“அமுதா....” என்ற வார்த்தையை தவிற என் வாயில் இருந்து வேறு வார்த்தை வராமல நிற்க “நீங்க என்ன் லவ் பண்றீங்கன்னு அக்கா சொன்னப்பா மொதல்ல நான் அத வெறுத்தேன். ஆனா ரஞ்சித்த காதலிக்காம இருந்திருந்தா உங்க காதல ஏத்துக்கிட்டிருக்கலாமேனு ஃபீல் பண்ணேன், ரஞ்சித்த மட்டும் நான் காதலிக்காம் இருந்திருந்தா கண்டிப்பா உங்களதான் காதலிச்சிருப்பேன், நீங்க என்னவோ என்ன உண்மையா விழுந்து விழுந்து லவ் பண்றதா அக்கா சொன்னா, ஆனா இதுதான் நீங்க என் மேல் வெச்சிருக்குற காதலா, இதுக்கு பேரு உங்க ஊருல காதலா” என்றாள். நான் கூனிக் குறுகி நின்றேன். அவள் மீண்டும் கோவம் குறையாத குரலி “ரஞ்சித்தும் நானும் ரெண்டு வருஷமா லவ் பண்ரோம், ஆனா இது வரைக்கும் அவர் சுண்டு விரல் கூட என் மேல தப்பான எண்ணத்தொட பட்ட்து இல்ல, அவர் வாயில இருந்து வர ஒரு வார்த்த கூட இதுவரக்கும் தப்பான அர்த்த்தொட வந்த்தில்ல, அதுக்கு பேருதான் உண்மையான காதல், ஆனா பார்த்து ரெண்டே நாள்ல உங்களுக்கு என் மேல் லவ் வரும், அத நான் ஏத்துக்கலனா எனக்கே தெரியாம எங்கூட படுப்பீங்க, இதுக்கு பேரு காதல் இல்ல தெரு நாய்த்தனம், தெருவுல் போற நாய்தான் ஒரு நாய பார்த்த்தும் அது பின்னாலேயே சுத்தி அது கூட தப்பு பண்ணதும் கெளம்பி போய்டும், நீங்களும் நேத்து அப்படித்தான நடந்துக்கிட்டீங்க, உங்களுக்கும் அந்த நாய்களுக்கும் என்ன வித்தியாசம்” என்றாள். எனக்கோ ஆயிரம் பேர் என்னை சுற்றி நிற்க்கும் நிலையில் என்னை செருப்பால் அடித்த்து போல் இருந்த்து. என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது. “உங்க காதல போய் வெறுக்கிறோமேனு நெனெச்சி சில நிமிஷம் ஃபீல் ப்ண்ணிருக்கேன், ஆனா நேத்து நீங்க பண்ணத நெனக்கும் போது, நல்ல வேல உங்கள மாதிரி ஒரு ஆள லவ் பண்ணாம தப்பிச்சோமேனு சந்தோஷப்படுறேன்” என்றாள். எனக்கு வார்த்தைகள் இல்லாமல் அவள் பேச்சை மட்டுமே கேட்க முடிந்த்து. “எனக்கு இதெல்லாம் எப்டி தெரியும்னுதான் யோசிக்கிறீங்க, கடைசி நேரத்துல எனக்கு நினைவு வந்துடுச்சி, இல்லனா கடைசி வரைக்கும் உங்கள நல்லவர்னு நெனச்சிக்கிட்டும், உங்க் காதல அவாய்ட் பண்ணிட்டோமேனு ஃபீலிங்கோட இருந்திருப்பேன், நல்ல வேல அந்த கடவுளா பார்த்து எனக்கு நெனவ கொடுத்தாரு, அதுக்கப்புறம் உங்கள் ஃபாலோ பண்ணி வந்து உங்க ரூம்ல நீங்களும் அவளும் பேசிக்கிறத கேட்ட்துக்கு அப்புறம்தான் நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு பெரிய அசிங்கமானவங்கனு தெரிஞ்சிக்கிட்டேன், இனிமே தப்பி தவறி கூட என் கண்ல பட்றாதீங்க, உங்க கூட பழகின நாள் கொஞ்ச்மா இருந்தாலும் அத நான் அசிங்கமானதா நெனக்கிறேன், நீங்கலால் மனுஷ ஜென்ம்மா” என்று கடைசியாக என் முகத்தில் எச்சிலை துப்பிவிட்டு சென்றாள். எனக்கு அந்த நொடியே செத்துவிடலாம் போல இருந்த்து. ‘ச்சே இந்த விஜயாவோட தொல்லையால இவகிட்ட நம்ம பேரு நாரி போச்சே’ என்று என் மனம் குமுறியது. குளித்து முடித்த்தும் எனக்கு சாப்பிட மனம் இடம் கொடுக்கவில்லை. பசுபதி எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தார், அவர் முன் சென்று “ஐயா நான் கெளம்புறேன்” என்றதும். “என்ன் தம்பி ரெண்டு மூனு நாளு இருக்குறேனு சொல்லிட்டு இப்டி திடீர்னு கெளம்புறேன்னு சொல்றீங்களே” என்றார். “இல்லைங்கய்யா ஊர்ல இருந்து போன் வந்துச்சி, ஏதோ அவசர வேலையாம், அதான் நைட்டு பஸ்சுக்கே கிளம்புறேன்” என்றதும் அவர் “ஸரி அப்புறம் உங்க இஸ்டம், நேரம் இருக்குமபோது கண்டிப்பா வாங்க, அமுதா கல்யாணத்துக்கும் பத்ரிக்க அனுப்புறோம், கண்டிப்பா நீங்களும் குமாரு தம்பியும் வந்துடுங்க” என்றார். நான் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு வீட்டிலிருந்த எல்லோரிடமும் செல்லிவிட்டு அமுதாவின் முன்னால் வந்தேன். அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்க தைரியம் இல்லாமல் “அமுதா நான் கெளம்புறேன்” என்று மட்டும் கூறிவிட்டு விறுவிறுவென அங்கிருந்து நடந்தேன். “என்ன் மச்சி இப்டி ஆகிடுச்சி, அவ சொன்னதுலையும் ஒரு நியாயம் இருக்குடா” என்றான் கும்ரன் நான் அவனை பார்த்து “டேய் எதாவது ஒரு பக்கம் பேசு” என்றதும். “இல்லடா, நீ அவள ரெண்டு அறை விட்டிருந்தா கூட அவ தாங்கிட்டிருப்பா, ஆனா அவ உடம்ப அவளுக்கே தெரியாம அனுபவிச்சது.... ..... கொஞ்ச்ம தப்புதான், நான் கூட அவ நம்ம ஊரு பொண்ணுங்க மாதிரி லவ் பண்ணும்போது அப்டி இப்டி இருந்தா தப்பு இல்லனு நெனச்சிக்கிட்டும், மேட்டரெல்லாம் பெரிய விஷயமே இல்லாம இருக்குற மாதிரி பொண்ணுனுதான் நெனச்சேன், ஆனா அவ ரஞ்சித் கூட பழகுனத வெச்சி பார்த்தா நீ பண்ணது