Saturday, 20 September 2014

இனிஷியல் இல்லாதவர்கள் 22


எம்மா... நீ சொன்னதை கேட்டுக்கிட்டு... உங்க வீட்டுக்கு நான் பொண்ணு பாக்க வந்ததையே மறந்துடுடீன்னு தேனுக்கு நான் மெசேஜ் அனுப்பிட்டேன்... இப்ப எந்த மூஞ்சை வெச்சிக்கிட்டு அவளுக்கு ஓமப்பொடி பாக்கிட்டு கொண்டுபோய் குடுப்பேன்....?" எரிந்து விழுந்தான் கல்யாணம். "அண்ணா... தைரியமா போடா... உன் தேனுக்கும் ஓமப்பொடி ரொம்ப பிடிக்குமாம். மைசூர்பாக்குன்னா உயிரையே விட்டுடுவாளாம். அவளோட அண்ணி என்கிட்ட சொன்னாங்க... கூடவே ஒரு கால்கிலோ அவளுக்கு பிடிச்ச ஸ்வீட்டை வாங்கிட்டுப்போ... உன்னை எங்க வீட்டுல எல்லாருக்கும் ரொம்பப் பிடிச்சிப்போச்சுன்னு சொல்லு... ரொம்பங்கறதை கொஞ்சம் அழுத்திச்சொல்லு...." "இவ ஒருத்தி நடுநடுவுலே" தனலட்சுமி பெண்ணை முறைத்தாள். "கல்யாணம்... இது எங்க அம்மா பண்ண ஓமப்பொடி... ஸ்பெஷலா உனக்கு குடுக்கச்சொன்னாங்கன்னு மறந்துடாம சொல்லு... இந்த வீட்டுல தனக்கு சப்போர்ட் இருக்குக்குன்னு நினைப்பா... மேட்டரு திரும்பவும் பத்திக்கும்... லவ்வுல இப்படீல்லாம் பிரச்சனை வரத்தான்டாச் செய்யும்.. பிரச்சனை வந்தாத்தான்டா அதுக்குப்பேரு லவ்வு..." அண்ணணின் சோர்ந்த முகத்தைப் பார்த்த செந்தாமரைக்கு குஷி பிய்த்துக்கொண்டு கிளம்பியது.

"அடங்குடீ... உன் அட்வைசை இப்ப நான் கேட்டனா?" "டேய்... கல்யாணம், நேத்தே நான் சொன்னேன்.... கொஞ்சம் பொறுமையா இருடான்னு... மேட்டரை நான் டீல் பண்றேன்னு சொன்னனா இல்லையா..? நீ ஏன்டா உங்க மேரேஜ் விஷயத்தைப் பத்தி அவகிட்ட பேசினே?" வேலுசாமி தன் பங்குக்கு கூவ ஆரம்பித்தார். "அப்பா... அம்மா மாதிரி நீயும் குண்டக்க மண்டக்கன்னு பேசாதே... நேத்து நான் இதே எடத்துல உக்காந்துக்கிட்டு டீ குடிக்கும் போது என்ன சொன்னேன்..? தாமரை கல்யாணத்தை மொதல்லே முடிங்க... என் கல்யாணத்தைப் பத்தி கவலைப்படாதீங்கன்னு சொன்னனா இல்லையா...?" "ஆமாம்.... இங்கே உக்காந்துக்கிட்டு டீ குடிச்சோம்... தங்கச்சி கல்யாணத்தைப் பத்தி பொறுப்பா பேசினே... எனக்கு சந்தோஷமா இருந்திச்சி... உங்கம்மாளுக்கும் உச்சி குளுந்து போச்சு... என் புள்ளையை பாத்தீங்களா? என் புள்ளையைப் பாத்தீங்களா? ராத்திரி பூரா என்னை தூங்கவிடாம உன் ராமாயணத்தைப் பாடிக்கிட்டு இருந்தா... நல்லா யோசனைப்பண்ணி சொல்லு; உன் கல்யாணத்தை நிறுத்திடலாம்ன்னு நான் சொன்னனா?" "இல்லேப்பா..." "நீ முட்டாத்தனம் பண்ணிப்பிட்டு எங்கக்கிட்ட ஏன்டா குதிக்கறே? எல்லாத்தையும் மறந்துடுன்னு நானா அந்த பொண்ணுக்கு மெசேஜ் அனுப்ப சொன்னேன்..?" "க்ஹூம்.. ல்லே..." "சரி.. என்னை விடு... உன் அம்மா அனுப்ப சொன்னாளா?" பதிலுக்கு வேலுசாமி தன் மீசையை முறுக்கிக்கொண்டு கத்தினார். "ஏம்பா... நீங்க ரெண்டு பேருமா ஏன் இப்படி அநியாயம் பண்றீங்க? உங்க மனசுல இருக்கறதை தெளிவா எதையுமே என் கிட்ட ஏன் சொல்லமாட்டேங்கறீங்க?" தப்பு பண்ணிவிட்டோம் போல இருக்கே... கல்யாணத்துக்கு தலையே வெடித்துவிடும் போலிருந்தது. "கல்யாண மேட்டர்ல இப்படித்தான்டா... நாலு பக்கமும் பாக்கணும்... இப்ப ஒண்ணும் எந்தக்குடியும் எங்கேயும் முழுகிப் போவலே... நான் கேக்கறதுக்கு மட்டும் ஒழுங்கா பதில் சொல்லு... நல்லா யோசனை பண்ணி பதில் சொல்லு..." "ம்ம்ம்..." கல்யாணம் முனகினான். "அந்த பொண்ணை உனக்கு புடிச்சிருக்குத்தானே?" "ம்ம்ம்.." "அவளை கட்டிக்க இஷ்டம்தானே உனக்கு?" "ம்ம்ம்.." "என் கிட்டே சொல்லிட்டேல்லா... இனிமே பொத்திக்கிட்டு பேசாம இரு... மேட்டரை நான் டீல் பண்ணிக்கறேன்..." "அப்ப இந்த ஓமப்பொடி பொட்டலத்தை அவளுக்கு குடுக்கவா வேணாமா?" நீயும் நான் கேக்கறதுக்கு கிளியரா பதில் சொல்லு. "டேய்... கல்யாணம்... புள்ளையாடா நீ...? ஏன்டீ இப்படி ஒரு பைத்தியத்தை பெத்து வெச்சிருக்கே? என்கிட்டவே முண்டமாட்டம் இப்படி ஒரு கேள்வி கேக்கறான்..." "ஆமாம்... பெரிய அறிவாளி இவரு? இவனை நான் மட்டும்தான் பெத்தேன்...?" தனலட்சுமி வெடித்தாள். "அப்பா... நீ தானே என்னை பொத்திக்கிட்டு இரூன்னு சொன்னே?" "ஆமாம் சொன்னேன்டா..." இப்ப நீ கெளம்பு.. வேலுசாமி துண்டை தோளில் போட்டுக்கொண்டார். "அம்மா பஸ்ஸுக்கு நேரமாவுது... நான் போயிட்டு வரேம்மா... ஒடம்பை பாத்துக்கோம்மா... வரேன்டீ செந்தூ... நீ ஒழுங்கா படிக்கற வேலையையும் பாரு..." பையைதூக்கிக்கொண்டு கிளம்பினான் கல்யாணம். வேலுசாமி அவன் பின்னால் மெதுவாக நடக்க ஆரம்பித்தார். பஸ் நிலையத்தை அடையும் வரை தகப்பனும், பிள்ளையும் மவுனமாக நடந்தார்கள். கல்யாணம் செல்ல வேண்டிய பஸ் கிளம்புவதற்கு ஆயத்தமாக நின்றிருந்தது. பஸ்ஸுக்குள் தண்ணீர் பாக்கெட் விற்பவனும், வெள்ளரிபிஞ்சு, கொய்யாக்காய்காரர்கள் வேகமாக ஏறினார்கள். ஏறிய வேகத்தில் இறங்கினார்கள். ஓட்டுனர் டீ குடித்துக்கொண்டிருக்க, நடத்துனர் சிகரெட்டின் நீளத்தை தன் கருத்துப்போயிருந்த உதட்டால் இழுத்து இழுத்து இன்னும் கருப்பாக்கிக்கொண்டிருந்தான். டிரைவர் சீட்டுக்கு எதிரில் சன்னலோர சீட்டில் தன் கைப்பையை வைத்தான். கல்யாணம். கைப்பைக்கு பக்கத்தில் தன் துண்டைப் போட்டார் வேலுசாமி. கேள்விக்குறியுடன் அவர் முகத்தைப் பார்த்தான் கல்யாணம். "எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு... திருச்சி வரைக்கும் நானும் வர்றேன்." "வீட்டுல சொல்லவே இல்லே..." "எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லியே ஆகணுமா?" வேலுசாமியின் குரலிலும், முகத்திலும் குறும்பின் கீற்று தவழ்ந்து கொண்டிருந்தது. "ப்ப்பா... அந்தக்கடையில ஃப்ரு காஃபி நல்லாருக்கும்... குடிக்கறீங்களா?" "நமக்கு வேண்டிய கடைதான்... என் பேரை சொல்லு... சக்கரை இல்லாம குடுப்பான்..." இது என்னடா நமக்கு வேண்டிய கடைங்கறாரு? கல்யாணம் குழம்பியவாறு நடந்தான். என் புள்ளை தன் கூடப்பொறந்தவ மேல எவ்ளோ ஆசையும் பாசமும் வெச்சிருக்கான்... நாலு லெட்சம் கையில இருக்கு... தங்கச்சி கல்யாணத்துக்கு குடுக்கறேன்னான். இன்னைக்கு எந்த புள்ளை இப்படி பட்டுன்னு மனசு விட்டு சொல்லும்? தன் பிள்ளையை நினைத்து அப்பனுக்கு மனசு பூரித்தது. பஸ்ஸுல ஏறினதும், தேனுக்கு போன் பண்ணலாம்ன்னு நினைச்சேன்... என்னைக்கும் இல்லாத திருநாளா இவரும் என்கூட திருச்சி வரைக்கும் வர்றாரு.. விஷயம் என்னான்னும் சொல்லமாட்டேங்கறாரு.. டீ கடையின் முன் நின்று அப்பனை மனசுக்குள் திட்டிக்கொண்டிருந்தான் கல்யாணம். காபிக்கு அம்பது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான். "சில்லறையா இருபது ரூபா குடுங்க சார்" எரிச்சலானது டீ கடை. "டேய் முருவா... இருவது ரூவாதானே என் கணக்குல எழுதிக்கடா... ன்னா மாப்பிள்ளை... சென்னைக்கா...? வெள்ளை சட்டை, பச்சைத்துண்டு ஒன்று, பாதி நரைத்த மீசையை தடவிக்கொண்டு வெற்றிலை மென்றதால் காவியேறியிருக்கும் பற்கள் தெரிய சிரித்தது. "நீங்க யாருன்னு தெரிலீங்களே?" கல்யாணம் குழம்பினான். "இப்படி சேர்ல உக்காந்து காப்பியை குடிங்க தம்பீ... வண்டி கிளம்பறதுக்கு பத்து நிமிஷம் டயம் இருக்கு... ட்ரைவரே இங்கதானே குந்திக்கிட்டு இருக்காரு... இந்தக் எடம் உங்களுக்கு ரொம்ப வேண்டியவரோடதுதான்... இந்த முருகன் கடையை வாடைகைக்கு எடுத்திருக்கான்..." காதருகில் ரகசியம் பேசியது. "சார்.... நீங்க.." "டேய் பொன்னம்பலம்... ஒரு கஃப் காஃபி அதோ சன்னலோரம் திருச்சி வண்டில உக்காந்து இருக்காரு பாரு... அவரு கிட்ட குடுத்துட்டு வாடா.. தம்பீ... நான் நம்ம தேன்மொழிக்கு ஒண்ணுவிட்ட தாய் மாமன்..." "அப்டீங்களா... தப்பா நினைக்காதீங்க... எனக்குத்தெரியாது... நான் வெளியூர்லேயே படிச்சனா?" சட்டென குஷியானான். அடுத்த நொடி எரிச்சலும் ஆனான். "இந்தக்கடை தேனுக்குன்னுதான் வெச்சிருக்குது... மாசம் பத்தாயிரம் வாடகை குடுக்கறான் இவன்... வர்ற தைக்கு ரெண்டாயிரம் ஏத்தி குடுடான்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்... திருட்டுப்பய... ஏமாத்திக்கிட்டு திரியறான்." முருவன் என விளிக்கப்பட்டவன் அசட்டுத்தனமாக இளித்தான். கல்யாணத்தை நோக்கி கைகூப்பி வணக்கம் சொன்னான். "கூச்சப்படாதீங்க.... தை மாசத்துல மேரேஜ் வெச்சிக்கலாம்ன்னு பிளான் பண்ணிக்கிட்டு இருக்காரு கணபதி... கேக்... பிஸ்கெட் எதாவது சாப்ட்றீங்களா?" முகத்தருகில் வந்து உரக்க சிரித்தது பச்சைத்துண்டு. ஊருக்கே பரவிபோச்சா... நான் தேன்மொழியை பொண்ணு பாத்த வெவகாரம்...? தேனுக்கு எத்தனை ஒண்ணுவிட்ட தாய் மாமன்...? எத்தனை சித்தப்பன்...? இவனுங்களுக்காகவே தேன்மொழியை நான் கரெக்ட் பண்ணியாகணும் போல இருக்கே..! இல்லேன்னா அடுத்த தரம் பாத்தா இவனே என்னை மதிக்க மாட்டான்...? நமக்கு வேண்டிய கடைன்னு அப்பா சொன்னது இதை மனசுல வெச்சிக்கிட்டுத்தானா? பஸ்ஸ்டேண்டுல என் தேனுக்கு ஒரு கடையே இருக்கா...? அதுவும் கார்னர் கடை, இதை இடிச்சி தளம் போட்டு, மூணு பக்கம் என்ட்ரண்ஸ் வுட்டு, கீழே ஜெனரல் ஸ்டோர்... மேல மெடிகல் ஸ்டோர்ன்னு வெச்சா... மாச வருமானம் பிச்சிக்குமே, அப்பா சொல்ற மாதிரி மேட்டரை அவரே டீல் பண்ணட்டும். கல்யாணத்தின் எம்.