Thursday, 23 May 2013

மான்சி 08


சத்யன் தன் காலைக்கடன்களை முடித்துவிட்டு மாடியிலிருந்து கீழே வந்தபோது டைனிங் டேபிளில் அவன் அப்பாவும் அம்மாவும் அவனுக்காக காத்திருக்க சத்யன் அமைதியாக இருக்கையை இழுத்துபோட்டு அமர்ந்தான் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது சத்யன் இட்லியை எடுத்து சட்னி சாம்பாருடன் சேர்த்து பிசைய அவன் அம்மா அவனை வித்யாசமாக பாரத்தாள்

'என்ன சத்யா இப்படியா சாப்பிட்றது இது இட்லிடா என்னவோ சாதம் மாதிரி பிசையுற,என்று சிரித்தபடி கேட்க அப்போதுதான் சத்யனுக்கு தான் என்ன செய்கிறோம்ன்னு புரிய 'ச்சே,என்று கையை உதறியவன் 'சாரிம்மா ஏதோ ஞாபகத்தில் இப்படி பண்ணிட்டேன், அசடு வழிய 'பரவாயில்ல சத்யா வேற பிளேட் வைச்சு சாப்பிடு,என்று வேறு பிளேட் வைத்து மறுபடியும் பரிமாற அவன் அப்பா 'என்னாச்சுப்பா நைட்கூட சாப்பிடலன்னு சொன்னாங்க ஏதாவது பிரச்சினையா இல்ல உடம்புக்கு ஏதாவது சரியில்லையா,என்று அக்கரையாக விசாரிக்க 'ம்ம் அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா நேத்துலருந்து ஒரே தலைவழி அதான், என்று சமாளிக்க 'சரி சத்யா இப்ப சரியாயிடுச்சா இல்லன்னா நம்ம டாக்டரை பார்க்கலாமா,என்று கேட்க 'வேனாம்ப்பா இப்ப சரியாயிடுச்சு, 'அப்படின்னா இன்னிக்கு ஈவினிங் உன் மேரேஜ்க்கு கார்ட் செலக்ட் பண்ண போகனும் நீ வர்ரியா சத்யா,என்று கண்ணன் கேட்க 'ம் பார்க்கறேன்ப்பா இல்லேன்னா நீங்களே செலக்ட் பண்ணிருங்க,என்றவன் பாதி உணவிலேயே தட்டில் கைகழுவி எழுந்து'சாரிம்மா எனக்கு சாப்பிடமுடியலை நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வர்றேன்,என்று அவர்களின் பதிலை எதிர்பாராமல் கார் சாவியை எடுத்துக்கொண்டு வெளியேறினான் மிதமான வேகத்தில் காரை செலுத்தியவன் எங்கே போகலாம் என்று சிந்திக்க அவனுக்குள் இருக்கும் நல்லவன் வேகமாக தலையை தூக்கி 'ஏன் விடுதிக்கு போய் அந்த குழந்தையை வேனும்னா பாறேன்,என்று அக்கரையுடன் குரல் கொடுக்க 'ச்சேச்சே நான் ஏன் அங்கெல்லாம் போகனும் அதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் இருக்கு நீ உன் வாயை மூடு ,என மனிதர்களை அடக்குவது போல் மனதை அடக்கினான் ஆனால் மனதை அடக்கலாம் உணர்வுகளை அடக்கமுடியுமா ம்ஹூம் ஆமாம் கார் அவனையும் அறியாமல் அவர்களின் குடும்ப டிரஸ்ட் மூலமாக நடத்தபடும் அந்த காப்பற்றோர் விடுதி இருக்கும் சாலையில் திரும்பி போய்கொண்டிருந்தது