கொஞ்ச்ம இல்ல நெறைய தப்புதான்” என்றான். எனகும் அவன் சொவதின் அர்த்தம் புரிந்த்து. “சரி விடுடா, எல்லாத்தையும் நீயாவா போய் பண்ண, அவ அக்காவ பத்தியும் அவ இன்னேரத்துக்கு புரிஞ்சிக்கிட்டிருப்பால்ல என்னைக்காவது உன் மேல் இருக்குற நியாத்த அவ புரிஞ்சிப்பா” என்றான். “இனி அவ புரிஞ்சிக்கிட்டு என்ன் நடக்கப்போது” என்று கூறிவிட்டு என் வீட்டை நோக்கி நடந்தேன். நாட்கள் நகர்ந்தன, அமுதாவின் நினைவும் அவளுக்கு நான் செய்த துரோகமும் என்னை வாட்டி எடுத்த்து. இதற்க்குன் நடுவே என் படிப்பு சம்பந்தபட்ட எல்லாம் முடிந்த்து. ப்ராக்டீசும் முடிந்த்து. நானும் குமரனும் யார் யாரையோ பிடித்து ஒரு சிறிய தனியார் மருத்துவமனையில் டாக்டரானோம். நாங்களும் டாக்டராகிட்டோம்ல..... அண்ணாநகரில் இருக்கும் கொஞ்ச்ம சிறிய மருத்துவமனை... நானும் கும்ரனும் மட்டும் பிரியாமல் அங்கே ஒன்றாக சேர்ந்துவிட்டோம். மற்றவர்களை பற்றி சில நாட்கள் தகவல் இல்லை. லதா அவள் அக்காவின் கம்பனியில் பெரிய பொருப்பில் சேர்ந்துவிட ரவியும் மற்றவர்களும் எங்கோ இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டோம். அன்று தான் முதல் நாள் நான் மருத்துவமனைக்கு கிளம்பிக் கொண்டிருந்தேன், ஹாஸ்பிடல் வாசலில் சென்ற நேரம் ஒரு கார் என் முன்னே வந்து நின்றது. யாருடா அது நம்மள் மடக்குறது. இது அனிதாவோட காரும் இல்ல வேற யாரா இருக்கும் என்று ஆவலுடன் பார்க்க காரின் கண்ணாடி கீழெ இறங்கியது, உள்ளே ஒரு அழகான பெண், இவளை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று யோசிக்க இவள் தான் சங்கீதா என்று என் மூளை சொல்லியது.. இவள் என் வகுப்பு மாணவிதான் ஆனாலும் இவளுடன் நான் சரியாக கூட பேசியது இல்லை. இவள் பெயர் சங்கீதா என்பது கூட ராதா ஒரு முறை கூப்பிடும்போதுதான் தெரியும். காரிலிருந்து இறங்கியவள் என் எதிரே வந்து நின்றாள். “ஹாய் முத்து நல்லா இருக்கீங்களா” என்றாள். “நல்லா இருக்கேன், நீங்க எப்டி இங்க” என்றேன் நான். “நான் தான் இந்த ஹாஸ்பிடலோட எம்.டி” என்றதும் எனக்கு தூக்கி வாரி போட்ட்து. “என்னது ஹாஸ்பிடல் எம்டியா” என்றதும் “ஏன் அவ்ளோ ஷாக் ஆகுறீங்க” என்றாள் சிரித்துக் கொண்டே “இல்ல நீங்களும் நானும் ஓரே பேட்ஜ்தான் அப்டி இருக்கும்போது நீங்க மட்டும் எப்டி இவளோ சீக்கிரம்” என்றதும் அவள் மீண்டும் சிரித்துக் கொண்டே “ஹலோ சார் இது எங்க அப்பாவோட ஹாஸ்பிடல், இருவது வருஷமா ரன் ஆகிட்டு இருக்க ஹாஸ்பிடல், நான் படிச்சது வைத்திய்ம பாக்க இல்ல எங்க அப்பாவோட ஆசைக்காகதான்” என்றாள். எனக்கு என்ன் சொல்வது என்றே புரியாமல் உள்ளே நடந்தேன். என் பின்னாலேயே வந்தவள் “முத்து நான் உங்க்கிட்ட நெறைய பேசனும், காலேஜ் படிக்கும்போதுதான் நீங்க என்ன கண்டுக்கிட்ட்தே இல்ல, இப்பதான் நாம் ஒன்னா ஒரே எடத்துல இருக்கோமே, இப்பவாது பேசலாமா” என்றாள். நான் யோசித்துவிட்டு “என்கிட்ட என்ன் பேசனும்” என்றேன். “ஈவ்னிங் நானே உங்கள பிக்கப் பண்ணிக்கிறேன், ரெண்டு பேரும் எங்கயாவது வெளியில் போய் பேசலாம், ஓகேவா” என்றாள். “ஸரி” என்று நானும் என் அறைக்கு சென்றேன். குமரன் வந்து சேர்ந்தான். “டேய் குமரா, இந்த ஹாஸ்பிடல் யாரோடது தெரியுமாடா” என்று நான் அவனிடம் வியப்புடன் கேட்க அவனோ மிக சாதாரணமாக “தெரியுமே, நம்ம க்ளாஸ்மெட் சங்கீதாவோட ஹாஸ்பிடல்தான்” என்றான். “டேய் உனக்கு எப்டிடா தெரியும், நாம் ரெண்டு பேரும் ஒன்னாதான் சுத்துனோம், ஒன்னாதான் இருந்தோம், ஆனா அவள் பத்தி எனக்கு ஒன்னுமே தெரியாது நீ மட்டும் எப்டி” என்றதும். “மச்சி, அது வேற கத, அப்புறம் சொல்றேன்இப்ப் என்ன் விஷயம்” என்றான். “அவ என் கூட என்னவோ பேசனும்னு சொல்றா, என்னவா இருக்கும்” “எனக்கு அவள் பத்தியும் தெரியும், அவ உங்கிட்ட என்ன் பேச போறான்னும் எனக்கு தெரியும்” என்றான் மிகசாதாரணமாக. “டேய் என்ண்டா எல்லாரும் கூட்டு சேர்ந்து எனக்கு எதிரா ஏதாவது சதி பண்றீங்களாடா” என்று நான் கேட்க “ஒன்னுமில்ல்டா ஏன் டென்ஷனாகுற, ஈவ்னிங்க் போ அவளே சொல்வா” என்று கூறிவிட்டு அவனறைக்கு சென்றுவிட்டான். எனக்கு அதே நியாபகம் இருந்து கொண்டிருந்த்து. சங்கீதாவின் முகத்தை கூட நான் இது நாள் வரை சரியாக பார்த்த்தில்லை. ஆனால் லதா இருக்கும்போது அடிக்கடி அவளுடன் என்னை சேர்த்து வைத்து கலாய்த்திருக்கிறாள். ஆரம்ப நாட்களில் சங்கீதா என்னை சைட்ட்டிப்பதாகவும் என்னை காதலிப்பதாகவும் சொல்லி கிண்டல் செய்வாள். ஆனால் நான் சங்கீதா யார் என்று கூட கண்டு கொண்ட்தில்லை. ஆனால் இன்றோ அவளுக்கு சொந்தமான ஒரு மருத்துவமனையில் நான் வேலைக்கு சேர்நதிருக்கிறேன். விதியின் விளையாட்டை யாராலும் கண்டுபிடிக்க முடியாது போல. மாலை 6 மணி சென்னையின் பரபரப்பை தாண்டி ஈ.சி.ஆர் சாலையிலிருந்து தள்ளி இருந்த ஒரு ரெஸ்டாரண்ட், அதென்ன இந்த பணக்காரங்க எல்லாரும் இப்டி ஈ.சி.ஆருக்கே வராங்கய்யா என்று கூட தோன்றியிருக்கும். பணம் இருக்கு காரும் இருக்கு நெனைக்கும் நேரம் வந்து போகலாம், ஒரு சாதாரண மனுஷன் பஸ்ல வந்து போக முட்டியுமா. இருவரும் எதிரெதிரே இருந்த சேரில் உட்கார்ந்திருந்தோம்.
