Sunday, 6 May 2012

NAGARJUNA


நான்கைந்து வருஷங்களுக்கு முன்னால் நடிகர் நாகார்ஜூனனின் மகன் நாகசைதன்யாவுக்கு யோகா கற்றுக் கொடுக்க ஒரு டீச்சர் பெங்களூரில் இருந்து வந்தார். யோகா டீச்சர் என்றால் சந்நியாசினி மாதிரி மஞ்சள், காவி ட்ரெஸ்ஸில் அழுது வடிந்துகொண்டு இல்லாமல் ப்ரெஷ்ஷாக மாடர்ன் ட்ரெஸ்ஸில் இருந்தார். ஃபிகரும் சூப்பராக இருக்க ஸ்டூடண்டின்

 
அப்பாரொம்ப இம்ப்ரஸ் ஆகிவிட்டார். விளைவு அவர் நடித்த சூப்பர்படத்தில் துண்டு வேடத்தில் துண்டு கட்டிக்கொண்டு அனுஷ்கா அறிமுகம் ஆனார்.

ஏனோ அனுஷ்காவின் கவர்ச்சி அப்போது யாரையும் கவரவில்லை. அடுத்து ஒரு படம் இழுத்துப் போர்த்துக் கொண்டு நடித்தார். நடிப்பு சுமாராக இருந்ததாக பேசிக்கொண்டார்கள். இதே நேரத்தில் மெகாஸ்டாரின் ஸ்டாலின் படத்தின் ஒரு சூப்பர் டபுக்கு டபான் டேன்ஸ் ஆட அனுஷ்காவுக்கு வாய்ப்பு வந்தது. அம்மணி சூப்பர்ஹிட் ஆனார். அடுத்து ரவிதேஜாவோடு நடித்த விக்ரமகடு அனுஷ்காவின் சதைக்காட்சிக்காகவே சக்கைப்போடு போட்டது.

தென்னிந்தியாவுக்கு வெற்றிகரமான க்ளாமர் குயின் ரெடி! இன்றைய தெலுங்கு பில்லா வரை அனுஷ்காவின் கவர்ச்சிக்கு எல்லோரும் அடிமை. மாதவனின் ரெண்டுமூலமாக தமிழுக்கும் வந்தார். சிலுக்கு ஸ்மிதா, டிஸ்கோ சாந்திகளை மிஞ்சும் வகையில் அம்மணி திறமைகாட்டியும், அப்போது மாதவனுக்கு இருந்த ராசி படத்தை பப்படமாக்கி விட்டது. திரும்ப தமிழுக்கு வரக்கூடிய வாய்ப்பே அவருக்கு அதனால் அமையாமல் போய்விட்டது.

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக இரட்டை வேடத்தில் நடிக்க இவரை கோடிராமகிருஷ்ணா ஒப்பந்தம் செய்திருந்தார். அந்தப் பொண்ணையா நடிக்க வெக்கிறீங்க? மூஞ்சியிலே ரியாக்‌ஷனே வராதே?” என்று இயக்குனரை பலரும் பயமுறுத்தினார்கள். மிகக்குறைந்த சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டு அனுஷ்கா நடித்தார். கிளாமர் குயினான அனுஷ்கா அப்படத்தில் விஜயசாந்தி கெத்துக்கு ஃபிட் ஆகும் கேரக்டரில் சிரமப்பட்டு நடிக்க வேண்டியதாயிற்று. நன்றாக வந்த டேக்குகளையே திரும்ப திரும்ப எடுக்கும் ராமகிருஷ்ணா அனுஷ்காவின் பெண்டினை நிமிர்த்தினார்.

பல தடைகளுக்குப் பிறகு வெளிவந்த அருந்ததீ!இன்று தென்னிந்தியாவின் நெ.1 நடிகையாக அனுஷ்காவை மாற்றியிருக்கிறது. தெலுங்கு பட கலர்ஃபுல் வசூல் ரெகார்டுகளை அனாயசமாக ஒரு ஹீரோயின் ஓரியண்டட் படம் உடைத்து தெரித்திருக்கிறது. கால்ஷீட் டயரி அடுத்த ரெண்டு வருடத்துக்கு ஃபுல். தமிழில் டப் செய்யப்பட்டும் சக்கைப்போடு போட, இப்போது தமிழ், தெலுங்கு இருமொழிகளிலுமே இவர் தான் டாப். அம்மணியின் சம்பளம் இப்போது அருந்ததிக்கு வாங்கியதை விட இருபது மடங்கு என்று ஹைதராபாத்வாலாக்கள் கிசுகிசுக்கிறார்கள். அதாவது கிட்டத்தட்ட ஒன் சி.



அழகான ஹீரோயின்களுக்கு குரல் எப்போதுமே திருஷ்டி படிகாரம். ஆனால் அனுஷ்கா பேசினால் உண்மையிலேயே குயில் கூவுவது போல இருக்கும். சூப்பர் மற்றும் ரெண்டு படங்களில் சொந்தக்குரலில் பாடியிருக்கிறார் என்பது நிறைய பேருக்கு தெரியாது.

படப்பிடிப்பு இடைவேளைகளில் கொஞ்ச நேரம் கிடைத்ததுமே யோகா செய்ய கிளம்பிவிடுவார் இந்த யோகா டீச்சர். சும்மா இருக்கும் நேரங்களில் அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகளுக்கு இன்னமும் யோகா சொல்லிக் கொடுக்கிறாராம். வித்தியாசமான ஹாபி ஒன்று இவருக்கு உண்டு. இயற்கை சீற்றங்கள் குறித்த படங்களையும், செய்தித் துண்டுகளையும் சேகரித்து ஆல்பம் உருவாக்குவது.

நிறையபேர் நினைப்பது போல இவர் மும்பை இறக்குமதியல்ல. கர்நாடகாவின் மங்களூரில் பிறந்தவர். துளு தாய்மொழி. முழுப்பெயர் அனுஷ்கா ஷெட்டி. பார்ப்பதற்கு ஸ்வீட்டாக இருப்பதால் இவருக்கு ஸ்வீட்டி என்று செல்லப்பெயர் உண்டு. வயசு என்ன இருக்கும் என்று யாராலேயாவது யூகிக்க முடிகிறதா? 1981ல் பிறந்தவர். கணக்குப் பண்ண தெரிந்தவர்கள் கணக்குப் பண்ணிக் கொள்ளுங்கள். இவருடைய யோகா குரு பரத் தாக்கூர், பூமிகாவின் ஹஸ்பெண்ட்.


No comments:

Post a Comment