Saturday, 12 December 2015

விஜயசுந்தரி 48

அடுத்த நாள் நான் கொஞ்ச்ம தாமதமாக ஹாஸ்பிடலுக்கு கிளம்பி சென்றேன். ஏற்கனவே முடிவெடுத்தபடி நேராக சங்கீதாவின் அறைக்கு சென்றேன். அவள் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருக்க என்னை பார்த்தவள் முன்னால் இருந்த சேரை கட்டி உட்கார சொன்னாள், நானும் உட்கார்ந்தேன். சில நிமிடங்களில் என்னை பார்த்து
“என்ன் முத்து டியிபூட்டிக்கு போகல, ஏதாவது பேசனுமா” என்றாள். நான் என் சட்டை பாக்கெட்டிலிடுந்த ஒரு கவரை எடுத்து அவளிடம் நீட்ட அவள் கையில் வாங்கிக் கொண்டு
“என்னது” என்றாள் குழப்பத்துடன்,
“மை ரெசிக்னேஷன் லெட்டர்” என்றதும் முகத்தில் கலவரம் தெரிய
“என்ன முத்து என்னாச்சி” என்றாள்.

“இல்ல மேடம் நேத்து நீங்க உங்க மனசுல இருந்த்த சொன்னீங்க அத நான் ஏத்துக்கல இதுக்கப்புறமும் நான் இங்க இருந்தா நல்லா இருக்காதுனு தோனுச்சி, அதான்” என்றதும்.
“என்ன் முத்து இப்டி பேசுறீங்க, நேத்து நான் என்னொட லவ்வ சொன்னதும் அதுக்கு நீங்க உங்க ஒபீனியன சொன்னதும் நம்ம பர்சனல் அதுக்கும் உங்க ப்ரொஃபஷனுக்கும் ஏன் லிங்க் பண்றீங்க, ரெண்டும் வேற வேற” என்றாள்.
“இல்ல மேடம் ரெண்டும் வேறாயா இருந்தாலும் உங்க காதல நான் அக்சப்ட் பண்ணாத்தால் உங்க முகத்த பார்க்க எனக்கும் கஸ்டமா இருக்கும் உங்களுக்கும் கஸ்டமா இருக்கும்” என்றதும் அவள் எழுந்து மெல்லிய குரலில்
“ஏன் முத்து நீங்க என் முகத்த கூட பார்க்க விரும்பலையா” என்றாள். எனக்கே ஒரு மாதிரியாகி விட்டது.
“என்னொட லவ்வ தான் உங்களால ஏத்துக்க முடியல இட்ஸ் ஓகே. நாம் ஃப்ரெண்ட்ஸா இருக்க கூட உங்களுக்கு விருப்பமில்லையா, அதுக்கு கூடவா நான் தகுதி இல்லாதவளா போய்ட்டேன்” என்று கண்களில் லேசான கண்ணீர் வழிய என்னை பார்த்து கேட்டாள். அவளை நினைக்கும் போது எனக்கே என்னை அறியாமல் கண்களில் க்ண்ணீர் சுரந்த்து. அவளுக்கு தெரியாமல் அதை துடைத்துக் கொண்டு நான் அந்த கவரை என் பாக்கெட்டுக்குள் திணித்துக் கொண்டு வெளியே வர கதவை திறக்க
“முத்து” என்றாள். நான் திரும்பி பார்க்க
‘”என்னோட ஃப்ரெண்ட்ஷிப்பையாவது அக்ஸப்ட் பண்ணீப்பீங்களா” என்றாள். எனக்கு வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை அதை சமாளிக்க் அவளை பார்த்து லேசாக ஒரு புன்னகையுடம் தலையாட்ட அவள் என்னை பார்த்து
“தேங்க்ஸ்” என்றாள். நான் என் அறைக்கு வந்து என் வேலைகளை பார்க்க தொடங்கினேன். மதிய உணவு நேரத்தில் கும்ரனும் நானும் சாப்பிட உட்கார்ந்தோம்.
“என்ன் முத்து ஏண்டா இப்டி பண்ண” என்றான் கும்ரன்
“ஏன்ண்டா திடீர்னு இப்டி பண்ணனு கேக்குற எத சொல்ற” என்றேன் நான்.
“இல்ல சங்கீதா உன் மேல் உயிரயே வெச்சிருந்தா, ஆனா நீ அவளோட லவ்வ் அக்சப்ட் பண்ணிக்கலையே” என்றான். எனக்கு வியப்பாக இருக்கவே
“டேய் என்ண்டா இது நேத்து நைட்டுதான் இது நடந்துச்சி, இத பத்தி நான் யாருகிட்டயும் எதுவுமே சொல்ல்ல அப்புறம் எப்டிடா உனக்கு தெரிஞ்சிது” என்று வியப்புடன் கேட்க அவன் சாப்பாட்டை நன்றாக விழுங்கிவிட்டு
“அது அப்டித்தான், நீ சொல்லிதான் தெரியனுமா” என்றதும் சங்கீதாதான் நடந்தவற்றை சொல்லியிருப்பாள் என்று என் மனதுக்குள் தோன்ற அவ்ன் புரிந்து கொண்ட்து போல்
“அதேதான்” என்றான்.
“டேய் நம்ம க்ளாஸ்ல சங்கீதானு ஒருத்தி இருந்த்தே எனக்கு சரியா நியாபகம் இல்ல ஆனா உனக்கு மட்டும் எப்டிடா அவ இள்வோ க்ளோஸா இருக்கா, நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு கூட நான் பார்த்த்தில்லையே” என்றதும்.
