Friday, 6 November 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 29

ஹலோ...." - திருவிழா கூட்டத்தில் தொலைந்த குழந்தை தாயைத் தேடுவது போல எப்போது அவன் குரலைக் கேட்க முடியும் என்று தவித்தது சங்கீதாவின் மனது.

"ஹலோ சங்கீதா" - களைப்பான குரலில் பேசினான். இதுநாள் வரை இல்லாது இப்போது அவன் குரல் கேட்க்கையில் கன்னத்திலும், கைகளிலும் ஊசி முடிகள் எழுந்து நின்றது. மகிழ்ச்சியில் கண்கள் சிறிதளவில் அகலமானது, இதழ்கள் அதன் பங்குக்கு இரு புறமும் அழகாய் விரிந்தது இந்த தேவதைக்கு அவள் தேவனின் குரல் கேட்டது.

"sorry என்னால நேத்து ராத்திரி phone பண்ண முடியல அதான் மெசேஜ் அனுப்பினேன். ராத்திரி ஒன்னும் problem இல்லைல? - என்றான் ராகவ்.

"அதெல்லாம் ஒன்னும் இல்லைடா, முதல்ல உனக்கு காயம் எப்படி இருக்குன்னு சொல்லு?"

"இதெல்லாம் சின்ன விஷயம்தான் ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டாங்க, சாவியால கீரினதால எதுவும் septic ஆகப் போறதில்ல, இருந்தாலும் ஆயிடக் கூடாதுன்னு கொஞ்சம் மருந்து குடுத்து இருக்காங்க.


"பைத்தியமாடா நீ? அவனைத் தப்பிக்க வைக்க வேற வழி தெரியாதா என்ன? சும்மாவே ஓட விட்டிருக்கலாம் இல்ல, மனசுல பெரிய கமல்னு நெனைப்பா? ரொம்பவே ஓவர் ஆக்டிங் பண்ணுற!.. அங்கேயே உன்னை காலர் புடிச்சி ஒரு அறை அறைஞ்சிட்டு வந்திருக்கணும். தப்பு பண்ணிட்டேன்.

மௌனமாய் எதுவும் பேசாமல் சங்கீதாவின் அண்பு கலந்த அக்கறையான வார்த்தைகளை ரசித்தான் ராகவ். அவள் பேச பேச அது அவனுக்கு கீறல் விழுந்த நெஞ்சுக்கு மருந்தாய் இருந்தது

"ராகவ்..."

"உம்.."

இஸ்ஹ்ம்ம் (ஒன்றும் பேசாமல் கொஞ்சம் பேரு மூச்சு விட்டாள் சங்கீதா..)

"என்ன சொல்லுங்க..."

"ஒன்னும் இல்ல, (சில நிமிடங்கள் மௌனம்..) நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும் டா. வண்டி அனுப்பி வைக்க முடியுமா? I want to see you டா.. please" - எப்படியாவது பார்க்க வேண்டுமென்று அவள் மனது கேட்பதை ராகவ் உணர்ந்தான்.

"என்ன கேள்வி இது சங்கீதா, one minute please" - என்று சொல்லிவிட்டு பக்கத்தில் உள்ள intercom phone ல் சஞ்சனாவை அழைத்து "சங்கீதா வீட்டுக்கு உடனே நம்ம company வண்டிய அனுப்புங்க please" என்றான்.

அவன் பேசுவதை phone ல் கவனித்து "thanks டா.." - என்றாள் சங்கீதா.

"என்ன விஷயமா சங்கீதா பார்க்கணும்?" - என்றான் ராகவ் ஒன்றும் தெரியாதவனாய் .

"உம்.... பஜ்ஜி மாவு பத்தியும் வடை மாவு பத்தியும் பேசுறதுக்கு டா" - என்று பொய்யான கோவத்தில் சிரித்து பேசினாள் சங்கீதா.

"ஹா ஹா ஹா, சரி சரி சொல்லுங்க.."

"கொஞ்சம் மணசு சரி இல்லைடா.....(சில நொடி மௌனங்களுக்கு பிறகு தொடர்ந்தாள்) நீ ஏண்டா இப்படி எனக்கு ஒரு லெட்டர் குடுத்த?" - வார்த்தைகளை முடிக்கும்போது லேசாக அழ ஆரம்பிக்கும் குரல் கேட்டது ராகவ்க்கு.

சங்கீதா ப்ளீஸ்... என்னாச்சு? நான் சொன்னது தப்புன்னு தொனுச்சின்னா விட்டுடுங்க. நீங்க உங்க வேலை குடும்பம்னு கவனிங்க - என்று ராகவ் அக்கறையாக பேசிக்கொண்டிருக்கும்போது நடுவில் குறுக்கிட்டு நிறுத்தினாள் சங்கீதா.

"என்னுடைய தனிப்பட்ட இறுதி முடிவை நாந்தான் எடுக்கணும், அதைப் பத்தி சொல்லுறதுக்கு நீ யாருடா?" - அமர்ந்திருக்கும் chair நுனிக்கு நிமிர்ந்து வந்து எதிரில் உள்ள கண்ணாடியின் முன் முறைத்துக் கொண்டு சத்தமாக உரிமையுடன் கொஞ்சம் கோவமாக கத்தினாள். ஏதோ தன்னிடம் இருந்து பறிக்கப் படுவது போல.