டேபில் பளபளத்த்து. மெல்லிய அறை வெளிச்சம், எதிரில் இருப்பவர்கள் முகத்தை தவிர வேறெதுவும் கண்ணுக்கு தெரியாது. டேபிலின் நடுவே சின்ன லைட்டு எரிந்து கொண்டிருந்த்து. மின்வெட்டு பிரச்சனைக்கு ஏற்ற செட்டப் என்று மனம் சொல்லியது. வந்து 10 நிமிடம் அகியது அவளும் எதுவும் பேசவில்லை நானும் எதுவும் பேசவில்லை. நீண்ட நேரம் அமைதியாக எங்களை விட்டுவிட்டு சென்ற வெய்ட்டர் இப்போதுதான் திரும்பி வ்ந்து அவள் ஆர்டர் செய்த சைனீஸ் அயிட்டங்களை எங்கள் முன் வைத்துவிட்டு “எனி மோர் மேம்” என்றான். “லேட்டர்” என்ரு சொன்னதும் அவன் கழண்டு கொள்ள சங்கீதா தட்டில் இருந்த உணவுகளை காட்டி என்னை சாப்பிட சொன்னாள். எனக்கு சாப்பிட இஸ்டம் இல்லை. அவள் ஏன் என்னை இங்கு தனியாக கூட்டி வந்தாள் என்ற காரணத்தை தெரிந்து கொள்ள் வேண்டும் என்ற ஆவலே அதிகமாக இருந்து. அவளை பார்த்து நேராகவே கேட்டுவிட்டேன். “ஏதோ பேசனும்னு சொன்னியே” என்றதும் அவள் உதட்டை கடித்துக் கொண்டு தலை குனிந்து கொண்டே எதையோ யோசித்தாள். பின் தைரியம் வந்தவளாய் “முத்து நாம் காலேஜ் படிக்கிற காலத்துல இருந்தே எனக்கு உங்க கூட பேசனும் பழகனும் அப்டினெல்லாம் ரொம்ப ஆச, ஆனா உங்க கிட்டயே என்னால இதுவரைக்கும் வர முடியல” என்று நிறுத்தினாள். என்னால் அவள் என்ன சொல்ல் வருகிறாள் என்று யூகிக்க முடியவில்லை. அவளே மீண்டும் தொடர்ந்தாள். “என்ன்னு சொல்ல தெரியாது ஆனா உங்க கூட பழகனும்னு எனக்கு மனசுக்குள்ள ரொம்ப ஆச, இது ராதா லதா ரெண்டு பேருக்குமே தெரியும், ஆனா ராதாவுக்கு தெரியாத ஒரு விஷயம் லதாவுக்கு மட்டும் தெரியும், நான் அத அவகிட்ட மட்டும் சொல்லி இருக்கேன். ஆனா விதி அவள இல்லாம பண்னிடுச்சி” என்றதும். அது என்ன லதாவுக்கு தெரிஞ்ச விஷயம், எனக்கும் அவளுக்கும் கல்யாணம் என்று எல்லோரும் பேச ஆரம்பித்த பின் லதா என்னிடம் எதியுமே மறைத்த்தில்லை, அப்ப்டி என்ன் ரகசியம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்க அவள் மேலும் தொடர்ந்தாள் “முத்து என்னால் இதுக்கு மேல கன்ட்ரோல் பண்ணமுடியல, முடியுமானும் தெரியல, எப்டியும் என் மனசுல இருக்குறத இன்னைக்கு சொல்லிடனும்னுதான் உங்கள் கூட்டிக்கிட்டு வந்தேன்” என்று இழுத்துக் கொண்டே போனது எனக்கு வெறுப்பை தரவே “சரி என்ன் விஷயம்னு சொல்லுங்களேன்” என்று கேட்டுவிட அவள் தன் கண்களை பட்டாம்பூச்சி போல சிறகடிக்க வைத்துக் கொண்டு உதட்டை அடிக்கடி கடித்துக் கொண்டும் என் கண்களை சில நொடிகள் உற்றுப் பார்த்தாள். பின் எச்சிலை கஸ்டப்பட்டு விழுங்கிக் கொண்டு “முத்து ஐ. லவ். யூ...” என்று கூறிவிட்டு இழுத்து ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டாள். எனக்கு அந்த நொடி இன்பம் துன்பம் மகிழ்ச்சி, கோவம் என்று எந்த உணர்வும் இல்லாமல் இவள் சொன்னது உண்மைதானா என்ற எண்ணம் மட்டுமே இருந்த்து. இப்ப்தான் ஒரு பொண்ணு பின்னாடி நான் போய் செமையா வாங்கி கட்டிக்கிட்டு வந்திருக்கோம், இப்ப் பார்த்து இவ இப்டி சொல்றாளே, இவளுக்கு நாம் என்ன் சொல்றது. என்று என் மனம் யோசித்துக் கொண்டிருக்க அவள் மீண்டும் என் கண்களை ஊடுருவிப் பார்த்தபடி “என்ன் முத்து எதுவுமே சொல்ல் மாற்றீங்க” என்றாள். நான் சிந்தனையிலிருந்து விடுபட்டு அவள் உதட்டை கவனிக்க அது மீண்டும் அசைந்து “என்ன் முத்து எதுவுமே சொல்ல் மாட்ரீங்க” என்று கேட்பது போல் தெரிந்த்து. “நாம் இதுக்கு முன்னாடி சரியா பார்த்த்து கூட இல்ல, அவ்வளவு ஏன் எனக்கு உங்க முகம் கூட சரியா தெரியாது. அப்டி இருக்கும்போது திடீர்னு எப்டி” என்று நான் திக்கி திணற, “முத்து உங்களுக்கு நான் புதுசா இருக்கலாம், தெரியலாம், ஆனா நீங்க எனக்கு 5 வருஷமா நல்லா தெரிஞ்சவரு, நான் தினமும் கனவுல உங்க கூட பேசி பழகி சந்தோஷப்பட்டிருக்கேன், உங்க்கூட குடும்பம் நட்த்தி இருக்கேன்” என்றாள். அட்டா இவள் போல தான் ஒருத்து நம் வாழ்க்கைக்கு தேவை என்று என் மனம் சொன்னாலும் “வேண்டாம் டா இந்த பொன்னுங்களையே நம்ப கூடாதுடா அதுலையும் இவ பெரிய கோடீஸ்வரி, உன்ன நாய் மாதிரி மாத்திடுவா” என்று என் மூளைக்குள்ளிருந்து ஒரு குரல் கேட்ட்து. நான் யோசித்துக் கொண்டிருக்கும் நேரம் அவளே “நான் லதாகிட்ட உங்க கூட பழகனும் பேசனும்ன்றதையும் உங்களா நான் விரும்புற விஷயத்தையும் சொல்லி இருக்கேன், ஆனா அவளோட அம்மா இறந்ததுக்கு அப்புறம் அவளுக்கும் ஒரு துணை வேணும்னும் அது நீங்களா இருக்கீங்கனு ராதா எனக்கு சொன்னா அப்பவே என் மனசுல இருந்த்த நான் எனக்குள்ளே மறைச்சிக்கிட்டேன், ஆனா லதாவும் அவ அம்மா போன எட்த்துக்கு போய்ட்டா” என்று பொடி வைத்து பேச நான் அதற்க்கு மேல் பொறுக்க முடியாமல் “சரி இப்ப என்னதான் சொல்ல வரீங்க” என்றேன். அவள் மீண்டும் வெட்கப்பட்டுக் கொண்டே “முத்து ஐ வான்ட் டூ மேர்ரி யூ” என்றாள். நான் மீண்டும் யோசித்தேன். “சாரி சங்கீதா” என்றதும் அவள் கொஞ்ச்ம அதிர்ச்சியுடன் என்னை பார்க்க “நான் வேற ஒரு பொண்ன லவ் பண்றேன்” என்றதும் அவள் கண்களில் கண்ணீர் துளிகள் துளிர்க்க ஆரம்பித்த்து. “என்ன் சொல்றீங்க முத்து” என்றாள் கணகளில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே. “ஆமா சங்கீதா” என்றதும் “நீங்க லதாவ தான லவ் பண்ணிட்டு இருந்தீங்க” என்றாள். “இல்ல சங்கீதா, லதாவ நான் என்னொட ஃப்ரெண்டா மட்டும் தான் பார்த்தேன், எல்லாரும் கம்பல் பண்ணதாலையும் அவங்க அம்மாவோட கடைசி ஆசைன்றதாலையும் தான் நான் அவள கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன், மத்தபடி நான் லவ் பண்ணது வேற பொண்ண” என்றதும் அவள் கண்கள் குளமானது. கண்ணீர் சாரை சாரையாக வ்ழிந்தது. “ப்ளீஸ் சங்கீதா அழாதீங்க” என்று சொல்லியும் அவள் கேட்கவே இல்லை. சுற்றி இருந்தவர்கள் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். “சங்கீதா அழாதீங்க எல்லாரும் நம்மளையே பார்க்குறாங்க” என்று கூறிய பின்னரே அவள் தன் ஹேண்ட்ட் பேகில் இருந்த கர்சீஃபை எடுத்து கண்களை துடைத்துக் கொண்டு அமைதியானாள். “ஓ.கே முத்து, நான் தான் உங்க மனைவியா வர கொடுத்து வைக்கல அட்லீஸ்ட் அந்த லக்கி கேர்ள் யாருன்னு தெரிஞ்சிக்கலாமா” என்றாள். லேசான புன்னகையை கஸ்டப்பட்டு வரவழைத்துக் கொண்டே. நான் தொண்டையை கனைத்துக் கொண்டு “சங்கீதா, அத சொல்றது பத்தி ஒன்னுமில்ல ஆனா சம்மந்தபட்டவங்க்கிட்ட நான் சம்மதம் வாங்கிட்டு அதுக்கப்ப்றம் சொல்றேனே” என்றதும். அவள் “அப்ப இன்னும் அவங்க்கிட்ட நீங்க காதல சொல்லவே இல்லையா” என்றாள். “ஆமா,இனிமேதான் சொல்லனும், அப்ப்டியே சொன்னாலும் அதுக்கு அவ்ங்க என்ன் பதில் சொல்வாங்கனு தெரியல” என்றதும் அவள் கொஞ்ச்ம ஆர்வமாக முன்னால் வந்து “முத்து நான் ஒன்னு கேட்டா தப்பா நெனைக்க மாட்டீங்களே” என்றாள். நான் “சொல்லுங்க” என்றதும். “ஒரு வேள் நீங்க உங்க லவ்வ் சொல்லி அவங்க அக்ஸப்ட் பண்ணாட்டி அந்த சான்ஸ் எனக்கு கிடைக்குமா” வெகுளித்தனமாக கேட்டாள். “என்ன்ங்க இது, சின்ன புள்ள தனமா இருக்கு” என்று நான் சொல்ல “இல்ல முத்து எப்டியாவது நான் உங்க்கூட வாழ்னும்னு ஆச படுறேன், அந்த நப்பாசையிலதான்.. . .” என்றதும் எனக்கே அவள் மேல் பாவமாக இருந்து. இப்படி ஒரு பொய்யை சொல்லுகிறொமே என்று. “சங்கீதா நீங்க இந்த அளவுக்கு என்ன லவ் பண்றீங்க ஆனா நான் அந்த காதலுக்கு தகுதியானவன் இல்லங்க, என்ன் பத்தின எல்லா உணமைகளும் தெரியவந்தா நீங்க என் முகத்துலகூட முழிக்கமாட்டீங்க” என்றேன். அவளோ ரொம்பவும் சாந்தமாக “எனக்கு நீங்க எப்டி இருந்தாலும் ஓகே” என்று மட்டும் சொல்லிவிட்டு எழுந்தாள். நானும் அவள் உடன் செல்ல் இருவரும் காருக்கு சென்றோம். காரில் அவள் எதுவுமே பேசவில்லை. நானும் அவள் அமைதியை கலைக்க மனமில்லாமல் இருக்க இரவு நேர வாகன விளக்கு ஓளியில் காரின் பயணம், ப்ளேயரில் இளையராஜாவின் பாடல் மனதுக்கு இதமாக இருந்தாலும் சங்கீதாவின் உணமையான காதலை மறுத்துவிட்டோமே என்ற எண்ணம் என்னை கொன்று கொண்டிருந்த்து. எனக்கு தெரியும் என்னை பற்றிய விஷய்ங்கள் இவள் காதுக்கு போனால் இவள் கண்டிப்பாக என்னை வெறுத்துவிடுவாள். என்னை பர்றி எல்லாம் தெரிந்த பின் இவள் என்னை வெறுப்பதைவிட நானே இவளை வெறுப்பது சிறந்தது. என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன். அப்போத்தான் கும்ரன் என்னிடம் சங்கீதா என்னிடம் சொல்ல்போகும் விஷயம் கூட தனக்க் தெரியும் என்று கூறியது நியாபகம் வந்த்து. அவனுக்கு மட்டும் எப்ப்டி தெரிந்த்து, என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரம் நான் இறாங்க வேண்டிய இடம் வந்துவிட்ட்து. அவளிடமிருந்து பிரிந்து நடந்தேன். அடுத்த நாள் நான் கொஞ்ச்ம தாமதமாக ஹாஸ்பிடலுக்கு கிளம்பி சென்றேன். ஏற்கனவே முடிவெடுத்தபடி நேராக சங்கீதாவின் அறைக்கு சென்றேன். அவள் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருக்க