Thursday, 28 May 2009 ... Earlier during the day
Joshua's Residence, Harlem, New York
வியாழன், மே 28 2009 ... காலையில் இருந்து மாலை வரை
ஜாஷ்வாவின் இல்லம், ஹார்லம், நியூ யார்க்
அன்று காலையில் இருந்து சஞ்சனா மனதுக்குள் அன்று இரவு ஹாஃப்மன் மற்றும் ஆண்டர்ஸனுடன் நடக்கப் போகும் மீட்டிங்கைப் பற்றி பல்வேறு கோணத்தில் அலசினாள். ஜாஷ்வா அலுவலகத்துக்கு சென்ற பிறகு சில முன்னேற்பாடுகளை செய்யத் தொடங்கினாள்.
சில வருடங்களுக்கு முன்னர் ஜாஷ்வாவை மணமுடித்ததும் அமெரிக்க பிரஜையாவதற்கு சஞ்சனா விண்ணப்பித்து இருந்தாள். அத்தகைய விண்ணப்பங்கள் பல் வேறு துறைகளுக்கும் செல்லும். எஃப்.பி.ஐயின் ஒப்புதலுக்காக சென்ற விண்ணப்பம் சைமண்ட் வில்லியர்ஸின் கைக்கு சென்றது. சிறு தேடலுக்கு பிறகு சஞ்சனாவின் வரலாற்றை அவர் அறிந்தார். முதலில் "Not Approved" என்ற முத்திரையை பதிக்க எண்ணியவர் அவளது புகைப் படத்தை மறுபடி ஒரு முறை பார்த்து யார் அவளுக்கு ஸ்பான்ஸர் செய்வது என்று பார்த்தார். ஜாஷ்வாவின் வரலாற்றை அலசினார். மிகவும் சுவாரஸ்ஸியம் அடைந்த சைமண்ட் வில்லியர்ஸ் அடுத்த நாள் சஞ்சனாவை நேரில் வரச் சொன்னார். அவளுடன் சில மணி நேரம் பேசி அவளுக்கு நடந்தவற்றை பற்றி அறிந்தார்.
சஞ்சனா, "ப்ளீஸ் மிஸ்டர் வில்லியர்ஸ்? .. என் விண்ணப்பத்துக்கு ஒப்புதல் கொடுப்பீங்களா? இதை நான் எனக்காக மட்டும் கேட்கலை என் ஜாஷ்வாவுக்காகவும் கேட்கறேன்"
சைமண்ட் வில்லியர்ஸ், "I will do more than that! எனக்கும் ஒரு மகள் இருக்கா. உன்னைப் பார்த்தா என் பொண்ணு மாதிரி இருக்கு ... I wish you all the best"
சஞ்சனா, "I thank you so much Sir"
சைமண்ட் வில்லியர்ஸ், "சஞ்சனா, இது என் சொந்த மொபைல் நம்பர். உனக்கு என்ன உதவி வேணும்னாலும் நீ அதில் என்னை அழைக்கலாம். நான் நேத்து உன்னை கூப்பிட்டது என் அஃபீஷியல் மொபைல் நம்பர். அதில் வரும் கால் எல்லாம் லாக் ஆகும். அதனால் தான் இந்த நம்பரை உனக்கு கொடுக்கறேன். ஆனா ஒண்ணு. சில சமயம் நான் அதை ஆஃபீஸுக்கு எடுத்துட்டு வரமாட்டேன். அந்த சமயத்தில் அவசரமா எதுக்காவது கூப்பிடணும்ன்னா மட்டும் என் அஃபீஷியல் மொபைலில் கூப்பிடு"
சஞ்சனா அந்த நம்பரை தன் கைபேசியில் ஸ்டோர் செய்து இருந்தாள்.
சைமண்ட் வில்லியர்ஸ்ஸை அவரது சொந்த கைபேசியில் அழைத்தாள். பதில் ஏதும் வரவில்லை. அவரது அரசாங்க கைபேசியில் அழைத்தாள். அது அணைக்கப் பட்டு இருந்தது. அன்று முழுவதும் அவருக்கு கோர்ட்டில் இருக்க வேண்டிய வேலை. ஆகவே தன் சொந்தக் கைபேசியை எடுத்து சென்று இருக்கவில்லை. கோர்ட்ட வளாகத்தில் இருக்கும் போது கைபேசியை அணைத்து வைப்பது அவரது வழக்கம். வந்தனா மேலும் சில முறை அழைத்தும் பதில் இல்லை. பிறகு அவர் உதவியை நாடுவதை மறு பரிசீலனை செய்து அந்த எண்ணத்தை கைவிட்டாள்.
பிறகு தங்களுடன் இரவு காரோட்டி வரப் போகும் க்ரிஸ்ஸை அழைத்து பேசினாள். தனக்கு இன்னும் ஒரு துப்பாக்கி வேண்டும் என அவனிடம் ஏற்பாடு செய்யச் சொன்னாள். அவனையும் முன்னேற்பாடாக ஒரு துப்பாக்கியை கொண்டு வரச் சொன்னாள்.hursday, 28 May 2009 10:00 PM US-EST
Basement of xyz Bank (where Joshua works)
வியாழன், மே 28 2009 கிழக்கு அமெரிக்க நேரம் இரவு 10:00
ஜாஷ்வா பணிபுரியும் வங்கிக் கட்டிடத்தின் கீழ்த்தளம்
ஜாஷ்வாவையும் சஞ்சனாவையும் இறக்கி விட்ட பிறகு க்ரிஸ் அவர்கள் நின்று இருந்தற்கு வலது பக்கம் சற்று பின்னால் தள்ளி காரை பார்க் செய்து காரில் அமர்ந்து இருந்தான். சஞ்சனா சொல்லி இருந்த படி அவள் முதுகும் பின்னால் கட்டி இருந்த அவளது கைகளும் அவன் இருந்த இடத்தில் இருந்து நன்றாக பார்க்க முடிந்தது.
ஹாஃப்மன், "ஹல்லோ ஜாஷ்வா, ஹல்லோ சஞ்சனா. மீட் ஆண்டர்ஸன். நீ இதுக்கு முன்னால் ஆண்டஸனை மீட் பண்ணினது இல்லைன்னு நினைக்கறேன்"
சஞ்சனா, "ஹல்லோ மிஸ்டர் ஆண்டர்ஸன்"
ஜாஷ்வா, "என்ன ஹாஃப்மன்? எதுக்கு இந்த மீட்டிங்க்?"
ஹாஃப்மன், "ஷக்தியும் நித்தினும் எங்கே?"
ஜாஷ்வா, "வந்துட்டு இருக்காங்க ... "
ஹாஃப்மன், "சரி, அவங்களும் வரட்டும் எல்லாம் இருக்கும் போதே சொல்றேன்"
ஜாஷ்வா, "என்ன புதிர் போடறே? இதுவரைக்கும் எல்லா டீலிங்க்லயும் நான்தான் இன்வால்வ் ஆகியிருக்கேன். இப்ப என்ன புதுசா?"
ஹாஃப்மன், "இப்ப டீலிங்க் எதுவும் இல்லை. அதான் ஆபரேஷனை வைண்ட் அப் பண்ணிட்டமே? நான் மீட்டிங்க் கூப்பிட்டது வேற ஒரு விஷயத்துக்காக"
ஜாஷ்வா, "சரி, ஆண்டர்ஸன், நான் உன் கிட்ட ஒண்ணு கேட்கணும். அந்த ரிவர்ஸ் ட்ரான்ஸ்ஃபர் மூணும் டெரரிஸ்ட் கும்பலுக்குத்தான் பண்ணினோம்ன்னு உனக்கு முதல்லயே தெரியுமா?"
ஆண்டர்ஸன், "தெரியாது. தெரிஞ்சு இருந்தா நான் அதுக்கு ஒத்துட்டு இருக்க மாட்டேன். முதல்ல நீயும் ஹஃப்மனும் கொடுத்த ப்ரொபோசலை கொடுக்க நான் ட்ரக் கார்டல்காரங்களை நேரடியா அணுகினேன். முதல் ஒண்ணு ரெண்டு ட்ரான்ஸ்ஃபர் செய்யும் போது அவங்க கூட டைரக்டா டீலிங்க் வெச்சு இருந்தேன். சில மாதங்களுக்கு அப்பறம் இங்கே நியூ யார்க்கில் இருக்கும் அவங்களோட பிரதிநிதி ஒருத்தன்கூடத்தான் என் எல்லா டீலிங்கும் நடந்தது. அவன்தான் இந்த ரிவர்ஸ் ட்ரான்ஸர்களையும் செய்யச் சொன்னான்"
ஜாஷ்வா, "இந்த நியூஸ் வெளியானப்பறம் அவனைப் பாத்து நீ கேட்கலையா?"
ஆண்டர்ஸன், "ஒரு வாரமா நானும் ட்ரை பண்ணிட்டு இருக்கேன். அவன் ஃபோன் நாட் ரீச்சபுள்ன்னு வருது. ஹாஃப்மன், உனக்கும் அவனை தெரியுமே. அவனைப் பத்தின நியூஸ் எதாவது கிடைச்சுதா?"
ஹாஃப்மன், "இல்லை. ஜாஷ்வா, எங்கே சக்தியும் நித்தினும் இன்னும் காணோம்?"
ஜாஷ்வா, "இல்லை ஹாஃப்மன். நீ எதுக்கு வ்ரச்சொன்னேன்னு சொல்லு. நான் அவங்களை வரச் சொல்றேன்"
ஹாஃப்மன், "ஓ, அதான் உங்க ப்ளானா? எனிவே என்னால் அதுக்கு பதில் சொல்ல முடியாது. ஆனா ஆண்டர்ஸன் நீ கேட்டியே அந்த ட்ரக் கார்டல்காரங்களோட நியூ யார்க் பிரதிநிதி? அவனைப் பத்தி சொல்ல முடியும். அவன் இந்நேரம் ஹட்ஸன் நதியில் இருக்கும் மீன்களுக்கு இரையாகி இருப்பான்"ஹாஃப்மன் சொல்லி முடித்த தருணத்தில் ஒரு கரு நீல நிற வேன் வேகமாக வந்து அவர்கள் நின்ற இடத்துக்கு அருகே நின்றது. அதில் இருந்து அரபு நாட்டவன் ஒருவனும் ஏறக்குறைய இந்தியச் சாயலுடன் ஒரு இளைஞனும் நடுத்தர வயதினன் ஒருவனும் இறங்கினர். நான்காவதாக ஸான்ட்ரா ஆஸ்டின் இறங்கினாள். அவர்களை இறக்கி விட்ட வேன் பின்னோக்கிச் சென்று அவர்களை நோக்கி இருந்தபடி சற்று தூரத்தில் இருந்த சுவற்றருகே நின்றது.
அரபு நாட்டவன் மட்டும் நின்று இருந்தவர்கள் அருகே வர மற்ற மூவரும் சற்று பின் தங்கி நின்றனர்.
ஹாஃப்மன், "ஜாஷ்வா, மீட் மிஸ்டர் மக்ஸூத். அந்த மூணு ட்ரான்ஸ்ஃபரும் நீங்க இவருக்காகத்தான் செஞ்சீங்க"
மக்ஸூத், "சோ, மத்த ரெண்டு பேரும் வரலையா?"
ஹாஃப்மன், "ஜாஷ்வா நாம் எதுக்கு வரச்சொன்னோம்ன்னு சொன்னாத்தான் அவங்களை வரவைப்பானாம்"
மக்ஸூத், "ம்ம்ம் ... பரவால்லை. அவங்க வரத்தேவை இல்லை நான் ஜாஷ்வாவிடம் மட்டும் பேசறேன்"
ஜாஷ்வா, "எதுக்கு எங்களை வரச்சொன்னே? உனக்கு என்ன வேணும்?"
மக்ஸூத், "மாங்க்ஸ் பாட் நெட்"
மௌனம் காத்த ஜாஷ்வா சஞ்சனா இருவரையும் பார்த்து மக்ஸூத், "என்ன ரொம்ப குழப்பமா இருக்கா? விளக்கமா சொல்றேன். உங்க மாங்க்ஸ் பாட் நெட்டைப் பத்தி கேள்விப் பட்டதும் மேலிடத்தில் இருந்து இதை எப்படியாவது கைப் பற்றணும்ன்னு முடிவு எடுக்கப் பட்டது."
பிறகு பின்னால் நின்ற நடுத்தர வயதினனைக் காட்டி, "இவரோட அரசாங்கத்துக்கும், .... அரசாங்கம்ன்னு சொல்ல முடியாது. அரசாங்கத்தில் ஒரு பகுதியும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் அதே விருப்பம். எங்க மேலிடத்துடன் பேசினதுக்கு அப்பறம் மாங்க்ச் பாட் நெட்டை நாங்க ரெண்டு பேரும் பகிர்ந்துக்கறதா முடிவெடுத்தோம். எஃப்.பி.ஐயில் இருக்கும் ஸான்ட்ராவை நாங்க ரெக்ரூட் செஞ்சோம். என்ன ஒரு தமாஷ் பாத்தியா? இந்தியாவே எங்களுக்கு உதவத் தொடங்குச்சு. இந்தியாவின் R&AWவில் நடப்பது எல்லாம் எங்களுக்கு ஸான்ட்ரா மூலம் தெரிய வந்தது. இதுக்கு நடுவில் ஒரு பாட் நெட் மூலம் பணம் ட்ரான்ஸ்ஃபர் பண்ண முடியுமாங்கற கேள்வியை ஹாஃப்மன் எங்களுக்கு தெரிஞ்ச ஒருத்தர்கிட்ட விசாரிச்சார். இதில் எதோ மர்மம் இருக்குன்னு நான் ஹாஃப்மனை அணுகினேன். ஹாஃப்மன் உங்க ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷனைப் பத்தி விவரிச்சார். எப்படியும் உங்களுக்கு கொடுக்கறதுக்காக எங்களுக்கு பணம் தேவைப் பட்டது. அந்த பணத்தை உங்க மாங்க்ஸ் பாட் நெட் மூலமாவே ட்ரான்ஸர் செய்ய வெச்சு எப்படி அந்த ஆபரேஷனை செய்யறீங்கன்னு தெரிஞ்சுகிட்டோம். இப்ப விலை பேச வந்து இருக்கேன்"
ஜாஷ்வா, "மாங்க்ஸ் பாட் நெட் என்னோடது இல்லை. நாங்க புறப்படறோம்"
மக்ஸூத், "உன்னோட இடத்தில் நான் இருந்தா நான் அப்படி புறப்பட்டுப் போக மாட்டேன். உனக்கு ரெண்டு பக்கமும் தூரத்தில் நின்னிட்டு இருக்கும் வேன்களைப் பார்"
இருபுறமும் சற்று தூரத்தில் அவர்களை நோக்கி நின்று கொண்டு இருந்த வேன்களின் மேற்கூரையில் கையில் தொலைநோக்கி அமைப்பு கொண்ட ஸ்னைப்பர் ரைஃபில் எந்தியவாறு இருவர் அமர்ந்து இருந்தனர்.
சஞ்சனா பின்புறம் கட்டி இருந்த இரு கை விரல்களையும் துப்பாக்கி போல் அமைத்து தனது இருபுறத்தையும் நோக்கி சைகை காட்ட அதை காரில் இருந்த க்ரிஸ் கவனித்தான்.
சஞ்சனாவுக்கு வலப்புறம் ரைஃபில் ஏந்தி வேனில் மேல் அமர்ந்தவனை அவன் அதற்கு முன்னமே பார்த்து இருந்தான். இடப்புறம் இருந்தவனை எதிரில் இருந்த தூண் மறைத்து இருந்ததெனிலும், சஞ்சனாவின் சைகையில் இருந்து யூகித்தான். தன் துப்பாக்கியை டாஷ் போர்டில் இருந்து எடுத்துக் கொண்டான். வலப்புறம் ரைஃபில் ஏந்தி இருந்தவனையும் சஞ்சனாவுக்கு எதிரில் நின்று இருந்தவர்களையும் அவனால் குறி பார்க்க முடிந்தது.
சில கணங்கள் மலைத்து நின்றாலும் சுதாரித்துக் கொண்ட ஜாஷ்வா, "மாங்க்ஸ் பாட் நெட் என்னோடது இல்லை என்பது உண்மை. நீ எங்களை துன்புறுத்தினால் அது உங்களுக்கு கிடைக்கப் போறது இல்லை. அவங்களுக்கு நான் ஒரு பிரதிநிதி அவ்வளவுதான். என்னைப் பத்தி அவங்களுக்கு ஒரு கவலையும் இல்லை"
பிறகு பின்னால் நின்று கொண்டு இருந்த இந்தியச் சாயல் கொண்ட இளைஞனிடம் மக்ஸூத் "என்ன பண்ணலாம் ஷொயேப்?" என்று கேட்டான்ஷோயேப், "ஹாய், ஐ அம் ஷொயேப் அஹ்மத். நானும் ஒரு ஹாக்கர்தான். மாங்க்ஸ் பாட் நெட்டை நீ உருவாக்கலைன்னு தெரியும். சக்திவேல், நித்தின் இவங்க ரெண்டு பேர்தான் அதை உருவாக்கி இருப்பாங்கன்னும் தெரியும். கடந்த ஒரு வருஷமா நீ அவங்களுக்கு ஒரு மென்டரா இருந்துட்டு இருக்கே. இப்போ சர்வர் இல்லாம இயங்கற மாதிரி செஞ்சதுக்கு அப்பறம் அதுக்கு ஆணை பிறப்பிக்க ஒரு மென் பொருள் இருக்கும். நிச்சயம் அந்த மென்பொருள் உன்னிடம் இருக்கும்ன்னு நினைக்கறேன்"
ஜாஷ்வா, "மிஸ்டர் மக்ஸூத், நான் ஹார்லத்தில் பிறந்து வளர்ந்தவன். நல்ல சந்தர்ப்பத்தை எப்படி உபயோகிச்சுக்கணுன்னு எனக்கு நல்லா தெரியும். என் கிட்ட அந்த மென் பொருள் இருந்தா நிச்சயம் உங்ககிட்ட விலை பேச ஆரம்பிச்சு இருப்பேன். உங்களுக்காக நான் அவங்க கிட்ட பேசிட்டு சொல்றேன். ஆனா அவங்க ஒத்துக்குவாங்களான்னு தெரியலை"
ஷொயேப், "யூ ஸீ ஜாஷ்வா, நீங்க அந்த ரிவர்ஸ் ட்ரான்ஸ்ஃபர் செஞ்சபோது எதுக்கு எந்த கம்பெனி மூலம் செய்யணும்ன்னு சொன்னோம் தெரியுமா? மாங்க்ஸ் பாட் நெட் எப்படி இயங்குதுன்னு உன்னிப்பா கவனிக்கறதுக்கு. அப்படி கவனிச்ச போது நீங்க ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷனுக்கு உபயோகிச்ச அந்த கம்பெனியின் கணிணியில் நடந்த ஒவ்வொண்ணையும் விரிவா இவெண்ட் ட்ரேஸ் (Event Trace) ரெக்கார்ட் செஞ்சு வெச்சு இருக்கேன். அதை எஃப்.பி.ஐக்கு அனுப்பினா போதும் அவங்க ரெண்டு பேரையும் உள்ளே தள்ளிடுவாங்க. ஸோ, எங்களோட ஒத்துழைப்பதைத் தவிர அவங்களுக்கு வேற வழி இல்லை"
ஜாஷ்வா, "அதே சமயத்தில் எங்கே இருந்து எல்லாம் பணம் வந்து இருக்குன்னு எஃப்.பி.ஐக்கு தெரிய வாய்ப்பு இருக்கு இல்லையா?"
மக்ஸூத், "எல்லாம் கேஷ் டெபாசிட்ஸ் ... உங்க ஆபரேஷனின் விதி முறைகள் உனக்கே மறந்துடுச்சா?"
ஜாஷ்வாவின் முகத்தில் சிறு பிரகாசம் தோன்றி மறைந்தது. ஹாஃப்மன் சற்று துணுக்குற்று மக்ஸூத்தைப் பார்த்தான்.
ஜாஷ்வா, "இல்லை மிஸ்டர் மக்ஸூத். ரெண்டு டெபாசிட்ஸ் நேரடியா ஒரு வங்கி கணக்கில் இருந்து வந்தது .. அதுவும் பாகிஸ்தானில் இருக்கும் கொயெட்டா அப்படிங்கற ஊரில் ஒரு வங்கிக் கிளையில் கணக்கில் இருந்து வந்தது. இந்த விஷயமும் எஃப்.பி.ஐக்கு தெரியவரும்"
முதலில் பின்னால் நின்று இருந்த நடுத்தர வயதினனை பார்த்து முறைத்த மக்ஸூத் சற்று சுதாரித்தபின், "அந்த ஊரைப் பத்தி உனக்கு தெரியுமா? அரசாங்கமே இல்லாத ஊர் அது. அந்த ஊரில் இருக்கும் ஒரு வங்கிக் கணக்கின் விவரங்களை வெச்சுட்டு எஃப்.பி.ஐயினால் ஒண்ணும் செய்ய முடியாது" என்றான். இருப்பினும் அவன் முகத்தில் அந்த நம்பிக்கை இல்லை என்பதை ஜாஷ்வா கவனிக்க தவறவில்லை.
அப்போது சஞ்சனாவின் ஜாக்கெட் பாக்கெட்டில் இருந்த அவளது கைபேசி சிணுங்கியது. முறைத்துப் பார்த்த மக்ஸூது அவள் அதை எடுத்து ஆஃப் செய்து மறுபடி மேல் பாக்கெட்டில் போடுவதை கண்ட பிறகு மக்ஸூத், "Any way ... அவங்களை எப்படி வழிக்கு கொண்டு வருவதுன்னு எங்களுக்கு நல்லா தெரியும். எல்லாருக்கும் சொந்த பந்தம்ன்னு இருக்கும் இல்லையா? ம்ம்ம்ம் ..மாங்க்ச் பாட் நெட்டை விலைக்கு வாங்க உங்க மூணு பேருக்கும் தலைக்கு பத்து மில்லியன் டாலர் கொடுக்க தயாரா இருந்தோம். வெல் ... ஒரு பத்து மில்லியன் மிச்சம்"
ஆண்டர்ஸன், "ஜெண்டில்மென், இது எனக்கு சம்மந்தம் இல்லாத விஷயம். ஹாஃப்மன் என்னை எதுக்கு இங்கே வரச்சொன்னான்னு எனக்கு தெரியலை. நீங்க அனுமதிச்சா நான் புறப்படறேன்"
மக்ஸூத், "நான் தான் உன்னை வரவழைக்கச் சொன்னேன். ஏன்னா, ஒன்ஸ் நாங்க மாங்க்ஸ் பாட் நெட்டை உபயோகிக்க ஆரம்பிச்சதுக்கு அப்பறம், அதைப் பத்தி தெரிஞ்ச வெளியாள் யாரும் உயிரோட இருக்கக் கூடாது" என்ற படி தன் ஜாக்கெட் பாக்கெட்டில் இருந்த பிஸ்டலை எடுத்து ஆண்டர்ஸனின் நெற்றியில் சுட்டான்.
ஹாஃப்மன், "வாட் தெ ஹெல் ... " என்றதற்கு மேல் எதுவும் எதுவும் சொல்வதற்கு முன் அவனது நெற்றிப்பொட்டை துளைத்த தோட்டா அவன் உயிரையும் பிரித்தது.
மக்ஸூத் ஜாஷ்வாவின் பக்கம் திரும்பி, "Its a pity. நீ இல்லாமல் மாங்க்ஸ் பாட் நெட் இயங்காதுன்னு நினைச்சேன். சாரி ஜாஷ்வா, அவங்க ரெண்டு பேர்கிட்ட பேசிக்கறோம். அவங்களை தேடி கண்டு பிடிக்கறதில் எந்த பிரச்சனையும் இருக்காது. எங்களுக்கும்" என்ற பிறகு மறுபடி பின்னால் நின்று கொண்டு இருந்த நடுத்தர வயதினனைக் காட்டி, "இவரோட அரசாங்கத்துக்கும் நிறைய உளவாளிகள் இருக்காங்க. அவங்களுக்கு லோக்கல் மாஃபியா எல்லாம் ரொம்ப பழக்கம்" என்றபடி ஜாஷ்வாவை நோக்கி துப்பாக்கியை உயர்த்தினான்.சஞ்சனா தனது பிஸ்டலை எடுத்து மக்ஸூதை சுட்டாள். ஆனால் அதற்குள் ஜாஷ்வாவின் மார்பை மக்ஸூதின் குண்டு துளைத்து இருந்தது. அடுத்த கணம் க்ரிஸ் தன் கண்பார்வையில் இருந்த ரைஃபில் ஏந்தியவனை வீழ்த்தினான். சஞ்சனா தனக்கு இடப்புறம் ரைஃபில் ஏந்தி இருந்தவனின் குறிக்கு தப்புவதற்காக கீழே நிலத்தில் உருண்டாள், தொடர்ந்து "அண்ணா வராதே போ" என்று உரக்க கத்தினாள். க்ரிஸ் அடுத்து ஷொயேபை வீழ்த்தினான்.
அவர்களுடன் இருந்த நடுத்தர வயதினன் வேனுக்கு உள்ளிருந்த தனது துப்பாக்கியை எடுக்க வேன் கதவை திறந்தான். ஸான்ட்ரா ஆயுதம் தரித்து இருப்பாள் என்று சஞ்சனா எதிர்பார்க்கவில்லை. தூண் மறைத்து இருந்ததால் ஸான்ட்ரா க்ரிஸ்ஸின் கண்பார்வையிலும் படவில்லை. ஆனால் ஸான்ட்ராவின் பயிற்சியின்மை உருண்டு வந்த சஞ்சனா சட்டென எழுந்து ரைஃபில் ஏந்தியவனை சுடும்வரை சஞ்சனாவுக்கு போதிய அவகாசத்தை கொடுத்தது. ஸான்ட்ரா தன் கைத்துப்பாக்கியை எடுத்து எஃப்.பி.ஐ பயிற்ச்சி முகாமில் சொல்லிக் கொடுத்த படி பிடித்து நின்று சுடுவதற்கு ட்ரிக்கரை அழுத்தும் அதே தருணத்தில் சஞ்சனா அவளை நோக்கி சுட்டாள். இருவரது குண்டுகளும் அவைகள் ஏவப் பட்ட இலக்கை துளைத்தன. குண்டடி பட்ட சஞ்சனா சரிந்து வீழ்ந்து சலனமற்றுக் கிடந்தாள். தொண்டைப் பகுதியில் நுழைந்த தோட்டா முதுகுத்தண்டை முறிக்க ஸான்ட்ரா முகத்தில் இது நிஜமா என்ற கேள்விக் குறியுடன் கண்கள் அகல உயிர் நீத்தாள்.
கையில் துப்பாக்கியுடன் திரும்பிய நடுத்தர வயதினன் க்ரிஸ்ஸை நோக்கிச் சுட க்ரிஸ் தூணுக்கு பின்னால் ஒளிந்தவாறு சரமாரியாக சுட்டான். அவனது தோட்டாக்கள் ஒன்றும் நடுத்தர வயதினனை தாக்க வில்லை. அவனது பரெட்டா துப்பாக்கியில் இருந்த ஒன்பது குண்டுகளும் தீர்ந்தன. துப்பாக்கி சூடு நிச்சயம் நடக்கும் என்று அறியாததால், மாற்றுக் கார்ட்ரிட்ஜ் கொண்டு வந்து இருக்கவில்லை.
எதிர் புரமிருந்து துப்பாக்கிச் சூடு வருவது நின்றதும் அந்த நடுத்தர வயதினன் சுற்றி வீழ்ந்து கிடந்தவரைப் பாத்தான். பிறகு மக்ஸூத் இன்னும் சாகவில்லை என்பதை அவன் கழுத்தில் கைவைத்துப் பார்த்து அறிந்தவன் அவனை மட்டும் வேனுக்குள் தூக்கிக் கிடத்தி வேனை கிளப்பி அங்கு இருந்து சென்றான்.
காரில் இவ்வளவு நேரமும் உறைந்து போய் அமர்ந்து இருந்த சக்தி காரை விட்டு வெளிவர எத்தனித்த போது நித்தின் அவனை கையைப் பற்றி இழுத்தான். அப்போது F.B.I என்ற எழுத்துக்கள் பொறித்த கருப்பு நிற கார் வேகமாக உள்ளே வந்தது. அந்த காரில் இருந்து இறங்கிய எஃப்.பி.ஐ ஏஜண்ட் சைமண்ட் வில்லியர்ஸ் சுற்று முற்றும் வீழ்ந்து கிடந்தவர்களைப் பார்த்த பின் "ஓ ஷிட்! ஷிட்" என்று உரக்கக் கத்தினார். பிறகு அவர்களுக்கு முதுகு காட்டி நின்றபடி தன் கைபேசியை எடுத்து பேசத் தொடங்கினார். "I need paramedics, CSI team and a bunch of body bags immediately" என்று வீழ்ந்து கிடந்த ஜாஷ்வாவின் அருகே நின்று அவர் கைபேசியில் பேசியது நித்தினுக்கும் சக்திக்கும் தெளிவாகக் கேட்டது.
நித்தின் அச்சமயம் காரை வேகமாகக் கிளப்பி வெளியில் எடுத்து வந்தான். சைமண்ட் வில்லியர்ஸ் திரும்பிப் பார்ப்பதற்குள் அவர்கள் கார் அந்த கட்டிடத்திற்கு வெளியே வந்து இருந்தது. சக்தி வாய்விட்டு அழுது கொண்டு இருந்தான். நித்தினின் கண்களில் கண்ணீர் வழிந்தபடி இருந்தாலும் அவனது சமயோசிதம் அவனிடம் இருந்து விடைபெற்று போகவில்லை. காரை அருகில் இருந்த ஒரு பல மாடி கார் பார்க் கட்டிடத்துக்கு எடுத்துச் சென்று நிறுத்தினான்.
சக்தி, "காட், ஏண்டா வந்தே. அவளுக்கு ... அவங்க ரெண்டு பேருக்கும் .. இன்னும் உயிர் இருக்கலாம்"
நித்தின், "இருக்கலாம். ஆனா நம்மால என்ன செய்ய முடியும்? அந்த எஃப்.பி.ஐகாரன் பாராமெடிக்ஸ் உடனே வரச் சொன்னான் இல்லை? அவங்களுக்கு உயிர் இருக்கான்னு பார்த்து தெரிஞ்சுக்க உன்னையும் என்னையும் விட அவனுக்கு நல்லா தெரியும். இப்போதைக்கு நாம் என்ன செய்யறதுன்னு பார்க்கலாம்" என்றபடி தன் கைபேசியில் அவ்வளவு நேரமும் ஜாஷ்வாவின் கைபேசியுடன் இருந்த இணைப்பை அணைத்தான். சில கணங்களில் அவனது கைபேசி சிணுங்கியது.
மறுமுனையில் இருந்து தீபா, "யூ ஸ்கௌன்ட்ரல் ... How dare you play hide-and-seek with me?" என்று கத்தினாள்
சற்று நேரம் மௌனம் காத்த நித்தின், "தீபா, இப்ப நீ எதுவும் பேசாதே. நான் சொல்றதை கவனமா கேளு. எங்க ரெண்டு பேரையும் அல்-கைதாவும் ஐ.எஸ்.ஐயும் தேடிட்டு இருக்கு. ஜாஷ்வாவையும் சஞ்சனாவையும் அவங்க ...." என்றவனுக்கு மேலும் சொல்ல முடியாமல் தொண்டை அடைத்தது. பிறகு தொடர்ந்து, "They want Monks Bot Net. உடனே எங்க அப்பா, மனோகரி ஆண்டி ஷாந்தி அப்பறம் புனேவில் இருக்கும் எங்க தாத்தா, பாட்டி, இவங்க எல்லோருக்கும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணு. மிறட்டறதுக்காக அவங்களில் யாரை வேணும்னாலும் கைப்பற்றி பணயக் கைதியா உபயோகிக்கலாம். எங்க ரெண்டு பேர் ஃபோனும் நாங்க ஸ்விட்ச் ஆஃப் பண்ணப் போறோம். ஈமெயில் பண்ணறேன்" என்ற பிறகு இணைப்பைத் துண்டித்தான்.Friday, 29 May 2009 10:00 AM IST
Conference room in R&AW Headquarters, CGO Complex, New Delhi
வெள்ளி, மே 29 2009 இந்திய நேரம் காலை 10:00
R&AW தலைமை அலுவலகத்தில் இருக்கும் கலந்தாய்வுக் கூடம், CGO காம்ப்ளெக்ஸ், புது தில்லி
வந்தனாவும் முரளீதரனும் தீபா பேசிக் கொண்டு இருந்ததை கவனித்துக் கொண்டு இருந்தனர். முடிவில் அவள், "நித்தின் .. வெய்ட்" என்று அலறிய பிறகு பேயறைந்த முகத்துடன் இருவரையும் பார்த்தாள்.
தீபா, "He is not very coherent .. அவன் சொன்னதை அப்படியே சொல்றேன்" என்றபடி அவன் சொன்னதை ஒப்பித்தாள்.
வந்தனா, "ஜாஷ்வாவுக்கும் சஞ்சனாவுக்கும் என்ன ஆச்சு .. ?"
தீபா, "தெரியலை ... அவன் மேல எதுவும் சொல்லை"
வந்தனா, "ஓ மை காட்!" என்ற படி முதலில் முகம் இறுக அமர்ந்து இருந்தவள் சில நிமிடங்களில் தீவிர வாதம் தன் வாழ்க்கையில் மறுபடி விளையாடுவதை எண்ணிக் கண் கலங்கினாள்.
முரளீதரன், "அந்த ஜாஷ்வா யார்? அவன்தான் ஹார்ஷ்7ஆ?"
தீபா, "ஆமா ... I think so .. No I am sure. Besides he is so close to us all"
முரளீதரன், "அந்த ஜாஷ்வாவின் விலாசம் உங்களுக்கு தெரியுமா? இப்பவே ஷானை அவனை தேடி கண்டு பிடிக்க சொல்றேன்"
தீபா தன் ஐ-ஃபோனில் ஸ்டோர் செய்து வைத்து இருந்த விலாசத்தை ஷானுடைய மொபைலுக்கு அனுப்பினாள்.
முரளீதரன், "வந்தனா, தீபா, எப்படி தீவிரவாதிகளுக்கு இவங்கதான்னு தெரிஞ்சுதுன்னு தெரியலை. பட், Any way, அப்படி தெரிஞ்சு இருந்தால் அவங்க ரெண்டு பேரையும் பிடிக்க they will not leave any stone unturned. முதலில் நித்தின் சொன்ன மாதிரி அவங்க எல்லோருக்கும் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யலாம்"
வந்தனா, "சார், நிச்சயம் அவங்க எதுக்கு பாதுகாப்புன்னு கேப்பாங்க .. "
முரளீதரன், "மாங்க்ஸ் பாட் நெட் அப்படின்னு சொன்னா புரியுமான்னு தெரியலை. அப்படியே புரிஞ்சாலும் எதோ பூதாகரமான விஷயமா அவங்க புரிஞ்சுக்க வாய்ப்பு இருக்கு. இருந்தாலும் விளக்கி சொல்வதை தவிர வேற வழி இல்லை"
வந்தனா, "சரி, நான் இப்பவே மனோகரி ஆண்டிகிட்ட பேசறேன். தீபா, நீ சுந்தர் அங்கிள்கிட்ட பேசு"Thursday, 28 May 2009 11:30 PM US-EST
Hotel room where Nithin and Shakthi were staying
வியாழன், மே 28 2009 கிழக்கு அமெரிக்க நேரம் இரவு 11:30
நித்தினும் சக்திவேலும் தங்கி இருந்த ஹோட்டல் அறை
காரை அந்த பார்க்கின் லாட்டிலேயே விட்டு விட்டு டாக்ஸியில் ஹோட்டலை அடைந்து இருந்தனர். முதலில் ஸ்தம்பித்து இருந்த சக்தி இப்போது தன்னிலைக்கு வந்து இருந்தான்.
சக்தி, "சஞ்சனா ஜாஷ்வா நிலைமையை எப்படி தெரிஞ்சுக்கறது?"
நித்தின், "அனேகமா நமக்கு முன்னாடி வந்தனா-தீபாவுக்கு தெரியவர வாய்ப்பு இருக்கு. அவங்க எஃப்.பி.ஐகூடத்தானே வொர்க் பண்ணிட்டு இருந்தாங்க?"
சக்தி, "எனக்கு என்னமோ சைபர் க்ரைம் பிரிவுக்கும் நாம் பாத்த எஃப்.பி.ஐ ஆளுக்கும் சம்மந்தம் இல்லைன்னு தோணுது"
நித்தின், "எப்படி சொல்றே?"
சக்தி, "அந்த நியூ யார்க் டைம்ஸ் ஆர்டிகிளில் இருந்த ஃபோட்டோவில் அந்த ஆள் இருந்தான்னு நினைக்கறேன்"
நித்தின், "அவன் எப்படி அங்கே வந்தான்?"
சக்தி, "அவங்க பேசிட்டு இருந்தப்போ சஞ்சனாவொட மொபைல் அடிச்சுது. அவ அதை எடுத்து ஆஃப் பண்ணின விதத்தை பார்த்தா அன்ஸர் பட்டனை அழுத்திட்டு மேல் பாக்கெட்டில் அலுங்காம வெச்ச மாதிரி இருந்தது. எதிர் முனையில் யாரோ அதுக்கு அப்பறம் நடந்ததை கேட்டு இருக்கணும். அனேகமா அது அந்த அதிகாரியா இருக்கலாம்"
நித்தின், "அவ மொபைல் நம்பரை வெச்சுட்டு அது இருக்கும் கட்டிடத்தை கண்டு பிடிச்சு வந்து இருக்கான். காரை பார்க் பண்ண வந்தவனுக்கு அங்கேயே சஞ்சனா விழுந்து கிடந்ததை பார்க்க முடிஞ்சது. அதான் அவளை ரொம்ப தெரிஞ்சவன் மாதிரி ஆதங்கத்தோட 'ஓ ஷிட்' அப்படின்னு கத்தினான். சரியா?"
சக்தி, "யெஸ் .. "
நித்தின், "பட், அந்த ஸான்ட்ரா எஃப்.பி.ஐகாரிதானே. அவதானே சஞ்சனாவை சுட்டா?"
சக்தி, "சுடறதுக்கு அவ எடுத்துகிட்ட நேரம் ரொம்ப அதிகம்.. அதனால்தான் அதுக்குள்ள சஞ்சனா அந்த வேன் மேல இருந்தவனை சுட்டுட்டு திரும்பி ஸான்ட்ராவை சுட முடிஞ்சுது"
நித்தின், "Still she was a fraction of a second late .. " சொல்லச் சொல்ல இருவரின் கண்களும் மறுபடி குளமாகின. இருவரும் மௌனமாக அமர்ந்து இருந்தனர்.
நித்தின், "இப்ப என்ன செய்யலாம் ... "
சக்தி, "நாம் எங்கே வேலை செய்யறோம்ன்னு அவங்களுக்கு தெரிஞ்சு இருக்கும். நாளைக்கு வெளியே அந்த பக்கம் போகும் போது நம்மை வளைச்சுப் பிடிக்க முடியும்"
நித்தின், "எப்பவும் ஆள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளிலே இருந்தா பிடிப்பது கஷ்டம்"
சக்தி, "சரி, அவங்க கிட்ட இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?"
நித்தின், "Obviously we have to approach FBI. இப்பவே எஃப்.பி.ஐயை அணுகலாமா?"