“அது வேற ட்ராக் மச்சி” என்று சொல்லிவிட்டு அவன் தலையை குனிந்து கொண்டாலும் அவன் கண் கலங்கி இருந்த்தை நான் கவனித்துவிட்டேன்.
“டேய் உண்மைய சொல்லு என்ன் நடந்துச்சி” என்றதும்.
“இல்ல் மச்சி, நான் காலேஜ் ஜாய்ன் பண்ண புதுசுல இருந்தே சங்கீதா மேல் கொஞ்சம் லவ்வாதான் இருந்தேன், ரெண்டு வருஷமா என் லவ்வ் அவகிட்டயே சொல்ல் தைரியம் வரல, ஆனா ஒரு நாள் திடீர்னு எங்கிட்ட வந்து நான் முத்துவ லவ் பண்றேன், அவருகிட்ட எப்டி பேசறாதுனே தெரியல, நீங்க அவரோட பெஸ்ட் ஃப்ரெண்டாச்சே, அவர பத்தி சொல்லுங்கனு கேட்டா, அப்பவே என் லவ்வ மனசுக்குள்ளயே பூட்டி வெச்சிக்கிட்டேண்டா” என்று அவன் சொல்லி முடிக்கும்போது கண்களில் இருந்து கண்ணீர் சாரை சாரையாக கொட்டியது.
“உன் கிட்ட வந்து கேட்ட்டாளல அப்பவே என்ன் பத்தி எல்லா உண்மைகளையும் நீ சொல்லி இருந்தா அவ மனசு உன் மேல திரும்பி இருக்குமே, நீ என்ன சொன்ன” என்றதும்
“உன்ன் பத்தி ஆஹா ஓஹோனு அடிச்சிவிட்டேன், அத்னால தான் அவ உன் மேல இன்னும் வெறியா இருக்கா”என்றான்.
“ஏண்டா இப்டி இருக்கீங்க” என்று நான் சொல்லி புலம்ப
“ஸரி நீ வேற யாரையோ லவ் பண்றதா சொன்னியாமே அது யாருடா, அந்த அமுதாவும்தான் இன்னொருத்தன கட்டிக்க போறாளே, அப்புறம் யார நீ லவ் பண்ற” என்றான்.
“அப்டி எல்லாம் ஒன்னுமில்லடா,சும்மா அவள அவாய்ட் ப்ண்ணறதுக்காக அந்த நேரத்துல அப்டி சொன்னேன்”என்றதும் அவன்
‘ஏண்டா அப்டி சொன்ன, நீதான் யாரையும் லவ் பண்ணலன்னு சொல்றேல்ல அப்புறம் அவ லவ்வ ஏத்துக்குறதுல உனக்கு என்ன கஸ்டம்” என்றான்.
“இல்லடா, ஏறகனவே பட்ட்தே போதும்னு தோனுது” என்றதும் அவன் மௌனமாக என்னை பார்த்து முறைத்துவிட்டு
“நீங்களா தேடி போற காதல் கெடைக்கலைனா, தானா வருற காதல் உங்களுக்கெல்லாம் பெருசா தெரியாதுடா” என்று முனகிவிட்டு என்னை பார்க்க அவன் என் அருகே நெருங்கி வந்து
“மச்சி நமக்கு தேவையானத கடவுள் எப்பவும் நம்ம பக்கத்துலையே வெச்சிருப்பாரு, ஆனா நமக்குதான் தெரியாது, நேரம் கூடி வரும்போதுதான் அது நமக்கானதுனு தெரியுமாம், இது ஏதோ ஒரு பட்த்துல கேட்ட்து, அது மாதிரி தான் உனக்கு தேவையானத கடவுள் உன் பக்கத்துல வெச்சி அத உன் கண்ல காட்டிரிருக்காரு நீதான் அத விட்டுட்டு என்னென்னவோ பண்ணிக்கிட்டிருக்க” என்று கூறிவிட்டு கிளம்பி சென்றான்.


நான் அடிக்கடி சிறைக்கு சென்று அனிதாவின் கணவன் ராஜாவை சந்தித்து வந்தேன், ஆரம்பத்தில் எனக்கு பிடிகொடுக்காமல் பேசியவன் நாளாக நாளாக அவன் மனம் மாறியதாக தெரிந்தது. அவன் மனம் தான் செய்த தவறையும் இத்தனைக்கும் பிறகு அனிதா அவன் மேல் வைத்திருந்த காதலையும் புரிந்து கொண்ட்தாக தெரிந்த்து.
“முத்து நடந்த தப்புக்கெல்லாம் அனிதா கிட்ட நான் மன்னிப்பு கேட்கனும்னு நெனக்கிறேன், ஆனா அவ என்ன நேர்ல வந்து பாப்பாலா” என்று என் கைகளை பிடித்து கெஞ்சினான். எனக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அடுத்த இரண்டாவது நாள் அனிதாவின் செல்போன் அழைத்த்து. அனிதா எடுத்து பேசினாள்.
“ஹலோ அனிதா மேடம் நான் முத்து பேசுறேன்” எனறதும்
“என்ன் முத்து அதிசயமா போன் பண்ணிருக்க” என்றாள்.
“ஒன்னுமில்ல மேடம் நீங்க கொஞ்ச்ம உங்க ஆஃபீஸ் பக்கத்துல இருக்குற பார்க்குக்கு வர முடியுமா” என்றேன் நான்
“எதுக்கு முத்து இந்த நேரத்துல” என்றாள்.