என்னை பார்த்தவள் முன்னால் இருந்த சேரை கட்டி உட்கார சொன்னாள், நானும் உட்கார்ந்தேன். சில நிமிடங்களில் என்னை பார்த்து “என்ன் முத்து டியிபூட்டிக்கு போகல, ஏதாவது பேசனுமா” என்றாள். நான் என் சட்டை பாக்கெட்டிலிடுந்த ஒரு கவரை எடுத்து அவளிடம் நீட்ட அவள் கையில் வாங்கிக் கொண்டு “என்னது” என்றாள் குழப்பத்துடன், “மை ரெசிக்னேஷன் லெட்டர்” என்றதும் முகத்தில் கலவரம் தெரிய “என்ன முத்து என்னாச்சி” என்றாள். “இல்ல மேடம் நேத்து நீங்க உங்க மனசுல இருந்த்த சொன்னீங்க அத நான் ஏத்துக்கல இதுக்கப்புறமும் நான் இங்க இருந்தா நல்லா இருக்காதுனு தோனுச்சி, அதான்” என்றதும். “என்ன் முத்து இப்டி பேசுறீங்க, நேத்து நான் என்னொட லவ்வ சொன்னதும் அதுக்கு நீங்க உங்க ஒபீனியன சொன்னதும் நம்ம பர்சனல் அதுக்கும் உங்க ப்ரொஃபஷனுக்கும் ஏன் லிங்க் பண்றீங்க, ரெண்டும் வேற வேற” என்றாள். “இல்ல மேடம் ரெண்டும் வேறாயா இருந்தாலும் உங்க காதல நான் அக்சப்ட் பண்ணாத்தால் உங்க முகத்த பார்க்க எனக்கும் கஸ்டமா இருக்கும் உங்களுக்கும் கஸ்டமா இருக்கும்” என்றதும் அவள் எழுந்து மெல்லிய குரலில் “ஏன் முத்து நீங்க என் முகத்த கூட பார்க்க விரும்பலையா” என்றாள். எனக்கே ஒரு மாதிரியாகி விட்டது. “என்னொட லவ்வ தான் உங்களால ஏத்துக்க முடியல இட்ஸ் ஓகே. நாம் ஃப்ரெண்ட்ஸா இருக்க கூட உங்களுக்கு விருப்பமில்லையா, அதுக்கு கூடவா நான் தகுதி இல்லாதவளா போய்ட்டேன்” என்று கண்களில் லேசான கண்ணீர் வழிய என்னை பார்த்து கேட்டாள். அவளை நினைக்கும் போது எனக்கே என்னை அறியாமல் கண்களில் க்ண்ணீர் சுரந்த்து. அவளுக்கு தெரியாமல் அதை துடைத்துக் கொண்டு நான் அந்த கவரை என் பாக்கெட்டுக்குள் திணித்துக் கொண்டு வெளியே வர கதவை திறக்க “முத்து” என்றாள். நான் திரும்பி பார்க்க ‘”என்னோட ஃப்ரெண்ட்ஷிப்பையாவது அக்ஸப்ட் பண்ணீப்பீங்களா” என்றாள். எனக்கு வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை அதை சமாளிக்க் அவளை பார்த்து லேசாக ஒரு புன்னகையுடம் தலையாட்ட அவள் என்னை பார்த்து “தேங்க்ஸ்” என்றாள். நான் என் அறைக்கு வந்து என் வேலைகளை பார்க்க தொடங்கினேன். மதிய உணவு நேரத்தில் கும்ரனும் நானும் சாப்பிட உட்கார்ந்தோம். “என்ன் முத்து ஏண்டா இப்டி பண்ண” என்றான் கும்ரன் “ஏன்ண்டா திடீர்னு இப்டி பண்ணனு கேக்குற எத சொல்ற” என்றேன் நான். “இல்ல சங்கீதா உன் மேல் உயிரயே வெச்சிருந்தா, ஆனா நீ அவளோட லவ்வ் அக்சப்ட் பண்ணிக்கலையே” என்றான். எனக்கு வியப்பாக இருக்கவே “டேய் என்ண்டா இது நேத்து நைட்டுதான் இது நடந்துச்சி, இத பத்தி நான் யாருகிட்டயும் எதுவுமே சொல்ல்ல அப்புறம் எப்டிடா உனக்கு தெரிஞ்சிது” என்று வியப்புடன் கேட்க அவன் சாப்பாட்டை நன்றாக விழுங்கிவிட்டு “அது அப்டித்தான், நீ சொல்லிதான் தெரியனுமா” என்றதும் சங்கீதாதான் நடந்தவற்றை சொல்லியிருப்பாள் என்று என் மனதுக்குள் தோன்ற அவ்ன் புரிந்து கொண்ட்து போல் “அதேதான்” என்றான். “டேய் நம்ம க்ளாஸ்ல சங்கீதானு ஒருத்தி இருந்த்தே எனக்கு சரியா நியாபகம் இல்ல ஆனா உனக்கு மட்டும் எப்டிடா அவ இள்வோ க்ளோஸா இருக்கா, நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு கூட நான் பார்த்த்தில்லையே” என்றதும். “அது வேற ட்ராக் மச்சி” என்று சொல்லிவிட்டு அவன் தலையை குனிந்து கொண்டாலும் அவன் கண் கலங்கி இருந்த்தை நான் கவனித்துவிட்டேன். “டேய் உண்மைய சொல்லு என்ன் நடந்துச்சி” என்றதும்.
“இல்ல் மச்சி, நான் காலேஜ் ஜாய்ன் பண்ண புதுசுல இருந்தே சங்கீதா மேல் கொஞ்சம் லவ்வாதான் இருந்தேன், ரெண்டு வருஷமா என் லவ்வ் அவகிட்டயே சொல்ல் தைரியம் வரல, ஆனா ஒரு நாள் திடீர்னு எங்கிட்ட வந்து நான் முத்துவ லவ் பண்றேன், அவருகிட்ட எப்டி பேசறாதுனே தெரியல, நீங்க அவரோட பெஸ்ட் ஃப்ரெண்டாச்சே, அவர பத்தி சொல்லுங்கனு கேட்டா, அப்பவே என் லவ்வ மனசுக்குள்ளயே பூட்டி வெச்சிக்கிட்டேண்டா” என்று அவன் சொல்லி முடிக்கும்போது கண்களில் இருந்து கண்ணீர் சாரை சாரையாக கொட்டியது. “உன் கிட்ட வந்து கேட்ட்டாளல அப்பவே என்ன் பத்தி எல்லா உண்மைகளையும் நீ சொல்லி இருந்தா அவ மனசு உன் மேல திரும்பி இருக்குமே, நீ என்ன சொன்ன” என்றதும் “உன்ன் பத்தி ஆஹா ஓஹோனு அடிச்சிவிட்டேன், அத்னால தான் அவ உன் மேல இன்னும் வெறியா இருக்கா” என்றான். “ஏண்டா இப்டி இருக்கீங்க” என்று நான் சொல்லி புலம்ப “ஸரி நீ வேற யாரையோ லவ் பண்றதா சொன்னியாமே அது யாருடா, அந்த அமுதாவும்தான் இன்னொருத்தன கட்டிக்க போறாளே, அப்புறம் யார நீ லவ் பண்ற” என்றான். “அப்டி எல்லாம் ஒன்னுமில்லடா,சும்மா அவள