சக்தி, "வேண்டாம். ஜாஷ்வா-சஞ்சனா நிலமை என்னன்னு தெரிஞ்சதுக்கு அப்பறம் அணுகலாம்"
நித்தின், "அதுவரைக்கும் இந்த ரூமிலேயே அடைஞ்சு கிடக்கலாம்ன்னு சொல்றியா?"
சக்தி, "திரும்பி இந்தியாவுக்கு இன்னைக்கே போகலாம். இப்படி யோசிச்சுப் பாரு. அங்கே விழுந்து கிடந்தது ஹாஃப்மன், ஆண்டர்ஸன், ஜாஷ்வா, சஞ்சனா, ஷொயேப், ஸான்ட்ரா அப்பறம் ரைஃபில் வெச்சுட்டு இருந்த ரெண்டு பேர். ஆண்டர்ஸனுக்கும் ஹாஃப்மனுக்கும் நெத்தியில் குண்டு பாய்ஞ்சது. ஸான்ட்ரா தொண்டை வழியா குண்டு போய் பின்னால தெரிச்சுது. அவ உடம்பு கீழே சரியரதுக்கு முன்னாடி தலை துவண்டுச்சு. அதனால இவங்க மூணு பேரும் நிச்சயம் செத்துட்டாங்கன்னு நினைக்கறேன். அந்த ரைஃபில் வெச்சுட்டு இருந்தவங்க பக்கமே அந்த எஃப்.பி.ஐகாரன் போகலே. சஞ்சனா, ஷொயேப், ஜாஷ்வா இவங்க மூணு பேரோட உடலை மட்டும்தான் பார்த்தான். உடனே பாரமெடிக்ஸ்ஸை வரச்சொல்லி ஃபோன் பண்ணினான். அதனால் இந்த மூணு பேரில் நிச்சயம் ஒருத்தராவது உயிரோட இருக்க வாய்ப்பு இருக்கு. ஜாஷ்வாவோ, சஞ்சனாவோ உயிரோடு இருந்தா கண்விழிச்சதும் நிச்சயம் எஃப்.பி.ஐ மூலம் நம்மை கான்டாக்ட் பண்ணுவாங்க. ஆனா அதுக்கு ரெண்டு மூணு நாள் ஆகலாம். அதுக்குள்ள நாம் இந்தியா திரும்பி போயிடலாம். அங்கே இருந்தே, மே பீ, R&AWமூலமாவே அணுகலாம். என்ன சொல்றே?"
நித்தின், "ரெண்டு பேரும் உயிர் பிழைக்கலைன்னா .. "
மௌனம் காத்த சக்தி சற்று நேரத்துக்கு பிறகு தொண்டை அடைக்க, "I can't see the dead body of any of my near and dear again... (என் நெருங்கிய சொந்தம் எதோட பொணத்தையும் என்னால இனி பார்க்க முடியாது)" என்றான்.
நித்தின், "Me too .. (நானுந்தான்)"
புறங்கையால் கண்களை துடைத்த சக்தி மூக்கை உறிஞ்சியபடி, "அப்படி ஆகி இருந்தா மாங்க்ஸ் பாட் நெட் நம்முதுன்னு தீவிரவாதிகளுக்கு எப்படி தெரியும்ன்னு எஃப்.பி.ஐ அல்லது R&AW நிச்சயம் கேப்பாங்க. அப்ப என்ன சொல்லப் போறோம்?"
நித்தின், "ஜாஷ்வா ஹாஃப்மனிடம் சொன்னதா சொல்லலாம். ஈமெயில் விளம்பரங்கள் மூலம் வரும் பணத்தை வசூலிக்க அந்த அக்கௌண்டை ஓபன் செய்ய ஹாஃப்மனின் உதவி ஜாஷ்வாவுக்கு தேவைப் பட்டுதுன்னு சொல்லலாம். அவன் கெட்டவன்னு ஜாஷ்வாவுக்கு தெரியாதுன்னு சொல்லலாம். ஆனா அந்த மக்ஸூத் சொன்ன மாதிரி நம்மை போட்டுக் கொடுக்க வாய்ப்பு இருக்கு"
சக்தி, "அந்த ஷொயேப் பிழைச்சாத்தான் அல்-கைதாகாரங்க நம்மை போட்டுக் கொடுக்க முடியும்"
நித்தின், "எப்படி சொல்றே?"
சக்தி, "Event-trace எடுத்து ஸ்டோர் பண்ணி வெச்சு இருக்கான்னு சொன்னான் இல்லையா?"
நித்தின், "ஆமா ... "
சக்தி, "அவன் ஒரு ஹாக்கர். அப்படின்னும் சொன்னான் இல்லையா?"
நித்தின், "Yes I get what you mean .. "
அவன் எப்படி அந்த ஆதாரத்தை ஸ்டோர் செய்து வைத்து இருப்பான் என்பதை அல்-கைதாவில் இருக்கும் மற்றவர்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்று யூகித்தனர்.
சக்தி, "பட் உயிரோட இருந்தாலும் எஃப்.பி.ஐ அவனை அவ்வளவு சீக்கரம் விடப் போறது இல்லை"
நித்தின், "விடும். பாகிஸ்தான் அரசாங்கம் அவனை அவங்களோட ஆள்ன்னு சொல்லி விட வைப்பாங்க"
சக்தி, "எனக்கு நம்பிக்கை இல்லை"
நித்தின், "என்னதான் இந்தியாவோட நல்ல உறவு இருந்தாலும். Pakistan always enjoys a soft-corner from US. மறந்துடாதே"
சக்தி, "அனேகமா அவங்க இதில் சம்மந்தப் பட்ட மாதிரியே காண்பிச்சுக்க மாட்டாங்க. ஏன் சொல்றேன்னா, வந்தனா-தீபா நம் பழைய சர்வரின் ஐ.பி அட்ரெஸ்ஸை எப்படியும் கண்டு பிடிச்சுடுவாங்க"
நித்தின், "கண்டு பிடிச்சுட்டாங்கன்னு நினைக்கறேன்"
சக்தி, "எப்படி சொல்றே?"
நித்தின், "ஃபோனை எடுத்ததும் கண்ணா மூச்சி ஆடறியாடா பொறுக்கின்னு கத்தினா"
சக்தி, "ம்ம்ம்ம் No wonder there were so many missed calls from Vanthana. சோ, அவங்க தேடல் ஜாஷ்வாவில் முடியும். அதே நேரம் அவன் அடிபட்டு" ... மறுபடி பெருமூச்செறிந்தவன் "God! I hope and pray they both are alive" என்றபடி தொடர்ந்தான், "அதே நேரம் அவன் இந்த சம்பவத்தில் இருந்ததால் மாங்க்ஸ் பாட் நெட்டுக்கும் அந்த துப்பாக்கி சூட்டுக்கும் சம்மந்தம் இருக்குன்னு எஃப்.பி.ஐ முடிவெடுக்கும். இதை ஐ.எஸ்.ஐ காரங்களும் யூகிப்பாங்க. அவங்களுக்கு மாங்க்ஸ் பாட் நெட்டில் இருக்கும் ஆர்வத்தை எஃப்.பி.ஐகிட்ட காண்பிச்சுக்க மாட்டாங்க"
நித்தின், "முதலில் புறப்படறதுக்கான ஏற்பாடுகளை செய்யலாம்"
அலுவலகத்தில் வேலைகள் எல்லாம் முடிந்து இருந்த தருணத்தில் அவர்களுக்கான் செண்ட் ஆஃப் பார்ட்டிக்காக மட்டுமே அடுத்த நாள் செல்ல வேண்டி இருந்தது. நிச்சயம் கூடிய விரைவில் திரும்பி வருவதாக அலுவலக நண்பர்களுக்கு ஈமெயில் அனுப்பினர். ஃபோன் பாங்கிங்க் வழியாக அவர்களது மாங்க்ஸ் பாட் நெட் மூலம் வந்த பணத்தை வைத்து இருந்த கணக்கில் இருந்து ஒரு கணிசமான தொகையை தங்களது க்ரெடிட் கார்ட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்தனர். பிறகு அடுத்த நாள் காலை இரண்டரை மணிக்கு ஃப்ராங்க்ஃபர்ட் வழியாக மும்பை புறப்பட இருந்த லுஃப்தான்ஸா விமானத்தில் பிஸினஸ் க்ளாஸ்ஸில் இருவருக்கும் புக் செய்தனர். நடு இரவில் இருவரும் ஒரு டாக்ஸியில் ஏர்போர்ட்டை நோக்கி பயணித்தனர்.Friday, 29 May 2009 3:30 PM IST

வெள்ளி, மே 29 2009 இந்திய நேரம் பகல் 3:30

நகத்தை கடித்தபடி தோழிகள் இருவரும் எஃப்.பி.ஐயிடம் இருந்து அடுத்து வரும் தகவலுக்காக காத்து இருந்தனர். சில மணி நேரங்களுக்கு முன்னர் "நாங்கள் இந்தியா வருவதற்கு விமான நிலையத்தில் இருக்கிறோம். அங்கு வந்த பிறகு தொடர்பு கொள்கிறோம். நாங்க சொன்ன மாதிரி எங்க குடும்பத்துக்கு பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடு செஞ்சு இருப்பீங்கன்னு நம்பறோம். தயவு செஞ்சு அதை லேசா எடுத்துக்க வேண்டாம்" என்று ஒரு ஈமெயில் சக்தி வந்தனாவுக்கு அனுப்பி இருந்தான்.
சற்று நேரத்தில் டெலி-கான்ஃபரன்ஸரில் இணைத்து இருந்த தொலைபேசி ஒலித்தது.
ஷான், "முரளீ, வந்தனா, தீபா .. இருக்கீங்களா?"
முரளீதரன், "சொல்லு ஷான்"
ஷான், "God this is going to be my longest night ..நடந்ததை எல்லாம் சொல்றேன். நீங்க கொடுத்த ஐ.பி அட்ரெஸ்ஸை காலையில் தேடி கண்டு பிடிக்கலாம்ன்னு இருந்தேன். திடீர்ன்னு எங்க தீவிரவாத தடுப்பு பிரிவை சேர்ந்த ஏஜண்ட் சைமண்ட் வில்லியர்ஸ் கிட்ட இருந்து ஃபோன் வந்தது. மாங்க்ஸ் பாட் நெட் அப்படின்னா என்னன்னு கேட்டார். எதுக்குன்னு கேட்டப்ப ஒரு கோரமான துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் இருந்து பேசறதா சொன்னார். உடனே புறப்பட்டு வரச் சொன்னார். அவர் சொன்ன வங்கி கட்டிடத்துக்கு போனேன். அங்கே எட்டு பேர் விழுந்து கிடந்தாங்க. அதில் ஒருத்தி ஸான்ட்ரா. Yes girls Sandra is dead" என்று பெருமூச்செறிந்தார்.
தீபா, "வாட், ஸான்ட்ராவா?"
ஷான், "ஆமா. அவளை தவிர அந்த எட்டு பேரில் ஹாஃப்மன் அப்படிங்கற அந்த வங்கியின் ஆஃபீஸர், ஆண்டர்ஸன் ஒருத்தன் அவன் இதுவரைக்கும் எந்த கேஸிலும் பிடிபடவில்லைன்னாலும் கொலம்பியன் ட்ரக் கார்டல்காரங்களுக்கு இங்கே வசூலான பணத்தை அவங்க ஊருக்கு கடத்தும் கேஷ் ம்யூல் (Cash Mule) ஆபரேஷனில் ஈடு பட்டவன், அடுத்த ரெண்டு பேர் நீ எனக்கு ஃபோனில் விலாசம் அனுப்பின ஜாஷ்வா, பிறகு அவன் மனைவி சஞ்சனா. அடுத்தவன் பாக்கெட்டில் பல்லவ் ஷா அப்படிங்கற பெயரில் பொய் பாஸ்போர்ட் வெச்சுட்டு இருந்தான். ஆனா எஃப்.பி.ஐ டேட்டா பேஸ் ஃபிங்கர் ப்ரிண்ட் ஸ்கேனில் அவன் அல்-கைதாவை சேர்ந்த ஷொயேப் அஹமத் அப்படின்னு தெரியவந்தது. அவனை தவிர கூலிக்கு துப்பாக்கி தூக்கும் ரெண்டு பேர்."
வந்தனா, "ஜாஷ்வா, சஞ்சனாவுக்கு என்ன ஆச்சு?"
ஷான், "ரெண்டு பேருக்கும் குண்டடி பட்டு இருக்கு. உயிர் ஊசலாடிட்டு இருக்கு. பிழைப்பது கஷ்டம். ஆனா நாளைக்கு செய்தியில் இருவரும் இறந்துட்டதாதான் செய்தி வரும். தவிர ஷொயேப் அப்படிங்கறவன் செத்துட்டான். ஆனா அவன் உயிரோடு ஆஸ்பத்திரியில் இருப்பதாவும் நியூஸ் வரும்"
தோழிகள் இருவரும் விக்கித்துப் போய் அமர்ந்து இருந்தனர்.
ஷான், "சைமண்ட் வில்லியர்ஸுக்கு சஞ்சனாவை முன்னமே தெரியுமாம். அவளிடம் இருந்து காலையில் அவர் சொந்த மொபைலில் கால் வந்து இருக்கு. அந்த மொபைலை வீட்டில் வெச்சுட்டு வந்து இருக்கார். சாயங்காலம் கொஞ்சம் லேட்டா வீட்டுக்கு போனதும் மொபைலில் மிஸ்ட் கால் வந்து இருப்பதை பார்த்துட்டு திரும்ப கூப்பிட்டு இருக்கார். அப்ப அந்த பொண்ணு கால் ஆன்ஸர் பண்ணிட்டு எதுவும் பேசாம இருந்து இருக்கு. மத்தவங்க பேசறதில் இருந்து ஒருத்தன் மாங்க்ஸ் பாட் நெட்டை அவங்க உபயோகிக்கும் போது அதைப் பத்தி தெரிஞ்சவங்க யாரும் உயிரோடு இருக்கக் கூடாதுன்னு சொன்னது கேட்டு இருக்கு. அதுக்கு அப்பறம் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டு இருக்கு. இவர் வந்து பார்த்தப்ப ஜாஷ்வாவை காரில் கூட்டிட்டு வந்த க்ரிஸ் என்கிற அவன் ஃப்ரெண்ட் மட்டும் உயிரோடு இருந்து இருக்கான். தனக்கு எதுவும் தெரியாதுங்கறான். ஜாஷ்வாவுக்கும் சஞ்சனாவுக்கும் ரொம்ப வேண்டப் பட்டவனாம். ஒரு ஆபத்தான மீட்டிங்க்குக்கு போறதா அவனை துணைக்கு அழைச்சுட்டு வந்து இருக்கான். எதற்கு அந்த மீட்டிங்க் அப்படின்னு அவனுக்கு எதுவும் தெரியாதுங்கறதில் எந்த சந்தேகமும் இல்லை. உண்மையாவே அவங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப வேண்டப் பட்டவனாம். அவங்க ரெண்டு பேரும் இவனுக்கும் இவன் தங்கைக்கும் ரொம்ப உதவி செஞ்சு இருக்காங்களாம். அவங்களுக்கு பதிலா தன் உயிர் போகக் கூடாதான்னு அழுதுட்டு இருக்கான். மற்றபடி அங்கு நடந்ததை அவன் பார்த்த வரைக்கும் ஒண்ணு விடாம சொன்னான். அவன் சொன்னதில் இருந்து முதலில் ஹாஃப்மனும் ஆண்டர்ஸனும் தான் ஜாஷ்வாவையும் சஞ்சனாவையும் சந்திச்சு இருக்காங்க. கொஞ்ச நேரம் கழிச்சு ஒரு வேனில் நாலு பேர் வந்து இருக்காங்க. தவிர, அந்த கூலிக்கு துப்பாக்கி சுடறவங்களும் அந்த வேனில் தான் வந்து இருக்கணும். அவங்க ரெண்டு பேரும் ஒவ்வொரு பக்கம் போய் துப்பாக்கி பிடிச்சுட்டு இருந்து இருக்காங்க. அந்த நாலு பேரில் ஸான்ட்ராவும் ஒருத்தி. அந்த நாலு பேரில் பார்க்க அரபி மாதிரி இருந்த ஒருத்தன்தான் முதலில் பேசிட்டே சுடத் தொடங்கினானாம். அவன் ஜாஷ்வாவை சுட்டு இருக்கான். சஞ்சனா அவனை சுட்டு இருக்கா. பிறகு இந்த க்ரிஸ்ஸும் சஞ்சனாவும் சேர்ந்து மத்தவங்களை சுட்டு இருக்காங்க. கடைசியா ஸான்ட்ராதான் சஞ்சனாவை சுட்டு இருக்கா. அதே சமயம் சஞ்சனா அவளை சுட்டு இருக்கா."
தீபா, "Bloody bitch!"
ஷான், "Yes, Looks like she was working for somebody else on the side ... ஷான் விவரித்துக் கொண்டு இருக்கையில் முரளீதரன் வேகமாக ஒரு பேப்பரை எடுத்து அதில், "நான் சக்திவேல் நித்தின் இவர்களை பற்றிய விவரத்தை ஷானுக்கு இதுவரை சொல்லவில்லை. நீங்களும் அவர்களைப் பற்றி எதுவும் கேட்க வேண்டாம். பிறகு விவரிக்கிறேன்" என்று எழுதி வந்தனாவிடமும் தீபாவிடமும் காட்டினார். கேள்விக் குறியுடன் பார்த்த வந்தனாவைப் பார்த்து வாயின் மேல் ஒரு விரல் வைத்து மௌனம் காக்கும்படி பணித்தார்.
ஷான் தொடர்ந்தார்.
ஷான், "க்ரிஸ்ஸின் மேகஸின் தீந்ததும் அவன் சுடுவதை நிறுத்திட்டான். அப்ப அந்த நாலு பேரில் ஒருத்தன் சுடப்பட்டு விழுந்து கிடந்த அந்த அரபியை இழுத்து வேனில் போட்டுட்டு வேனை கிளப்பிட்டு போயிருக்கான். அவன் உயிரோடு இருந்து இருக்கணும் அதனாலதான் அவனை அங்கே விட்டுட்டு போகவில்லை"
முரளீதரன், "சோ, இது அல்-கைதாவின் கை வேலை இல்லையா?"
ஷான், "வெரி மச். அவன் ஃபோனில் பேசினதை வெச்சு மாங்க்ஸ் பாட் நெட்டை கைப் பற்றுவதில் உறுதியா இருபபது போல் தெரியுது. இந்த ஜாஷ்வாதான் நம் ஹார்ஷ்7 அப்படிங்கறது எங்க யூகம். கில்9 மற்றும் மோர்லா ரெண்டு பேரைப் பத்தியும் அவங்களுக்கு தெரிஞ்ச மாதிரி இருக்கு. ஆனா நமக்கு இன்னும் தெரியாது. அதுதான் எனக்கு இப்ப பெரிய பிரச்சனை. எப்படி அவங்களை கண்டு பிடிப்பது முரளி"
முரளீதரன், "ஆஃப் ஹாண்ட் என்னால எதுவும் சொல்ல முடியலை. யோசிச்சுட்டு சொல்றேன். நீங்க ஜாஷ்வாவை பத்தி விசாரிங்க உங்களுக்கு எதாவது க்ளூ கிடைக்கலாம்"
ஷான், "ம்ம்ம் ... One more thing .. சைமண்ட் வில்லியர்ஸ் ஃபோனில் பேசிட்டு இருக்கும் போது ஒரு கார் இங்கே இருந்து புறப்பட்டு போயிருக்கு. இவர் நம்பர் நோட் பண்ணறதுக்குள்ள வெளியே போயிருக்கு. அனேகமா, அது கில்9 மற்றும் மோர்லாவா இருக்கலாம். க்ரிஸ்ஸிடம் அந்த காரைப் பத்தி விசாரிச்ச போது அவன் வந்தப்ப இருந்து அந்த கார் ஒரு இடத்தில் நின்னுட்டு இருந்தா சொன்னான். அதில் இருந்து யாரும் இறங்கி வரலைன்னும் சொன்னான். துப்பாக்கி சூடு முடிஞ்சதும் அந்த கார் புறப்பட்டு போய் இருக்கு. ஜாஷ்வாவின் மொபைலில் இருந்து ஒரு கான்ஃபரென்ஸ் காலில் ரெண்டு நம்பர்கள் ராத்திரி 9:30இல் இருந்து அந்த துப்பாக்கி சூடு முடியறவரைக்கும் இருந்து இருக்கு. எங்க யூகம் முதலில் ஜாஷ்வா அவங்க ரெண்டு பேரையும் வெளியே வராம காரில் இருக்கும் படி சொல்லிட்டு தான் மட்டும் மீட்டிங்கில் கலந்துட்டு இருக்கான். அவங்க ரெண்டு பேருக்கும் அங்கே என்ன நடந்ததுன்னு இன்னும் சரியா தெரியும்ன்னு நினைக்கறேன். அந்த மொபைல் நம்பர் ரெண்டும் ஹார்லத்தில் இருக்கும் ரெண்டு பேரோடது. ஜாஷ்வா அவங்க மூலம் தன் நண்பர்களுக்குன்னு சொல்லி வாங்கி இருக்கான். இதை எல்லாம் வெச்சு பாத்தா ஜாஷ்வாவும் சஞ்சனாவும் அந்த ரெண்டு பேருக்கும் ஒரு ஷீல்ட் மாதிரி பாதுகாப்பு கொடுத்துட்டு இருந்து இருக்காங்க"Friday, 29 May 2009 4:30 PM Central European Time
Transit Lounge, Frankfurt International Airport, Germany
வெள்ளி, மே 29 2009 மத்திய ஐரோப்பிய நேரம் மாலை 4:30
மாற்றுப்பயணியர் ஓய்வறை, ஃப்ராங்க்ஃபர்ட் சர்வதேச விமான நிலையம், ஜெர்மனி
நியூ யார்க்கில் சற்று தாமதமாக புறப்பட்ட அவர்களது விமானம் சற்று நேரத்துக்கு முன்னர் ஃப்ராங்க்ஃபர்ட் வந்து சேர்ந்து இருந்தது. அடுத்து மும்பை செல்லும் விமானம் புறப்பட இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது.
ட்ரான்ஸிட் லௌஞ்சில் அமர்ந்த நண்பர்கள் அங்கு இருந்த வை-ஃபையில் அவர்கள் லாப்-டாப்பை இணைத்து முதலில் நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாளின் வலை தளத்துக்கு சென்றனர். முந்தைய தினம் நடந்த துப்பாக்கிச் சூட்டைப் பற்றிய செய்தி முதல் பக்கத்தில் வெளியாகி இருந்தது. அங்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி எஃப்.பி.ஐ இன்னும் விசாரணை நடத்திக் கொண்டு இருந்ததாகவும். அந்த துப்பாக்கிச் சூட்டில் பல்லவ் ஷா என்பவன் மட்டும் உயிரோடு இருப்பதாகவும் மற்றவர் எவரும் உயிர் பிழைக்க வில்லை என்றும் வெளியாகி இருந்தது. இறந்தவர்கள் ஒவ்வொரின் பெயரும் புகைப் படமும் வெளியாகி இருந்தது. உயிரோடு இருந்த பல்லவ் ஷாவின் புகைப் படமும் வெளியாகி இருந்தது.
நண்பர்கள் இருவரும் அவர்கள் பயந்தது நடந்ததில் கடவுள் என்று ஒன்று இல்லை என்ற முடிவுடன் அமர்ந்து இருந்தனர்.
சக்தி, "நித்தின், I want them to pay for this"
நித்தின், "எஸ், என்ன செய்யலாம்?"
சக்தி, "இந்தியா போனதும் எப்படியும் அவனுக நம்மை அணுகுவாங்க. அப்ப அவங்களை கையும் களவுமா பிடிச்சுக் கொடுக்கணும். முடிஞ்சா நாமே அவங்களில் ஒண்ணு ரெண்டு பேரை போட்டுத் தள்ளனும்"
நித்தின், "I am game"
சக்தி, "சோ, நாம் R&AW கிட்ட போக வேண்டாம். அந்த ஸான்ட்ரா மாதிரி யாராவது அவங்களுக்கு R&AWக்கு உள்ளேயே ஆள் இருக்கலாம். நம்மை அப்படிப் பட்டவங்க யாராவுது நம்மை பார்த்தா நம்மை அணுக மாட்டாங்க. பதிலா, தக்க நேரத்தில் தகவல் கொடுக்கறோம், தீவிரவாதிகளை பிடிக்க தேவையான ஆள்பலத்தோட பெங்களூரில் காத்துட்டு இருக்கும் படி ஒரு மெயில் மட்டும் அனுப்புவோம். திங்கள் கிழமை ஆஃபீஸுக்கு போகலாம். நிச்சயம் அவங்க நாம் அங்கே வரோமான்னு ஆள் வெச்சு பாத்துட்டு இருப்பாங்க. அவங்களே நம்மை அணுகுவாங்க"
நித்தின், "ஒரு சின்ன மாற்றம் ... "
சக்தி, "என்ன?"
நித்தின், "எப்படியும் நாம் கொஞ்ச நாள் லீவ் எடுத்துட்டு போறதா இருந்தோம். ஆஃபீஸுக்கு போறதுக்கு முன்னால் கொஞ்ச நாள் தலைமறைவா இருந்து அவங்களை நம் மாங்க்ஸ் பாட் நெட் மூலமே கொஞ்சம் நோண்டினா என்ன? நமக்கு கிடைக்கும் தகவலை R&AWக்கும் எஃப்.பி.ஐக்கும் முதலில் அனுப்புவோம். அதுக்கு அப்பறம் ஆஃபீஸுக்கு போவோம்"
சக்தி, "குட் ஐடியா .. அது மட்டும் இல்லை. அவங்களோட டெபாசிட் வந்த விவரங்களையும் ஜாஷ்வா நம்மிடம் பகிர்ந்துகிட்டதா சொல்லி அனுப்பலாம்"
நித்தின், "சக்தி, அதனால் நம் ரிவர்ஸ் ட்ரான்ஸ்ஃபர் விவரம் எஃப்.பி.ஐக்கு தெரியவரும்"
சக்தி, "இல்லை, ஹாஃப்மன் ஜாஷ்வாவுக்கு கொடுத்ததா சொல்லலாம்"
நித்தின், "நம்புவாங்களா?"
சக்தி, "ரெண்டு பேரும் உயிரோடு இல்லை. அவங்க மூலம் வந்த சில விவரங்களை நாம் எஃப்.பி.ஐக்கு கொடுக்கறோம். நிச்சயம் அவங்களுக்கு அது உதவும். அந்த விவரம் கொடுத்த நம்மை அவங்க சந்தேகிக்க வாய்ப்பு இல்லைன்னு தோணுது. அப்படியே அவங்க சந்தேகிச்சாலும் ... I don't care" என்றபடி தன் வெறுப்பை வெளிப்படுத்தினான். மறுபடி அவன் கண்கள் கலங்கின ...
நித்தின், "ஓ.கே டன்"Saturday, 30 May 2009 9:30 AM
Chatrapati Shivaji International Airport, Mumbai
சனி, மே 30, 2009 காலை 9:30
சத்ரபதி ஷிவாஜி சர்வதேச விமான நிலையம், மும்பை
ஒன்பது மணி நேரப் பிரயாணத்தில் முதல் ஆறு மணி நேரமும் நித்திரையில் ஆழ்ந்து இருந்தனர். மும்பையை அடைவதற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கும் போது அடுத்த திட்டத்தைப் பற்றி விவாதிக்க தொடங்கினர்.
சக்தி, "ஏர்போர்ட்டுக்கு உள்ளேயே ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வேண்டிய மேக்-அப்பை போட்டுக்கணும்"
நித்தின், "எனக்கு மேக்-அப் கொஞ்சம்தான். உனக்குத்தான் நேரம் எடுக்கும்"
சக்தி, "நல்ல வேளை பிஸினஸ் க்ளாஸ்ல டிக்கட் எடுத்தோம். பிஸினஸ் க்ளாஸ் லௌஞ்சில் ப்ரைவேட் ரூம்ஸ் இருக்கு. நிதானமா செஞ்சுக்க முடியும்"
நித்தின், "ஆனா அது தேவையாடா?"
சக்தி, "நம்மை எப்படி ட்ரேஸ் பண்ணுவாங்கன்னு தெரியலை. நான் அவங்க இடத்தில் இருந்தா நாம் அமெரிக்காவை விட்டு புறப்பட்டுட்டோம்ன்னு தெரிஞ்ச உடன் இங்கே ஏர்போர்ட்களை கண்காணிக்க ஏற்பாடு செஞ்சு இருப்பேன்"
நித்தின், "அமெரிக்காவில் இருந்து புறப்பட்டுட்டோம்ன்னு அவங்களுக்கு அடுத்த நாள் தான் தெரிஞ்சு இருக்கும். அதுவும் ஆஃபீஸ்ல விசாரிச்சு இருந்தா. ஆனா எந்த ஏர்போர்ட்டில் வந்து இறங்குவோம்ன்னு அவனுகளுக்கு எப்படி தெரியும்?"
சக்தி, "நாம் அந்த ஈமெயிலை அனுப்பாம இருந்து இருந்தா R&AW என்ன செஞ்சு இருப்பாங்க?"
நித்தின், "எல்லா ஏர்போர்ட்டில் இருக்கும் போலீஸ் ஃபோர்ஸையும் அலர்ட் பண்ணி இருப்பாங்க. இம்மிக்ரேஷன் க்ளியரன்ஸ் ஆன உடனே போலீஸ் ஃபோர்ஸுக்கு நாம் வந்துட்டோம்ன்னு தெரிஞ்சு இருக்கும். உடனே தகவல் R&AWவுக்கு கொடுப்பாங்க"
சக்தி, "அதேதான் இப்பவும் நடக்கும். நிச்சயம் அவனுகளுக்கு எல்லா ஊர்லயும் போலீஸ் ஃபோர்ஸ்ல காண்டாக்ட் இருக்கும். R&AWவுக்கு பதிலா இவனுகளுக்கு தகவல் போகும்"
நித்தின், "சோ, என்ன செய்யப் போறோம்?"
சக்தி, "ஏர்போர்ட்டில் கஸ்டம்ஸ் இம்மிக்ரேஷன் க்ளியரன்ஸ் முடிஞ்சதும் பிஸினஸ் க்ளாஸ் லௌஞ்சில் ப்ரைவேட் ரூம் எடுத்து நம் மேக்கப்பை முடிச்சுக்கறோம். அடுத்தது ஏர்போர்ட் ஷட்டில் சர்வீஸ் க்யூவுக்கு போறோம். அங்கே நம்மை எதிர்பார்க்க மாட்டாங்க. வெளியில் வந்தது டாக்ஸி பிடிப்போம்ன்னு நினைச்சுட்டு இருப்பாங்க. பத்தரை மணிக்கு ஜெட் ஏர்வேஸ் கோவை ஃப்ளைட் பிடிக்கறோம்"
நித்தின், "கோவையில் என்ன ப்ளான்?"
சக்தி, "ரெண்டேகால் மணி நேர ஃப்ளைட். போய் சேரும்போது பேங்க்ஸ் திறந்து இருக்கும். பாங்க் போறதுக்கு முன்னாடி செகண்ட் ஹாண்ட் கார் விக்கறவங்களை அணுகி ஒரு வண்டியை விலை பேசறோம். அங்கே இருந்து பேங்க்குக்கு போய் வண்டிக்கும் சேர்த்து கேஷ் எடுத்துக்கறோம். காசை கொடுத்து வண்டியை எடுத்துட்டு நேரா குன்னரில் இருக்கும் என் ஃப்ரெண்டோட கெஸ்ட் ஹவுஸுக்கு போறோம். அங்கே உக்காந்து நம் நோண்டல் வேலையை தொடங்கறோம்"
நித்தின், "நெட் கனெக்க்ஷன் அங்கே நல்லா இருக்குமா?"
சக்தி, "சூப்பரா இருக்கும். ஒரு 4MBPS லைனில் அந்த கெஸ்ட் ஹவுஸில் ஒவ்வொரு ரூமுக்கும் கனெக்க்ஷ்ன் கொடுத்து இருப்பதா சொன்னான். தவிர ஒரு பாக்-அப் லைனும் இருக்குன்னு சொல்லி இருக்கான். நேத்து நான் பேசினப்ப அந்த பாக்-அப் லைனை நமக்குன்னு ஒதுக்கிக் கொடுப்பதா சொன்னான்"
நித்தின், "Sounds good. ஆனா, நம்ம ஆளுங்க நம்மை தேடாம இருக்கணும்"
சக்தி, "நம்மை தேட வேண்டாம்ன்னு ஈமெயில் அனுப்பி இருக்கோம். இருந்தாலும் அவங்க கண்ணிலும் படாம இருக்கத்தான் இந்த ஏற்பாடு"
லுஃப்தான்ஸா விமானம் ஃப்ராங்க்ஃபர்டில் இருந்து சற்று காலதாமதமாக வந்து இறங்கியிருந்தது. பாக்கேஜ் கரூஸலில் இருந்து தங்களது பெட்டிகளை எடுத்துக் கொண்டு கஸ்டம்ஸ் க்ளீயரன்ஸ் முடித்து வெளிவந்த சக்திவேலும் நித்தினும் உடனே பிஸினஸ் க்ளாஸ் பயணிகளுக்கான லௌஞ்சில் இருக்கும் ப்ரைவேட் ரூம் ஒன்றிற்குள் பெட்டிகளுடன் புகுந்தனர்.
மறுபடி விமானம் ஏறுவதற்கு முன்னர் நண்பர்கள் இருவரும் ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் எஞ்சி இருந்த நேரத்தில் சில பொருட்களை வாங்கி இருந்தனர். சக்திவேல் அங்கு ஒரு முடிவெட்டும் ஹேர் க்ரூமினங்க் கிட், கதரைப் போன்று தோற்றமளிக்கும் உயர்தர லினன் ஷர்ட், தடிமனான ஃப்ரேம் கொண்ட பவர் இல்லாத கண் கண்ணாடி, ஒரு விலை உயர்ந்த தோல் ப்ரீஃப் கேஸ் ஆகியவைகளை வாங்கி இருந்தான். நித்தின் மார்புக்கு குறுக்கே மிக கொச்சையான ஒரு வாசகம் அச்சிட்டு இருந்த இளம் கல்லூரி மாணவர்கள் அணியும் டீ-ஷர்ட் ஒன்றையும், இன்னொரு கருப்புக் கண்ணாடியையும், தொப்பியும் வாங்கி இருந்தான். நியூ யார்க்கில் புறப்படுவதற்கு முன் தினம் காலைக்கு பிறகு அவன் ஷேவ் செய்வதை தவிர்த்து இருந்தான்.
இவைகளின் உதவியுடன் நண்பர்கள் இருவரும் வெளிவரும் போது உருவத்தில் முற்றிலும் மாறுபட்டுத் தோன்றினர்.
சக்திவேல் பார்ப்பதற்கு கோவை மாவட்டத்தை சேர்ந்த அரசியலுக்குள் நுழையலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கும் ஒரு நடுவயது தொழில் அதிபர் போல் காட்சியளித்தான். எப்போதாவது உதவும் என்று பெட்டியில் வைத்து இருந்த வேஷ்டியும் கால் செருப்புகளும், மனோகரி வற்புறுத்தி அனுப்பிவைத்த விபூதிப் பொட்டலமும், தங்கைக்காக வாங்கி இருந்த கெட்டியான தங்கச்சங்கிலியும் அவனுக்கு அந்த தோற்றத்தை கொடுக்க உதவி இருந்தன. அருகில் நித்தின் மூன்று நாள் தாடியுடன் அவனது மகனைப் போல் தோன்றினான்.Saturday, 30 May 2009 10:30 AM
Conference Room, R&AW Headquarters, CGO Complex, New Delhi
சனி, மே 30, 2009 காலை 10:30
கலந்தாய்வுக் கூடம், R&AW தலைமை அலுவலகம், CGO காம்ப்ளெக்ஸ், புது தில்லி
ஜாயிண்ட் டைரக்டர் அவர்களுக்காக காத்து இருந்தார். முரளீதரன், வந்தனா மற்றும் தீபா உள்ளே நுழைந்தனர்.
ஜாயிண்ட் டைரக்டர், "Please take your seats .. "
முரளீதரன், "என்ன சார்? அவசரமா வரச்சொன்னீங்களாமே?"
ஜாயிண்ட் டைரக்டர், "முரளீ, நீ என்னை ரொம்ப தர்மசங்கடமான நிலையில் நிறுத்தி இருக்கே"
முரளீதரன், "என்ன சார் ஆச்சு? எனக்கு ஒண்ணும் புரியலை"
அப்போது R&AWவின் டைரக்டரும் வெளியுறவு அமைச்சகத்தின் காரியதரிசியும் உள்ளே நுழைய எல்லோரும் எழுந்து நின்றனர்.
டைரக்டர், "ம்ம்ம் ... ப்ளீஸ் ப்ரொஸீட் .. "
காரியதரிசி, "மாங்க்ஸ் பாட் நெட்டைப் பத்தியும் அதை உருவாக்கினவங்களைப் பத்தியும் முழுவதும் தெரிஞ்சுட்டே அவங்களை நாம் இவ்வளவு நாளும் ஏமாத்தி இருக்கோம்ன்னு அதிகார பூர்வமா கம்ப்ளெயிண்ட் வந்து இருக்கு. They are shouting that we made a fool of them"
முரளீதரன், "இல்லை. ரெண்டு நாளைக்கு முன்னாடி வரைக்கும் எங்களுக்கு தெரியாது"
ஜாயிண்ட் டைரக்டர், "வந்தனா, என்னது இது? நீ ஒரு பொறுப்புள்ள போலீஸ் ஆஃபீஸர் அப்படின்னுதானே உன்னை இந்த பிரிவில் சேர்த்தேன்?"
வந்தனா, "நீங்க என்ன சொல்றீங்க புரியலை. ஆனா இதுவரைக்கும் நான் என் கடமையில் எந்த தவறும் செய்யலை"
காரியதரிசி, "ம்ம்ம் ... சக்திவேல் முத்துசாமி அண்ட் நித்தின் தேஷ்பாண்டே. இவங்க ரெண்டு பேருடனும் நீங்க உங்க அசைன்மெண்ட் ஆரம்பிச்ச நாளில் இருந்து தொடர்பு இருந்து இருக்கு அப்படின்னு ஆதாரத்தோட அமெரிக்க அரசாங்கம் சொல்லுது"
முரளீதரன், "அவங்க ரெண்டு பேர்தான் மாங்க்ச் பாட் நெட்டை உருவாக்கினாங்கன்னு எஃப்.பி.ஐக்கு எப்படி தெரிஞ்சுது?"
