அப்பா ஜம்புலிங்கம், சென்னைஇன் பிரபல தொழில் அதிபர்களில் ஒருத்தர். Selvaa Informatics Services India Ltd (SISIL) என்ற BPO வின் Chairman. அது கடந்த வருஷம் 100 கோடி வருமானம் எட்டிய நிறுவனம். அம்மா பார்வதி, ஒரு இல்லத்தரசி. செல்வா வீட்டுக்கு ஒரேபிள்ளை. அவன் அப்பாவுக்கு ஆடம்பரம் பிடிக்காது. மகனும் அப்பாவைப் போல. அவன் உபயோகத்திற்கு வீட்டில் Santro கார் இருக்கிறது. பல்சர் (Pulsar) அவசரத்திற்கு இருக்கிறது. இன்று கார் ரிப்பேர் ஆனதால் வீட்டில் சொல்லி விட்டு, பல்சரில் ஆபீஸ் வந்து கொண்டு இருந்த நேரத்தில் மழை கொட்ட ஆரம்பித்து விட்டது.என்ன இது இந்த மழையோட ஒரே தொல்லையா போச்சு. ஒன்பது மணிக்குள்ள office போகணுமே. நானே லேட்டா போனா எப்படி? சரியாய்வருமா? எப்படி மத்தவங்கள கேள்வி கேக்க முடியும். சரி பல்சர பக்கத்தில நிப்பாடிகிட்டு ஆட்டோ இல்ல பஸ்ல போக வேண்டியதுதான்" பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு ஆட்டோ அல்லது பஸ் வருமா என்று நகத்தை கடித்து கொண்டு இருந்தான். "அப்பா பஸ் வந்துரிச்சு". "கண்டக்டர் தரமணி ஒரு டிக்கெட் கொடுங்க." டிக்கெட் வாங்கி விட்டு , கூட்டம் அதிகமா இருந்ததால் முன்னோக்கி சென்றால் கொஞ்சம் நிற்க இடம் கிடக்கும் என்று பஸ்சுக்குள் முன்னேறினான். முன்னால்நின்ற 20 -21 வயது மதிக்க இளம்பெண்ணை நெருங்கி நின்றான். "என்னது இது இவன் பார்வை சரி இல்லையே". பக்கத்தில் இருந்த ஒரு 45 வயது மதிக்கதக்க ஆளை பார்த்து யோசித்தான் செல்வா. டிரைவர் போட்ட சடன் ப்ரேக்கில், கீழவிழாம இருக்க பஸ்ல இருந்த கைபிடிய பிடிக்க முயற்சி செய்தான் செல்வா. அப்படியும் அவன் கை தவறாகபட, அந்த பெண் அவன் கைபட்ட உடன் முறைத்து பார்த்தாள். "என்னடா இது வம்பா போச்சு, வேற பக்கம் போகலாம்னு பாத்தா பஸ்ல வேற இடம் இல்ல." திரும்ப பஸ் சடன் ப்ரேக் போட, படார் என்று அவன் கன்னத்தில் அறை விழ, அதிர்ச்சியில் சிலையாக நின்றான்செல்வா. அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை செல்வா. அவனை கன்னத்தில் அறைந்த பெண் செல்வாவை பார்த்து "ஏன்டா என் இடுப்புல கையவச்ச" " நானா இல்லையே?" கண்கள் கலங்க பதில் சொன்னான் "பொய் சொல்லாத. ஏற்கனவே என் மேல கைய வச்சவன்தான." "இல்லம்மா அது தெரியாம பட்டுரிச்சு" அவள் பக்கத்தில் இருந்த நண்பி " என்னடி பிரச்சனை காயத்ரி?" "பூஜா இவனுங்கள சும்மா விடக்கூடாது. முதல்ல வண்டிய போலீஸ் ஸ்டேஷன் விடணும், அப்பதான் உண்மை தெரியும்" அதற்குள் 45 வயதுக்காரன் அவசரமாக வண்டியில் இருந்து இறங்க பார்க்க, பூஜாவுக்கு சந்தேகம் வந்தது. அவ கண்டக்டரிடம் கண்ணை காட்ட, அவனும் புரிந்து கொண்டு "வண்டியில் இருந்து யாரும் இறங்க வேண்டாம், டிரைவர் அண்ணன் வண்டிய ஸ்டேஷன் விடுங்க" என்றான்.