அவாய்ட் ப்ண்ணறதுக்காக அந்த நேரத்துல அப்டி சொன்னேன்” என்றதும் அவன் ‘ஏண்டா அப்டி சொன்ன, நீதான் யாரையும் லவ் பண்ணலன்னு சொல்றேல்ல அப்புறம் அவ லவ்வ ஏத்துக்குறதுல உனக்கு என்ன கஸ்டம்” என்றான். “இல்லடா, ஏறகனவே பட்ட்தே போதும்னு தோனுது” என்றதும் அவன் மௌனமாக என்னை பார்த்து முறைத்துவிட்டு “நீங்களா தேடி போற காதல் கெடைக்கலைனா, தானா வருற காதல் உங்களுக்கெல்லாம் பெருசா தெரியாதுடா” என்று முனகிவிட்டு என்னை பார்க்க அவன் என் அருகே நெருங்கி வந்து “மச்சி நமக்கு தேவையானத கடவுள் எப்பவும் நம்ம பக்கத்துலையே வெச்சிருப்பாரு, ஆனா நமக்குதான் தெரியாது, நேரம் கூடி வரும்போதுதான் அது நமக்கானதுனு தெரியுமாம், இது ஏதோ ஒரு பட்த்துல கேட்ட்து, அது மாதிரி தான் உனக்கு தேவையானத கடவுள் உன் பக்கத்துல வெச்சி அத உன் கண்ல காட்டிரிருக்காரு நீதான் அத விட்டுட்டு என்னென்னவோ பண்ணிக்கிட்டிருக்க” என்று கூறிவிட்டு கிளம்பி சென்றான். நான் அடிக்கடி சிறைக்கு சென்று அனிதாவின் கணவன் ராஜாவை சந்தித்து வந்தேன், ஆரம்பத்தில் எனக்கு பிடிகொடுக்காமல் பேசியவன் நாளாக நாளாக அவன் மனம் மாறியதாக தெரிந்தது. அவன் மனம் தான் செய்த தவறையும் இத்தனைக்கும் பிறகு அனிதா அவன் மேல் வைத்திருந்த காதலையும் புரிந்து கொண்ட்தாக தெரிந்த்து. “முத்து நடந்த தப்புக்கெல்லாம் அனிதா கிட்ட நான் மன்னிப்பு கேட்கனும்னு நெனக்கிறேன், ஆனா அவ என்ன நேர்ல வந்து பாப்பாலா” என்று என் கைகளை பிடித்து கெஞ்சினான். எனக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அடுத்த இரண்டாவது நாள் அனிதாவின் செல்போன் அழைத்த்து. அனிதா எடுத்து பேசினாள். “ஹலோ அனிதா மேடம் நான் முத்து பேசுறேன்” எனறதும் “என்ன் முத்து அதிசயமா போன் பண்ணிருக்க” என்றாள். “ஒன்னுமில்ல மேடம் நீங்க கொஞ்ச்ம உங்க ஆஃபீஸ் பக்கத்துல இருக்குற பார்க்குக்கு வர முடியுமா” என்றேன் நான் “எதுக்கு முத்து இந்த நேரத்துல” என்றாள். “ஒரு முக்கியமாக விஷயம், அதான் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வரனும்” என்றதும் “சரி எங்கூட ராதாவும் இருக்கா அவ வரலாமா” என்றாள் அனிதா. “வரலாம் நோ ப்ராப்ளம்” என்றதும் போன் இணைப்பை துண்டித்தேன். நான் சென்றா கார் அந்த பார்க்கின் வாசலில் நிற்க நான் முன்னால் நடந்தேன். எங்களுக்கு முன்னாலேயே அனிதாவும் ராதாவும் வந்துவிட்டிருந்தார்கள். என்னை பார்த்த்தும் இருவரும் ஆர்வத்துடன் எழுந்து வர “என்ன் முத்து திடீர்னு” என்று அனிதா கேட்க ராதா என்னை பார்த்து ஸ்னேகமாக ஒரு புன்னகையுடன் நின்றாள். “ஒன்னுமில்ல் மேடம் உங்களுக்கு தெரிஞ்ச ஒருத்தர் உங்களா பார்க்கனும்னு சொன்னாரு, அவர கூட்டி வந்திருக்கேன்” என்றதும் அனிதா அர்வமுடன் “யாரு முத்து அது எனக்கு தெரிஞ்சவரு உன் கூட வந்திருக்கிறது” என்று எனக்கு பின்னால் பார்க்க அங்கு ராஜாவும் அவருடன் வக்கீல் ஒருவரும் நின்றுந்தனர். ராஜாவை பார்த்த்தும் அனிதாவின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் விளக்கு எரிய ஆரம்பித்த்து போல் பிரகாசமானது. முகத்தில் லேசான புன்சிரிப்பும் ஆன்ந்த கண்ணீரும் வழிந்த்து. ராஜாவை நோக்கி மெல்ல நடக்க அதே நேரம் ராஜாவும் அவளை நோக்கி நடந்து வந்தார். இருவரும் ஒரு அடி இடைவெளியில் நின்று ஒருவர் கண்களை ஒருவர் இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ராதா இந்த காட்சியை பார்த்த்தும் கண்ணீர் விட்டு அழ தொடங்கிவிட்டாள். ராஜாவும் அனிதாவும் சில நிமிடங்கள் வரை எதுவும் பேசாமல் உதடுகள் மூடி இருக்க இருவரின் கண்களும் கண்ணீரால் பேசிக் கொள்ள இதய்ங்கள் காதலில் பேசிக் கொண்டிருந்த்து அவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். அந்த நொடி எனக்கு ராஜாவின் மேல் பொறாமையாக இருந்த்து. எவ்வளவோ துன்பங்கள் செய்த போதும் தன் கணவன் என்ற எண்ணம அவள் மனதில் இன்றும் இருக்க காரணம் அவள் வைத்திருந்த உண்மையான காதல் மட்டுமே. இப்படி காதலித்தால் இப்படி ஒருத்தியைத்தான் காதலிக்க் வேண்டும். என்று என் மனம் சொல்லிக் கொண்டிருக்கும் அந்த நொடி என் கைகளை யாரோ பற்றிட திரும்பி பார்த்தேன் அது ராதா. என்னை பார்த்து கண்ணீர் சிந்தியபடி நின்றிருந்தாள். “முத்து உனக்கு எப்டி நன்றி சொல்றதுன்னே தெரியலடா” என்றாள். அவள் நன்றியை கண்ணீரால் சொல்லிக் கொண்டிருந்தாலும் அவள் உதடுகள் வார்த்தையில்லாம்ல் தவித்த்து. அனிதாவும் ராஜாவும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். நானும் ராதாவும் அவர்கள் பேசி முடிக்கும் வரை தூரத்திலேயே நின்றிருந்தோம். கடைசியில் ராஜா அனிதாவின் காலில் விழ போக