"இல்ல அது வந்து..." - ராகவ் க்கு ஒரு நொடி ஏன் இப்படி பேசினோம் என்றிருந்தது. இன்று வரை சங்கீதா இப்படி கோவத்தில் கத்தி அவன் கேட்டதில்லை.

"Will you just shut up?" - மீண்டும் குரல் உச்சத்துக்கு போனது சங்கீதாவுக்கு... கண்ணாடியில் கண்கள் முறைத்தன.

"நீ கொட்ட வேண்டியத எல்லாம் கொட்டிட்ட நான் என்ன சொல்லணும் னு நினைக்கிறேனோ அதை நான் தான் சொல்லணும், அதுக்கும் நீயே பதில் சொல்லிகிட்டா அப்புறம் நான் நடுவுல உப்புச்சப்பானா?"

correct...

correct னா?, அப்போ நான் உப்புச்சப்பானா?

அய்யோ.... இல்ல இல்ல உங்க முடிவு உங்கள் கையில் னு நீங்க சொன்னது correct னு சொன்னேன். (சில நொடிகளுக்குப் பிறகு தொடர்ந்தான்) ஹ்ம்ம்.. என் கடிதத்துல ஒரு விஷயம் எழுத மறந்துட்டேன்.

என்னது? - சங்கீதாவின் முகத்தில் ஒரு மெல்லிய சிரிப்பு இருப்பதை அவள் முன்பு இருக்கும் கண்ணாடி மட்டும் அறிந்தது. ஆனால் அவனுடன் பேசும்போது வாயின் மீது கை வைத்து மூடி அந்த சிரிப்பின் சத்தத்தை மறைத்தாள் இந்த தேவதை.

"வெடிக்கும் எரிமலையிடம் என் தேவதையின் கோவத்தைப் பார்த்தால் நீ கூட அமைதியாய் அடங்கி விடுவாய்" னு எப்படி? correct தானே?" - என்று ராகவ் சொல்ல.... அதற்கு பாதி கோவமும், பாதி சிரிப்பும் கலந்து என்ன பேசுவதென்றே தெரியாமல் அமைதியாய் இருந்தாள் சங்கீதா.

"ஹலோ என்ன ஆச்சு?" - என்றான் ராகவ்.

"ஒன்னும் இல்ல." - மெதுவாக முந்தானையின் நுனியை பிடித்து திருகிக் கொண்டே சத்தமில்லாமல் முணுமுணுத்தாள் . - இது அப்படியே ஒரு காலத்தில் ரமேஷ் அவளது வாழ்க்கையில் இருக்கும்போது சங்கீதாவுக்கே உரிய அக்மார்க் குணம்..... ஏன் பல பெண்களுக்கே உரிய குணமும் கூட.

"ஒன்னும் கேட்கல, திருப்பி சொல்லுங்க please" - என்றான் ராகவ்.

"ஒன்னும் இல்ல னு சொன்னேன்.." - சத்தமாக கத்தி கூறினாள்..

"நான் ஒன்னு கேட்டா தப்பா நினைசிகாதீங்க ப்ளீஸ்.."

"நீ கேட்க்குறதை ப் பொறுத்துதான் அது இருக்கு.. கேளு'" - என்றாள்

"சரி, ஆரம்பத்துல நல்லாதானே பேச ஆரம்பிச்சீங்க? ஏன் போக போக என் கிட்ட கோவத்துல கத்துறீங்க?"

"கோவமா..? கோவம் இல்லையே.... எதுக்கு நான் உன் கிட்ட கோவப்ப்படனும்?"


"ஒஹ்ஹ்... அப்போ அதுக்கு பேரு கோவம் இல்லையா?"

"இல்ல...." - கண்களை மூடி மென்மையாக சிரித்து பேசினாள்.

"நிஜம்மா?"

சங்கீதாவிடம் மௌனம்....

"ஹலோ ஹலோ ஹலோ...."

மீண்டும் சங்கீதாவிடம் மௌனம்....

"சரி line கட் ஆயிடுச்சி போல இருக்கு...." - என்று சொல்லி ராகவ் mobile cut செய்யும் போது...

"ஹலோ...." - என்றாள் மெதுவாக.

"ஹ்ம்ம்... line cut பண்ணுறேன்னு சொன்னாதான் சத்தமே வருது.."

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல நான் பேசிட்டுதான் இருந்தேன் உனக்கு கேட்கல.. காது செவிடாகிடுச்சி போல இருக்கு" - மீண்டும் அவளின் முந்தானையின் நுனி அவளிடம் மாட்டிக்கொண்டு "யாராவது காப்பாத்துங்க" என்று தவித்தது.

"நீங்க மனசுக்குல்லையே பேசிக்கிட்டா எனக்கு எப்படி கேட்க்கும்? ஹா ஹா..."