சத்யன் ச்சே என்ன இந்தபக்கம் போறோமே என்று எரிச்சலுடன் காரை திருப்பலாமா என நினைத்து பிறகு முடிவை மாற்றி சரி சும்மா போய்தான் பார்க்கலாம் நாம இதுக்கு முன்னாடி அங்கே எத்தனையோ முறை போயிருக்கோம் அதுபோல இப்பவும் போவோம் என்று முடிவுசெய்து வழியில் ஒரு சூப்பர் மார்கெட்டில் காரை நிறுத்தி நிறைய பிஸ்கெட் பாக்கெட்களை வாங்கி காரின் பின் சீட்டில் வைத்துக்கொண்டு கிளம்பினான் அந்த தார்ச்சாலையில் இருந்து பிரிந்த ஒரு மண்சாலையில் சில வயல்வெளிகளை கடந்து உயரமான காம்பவுண்ட் சுவருடன் கூடிய பெரிய கேட்டருகே சத்யனின் கார் நிற்க்க அங்கிருந்த வாட்ச்மேன் காரை அடையாளம் கண்டு ஓடிவந்து கேட்டை திறந்து சத்யனுக்கு வணக்கம் வைத்தான் சத்யன் விடுதியின் உள்ளே போய் காரை நிறுத்தி இறங்கி காரின் பின்கதவை திறந்து பிஸ்கெட் பாக்கெட்டுகளை எடுத்துகொண்டு திரும்ப அதற்க்குள் வாட்ச்மேன் போய் தகவல் சொல்லி விடுதியின் பாதுகாப்பாளர் நாராயணன் வேகமாக வந்து' வாங்க தம்பி நீங்க வர்றதா வீட்டுல இருந்து ஒரு போன் கூட பண்ணலை உள்ள வாங்க தம்பி, என்று பரபரப்புடன் உள்ளே அழைக்கத்து சென்றார் 'சும்மா இந்தபக்கம் ஒரு வேலையா வந்தேன் அப்படியே இங்கே வந்து பார்க்கலாம்ன்னுதான் வேற ஒன்னும் இல்லை அங்கிள்,என்று சமாளித்தபடி சத்யன் அவர் எடுத்து போட்ட சேரில் உட்கார்ந்தான் அப்போது உள்ளே இருந்து ஒரு இளம்பெண் வர பெரியவர் அவளிடம்'நிர்மலா இவர்தான் நம்ம கண்ணபிரான் சாரோட மகன் சத்யன்,என்றவர் திரும்பி சத்யனிடம் 'தம்பி இவ நிர்மலா என்னோட பேத்தி போனவருஷம் படிப்பு முடிஞ்சு இங்க வந்தா அப்பாதான் இங்கே அக்கவுண்ட்ஸ் எல்லாம் பார்த்துக்க சொன்னார்,என்று பரஸ்பரம் இருவருக்கும் அறிமுகம் செய்யது வைக்க 'ம் அப்படியா,என்று நிர்மலாவை பார்த்து சத்யன் வணக்கம் சொல்ல உடனே அவளும் பதில் வணக்கம் சொன்னாள் நிர்மலா பெண்களின் சராசரி உயரத்தில் மாநிறமாக சற்று பருமனாக குழந்தை தனமான முகத்துடன் எப்போதும் சிரிக்கும் உதடுகளுடன் பளிச்சென்று இருந்தாள் சத்யன் பெரியவரிடம் வாங்கிவந்த பிஸ்கெட் பாக்கெட்களை காண்பித்து 'இதையெல்லாம் இங்கிருக்கும் பிள்ளைகளுக்கு குடுக்கணும் மொத்தம் எவ்வளவு பிள்ளைங்க இருக்காங்க பத்தலைன்னா இன்னும் கொஞ்சம் வாங்கலாமா,என்று கேட்க 'அதெல்லாம் வேனாம் தம்பி இங்கே ஏற்கனவே கொஞ்சம் பாக்கெட் இருக்கு அதையும் சேர்த்துக்கலாம்,என்று சத்யனுக்கு பதில் சொல்லிவிட்டு