Sunday, 25 August 2013

ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா?


திருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும் வளமாகவும் அமைத்து கொள்ளவதாகும் ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழக்கை ஆகா பல தம்பதிகளிடையே ஆயிற்று’ ஏனெனில் இருவருக்கும் சரியான புரிதல் இல்லாததும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன் மனைவி இருக்கும் போதே பிற பெண்களை நாடுகிறார்கள். முதலில்ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்று தெரியுமா..!

திருமணமான தொடக்கத்தில் இருவருக்கும் அதிகமான நெருக்கம் காணப்படுவதால் அவர்களுக்கு எந்தவித சண்டைகளும் வருவதில்லை ஆனால் நாளாக நாளாக அவர்களுக்குள் இருக்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்டசெல்லுகிறது. சரியான தாம்பத்திய உறவு இல்லாது போகும் போது அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இந்த வெறுப்பே அவர்களுகிடயிலான சண்டைகள் ஏற்பட்டு பிரிவு ஏற்படுகிறது. மனைவியிடமிருந்து போதிய ஈடுபாடுவராமல் போகும்போது ஆண்களுக்கு மனைவி மீதான ஈர்ப்பு குறையலாம். Friends Ungal Karuthukkalai Comment Pannavum....... மனைவி தனக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என்ற ஏமாற்றம் அவர்களை மனைவியிடமிருந்து விலகிப் போக எண்ணுகிறார்கள். இருவரும் செக்ஸ் பற்றி வெளிபடையாக பேசுவது இல்லை. ஆண்கள் செக்ஸ் பற்றி வெளிபடையாக பேசுவதற்கு வெட்கப் படுவதில்லை ஆனால் பல பெண்கள் செக்ஸ் பற்றி தங்கள் கணவர் மார்களுடன் பேசுவதற்கு வெட்கப்படுகிறார்கள். அல்லது பேசினால் கணவன் என்ன நினைப்பரோ? என்ற எண்ணம் உள்ளது. மாறாக அதைப்பற்றி கணவன் பேசுகையில் விலகி செல்கிறார்கள். செக்ஸ் என்பது இருவரது உணர்ச்சி மட்டுமல்ல அன்பு சம்பந்தப் பட்டது. இதை பற்றி பேசுவதற்கு வெட்கபடவேண்டிய அவசியம் இல்லை. மனைவிகளே ! உங்களது விருப்பு வெறுப்பு பற்றி கணவருடன் மனம் திறந்து பேசுங்கள். இவ்வாறு உங்களின் வெளிப்படையான கருத்து உங்கள் கணவருக்கு உங்கள் மீதான அன்பு அதிகரிக்கும். அப்பொழுதுதான் முழுமையான தாம்பத்திய வாழ்க்கையை வாழ்வது மட்டுமல்ல இவ்வாறு இருபதனால் ஆண்கள் வேறு பெண்களிடம் செல்வதை தடுக்கலாம். குழந்தை பெற்ற பிறகு பெரும்பாலான பெண்கள் குண்டாகி விடுகிறார்கள். news_3927இதுவும் ஆண்கள், மனைவியை விட்டு விலக ஒரு முக்கியக் காரணமாம். பல பேர் அப்படி இல்லை என்றாலும் பல ஆண்களுக்கு மனைவி எப்போதும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும்என்ற ஆசை இருக்கிறதாம். இப்படி குண்டாக இருக்கும் பெண்களிடம் செக்ஸ் குறைவதால்தான் அவர்கள் கணவர்கள் பார்வையில்சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. ஆண்கள் எப்பொழுதும் தங்களது துணை தங்களுக்கு பிடித்தமாதிரி இருக்கனும், உடுத்தும் உடையிலோ அல்லது செய்யும் செயலிலோ துணை தங்களை கவர வேண்டும் என்று நினைப்பார்கள். மாறாக அவ்வாறு இல்லது போனால் அவர்களுக்கு தங்களது துணை மீது சற்று சலிப்பு ஏற்படுகிறது.

அதுவே இன்னும் ஒரு பெண்ணிடம் தங்களுக்கு பிடித்த குணங்களை கண்டாலோ அல்லது அழகாய் இருந்தாலோ, அவர்களது மனம் சற்று தடுமாற செய்கிறது. இது காலப் போக்கில் துணை இருக்க மற்றொரு பெண் மீது காதலாக மாறிவிடுகிறது. குழந்தைகள் பிறந்ததும் பெண்களுக்கு குழந்தைகளை கவனிப்பதிலும் வேலைகளை பார்ப்பதிலும் அவர்களுக்கு நேரம் சரியாக போய்விடுகிறது. இதனால் கணவர் மோகத்துடன் நெருங்கி வரும்போது பெண்கள் விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் இது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்துவதுடன் வெறுப்பையும் உண்டாக்குமாம். இதுவும் கூட பெண்ணிடமிருந்து ஆண்கள் நழுவிச் செல்ல ஒரு காரணமாம். இதற்காக எல்லா ஆண்களுமே தப்பு செய்பவர்கள் என்று சொல்லவில்லை. சந்தர்ப்பமும், சூழ்நிலையும்அவர்களை மாற்றுகிறது இது சில காரணம்தான், இதையும் தாண்டி பல காரணங்கள் இருக்கலாம். இப்படிப்பட்ட காரணங்களால்தான் ஆண்களை , பெரும்பாலும் மனைவியரை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கிறார்களாம். ஆகவே பெண்களே உஷார் உங்க வீட்டுக்காரர் இந்த லிஸ்ட்டில் வருகிறாரா என்று பாருங்கள், வந்தால் உடனே சரி செய்யப் பாருங்கள்…..

No comments:

Post a Comment