"சப்.. போடா..." - இப்போது காற்று அதிகம் + குரல் கம்மி சங்கீதாவிடம்.

"ஹா ஹா ஹா...." - சங்கீதாவின் மனதை திருடிய அதே வசீகர சிரிப்பு ராகவிடம்.

"உன் மனசுல ஏன் என்னைப் பத்தி அப்படி ஒரு எண்ணம் ராகவ்?"

"என்ன எண்ணம்?"

"உனக்கு தெரியும்? பதில் சொல்லு.."

"ஹ்ம்ம்.... நிறைய காரணம் உண்டு.."

"என்னென்ன சொல்லு, எனக்கு தெரிஞ்சிக்கணும். மணசு குழப்பத்துல இருக்கு.. உன்னைப் பத்தின விஷயத்தை உன் கிட்டேயே பேச வேண்டியதா இருக்கு."

"ஏன்?"

என்ன ஒரு confusion இருந்தாலும் உன் கிட்டதான் மணசு விட்டு பேசுவேன், நீ சொல்லுற பதில்ல அர்த்தம் இருக்கும், convincing ஆ இருக்கும். அதாண்டா... இதைப் பத்தி நான் ரம்யா கிட்ட கூட பேசல. கூடவே மத்தவங்க கிட்ட நான் இதைப் பத்தி பேசவும் கூடாது.... (சில வினாடிகள் மௌனம்) ப்ளீஸ் பேசு ராகவ்."

"எனக்கு மனசுல..." - ராகவ் பேச ஆரம்பித்தான்..

"டிங்.... டிங்...." - calling bell அடித்தது.

சரி வண்டி வந்திருக்கும்னு நினைக்குறேன். வந்து பேசுறேன் - என்றாள்.

"ஒஹ் சரி சரி வாங்க, I will be waiting for you.." - ராகவ், சங்கீதா இருவருமே ஒருவருக்கொருவர் எப்போது தங்களது முகங்களைப் பார்த்துக் கொள்வோம் என்று அடி வயற்றில் கிச்சி கிச்சி ஏற்படும் வண்ணம் பரவசம் அடைந்தனர்.

கதவைத் திறந்தாள் சங்கீதா. டிரைவர் தாத்தா "வணக்கம் மா, எப்படி இருக்கீங்க?" - என்று வழக்கமாக வழிய "இருங்க ஒரு நிமிஷம் வந்துடுறேன்" என்றாள்.

உள்ளே சென்று அவளுடைய டைரியும் பேனாவையும் எடுத்துக் கொண்டு சேலையை கண்ணாடியின் முன்பு எப்படி இருக்கிறது என்று பார்த்தாள். வலது புறம், இடது புறம் என்று திரும்பி பார்த்துவிட்டு ஏதோ ஒரு நொடி யோசித்தாள். பிறகு லேசாக கொசுரை தொப்புளுக்கு கீழ் கொஞ்சமாக இறக்கி இடுப்பின் இரு புறமும் V வடிவில் கொண்டு சென்று பின்புறம் இடுப்புக்கும் முதுகுக்கும் இடையே இருக்கும் சதைப் பகுதியை மறைத்து பக்கவாட்டிலும் மறைத்தவாறு கட்டி இருந்தாள். - இந்த வகையில் கட்ட வேண்டும் என்பது அவளுடைய பிரத்யேக விருப்பம். அதை அட்ஜ்ஸ்ட் செய்து கட்டிக்கொண்டு கண்ணாடியை ப் பார்த்து "hereafter I will live my life like how I want to lead it & will never allow it in other's hand & I dont bother about what others think" என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு பக்கத்தில் உள்ள புது குண்டுமள்ளியை தலையில் வைத்துக் கொண்டு கிளம்பினாள்.


(தமிழில்: (hereafter I will live my life like how I want to lead it & will never allow it in other's hand & I dont bother about what others think) - என் வாழ்கையை இனி என் விருப்பப்படிதான் வழி நடத்திக் கொள்வேன், யாருக்கும் அதில் குறிக்கிட இனி உரிமை கிடையாது. மற்றவர்களைப் பற்றி எனக்கு கவலையும் கிடையாது.)

டிரைவர் தாத்தா மிதமான வேகத்தில் Benz காரை ஒட்டிச்செல்லும்போது பின் இருக்கையில் கண்களை மூடி சாய்ந்து யோசித்துக் கொண்டிருந்தாள். வாய் நிறைய தோழிகளும், கூட்டமும் அவளது நடனத்தை பாராட்டியதை நினைத்து மகிழ்ந்தாள், தொகுத்து வழங்கும்போது ஆங்கிலத்தில் பேசிய உச்சரிப்பை ரொம்பவும் கச்சிதமாக இருந்தது என்று பலரும் பாராட்டியதை எண்ணி சிலிர்த்தாள். பிரபலங்கள் பலர் அவள் கண் முன் நின்று பாராட்டியது அவளுக்கு வாழ்வில் என்றும் மறக்க முடியாத சந்தோஷ பதிவுகள். சிறு வயதில் இருந்து ஒரு முறையாவது நேரில் பார்க்க முடியுமா என்று ஏங்கிய ரஜினியை பக்கத்தில் பார்த்துப் பாராட்டு பெற்றதை எல்லாம் நினைத்து கண்களை மூடி சந்தோஷத்தில் மெளனமாக சிரித்துக் கொண்டாள். இவைகள் அனைத்தையும் எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு "இதுக்கெல்லாம் காரணம் நீதாண்டா, எனக்குள்ள இருக்குற இன்னொருத்திய எனக்கு காமிச்சிட்டடா, you are simply great da...." என்று அவள் உதடுகள் மெளனமாக ராகவைப் பாராட்டி உச்சரித்துக் கொண்டிருந்தது.

