Pages

Friday, 19 September 2014

இனிஷியல் இல்லாதவர்கள் 16


இனிஷியல் இல்லாதவர்கள் கதையின் தொடர்சசி  இங்கிருந்து தொடங்குகிறது.  முதல் 15 பாகங்களை  படிக்காதவர்கள்  http://missthenmozhi21.blogspot.in/2014/08/blog-post_12.html  இதை கிளிக் பண்ணி படித்து விட்டு தொடர்ந்து இந்த பாகத்தை படிக்கவும்.. ஆயிரம்  முத்தங்களுடன்  உங்கள்  தேன்மொழி.....


"கல்யாணம்... காப்பியிலே சக்கரை சரியா இருக்காடா?" மகன் கல்யாணத்தை விழிகளில் கனிவுடன் பார்த்தாள் தனலட்சுமி. "அருமையா இருக்குமா... இன்னைக்கு டிஃபன் என்ன பண்ணப் போறேம்ம்மா?" கல்யாணம் தாயின் தோளில் சாய்ந்து கொண்டான். "சரியான அலைச்சல்ம்மா இவன்... எப்பவும் வயித்துக்கு கொட்டிக்கறதுலேயே மும்மரமா இருடா நீ?" செந்தாமரை, அண்ணணின் முதுகில் ஆசையுடன் குத்தினாள்.

"சனியனே... ஒரு வருஷமா ஓட்டல் சோறு திங்கறான் என் புள்ளை... அவன் மேல ஏன்டீ உன் நொள்ளைக் கண்ணை வெக்கறே?" "ஆமாம்... உன் புள்ளை மேல கண்ணு வெச்சிட்டாங்கன்னு... ரொம்பத்தான் துள்ளாதே... எனக்கு ரெண்டுக்கண்ணும் நல்லாத்தான் இருக்கு... உன் புள்ளைதான் அஞ்சு வருஷமா கண்ணாடீ போட்டுகிட்டு இருக்கான்..." முகத்தை நொடித்துக்கொண்டாள் செந்தாமாரை. "கொழந்தைக்கு பசிக்குதோ என்னமோ? வீட்டுல பெத்தவகிட்டத்தானே ஆசையாக் கேக்கறான்... நான் செய்து போடறேன்... உனக்கெங்கடீ நோவுது...?" தாய்மை பெண்ணைக் கடிந்துக்கொண்டது. "ஆமாம்.... நீ தான் மெச்சிக்கணும் உன் அழகு புள்ளையை... நேத்து அங்கே மானம் போச்சு எனக்கு?" "செந்தாமரை... என்னம்மா சொல்றே நீ?" வேலுச்சாமி தன் மனைவி நீட்டிய காபியை மெல்ல உறிஞ்ச ஆரம்பித்தார். குடும்பம் மொத்தம் முற்றத்தில் உட்கார்ந்திருந்தது. "உங்க ஆசைப்புள்ளை... பொண்ணு பாக்க போன எடத்துல வாழக்கா பஜ்ஜியை கேட்டு கேட்டு வாங்கி முழுங்கினானே? பிள்ளையான்டானுக்கு ஜீரண சக்தி அதிகமின்னு பின்னாடி உக்காந்திருந்த கிழடுக மூஞ்சைப் பொத்திக்கிட்டு சிரிச்சாளுங்க...?" "வயித்துக்கு வஞ்சனை பண்ணக்கூடாது செந்தாமாரை... புடிச்சிருந்தா வெக்கப்படாம கேட்டுத் திங்கணும்டீ... இதுதான் என் பாலிஸி... நிஜமாவே தேன்மொழி வீட்டுல பஜ்ஜி நல்லாத்தான் இருந்திச்சி... அவங்க வீட்டுப் பின்னாடி தோட்டம் பூரா வாழைமரம்......” “உன் வருங்கால மாமியாருக்கு நிஜமாவே கை தாராளம்டா... மனசார அள்ளி அள்ளி எல்லார் தட்டுலேயும் வெச்சா... ஆனா மத்தவளுங்க சிரிச்சாளுங்களே? எனக்கு பத்திக்கிட்டு வந்தது...” “என் முதுகுக்குப் பின்னாடி எவ சிரிச்சா எனக்கென்னடீ..? வெத்தலைப்பாக்கு வெச்சு அவங்க அழைக்கவேத்தான் நான் போனேன்.." தேன்மொழியோட அப்பன் குடுத்து வெச்சவன்... என் வருங்கால மாமியாருக்கு கைமட்டும்தானா தாராளம்... அவங்களுக்கு எல்லாமே தாராளம்தான்... மனதுக்குள் வடிவின் உருவம் சட்டென வந்து நிற்க கல்யாணமும் உற்சாகமாகச்சிரித்தான். “மேரேஜை ஏன்டா தள்ளி வெய்யுங்கன்னு அவங்கக்கிட்டே சொன்னே?” “நான் சொல்றதை கொஞ்சம் பதட்டப்படாம பொறுமையாக கேளுங்க...” தாயிடமிருந்து நகர்ந்து சற்று தள்ளி சுவரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்ட கல்யாணம் தன் முகவாயை சொரிந்து கொண்டான். "ஏன்டா... நிஜமாவே நீ ஃபாரின் ட்ரெய்னிங் எதுக்காவது போகப் போறியா என்ன?" வேலுசாமி முதன்முறையாக தன் வாயைத் திறந்தார். "அதெல்லாம் ஓண்ணுமில்லேப்பா..." "பின்னே?" "அந்த தேன்மொழியை உங்களுக்கெல்லாம் பிடிச்சிருக்கா?" "இது என்னடா கேள்வி இப்ப? அவளுக்கு என்னடா கொறைச்சல்? பாக்கறதுக்கு கண்ணுக்கு லட்சணமா... பச்சைபசேல்ன்னு நம்ப வீட்டு கொல்லை மாடத்துல இருக்கற துளசிச்செடி மாதிரி... கண்ணுக்கு நெறைவா இருக்காடா... அவளை எங்களுக்கெல்லாம் ரொம்பப் புடிசிருக்குடா?" தாய் பிள்ளையின் முகத்தைப் பார்த்தாள். "டேய்... நல்லக்காரியத்தை தள்ளிப் போடக்கூடாது.... நீங்க உங்கப் பையனுக்கு கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கன்னு ராத்திரி கணபதி எனக்கு போன் பண்ணியிருந்தாரு.... மேரேஜை அவங்க பிக்ஸ் பண்ற தேதியில நடந்துட்டு போகட்டும்... நடுவுல நீ பூந்து சும்மா குட்டையை எதுவும் கொழப்பாதே...." வேலுசாமி தன் மீசையை தடவினார். "அப்பா... உங்களுக்கு தேன்மொழியைப் பிடிச்சிருக்கு... அவங்க எல்லாருக்கும் என்னைப் பிடிச்சிருக்கு... அவளை எனக்கும் பிடிச்சிருக்கு... ஆனா..." கல்யாணத்தின் முகம் இப்போது முற்றிலுமாக டல்லடித்துப் போயிருந்தது. "அப்புறம் என்னடா அண்ணா? சட்டுப்புட்டுன்னு அவ கழுத்துல மஞ்சக்கயித்தை கட்டிட்டீன்னா... வாரத்துல ரெண்டு நாளாவது உனக்குப்பிடிச்ச வாழக்காய் பஜ்ஜி நிச்சயமா கிடைக்கும்டா... அவ நல்லாவே சமைப்பாளாம்..." செந்தாமரை ஹோவென உரத்தக்குரலில் சிரித்தாள். "சும்மா மொக்கைப் போடாதடீ... பஜ்ஜி செய்யத் தெரியுங்கறதுக்காக ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்ட முடியுமா?" தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்தான் கல்யாணம். "கண்ணு... கல்யாணம்... உன் மனசுல என்னதான்டா இருக்கு? ஒப்பனா சொல்லேன்..." தனலட்சுமி மகனின் தோளில் தன் இடது கையைப் போட்டு தன்புறம் இழுத்தாள். "அம்மா... விஷயம் என்னன்னா தேன்மொழிக்கு என்னைப் பிடிக்கலைம்மா... இது அவளோட அண்ணிக்கும் தெரியும்..." சொல்லிவிட்டு தன் தலையை குனிந்து