பி.ஏ. மூளை வெகு வேகமாக வேலை செய்தது. "ரொம்ப நன்றிங்க... வர்ரேன்.." "ன்ன்னாங்க மாப்ளே? ஒண்ணுக்குள்ள ஒண்ணாயிட்டோம்... நன்றி சொல்றீங்க... இதெல்லாம் நல்லால்லே.. ஆமாம்" பச்சைத்துண்டு பஸ் வரை கூடவே வந்தது. வேலுசாமிக்கு வணக்கம் சொன்னது. பஸ் கிளம்பியது. வெயில் இல்லாமல் காற்று குளிர்ச்சியாக இருக்கவே பயணம் சிரமமில்லாமல் இருந்தது. இன்னும் கொஞ்சம் நஞ்சம் மிஞ்சியிருந்த பச்சை வயல்களையும், எதிர் திசையில் ஓடும் ரோட்டோர பனை மரங்களையும் மவுனமாக பார்த்துக்கொண்டிருந்தான் கல்யாணம். "அந்தப்புள்ளைக்கு நம்ம தாமரை வயசுதானேடா இருக்கும்?" தீடிரென பேச்சை ஆரம்பித்தார் வேலுசாமி. "ஓண்ணு ரெண்டு கூட இருக்கலாம்..." "ம்ம்ம்.. அவளும் சின்னப்பொண்ணுதானேடா? படிப்புல எப்பவும் மொதல் ரேங்க்தான் வருவாளாம். எதுலேயும் நம்பர் ஒண்ணாம்... ரொம்ப மேனர்ஸ் உள்ளவளாம்... பெரியவங்ககிட்ட மரியாதையா பேசற பொண்ணாம்... கல்ச்சர்ட் கேர்ள்... மனசுல இருக்கறதை பளிச் பளிச்ன்னு ஒடைச்சிப் பேசிடுவான்னு சொல்றாங்க..." "இதெல்லாம் அவளோட சித்தப்பாதானே சொன்னாரு...?" "நேத்து ஈவினிங் அந்த மகேஷை பத்தி விசாரிக்க லட்சுமணன் வீட்டுக்குப் போனேன்டா.. கேஷுவலா உங்க விஷயத்தையும் சொன்னேன். ரொம்ப நல்லப்பொண்ணு... நல்லக்குடும்பம்... நீங்களா எதுவும் கேக்காதீங்க... எல்லாம் அவங்களே பாத்து பாத்து செய்வாங்க.. சம்பந்தத்தை விட்டுடாதீங்கன்னு சொன்னாரு.." வாயை, முகத்தை, மேல் துண்டால் துடைத்துக்கொண்டார். "தேன்மொழியைப்பத்தி இவ்வளவு தூரம் அவரு எப்படி சொல்றாரு...?" "நம்ம தாமரை லவ் பண்ற பையன், தேன்மொழிக்கு ஒண்ணுவிட்ட பெரியப்பா பையனாம்..." "அப்டியா...?" "எல்லாம் ஒண்ணுக்குள்ள் ஒண்ணு நெருங்கி வருது.." "ம்ம்ம்ம்... அப்பா... எது எப்படியோ... அந்தப் பையனை தாமரைக்கு முடிச்சுடுங்க.. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் தொட்டு தொட்டு பேசிக்கிறாங்க..." "கேள்விப்பட்டேண்டா... உன் ஃப்ரெண்டு சுரேஷ்கிட்டவும் நேத்து பேசினேன்... அமாவாசை கழியட்டும்... நானும் உன் அம்மாவும் அவங்க வீட்டுக்கே போவலாம்ன்னு இருக்கோம்..." "ம்ம்ம்.. போயிட்டு வாங்க..." கல்யாணம் சாய்ந்து உட்கார்ந்துகொண்டான். "தேன்மொழி படிச்சுட்டு ஒரு நாள்கூட வீட்டுல வேலையில்லாம சும்மா இல்லே... கேம்பஸ் செலக்ஷ்ன்..." "ஒரு வருஷமா வேலை செய்யறா... தாமரை மாதிரி வீட்டுல ஒரே பொண்ணு... வீட்டுல நல்ல பணவோட்டம் இருக்குது... நீ காப்பி குடிச்சியே அந்த கடையும் கணபதியோடதுதான். எடத்தை வாடகைக்கு விட்டு இருக்காரு..." "அந்த பச்சைதுண்டு போட்டவரு சொன்னாரு..." "அவன் ஒரு வெத்து வேட்டு... நாளைக்கு உன் கிட்டவே ஒரு அம்பது ரூவா கைமாத்து கேப்பான்... குடிகாரப் பய... ஜாக்கிரதையா இரு.." "சரிப்பா..." "தேன்மொழி செல்லமா வளர்ந்தவ... கேக்கறதுக்கு முன்னே அப்பா ஒரு பக்கம்.. அம்மா ஒரு பக்கம்.. அண்ணன் ஒருபக்கம்ன்னு எதையும் வாங்கிக் கொடுத்தா, இந்த மாதிரி கொழந்தங்க மனசுல இலேசா, நான் உன்னைவிட ஒஸ்திங்கற கர்வம் இருக்கும்... கூடவே கொஞ்சம் புடிவாத குணமும் இருக்கத்தான் செய்யும்..." தன் ஓரக்கண்ணால் தகப்பனைப் பார்த்தான் கல்யாணம். அப்பா இன்னைக்கு சிரிச்சி சிரிச்சி பேசறாரே? எப்போதும் ஏதோ ஒரு டென்ஷனுடன் முகத்தை சிடுசிடுவென வைத்திருக்கும் தன் தந்தையின் முகம் அன்று நிச்சலனமாக, ஆனால் சிரிப்பை மட்டும் தேக்கிவைத்திருப்பதைக் வியந்து போனான் அவன். "அப்பா... ஆனா எந்த விதத்துல நம்ம குடும்பம் அவங்களுக்கு கொறைஞ்சு போச்சு...?" "நான் பேசறது அந்த பொண்ணைப்பத்திடா... இந்தக்காலத்துல மாமானர், மாமியார், நாத்தானாருன்னு... வீட்டுக்கு வர்றவளோடு யாரும் பர்மெனன்டா இருக்கப்போறதில்லே. வாழப்போறது நீங்க ரெண்டு பேரும்..." "சரிப்பா" "குடும்பம் நல்லாருக்கறதுக்கு உங்க ரெண்டு பேரோட அண்டர்ஸ்டான்டிங்தான் முக்கியம். எவ்வளவு சொத்து வேணா அவ எடுத்துக்கிட்டு வரலாம்.. மனசு ஒத்துப்போகலேன்னா சொத்தை வெச்சிக்கிட்டு நாக்கா வழிக்கமுடியும்?" "சரிப்பா... அவ என்கிட்ட பேசறதுக்கே தயங்கறாளே?." "உனக்கு நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா?" மகனின் வலதுகையை தன் கையில் எடுத்துக்கொண்டார். "சொல்லுங்கப்பா..." தந்தையின் ஸ்பரிசத்தில் உடல் சிலிர்த்தான் கல்யாணம். "தன் மனசுக்குள்ள தனக்கு வரப்போறவன் இப்படி இருக்கணும்ன்னு பொண்ணுங்க ஒரு ஓவியம் வரைஞ்சு வெச்சிருப்பாங்க... அந்த ஓவியத்தோட பொதுவாவே ஆம்பிளை மூஞ்சி இனிஷியலா மேச் ஆகாது... நாம்பள்லாம் என்னா சினிமா நடிகனா? இல்லே சீரியல்லே ஆக்ட் பண்றவங்களா?" "ம்ம்ம்..." தன் தகப்பன் இந்த அளவுக்கு ரியாலிட்டியை புரிந்து வைத்திருப்பார்... தன்னுடன் மனம்விட்டு பேசுவார் என அவன் என்றுமே நினைத்ததில்லை. அன்றைய பயணம் அவனுக்கு மிக மிக இனித்துக்கொண்டிருந்தது. "கல்யாணம்... மத்தபடி நீ எதுலேயும் அவளுக்கு கொறைஞ்சு போயிடலேடா.." "ம்ம்ம்.." "பெரியவங்க பாத்து நிச்சயம் பண்ற திருமணங்கறது... மொகத்தை, ஒடம்பை மட்டுமே அடிப்படையா வெச்சு நடக்கறதில்லே.... இன்னும் தொண்ணுத்தொம்பது விஷயம் இருக்கு... கணபதியும் நல்லா வாழ்ந்த மனுஷன்... நம்பளைப்பத்தி அவரும் பத்து எடத்துல விசாரிச்சிட்டுத்தான் நம்ப வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்காரு..." "அப்பா..." "அவ உன்கிட்ட செல்லுல பேசினப்ப, உன் ஃப்ரெண்ட்ஷிப்பே எனக்கு வேணாம்ன்னு மூஞ்சில அடிச்சமாதிரி சொல்லியிருக்கலாம்.... ஆனா அவ அப்படி சொன்னாளா?" "இல்லேப்பா.." "அவ என்ன பண்ணா? அவ எதுவும் முடிவா சொல்லாம தன் பேச்சை முடிச்சிட்டா... இதானே உங்களுக்குள்ள நடந்திச்சி...?" இவர் என்ன சொல்ல வர்றார்...? இதயம் படபடக்க தந்தையின் முகத்தை நேராகப்பார்த்தான் கல்யாணம். "கரெக்ட்டுப்பா.." "அதுக்கு அப்புறம் அவளுக்கு நீ குட் நைட் சொன்னே... அப்ப அவ தூங்கிவிட்டு இருக்கலாம்டா... நீ காலையில விஷ் பண்ணே... ஆறு மணி ட்ரெய்னை பிடிக்க அவ பஸ்ல போய்கிட்டு இருந்திருக்கலாம்... உன்கூட நான் இருக்கற மாதிரி அவளோட அப்பா...அம்மா... இருந்திருக்கலாம். இல்லே அண்ணன், அண்ணி அவகூட இருந்திருக்கலாம்.. அதனால அவ உனக்குப் பதில் அனுப்பலே..." "மே பீ..... பாஸிபிள்..." "திரும்பவும் நீ விஷ் பண்ணே... அவ ட்ரெய்ன்லே யாருகூடவாவது பேசிக்கிட்டு இருந்திருக்கலாம்... இல்லே தூங்கிப் போயிருக்கலாம்... ஏன்...? அவ செல்லே எங்கேயாவது தவறிப் போயிருக்கலாம்." "இருக்கலாம்பா..." "பொறுமையில்லாம எல்லாத்தையும் மறந்துடுன்னு நீ மெசேஜ் அனுப்பினா... அதுக்கு என்னடா அர்த்தம்...? அவ இடத்துல யாரு இருந்தாலும் உன்னை ஒரு லூசுன்னுதான் நெனைப்பாளுங்க..." "ப்ச்ச்..."