நிர்மலாவிடம் திரும்பி 'நிர்மலா நீ பெல் அடிச்சு எல்லா பிள்ளைகளையும் கிரவுண்டுக்கு வர சொல்லிட்டு சாரை அங்கே கூட்டிபோ,என்று பொறுப்பை பேத்தியிடம் ஒப்படைக்க அவள் 'வாங்க சார் என்று முன்னே போக சத்யன் அவளை பின் தொடர்ந்தான் அடுத்த சிலநிமிடங்களில் பிள்ளைகள் மொத்த பேரும் கிரவுண்டில் வரிசையில் நின்றார்கள்சத்யன் வரிசையில் நின்ற பிள்ளைகளுக்கு பிஸ்கெட் பாக்கெட்டை ஒவ்வொன்றாக கொடுக்க ஒரு பத்து பிள்ளைகளுக்கு கொடுத்திருப்பான் அதற்க்குள் பொருமை இல்லாது நிர்மலாவிடம் திரும்பி 'நிர்மலா என்னோட மச்சான் கார்த்திக்கை உங்களுக்கு தெரியுமா என்று கேட்க 'ம் தெரியும் சார் அடிக்கடி இங்க வருவார், 'அவன் ஒரு மூன்றுவருஷம் முன்னாடி ஊட்டியிலிருந்து ஒரு குழந்தையை அவன் இன்சார்ஜில இங்கே கொண்டுவந்து விட்டான் அந்த குழந்தையோட கார்டியன் நேம் கூட சிவான்னு.....என்று சத்யன் முடிக்குமுன் 'ஆமா சார் இங்கதான் இருக்கான் பெயர் பிரவீன் சார் அதோ அங்க இருக்கான் பாருங்க,என்று நிர்மலா கைநீட்டி காட்ட உடனே சத்யன் வேகமாக திரும்பி பார்த்தான் அவ்வளவு பிள்ளைகளில் அவள் யாரை கைநீட்டினாள் என்று அவனுக்கு தெரியவில்லை அதற்க்குள் நிர்மலா அருகில் இருந்த வாட்ச்மேனிடம் ஏதோ சொல்ல அவன் போய் அந்த பையனை அழைத்து வந்து சத்யன் முன்பு நிறுத்தினான்

மூன்று வயது பிரவீன் குழந்தைகளுக்கே உண்டான குண்டு கன்னங்களும் திராச்சை கண்களுமாக மாநிறத்தில் ரொம்ப அழுக்கான ஒரு டவுசர் சட்டை போட்டிருந்தான் அந்த உடை அவனைவிட மூன்று வயது பெரிய பிள்ளைகள் போடுவதுபோல் தொளதொள வென்று இருந்தது பிரவீன் சத்யனை பார்த்து பிஸ்கெட்க்கு கைநீட்டி 'வணக்கம் ஐயா, என்று தன் மழழை குரலில் கூற சத்யன் மனதின் எல்லா பக்கமும் எழுந்த உணர்வுகள் ஓ வென்று உள்ளே கூக்குரலிட சத்யனுக்கு காதுகள் இரண்டும் அடைத்தது போல் இருந்தது அவனையும் அறியாமல் அவன் கைகள் குழந்தையை நோக்கி நீண்டது குழந்தையோ சத்யன் பிஸ்கெட் தராமல் கையை நீட்டியதை பார்த்ததும் மறுபடியும் தன் கைகளை கூப்பி "வணக்கம் ஐயா, என்றான் உணவு தருபவர்களுக்கு வணக்கம் சொல்வது அந்த விடுதியின் பழக்கம் போல பாவம் குழந்தைக்கு என்ன தெரியும் அதுபோல் குழந்தையை பழக்கப்படுத்தி இருக்கிறார்கள் ஆனால் சத்யனுக்குத்தான் நிற்க்க முடியாமல் கால்கள் தளர வயிற்றில் திகுதிகுவென ஏதோ எரிந்து அதன் புகை நெஞ்சை அடைப்பது போல் இருக்க அவனுக்காக அங்கே போடப்பட்டிருந்த