கார் நேற்றைய அலங்காரங்கள் முழுவதுமாய் கலைக்காமல் இருந்த IOFI வளாகத்துக்குள் சென்றது. ராகவின் cabin entrance முன்பு நிறுத்தப் பட்டிருந்த வண்டியின் கதவை சஞ்சனா திறந்து.

"வாங்க சங்கீ.... என்ன.. நல்ல தூக்கமா நேத்து...."

"ஹ்ம்ம்.... தூக்கம் இல்லை, முழுக்க முழுக்க துக்கம் தான்" - என்றாள் சங்கீதா

"ஏன் என்னாச்சு?"

"ஒன்னும் இல்ல personal...." - என்று சங்கீதா சொல்ல, நாகரீகமாக மேலும் தொடராமல் நிறுத்திக்கொண்டாள் சஞ்சனா.

"ராகவ் பார்க்கணும், எங்கே இருக்கான்?" - ஆர்வமாக அவனது cabin நோக்கி பார்த்தாள் சங்கீதா.

அவன் clinic ல இருக்கான்.. - என்று சஞ்சனா சொன்னதும்

"clinic அ என்னாச்சு?" - ராகவ் பேசும்போது இதை நம்ம கிட்ட சொல்லவே இல்லையே என்று லேசாக குழம்பினாள்.

நெஞ்சுல ஏதோ கல்லு கொஞ்சம் குத்திடுச்சாம், சரி நேத்து ராத்திரி படபடக்க ராகவ் என் கிட்ட audiences & celebrities (தமிழில்: பார்வையாளர்கள் மற்றும் பிரபலங்கள்) பார்த்துக்கோ நான் இதோ வந்துடுறேன் ன்னு சொல்லிட்டு அவசர அவசரமா ஓடினான், என்ன விஷயம் மேடம்? - என்று கேட்க..

"அது ஒன்னும் இல்லை சஞ்சு.... சமயம் வரும்போது சொல்லுறேன். இப்போ ராகவ் எங்கே?"

"சரி சரி இந்தப்பக்கம் வாங்க" - என்று சொல்லி IOFI வளாகத்துக்குள் இருக்கும் executives personalized clinic உள்ளே அழைத்து சென்றாள். (தமிழில்: executives personalized clinic: உயரதிகாரிகளின் தனிப்பட்ட மருத்துவமனை.)

கதவைத் திறந்ததும் சங்கீதாவுக்கு லேசான மனக் கஷ்டம், காரணம் ராகவின் நெஞ்சில் கெட்டியான பஞ்சு வைத்து மார்பில் பிளாஸ்டர் போடப் பட்டிருந்தது.

தலை முடியை free யாக விட்டு hair band போட்டிருந்தாள் சங்கீதா, வழக்கமான குண்டு மல்லியுடன், dark maroon சேலையில் பளிச்சென இருந்தாள். சஞ்சனவுடன் உள்ளே சென்று ராகவ் அருகே அமர்ந்தாள்.

"ஹாய்... வாங்க சங்கீதா.." - உற்சாகமாய் சொன்னான் ராகவ்.

"சஞ்சனா we want to have some private time, hope you understand, please" - என்று ராகவ் சொல்ல சஞ்சனா அங்கிருந்து விடைப் பெற்றாள்.

(தமிழில்: we want to have some private time, hope you understand, please- எங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் தனிமை வேணும் ப்ளீஸ்..)

சங்கீதாவின் இடுப்பருகே அவள் சேலை கட்டிய புதிய விதத்தை ராகவ் பார்க்க தவறவில்லை. வழக்கத்துக்கு மாறாக அவள் style இருப்பதைப் பார்க்கையில அவன் காதலை அவள் ஒப்புக் கொள்ள வாய்ப்பிருக்கிறது என்று நம்பிக்கை தந்தது ராகவ்க்கு.

அவனது special ரூம் உள்ளே ஒரு சிறிய TV ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் சில நேரம் என்ன பேச ஆரம்பிப்பது என்று தெரியாமல் அமர்ந்திருக்க ராகவ் லேசாக தொண்டையை "க்ஹம்" என்று கரகரத்தான்..



இப்போது சங்கீதாவே ஆரம்பித்தாள்.

"சொல்லு ராகவ், எது வெச்சி என்னை உன் மனசுல எனக்கு அந்த இடம் குடுத்த?" - வீட்டில் இருந்து கிளம்பும்போது எதில் விட்டாளோ அதில் இருந்து துல்லியமாக ஆரம்பித்தாள் சங்கீதா.