“ஒரு முக்கியமாக விஷயம், அதான் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வரனும்” என்றதும்
“சரி எங்கூட ராதாவும் இருக்கா அவ வரலாமா” என்றாள் அனிதா.
“வரலாம் நோ ப்ராப்ளம்” என்றதும் போன் இணைப்பை துண்டித்தேன். நான் சென்றா கார் அந்த பார்க்கின் வாசலில் நிற்க நான் முன்னால் நடந்தேன்.
எங்களுக்கு முன்னாலேயே அனிதாவும் ராதாவும் வந்துவிட்டிருந்தார்கள். என்னை பார்த்த்தும் இருவரும் ஆர்வத்துடன் எழுந்து வர
“என்ன் முத்து திடீர்னு” என்று அனிதா கேட்க ராதா என்னை பார்த்து ஸ்னேகமாக ஒரு புன்னகையுடன் நின்றாள்.
“ஒன்னுமில்ல் மேடம் உங்களுக்கு தெரிஞ்ச ஒருத்தர் உங்களா பார்க்கனும்னு சொன்னாரு, அவர கூட்டி வந்திருக்கேன்”என்றதும் அனிதா அர்வமுடன்
“யாரு முத்து அது எனக்கு தெரிஞ்சவரு உன் கூட வந்திருக்கிறது” என்று எனக்கு பின்னால் பார்க்க அங்கு ராஜாவும் அவருடன் வக்கீல் ஒருவரும் நின்றுந்தனர். ராஜாவை பார்த்த்தும் அனிதாவின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் விளக்கு எரிய ஆரம்பித்த்து போல் பிரகாசமானது. முகத்தில் லேசான புன்சிரிப்பும் ஆன்ந்த கண்ணீரும் வழிந்த்து.
ராஜாவை நோக்கி மெல்ல நடக்க அதே நேரம் ராஜாவும் அவளை நோக்கி நடந்து வந்தார். இருவரும் ஒரு அடி இடைவெளியில் நின்று ஒருவர் கண்களை ஒருவர் இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ராதா இந்த காட்சியை பார்த்த்தும் கண்ணீர் விட்டு அழ தொடங்கிவிட்டாள். ராஜாவும் அனிதாவும் சில நிமிடங்கள் வரை எதுவும் பேசாமல் உதடுகள் மூடி இருக்க இருவரின் கண்களும் கண்ணீரால் பேசிக் கொள்ள இதய்ங்கள் காதலில் பேசிக் கொண்டிருந்த்து அவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். அந்த நொடி எனக்கு ராஜாவின் மேல் பொறாமையாக இருந்த்து.
எவ்வளவோ துன்பங்கள் செய்த போதும் தன் கணவன் என்ற எண்ணம அவள் மனதில் இன்றும் இருக்க காரணம் அவள் வைத்திருந்த உண்மையான காதல் மட்டுமே. இப்படி காதலித்தால் இப்படி ஒருத்தியைத்தான் காதலிக்க் வேண்டும். என்று என் மனம் சொல்லிக் கொண்டிருக்கும் அந்த நொடி என் கைகளை யாரோ பற்றிட திரும்பி பார்த்தேன் அது ராதா. என்னை பார்த்து கண்ணீர் சிந்தியபடி நின்றிருந்தாள்.
“முத்து உனக்கு எப்டி நன்றி சொல்றதுன்னே தெரியலடா” என்றாள். அவள் நன்றியை கண்ணீரால் சொல்லிக் கொண்டிருந்தாலும் அவள் உதடுகள் வார்த்தையில்லாம்ல் தவித்த்து. அனிதாவும் ராஜாவும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். நானும் ராதாவும் அவர்கள் பேசி முடிக்கும் வரை தூரத்திலேயே நின்றிருந்தோம். கடைசியில் ராஜா அனிதாவின் காலில் விழ போக அனிதா அவனை தடுத்து நிறுத்தி கட்டி அணைத்துக் கொண்டாள். 


இருவரும் பேசிக் கொண்டது அவர்களுக்கு மட்டுமேயான அந்தரங்கம். சில் நொடிகள் பலர் வந்து போகும் பூங்கா என்ற எண்ணம் கூட இல்லாம்ல் கட்டி அணைத்துக் கொண்டிருக்க அதன் பின் இருவரும் பிரிந்து நின்றதும் ராஜாவும் அனிதாவும் ஒன்றாக என்னை பார்த்தனர்.
நான் அவர்களை நோக்கி செல்ல ராதாவும் என் அடி ஒன்றி நடந்து வந்தாள். ராஜா அனிதாவிடம் ஏதோ சொல்ல அவளும் எங்களை பார்த்து சிரித்தாள். நானும் ராதாவும் அவர்கள் அருகே சென்றதும் அனிதா என்னை பார்த்து கண்ணீர் விட்டாள்.
“முத்து நீ எனக்கு செஞ்சிருக்குற இந்த உதவிக்கு நான் எத்தன ஜென்ம்ம் ஆனாலும் பரிகாரம் செய்ய முடியாது” என்று கையெடுத்து கும்பிட போனவளின் கையை பிடித்து நிறுத்தி
“என்ன மேடம் இது, இதெல்லாம் ரொம்ப சாதாரணமான விஷயம் இதுக்கு போய் இப்டி நன்றியெல்லாம் சொல்லி என்ன அன்னியப்படுத்ரீங்களே” என்றதும்.
