுத்தி என்னால இதெல்லாம் முடியாதென் மனதில் தன் இயலாமையை நோக்கி சிரித்துக்கொண்டாள் அவள்.

மொட்டை மாடியில் தனிமையில் படுத்து, குருட்டுத்தனமாக எதையாவது இப்படி யோசிச்சு, மனசுக்குள்ளே சிரித்து, விட்டேத்தியா நான் என்னுள் மூழ்கி எத்தனை நாளாச்சு? மனம் சிலந்தி வலையாக விரிந்து கொண்டிருந்தது. மனமெனும் சிலந்தி வலையில் அன்று சிக்கியவன் செல்வாவும் அவன் நினைவுகளும்தான். நினைவுகள். நினைவுகள். நினைவுகள். நினைவுகள் சுகமானவை. மனதில் மலரும் நினைவுகளை, சுவைச்சு, அசை போட்டு, மகிழறதுலதான் எத்தனை சுகம்.

என் மனசுல செல்வாவைப் பத்திய நெனப்புகளும் ஆசைகளும் கொஞ்ச நஞ்சமாவா இருக்கு? இந்த ஆசைகளெல்லாம் எப்ப கைகூடி வரும்? ஆசைகள், கனவுகளில் சட்டுன்னு நிறைவேறிடும். கனவுல அனுபவிக்கற சுகத்தை உடலும் அனுபவிக்குமா? சில சமயத்துல கனவுல நடக்கற நிகழ்ச்சிகளால் ஏற்படற சுகமோ, துக்கமோ, உடலும் அனுபவிக்கற மாதிரித்தான் இருக்கு.

ஆசைகள் கூடி வரணும்ன்னா, உடலால அனுபவிக்கனும்ன்னா, செல்வாவும் என் கூட இருக்கணுமே? இப்பல்லாம் விடியற நேரத்துல அவன் நினைவுகள் எழுந்து என்னை செமையா இம்சை பண்ணுதே? சுகம்ன்னு இரவின் ஆரம்பத்துல நான் நினைக்கிற நினைவுகளே விடியல்லே என்னைக் கொல்லுதே? காதல் வயப்பட்டவள் மனம், தன் காதலனின் அருகாமைக்காக துடித்துக்கொண்டிருந்தது

இங்க வந்ததுலேருந்து என் மனசு ஏன் எதுலயும் ஒட்டமாட்டேங்குது? என்னமோ ஒரு புது எடத்துக்கு வந்துட்ட மாதிரி கண்ணு கொட்டின பாடில்லே. தன்னை மறந்த தூக்கம் வந்து, அந்த உறக்கத்துல நல்லதா ஒரு கனவு வரக்கூடாதா? அந்த கனவுலயாவது செல்வா என்னோட ஆசையா பேசக்கூடாதா? ஆசையா பேசறவன் மார்ல என் தலையை சாய்ச்சுக்கிட்டு கண் மூடி நான் நிம்மதியா தூங்கக்கூடாதா?

நிலவு மெல்ல மெல்ல தன் ஓளியை வீசத்தொடங்கிவிட்டது. நிலா; நிலா; நிலா வந்துட்டுது. நிலா ஆணா? இல்லை பெண்ணா? நிலவு ஒரு பெண்ணுன்னுதானே கவிகள் பாடறாங்க! சுகன்யாவின் மனது மகிழ்ச்சியில் துள்ளியது. இன்னைக்கு நிலவு எவ்வள அழகா இருக்கு? நிலா வெளிச்சமே மனசுக்குள்ள "குளுகுளு" ங்கற உணர்ச்சியைக் குடுக்குதே? ஆனா இன்னைக்கு இந்த நிலா ஒரு சோகையான வெளிச்சம் கொடுக்குதே?

பௌர்னமிக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கு? இந்த நிலா மட்டுமில்லேன்னா, நெறைய காதலர்களும், கவிஞர்களும் திண்டாடித்தான் போயிருப்பாங்க. இன்னைக்கு நான் தூங்கின மாதிரிதான். சுகன்யா தன் கண்ணிமைகளை மெல்ல மூடிக்கொண்டாள். ரெண்டு நாட்களாக சரியான உறக்கமில்லாததால் மூடிய விழிகளின் பின் எரிச்சல் இன்னும் மிச்சமிருந்தது.