"அட.... correct ஆ எங்கே phone ல விட்டீங்களோ அதுல இருந்து ஆரம்பிக்கிரீங்களே? ஹா ஹா" - ராகவ் பேசுகையில் சங்கீதா தன் தலையை குனிந்து வைத்திருந்தாள் நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை அவளாள்.

"சப்.. கேள்விக்கு பதில் சொல்லு ராகவ்." - மீண்டும் முந்தானை நுனியை எடுத்து திருக, அதை ராகவ் கவனிக்கிறான் என்று தெரிந்து அதை கீழே விட்டாள்.

"ஹ்ம்ம்.. சொல்லுறேன்.... என் வாழ்க்கைல இன்னிக்கி வரைக்கும் எல்லாமே எனக்கு நான் மட்டுமே தான் செஞ்சிக்கிட்டேன். படிப்பாகட்டும், வேலைல முன்னேருறதாகட்டும், என் எதிரிங்க கிட்ட என்னை காப்பதிக்குறதாகட்டும், என் போட்டியாளர்களை சமாளிக்குறதாகட்டும், என் சந்தோஷம், என் தனிமை, என் விருப்பு, வெறுப்புகள், என் ரசனைகள் எல்லாமே ரொம்ப ரொம்ப வித்யாசமானது. எல்லார்கிட்டயும் நட்பா பழகுவேன் ஏன்னா அது என்னோட பதவிக்காக, ஆனா மனசார சொல்லனும்னா என் குணத்தை சரியா புரிஞ்சி நடந்துக்குற பெண் யாரும் என் வாழ்க்கைல இன்னிக்கி வரைக்கும் வரல.

"ஆனா உனக்கு இன்னும் வயசு இருக்கு ராகவ்.." - இப்போது ராகவின் முகத்தை நேரில் பார்த்து பேசினாள். ஆனால் அந்த கண்களை மட்டும் அவளாள் முடியாது, அப்படி ஊடுருவிப் பார்த்து மனதின் ஆழத்துக்கு செல்லும் சக்தியுடையது அவன் கண்கள்.

"வயசு கம்மியா இருக்கட்டும், ஆனா என் கிட்ட ஒரு குணம் இருக்கு, ஒரு விஷயம் புடிச்சி போறா மாதிரி இருந்தா அதை ப் பத்தி நிறைய யோசிச்சி யோசிச்சி பார்ப்பேன், ஒரு தடவைக்கு பத்து தடவ யோசிப்பேன். கடைசியா என்னால அந்த பெண் இல்லாம வாழவே முடியாதுன்னு என்னை உள்ளுக்குள்ள ஏதோ ஒன்னு தள்ளி விடுற அளவுக்கு என் மணசு எப்போ என்னை கட்டாயப் படுத்துதோ அப்போதான் நான் என் காதலை உணரனும் னு யோசிச்சி இருந்தேன். உங்களுக்காக சொல்லல சத்தியமா இன்னிக்கி வரைக்கும் யார் கிட்டயும் எனக்கு இப்படி தோணல. (சில நொடிகள் மௌனத்துக்கு பிறகு....) உங்களைத் தவிர....." - என்று முடித்தான் ராகவ்.

சங்கீதாவிடம் ஆழ்ந்த மௌனம்...

மனசளவுல நீங்க உங்களுக்கு ஏதாவது குழப்பம் இருந்தா என் கிட்ட பேசி கொட்டிக்குறேன்னு சொன்னீங்க, ஆனா நிஜத்துல நானும் உங்க கிட்ட பேசும்போதுதான் அப்படி feel பண்ணுறேன். யார் கிட்டயும் அந்த wooden piece மேட்டர் நான் சொன்னதில்லை. ஆனா உங்க வேலைல நீங்க காமிக்குற கெட்டிக் காரத்தனம் என்னை வியக்க வெச்சது. அதுதான் உங்க மேல நம்பிக்கை வெச்சி இந்த விஷயத்தை உங்க கிட்ட சொல்லலாம்னு தோன வெச்சது. ஆரம்பத்துல இது உங்களால முடியாதுன்னுதான் நானும் நினைச்சேன் ஆனா அதுக்கான checmical composition கண்டு புடிக்குற அளவுக்கு முயற்சி எடுத்து இருக்கீங்க.

"ஆனா அதெல்லாம் நான் என்னோட சொந்த விருப்பதுல உனக்காக உதவ செஞ்சது ராகவ்... அதுக்காகவா என்னை நீ காதலிக்குற?" - அவனுடைய வயதை மனதில் வைத்து ஏன் இந்த காதலில் அவன் விழ வேண்டுமென்ற எண்ணத்தில் சொன்னாள் சங்கீதா....

"இல்லை.... என்னைக் கொஞ்சம் பேசி முடிக்க விடுறீங்களா? ப்ளீஸ்"

"இஸ்ஹ்ம்ம் (கொஞ்சம் பெருமூச்சுவிட்டு) சரி சொல்லு..." - என்றாள்.