"உன் தங்கை விஷயத்துல, முகம் தெரியாத இன்னொரு பையனோட, மிகவும் பொறுமையா... டீசண்டா நடந்துகிட்ட நீ இன்னொரு முகம் தெரியாத பொண்ணுகிட்ட அவசரப்பட்டுட்டியேடா? "அயாம் சாரிப்பா... இப்படி நான் பிஹேவ் பண்ணியிருக்கக் கூடாது." 'டோன்ட் வொர்ரீ... நேத்து உன்கிட்ட மொரண்டு பிடிச்சவளுக்கு, உனக்கு எப்படி இப்ப நான் புத்தி சொல்றேனோ அப்படி அவளுக்கும் அவ வீட்டுல, உன்னைப்பத்தி, நம்ப குடும்பத்தைப்பத்தி எடுத்துச் சொல்லியிருப்பாங்க போலருக்கு..." "அப்பா... இந்த மேட்டர்ல்லாம்..." "தேன்மொழியோட சித்தப்பா... என் ஃப்ரெண்டுடா... காலையில தினமும் நானும் அவனும் ஒண்ணாத்தான் வாக்கிங் போறோம்... நீ எழுந்துக்கறதுக்கு முன்னாடியே, இன்னைக்கும் நானும் அவனும் வாக்கிங் போனோம்..." "அப்படீன்னா அம்மா குடுத்திருக்கற ஓமப்பொடியை அவளுக்கு குடுக்கட்டுமா?" "தாராளமா கொண்டு போய் குடுடா... அந்தப்பொண்ணு கொஞ்சம் எரிச்சல் பட்டாலும்... பொறுமையா இரு... தேன்மொழிக்கு உன் மேல ஒரு நம்பிக்கை வரணும்... அவளுக்கு உன் மேல ஒரு பிரியம் வரணும்... அதுவரைக்கும் அவகிட்டேருந்து கொஞ்சம் தள்ளியே நில்லு... திரும்பவும் அவசரப்படாதே... நான் சொல்றது உனக்குப் புரியுதா?" வேலுசாமி தன் கண்ணை சிமிட்டினார். "புரிஞ்சுக்கிட்டேன்.... ரொம்ப தேங்க்ஸ்ப்பா..." ட்ரெய்ன் நகர ஆரம்பித்தது. பிள்ளையை கையாட்டி வழியனுப்பினார். நெறைய குண்டு குண்டா புஸ்தகத்தை படிச்சா போதுமா? வாழ்க்கையை படிக்க கத்துக்கலியே? மனசுக்குள் சிரித்துக்கொண்டார் வேலுசாமி. அலுவலகத்தின் நுழைவாயிலில் தேன்மொழி தன் பையோமெட்ரிக் கார்டை தேடிக்கொண்டு நின்றாள். ஹேண்ட் பேக் முழுவதையும் துழாவினாள். கார்டை பர்ஸுக்குள்ளே வெச்சேனா? பர்சை தேட ஆரம்பித்தாள். பர்ஸையே காணவில்லை. ஓ மை காட்.. பர்ஸை எங்கே வெச்சிட்டேன்? நேரம் ஓடிக்கொண்டிருந்தது. லீவுலேருந்து வேலைக்கு வந்த முதல் நாளே லேட் அட்டன்டன்ஸ் ஆயிடிச்சி. இது ஒரு தேவையே இல்லாத என் கவனக்குறைவால வந்தப் பிரச்சனை? போன வாரம், உன்னைப் பொண்ணு பாக்க வர்றாங்க... நல்ல இடம்... சாக்குப்போக்கு சொல்லாம கண்டிப்பா நீ லீவு எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வந்துடு.... அம்மா செமை டென்ஷன் குடுத்துட்டாங்க...! ஊருக்கு போறன்னைக்கே கிளம்பற அவசரத்துல, அட்டன்டன்ஸ் மார்க் பண்ணாமப் போயிட்டேன். திலீப் இதையே சாக்கா வெச்சிக்கிட்டு, லேட்டா வர்றே... சீக்கிரம் போறேன்னு... என்னை இன்னைக்கு மேலும் கீழுமா மொறைப்பான். என்னைப்பத்தி பேசறதுக்கு அவனுக்கு எந்த சான்ஸும் நான் குடுக்க விரும்பலே. இப்ப என்ன பண்றது? பொறுக்கி நாய்... வரவர அவன் பார்வையே சரியில்லே... பக்கத்துல வந்து உக்காந்துக்கிட்டு, தேவையேயில்லாம உரசி உரசி பேசறான்... கிட்ட வந்தாலே சிகரெட் நாத்தம் கொடலைப் பொரட்டுது... பூனை மாதிரி சத்தமே இல்லாம வர்றான். சேருக்குப் பின்னாடி நின்னுக்கிட்டு என் கம்ப்யூட்டர் ஸ்கிரீனைப் பாக்கறமாதிரி சுடிதார்க்குள்ள என் மார் தெரியுதான்னு எட்டிப் பாக்கறான் தொடப்பக்கட்டை.. இன்னொரு தரம் என்னை உரசட்டும். செருப்பால அடிக்கிறேன். ஆஃபீசிலேயே அடிச்சாத்தான் அவனுக்குப் புத்தி வரும்..! கொஞ்சம் தள்ளி நின்னுப் பேசுன்னேன்... அதுலேருந்து காரணமே இல்லாம என் வேலையில கொறை கண்டுபிடிக்கறான். தீலிப் அவளுடைய டீம் ஹெட். அவனுக்கு இவள் உடம்பின் மீது ஒரு கண். சான்ஸ் கெடைச்சா இவளை தொட்டு தடவிப்பாத்துடணும். தன் மனதில் திட்டம் போட்டுக்கொண்டு, சரியான வாய்ப்புக்காக காத்திருந்தான் அவன். எங்கே போச்சு என் பர்ஸ்...? அதுலதானே, என் ஐ கார்ட்... பயோமெட்ரிக் கார்ட், என் டிரைவிங் லைசென்ஸ்... பேன் கார்ட்... எல்லாத்தையும் வெச்சிருந்தேன்...? ஊர்லேருந்து வரும் போது பஸ்லே பர்ஸ் மிஸ் ஆச்சா...? இல்லே ட்ரெயின்லே மிஸ்ஸாயிடிச்சா? எல்லாத்தையும் திரும்ப அப்ளை பண்ணணுமா? அய்யோ... என் கிரெடிட் கார்ட்... டெபிட் கார்ட்... இதெல்லாமும் பர்ஸல இருந்திச்சா? இல்லே ரூம்லே வெச்சிட்டுப் போனேனா? எதுவுமே சட்டுன்னு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குதே? ச்சை... எல்லாமே என்னை பொண்ணு பாக்கறேன்னு ஒருத்தன் வந்ததால ஏற்பட்ட பிரச்சனைகள். உடனே கல்யாணம் அவள் மனசுக்குள் வந்து நின்றான். ஐ லவ் யூ என்றான். நான் ஊரை விட்டு கிளம்பி முழுசா ஒரு நாளாயிடுச்சி. பேங்க் கார்டுங்களும் தொலைஞ்சு போயிருந்தா...? இத்தனை நேரம் அதுகளை பிளாக் பண்ணியிருக்கணுமே? இவ்வளவு நேரத்துல எவனாவது மிஸ்யூஸ் பண்ணியிருந்தா... ஓ மை காட்... தேன்மொழிக்கு குப்பென வியர்க்க ஆரம்பித்தது. மெலிதாக முகம் கருத்து பதற்றமானாள். "வாட் ஹேப்பண்ட் தேன்மொழி? கேன் ஐ ஹெல்ப் யூ? ஸ்ரீராம் இளம் புன்னகையுடன் அவளை நோக்கிவந்தான். அவன் கையில் கத்தையாக ஏதோ பிரிண்ட் அவுட்ஸ்... அவளுடைய பக்கத்து சீட்டில் உட்காருபவன். அவளுடைய புராஜெக்டில் இருப்பவன். "என் பயோமெட்ரிக் கார்ட்டைக் காணோம்..." உதட்டைச்சுழித்தாள் தேன்மொழி. "மெஷின்லே உன் எம்ப்ளாயி நம்பரை பிரஸ் பண்ணிட்டு, ஃபிங்கர் ஃபிரின்ட்டை டிரை பண்ணேன்.!?" "பிரச்சனையே அதான்... எத்தனை நம்பரை ஞாபகம் வெச்சிக்கறது? டென்ஷன்ல இப்ப என் எம்ப்ளாயி நம்பரே சரியா ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது..." தேன்மொழி அவனெதிரில் அசடு வழிந்தாள். இவனுங்க கிட்டல்லாம் என் ப்ராப்ளத்தை எக்ஸ்ப்ளெய்ன் பண்ணி இளிக்க வேண்டியதா இருக்கே? பதட்டத்தில் ரேண்டமாக நம்பரை அழுத்தினாள். தாட்சண்யமே இல்லாமல் மெஷின் அவளை அடையாளம் கண்டு கொள்ள மறுத்தது. "தேன்மொழி... இந்த மாசம் சேலரி ஸிலிப் கலெக்ட் பண்ணீட்டீயா?" ஷெர்லாக் ஹோம்ஸின் தோழன் டாக்டர் வாட்சனைப் போல் தோளை குலுக்கிக்கொண்டு, அவள் அருகில் வந்து சிரித்தான் ஸ்ரீராம். காலங்காத்தால என்னத்தை தின்னுட்டு வந்திருக்கான்? அவன் வாயிலிருந்து வந்த வெங்காய வாடை இவள் மூக்கைத் துளைக்க சட்டென பின்னால் நகர்ந்தாள் தேன்மொழி. அவளுக்குள் எரிச்சல் ஏறிக்கொண்டே போனது. "நோ... ஒரு வாரமா நான் லீவ்லேதானே இருந்தேன்... ஜாயினிங் ரிப்போர்ட் குடுத்துட்டு இன்னைக்குத்தான் கலெக்ட் பண்ணணும்." இப்ப இவன் ஏன் இந்த கேள்வியைக் கேக்கறான்? என் மூளை ஏன் வேலை செய்யலை? அவளுக்கு இருந்த குழப்பத்தில் அவன் கேள்வி புரியாததால் மேலும் மனதில் எரிச்சல் கூடியது. "டூ மினிட்ஸ் இங்கேயே வெயிட் பண்ணு... அட்மினுக்குப் போய் உன் சேலரி ஸ்லிப்பை பாத்து, உன் எம்ப்ளாயி நம்பரை போன் பண்றேன். அட்டண்டன்சை மார்க் பண்ணிட்டு உன் செல்லுலே சேவ் பண்ணிக்கோ... லேட்டஸ்ட் செல்லு எதுக்கு வெச்சிருக்கே?" போகிற போக்கில் இவள் கேட்காத அட்வைசையும் இலவசமாக அள்ளித் தெளித்தான்." "பிளீஸ்... டூ இட் குயிக்லீ ராம்..." வராத புன்னைகையை வலுக்கட்டாயமாக இதழ்களில் கொண்டுவர முயன்றாள் தேன்மொழி. என் நேரம்...! இவன்ல்லாம் எனக்கு அட்வைஸ் பண்றான். திலீப் கண்ணாலேயே என் டிரஸ்ஸை அவுக்கறான்னா இவன் என் பக்கத்துலயே உக்காந்துக்கிட்டு, நாள் பூரா பேசி பேசியே என்னைக் கொல்றான். நேரா இப்ப கேண்டீனுக்குப் போவான். தேனோட கார்டு தொலைஞ்சு போச்சு.. அவளால அட்டண்டன்ஸ் மார்க் பண்ண முடியலே. நான்தான் அவ பிராப்ளத்தை சால்வ் பண்ணேன். தேனு என்னைப்பாத்து தேங்க்ஸ்ன்னு சொல்லி சிரிச்சாப் பாரு... மனசு சந்தோஷமா இருக்கு...? வாயைத் தொறந்தா பொய்... புளுகு... புளுகு மூட்டை. ஹா... ஷீ மேட் மை டே... தேன்மொழி ஈவினிங் எனக்கு ட்ரீட் குடுக்கறேன்னு சொல்லியிருக்கா. ஊர்ல இருக்கறவனுக்கெல்லாம், மைக் வெச்சு பொய்யை பத்து தரம் அனவுன்ஸ் பண்ணுவான். இதுல இவனுக்கு என்ன சந்தோஷமோ? அவள் தன் மனதுக்குள் மேலும் எரிச்சலானாள். செல் சிணுங்கியது. இந்த நேரத்துல யாரு...? மைதிலி லைனில் வந்தாள். "குட்டீ... திடீர்ன்னு ஒரு மீட்டிங் ஃபிக்ஸ் ஆயிடிச்சிடீ. இன்னிக்கு ஈவினிங் வர லேட்டாகும்டீ... ராத்திரிக்கு ஒரு சாதம் மட்டும் வெச்சுடு... வரும் போது நான் ச்சோலேவும், தயிரும் வாங்கிட்டு வந்துடறேன்... தொட்டுக்கிட்டு சாப்பிட்டுக்கலாம்." "ஒரு செகண்டு டீ... லைனை கட் பண்ணாதே..." "குயிக்கா சொல்லும்ம்மா... அயாம் ஆஃபுலி ஃபிஸி..." "என்னோட பேங்க் பாஸ்புக், கிரெடிட், டெபிட் கார்ட்ஸ் இதெல்லாம் காணோம்டீ இப்ப என்னடி பண்றது?" "பைத்தியம்... ஏன் இப்படி பயந்து சாகறே? அதெல்லாம் என் அலமாரிலே இருக்கு... ஊருக்குப் போற அவசரத்துல, உன் கட்டில் மேலேயே எல்லாத்தையும் இறைச்சுட்டு போயிட்டே... பத்திரமா எடுத்து வெச்சிருக்கேன்... கவலைப்படாதே..." "ப்ஸ்ஸ்ஸ்ஸ்.... தேங்க் காட்... ஒரு பிரச்சனை விட்டுது... மத்தக் கார்டுகள்...? கார்டு.. கார்டு... கார்டு... எல்லாத்துக்கும் பிளாஸ்டிக்ல ஒரு