அனிதா அவனை தடுத்து நிறுத்தி கட்டி அணைத்துக் கொண்டாள். இருவரும் பேசிக் கொண்டது அவர்களுக்கு மட்டுமேயான அந்தரங்கம். சில் நொடிகள் பலர் வந்து போகும் பூங்கா என்ற எண்ணம் கூட இல்லாம்ல் கட்டி அணைத்துக் கொண்டிருக்க அதன் பின் இருவரும் பிரிந்து நின்றதும் ராஜாவும் அனிதாவும் ஒன்றாக என்னை பார்த்தனர். நான் அவர்களை நோக்கி செல்ல ராதாவும் என் அடி ஒன்றி நடந்து வந்தாள். ராஜா அனிதாவிடம் ஏதோ சொல்ல அவளும் எங்களை பார்த்து சிரித்தாள். நானும் ராதாவும் அவர்கள் அருகே சென்றதும் அனிதா என்னை பார்த்து கண்ணீர் விட்டாள். “முத்து நீ எனக்கு செஞ்சிருக்குற இந்த உதவிக்கு நான் எத்தன ஜென்ம்ம் ஆனாலும் பரிகாரம் செய்ய முடியாது” என்று கையெடுத்து கும்பிட போனவளின் கையை பிடித்து நிறுத்தி “என்ன மேடம் இது, இதெல்லாம் ரொம்ப சாதாரணமான விஷயம் இதுக்கு போய் இப்டி நன்றியெல்லாம் சொல்லி என்ன அன்னியப்படுத்ரீங்களே” என்றதும். “முத்து உன்ன அன்னியப்படுத்துறதுக்காக இல்ல நீ செஞ்சது சாதாரணமான உதவி இல்ல, இனிமே என் வாழ்க்கையில் கணவன் அப்ப்டின்ற ஒரு உறவே இல்லனுதான் இருந்தேன், ஆனா உன்னாலதான் அது திரும்பவும் எனக்கு கெடச்சிருக்கு, இதுக்கு நான் எப்ப்டி வேணாலும் நன்றி சொல்ல்லாம்” என்று மீண்டும் அழ தொடங்கினாள். அந்த நேரம் வக்கீல் அங்கு வர “தம்பி டைம் முடியபோகுது போகலாமா” என்றார். “என்ன்ங்க நான் உங்கள ஜாமீன்ல எடுக்கவா” என்று அனிதா ராஜாவை பார்த்து கேட்க “இல்ல அனிதா நான் செஞ்ச தப்புக்கான தண்டனைய அனுபவிச்சாதான் என் மனசுல குற்ற் உணர்வு இல்லாம உன் கூட திரும்பவும் வாழ முடியும், அதனால் தண்டன காலம் முழுசும் நான் அனுபவிச்சிட்டுதான் வருவேன்” என்றான், “ஆமா மேடம் நான் கூட எவ்வளவோ சொல்லிட்டேன், சாருதான் கேக்கவே இல்ல” என்று நான் சொன்னதும். அனிதா “சரி உங்க இஸ்டம், ஆனா நான் உங்களுக்காக காத்திருப்பேன்” என்று கூற வக்கீலும் ராஜாவும் கிளம்பி சென்றார்கள். அனிதா மீண்டும் என் அருகே வந்தாள். இப்போது அவள் எதுவுமே சொல்லவில்லை. என்னையே சில நொடிகள் உற்றுப்பார்த்தவள் “முத்து நீ எனக்காக செஞ்ச இந்த உதவிக்கெல்லாம் நான் கைமாறா ஒன்னு செய்ய போறேன்” என்றாள். நான் வியப்புடன் “ஏன்ன மேடம் கைமாறு அது இதுனெல்லாம், நான் எதையும் எதிர்பார்க்காமதான் இதெல்லாம் செஞ்சேன்” என்றேன். “நீ அப்டி பெருந்தன்மையா சொல்லிக்கிட்டாலும் நான் பதிலுக்கு ஏதாவத் செஞ்சாதான் என் மனசுக்கு திருப்தி இருக்கும்” என்று நிறுத்த “ஸரி மேடம் அப்புறம் உங்க இஸ்டம்” என்றதும் “நேரம் வரும்போது அத நானே செய்யுறேன்” என்று கூறிவிட்டு என்னிடமிருந்து விடுபட்டு ராதாவும் அனிதாவும் கிளம்பி சென்றார்கள். நான் என் வீட்டுக்கு சென்றேன். அடுத்த நாள் ஹாஸ்பிடல் சென்றதும் யாரொ ஒரு பெண் டாக்டருடன் எல்லாரும் ஆர்வமாக பேசிக் கொண்டிருந்தார்கள். நானும் கும்ரனும் அந்த ஹாஸ்பிடலுக்கு புதிது என்பதால் எங்கள் இருவருக்கு சங்கீதாவை தவிர யாரும் அவ்வளவாக பழக்கமில்லை. இவள் யார் என்றும் தெரியவில்லை நான் என் கேபினுக்கு சென்று உட்கார என் அறாய்யின் கதவு திறக்கப்பட்ட்து. முன்பு எல்லோருடனும் பேசிக் கொண்டிருந்த அதே பெண் டாக்டர் என் முன் தன் செவ்வன்ன கைகளை நீட்டி “ஹலோ முத்து சார், என் பேரு வனஜா” என்றாள். நானும் பதிலுக்கு “ஹாய், ஹலோ” என்று கூற என் எதிரே இருந்த சேரில் உட்கார்ந்து தன் கையில் இருந்த பேகிலிருந்து ஒரு கல்யாண பத்த்ரிக்கையை எடுத்து நீட்டி “சார் ரெண்டு நாள் கழிச்சி எனக்கு மேரேஜ் இருக்கு, எல்லாருக்கும் குடுக்க லேட் ஆகிட்ட்தால ஹாஸ்பிடல்ல இப்பதான் கொடுக்குறேன், நீங்க கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்திடனும்” என்றாள். நானும் சும்மா சம்பரதாயத்துக்கு “கல்யாணம் எங்க” என்று கூறியபடி பத்திரிக்கையை பிரிக்க அவள் அதற்குள் “திருவள்ளூர்ல தான் கல்யாணம் சார்” என்றாள். நான் பத்திரிக்கையை படித்துவிட்டு “சரி நான் கண்டிப்பா வரேன்” என்றதும் அவள் சிரித்த முகத்துடன் “ஆப்போ நான் கெளம்புறேன் சார்” என்று புறப்பட்டுவிட்டாள். அடுத்த நாள் மாலை சங்கீதா உட்பட சிலர் ஒன்றாக நின்றுகொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள் என்னை பார்த்த்தும் சங்கீதா “முத்து நீங்க வனஜா கல்யாணத்துக்கு வரீங்கல்ல” என்றாள். நான் என்ன சொல்வது என்று புரியாமல் “இல்ல சங்கீ, அவ்ளோ தூரம் எதுக்கு, அவங்கள இன்விடேஷன் கொடுக்கும்போதுதான் முதல் தடவையா பார்த்தேன்” என்று தயங்க “சரி, குமாரும் (குமரன்) இத்தான் சொன்னாரு, நீங்க ரெண்டு பேரும் க்ளினிக்க பார்த்துக்கங்க, நாங்கலாம் போய்ட்டு