"அது ஒரு சுகமான உணர்வு.. வந்தா சந்தோஷமா இருக்கும்... வரலன்ன இன்னும் ரொம்ப சந்தோஷமா இருக்கும்.. ஹஹ்ஹா.." என்று சிரித்தான்..
"ஹஹ்ஹா.. ஒரு விதத்துல நீ சொல்லுறது கரெக்ட் தான்... ஏன் நீ யாரையும் காதலிக்கலையா?" என்றாள்..
"சீரியஸான காதல் எனக்கு இன்னும் யார் மேலயும் வந்ததில்ல.. கூடவே என் இயல்புக்கு அது வருமான்னு தெரியல.. தானா அமையுற விஷயம்தான..!! தீவிரவாதி மாதிரி என்னிக்காவது வந்து தாக்கும்.. அப்போ பார்த்துக்கலாம்.. ஹஹா.."- என்று சிரித்தான் கார்த்திக்....
"ஏன் அப்படி சொல்லுற?.. உன் கிட்ட கண்டிப்பா எந்த ஒரு பொண்ணாவது வந்து ப்ரோப்போஸ் பண்ணி இருப்பாங்களே?.." என்றாள்..
"உஹும்..." - சந்தோஷமாக சிரித்துக்கொண்டே சொன்னான் கார்த்திக்....
"பால்கனியோரம் நின்றுகொண்டு அவளுக்கு பதிலளிக்கும்போது அடிக்கும் காற்றில் அவனுடைய துணி லேசாக ஆடும்போது அதை கவனித்த சஞ்சனாவுக்கு எதோ நியாபகம் வர "கார்த்திக்.. அந்த பாக் எடுத்து குடேன்.. நான் உணக்கொன்னு தரப்போறேன்" என்றாள்..
அந்த பாக் திறந்து அவன் கையில் ஒரு காஸ்ட்லியான பிராண்டட் ஷர்ட்டும், பாண்டும் குடுத்து "இதை ஒரு தடவ போட்டு ட்ரை பண்ணி பாரேன்?.." - என்று ஒரு அண்பு வேண்டுகோள் விடுத்தாள்..
ஒன்றும் புரியாமல் முழித்தான் கார்த்திக்..
"என்ன யோசிக்குற?.." என்றாள்.
"எதுக்கு எனக்கு இது?.." அவள் தருவதை உடனடியாக வாங்க கூச்சப்பட்டான்..
"போன வாரம் ஒரு கடைக்கு போய் இருந்தேன்.. அப்போ இந்த ஷர்ட்டும், பாண்டும் உனக்கு போட்டா நல்லா இருக்கும்ன்னு தோணுச்சி.. பொதுவா எனக்கு க்ளோஸா இருக்குறவங்களுக்கு நான் இதை செய்வேன்.. அதான் உனக்கு வாங்கினேன்.. ஒரு தடவ போட்டு பாரேன்.." - ஆர்வமாய் கேட்டாள் சஞ்சனா..
அவள் அன்பாக குடுப்பதை அவனுக்கு வேண்டாம் என்றுசொல்ல மனமில்லை, அதே சமயம் அதெல்லாம் இவனுக்கு சரி வருமா என்றும் ஒரு குழப்பத்தில் இருந்தான்.. இருந்தாலும் அவள் குடுத்ததை எடுத்துக்கொண்டு பக்கத்தில் உள்ள அறையினுள் சென்று அவற்றை மாட்டிக்கொண்டு கண்ணாடியில் பார்த்தான்..
பார்த்தவனுக்கு ஒரு நிமிடம் சட்டென அவன் பார்வையே அவனை ஈர்த்தது.. கச்சிதமாய் எந்த ஒரு லூசான ஃபிட்டிங்கும் இல்லாமல் தெளிவாக ஸ்லிம் ஃபிட்டாக ஒரு ஷர்ட்டும், கால்களை எங்கு ஒட்டி பிடிக்க வேண்டுமோ அங்கு ஒட்டிப்பிடித்து எங்கு தார்ந்து இருக்க வேண்டுமோ அங்கு தளர்ந்து இருந்ததை எல்லாம் சுத்தி சுத்தி கண்ணாடியில் அவனை அவனே ஆச்சர்யமாக பார்த்து ரசித்தான்....
சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்து சஞ்சனாவின் முன் நின்றான்..
"வாவ்... செமையா இருக்க டா... கார்த்தியா நீ? எங்க ஒழிச்சி வெச்சி இருந்த இவ்வளோ ஸ்மார்டான ஒருத்தன இத்தன நாளா? நான் நினைச்சது 100% கரெக்ட்.. இதைப் பார்கும்போதே நினைச்சேன் உனக்கு சூப்பரா இருக்கும்னு. அதே மாதிரி சூப்பர் ஃபிட்டிங் டா...." - சஞ்சனா தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க கார்த்திக் எதுவும் பேசாமல் அமைதியாய் அவளுடைய உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் பார்த்தான்..
"அவளுக்கு பிடித்த விதத்தில் அவனைப் பார்க்கணும்னு எண்ணி அவனுக்கு டிரஸ் வாங்கி குடுத்து, அதை அவன் போட்டுப்பார்கையில் கண்ணாடியின் முன் தெரியும் அனைத்தும் அவனது பார்வையையும் கவர்ந்த பொழுது, சஞ்சனா மீது காதிக்குக்கு ஒரு இனம் புரியாத அன்பு ஏற்பட்டது....
"டேய்.. அப்பப்போ ஏண்டா ஆஃப் ஆயிடுற?.... ஏதாவது பேசு டா.. என்ன ஆச்சு?... கொஞ்சம் கூட பிடிக்கலையா?" - லேசான கவலையுடன் கேட்டாள் சஞ்சனா..
"கொஞ்சம் இல்ல சஞ்சு... ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.." என்று கொஞ்சம் எமோஷனலாக கார்த்திக் சொல்வதை அவன் உதடுகள் மறைத்தாலும் கண்கள் சஞ்சனாவுக்கு காட்டிக்குடுத்தது..
"அப்படியே இந்த டிரஸ்லையே கொஞ்ச நேரம் இரு.. இதுலதான் நீ பார்க்க நல்லா இருக்க.. என்றாள் சஞ்சனா.. அப்போது பொறுமையாக வந்து ஒரு ச்சாரில் அமர்ந்தான் கார்த்திக்..
அவனுக்குள் ஏற்பட்ட உணர்வை வெளிப்படுத்த தெரியாமல் ஒரு புறம் அவன் அமைதியாய் அமர்ந்திருக்க.. மற்றொரு புறம் அவள் செய்த விஷயம் அவனுக்கு பிடித்திருக்கிறதென்று சஞ்சனாவுக்கும் புரிந்திருக்க ஒருவருக்கொருவர் கண்களால் பார்த்துக்கொண்டு ஏதும் பேசாமல் அப்படியே அமைதியாய் அமர்ந்திருந்தனர்..
"அந்த சைலன்ஸை உடைக்க கார்த்திக் தன் தொண்டையை "உக்..ஹ்ம்.." என்று கரகரத்துக்கொண்டு ஆரம்பித்தான்..
"காதல் பத்தி நீ என்ன நினைக்குறன்னு சொல்லு.. நான் தெரிஞ்சிக்குறேன்.." என்றான் ஆர்வமாக..
"நீ சொன்ன மாதிரியே அது ரொம்பவும் அழகான ஒரு உணர்வு... ஆனா அதே சமயம் நீ சொன்ன மாதிரி அந்த உணர்வு வராம இருந்தா ரொம்ப சந்தோஷமா இருக்கும்னு எல்லாம் என்னால சொல்ல முடியல.. காரணம் எனக்கு என் சின்ன வயசுல ஏற்பட்ட ஒரு நாடகத்தோட உணர்வுதான் அது.." என்றாள்..
"என்ன நாடகம்..?.." மீண்டும் அதே ஆர்வம் அவனிடம்..