கார்டு... சாதாரண வாழ்க்கையை எவ்வளவு சிக்கலாக ஆக்கிக்கிட்டு இருக்கோம்?" நீளமான பெருமூச்சொன்று அவள் நெஞ்சிலிருந்து கிளம்பியது. செல் திரும்பவும் சிணுங்கியது. ஸ்ரீராம் லைனில் வந்தான். ஒருவழியாக தேன்மொழி தன் வருகையை மெஷினுக்கு சொல்ல, மெஷின் கதவைத் திறக்க, தன் கேபினுக்குள் நுழைந்தாள் அவள். "மிஸ்டர் திலீப்... உங்க டீம் எழுதின புரோகிராம்ல மாத்தி மாத்தி ஏதாவது ப்ராப்ளம் ஏன் வந்துகிட்டே இருக்கு...? டெஸ்ட் ரன்ல ஆன்னா ஊன்னா எர்ரர் ரிப்போர்ட் ஏன் குடுக்குது...? ஒரு மாட்யூல்லே ஒருத்தன் லாகின் ஆனா... எல்லா மாட்யூல்லேயும் தேவையே இல்லாம, அவனால நுழைய முடியுதே? ரொம்ப ரொம்ப பேசிக் இஸ்யூ இது? இதைக்கூட செக் பண்ணாம நீ என்னய்யா பண்றே? வாட் ஈஸ் திஸ் மேன்?" "சார்... தேன்மொழி ஊருக்கு போயிருக்கா.. ஃப்ரம் த பிகினிங் ஷி ஹேஸ் பீன் ஹேண்ட்லிங் திஸ் ப்ராஜக்ட்... சோர்ஸ் கோட் அவ ஸிஸ்டத்துலே இருக்கு... அவ இன்னைக்கு ட்யூட்டிக்கு ரிப்போர்ட் பண்ணணும்... மணி பத்தாச்சு இன்னும் வர்லே..." சமயம் கிடைத்ததும் தேன்மொழியைப் பற்றி பற்றவைத்தான் அவன். "நோ... திஸ் ஈஸ் யுவர் ஹெடேக்... ஐ டோன்ட் வான்ட் டு ஹியர் திஸ் நான்சென்ஸ் எனிமோர்... ஷீ ஈஸ் வொர்க்கிங் அண்டர் யூ... ஒருத்தி ஊருக்கு போனா... உன் கம்பெனியை நீ இழுத்து மூடிடுவியா? வாட் யூ மீன்? "சாரி சார்... ஐ பர்சனலி லுக் இன் டு திஸ் இம்மீடியட்லி..." திலீப் சட்டென நரியைப்போல் பம்மினான். "திஸ் ஈஸ் வாட் ஐ வான்ட்... சொன்ன டேட்ல சாஃப்ட்வேரை டெலிவரி பண்ணலேன்னு, கிளையன்ட் கண்ட நேரத்துல கால் பண்ணி, என் உயிரை வாங்கறான்? டு யூ நோ திஸ்...? உன்னால இந்த பிராப்ளத்தை சால்வ் பண்ண முடியலேன்னா... முடியலேன்னு டேரக்டா என் கிட்ட சொல்லு மேன்... அதை விட்டுட்டு உன் சஃபார்ட்டினேட் மேல ஏன் பழியைப் போடறே?" தியாகு, அந்த பிரிவின் டெப்டி ஜெனரல் மேனேஜர், அன்று அளவுக்கு அதிகமாகவே குமுறினான். காலையில் அவனுக்கும் அவன் மனைவிக்கும் எழுந்ததிலிருந்தே பிரச்சனை. தொட்டதுக்கெல்லம் வாக்கு வாதம். ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளாததுதான் பாக்கி. மூட் அவுட் ஆகி வந்திருந்தான். கண்ணில் பட்டவர்கள் மேல் எல்லாம் சரியோ தவறோ... எரிந்து விழுந்து கொண்டிருந்தான். காலில் வென்னீரைக் கொட்டிக்கொண்டவனாக குதிக்கும் தியாகுவுக்கு சரியான பதில் தரமுடியாமல் விழித்தான் திலீப். இவன் எப்பவும் இப்படித்தான். ராத்திரி இவனுக்கு இவன் பொண்டாட்டி பாவாடையை தூக்கிக் காட்டி இருக்க மாட்டா. அந்த போங்கை இங்க வந்து என் மேல காட்டறான் நாய். திலீப் தன் மனசுக்குள் எரிச்சல் ஆனான். டேபிளின் மேல் இருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து தன் இரு கரங்களுக்கு நடுவில் வைத்து அழுத்திக்கொண்டிருந்தான் அவன். * * * * * "மே ஐ கம் இன்...?" கதவை தட்டிவிட்டு நுழைந்தாள் தேன்மொழி. ஜாயினிங் ரிப்போர்ட்டின் ஹார்ட் காப்பியை தியாகுவின் முன்னால் வைத்தாள். "ப்ளீஸ்... சிட்டவுன் மிஸ் தேன்மொழி... கேன் யூ கெஸ் த ப்ராப்ளம்...? வாட் ஆர் வி டிஸ்கஸிங் ஹியர்?" "சார்...?" தேன்மொழி சீரியஸாக விழித்தாள். "அந்த மெடிகல் கம்பெனியோட சாஃப்ட்வேர்ல வர்ற எர்ரர் ரிப்போர்டிங்கைப் பத்தி நான் பேசறேன்..." வேகமாக பேசினவன் தன் மூக்கு கண்ணாடியை கழற்றி டேபிளின் மேல் எறிந்தான். அவனுடைய பெரிய விழிகளைப் பார்த்ததும், தேவையில்லாமல் இவனுக்கும் கண்ணு கொஞ்சம் பெரிசா இருக்க மாதிரி இருக்கே...? கல்யாணத்தின் முகம் அவள் கண்ணுக்குள் வந்தது. கல்யாணம் தன் மூக்கு கண்ணாடியை கழற்றினாலும் இப்படித்தான் இருப்பானா? "சார்... லாஸ்ட் ஃப்ரைடே, நான் லீவுலே போறதுக்கு முன்னாடியே அதுல இருந்த பக்ஸ்ஸை கம்ப்ளீட்டா ஃபிக்ஸ் பண்ணிட்டேன்... சாஃப்ட்வேரை மிஸ்டர் திலீப்போட ஸிஸ்டத்துலேயும் லோட் பண்ணி ரன் பண்ணியும் டெமோ குடுத்துட்டேன்..." தேன்மொழியின் செல் சிணுங்க ஆரம்பித்தது. ஓரக்கண்ணால் பார்த்தாள். கல்யாணம்... கல்யாணம்... என கண் சிமிட்டியது செல். சட்டென ரிஜக்ட் ஐக்கானை அழுத்தினாள். "மிஸ் தேன்மொழி... யூ ஷுட் ஹேவ் டோல்ட் திஸ் டு மீ பிபோர் யூ ப்ரொசீடீங் ஆன் லீவ்...??" "சார்... அயாம் சாரி... திஸ் வில் நாட் ஹேப்பன் அகெய்ன்... பட் ஐ ஆஸ்க்ட் மிஸ்டர் திலிப், ஹூ ஈஸ் மை டீம் ஹெட் டு கன்வே திஸ் டு யூ மோர் தேன் ட்வைஸ்?" "திலீப்... என்னாய்யா இது? என் கிட்டே விளையாடறியா நீ?" தியாகு திலீப்பை தன் புருவங்களை நெறித்து முறைத்தான். தியாகுவின் டிராயரில் திலீப்பின் இயர்லி கான்பிடன்ஷியல் ரெவ்யூ பேப்பர்ஸ் கிடந்ததால், அவன் பதில் எதுவும் பேசாமல் தன் பற்களை கடித்துக்கொண்டு மவுனமாக இருந்தான். இவன் ஏற்கனவே என் மேல எரிச்சலா இருக்கான். இவளை பிக்ஸ் பண்ணணும்ன்னு நான் போட்ட பிளான் விழுந்து ஒடைஞ்சு போச்சு.. இந்த நேரத்துல என் மிஸ்டேக்கை, என் மேலதிகாரிகிட்ட இந்த பிச் தேன்மொழி ஓப்பனா பாய்ன்ட் அவுட் பண்றா... கொஞ்ச நேரம் சும்மா இருடீ... திலீப் தன் ஓரக்கண்ணால் அவளை முறைத்தான். என் எதிர்லேயே என்னைப்பத்தி இவன்கிட்ட கம்ப்ளெய்ன்ட் குடுக்கறியா? அந்த அளவுக்கு உனக்கு கொழுத்துப்போய் இருக்கா? உன் ரிப்போர்ட்டை நான் எழுதணும்... அப்பத்தான் இந்த வருஷம் இங்கிரிமென்ட் உனக்கு கிடைக்கும்டியோய்... வெளிலே வாடீ... என் பேரு திலீப்... திலீப் யாருன்னு உனக்கு இன்னைக்கு காட்டறன்டீ... வாடீ... என் அத்தை பெத்த கன்னுக்குட்டியே வாடீ... உன் மாங்காயை எவனும் இன்னும் தொட்டுப்பாக்கலேங்கற அதுப்புலே ரொம்பத்தான் ஆடி நிக்கறே நீ? ஒடம்புல கறியைக் காணோம். சூத்தாமட்டையில மட்டும் கொஞ்சம் கொழுப்பு ஏறி இருக்குது... அதை ஆட்டி ஆட்டிக்கிட்டு பசங்க நடுவுல சீன் போட்டுக்கிட்டு திரியறே? குச்சி மாதிரி இருந்துக்கிட்டு இங்லீஷ் பேசறியா நீ? நான் பேசற இங்லீஷ் உனக்குப் புரியலே...? உள்ளே வுட்டு ஆட்னேன்.. ஒரே நாள்லே உன் வயிறு ரொம்பிப் போயிடும். அதான் புள்ளைப் புடிச்சிக்கும்ன்னு சொல்றேன்... மனசுக்குள் கறுவிக்கொண்டிருந்த திலீப் தன் கட்டை விரல் நகத்தை கடித்து துப்பினான். தேன்மொழியின் செல் மீண்டும் சிணுங்கியது. பேச்சுத் துணைக்கு ஆள் இல்லாமல், ட்ரெயினில் சென்னைக்கு வந்து கொண்டிருந்த கல்யாணம், தேன்மொழியிடம் சாரி சொல்லிவிட்டு, அவள் மசிந்தால், அவளிடம் சிறிது நேரம் ஜொள்ளு விடலாம் என்ற நினைப்பில், திரும்ப திரும்ப அவளை அழைத்துக் கொண்டிருந்தான். மீட்டிங்கிலிருந்த தேன்மொழி திரும்பவும் சட்டென ரிஜக்ட் ஐகானை அழுத்தினாள். ப்ச்ச்... நேத்தே இவன் மெசேஜுக்கு நான் பதில் அனுப்பலை. உண்மைதான். இப்பவும் இவன் காலை உடனடியா என்னால அட்டண்ட் பண்ண முடியாத சூழ்நிலை. இவனும் ஒரு ஐ.டி. கம்பெனிலத்தானே வொர்க் பண்றான். இவனை மாதிரி இன்னொரு கம்பெனில வொர்க் பண்ற ஒருத்தரோட சூழ்நிலையை புரிஞ்சுக்க முடியாதா இவனால? ஒரு தரம் ரிஜக்ட் பண்ணதுக்கு அப்புறமும் விடாம நாலு தரம் கால் பண்றானே மடையன்? "மிஸ் தேன்மொழி வொய் டோண்ட் யூ ஸ்விட்ச் ஆஃப் யுர் செல்? ஆர் வீ நாட் இன் எ மீட்டிங்..?" திலீப் அடிக்குரலில் முனகி அவள் மேல் தனக்கு இருக்கும் அதிகாரத்தை நிலை நாட்ட விரும்பினான். "எஸ் மிஸ்டர் திலீப்... ஐ நோ வீ ஆர் இன் எ மீட்டிங்... டோன்ட் டீச் மீ எனிதிங் விச் ஈஸ் ப்யூர்லி அன்நெசசரி..." தேன்மொழிக்கு அந்த நேரத்தில் அவன் பேசிய விதம் சுத்தமாக பிடிக்கவில்லை. மனதுக்குள் பொங்கிக்கொண்டிருந்த எரிச்சல் பீறிட்டுக்கொண்டு வெளியில் வந்துவிட்டது அன்று. பொங்கிவிட்டாள் தேன்மொழி. பொங்கியபின் யோசிக்க ஆரம்பித்தாள். எனக்கென்ன ஆச்சு. ஏன் இப்படி பதறிப்போறேன்? நாய் கொலைச்சா... நானும் திரும்பி கொலைக்கணுமா? "மிஸ் தேன்மொழி... வாட் ஆர் யூ டாக்கிங்... மைண்ட் யுவர் லேங்வேஜ்... யூ ஆர் ஸ்பீக்கிங் டு யுவர் சீனியர்..." திலீப் பதிலுக்கு கத்தினான். கடந்த ஒரு வருடமாக தேன்மொழியை, அவள் வேலையை, அவள் நடத்தையை, தியாகுவும் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். திலீப்பின் நடைமுறைகளையும் அறியாதவன் அல்ல அவன். இவங்க ரெண்டு பேருக்குள்ள நிச்சயமா எதோ பர்சனல் பிராப்ளம் இருக்கு. இப்ப அந்த பிராப்ளம் கம்பெனியோட அஃபீஷியல் வேலைக்குள்ளும் எட்டிப்பாக்குது. இதை நான் அனுமதிக்க முடியாது. அவர்கள் இருவரின் முகத்தையும் இரண்டு நொடிகள் மாறி மாறிப் பார்த்த தியாகு. அந்த நேரத்தில் தேன்மொழியின் தரப்பில் பேச சட்டென முடிவெடுத்தான். "மிஸ்டர் திலீப்... ஐ நீட் எ டெமொ... யூ ஹேவ் டு அரேஞ்ச் இட் வித் இன் பிப்டீன் மினிட்ஸ்... யூ மே கோ நவ்..." திலீப்பின் கையை இயந்திரத்தனமாக குலுக்கி அவனைத் தன் அறையை விட்டு வெளியேற்றினான் தியாகு. "அயாம் சாரி