கொண்டவனின் முகம் லேசாக கருத்து களையிழந்திருந்தது. “என்னடா சொல்றே?” விக்கித்துப்போன குரலுடன் தனலட்சுமி மகனின் முகத்தை நிமிர்த்தினாள். இதுவரை தமையனைக் கிண்டல் பண்ணிக் கொண்டிருந்த செந்தாமரையின் முகத்திலும் ஈயாடவில்லை. "நம்பளை கூப்பிடறதுக்கு முன்னாடியே இந்த சம்பந்தத்துல அவளுக்கு விருப்பமில்லேன்னு சொல்லியிருக்க வேண்டியதுதானே?" இதுவரை எதுவும் பேசாமல் தன் மீசையை நெருடிக்கொண்டிருந்த வேலுசாமி மிரள ஆரம்பித்தார். "அப்பா... பொறுங்கப்பா... பொண்ணுங்க நாங்க படிக்க ஆரம்பிச்சிட்டோம்.... வேலைக்கு போறோம்.. எங்களுக்குன்னு சில ஆசைகள் இருக்கு... ஆனா எங்க விருப்பத்தை எந்த வீட்டுல கேக்கறாங்க... அப்படியே சொன்னாலும் எந்த வீட்டுல ஒத்துக்கறாங்க...?" "செந்தாமாரை... நீ குழந்தம்மா.. உனக்கு அனுபவம் இல்லே... சும்மா பேசனுங்கறதுக்காக பேசாதே..." "அப்பா.. என்னை நீங்க பேசவே விடமாட்டீங்களா... நான் இன்னும் கொழைந்த இல்லேப்பா... எனக்கு இருபத்து மூணு வயசு ஆச்சு... என் வயசுக்கு அம்மா கல்யாணத்தை பெத்துட்டாங்க..." "சொல்லுடீ... உன் பேச்சையும்தான் கேக்கறோம்..." தனலட்சுமி பெண்ணின் முகத்தைப்பார்த்தாள். "நம்ம வீட்டுல என் பேச்சை நீங்க கேக்கறீங்களா...? எந்த விஷயத்துல நான் வாயைத் தொறந்தாலும்... வாயை மூடுடீ வாயை மூடூடீங்கறீங்க... தேன்மொழி விருப்பத்தை நம்பளை கூப்பிடறதுக்கு முன்னாடி கேட்டு இருக்கமாட்டாங்க... அவ வீட்டுலேயும் இதுதான் நடந்திருக்கும்... தலையெழுத்தேன்னு நம்ம எதிர்ல கூடத்துல வந்து நின்னுருப்பா...." செந்தாமரை தன் தந்தையின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தாள். "நீ சும்மாரும்மா... இப்பவும் சொல்றேன் உனக்கு ஒண்ணும் தெரியாது..."பெண்ணிடம் சீறினார் வேலுசாமி. "அப்பனும் பொண்ணும் காலங்காத்தால ஆரம்பிச்சிடாதீங்க... உன் கதையை நீ மேல சொல்லுடா.." பிள்ளையின் பக்கம் திரும்பிய தனலட்சுமி தன் மனசுக்குள் அலுத்துக்கொண்டாள். செந்தாமரை ஏன் இப்படி இன்னைக்கு கூட கூட எதிர்த்துப் பேசறா... இவ எவனையாவது படிக்கற எடத்துல காதலிக்கறாளா... நாளைக்கு தன் கல்யாண நேரத்துல பிரச்சனை வந்துடப்போவுதேன்னு இப்பவே அடி போடறாளா? தனியா கூப்பிட்டு விசாரிக்கணும்... தனலட்சுமி முந்தானையால் தன் முகத்தைத் துடைத்துக்கொண்டாள். ‘மிஸ்டர் கல்யாணம்... இந்த மேரேஜ்ல எனக்கு விருப்பமில்லே...! தயவுசெய்து என்னை உங்களுக்கு பிடிக்கலேன்னு சொல்லிடுங்கன்னு நாங்க ரெண்டு பேரும் மாடியிலே தனியா இருந்தப்ப என் கையை பிடிச்சிக்கிட்டு தேன்மொழி கெஞ்சினாமா...” “அப்புறம்... என்ன மசுருக்கு அவளைப் பிடிச்சிருக்குன்னு கீழே வந்து சொன்னே...? செந்தாமரை சொன்ன மாதிரி வெக்கம் கெட்டவன்டா நீ... அவ உன்னைப் புடிக்கலேன்னு சொன்னதுக்கு அப்புறமும்... எதுக்குடா பஜ்ஜியை கேட்டு கேட்டு வாங்கி முழுங்கினே?” வேலுசாமி கோபத்தில் வெடித்தார். கோபத்தில் அவருடைய கருத்த முகம் மேலும் கருத்தது. “அப்பா... எனக்கு அவளை ரொம்பப் பிடிச்சுப்போச்சுப்பா... அவளை திருமணம் பண்ணிக்க ஆசைப்படறேம்பா... அப்படியிருக்கும் போது நான் எப்படிப்பா பொய் சொல்றது?” முணுமுணுத்தான் கல்யாணம். “சும்மா இருங்க... அந்த பொண்ணு அவ மனசுல இருக்கறதை அவங்க வீட்டுல சொல்லியிருக்கணும்... அவ பண்ணத்தப்புக்கு இப்ப இவன் கிட்ட எதுக்கு நீங்க அர்த்தமில்லாமே கூவறீங்க...?” “எம்மா... நேத்து தேன்மொழியோட அம்மா நாலு பேரு நடுவுலே நம்ம கல்யாணத்தை அவளுக்கு பிடிச்சிருக்குன்னு சொன்னாங்களா இல்லியா?” செந்தாமரை தன் பின்னலை முறுக்கிக் கொண்டிருந்தாள். “தேனோட அம்மா சொன்னது பொய்ம்ம்மா....? அவங்களுக்கு நம்ப சம்பந்தத்தை விட்டுட விருப்பம் இல்லேம்மா... அவ மனசை மாத்திடலாம்ன்னு அவங்க நினைக்கறாங்கம்மா...” “தேனாவது... பாலாவது... ரொம்பத்தான் வழியறே... அந்தம்மா சொன்னது பொய்ன்னு உனக்கெப்படிடாத் தெரியும்?” வேலுசாமி எரிச்சலில் குதிக்க ஆரம்பித்தார். “என்னை பிடிக்கலேன்னு சொல்லச் சொல்லி நான் ரிக்வெஸ்ட் பண்ணேன்... ஆனா நீ என்னை ஏமாத்திட்டேன்னு... நேத்து ராத்திரி போன் பண்ணி தேன்மொழி எங்கிட்ட சண்டை போட்டாப்பா...” “நீ ஆம்பிளைதானேடா... உன்கிட்ட அவ சண்டைப் போட்டாங்கறியே... இதைச் சொல்றதுக்கு உனக்கு வெக்கமாயில்லே...? அவ சித்தப்பனை ரெண்டுல ஒண்ணு என்னா ஏதுன்னு நான் இன்னைக்கே நீ இங்கே இருக்கும் போதே கேட்டுடறேன்...” வேலுசாமி துண்டை உதறிக்கொண்டு எழுந்தார். “எப்பா... கொஞ்சம் பொறுங்கப்பா... ஆன்னா ஊன்னா துண்டை ஒதறிடறீங்க நீங்க...?” கல்யாணம் தன் குரலை உயர்த்தினான். “அப்புறம்... வேறென்னடா சொன்னா அவ?” செந்தாமரை தந்தையின் கையை பிடித்து இழுத்து உட்காரவைத்தாள். “அவ வேற எதுவும் சொல்லலை... நான்தான் அவகிட்ட விடாம பேசினேன்... அதைச்சொன்னா நான் வெக்கம் கெட்டவன்னு நீங்க என்னை குத்தம் சொல்லுவீங்க..." கல்யாணம் எழுந்தான். "சாரிடா... நான் தமாஷுக்கு சொன்னதை சீரியஸா எடுத்துக்கிட்டியே... உன் தேனு கிட்ட நீ என்னடா சொன்னே?" "ஆமாம்... இவ ஒருத்தி... அவனை எதுக்கடீ இப்ப 'உன் தேனு' என்ன சொன்னான்னு உசுப்பேத்தறே." தனலட்சுமி சிரித்தாள். தாயின் சிரிப்பில் கல்யாணம் முகம் சிவந்தான். "தேன்மொழி... எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு என் பேரண்ட்ஸுக்கும் உங்களைப் பிடிச்சிருக்கு... நீங்க