டைரக்டர், "இன்னும் திட்ட வட்டமா அவங்களுக்கு தெரியலை. அவங்க ரெண்டு பேராத்தான் இருக்கும்ன்னு யூகிச்சு இருக்காங்க"
முரளீதரன், "சார், முதலில் நான் என் பக்கத்தில் என்ன நடந்ததுன்னு விளக்கி சொல்றேன். அப்பறம் நீங்க சொல்லுங்க. வந்தனாவும் தீபாவும் அவங்க ரெண்டு பேரையும் முதல் முதலா அசைன்மெண்ட் எடுத்துக்கப் போனப்பதான் சந்திச்சாங்க. நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆனாங்க. அதுக்கு பிறகு ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிச்சுப் போக காதலிக்க ஆரம்பிச்சாங்க. அதுக்கு அப்பறம் அவங்க குடும்பங்களும் சந்திச்சு பேசி கல்யாணத்துக்கு நாள் குறிக்க இருக்காங்க. சக்தியோ நித்தினோ தாங்கள் தான் மாங்க்ஸ் பாட் நெட்டை உருவாக்கினதா இதுவரைக்கும் வந்தனாகிட்டயும் தீபாகிட்டயும் சொன்னது இல்லை. அதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. இதுவரைக்கும் வந்தனாவோ தீபாவோ தாங்கள் என்ன அசைன்மெண்டில் இருக்கோம்ன்னு சக்தி, நித்தின் கிட்ட சொன்னது இல்லை. சோ, நாம் அவங்களை ப்ளேம் பண்ண முடியாது. பட், நிச்சயம் சக்தி, நித்தினுக்கு வந்தனாவும் தீபாவும் மாங்க்ஸ் பாட் நெட்டை கண்டு பிடிக்கும் வேலையில் இறங்கி இருக்காங்கன்னு தெரிஞ்சு இருக்கு. கடைசியா நித்தின் தீபா ஃபோனில் பேசினப்ப அவன் எங்களுக்கு தெரியும் அப்படிங்கற மாதிரி மாங்க்ஸ் பாட் நெட்டை தீவிர வாதிகள் கைப் பற்ற முயற்சி செய்வதா சொல்லி இருக்கான்."
டைரக்டர், "நீங்க சொல்றது உண்மையா இருந்தா, இந்த மாதிரி ஒரு கோயின்ஸிடன்ஸை என் சர்வீஸில் இதுவரைக்கும் நான் பார்த்தது இல்லை"
காரியதரிசி, "பட் முரளீதரன், அந்த மாதிரி ஒரு வேலையை செஞ்சவங்களுக்கு நீங்க வக்காலத்து வாங்கற மாதிரி இருக்கு"
தீபா, "எந்த மாதிரி வேலை? இதுவரைக்கும் அவங்க எந்த சட்ட விரோதமான செயலிலும் ஈடு படலை. மாங்க்ஸ் பாட் நெட் மூலம் என்னல்லாமோ செய்ய முடியும் ஆனா அவங்க அந்த மாதிரி எதுவும் செய்யலை. வெறும் விளம்பர ஈமெயில் அனுப்பினாங்க"
தீபாவின் பேச்சில் முரளிதரனும் ஜாயிண்ட் டைரக்டரும் சற்று நெளிந்தனர்.
காரியதரிசி சற்று தடுமாறி விழிக்க, முரளீதரன் அவர் உதவிக்கு வந்து மாங்க்ஸ் பாட் நெட்டைப் பற்றி விளக்கிச் சொன்னார்.
காரியதரிசி, "இருந்தாலும் முரளி இது ஒரு ஜாயிண்ட் ஆபரேஷன். உங்களுக்கு தெரிஞ்சப்பறமும் எஃப்.பி.ஐகிட்டே நீங்க ஏன் சொல்லலை?"
முரளீதரன், "சார், மாங்க்ஸ் பாட் நெட் இந்த கால கட்டத்தில் ஒரு அணு ஆயுதம் மாதிரி. அதை உருவாக்கினவங்க இந்தியர்கள். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் இல்லை. இந்தியாவில் பிறந்து வளர்ந்து இந்தியாவில் இருந்தபோதே அதை உருவாக்கின இந்தியர்கள். இந்தியர்கள் உருவாக்கிய அப்படிப் பட்ட ஒரு சக்திவாய்ந்ததை எதுக்கு அமெரிக்காவுக்கு தூக்கிக் கொடுக்கணும்? அமெரிக்க அரசாங்கம் அவங்களை வளைச்சுப் பிடிச்சு எப்படியாவது அவங்ககிட்ட இருந்து மாங்க்ஸ் பாட் நெட்டை கைப் பற்ற முயற்சி செய்யும். இப்பவும் சக்தியும் நித்தினும் அவங்க கையில் கிடைக்காததால்தான் இந்த அளவுக்கு சத்தம் போடறாங்க. கிடைச்சு இருந்தா அவங்களை எங்கேயாவது அடைச்சு வெச்சுட்டு இன்னும் தேடிட்டு இருப்பதா நம்மிடம் பொய் சொல்லி இருப்பாங்க. அவங்க ஸ்தானத்தில் இருந்து இருந்தா நானும் அதைத் தான் செஞ்சு இருப்பேன். எப்படியும் இன்னைக்கு அல்லது நாளைக்கு இந்தியா வந்துடுவாங்க. அதுக்கு பிறகு நாம் அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி மேற்கொண்டு மாங்க்ஸ் பாட் நெட் யார் கையில் இருக்கணும்ன்னு முடிவெடுக்கலாம். அதை முழுக்க முழுக்க அமெரிக்காவிடம் ஒப்படைக்க சக்தியும் நித்தினும்கூட விரும்ப மாட்டாங்க. அதனால் தான் ஷான்கிட்ட அவங்க ரெண்டு பேரையும் பத்தி சொல்லலை"
டைரக்டர், "வெல் டன் முரளி"காரியதரிசி, "My God! I really appreciate what you have done!! நான் உடனே இதை SMK சார் மூலம் PMக்கு ஒரு அப்டேட் கொடுக்கச் சொல்றேன். அவங்க காட்டின அதிகாரத்தைப் பார்த்தா நிச்சயம் அவங்க ப்ரெஸிடெண்ட்டை நம் பி.எம்கிட்ட பேசச் சொல்லுவாங்க. நீங்க மேற்கொண்டு என்ன செய்வதுன்னு பாருங்க. அவங்க ரெண்டு பேருக்கும் எதுவும் ஆகக் கூடாது. ஹோம் மினிஸ்ட்ரி மூலம் ஒரு நேஷன்வைட் அலர்ட் கொடுக்கச் சொல்லலாமா?"
முரளீதரன், "சார், We know our forces are infiltrated. யாருக்கும் எதுவும் சொல்ல வேண்டாம். இதுக்கு நடுவில் சக்தியிடம் இருந்து நேத்து நைட்டு ஈமெயில் வந்து இருக்கு. அவங்க இந்தியா வந்ததும் உடனே நம்மை அணுகப் போறது இல்லையாம். அவங்க ரெண்டு பேரையும் ஜாஷ்வா-சஞ்சனா இழப்பு ரொம்ப பாதிச்சு இருக்கு. தீவிரவாதிகள் தங்களை அணுகுவாங்கன்னு அவங்களுக்கு தெரியும். அதுக்கு நல்ல சமயம் வரும்வரை எங்கேயோ தலைமறைவா சில நாட்கள் இருந்துட்டு அதுக்கு அப்பறம் பெங்களூர் வருவதாவும் பெங்களூரில் தீவிரவாதிகளை பிடிக்க தகுந்த ஆள் பலத்தோட காத்து இருக்கும்படியும் சொல்லி இருக்காங்க"
காரியதரிசி, "யார் இந்த ஜாஷ்வா, சஞ்சனா?"
முரளீதரன், "ஜாஷ்வாதான் அந்த மூணாவது ஹாக்கர் அமெரிக்காவில் அவங்க இருந்தப்ப அவங்களுக்கு ஒரு மெண்டர் மாதிரி இருந்தவன். சஞ்சனா அவன் மனைவி. சக்திவேலும் சஞ்சனாவும் அண்ணன் தங்கை மாதிரி பழகிட்டு இருந்தாங்க"
டைரக்டர், "Too many personal involvement in this case ... I am not happy about it"
முரளீதரன், "Neither am I. ஆனா இந்த சமயத்தில் அதை நமக்கு சாதகமா பயன் படுத்திக்கலாம்"
ஜாயிண்ட் டைரக்டர், "சரி, பிடிபடாம இருக்கற அளவுக்கு அவங்களுக்கு திறமை இருக்கா?"
முரளீதரன் வந்தனாவையும் தீபாவையும் பார்த்து பெருமூச்சு விட்ட பிறகு, "இது அவங்களா எடுத்த முடிவு. எங்களுக்கு என்னவோ அவங்க ரெண்டு பேரும் அடுத்த சில நாட்களில் எதோ செய்யப் போறாங்கன்னு தோணுது"
காரியதரிசி, "அவங்களால என்ன செய்ய முடியும்?"
முரளீதரன், "அவங்க உருவாக்கின மாங்க்ஸ் பாட் நெட் அவங்க கன்ட்ரோலில் இருக்கு. நிறைய செய்யலாம்"
ஜாயிண்ட் டைரக்டர், "பழிவாங்க எதாவது செய்வாங்கன்னு தோணுதா?"
முரளீதரன், "எஸ்!"
காரியதரிசி, "யாரை?"
முரளீதரன், "Obviously தீவிரவாதிகளைதான். ஆனா எப்படின்னு எங்களால யூகிக்க முடியலை"
டைரக்டர், "இதனால் அவங்களுக்குத்தானே இன்னும் அபாயம்?"
முரளீதரன், "அதுவும் அவங்களுக்கு நிச்சயம் தெரிஞ்சு இருக்கும். ஆனா சார், அந்த மாதிரி ஒரு மென்பொருளை எழுதினவங்க நிச்சயம் முன்னேற்பாடோடதான் செயல் படுவாங்கன்னு தோணுது"
டைரக்டர், "இருந்தாலும் நீங்க ஏன் அவங்களை தேடிக் கண்டு பிடிக்காம இருக்கீங்க?"
முரளீதரன், "தேடி கண்டுபிடிச்சாலும் அரெஸ்ட் செய்யப் போறது இல்லை. செய்யவும் முடியாது. அவங்க ரெண்டு பேருக்கும் அவங்களுக்கு தெரியாமல் பாதுகாப்பு மட்டும் கொடுக்க தேவையான ஏற்பாடுகளை ஸீ.பி.ஐ மூலம் செஞ்சு இருக்கேன்." என்றவர் ஜாயிண்ட் டைரக்டரைப் பார்த்து, "Sorry சார், உங்களை கேட்காமல் செஞ்சுட்டேன்"
ஜாயிண்ட் டைரக்டர், "அதனால் என்ன பரவால்லை. சார் சொன்ன மாதிரி அவங்க இப்ப நேஷனல் ட்ரெஷர் அவங்க ரெண்டு பேருக்கும் எதுவும் ஆகக் கூடாது"
முரளீதரன், "I will put my best efforts in it Sir"
காரியதரிசி, "தாங்க்ஸ் முரளி. இந்திய அமெரிக்க உறவுக்கு நீங்க ஒரு புதுப் பரிமாணத்தை கொடுத்து இருக்கீங்க"
முரளீதரன், "பட், இதனால் NTROவை அமைப்பதில் அவங்களோட மத்த ஒத்துழைப்பு கிடைக்காம போகுமா? அதுதான் என் பயம்"
காரியதரிசி, "NTROவின் அமைப்பினால் அமெரிக்க அரசாங்கமும் பயன் அடையப் போகுது. இப்ப இந்த மாங்க்ஸ் பாட் நெட் விஷயத்தில் நம் நடத்தையினால் இனிமேல் எல்லா விஷயத்திலும் நம்மை கொஞ்சம் மரியாதையா நடத்துவாங்க. அதெல்லாம் நாங்க பாத்துக்கறோம். நீங்க கவலைப் படாதீங்க."
டைரக்டர், "சோ முரளி, அவங்க ரெண்டு பேருக்கும் எதுவும் ஆகாமல் பாத்துக்குங்க"
முரளீதரன், "நிச்சயமா சார். ஆனா எனக்கு ஒரு சந்தேகம். அவங்க எப்படி சக்தி-நித்தின் இவங்க ரெண்டு பேர்தான்னு கண்டு பிடிச்சாங்க?"
ஜாயிண்ட் டைரக்டர், "இறந்து போனதா அறிவிச்ச ஜாஷ்வாவின் ஜாக்கெட்டில் ஒரு க்ளாக் செமி ஆடோமாடிக் இருந்து இருக்கு. க்ரைம் சீனில் இருந்த மத்த பொருள்களோட இதிலும் கைரேகை எதாவது இருக்கான்னு பார்த்து இருக்காங்க. அதில் சக்திவேல் நித்தின் இவங்க ரெண்டு பேர் கைரேகையும் இருந்து இருக்கு"
காரியதரிசி, "ஓ, இப்ப எல்லாம் அமெரிக்காவுக்குள் நுழையும் எல்லார் கைரேகையும் அவங்க டேட்டா பேஸில் ஸ்டோர் செஞ்சு வெச்சு இருக்காங்க இல்லையா?"
ஜாயிண்ட் டைரக்டர், "எஸ் சார். ... அவங்க பாஸ்போர்ட் நம்பரை வெச்சுட்டு எங்கே எல்லாம் போயிருக்காங்கன்னு ஸர்ச் பண்ணி இருக்காங்க. அங்கே இருந்த ஒரு வருஷத்தில் வெவ்வேறு ரிசார்ட்களில் தங்கி இருக்காங்க. பலமுறையும் இவங்க தங்கின நாட்களில் ஜாஷ்வாவும் சஞ்சனாவும் தங்கி இருக்காங்க. பல முறை எல்லொருக்கும் ஜாஷ்வாவே பே பண்ணி இருக்கான். இதனால் கில்9 மோர்லா அப்படிங்கறது சக்திவெல் நித்தினாத்தான் இருக்கும்ன்னு யூகிச்சு இருக்காங்க. ஒரு முறை ஒரு ரிசார்ட்டுக்கு ஜாஷ்வாவின் விருந்தினரா சக்திவேல், நித்தின், வந்தனா, தீபா இந்த நாலு பேரும் போய் இருக்காங்க. அதைப் பார்த்தப்பறம்தான் நம் மேல் சந்தேகம் வந்து இருக்கு"
முரளீதரன், "ம்ம்ம் ... கண்டு பிடிச்சுடுவாங்கன்னு தெரியும் இவ்வளவு சீக்கரம் கண்டு பிடிப்பாங்கன்னு நினைக்கலை"
டைரக்டர், "தீவிரவாதம் என்கிற விஷயத்தில் இப்ப எல்லாம் அமெரிக்கா ரொம்ப வேகமா செயல் படுது. Any how, அவங்களை பத்திரமா பாத்துக்குங்க வெளி ஆளுங்களை பத்தி மட்டும் நான் சொல்லலை முரளீ. உங்க ரெண்டு டீம் மெம்பர்ஸ்கிட்ட இருந்தும் அவங்களை நீங்க காப்பாத்த வேண்டி இருக்கும். அவங்க கைக்கு கிடைச்சதும் தீபாவும் வந்தனாவும் அவங்களை ஒண்ணும் செய்யாம பாத்துக்குங்க" என்று ஜோக் அடித்து தோய்ந்து போயிருந்த தோழிகள் இருவரின் முகத்திலும் சிறு புன்னகை வரவழைத்தபடி காரியதரிசியுடன் விடைபெற்றுச் சென்றார்.ஜாயிண்ட் டைரக்டர், "சோ முரளீ, The ball is in your court again .. இந்த ஆபரேஷன் முடியறவரைக்கும் தயவு செஞ்சு எதையும் என்கிட்ட மறைக்காதே .. I don't like cuttting a sorry figure"
முரளீதரன், "You know very well it was not intentional ... Anyhow இனிமேல் உங்களை எந்த விதமான தர்மசங்கடத்திலும் ஆழ்த்த மாட்டேன்"
ஜாயின்ட் டைரகரும் விடைபெற்றுச் சென்றார்.
வந்தனா, "சார், இந்நேரம் லாண்ட் ஆகி இருந்தா நியூஸ் வந்து இருக்கணும் இல்லையா? ஸீ.பி.ஐயிடம் தகவல் கொடுக்க சொன்னீங்களா?"
முரளீதரன், "நான் அவரிடம் ஸீ.பி.ஐ மூலம் பாதுகாப்பு கொடுத்து இருக்கேன்னு சொன்னது பொய்"
வந்தனா, "என்ன சொல்றீங்க?"
தீபா, "என்ன சார் இப்பத்தான் அவர்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்றேன்னு சொன்னீங்க?"
முரளீதரன், "ம்ம்ம் புளுகினேன்!"
வந்தனா, "சார், பீ சீரியஸ்"
முரளீதரன், "The risk of loosing a piece of intelligence increases with the number of ears it reaches. என்னதான் என்னோட பாஸ் ஆக இருந்தாலும் யாராவது அவரிடம் இதைப் பத்தி கேட்பாங்க. தெரிஞ்சும் தெரியாத மாதிரி அவரால் காண்பிச்சுக்க முடியாது. லீக் அவுட் ஆகும். ஐ.எஸ்.ஐ நம் அரசாங்க அமைப்பில் இருக்கும் ஒவ்வொரு விரிசலையும் பயன் படுத்திட்டு இருக்கு."
வந்தனா, "அப்ப அவங்களுக்கு பாதுகாப்பு?"
முரளீதரன், "அதைப் பத்தி நீ கவலைப் படாதே. I have a network of friends. அவங்க பாத்துப்பாங்க"
வந்தனா, "சரி, இப்ப அவங்க எங்கே இருக்காங்க?"
முரளீதரன், "இரு சொல்றேன்" என்ற பிறகு அவரது கைபேசிக்கு வரிசையாக வந்து இருந்த எஸ்.எம்.எஸ்களைப் பார்த்து முடிவாக வந்து இருந்ததைப் பார்த்தபின், "இப்போ அவங்க கோவையில் ஒரு செகண்ட் ஹாண்ட் கார் டீலர்கிட்ட பேசிட்டு இருக்காங்க. நாம் மீட்டிங்க் போறதுக்கு முன்னாடி மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி ஏர்போர்ட் ஷட்டில் உபயோகிச்சு டொமெஸ்டிக் ஏர்ப்போர்ட்டுக்கு போனாங்க. சக்தி அருமையா வேஷம் போட்டுட்டு இருந்தான். எங்க ஆளுக்கு சந்தேகம் அவன்தானான்னு எனக்கு எம்.எம்.எஸ் அனுப்பி கன்ஃபர்ம் பண்ணினான். இதோ பாரு" என்றவாறு கையில் ப்ரீஃப் கேஸுடன் ஒரு கோவைத் தொழில் அதிபர் போல் முன்னால் சக்தி நடக்க பின்னால் ஒரு மாணவனைப் போல் காதில் ஐ-பாட் சொருகிய நித்தின் காட்சியளிக்கும் புகைப்படத்தைக் காட்டினார்.
வாங்கிப் பார்த்த வந்தனா கண் பனிக்க, "அவனோட அப்பா மாதிரி இருக்கான்" என்றபடி தீபாவிடம் அதை காட்டினாள்.
தீபா சற்று கண்கள் கலங்கி ஆனால் சிரித்தபடி, "யாராவுது என்ன பாட்டு கேக்கறேன்னு கேட்டா போதும். அவன் வேஷம் போட்டு இருக்கான்னு தெரிஞ்சுடும். அவனுக்கும் ம்யூசிக்குக்கும் ரொம்ப தூரம். I hope they hang on safe"
வந்தனா, "சார் யார் அவங்களை கண்காணிக்கறாங்க?"
முரளீதரன், "வந்தனா, போலீஸ் ஃபோர்ஸில் ஒரு பத்து வருஷம் இருந்து இருந்தா உனக்கு தெரிஞ்சு இருக்கும். இந்த நெட்வொர்க்குக்கு பேர் இல்லை. இதில் இருப்பவங்க யாரும் யாருடைய உதவியையும் நாடலாம். ஆனா அது சுயநலத்துக்காக இருக்கக் கூடாது. இதில் முதலில் ஐ.பி.எஸ் ஆஃபீஸர்ஸ் மட்டும் இருந்தாங்க. இப்போ அதில் கஸ்டம்ஸ், முப்படைகள், பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் இப்படி பல துறைகளில் இருக்கும் ஆஃபீஸர்ஸும் இருக்காங்க. ஒவ்வொருத்தருக்கு கீழேயும் ரொம்ப நம்பகமான சில ஆளுங்க இருப்பாங்க. சக்தியும் நித்தினும் கஸ்டம்ஸ் க்ளியரன்ஸ் ஆன உடனே அதில் இருக்கும் ஒரு கஸ்டம்ஸ் அதிகாரி அவங்களை பார்த்துட்டு அவரோட ஆளை பின் தொடரச் சொன்னார். அந்த ஆள் எடுத்த ஃபொட்டோதான் இது. அவங்க டொமெஸ்டிக் ஏர்ப்போர்ட்டை அடைஞ்சதும் அங்கே இருக்கும் ஸீ.ஐ.எஸ்.எஃப் அதிகாரி ஒருத்தர் அவங்க கோவை விமானம் ஏறும் வரைக்கும் கவனிச்சுகிட்டார். இப்ப கோவை உப-கமிஷனர்களின் ஒருவரின் ஆள் கண்காணிச்சுட்டு இருக்கான்"
வந்தனா, "அவங்களுக்கு எதாவது ஆபத்துன்னா?"
முரளீதரன், "இப்போதைக்கு ஆபத்து எதுவும் இருக்காதுன்னு நான் நிச்சயமா நம்பறேன். மாங்க்ஸ் பாட் நெட்டை கைபற்ற நினைக்கறணும்ன்னா அவங்களைத் தாக்கி பிரயோஜனம் இல்லை. அதிக பட்சம் கிட்நாப் செய்ய முயற்சிக்கலாம். அப்படி எதுவும் நடக்காம பாத்துக்குவாங்க கவலைப் படாதே. அவங்க உயிருக்கு அபாயம் இருந்திருந்தா நான் அவங்களுக்கு முதலிலேயே சொல்லி இருப்பேன். வேற விதமான பாதுகாப்பு கொடுத்து இருப்பாங்க"
வந்தனா, "யோகி அங்கிள் இந்த நெட்வொர்க்கில் .. "
அவள் முடிக்கும் முன்னரே முரளீதரன், "எஸ் அஃப்கோர்ஸ்! அவனும் நானும் ஒண்ணாத்தான் இதில் சேர்ந்தோம். However, Manish is yet to graduate to that level yet ... "
தீபா, "எங்க அப்பாவுக்கு இதைப் பத்தி தெரிஞ்சு இருக்குமா?"
முரளீதரன், "நிச்சயமா! பெரிய க்ரிமினல் லாயரா இருந்தாலும் ரொம்ப நல்லவர். ஒரு சமயம் இந்த நெட்வொர்க்கின் கோரிக்கைக்கு இணங்கி ஒரு கேஸில் இருந்து ஒதுங்கிட்டதா யோகி சொன்னான்"
வந்தனா, "அப்ப இந்த நெட்வொர்க்கை வெச்சே தீவிரவாதிகளை வளைச்சுப் பிடிச்சா என்ன?"
முரளீதரன், "அப்படி செஞ்சா நிறைய தலைகள் உருளும். தவிர ஃபோர்ஸஸ் தேவைப் படும்போது அரசாங்கத்துக்கு தெரிஞ்சு செய்வது பெட்டர்"தீபா, "சுந்தர் அங்கிளும் மனோகரி ஆண்டியும் எங்களுக்கு மாத்தி மாத்தி ஃபோன் பண்ணிட்டு இருக்காங்க. அவங்க கிட்ட எங்கே இருக்காங்கன்னு சொல்லலாமா?"
முரளீதரன், "அவங்க ரெண்டு பேரும் எங்கேயோ ஒரு தலை மறைவான இடத்துக்கு போக ப்ளான் பண்ணி இருக்காங்கன்னு தோணுது. அந்த இடம் எதுன்னு திட்டவட்டமா தெரிஞ்சதுக்கு பிறகு என்ன சொல்றதுன்னு சொல்றேன்"
வந்தனா, "அவங்க இண்டியா மொபைல் நம்பர் இன்னும் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருக்கு"
முரளீதரன், "ம்ம்ஹூம் ...They are much smarter than that ... ஆன் செய்ய மாட்டாங்க. இப்போதைக்கு ஈமெயில் ஒண்ணுதான் அவங்களை அணுக இருக்கும் ஒரே வழி"
தீபா, "அவங்களை அந்த தீவிரவாதிகளும் ஃபாலோ பண்ணிட்டு இருந்தா?"
முரளீதரன், "மும்பை ஏர்ப்போர்ட்டில் அவங்க கோட்டை விட்டுட்டாங்க. அது நிச்சயமா தெரியும்"
வந்தனா, "எப்படி?"
முரளீதரன், "இம்மிக்ரேஷனில் இருக்கும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் அவங்க ரெண்டு பேரையும் பாத்ததும் யாருக்கோ ஃபோன் பண்ணி இருக்கான். அதுக்கு பிறகு சந்தேகப் படும்படி ஒருத்தன் அரைவல்ஸ் கேட்டுக்கு வந்து நின்னுட்டு கையில் இருந்த ஒரு ஃபோட்டோவை பாத்துட்டு வர்றவங்க ஒவ்வொருத்தரையும் நோட்டம் விட்டுட்டு இருந்து இருக்கான். சக்தியையும் நித்தினையும் அவன் அடையாளம் கண்டுக்கவே இல்லை"
தீபா, "சோ, அவங்க இப்ப கோவையில் இருப்பது அந்த கும்பலுக்கு தெரியாது இல்லையா?"
முரளீதரன், "இப்போதைக்கு தெரியாது. அங்கேயே கொஞ்ச நாள் வெளியில் நடமாடினா அவங்களுக்கு தெரிஞ்சுடும்"
வந்தனா, "எப்படி சொல்றீங்க?"
முரளீதரன், "அவங்களுக்கும் நிச்சயம் ஒரு நெட் வொர்க் இருக்கும். அதன் மூலம் தெரியும். ஆனா என் அனுமானம் என்னன்னா அவங்க ரெண்டு பேரும் எதோ ஒரு தனிமையான இடத்துக்கு போக ப்ளான் பண்ணி இருக்காங்க"
வந்தனா, "சார், ஜாஷ்வா சஞ்சனா பத்தி நியூஸ்?"
முரளீதரன், "ஷான் ஹென்றியை வேறு பிரிவுக்கு மாற்றிட்டாங்க. மாங்க்ஸ் பாட் நெட்டை கைப்பற்றும் வேலையை க்ரிஸ் நேரடியா மேற்பார்வை செய்யற மாதிரி இருக்கு. ஜாஷ்வா-சஞ்சனா பத்தி ஷானுக்கு எந்த தகவலும் தெரியலை. அவன் அன்னைக்கு போனப்ப அவங்க ரெண்டு பேரையும் பாராமெடிக்ஸ் எடுத்துட்டு போனதைப் பாத்து இருக்கான். சைமண்ட் வில்லியர்ஸ்தான் அவங்க நிலமையைப் பத்தி ஷானுக்கு சொல்லி இருக்கார். ஒருவேளை உயிர்பிழைச்சா ஜாஷ்வாவையும் சஞ்சனாவையும் தீவிரவாதிகளின் தீத்துக் கட்ட முயற்சி செய்வாங்க. அதனால் அவங்க இறந்துட்டதா செய்தி கொடுத்தது சைமண்ட் வில்லியர்ஸ் எடுத்த முடிவு."
வந்தனா, "அப்ப எஃப்.பி.ஐ சைபர் க்ரைம் பிரிவு ஜாஷ்வாவை சந்தேகப் படலையா?"
முரளீதரன், "சக்தியும் நித்தினும்தான் மாங்க்ஸ் பாட் நெட்டை உருவாக்கினவங்கன்னு அவங்களுக்கு நம்பகமான ஒரு சோர்ஸ் மூலம் தெரிய வந்து இருக்காம். மேலும் சக்தியும் நித்தினும் தலை மறைவானதும் அது ஊர்ஜிதமாயிருக்கு"
தீபா, "அப்ப ஜாஷ்வா என்ன தான் செஞ்சார்?"
முரளீதரன், "மாங்க்ஸ் பாட் நெட் சர்வர்லெஸ்ஸா ஆகறதுக்கு முன்னாடி ரெண்டு சர்வர்களில் ஒண்ணு அவன் வீட்டில் இருந்து இருக்கு"
வந்தனா, "அது எப்படி தெரியவந்தது?"
முரளீதரன், "நாம் கொடுத்த ஐ.பி.அட்ரெஸ் ஹார்லத்தில் இருக்கும் ஒரு ஆள் பேரில் வழங்கப் பட்டு இருக்கு. அவனை அணுகினதும் அவன் தனக்கு ஒண்ணும் தெரியாது ஜாஷ்வாதான் அவன் பேரை உபயோகிச்சு அந்த கனெக்க்ஷனை வாங்கினான்னு சொல்லி இருக்கான். அடுத்து, எஃப்.பி.ஐ சைபர் க்ரைம் பிரிவு ஜாஷ்வாவின் வீட்டில் சோதனை பண்ணப் போயிருக்கு. அங்கே இருந்த மூணு கணிணிகளையும் அவங்களால ஸ்டார்ட் செய்யக் கூட முடியலை. எதோ சேலஞ்ச் ரெஸ்பான்ஸ் மாதிரி பாஸ்வர்ட் செட் அப் செஞ்சு வைத்து இருந்ததாம். ஒரு கணிணியில் இருந்த ஹார்ட் டிஸ்கை தனியா எடுத்து வேறு கணிணியில் பொருத்திப் பார்த்தா எல்லாம் என்க்ரிப்ட் செஞ்சு இருந்ததாம். மறுபடி அவன் கணிணியிலேயே பொருத்தி பூட் செஞ்ச உடனே அந்த டிஸ்க் க்ரேஷ் ஆயிடுச்சாம். பயந்துட்டு மத்த ரெண்டு கணிணியையும் தொடாம அப்படியே வெச்சு இருக்காங்க"
தீபா, "அவங்க நம்மிடம் ஏன் இதைப் பத்தி சொல்லலை? After all we know much more about Monks Bot Net than them"
முரளீதரன், "மாங்க்ஸ் பாட் நெட்டை கன்ட்ரோல் செய்யக் கூடிய மென்பொருள் இருக்குமான்னு பார்க்கத்தான் இந்த முயற்சியில் ஈடுபட்டு இருக்காங்க. அதை நம்மிடம் பகிர்ந்து கொள்ள அவங்க விரும்பலை"
வந்தனா, "That is really cheap of them ... "
முரளீதரன், "தெரிஞ்ச் விஷயம்தானே? ஷானை அந்த ஆபரேஷனில் இருந்து தூக்கினதும் அதனால் தான்"
தீபா, "அப்ப ஜாஷ்வா, சஞ்சனாவுக்கு என்ன ஆச்சுன்னு எப்படி தெரிஞ்சுக்கறது?"
முரளீதரன், "அவங்க ரெண்டு பேரையும் சைமண்ட் வில்லியர்ஸ் பொறுப்பில் இருக்காங்க. எனக்கு அவரோட காண்டாக்ட் இல்லை. கடைசியா ஷான்கிட்ட நான் பேசினப்ப கிடைச்ச தகவல் இது. அவரோட காண்டாக்ட் நம்பர் கேட்டு இருக்கேன். Once I talk to him I will let you know" என்றவாறு அவரும் விடைபெற்றுச் சென்றார்.
தோழிகள் இருவரும் இவ்வளவு நாளும் அவர்களது அலுவலமாக இருந்த தற்காலிக லாப்பிற்கு சென்று தங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு வீடு நோக்கி பயணித்தனர்.
தன் மேஜையில் இருந்த சர்வீஸ் பிஸ்டலை வந்தனா இடுப்பில் செருகும் போது பார்த்த தீபா, "என்ன வன்ஸ்? அது தேவையா இருக்குமா?"
வந்தனா, "சஞ்சனாவுக்கு பிறகு இதை ஒரு அளவுக்காவது உபயோகிக்க தெரிஞ்ச ஒரே ஆள் நான்தான். இனி எப்பவும் இது என் கூடவே இருக்கும்"
நித்தின், "ஆமா"
சக்தி, "எப்படி கண்காணிச்சு இருப்பான்?"
நித்தின், "எஸ்! நம் ஆளுங்க செஞ்ச மாதிரி, அவங்க கணிணிகளில் எதிலாவுது மாங்க்ஸ் வைரஸ்ஸை புகுத்தி அது என்ன செய்யுதுன்னு பாத்து இருப்பான்"
சக்தி, "அப்ப அது மத்த கணிணிகளுக்கும் பரவி இருக்கும் இல்லையா?"
நித்தின், "எஸ்! ஆனா எப்படி அந்த கணிணியை தேடிக் கண்டு பிடிப்பது?"
சக்தி, "அவன் பெயர், அப்பறம் மக்ஸூத்தின் பெயர், வெறுமனே மாங்க்ஸ் பாட் நெட் அப்படிங்கற வரி இது எல்லாம் எந்த ஈமெயிலிலாவுது அல்லது டாக்குமென்ட் எதிலாவது இருக்கான்னு ஸர்ச் பண்ணினா தெரியும்"
அன்றும் அதற்கு அடுத்த இரண்டு நாட்களும் பல பரபரப்பான விவரங்களை சேகரித்தனர்.
இவைகளை தவிர அவர்களின் தேடலில் ஒரு மிக சுவாரஸ்ஸியமான ஒன்றை கண்டு பிடித்தனர். பல கணிணிகளும் சர்வர்களும் கொண்ட ஒரு லோகல் ஏரியா நெட்வொர்க்கில் இருக்கும் ஒரு கணிணியில் மட்டும் மாங்க்ஸ்-2 புகுந்து இருந்தது. அங்கு இருந்தபடி வெளியுலகுடன் தொடர்பு கொண்டு இருந்தது. அந்த அமைப்பில் இருக்கும் மற்ற கணிணிகளுக்கு பரவ வில்லை.
சக்தி, "இந்த பாட் நிச்சயம் ஒரு லான்னில் கனெக்ட் ஆகி இருக்கு. அதோட ஐ.பி அட்ரெஸ்ஸையும் கேட்வே செட்டிங்க்ஸ்ஸையும் பார்"
நித்தின், "இது எப்படி சாத்தியம்?"
சக்தி, "இந்த கணிணியில் ஆண்டி-வைரஸ் செட்டிங்க்கை பாரு. ஆன்-லைன் அப்டேட் டிஸ்ஸேபிள் ஆகி இருக்கு. அதுக்கு இன்னும் மான்க்ஸ்-2வின் சிக்னேச்சரே தெரியாது. மாங்க்ஸ்-2வுக்கு சிகப்பு கம்பளம் விரிக்காத குறையா வரவேத்து நுழைய வெச்சு இருக்கு"
நித்தின், "எஸ் .. இந்த கணிணியின் ஓனர் சுத்த மடையனா இருப்பான் போல இருக்கு. சோ, வெளியில் இருக்கும் எதோ பாட் இதை தொடர்பு கொண்டு இதுக்குள் மாங்க்ஸ்-2வை புகுத்தி இருக்கும் இல்லையா? இருந்தாலும் வைரஸ் பரவறதுக்கு நாம் எழுதின லாஜிக் படி இந்த மாதிரி புகுவதற்கு பத்து லட்சத்தில் ஒரு வாய்ப்புதான் இருக்கும். சுத்தியும் ஃபயர்வால். ஒவ்வொரு கணிணியிலும் அப்-டு-டேட் ஆண்டி-வைரஸ். நம்ப முடியலை"
சக்தி, "இன்னும் ஒரு யூகம். மாங்க்ஸ்-2 புகுந்து இருக்கும் ஒரு லாப் டாப்பை யாரோ தற்காலிகமா இந்த லான்னில் கனெக்ட் செஞ்சு இருக்காங்க. அது நம் ஷொயேப்பாக கூட இருக்கலாம்"
நித்தின், "அப்படி யாராவது கனெக்ட் செஞ்சு இருந்தா அரை மணி நேரத்தில் ஆண்டி-வைரஸ் இல்லாத ஒவ்வொரு கணிணியிலும் பரவி இருக்கும். நிச்சயம் அந்த மாதிரிதான் இந்த கணிணிக்குள் இது புகுந்து இருக்கணும். ஆனா ஒரு சந்தேகம். ஷொயேப் அல்-கைதாவை சேர்ந்தவன். ஆனா இந்த லான்னில் இருக்கும் கணிணிகளின் எண்ணிக்கை. சுத்தி இருக்கும் சர்வர்களின் அடையாளம் எல்லாம் பார்த்தா இது பெரிய கம்பியூட்டர் செண்டர் மாதிரி இருக்கு. அல்-கைதாவிடம் இந்த மாதிரி செண்டர் இருக்க வாய்ப்பு இருக்கா?"
சக்தி, "பொறு, யாரோட கணிணின்னு முதல்ல பார்க்கலாம்"
சற்று நேரத்துக்கு பிறகு
நித்தின், "எஸ்! இது ஐ.எஸ்.ஐயின் கம்பியூட்டர் செண்டரில் இருக்கும் ஒரு கணிணி. ஒரு ப்ரோக்ராமரோடது. Funny, they still have such designations"
சக்தி, "ஹல்லோ! நம்ம அரசாங்கத்திலும் அந்த மாதிரி பதவிகள் இன்னும் இருக்கு"
நித்தின், "என் கை இப்ப துருதுருங்குது. என்ன செய்யலாம் சொல்லு. எல்லா கணிணியிலும் ஆண்டி-வைரஸ்ஸை டிஸ்ஸேபிள் செஞ்சுடலாமா? அப்ப மாங்க்ஸ்-2 எல்லாத்திலும் பரவிடும்"
சக்தி, "டேய் கொசவா! போட்டுத் தள்ளனும்ன்னு நான் இருக்கேன். நீ என்னவோ கண்ணமூச்சி ஆடலாங்கற? அந்த செண்டரில் இருக்கும் சர்வர் எல்லாத்தையும் ரிகவர் ஆகமுடியாத மாதிரி க்ரேஷ் பண்ணற வழியைப் பாரு"
அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த நிறுவனத்தின் கம்பியூட்டர் செண்டர் (அதை Nerve Center எனக் கூட அழைக்கலாம்!) செயலற்று நின்றது.
அடுத்த நாள் பெங்களூர் புறப்பட்டு செல்வதாகவும் அதற்கு அடுத்த நாள் அவர்கள் அலுவலகத்துக்கு சென்றதும் அவர்களை தீவிரவாதிகள் அணுகுவார்கள், அவர்களை எங்கு எப்போது சந்திப்பது என்று முடிவெடுத்தவுடன் அந்த சந்திப்பின் விவரங்களை அறிவிப்பதாகவும் ஒரு ஈமெயில் எழுதினர். அடுத்ததாக மேல் அதிகாரிகளுக்கு கொடுக்கச் சொல்லி மற்றும் ஒரு ஈமெயில் எழுதினர். அவர்கள் சேகரித்த தகவல்கள் அனைத்தையும் பாஸ்வர்ட் கொடுத்தால் மட்டும் திறக்கக் கூடிய ஃஜிப் ஃபைல்களாக மாற்றி ஒரு ஃபைல் ஷேர் வெப் சைட்டில் ஏற்றி இருந்தனர். எல்லாவற்றையும் ஒரு பட்டியலிட்டு அப்பட்டியலை அந்த ஈமெயிலில் அனுப்பினர். அந்த ஈமெயிலில் இனி வரும் நாட்களில் அரசாங்கம் ஒப்புக் கொள்ள வேண்டிய சில விதிமுறைகளை கோடிட்டு காட்டி இருந்தனர். அந்த விதிமுறைகளுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அந்த விவ்ரங்களை பகிர்ந்து கொள்வதாகக் கூறினர்.
வியாழனன்று காலை ஒன்பது மணியளவில் அந்த கெஸ்ட் ஹவுஸில் இருந்து புறப்பட காருக்கு வந்தனர்.
சக்தி, "நித்தின், அந்த ஆள்தாண்டா முதல் நாள் ரோட் முக்குல காரில் உக்காந்துட்டு இருந்தவன் ... "
நித்தின், "இப்ப கேட்கிட்ட நின்னுட்டு இருக்கான்"
சக்தி, "என்ன செய்யலாம்?"