சார்... ஐ ஷுட் நாட் ஹேவ் ஸ்போக்கன் லைக் திஸ்... பட் திலீப் இஸ் ஆல்வேஸ் சிட்டிங் ஆன் மை நர்வ்ஸ்... ஆஃப் லேட், ஐ டோன்ட் நோ வொய் ஹீ ஈஸ் ஹராஸிங் மி...? " தேன்மொழி தியாகுவின் கண்களை நேராகப் பார்த்து பேசினாள். அதே நேரத்தில் மூன்றாம் முறையாக கல்யாணம் அவளை கூப்பிட்டான். "ஐ நோ... ஐ நோ... ஐ ஷல் டேக் கேர் ஆஃப் ஹிம்... யூ ப்ளீஸ் கான்சென்ட்ரேட் ஆன் யுவர் ப்ராஜக்ட்.... யூ மே அட்டண்ட் யுர் கால்..." தியாகு மென்மையாக சிரித்தான். "மிஸ்டர் கல்யாணம் டோண்ட் டிஸ்டர்ப் மீ... அயாம் இன் எ மீட்டீங்... ஐ வில் கால் யூ பேக் ப்ளீஸ்..." மெல்லிய குரலில் பேசிய தேன்மொழி செல்லை முழுவதுமாக அணைத்தாள். தேன்மொழி மெல்ல எழுந்து அந்த அலுவலகத்தின் லேபை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். ஹேய் தேனு... உனக்கென்னடி ஆச்சு? யார் மேல இருக்கற எரிச்சலை யார் மேல காட்டறேடீ...? கொஞ்சம் பிஸியா இருக்கேன்... பத்து நிமிஷம் கழிச்சி நானே கால் பண்றேன்னு பொலைட்டா கல்யாணம் கிட்ட சொல்லியிருக்கலாம் இல்லியா? அதை விட்டுட்டு டிஸ்டர்ப் பண்ணாதேன்னு அவன் மூஞ்சில அடிக்கற மாதிரி பேசறியே? ஆமாம்... முந்தா நேத்து இவன் என்னை காதலிக்கறேன்னான்... அதுக்கப்புறம் ரெண்டு மணி நேரத்துல ஃப்ரெண்டா இருக்கலாம்ன்னான்.... மறுநாள் எல்லாத்தையும் மறந்துடுன்னான்... இப்ப என்ன கதை சொல்லுவான்...? சாரி தேன்மொழி... என்னமோ மெசேஜ் அனுப்பிட்டேன்... திருப்பியும் உன்னை நான் காதலிக்கறேன்ம்பான்... இந்த லூசுப்பய சொல்ற கதையை இப்பவே நான் கேட்டுத்தான் ஆகணுமா? ஈவினிங் ரூமுக்குப் போனதுக்கு பிறகு மெதுவாக கேட்டுக்கிட்டா போச்சு... இப்ப எனக்கு என் வேலைதான் முக்கியம்... டெமோவை ஒழுங்கா முடிக்கணும். நல்ல வேளை சோர்ஸ் கோடை திலிப்கிட்ட கொடுக்காதது நல்லதாப்போச்சு... முகத்தை துடைத்துக்கொண்ட தேன்மொழி ஒரு டம்ளர் குளிர்ந்த நீரை நிதானமாகப்பருகினாள். “மச்சான்... என்னடா சாப்பிடறே? உன் வீட்டுலே எல்லாரும் சவுக்கியம்தானே? உன் ஸிஸ்டர் தாமரை எப்படி இருக்கா?” கல்யாணத்தின் தோளில் நட்புடன் கையைப் போட்டுக்கொண்டான் ரமணி. அவர்கள் இருவரும் ‘தாபா எக்ஸ்பிரஸின்" முன்னால் நின்றிருந்தார்கள். கல்யாணம் அரைமணி நேரத்திற்கு முன்னர்தான் சென்னை வந்து சேர்ந்திருந்தான். “மச்சான் இங்க நார்மலாவே கொறைஞ்ச பட்சம் ரெண்டு பேருக்கு ஐநூறு ரூவா தீட்டுவாண்டா...” கல்யாணம் செம்மறியாடாக விழித்தான். “ங்கோத்தா... பில்லு நான் குடுக்கறேண்டா... உனக்கு வேணுங்கறதை சாப்ட்றா... எனக்கு ஒரு லைப் செட்டாயிருக்குன்னு சொன்னேன்லா... அதுக்கு ஒரு சின்ன ட்ரீட் உனக்கு. டுடே... யூ எஞ்சாய் த டின்னர் வித் மீ." ரமணி தன் சட்டைக்காலரைத் தூக்கி விட்டுக்கொண்டான். "மச்சான்... உன்கிட்டே எனக்குப் பிடிச்சதே இதான்டா... எப்பவும் ரமணி... ரமணிதான்..." கல்யாணம் ரமணியை நடுரோட்டில் கட்டிக்கொண்டான். “எனக்கு ரெண்டு ஃபீஸ் பட்டர் நான்... ஒரு பிளேட் தால் வாங்கிக்கறேன்... ரயத்தா ஒரு கப்... அப்புறம் ஒரு பிளேட் குலாப் ஜாமூன்... தட்ஸ் ஆல்... உனக்கு என்ன வேணும்...?” கல்யாணம் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டான. மெனு கார்டை அவன் புறம் தள்ளினான். “ஒன் பீஸ் ஆலு பரத்தா வித் க்ரீன் சட்னீ... தென் ஒன் ப்ளேட் சாவல் வித் கடி பக்கோடா...” ஆர்டர் எடுத்த பேரரை நோக்கி ரமணி உற்சாகமாக நட்புடன் சிரித்தான். “நீயாவது உன் மனசுக்குப் புடிச்சவளோட நல்லாருடா மச்சான். உன் ஆளை ஒரு தரம் இன்ட்ரொட்டூயூஸ் பண்ணுடா! உங்களை ஜோடியா பாக்கணும்ன்னு ஆசையா இருக்கு. மனசார உங்க ரெண்டு பேரையும் இப்பவே விஷ் பண்றேன்டா. நீ சொல்றதைப் பாத்தா உன் ஆளு உன்னைவிட ஏஜ்டா இருப்பாங்களா?” கல்யாணம் மூச்சு விடாமல் பேசினான். “எட்டு வயசு பெரியவடா...” ஜில்லென்ற தண்ணீரில் ஒரு விரலை நனைத்து கல்யாணத்தின் முகத்தில் தெளித்தான் ரமணி. “மச்சான்... கேக்கறனேன்னு தப்பா நெனக்காதே...” “அன்பே அன்பே எல்லாம் அன்பே உனக்காக வந்தேன் இங்கே சிரித்தாலே போதும் என்பேன்....” மெல்லியக்குரலில் ஹம்மிங் செய்து கொண்டிருந்தான் ரமணி. "கேள்டா..."

அன்பே... அன்பே... எல்லாம் அன்பே உனக்காக வந்தேன் இங்கே சிரித்தாலே போதும் என்பேன்... இப்போது வாய்விட்டுப் பாடிக்கொண்டே டேபிளில் தாளம் போட்டான் ரமணி. “உன் ஆளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடிச்சின்னு சொல்றியேடா... மொதல் மேரேஜ் டிவோர்ஸ்ல்லாம் ஆயிடிச்சா...?” “தெரியாதுடா... டேய்... இன்னையத்தேதியில காமாட்சி என்னை லவ் பண்றா... நான் அவளை லவ் பண்றேன்... அவளுக்காக நான் என் உயிரையும் கொடுக்க ரெடிடா... அவ தன்னை... தன் அன்பை... தன் பாசத்தை... தன் வாழ்க்கையை, தன்கிட்ட இருக்கற எல்லாத்தையும் எனக்கு குடுக்கறேங்கறடா... இதுக்கு மேல எனக்கு வேற என்னடா வேணும்...?" "அதெல்லாம் சரி மச்சான்.. இருந்தாலும் பின்னாடீ லீகலா பிரச்சனை எதுவும் வரக்கூடாதுடா..." "என் நெத்தியிலே இருக்கற பொத்தலை பாக்கறேல்லா... அவளுக்காக ரெண்டு பேரை அட் எ டயம்லே குமுக்கி எடுத்தேன்... என் ஆளை சொந்தம் கொண்டாடிக்கிட்டு எவனாவது வந்தான்... ஹொம்மாள... ட்டிஷ்யூம்... தொலைஞ்சான்..." "மச்சான் நீ செய்தாலும் செய்வேடா" "ட்டிஷ்யூம் மட்டுமில்லே.. அதுக்கப்புறம் மொத்தமா சங்குதான் அவனுக்கு... பொய்ய்ய்ய்ய்ம்ன்... வலது கையின் நான்கு விரல்களை உள்ளங்கையில் மூடி, கட்டை விரலை தன் வாயில் வைத்து ஊதிக்காட்டினான் ரமணி. “மச்சான்... நிஜமாவே தில்லுடா உனக்கு..." “காமாட்சியோட புருஷன் யாரு? அவளுக்கும் அவனுக்கும் நடுவுல என்னா நடந்திச்சி...? ஏன் பிரிஞ்சாங்க...? ஐ டோண்ட் கேர்... நான் என் ஆளோட பழைய லைப் பத்தி என்னைக்கும் நானா கேக்கவே போறதில்லே... அதுவா தெரிய வந்தாலும்... அயாம் லீஸ்ட் பாதர்ட்..." "க்ரேட்..." கல்யாணம் விசிலடித்தான். "டுடே ஷீ ஈஸ் மை ஸ்வீட் லவ்வர்... கொஞ்சம் நாள்லே ஷீ வுட் பீ மை வைப்... தட்ஸ் ஆல்..” மூங்க் கீ தாலின் மேல் பசும் நெய்யை ஊற்றி கலக்கிய ரமணி ஒரு ஸ்பூனால் அள்ளி உறிஞ்சி ருசி பார்த்தான். தால் ஃப்ரை அற்புதமாக இருந்தது. “மச்சான்... நீ க்ரேட் மச்சான்... இப்படி ஒரு லேடியை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு நிஜமாவே ப்ராட் மைண்ட் வேணும்டா... உனக்கு அது இருக்குடா” கல்யாணத்தின் முகத்தில் பிரமிப்பு பளிச்சென்றிருந்தது. நண்பனின் கையைப் பிடித்துக் குலுக்கினான். "கல்யாணம்... என் காமாட்சியோட மனசும் ரொம்பப் பெருசுடா... என் லைப்லே நடந்ததெல்லாம் உனக்குத் தெரியும்... வாட் அயாம்... யூ நோ வெல்.. அப்பன் பேர் தெரியாதவன் நான்... இந்த உண்மை அவளுக்கு போலீஸ் ஸ்டேஷன்ல தெரிஞ்சதும் அவ என்ன சொன்னாத் தெரியுமா?" அவனே சொல்லட்டும் என ரமணியின் முகத்தை மவுனமாக பார்த்துக்கொண்டிருந்தான் கல்யாணம். "நம்ம வீட்டுக்கதையை அனாவசியமா நாலு பேரு முன்னாடீ ஏன் பேசறேன்னு ஒரே வார்த்தையில என்னை அடக்கினாடா... அப்படியே நாறிப்போயிருக்கற என் மனசை சந்தனமா குளுர வெச்சாடா?" "வெரி குட்... கேக்கறதுக்கே நல்லாருக்குடா..." "தேங்க்யூ டா..." "மச்சான்... என் லவ்வுல எப்பவாவது எதாவது பிரச்சனைன்னா.. நீதான்டா என் கூட நிக்கணும்..." கல்யாணம் கெஞ்சலாக ரமணியைப் பார்த்தான். "உன் ஆளு இருக்கற எடத்தை சொல்லுடா... அள்ளிகிட்டு வந்து உன் மடிலே போடறேன்..." ரமணி சிரித்தான். "ம்ம்ம்... என்னடா திங்கறதுலேயே குறியா இருக்கே...? மேட்டருக்கு வாடா... உன் தேன்மொழி என்னா சொல்றா? ரமணி கடியில் கிடந்த பக்கோடாவை ஸ்பூனால் வெட்டி வாயில் நாசூக்காக போட்டுக்கொண்டான். வெண்ணையாக வழுக்கிக்கொண்டு தொண்டைக்குள் நழுவியது அது. "நீ சொன்னா மாதிரி காலையிலே தேனுக்கு கால் பண்ணேன்டா... அவ காலையே எடுக்கலே... சட்டுன்னு காலை கட் பண்ணிட்டா..." "நீயும் கம்முன்னு பொத்திக்கிட்டு இருக்கே?" "அதுக்கப்புறம் ரெண்டு தரம் கால் பண்ணேன்டா... என்னைப் பேசவே விடலை. டோன்ட் டிஸ்டர்ப் மீ... அயாம் இன் எ மீட்டிங்ன்னு லிட்டரலா எரிஞ்சு விழுந்தாடா..." “ஸோ... உன் ஆளு இன்னைக்கும் உன்னை மெரட்டினாளேத் தவிர உன்கிட்ட மூஞ்சி கொடுத்து பேசலை...” “ஆமாம் மச்சான்...” "சரி... எனக்கு மேட்டர் என்னான்னுப் புரிஞ்சு போச்சு..." "என்னா மச்சான் சொல்றே?" "மறந்துடுடா அவளை... மறந்துட்டு வேற எந்த பிகருக்காவது நூலு வுடு..." "என்னா மச்சான்...? அட்ரஸை சொல்லு; அள்ளிக்கிட்டு வர்றேன்னு இப்பத்தான் சொன்னே... ? அதுக்குள்ள என் லவ்வுக்கு சங்கு புடிக்கிறியே? கல்யாணம் ரோஸ் நிறத்தில் மென்மையாக, உள்ளங்கையளவு நீளமிருந்த பர்ஸை எடுத்து ஒரு முறைப் மவுனமாகப் பார்த்தான். "மச்சான்.. உன் ஆளு உன்னை