சேரில் தொப்பென்று உட்கார்ந்தான் பாவம் சத்யன் நேற்று முழுவதும் சரியாக சாப்பிடாததால் இப்படி ஆனதா இல்லை இவ்வளவு ஏழ்மையான தோற்றத்தில் தன் வாரிசை பார்த்ததால் இப்படி ஆனதா அது அவனுக்கே புரியவில்லைகுழந்தை தனக்கு மட்டும் சத்யன் பிஸ்கெட் கொடுக்காததால் அவனை ஏக்கத்துடன் பார்க்க சத்யனுக்கு தன் தொண்டையில் துளையிட்டு யாரோ உயிரை வெளியே உருவியெடுப்பது போல் இருந்தது பிறகு நிர்மலாதான் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை கொடுத்து குழந்தையை அனுப்ப அவன் சத்யனை திரும்பி பார்த்துகொண்டே போய் வரிசையில் நின்றான் ' என்னாச்சு சார் திடீர்னு ரொம்ப டல்லாயிட்டீங்க ஏதாவது பிரச்சனையா சார் , என்று நிர்மலா விசாரிக்க 'ம்ஹூம் அதெல்லாம் ஒன்னுமில்ல கொஞ்சம் தலைவலி அதான் சரி மிச்சமிருப்பதை நீங்களே குடுத்திருங்க நான் கொஞ்சநேரம் தியான மண்டபத்தில் இருக்கிறேன் அங்கிள் கேட்டா சொலலிடுங்க,என்றுவிட்டு சதயன் தியான மண்டபம் நோக்கி நடந்தான் நிர்மலா அவனையே சிறிது நேரம் பார்த்து 'என்னாச்சு இவருக்கு வரும்போது நல்லாத்தானே இருந்தார,என்று குழம்பியவளாய் தன் தாத்தாவை பார்க்க போனாள் தியான மண்டபம் பச்சை மூங்கிலால் கட்டப்பட்டு நடுவே மேடையில் பளிங்கினால் ஆன ஒரு சிவலிங்கம் வைக்கப்பட்டிருந்தது சத்யன் சிவலிங்கத்தின் எதிரே கண்மூடி அமர்ந்தான் இதவரை நடந்த அனைத்தும் ஞாபகத்துக்கு வந்து உள்ளத்தையும் உடலையும் ஒருசேர பதறவைத்தது வாழ்க்கையில் முதன்முதலாக ஒரு பெரும் குழப்பம் சூழ்ந்துவிட அவன் இதயம் உருகி அவனின் மூடியிருந்த கண்களில் எட்டி பார்த்தது ஒரு பெண்ணை பழிவாங்க தான் எடுத்த தன்னிச்சையான முடிவு இப்போது மூன்று வருடம் கழித்து தன்முன் விசுவரூபமெடுத்து நிற்ப்பதை சத்யன் உணர்ந்தான் தன் வாழ்க்கையில் இது வரமா சாபமா என்று அவனுக்கு புரியவில்லை 'வணக்கம் ஐயா என்ற மழழை குரல் அவன் மனதில் மறுபடியும் மறுபடியும் விடாமல் ஒலித்தது இதயத்தில் யாரோ சூட்டு கோலால் இழுத்தது போல் பச்சை ரணமாய் ஒருவலி உண்டானது உணர்வுகள் தீக்குச்சியாய் உரச எரிமலையின் அடிவாரத்தில் இருப்பது போல் தகித்தது சத்யனுக்கு அவனின் பிற்காலம் பெரும் கேள்வி குறியாய் அவன்முன் உயர்ந்து நின்றது வாழ்க்கை மறுபடியும் பின்நோக்கிச் சென்று மான்சியை தான் கல்லூரியில் பார்த்த நாட்களில் இருந்து தொடங்காதா என்று மனம் காரணமின்றி ஏங்கியது உள்ளம் உருகி கண்களில் நீராய் கசிந்து