“முத்து உன்ன அன்னியப்படுத்துறதுக்காக இல்ல நீ செஞ்சது சாதாரணமான உதவி இல்ல, இனிமே என் வாழ்க்கையில் கணவன் அப்ப்டின்ற ஒரு உறவே இல்லனுதான் இருந்தேன், ஆனா உன்னாலதான் அது திரும்பவும் எனக்கு கெடச்சிருக்கு, இதுக்கு நான் எப்ப்டி வேணாலும் நன்றி சொல்ல்லாம்” என்று மீண்டும் அழ தொடங்கினாள். அந்த நேரம் வக்கீல் அங்கு வர “தம்பி டைம் முடியபோகுது போகலாமா” என்றார்.
“என்ன்ங்க நான் உங்கள ஜாமீன்ல எடுக்கவா” என்று அனிதா ராஜாவை பார்த்து கேட்க
“இல்ல அனிதா நான் செஞ்ச தப்புக்கான தண்டனைய அனுபவிச்சாதான் என் மனசுல குற்ற் உணர்வு இல்லாம உன் கூட திரும்பவும் வாழ முடியும், அதனால் தண்டன காலம் முழுசும் நான் அனுபவிச்சிட்டுதான் வருவேன்” என்றான்,
“ஆமா மேடம் நான் கூட எவ்வளவோ சொல்லிட்டேன், சாருதான் கேக்கவே இல்ல” என்று நான் சொன்னதும். அனிதா
“சரி உங்க இஸ்டம், ஆனா நான் உங்களுக்காக காத்திருப்பேன்” என்று கூற வக்கீலும் ராஜாவும் கிளம்பி சென்றார்கள். அனிதா மீண்டும் என் அருகே வந்தாள். இப்போது அவள் எதுவுமே சொல்லவில்லை. என்னையே சில நொடிகள் உற்றுப்பார்த்தவள்
“முத்து நீ எனக்காக செஞ்ச இந்த உதவிக்கெல்லாம் நான் கைமாறா ஒன்னு செய்ய போறேன்” என்றாள். நான் வியப்புடன்
“ஏன்ன மேடம் கைமாறு அது இதுனெல்லாம், நான் எதையும் எதிர்பார்க்காமதான் இதெல்லாம் செஞ்சேன்” என்றேன்.
“நீ அப்டி பெருந்தன்மையா சொல்லிக்கிட்டாலும் நான் பதிலுக்கு ஏதாவத் செஞ்சாதான் என் மனசுக்கு திருப்தி இருக்கும்” என்று நிறுத்த
“ஸரி மேடம் அப்புறம் உங்க இஸ்டம்” என்றதும்
“நேரம் வரும்போது அத நானே செய்யுறேன்” என்று கூறிவிட்டு என்னிடமிருந்து விடுபட்டு ராதாவும் அனிதாவும் கிளம்பி சென்றார்கள். நான் என் வீட்டுக்கு சென்றேன்.
அடுத்த நாள் ஹாஸ்பிடல் சென்றதும் யாரொ ஒரு பெண் டாக்டருடன் எல்லாரும் ஆர்வமாக பேசிக் கொண்டிருந்தார்கள். நானும் கும்ரனும் அந்த ஹாஸ்பிடலுக்கு புதிது என்பதால் எங்கள் இருவருக்கு சங்கீதாவை தவிர யாரும் அவ்வளவாக பழக்கமில்லை. இவள் யார் என்றும் தெரியவில்லை நான் என் கேபினுக்கு சென்று உட்கார என் அறாய்யின் கதவு திறக்கப்பட்ட்து.
முன்பு எல்லோருடனும் பேசிக் கொண்டிருந்த அதே பெண் டாக்டர் என் முன் தன் செவ்வன்ன கைகளை நீட்டி
“ஹலோ முத்து சார், என் பேரு வனஜா” என்றாள். நானும் பதிலுக்கு
“ஹாய், ஹலோ” என்று கூற என் எதிரே இருந்த சேரில் உட்கார்ந்து தன் கையில் இருந்த பேகிலிருந்து ஒரு கல்யாண பத்த்ரிக்கையை எடுத்து நீட்டி
“சார் ரெண்டு நாள் கழிச்சி எனக்கு மேரேஜ் இருக்கு, எல்லாருக்கும் குடுக்க லேட் ஆகிட்ட்தால ஹாஸ்பிடல்ல இப்பதான் கொடுக்குறேன், நீங்க கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்திடனும்” என்றாள். நானும் சும்மா சம்பரதாயத்துக்கு
“கல்யாணம் எங்க” என்று கூறியபடி பத்திரிக்கையை பிரிக்க அவள் அதற்குள்
“திருவள்ளூர்ல தான் கல்யாணம் சார்” என்றாள். நான் பத்திரிக்கையை படித்துவிட்டு
“சரி நான் கண்டிப்பா வரேன்” என்றதும் அவள் சிரித்த முகத்துடன்
“ஆப்போ நான் கெளம்புறேன் சார்” என்று புறப்பட்டுவிட்டாள். அடுத்த நாள் மாலை சங்கீதா உட்பட சிலர் ஒன்றாக நின்றுகொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள் என்னை பார்த்த்தும் சங்கீதா
“முத்து நீங்க வனஜா கல்யாணத்துக்கு வரீங்கல்ல” என்றாள். நான் என்ன சொல்வது என்று புரியாமல்
“இல்ல சங்கீ, அவ்ளோ தூரம் எதுக்கு, அவங்கள இன்விடேஷன் கொடுக்கும்போதுதான் முதல் தடவையா பார்த்தேன்”என்று தயங்க
“சரி, குமாரும் (குமரன்) இத்தான் சொன்னாரு, நீங்க ரெண்டு பேரும் க்ளினிக்க பார்த்துக்கங்க, நாங்கலாம் போய்ட்டு வரோம்” என்றாள் சங்கீதா,
“நாங்க ரெண்டு பேரு மட்டுமா” என்று நான் அதிர்ச்சியுடன் கேட்க
“நீங்க ரெண்டு பேரு மட்டுமில்ல, சில டாக்டர்ஸ் முந்தன நாள் ரிஷப்ஷனுக்கு போய்ட்டு காலையில வந்திடுவாங்க, அவங்க இருப்பாங்க” என்று கூறி சிரித்தாள். நானும் தப்பிச்சேண்டா சாமி என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு கிளம்பினேன்.