லவ் பண்றான்னு வெச்சுக்கோ... வேற எவனாவது குறுக்கே பூந்து கொளறுபடி பண்ணா என்னைக் கூப்பிடு... வர்றேன்... என்னான்னு விசாரிக்கறேன்... அவளே உன்கிட்டே இருந்து ஒதுங்கி நின்னா நான் என்னாப் பண்றது...?" கல்யாணம் தன் கையிலிருந்த பர்ஸையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான். "பாத்தா பொண்ணுங்க பர்ஸுமாதிரி இருக்கு? அப்பப்ப எடுத்து எடுத்து பாத்துக்கறே? உன் ஆளுக்கு பிரசன்டாக் குடுக்கப்போறியா?" "தேன்மொழியோடதுடா... ஊர்லே மறந்து வெச்சிட்டு வந்துட்டாளாம்... இன்னிக்கு காலையிலே திருச்சியிலே அவளோட அண்ணன் ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்திருந்தாரு... தேனைப் பாத்து குடுத்துட சொன்னாரு...." "இது உன்கிட்ட இருக்கறது அவளுக்குத் தெரியுமா?" "தெர்லே மச்சான்..." "கையைக் கழுவிக்கினு கிளம்புடா... இந்தப் பர்சை குடுத்துட்டு வர்ற சாக்குல அவ மனசுல என்னாதான் இருக்குன்னு கேட்டுட்டு வந்துடலாம்... உனக்கு பயமா இருந்தா அவளை நான் கேக்கறேன்..." ரமணி கைக்குட்டையை தலையில் கட்டிக்கொண்டான். "மச்சான்... ராத்திரி மணி பத்து ஆவுதுடா.. இப்ப போய் ஒரு கல்யாணம் ஆவாத பொண்ணோட ரூமுக்கு எப்படிடா போறது?" "டேய் காண்டு... கல்யாணம் ஆனவ ரூமுக்குத்தான் போகக்கூடாது... கன்னிப் பொண்ணு ரூமூக்கு... உன் ஆள் ரூமுக்கு நீ போவலாம்டா..." ரமணி கண்ணடித்தான். "மச்சான் கொல்லாதடா என்னை... அவ எங்கிட்ட மொகம் குடுத்து பேசுவாளான்னு ஒரு பக்கத்துல மெர்சலா இருக்கு. நீ வேற ஒருத்தன்... என்னை ஓட்டு ஓட்டுன்னு ஓட்டறே.." "ங்கொம்மாளா... சரியான பொட்டைடா நீ... ஏன்டா இப்படி பயந்து சாவறே? நான் கூட இருக்கேன்ல்லா..?. எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்டா... கெளம்புடா... எங்கடா இருக்கா அவ? வந்ததுலேருந்து நானும் பாக்கறேன்.. பொண்டாட்டி செத்தவன் மாதிரி மூஞ்சை வெச்சிக்கிட்டு இருக்கே நீ? உன் மூஞ்சைப் பாக்கவே சகிக்கலே எனக்கு...?" ரமணி சீறினான். "இப்ப வேணாம் மச்சான்... போன் பண்ணிட்டு பகல் நேரத்துல போவலாம்டா?" "ங்கோத்தா... எதுக்கும் ஒத்து வரமாட்டே... உருப்படமாட்டேடா நீ? பர்ஸைத் தொறந்து பாத்தியா? முக்கியமா எதாவது இருக்கப்போவுதுடா?" "என் தேனோட எம்ப்ளாயி கார்ட்... பேன் கார்ட்.. ஐ கார்ட்.. இன்னும் ரெண்டு மூணு கார்டுங்க.. பிளாஸ்டிக் பொட்டு... ரெண்டு ஊக்கு... ஒரு ஹேர் பின்னு... ஒரு சின்ன டிராயர் கீ... ஒரு நூத்தி எண்பது ரூவா பணம்... ஒரு அழுக்கு ஹேங்க்கீ... அப்புறம்" கல்யாணம் சொல்லத் தயங்கினான். "அப்புறம் வேற என்னடா...? நீ தயங்கறதைப் பாத்தா வில்லங்கமா எதாவது இருக்கும் போல இருக்கே?" "அதான் மச்சான்... லேடீஸ் மாசா மாசம் அவங்க பிராப்ளத்துக்கு யூஸ் பண்ணுவாங்களே... அது ஒரு பட்டை இருக்கு..." முகத்தில் கூச்சத்துடன் வெள்ளையாகச் சிரித்தான் கல்யாணம்.. "டேய்... டேய்... 'உன் தேனு...' 'உன் தேனு' இங்கே நீ அவளை நெனைச்சுக்கிட்டு ரொம்பத்தான் ஏங்கி ஏங்கி சாவறே? அவ என்னமோ உன் தலை மேல ஏறி நின்னு உன்னை மேய்ச்சிக்கிட்டு இருக்கா?" "எல்லாம் சரியாயிடும் மச்சான்... அப்பா கொஞ்சம் பொறுமையா இருன்னு சொன்னார்டா" "உங்கப்பா உனக்கு பொறுமையா இருன்னு சொல்லிட்டாருல்லே.. சொல்லிட்டு, துண்டை ஒதறி தோள்லே போட்டுக்கிட்டாரா? உன் பர்ஸ் எங்கிட்ட இருக்குன்னு ஒரு மெசேஜ் அனுப்பிடு... அனுப்பிட்டு வழக்கம் போல உன்னுதை கைல புடிச்சிக்கிட்டு தூங்குடா.. அவளுக்கு அவ பர்ஸ் வேணும்ன்னா அவளே பொறுமையா வந்து வாங்கிப்பா..." "மச்சான்.. என்னை என்னதான்டா பண்ணச்சொல்றே?" "இவ்வளவு முக்கியமான மேட்டருங்களை கையில வெச்சிக்கினு மூக்கொழுவறியே? அவளோட அழுக்கு கர்ச்சீஃபை சோப்பு போட்டு தொவிச்சி, காயவெச்சி, எடுத்துக்கிட்டுப் போய் குடுடா நாயே...? வெக்கமா இல்லே உனக்கு...? என்னாப் பண்றதுன்னு என்னைக் கேக்கறியே?" "மச்சான்..." "அப்பன் சொன்னானாம்... இவன் பொறுமையா இருக்கப்போறானாம்... அவ அழகா அம்சமா வேற இருக்காங்கற... எவனாவது என்னை மாதிரி தில்லான ஆளு அள்ளிக்கிட்டு போயிடப்போறாண்டா?" ரமணி தன் முகத்தை சுளித்தான். "தலை என்னதான் சொல்றே தலே?" "காதலிக்கறானாம்.. உனக்குல்லாம் எதுக்குடா காதலு...? பயந்து சாகறே? என் எதிர்லே இப்பவே போடுடா காலை அவளுக்கு..." "மச்சான்.. நானே அவளை தனியா நேர்லப் பாத்து இந்தப் பர்சை குடுக்கலாம்ன்னு நினைச்சேன் மச்சான்... ஆனா எனக்கு ஒரு விஷயம்தான் புரியலே..." "சொல்லுடா..." "இன்னுமாடா மீட்டிங்லே அவ பிஸியா இருப்பா? பிரியானதும் கூப்பிடறேன்னு சொன்னா... அவ கால் இன்னும் வரலையேடா?" கல்யாணம் தன் செல்லை எடுத்து செக் பண்ணத்தொடங்கினான். "டேய்... அவ உனக்கு பூச்சிக்காட்டறா... சும்மா அலட்டிக்கறவளை நீ ஏன்டா பாக்கறதுக்கு கிடந்து துடிக்கறே? உன் பர்ஸ் எங்கிட்ட இருக்கு... வந்து வாங்கிக்கோன்னு ஒரு மெசேஜ் அனுப்புடா... எல்லாம் அது போதும்..." "பாவம்டா... எங்க ஊரு பொண்ணு... அதுமட்டுமா... என் மனசுக்குள்ள வந்துட்டவளை ஏன் வீணா இங்க அங்க அலைய வுடுவானேன்னு பாக்கறேன்டா...! என் பைக்கை நாளைக்கு டெலிவரி எடுத்துகிணு நானே நேர்ல போய் இந்த பர்ஸை குடுத்துட்டு வரலாம்ன்னு நினைக்கறேன்டா..." ஏவ்... கல்யாணம் பெரிதாக ஒரு ஏப்பம் விட்டான். "எக்கேடோ கெட்டுத் தொலைடா... அழகான பொண்ணுங்க எதிர்லே இந்த மாதிரி நீட்டா ஏப்பம், அப்புறம் முக்கியமா, உன் வழக்கப்படி குசு... கிசுன்னு வுடாதே... தெறிச்சி ஓடுவாளுங்க..." சிகரெட் ஒன்றை கொளுத்திக்கொண்டு ரமணி மெல்ல நடக்க ஆரம்பித்தான். "மச்சான்.. எனக்கும் ஒரு சிகரெட் குடேன்டா..." மேய்ப்பவன் பின்னால் செல்லும் ஆட்டுக்குட்டியாக அவனைப் பின் தொடர்ந்தான் கல்யாணம். "என் குட்டிக்கு மூஞ்சி ஏன்டீ சுண்டிப் போயிருக்கு?" தன் கட்டிலில் படுத்தவாறு புரட்டிக்கொண்டிருந்த செய்திதாளை மடித்து டேபிளின் மேல் எறிந்தாள் மைதிலி. "ஒரே அலைச்சல்டீ... மார்னிங் செஷன்ல, டிஸ்கஷன்... டெமோ... டிஸ்கஷன்... லஞ்சுக்கு அப்புறம் ஒரு கிளையன்டோட ஆஃபிசுக்கு போக வேண்டியதாப் போச்சு. அங்கே லிஃப்ட் ரிப்பேர். மாடிப்படியிலே ஏறி இறங்கி... ஏறி இறங்கி... என் இடுப்பே ஒடிஞ்சு போச்சு. நாள் பூரா மெனக்கெட்டுட்டு வந்திருக்கேன்." ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த துணிகளை அலமாரியில் அடுக்கிக்கொண்டிருந்தாள் தேன்மொழி. "உன் டீம்ல இருக்கற தடியனுங்க என்னடீ கிழிக்கறானுங்க? ஃபீல்டுக்கு அவனுங்க போகமாட்டானுங்களா?" "பொதுவா அவங்கதான் போவாங்க... இன்னைக்கு சீஃப் நீயும் போகணும்ன்னு சொல்லிட்டாரு.." "ம்ம்ம்... உன் மஜ்னு என்ன சொல்றான்..?" "காலையிலே பத்து மணி வாக்குல மூணு தரம் போன் பண்ணான்..." "வெரி குட்... நான் சொன்னேன்ல்லா... அவனே போன் பண்ணுவான்னு... சாரி சொல்லிட்டியா?" "எங்கேடீ பேசவே முடியலேடீ.. ரொம்ப பிஸியா இருந்தேன்னு சொன்னேனே..." கையிலிருந்த ஜீன்சை கட்டிலின் மேல் எறிந்துவிட்டு மைதிலியின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள் தேன்மொழி. "சீய்.. தேனு... இது கொஞ்சம் கூட நல்லால்லேடீ... பாவம்டீ அவன்... யாரா இருந்தா என்னடீ?" "இன்னைக்கு நான் இருந்த நிலைமை உனக்கு புரியலேடீ... என் பர்ஸ்ஸை தொலச்சிட்டு, பேங்க் கார்டு எல்லாம் தொலைஞ்சு போச்சுன்னு அது வேற டென்ஷன்.. நீ எடுத்து வெச்சிருக்கேன்னு சொன்னதுக்கு அப்புறம்தான் எனக்கு மூச்சே வந்திச்சி.. டூ லேக்ஸ் சேவிங்ஸ்லே இருக்குடீ.." "அடிப்பாவி... இவ்வளவு ரூபா ஏன்டீ சேவிங்ஸ்லே வெச்சிருக்கே... பிக்ஸ் பண்ணவேண்டியதுதானே?" "பண்ணணும்... நான் சொல்லுவேன்ல்ல்லா திலீப்புன்னு என் டீம் ஹெட், அவன் கூட இன்னைக்கு பெரிய லொள்ளாப் போச்சு.. இன்னைக்கு ஓப்பனா தகராறு ஆயிடிச்சி... என் சீஃப் எதிர்லேயே பொத்திக்கிட்டு போடான்னுட்டேன்..." "அப்புறம்..." "என் சீஃப் எனக்கு ஏதோ கொஞ்சம் சப்போர்ட்டா பேசினாரு..." "டென்ஷன் ஆகாதேடீ செல்லம்... இந்த மாதிரி பொறுக்கிங்க கிட்ட பயப்படாதே... பயப்பட்டே நீ ஒழிஞ்சே..." "சரிடீ..." "ரூமுக்கு வந்ததும் உன் கல்யாணத்துக்கு கால் பண்ணியிருக்கலாம்ல்லே?" "சும்மா இருடீ... என் கல்யாணம்... என் கல்யாணம்ன்னு என்னை ஏன்டீ ஏத்திவிடறே?" "உன் கண்ணுல தெரியுதுடீ... சும்மா கதை வுடாதே நீ?" மைதிலி அவள் முதுகில் தட்டினாள். "வீட்டுக்கு வந்ததும் பசி எடுக்கவே குக் பண்ண ஆரம்பிச்சேன்... அண்ணன் போன் பண்ணியிருக்காருடீ.. அம்மா கால் பண்ணியிருக்காங்கடீ... இனிமேதான் ஒன் பை ஒன்னா எல்லார்கிட்டவும் பேசணும்... ச்சே... இன்னைக்கு எனக்கு நாளே சரியில்லே " அலுத்துக்கொண்டவள் தன் செல்லை எடுத்து ஒரு நிமிடம் நோண்டினாள். நோண்டியவள் தன் நெற்றியை அழுத்திப் பிடித்துக்கொண்டாள்.

