Pages

Thursday, 5 September 2019

பெண்ணின் அந்தரங்க உறுப்பு.....


குழந்தை பிறப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே அது பெண்ணாக இருக்கிற பட்சத்தில் பிறப்புறுப்பு முழு உருவம் பெறுகிறதாம். கருத்தரித்த பத்தாவது வாரத்தில், குழந்தை ஆணா, பெண்ணா என்பது தீர்மானமாகி, ஆணாக இருக்கிற பட்சத்தில் ஆணுறுப்பும், பெண் என்றால் பிறப்புறுப்பும் வளர ஆரம்பிக்குமாம்
முதல் முறை செக்ஸ் உறவின் போது பிறப்புறுப்பில் உள்ள கன்னித்திரை கிழிய வேண்டுமா, இரத்தப் போக்கு கட்டாயமா என்பது பலருக்கும் மண்டையைக் குடைகிற கேள்வி. பெண்ணின் நடத்தையை சந்தேகிக்க வைக்கிற அளவுக்கு இது தீவிரமானதாகவும் இருக்கிறது. செக்ஸ் உறவின் மூலம் மட்டும்தான் இந்தக் கன்னித்திரை கிழிய வேண்டும் என்பதில்லை. விளையாட்டு, நடனம், நீச்சல், உடற்பயிற்சி எனப் பல விஷயங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம். அபூர்வமாக சில பெண்கள் இந்த கன்னித்திரை இல்லாமல் பிறப்பதும் உண்டு. இன்னும் சிலருக்கு அந்த சவ்வு மிகவும் தடித்திருக்கும். திருமணத்துக்கு முன்பு அறுவை மூலம் அது அகற்றப்பட்டால் தான் அவர்களால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியும்.

பிறப்புறுப்புக் கசிவு என்பது சகஜமான விஷயம். செக்ஸ் உறவின் போது இந்தக் கசிவு இருக்கும். சில பெண்களுக்கு இந்த அளவு அதிக மாகவும், சிலருக்குக் குறைவாகவும் இருக்கும். இரண்டுமே சாதாரணமானவைதான்.


பிறப்புறுப்பு என்பது அறுவறுப்பான, அசிங்கமான உறுப்பு என்கிற அபிப்ராயம் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஒவ்வொரு பெண்ணின் பிறப்புறுப்பிலும் சுமார் பதினைந்து விதமான பாக்டீரியா கிருமிகள் குடியிருக்குமாம். அத்தனையும் நல்ல பாக்டீரியா. அதனால் கெட்ட கிருமிகள் அத்தனை லேசில் அங்கே நுழைய முடியாதாம்.


உடலின் மற்ற பகுதிகளைப் போலவே பிறப்புறுப்புக்கும் காற்றோட்டம் அவசியம். அப்போதுதான் அந்தப் பகுதி சுவாசிக்க முடியுமாம். அதற்கு இடம் கொடுக்காமல் எப்போதும் இறுக்கமான உள்ளாடை மற்றும் ஜீன்ஸ் அணிகிறவர்களுக்கு அடிக்கடி பிறப்புறுப்புத் தொற்று வர வாய்ப்புண்டாம்.


பல பெண்களையும் தர்ம சங் கடத்துக்கு உள்ளாக்கும் விஷயம் அந்தரங்க உறுப்பில் உண்டாகும் அரிப்பு. அந்த இடத்தின் வறட்சி, இறுக்கமான உடை போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம். அரிப்பு ஒரு நாளைக் கடந்து தொடர்ந்தாலோ, பிறப்புறுப்பின் உள்ளே அரிப்பிருந்தாலோ, அது ஈஸ்ட் தொற்றாகவோ, பால்வினை நோயின் அறிகுறியாகவோ இருக்கக் கூடும்.