நான் அவனைப் பாக்கணும்ன்னு துடிச்சிக்கிட்டு இருக்கற மாதிரி செல்வாவுக்கும் என்னைப் பத்திய தவிப்பும், என்னை சந்திக்கணுங்கற ஆவலும் இருக்குமா?அவன் ஏன் எனக்கு ஒரு போன்கூட பண்ணலை? அதை நினைக்கும் போது அவளுக்கு கோபம் தலைக்கேறி தலை வெடித்து விடும் போலிருந்தது. மல்லிகாவும் தன் புள்ளையை என் கிட்ட பேசவேணாம்ன்னு சொல்லி வெச்சிருக்காளா? அம்மா சொல்றதுதான் இவனுக்கு வேத வாக்கு; பொட்டைப் பய? எவ்வள நாள் தான் பேசாமா இருப்பான்? பேசறன்னைக்கு இருக்குது அவனுக்கு; கொடியேத்தி, வெடி போட்டு வாண வேடிக்கை நடத்தறேன்!

ஒரு வாரமா அவனை நான் பாக்கலை; பேசலை; ஏன் இப்படி என் மனசு அவனை நெனைச்சு நெனைச்சு உருகிப் போவுது? ஒரு வாரம் கூட என்னால என் மனசை ஒரு கட்டுக்குள்ள வெச்சுக்க முடியலையே? அம்மா எப்படி முழுசா பதினைஞ்சு வருஷம் தன் துணையை பிரிஞ்சு இருந்தாங்க? நேத்து நான் பைத்தியக்காரி மாதிரி என் லவ்வர் கிட்டேருந்து போன் வரலேங்கற வெறுப்புல அவங்க மேல கோபப்பட்டேனே? அம்மாகிட்ட சாரி சொல்லணும். சுகன்யாவின் பார்வை வெட்ட வெளியில் நிலைத்திருந்தது. 

"சுகா... எப்படியிருக்கேம்மா?"

"ம்ம்ம்... போரடிக்குது மாமா"

"ஏன்..."

"தெரியலை..."

"ஹூம்... தாத்தா, பாட்டி எல்லாரையும் பாத்துட்டு வந்தே போல இருக்கு?"

"ஆமாம்... மாமா.. ரெண்டு பேரும் என் மேல எவ்வளவு ஆசையா இருந்தாங்க தெரியுமா?"

"சோ ... யூ ஆர் ஹாப்பி .. டுடே.."

"ரொம்ப ரொம்ப...

"நாளைக்கு அம்மா ஸ்கூல் போனதும், நான் தாத்தா வீட்டுக்குப் போவப் போறேன்"

"செய் ... இங்க நீ தனியா என்னப் பண்ணப் போறே?

"ம்ம்ம் ..."

"சாயந்திரம் அவருகிட்ட பேசினேம்மா" ரகு தன் தொண்டையைக் கணைத்துக்கொண்டார்.

"யாருகிட்ட ..."

"செல்வா நேத்தைக்கு வீட்டுக்கு வந்துட்டானாம் ..."

"அவன் பேச்சையே எங்கிட்ட எடுக்காதீங்க" ...

"ஏம்மா கோபப்படறே?

"வீட்டுக்கு வந்தவன் எனக்கா போன் பண்ணி வந்துட்டேன்னு சொன்னான். மேனர்லெஸ் ஃபெலோ" அவள் குரலில் சினம் தொனித்தது.

சுகன்யா விருட்டென எழுந்து கட்டிலில் உட்க்கார்ந்து கொண்டாள். அவள் சற்றே குரலில் கோபத்துடன் பேசிய போதிலும், "அவன் நல்ல படியா வீட்டுக்கு வந்துட்டானா?" மனசு மகிழ்ச்சியில் துள்ளியது. காலையில குளிச்சுட்டு, சுத்தமா, நாலு செம்பருத்தி பூவையும், பவழமல்லியும் எடுத்துக்கிட்டு போய் தெரு கோடி பிள்ளையாருக்கு சாத்திட்டு வரணும்.

"சரிம்மா ... உங்கப் பிரச்சனையை நீங்களே பேசித் தீத்துக்குங்க" அவர் கேலியாகச் சிரித்தார்.

"அப்புறம்ம்.."

"நடராஜன், அந்த பைசாவை ... அதாம்மா நாம அட்வான்ஸ் கட்டினோமே ... அந்த அமவுண்ட்டை என் பேங்க் அக்கவுண்ட்டுக்கு அனுப்பிச்சிட்டேன்னு சொன்னாரு ... "

"சரி .... " சுகன்யா ரகுவின் தோளில் சாய்ந்துகொண்டாள்.

"உன் அப்பாகிட்ட நான் பேசிட்டேன். இந்த வீக் எண்டுல நடராஜனையும் அவங்க குடும்பத்தையும் நம்ம வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டு இருக்கேன்."