"தலை வலிக்குதா...?" மைதிலி அவளை தன் மடியில் சாய்த்துக்கொண்டு, அவள் நெற்றியை பிடித்து விட்டாள். "என்னை என்னடீ பண்ணச்சொல்றே? இருக்கற டென்ஷன் பத்தாதுன்னு, நான் அந்தக் கல்யாணத்தை இக்னோர் பண்றேன்னு நீ வேற என்னை வெறுப்பேத்தறே...? இதுவே ஒரு பெரிய டென்ஷனா இருக்கு எனக்கு." "உன்னைப்பத்தி எனக்கு நல்லாத் தெரியும்டீ... ஆனா அவன் உன்னை, என் ஃப்ரெண்டை, தேவையில்லாம தப்பா நினைச்சுக்க கூடாது இல்லையா?" "ம்ம்ம்..." "ஹேய்... குட்டீ... உண்மையைச் சொல்லுடீ... அந்தக் கல்யாணத்தை உனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலையா?" "ப்ச்ச்ச்... தெரிலேடீ" "பிடிக்கலேன்னா பிடிக்கலேன்னு சொல்லிடு... இப்படி ஒருத்தனை பொருட்படுத்தாத மாதிரி நடந்துகிட்டு, அவன்கிட்ட பேசாமலேயே காலத்தை தள்ளி அவனைக் கொல்லக்கூடாதுடீ.. அது ரொம்பத் தப்புடீ... உனக்கும் டென்ஷன்... அவனுக்கும் டென்ஷன்..." "மைதிலீ... நிஜமாவே சொல்றேன்டீ... எனக்குத் தெரியலேடீ... எனக்கு என்ன வேணும்ன்னு எனக்கேத் தெரியலைடி.." தேன்மொழியின் குரல் கரகரத்தது. "என்னடீத் தெரியலே?" மைதிலி மெல்ல அவள் நெற்றியை அழுத்தி விட்டுக்கொண்டிருந்தாள். "எனக்கு அவனைப் பிடிக்குதா... இல்லையா...? இதுவே எனக்குத் தெரியலேடி.. என்னால சட்டுன்னு ஒரு முடிவுக்கும் வரமுடியலே... ஒரு முடிவுக்கு வந்தாத்தானே என் மனசுல இருக்கறதை அவனுக்கு நான் சொல்ல முடியும்.." தேன்மொழி சட்டெனத் தன் செல்லை எடுத்தாள். ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவளைப் போல் கல்யாணத்தின் நம்பரை ஒற்றினாள். "நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் உபயோகத்தில் உள்ளது... சிறிது நேரம் கழித்து மீண்டும் டயல் செய்யவும்..." தேன்மொழி எரிச்சலானாள். அதே நேரத்தில் அவள் செல் ஒலித்தது. கல்யாணம் அவளை அழைத்துக்கொண்டிருந்தான். "யாருடீ...?" "அவனேதான்டீ... கல்யாணம்தான்..." தேன்மொழி மைதிலியின் மடியிலிருந்து விருட்டென எழுந்தாள். "நான் சொல்றதை கேக்கறியா?" மைதிலி அவள் தோளில் தன் கையைப் போட்டுக்கொண்டாள். "ம்ம்ம்... சொல்லுடீ.." "எப்டி இருக்கீங்க? சென்னைக்கு எப்ப வர்றீங்க? இப்படி பொதுவா பட்டும் படாம, ஒரு ரெண்டு நிமிஷம் அவன்கிட்ட இன்னைக்கு நீ பேசிடு... அவன் என்ன சொல்றாங்கறதை குறுக்கேப் பேசாம கேட்டுக்கோ. அதுக்கு அப்புறம் நிதானமா என்னச் செய்யணுங்கறதை யோசிச்சு செய்." தேன்மொழியை அறைக்குள் தனியாக விட்டுவிட்டு பால்கனியை நோக்கி மெல்ல நடந்தாள் மைதிலி. பால்கனியின் கைப்பிடியில் சாய்ந்தவாறு வானத்தைப் பார்த்தாள். வானம் இருண்டு கிடந்தது.

"ஹலோ... தேன்மொழி..." "யெஸ்..." "தேன்மொழி... நான் சொல்றதை கேளுங்க... லைனை மட்டும் கட் பண்ணிடாதீங்க ப்ளீஸ்... உங்கக்கிட்ட. ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். இந்த விஷயத்தை கேட்டதுக்கு அப்புறம் உங்களுக்கு எப்ப என்கிட்ட பேசணும்ன்னு தோணுதோ அப்ப நீங்க எனக்கு கால் பண்ணுங்க. அதுவரைக்கும் நான் பொறுமையா காத்துக்கிட்டு இருப்பேன்..." கல்யாணம் அவசர அவசரமாக பேசினான். "அயாம் சாரி மிஸ்டர் கல்யாணம். காலையில நான் ஆஃபிசுக்குள்ளவே நுழையமுடியாத அளவுக்கு ஒரு இக்கட்டான நிலைமையில இருந்தேன்..." "யெஸ்... ஐ நோ... ஐ நோ..." கல்யாணம் மெலிதாக பேசினான். "என்னது... உங்களுக்குத் தெரியுமா? என்ன சொல்றீங்க?" "உங்க பயோ மெட்ரிக் கார்டு உங்கக்கிட்டே இல்லே... அதானே பிரச்சனை?" "ஹேய்... ஹவ் டூ யூ நோ திஸ்?" திடுக்கிட்டுப்போனாள் அவள். "எல்லாத்துக்கும் மேல உங்க பர்ஸை காணோம்ன்னு நீங்க ரொம்ப டென்ஷனா இருந்தீங்க... இதுவும் எனக்குத் தெரியும்." கல்யாயாணம் மெலிதாக சிரித்தான். "கல்யாணம்... என் பர்ஸ் தொலைஞ்சு போயிடிச்சின்னு உங்களுக்கு தெரியுமா? அதனால நான் எரிச்சல்லே இருந்தேன்ன்னும் உங்களுக்கு எப்படித் தெரியும்?" தேன்மொழி வியப்பின் உச்சத்துக்கே போயிருந்தாள். "தேங்க்ஸ்ங்க..." அவள் கேட்டக் கேள்விக்கு பதில் சொல்லாமல், கல்யாணம் திரும்பவும் சிரித்தான். சிரிப்பில் இனிமை கூடியிருந்தது. "எதுக்கு தேங்க்ஸ்...? எதுக்கு இந்த சிரிப்பு? நான் டென்ஷனா இருந்ததுலே உங்களுக்கு சந்தோஷமா?" "சே...சே... நீங்க வீணா டென்ஷன் ஆகக்கூடாதேங்கற அக்கறையிலதான் மூணு தரம் உங்களுக்கு விடாம கால் பண்ணேன்.. உங்களுக்குத்தான் என்னைக் கண்டாலே பிடிக்கலேயே? அதான் காலை கட் பண்ணிட்டீங்க... அதானே உண்மை?" "அயாம் சாரி கல்யாணம்... நீங்க நினைக்கற மாதிரி இல்லே... எதுக்கு தேங்க்ஸ்ன்னு கேட்டேன்...? அதுக்கு பதில் சொல்லலே நீ?" "தேன்மொழி... மிஸ்டர் கல்யாணம்ன்னு பேசஆரம்பிச்சீங்க... அப்புறம் கல்யாணத்துக்கு மாறினீங்க... முதல்லே நீங்க வாங்கன்னு பேசினீங்க... கடைசியா நீன்னு கூப்பிட்டீங்க.. கொஞ்சம் கொஞ்சமா என் கிட்ட நெருங்கி வரீங்களே.. அதுக்குத்தான் தேங்க்ஸ் சொன்னேன்..." "கல்யாணம்... நிஜமாவே நான் இன்னைக்கு ஹோல் டே பிஸியா இருந்தேன்... ப்ளீஸ் டிரை டு அன்டர்ஸ்டேண்ட் மீ..." "இட்ஸ் ஆல்ரைட்... மொதல்லே நான் சொல்றதை கேளுங்க... உங்க பர்ஸ் என்கிட்டே இருக்கு... உங்க கார்ட்ஸ் எல்லாம் அதுல பத்திரமா இருக்கு..." கல்யாணத்துக்கு மெலிதாக மூச்சு வாங்கியது. "ஓ... மை காட்.. என் பர்ஸ் உங்ககிட்ட இருக்கா...? ஹவ் இட் ஈஸ் பாஸிபிள்..." தேன்மொழி தன் நெஞ்சில் வலது கையை வைத்துக்கொண்டு நீண்ட பெருமூச்சொன்றை விட்டாள். "யெஸ்... உங்க பர்ஸ் என் கைக்கு வந்ததும், அந்த விஷயத்தை சொல்றதுக்காக உங்களுக்கு ரெண்டு மூணு தரம் போன் பண்ணேன்... வாட் எவர் ரீசன் இட் குட் பீ... என் காலை நீங்க கட் பண்ணிட்டீங்க..." "தப்பா நினைக்காதீங்க கல்யாணம்... ஐ வுட் எக்ஸ்ப்ளேய்ன் டு யூ...?" பர்ஸ் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் மகிழ்ச்சியாக சிரித்த தேன்மொழியின் குரலைக்கேட்டு மைதிலி அறைக்குள் வந்தாள். என்னடீ...? கண்களால் வினவினாள். "மைதிலீ.. என் பர்ஸ் கிடைச்சிட்டுதுடீ... கல்யாணம் சார் கிட்ட இருக்காம்..." "என்னங்க நீங்க...? நெருங்கி வந்த நீங்க எதுக்கு இப்ப திரும்பவும் சார்ன்னு சொல்லி திரும்பவும் தூரமா போறீங்க... என்னை அன்னியமாக்கதீங்க..." கல்யாணம் வெம்பினான். "கல்யாணம்.... பர்ஸ்லே என் பேன் கார்டும் இருக்கு இல்லே?" "எல்லாமே இருக்குங்க... அப்புறம் வேற என்னன்னமோ லேடீஸ் மேட்டர்ல்லாமும் இருக்கு... எதையும் நான் தொடலீங்க... உங்க ஹேங்கியை மட்டும் அழுக்கா இருக்கேன்னு தொவைச்சு காய வெச்சிருக்கேன்..." "கல்யாணம்... எதுக்கு ஒரு பொண்ணோட பர்ஸை தொறந்தீங்க... என் கர்சீஃபை நீங்க ஏன் தொவைக்கணும்?" தேன்மொழி பொரிய ஆரம்பித்தாள். "கூல் டவுன்... கூல் டவுன்.. அதை திறந்து பாக்கவேதான் பேன் கார்டு இருக்கான்னு நீங்க கேட்டக்கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடிஞ்சுது.. அப்புறம் உங்களை மாதிரி ஒரு அழகான பொண்ணோட பர்ஸை எப்பவும் நான் தொறந்து பாத்தது இல்லீங்க.. ரொம்ப ஆசையா இருந்திச்சி.. நீங்க நம்ம ப்ரெண்டுதானேன்னு திறந்துட்டேன்.. சாரிங்க.. ஆனா ஒண்ணுங்க..." கல்யாணத்தின் குரலில் இருந்த மென்மையில் தேன்மொழியின் உடல் இலேசாக சிலிர்த்தது. "என்ன ஆனா ஒண்ணு...?" முனகினாள் தேன்மொழி. "நீங்க என்னை கோச்சிக்கும் போது உங்க குரல் ரொம்பவே மெலோடியஸா இருந்திச்சிங்க...." கல்யாணம், தேன்மொழியின் தலையில் ஐஸை அள்ளி அள்ளி வைத்தான். "கல்யாணம்... ரொம்ப வழியவேண்டாம்... ஆமாம் என் பர்ஸ் உங்கக்கிட்ட எப்படீ வந்திச்சி... அதை சொல்லுங்க முதல்லே..." "நீங்கதான் ஒரு கெஸ் அடிங்களேன்... உங்க பர்ஸ் என் கையில எப்படி வந்திருக்கும்ன்னு?" கல்யாணம் அவளுடன் பேசும் நேரத்தை நீட்டிக்க விரும்பினான். தன் மனதுக்கு பிடித்தவளின் குரலை, கொஞ்சி கொஞ்சி பேசும் அவள் குரலை, அவள் மூடில் இருக்கும் போது, இன்னும் சிறிது நேரம் கேட்டுக்கொண்டிருக்க அவன் விரும்பினான். "ப்ச்ச்... விளையாடாதீங்க... என் வீட்டுக்கு என்னைப் பாக்க வந்தப்ப, எடுத்து வெச்சிக்கிட்டீங்களா?" தேன்மொழியின் குரல் சந்தேகத்துடன் ஒலித்தது. "தேன்மொழி...