"ஒரு நாட்டோட அரசன் யாராலையும் தோற்கடிக்க முடியாத ரொம்பவும் சக்தி வாய்ந்த வலிமையானவனா இருப்பான்.. அவன் மனசுல ஒரு பொண்ணு மேல காதல் பூக்கும்.. அவளும் அவனை உயிருக்குயிரா காதலிப்பா.. ரெண்டு பேரும் சந்தோஷமா கல்யாணம் செஞ்சிட்டு ஒரு புது வாழ்கைய தொடங்கலாம்னு நினைக்கும்போது அவனுக்கு கடைசியா அவன் வீரத்தை பரிசோதிக்க ஒரு போர் வரும்..
அப்போ அவன் காதல் மனைவி அவன் கிட்ட கெஞ்சுவா... எனக்காக இனிமேற்கொண்டு எந்த போறுக்கும் போகாத.. நீ இல்லன்னா நான் அந்த நாளே இறந்துடுவேன்னு சொல்லி கதறி அழுவா.. அவனுக்கு இவ அழுவுறதை பார்த்து தாங்க முடியாது..
அதே சமயம் அவ கிட்ட "என் வீரத்தை நான் இன்னைக்கி வரைக்கும் நான் யார் கிட்டயும் அடமானம் வெச்ச்சதில்ல.. இது எனக்கு வந்திருக்குற கடைசி சவால்.. ரெண்டுல ஒன்னு பார்த்துட்டு வந்துடுறேன்னு" சொல்லும்போது அவன் உணர்வுகளை புரிஞ்சிகிட்டு தன் முந்தானையால ஒரு சின்ன துண்டை கிழிச்சி அவன் கைல கட்டிட்டு "இந்த துணிய பார்க்கும்போதெல்லாம் நான் உன் கூட இருக்குறேன்னு நினைச்சிக்கோ" அப்படின்னு சொல்லி அவன் காதல் மனைவி அனுப்பி வெப்பா..
"ரொம்பவும் மன திடத்தோடதான் போருக்கு போவான் ஆனாலும் அன்னிக்கி விதி அவன் உயிரை பறிச்சிடும்.. அப்போ அவன் ஆத்மாவை மேல்லோகத்துக்கு எடுத்துட்டு போக ஏஞ்சல்ஸ் வரும்போது அவங்க கிட்ட இவன் ஒரு விஷயம் சொல்லி கெஞ்சுவான்.." - இங்கே சில நொடிகள் நிறுத்தினால் சஞ்சனா..
"என்னன்னு சொல்லி கெஞ்சுவான்.."
"ஒரே ஒரு நாள்... ஒரு 24 மணி நேரம் எனக்கு உயிர் குடுங்க, நான் ஆசையா காதலிச்ச மனைவி நான் திரும்பி வருவேன்னு காத்திட்டு இருப்பா.. அவ கிட்ட நான் எவ்வளோ தூரம் அவளை காதலிக்குறேன்னு வெளிப்படுத்த ஒரே ஒரு நாள் குடுத்தா உங்களுக்காக நான் இன்னும் 1000 தடவ கூட சாகுறதுக்கு தயார்னு சொல்லி கெஞ்சுவான்.."
"அப்போ அந்த நாடகத்தை பார்க்கும்போது நினைப்பேன்.. காதல் அவ்வளோ பவர்ஃபுல் ஃபீலிங்கா ஒரு மனுஷனுக்கு இருக்குமான்னு.. அப்போ சின்ன வயசுல ஏங்கி இருக்கேன்.. எனக்கும் மனசளவுல அப்படி உயிருக்கு உயிரா நேசிக்குரதுக்கு யாராவது கிடைச்சா நல்ல இருக்கும்ன்னு.." - என்று சொல்லும்போது மீண்டும் லேசான கண்ணீர் துளி எட்டியது அவளின் கண்களில்..
"ஹ்ம்ம்.. ஆனா நான் நெனச்சது ஒன்னு.. எனக்கு நடந்தது ஒன்னு.." - என்று லேசாக சலித்துக்கொண்டாள்..
சில நிமிடங்கள் கழித்து "கார்த்திக்.. உன் கிட்ட ஒன்னு கேக்கவா?.." என்று சஞ்சனா கார்த்திக்கிடம் மெதுவாக ஒரு கேள்வியை எழுப்பினாள்..