தாடையில் வழிந்து கழுத்தில் சிறு ஓடையாய் ஓடி மார்பு சட்டையை நனைத்தது அவனுடய உலகம் சிறிது நேரம் தன் சுழற்சியை நிருத்தி வைத்தது அப்போது வெளியே தீனமாய் ஒரு குழந்தையின் அழுகுரல் சத்யனை இவ்வுலகுக்கு கொண்டுவந்ததுஅழுகுரல் கேட்டு அவசரமாக கண்விழித்த சத்யன் தன் சட்டை நனைந்திருப்பதை பார்த்து தான் கண்ணீரை உணர்ந்தான் 'ச்சே இது என்ன சின்னபிள்ளை மாதிரி என்று நினைத்து கண்களை துடைத்தவன் யார் அழுதது என்று வெளியே வந்து பார்த்தான் அங்கே மைதானத்தில் ஒருமரத்தடியில் இருந்த சிமிண்ட் மேடையில் அமர்ந்து பிரவீன் தான் கண்ணை கசக்கி கொண்டிருக்க சத்யனின் கால்கள் தானாகவே அவனிடம் விரைந்தன இதைத்தான் "தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும்ன்னு" பெரியவங்க சொன்னாங்களோ குழந்தையிடம் சென்றவன் என்ன பேசுவது என்று புரியாமல் சிறிதுநேரம் அவன் அழுவதை பார்த்த சத்யன் பிறகு'ஏம்ப்பா அழற என்னாச்சு'என்று விசாரிக்க 'ம்ம் என்னோத பிச்சிய என்னோத பிச்சிய என்று அதையே நான்கு முறை பிரவீன் மழழையில் பிதற்ற 'ம் சொல்லு உன்னோட பிச்சிய என்னாச்சு சொல்லு,என்று சத்யன் கேட்க முதலில் சத்யனுக்கே பிச்சின்னா என்னன்னு தெரியாது சரி குழந்தையே சொல்லட்டும் என நினைத்தான் 'அதோ அந்த பைய என்னோத பிச்சி பாகெத்த புதுங்கித்தா எனக்கு பிச்சி இல்லேல்ல, என்று தூரத்தில் பிஸ்கெட் தின்றுகொண்டிருந்த இவனைவிட ஒரு பெரிய பையனை காட்ட சத்யனுக்கு இப்போது புரிந்தது குழந்தையோட பிஸ்கெட்டை அந்த பையன் புடிங்கிட்டான் போல ச்சே என்று வருந்தியவன் 'சரிவா உனக்கு வேற பாக்கெட் தர்றேன்,என்று சொல்லிவிட்டு முன்னே செல்ல குழந்தை ஆர்வத்துடன் அந்த சிமிண்ட் மேடையிலிருந்து கீழே குதிக்க முழங்கால் மண்தரையில் உரசி லேசாக ரத்தம் கசிய ஆவ்வ்வ்வ் என்று பிரவீன் சத்தம்போட்டு கத்தினான் முன்னால் போன சத்யன் வேகமாக திரும்பி அவனருகே வந்து காலில் ரத்தம் கசிவதை பார்த்ததும் 'ஐயோ'என்று நெற்றியில் அறைந்து கொண்டான் 'ச்சே சின்ன குழந்தையாச்சே எப்படி கீழே இறங்கும் என்று கூட தனக்கு தோனாமல் போய்விட்டதே என்று வருந்தியவன் 'ச்சு ச்சு அழாதடா வாடா குட்டிப்பையா உனக்கு மருந்து போட்டு நான் நிறைய சாக்லேட் வாங்கிதர்றேன் நீ இப்ப அழக்கூடாதாம் ம் என்ன சரியா,என்று கொஞ்ச சாக்லேட் என்றதும் கப்பென்று அழுகையை நிறுத்திய பிரவீன் என்னை தூக்கு என்பது போல் சத்யனை நோக்கி கைகளை விரித்து நீட்ட