நித்தின், "அவன் மட்டும் தனியாத்தான் நிக்கறான்"
சக்தி, "ஒரு வேளை மத்தவங்க நாம் போற வழியில் இருந்தா?"
நித்தின், "நாம் எங்கே போறோம்ன்னு அவங்களுக்கு தெரியப் போறது இல்லை"
சக்தி, "I doubt it ... பரவால்லை வண்டியை எடு"
கேட்டை நெருங்கும் போது அங்கு நின்று இருந்தவன் அவர்களை கைகாட்டி நிறுத்தி ஒரு கனமான கேரி பாக்கை சக்தியிடம் நீட்டி, "This is for your safety .. have a safe journey" என்றவாறு அங்கு இருந்து நகர்ந்தான். அந்தப் பைக்குள் இந்திய ராணுவ முத்திரையுடன் இரு கைத் துப்பாக்கிகள் இருந்தன.Thursday, 4 June 2009 11:30 AM

வியாழன் ஜூன் 4, 2009 காலை 11:30

கூடி இருந்தவர்கள்: வெளியுறவு அமைச்சகத்தின் காரியதரிசி, R&AWவின் டைரக்டர், ஜாயிண்ட் டைரக்டர், முரளீதரன், வந்தனா மற்றும் தீபா.
திரையில் சக்திவேல் தயாரித்து அனுப்பிய பட்டியல் தெரிந்தது.
காரியதரிசி, "டைரக்டர் என் சர்வீஸில் இந்த மாதிரி ஒரு இன்டெலிஜன்ஸ் இன்புட் இதுவரைக்கும் கிடைச்சது இல்லை"
டைரக்டர், "அவங்க ரெண்டு பேரும் நமக்கு கொடுத்ததை முழுக்க உபயோகப் படுத்தணும் இல்லைன்னா இதையே ப்ரெஸ்ஸுக்கும் அனுப்பறதா மிரட்டி இருக்காங்க. சில விவரங்கள் கார்கில் போர் சமயத்தை சேர்ந்தது. இதை பயன் படுத்தினா அரசியல் ரீதியா பிரச்சனை வரலாம். அதுக்கு என்ன சொல்றீங்க?"
காரியதரிசி, "இங்கே வர்றதுக்கு முன்னாடி SMKவுடன் PMஐப் போய் பாத்துட்டு வந்தோம். PCயும் வந்து இருந்தார். எல்லோரும் சேர்ந்து விவாதித்தோம். முந்தைய அரசாங்கம் சம்மந்தப் பட்டதும் இருக்குங்கற பேச்சும் வந்தது. PM இந்த விஷயத்தில் கட்சிப் பகையை உள்ளே நுழைக்கக் கூடாதுன்னு ஆணித்தரமா சொல்லிட்டார். அதோட நிறுத்தாமல் எங்க முன்னாடியே ஆப்போஸிஷன் லீடரை ஃபோனில் கூப்பிட்டு இதைப் பத்தி எங்க முன்னாடியே விவரிச்சு அவரோட ஒப்புதலையும் வாங்கினார். நாங்க எல்லாம் அசந்து போய் உக்காந்துட்டோம். சோ, கவலையே படாதீங்க. அந்த யங்க்ஸ்டர்ஸ் நினைச்சபடி இந்த விவரங்கள் எல்லாம் உடனடியா உபயோகப் படுத்தப் படும். முதலில் அமெரிக்க அரசாங்கத்துக்கு தாக்கல் செய்யப் போறோம். அவங்க சம்மதிக்கலைன்னா ஐ.நா சபையில் அறிவிக்கப் போறதா மிரட்டப் போறோம்"
டைரக்டர், "அது மட்டும் இல்லை சார், சில விவரங்கள் நம் உதாசினத்தையும் காட்டுது"
காரியதரிசி, "இதைப் பத்தி PCகூட SMK டிஸ்கஸ் பண்ணினார். சரி செய்ய வேண்டிய விஷயங்கள். நாம் கோட்டை விட்டதைப் பத்தி நியூஸ் வெளியானா பரவால்லைன்னு PC சொல்லிட்டார். சோ, நோ வொர்ரி. அவங்களுக்கு நம் முழு ஒத்துழைப்பு கிடைக்கும்ன்னு சொல்லுங்க"
முரளீதரன், "Last but not the least .. மாங்க்ஸ் பாட் நெட்டை அவங்க முழுக்க நம் கையில் ஒப்படைக்க மாட்டோம்ன்னு சொல்லி இருக்காங்க. அது சட்ட விரோதமான செயல் எதிலும் ஈடுபடலைன்னு நாம் தெரிஞ்சுக்க ஒவ்வொரு நாளும் மாங்க்ஸ் பாட் நெட்டில் என்ன நடக்குதுன்னு நமக்கு அறிவிக்கும் படி ஒரு மென்பொருளை நமக்கு கொடுப்பதா சொல்லி இருக்காங்க. ஆனா மாங்க்ஸ் பாட் நெட்டை கன்ட்ரோல் செய்யக் கூடிய மென்பொருளை யாருக்கும் கொடுக்க முடியாதுன்னு சொல்லி இருக்காங்க. நல்ல விஷயம் எதுவான்னாலும் மாங்க்ஸ் பாட் நெட்டை உபயோகிப்பதற்கு உதவறதாவும் சொல்லி கண்டிஷன் போட்டு இருக்காங்க. What about that?"
காரியதரிசி, "எல்லா கண்டிஷனும் நமக்கு ஓ.கே. PM இதை ரொம்ப அப்ரிஷியேட் பண்ணினார். அந்த ரெண்டு பேரையும் இந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்சதும் நேரடியா பார்த்து தன் பாராட்டை தெரிவிப்பதா சொன்னார். ஆனா அமெரிக்கா இதுக்கு நிச்சயம் ஒத்துக்காது. அதை பிறகு பாத்துக்கலாம். நம்மை மீறி அவங்க ரெண்டு பேரையும் அமெரிக்க அரசாங்கம் மிறட்டப் போறது இல்லை"
டைரக்டர், "பட் முரளீ அவங்க பாதுகாப்புக்கு நம் உதவி தேவை. அப்படி இருக்கும் போது இந்த பசங்க இந்த மாதிரி எல்லாம் கண்டிஷன் போடறது எனக்கு பிடிக்கலை"
தீபா, "சாரி சார். அவங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கன்னு இப்பவும் அவங்க உங்ககிட்ட கேட்கலை. இந்த மாதிரி ஜீனியஸ்களுக்கு ஆபத்து வரக்கூடும்ன்னு தெரிஞ்சும் பாதுகாப்பு கொடுக்காம இருந்தீங்கன்னா நானே உங்களுக்கு எதிரா ப்ரெஸ் ரிலீஸ் கொடுப்பேன்! I will take you all to court!!"
காரியதரிசி, "காட்! யார் இந்த பொண்ணு?"
ஜாயிண்ட் டைரக்டர் சலிப்புடன், "நம் அரசாங்கத்துக்கு உள்ளயே இருக்கும் ஒரு டெரரிஸ்ட் சார் இவ"
கலகலப்புடன் அந்த கூட்டம் கலைந்தது
வந்தனா, "சார், பெங்களூருக்கு நீங்க போறீங்கதானே? நானும் வரேன்"
தீபா, "நானும்"
முரளீதரன், "சாரி தீபா, வந்தனா ஒரு போலீஸ் ஆஃபீஸர். உன்னை நான் அனுமதிக்க முடியாது"
முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்த தீபா,
"சரி, நான் இங்கே உக்காந்துட்டு நகத்தை கடிச்சுட்டு இருக்கப் போறது இல்லை. எங்க ஊருக்கு போறேன்"
முரளீதரன், "நானே சஜ்ஜஸ்ட் பண்ணலாம்ன்னு இருந்தேன். ஊரில் கொஞ்ச நாள் இரு உன் நித்தினை பத்திரமா நாங்க கொண்டு வந்து ஒப்படைக்கறோம்"
திபா எழுந்து சென்றதும் வந்தனா, "அவ ஹைதராபாத் போவான்னு நினைக்கறீங்களா?"
முரளீதரன், "சான்ஸே இல்லை. நிச்சயம் நமக்கு முன்னாடி பெங்களூரில் இருப்பா. அதிகார பூர்வமா நான் அவளை சேர்த்துக்க முடியாது அதான் அப்படி சொன்னேன். நிச்சயம் உன்னை காண்டாக்ட் பண்ணுவா நீ அவளை பாத்துக்கோ"பல வருடங்களுக்கு முன்னால்
இலங்கையின் வட கிழக்குப் பகுதியில் காடுகளுக்குள் இருந்த ஒரு பயிற்சி முகாம்
பதினெட்டில் இருந்து இருபது வயதுக்குள் பயிற்சியில் இருக்கும் பல போராளிகளுக்கு பயிற்சியாளர் வெவ்வேறு வகையான துப்பாக்கிச் சண்டைகளின் நுணக்கங்களை விளக்கி முடித்து இருந்தார்.
பயிற்சியாளர், "இப்ப நான் கடைசியா சொல்லப் போறதிலும் காண்பிக்கப் போறதிலும் நல்லா கவனம் செலுத்தணும்"
வகுப்பில் சல சலப்பு நீங்கி அமைதி நிலவியது.
பயிற்சியாளர், "இவ்வளவு நெரமும் எதிராளியை எப்படி சுடறதுன்னு சொல்லிக் கொடுத்தேன். இப்ப நான் எப்படி சுடுபடறதுன்னு சொல்லிக் கொடுக்கப் போறேன்"
திகைப்புடன் பார்த்துக் கொண்டு இருந்த இளம் பிஞ்சுகளைப் பார்த்து சிரித்த பயிற்சியாளர், "ஆம், நான் சொல்றது சரிதான். துப்பாக்கிச் சண்டையில் குண்டடி படறது சகஜம். சில குண்டடிகள் காலிலோ கையிலோ படலாம். சில சமயம் உடலில் படலாம். உடலில் குண்டடி பட்டும் தொடர்ந்து சுட்டு சண்டையில் ஜெயிக்கணும்ன்னு கனவு காணக் கூடாது. முக்கால் வாசி நேரம் அது முடியாது. அதனால் உடலில் எங்கே குண்டடி பட்டாலும் முதலில் செத்து விழறமாதிரி விழணும். செத்து விழுந்தவங்களை சுட்டு யாரும் புல்லட்டை வேஸ்ட் பண்ண மாட்டாங்க. விழும்போது ஒரு கை குப்பிக்கு எவ்வளவு அருகே இருக்க முடியுமோ அவ்வளவு அருகே இருக்கணும். இது எதிராளி நம்மை கைப் பற்றாம இருப்பதற்கான முன்னேற்பாடு. அடுத்ததா கண்ணை மூடி உங்க உடலில் எங்கே அடிபட்டு இருக்குன்னு உணர்ந்து அதன் தீவிரத்தை அனுமானிக்கணும். ஒரு நிமிஷத்தில் எவ்வளவு ரத்தம் போகுதுன்னு உங்களுக்கே கணிக்க முடியும். அதை வெச்சு எப்படிப் பட்ட காயம்ன்னு அனுமானிக்கலாம். அடி ரொம்ப சின்னதா இருந்தா மட்டும் எழுந்து சுடணும். இல்லைன்னா சண்டை முடியற வரைக்கும் படுத்துக் கிடக்கணும்"
ஒரு போராளி அதற்கு, "சண்டை முடிஞ்சதும் எதிராளி நமக்கு உயிர் இருக்கான்னு பார்த்தா?"
பயிற்சியாளர், "நீங்க விழும் இடத்தை வெச்சு சண்டை எப்படி முடிஞ்சுதுன்னு உங்களுக்கே தெரியும் அவன் பக்கத்தில் வரும்போது முதலில் பல்லால் குப்பியை கடிச்சுட்டு எதிராளியை சுட்டுட்டு குப்பியை கடிச்சு செத்துப் போகணும்"
பிறகு அதை செயல் முறையில் ஒரு உதவியாளரை காண்பிக்க வைத்தார். அந்த வகுப்பில் இருந்த ஒவ்வொரு போராளியையும் அச்செயலை செய்து காட்ட வைத்து திருத்தங்களைச் சொன்னார்.
முடிவில், "இதை நீங்க இன்னும் நல்லா ப்ராக்டீஸ் செய்யணும். ஒவ்வொருத்தரும் சஞ்சனா, சந்தோஷ் மாதிரி சரியா செய்யணும். இது உங்க உயிர் பிரச்சனை. கவனக் குறைவு கூடாது" என்று வகுப்பை முடித்தார்.hursday, 4 June 2009
வியாழன், ஜூன் 4, 2008
ஒரு தொலைபேசி உரையாடல்
நபர்-1, "அங்கே உன் நிலவரம் என்ன?"
நபர்-2, "அந்த பசங்க ரெண்டு பேரும் எங்கே இருக்காங்கன்னே தெரியலை. ஆனா அவங்க ஆஃபீஸுக்கு ரெண்டு மூணு நாள் கழிச்சு வருவதா சொல்லி இருக்காங்க. மேற்கொண்டு அவங்களிடம் இருந்து அவங்க ஆஃபீஸுக்கு எந்த தகவலும் வரலை. So in the next couple of days they must be reporting for work"
நபர்-1, "என்ன செய்யலாம்ன்னு இருக்கே?"
நபர்-2, "Any suggestions?"
நபர்-1, "மாங்க்ஸ் பாட் நெட் மூலம் தான் கம்பியூட்டர் செண்டரை க்ரேஷ் செஞ்சு இருக்காங்கன்னு இப்ப நல்லா தெரிஞ்சு போச்சு. பணத்துக்காக அவங்க நமக்கு அதை கொடுப்பாங்கங்கற நம்பிக்கை எனக்கு இல்லை"
நபர்-2, "சரி, பணம் மிச்சம். அவங்களை வேற விதமாத்தான் சம்மதிக்க வைக்கணும்"
நபர்-1, "அவங்களோட ஃபேமிலியை கண்காணிச்சீங்களா?"
நபர்-2, "ம்ம்ம் ... நோட்டம் விட்டோம் .. அவங்க ரெண்டு பேர் வீட்டையும் சுத்தி பாதுகாப்பு போட்டு இருக்காங்க"
நபர்-1, "எதுக்கு பாதுகாப்பு போட்டு இருக்காங்க?"
நபர்-2, "அமெரிக்க அரசாங்கமும் அவங்களுக்கு வலை விரிச்சு தேடிட்டு இருக்கும் இல்லையா? அவங்க இந்திய அரசாங்கத்திடம் சொல்லி இருப்பாங்க. இவனுகளும் அமெரிக்காவின் கைப் பொம்மைதானே? இவனுகளும் ஏன் எதுக்குன்னு கேட்காம அவனுகளை தேட ஆரம்பிச்சு இருப்பானுக"
நபர்-1, "சோ, என்ன செய்யப் போறே?"
நபர்-2, "மும்பையில் இருக்கற லாயர் வீட்டை அவ்வளவு சுலபமா அணுக முடியாது. அந்த வீட்டு லொகேஷன் அப்படி. ஆனா ஈரோட்டில் இருக்கும் ப்ரொஃபெஸ்ஸர் வீட்டில் சுலபமா நுழைஞ்சடலாம்"
நபர்-1, "பாதுகாப்பு போட்டு இருக்காங்கன்னு சொன்னே?"
நபர்-2, "இந்தியாவில் பாதுகாப்புன்னா என்னன்னு நமக்கு தெரிஞ்ச விஷயம்தானே? வீட்டில் இருக்கும் ரெண்டு கான்ஸ்டபிள்ல ஒருத்தன் தண்ணி கேஸு. இன்னொருத்தன் தண்ணி அடிக்காமயே கொரட்டை விடரவன். வீட்டுக்கு முன்னாடியும் பின்னாடியும் நிக்காம ரெண்டு பேரும் பத்து மணிக்கு மேல் ஒண்ணா நின்னுட்டு பேசிட்டு இருக்காங்க. அவங்களுக்கு எதுக்கு இந்த பாதுகாப்புன்னு தெரியலை. விடிகாலை ரெண்டு மணியில் இருந்து அஞ்சு மணி வரைக்கும் அவனுக விடற கொரட்டை சத்தம் அந்த வீதி முழுக்க கேட்குது."
நபர்-1, "So what is going to be your modus operandi?"
நபர்-2, "மூணு மணி வாக்கில் அந்த ரெண்டு கான்ஸ்டபிள்ஸையும் சத்தம் இல்லாமல் முடிச்சுட்டு வீட்டுக்குள் நுழைஞ்சு ரெண்டு பேரையும் தூக்கிடலாம்ன்னு இருக்கேன். ஆனா அந்த பசங்களை பத்தி நியூஸ் கிடைச்சப்பறம் செய்யலாம்ன்னு இருக்கேன்"
நபர்-1, "ஏன் வெய்ட் பண்ணறே?"
நபர்-2, "என்னையும் இம்ரானையும் தவிர இப்போதைக்கு இந்தியாவை நல்லா தெரிஞ்சவங்க கிடைக்கல. தமிழ்நாட்டில் ஒரு இயக்கம் இருக்கு. முன்பு கோவையில் பாம்ப் பளாஸ்ட் ஆபரேஷன் சக்ஸஸ்ஃபுல்லா பண்ணி இருக்காங்க. அவங்களோட ஆளுங்களை உபயோகிச்சுக்க சொல்லி மேலிடத்தில் சொன்னாங்க. தூக்கறதுக்கு வேணும்ன்னா அந்த ஆளுங்களை உபயோகிக்கலாம். ஆனா அந்த பெண்களை சேஃபா பாத்துக்க இங்கே இருக்கும் யாரையும் நம்ப முடியாது. இவனுகளே அந்த பொண்ணுங்க மேல கை வெச்சுடுவாங்க"
நபர்-1, "அவங்க சேஃப்டியை பத்தி ஏன் அவ்வளவு கவலைப் படறே?"
நபர்-2, "அவனுகளோட ஃப்ரெண்டையும் அவன் மனைவியையும் போட்டதுக்கே இந்த மாதிரி வேலை செஞ்சு இருக்காங்க. தூக்கிட்டு போய் அவங்க பத்திரமா இருக்காங்கன்னு காண்பிக்கணும். நிச்சயம் அந்த சக்திவேல் அவன் அம்மாவிடமும் தங்கையிடமும் பேசணும்ன்னு சொல்லுவான். அப்ப பொண்ணுங்க ரெண்டு பேரும் பத்திரமா இருந்தாத்தான் நம்மை நம்புவான். இல்லைன்னா என்ன செய்வாங்கன்னு சொல்ல முடியாது"
நபர்-1, "அப்ப அந்த பசங்களை பத்தின நியூஸ் கிடைச்சதும் அந்த ரெண்டு பேரையும் தூக்கிட்டு அவனுகளை காண்டாக்ட் பண்ணப் போறியா?"
நபர்-2, "அந்த ப்ரொஃபெஸ்ஸர் அம்மா வீட்டு லாண்ட் லைனை டாப் செய்ய ஏற்பாடு செஞ்சு இருக்கேன். அவங்க வீட்டுக்குள் ஒரு சிக்னல் ஜாம்மரை ஒளிச்சு வெச்சு இருக்கேன். வீட்டுக்குள் செல்ஃபோன் வேலை செய்யாது. சம்மர் ஹாலிடேஸுங்கறதால அந்த அம்மாவுக்கு காலேஜ் கொஞ்ச நேரம்தான். நிறைய நேரம் அம்மாவும் பொண்ணும் வீட்டில் தான் இருக்காங்க. அவனுக நிச்சயம் ஃபோனில் கூப்பிட்டு பேசுவாங்கன்னு தோணுது. அவனுக இருக்கும் இடம் கன்ஃபர்ம் ஆன அன்னைக்கே நைட்டு தூக்கிட்டு பெங்களூர் கூட்டிட்டு போயிடப் போறேன். அங்கே அவனுகளை காண்டாக்ட் பண்ணப் போறேன்"
நபர்-1, "ஸ்டில், நம் கையில் மாங்க்ஸ் பாட் நெட்டை கொடுத்துட்டு அவங்க சும்மா இருப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை"
நபர்-2, "எனக்கும் அதில் சுத்தமா நம்பிக்கை இல்லை. மாங்க்ஸ் பாட் நெட்டை கன்ட்ரோல் செய்யும் ஸாஃப்ட்வேர் நம் கைக்கு வந்து அதை உபயோகிக்க தெரிஞ்சுட்டதும் அவங்களை போட்டுத் தள்ளிடலாம்ன்னு இருக்கேன்"
நபர்-1, "அவங்க R&AWவை அல்லது FBIஐ அணுகி இருப்பாங்களா? அப்படி அவங்க அணுகி இருந்தால் அல்லது R&AWவுக்கு நாம் அவங்களை அணுகப் போறோம்ன்னு தெரிஞ்சு இருந்தா நமக்குத் தான் ஆபத்து"
நபர்-2, "நிச்சயம் அணுகி இருக்க மாட்டாங்க. அப்படி அணுகினா அவங்க நமக்கு செஞ்ச ட்ரான்ஸ்ஃபர் விஷயத்தை சொல்லியே ஆகணும். அப்ப அவங்கதான் மாட்டிக்குவாங்க இப்போதைய அமெரிக்க சட்டம் இந்த மாதிரி விஷயங்களில் ரொம்ப கடுமையானது. தீவிரவாதத்துக்கு உதவி செய்யறவங்களை வருஷக்கணக்கில் உள்ளே தள்ளிடுவாங்க. அது அவனுகளுக்கும் தெரியும். எந்த அரசாங்கத்தையும் அணுகாம நம்மிடம் பேசுவாங்க. அதனால்தான் பணம் வாங்கிட்டு மாங்க்ஸ் பாட் நெட்டை கொடுக்க ஒத்துக்குவாங்கன்னு நினைக்கறேன்"
நபர்-1, "அப்படி பணம் வாங்கிக்க சம்மதிச்சா?"
நபர்-2, "இவங்களை நம்ப முடியாது. விடுவிச்சதுக்கப்பறம் என்ன செய்வாங்கன்னு சொல்ல முடியாது. போட்டுத் தள்ளறதுதான் சரி"
நபர்-1, "சரி, இன்ஷா அல்லா முடிச்சுட்டு வா. க்ஹுதா ஹஃபீஸ்"
நபர்-2, "இன்ஷா அல்லா. க்ஹுதா ஹஃபீஸ்"hursday, 4 June 2009 4:00 PM
Coffee Day Restaurant on Bangalore-Mysore NICE Highway
வியாழன், ஜூன் 4, 2008 மாலை 4:00
பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையில் இருக்கும் ஒரு காஃபீ டே ரெஸ்டாரண்ட்
மாலை காஃபிக்கு அந்த ரெஸ்டாரண்டில் நிறுத்தினர். மதிய உணவுக்கு மைசூரில் நிறுத்தியவர்கள் தொடர்ந்து பயணித்து வந்தனர். பெங்களூரில் கோரமங்களாவில் இருக்கும் சர்வீஸ்ட் அப்பார்ட்மெண்ட் ஒன்றை இணையம் மூலம் அணுகி அதில் தங்க ஏற்பாடுகளை முன்னமே செய்தும் இருந்தனர். வழி நெடுக விவாதித்ததில் அவர்களது திட்டத்தில் ஒரு பெரிய மாற்றத்தை செய்து இருந்தனர்.
சக்தி, "சோ, நாளைக்கு காலையில் ஆஃபீஸுக்கு போக வேண்டாம் கவர்னர் மாளிகைக்கு போய் அங்கே வெச்சு மாங்க்ஸ் பாட் நெட்டை கண்காணிக்கும் மென் பொருளை அரசாங்கத்திடம் கொடுக்கலாம். வந்தனாவுக்கு அதுக்கு தகுந்த மாதிரி ஒரு ஈமெயில் அனுப்பறேன். ஓ.கே?"
நித்தின், "ஸ்டில், ஆர் யூ ஷ்யூர்? எனக்கு என்னமோ அவனுகளை பிடிச்சு கொடுப்பதில் ஒரு ரிஸ்கும் இருக்காதுன்னு தோணுது"
சக்தி, "இல்லைடா. அவனுககூட விளையாட வேண்டாம்ன்னு தோணுது. We have created enough havoc for them in the past few days. நம்மை விட அம்மாவுக்கு, சாந்திக்கு அங்கிளுக்கு ஆபத்துன்னு தோணுது"
நித்தின், "இருபத்தி நாலு மணி நேர போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செஞ்சு இருக்குன்னு வந்தனா ஈமெயிலில் சொல்லி இருந்தா இல்லையா? அப்பறம் ஏன் பயப் படறே?"
சக்தி, "எனக்கு ஒரு கட் ஃபீல்"
நித்தின், "சரி, நீ சொல்ற மாதிரி நாளைக்கு நேரா போய் மாங்க்ஸ் பாட் நெட்டை கண்காணிக்கும் மென் பொருளை கொடுத்தடலாம். வந்தனாவை ஒரு ப்ரெஸ் கான்ஃபரென்ஸுக்கும் ஏற்பாடு செய்யச் சொல்லு"
சக்தி, "சொல்றேன், ஆனா இவ்வளவு சீக்கரம் அவங்களால் ஏற்பாடு செய்ய முடியுமான்னு தெரியலை. கவர்னர் ஊரில் இல்லைன்னா?"
நித்தின், "வேறு யாராவது மத்திய அரசு பிரதிநிதி கிட்ட கொடுக்கலாம். வந்தனாவின் பாஸ்கிட்ட கொடுக்கலாம்"
சக்தி, "சரி ...பட், அதுக்கு முன்னாடி பெங்களூர் போய் சேர்ந்த உடனே உங்க அப்பாவை காண்டாக்ட் பண்ணனும்"
நித்தின், "You mean to take care of the legal side?"
சக்தி, "எஸ் .. "
நித்தின், "அப்ப நம் ஃபோனையும் நாளைக்கு காலை வரை ஆன் செய்ய வேண்டாம்"
சக்தி, "எஸ், ஃபோனை நாளைக்கு காலையில் ஆன் செய்யலாம். நிச்சயம் அடிக்கடி அவனுக ட்ரை பண்ணிப் பாத்து இருப்பாங்க"
நித்தின், "ஆனா, நம்மை R&AW ஃபாலோ செஞ்சுட்டு இருப்பதை கவனிச்சு இருந்தா அவனுகளே நம்மை அணுகறதை கைவிட்டுடுவாங்க"
சக்தி, "ஆக்சுவலா, நம் முந்தைய ப்ளான் படி அவங்க குன்னூரில் கண்காணிச்ச மாதிரி செய்யக் கூடாதுன்னு தானே அந்த GPS ட்ராக்கிங்க் சாஃப்ட்வேரை நம் ஃபோனில் லோட் செஞ்சு இருக்கோம்?. ஒரு நிமிஷத்துக்கு ஒரு முறை நாம் எங்கே இருக்கோம்ன்னு அவங்களுக்கு துல்லியமா தெரிஞ்சுக்க அந்த லிங்க்கையும் அனுப்பி இருக்கோம். ஆனா அதுக்கு இப்போ யூஸ் இல்லை"
அவரகள் இருவரது கைபேசியிலும் GPS எனப் படும் Global Positioning System வசதி இருந்தது. பொதுவாக அந்த வசதி கைபேசியை உபயோகிப்பவர் தாம் இருக்கும் இடத்தை கூகுள் மேப் (Google Map) மூலம் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் வேறு மென்பொருளை எழுதி தங்களது கைபேசிகளில் புகுத்தி இருந்தனர். அந்த மென்பொருள் ஒவ்வொரு நிமிடத்துக்கு ஒரு முறை கைபேசி இருக்கும் இடத்தை துல்லியமாக இணையத்தில் அவர்கள் அமைத்து இருந்த சர்வருக்கு அனுப்பும். சர்வரில் அவர்கள் புகுத்தி இருந்த வெப் சர்வீஸ் என்ற வகையான மென்பொருள் கைபேசியில் இருக்கும் மென்பொருள் அனுப்பும் விவரத்தை சேகரித்து வைக்கும். அவர்கள் கைபேசியை இயக்கிய நிமிடத்தில் இருந்து சர்வரில் அவர்கள் இருந்த வலை தளத்தின் ஒரு பக்கத்தில் அவர்கள் இருக்கும் இடத்தை வரைபடத்தில் காட்டும் படி அமைத்து இருந்தனர். அந்த பக்கத்திற்கான லிங்க்கை வந்தனாவுக்கு ஈமெயில் செய்து இருந்தனர். Thursday, 4 June 2009 5:30 PM
Bangalore International Airport, Devanahalli, Bangalore
வியாழன், ஜூன் 4, 2008 மாலை 5:30
பெங்களூர் சர்வதேச விமான நிலையம், தேவணஹள்ளி, பெங்களூர்
ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் இருந்து இறங்கிய வந்தனாவும் முரளீதரனும் தங்களது பெட்டிகளுக்காக பாக்கேஜ் கரூஸலில் காத்து இருந்தனர். பெங்களூரில் தேவையான உதவிகளுக்கு உள்நாட்டு அமைச்சகத்தின் மூலம் ஏற்பாடுகளை செய்து முடித்தபின் மதியம் மூன்று மணிக்கு விமானத்தில் ஏறி இருந்தனர். வந்தனாவின் கைபேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்தது.
வந்தனா, "ம்ம்ம் .. நீங்க சொன்னது சரி. மூணு மணிக்கே வந்து ஷக்தி-நித்தின் ஆஃபீஸுக்கு பக்கத்தில் இருக்கும் ராயல் ஆர்கிட் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி இருக்கா"
முரளீதரன், "ம்ம்ம் .. நேரடியா போய் நித்தினை காண்டாக்ட் செய்ய வேண்டாம்ன்னு சொல்லு. அவங்க எப்படியும் நாளைக்கு ஃபோன் ஸ்விட்ச் ஆன் செய்வாங்க. அதுக்கு பிறகு ஃபோனில் மட்டும் பேசச் சொல்லு"
வந்தனா, "சரி சார். நாம் எங்கே தங்கப் போறோம்?"
முரளீதரன், "நம் கெஸ்ட் ஹவுஸில் தங்கலாம்ன்னு நினைச்சேன். What do you say?"
வந்தனா, "தீபா தங்கி இருக்கும் ஹோட்டல் இன்னும் வசதியா இருக்கும் இல்லையா சார்?"
முரளீதரன், "அவங்க ஆஃபீஸுக்கு பக்கத்தில் இருப்பது அவங்களை உடனடியா அணுக வசதிதான். ஆனா நாம் ஏற்பாடு செஞ்ச மாதிரி RATFஇல் (Rapid Action Task Force) இருப்பவங்களை சந்திச்சு பேசணும்ன்னா அது வசதிப் படாது. அனாவிசியமா ஆள் நடமாட்டம் அதிகமானா யாராவது சந்தேகப்பட வாய்ப்பு இருக்கு. ஒண்ணு செய்யலாம். நீ அந்த ஹோட்டலில் போய் தங்கு. நான் கெஸ்ட் ஹவுஸில் தங்கறேன்"
வந்தனா, "சரி சார். நான் அவ ரூமிலேயே தங்கிக்கறேன்"
முரளீதரன், "ஓ.கே"
பேசிக் கொண்டு இருக்கையில் ஒரு புது ஈமெயில் வந்ததற்கான அறிவிப்பை கைபேசியில் படித்தாள்.
வந்தனா, "சார், சக்தி மறுபடி ஒரு மெயில் அனுப்பி இருக்கான். படிக்கறேன்" என்றவாறு அவனது ஈமெயிலை படித்துக் காட்டினாள்
முரளீதரன், "ஐ திங்க் சென்ஸிபிளா முடிவு எடுத்து இருக்காங்க. முதலில் இருந்த வெறியில் தீவிரவாதிகளை பிடிச்சுத் தரணும்ன்னு முடிவு எடுத்து இருப்பாங்க. இப்ப யோசிச்சு இந்த முடிவை எடுத்து இருக்காங்க. நான் இப்பவே ஜே.டிகிட்ட செக்ரடரியை காண்டாக்ட் செய்யச் சொல்றேன். ப்ரெஸ் ரிலீஸுக்கு நீ நாளைக்கு காலையில் ஏற்பாடு செய். அவங்க காலையில் வரட்டும் ப்ரெஸ் ரிப்போர்டர்ஸ் எல்லாம் வந்ததுக்கு அப்பறம் ஹாண்ட் ஓவர் செய்யட்டும்"
மனதில் பெரும் நிம்மதியுடன் வந்தனா, "ஓ.கே சார்"
வந்தனா கைபேசியில் தீபாவை அழைத்து தான் அங்கு வருவதாக அறிவித்தாள்.
மாலை ஏழு மணியளவில் வந்தனா ராயல் ஆர்கிட் ஹோட்டலில் தீபா எடுத்து இருந்த அறையை அடைந்தாள். Thursday, June 4 2009 7:30 PM
A Serviced Apartment in Koramangala, Bangalore
வியாழன், ஜூன் 4, 2009 மாலை 7:30
பெங்களூர் கோரமங்களா பகுதியில் இருக்கும் ஒரு சர்வீஸ்ட் அபார்ட்மென்ட்
மாலை ஏழு மணியளவில் அவர்கள் புக் செய்து இருந்த சர்வீஸ்ட் அப்பார்ட்மெண்டை அடைந்து இருந்தனர். இருவரும் அறையில் இருந்த தொலைபேசி மூலம் தங்களது பெற்றோரின் கைபேசியிகளில் தொடர்பு கொண்டனர். மனோகரியின் கைபேசி நாட் ரீச்சபிள் என்று வந்தபின் வீட்டில் இருக்கும் தொலைபேசியை சக்தி அழைத்தான். ஸ்பீக்கர் ஃபோன் வசதி இல்லாததால் அறையில் இருந்த தொலைபேசி இணைப்பில் சக்தி பேச குளியல் அறையில் இருந்த இணைப்பில் நித்தின் பேசினான்.
சக்தி, "ஹல்லோ அம்மா"
நித்தின், "ஹல்லோ ஆண்டி"
மனோகரி, "சக்தி, நித்தின் எங்கேடா இருக்கீங்க? பத்திரமா இருக்கீங்களா?"
சக்தி, "பத்திரமா இருக்கோம்மா. இப்பத்தான் பெங்களூர் வந்து சேர்ந்தோம்"
நித்தின், "ஆண்டி. நீங்க ஜாக்கிரதையா இருக்கீங்களா? உங்களுக்கு செக்யூரிட்டி போட்டு இருக்காங்களா?"
மனோகரி, "போட்டு இருக்காங்க. ஆனா ஈரோட்டுக்குள்ள எனக்கு செக்யூரிட்டிக்கு என்னடா அவசியம்?"
சக்தி, "இல்லைம்மா அவனுகளை பத்தி உங்களுக்கு தெரியாது. ஜாஷ்வாவையும் சஞ்சனாவையும் ... " சொல்லச் சொல்ல அவன் குரல் உடைந்தது
மனோகரி, "தெரியும். சீரியஸா இருக்காங்கன்னு கடைசியா தகவல் வந்தது அதுக்கு அப்பறம் அவங்களைப் பத்தி தகவல் இல்லைன்னு வந்தனா சொன்னா?"
நித்தின், "வாட்? சீரியஸ்ஸா இருக்காங்களா? அவங்க இறந்துட்டதா நியூஸ் வந்தது?"
மனோகரி, "அவங்க பாதுகாப்புக்காக அப்படி செய்தி கொடுத்து இருக்காங்களாம்"
நித்தின், "Oh! Thank God!! ஆண்டி .. நீங்க எங்களுக்கு ரொம்ப ஆறுதலான நியூஸை கொடுத்து இருக்கீங்க"
சக்தி, "பட், இன்னும் அவங்க க்ரிட்டிகலாத்தான் இருக்காங்க இல்லையா?"
மனோகரி, "இல்லைடா. எனக்கு என்னமோ அவங்க ரெண்டு பேரும் பத்திரமா பிழைச்சுக்குவாங்கன்னு இருக்கு. ரெண்டு பேருக்கும் ஆண்டவன் அளவுக்கு அதிகமான கஷ்டத்தை எல்லாம் சின்ன வயசிலேயே கொடுத்துட்டான்"
நித்தின், "Let us hope your words come true aunty"
மனோகரி, "அது சரி, உங்க ரெண்டு பேருக்கும் அவ்வளவு அபாயம் இருக்கும் போது போலீஸுக்கு போகாம ஏண்டா எங்கேயோ சுத்திட்டு இருக்கீங்க?"
நித்தின், "கவலையே படாதீங்க ஆண்டி. நாளைக்கு காலையில் முதல் வேலை அதுதான்."
சக்தி, "நான் செஞ்ச இந்த வேலையை உங்ககிட்ட இருந்து மறைச்சதுக்கு சாரிம்மா"
மனோகரி, "நீ சொல்லி இருந்தாலும் எனக்கு ஒண்ணும் புரிஞ்சு இருக்காது. ஆனா ஒரு வருஷமா நீங்க செய்றதை கண்டுபிடிக்கும் வேலையில் வந்தனாவும் தீபாவும் இருப்பது தெரிஞ்சும் அவ கிட்ட ஏண்டா மறைச்சே?"
நித்தின், "ஆண்டி, அப்ப நாங்க டெவலப் செஞ்சதை தூக்கி அவங்ககிட்ட கொடுத்துடணும்ன்னு சொல்றீங்களா?"
மனோகரி, "தப்பா எதுவும் செய்யலைன்னா எதுக்கு மறைக்கணும்?"
சக்தி, "அம்மா, நாங்க செஞ்சது முழுக்க முழுக்க சட்ட பூர்வமா சரின்னு சொல்ல முடியாது. ஆனா யாருக்கும் எந்த தீங்கும் நாங்க விளைவிக்கலை. உண்மையில் இந்த அளவுக்கு அபாயம் வரும்ன்னு நினைக்கலை. அது எங்க தப்பு. உனக்கும், வந்தனாவுக்கும் எல்லாம் இதனால் அவமானம். சாரி"
மனோகரி, "அவமானம் என்னடா? உலகமே வியக்கும் ஒரு விஷயத்தை செஞ்சு இருக்கேன்னு பெருமையாத்தான் இருக்கு. நீ மறைச்சேன்னு உன் மேல் கோவப் பட்டாலும் வந்தனாவுக்கு என்னை விட ரொம்ப பெருமை. உன் வருங்கால மாமனார் மாமியார் ரெண்டு பேரும் எனக்கு ஃபோன் பண்ணி பயப் படாம இருக்கச் சொன்னாங்க. அவங்களுக்கும் ரொம்ப பெருமைதான்"
மேற்கொண்டு தாங்கள் செய்தவற்றைப் பற்றி தாயிடம் கூறவேண்டாம் என்று மறைத்தாலும் வந்தனாவிடம் எல்லா உண்மைகளையும் கூற அந்தக் கணமே முடிவெடுத்தான்.
சக்தி, "ஹப்பா! அப்படின்னா வந்தனா என்னை ஒண்ணும் பண்ண மாட்டான்னு சொல்லுங்க"
மனோகரி, "அதுக்கு நான் க்யாரண்டி இல்லை. உன்னை ஒரு வழி பண்ணத்தான் போறா"
சக்தி, "அம்மா இப்ப நாங்க ரொம்ப பேசலை. ஷாந்திகிட்ட ஃபோனைக் கொடுங்க அவகிட்ட பேசிட்டு வெச்சுடறேன். நாளைக்கு எல்லாம் நல்ல படியா முடிஞ்சுடும். உடனே புறப்பட்டு வந்தனாவையும் கூட்டிட்டு ஈரோட் வர்றேன்"
மனோகரி, "ஓ, வந்தனா பெங்களூரில் இருக்காளா?"