"என்ன கேளு?.." - அவள் பேசுவது ஒவ்வொன்றையும் ரசித்துக்கொண்டிருந்தான் கார்த்திக்..
"நான் கேட்டவங்க எல்லாரும் இன்னிக்கி வரைக்கும் சொன்ன பதில்ல பாதி உண்மை இருந்திருக்கு, பாதி பொய் இருந்திருக்கு.. உண்மைய சொல்லுறாங்களா இல்ல பொய் சொல்லுறாங்களான்னு சொல்லுறவங்க குரல்ல இருக்குற வைப்ரேஷன்ல தெரிஞ்சிடும்.. நீ என்ன சொல்லுறன்னு பார்க்குறேன்.." - என்று சொல்லி கைகளை தேய்த்துக்கொண்டு கேள்வியை கேட்க தயார் ஆனாள் சஞ்சனா..
"ஹ்ம்ம்.. உன் கண்ணை மூடிக்க.." - எக்சைட்மென்டுடன் கேட்க்க ஆரம்பித்தாள் சஞ்சு..
"ஹஹா.. ஓகே.. மூடிட்டேன்.." - என்ன கேள்வியென்று கேட்க ஆர்வமானான் கார்த்திக்..
"அந்த அரசனை மாதிரி உன் வாழ்க்கைல நீ யாருக்காக 1000 தடவ இறக்குறதுக்கும் தயாரா இருப்பன்னு யோசிச்சி சொல்லு? நீ எவ்வளோ நேரம் வேணும்னாலும் யோசிச்சிக்கோ.. ஆனா சொல்லுற பதில் உண்மையா இருக்கணும்.." - என்று சஞ்சனா சொல்லி முடித்தவுடன்.. கார்த்திக் மிகவும் ஆழ்ந்து யோசித்தான்.. முதலில் சில நொடிகள், பிறகு அதுவே பல நிமிடங்கள் ஆனது...
""தூங்கிட்டியாடா. டேய்?" என்று உலுக்கினாள் சஞ்சனா..
"ஆங்.. இல்ல இல்ல.. யோசிச்சிட்டு இருந்தேன்.." - என்றான் மெதுவாக..
"ஹ்ம்ம்.. சரி சொல்லு யார யோசிச்ச?.." - சுவாரஸ்யமாக கேட்டாள் சஞ்சனா..
"எனக்கு எங்கம்மா தான் நியாபகத்துக்கு வந்தாங்க.." - கொஞ்சம் தொண்டையை விழுங்கிக்கொண்டே சொன்னான் கார்த்திக்..
"ஒஹ்.." - அவன் சொல்வது பொய் என்று உணர்ந்தாள் சஞ்சனா..
"சரி உண்மையா சொல்லு யார் யோசிச்ச?..." - மீண்டும் அவன் கண்களைப் பார்த்து கேள்வி எழுப்பினாள்..
"அதான் சொன்னேனே.. எங்கம்மான்னு.. உண்மையா தான் சொல்லுறேன்.." - என்று சமாளித்தான்..
"ஹஹ்ஹா.. டேய்.. உன் கண்ணு ஒன்னு சொல்லுது, உன் வாய் ஒன்னு சொல்லுது.. ஒழுங்கா உண்மைய சொல்லு.. நீ யார யோசிச்ச?.." - அவள் கண்டுபிடிப்பில் தெளிவாக இருந்தாள் சஞ்சனா..
"செப்பா.. நீ எவ்வளோ தூரம் கேட்டாலும் என் பதில் அதுதான்.. சும்மா சும்மா பொய் சொல்லுறன்னு சொல்லிட்டே இருந்தா அப்புறம் நிஜமாவே பொய் தான் சொல்லுவேன்.." - என்றான்..
"நீ இப்போ சொல்லுறதே பொய்தான்.... அடுத்து சொல்லுறது என்னவா இருந்தா என்ன?.." - என்றாள் காஷுவலாக..
"ஆமா உன்ன நினைச்சேன்.. ஹ ஹ.. போதுமா.." என்றான்..
"சும்மா ஜோக் அடிகாதடா.. உண்மைய சொல்லு.. ப்ளீஸ்.. - என்றாள் காஷுவலாக...