என் ஊரை சேந்தவங்க... நாம ரெண்டு பேரும் ஒரே இனத்தை சேர்ந்தவங்க... எல்லாத்துக்கும் மேல ஒரே ஊர்ல, சென்னையில ஒரே லைன்ல, வொர்க் பண்றோம்... இப்படி எல்லாமே ஒண்ணு போல பொருந்தி வரவேதான்... நான் உங்களை பொண்ணு பாக்க வந்தேன்...” கல்யாணம் இழுத்தான். “ஆமாம்டா... எல்லாம் பொருந்தி வருதுன்னுதான் போனோம்... அவ சித்தப்பன் உங்கப்பாவோட படிச்சவரு... அவரு நாலுதரம் நம்ப வீட்டுக்கு வந்தாரேன்னுதான் போனோம்... இப்படி அவ மூஞ்சில அடிப்பான்னு யாருடா கண்டது...” தனலட்சுமி பொருமினாள். “அவனைப் பேசவிடுடீ...” வேலுசாமி சலித்துக்கொண்டார். “தேன்மொழி... கொஞ்ச நாள் நாம ஃப்ரெண்ட்ஸா பழகுவோம்... அதுக்கப்புறமும் என் மேல உங்களுக்கு ஒரு பிரியம் உண்டாவலேன்னா... இந்த மேரேஜ்ல எனக்கு விருப்பமில்லேன்னு நானே உங்க வீட்டுல வந்து சொல்லிடறேன்னு அவளுக்கு பிராமிஸ் பண்ணியிருக்கறேம்மா...” கல்யாணம் தான் உட்கார்ந்திருந்த தரையை வெறித்துக் கொண்டிருந்தான். “அதுக்கு அவ என்ன சொன்னா...?” “தேனு... எதுவும் முடிவா சொல்லலேம்மா...” “விடுடா... நீ ஆம்பிளை எதுக்குடா அவ பின்னாடி கெஞ்சிக்கிட்டு போகணும்... உனக்கு என்னடா கொறை... இவ இல்லேன்னா... இன்னொருத்தி... ஊர்லே பொண்ணா இல்லே... ராஜாத்தி மாதிரி ஒரு அழகான பொண்ணைப் பாத்து உனக்கு நான் கட்டி வெக்கறேன்டா” இப்போது தனலட்சுமியின் முகத்தில் கடுப்பு ஏறியிருந்தது. “அம்மா... ப்ளீஸ்... அவசரப்படாதேம்மா... எனக்கு அவளைப் பிடிச்சிருக்கும்மா... எனக்கு நீ கொஞ்சம் டயம் குடும்மா...” “எடுக்கும் போதே அந்தப்பொண்ணு இவ்வளவு ஆட்டம் காட்டறா எனக்கென்னமோ இது ஒத்து வரும்ன்னு தோணலேடா... ?” காபி டம்ளர்களை எடுத்துக்கொண்டு தனலட்சுமி விருட்டென எழுந்தாள். “அம்மா... உன்னை அப்பா பொண்ணு பாக்க வந்தப்ப, மொதல்லே நீயும்தானேம்மா அவரைப் பிடிக்கலேன்னு சொன்னியாம்... அப்புறம் கடைசீல அவரைத்தானேம்மா கல்யாணம் பண்ணிக்கிட்டே...” கல்யாணம் தாயின் பின்னாலேயே அவள் முந்தானையைப் பிடித்துக்கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தான். வேலுசாமி தன் தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். செந்தாமரை செல்லில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள். "டேய்... உன்னை வேண்டாம்ன்னு சொல்றவ பின்னால, உன் கவுரவத்தை விட்டுட்டு வெட்டியா நீ அலைய நினைக்காதே... பின்னாடி உன் வாழ்க்கையில உனக்கு மதிப்பு இருக்காது... அவ்வளவுதான் நான் சொல்லுவேன்..."

"என் அப்பாவும் உன் பின்னால தாடி வெச்சிக்கிட்டு அலைஞ்சாருன்னு நீ எத்தனை தரம் சொல்லியிருக்கே? இப்ப நீங்க எந்த விதத்துல கொறைஞ்சு போயிட்டீங்க... உங்க வாழ்க்கை நல்லாத்தானே இருக்கு...?" "நான் சொல்றதை சொல்லிட்டேன்... அதுக்கு அப்பறம் உன் இஷ்டம்... நீ அந்த தேனோ... பாலோ... காப்பியோ... எவ முந்தானையை வேணா பிடிச்சிக்கிட்டு அலை... எனக்கு இப்ப அவ பேரைக்கேட்டாலே எரிச்சல் வருது..." தனலட்சுமி சிங்கில் கிடந்த பாத்திரங்களை பர பரவென தேய்க்க ஆரம்பித்தாள். கல்யாணம் தன் செல்லை எடுத்துக்கொண்டு கொல்லையை நோக்கி மெதுவாக நடந்தான். வீட்டுக்கு பின்னாலிருந்த மாமரத்தின் கீழ் கிடந்த கல்லின் மேல் உட்கார்ந்து கொண்டான். இரவு அவன் தேன்மொழிக்கு அனுப்பியிருந்த குட்நைட் மெஸேஜுக்கு பதில் வந்திருக்கவில்லை என்றது தெரிந்ததும் சற்றே எரிச்சலானான். என்னப் பொண்ணு இவ? ராத்திரி அவ்வளவு தூரம் என் மனசுல இருக்கறதை பொறுமையா தேன்மொழிகிட்டே சொன்னேன்... ஃப்ரெண்டா இருக்கலாம்ன்னு சொன்னேன். படிச்சப் பொண்ணு புரிஞ்சுக்குவான்னு நினைச்சேன்... இவளுக்கு கொஞ்சம் கூட மேனர்ஸே இல்லையே? ரொம்பவே ராங்கித்தனம் பண்றாளே? குட்நைட்ன்னு ஒரு ஃப்ரெண்ட்லி மெஸேஜ் அனுப்ச்சேன்... அதுக்கு ஒரு பதிலையும் காணோம். ஒரு சின்ன ரிப்ளை... அதுக்கு கூட தகுதியில்லாதவனா நான்? உண்மையிலேயே இந்த தேன்மொழி திமிர் பிடிச்சவதானா? அம்மா சொல்ற மாதிரி இவ இல்லேன்னா எனக்கு வேற எவளுமே கிடைக்கமாட்டாளா? இவ பின்னாடி நான் எதுக்கு அலையணும். கல்யாணம்... அவசரப்படாதேடா... நேத்து ராத்திரி நீ மெஸேஜ் அனுப்பினப்ப அவ தூங்கிட்டு இருந்திருக்கலாம். காலைல எழுந்ததுக்கு அப்புறமும் உன் மெஸேஜை அவ பார்க்காம இருக்க சான்ஸ் இருக்கு... அவகிட்ட நீ ஆறுமாசம் டயம் கேட்டிருக்கே.. அந்த ஆறு மாசத்துல முதல் நாளே இன்னைக்குத்தான் தொடங்கியிருக்கு... இன்னும் முழுசா ஒரு நாள் கூட முடியலேடா... அதுக்குள்ள நீ உன் பொறுமையை இழந்துட்டா எப்படிடா? கல்யாணத்தின் மனம் அவனைப் பார்த்து மென்மையாகச் சிரித்தது. 'இப்ப என்னதான் பண்ண நான்?' 'என்ன வெட்டி முறிக்கறே நீ? ராத்திரி குட்நைட் சொன்ன மாதிரி இப்ப குட்மார்னிங்ன்னு ஒரு எஸ்.எம்.எஸ் உன் தேனுக்கு அனுப்பேன்...!' 'என் தேனு... சித்த முன்னாடி என் தேனுன்னு சொன்னதுக்கு வீட்டுல இருக்கவங்க ஹீ ஹீன்னு இளிச்சாங்க.. இப்ப நீ என்னை உசுப்பேத்தறே?' 'தேனுன்னு சொன்னா எவ்வள இனிப்பா இருக்கு... உன் மனசே மொத்தமா இனிக்குதுல்லே... எப்ப இருந்தாலும் அவ உன் தேனுதான்டா... கொஞ்சம் பொறு... மெதுவா அவளை உன் வழிக்கு கொண்டுவா... இப்ப ஒரு மெசேஜ் அனுப்பித்தான் பாரேன்...' 