மாதம் ஒரு முறை மார்பக சுய பரிசோதனை வலியுறுத்தப்படுகிற மாதிரியே, பிறப்புறுப்பு சுய பரிசோதனையும் அவசியம். அந்த இடத்தில் காணப்படுகிற சிறிய கொப்புளங்கள், பருக்கள் போன்றவை அலட்சியப்படுத்தப்படலாம். ஆனால் வேறு ஏதேனும் வித்தி யாசங்களை உணர்கிற பட்சத்தில் அது உடனடியாக மருத்துவப் பரி சோதனைக்குட்படுத்தப் பட வேண்டும்.
ஒரு பென்சில் நுழையக் கூடிய அளவே உள்ள பிறப்புறுப்பானது, பிரசவத்தின் போது ஒரு குழந்தையையே வெளியேற்றும் அளவுக்குப் பன்மடங்கு பெரிதாக விரிந்து கொடுக்கும். அதற்காகக் கவலை வேண்டாம். குழந்தை பிறந்த ஆறு மாதங்களில் அது மீண்டும் அதன் பழைய அளவுக்கே சுருங்கி விடும்.
பிறப்புறுப்பிலிருந்து வாடை வீசுவது ரொம்பவே சாதாரணமான விஷயம். அந்த உறுப்பு ஆரோக்கியமாக இயங்குகிறது என்பதற்கான அடையாளங்களில் அதுவும் ஒன்று. இது தவிர நீங்கள் உட்கொள்கிற உணவின் தன்மை, அதாவது மசாலா, பூண்டு மாதிரியான உணவுகள், மாத விலக்கு சுழற்சியின் தன்மை, செக்ஸ் உறவுக்குப் பிறகான சுத்தம் போன்றவற்றைப் பொறுத்து அந்த வாடை அதிகரிக்கலாம்.
பிறப்புறுப்பிலிருந்து வீசும் துர்வாடையை மறைக்கப் பல பெண்கள் அங்கே சென்ட் உபயோகிப்பதுண்டு. சென்ட், வாசனை சோப், டிஷ்யூ மாதிரியானவை அந்தப் பகுதியை பாதிக்கும். வெறும் தண்ணீரும், மிதமான சோப்பும் மட்டுமே பிறப்புறுப்பு சுத்தத்துக்குப் போதும்.
குழந்தை பிறந்த பிறகு பிறப்புறுப்பின் இறுக்கம் தளர்ந்துவிட்டதாகவும்,அதன் விளைவாக தம்பதியருக்கிடையேயான நெருக்கம் குறைந்து விட்டதாகவும் பல பெண்கள் புலம்புவதுண்டு, கெகெல் எனப்படும்பிரத்யேகப் பயிற்சியின் மூலம் அந்த இடத்தை மீண்டும் டைட்டாக்கலாம். சிறுநீர் கழிக்கிற போது அதைப் பாதியிலேயே அடக்கிக் கொள்கிற மாதிரியான பயிற்சிதான் இது. மருத்துவரின் ஆலோச னையின் பேரில் சரியாகச் செய்கிற பட்சத்தில் கட்டாயம் பலனளிக்குமாம்.
சினைமுட்டை சினைக்கிற காலக் கட்டத்தில் பெண்களுக்கு அந்தரங்க உறுப்பின் கசிவு சற்றே அதிகமாக இருக்கும். அதாவது ஒன்று முதல் இரண்டு டீஸ்பூன் வரை இருக்கும். இறந்த செல்களின் வெளியேற்றம்தான் இந்தக் கசிவு. மற்ற நாட்களில் இந்தக் கசிவு ஒரு நாளைக்கு அரை டீஸ்பூன் அளவாகக் குறைந்து விடும்.
அபூர்வமாக சில பெண்களுக்கு பிறப்புறுப்பின் வழியே ஏதேனும் பொருட்கள் உள்ளே சென்று விடக் கூடும். அது கர்ப்பப்பையில் சென்று மிதக்காது. வெறுமனே விரல்களை விட்டு அதை எடுக்க முடியுமா எனப்பார்க்க வேண்டும். அது முடியாத பட்சத்தில் மருத்துவரை அணுகுவதே பாதுகாப்பானது.
ஐயாயிரத்தில் ஒரு பெண் குழந்தை வீதம் பிறப்புறுப்பும், கர்ப்பப்பையும் இல்லாமல் பிறப்பதுண்டு. ஆனாலும் செயற்கையாக பிறப்புறுப்பை வைக்கிற அளவுக்கு இன்றைய நவீன மருத்துவத்தில் வசதிகள் பெருகிவிட்டதால் கவலை வேண்டாம். குழந்தை பெற வாய்ப்பில்லாமல் போனாலும், அவர்களது செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படாமலிருக்க இப்படிப்பட்ட சிகிச்சைகள் வரப்பிரசாதம்.


பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது.

அதனைபயன்படுத்துகின்ற மனிதனின் மனம்தான் குற்றமுடையதாக இருக்கின்றது. காரணம்? பாலுணர்வை பற்றிய அறியாமைதான். நாம்பாலுணர்வை முறையான உறவில்பயன்படுத்துகின்றபோது ஆரோக்கிய மானதாகிவிடும். முறையற்ற உறவில் பயன்படுத்துகின்ற போதுதான் ஆரோக்கிய மற்றதாகி விடுகிறது. ஆக ஆரோக்கியமானஇல்லற வாழ்க்கை மூலம்ஆரோக்கியமான குழந்தைகள் இதனைதான் இன்றைய உலகநாடுகள் அனைத்தும் விரும்புகின்றது.