சில வினாடிகள் மௌனம் காத்தான் கார்த்திக்... பிறகு மெதுவாக வாய் திறந்து "சத்தியமா நான் உன்னதான் நினைச்சேன்.. நீ விளையாட்டா இப்படி பேசி ஒரு சந்தர்பத்தை எனக்கு ஏற்படுத்தி குடுத்ததுல இப்போ ஒரு தைரியத்துல சொல்லுறேன்.. தனிப்பட்டு இந்த விஷயத்தை உன் கிட்ட நேரடியா எப்படி சொல்லுறதுன்னு எனக்கு தெரியாது.. நான் முதல்ல சொன்னது பொய் தான்... நான் என் மனசுல 1000 தடவ திரும்பி திரும்பி சாகுறதுக்கு தாயார்னு யாருக்காகவாவது நினைக்க தோனும்னா அது உனக்காக மட்டும்தான் தோணும்...." - என்று மனதில் உள்ளவற்றை பட படவென சொல்லி முடித்தான் கார்த்திக்..
சஞ்சனா இவற்றை கேட்ட பிறகு என்ன பேசுவதென்று தெரியாமல் சில நொடிகள் அப்படியே அமைதியாய் நின்றாள்.... ஒரு நொடி அவளாள் கார்த்திக் சொல்வதை உண்மையாக நம்ப முடியவில்லை.. மற்றொரு புறம் அது நிஜமாக இருந்தாள் இந்த ஜென்மத்தில் அவள் பாக்கியம் செய்திருக்க வேண்டுமென்று எண்ணினாள்..
சில நிமிட மௌனத்துக்கு பிறகு சஞ்சனா கார்த்திகைப் பார்த்து
"ஏன் உன் மனசுல என்ன தோணுச்சி கார்த்திக்?" என்றாள்
"இன்னிக்கி நேத்து இல்ல சஞ்சு.. உன்ன முதல் நாள் பார்த்ததுல இருந்தே உன் மேல ஒரு ஈர்ப்பு இருந்துச்சி.. கூடவே நாம புஃப்பே
சாப்பிடும்போது நீ என் கிட்ட காமிச்ச கவனம், அக்கறை, அது போக மனசுல இருக்குறது எல்லாத்தையும் எந்தவிதமான தயக்கமும் இல்லாம என் கிட்ட பகிர்ந்துக்குற விதம், கூடவே கடந்த ஒரு மாசமா நாம ஒருத்தருக்கொருத்தர் ஃபோன்ல பேசிக்கும்போது எனக்கு மனசளவுல ஏற்படுற ஒரு விதமான ரிலாக்சேஷன்னு, கூடவே இன்னிக்கி உன் வீட்டுல எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள்.. இதயெல்லாம் விட முக்கியமா...." - என்று சொல்லவந்து நிறுத்தினான்..
"முக்கியமா?.. என்ன சொல்லு?" - என்றாள் சஞ்சனா..
"முக்கியமா எனக்கு எந்த மாதிரி டிரஸ் போட்டா நல்லா இருக்கும்னு நினைச்சி இன்னிக்கி நீ என் கிட்ட இப்படி ஒரு மாற்றத்தை பார்க்க நினைச்சதால தான் எனக்கே என்னை இப்படி பார்த்தா பிடிக்கும்னு கூட தெரிஞ்சிக்க முடிஞ்சிது.... உண்மைய சொல்லனும்னா எங்கம்மாவுக்கு அடுத்து ராகவ் என் கிட்ட இப்படியெல்லாம் இருடான்னு சொல்லி கூட கேட்டுகாத என் மனசு இன்னிக்கி நீ என்ன அதையே செய்ய சொல்லி கேட்டபோ என்னால அந்த வார்த்தைகள தட்ட முடியல.. அது ஏன்னு என்னாலையும் சொல்ல முடியல.. என் கிட்ட சில விஷயங்கள கண்ட்ரோல் எடுக்க கூடிய ஒரே ஆள் என் அம்மா மட்டும்தான், அவங்களுக்கு அடுத்து அதை என் கிட்ட செஞ்ச ஒரே ஜீவன் நீ ஒருத்தி மட்டும் தான்.." - ஒவ்வொரு வார்த்தையையும் ஆழ் மனதிலிருந்து நேரடியாக கொட்டினான் கார்த்திக்..