சக்தி, "நிச்சயம் இந்நேரம் வந்து இருப்பா"
நித்தின், "அனேகமா என்னோட பிசாசும் வந்து இருக்கும் ஆண்டி. அவளையும் கூட்டிட்டு வர்றேன். பை"
பிறகு சாந்தியிடம் அண்ணன்மார் இருவரும் சிறுது நேரம் பேசியபின் விடைபெற்றனர். அடுத்து மும்பையில் சுந்தரை அழைத்தனர்.
நித்தின், "ஹாய் டாட்"
சக்தி, "ஹெல்லோ அங்கிள்"
சுந்தர், "Good Lord, Nithin, Shakthi, where are you guys?"
நித்தின், "We just reached Bangalore dad"
சுந்தர், "சக்தி, உங்க ரெண்டு பேருக்கும் நான் ஒரு ஃப்ரெண்ட்ன்னு நினைச்சேன். ஏன் என்கிட்ட இதைப் பத்தி இதுவரைக்கும் சொல்லலை?"
நித்தின், "டாட், யாருக்கும் தெரியாம செஞ்சாத்தான் அது ஹாக்கிங்க். அது உங்களுக்கே தெரியும் ... "
சக்தி, "அங்கிள், இதை டெவலம் செய்ய ஆரம்பிச்சப்போ இவ்வளவு பவர்ஃபுல்லா அமையும்ன்னு நாங்க நினைக்கலை. டெவலப் செஞ்சதுக்கு அப்பறம் வெளியில் யாருக்கு சொன்னாலும் அபாயம்ன்னு சொல்லலை"
சுந்தர், "தென் எப்படி தீவிரவாதிகளுக்கு நீங்கதான் அதை டெவெலப் பண்ணினீங்கன்னு தெரிஞ்சுது?"
சக்தி, "அங்கிள் அது ஒரு பெரிய கதை. உங்களை நேரில் பார்க்கும் போது ஒண்ணு விடாம சொல்றேன். உங்க உதவியும் தேவைபடுது எங்களுக்கு"
சுந்தர், "என்ன? சம்பாதிச்ச பணத்தை எல்லாம் கணக்கில் கொண்டு வருவதற்கா?"
நித்தின், "Not only that dad .. சில விஷயங்களில் நாங்க மாட்டிக்க கூடும். அதுக்கு"
சுந்தர், "தீபாகிட்ட பேசினப்போ சட்ட விரோதமா நீங்க எதுவும் செய்யலைன்னு சொன்னா!"
சக்தி, "There are something we did that are grey areas as for as legality is concerned .."
சுந்தர், "Tell me this ..உங்க மாங்க்ஸ் பாட் நெட் மூலம் தெரிஞ்சே யாருக்காவுது எந்த விதத்திலாவுது தீமை செஞ்சீங்களா?"
நித்தின், "சத்தியமா இல்லை"
சக்தி, "அந்த மாதிரி நாங்க செய்ய மாட்டோம்ன்னு உங்களுக்கு தெரியாதா அங்கிள்?"
சுந்தர், "தெரியும். ஒரு கன்ஃபர்மேஷனுக்காக கேட்டேன். எதைப் பத்தியும் கவலைப் படாதீங்க. நீங்க என்ன செஞ்சு இருந்தாலும் எந்த அரசாங்கமும் உங்களை பிடிக்காமல் இருக்க நானும் வீரபத்ர ராவும் கியாரண்டி கொடுக்கறோம்"
நித்தின், "அவரை நாங்க இதுவரைக்கும் அணுகவே இல்லை டாட்"
சுந்தர், "நீங்க மாங்க்ஸ் பாட் நெட்டை வெச்சுட்டு அரசாங்கத்தை கிண்டல் அடிக்கற மாதிரி எதாவுது செஞ்சு இருக்கலாம். அதை வெச்சுட்டு அமெரிக்க அரசாங்கம் உங்களை அரெஸ்ட் செய்யப் பார்க்கும்ன்னு தீபா யூகிச்சு இருக்க்கா. உடனே அவளோட அப்பாவை அலர்ட் பண்ணி இருக்கா. அவர் என்னிடம் பேசினார். நான் ஆல்ரெடி ரெண்டு அமெரிக்கன் லாயர்ஸ் கூட பேசியாச்சு"
சக்தி, "வாவ், ரொம்ப தாங்க்ஸ் அங்கிள்"
சுந்தர், "Shakthi ...stop alienating me. அது சரி, அந்த தீவிரவாதிகளை பிடிச்சுக் கொடுக்க நீங்க ஏன் இந்த அளவுக்கு சிரமம் எடுத்துக்கறீங்க?"
நித்தின், "இல்லை டாட். அந்த ப்ளான் ட்ராப்ட்"
சுந்தர், "பேசாம அந்த மாங்க்ஸ் பாட் நெட்டை இந்திய அரசாங்கத்திடம் சர்ரண்டர் செஞ்சுடுங்க. அப்பறம் அவனுகளுக்கு உங்களை துரத்தி ஒரு பிரயோஜனமும் இருக்காது"
சக்தி, "அங்கிள், இதை பத்தி நீங்க இன்னும் முழுசா தெரிஞ்சுக்கலை. அரசாங்கத்திடம் கூட நாங்க கொடுக்க விரும்பலை. நல்லதுக்கு மட்டும்தான் இதை உபயோகிக்கணும். நாங்க இதை எந்த விதமான கெட்ட விஷயத்துக்கும் உபயோகிக்காமல் இருக்க உத்திரவாதம் கொடுக்கத் தயார். எங்களை கண்காணிக்க அரசாங்கத்துக்கு உதவும்படி மாங்க்ஸ் பாட் நெட்டின் நடவடிக்கை அத்தனையும் கண்காணிக்கும் ஒரு மென்பொருள் எழுதி இருக்கோம். அதை மட்டும்தான் அரசாங்கத்திடம் கொடுக்கப் போறோம்"
சுந்தர், "சரி எவ்வளவு நாள் இந்த மாதிரி ஒளிஞ்சு விளையாடப் போறீங்க?"
நித்தின், "டாட், நாளைக்கு காலையில் பெங்களூர் கரவர்னர் மாளிகைக்கு போய் மாங்க்ஸ் பாட் நெட்டை கண்காணிக்கும் மென்பொருளை அவங்க கிட்ட கொடுத்துட்டு ப்ரொட்டெக்க்ஷன் கேக்கப் போறோம். ஒரு ப்ரெஸ் ரிலீஸுக்கும் ஏற்பாடு செய்யச் சொல்லி இருக்கோம். டி.வில நியூஸ் வந்துதுன்னா அந்த தீவிரவாதிகள் எங்களை அணுகுவதை மறந்துடுவாங்க"
சுந்தர், "Go ahead! I am proud of you my Boys!!"அடுத்து தத்தம் காதலியரிடம் பேசினர். சக்தி வந்தனாவை அவளது கைபேசியில் அழைத்தான்.
சக்தி, "ஹாய் ஹனி"
வந்தனா, "ஹாய் டியர்"
சக்தி, "ஹனி, உன் குரலைக் கேட்டு ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு"
வந்தனா, "ரொம்ப ஐஸ் வெக்காதே. ஈமெயிலில் திட்ட முடியலை. I am really mad at you ..உன் கிட்ட எதையும் மறைக்கக் கூடாதுன்னு நான் இருக்கேன். How dare you hide something from me? நீதான் மோர்லான்னு தெரிஞ்சதும் நான் எவ்வளவு அழுதேன் தெரியுமா?"
சக்தி, "ஏன் அழுதே?"
வந்தனா, "தெரியலை. ஒரு வருஷமா நீ ரகஸியமா செஞ்சுட்டு இருப்பதை நான் அதே ஒரு வருஷமா தேடிட்டு இருந்ததை நினைச்சேன். ரொம்ப கஷ்டமா இருந்துது. தீபா கூட கிண்டல் அடிச்சா"
சக்தி, "ஆனா நீ என் கிட்ட மறைச்சே. இல்லையா?"
வந்தனா, "அது என் வேலை சம்மந்தப் பட்டது. எப்படி உன் கிட்ட வெளிப்படையா சொல்ல முடியும் சொல்லு?"
சக்தி, "மாங்க்ஸ் பாட் நெட் என்னோட வேலை இல்லைதான். ஆனா இப்ப உனக்கு அதைப் பத்தி நல்லா தெரிஞ்சு இருக்கும். அதுக்கு நான் என் வேலையை விட அதிக மதிப்பு கொடுக்கறேன். அதை கைப் பற்றும் வேலையில் நீ இருக்கேன்னு தெரிஞ்சும் நான் எப்படி உன் கிட்ட வெளிப் படையா சொல்ல முடியும் நீ சொல்லு"
வந்தனா ஸ்தம்பித்துப் போனது அவளது மௌனத்தில் இருந்து தெரிந்தது.
வந்தனா, "பட், இதைச் சொல்லு. மாங்க்ஸ் பாட் நெட்டை விளம்பர ஈமெயில் அனுப்புவதை தவிர வேற எதுக்காவுது உபயோகிச்சு இருக்கீங்களா?"
சக்தி, "ஹனி, எங்களால் யாருக்கும் எந்த நஷ்டமோ கெடுதலோ வரலை. இது சத்தியம். இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ. நான் உன்னிடம் எதையும் மறைக்காம சொல்றேன். சரியா?"
வந்தனா, "சக்தி, நான் மனோகரி ஆண்டி கிட்ட பேசும் போது அவங்க உன் அப்பா எப்படி செத்துப் போனார்ன்னு சொன்னாங்க. உனக்கு மேற்கத்திய அரசுகள் மேல் இருக்கும் வெறுப்பு எனக்கு நல்லா தெரியும். நீ என்ன செஞ்சு இருந்தாலும் நான் உன்னை வெறுக்க மாட்டேன். நம் ரெண்டு பேருக்கும் இடையே இனிமேல் எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது"
சக்தி, "ஐ லவ் யூ"
வந்தனா, "தெரியும். அதைவிட பல மடங்கு ஐ லவ் யூ. புரிஞ்சுக்கோ"
சக்தி, "I am the luckiest person on earth"
வந்தனா, "சரி, நாளைக்கு நீ கடைசியா எழுதிய மெயில் படிதானே ப்ளான்? மறுபடி அதில் எந்த மாற்றமும் இல்லையே?"
சக்தி, "இல்லை. நாளைக்கு காலையில் கவர்னர் மாளிகைக்கு போறோம். நீ இப்போ எங்கே இருக்கே?"
வந்தனா, "பெங்களூரில் ராயல் ஆர்கிட் ஹோட்டலில் தீபாவோட இருக்கேன். என் பாஸும் பெங்களூரில்தான் இருக்கார். நாங்க எல்லாம் இன்னைக்கு மத்தியானம் வந்தோம்"
சக்தி, "கவர்னர் ஊரில் இருக்காறா?"
வந்தனா, "ஊரில் தான் இருக்கார். ஹோம் செக்ரடரியும் ஃபாரின் செக்ரடரியும் நாளைக்கு வர்றாங்க. ப்ரெஸ்ஸுக்கும் சொல்லி ஆச்சு. நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு ரொம்ப ஃபேமஸாகப் போறீங்க"
சக்தி, "வேற வழி இல்லைடா. இல்லைன்னா யூ.எஸ் கவர்ன்மெண்ட் எங்களை அரெஸ்ட் செய்யாமல் இருக்க இதுதான் ஒரே வழி"
வந்தனா, "ஏன் உங்களை அரெஸ்ட் செய்யணும்?"
சக்தி, "நாங்க தீவிரவாதிகளுக்கு உதவினோம்ன்னு சொல்லி அரெஸ்ட் செய்யலாம். ஆனா அவங்களோட முக்கிய காரணம் மாங்க்ஸ் பாட் நெட்டை கைப் பற்றுவதாத்தான் இருக்கும்"
வந்தனா, "எங்க பாஸும் அதையே தான் சொன்னார். கவலைப் படாதே உன்மேல் யாரோட சுண்டு விரலும் படாம பாத்துக்க நான் இருக்கேன்"
சக்தி, "வாவ்! ஜாஷுக்கு சஞ்சனா மாதிரி எனக்கு ஒரு வந்தனா!! க்ரேட்!!!"
வந்தனா, "ஹல்லோ, உனக்காக மட்டும் இல்லை. நீ கண்டு பிடிச்சு வெச்சு இருக்கியே ஒண்ணு? அதுக்காகவும்தான்"
சக்தி, "நான் கண்டு பிடிச்சது உனக்கு பிடிக்கலையா?"
வந்தனா, "சீ, விளையாட்டுக்கு சொன்னேன். எனக்கு ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கு."
சக்தி, "I am waiting for tomorrow. அதுக்கு அப்பறம் உன்னை கூட்டிட்டு ஈரோட் போறேன். கல்யாணத்துக்கு முன்னாடி ஒருதரம் என் வீட்டையும் பாத்துக்கோ. அப்பறமா என்னடா இந்த மாதிரி ஒரு ஏழையை கல்யாணம் பண்ணிட்டனேன்னு சொல்லக் கூடாது"
வந்தனா, "இந்த மாதிரி மறுபடி பேசினா I will kill you. ஐ லவ் யூ. அதைச் சொல்லும் போது நீ பணக்காரனான்னு பாத்து சொல்லலை"
சக்தி, "ஹே, சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்"
வந்தனா, "சரி, கல்யாண டேட் நாம் ப்ளான் பண்ணினபடிதானா?"
சக்தி, "ம்ம்ம்ம் ... ஜாஷ் சஞ்சனாவைப் பத்தி கன்ஃபர்ம்டா நியூஸ் வந்ததுக்கு அப்பறம் முடிவெடுக்கலாமே. ப்ளீஸ்?"
வந்தனா, "நீ சொல்லுவேன்னு தெரியும். சும்மா கேட்டேன். எனக்கு புரியுது. Let us hope they are well"
சக்தி, "You know something? I have started praying for that!"
வந்தனா, "இந்த ஒரு வாரமா அது எனக்கு ஒன் மோர் ப்ரேயர்"
சக்தி, "சரி, நாளைக்கு பார்க்கலாம். ஓ.கே?"
வந்தனா, "O.k Chellam"
சக்தி, "வாட் என்ன சொன்னே?"
வந்தனா, "ஏன் அப்படி சொன்னா பிடிக்கலையா?"
சக்தி, "ஹேய், வேற எதாவது தமிழில் பேசேன் ... "
வந்தனா, "ம்ம்ஹூம் ... கல்யாணம் வரைக்கும் பொறுத்துக்கோ. அதுக்கப்பறம் பாரு. பை"
சக்தி, "பை ஹனி"அடுத்து நித்தின் தீபாவை அழைத்தான்.
நித்தின், "ஹாய் தீபா"
மறுமுனையில் தீபா, "ஹாய் ஹீரோ"
நித்தின், "ஹேய், எப்படி இருக்கே?"
தீபா, "ம்ம்ம் நான் கேட்க வேண்டிய கேள்வி அது"
நித்தின், "ஐ ஆம் ஃபைன். மூணு நாள் குன்னூரில் இருந்தோம். சாயங்காலம் பெங்களூர் வந்து கோரமங்களாவில் ஒரு சர்வீஸ்ட் அப்பார்ட்மெண்டில் தங்கி இருக்கோம்"
தீபா, "தெரியும்"
நித்தின், "எப்படி?"
தீபா, "நீங்க மும்பை ஏர்ப்போர்ட்டில் இறங்கினதில் இருந்து உங்க ரெண்டு பேரின் ஒவ்வொரு மூவும் முரளீதரன் சாரின் நெட் வொர்க் கண்காணிச்சுட்டு வந்து இருக்கு. இப்போ R&AWவின் சர்வேய்லன்ஸ் டீம் உங்களை கண்காணிச்சுட்டு இருக்கு"
நித்தின், "ஹே, அப்படி செஞ்சா அந்த தீவிரவாதிகளுக்கு தெரிஞ்சுடும் அவங்க எங்களை அப்ரோச் பண்ண மாட்டாங்க"
தீபா, "பண்ணாட்டா பரவால்லை. நாளைக்கு காலைல கவர்னர் மாளிகைக்கு நீங்க போனதுக்கு அப்பறம் உங்களை அப்ரோச் பண்ணுவதை சுத்தமா மறந்துடுவாங்க"
நித்தின், "பிசாசே, எனக்கு உன்னை பார்க்கணும்ன்னு இருக்கு"
தீபா, "சாரிடா கண்ணா. நான் கிளம்பி நேரா அங்கே வரலாம்ன்னு இருந்தேன். வந்தனாவும் முரளி சாரும் உங்க கண்ணாமூச்சி ஆட்டம் முடியறவரைக்கும் வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க. இப்ப நீ சொல்லு நான் உடனே அங்கே வர்றேன்"
நித்தின், "இல்லை. அவங்க சொன்னது சரிதான். வராதே. நான் நாளைக்கு வரைக்கும் பொறுத்துக்கறேன்."
தீபா, "சரி. எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா?"
நித்தின், "ஒரு வருஷம் உன்னை தவிக்க விட்டேன்னு கோவமா இல்லையா?"
தீபா, "முதலில் கொஞ்சம் கடுப்பா இருந்துச்சு. ஆனா இந்த ஒரு வருஷத்தில் எவ்வளவு கத்துட்டேன் தெரியுமா? அதுவும் உன்னாலே! I am happy and proud of you"
நித்தின், "தாங்க்ஸ் டார்லிங்க்"
தீபா, "அப்பா, ஒரு தடவை என்னை டார்லிங்க்ன்னு கூப்பிட வைக்கறதுக்கு எவ்வளவு ஐஸ் வெக்க வேண்டி இருக்கு. இல்லைன்னா எப்பவும் பிசாசு"
நித்தின், "ஹேய், சாரி டார்லிங்க் ... இனிமேல் எப்பவும் டார்லிங்க்தான் ஓ.கே?"
தீபா, "இல்லை. நீ என்னை எப்பவும் போல பிசாசுன்னே கூப்பிடு. அதுவும் எனக்கு பிடிச்சு இருக்கு"
நித்தின், "சரி, நீ எதுக்கு வந்து இருக்கே. அங்களை கண்காணிப்பது போலீஸ் வேலையாச்சே. உன்னை எப்படி அல்லவ் பண்ணினாங்க?"
தீபா, "அஃபீஷியலா நான் லீவில் இருக்கேன். என் சொந்த செலவில் பெங்களூர் வந்து ராயல் ஆர்கிட்டில் ரூம் எடுத்து தங்கிட்டு இருக்கேன்"
நித்தின், "ஓ .. Now I get it. அப்பறம் நீ உங்க அப்பாவை அலர்ட் பண்ணினதுக்கு தாங்க்ஸ்"
தீபா, "தாங்க் எல்லாம் பண்ணாதே. நான் செஞ்சது முழுக்க முழுக்க சுயநல நோக்கத்தில். நீ அமெரிக்கக் கம்பி எண்ணப் போயிட்டா அப்பறம் நான் யாரை கல்யாணம் செஞ்சுக்கறதாம்?"
நித்தின், "ஜாஷ் சஞ்சனாவை பத்தி நினைச்சாத்தான் ரொம்ப ஆதங்கமா இருக்கு"
தீபா, "I am keeping my fingers crossed"
நித்தின், "You are telling me .. நான் கோவிலுக்கு போகலாம்ன்னு இருக்கேன்!!"
தீபா, "ஆனா மனோகரி ஆண்டிதான் அவங்க ரெண்டு பேருக்கும் ஒண்ணும் ஆகாதுன்னு ரொம்ப தெளிவா இருக்காங்க"
நித்தின், "அவங்க நினைச்ச மாதிரி ஆக நான் என்ன வேணும்னாலும் செய்யத் தயார்"
தீபா, "ஒரு வேளை அவங்களை அமெரிக்க அரசாங்கம் ஜெயிலில் போட்டுட்டு உங்களை மாங்க்ஸ் பாட் நெட்டை கொடுக்கச் சொன்னா?"
நித்தின், "உங்க அப்பாவும் எங்க அப்பாவும் எதுக்கு இருக்காங்க? சர்வதேச கோர்ட்டில் அமெரிக்காவை கிழி கிழின்னு கிழிக்கணும்"
தீபா, "குட்! I love you so much!! நான் இதைத் தான் உன் கிட்ட எதிர்பார்த்தேன்"
நித்தின், "And you know I love you as much"
தீபா, "சரி, நாளைக்கு பார்க்கலாம். ரொம்ப லேட் ஆயிடுச்சு சீக்கரமா தூங்கு நாளைக்கு ப்ரெஸ் கான்ஃபரென்ஸில் பார்க்க ஃப்ரெஷ்ஷா இருக்கணும்"
நித்தின், "ஓ.கே.பை"
அடுத்த நாளைப் பற்றிய எதிர்பார்ப்புடன் நண்பர்கள் இருவரும் நித்திரையில் ஆழ்ந்தனர்.
முரளீதரன், "நீ தைரியமா இருக்கணும். அவங்க ரெண்டு பேரையும் முதலில் பார்க்கணும்ன்னு சொல்லு. அதுக்கு பிறகுதான் அவங்க கேட்பதை கொடுப்பதா சொல்லு"
சக்தி, "எங்களுக்கு உங்களோட தொடர்பு இருக்குன்னு தெரிஞ்சு இருக்குமா?"
முரளீதரன், "நீங்க எங்களோட தொடர்பு கொண்டு இருப்பது அவங்களுக்கு தெரியலைன்னு நினைக்கறேன். தெரிஞ்சு இருந்தா இந்த மாதிரி முயற்சியில் இறங்கி இருக்க மாட்டாங்க. அல்லது ரிவெஞ்சுக்காக செய்யறாங்கன்னு நினைக்கறேன். அவங்க நீங்க ரெண்டு பேரும் இன்னமும் அரசாங்கத்தில் யாரையும் அணுகலைன்னு நினைச்சுட்டு இருப்பாங்க."
சக்தி, "அவங்க எங்களை எங்கேயாவது ஒரு இடத்துக்கு வரச் சொல்லுவாங்க"
முரளீதரன், "ஆமா. அங்கே இருந்து உங்களை கூட்டிட்டு போகப் பார்ப்பாங்க. நீங்க அவங்ககூட போகறதுக்கு முன்னாடி உங்க அம்மாவையும் தங்கையையும் பார்க்கணும்ன்னு சொல்லுங்க. நீங்க ரெண்டு பேரும் உங்க ஃபோனில் லோட் செஞ்ச GPS ட்ராக்கின் ஸாஃப்ட்வேர் இப்போ ரொம்ப உதவியா இருக்கப் போகுது. நீங்க எங்கே போனாலும் உங்களுக்கு பின்னாடி அரை கிலோமீட்டர் தூரத்தில் ஒரு ராபிட் ஆக்க்ஷன் டீம் வரும். ஒரு டவுட். உங்க ஃபோன் ரெண்டிலும் சிம்கார்ட் இல்லாமலே GPS வேலை செய்யுமா?"
சக்தி, "வேலை செய்யணும், ஆனா நாங்க ட்ரை பண்ணிப் பார்த்தது இல்லை. ஏன் கேக்கறீங்க?"
முரளீதரன், "நீங்க யாருடன் பேசினாலும் எங்களுக்கும் கேட்கும்படி உங்களுக்கு ரெண்டு பேருக்கும் நான் இப்போ ரெண்டு டூயல் சிம் கார்ட் செல்ஃபோன்களை அனுப்பப் போறேன். உங்க செல்ஃபோனை நீங்க பேசறதுக்கு உபயோகிக்கக் கூடாது. நான் அனுப்பும் செல்ஃபோன் ரெண்டிலும் ரெண்டு சிம்கார்ட் இருக்கும். அந்த ரெண்டு சிம்கார்ட்களில் ஒண்ணை எடுத்து உங்க ஃபோனில் போட்டுட்டு உங்க ஃபோனில் இருக்கும் சிம் கார்டை அந்த செல்ஃபோனில் மாட்டிக்குங்க. அந்த செல்ஃபோனில் ரெண்டு சிம்கார்ட் மூலம் ரெண்டு நம்பரை கூப்பிட்டு கான்ஃபரென்ஸ் மோடில் போட முடியும். அதை எப்படி வேகமா செய்யறதுன்னு சில தடவை செஞ்சு பாத்துக்குங்க. அவங்க உன்னை காண்டாக்ட் செஞ்சதும் சக்தி நீ இன்னோரு சிம்கார்ட் உபயோகிச்சு கான்ஃப்ரென்ஸ் மோடில் நான் கொடுக்கும் நம்பரை கூப்பிடணும். அது எங்க கன்ட்ரோல் செண்டரில் இருக்கும் ஒரு டெலிகான்ஃப்ரென்ஸ் நம்பர். எப்ப கூப்பிட்டாலும் உடனே கனெக்ட் ஆயிடும். நித்தின், நீயும் உடனே அந்த நம்பருக்கு கூப்பிட்டுட்டு உன் செல்ஃபோனை ம்யூட்டில் போட்டுடணும். நீ பேசறது சக்தியின் மறுமுனையில் இருப்பவனுக்கு கேட்கக் கூடாது. நாங்களும் எதுவும் பேச மாட்டோம். ஓ.கே?"
சக்தி, "ஓ.கே, சுந்தர் அங்கிள் ஸேஃபா இருக்காரா?"
முரளீதரன், "எஸ், அவர் இருக்கும் இடத்தில் இந்த மாதிரி செய்யறது கஷ்டம். இருந்தாலும் அவரை இந்நேரம் அங்கே இருந்து எங்க ஸேஃப் ஹவுஸுக்கு அழைச்சுட்டு போயிருப்பாங்க. இரு வந்தனா உன்னிடம் பேசணுமாம்"
வந்தனா, "ஷக்தி, தைரியமா இரு ஆண்டியையும் ஷாந்தியையும் எப்படியாவது மீட்டு கொண்டு வந்துடலாம்"
சக்தி, "Let us hope so .... "
அடுத்த நிமிடம் காவல் துறையைச் சேர்ந்தவர் ஒருவர் அவர்கள் இருவரிடமும் ஆளுக்கு ஒரு கைபேசியை கொடுத்து விட்டுச் சென்றார். முதலில் அந்த செல்ஃபோன்களில் எப்படி இரண்டு சிம் கார்ட் உபயோகித்து கான்ஃப்ரென்ஸ் மோடில் இயக்குவது என்று அறிந்து கொண்டு ஓரிரு முறை அதை செய்து பார்த்துக் கொண்டனர். அடுத்து, அதில் இருந்த சிம் கார்டுகளில் ஒன்றை எடுத்து தங்களது கைபேசிகளில் மாட்டி ஆன் செய்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டனர். அடுத்து முரளீதரன் கொடுத்து அனுப்பி இருந்த செல்ஃபோன்களில் தங்களது சிம் கார்டுகளை பொறுத்தி ஆன் செய்தனர்.அழைப்புக்காக அவர்கள் வெகு நேரம் காத்திருக்கவில்லை. ஆன் செய்த சில நிமிடங்களில் சக்திவேல் வைத்து இருந்த கைபேசி அலறியது. தனது எண்ணுக்கு வந்து இருக்கும் கால் என அறிந்ததும். முரளீதரன் கொடுத்த டெலிகான்ஃபரென்ஸ் எண்ணை அடுத்த எண் மூலம் அழைத்த பிறகு அவனுக்கு வந்த காலுக்கு பதில் அளித்தான். நித்தினும் உடனே அந்த டெலிகான்ஃப்ரென்ஸ் எண்ணை அழைத்து தன் செல்ஃபோனை ம்யூட் செய்தான்,
சக்தி, "ஹெல்லோ?"
மறுமுனையில் ஒரு குரல், "ஹெல்லோ! செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வெச்சு இருந்தா எப்படி உங்க அம்மாவையும் தங்கையையும் பத்தி நியூஸ் சொல்லறது?"
சக்தி, "ஹெல்லோ! ஹூஸ் திஸ்?"
மறுமுனையில் மக்ஸூத், "என் பெயர் மக்ஸூத். உன் ஃபெரெண்ட் ஜாஷ்வாவின் மனைவி என்னை காயப் படுத்தினா. அதுக்கு பழிதீர்க்க உன் அம்மாவையும் தங்கையையும் கிட்நாப் செஞ்சுட்டு வந்து இருக்கேன்"
சக்தி, "என்ன சொல்றே? எங்க அம்மாவும் தங்கையும் ஈரோடில் பத்திரமா இருக்காங்க"
மக்ஸூத், "ஓ! நீதான் தலை மறைவா இருக்கியே? உனக்கு இன்னும் நியூஸ் வந்து இருக்காது. பரவால்லை. இப்போ உன் அம்மாவும் தங்கையும் என் கஸ்டடியில் இருக்காங்க. எனக்கு தேவையானது உங்கிட்ட இருக்கு. நீ அதைக் கொடுத்தாதான் நான் உன் அம்மாவையும் தங்கையும் விடுவிப்பேன்"
சக்தி, "உனக்கு தேவையானதா? என்ன சொல்றே புரியலை"
மக்ஸுத், "தெரியாத மாதிரி நடிக்காதே. நிச்சயம் அன்னைக்கு ஜாஷ்வாவை காரில் கூட்டிட்டு வந்த அவன் ஃப்ரெண்ட் அங்கே நடந்ததை உனக்கு சொல்லி இருப்பான். அதான் அன்னைக்கு ராத்திரியே அமெரிக்காவை விட்டு புறப்பட்டு வந்தே. எனக்கு தேவை மாங்க்ஸ் பாட் நெட்டின் கன்ட்ரோல்"
சக்தி, "என் அம்மாவும் தங்கையும் உன்னிடம் இருக்காங்கன்னு நான் எப்படி நம்பறது?"
மக்ஸூத், "லூக், இது நீ சினிமாவில் பார்க்கும் கடத்தல் இல்லை. நிஜக் கடத்தல். நான் இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு உன்னை கூப்பிடுவேன். போலீஸுக்கு போகணும்ன்னு மட்டும் நினைக்காதே"
மக்ஸூத் இணைப்பைத் துண்டித்தான்.
கான்ஃபரென்ஸில் இருந்த முரளீதரன், "சக்தி, அவன் எந்த நம்பரில் இருந்து கூப்பிட்டான். க்விக்"
சக்திவேல் அந்த நம்பரை பார்த்து சொன்னான்.
முரளீதரன், "அடுத்த பத்து நிமிஷத்தில் இதே நம்பரில் இருந்து கூப்பிடுவானாங்கறது சந்தேகம். சோ, அவன் கூப்பிட்ட உடனே முதலில் அவனோட நம்பரை நோட் பண்ணிக்கோ. நித்தின், இந்த செல்லில் கனெக்ட் செய்யறதுக்கு முன்னாடி அந்த நம்பரை எனக்கு எஸ்.எம்.எஸ் பண்ணு. ஓ.கே. பயப் படாதீங்க ரெண்டு பேரும். பை"அடுத்த பத்து நிமிடத்தில் முரளீதரன் சொன்னபடி வேறு ஒரு கைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. நித்தின் முரளீதரன் சொன்னபடி அந்த எண்ணை அவருக்கு அனுப்பிய பிறகு இருவரின் மாற்றுக் கைபேசிகளிலும் முரளீதரனின் கான்ஃபரென்ஸ் நம்பரை அழைத்து மறுபடி சக்தியின் மாற்றுக் கைபேசியை அவனது ஷர்ட் பாக்கட்டில் வைத்தான். சக்திவேல் ஸ்பீக்கர் ஃபோனை ஆன் செய்து பதில் அளித்தான்.
மக்ஸூத், "என்ன சக்தி, ஊருக்கு ஃபோன் பண்ணி விசாரிச்சயா? என்ன சொன்னாங்க?"
சக்தி, "எங்க அம்மாவையும் தங்கையையும் காணோம்ன்னு சொன்னாங்க"
மக்ஸூத், "நீ எங்கே இருக்கேன்னு சொல்லி இருக்க மாட்டியே? ஏன்னா அங்கே நீ வருவேன்னுதான் போலீஸ்காரங்க வெய்ட் பண்ணிட்டு இருந்தாங்க"
சக்தி, "அவங்ககிட்ட நான் யாருன்னே சொல்லலை"
மக்ஸூத், "இப்ப நம்பறயா?"
சக்தி, "இல்லை. எங்க அம்மாவும் தங்கையும் உங்கிட்ட இருக்காங்கங்கறதுக்கு என்ன ஆதாரம்?"
மக்ஸூத், "ஒண்ணு பண்ணலாம். உனக்கு உங்க அம்மா அல்லது தங்கையின் கையை நல்லா அடையாளம் தெரியுமா? ஆதாரம் வேணும்ன்னா பெங்களூரில் எதாவது ஒரு குப்பைத் தொட்டியில் அவங்க கை ஒண்ணை வெட்டி வீசிட்டு உனக்கு எங்கேன்னு சொல்றேன். நீ போய் பாத்துக்கோ. என்ன சரியா?"
அதுவரை பதட்டமில்லாமல் இருந்த சக்தி, "வேண்டாம் .. என்ன செய்யணும் சொல்லு" என்று அலறினான்.
மக்ஸூத், "அப்படி வா வழிக்கு. நீ உன் ஃப்ரெண்டை கூட்டிட்டு நான் சொல்ற இடத்துக்கு வரணும். உன்னிடம் கார் இருக்கா?"
சக்தி, "இருக்கு"
மக்ஸூத், "என்ன கார்? என்ன கலர்?"
சக்தி, "ஸ்கார்ப்பியோ எஸ்.யூ.வி. மரூன் கலர் பாடி. ஸில்வர் ட்ரிம்மிங்க்"
மக்ஸுத், "சரி, அந்த ஸாஃப்ட்வேரை லோட் செஞ்சு இருக்கும் லாப்டாப்பையும் எடுத்துட்டு வா. கூடவே அந்த சாஃப்ட்வேரை ஒரு பென் ட்ரைவில் காப்பி பண்ணியும் எடுத்துட்டு வரணும். நான் இன்னும் பத்து நிமிஷத்தில் கூப்பிடறேன்"
சக்தி எதிர் முனையில் இணைப்பை துண்டிக்குமுன், "எடுத்துட்டு வர்றேன். எல்லாம் பாஸ்வர்ட் மூலம் என்க்ரிப்ட் ஆகி இருக்கும். நான் என் அம்மாவையும் தங்கையும் பத்திரமா பார்க்காம உனக்கு எதுவும் தரமாட்டேன். என்ன பாஸ்வர்டுன்னும் சொல்ல மாட்டேன்"
மக்ஸூத், "நான் அந்த அளவுக்கு முட்டாள் இல்லை. நீ வரும்போது உன் அம்மாவும் தங்கையும் பத்திரமா உன்னை தூரத்தில் இருந்து பார்த்துட்டு இருப்பாங்க. நீயும் அவங்களை பார்க்கலாம். பார்த்துட்டே செல்ஃபோனில் அவங்ககூட பேசலாம். ரெடியா இரு. நான் இன்னும் அரை மணி நேரத்தில் கூப்படறேன்" என்றபடி இணைப்பைத் துண்டித்தான்.
முரளீதரன், "சோ, அவன் நமக்கு சில க்ளூ கொடுத்து இருக்கான். உன் அம்மாவும் தங்கையும் நீ அவனை மீட் பண்ணும் இடத்துக்கு கொஞ்ச தூரத்தில் இருப்பாங்க. நீ அவங்களை பார்க்கலாம். செல்ஃபோனில் பேசலாம்ன்னா அனேகமா உன் செல்ஃபோனில் பேசச் சொல்ல மாட்டான். அவன் செல்ஃபோனில் ஒரு நம்பரை கூப்பிட்டு அவங்களை பேசச் சொல்லுவான். சக்தி, நீ எங்க நம்பரோட எப்பவும் கனெக்ட் ஆகி இருக்கணும். அவங்களை பார்த்து பேசும் போது அவங்க இருக்கும் இடத்தைப் பத்தி எங்களுக்கு க்ளூ கொடுக்கற மாதிரி விவரிக்கணும். இதை நீ சாமர்த்தியமா செய்யணும். எப்படியும் நீ அவனை மீட் பண்ணின ஒண்ணு ரெண்டு நிமிஷத்தில் எங்க டீம் அங்கே வந்துடும். நான் எங்க டீமை ரெண்டா பிரிச்சு அனுப்பறேன். நீ க்ளூ கொடுக்கும் இடத்துக்கு ஒரு டீம் போகும். நீ இருக்கும் இடத்துக்கு ஒரு டீம் வரும். ஓ.கே?"
சக்தி, "ஓ.கே சார்"
முரளீதரன், "நித்தின், நீ சக்தி காரில் இருந்து இறங்கினப்பறம் நீ காரிலே இரு. முடிஞ்சா காரை கிளப்பிட்டு நீ போயிடு"
நித்தின், "அப்ப அவன் அவங்களை எதாவது செஞ்சான்னா?"
முரளீதரன், "அவன் அதை எதிர்பார்த்து இருக்க மாட்டான். இருந்தாலும் அவன் அப்படி எதுவும் செய்ய மாட்டான். எப்படியும் மாங்க்ஸ் பாட் நெட்டின் கன்ட்ரோல் சாஃப்ட்வேர் கைக்கு கிடைச்சதும் உங்க எல்லாரையும் தீர்த்துக் கட்ட திட்டமிட்டு இருப்பான். நீ மட்டும் அங்கே இருந்து தப்பிச்சுப் போனா உன்னை மட்டும் தனியா தீர்த்துக் கட்ட ஆள் அனுப்பலாம்ன்னு விட்டுடுவான். அல்லது உடனே யாரையாவுது உன்னை ஃபாலோ பண்ண அனுப்புவான். நீ பத்திரமா இருக்கணும். நீ புறப்படறதுக்கு முன்னால் உனக்கு ஒரு ஹெல்மெட் கொடுக்க ஏற்பாடு செய்யறேன். நீ அங்கே இருந்து தப்பிக்கும் போது ஹெல்மெட்டை எடுத்து போட்டுக்கோ. Besides, உங்க ரெண்டு பேருக்கும் புல்லட் ப்ரூஃப் வெஸ்ட் அனுப்பறேன். That will give adequate protection for your torso. கூட ஹெல்மெட் போட்டுட்டேன்னா இன்னும் ஸேஃப்"
நித்தின், "என்னை ஏன் போகச் சொல்றீங்க?"
முரளீதரன், "ஒரு நம்பும்படியான டிஸ்ட்ராக்க்ஷன்தான். நீ அப்படி தப்பிச்சு போனா உன்னை சந்தேகப் பட மாட்டான். நீ உனக்கு சம்மந்தம் இல்லாததால் போறேன்னு நினைப்பான். அதனால் எங்களுக்கு தேவையான் ஒண்ணு ரெண்டு நிமிஷங்கள் கிடைக்கும். அப்பறம் நான் கொடுத்து அனுப்பின கன்னை சேஃப்டி ரிமூவ் பண்ணி பின்னாடி முதுகுப்புறம் பெல்டில் சொறுகிக்கோங்க. அதையும் நீங்க போட்டுக்கப் போகும் புல்லட் ப்ரூஃப் வெஸ்ட்டையும் மறைக்கும்படி மேல ஒரு ஜாக்கட் போட்டுக்குங்க"
சக்தி, "சார், சேஃப்டி லாக்கை ரிமூவ் பண்ணி வெக்கறது டேஞ்சரஸ் இல்லையா?"