"ஒரு உண்மைய சொன்னா ஒத்துகுவீன்களா?"

மௌனமாய் கேள்விக்குறியுடன் ராகவின் முகத்தைப் பார்த்தாள் சங்கீதா..

"what?.. கேட்கவா?"

"ஹ்ம்ம் கேளு.."

"உங்க கிட்ட நான் மணிக்கணக்குல பேசும்போது எல்லாம் நீங்க என் பேச்சை மட்டும் ரசிச்சா மாதிரி எனக்கு தெரியல.. ஏதோ ஒன்னு உங்களை என் பக்கம் கவனமா பார்க்க வெச்சி இருக்கு அது என்னென்னு எனக்கு தெரியாது, but I could feel it. இது மட்டும் எனக்கு நிச்சயமா புரிஞ்சிக்க முடிஞ்சிது. கரெக்ட் தானே?"

(உள் மனதில் பழைய மறக்க முடியாத ரமேஷ் காதல் தான் அதற்கு காரணம் என்று சங்கீதாவுக்கு echo ஒலித்தது, ஆனால் வாய் திறந்து சொல்லவில்லை)

அது உண்மையா இல்லையா?

ராகவின் கேள்விக்கு ஆழமான மௌனம் இருந்தது அவளிடம்.

"வெளிப்படையா பேசலாம் ப்ளீஸ்... ஹானஸ்ட் பதில் வேணும்." - ராகவ் தொடர்ந்தான்

மீண்டும் மௌனமாகவே இருக்க ராகவ் "இந்த மௌனத்தை நான் ஆமாம் னு எடுத்துக்கவா?"

இதற்கும் சங்கீதாவிடம் மௌனம்...

சரி அப்போ நான் சொன்னது உங்களை பொருத்த வரைக்கும் correct... இப்போ என்னோட பதிலை சொல்லுறேன்.
உங்க மனசுல எந்த ஆம்பளைங்க கூடவும் நீங்க இப்படி மணிக் கணக்குல பேசினது இல்ல, அது மட்டும் இல்லாம இந்த function க்கு compering பண்ண உங்க அந்தஸ்துல இருக்குற பெண் யாரா இருந்தாலும் யோசிப்பாங்க. ஆனா நீங்க எனக்காக ஒத்துக்கிட்டீங்க. இதெல்லாம் வெச்சிப் பார்க்கும்போது உண்மையிலேயே உங்களுக்கு என் மனசுல ஒரு உன்னதமான இடம் இருக்குன்னு தெரிஞ்சுது. உலகத்துல கோடிக் கணக்குல சம்பாதிக்கிறது, ஒரு உயர் பதவிக்கு கிடு கிடுன்னு முன்னேருறதெல்லாம் எனக்கு பெரிய காரியமே இல்லை. ஆனால் பொறந்ததுல இருந்து இப்போ வரைக்கும் மனசளவுல நான் அண்பு விஷயத்துல ரொம்பவே காயப் பட்டு நொந்திருக்கேன். உண்மையாவே உலகத்துல சாதனை படைக்கிற விஷயம் எதுன்னு என்னை கேட்டால் அது ஒரு நல்ல குணாதிசயங்கள் உள்ள குறிக்கோள்கள் உடைய, சமுதாயத்துல எடுத்துக் காட்டா இருக்குற ஒரு மரியாதை வாய்ந்த பெண்ணோட இதயத்துல இடம் பிடிக்குறதுலதான் இருக்கு. அப்படி நான் இடம் பிடிச்சி இருக்கேனா னு எனக்கு தெரியாது. ஆனா நான் சொல்ல விரும்பினதை சொல்லிட்டேன். சத்தியமா நீங்க எனக்குன்னு வெச்சி இருக்குற அன்பை நான் இழக்க விரும்பல.

"நான் கேட்க்குறேன்னு தப்பா நினைக்காத ராகவ், உன் காதல் என் வெளித் தோற்றத்தைப் பார்த்து வந்திருக்கலாம் இல்ல? ஏன்னா உன் வயசு அப்படி டா, என்னை தப்பா நினைக்காத உன் மேல இருக்குற அக்கறையில்தான் கேட்க்குறேன்."

"ஹா ஹா... எல்லாத்தையும் logic படி யோசிக்குற நீங்க எப்படி இதை மட்டும் தப்பா யோசிக்குறீங்க சங்கீ, எனக்கு இருக்குற காசுக்கும் அந்தஸ்துக்கும் காம சுகம் மட்டும் தான் வேணும்னா நான் தினமும் ஒரு சினிமா நடிகை கூட இருக்க முடியும். ஆனா இது உடல் உரசுர சந்தோஷம் இல்ல, மணசு உரசுர சந்தோஷம். என் மனசுல உங்க நினைவுகளும் உணர்வுகளும் உரசுரது எனக்கு எந்த விஷயத்துலயும் கிடைக்காத சந்தோஷம்.

"என்.. எனக்கு.. (பேச தயங்கினால் சங்கீதா.) ஆனா நான் ஏற்கனவே கல்யாணம் ஆணவ, ரெண்டு பசங்களுக்கு தாய், அதையும் தாண்டி தான் யோசிச்சியா?"