'மெசேஜ் அனுப்பலாம்... ஆனா என் தேனு தேனாவா இனிக்கிறா... நேத்து ராத்திரி என்னை தேளாக் கொட்டினாளே?' கல்யாணம் தன்னைத்தானே ஒரு நொடி சலித்துக்கொண்டான். என் மனசு ஏன் இப்படி தேன்மொழி பின்னால அலையுது? மனசே இப்படியும் அப்படியும் விளையாடித் தன்னைத் தானே சலித்துக்கொண்டாலும் அவன் கைவிரல்கள் செல்லில் வேகமாக விளையாடின. "ஹாய்... தேன்மொழி... குட்மார்னிங்... ஹவ் ஆர் யூ டியர்..." தமிழில் குறும்செய்தியை தட்டெழுதி அடுத்த நொடியே தேன்மொழிக்கு அனுப்பி வைத்தான் கல்யாணம். செய்தியை அனுப்பியவன் அவள் போட்டோவை ஸ்கீரினில் கொண்டு வந்தான். பச்சை நிற சுடிதாரில், இதழ்கள் விரிந்து சிறிய முன் பற்கள் தெரிய தேன்மொழி சிரித்துக்கொண்டிருந்தாள். இளம் காற்று வீசிக்கொண்டிருந்த அந்த நேரத்தில், அமைதியுடன் இருந்த அவன் மனதுக்கு, தேன்மொழியின் சிரிப்பு மிகவும் அழகாக இருப்பதாகத் தோன்றியது. மனதில் தயக்கத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தான் கல்யாணம். 'ஐ லவ் யூ வெரி மச் தேனு... என்னை ஏமாத்திடாதே தேனு...' செல்லின் ஸ்கிரீனில் கவர்ச்சியாக புன்னகைத்துக் கொண்டிருந்தவளுக்கு சட்டென ஒரு முத்தம் கொடுத்தான். நீளமான பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினான் அவன். "எழுந்து வந்து நேரத்துக்கு குளிடா..." என் பிள்ளை உடம்பால முழிச்சிக்கிட்டான்... இனி இவனை தடுத்து நிறுத்த முடியாது... ஒரு பொண்ணு இவனை ஆட்டி வெக்க ஆரம்பிச்சிட்டா... சட்டுன்னு ஒரு கால்கட்டை இவனுக்கு போட்டே ஆகணும்... இல்லேன்னா தனியா இருக்கற என் பிள்ளை தறி கெட்டுப்போயிடுவான்.. சமையலறையில் பூரிக்கு மாவு பிசைந்து கொண்டிருந்த தனலட்சுமியின் பார்வை ஜன்னலின் வழியாக கொல்லைக்கு அலைபாய, அங்கு பிள்ளை செல்லை முத்தமிட்டதை கண்டு தன் மனதுக்குள் எழுந்த பொருமலுடன் தவித்தாள். இவன் அப்பன் என் போட்டோவை கையில எடுத்துக்கிட்டு என் பின்னால அலைஞ்சான்... இவன் இந்த தேனு போட்டோவை செல்லுல வெச்சிக்கிட்டு அலைய ஆரம்பிச்சிட்டான்... இவன் அப்பன் மூஞ்சியில அன்னைக்கு நான் பாத்த அதே ஏக்கம் இன்னைக்கு என் புள்ளை மூஞ்சியிலே வந்திடிச்சி... ஆம்பிளை என்னைக்கும் ஆம்பிளைதான்... தனலட்சுமிக்கு தன் மனதில் இருந்த ஆற்றாமை போய் லேசாக சிரிப்பு வந்தது. பெற்றவள் ஆசையுடன் பொரித்துப் போட்ட ஆவி பறக்கும் பூரியுடன், உருளைகிழங்கு மசாலாவை திருப்தியாக ஒரு கைபபார்த்த கல்யாணம் மாடியறையில் உல்லாசமாக சினிமா பாட்டை முணுமுணுத்துவாறு தரையில் போர்வையொன்றை மடித்துப்போட்டு, கரு நீல நிற முழுக்கை சட்டையை ஸ்டீம் பிரஸ் செய்து கொண்டிருந்தான். "அண்ணா... எங்கேயாவது வெளிய போறியாடா...?" "ம்ம்ம்... டயம் பாஸ் ஆகலேடீ... என் பழைய ஃப்ரெண்டு சுரேஷைப் பாக்கலாம்ன்னு நினைச்சேன்... இன்னும் ரெண்டு நாளை எப்படியாவது ஓட்டியாகணுமே..." மனம் விட்டுச் சிரித்தான் கல்யாணம். "யாரு அந்த பொட்டிக்கடைகாரனைத்தானே....?" "என்ன நக்கலாடீ... என் ஃப்ரெண்டு இருவத்தி அஞ்சு லட்சம் மொதல் வெச்சு கடை தொறந்திருக்கான்... அந்தக் கடையை பொட்டிக்கடைங்கறே.." "சரி... சரி.. நீ பைக்லதானே போவப் போறே?" . "ஆமாம்... எதுக்கு கேக்கறே?" சட்டையை அயர்ன் செய்துகொண்டிருந்தவன் தன் தலையை நிமிர்த்தினான். அவனெதிரில் நின்றிருந்த செந்தாமாரையின் இடுப்பும், வயிறும் இறுக்கமான கருப்பு வண்ண ஜீன்சில் பிதுங்கிக் கொண்டிருந்தது. வெகு இலேசாக முன் தள்ளிய தொப்பையும் தொப்புள் குழியும் மெல்லிய டாப்ஸுக்குள் தங்கள் இருப்பை பட்டவர்த்தனமாக பறைசாற்றிக் கொண்டிருந்தன. அடர்த்தியான தலை முடியை வகிடெடுக்காமல் பின்னுக்கு வாரி பிளாஸ்டிக் கிளிப்பால் இறுக்கியிருந்தாள் செந்தாமரை. எடுப்பான மார்பு திரட்சிகள் அவள் அணிந்திருந்த டாப்ஸ் விளிம்பின் வழியே பளீரென வெண்மையாக மின்னலடித்தன. நீளமான மாநிற கைகளில் இரண்டு ஜோடி தங்க வளையல்கள், கழுத்தில் ஆடும் மெல்லிய தங்க சங்கிலி, வழித்தெடுத்தது போலிருந்த கட்டான சந்தன நிற தேகத்துடன், இலேசாக ஜாஸ்மின் செண்ட் வாசம் வீசிக்கொண்டு நின்றவளை கண்ட கல்யாணத்துக்கு சட்டென பனியனுக்குள் வியர்த்தது.. என் முதுகுல ஏறி கழுத்தைக் கட்டிக்கிட்டு உப்பு மூட்டை விளையாடினவளா இவ? தன் தலையை விருட்டென குனிந்துகொண்டான் கல்யாணம் "என்னைக்கொஞ்சம் ரயில்வே ஸ்டேஷன் கிட்ட டிராப் பண்றியாடா?" செந்தாமரை அண்ணனை கொஞ்சினாள். கல்யாணம் தலை நிமிராமல் இடது விழியால் அவளைப் பார்த்தான். செந்தாமரையின் உதடுகள் நமுட்டுத்தனமாக ஒரு முறை குவிந்து விரிந்தன. தேகத்தின் நிறத்தில், உடலை கவ்விப்பிடிக்குமாறு அணிந்திருந்த வெளிர் ரோஸ் நிற டாப்ஸ்ஸில் ஜிலு ஜிலுவென தேவதையாக இருந்தாள் அவள். "இன்னைக்கு உனக்கு காலேஜ் லீவுன்னு சொன்னியே?" "என் ஃப்ரெண்டைப் பாக்கப் போறேன்... வரும் போது நானே வந்துடுவேன்." இடது தோளில் தொங்கிய கருப்பு நிற பேக் இடுப்பு வரை தொங்க, வலது கையில் வெள்ளை நிற சாம்சங் கேலக்ஸி. "ம்ம்ம்..." கல்யாணம் பிரஸ் செய்த சட்டையை வேகமாக ஒரு உதறு உதறி அணிந்து கொண்டான். சட்டையின் சூடு வெற்று மார்பில் பரவியது அவனுக்கு சுகமாக இருந்தது. விசில் அடித்தவாறே ஜீன்ஸின் மேல் பெல்ட்டை இறுக்கினான். பாடி ஸ்ப்ரேயை புஸ்ஸென அடித்துக்கொண்டான். ஓரக்கண்ணால் பால்கனியில் நின்றவாறு தெருவைப் பார்த்துக்கொண்டிருந்த தங்கையை பாசத்துடன் நோக்கினான். செந்தாமரையின் பின்னழகும் முன்னழகுக்கு எந்தவிதத்திலும் குறைந்ததாக இல்லை. 