கல்யாணதன்று காலையில் நான் கொஞ்சம் சீக்கிரம் வந்துவிட ஒரு சில டாக்டர்களே வந்திருந்தார்கள். அதனால் வந்திருந்தவர்கள் அணைவருக்கும் ஏகப்பட்ட வேலைகள் இருந்தன. நான் ஒவ்வொருவராக பார்த்துக் கொண்டே வர மணி காலை 11 காடியது. அடுத்த பேஷண்டை வர சொல்ல கதவை திறந்து கொண்டு 40 வயதுள்ளா ஒருவன் உள்ளே வந்தான். வந்தவன் என்னை பார்த்த்தும் அதிர்ச்சியாகி அப்படியே நிற்க அவனை தள்ளிக் கொண்டு உள்ளே இன்னொருவன் வந்தான்
அவனுக்கு வயது 38 இருக்கும், அவனும் என்னை பார்த்த்தும் அதிர்ச்சியுடன் வாயை பிளந்து கொண்டு நின்றான். அடுத்த்தாக ஒரு பெண் 35 வய்துள்ளவள் இன்னொரு பெண்ணை இழுத்துக் கொண்டு உள்ளே வந்தாள். அவளுடன் வந்த பெண்ணுக்கு 30 வயது இருக்கும். 35 வயது பெண் உள்ளே வந்த்தும் மற்றவர்களை போல் அவளும் வாய் பிளந்து நிற்க உடன் வந்த பெண் ஏதேதோ தனக்குள் பேசிக் கொண்டு சிரித்துக் கொண்டு வந்தவள் என்னை பார்த்த்தும் ஒரு நொடி அவள் முகத்திலும் ஒரு அதிர்ச்சி, ஆனால் அடுத்த நொடி அவள் என்னை பார்த்து
“ஐ. .மாமா. .. “என்று என்னை நோக்கி வ்ந்தவள் என் அருகே நின்று கொண்டு
“மாமா நீங்க இங்க என்ன் பண்றீங்க” என்றாள். அவள் பேச்சு, நடை உடையை கவனிக்கும் போது அவள் மன்நிலை பாதிக்கப்பட்டிருப்பது ந்ன்றாக தெரிந்த்து. மற்ற மூவரும் திறந்த வாயை இன்னும் மூடாமல் என்னையே பார்த்துக் கொண்டிருக்க இந்த பெண் அவர்களில் மூத்தவன் அருகே சென்று
“அண்ணா இதோ பாரு மாமா” என்றாள். இவர்கள் ஏன் இப்படி நிற்கிறார்கள். இவள் ஏன் என்னை மாமா என்கிறாள். என்று எதுவும் எனக்கு புரியாமல் நானும் விழித்துக் கொண்டிருக்க மூத்தவன் சுயனினைவு வ்ந்தவன் போல என்னை பார்த்து
“அருண், நீ....நீயா” என்றான். எனக்கு ஒன்றும் புரியாமல் எனக்கு பின்னால் யாராவது இருக்கிறார்களா என்று திரும்பி பார்த்துவிட்டு
“யாரு சார் என்னையா” என்றேன். மற்ற இருவரும் மெல்ல என்னை நோக்கி வர நான் எழுந்து நின்றேன்.
“அருண், நீங்க எங்க இங்க” என்றாள். அந்த 35 வயது பெண்.
“ஹலோ யாருனு நெனச்சிக்கிட்டு பேசுறீங்க, நான் அருணும் இல்ல உங்க யாரையும் எனக்கு தெரியவும் தெரியாது”என்று நான் சொல்ல இரண்டாவதாக வந்தவன். தன் செல் போனை வெளியே எடுத்து டச் ஸ்க்ரீனில் தடவினான். பின் என் முன் திரையை நீட்டி கட்ட அதில் என் படம் இருந்த்து.
எனக்கே தூக்கிவாரி போட்டது. மற்றொரு போட்டோவை காட்ட அதில் நானும் இப்போது வந்திருக்கும் 30 வயது பெண்ணும் ஜோடியாக நிற்பது போன்ற போட்டோ ஒன்று இருந்த்து. எனக்கு நெஞ்சே அடைத்துவிடுவது போல் இருந்த்து. அருகிலிருந்த அந்த பெண்ணை திரும்பி பார்க்க
“மாமா, மாமா” என்று பாட்டு போல் பாடிக்கொண்டிருந்தாள்.
“சார் யாரு நீங்க, என் போட்டோவ ஏன் ஃபோட்டோ ஷாப்ல மாத்தி வெச்சிருக்கீங்க” என்று கேட்க மூத்தவன்
“தம்பி உங்க பேரு என்ன” என்றான்.
“என் பேரு முத்து” என்று நான் சொல்ல
“உங்களுக்கு அண்ணன் தம்பி யாராவது இருக்காங்களா” என்றாள் அந்த 35 வயது பெண்.