செல்வாவுக்கு கண் கலங்கியது. அவன் அம்மாவோ, அப்பாவோ அல்லது ஸ்கூல் வாத்தியார்கள், யாரும் அவனை அடித்ததில்லை. ஸ்கூல் பசங்களில் இவன் நல்ல பையன், எல்லோருக்கும் இவனை புடிக்கும். அவன் வளர்ப்பு அப்படி. யாரிடமும் சண்டைக்கு போக மாட்டான். முக்கியமாக பெண்களிடம் தள்ளியே இருப்பான். அப்படிபட்டவனுக்கு இந்த அவமானம் தாங்க முடியவில்லை. அவன் மூளை செயல் புரியும் தன்மையை தற்காலிகமாக இழந்தது பஸ் நந்தனம் போலீஸ் ஸ்டேஷன் நெருங்கியது. " எல்லாரும்முதல்லஎறங்குங்க" கண்டக்டர் சொல்ல முதலில் காயத்ரி, தொடர்ந்து பூஜா, 45 வயதுக்காரன், செல்வா இறங்கினர் நடந்த விபரங்களை இன்ஸ்பெக்டரிடம் சொல்லி காயத்ரி கம்ப்ளைன்ட் எழுதி கொடுக்க. அதை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் பூஜா எதையோ பேசி கொண்டிருந்தாள். பிறகு காயத்ரியிடம் "எனக்கென்னமோ 45 வயசான ஆளுமேல doubt ஆ இருக்கு,அதைத்தான் இன்ஸ்பெக்டர் கிட்ட சொன்னேன்" " போடி பைத்தியக்காரி, எனக்கு இவன் மேல (செல்வா) தான் சந்தேகம்" என்றாள் காயத்ரி. "இன்ஸ்பெக்டர் சார், எனக்கு ஆபீஸ் போகணும். இன்னைக்குத் தான் முதல் நாள். கொஞ்சம் சீக்கிரம் விட்டிங்கன்னா நான் கிளம்புவேன் " பூஜா காயத்ரியிடம் "நான் பேசிக்கிறேன் நீ கெலம்புடி" என்றாள். இன்ஸ்பெக்டரும் ஓகே சொல்ல, காயத்ரி அவசரமாக ஆட்டோ பிடிக்க கிளம்பினாள்.இன்ஸ்பெக்டர் செல்வா மற்றும் 45 வயதுக்காரன் இருவரையும் தனி அறைக்கு விசாரணைக்காக அழைத்து சென்றார். கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு பிறகு வெளியே வந்த இன்ஸ்பெக்டர் குழப்பமாக இருந்தார். "அந்த பொண்ணு கொடுத்த கம்ப்ளைன்ட்படி, இந்த பையன் செல்வாதான் குற்றவாளி. ஆனா அவன் இல்லைன்னு சொல்றான். அவன் கண்களும் பொய் சொல்லலை. 45 வயசுக்காரன் (தண்டபாணி) பார்த்த சந்தேகமா இருக்கு, ஆனா அவன் ஒத்துக்க மாட்டேங்கிறான். சரி இந்த பூஜா பொண்ண விசாரிப்போம்"
பூஜாவிடம் என்ன நடந்தது என்று கேட்டதற்கு "சார் எனக்கு தண்டபாணி மேல சந்தேகம். ஏன்னா காயத்ரி அறஞ்சபோது செல்வா கை மேல பஸ் கைபுடில தான் இருந்தது, அதனால அவ இடுப்புல கை வைக்க சான்ஸ் இல்ல". இன்ஸ்பெக்டருக்கு இப்போ புரிந்தது. திரும்ப தண்டபாணிய உள்ள கூட்டி போயி ஸ்பெஷல் treatment குடுக்க, அவன் உண்மைய ஒத்துகிட்டான். பூஜாவுக்கு நன்றி சொன்னான் செல்வா. "உங்க பிரெண்ட் கிட்ட நடந்த விஷயத்தை சொல்லுங்க" "புரியுது Mr செல்வா. நான் சொல்றேன். ஆனா அவ ஒரு விஷயத்த நம்பிட்டா, சீக்கிரத்தில அபிப்ராயத்த மாத்திக்க மாட்டா." "இவளை இனிமே எங்க சந்திக்க போறோம்" என்று நினைத்த செல்வா பூஜா மற்றும் இன்ஸ்பெக்டருக்கு நன்றி சொல்லி விட்டு உடனே ஆபீஸ் கிளம்பினான். ஆட்டோ பிடித்து இறங்கிய போது மணி 10 ஆகிவிட்டது. மழை குறைந்து தூரலாகி விட்டது. தன் chair ல உக்கார்ந்து இன்றைய தின வேலைகளை அவனது organizer லில் பார்த்து விட்டு, தன் secretary யை கூப்பிட calling பெல் அழுத்தினான். கதவை திறந்து கொண்டு ரூமுக்குள் நுழைந்தாள் காயத்ரி. உள்ளே நுழைந்த காயத்ரியும், செல்வாவும் கொஞ்சம் அதிர்ச்சியில் நிற்க, இப்போ கெடைச்ச இடைவெளில நாம் காயத்ரி பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம் காயத்ரி பெங்களூரில் பிறந்து, சென்னையில் வளர்ந்த பெண். அப்பா தமிழ், அம்மா கன்னடா. அப்பா பிசினஸ்மேன், அம்மா ஒரு டாக்டர். B Com முடித்து விட்டு, வேலைக்கு அப்ளை செய்து இன்றுதான் SISIL நிறுவனத்தில் சேர்மன்க்கு PA ஆக வேலைக்கு சேர்த்திருக்கிறாள். ஒரு தடவை பார்ப்பவர்களை திரும்ப பார்க்க வைக்கும் அழகு. சுருக்கமாக சொன்னால் நடிகை ப்ரனிதா போல இருக்கிறாள் என்பது அவள் பிரெண்ட்ஸ் அடிக்கும் கமெண்ட்ஸ். காயத்ரி தான் முதலில் சுதாரித்து பேச ஆரம்பித்தாள். "சார், நான் இன்னைக்குத் தான் சேர்மன்சார் PA வா சேந்துரிக்கேன். சேர்மன் ஊர்ல இல்லாததால உங்களை பார்க்க சொன்னாங்க " "முதல்ல உக்காருங்க. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். பஸ்ல நடந்தது என்னன்னா?" என்று செல்வா ஆரம்பிக்க. "சார் முதல்ல ஆபீஸ் வேலை பத்தி பேசலாம், பஸ்ல நடந்ததை பத்தி பேச எனக்கு விருப்பம் இல்ல " செல்வா முகம் சுருங்கியது, "ஓகே நீங்க என்னோட PA ரமாகிட்ட போய் வேலை கத்துக்கங்க. நான் இண்டர்காம்ல சொல்றேன்" வெளியே வந்த காயத்ரி " பெரிய இவன் மாதிரி நடிக்கிறான், மொதல்ல வேலைய resign பண்ணனும். இவன் மூஞ்சிய பாத்துக்கிட்டு இருக்க முடியாது. எரிச்சலா வருது "அதற்குள் பூஜா போன் வந்தது, "ஏண்டி பஸ்ல உன் இடுப்புல கைவச்சது அந்த தண்டபாணிதான். இன்ஸ்பெக்டர் அவனை அடிச்சு ஒதைச்சு உள்ள தள்ளிட்டார். " "இல்லடி என்னால நம்ப முடியலை. இவன்தான் முதல்ல என் மேல கை வச்சான். இவன்தான் பண்ணி இருப்பான். எனக்கு சந்தேகம் இல்ல. நான் சேந்த ஆபீஸ்ல தான் மார்க்கெட்டிங் டைரக்டர் ஆக இருக்கான். எனக்கென்னமோகாசுகொடுத்துஇன்ஸ்பெக்டரைவளச்சுபோட்டுருப்பான்னுதோணுது. நாளைக்கு சேர்மன் வர்றார். அவர் கிட்ட இவன பத்தி புகார் சொல்லிட்டு வேலைல நிக்கலாம்னு இருக்கேன். எதிர்காலத்தில எந்த பொண்ண இவன் பாத்தும் தப்பா நெனைக்ககூடாது. ஏண்டி எனக்கு ஒரு சந்தேகம், அவன் ஸ்மார்ட்ட இருக்கிறதுனால அவனை பாத்து ஜொள்ளு விட்டியா? " பூஜாவுக்கு புரிந்தது. என்ன சொன்னாலும் இவள மாத்த முடியாதுன்னு. "சரிடி உன் இஷ்டம்" என்று சொல்லி போனை வைத்து விட்டாள். 6 மணிக்கு ஆபீஸ் முடிந்த உடன் காயத்ரி வீட்டுக்கு கிளம்ப, செல்வாவுக்கு 8 மணி ஆகி விட்டது. மதியம் ஆபீஸ் டிரைவர் சென்று பல்சரை எடுத்து கொண்டு வந்தான். 9 மணிக்கு வீட்டுக்கு வந்த செல்வாவை அவன் அம்மா பார்வதி "என்னடா இட்லி சாப்புடுரியா இல்லை தோசை ஊத்த சொல்லட்டுமா? " "எது வேணாலும் சரி அம்மா." சாப்பிட்டு விட்டு படுக்க சென்றான் செல்வா அவனுக்கு தூக்கம் வரவில்லை. நடந்த விஷயத்தை அம்மாவிடம் சொல்லலாமா, இல்லை நாளைக்கு அந்த பெண்ணிடம் திரும்ப பேசலாமா? என்று யோசித்து கொண்டே உறங்கி விட்டான்.காலை 8 . 30 க்கு ஆபீஸ் வந்தான் செல்வா. ஆபீஸ் நேரம் 9 மணி அதனால யாரும் இன்னும் வரலை. சரி நம்ம வேலைய ஆரம்பிக்கலாம்னு காபினுக்குள் நுழைய இருந்தவன், காயத்ரி அங்கே PA ரமா சீட்ல உக்காந்து இருக்க, good சின்சியர்ஆன பொண்ணா இருக்கா என்று ஆச்சர்யத்துடன் காபினில் சென்று அமர்ந்தான். அவன் மனசில நேற்று அறை வாங்கியது ஞாபகத்தில் வந்தது. சட்டென்று கோபம் எட்டி பார்த்தது. மொதல்ல காயத்ரி செய்தது தப்பு, பலருக்கும் முன்னால தன்ன அவமானபடுத்தியது மனசுக்கு கஷ்டமாக இருந்தது. சரி, அவ தனியா வேற இருக்கா, முதல்ல பேசிடலாம் என்று முடிவு செய்தான். அந்த முடிவு எவ்வளவு பெரிய சங்கடத்தில் விடும் என்பது அப்போது அவனுக்கு தெரியவில்லை
No comments:
Post a Comment