"ரொம்ப தெளிவா சொல்லுறேன் சஞ்சு, இப்படி ஒரு தோழியாவும், கைடாவும், எந்த நேரத்துலயும் வெளிப்படையாவும் உண்மையாவும் நடந்துக்குற உன்ன மாதிரி ஒருத்தி என் வாழ்க்கை முழுக்க என் கூட வந்தா நல்லா இருக்கும்னு சத்தியமா ஆசை படுறேன்.. என்னை ஏத்துக்குவியா?" - என்று கார்த்திக் அவன் கேள்வியை வைக்க, சஞ்சனாவின் கண்களில் கண்ணீர் மல்கியது..
"நான் எதாவது தப்ப சொல்லிட்டேனா?...." - கார்த்திக் அவளின் கண்ணீருக்கான அர்த்தம் புரியாமல் கேட்டான்..
"உ.. உன்ன என் மனசுல ஏத்துக்க முடியல கார்..த்திக்.." - சற்று அழுதுகொண்டே விம்மியபடி பேசினாள் சஞ்சனா....
"ஒஹ்.. புரியுது.. ஏன்னா நான் மத்த ஆம்பளைங்க மாதிரி இல்ல.. அதனாலதான?..." அவன் அப்பாவியாக கேக்க..
"வாய மூடு.. எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சதே நீ மத்த ஆம்பளைங்க மாதிரி இல்லைங்கற காரனத்தாலதான்.. ஸ்ஷ்".. சற்று மூக்கை உரிந்தபடி பேசினாள்..
"ப்ச்.. ஃபர்ஸ்ட் அழாம பேசு சஞ்சு.. எதுக்காக உன் மனசுல என்ன ஏத்துக்க முடியல? அதுக்கு காரணம் சொல்லு.. ப்ளீஸ்.." என்றான்..
சில நொடிகள் மௌனத்துக்கு பிறகு தொடர்ந்தாள்.. "உனக்கு என் விஷயங்கள் எல்லாமே தெரியுமே... எனக்கும் மிதுனுக்கும் நடந்தது.." என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்டான் கார்த்திக்....
"அது உன்ன அறியாம அவங்க உன் கிட்ட இருந்து எடுத்துகிட்டது.. அதுக்கு நீ என்ன செய்ய முடியும்?... நாய் கடிச்சா தொப்புல சுத்தி ஊசி போடுறதில்லையா?.. அந்த மாதிரி அந்த நாய் கடிச்ச கடிக்கு என்ன ஊசியா நினைச்சிக்கோ.. இவ்வளோ ஏன்?... இந்த விஷயத்துல எனிமி எனிமின்னு நான் சொல்லற என் ராகவ் கிட்ட இருந்தே நான் கத்துகிட்ட ஒரு நல்ல விஷயம் அது.. ஏற்கனவே அண்ணி இன்னொருத்தருடைய மனைவின்னு தெரிஞ்சேதான கல்யாணம் செஞ்சிகிட்டான்?.. அவங்க இப்போ சந்தோஷமா இல்லையா?.." - என்ன ஆனாலும் இவளை இழக்க முடியாதென்கிற தீர்கமான முடிவு கார்த்திக் மனதினுள் தெளிவாக தெரிந்ததால் அனைத்துக்கும் தயாராய் இருந்தான் அவன்..
நீண்ட நேரம் மௌனம் நிலவியது அவர்கள் நிற்கும் இடத்தில்...
"என்ன இருந்தாலும் என்னால உடனடியா ஒரு முடிவை சொல்ல முடியல கார்த்திக்.. என்ன மன்னிச்சிடு.. எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.. நான் நாளைக்கு பேசுறேன்.. ப்ளீஸ்... என்ன புரிஞ்சிக்கோ.." - என்று சொல்லி டைனிங் டேபிள் மீது தலை சாய்த்து படுத்தாள் சஞ்சனா...