“இல்லையே நான் ஒரே பைய்யன் தான்” என்று நான் சொல்ல செல் போனில் மற்றொரு போட்டோவை காட்ட அதில் இந்த மூவருடன் நானும் அந்த 30 வயது பெண்ணும் இருப்பது போன்ற போட்டோ இருந்த்து. எனக்கு தலை சுற்றியது.
“சாரி இது யாரு, உண்மையிலேயே இது நானில்ல” என்றதும்.
“தம்பி இவரு பேரு அருண், இதோ இங்க இருக்காளே இவளோட ஹஸ்பண்ட், நாங்க இவளோட அண்ணனுங்க, இவ என்னோட பொண்டாட்டி” என்று மூத்தவன் சொல்ல
“ஆமா தம்பி இந்த அருண அப்படியே உங்கள மாதிரியே இருப்பாரு, உங்க ரெண்டு பேரையும் ஒன்னா நிக்க வெச்சா, யாரு அருண்னு கண்டுபிடிக்கவே முடியாது” என்று அந்த 35 வயது பெண் சொல்ல நான் 30 வயது பெண்ணை காட்டி
“இவங்களுக்கு என்ன ஆச்சி, இப்ப அந்த அருண் எங்க” என்று நான் கேட்க மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அதற்குள் கும்ரன் வந்துவிட நான் அவனிடம்
“என்ண்டா” என்றதும் அவன் என் அறையில் இருந்த சிரஞ்ச் பாக்ஸை எடுத்துக் கொண்டு எல்லோரையும் ஒரு மாதிரியாக லுக்குவிட்டுவிட்டு சென்றான். அணாய்வரின் முகமும் பேயறைந்த்து போல் நிற்க நான் மீண்டும் அவர்களை பார்த்து
“இப்ப் உங்களுக்கு என்ன் வேணும், அந்த அருண் எங்க,” என்றேன்.


மூத்தவன் என் அருகே வந்து உட்கார மற்ற இருவரும் அவன் அருகே நின்றார்கள். இந்த பெண் என் அருகிலேயே நின்றிருந்தாள்.
“தம்பி என் பேரு பெருமாளு, இவன் என் தம்பி கொண்டல்ராவ், இவ என் பொண்டாட்டி லட்சுமி, இவ என்னோட செல்ல தங்க்ச்சி லாவன்யா, எங்களோட்து ஆந்திராவுல பெரிய குடும்பம், எங்களுக்கு சொந்தமா ரெண்டு க்ரானைட் குவாரி இருக்கு, இவளுக்கும் அருணுக்கும் கல்யாணம் பண்ணி வெச்சோம், ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தாங்க, ஒரு ஆக்ஸிடெண்ட்ல இவ ஊட்டுக்காரன் செத்துட்டான், அதுல இவளுக்கு பைத்தியம் புடிஹ்க்சிடுச்சி, சென்னையில் இருக்குற பெரிய ஹாஸ்பிடல்ல காட்ட இவள கூட்டிவந்தோம், வ்ந்த எடத்துல இவ மயங்கி விழுந்துட்டா, அதான் இங்க கூட்டி வந்தோம், நீங்க பார்க்க இவ ஊட்டுக்காரன் மாதிரியே இருக்கறதால உங்கள பார்த்த்தும் இவ மயக்கம் கூட தெளிஞ்சி போச்சி பாருங்க” என்று லாவண்யாவை காட்ட அவள் என் அருகே நின்று சிரித்துக் கொண்டிருந்தாள்.
பார்க்க மிகவும் அழ்காக மங்களகரமாக இருந்தாள் லாவண்யா. ஆனால் அவளுக்கு வந்த இந்த சோதனையை எண்ணி என் மனம் வருந்தியது. நான் லாவணயாவை சோதித்து பார்த்தேன். அவளுக்கு எந்த பிரச்ச்னையும் இருப்பதாக தெரியவில்லை, பிறகு ஏன் மயங்கி விழுந்தாள் என்று யோசித்துக் கொண்டே வந்தவர்களை பார்த்து
“காலையில சாப்டாங்களா” என்றதும்.
“இல்ல தம்பி வெறும் பால் மட்டும்தான் குடிச்சா” என்று லட்சுமி கூற நான் அவளை பார்த்து
“பசி மயக்கமாத்தான் இருக்கும், சாப்டாங்க்ன்னா சரியாப்போகிடும்” என்று சில மாத்திரைகளை எழுதி கொடுக்க அந்த கேப்பில் மூவரும் ஏதோ கிசிகிசுவென பேசினார்கள். நான் மாத்திரை சீட்டை நீட்ட அதை பெருமாள் வாங்கிக் கொண்டு
“தம்பி எங்களுக்கு நீங்க ஒரு உதவி செய்யனும்” என்றான்.
“என்ன் உதவி, அதுவும் நான் உங்களுக்கு என்ன் செய்ய முடியும்” என்றதும் கொண்டல்ராவ்
“சார் நீங்க பார்க்க அச்சு அசல் அப்ப்டியே என் மச்சான் அருண் மாத்ரியே இருக்கீங்க, இதோ என் தங்க்ச்சி கூட நீங்கதான் அருண் நெனச்சிக்கிட்டு உங்க்கிட்ட ஒட்டிக்கிட்டா, அத்னால” என்று இழுத்தான். லட்சுமி தன் தலையை சொரிந்து கொண்டே
“தம்பி இவளோட நல்லதுக்காகத்தான் நாங்க இந்த உதவிய கேக்குறோம்” என்று நெளிந்தாள்.