சத்யன் உடனே குழந்தையை தூக்கி தன் தோளில் வைத்துகொள்ள குழந்தை அழும்போது வந்த கண்ணீரையும் மூக்கில் ஒழுகிய சளியையும் சேர்த்து சத்யனின் தோளில் முகத்தை அழுத்தி தேய்த்ததுசத்யன் பிரவீனை தோளில் தூக்கிக்கொண்டு வருவதை பார்த்த நிர்மலா பதட்டமாக ஓடிவந்து 'என்னாச்சு சார் அவனை கீழே விடுங்க,என்றவள் 'ஏய் பிரவீன் எறங்கு கீழே இதென்ன புதுபழக்கம் வர வர உனக்கு இங்கே செல்லம் அதிகமாயிட்டுது இறங்குடா,என்று குழந்தையை அதட்ட 'பரவாயில்லைங்க கீழ விழுந்துட்டான் அதான் தூக்கிட்ட வந்தேன் நான் இவனை கொஞ்சநேரம் வெளியிலகூட்டி போகலாமா,என்று அவளிடம் அனுமதி கேட்க நிர்மலா அவனை ஆச்சரியமாக பார்த்து இவ்ளோ பெரிய பணக்காரனுக்கு இந்த அனாதை குழந்தை மேல இவ்வளவு அன்பா ச்சே ரொம்ப நல்லவர் போல என்று மனதில் என்னியவள் 'ம் சரிங்க சார் கூட்டிப்போங்க தாத்தாவிடம் நான் சொல்லிகிறேன், என்றவள் 'பிரவீன் ஐயாவை தொல்லை பண்ணக்கூடாது அமைதியா இருக்கனும் சரியா, என்று குழந்தையை எச்சரித்து அனுப்பினாள் காரில் ஏறும்போது மிரண்ட பிரவீன் 'நீயி தாக்தறா எனக்கு ஊசி போதுவியா,என்று சத்யனிடம் மழழையில் கேட்க சத்யனுக்கு சிரிப்பு வந்தது 'ம் நான் டாக்டர் இல்ல இப்ப உனக்கு சாக்லேட் வாங்கத்தான் போறோம் பயப்படாதே என்ன,என்று சமாதானம் செய்து பிரவீனை காரில் தன்னருகில் அமர்த்திக்கொண்டு காரை கிளப்பினான் கோவை பெரிய கடைவீதியில் ஒரு சூப்பர் மார்கெட்டில் நிறைய சாக்லேட்டை வாங்கியவன் பிரவீனுக்கு ஏற்ற சில உடைகளையும் வாங்கிக்கொண்டு விடுதிக்கு புறப்பட அந்த அழகு வாலிபனையும் அவன் கையிலிருந்த அந்த அழுக்கு குழந்தையையும் அன்று கோவையில் நிறையபேர் வேடிக்கைப் பார்த்தனர் மறுபடியும் பிரவீனை விடுதியில் விட்டுவிட்டு கிளம்பும்போது குழந்தை அவன் கைகளை பற்றி'நீ மதுபதியும் வதுவியா,என்று கேட்க சத்யனுக்கு என்ன பதில் சொல்வது தெரியாமல் விழித்தான் நிர்மலாதான் 'எல்லாம் வருவார் நீ போடா குட்டி,என்று சமாளித்து அனுப்பி வைத்தாள் திரும்பி போகும்போது குழந்தை கேட்டது மறுபடியும் மறுபடியும் ஞாபகத்துக்கு வர ரொம்பவே தடுமாறினான் நேற்று முழுவதும் சரியாக சாப்பிடாமல் உறங்காமல் இருந்தது அவனுக்கு களைப்பாக இருக்க வீட்டில் போய் முதலில் நல்ல ஓய்வெடுக்கனும் என்று நினைத்தபடி காரை செலுத்தினான் அப்போது முன்னால் சென்ற ஒரு வேனை முந்திச்செல்ல சத்யன் முயல எதிரே வந்த ஒரு அரசு பேருந்துடன் பயங்கர