"ம்ம்ம் ..."

"நடராஜன், தன் தம்பி கிட்டவும், மச்சான் கிட்டவும் உங்க கல்யாண விஷயத்தை ஏற்கனேவே பேசிட்டாராம். ஒரு நாள் டயம் குடுங்கன்னார். என் ஒய்ஃப் கிட்டவும் பைனலா பேசிடறேன். நாளைக்கோ இல்லை, நாளை மறு நாளோ, எனக்கு போன் பண்றேன்னு சொன்னார்."

"சரி ... மாமா..."

"ஏன் உற்சாகமில்லாம பேசறே?"

"ரகு, இவ இங்க வந்ததுலேருந்தே சிடு சிடுன்னு இருக்கா ... என்னமோ, அங்க என் மாமியார் வீட்டுல ரொம்பவே சந்தோஷமா இருந்தா; திரும்பி வந்ததும் மூஞ்சை தூக்கி வெச்சுக்கிட்டு இருக்கா." சுந்தரி குறுக்கில் பேசினாள்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லே மாமா"

"சும்மா... சும்மா செல்வா கிட்ட பேசாதடீ... இனிமே நாங்க எல்லாத்தையும் பாத்துக்கிறோம்ன்னு சொல்லி வெச்சிருந்தேன்; அவனும் என்ன காரணமோ, நாலு நாளா இவ கிட்ட பேசலை போலயிருக்கு; அதான் மூஞ்சை கோணலாக்கிக்கிட்டு எல்லார் மேலயும் எரிஞ்சு எரிஞ்சு விழறா!" சுந்தரி கேலியுடன் பேசினாள்.

"அம்மா நீ சும்மாயிருக்கமாட்டே... கொஞ்ச நேரம் உன் வாயை வெச்சுக்கிட்டு?"

"சுகா... நீயும் உன் அம்மாவும் உங்க சண்டையை ஆரம்பிச்சிடாதீங்க" ரகு சிரித்தார்.

"அடியே; நான் சும்மாத்தான் இருக்கேன்... நீ என்னப் பண்றேன்னு உனக்கே நல்லாத் தெரியும்; மாமா இங்க மாடி ரூம்ல படுத்துக்கறாராம். நீ நேரா நேரத்துல கீழ வந்து படு; இங்க பனியா இருக்கு; ஈரக்காத்து உஸ்ன்னு அடிக்குது; உடம்பை கெடுத்துக்காதே. சுந்தரி மாடியை விட்டு இறங்கினாள்.

***



"அம்மா..."

"...."

சுந்தரி அப்போதுதான் தூக்கத்தை தழுவ ஆரம்பித்து இருந்தாள்.

"எம்ம்மா..."

"என்னாடி... நீ தூங்கேண்டி சித்த நேரம். என்னையும் செத்த நேரம் தூங்க விடேன்." சுந்தரி திரும்பி படுத்தாள்.

"அம்மா... சாரிம்ம்மா!" சுகன்யா தாயின் இடுப்பில் தன் கையைப் போட்டுக்கொண்டாள். அவளை நெருங்கி நெற்றியில் முத்தமிட்டாள்.

"என்னடா கண்ணு ... தூங்கறவளை எழுப்பி இப்ப எதுக்கு சாரி சொல்றே?"

"நேத்து... தேவையேயில்லாம உன்கிட்ட கோவப்பட்டேன் ..."

"ம்ம்ம்ம்...."

"என் மேல உனக்கு கோவம் இல்லையேம்மா?"சுகன்யாவின் குரல் தழுதழுப்பாக வந்தது.

"சீ ... சீய்... பைத்தியம் .. இப்ப எதுக்கு அழுவறே? என் செல்லத்து மேல நான் கோபப்படுவேனா? எனக்கு புரியலையா? செல்வா கிட்டேருந்து உனக்கு கால் வரலை. அந்த கோவத்துல நீ எங்கிட்ட ஏதோ நேத்து உளறினே? நான் அதை எப்பவோ மறந்துட்டேன்."

"சாரிம்மா..."

"நேத்தைக்குத்தானே செல்வா வீட்டுக்கு வந்திருக்கான். நாளைக்கு அவனே உனக்கு கால் பண்ணி பேசுவான் பாரு! இப்ப நீ நிம்மதியா தூங்கு.

"சரிம்மா" முனகிய சுகன்யா தன் தாயை நெருங்கி அவளை அணைத்துக்கொண்டாள்.