முரளீதரன், "அந்த கன்னில் ட்ரிக்கரை சுத்தி ட்ரிக்கர் கார்ட் கொஞ்சம் அகலம். ட்ரிக்கர் ஆக்ஸிடண்டலா ரிலீஸ் ஆகாது. அவசரமா சேஃப்டியை ரிமூவ் பண்ணி ஷூட் பண்ணும் அளவுக்கு உங்களுக்கு பயிற்சி இல்லை. அதனால் சொன்னேன்"
நித்தின், "ஓ.கே சார்"9:30 AM
மக்ஸூத், "ஓ, உனக்கு துப்பாக்கி சுடத் தெரியுமா?" என்றபடி செல்ஃபோனில் "வெய்ட் ஒண்ணும் செஞ்சுடாதீங்க" என்று கூறி சக்தியைப் பார்த்து, "எனக்குள்ள குண்டு போகும் அதே கணம் உன் தங்கையின் மூளை வெடிச்சுச் செதறும். பேசாம துப்பாக்கியை கீழே போடு" என்றான்.
அவன் சொல்லச் சொல்ல சைரன் ஒலிக்க ஒரு ஆம்புலன்ஸ் வந்து அவர்களருகே ஸ்க்ரீச்சிட்டு நின்றது. அது நிற்பதற்கு முன்னரே அதில் இருந்த இருவர் சுடத்தொடங்கினர். ஆனால் அதற்குள் AK-47 ஏந்தியவன் ஆடோமாட்டிக் மோடில் சக்தியை சுடத்தொடங்கி இருந்தான். மக்ஸூத் தன் துப்பாக்கியை எடுக்க கையை தன் ஜாக்கெட் பாக்கெட்டுக்குள் எடுத்துச் சென்றான். அடுத்த கணம் அவன் நெற்றியில் ஒரு பெரிய சிந்தூரப் பொட்டு உருவானது. AK-47 எந்தியவனின் மூளை சிதறி பின்புறத்தில் வேனின் கண்ணாடியில் இரத்தத்துடன் கலந்த ஒரு மாடர்ன் ஆர்ட் போல தெரித்தது. சக்தியை தாக்கிய குண்டுகளில் இரண்டு அவன் அணிந்து இருந்த புல்லட் ப்ரூஃப் வெஸ்டினால் பெரிதளவுக்கு தடுக்கப் பட்டாலும் அவ்வளவு குறைந்த தூரத்தில் இருந்து அப்படிப் பட்ட ஒரு துப்பாக்கியால் சுடப்பட்டதால் அவன் உடலில் பாய்ந்து இருந்தன. ஒன்று அவன் நுரையீரலையும், அடுத்தது அவனது ஈரலையும் காயப் படுத்தி இருந்தன.
காரைக் கிளப்பிக் கொண்டு சென்ற நித்தின் பின்னால் ஹோண்டா ஸிட்டி அவனை பின் தொடர்வதையும் அதில் இருந்த ஒருவன் கண்ணாடியை இறக்கி தலையை வெளியே நீட்டி அமர்ந்ததையும் கவனித்தான். வேகமாகச் சென்று ஈஜீபுரா சிக்னலை அடைந்தவன் அவனுக்கு எதிரே பல வாகனங்கள் பச்சை விளக்குக்காக காத்து நின்று இருந்தன. சாலையின் ஓரத்துக்குச் சென்று ஹாரனை அடித்தபடி எதிரில் நின்று கொண்டு இருக்கும் வாகனங்களை முன் சென்று யூ-டர்ன் எடுத்து ஒரு ட்ராஃபிக் ஜாம்மை உருவாக்கியபடி வந்த திசைக்கு எதிர் திசையில் மனோகரி-சாந்தி அமர்ந்து இருந்த இன்னோவாவை நோக்கி வேகமெடுத்தான். சிக்னலுக்கு அருகே நின்று இருந்த ஆம்புலன்ஸும் அவனை சைரனுடன் பின் தொடர்ந்தது.
இன்னோவாவை நெறுங்கிய நித்தின் அதற்கு இடப்புறமாக முன்னால் சென்று அதன் பானெட்டின் இடப்புறத்தில் வேகமாக ஆனால் அழுந்த உரசியவாறு இடித்து அதன் முன்னால் குறுக்காக தன் ஸ்கார்ப்பியோவைச் செலுத்தி மிட்வே மெரிடியனில் இடித்து நிறுத்தினான். இடிபட்டதில் அந்த இன்னோவா குலுங்கியது. சாந்திக்கு அருகில் இருந்தவன் நிலைகுலைந்து இரண்டு சீட்டுகளுக்கு நடுவே இருந்த இடைவெளியில் தலை குப்புற விழுந்தான். ட்ரைவர் சீட்டில் இருந்த இம்ரான் சுதாரித்துக் கொண்டு நித்தினை நோக்கி சுடத்தொடங்கினான். நித்தின் மாட்டி இருந்த சீட் பெல்ட் அவனை நிதானம் இழக்காமல் இருக்க உதவியது. இம்ரானின் குண்டுகளில் ஒன்று நித்தின் புஜத்தைத் தாக்கியது. அடுத்தது அவனது காலர் போன் எலும்பையும் முறித்து அதிர்ஷ்டவசமாக மேலும் உள்ளே செல்லாமல் நின்றது. அதற்குள் பின்னால் வந்து கொண்டு இருந்த ஆம்புலன்ஸ் அருகில் வந்து வேகத்தை குறைத்ததும் சைரன் ஒலியைக் கேட்டு அதன் பக்கம் திரும்பிய இம்ரானும் சாந்திக்கு அருகில் இருந்தவனும் முகத்தில் ஆச்சர்யக் குறியுடன் மரணமடைந்தனர்.
குண்டடி பட்டும் எதிர்ப்புறம் கையைக் காட்டியபடி சக்தி ஓரிரு அடிகளை எடுத்து வைத்தபின் மயக்கமுற்று விழுந்தான். ஆம்புலன்ஸுக்கு உள்ளிருந்த வந்தனா "ஷக்தீ" என்று அலறியபடி வந்து அவனுக்கு அருகே மண்டி இட்டு அழுது குலுங்கினாள். அந்தக் குழுவில் மருத்துவ உதவியாளராகவும் இருக்கும் வீரர் சக்தியை தரையில் நேராக படுக்கச் செய்து அவனது ஆடைகளை விலக்கி காயங்களை ஆராய்ந்தார்.
அருகில் வந்த முரளீதரனிடம் "ஒரு புல்லட் லிவரில் பாய்ந்து இருக்கு. இன்னொண்ணு இடது நுரையீரலில். லங்க்ஸ்ஸில் பாய்ந்ததுனால்தான் ஆபத்து அதிகம். எந்த அளவுக்கு டாமேஜ்ன்னு தெரியலை. பல்ஸ் குறைஞ்சுட்டு வருது. உடனே ஹாஸ்பிடலுக்கு ஷிஃப்ட் பண்ணனும்"
சீட் பெல்ட் தடுத்ததால் சரிந்து விழாமல் தலையை மட்டும் சாய்த்து மயங்கிக் கிடந்த நித்தின் எதிர்ப்புறம் இருந்த குழுவில் ஒருவர் கீழே இறக்க இரு ஆம்புலன்ஸுகளுக்கும் பின்னால் ஒரு ஜீப்பில் வந்து இறங்கிய தீபா சாலையில் குறுக்கே ஓடினாள்.
எதிர்ப்புறம் இருந்த ஆம்புலன்ஸுக்கு சக்தியும் எடுத்துச் செல்லப் பட்டான். காயமுற்ற நண்பர்கள் இருவரும் அவர்கள் காதலியருடன் அருகே இருந்த விமானப் படையைச் சார்ந்த Air force Command Hospital மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப் பட்டனர்.hursday, 19 November 2009 9:00 PM
Sanjeevini Restaurant, Saunders Beach, New Providence, The Bahamas
வியாழன், நவம்பர் 19, 2009 இரவு 9:00
சஞ்ஜீவினி உணவகம், சாண்டர்ஸ் பீச், நியூ ப்ராவிடன்ஸ், தி பஹாமாஸ்
முன்னிரவில் தொடங்கிய அந்த பார்ட்டியில் யாரும் இன்னமும் சாப்பாட்டைத் தொடவில்லை. சுடச் சுட வந்து கொண்டு இருந்த ப்ரான்ஸ், நண்டு மற்றும் மீன் வகை வருவல்களை கொறித்தபடி எல்லோரும் பேசிக் கொண்டு இருந்தனர்.
மனோகரி, "டேய், அந்தக் கருமத்தை சீக்கரம் முடிச்சீங்கன்னா எல்லாரும் சாப்பிட்டுட்டுப் போய் தூங்கலாம்"
வந்தனா (அழகான தமிழில்), "ம்ம்ம் .. சொல்லுங்க அத்தை. குடிக்க ஆரம்பிச்சதில் இருந்து நாளைக்கு சஞ்சனாவுக்கு வளைகாப்பு சீமந்தம் வெச்சு இருக்கறதை சுத்தமா மறந்தாச்சு"
சக்தி, "சஞ்சனா, இவளுக்கு தமிழில் ட்ரிங்க் பண்ணறதை இதை விட கொஞ்சம் நாசுக்கா எப்படி சொல்லறதுன்னு சொல்லித் தரியா?"
வந்தனா, "ஹல்லோ! ட்ரிங்க் அப்படின்னா குடின்னு அர்த்தம்"
நித்தின், "இல்லை வந்தனா, தண்ணி அடிக்கறதுன்னு சொல்லு"
சக்தி, "இவரு பெரிய தமிழ் புலவரு உதவிக்கு வந்துட்டாரு"
அப்போதுதான் அவர்களுடன் வந்து அமர்ந்த சஞ்சனா, "பரவால்லை வன்ஸ், நாளைக்கு ஒன்பதரை மணிக்குத்தானே. இப்போ ரொம்ப லேட்டாகலே"
ஜாஷ்வா, "ம்ம்ம் .. இது தான் ஒரு நல்ல ரெஸ்டாரண்டியருக்கு அழகு! சாப்பாட்டை விட லிக்கரில்தான் நிறைய சம்பாதிக்கலாம்ன்னு சொல்றா"
மனோகரி, "எப்படி ஜாஷ்வா? சாப்பாடு நீங்களே சமைக்கறது. அதில் தானே லாபம் அதிகம்?"
ஜாஷ்வா, "லாப விகிதம்ன்னு பார்த்தா சாப்பாட்டில்தான் அதிகம். ஆனா யாரும் ஒரு அளவுக்கு மேல் சாப்பிட மாட்டாங்க. ஆனா ட்ரிங்க் பண்ணறது அப்படி இல்லை. நம் டேபிளையே உதாரணத்துக்கு எடுத்துக்குலாம். நித்தினுக்கு மூணுதான் லிமிட்ன்னு ஸ்மால் ஸ்மாலா குடிச்சுட்டு இருக்கான். ஆல்ரெடி அஞ்சாவது ஸ்மால் உள்ளே போயிட்டு இருக்கு. ஆனா எப்படியும் இன்னும் மூணு உள்ளே போகும். சக்திக்கு ரெண்டு லார்ஜுக்கு மேல் எவ்வளவு குடிச்சாலும் அதே நிதானத்தில்தான் இருப்பான். இப்போ மூணாவது லார்ஜில் இருக்கான். என்னோடதும் இது மூணாவது. இவ்வளவு நேரமும் ஸ்டார்ட்டர்ஸ் (Starters - சாப்பாட்டுக்கு முன், பொதுவாக மது பானங்கள் அல்லது சூப்புடன் சாப்பிடும் வறுவல் போன்ற பதார்த்தங்கள்) பாருங்க எவ்வளவு ஆர்டர் செஞ்சு இருக்கோம். இதுக்கு பிறகு எவ்வளவு சாப்பிடப் போறோம்? மொத்த லாபம்ன்னு பார்த்தா லிக்கரிலும் லிக்கரினால் உள்ளே போகும் ஸ்டார்டர்ஸ்களிலும்தான்" மனோகரியின் பார்வையால் சக்தியும் நித்தினும் நெளிவதை பொருட்படுத்தாமல் விளக்கிக் கொண்டு இருந்தான்.
தீபா, "உனக்கு இதுதான் கடைசி. போதும்" என்று கட்டளையிட
நித்தின், "ஜாஷ், உதாரணம் சொல்றதுக்கு உனக்கு வேற டேபிள் கிடைக்கலையா?"
வந்தனாவின் முறைப்புக்கு சக்தி இஞ்சி தின்ற குரங்கைப் போல் சிரிக்க அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவன் கன்னத்தை கிள்ளி அருகில் முகத்தைக் கொண்டு வந்த பிறகு அருகில் மனோகரி இருப்பதை உணர்ந்து முகம் சிவந்து நகர்ந்தாள்.
சஞ்சனா, "சித்தி, இந்த மாதிரி ஞயான் கொடுக்கறதில் எங்க வீட்டுக்காரர் பெரிய ஆள். ஆனா பர்சேஸுக்கு மட்டும் இவரை அனுப்பக் கூடாது. ஃபிஷ் மார்க்கெட்டில் இருக்கும் மீனவர்களுக்கு எல்லாம் இவர்தான் பாரி வள்ளல். இவன் பொண்ணு படிப்புக்கு, அவன் பாட்டி வைத்தியத்துக்குன்னு வாரி வாரி வழங்கிட்டு வருவார். அவனுக எல்லாம் சாயங்காலம் பாரில் குடிச்சுட்டு சொல்லி சிரிச்சுட்டு இருப்பானுக"
ஜாஷ், "Hey I am not that daft (நான் ஒண்ணும் அந்த அளவுக்கு பேக்கு இல்லை)"
தீபா, "Yes, only a little daft (ஆமாம், கொஞ்சம்தான் பேக்கு)"
ஜாஷ்வா, "Come on .. Deepa .. you could do better than that!"
தீபா, "சாரி, ஜீஜாஜி என் அக்காகிட்ட இருந்து தொத்திகிச்சு"
மறுபடி கடலலைகளிடம் போட்டியிடும் அளவுக்கு சிரிப்பலைகள் அந்த ரம்மியமான இரவை நிறப்பின.
சஞ்சனா, "அன்னைக்கு காலையில் எனக்கு தெரிஞ்ச எஃப்.பி.ஐ ஏஜண்ட் சைமண்ட் வில்லியர்ஸ்ன்னு ஒருத்தர், அவருக்கு ஃபோன் பண்ணினேன். தீவிரவாத தடுப்புப் பிரிவில் இருப்பவர். அவர் எடுக்கலை. அந்த மீட்டிங்க்கின் போது அவரிடம் இருந்து ஃபோன் வந்தது. அந்த சமயத்தில்தான் தீவிரவாதிகள்தான் அந்த மீட்டிங்க்குக்கு வரச்சொன்னாங்கன்னு எங்களுக்கு தெரிஞ்சுது. நான் ஆன்ஸர் பட்டனை அமுக்கிட்டு அங்கே நடப்பதை அவர் கேட்கற மாதிரி ஃபோனை பாக்கெட்டில் வெச்சுகிட்டேன். முதலில் இவரை அந்த மக்ஸூத் சுட்டான். அண்ணனுக்கு அடிபட்ட மாதிரி இவருக்கும் நுரையீரலில் குண்டு பாஞ்சுது. அதுவும் இடதுபக்கம். ஆனா அதிர்ஷவசமா இருதயத்தை உறசிட்டு போயிடுச்சு. நான் மத்தவங்களை சுட்டதுக்கு பிறகே சான்ட்ரா கைல துப்பாக்கியை பார்த்தேன். நானும் அவளும் ஒரே சமயத்தில் சுட்டோம். அவ செத்து விழுந்தா. எனக்கு குண்டடி பட்டு இருக்குன்னு தெரிஞ்சுது. எப்படியும் சைமண்ட் வில்லியர்ஸ்ஸுக்கு இது எல்லாம் கேட்டு இருக்கும், இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவார்ன்னு தெரியும். அந்த ஐ.எஸ்.ஐக்காரன் அப்பத்தான் வேனுக்கு உள்ளே இருந்து கன்னை எடுத்தான். நான் செத்து விழற மாதிரி விழுந்தேன்"
தீபா, "அவன் சந்தேகப் படலையா?"
சஞ்சனா, "நானும் கொஞ்ச நாள் ஒரு போராளியா இருந்ததில் கத்து கிட்டது. ஒரு துப்பாக்கி சண்டையில் யாரும் கீழே விழுந்தவங்களை சுட்டு குண்டை வேஸ்ட் பண்ண மாட்டாங்க"
வந்தனா, "ஓ, யா! சே, இதை போலீஸ் ட்ரெயினிங்கில் சொல்லிக் கொடுகக்லை!!"
மறுபடி சிரிப்பலை ...
சஞ்சன தொடர்ந்தாள், "மக்ஸூத்துக்கும் என்னை மாதிரி அடி பெருசா படலை. ஆனா நிஜமாவே மயக்கமாகி விழுந்து இருந்தான். அவனை மட்டும் அள்ளிப் போட்டுட்டு அந்த ஐ.எஸ்.ஐக்காரன் போனான். கொஞ்ச நேரத்தில் நான் எதிர்பார்த்த மாதிரி சைமண்ட் வில்லியர்ஸ் வந்தார். நான் அவரிடம் ஒரு டீல் போட்டேன். அவரும் அதுக்கு ஒத்துகிட்டார்"
சக்தி, "டீலா? என்ன டீல்?"
சஞ்சனா, "அந்த தீவிரவாதிகளுக்கு யார் யார் மூலம் எங்கே இருந்தெல்லாம் பணம் வந்ததுங்கற டீட்டெயில்ஸ் எல்லாம் கொடுக்கறேன். அதுக்கு பதிலா எனக்கும் ஜாஷவாவுக்கும் பாதுகாப்பு கொடுக்கணும்ன்னு கேட்டேன். அவர் விட்னஸ் ப்ரொடெக்க்ஷன் ப்ரோக்ராம் மூலம் பாதுகாப்பு கொடுப்பதா ஒத்துகிட்டார்.
உடனெ ஜாஷ்வாவையும் என்னையும் அவருக்கு தெரிஞ்ச டாக்டர் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு அனுப்பினார். எங்க மேல் எந்த சந்தேகமும் வராமல் பார்த்துகிட்டார். மாங்க்ஸ் பாட் நெட்டில் இவருக்கும் பங்கு இருக்குன்னு எஃப்.பி.ஐயில் இருக்கும் மத்த அதிகாரிகள் வந்து கேட்டப்ப ஜாஷ்வா தான் அதை எழுதலை. சக்தியும் நித்தினும்தான் அதை எழுதினாங்க. தான் அவங்களுக்கு ஒரு ஃப்ரெண்ட், ஈமெயில் விளம்பரம் கொடுக்க மட்டும் உதவறேன்னு சொன்னார். முதலில் நம்பலைன்னாலும் சைமண்ட் வில்லியர்ஸ் தன் இன்ஃப்ளூயன்ஸை உபயோகிச்சு எங்களை ரிலீஸ் பண்ணினார். இவர் ட்ரீட்மெண்ட் முடிஞ்சதும். நாங்க இங்கே வந்தோம். கரெக்டா அதே சமயத்தில் அண்ணனுக்கும் ட்ரீட்மெண்ட் முடிஞ்சு இருந்தது. அமெரிக்காவில் இருந்து நாங்க அண்டர்க்ரவுண்ட் ட்ரான்ஸ்ஃபர் மூலம் அனுப்பின பணம் பத்தின விவரங்கள் அண்ணன் கிட்ட கொடுத்து வெச்சு இருந்தோம். அண்ணன் அனுப்பின உடனே இந்த கட்டிடத்துக்கு ஃபுல் செட்டில்மெண்ட் பண்ணிட்டு மத்த வேலையில் இறங்கினோம்"
மனோகரி, "சரி, இங்கே உனக்கு நல்ல கைனகாலஜிஸ்ட் இருக்காங்களா?"
சஞ்சனா, "ஓ, ஒரு இண்டியன் டாக்டர் கப்பிள் இருக்காங்க. நல்லா பாத்துக்கறாங்க"
தீபா, "ஹேய், சஞ்சனா, ஆணா பெண்ணான்னு தெரிஞ்சுட்டீங்களா?"
சஞ்சனா, "நானும் இவரும் கடைசி வரைக்கும் தெரியாமலே இருக்கட்டும்ன்னுதான் இருந்தோம். ஆனா எனக்கு அடிபட்டதால் டாக்டர்ஸ் ஆறு மாசம் வரைக்கும் ஒவ்வொரு மாசமும் அல்ட்ரா ஸ்கேன் செயய்ச் சொன்னாங்க. போன தடவை ஸ்கேன் எடுக்கப் போனப்போ. எங்களுக்கு ஆல்ரெடி தெரியுன்னு நினைச்சுட்டு இங்கே இருக்கும் டாக்டரம்மா 'உன் பையனும் பொண்ணும் நல்லா இருக்காஙக' அப்படின்னு சொன்னா"
நித்தின், "வாவ், சோ ஜூனியர் சஞ்சனா, ஜூனியர் ஜாஷ்வா ரெண்டு பேருமா?"
ஜாஷ்வா, "எஸ்!"

Saturday, 30 May 2009 5:30 PM till Thursday, 4 June 2009 9:00 AM
A private Guest House, Quail Hill, Coonoor
சனி, மே 30, 2009 மாலை 5:30இல் இருந்து வியாழன் ஜூன் 4, 2009 காலை 9:00 வரை
ஒரு தனியார் விருந்தினர் மாளிகை, குவேயில் ஹில் பகுதி, குன்னூர்
முந்தைய தினம் அவர்கள் திட்டப் படி கோவை சென்று அங்கு ஒரு ஸ்கார்ப்பியோ எஸ்.யூ.வியை விலைக்கு வாங்கிக் கொண்டு அதில் குன்னூர் சென்றடைந்து இருந்தனர். அந்த கெஸ்ட் ஹவுஸில் ஒரு சிறு குடும்பம் தங்குவதற்கான இரு படுக்கை அறைகளும் ஒரு சிறு ஹாலும் கொண்ட ஸுட் ஒன்றை வாடகைக்கு எடுத்து தற்காலிகமாக குடி புகுந்தனர். அவர்கள் வேண்டு கோளுக்கு இணங்கி அந்த ஹாலில் இரு நாற்காலிகளுடன் போடப் பட்ட மேசையில் தங்கள் மடி கணிணிகளை இணைத்து நெட் கனெக்க்ஷன் சரியாக இருக்கிறதா என்று பார்த்த பிறகு ஜெட்லாக் விலக சீக்கிரமே படுக்கையை நாடி இருந்தனர்.
அடுத்த நாள் காலை ...
நித்தின், "ம்ம்ம் ... சொல்லு என்ன ப்ளான்?"
சக்தி, "தகவல் சேகரிப்பது. அந்த தகவலை R&AWவுக்கும், தேவைப்பட்டா எஃப்.பி.ஐக்கும் கொடுப்பது"
நித்தின், "என்ன மாதிரி தகவல்?"
சக்தி, "ஐ.எஸ்.ஐக்கு தீவிரவாதிகளுடன் இருக்கும் தொடர்பைப் பற்றின தகவல். இதைத் தவிர தீவிரவாதிகளைப் பத்தி என்ன தகவல் கிடைச்சாலும்"
நித்தின், "ம்ம்ம் ... நானும் அதைத்தான் யோசிச்சேன். போன நவம்பர் மும்பையில் நடந்த அட்டாக்குக்கும் அவங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு சொல்லிட்டு இருக்காங்க. அதை அமெரிக்காவும் நம்பிட்டு இருக்கு. அவங்களை தீவிரவாதத்துடன் சம்மந்தப் பட்டு இருக்கும் தகவல் கிடைச்சா நிச்சயம் இந்தியாவுக்கு உதவும்"
சக்தி, "I want the bastards to pay dearly"
நித்தின், "சரி, எப்படி ப்ரொஸீட் பண்ணலாம்?"
சக்தி, "நாம் செஞ்ச மூணு ட்ரான்ஸ்ஃபரிலும் ஈடு பட்ட கம்பனிகள், அவங்க பேங்க் அக்கவுண்ட் நம்பர், பணம் டெப்பாஸிட் ஆன இடங்கள் இவைகள் நம் மாங்க்ஸ் பாட் நெட்டில் இருக்கும் கணிணிகளில் எதிலாவுது இருக்கான்னு பார்க்கலாம்"
நித்தின், "ம்ம்ஹூம் ... எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த மாதிரி விவரங்களை கணிணியில் ஸ்டோர் செய்ய மாட்டாங்க. அப்படியே ஸ்டோர் செஞ்சு இருந்தாலும் அதில் நிச்சயம் ஆண்டி-வைரஸ் அப் டு டேட்டா இருக்கும். மாங்க்ஸ்-2 வேலை செய்யாது"
சக்தி, "Trial costs nothing ... ஒரு ஸர்ச்சுக்கான ஆணைகளை அனுப்பலாம் எப்படியும் ரிஸல்ட் வர நேரம் ஆகும். அதுக்குள்ள வேறு என்ன செய்வதுன்னு யோசிக்கலாம்"
நித்தின், "சரி ... ஸர்ச் ஸ்ட்ரிங்க்ஸை கொடு நான் அனுப்பறேன்"
அவர்கள் செய்த மூன்று ரிவர்ஸ் ட்ரான்ஸ்ஃபரில் சம்மந்தப் பட்ட கம்பெனிகளின் பெயர்கள், வங்கியின் பெயர், வங்கிக் கணக்கு எண்கள், மற்றும் பணம் டெபாசிட் செய்யப் பட்ட இடங்கள் இவைகளை பற்றிய விவரங்கள் மாங்க்ஸ் பாட் நெட்டில் இருக்கும் கணிணிகளில் எதிலாவது இருக்கிறதா என்று தேடும்படி மாங்க்ஸ் பாட் நெட்டில் இருக்கும் அத்தனை கணிணிகளுக்கும் ஆணை பிறப்பித்தனர்.
சக்தி, "சரி, அந்த ஸர்ச் ரிஸல்ட் வரும் வரை என்ன செய்யலாம்?"
நித்தின், "Lets put our good old hacking skills to use now .. டார்கெட் செலக்ட் பண்ணு"
சக்தி, "ஐ.எஸ்.ஐ ... என்ன செய்யலாம்ன்னு சொல்லு"
நித்தின், "அவங்க கணிணிகளை ஹாக் செய்யலாம். மாங்க்ஸ்-2வை நுழைக்க முடியுதான்னு பார்க்கலாம்"
சக்தி, "முதலில் அவங்க கணிணிகளில் எதிலாவது மாங்க்ஸ்-2 இருக்கான்னு பார்க்கலாம்"
நித்தின், "அதையும் செய்யலாம். அதுக்கு இன்னும் ஒரு ஸர்ச் கமாண்ட் கொடுக்கணும்"
அடுத்து ஐ.எஸ்.ஐ, மற்றும் பல ஐ.எஸ்.ஐ சம்மந்தப் பட்ட பெயர்கள் கொண்ட வரிகள் எந்த கணிணியிலாவது இருக்கின்றனவா என்று தேடும் படி ஆணை பிறப்பித்தனர்.
மதியத்துக்குள் அவர்களின் முதல் தேடலுக்கு பதில்கள் வரத்தொடங்கின.
ஜெர்மனியில் பாகிஸ்தான் தூதரகத்தில் இருக்கும் ஒரு கணிணியில் அங்கு டெப்பாசிட் செய்த பணத்தை பற்றிய தகவல்கள் ஒரு கணிணியில் இருந்தது. அந்த கணிணியில் இருந்த ஈமெயில்களை இணையத்தில் அவர்கள் அமைத்து இருந்த பிரத்தியேக சர்வருக்கு அனுப்ப ஆணை பிறப்பித்தனர். இதை முடிக்கையில் முன்னிரவு ஆகி இருந்தது.
அடுத்த நாள் காலை ....
சக்தி, "I think we are being watched ... "
நித்தின், "என்ன சொல்றே?"
சக்தி, "காலையில் நான் ஜாகிங்க் போனேன். இந்த ரோட் முக்கில் ஒரு மாருதி காரில் ஒருத்தன் உக்காந்துட்டு இருந்தான். ஆளை பாத்தா காரிலேயே தூங்கி இருப்பான் போல இருந்தது. நான் அந்த காருக்கு நோக்கி போகும் போது அவன் ஸெல்ஃபோன் அடிச்சுது எடுத்து பேசிட்டு நான் வர்றதைப் பார்த்தான். அப்பறம் தலையை குனிஞ்சுட்டான். அங்கே ரைட்டில் திரும்பி நான் மேலே போகும் ரோட்ல ஓடினேன். அடுத்து ரெண்டு ரோட் பிரியும் இடத்தில் அதே மாதிரி ஒருத்தன் ஒரு பைக்கில் உக்காந்துட்டு சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருந்தான். நான் ஒரு பத்து கிலோமீட்டர் ஓடி இருப்பேன். ஒவ்வொரு பிரிவிலும் யாராவது நின்னுட்டு இருந்தாங்க. திரும்பி வரும்போது நான் முதலில் பார்த்த அதே ஆள் வேறு ஒரு பிரிவில் நின்னுட்டு இருந்தான்"
நித்தின், "பார்க்க எப்படி இருந்தாங்க"
சக்தி, "எல்லோரும் ஆர்மிக் காரங்க அது நிச்சயம்"
நித்தின், "என்ன செய்யலாம்?"
சக்தி, "நம்மை பிடிக்க வந்தவங்கன்னா இந்நேரம் வந்து பிடிச்சு இருப்பாங்க. எதுக்காகவோ அல்லது யாருக்காகவோ வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க. இப்போதைக்கு தனியா வெளியில் காலடி எடுத்து வைக்க வேண்டாம். நாம் செய்ய நினைச்சதை சீக்கிரம் முடிக்கலாம்"
நித்தின், "சரி"சக்தி, "நித்தின், அந்த ஷொயேப் ரொம்ப நாளா மாங்க்ஸ் பாட் நெட்டை கண்காணிச்சுட்டு இருந்ததா சொன்னான் இல்லை?"

Friday, 5 June 2009 8:30 AM
வெள்ளி, ஜூன் 5, 2009 காலை 8:30
சக்திவேல் அந்த சர்வீஸ்ட் அப்பார்ட்மெண்டில் இருந்த ஜிம்மில் இருந்த ட்ரெட் மில்லுக்கும் க்ராஸ் ட்ரெயினருக்கும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் வேலை கொடுத்தபின் வியர்வை வழிய அறைக்கு திரும்பினான். நித்தினை எழுப்பி அவனுக்கு காஃபி ஆர்டர் செய்தபின் குளிக்கச் சென்றான். நித்தின் தயாராகிக் கொண்டு இருந்த போது அறையில் இருந்த தொலைபேசி ஒலித்தது.
மறுமுனையில் வந்தனா தழு தழுத்த குரலில், "ஷக்தி .. ஆண்டியையும் ஷாந்தியையும் யாரோ கடத்திட்டு போயிருக்காங்க. ஐ யம் சோ சாரி" என்றபின் அடக்க முடியாமல் அவள் விசும்புவது கேட்டது.
சக்தி, "என்ன ஆச்சு? நேத்து நைட்டு கூட அம்மாகிட்ட பேசினேனே. வாசலில் போலீஸ்காரங்க ரெண்டு பேர் இருக்காங்கன்னு சொன்னாங்க"
நித்தின் குளியலறையில் இருந்த எக்ஸ்டென்ஷனை எடுத்துக் கொண்டான்.
மேலும் தொடராமல் வந்தனா அழுது கொண்டு இருக்க முரளீதரன் லைனுக்கு வந்தார்.
முரளீதரன், "சக்தி, ஐ யம் சோ சாரி. காலையில் பீட் சேஞ்சுக்கு ரெண்டு கான்ஸ்டபிள்ஸ் உன் வீட்டுக்கு போன போது அங்கே காம்பௌண்டுக்குள்ள நைட்டு காவலுக்கு இருந்த ரெண்டு பேரும் தொண்டை அறுபட்டு செத்து கிடந்ததை பார்த்து இருக்காங்க. நைட்டு ரெண்டு மணி வாக்கில் இது நடந்து இருக்கணும். அக்கம் பக்கத்தில் இருந்தவங்களுக்கு ஒரு சத்தமும் கேட்கலைன்னு சொன்னாங்க. உன் வீதி முக்கில் இருக்கும் கடைக்கு வெளியில் தூங்கும் ஒரு ஆள் அந்த நேரத்தில் ஒரு கார் உன் வீட்டுப் பக்கத்தில் இருந்து போனதைப் பார்த்து இருக்கான். அனேகமா அவங்களை பெங்களுருக்குத்தான் கூட்டிட்டு வருவாங்க. பெங்களூருக்குள் வரும் வண்டிகள் எல்லாத்தையும் செக் பண்ண ஆர்டர் கொடுத்து இருக்கோம். ஆனா, எனக்கு அவங்க இந்நேரம் ஆல்ரெடி பெங்களூருக்குள் அல்லது சுத்து வட்டாரத்தில் எங்கேயாவது இருப்பாங்கன்னு தோணுது"
சக்தி, "காட், என்ன சார் இது? இதைத்தான் அவங்க செய்வாங்கன்னு முன்கூட்டயே தெரிஞ்சுதானே உங்ககிட்ட உதவி கேட்டோம்?"
முரளீதரன், "உண்மையில் அவங்களுக்கு இந்த அளவுக்கு ரீச் இருக்கும்ன்னு நான் நினைக்கலை சக்தி. ஐ யாம் வெரி சாரி. தவிர அந்த ரெண்டு பேரின் கவனக் குறைவு. ரெண்டு பேரும் படுக்கையை விரிச்சு தூங்கிட்டு இருந்து இருக்காங்க. படுத்தபடியே கழுத்து அறுபட்டு செத்து இருக்காங்க. உன் வீட்டின் பின் புறம் இருக்கும் பாத்ரூமை இவங்க உபயோகிக்கறதுக்காக பின் பக்கக் கதவை ப்ரொஃபெஸ்ஸர் திரந்து வெச்சு இருக்காங்க. அடுத்து இருந்த கதவில் உள்பக்க லேட்ச் சரியில்லை. சரியா தாளிடாம இருந்த அந்த கதைவை ஈஸியா உடைச்சுட்டு உள்ளே போயிருக்காங்க"
சக்தி, "அவங்களுக்கு எதாவது ஆச்சுன்னா .. "
முரளீதரன், "உன் அம்மாவுக்கும் ஷாந்திக்கும் இப்போதைக்கு ஒண்ணும் ஆகாது. உங்களை நிச்சயம் காண்டாக்ட் செய்வாங்க. போலீஸுக்கு போனா உன் அம்மாவையும் தங்கையையும் உயிரோடு பார்க்க முடியாதுன்னு சொல்லுவாங்க."
சக்தி, "அவங்களுக்கு என்ன வேணும்ன்னு எனக்கு தெரியும். மாங்க்ஸ் பாட் நெட்டின் கன்ட்ரோலர் ஸாஃப்ட்வேர்"
முரளீதரன், "எனக்கும் அது தெரியும்"
சக்தி, "ஆனா அதை கொடுத்ததுக்கு பிறகு எங்க ரெண்டு பேரையும் உயிரோட விடுவாங்களாங்கறது சந்தேகம்"
முரளீதரன், "அதுவும் எனக்கு தெரியும்"
சக்தி, "அதனால் முதலில் நான் அம்மாவையும் சாந்தியையும் விடுவிக்கச் சொல்லப் போறேன். அவங்க பத்திரமான இடத்துக்கு போன பிறகு நானே அவங்ககிட்ட சரணடையறேன்னு சொல்லப் போறேன்"
முரளீதரன், "இரு கொஞ்சம் பொறுமையா யோசிக்கலாம். இன்னும் ஒரு விஷயம். உங்க வீட்டில் அவங்க செல்ஃபோன் சிக்னல் ஜாமர் ஒன்னை வெச்சு இருந்தாங்க. நீ லாண்ட் லைனில் உங்க அம்மாவை காண்டாக்ட் செஞ்சியா?"
சக்தி, "ஆமா. நேத்து நைட்டு அவங்க செல் நாட் ரீச்சபிள்ன்னு வந்ததும் லாண்ட் லைனில் காண்டாக்ட் செஞ்சேன்"
முரளீதரன், "அதை டாப் செஞ்சு இருக்காங்க. நீ அவங்க கூட பேசினப்பறம்தான் உன் ப்ளான் அவங்களுக்கு தெரிஞ்சு இருக்கு. நீ கவர்னர் மாளிகைக்கு போறதுக்கு முன்னாடி அவங்க முந்திக்கத்தான் இவ்வளவு வேகமா செயல் பட்டு இருக்காங்க"சக்தி, "சரி என்ன செய்யணும்"
வெள்ளி, ஜூன் 5, 2009 காலை 8:30
சக்திவேல் அந்த சர்வீஸ்ட் அப்பார்ட்மெண்டில் இருந்த ஜிம்மில் இருந்த ட்ரெட் மில்லுக்கும் க்ராஸ் ட்ரெயினருக்கும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் வேலை கொடுத்தபின் வியர்வை வழிய அறைக்கு திரும்பினான். நித்தினை எழுப்பி அவனுக்கு காஃபி ஆர்டர் செய்தபின் குளிக்கச் சென்றான். நித்தின் தயாராகிக் கொண்டு இருந்த போது அறையில் இருந்த தொலைபேசி ஒலித்தது.
மறுமுனையில் வந்தனா தழு தழுத்த குரலில், "ஷக்தி .. ஆண்டியையும் ஷாந்தியையும் யாரோ கடத்திட்டு போயிருக்காங்க. ஐ யம் சோ சாரி" என்றபின் அடக்க முடியாமல் அவள் விசும்புவது கேட்டது.
சக்தி, "என்ன ஆச்சு? நேத்து நைட்டு கூட அம்மாகிட்ட பேசினேனே. வாசலில் போலீஸ்காரங்க ரெண்டு பேர் இருக்காங்கன்னு சொன்னாங்க"
நித்தின் குளியலறையில் இருந்த எக்ஸ்டென்ஷனை எடுத்துக் கொண்டான்.
மேலும் தொடராமல் வந்தனா அழுது கொண்டு இருக்க முரளீதரன் லைனுக்கு வந்தார்.
முரளீதரன், "சக்தி, ஐ யம் சோ சாரி. காலையில் பீட் சேஞ்சுக்கு ரெண்டு கான்ஸ்டபிள்ஸ் உன் வீட்டுக்கு போன போது அங்கே காம்பௌண்டுக்குள்ள நைட்டு காவலுக்கு இருந்த ரெண்டு பேரும் தொண்டை அறுபட்டு செத்து கிடந்ததை பார்த்து இருக்காங்க. நைட்டு ரெண்டு மணி வாக்கில் இது நடந்து இருக்கணும். அக்கம் பக்கத்தில் இருந்தவங்களுக்கு ஒரு சத்தமும் கேட்கலைன்னு சொன்னாங்க. உன் வீதி முக்கில் இருக்கும் கடைக்கு வெளியில் தூங்கும் ஒரு ஆள் அந்த நேரத்தில் ஒரு கார் உன் வீட்டுப் பக்கத்தில் இருந்து போனதைப் பார்த்து இருக்கான். அனேகமா அவங்களை பெங்களுருக்குத்தான் கூட்டிட்டு வருவாங்க. பெங்களூருக்குள் வரும் வண்டிகள் எல்லாத்தையும் செக் பண்ண ஆர்டர் கொடுத்து இருக்கோம். ஆனா, எனக்கு அவங்க இந்நேரம் ஆல்ரெடி பெங்களூருக்குள் அல்லது சுத்து வட்டாரத்தில் எங்கேயாவது இருப்பாங்கன்னு தோணுது"
சக்தி, "காட், என்ன சார் இது? இதைத்தான் அவங்க செய்வாங்கன்னு முன்கூட்டயே தெரிஞ்சுதானே உங்ககிட்ட உதவி கேட்டோம்?"