“என்ன் உதவினே சொல்ல்லையே” என்று நான் கேட்க
“தம்பி இவளுக்கு சீக்கிரம் குணமாகனும்னா, அது உங்க கையிலதான் இருக்கு” என்று பெருமாள் சொன்னதும் அடுத்து அவன் என்ன சொல்ல் போகிறான் என்று எனக்கு ஓரளவுக்கு புரிந்த்து.
“சார் நீங்க கொஞ்ச நாள் எங்க கூட தங்கி இவளுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கனும்” என்றான் கொண்டல். எனக்கு ஒன்றும் புரியாமல்
“சார் என்ன் சொல்றீங்க” என்று கேட்க
“தம்பி இவ உங்கள அருணாவே நெனச்சிட்டா, அதனால் நீங்க எது சொன்னாலும் கேட்பா, நீங்க எங்க்கூட வந்து சில நாள் தங்கி இருந்து இவள உங்க வழிக்கு கொண்டு வ்ந்து....” என்று சொல்லிய லட்சுமி ஏதோ உளறிவிட்ட்தை எண்ணி தன் நாக்கை கடித்துக் கொண்டு
‘இல்ல இவள நல்ல படியா குணமாக்கனும்” என்று கூறிவிட்டு எச்சிலை விழுங்கி நிம்மதி அடைந்தாள். கொண்டல்ராவும் பெருமாளும் அவளை எரித்துவிடுவது போல் முறைத்தனர்.
“ஆமா தம்பி இவ மேல நாங்க உசுரையே வெச்சிருக்கோம், நீங்கதான் இவள குணமாக்குற மருந்து” என்று பெருமாள் சொல்ல்
“சார் என்னது, என்ன ஆள்மாறாட்டம் பண்ண சொல்றீங்களா, மாட்னா நான் தான் கம்பி எண்ணனும்” என்று நான் பயத்துடன் சொல்ல
“அதுக்கெல்லாம் பயப்படாதீங்க தம்பி, நாம லீக்லாவே எல்லாத்தையும் பண்ணிடலாம், இதுல எந்த தப்பும் வராது”என்று கொண்டல்ராவ் கூற
“அது எப்டிங்க முடியும், இவங்க வீட்டுக்கார்ர் செத்துட்டாருனு சொல்றீங்க, அப்டி இருக்கும்போது அவரோட எட்த்துல இருந்து நான் எது பண்ணாலும் அது தப்புதானே” என்று கூற
“தம்பி நாம் வக்கீல வெச்சி, நீங்க முத்துதான், இவளுக்கு வைத்தியம் பண்ணதான் வரீங்கனு ஒரு அக்ரீமெணெடே ரெடி பண்ணிடலாம், அப்புறம் என்ன் பிரச்சினை வரப்போகுது” என்றான் பெருமாள். எனக்கு ஒன்றும் புரியுவில்லை. நான் யோசித்துக் கொண்டிருந்த நேரம் லாவண்யா என் சட்டையை பிடித்துக் கொண்டு
மாமா வீட்டுக்கு போலாம் வா” என்று குழ்ந்தை போல் கெஞ்சினாள். அவளின் இந்த குழந்தை குணத்துக்காக என்ன் வேண்டுமானாலும் செய்யலாம் என்று என் மனம் கூறியது. இருந்தாலும் எங்கயாவது போய் நாமே வாண்ட்டா மாட்டிக்குவுமோ என்றும் என் மனம் பயந்தது. அதே நேரம் பெருமாள்
“தம்பி அவ முகத்த பாருங்க எப்டி ஓடி ஆடி சந்தோஷமா இருக்க வேண்டிய பொண்ணு இப்டி இருக்காளே, இந்த முகத்த பார்த்தா உங்களுக்கே பாவமா இல்லையா” என்றதும் நான் அவள் முகத்தை நிமிர்ந்து மீண்டும் பார்க்க லாவண்யா இப்போதும் என்னை பார்த்து
“மாமா வா வீட்டுக்கு போலாம்” என்று கெஞ்சினாள். ஆனால் இந்த கெஞ்சல் மன்நிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் கெஞ்சல் போல் இல்லாமல் சாதாரண மன்நிலையில் இருக்கும் ஒரு பெண்ணின் கெஞ்சலாக தெரிந்த்து. அவள் முகத்தை உற்றுப் பார்த்த்தும் மீண்டும் பழையபடி குழ்ந்தை தனமாக முகம் மாறிட இதில் ஏதோ உள்குத்து இருக்குமோ என மனம் பயந்து கொண்ட்து.
“பயப்படாதீங்க தம்பி உங்களுக்கு எதுவும் ஆகாம நாங்க பார்த்துக்குறோம், உங்கள நாங்கதான் கூட்டி போனோம்னு அக்ரீமெண்ட்லயே எழுதி தரொம” என்றான் கொண்டல் ராவ். யாருக்காக இல்லை என்றாலும் லாவண்யாவின் இந்த குழந்தை குணத்திற்க்காகவது போக்லாம் என்று ஓப்புக் கொண்டேன்.
“சரி தம்பி நாளைக்கு காலையில் ரெடியா இருங்க நாங்க கால் பண்றோம், கெளம்பலாம்” என்று கூறிவிட்டு என் மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டு நாங்கு பேரும் கிளம்பினார்கள். லாவண்யா செல்லும்போது
“மாமா, வீட்டுக்கு போலாம் வா” என்று கத்தீக் கொண்டே சென்றாள். அன்று மாலை சங்கீதாவை சந்தித்து விடுப்பு சொல்லிவிட்டு கும்ரனை பார்க்க சென்றேன்.