'என் தங்கைக்கு என்ன குறை... நிஜமாவே பளீச்சுன்னு பாக்கற கண்ணுக்கு அழகா நிறைவாத்தான் இருக்கா....' கல்யாணத்தின் மனதில் சட்டென இந்த எண்ணம் நீர்க்குமிழியாக எழுந்தது. எழுந்த அதே வேகத்தில் வெடித்து அடங்கியது. சை... இன்னைக்கு ஏன் இப்படி என் மனசு எதை எதையோ நினைக்குது... ஒரு இடத்துல நிக்காம அலையுது.. இவ ஏன் இந்த அளவுக்கு டைட்டான ஜீன்ஸையும், ஸ்லீவ்லெஸ் டாப்ஸும் போட்டுக்கிட்டு வெளியிலே கிளம்பறா... உடம்பு மொத்தம் வெளிச்சம் போடுதே... ரோட்டுல போறவன் வர்றவன்ல்லாம் இவளை நின்னு ஒருதரம் பாக்காம போகமாட்டானுங்களே? இது நாள் வரை செந்தாமரை அவன் கண்களுக்கு அன்பு தங்கை, ஆசைத் தங்கை செந்தாமரையாகத்தான் தெரிந்து கொண்டு இருந்தாள். தன் தங்கையை வயது வந்த அழகான ஒரு இளம் பெண்ணாக அவன் எப்போதும் நினைத்துப் பார்த்ததேயில்லை. அந்த எண்ணம் மனதில் வந்ததும் சட்டென மனதில் ஒரு வருத்தமும் வந்தது. என்னடீ இது இதெல்லாம் ஒரு ட்ரஸ்ஸான்னு அம்மா இவளை கேக்கறதேயில்லையா? செந்தாமரை ஏற்கனவே நாலு வருஷம் ஹாஸ்டல்ல இருந்திருக்கா... இப்ப எம்.ஈ. முதல் வருஷம் படிக்கறா... தேன்மொழி மாதிரி இவளும் ஒரு வயசு பொண்ணுதானே... பத்தாக்குறைக்கு இவ்வள அழகா வேற இருக்காளே... வெட்டிப்பய எவனாவது இவகிட்ட இதுவரைக்கும் ப்ரப்போஸ் பண்ணாமலா இருந்திருப்பான்... எங்களுக்குன்னு மனசுல ஆசைகள் இருக்கு.... பெண்களோட இந்த விருப்பத்தை யார் மதிக்கறதுன்னு வேற காலையிலே பேசினாளே? செந்தாமரைக்கும் பாய் ஃப்ரெண்ட்டோ... இல்லே யாராவது லவ்வரோ இருக்கலாமோ? நியாயமாப் பாத்தா வயசுக்கு வந்து அழகா பூத்து குலுங்கிக்கிட்டு இருக்கற என் தங்கைக்குத்தானே முதல்லே ஒரு அண்ணணா நின்னு, அவளுக்கு நான்தானே கல்யாணம் பண்ணணும்? அதைவிட்டுட்டு எனக்கு பொண்ணு பாக்க வந்திருக்கேன்... அவ மனசுல என்ன இருக்குன்னு சென்னைக்குத் திரும்பிப் போறதுக்குள்ளே கேட்டுத் தெரிஞ்சுக்கணும். என் தங்கையோட விருப்பத்துக்கு ஏத்த மாதிரி அவளுக்கு கல்யாணம் பண்ணி வெக்கணும். நிதானமாக தலையை வாரிக்கொண்டிருந்த கல்யாணத்தின் மனசு நிலையில்லாமல் அலைந்தது. "என்னடா நீ... பொம்பளைங்க நாங்களே சட்டுன்னு ரெடியாகி கிளம்பிடறோம்... என்னமோ உன் லவ்வரை பாக்கப்போற மாதிரி டிப் டாப்பா ட்ரஸ் பண்ணிக்கிட்டு கிளம்பறே?" "ஏன் அவளை நான் போய் பாக்கக் கூடாதா?" "அவ இந்த ஊர்ல இருந்தாத்தானே?" "செந்தூ... என்னப்பா?" கல்யாணத்தின் முகம் வாடியது. "தேனுவை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேங்கறே... அவ என் ஆளுங்கறே.. இன்னைக்கு விடிகாலம் அவ சென்னைக்கு கிளம்பி போயிருப்பா... இது உனக்குத் தெரியாதா?" செந்தாமரை தன் கண்களை சிமிட்டினாள். "நிஜம்மா தெரியாதும்ம்மா..." தேன்மொழி நேத்து ராத்திரி எங்கிட்ட பேசினப்ப இதைப்பத்தி சொல்லலையே... கல்யாணம் ஒரு வினாடி அயர்ந்து போய் நின்றான். "டேய்..... நீ என் அண்ணன்... உங்கிட்ட நான் இப்படி பேசக்கூடாது... இருந்தாலும் சொல்றேன்... ஆறுமாசம் இல்லே... ஆறு வருஷம் ஆனாலும் நீ அவளை கரெக்ட் பண்ண போறது இல்லே..." செந்தாமரை இடுப்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு ஹோவென தன் அழகுகள் குலுங்கச் சிரித்தாள். "என்னடீ சொல்றே... செந்தூ....?" "காதலிக்கறவளை அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தரம் ஐ லவ் யூன்னு கொஞ்சு கொஞ்சுன்னு கொஞ்சறனுங்க பசங்க... நீயும் இருக்கியே ஒரு மக்கு மடசாம்பிராணி... இப்படி உன்னை மாதிரி இருந்தா எவ உன் பின்னாடி வருவா..." "என்ன என்னடீ பண்ண சொல்றே... காலையில கூட தேனுக்கு குட்மார்னிங்ன்னு மெசேஜ் அனுப்பினேன்... இதுவரைக்கும் பதிலே இல்லை..." குழந்தையாக சிணுங்கினான் கல்யாணம். "ஒரு தரம் அனுப்பினா பத்தாது... நாலு தரம் அனுப்பணும்... இதுக்குள்ள அவளுக்கு நீ எட்டு தரம் ஐ லவ் யூன்னு உன் மனசுல இருக்கற காதலை சொல்லியிருக்கணும்... அவ யெஸ்ன்னு சொல்ற வரைக்கும் விடாதடா... இதையெல்லாம் உனக்கு நான் சொல்லிக் குடுக்க வேண்டியதா இருக்கு..." தன் தலையில் அடித்துக் கொண்டாள் அவள். கல்யாணம் தன் செல்லை எடுத்தான். அதேநேரத்தில் செந்தாமரையின் செல் சிணுங்கியது. செல் சிணுங்கியதும் செந்தாமரையின் முகம் தாமரையாக மலர்ந்தது. விருட்டென கல்யாணத்தை விட்டு நகர்ந்தாள் அவள். பால்கனியில் சற்று தள்ளி நின்று முகம் முழுவதும் சிரிப்புடன் தன் அண்ணன் இருப்பதையே மறந்து யாரிடமோ கொஞ்சி கொஞ்சிப் பேசினாள். வெட்கமானாள். முகம் சிவந்தாள். பேசிமுடித்ததும் திரும்பி வந்தாள். அவன் நிற்பதைக்கூட கவனியாமல் விடுவிடுவென மாடிப்படியில் இறங்கி ஓடும் தங்கையை பார்த்தவாறு தன் வாயைப் பிளந்துகொண்டு நின்றிருந்தான் கல்யாணம். "அம்மா... நான் இன்னைக்கு லஞ்ச் என் ஃப்ரெண்டு மஹியோட சாப்பிடப்போறேன்... எனக்காக நீ வெய்ட் பண்ணாதே... ஈவினிங் நாலு மணிக்குத்தான் திரும்பி வருவேன்... தெரு வெராண்டாவிலிருந்தே கத்தினாள். பதிலுக்கு காத்திராமல் தெருவில் இறங்கி நின்றாள். "போகலாமா கல்யாணம்...?" தெருவில் நின்றவாறே கல்யாணத்தை திரும்பிப் பார்த்து மென்மையாக புன்னகைத்தாள். "தேங்க் யூ டா அண்ணா..." முகம் மலர சிரித்தாள் செந்தாமரை. ரயில்வே ஸ்டேஷனை அடையும் வரை அண்ணணும் தங்கையும் மவுனமாக பயணித்தார்கள். "எதுக்குமா தேங்க்ஸ்ல்ல்ல்ல்ல்லாம்..." வார்த்தையை