முரளீதரன், "உண்மையில் அவங்களுக்கு இந்த அளவுக்கு ரீச் இருக்கும்ன்னு நான் நினைக்கலை சக்தி. ஐ யாம் வெரி சாரி. தவிர அந்த ரெண்டு பேரின் கவனக் குறைவு. ரெண்டு பேரும் படுக்கையை விரிச்சு தூங்கிட்டு இருந்து இருக்காங்க. படுத்தபடியே கழுத்து அறுபட்டு செத்து இருக்காங்க. உன் வீட்டின் பின் புறம் இருக்கும் பாத்ரூமை இவங்க உபயோகிக்கறதுக்காக பின் பக்கக் கதவை ப்ரொஃபெஸ்ஸர் திரந்து வெச்சு இருக்காங்க. அடுத்து இருந்த கதவில் உள்பக்க லேட்ச் சரியில்லை. சரியா தாளிடாம இருந்த அந்த கதைவை ஈஸியா உடைச்சுட்டு உள்ளே போயிருக்காங்க"
சக்தி, "அவங்களுக்கு எதாவது ஆச்சுன்னா .. "
முரளீதரன், "உன் அம்மாவுக்கும் ஷாந்திக்கும் இப்போதைக்கு ஒண்ணும் ஆகாது. உங்களை நிச்சயம் காண்டாக்ட் செய்வாங்க. போலீஸுக்கு போனா உன் அம்மாவையும் தங்கையையும் உயிரோடு பார்க்க முடியாதுன்னு சொல்லுவாங்க."
சக்தி, "அவங்களுக்கு என்ன வேணும்ன்னு எனக்கு தெரியும். மாங்க்ஸ் பாட் நெட்டின் கன்ட்ரோலர் ஸாஃப்ட்வேர்"
முரளீதரன், "எனக்கும் அது தெரியும்"
சக்தி, "ஆனா அதை கொடுத்ததுக்கு பிறகு எங்க ரெண்டு பேரையும் உயிரோட விடுவாங்களாங்கறது சந்தேகம்"
முரளீதரன், "அதுவும் எனக்கு தெரியும்"
சக்தி, "அதனால் முதலில் நான் அம்மாவையும் சாந்தியையும் விடுவிக்கச் சொல்லப் போறேன். அவங்க பத்திரமான இடத்துக்கு போன பிறகு நானே அவங்ககிட்ட சரணடையறேன்னு சொல்லப் போறேன்"
முரளீதரன், "இரு கொஞ்சம் பொறுமையா யோசிக்கலாம். இன்னும் ஒரு விஷயம். உங்க வீட்டில் அவங்க செல்ஃபோன் சிக்னல் ஜாமர் ஒன்னை வெச்சு இருந்தாங்க. நீ லாண்ட் லைனில் உங்க அம்மாவை காண்டாக்ட் செஞ்சியா?"
சக்தி, "ஆமா. நேத்து நைட்டு அவங்க செல் நாட் ரீச்சபிள்ன்னு வந்ததும் லாண்ட் லைனில் காண்டாக்ட் செஞ்சேன்"
முரளீதரன், "அதை டாப் செஞ்சு இருக்காங்க. நீ அவங்க கூட பேசினப்பறம்தான் உன் ப்ளான் அவங்களுக்கு தெரிஞ்சு இருக்கு. நீ கவர்னர் மாளிகைக்கு போறதுக்கு முன்னாடி அவங்க முந்திக்கத்தான் இவ்வளவு வேகமா செயல் பட்டு இருக்காங்க"சக்தி, "சரி என்ன செய்யணும்"
முரளீதரன், "நீ தைரியமா இருக்கணும். அவங்க ரெண்டு பேரையும் முதலில் பார்க்கணும்ன்னு சொல்லு. அதுக்கு பிறகுதான் அவங்க கேட்பதை கொடுப்பதா சொல்லு"
சக்தி, "எங்களுக்கு உங்களோட தொடர்பு இருக்குன்னு தெரிஞ்சு இருக்குமா?"
முரளீதரன், "நீங்க எங்களோட தொடர்பு கொண்டு இருப்பது அவங்களுக்கு தெரியலைன்னு நினைக்கறேன். தெரிஞ்சு இருந்தா இந்த மாதிரி முயற்சியில் இறங்கி இருக்க மாட்டாங்க. அல்லது ரிவெஞ்சுக்காக செய்யறாங்கன்னு நினைக்கறேன். அவங்க நீங்க ரெண்டு பேரும் இன்னமும் அரசாங்கத்தில் யாரையும் அணுகலைன்னு நினைச்சுட்டு இருப்பாங்க."
சக்தி, "அவங்க எங்களை எங்கேயாவது ஒரு இடத்துக்கு வரச் சொல்லுவாங்க"
முரளீதரன், "ஆமா. அங்கே இருந்து உங்களை கூட்டிட்டு போகப் பார்ப்பாங்க. நீங்க அவங்ககூட போகறதுக்கு முன்னாடி உங்க அம்மாவையும் தங்கையையும் பார்க்கணும்ன்னு சொல்லுங்க. நீங்க ரெண்டு பேரும் உங்க ஃபோனில் லோட் செஞ்ச GPS ட்ராக்கின் ஸாஃப்ட்வேர் இப்போ ரொம்ப உதவியா இருக்கப் போகுது. நீங்க எங்கே போனாலும் உங்களுக்கு பின்னாடி அரை கிலோமீட்டர் தூரத்தில் ஒரு ராபிட் ஆக்க்ஷன் டீம் வரும். ஒரு டவுட். உங்க ஃபோன் ரெண்டிலும் சிம்கார்ட் இல்லாமலே GPS வேலை செய்யுமா?"
சக்தி, "வேலை செய்யணும், ஆனா நாங்க ட்ரை பண்ணிப் பார்த்தது இல்லை. ஏன் கேக்கறீங்க?"
முரளீதரன், "நீங்க யாருடன் பேசினாலும் எங்களுக்கும் கேட்கும்படி உங்களுக்கு ரெண்டு பேருக்கும் நான் இப்போ ரெண்டு டூயல் சிம் கார்ட் செல்ஃபோன்களை அனுப்பப் போறேன். உங்க செல்ஃபோனை நீங்க பேசறதுக்கு உபயோகிக்கக் கூடாது. நான் அனுப்பும் செல்ஃபோன் ரெண்டிலும் ரெண்டு சிம்கார்ட் இருக்கும். அந்த ரெண்டு சிம்கார்ட்களில் ஒண்ணை எடுத்து உங்க ஃபோனில் போட்டுட்டு உங்க ஃபோனில் இருக்கும் சிம் கார்டை அந்த செல்ஃபோனில் மாட்டிக்குங்க. அந்த செல்ஃபோனில் ரெண்டு சிம்கார்ட் மூலம் ரெண்டு நம்பரை கூப்பிட்டு கான்ஃபரென்ஸ் மோடில் போட முடியும். அதை எப்படி வேகமா செய்யறதுன்னு சில தடவை செஞ்சு பாத்துக்குங்க. அவங்க உன்னை காண்டாக்ட் செஞ்சதும் சக்தி நீ இன்னோரு சிம்கார்ட் உபயோகிச்சு கான்ஃப்ரென்ஸ் மோடில் நான் கொடுக்கும் நம்பரை கூப்பிடணும். அது எங்க கன்ட்ரோல் செண்டரில் இருக்கும் ஒரு டெலிகான்ஃப்ரென்ஸ் நம்பர். எப்ப கூப்பிட்டாலும் உடனே கனெக்ட் ஆயிடும். நித்தின், நீயும் உடனே அந்த நம்பருக்கு கூப்பிட்டுட்டு உன் செல்ஃபோனை ம்யூட்டில் போட்டுடணும். நீ பேசறது சக்தியின் மறுமுனையில் இருப்பவனுக்கு கேட்கக் கூடாது. நாங்களும் எதுவும் பேச மாட்டோம். ஓ.கே?"
சக்தி, "ஓ.கே, சுந்தர் அங்கிள் ஸேஃபா இருக்காரா?"
முரளீதரன், "எஸ், அவர் இருக்கும் இடத்தில் இந்த மாதிரி செய்யறது கஷ்டம். இருந்தாலும் அவரை இந்நேரம் அங்கே இருந்து எங்க ஸேஃப் ஹவுஸுக்கு அழைச்சுட்டு போயிருப்பாங்க. இரு வந்தனா உன்னிடம் பேசணுமாம்"
வந்தனா, "ஷக்தி, தைரியமா இரு ஆண்டியையும் ஷாந்தியையும் எப்படியாவது மீட்டு கொண்டு வந்துடலாம்"
சக்தி, "Let us hope so .... "
அடுத்த நிமிடம் காவல் துறையைச் சேர்ந்தவர் ஒருவர் அவர்கள் இருவரிடமும் ஆளுக்கு ஒரு கைபேசியை கொடுத்து விட்டுச் சென்றார். முதலில் அந்த செல்ஃபோன்களில் எப்படி இரண்டு சிம் கார்ட் உபயோகித்து கான்ஃப்ரென்ஸ் மோடில் இயக்குவது என்று அறிந்து கொண்டு ஓரிரு முறை அதை செய்து பார்த்துக் கொண்டனர். அடுத்து, அதில் இருந்த சிம் கார்டுகளில் ஒன்றை எடுத்து தங்களது கைபேசிகளில் மாட்டி ஆன் செய்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டனர். அடுத்து முரளீதரன் கொடுத்து அனுப்பி இருந்த செல்ஃபோன்களில் தங்களது சிம் கார்டுகளை பொறுத்தி ஆன் செய்தனர்.அழைப்புக்காக அவர்கள் வெகு நேரம் காத்திருக்கவில்லை. ஆன் செய்த சில நிமிடங்களில் சக்திவேல் வைத்து இருந்த கைபேசி அலறியது. தனது எண்ணுக்கு வந்து இருக்கும் கால் என அறிந்ததும். முரளீதரன் கொடுத்த டெலிகான்ஃபரென்ஸ் எண்ணை அடுத்த எண் மூலம் அழைத்த பிறகு அவனுக்கு வந்த காலுக்கு பதில் அளித்தான். நித்தினும் உடனே அந்த டெலிகான்ஃப்ரென்ஸ் எண்ணை அழைத்து தன் செல்ஃபோனை ம்யூட் செய்தான்,
சக்தி, "ஹெல்லோ?"
மறுமுனையில் ஒரு குரல், "ஹெல்லோ! செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வெச்சு இருந்தா எப்படி உங்க அம்மாவையும் தங்கையையும் பத்தி நியூஸ் சொல்லறது?"
சக்தி, "ஹெல்லோ! ஹூஸ் திஸ்?"
மறுமுனையில் மக்ஸூத், "என் பெயர் மக்ஸூத். உன் ஃபெரெண்ட் ஜாஷ்வாவின் மனைவி என்னை காயப் படுத்தினா. அதுக்கு பழிதீர்க்க உன் அம்மாவையும் தங்கையையும் கிட்நாப் செஞ்சுட்டு வந்து இருக்கேன்"
சக்தி, "என்ன சொல்றே? எங்க அம்மாவும் தங்கையும் ஈரோடில் பத்திரமா இருக்காங்க"
மக்ஸூத், "ஓ! நீதான் தலை மறைவா இருக்கியே? உனக்கு இன்னும் நியூஸ் வந்து இருக்காது. பரவால்லை. இப்போ உன் அம்மாவும் தங்கையும் என் கஸ்டடியில் இருக்காங்க. எனக்கு தேவையானது உங்கிட்ட இருக்கு. நீ அதைக் கொடுத்தாதான் நான் உன் அம்மாவையும் தங்கையும் விடுவிப்பேன்"
சக்தி, "உனக்கு தேவையானதா? என்ன சொல்றே புரியலை"
மக்ஸுத், "தெரியாத மாதிரி நடிக்காதே. நிச்சயம் அன்னைக்கு ஜாஷ்வாவை காரில் கூட்டிட்டு வந்த அவன் ஃப்ரெண்ட் அங்கே நடந்ததை உனக்கு சொல்லி இருப்பான். அதான் அன்னைக்கு ராத்திரியே அமெரிக்காவை விட்டு புறப்பட்டு வந்தே. எனக்கு தேவை மாங்க்ஸ் பாட் நெட்டின் கன்ட்ரோல்"
சக்தி, "என் அம்மாவும் தங்கையும் உன்னிடம் இருக்காங்கன்னு நான் எப்படி நம்பறது?"
மக்ஸூத், "லூக், இது நீ சினிமாவில் பார்க்கும் கடத்தல் இல்லை. நிஜக் கடத்தல். நான் இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு உன்னை கூப்பிடுவேன். போலீஸுக்கு போகணும்ன்னு மட்டும் நினைக்காதே"
மக்ஸூத் இணைப்பைத் துண்டித்தான்.
கான்ஃபரென்ஸில் இருந்த முரளீதரன், "சக்தி, அவன் எந்த நம்பரில் இருந்து கூப்பிட்டான். க்விக்"
சக்திவேல் அந்த நம்பரை பார்த்து சொன்னான்.
முரளீதரன், "அடுத்த பத்து நிமிஷத்தில் இதே நம்பரில் இருந்து கூப்பிடுவானாங்கறது சந்தேகம். சோ, அவன் கூப்பிட்ட உடனே முதலில் அவனோட நம்பரை நோட் பண்ணிக்கோ. நித்தின், இந்த செல்லில் கனெக்ட் செய்யறதுக்கு முன்னாடி அந்த நம்பரை எனக்கு எஸ்.எம்.எஸ் பண்ணு. ஓ.கே. பயப் படாதீங்க ரெண்டு பேரும். பை"அடுத்த பத்து நிமிடத்தில் முரளீதரன் சொன்னபடி வேறு ஒரு கைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. நித்தின் முரளீதரன் சொன்னபடி அந்த எண்ணை அவருக்கு அனுப்பிய பிறகு இருவரின் மாற்றுக் கைபேசிகளிலும் முரளீதரனின் கான்ஃபரென்ஸ் நம்பரை அழைத்து மறுபடி சக்தியின் மாற்றுக் கைபேசியை அவனது ஷர்ட் பாக்கட்டில் வைத்தான். சக்திவேல் ஸ்பீக்கர் ஃபோனை ஆன் செய்து பதில் அளித்தான்.
மக்ஸூத், "என்ன சக்தி, ஊருக்கு ஃபோன் பண்ணி விசாரிச்சயா? என்ன சொன்னாங்க?"
சக்தி, "எங்க அம்மாவையும் தங்கையையும் காணோம்ன்னு சொன்னாங்க"
மக்ஸூத், "நீ எங்கே இருக்கேன்னு சொல்லி இருக்க மாட்டியே? ஏன்னா அங்கே நீ வருவேன்னுதான் போலீஸ்காரங்க வெய்ட் பண்ணிட்டு இருந்தாங்க"
சக்தி, "அவங்ககிட்ட நான் யாருன்னே சொல்லலை"
மக்ஸூத், "இப்ப நம்பறயா?"
சக்தி, "இல்லை. எங்க அம்மாவும் தங்கையும் உங்கிட்ட இருக்காங்கங்கறதுக்கு என்ன ஆதாரம்?"
மக்ஸூத், "ஒண்ணு பண்ணலாம். உனக்கு உங்க அம்மா அல்லது தங்கையின் கையை நல்லா அடையாளம் தெரியுமா? ஆதாரம் வேணும்ன்னா பெங்களூரில் எதாவது ஒரு குப்பைத் தொட்டியில் அவங்க கை ஒண்ணை வெட்டி வீசிட்டு உனக்கு எங்கேன்னு சொல்றேன். நீ போய் பாத்துக்கோ. என்ன சரியா?"
அதுவரை பதட்டமில்லாமல் இருந்த சக்தி, "வேண்டாம் .. என்ன செய்யணும் சொல்லு" என்று அலறினான்.
மக்ஸூத், "அப்படி வா வழிக்கு. நீ உன் ஃப்ரெண்டை கூட்டிட்டு நான் சொல்ற இடத்துக்கு வரணும். உன்னிடம் கார் இருக்கா?"
சக்தி, "இருக்கு"
மக்ஸூத், "என்ன கார்? என்ன கலர்?"
சக்தி, "ஸ்கார்ப்பியோ எஸ்.யூ.வி. மரூன் கலர் பாடி. ஸில்வர் ட்ரிம்மிங்க்"
மக்ஸுத், "சரி, அந்த ஸாஃப்ட்வேரை லோட் செஞ்சு இருக்கும் லாப்டாப்பையும் எடுத்துட்டு வா. கூடவே அந்த சாஃப்ட்வேரை ஒரு பென் ட்ரைவில் காப்பி பண்ணியும் எடுத்துட்டு வரணும். நான் இன்னும் பத்து நிமிஷத்தில் கூப்பிடறேன்"
சக்தி எதிர் முனையில் இணைப்பை துண்டிக்குமுன், "எடுத்துட்டு வர்றேன். எல்லாம் பாஸ்வர்ட் மூலம் என்க்ரிப்ட் ஆகி இருக்கும். நான் என் அம்மாவையும் தங்கையும் பத்திரமா பார்க்காம உனக்கு எதுவும் தரமாட்டேன். என்ன பாஸ்வர்டுன்னும் சொல்ல மாட்டேன்"
மக்ஸூத், "நான் அந்த அளவுக்கு முட்டாள் இல்லை. நீ வரும்போது உன் அம்மாவும் தங்கையும் பத்திரமா உன்னை தூரத்தில் இருந்து பார்த்துட்டு இருப்பாங்க. நீயும் அவங்களை பார்க்கலாம். பார்த்துட்டே செல்ஃபோனில் அவங்ககூட பேசலாம். ரெடியா இரு. நான் இன்னும் அரை மணி நேரத்தில் கூப்படறேன்" என்றபடி இணைப்பைத் துண்டித்தான்.
முரளீதரன், "சோ, அவன் நமக்கு சில க்ளூ கொடுத்து இருக்கான். உன் அம்மாவும் தங்கையும் நீ அவனை மீட் பண்ணும் இடத்துக்கு கொஞ்ச தூரத்தில் இருப்பாங்க. நீ அவங்களை பார்க்கலாம். செல்ஃபோனில் பேசலாம்ன்னா அனேகமா உன் செல்ஃபோனில் பேசச் சொல்ல மாட்டான். அவன் செல்ஃபோனில் ஒரு நம்பரை கூப்பிட்டு அவங்களை பேசச் சொல்லுவான். சக்தி, நீ எங்க நம்பரோட எப்பவும் கனெக்ட் ஆகி இருக்கணும். அவங்களை பார்த்து பேசும் போது அவங்க இருக்கும் இடத்தைப் பத்தி எங்களுக்கு க்ளூ கொடுக்கற மாதிரி விவரிக்கணும். இதை நீ சாமர்த்தியமா செய்யணும். எப்படியும் நீ அவனை மீட் பண்ணின ஒண்ணு ரெண்டு நிமிஷத்தில் எங்க டீம் அங்கே வந்துடும். நான் எங்க டீமை ரெண்டா பிரிச்சு அனுப்பறேன். நீ க்ளூ கொடுக்கும் இடத்துக்கு ஒரு டீம் போகும். நீ இருக்கும் இடத்துக்கு ஒரு டீம் வரும். ஓ.கே?"
சக்தி, "ஓ.கே சார்"
முரளீதரன், "நித்தின், நீ சக்தி காரில் இருந்து இறங்கினப்பறம் நீ காரிலே இரு. முடிஞ்சா காரை கிளப்பிட்டு நீ போயிடு"
நித்தின், "அப்ப அவன் அவங்களை எதாவது செஞ்சான்னா?"
முரளீதரன், "அவன் அதை எதிர்பார்த்து இருக்க மாட்டான். இருந்தாலும் அவன் அப்படி எதுவும் செய்ய மாட்டான். எப்படியும் மாங்க்ஸ் பாட் நெட்டின் கன்ட்ரோல் சாஃப்ட்வேர் கைக்கு கிடைச்சதும் உங்க எல்லாரையும் தீர்த்துக் கட்ட திட்டமிட்டு இருப்பான். நீ மட்டும் அங்கே இருந்து தப்பிச்சுப் போனா உன்னை மட்டும் தனியா தீர்த்துக் கட்ட ஆள் அனுப்பலாம்ன்னு விட்டுடுவான். அல்லது உடனே யாரையாவுது உன்னை ஃபாலோ பண்ண அனுப்புவான். நீ பத்திரமா இருக்கணும். நீ புறப்படறதுக்கு முன்னால் உனக்கு ஒரு ஹெல்மெட் கொடுக்க ஏற்பாடு செய்யறேன். நீ அங்கே இருந்து தப்பிக்கும் போது ஹெல்மெட்டை எடுத்து போட்டுக்கோ. Besides, உங்க ரெண்டு பேருக்கும் புல்லட் ப்ரூஃப் வெஸ்ட் அனுப்பறேன். That will give adequate protection for your torso. கூட ஹெல்மெட் போட்டுட்டேன்னா இன்னும் ஸேஃப்"
நித்தின், "என்னை ஏன் போகச் சொல்றீங்க?"
முரளீதரன், "ஒரு நம்பும்படியான டிஸ்ட்ராக்க்ஷன்தான். நீ அப்படி தப்பிச்சு போனா உன்னை சந்தேகப் பட மாட்டான். நீ உனக்கு சம்மந்தம் இல்லாததால் போறேன்னு நினைப்பான். அதனால் எங்களுக்கு தேவையான் ஒண்ணு ரெண்டு நிமிஷங்கள் கிடைக்கும். அப்பறம் நான் கொடுத்து அனுப்பின கன்னை சேஃப்டி ரிமூவ் பண்ணி பின்னாடி முதுகுப்புறம் பெல்டில் சொறுகிக்கோங்க. அதையும் நீங்க போட்டுக்கப் போகும் புல்லட் ப்ரூஃப் வெஸ்ட்டையும் மறைக்கும்படி மேல ஒரு ஜாக்கட் போட்டுக்குங்க"
சக்தி, "சார், சேஃப்டி லாக்கை ரிமூவ் பண்ணி வெக்கறது டேஞ்சரஸ் இல்லையா?"
முரளீதரன், "அந்த கன்னில் ட்ரிக்கரை சுத்தி ட்ரிக்கர் கார்ட் கொஞ்சம் அகலம். ட்ரிக்கர் ஆக்ஸிடண்டலா ரிலீஸ் ஆகாது. அவசரமா சேஃப்டியை ரிமூவ் பண்ணி ஷூட் பண்ணும் அளவுக்கு உங்களுக்கு பயிற்சி இல்லை. அதனால் சொன்னேன்"
நித்தின், "ஓ.கே சார்"9:30 AM
காலை 9:30
மக்ஸுத்திடம் இருந்து அழைப்பு வந்தது.
மக்ஸூத், "என்ன ரெடியா?"
சக்தி, "ரெடி"
வேறு ஒருவன் லைனுக்கு வந்தான், "உனக்கு பெங்களூர் நல்லா தெரியுமா?"
சக்தி, "தெரியும்"
அவன், "அதில் ஓல்ட் ஏர்ப்போர்ட் ரோட்டில் ஃப்ளை ஓவருக்கு போகும் திசையில் கமாண்ட் ஹாஸ்பிடலை தாண்டி வரணும். அந்த டர்னிங்க் ஆனதும் தொம்மலூருக்கு முன்னாடி ரோட் அகலமாகும். அங்கே வண்டி நிறுத்தலாம். அங்கே வர எவ்வளவு நேரம் ஆகும்?"
சக்தி, "ஹாஃப் ஹவரில் வரமுடியும்"
அவன், "அங்கே வந்து வண்டியை நிறுத்து. நாங்க உன்னை கூப்படறோம்" என்றதும் இணைப்பை துண்டித்தான்.
முரளீதரன், "வண்டிகள் தொடர்ந்து பொயிட்டு இருக்கும் ஆனா ஆள நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தை தேர்ந்து இருக்காங்க. தேவையான எதிரில் இருக்கும் ஆர்மி காம்பௌண்டில் இருந்து நாங்க அப்ஸர்வ் பண்ணலாம். ஆனா அதுக்கு அவசியம் இருக்காதுன்னு நினைக்கறேன். கமாண்ட் ஹாஸ்பிடலில் எங்க டீம் ரெண்டு ஆம்புலன்ஸில் வெய்ட் பண்ணிட்டு இருக்கும். ஓ.கே? புறப்படுங்க"
சக்தி, "ஓ.கே சார்"
அடுத்த அரை மணி நேரத்தில் அந்த இடத்தில் காரை நிறுத்திய மறுகணம் கைபேசி ஒலித்தது.
மக்ஸூத், "இப்ப உனக்கு முன்னாடி நின்னுட்டு இருக்கும் கருப்பு லான்ஸரை ஃபாலோ பண்ணி வா" என்றபிறகு காலை கட் செய்தான்.
எதிரில் இருந்த லான்ஸர் கார் புறப்பட்டது. நித்தின் அதை தொடர்ந்து ஓட்டினான்.
சக்தி, "பின்னாலயும் ஒரு ஹோண்டா ஸிட்டி வருது"
முரளீதரன், "எப்படி உங்களை ஃபாலோ பண்ணுதுன்னு தெரிஞ்சுது?"
சக்தி, "நாங்க வரும்போது கொஞ்சம் பின்னாடி நின்னுட்டு இருந்தது. ட்ரைவரும் அவனுக்கு பக்கத்தில் ஒருத்தனும் உக்காந்துட்டு இருந்தாங்க. நாங்க காரை எடுத்ததும் அவங்களும் எடுத்து நடுவில் வேறு எந்த காரும் வராத மாதிரி பின்னாடி வரத் தொடங்கினாங்க"
முரளீதரன், "குட், நல்ல அப்சர்வேஷன். அந்த ஆம்புலன்ஸ் ஒண்ணில் நானும் வந்துட்டு இருக்கேன். சக்தி, நித்தின் மறுபடி நாம் பேச முடியுமான்னு தெரியலை. நான் சொன்னது ஞாபகம் இருக்கு இல்லையா?"
சக்தி, "எஸ் .."
முரளீதரன், "ஓ.கே ஆல் தெ பெஸ்ட். நாஙக உங்க பின்னாடியே இருக்கோம். பயப் படாதீங்க. இந்த லைனை கட் செய்யாதீங்க"
நித்தின், "ஓ.கே சார்"
அவர்களுக்கு எதிரில் சென்ற கார் ஃப்ளை ஓவரை அடைந்து அதில் ஏறி கோரமங்களா இன்னர் ரிங்க் ரோடுக்குச் செல்லும் வளைந்த சாலையில் சென்றது. நித்தின் சீரான வேகத்தில் அந்த காரை தொடர்ந்தான். இன்னர் ரிங்க் ரோடை அடைந்த லான்ஸர் அச்சாலையில் அவர்களது அலுவலகத்தை தாண்டி வேகம் பிடித்தது.
முரளீதரன், "கய்ஸ், இன்னும் அடுத்த அஞ்சு கிலோமீட்டருக்கு ஒரே ரோட்தான். திருப்பம் எதுவும் இல்லை. ஒரு வேளை இந்த ரோட்டில் பாதியில் அவன் உங்களை மீட் பண்ணினா ரெண்டு டீமும் வெவ்வேறு பக்கத்தில் இருந்து வந்தா வசதி. அதனால், என்னோட ஒரு டீமை உங்களை ஓவர்டேக் செஞ்சு அடுத்த சிக்னலில் வெய்ட் பண்ணச் சொல்லறேன். சோ, பதட்டப் படாதீங்க"
அடுத்த ஒரு நிமிடத்தில் பின்னால் சற்று தூரத்தில் சத்தமின்றி வந்து கொண்டு இருந்த ஆம்புலன்ஸ்களில் ஒன்று சைரன் ஒலிக்க அவர்களை கடந்து சென்றது.
எதிரில் சென்று கொண்டு இருந்த லான்ஸர் அடுத்த இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் ஜன நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் வேகத்தைக் குறைத்து சாலையின் ஓரமாக நின்று இருந்த ஒரு வேனுக்கு சற்று முன்பு சென்று நின்றது. அந்த வேனில் இருந்து வெளிப் பட்ட மக்ஸூத் வேனுக்கு பின்னால் நிறுத்தும்படி அவர்களுக்கு கை காட்டினான். நித்தின் முற்றிலும் அந்த வேன் நின்று இருந்த அளவுக்கு ஓரமாகச் செல்லாமல் சற்றே ஓரமாக அந்த வேனுக்கு பக்கத்தில் நிறுத்த சக்திவேல் மட்டும் இறங்கி மக்ஸூத்தை நெருங்கினான்.

நித்தின் காரிலேயே அமர்ந்து இருப்பதைப் பார்த்த மக்ஸூத், "அவனையும் காரை ஓரமா நிறுத்திட்டு வரச் சொல்லு"
சக்தி, "எங்க அம்மாவும் தங்கையும் எங்கேன்னு முதலில் சொல்லு"
மக்ஸூத், "இன்னும் நம்பிக்கை இல்லையா? அதோ ரோட்டுக்கு அந்த சைட்டில் பார் ஒரு இன்னோவா நின்னுட்டு இருக்கு தெரியுதா?"
அந்த இரட்டை தடம் கொண்ட சாலையின் எதிர்த்தடத்தில் நடுவில் இருந்த மிட்-வே-மெரிடியனைக்கு மிக அருகே (அதாவது, அந்த தடத்தில் இடதுபுறம் அல்லாமல் வலதுபுறத்தில்) பழுதுற்று நின்று இருப்பது போல் ப்ளிங்க்கர்கள் மின்ன ஒரு இன்னோவா நின்று கொண்டு இருந்தது. இடதுபுறம் நிறுத்தினால் அங்கு இருந்து பார்க்க இயலாது என்ற காரணத்தில் மக்ஸுத் தன் சகாவை அப்படி நிறுத்தப் பணித்து இருந்தான்.
அந்த சாலைச் சத்தத்தில் முரளீதரனுக்கு மக்ஸூத் சொல்வது கேட்காது என உணர்ந்த சக்தி மக்ஸூத் மேலும் தொடருமுன், "எது எதிர் சைடில் நின்னுட்டு இருக்கும் சில்வர் கலர் இன்னோவாவா?"
மக்ஸூத், "ஆமா, ட்ரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உன் அம்மா உக்காந்துட்டு இருக்காங்க. அவங்களுக்கு நேர் பின் சீட்டில் உன் தங்கை இருக்கா."
சக்தி, "முன் சீட்டில் எங்க அம்மாவும் பின் சீட்டில் என் தங்கையும் இருக்காங்கன்னு தெரியுது. ஆனா அவங்க ரெண்டு பேரையும் நீ எதுவும் செய்யலைன்னு நான் எப்படி தெரிஞ்சுக்கறது?"
மக்ஸூத், "பெண்கள் மேல உன்னை விட எனக்கு மதிப்பு ரொம்பவே இருக்கு. இரு செல்ஃபோனில் கனக்ட் பண்ணறேன். பத்திரமா இருக்காங்களான்னு நீ வெரிஃபை பண்ணிக்கலாம்"
சக்தி, "துப்பாக்கி முனையில் அவங்களை பதில் சொல்ல வைக்கலைன்னு நான் எப்படி நம்பறது?"
மக்ஸூத், "லுக் யூ ஃபூல். எஸ், உன் தங்கைக்கு பக்கத்தில் இருக்கறவன் துப்பாக்கியை உன் தங்கையை குறி வெச்சு பிடிச்சுட்டு இருக்கான். அது அவங்க அழுது ஆர்பாட்டம் பண்ணாம இருக்கறதுக்காக செஞ்ச ஏற்பாடு"
சக்தி, "வாட்? என் தங்கைக்கு பக்கத்தில் இருக்கறவன் கையில் துப்பாக்கி இருக்கா? அவங்க ரெண்டு பேரையும் கீழ இறங்கி நிக்கச் சொல்லேன்"
மக்ஸூத், "அது முடியாது. அவங்க ரெண்டு பேரையும் சீட்டில் கட்டி வெச்சு இருக்கோம்"
சக்தி, "எதுக்கு அவங்க ரெண்டு பேரையும் சீட்டில் கட்டி வெச்சு இருக்கே. வலிக்கும் இல்லை?"
மக்ஸூத், "நீ ஒரு ஜீனியஸ்ன்னு நினைச்சேன். யூ இடியட். முதலில் நீ உங்க அம்மாகிட்ட பேசு. இந்தா" என்றபடி தன் செல்ஃபோனை மக்ஸூத் நீட்டினான்.
அந்தக் கணம் நித்தின் காரைக் கிளப்பிக் கொண்டு சென்றான்.
சக்தி, "அம்மா?"
மனோகரி, "சொல்லுடா கண்ணா. சாரிடா நான் கொஞ்சம் கவனக் குறைவா இருந்துட்டேன். அந்த போலீஸ்காரனுகளுக்கு பரிதாபப் படாம பின் கதவை நல்லா சாத்தி இருந்தா இது நடந்து இருக்காது"
மனோகரி சொல்லச் சொல்ல மக்ஸூத் தன்னிடம் செல்ஃபோன் இல்லாததால். பின் புறம் இருந்த ஹோண்டா ஸிட்டியை நித்தினை பின் தொடரச் சொல்ல சைகை காட்டுவதை கவனித்தபடி சக்தி, "பரவால்லைம்மா. உங்க ரெண்டு பேரையும் பத்திரமா பாத்துட்டாங்களா?"
மனோகரி, "எங்களை அவங்க ஒண்ணும் செய்யலை. புறப்படும்போதே மாத்துத் துணி எல்லாம் எடுத்துட்டு வரச்சொன்னாங்க. நாங்க எதுவும் செய்யாமல் கூட வந்தா எங்களுக்கு எந்த ஆபத்தும் இருக்காதுன்னு உனக்கு பக்கத்தில் இருக்கறவன் சொன்னான். சொன்ன மாதிரியே இது வரைக்கும் எங்களை நடத்தி இருக்காங்க. காலையில் குளிச்சு சாப்பிட ஏற்பாடு எல்லாம் செஞ்சாங்க"
சக்தி, "உங்களை சீட்டில் கட்டிப் போட்டு இருக்காங்களா? ஒண்ணும் செய்யாதீங்கம்மா. சாந்திக்கு பக்கத்த்தில் இருக்கறவன் அவளை சுட்டுடுவான்"
மனோகரி, "தெரியுண்டா கண்ணா. அவன் கேக்கறதை அவனுக்கு கொடுத்து நீ அவளை மட்டும் காப்பாத்தற வழியைப் பாரு. நல்ல வேளை நித்தின் கிளம்பி போயிட்டான். அவனை எதுக்கு கூட்டிட்டு வந்தே?"மக்ஸூத் சக்தியை தடுத்து, "போதும் பேசினது. வண்டியில் ஏறு" என்றபடி தன் செல்ஃபோனை சக்தியிடமிருந்து பிடுங்கினான். செல்ஃபோனை கொடுத்த சக்தி தன் துப்பாக்கியை எடுத்து அவன் நெற்றியைக் குறிவைத்தான். அடுத்த கணம் வேனில் இருந்து ஒருவன் கையில் ஒரு AK-47 துப்பாக்கியை ஏந்தி சக்தியை குறிவைத்து மக்ஸூத்துக்கு அருகே நின்றான்.
சக்தி, "எங்க அம்மாவும் தங்கையும் எங்கேன்னு முதலில் சொல்லு"
மக்ஸூத், "இன்னும் நம்பிக்கை இல்லையா? அதோ ரோட்டுக்கு அந்த சைட்டில் பார் ஒரு இன்னோவா நின்னுட்டு இருக்கு தெரியுதா?"
அந்த இரட்டை தடம் கொண்ட சாலையின் எதிர்த்தடத்தில் நடுவில் இருந்த மிட்-வே-மெரிடியனைக்கு மிக அருகே (அதாவது, அந்த தடத்தில் இடதுபுறம் அல்லாமல் வலதுபுறத்தில்) பழுதுற்று நின்று இருப்பது போல் ப்ளிங்க்கர்கள் மின்ன ஒரு இன்னோவா நின்று கொண்டு இருந்தது. இடதுபுறம் நிறுத்தினால் அங்கு இருந்து பார்க்க இயலாது என்ற காரணத்தில் மக்ஸுத் தன் சகாவை அப்படி நிறுத்தப் பணித்து இருந்தான்.
அந்த சாலைச் சத்தத்தில் முரளீதரனுக்கு மக்ஸூத் சொல்வது கேட்காது என உணர்ந்த சக்தி மக்ஸூத் மேலும் தொடருமுன், "எது எதிர் சைடில் நின்னுட்டு இருக்கும் சில்வர் கலர் இன்னோவாவா?"
மக்ஸூத், "ஆமா, ட்ரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உன் அம்மா உக்காந்துட்டு இருக்காங்க. அவங்களுக்கு நேர் பின் சீட்டில் உன் தங்கை இருக்கா."
சக்தி, "முன் சீட்டில் எங்க அம்மாவும் பின் சீட்டில் என் தங்கையும் இருக்காங்கன்னு தெரியுது. ஆனா அவங்க ரெண்டு பேரையும் நீ எதுவும் செய்யலைன்னு நான் எப்படி தெரிஞ்சுக்கறது?"
மக்ஸூத், "பெண்கள் மேல உன்னை விட எனக்கு மதிப்பு ரொம்பவே இருக்கு. இரு செல்ஃபோனில் கனக்ட் பண்ணறேன். பத்திரமா இருக்காங்களான்னு நீ வெரிஃபை பண்ணிக்கலாம்"
சக்தி, "துப்பாக்கி முனையில் அவங்களை பதில் சொல்ல வைக்கலைன்னு நான் எப்படி நம்பறது?"
மக்ஸூத், "லுக் யூ ஃபூல். எஸ், உன் தங்கைக்கு பக்கத்தில் இருக்கறவன் துப்பாக்கியை உன் தங்கையை குறி வெச்சு பிடிச்சுட்டு இருக்கான். அது அவங்க அழுது ஆர்பாட்டம் பண்ணாம இருக்கறதுக்காக செஞ்ச ஏற்பாடு"
சக்தி, "வாட்? என் தங்கைக்கு பக்கத்தில் இருக்கறவன் கையில் துப்பாக்கி இருக்கா? அவங்க ரெண்டு பேரையும் கீழ இறங்கி நிக்கச் சொல்லேன்"
மக்ஸூத், "அது முடியாது. அவங்க ரெண்டு பேரையும் சீட்டில் கட்டி வெச்சு இருக்கோம்"
சக்தி, "எதுக்கு அவங்க ரெண்டு பேரையும் சீட்டில் கட்டி வெச்சு இருக்கே. வலிக்கும் இல்லை?"
மக்ஸூத், "நீ ஒரு ஜீனியஸ்ன்னு நினைச்சேன். யூ இடியட். முதலில் நீ உங்க அம்மாகிட்ட பேசு. இந்தா" என்றபடி தன் செல்ஃபோனை மக்ஸூத் நீட்டினான்.
அந்தக் கணம் நித்தின் காரைக் கிளப்பிக் கொண்டு சென்றான்.
சக்தி, "அம்மா?"
மனோகரி, "சொல்லுடா கண்ணா. சாரிடா நான் கொஞ்சம் கவனக் குறைவா இருந்துட்டேன். அந்த போலீஸ்காரனுகளுக்கு பரிதாபப் படாம பின் கதவை நல்லா சாத்தி இருந்தா இது நடந்து இருக்காது"
மனோகரி சொல்லச் சொல்ல மக்ஸூத் தன்னிடம் செல்ஃபோன் இல்லாததால். பின் புறம் இருந்த ஹோண்டா ஸிட்டியை நித்தினை பின் தொடரச் சொல்ல சைகை காட்டுவதை கவனித்தபடி சக்தி, "பரவால்லைம்மா. உங்க ரெண்டு பேரையும் பத்திரமா பாத்துட்டாங்களா?"