சத்ததுடன் கார் நேருக்குநேர் மோதியது அடுத்த சிலகணங்களில் ரத்தவெள்ளத்தில் கிடந்தான் சத்யன் அடுத்த சிலநிமிடங்களில் போலீஸ்க்கும் ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்துவிட அங்கே பெரும் கூட்டம் கூடியது அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் காரை கவனித்துவிட்டு போலீஸாரிடம் 'சார் இந்த கார் எஸ் கே எஸ் காலேஜ் நிறுவனரோடது அனேகமாக அடிபட்டு கிடக்கிறது அவர் மகனாகத்தான் இருக்கனும், என்று தகவல் சொல்ல போலீஸார் உடனே பலருடன் தொடர்புகொண்டு அவன் வீட்டுக்கு தகவல் தெரிவித்தனர் போலீஸும் பொதுமக்களும் சேர்ந்து காரை உடைத்து சத்யனை வெளியே எடுக்க அவன் உடல்முழுவதும் ரத்தம் தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் கட்டுகடங்காமல் வழிய அவனுக்கு உயிர் இருக்கிறதா என்று சோதித்து பார்த்தனர் லேசாக நாடித்துடிப்பு இருக்க அவசரமாக ஆம்புலன்சில் ஏற்றினார்கள் ஆம்புலன்ஸ் கிளம்பி கொஞ்சநேரத்தில் அங்கே இன்னொரு கார் வந்து நிற்க்க அதிலிருந்து இறங்கிய கண்ணனும் அவர் மனைவியும் விபத்தான காரையும் அங்கே கொட்டியிருந்த சத்யனின் ரத்தத்தையும் பார்த்து தலையில் அடித்து கொண்டு கதற சத்யனின் அம்மா மரகதம் மயங்கியே விழுந்துவிட்டாள் கண்ணனுக்கு அங்கிருந்தவர்கள் எந்த மருத்துவமனை என்று தகவல் சொல்ல மனைவியை தூக்கி காரில் போட்டுக்கொண்டு காரில் பறந்தார் மருத்துவமனையில் சத்யனுக்கு தலையில் பலத்த காய்ம் பிழைப்பது ரொம்ப கஷ்டம் என்றதும் கண்ணனுக்கு தலையில் இடிவிழுந்தது போல் ஆனது தனது செல்லில் குடும்ப டாக்டரை அழைத்து தகவல் சொல்லி வரச்சொன்னார் அவர் வந்ததும் உள்ளேபோய் மற்ற டாக்டர்களுடன் கலந்துவிட்டு பலத்த யோசனையோடு வெளியேவந்து கண்ணனிடம் 'ரொம்ப பலத்த அடிதான் ஆனா சான்ஸ் இருக்கு நீங்க பயப்படாதீங்க நான் விசாரிச்சதுல ஆம்புலன்ஸ்ல வரும்போது கொஞ்சம் நினைவு இருந்திருக்கு பிரவீன் பிரவீன்னு மூன்றுமுறை சொல்லிருக்கான் நாம சத்யனை வேற ஆஸ்பிட்டல் கொண்டு போயிறலாம் எல்லாம் நான் பார்த்துக்கிறேன் தைரியமா இருங்க கண்ணன், என்று டாக்டர் ஆறுதல் சொல்ல கண்ணபிரானுக்கு இப்போது பெரும் குழப்பம் யார் அந்த பிரவீன் என்றுதான் மரணத்தின் வாசலில் கூட அந்த பெயரை சொல்லியிருக்கிறான் என்றால் அது யார்அதன்பிறகு அவர்களின் பேமிலி டாக்டர் சத்யனை வேறு மருத்துவமனைக்கு மாற்றி சென்னையில் அவருக்கு தெரிந்த பிரபலமான ஒரு டாக்டரை