வரோம்” என்றாள் சங்கீதா, “நாங்க ரெண்டு பேரு மட்டுமா” என்று நான் அதிர்ச்சியுடன் கேட்க “நீங்க ரெண்டு பேரு மட்டுமில்ல, சில டாக்டர்ஸ் முந்தன நாள் ரிஷப்ஷனுக்கு போய்ட்டு காலையில வந்திடுவாங்க, அவங்க இருப்பாங்க” என்று கூறி சிரித்தாள். நானும் தப்பிச்சேண்டா சாமி என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு கிளம்பினேன். கல்யாணதன்று காலையில் நான் கொஞ்சம் சீக்கிரம் வந்துவிட ஒரு சில டாக்டர்களே வந்திருந்தார்கள். அதனால் வந்திருந்தவர்கள் அணைவருக்கும் ஏகப்பட்ட வேலைகள் இருந்தன. நான் ஒவ்வொருவராக பார்த்துக் கொண்டே வர மணி காலை 11 காடியது. அடுத்த பேஷண்டை வர சொல்ல கதவை திறந்து கொண்டு 40 வயதுள்ளா ஒருவன் உள்ளே வந்தான். வந்தவன் என்னை பார்த்த்தும் அதிர்ச்சியாகி அப்படியே நிற்க அவனை தள்ளிக் கொண்டு உள்ளே இன்னொருவன் வந்தான் அவனுக்கு வயது 38 இருக்கும், அவனும் என்னை பார்த்த்தும் அதிர்ச்சியுடன் வாயை பிளந்து கொண்டு நின்றான். அடுத்த்தாக ஒரு பெண் 35 வய்துள்ளவள் இன்னொரு பெண்ணை இழுத்துக் கொண்டு உள்ளே வந்தாள். அவளுடன் வந்த பெண்ணுக்கு 30 வயது இருக்கும். 35 வயது பெண் உள்ளே வந்த்தும் மற்றவர்களை போல் அவளும் வாய் பிளந்து நிற்க உடன் வந்த பெண் ஏதேதோ தனக்குள் பேசிக் கொண்டு சிரித்துக் கொண்டு வந்தவள் என்னை பார்த்த்தும் ஒரு நொடி அவள் முகத்திலும் ஒரு அதிர்ச்சி, ஆனால் அடுத்த நொடி அவள் என்னை பார்த்து “ஐ. .மாமா. .. “என்று என்னை நோக்கி வ்ந்தவள் என் அருகே நின்று கொண்டு “மாமா நீங்க இங்க என்ன் பண்றீங்க” என்றாள். அவள் பேச்சு, நடை உடையை கவனிக்கும் போது அவள் மன்நிலை பாதிக்கப்பட்டிருப்பது ந்ன்றாக தெரிந்த்து. மற்ற மூவரும் திறந்த வாயை இன்னும் மூடாமல் என்னையே பார்த்துக் கொண்டிருக்க இந்த பெண் அவர்களில் மூத்தவன் அருகே சென்று “அண்ணா இதோ பாரு மாமா” என்றாள். இவர்கள் ஏன் இப்படி நிற்கிறார்கள். இவள் ஏன் என்னை மாமா என்கிறாள். என்று எதுவும் எனக்கு புரியாமல் நானும் விழித்துக் கொண்டிருக்க மூத்தவன் சுயனினைவு வ்ந்தவன் போல என்னை பார்த்து “அருண், நீ....நீயா” என்றான். எனக்கு ஒன்றும் புரியாமல் எனக்கு பின்னால் யாராவது இருக்கிறார்களா என்று திரும்பி பார்த்துவிட்டு “யாரு சார் என்னையா” என்றேன். மற்ற இருவரும் மெல்ல என்னை நோக்கி வர நான் எழுந்து நின்றேன். “அருண், நீங்க எங்க இங்க” என்றாள். அந்த 35 வயது பெண். “ஹலோ யாருனு நெனச்சிக்கிட்டு பேசுறீங்க, நான் அருணும் இல்ல உங்க யாரையும் எனக்கு தெரியவும் தெரியாது” என்று நான் சொல்ல இரண்டாவதாக வந்தவன். தன் செல் போனை வெளியே எடுத்து டச் ஸ்க்ரீனில் தடவினான். பின் என் முன் திரையை நீட்டி கட்ட அதில் என் படம் இருந்த்து. எனக்கே தூக்கிவாரி போட்டது. மற்றொரு போட்டோவை காட்ட அதில் நானும் இப்போது வந்திருக்கும் 30 வயது பெண்ணும் ஜோடியாக நிற்பது போன்ற போட்டோ ஒன்று இருந்த்து. எனக்கு நெஞ்சே அடைத்துவிடுவது போல் இருந்த்து. அருகிலிருந்த அந்த பெண்ணை திரும்பி பார்க்க “மாமா, மாமா” என்று பாட்டு போல் பாடிக்கொண்டிருந்தாள். “சார் யாரு நீங்க, என் போட்டோவ ஏன் ஃபோட்டோ ஷாப்ல மாத்தி வெச்சிருக்கீங்க” என்று கேட்க மூத்தவன் “தம்பி உங்க பேரு என்ன” என்றான். “என் பேரு முத்து” என்று நான் சொல்ல
“உங்களுக்கு அண்ணன் தம்பி யாராவது இருக்காங்களா” என்றாள் அந்த 35 வயது பெண். “இல்லையே நான் ஒரே பைய்யன் தான்” என்று நான் சொல்ல செல் போனில் மற்றொரு போட்டோவை காட்ட அதில் இந்த மூவருடன் நானும் அந்த 30 வயது பெண்ணும் இருப்பது போன்ற போட்டோ இருந்த்து. எனக்கு தலை சுற்றியது. “சாரி இது யாரு, உண்மையிலேயே இது நானில்ல” என்றதும். “தம்பி இவரு பேரு அருண், இதோ இங்க இருக்காளே இவளோட ஹஸ்பண்ட், நாங்க இவளோட அண்ணனுங்க, இவ என்னோட பொண்டாட்டி” என்று மூத்தவன் சொல்ல “ஆமா தம்பி இந்த அருண அப்படியே உங்கள மாதிரியே இருப்பாரு, உங்க ரெண்டு பேரையும் ஒன்னா நிக்க வெச்சா, யாரு அருண்னு கண்டுபிடிக்கவே முடியாது” என்று அந்த 35 வயது பெண் சொல்ல நான் 30 வயது பெண்ணை காட்டி “இவங்களுக்கு என்ன ஆச்சி, இப்ப அந்த அருண் எங்க” என்று நான் கேட்க மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அதற்குள் கும்ரன் வந்துவிட நான் அவனிடம் “என்ண்டா” என்றதும் அவன் என் அறையில் இருந்த சிரஞ்ச் பாக்ஸை எடுத்துக் கொண்டு எல்லோரையும் ஒரு மாதிரியாக லுக்குவிட்டுவிட்டு சென்றான். அணாய்வரின் முகமும் பேயறைந்த்து போல் நிற்க நான் மீண்டும் அவர்களை பார்த்து “இப்ப் உங்களுக்கு என்ன் வேணும், அந்த அருண் எங்க,” என்றேன்.
No comments:
Post a Comment