"ஹ்ம்ம்... வாழ்க்கைல நான் இன்னைக்கி வரைக்கும் வரை முறைப் படி தான் வாழனும் னு வாழ்ந்திருந்தா ஒரு மண்ணாங்கட்டியும் சாதிச்சி இருக்க முடியாது. என் வேலை உட்பட. அதுக்காக குறுக்கு வழியைத் தேர்ந்தேடுப்பவன்னு தப்பா நினைக்க வேண்டாம், மனசுக்கு ஒரு விஷயம் பிடிச்சி அதுவும் நம் கண்ணு முன்னாடி இருக்குறப்போ அதை எடுத்துக்குறதும் எடுத்துகாததும் நம்ம விருப்பம். எந்த விஷயத்தையும் அடைய ஒரு protocol (வழிமுறை) இருக்கு, அந்த வகையில ரொம்ப ஆழ்ந்த சிந்தனைக்கு அப்புறம் தான் என் காதலை உங்க கிட்ட ஒரு கடிதம் மூலமா சொன்னேன்...... தடைகளை எல்லாம் தாண்டிதான் என் முடிவை நான் எடுத்தேன். அதாவது நான் என் காதலைப் பொருத்த வரை என்னை விட முதிர்ச்சி அடைஞ்ச பெண், இரண்டு குழந்தைக்கு அம்மா, அப்படின்னு எல்லாம் யோசிக்கல, என்னைப் பொருத்த வரை உங்களை நான் மனசார விரும்புறேன். ஒரு ஒரு தடவையும் உங்க கூட பேசும்போது என் மனசுல ஏற்படுற சந்தோஷம் நான் சம்பாதிச்சி இருக்குற அத்தனை காசையும் எங்கயாவது கொண்டு போய் கொட்டினாலும் கிடைக்காது. எனக்குன்னு இன்னைக்கு ஒருத்தரை நான் நம்பி எல்லாத்தையும் பகிர்ந்துக்க முடியும்னா அது நீங்க ஒருத்தர் மட்டும்தான். infact ஒரு விஷயம் சொல்லவா?

சொல்லு.. - நிமிராமல் குனிந்துகொண்டே கேட்டாள்.

என் காதலி எப்படி இருக்கணும் னு யோசிச்சேன் தெரியுமா?

எப்படி? - சற்று பணித்த கண்களுடன் குனிந்து அவனது பதிலை மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கினாள்.

"என் மனசுல இடம் பிடிக்குறவ எனக்கு வெறும் காதலியா இருக்கக்கூடாது, அக்கறை காமிக்குறதுளையும் அண்பு செலுத்துறதுலயும் அவ எனக்கு இன்னொரு அம்மாவா இருக்கணும் னு தான். அந்த உணர்வு எனக்கு உன் கிட்ட கிடைச்சுது சங்கீ.."

இப்போது அவனை நிமிர்ந்து பார்த்தாள், இந்த வார்த்தைகளைக் கேட்டபோது ஒரு நிமிடம் தன்னையும் அறியாது சங்கீதாவின் கண்களின் ஓரம் லேசாக நீர் வர, உடனே சந்கோஜத்தில் திரும்பிக் கொண்டு சுண்டு விரலால் துடைத்துக் கொண்டாள். அதை ராகவ் கவனித்தான்.

என்னாச்சு சங்கீதா?

ஒன்னும் இல்ல ராகவ்.. நான் உண்மையா இங்கே வந்ததுக்கு கார...காரணம்.. - உள்ளுக்குள் எழும் மனக் குமுறல்களை அடக்கியதில் குரல் உடைய தொடங்கியது சங்கீதாவுக்கு..

காரணம் நீ என்னை விட வயசுல சின்னவன், உனக்கு கொஞ்சம் எடுத்து சொல்லி புரிய வைக்கலாம் னு நினைச்சேன். என்னை விடு, நான் எப்பவோ என் பல கனவுகளை வாழ்க்கைல தொலைச்சவ, ஆனா உனக்கு நிறைய வயசு இருக்கு, உன் மனசுல ஆசைய உண்டாக்கி உன் வாழ்கைய பாழாக்க விரும்பல, அது எனக்கு ஒரு குற்ற உணர்சிய உண்டாக்கும் டா. அதான் சொல்லிட்டு போக வந்தேன்.. முடிஞ்ச வரைக்கும் உன் மனசை மாத்திக்கோ டா ப்ளீஸ்..

நேத்து ராத்திரி அழுதீங்களா?

நான் என்ன பேசுறேன் நீ என்ன பேசுறா?

சப்... கேட்ட கேள்விக்கு பதில் வேணும்....

"ஆமாம்.. என் கண்ணு லேசா வீங்கி இருக்குரதைப் பார்த்து கேட்க்குரியாக்கும்? இஷ்ம்ம்" - லேசாக கண்ணீர் வந்ததில் விசும்பி மூக்கை உறிஞ்தாள் சங்கீதா.


"ஹா ஹா confirmed" - என்று சிரித்துக் கொண்டே சொன்னான் ராகவ்.