வரவழைத்து சத்யனை பரிசோதித்தனர் அவர் சத்யனுக்கு உடனடியாக தலையில் அறுவைசிகிச்சை செய்யவேண்டும் அப்படிச்செய்தால் அவன் பிழைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்ல எல்லோரும் உடனே ஆப்ரேஷன் செய்யுமாறு டாக்டரிடம் வேன்ட சத்யன் ஆப்ரேஷனுக்கு தயார் செய்யப்பட்டான் காலையிலேயே விஷயம் கேள்விப்பட்டு கார்த்திக் சுமித்ரா வந்து சோகத்துடன் காத்திருக்க அப்போது விடுதியின் பெரியவர் பரபரப்புடன் வந்து கண்ணனிடம்'ஐயோ என்ன சார் ஆச்சு எனக்கு இப்பதான் விஷயம் தெரியும் எப்படி இருக்கார் நேத்து விடுதிக்கு வரும்போது கூட நல்லாத்தானே இருந்தார் இப்ப இப்படியாயிருசசே,என்று உன்மையாக பெரியவர் வருந்த 'என்னது சத்யன் விடுதிக்கு வந்தானா எப்ப வந்தான்,என கண்ணன் வியப்புடன் கேட்க அங்கே வீட்டினர் அனைவரும் கூடிவிட்ட'ஆமாம் சார் நேத்து மாலை ஒரு பனிரண்டு மணிக்கு விடுதி பிள்ளைகளுக்கு நிறைய பிஸ்கெட் வாங்கிகிட்டு வந்தார் அப்புறமா தியான மண்டபத்தில் கொஞ்சநேரம் இருந்தார் அப்ப ஒரு சின்னபையனுக்கு கீழே விழுந்து லேசா காயமாயிருச்சு அவரே அந்த பையனை தோளில் தூக்கிட்டு வந்தார் எங்களுக்கெல்லாம் ரொம்ப ஆச்சரியமா போச்சு,என்று பேசிக்கொண்டே போனவரை மறித்து அவசரமாக 'அந்த பையனோட பெயர் என்ன,என்று கண்ணன் கேட்க 'பையன் பெயர் பிரவீன் சார் நேத்து சத்யன் தம்பியே அந்த பையனை கார்ல கூட்டிப்போய் அவனுக்கு நிறைய தூணிகளும் சாக்லேடும் வாங்கி கொடுத்து கூட்டிவந்தார் சார் ,என்று விரிவாக விளக்கத்துடன் கூற 'யார் அந்த பையன் ,என கார்த்திக் கேட்டான் 'அதான் சார் நீங்களும் உங்க மேனேஜர் சிவாவும் ஊட்டியிலிருந்து கொண்டுவந்து சேர்த்தீங்களே அந்த பையன்தான் சார் சத்யன் தம்பியும் விடுதிக்கு வந்ததும் அந்த பையனை பத்திதான் முதல்ல விசாரிச்சார் ,என்று பெரியவர் ஒரு சிறிய குண்டை தூக்கி அந்த இடத்தில் போட

அது வெடிக்காமல் புகைந்தது அத்தனை பேரும் ஒருவர் முகத்தை ஓருவர் பார்க்க அவர்கள் முகத்தில் குழப்ப ரேகைகள் தாறுமாறாக ஓடியது கண்ணபிரானுக்கு குழப்பத்தின் முடிச்சு இன்னும் சிக்கலாகிவிட்டது போல் இருந்தது இதற்க்கெல்லாம் பதில் சத்யன் கண்விழித்தால் மட்டுமே கிடைக்கும் என்று நினைத்தார் ஆனால் அந்த முடிச்சை எளிதாக அவிழ்க்க அவர் தம்பியும் சத்யனின் சித்தப்பாவுமான ராஜேந்திரன் சிங்கப்பூரில் இருந்து பிளைட்டில் வந்துகொண்டிருந்தார்

No comments:

Post a Comment