இழுத்த கல்யாணம் பைக்கிலிருந்து இறங்கினான். பைக்கை ஸ்டேண்ட் போட்டு நிறுத்தினான். தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து பர்ஸை எடுத்து ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை உருவி செந்தாமரையிடம் நீட்டினான். "எதுக்குடா இப்ப நீ எனக்கு பணம் குடுக்கறே..." விழிகளில் வியப்பு ஏறியது அவளுக்கு. "உன் ஃப்ரெண்டோட லஞ்சுக்கு போறே... உன் அண்ணன் நான் கை நிறைய சம்பாதிக்கறேன்... இந்த ஒரு வருஷத்துல எங்கிட்ட நீயா எதுவுமே கேட்டதில்லே... இன்னைக்கு என் ஸிஸ்டரோட செலவுக்கு நான் ஆசையா குடுக்கக்கூடாதா..?" "தேங்க் யூ டா அண்ணா... தேங்க் யூ... அயாம் ரியலி ஹேப்பி... " செந்தாமரை சட்டென கல்யாணத்தை நெருங்கி அவன் கன்னத்தில் இலேசாக கண் கலங்க முத்தமிட்டாள். கல்யாணத்துக்கு நெஞ்சு நிறைந்து போனது. எதுவும் பேசாமல் நின்றிருந்தான் அவன். "போதுமா.. இல்லை இன்னும் வேணுமாம்மா...?" கல்யாணத்தின் குரலில் கனிவு கரைக்கடங்காத வெள்ளமாக புரண்டு ஓடியது. "ம்ம்ம்... என் ஃப்ரெண்டுக்கு இன்னைக்கு பர்த் டே... சரி இன்னோரு ஆயிரம் கொடேன்... அவளுக்கு கிஃப்ட் ஒண்ணு வாங்கிக்குடுக்கறேன்..." தங்கையின் தாமரை விழிகள் நீளமாக விரிந்தன. "நோ... பிராப்ளம்... டேக் இட்... இன்னொரு ஆயிரம் ரூபாய் தாளை தயங்காமல் எடுத்து நீட்டினான் கல்யாணம். "சரிடா...என் ஃப்ரெண்ட் திருச்சி பாசஞ்சர்லதான் வருவா... வண்டி வர பத்து நிமிஷத்துக்கு மேல இருக்கு... நீ வேணா கிளம்பறதுன்னா கிளம்பேன்..." மெல்லிய காற்றில் நெற்றியில் புரண்டு வந்து நெற்றியில் வந்து விழுந்த முடியை தனது மெல்லிய விரல்களால் தன் வலது காதுகளுக்குப்பின் தள்ளினாள் செந்தாமாரை. அவள் கண்கள் ஸ்டேஷனுக்கு இடம் வலம் அலைந்து கொண்டிருந்தது. "என்னை தொரத்தறியாடீ... உன் ஃப்ரெண்டை எனக்கு இன்ட்ரொட்யூஸ் பண்ண மாட்டியா நீ? அவ பேரு என்ன?" கல்யாணம் கேலியாக சிரித்தான். தன் கீழுதட்டை மெல்லக் கடித்த செந்தாமரை சில வினாடிகள் மவுனமாக எதிரிலிருந்து புளியமரத்தை பார்த்துக்கொண்டிருந்தாள். "ஓக்கே... உனக்கு விருப்பமில்லேன்னா நான் கிளம்பறேன்..." என் செந்து பொய் சொல்றா. கால் வந்தப்ப இவ முகத்துல நான் பாத்த வெக்கம் பொய்யில்லையே... என் ஃப்ரெண்டு வருவாங்கறா... என் தங்கை தயங்காம என்கிட்டே பொய் பேசறாளே? ஒரு பொண்ணு பொய் பேச ஆரம்பிச்சிட்டா அவளுங்களை அடிச்சுக்க இன்னொரு பொண்ணுதான் வரணும் போலருக்கே... "நோ.. நோ... அப்டீல்லாம் இல்லே.... நீ இருக்கறதுன்னா இரு... ஷி வில் பி ஹேப்பி டு மீட் யூ..." செந்தாமரை தன் உதடுகளை அழகாக குவித்தாள். கண்களில் பட்டாம் பூச்சி சிறகடித்தது. இப்போது சிறிய பதட்டம் கலந்த புன்னகையொன்று உதடுகளில் பிறந்தது. "இட்ஸ் ஆல் ரைட் செந்தூ... எஞ்சாய்..." கல்யாணம் பைக்கை உதைத்து கிளப்பினான். ஸ்டேஷனின் செம்மண் ரோட்டை விட்டு வெளியில் வந்தான். தார் ரோட்டில் ஏறி வலது பக்கத்து சந்து வழியாக நுழைந்து ஸ்டேஷனை சுற்றிக்கொண்டு திரும்பவும் எதிர்புற சந்தின் வழியாக ஸ்டேஷனுக்கு மறுபுறம் வந்தான். பைக்கை மரத்தடியில் நிறுத்திவிட்டு கடையில் ஒரு சிகரெட்டை வாங்கிக்கொளுத்திக் கொண்டான் கல்யாணம். செந்தாமரை நிச்சயமா பொய் சொல்றா. வரப்போறது அவளோட பாய் பிரண்டாத்தான் இருக்கணும். அவ பதட்டம் பொய் இல்லை. அவளுக்கு கால் வந்ததும் அவ ஓடின ஓட்டம்... அவ உடம்புல வந்த பரபரப்பு... அவ முகத்துல வந்த வெட்கம்... மகிழ்ச்சி இதெல்லாம் பொய் இல்லையே... தன்னோட லவ்வரை பாக்கப்போற பொண்ணாலத்தான் இப்படில்லாம் இருக்க முடியும்... கல்யாணம் புகையை நீள்மாக இழுத்தான். ஊருக்கு வந்தபின் அவன் புகைக்கும் முதல் சிகரெட் அது. புகையை ஆனந்தமாக உள்ளுக்கு இழுத்து வெளியில் ஊதினான். சற்றே பின்னால் நகர்ந்து எதிர்புறம் தன் பார்வையை ஓட்டினான். செந்தாமரை முதலில் இருந்த இடத்திலிருந்து சற்று தள்ளி மேலும் கீழுமாக நடந்து கொண்டிருந்தாள். 'கல்யாணம் நீ பண்றது தப்புடா.. உன் தங்கையை நீ வேவு பாக்கறியா?' "வேவு பாக்கலை... செல்லுல கால் வந்ததும் என் தங்கை முகத்துல தோன்றின மகிழ்ச்சி இருக்கே அது காதல் வசப்பட்ட ஒரு பென்ணோட முகத்துலத்தான் வரும்... வரப்போற அவளோட ஃப்ரெண்டு நிச்சயமா ஒரு பெண்ணா இருக்க முடியாதுன்னு... என் சந்தேகத்தை நிச்சயம் பண்ணிக்கத்தான் இங்கே நிக்கறேன்." "ஓக்கே... வர்றது ஒரு ஆணா இருந்தா என்னப் பண்ணப்போறே?" "ம்ம்ம்... என்ன பண்ணுவேன்... நிச்சயமா அவங்களை தொந்தரவு பண்ணமாட்டேன்...? என் தங்கையாவது அவ மனசுக்கு பிடிச்சவனோட சந்தோஷமா இருக்கட்டும்ன்னு வாழ்த்துவேன்..." "கல்யாணம் நீ ஒரு ஜென்டில்மேன்டா..." காமாட்சியும் ரமணியும் காவல் நிலையத்தை அடையும் முன்னரே, கம்பெனி லாயர்களில் ஒருவரான பார்த்தசாரதி தன்னுடைய உதவியாளருடன் நல்லத்தம்பியின் எதிரில் அமர்ந்திருந்தார். அவர்களுடன் எந்த சம்பந்தமும் இல்லாதது போல், உடன் வந்த இன்னோரு காரில், எதற்கும் துணிந்த வாட்டசாட்டமான நாலைந்து பேர், முகத்தில் கீறல்கள், தழும்புகள், கோணல் சிரிப்பு சகிதம், அசாதாரண களையுடன், வாயிலிருந்து கிளம்பும் சிகரெட் புகையுடன், சாலையில் போவோர் வருவோர்களை வெறித்தபடி போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரில் சோம்போறித்தனமாக