அவளிடம் இதற்கும் மேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை அவனுக்கு.. "அப்போ நான் கிளம்புறேன்..." என்று சொல்லி அங்கிருந்து விடை பெற்றான்..
மதியம்... சாயுங்காலம்... இரவு.... நடு இரவு... இப்படி நேரம் கடந்து கொண்டே போனது.. ஆனால் சஞ்சனா ஒரு ரோபோவைப் போல அவள் வீட்டினுள்ளேயே சுத்தி சுத்தி வந்து கொண்டிருந்தாள், நேரம் அதிகாலை 4 மணி இருக்கும்.... இதற்கும் மேல் முடியாதென்று எண்ணி கார்த்திக் மொபைலுக்கு கால் செய்தாள் சஞ்சனா..
ஹலோ.. - பரபரப்புடன் ஃபோன் எடுத்தான் கார்த்திக்..
"டேய்.. மணி காலைல 4 ஆகுது, ஒரு ரிங் கூட போய் முடியல அதுக்குள்ள ஃபோன் எடுத்துட்ட?... நீ தூங்கவே இல்லையா?" - என்று மிகவும் ஆச்சர்யமாக கேட்டாள் சஞ்சனா..
"முக்கியமான பரீட்சை எழுதிட்டு ரிசல்டுக்காக காத்துட்டு இருக்கேன்.. எப்படி தூக்கம் வரும்?.. அதெல்லாம் சரி.. நீயும் தூங்கலையா?.. இத்தன மணிக்கு ஃபோன் பண்ணுற?" - என்றான் தெம்பாக..
சில நொடி மௌனத்துக்கு பிறகு தொடர்ந்தாள்...." நீ பாட்டுக்கு உன் மனசுல இருக்குறத கொட்டிட்டு போயிட்ட.. எனக்கும் ஒண்ணுமே நாள் முழுக்க ஓடல டா.. எனக்கு இப்போவே உன்ன பார்க்கணும் போல இருக்கு.. கொஞ்சம் வர முடியுமா?.. உன் கிட்ட நிறைய பேசணும்..." - அவள் குரலில் மிகுந்த ஏக்கம் தெரிந்தது அவனுக்கு..
"ஒஹ்.. அப்படியா?... ராத்திரியெல்லாம் ரொம்ப நேரம் தூங்காம இருந்ததால கொஞ்சம் தலை சுத்துது.. நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு பத்து மணிக்கு காண்டீன்ல பொங்கல் சாப்டுட்டு வரேன்.. சரியா?" - என்று கொட்டாவி விட்டுக்கொண்டே ஃபோன் கட் செய்தான் அந்த வாத்து...
"இது உண்மையாவே வாத்து மடயந்தான்.. எந்த நேரத்துல எப்படி பேசிட்டு ஃபோன் வெக்குது பாரு?... இவன மதிச்சி ஃபோன் பண்ணதுக்கு என்ன அடிச்சிக்கனும்..." என்று அவள் புலம்பி முடித்த அடுத்த செகண்ட் காலிங் பெல் சத்தம் கேட்டது..
எக்கச்சக்க சந்தோஷத்தில் ஓடிப்போய் கதவைத் திறந்தாள் சஞ்சனா.. வெளியே நம் கார்த்திக் முந்தைய நாள் அணிந்துகொண்டு சென்ற அதே புது பான்ட், ஷர்ட் கூட கழட்டாமல் அதே காஸ்ட்யூமில் அவள் செல்ஃபோனில் அழைத்த அடுத்த கணமே அப்படியே அவள் முன் அதிகாலை 4 மணிக்கு வந்து நின்றான்..
கதவை திறந்து பார்த்த சஞ்சனாவிடமும் ஒரு நீண்ட மௌனம்.. கார்திக்கிடமும் ஒரு நீண்ட மௌனம்.. இருவருடைய வாயும் பேசவில்லையே தவிர்த்து அவர்கள் மனதில் எழும் மௌனம் அதிகமாக பேசிக்கொண்டிருந்தது... அந்த மௌனராகம் அவர்களுகிடையில் எப்படி ரீங்காரமாய் ஒலித்ததென்று அடுத்த பதிவில் காண்போம்....