பாத்தீங்களா... பாத்தீங்களா என்னை திருடன்னு சொல்லிட்டீங்களே...? என் முழி கொஞ்சம் முட்டையா திருட்டு முழியாத்தான் இருக்கும்... ஆனா நான் திருடன் இல்லீங்க.. உங்க ஃபிரண்டுங்க... நிஜத்தை சொன்னா நீங்கதான் பெரிய திருடி?" கல்யாணம் ஹோவென சிரித்தான். "என்ன உளர்றீங்க...?" "நான் உங்க பர்ஸை திருடலீங்க... அதுவா என்கிட்டே வந்திச்சி... ஆனா நீங்கதான் என் இதயத்தை திருடிட்டீங்க..." காதல் போதையில் சகட்டு மேனிக்கு உளற ஆரம்பித்தான் கல்யாணம். "கல்யாணம்... நீங்க வழிஞ்சதெல்லாம் போதும்... இப்ப மேட்டருக்கு வாங்க... என் பர்ஸ் உங்களுக்கு எப்படி கிடைச்சுது?" "ஊருக்கு கிளம்பற அவசரத்துல நீங்க உங்க பர்ஸை உங்க வீட்டுலேயே வெச்சிட்டு வந்திட்டீங்களாம்... உங்கண்ணன் இன்னைக்கு மார்னிங் எங்க வீட்டுக்கு போய் இருக்கார். அதுக்குள்ள நான் திருச்சிக்கு பஸ்லே கிளம்பிட்டேன்." "என் கவனக்குறைவால எல்லாரையும் தொந்தரவு பண்ணிட்டேன் நான்..." தேன்மொழியின் குரலில் சுயபரிதாபம் அளவுக்கு மேல் ஒலித்தது. "அப்புறம் அவரு தன்னோட பைக்லேயே திருச்சிக்கு வந்து, ட்ரெயின்ல என்னைப்பாத்து பர்ஸைக் குடுத்தார்... இது நிஜமாவே உங்களுக்குத் தெரியாதா? உங்க வீட்டுலேருந்து கால் எதுவும் வரலையா...?" "பாத்தீங்களா.. என்னை நீங்க சந்தேகப்படறீங்களே..? இவ்வளவு நேரம் நான் பொய்யா பேசினேன்...?" அவள் குரல் இலேசாக சூடானது. "எதுக்கெடுத்தாலும் ஏன் கோச்சிக்கறீங்க?" கல்யாணம் குழைந்தான். "கால் வந்திச்சிங்க.. சொன்னா நம்பமாட்டீங்க... உங்க காலை மட்டுமில்லே.. யார் காலையுமே நான் இன்னைக்கு அட்டண்ட் பண்ணலே... மீட்டிங்லே என் செல்லை ஸ்விட்ச் ஆஃப் பண்ணேன்.. அவ்வளவுதான்... ஃபீல்டுல வேலை... வெளியேப் போகவேண்டியதா போச்சு.. செல்லை கவனமே இல்லாம, என் டெஸ்க்லே போட்டுட்டு போயிட்டேன்... ஈவினிங் வீட்டுக்கு கிளம்பும் போதுதான் எடுத்து ஆன் பண்னேன்." "உங்களை நான் தொந்தரவு பண்ணுவேன்னு நினைச்சி செல்லை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டீங்களா? அதானே உண்மை?" "ச்ச்சே... ச்ச்சே... அப்டீல்லாம் இல்லேங்க..." தேன்மொழியின் குரல் இப்போது மிக மிக நயமாக வந்தது. "சரி... தேன்மொழி உங்க அட்ரஸை சொல்லுங்க... உங்க பர்ஸை நான் கொண்டுவந்து குடுக்கறேன்..." "கல்யாணம்... ரொம்ப தேங்க்ஸ் கல்யாணம்... காலையிலே உங்களுக்கு கஷ்டமா இருக்காதா? நாளைக்கு நீங்களும் டூயுட்டீலே ஜாய்ன் பண்ணணும் இல்லையா?" தேன்மொழியின் முகத்தில் ஒரு நிம்மதி வந்திருந்தது. காலையில் இருந்து குரலில் இருந்த பதட்டமும், எரிச்சலும் குறைந்து போயிருந்தது. அவளுக்கே இது ஆச்சரியமாக இருந்தது. "தேன்மொழி... நீங்க கோச்சிக்கலேன்னா ஒண்ணு சொல்லட்டும்மா? கல்யாணத்தின் குரல் மிகவும் குழைந்து வந்தது. "சொல்லுங்க கல்யாணம்..." அவள் இதயம் இலேசாக படபடத்தது. கல்யாணம் என்ன சொல்லப்போகிறான் என்பதை அவள் யூகித்து விட்டிருந்தாள். தேன்மொழியின் குரலில் தேன் ஒழுகிக் கொண்டிருந்தது. "ஐ லவ் யூ தேன்மொழி.. உங்களை உண்மையா லவ் பண்றவன் இதைக்கூடவா உங்களுக்காக செய்ய மாட்டான்? உங்களுக்காக நான் எதையும் செய்யத் தயாரா இருக்கேன்..." கல்யாணத்தின் குரலில் காதல் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. "சும்மா கதை விடாதீங்க... உங்க பிட்டைல்லாம் வேற எவகிட்டவாவது போடுங்க..." தேன்மொழியும் கடைசியாக களுக்கென இன்பமாக சிரித்தாள். ஓரக்கண்ணால் மைதிலியின் கட்டிலைப் பார்த்தாள். அவள் கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தாள். சன்னமாக குறட்டை விட்டுக்கொண்டிருந்தவளின் சுவாசம் சீராக ஓடிக்கொண்டிருந்தது. அறை விளக்கை அணைத்துவிட்டு தேன்மொழி பால்கனியை நோக்கி நடந்தாள். இருட்டடித்திருந்த பால்கனியில் கிடந்த சேரில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டாள். இரு கால்களையும் தூக்கி பால்கனி க்ரில்லின் மேல் வசதியாக வைத்துக்கொண்டாள். "தேன்மொழி... பிட்டெல்லாம் போடலீங்க.. சத்தியமா சொல்றேன். ஐ லவ் யூ... ஐ லவ் யூ வெரி மச்..." காதலிக்கறவன், தான் காதலிக்கறவகிட்ட அஞ்சு நிமிஷத்துக்கு ஒருதரம் ஐ லவ் யூன்னு சொல்லணும். தன் தங்கை சொன்னது அவனுக்கு நினைவுக்கு வந்தது. "மிஸ்டர்... நீங்க கல்யாணசுந்தரம்தானே பேசறீங்க...?"

"ஆமாம்... அதுல திடீர்ன்னு என்ன சந்தேகம் உங்களுக்கு?" கேலியாக வந்தது அவன் குரல். "வி. கல்யாணசுந்தரம்தானே பேசறீங்க..." "யெஸ்.. வேலுசாமி கல்யாணசுந்தரம்தான் பேசறேன்..." மறுபுறத்திலிருந்து பெருமிதமாக வந்தது கல்யாணத்தின் குரல். "அப்போ எல்லாத்தையும் மறந்துடுன்னு மெசேஜ் அனுப்பின லூசு கல்யாணசுந்தரம் யாரு?" தேன்மொழி களுக்கென மீண்டும் சிரித்தாள். கல்யாணத்தின் காதில் தேன் வந்து பாய்ந்தது போலிருந்தது. "தேனூ... ஐ லவ் யூ... நான் ஒரு லூசுதான்... உன்னை நான் நேர்ல பாக்கும் போது... இந்த லூசு ஏன் அப்படி ஒரு மேசேஜ் அனுப்பினேன்னு சொல்றேன்..." கல்யாணம் வானத்தில் பறந்துகொண்டிருந்தான். "ஏய்... லூசு.. என் பேரு தேன்மொழி... என்னை நீங்க தேன்மொழின்னுதான் கூப்பிடணும்... நாளைக்கு ஈவினிங் ஆறுமணிக்கு என் கம்பெனிக்கு வெளியிலே இருக்கற பஸ்ஸ்டாப்புலே நிக்கறேன்... உங்களால அங்கே வரமுடியுமா...?" தேன்மொழி குரலில் இனிப்பிருந்தது. தன் குரலில் கல்யாணத்தின் பால் அவள் அறியாத புதியதொரு உணர்வும் வந்திருப்பதாக அவள் நினைத்தாள். அந்த உணர்வு என்னவென்றுதான் அவளுக்குப் புரியவில்லை. "குட் நைட் மிஸ்டர் கல்யாணம்..." "குட் நைட்... பிளீஸ் தேன்மொழி... என்னை கல்யாணம்ன்னே கூப்பிடுங்களேன்.. நடு நடுவுலே அந்த மிஸ்டர் தேவைதானா?" "ம்ம்ம். குட் நைட் கல்யாணம்..." "குட் நைட் டியர்..." நீண்டப்பெருமூச்சுடன் தன் படுக்கையில் விழுந்தாள் தேன்மொழி. விழுந்த இரண்டு நிமிடங்களில் அசந்து தூங்க ஆரம்பித்தாள். அன்றிரவு கனவில் கல்யாணம் வரவில்லை.


இத்துடன் இந்த கதை இங்கே முடிகிறது. வேறொரு நல்ல பதிவாக தொடர முயற்சிக்கிறேன்.

1 comment:

  1. Bro idhoda continue enga kedaikum. Send full story to my mail id
    hdsuntv @ gmail.com

    ReplyDelete