உட்கார்ந்திருந்தனர். பாம்பின் கால் பாம்பறியும். வக்கீல்களுடன் வந்திருப்பவர்கள் யார் என்பதும், அவர்கள் யாருடைய கேங்கை சேர்ந்தவர்கள் என்பதும், யாருடைய பாதுகாப்புக்காக அவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதும் ஸ்டேஷன் காம்பவுண்டுக்குள்ளிருந்த சின்னசாமிக்குத் தெரியாமலில்லை. வந்தவர்களும் சின்னசாமியை இனம் கண்டுகொண்ட பின்னும் அவனை பார்க்காதது போல் அவனுடைய ஒவ்வொரு அசைவையும் கவனமாக நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார்கள். தன் மச்சான் கோவிந்தும், காசியும் போதையில் தவறான, பார்ட்டியை உரசிவிட்டார்கள். உரசப்பட்ட பார்ட்டியும் எதையும் யாரையும் சமாளிக்கக்கூடியதென்பது சின்னசாமிக்கு தெளிவாக புரிந்துவிட்டது. ஒரு பொறுக்கி இன்னொரு பொறுக்கிக்கிட்ட மோதி பல்பு வாங்கினா பரவாயில்லே. நம்மப்பசங்க போயும் போயும் ஒரு சின்னப்பயகிட்ட, அதுவும் ஊர் பேரு தெரியாத ஒருத்தன்கிட்ட அநியாயத்துக்கு ஒதை தின்னுட்டு வந்திருக்கானுங்களே. அதை நினைச்சாத்தான் எனக்கு அடிவயித்துலேருந்து பத்திக்கிட்டு வர்ருது. மனதுக்குள் அங்கலாய்த்துக்கொண்டான் சின்னசாமி. ஒத்தையில நின்னு நம்மப் பசங்களை அடிச்சி துவைச்சி குமுக்கி பெண்டு எடுத்ததோட விடாம, புது பைக்கோட ஹெட்லைட், பெட்ரோல் டாங்க்... டெய்ல் லைட் எல்லாத்தையும் ஒடைச்சு நாசமாக்கிட்டானே... ரெண்டு நிமிஷத்துல லட்ச ரூபாயை பணால் ஆக்கிட்டான் ஒருத்தன் ! டோட்டலா பசங்களுக்கு நான் குடுத்திருக்கற ட்ரெய்னிங் வேஸ்ட்டா போச்சே..! கருப்பு கோட்டு வக்கீலுங்க வேற உள்ள வந்து பூந்துட்டானுங்க...! சுத்தமா ஒரு பைசா பேறாது... முடிஞ்சா இன்னைக்கே அந்த வல்லாரஓழி மூஞ்சிலே ரெண்டு பூரானையாவது நெளியவிட்டாத்தான் என் மனசுக்கு நிம்மதியா இருக்கும். டேமேஜ் ஆன பைக்குக்கு இன்ஸ்பெக்டர் மூலம் கட்டைப்பஞ்சாயத்து நடத்தி, கிடைச்சவரைக்கும் நஷ்ட ஈடு எதாவது தேத்திவிடலாம் என்ற எண்ணத்தில்தான் ஸ்டேஷனுக்கே வந்திருந்தான் சின்னசாமி. நல்லத்தம்பியின் நேர்மையைப்பற்றி அவன் கேள்விப்பட்டிருந்ததாலேயே ஏரியா எஸ்.பி., ராஜேந்திரன் மூலமாக அவருக்கு பிரெஷரும் குடுத்திருந்தான். இன்ஸ்பெக்டர் நல்லத்தம்பியோ மேலிடத்தின் தலையீட்டுக்குப் பின்னரும், கொஞ்சமும் மிரளாமல் தன்னை ஸ்டேஷனை விட்டு அடிக்காத குறையாக தெருவுக்கு துரத்திவிட்டதால், சற்று அயர்ந்து போய் அடுத்து என்ன செய்யலாம் என மனதுக்குள் திட்டம் போட்டுக்கொண்டிருந்தான். போறப்போக்கைப் பாத்தா இவனுங்க நம்ம அடி மடியிலேயே கை வெச்சி மொதலுக்கே மோசம் பண்ணிடுவானுங்கப் போலருக்கே... இவனுங்க கிட்ட கொஞ்சம் உஷாராத்தான் இருக்கணும்... செல்லை எடுத்தான். "டேய் கனகு... மன்னாரு எங்கடா?"

"தூங்கறான் தலை..." கனகு என விளிக்கப்பட்டவன் அப்போதுதான் இட்லி வடைகறி தின்றுவிட்டு, வெளுத்திருந்த தன் கன்னத்து முடிகளை நீவிக்கொண்டே, தன் பற்களை தீக்குச்சியால் குத்திக்கொண்டிருந்தான். டேபிளில் அவன் எதிரில் ஆவி பறக்கும் கண்ணாடி கிளாஸில் ஸ்ட்ராங்கான டீயில் ஆவி பறந்து கொண்டிருந்தது. "இன்னுமாடா தூங்கறான்... பொழுது விடிஞ்சு மணி பத்தாவுது?" "ராத்திரி ரம்மியிலே எட்டாயிரம் லாஸாம் அவனுக்கு... மூச்சைப்புடிச்சிக்கிட்டு ங்க்கோத்தா ங்கொம்மான்னு கூவிகிட்டிருந்தான்... இப்பத்தான் ஒரு குவார்டர் அடிச்சுட்டு சுருண்டுகினான்." "மூஞ்சியிலே தண்ணி அடிச்சி உலுக்கி எழுப்புடா அவனை... தெளுவா இருக்கற ரெண்டு பசங்களை இட்டுக்கோ... கருவண்டு இருப்பான் பாரு... அவன் கூடவே ஒல்லியா குச்சியா ஒருத்தன் சுத்திக்கிட்டு இருப்பானே... பொட்டலம் போடறவன்... அவனையும் கூப்டுக்கோ... மறக்காம டிக்கிலே சாமானுங்களை அள்ளிப்போட்டுக்கினு சுருக்க ஸ்டேஷனாண்ட வந்து சேருங்கடா...?" 'தலை.. மேட்டரு என்னாப்பா... ராத்ரிலேருந்தே ஒரே ஒதறலா இருக்கே? ஸ்டேஷனுக்கு எதுத்தாப்லே எதுக்கு யார்கூடவும் ரப்ச்சரு...?" "ங்கோத்தா.. டேய் கனகு... வண்டியை ஓட்டறது உன் வேலை... சூத்தைப் பொத்திகிட்டு வந்து சேருடா மயிரு..." "மன்னாரை அவன் பொருளோட வரச்சொல்லுடா... சின்னப்பய ஒர்த்தனை தொரத்தி அவன் மூஞ்சிலே பூரான் வுட்ற வேலை ஒண்ணு இருக்கு..." இப்பல்லாம் கிட்ட வாடா நாயேன்னு சொன்னா எட்டி என் மூஞ்சை நக்கறதே கனகுக்கு வேலையாப் போச்சு... ரோட்டுல எச்சை டீக்கு அலைஞ்சிக்கிட்டு, பிளாட்பாரத்துல பிச்சை எடுத்துக்கிட்டு இருந்தவனுக்கு கார் ஓட்டக் கத்துக்குடுத்து லைசென்ஸ் வாங்கிக்குடுத்தா ஸ்டேஷனுக்கு எதுத்தா மாதிரி ரப்ச்சர் வேணாம்பான்னு எனக்கே புத்தி சொல்றான்... சின்னசாமி தன் மனதுக்குள் ஒரு முடிவுக்கு வந்திருந்தான். ஐயா, கடந்த தினம், சுப்பிரமணி என்கிற நான், அலுவலக வேலை முடிந்து, மாலை ஏழு மணி அளவில், என்னுடன் பணியாற்றும் காமாட்சி என்பவருடன் அவருடைய வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத இரு நபர்கள், காரணமேயில்லாமல், மோட்டர் சைக்கிளால் எங்களை உரசி வம்புக்கு இழுத்தார்கள். எனது தோழி காமாட்சியையும், என்னையும் தரக்குறைவான, கண்ணியமற்ற வார்த்தைகளால் அவர்கள் திட்டி, அருவருப்பான சைகைகளை காட்டி எங்களை கிண்டலடித்தார்கள். அவர்கள் செய்கின்ற காரியம் தவறு என நான் பொறுமையுடன் சொல்லியபோதிலும், திரும்ப திரும்ப என்னுடன் வந்த அலுவலகத்தோழியை சமூகம் அங்கீரிக்காத சொற்களால், அவருடைய பெண்மைக்கு பங்கம் ஏற்படும், எந்தக் குடும்பப் பெண்ணாலும் சகித்துக் கொள்ளவே