மனோகரி, "எங்களை அவங்க ஒண்ணும் செய்யலை. புறப்படும்போதே மாத்துத் துணி எல்லாம் எடுத்துட்டு வரச்சொன்னாங்க. நாங்க எதுவும் செய்யாமல் கூட வந்தா எங்களுக்கு எந்த ஆபத்தும் இருக்காதுன்னு உனக்கு பக்கத்தில் இருக்கறவன் சொன்னான். சொன்ன மாதிரியே இது வரைக்கும் எங்களை நடத்தி இருக்காங்க. காலையில் குளிச்சு சாப்பிட ஏற்பாடு எல்லாம் செஞ்சாங்க"
சக்தி, "உங்களை சீட்டில் கட்டிப் போட்டு இருக்காங்களா? ஒண்ணும் செய்யாதீங்கம்மா. சாந்திக்கு பக்கத்த்தில் இருக்கறவன் அவளை சுட்டுடுவான்"
மனோகரி, "தெரியுண்டா கண்ணா. அவன் கேக்கறதை அவனுக்கு கொடுத்து நீ அவளை மட்டும் காப்பாத்தற வழியைப் பாரு. நல்ல வேளை நித்தின் கிளம்பி போயிட்டான். அவனை எதுக்கு கூட்டிட்டு வந்தே?"மக்ஸூத் சக்தியை தடுத்து, "போதும் பேசினது. வண்டியில் ஏறு" என்றபடி தன் செல்ஃபோனை சக்தியிடமிருந்து பிடுங்கினான். செல்ஃபோனை கொடுத்த சக்தி தன் துப்பாக்கியை எடுத்து அவன் நெற்றியைக் குறிவைத்தான். அடுத்த கணம் வேனில் இருந்து ஒருவன் கையில் ஒரு AK-47 துப்பாக்கியை ஏந்தி சக்தியை குறிவைத்து மக்ஸூத்துக்கு அருகே நின்றான்.
மக்ஸூத், "ஓ, உனக்கு துப்பாக்கி சுடத் தெரியுமா?" என்றபடி செல்ஃபோனில் "வெய்ட் ஒண்ணும் செஞ்சுடாதீங்க" என்று கூறி சக்தியைப் பார்த்து, "எனக்குள்ள குண்டு போகும் அதே கணம் உன் தங்கையின் மூளை வெடிச்சுச் செதறும். பேசாம துப்பாக்கியை கீழே போடு" என்றான்.
அவன் சொல்லச் சொல்ல சைரன் ஒலிக்க ஒரு ஆம்புலன்ஸ் வந்து அவர்களருகே ஸ்க்ரீச்சிட்டு நின்றது. அது நிற்பதற்கு முன்னரே அதில் இருந்த இருவர் சுடத்தொடங்கினர். ஆனால் அதற்குள் AK-47 ஏந்தியவன் ஆடோமாட்டிக் மோடில் சக்தியை சுடத்தொடங்கி இருந்தான். மக்ஸூத் தன் துப்பாக்கியை எடுக்க கையை தன் ஜாக்கெட் பாக்கெட்டுக்குள் எடுத்துச் சென்றான். அடுத்த கணம் அவன் நெற்றியில் ஒரு பெரிய சிந்தூரப் பொட்டு உருவானது. AK-47 எந்தியவனின் மூளை சிதறி பின்புறத்தில் வேனின் கண்ணாடியில் இரத்தத்துடன் கலந்த ஒரு மாடர்ன் ஆர்ட் போல தெரித்தது. சக்தியை தாக்கிய குண்டுகளில் இரண்டு அவன் அணிந்து இருந்த புல்லட் ப்ரூஃப் வெஸ்டினால் பெரிதளவுக்கு தடுக்கப் பட்டாலும் அவ்வளவு குறைந்த தூரத்தில் இருந்து அப்படிப் பட்ட ஒரு துப்பாக்கியால் சுடப்பட்டதால் அவன் உடலில் பாய்ந்து இருந்தன. ஒன்று அவன் நுரையீரலையும், அடுத்தது அவனது ஈரலையும் காயப் படுத்தி இருந்தன.
காரைக் கிளப்பிக் கொண்டு சென்ற நித்தின் பின்னால் ஹோண்டா ஸிட்டி அவனை பின் தொடர்வதையும் அதில் இருந்த ஒருவன் கண்ணாடியை இறக்கி தலையை வெளியே நீட்டி அமர்ந்ததையும் கவனித்தான். வேகமாகச் சென்று ஈஜீபுரா சிக்னலை அடைந்தவன் அவனுக்கு எதிரே பல வாகனங்கள் பச்சை விளக்குக்காக காத்து நின்று இருந்தன. சாலையின் ஓரத்துக்குச் சென்று ஹாரனை அடித்தபடி எதிரில் நின்று கொண்டு இருக்கும் வாகனங்களை முன் சென்று யூ-டர்ன் எடுத்து ஒரு ட்ராஃபிக் ஜாம்மை உருவாக்கியபடி வந்த திசைக்கு எதிர் திசையில் மனோகரி-சாந்தி அமர்ந்து இருந்த இன்னோவாவை நோக்கி வேகமெடுத்தான். சிக்னலுக்கு அருகே நின்று இருந்த ஆம்புலன்ஸும் அவனை சைரனுடன் பின் தொடர்ந்தது.
இன்னோவாவை நெறுங்கிய நித்தின் அதற்கு இடப்புறமாக முன்னால் சென்று அதன் பானெட்டின் இடப்புறத்தில் வேகமாக ஆனால் அழுந்த உரசியவாறு இடித்து அதன் முன்னால் குறுக்காக தன் ஸ்கார்ப்பியோவைச் செலுத்தி மிட்வே மெரிடியனில் இடித்து நிறுத்தினான். இடிபட்டதில் அந்த இன்னோவா குலுங்கியது. சாந்திக்கு அருகில் இருந்தவன் நிலைகுலைந்து இரண்டு சீட்டுகளுக்கு நடுவே இருந்த இடைவெளியில் தலை குப்புற விழுந்தான். ட்ரைவர் சீட்டில் இருந்த இம்ரான் சுதாரித்துக் கொண்டு நித்தினை நோக்கி சுடத்தொடங்கினான். நித்தின் மாட்டி இருந்த சீட் பெல்ட் அவனை நிதானம் இழக்காமல் இருக்க உதவியது. இம்ரானின் குண்டுகளில் ஒன்று நித்தின் புஜத்தைத் தாக்கியது. அடுத்தது அவனது காலர் போன் எலும்பையும் முறித்து அதிர்ஷ்டவசமாக மேலும் உள்ளே செல்லாமல் நின்றது. அதற்குள் பின்னால் வந்து கொண்டு இருந்த ஆம்புலன்ஸ் அருகில் வந்து வேகத்தை குறைத்ததும் சைரன் ஒலியைக் கேட்டு அதன் பக்கம் திரும்பிய இம்ரானும் சாந்திக்கு அருகில் இருந்தவனும் முகத்தில் ஆச்சர்யக் குறியுடன் மரணமடைந்தனர்.
குண்டடி பட்டும் எதிர்ப்புறம் கையைக் காட்டியபடி சக்தி ஓரிரு அடிகளை எடுத்து வைத்தபின் மயக்கமுற்று விழுந்தான். ஆம்புலன்ஸுக்கு உள்ளிருந்த வந்தனா "ஷக்தீ" என்று அலறியபடி வந்து அவனுக்கு அருகே மண்டி இட்டு அழுது குலுங்கினாள். அந்தக் குழுவில் மருத்துவ உதவியாளராகவும் இருக்கும் வீரர் சக்தியை தரையில் நேராக படுக்கச் செய்து அவனது ஆடைகளை விலக்கி காயங்களை ஆராய்ந்தார்.
அருகில் வந்த முரளீதரனிடம் "ஒரு புல்லட் லிவரில் பாய்ந்து இருக்கு. இன்னொண்ணு இடது நுரையீரலில். லங்க்ஸ்ஸில் பாய்ந்ததுனால்தான் ஆபத்து அதிகம். எந்த அளவுக்கு டாமேஜ்ன்னு தெரியலை. பல்ஸ் குறைஞ்சுட்டு வருது. உடனே ஹாஸ்பிடலுக்கு ஷிஃப்ட் பண்ணனும்"
சீட் பெல்ட் தடுத்ததால் சரிந்து விழாமல் தலையை மட்டும் சாய்த்து மயங்கிக் கிடந்த நித்தின் எதிர்ப்புறம் இருந்த குழுவில் ஒருவர் கீழே இறக்க இரு ஆம்புலன்ஸுகளுக்கும் பின்னால் ஒரு ஜீப்பில் வந்து இறங்கிய தீபா சாலையில் குறுக்கே ஓடினாள்.
எதிர்ப்புறம் இருந்த ஆம்புலன்ஸுக்கு சக்தியும் எடுத்துச் செல்லப் பட்டான். காயமுற்ற நண்பர்கள் இருவரும் அவர்கள் காதலியருடன் அருகே இருந்த விமானப் படையைச் சார்ந்த Air force Command Hospital மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப் பட்டனர்.hursday, 19 November 2009 9:00 PM
Sanjeevini Restaurant, Saunders Beach, New Providence, The Bahamas
வியாழன், நவம்பர் 19, 2009 இரவு 9:00
சஞ்ஜீவினி உணவகம், சாண்டர்ஸ் பீச், நியூ ப்ராவிடன்ஸ், தி பஹாமாஸ்
முன்னிரவில் தொடங்கிய அந்த பார்ட்டியில் யாரும் இன்னமும் சாப்பாட்டைத் தொடவில்லை. சுடச் சுட வந்து கொண்டு இருந்த ப்ரான்ஸ், நண்டு மற்றும் மீன் வகை வருவல்களை கொறித்தபடி எல்லோரும் பேசிக் கொண்டு இருந்தனர்.
மனோகரி, "டேய், அந்தக் கருமத்தை சீக்கரம் முடிச்சீங்கன்னா எல்லாரும் சாப்பிட்டுட்டுப் போய் தூங்கலாம்"
வந்தனா (அழகான தமிழில்), "ம்ம்ம் .. சொல்லுங்க அத்தை. குடிக்க ஆரம்பிச்சதில் இருந்து நாளைக்கு சஞ்சனாவுக்கு வளைகாப்பு சீமந்தம் வெச்சு இருக்கறதை சுத்தமா மறந்தாச்சு"
சக்தி, "சஞ்சனா, இவளுக்கு தமிழில் ட்ரிங்க் பண்ணறதை இதை விட கொஞ்சம் நாசுக்கா எப்படி சொல்லறதுன்னு சொல்லித் தரியா?"
வந்தனா, "ஹல்லோ! ட்ரிங்க் அப்படின்னா குடின்னு அர்த்தம்"
நித்தின், "இல்லை வந்தனா, தண்ணி அடிக்கறதுன்னு சொல்லு"
சக்தி, "இவரு பெரிய தமிழ் புலவரு உதவிக்கு வந்துட்டாரு"
அப்போதுதான் அவர்களுடன் வந்து அமர்ந்த சஞ்சனா, "பரவால்லை வன்ஸ், நாளைக்கு ஒன்பதரை மணிக்குத்தானே. இப்போ ரொம்ப லேட்டாகலே"
ஜாஷ்வா, "ம்ம்ம் .. இது தான் ஒரு நல்ல ரெஸ்டாரண்டியருக்கு அழகு! சாப்பாட்டை விட லிக்கரில்தான் நிறைய சம்பாதிக்கலாம்ன்னு சொல்றா"
மனோகரி, "எப்படி ஜாஷ்வா? சாப்பாடு நீங்களே சமைக்கறது. அதில் தானே லாபம் அதிகம்?"
ஜாஷ்வா, "லாப விகிதம்ன்னு பார்த்தா சாப்பாட்டில்தான் அதிகம். ஆனா யாரும் ஒரு அளவுக்கு மேல் சாப்பிட மாட்டாங்க. ஆனா ட்ரிங்க் பண்ணறது அப்படி இல்லை. நம் டேபிளையே உதாரணத்துக்கு எடுத்துக்குலாம். நித்தினுக்கு மூணுதான் லிமிட்ன்னு ஸ்மால் ஸ்மாலா குடிச்சுட்டு இருக்கான். ஆல்ரெடி அஞ்சாவது ஸ்மால் உள்ளே போயிட்டு இருக்கு. ஆனா எப்படியும் இன்னும் மூணு உள்ளே போகும். சக்திக்கு ரெண்டு லார்ஜுக்கு மேல் எவ்வளவு குடிச்சாலும் அதே நிதானத்தில்தான் இருப்பான். இப்போ மூணாவது லார்ஜில் இருக்கான். என்னோடதும் இது மூணாவது. இவ்வளவு நேரமும் ஸ்டார்ட்டர்ஸ் (Starters - சாப்பாட்டுக்கு முன், பொதுவாக மது பானங்கள் அல்லது சூப்புடன் சாப்பிடும் வறுவல் போன்ற பதார்த்தங்கள்) பாருங்க எவ்வளவு ஆர்டர் செஞ்சு இருக்கோம். இதுக்கு பிறகு எவ்வளவு சாப்பிடப் போறோம்? மொத்த லாபம்ன்னு பார்த்தா லிக்கரிலும் லிக்கரினால் உள்ளே போகும் ஸ்டார்டர்ஸ்களிலும்தான்" மனோகரியின் பார்வையால் சக்தியும் நித்தினும் நெளிவதை பொருட்படுத்தாமல் விளக்கிக் கொண்டு இருந்தான்.
தீபா, "உனக்கு இதுதான் கடைசி. போதும்" என்று கட்டளையிட
நித்தின், "ஜாஷ், உதாரணம் சொல்றதுக்கு உனக்கு வேற டேபிள் கிடைக்கலையா?"
வந்தனாவின் முறைப்புக்கு சக்தி இஞ்சி தின்ற குரங்கைப் போல் சிரிக்க அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவன் கன்னத்தை கிள்ளி அருகில் முகத்தைக் கொண்டு வந்த பிறகு அருகில் மனோகரி இருப்பதை உணர்ந்து முகம் சிவந்து நகர்ந்தாள்.
சஞ்சனா, "சித்தி, இந்த மாதிரி ஞயான் கொடுக்கறதில் எங்க வீட்டுக்காரர் பெரிய ஆள். ஆனா பர்சேஸுக்கு மட்டும் இவரை அனுப்பக் கூடாது. ஃபிஷ் மார்க்கெட்டில் இருக்கும் மீனவர்களுக்கு எல்லாம் இவர்தான் பாரி வள்ளல். இவன் பொண்ணு படிப்புக்கு, அவன் பாட்டி வைத்தியத்துக்குன்னு வாரி வாரி வழங்கிட்டு வருவார். அவனுக எல்லாம் சாயங்காலம் பாரில் குடிச்சுட்டு சொல்லி சிரிச்சுட்டு இருப்பானுக"
ஜாஷ், "Hey I am not that daft (நான் ஒண்ணும் அந்த அளவுக்கு பேக்கு இல்லை)"
தீபா, "Yes, only a little daft (ஆமாம், கொஞ்சம்தான் பேக்கு)"
ஜாஷ்வா, "Come on .. Deepa .. you could do better than that!"
தீபா, "சாரி, ஜீஜாஜி என் அக்காகிட்ட இருந்து தொத்திகிச்சு"
மறுபடி கடலலைகளிடம் போட்டியிடும் அளவுக்கு சிரிப்பலைகள் அந்த ரம்மியமான இரவை நிறப்பின.
மனோகரி, "அப்பாடா, ஒரு வழியா எல்லா பிரச்சனையும் தீர்ந்து நீங்க எல்லாம் சந்தோஷமா இருக்கறதைப் பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு. நேத்து கௌரியும் அதையே சொல்லிட்டு இருந்தா"
வந்தனா, "இல்லை அத்தை. உங்க மகன் இன்னும் எனக்கு தான் செஞ்ச காரியங்கள் எல்லாத்தையும் முழுசா சொல்லலை. ஜாஷ்வாவும் இருக்கும்போது சொல்றேன்னு தள்ளிப் போட்டுட்டு இருக்கார்"
தீபா, "எஸ் ஆண்டி. நானும் ரொம்ப ஆர்வமா கேட்டுட்டு இருக்கேன். நித்தின் தள்ளிப் போட்டுட்டே இருக்கான்"
மனோகரி, "சரி, இப்ப சொல்லுங்கப்பா என்னதான் செஞ்சீங்க?"
ஜாஷ்வா சுருக்கமாக கொலம்பியன் ட்ரக் கார்ட்டலுக்கு பணப் பரிமாற்றம் செய்ததில் ஆரம்பித்து தீவிரவாதிகளுக்கு ரிவர்ஸ் செய்தது வரை சொல்லி முடித்தான்.
மனோகரி, "சக்தி, ஏண்டா உனக்கு இந்த வேலை? எந்த கெட்ட காரியத்திலும் ஈடு படலைன்னுதானே எங்கிட்ட சொன்னே? இனி நீ என்ன சொன்னாலும் நான் எப்படி நம்பறது?"
வந்தனாவின் முகமும் இறுகி இருந்தது.
சஞ்சனா, "ஆண்டி, வந்தனா, இவங்க மாங்க்ஸ் பாட் நெட் மூலம் என்னென்னவோ செஞ்சு இருக்க முடியும். இவங்க போதைப் பொருள் கடத்தறதுக்கோ விக்கறதுக்கோ துணை போகலை. வித்து வந்த காசை இவங்க ட்ரான்ஸ்ஃபர் செய்யலைன்னா வேற யாராவுது வேறு வழியில் செஞ்சு இருப்பாங்க. பணம் வெளியே போகாம தடுக்கறதுனால போதைப் பொருள் உள்ளே வருவதையோ அல்லது அதன் விற்பனையையோ அவங்களால தடுக்க முடியாது. இதைத்தான் எஃப்.பி.ஐ ஏஜண்ட் சைமண்ட் வில்லியர்ஸ்ஸும் சொன்னார். ஆனா அந்த தீவிரவாதிகளுக்கு ரிவர்ஸ் ட்ரான்ஸ்ஃபர் பண்ணினதை தவிர்த்து இருக்கலாம். ட்ரக் கார்டல் காரங்களுக்கு நன்றிக் கடன் பட்டு இருக்கோம்ன்னு நினைச்சுட்டு ஒத்துகிட்டாங்க. சுட்டுப் போட்டாலும் இவங்களால எந்த பிஸினஸ்ஸும் செய்ய முடியாது"
தீபா, "Come on வன்ஸ், எங்க அப்பாகிட்டயோ சுந்தர் அங்கிள்கிட்டயோ பேசிப் பாரு. உலகத்தில் அவனவன் என்னென்ன அட்டூழியம் எல்லாம் செய்யறாங்கன்னு தெரியும். இதுக்குப் போய் சக்தியை இப்படி கோவிச்சுக்கறீங்களே?"
சக்தி (கண் கலங்க கர கரத்த குரலில்), "அம்மா, அமெரிக்காவிலேயே இருக்கும் கஸ்டமர்ஸ் ஆர்டர் செஞ்சு இருந்தும் ஒருவேளை கேன்ஸர் வரக்கூடும்ன்னு ஏஃஜோ டை உபயோகிச்ச பொருள்களை உள்ளே வரவிடாம அமெரிக்க அரசாங்கமும் தடுத்தது. அப்போ அந்த பொருளை தயாரிச்ச அத்தனை ஏழை தொழிலாளிகளைப் பத்தியோ அதை எல்லாம் வாங்கி நியாயமான லாபம் வெச்சு ஏற்றுமதி செஞ்ச அப்பா மாதிரி வியாபாரிகளைப் பத்தி கொஞ்சமாவது யோசிச்சுதா? அவங்க செஞ்சது நியாயம்ன்னா நான் செஞ்சதும் நியாயம்தான்"
மனோகரி, வந்தனா இருவரின் கண்களும் கலங்கின.
மனோகரி, "சாரிடா கண்ணா. உங்க அப்பா போனது உன்னை இந்த அளவுக்கு பாதிச்சுதுன்னு தெரியலை. சரி, இனி நீ இந்த மாதிரி காரியம் எதுலயும் ஈடு பட மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் கொடு"
சக்தி, "அம்மா, இனிமேல் கெட்டவங்களுக்கு உதவறமாதிரி எந்த காரியத்திலும் ஈடு படமாட்டேன்னு சத்தியம் பண்ணறேன். எந்த கெட்ட செயலையும் நான் செய்ய மாட்டேன்னு உங்களுக்கே தெரியும். ஆனா, எல்லா விஷயத்திலும் அரசாங்கம் விதிச்ச சட்டப் படிதான் நடப்பேன்னு என்னால சத்தியம் பண்ண முடியாது"
வந்தனா, "ஏன் சக்தி?"
சக்தி, "அரசாங்கம் எல்லா விஷயத்திலும் சரியா இருந்தா எதுக்கு வந்தனா முரளி சாரோட அந்த நெட்வொர்க்? கடைசியில் எங்களை பாதுகாக்க அந்த நெட்வொர்க்கைத் தானே நம்பினே? அரசாங்கத்தை நம்பலை இல்லையா?"
வந்தனா, "அப்படின்னா இப்ப நீ இந்திய அரசாங்கம் அமெரிக்க அரசாங்கம் ரெண்டுக்கும் உங்க மாங்க்ஸ் பாட் நெட்டை கண்காணிக்க கொடுத்து இருக்கும் மென்பொருள்?"
சக்தி, "அரசாங்கத்துக்கு கொடுத்து இருக்கும் மென்பொருள் நாங்க எதை எல்லாம் அவங்க கண்காணிக்கலாம்ன்னு நினைக்கறோமோ அதை மட்டும் கண்காணிக்கும்"
வந்தனா, "அப்படின்னா நீ தப்பா எதுவும் செய்யலைன்னு நான் எப்படி நம்பறது?"
சக்தி, "உண்மையா மாங்க்ஸ் பாட் நெட்டில் நடக்கும் எல்லாத்தையும் கண்காணிக்கும் மென்பொருளின் காப்பி உனக்கு நான் கொடுக்கறேன். இல்லைன்னா நீ வேலையை ராஜினாமா செஞ்சுட்டு வா. நான் உனக்கு மாங்க்ஸ் பாட் நெட்டின் ஸோர்ஸ் கோடையே கொடுக்கறேன். ஒவ்வொண்ணும் சொல்லித்தறேன்"
தன் கணவன் தன் மீது வைத்து இருக்கும் அன்பிலும் நம்பிக்கையிலும் வந்தனா உறுகினாள்.
வந்தனா, "அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். மறுபடி இந்த மாதிரி சிக்கலில் மாட்டாம இருக்கணும்" என்று தொடங்கியவள் "ஜாஷ்வாவுக்கும் சஞ்சனாவுக்கும் நடந்த மாதிரி உனக்கு எதாவுது ஆச்சுன்னா என்னால அதை தாங்கிக்க முடியாது" என்று தழுதழுத்த குரலில் முடித்தாள்.
சஞ்சனா, "கவலையே படாதே. எல்லாம் இந்த ஆளினால் வந்த வினை. நான் இவருக்கு கடிவாளம் போட்டு வெச்சு இருக்கேன். என்னால இனி குழந்தைங்களை விட்டுட்டு இவர் பின்னால் துப்பாக்கி தூக்கி குண்டடி பட முடியாது"
நித்தின், "But, நீங்க ரெண்டு பேரும் பிழைச்சது நிஜமாவே ஒரு அதிசயம்தான் சஞ்சனா"
சஞ்சனா, "இவர் பிழைச்சது மிரக்கிள்ன்னு சொல்லு"
வந்தனா, "ஏன் உனக்கும் தானே அடி பட்டுது?"
சஞ்சனா, "அந்த பொம்பளை சுடத் தெரியாம சுட்டா. அந்த குண்டு காலர் போனுக்கும் நெஞ்சுக்கூட்டில் முதல் எலும்புக்கும் நடுவில் போய் மாட்டி கிட்டு நின்னுது. ஒரு அபாயமும் இல்லைன்னு எனக்கு அப்பவே தெரியும்"மனோகரி, "அங்கே என்னதான் நடந்துது சஞ்சனா?"
வந்தனா, "இல்லை அத்தை. உங்க மகன் இன்னும் எனக்கு தான் செஞ்ச காரியங்கள் எல்லாத்தையும் முழுசா சொல்லலை. ஜாஷ்வாவும் இருக்கும்போது சொல்றேன்னு தள்ளிப் போட்டுட்டு இருக்கார்"
தீபா, "எஸ் ஆண்டி. நானும் ரொம்ப ஆர்வமா கேட்டுட்டு இருக்கேன். நித்தின் தள்ளிப் போட்டுட்டே இருக்கான்"
மனோகரி, "சரி, இப்ப சொல்லுங்கப்பா என்னதான் செஞ்சீங்க?"
ஜாஷ்வா சுருக்கமாக கொலம்பியன் ட்ரக் கார்ட்டலுக்கு பணப் பரிமாற்றம் செய்ததில் ஆரம்பித்து தீவிரவாதிகளுக்கு ரிவர்ஸ் செய்தது வரை சொல்லி முடித்தான்.
மனோகரி, "சக்தி, ஏண்டா உனக்கு இந்த வேலை? எந்த கெட்ட காரியத்திலும் ஈடு படலைன்னுதானே எங்கிட்ட சொன்னே? இனி நீ என்ன சொன்னாலும் நான் எப்படி நம்பறது?"
வந்தனாவின் முகமும் இறுகி இருந்தது.
சஞ்சனா, "ஆண்டி, வந்தனா, இவங்க மாங்க்ஸ் பாட் நெட் மூலம் என்னென்னவோ செஞ்சு இருக்க முடியும். இவங்க போதைப் பொருள் கடத்தறதுக்கோ விக்கறதுக்கோ துணை போகலை. வித்து வந்த காசை இவங்க ட்ரான்ஸ்ஃபர் செய்யலைன்னா வேற யாராவுது வேறு வழியில் செஞ்சு இருப்பாங்க. பணம் வெளியே போகாம தடுக்கறதுனால போதைப் பொருள் உள்ளே வருவதையோ அல்லது அதன் விற்பனையையோ அவங்களால தடுக்க முடியாது. இதைத்தான் எஃப்.பி.ஐ ஏஜண்ட் சைமண்ட் வில்லியர்ஸ்ஸும் சொன்னார். ஆனா அந்த தீவிரவாதிகளுக்கு ரிவர்ஸ் ட்ரான்ஸ்ஃபர் பண்ணினதை தவிர்த்து இருக்கலாம். ட்ரக் கார்டல் காரங்களுக்கு நன்றிக் கடன் பட்டு இருக்கோம்ன்னு நினைச்சுட்டு ஒத்துகிட்டாங்க. சுட்டுப் போட்டாலும் இவங்களால எந்த பிஸினஸ்ஸும் செய்ய முடியாது"
தீபா, "Come on வன்ஸ், எங்க அப்பாகிட்டயோ சுந்தர் அங்கிள்கிட்டயோ பேசிப் பாரு. உலகத்தில் அவனவன் என்னென்ன அட்டூழியம் எல்லாம் செய்யறாங்கன்னு தெரியும். இதுக்குப் போய் சக்தியை இப்படி கோவிச்சுக்கறீங்களே?"
சக்தி (கண் கலங்க கர கரத்த குரலில்), "அம்மா, அமெரிக்காவிலேயே இருக்கும் கஸ்டமர்ஸ் ஆர்டர் செஞ்சு இருந்தும் ஒருவேளை கேன்ஸர் வரக்கூடும்ன்னு ஏஃஜோ டை உபயோகிச்ச பொருள்களை உள்ளே வரவிடாம அமெரிக்க அரசாங்கமும் தடுத்தது. அப்போ அந்த பொருளை தயாரிச்ச அத்தனை ஏழை தொழிலாளிகளைப் பத்தியோ அதை எல்லாம் வாங்கி நியாயமான லாபம் வெச்சு ஏற்றுமதி செஞ்ச அப்பா மாதிரி வியாபாரிகளைப் பத்தி கொஞ்சமாவது யோசிச்சுதா? அவங்க செஞ்சது நியாயம்ன்னா நான் செஞ்சதும் நியாயம்தான்"
மனோகரி, வந்தனா இருவரின் கண்களும் கலங்கின.
மனோகரி, "சாரிடா கண்ணா. உங்க அப்பா போனது உன்னை இந்த அளவுக்கு பாதிச்சுதுன்னு தெரியலை. சரி, இனி நீ இந்த மாதிரி காரியம் எதுலயும் ஈடு பட மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் கொடு"
சக்தி, "அம்மா, இனிமேல் கெட்டவங்களுக்கு உதவறமாதிரி எந்த காரியத்திலும் ஈடு படமாட்டேன்னு சத்தியம் பண்ணறேன். எந்த கெட்ட செயலையும் நான் செய்ய மாட்டேன்னு உங்களுக்கே தெரியும். ஆனா, எல்லா விஷயத்திலும் அரசாங்கம் விதிச்ச சட்டப் படிதான் நடப்பேன்னு என்னால சத்தியம் பண்ண முடியாது"
வந்தனா, "ஏன் சக்தி?"
சக்தி, "அரசாங்கம் எல்லா விஷயத்திலும் சரியா இருந்தா எதுக்கு வந்தனா முரளி சாரோட அந்த நெட்வொர்க்? கடைசியில் எங்களை பாதுகாக்க அந்த நெட்வொர்க்கைத் தானே நம்பினே? அரசாங்கத்தை நம்பலை இல்லையா?"
வந்தனா, "அப்படின்னா இப்ப நீ இந்திய அரசாங்கம் அமெரிக்க அரசாங்கம் ரெண்டுக்கும் உங்க மாங்க்ஸ் பாட் நெட்டை கண்காணிக்க கொடுத்து இருக்கும் மென்பொருள்?"
சக்தி, "அரசாங்கத்துக்கு கொடுத்து இருக்கும் மென்பொருள் நாங்க எதை எல்லாம் அவங்க கண்காணிக்கலாம்ன்னு நினைக்கறோமோ அதை மட்டும் கண்காணிக்கும்"
வந்தனா, "அப்படின்னா நீ தப்பா எதுவும் செய்யலைன்னு நான் எப்படி நம்பறது?"
சக்தி, "உண்மையா மாங்க்ஸ் பாட் நெட்டில் நடக்கும் எல்லாத்தையும் கண்காணிக்கும் மென்பொருளின் காப்பி உனக்கு நான் கொடுக்கறேன். இல்லைன்னா நீ வேலையை ராஜினாமா செஞ்சுட்டு வா. நான் உனக்கு மாங்க்ஸ் பாட் நெட்டின் ஸோர்ஸ் கோடையே கொடுக்கறேன். ஒவ்வொண்ணும் சொல்லித்தறேன்"
தன் கணவன் தன் மீது வைத்து இருக்கும் அன்பிலும் நம்பிக்கையிலும் வந்தனா உறுகினாள்.
வந்தனா, "அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். மறுபடி இந்த மாதிரி சிக்கலில் மாட்டாம இருக்கணும்" என்று தொடங்கியவள் "ஜாஷ்வாவுக்கும் சஞ்சனாவுக்கும் நடந்த மாதிரி உனக்கு எதாவுது ஆச்சுன்னா என்னால அதை தாங்கிக்க முடியாது" என்று தழுதழுத்த குரலில் முடித்தாள்.
சஞ்சனா, "கவலையே படாதே. எல்லாம் இந்த ஆளினால் வந்த வினை. நான் இவருக்கு கடிவாளம் போட்டு வெச்சு இருக்கேன். என்னால இனி குழந்தைங்களை விட்டுட்டு இவர் பின்னால் துப்பாக்கி தூக்கி குண்டடி பட முடியாது"
நித்தின், "But, நீங்க ரெண்டு பேரும் பிழைச்சது நிஜமாவே ஒரு அதிசயம்தான் சஞ்சனா"
சஞ்சனா, "இவர் பிழைச்சது மிரக்கிள்ன்னு சொல்லு"
வந்தனா, "ஏன் உனக்கும் தானே அடி பட்டுது?"
சஞ்சனா, "அந்த பொம்பளை சுடத் தெரியாம சுட்டா. அந்த குண்டு காலர் போனுக்கும் நெஞ்சுக்கூட்டில் முதல் எலும்புக்கும் நடுவில் போய் மாட்டி கிட்டு நின்னுது. ஒரு அபாயமும் இல்லைன்னு எனக்கு அப்பவே தெரியும்"மனோகரி, "அங்கே என்னதான் நடந்துது சஞ்சனா?"
சஞ்சனா, "அன்னைக்கு காலையில் எனக்கு தெரிஞ்ச எஃப்.பி.ஐ ஏஜண்ட் சைமண்ட் வில்லியர்ஸ்ன்னு ஒருத்தர், அவருக்கு ஃபோன் பண்ணினேன். தீவிரவாத தடுப்புப் பிரிவில் இருப்பவர். அவர் எடுக்கலை. அந்த மீட்டிங்க்கின் போது அவரிடம் இருந்து ஃபோன் வந்தது. அந்த சமயத்தில்தான் தீவிரவாதிகள்தான் அந்த மீட்டிங்க்குக்கு வரச்சொன்னாங்கன்னு எங்களுக்கு தெரிஞ்சுது. நான் ஆன்ஸர் பட்டனை அமுக்கிட்டு அங்கே நடப்பதை அவர் கேட்கற மாதிரி ஃபோனை பாக்கெட்டில் வெச்சுகிட்டேன். முதலில் இவரை அந்த மக்ஸூத் சுட்டான். அண்ணனுக்கு அடிபட்ட மாதிரி இவருக்கும் நுரையீரலில் குண்டு பாஞ்சுது. அதுவும் இடதுபக்கம். ஆனா அதிர்ஷவசமா இருதயத்தை உறசிட்டு போயிடுச்சு. நான் மத்தவங்களை சுட்டதுக்கு பிறகே சான்ட்ரா கைல துப்பாக்கியை பார்த்தேன். நானும் அவளும் ஒரே சமயத்தில் சுட்டோம். அவ செத்து விழுந்தா. எனக்கு குண்டடி பட்டு இருக்குன்னு தெரிஞ்சுது. எப்படியும் சைமண்ட் வில்லியர்ஸ்ஸுக்கு இது எல்லாம் கேட்டு இருக்கும், இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவார்ன்னு தெரியும். அந்த ஐ.எஸ்.ஐக்காரன் அப்பத்தான் வேனுக்கு உள்ளே இருந்து கன்னை எடுத்தான். நான் செத்து விழற மாதிரி விழுந்தேன்"
தீபா, "அவன் சந்தேகப் படலையா?"
சஞ்சனா, "நானும் கொஞ்ச நாள் ஒரு போராளியா இருந்ததில் கத்து கிட்டது. ஒரு துப்பாக்கி சண்டையில் யாரும் கீழே விழுந்தவங்களை சுட்டு குண்டை வேஸ்ட் பண்ண மாட்டாங்க"
வந்தனா, "ஓ, யா! சே, இதை போலீஸ் ட்ரெயினிங்கில் சொல்லிக் கொடுகக்லை!!"
மறுபடி சிரிப்பலை ...
சஞ்சன தொடர்ந்தாள், "மக்ஸூத்துக்கும் என்னை மாதிரி அடி பெருசா படலை. ஆனா நிஜமாவே மயக்கமாகி விழுந்து இருந்தான். அவனை மட்டும் அள்ளிப் போட்டுட்டு அந்த ஐ.எஸ்.ஐக்காரன் போனான். கொஞ்ச நேரத்தில் நான் எதிர்பார்த்த மாதிரி சைமண்ட் வில்லியர்ஸ் வந்தார். நான் அவரிடம் ஒரு டீல் போட்டேன். அவரும் அதுக்கு ஒத்துகிட்டார்"
சக்தி, "டீலா? என்ன டீல்?"
சஞ்சனா, "அந்த தீவிரவாதிகளுக்கு யார் யார் மூலம் எங்கே இருந்தெல்லாம் பணம் வந்ததுங்கற டீட்டெயில்ஸ் எல்லாம் கொடுக்கறேன். அதுக்கு பதிலா எனக்கும் ஜாஷவாவுக்கும் பாதுகாப்பு கொடுக்கணும்ன்னு கேட்டேன். அவர் விட்னஸ் ப்ரொடெக்க்ஷன் ப்ரோக்ராம் மூலம் பாதுகாப்பு கொடுப்பதா ஒத்துகிட்டார்.
உடனெ ஜாஷ்வாவையும் என்னையும் அவருக்கு தெரிஞ்ச டாக்டர் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு அனுப்பினார். எங்க மேல் எந்த சந்தேகமும் வராமல் பார்த்துகிட்டார். மாங்க்ஸ் பாட் நெட்டில் இவருக்கும் பங்கு இருக்குன்னு எஃப்.பி.ஐயில் இருக்கும் மத்த அதிகாரிகள் வந்து கேட்டப்ப ஜாஷ்வா தான் அதை எழுதலை. சக்தியும் நித்தினும்தான் அதை எழுதினாங்க. தான் அவங்களுக்கு ஒரு ஃப்ரெண்ட், ஈமெயில் விளம்பரம் கொடுக்க மட்டும் உதவறேன்னு சொன்னார். முதலில் நம்பலைன்னாலும் சைமண்ட் வில்லியர்ஸ் தன் இன்ஃப்ளூயன்ஸை உபயோகிச்சு எங்களை ரிலீஸ் பண்ணினார். இவர் ட்ரீட்மெண்ட் முடிஞ்சதும். நாங்க இங்கே வந்தோம். கரெக்டா அதே சமயத்தில் அண்ணனுக்கும் ட்ரீட்மெண்ட் முடிஞ்சு இருந்தது. அமெரிக்காவில் இருந்து நாங்க அண்டர்க்ரவுண்ட் ட்ரான்ஸ்ஃபர் மூலம் அனுப்பின பணம் பத்தின விவரங்கள் அண்ணன் கிட்ட கொடுத்து வெச்சு இருந்தோம். அண்ணன் அனுப்பின உடனே இந்த கட்டிடத்துக்கு ஃபுல் செட்டில்மெண்ட் பண்ணிட்டு மத்த வேலையில் இறங்கினோம்"
மனோகரி, "சரி, இங்கே உனக்கு நல்ல கைனகாலஜிஸ்ட் இருக்காங்களா?"
சஞ்சனா, "ஓ, ஒரு இண்டியன் டாக்டர் கப்பிள் இருக்காங்க. நல்லா பாத்துக்கறாங்க"
தீபா, "ஹேய், சஞ்சனா, ஆணா பெண்ணான்னு தெரிஞ்சுட்டீங்களா?"
சஞ்சனா, "நானும் இவரும் கடைசி வரைக்கும் தெரியாமலே இருக்கட்டும்ன்னுதான் இருந்தோம். ஆனா எனக்கு அடிபட்டதால் டாக்டர்ஸ் ஆறு மாசம் வரைக்கும் ஒவ்வொரு மாசமும் அல்ட்ரா ஸ்கேன் செயய்ச் சொன்னாங்க. போன தடவை ஸ்கேன் எடுக்கப் போனப்போ. எங்களுக்கு ஆல்ரெடி தெரியுன்னு நினைச்சுட்டு இங்கே இருக்கும் டாக்டரம்மா 'உன் பையனும் பொண்ணும் நல்லா இருக்காஙக' அப்படின்னு சொன்னா"
நித்தின், "வாவ், சோ ஜூனியர் சஞ்சனா, ஜூனியர் ஜாஷ்வா ரெண்டு பேருமா?"
ஜாஷ்வா, "எஸ்!"
No comments:
Post a Comment