“மச்சி ரொம்ப முக்கியமான வேலனா நானும் உங்கூட வரேண்டா” என்றான்.
“இல்லடா, இது கொஞ்ச்ம ரிஸ்க்கான வேலயா தெரியுது, ரெண்டு பேரும் போய் மாட்டிக்க கூடாது அதனால் நீ சென்னையிலயே இரு, நான் போய்ட்டு என்ன் சூழ்னிலைனு பார்த்துர்ரு உனக்கு சொல்றேன், தேவப்பட்டா மட்டும் கிளம்பி வா” என்று சொல்ல
“ஸரிடா பார்த்துக்கோ” என்று ஆறுதல் சொல்லி அனுப்பினான். அடுத்த நாள் காலை எனக்கு போன் வந்த்து. கொண்டல் ராவ் தான் பேசினான். அம்பத்தூர் அருகே ஒரு இடம் சொல்லி அங்கு வர சொன்னான். நான் அங்கு சென்றேன். ஒரு இன்னோவா கார் நின்றிருந்த்து. காருக்கு வெளியே பெருமாள் போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். நான் வருவதை பார்த்துவிட்டு போனை கட் செய்துவிட்டு என்னை காருக்குள் ஏற சொன்னான். கார் கிளம்பியது. முன் சீட்டில் பெருமாளும் கொண்டல் ராவும் உட்கார்ந்திருக்க பின் சீட்டில் நான் என் அருகே லாவண்யா அவள் அருகே லட்சுமி உட்கார்ந்தோம்.
கார் கிளம்பியது. மூவரும் என்னுடன் சகஜமாக பேசிக் கொண்டிருந்தார்கள் . செங்குன்றம் தாண்டியதும் கார் மின்னல் வேகத்தில் சீறிக் கொண்டு போனது. பெருமாளும் கொண்டல்ராவும் தங்களுக்குள் ஏதேதோ தமிழிலும் தெலுங்கிலும் மாறி பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். கார் நான்கு மணி நேர பயணத்தை மூன்று மணி நேரத்தில் முடித்துவிடும்படி அசுர வேகத்தில் சென்று கொண்டிருந்தது. கார் பிச்சாட்டூர் புத்தூர் என்று ஆந்திர எல்லைக்குள் புகுந்து ஓடிக் கொண்டிருந்த்து.
ஆந்திர எல்லையை தொட்ட்துமே பெருமாளின் முக பாவங்கள் மாறின. சீரியஸாக இருவரும் தெலுங்கில் பேசிக் கொண்டார்கள். இடை இடையே லட்சுமியும் ஏதோ சொன்னால். ஒரு வார்த்தை கூட அவர்கள் தமிழில் பேசவில்லை. ஓரிட்த்தில் இறங்கி எல்லோரும் இளநீர் குடித்துக் கொண்டிருக்க பெருமாளின் செல் அலறியது எடுத்து பேசியவன் ஆத்திரமான் முகத்துடன்
“அதானி தல் நறுக்கிண்ரா” (அவன் தலையை வெட்டு) என்று ஆக்ரோஷமாக கத்தினான்.
கார் மீண்டும் கிளம்பியது சில நிமிடம் மௌனம் லாவண்யா என் தோளில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அடிக்கடி லட்சுமி அவளை காட்டியும் ஏதோ சொன்னாள். இது என்ண்டா இது. இதுவரைக்கும் நல்லா தமிழ் பேசுனவங்க திடீர்னு இப்டி மொபைல்ல ரோமிங்க் ஏரியா மாறினா தெர்லுங்கில பேசுற மாதிரி எல்லாரும் தெலுங்கிலேயே பேசுறாங்களே, என்று எனக்குள் யோசித்துக் கொண்டிருக்க கார் கடப்பா திருப்பதி NH-31 லிருந்து பிரிந்து சென்ற கடப்பா பைபாஸ் சாலைக்குள் நுழைந்த்து.
அங்கு ஊரின் பெயர்கள் எல்லாம் வாயில்கூட நுழையவில்லை, புட்டம்பள்ளி, மாமில்லாபள்ளி, அக்கயாபள்ளி, ராயளாபந்துளாபள்ளி, என்று அவசரத்துக்கு யாரிடமும் சொல்லி கேட்க கூட முடியாது போலிருக்கே என்று நினைத்துக் கொண்டேன். கடைசியில் ருத்ரபாரதிபேட்டா என்ற ஒரு இட்த்திற்க்கு சென்று ஒரு வீட்டின் முன் கார் நின்றது. அந்த வீடு சினிமாவில் வருவது போல் பெரிய சைஸ் பங்களா. வீட்டின் முன்னால் தோட்டம் போட்டிருந்தார்கள். அந்த இடமே பல் ஏக்கர் இருக்கும் போல் இருந்த்து. சுற்றிலும் எந்த வீடும் இல்லை. தனி வீடாக இருந்த்து. உள்ளே கார் நுழைந்து போர்டிகோவில் நின்றது. கேட்டிலிருந்து போர்டிகோ வரை பத்து பேர் கையில் உருட்டுக்கட்டையுடன் நின்றிருந்தார்கள். கார் நின்றதும் ஒருவன் ஓடி வந்து கார் கதவை திறக்க எல்லோரும் இறங்கி உள்ளே நடந்தோம்.



No comments:

Post a Comment