முடியாத வார்த்தைகளால் பேசி மனஉளைச்சலுக்கு உள்ளாக்கினார்கள். ஒரு பொறுப்பான ஆண்மகனாக, அவர்கள் செய்வது தவறு என மீண்டும் அவர்களிடம் சொல்லிய போது, என்னை ஆண்மையில்லாதவன் என கேலி செய்து, எனது தோழி காமாட்சியை தங்களுடன் அனுப்புமாறு அசிங்கமாக கெக்கலித்தார்கள். நானும், எனது தோழியும், எங்களிடம் வீணாக, எந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல், வம்பு செய்தவர்களை விட்டு, விலகி விலகி சென்ற போதிலும் அவர்கள் எங்களைத் தொடர்ந்து வந்து, என்னுடன் வந்த சகபெண் பணியாளரின், என்னுடைய மதிப்பிற்குரிய தோழியின், சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருக்கும் பெண்மணியை, நான் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கும் பெண்ணின் புடவையை இழுத்து அவருடைய இடுப்பை தொட முயற்சி செய்தார்கள். மேற்சொன்னவர்களின் இது போன்ற அநாகரீகமான செயல்களை, சமூகப்பொறுப்புடன் இந்த நாட்டில் வசிக்கும் எந்த குடிமகனாலும், பொறுத்துக்கொள்ள முடியாது. ஆனால் நடந்தது அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த பொது மக்களில் எவரும் எங்கள் உதவிக்கு வர தயாராக இல்லாத நிலையில் அந்த ரவுடிகளின், குண்டர்களின், முறையற்ற, நியாயமற்ற செயல்களை உடனடியாக நான் தடுக்க முனைந்த போது, ஒற்றை ஆளாக எந்தவித உதவியில்லாமல் தனியனாக இருந்த என்னை அவர்கள் இருவரும், இரக்கமில்லாமல் தாக்கினார்கள். என்னுடன் வந்த பெண்மணியின் பெண்மையையும், கண்ணியத்தையும், நற்பெயரையும், மானத்தையும், காக்கும் பொருட்டும், என்னுடை சுய பாதுகாப்புகாகவும், என்னுடைய வெற்று கைகளால் அவர்கள் தாக்குதலை நான் தைரியமாக சமாளிக்க முயன்றேன். என்னுடைய நியாயமான முயற்சியை எதிர்த்து, அவர்கள் என்னை மேலும் மூர்க்கமாக தாக்கினார்கள். மேற்சொன்ன அயோக்கியர்களின் தாக்குதலினால் என் உடல் முழுவதிலும் ஊமைக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. என்னை அவர்கள் தாக்கியபோது அவர்கள் குடிபோதையில் இருந்திருக்கலாம் எனவும் நான் யூகிக்கிறேன். வெகு மூர்க்கமாக இருந்த அவர்கள் இரும்பாலான ஏதோ ஒரு ஆயுதத்தால் என்னைத் தாக்கி என் நெற்றியில் காயத்தை உண்டாக்கினார்கள். என் உயிருக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்ற நோக்கிலும், என் நெற்றியில் உண்டான காயத்திலிருந்து வெளியேறிய ரத்தப்போக்கினை உடனடியாக தடுத்து நிறுத்தும் நோக்கத்திலும் என் தோழி உடனடியாக என்னை ஒரு மூன்று சக்கர வாகனத்தின் மூலமாக தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றார். என் தோழி வசிக்கும் தெருவிலிருக்கும் மருத்துவர் எனக்கு செய்த உடனடி முதலுதவி மற்றும் முறையான ஊசி மருந்து, மாத்திரைகளாலும் எனது உடல்நிலை சற்றே தேறியுள்ள போதிலும் எனது உடலில் இருக்கும் வலி முற்றிலும் குறைந்தபாடில்லை. நடந்த சம்பவங்களால், மனவேதனைக்கும், உளைச்சலுக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாயிருந்த போதிலும், இரவு முழுவதும் தூங்கமால் என்னருகில் விழித்திருந்த எனது தோழியின் கனிவான கண்காணிப்பாலும், அவருடைய தாயாரின் அன்பான உபசரிப்பாலும், இப்போது என்னால் தங்கள் முன் வந்து இந்த புகாரை அளிக்க முடிகிறது. நேற்று எனக்கு நட்ட நடு சாலையில், சமுதாயப்பொறுப்பற்ற இரு சமூக விரோதிகளால் எனக்கு ஏற்படுத்தப்பட்ட காயங்கள், அதற்காக எனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளின் விவரங்கள், எனது மருத்துவரால் கொடுக்கப்பட்டுள்ள இந்த சான்றிதழில் விவரமாக உள்ளன. மேலும் நாங்கள் பயணம் செய்த மூன்று சக்கர வாகனத்தின் பதிவு எண்ணையும் அந்த வாகனத்தின் ஓட்டுனரின் பெயரையும் புகாருடன் இணைத்துள்ளேன். . நடந்த சம்பவத்தின் போது நான் அணிந்திருந்த, கைகலப்பில் கிழிந்து போன, ரத்தம் தோய்ந்த சட்டை மற்றும் எனது பேண்ட், வீட்டுக்கு செல்லும் வழியில் என்னை தன் மடியில் ஆதரவாக படுக்கவைத்து அழைத்து சென்றக்காரணத்தால், ரத்தம் படிந்த எனது தோழியின் புடவை மற்ற ஆடைகளையும் தங்களுடைய பார்வைக்கு நான் இத்துடன் சமர்ப்பிக்கிறேன். இந்த விரும்பத்தகாத நிகழ்ச்சியின் போது எனது செல்போன் சம்பவம் நடந்த இடத்தில் என் சட்டைப் பாக்கெட்டிலிருந்து நழுவி விழுந்திருக்கிறது. நேற்று எனக்கு ஏற்பட்ட காயத்திற்குபின் ஏறக்குறைய முழு இரவும் நான் அரை மயக்கத்திலேயே இருந்ததால், இன்று காலையே என் செல் போனை நான் தவறவிட்டுவிட்டதை உணர்ந்தேன். மேற்கண்ட போன் தங்கள் பாதுகாப்பில் இருப்பதாகவும் அறிகிறேன். இந்த விவரங்களை அடிப்படையாக கொண்டு மேற்சொல்லப்பட்ட அந்த சமூக விரோதிகளை தாங்கள் தேடிக்கண்டுபிடித்து அவர்களுக்கு எதிராக முறையான நடவடிக்கை எடுக்க தங்களை தாழ்மையுடன் நான் கேட்டுக்கொள்கிறேன். இங்கனம் தங்கள் உண்மையுள்ள சுப்பிரமணி

பார்த்தசாரதியின் உதவியாளர் தன் லேப்டாப்பில் ஐந்தே நிமிடங்களில் தயாரித்த புகாரில் கண்ணை மூடிக்கொண்டு கையொப்பமிட்டான் ரமணி. இன்ஸ்பெக்டர் அளவிலேயே, ஸ்டேஷனிலேயே கேஸை மூடி விடுவதற்கான வேலை ஏற்கனவே முடிந்துவிட்டக்காரணத்தால் அதிகமாக எதுவும் பேசவேண்டாமெனவும், கேட்டக்கேள்விக்கு மட்டும் பதில் ஆம் இல்லை என பதில் சொல்லினால் போதும் எனவும் அவன் அறிவுறுத்தப்பட்டான்.

No comments:

Post a Comment