"என்ன confirmed? குதர்க்கமா பேசாத" - கண்ணைத் துடைத்துக் கொண்டு பேசினாள் சங்கீதா..

"மனசளவுல உங்களால என்னை மறக்க முடியாது, அதுக்கான ஆதாரம்தான் நேத்து ராத்திரி நீங்க அழுத அழுகை."

ஒன்றும் பதில் பேசவில்லை சங்கீதா....

"சங்கீதா.... வாழ்க்கை ல கலாச்சாரம் முக்கியம்தான், ஆனா பாவம் மணசு என்ன செய்துச்சி. ஒவ்வொரு தடவையும் அதை அடக்கி அடக்கி அதோட ஆசைகள் எல்லாத்தையும் மண்ணோட மன்னா புதைச்சி வெச்சி நாம நம்மளையும் சேர்த்துதானே மன்னாக்கிகுறோம். இந்த நிமிஷம், இந்த ஒரு நொடி உங்க மனசுல கை வெச்சி கண்ணை மூடி சத்தியமா நிஜம் என்ன, உண்மை என்ன னு யோசிச்சி பாருங்க. உங்க கண்ணை மூடி என்னை ரெண்டு நிமிஷமாவது மறக்க முடிஞ்சி வெறும் உங்க குடும்பம், புருஷன், பசங்க ன்னு உங்களால நினைக்க முடியுதான்னு எனக்கு சொல்லுங்க.... I will wait sangeethaa.... - என்று ராகவ் சொல்ல

இவன் காதலை ஒப்புக்கொள்ளவேண்டும் என்று அவள் ஆழ் மனது கதற ஆரம்பித்தது அதே சமயம் மறு பக்கம் வாழ்க்கை இந்த உலகில் ஒரு முறைதான், ஏற்கனவே நான் இழந்ததை கடவுள் எனக்கு திரும்பவும் வேறு ஒரு ரூபத்துல குடுக்குறார், அதை நான் இப்போவும் நிராகரிக்குறதா? இல்லை என் சந்தோஷத்துக்காகவும் நிம்மதிக்காகவும் இதை நான் ஏற்க்கனுமா?.... மீண்டும் மணப் போராட்டம்..... சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்தவாறு யோசித்தாள்.

என்னதான் யோசித்தாலும், முயற்சி செய்தாலும் அவள் மனதில் இருந்தும் கண்களில் இருந்தும் ராகவை நீக்குவதேன்பது அவளாள் சத்தியமாக முடியாத காரியம் என்று அவள் மனது தெளிவாக கூறியது.

"என்னாச்சு சங்கீதா..." - என்று ராகவ் கேட்க, தனது டைரியில் பேனாவால் எழுத தொடங்கினாள்.

ஒரு ஐந்து நிமிடம் சிந்தித்து ஏதோ ஒன்றை எழுதினாள்

ராகவ் அவள் எழுதும் வரைக் காத்திருந்தான்.

சங்கீதா எழுதி முடித்த கடிதத்தை டைரியில் இருந்து கிழித்து மடித்து ராகவின் சட்டை பாக்கெட் உள்ளே வைத்தாள் - அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் மௌனமான சிரிப்பில் கண்களால் ஆயிரம் வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.

கடிதத்துக்கு பதில் வாயில இருந்து வரும்னு பார்த்தேன், கடிதத்துலையே வருதே? - என்று சொல்லி சிரித்தான் ராகவ்.


சரி, நான் எழுதின கடிதத்தைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே? - என்று ராகவ் கேட்க சங்கீதா அந்த கடிதத்தை அருகில் உள்ள தனது handbag ல் இருந்து எடுத்து பிரித்து அவன் எதிரில் அவன் எழுதிய வார்த்தைகள் மீது ஒரு முத்தம் குடுத்து அவனை ஒரு நொடி மட்டுமே நேரில் பார்த்து மேற்கொண்டு பார்க்க முடியாமல் வெட்கத்தில் கீழே பார்த்து சிரித்தாள்.

ராகவால் இதை நம்ப முடியவில்லை. மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றான்

இப்போது TV யில் ஒரு (Click)காட்சி ஓடிக்கொண்டிருந்தது, அந்த காட்சியில் வரும் அழகான முதிர்ச்சியான மங்கை ஒரு வாலிபனின் திறமையைக் கண்டு வியந்து பாரட்டுகிறாள் -அமைதியாய் இருந்த இருவரும் ஒரு நிமிடம் ஒருவரை ஒருவர் பார்த்து மென்மையாக சத்தம் இன்றி சிரித்தார்கள்.

"பாராட்டு வெறும் கடிதத்துக்கு தானா? அதை எழுதினவனுக்கு இல்லையா? - என்று ராகவ் அந்த காட்சியில் வரும் வாலிபனைப் போல கேட்க, சங்கீதா மெல்ல அருகே வந்து அவனின் தலையில் மென்மையாக ஒரு முத்தம் குடுத்தாள். அப்போது ராகவ்க்கு ஒரு நொடி உடல் முழுதும் புல்லரித்தது.


No comments:

Post a Comment