இவ்விருப்பத்தை நிறைவு செய்வதற்காகவே, நமது இந்திய மண்ணிலுள்ளமுன்னோர்கள், மனித வாழ்வியல் ரகசியங்களை, அஜந்தா எல்லோரா குகை ஓவியங்களிலும், கஜூ ராஹேh கோவில் சிற்பங்களிலும், கிருஷ்ணா புரத்து ரதிமன்மதன் சிலைகளிலும் வடித்துள்ளார்கள். அறத்துப்பால்-பொருட்பால்- காமத்துப்பால்என்கிற முப்பாலையும் உள்ளடக்கிய, உலக பொதுமறையான திருக்குறளில்கூட, மலாpனும் மெல்லிது காமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக காமம் அல்லது பாலுணர்வு என்பதனை நாம் ஆராய முயற்சித்தால், மனிதர்கள் வாழும் நில அமைப்பு,அங்கு நிலவுகின்ற தட்பவெட்ப நிலைகள் மற்றும் கடவுள்-மதம்- மதங்களிலுள்ள சாதிபிhpவுகள், இவைகளில் அடிப்படையில்தான் நாம் பாலுணர்வை வெளிப்படுத்தி வருகிறேhம் என்பது புலனாகும்.

உண்மையிலேயே, நமது உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் காம அணுக்கள்தான்.இந்த அடிப்படையில் ஆண்-பெண் எனும் இரு காம அணுக்களின் கூட்டு வடிவம்தான்மனித உடல். ஆக, மனித படைப்பின் மூலாதாரமே பாலுணர்வுதான். மனிதஉணர்வுகளிலே முதன்மையானதும் பாலுணர்வுதான். இது உலகிலுள்ள ஆண்-பெண்இருபாலருக்கும் பொருந்தும். ஆனால்மனிதசமுதாயம்இதனைவெளிப்படையாகஒப்புக்கொள்வதில்லை. இருந்தாலும், ஒவ்வொரு மனிதனும் தனது மனதிலே காம வக்கிரங்களை சுமந்து கொண்டுதான் உலவி கொண்டிருப்பார்கள். அல்லது போராடி கொண்டிருப்பார்கள். இதுதான் அறிவியல் பூர்வமான உண்மையாகும் என பலஉளவியல் அறிஞர்கள் எடுத்துரைத்துள்ளார்கள். மனித இனத்தில் ஆண்-பெண் எனஇரு பிhpவினருக்கும் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்களின்போது, இயற்கையானபாலுணர்வுகள் இயற்கையாகவே உற்றெடுக்கும்.

அந்த நேரம் அறிந்து கலவியில் ஈடுபடுவது தம்பதிகளுக்கு ஆரோக்கியமான தாகும். ஆண்-பெண் தாம்பத்ய கலவியின்போது, பெண் முழு இன்பத்தைபெற்றhல்தான், ஆணும் முழு இன்பத்தை பெற இயலும், அதற்குண்டான செயல்திறன் ஆடவனின் தன்மையை பொறுத்த தாகும். இந்த அடிப்படையில், தாம்பத்யகலவியின்போது பெண்ணுடலுக்குள் நுழைந்த ஆண், வேகமாக செயல்படுவதைதவிர்த்து, பதற்றமின்றி தனது தாது சக்தியை வெளியேற்ற நினைக்கலாம்.பெண்ணுடலுடன் இணைந்து இருக்க வேண்டும். ஆணுக்கு தாது சக்தி விரைவில்வெளியேறிவிட்டால், அவனது உடலில் கதகதப்பு (வெப்பம்) குறைந்துவிடும். ஆதலால் அவன் பெண் உடலை விட்டு வெளியேறி விடுவான.

அந்த நாளும் இனிய நாளே....

அந்த மூன்று நாட்கள் உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்று தானே மாதா மாதம் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஆனால் உங்கள் கவனக்குறைவும், அந்த நாட்களில் உங்களிடமிருந்து வீசும் வாடையும் நீங்கள் சொல்லாமலே மற்றவர்களுக்கு அந்த நாட்களைத் தெரியப்படுத்தும் என்பது தெரியுமா? கேட்கவே தர்மசங்கடமாக இருக்கிறதா? இதோ இந்த யோசனைகள் உங்களுக்குத் தான்....*

மற்ற நாட்களில் நீங்கள் எப்படியோ? ஆனால் மாதவிலக்கு நாட்களில் அதிக பட்ச சுத்தமாக இருக்க வேண்டியது மிக முக்கியம். இரண்டு வேளைக் குளியல், குறிப்பிட்ட நேரத்துக்கொரு முறை நாப்கின் மாற்றுதல் போன்றவை உங்களைப் புத்துணர்வோடு வைக்கும்.

மாதவிலக்கு நாட்களில் உபயோகிக்கிற நாப்கின்களில்தான் எத்தனை எத்தனை வகை? சிறியது, பெரியது, பக்கவாட்டில் அகலமானது, குண்டான பெண்களுக்கானது என ஏகப்பட்ட ரகங்கள்.... உங்களுடைய மாதவிலக்கு சுழற்சியையும், மாதவிலக்கின் போதான இரத்தப் போக்கின் அளவையும் பொறுத்துத் தீர்மானிக்கப்படுகிற விஷயம் இது. உதிரப் போக்கானது பெண்ணுக்குப் பெண் வேறுபடும். நாப்கின்கள் உபயோகிக்க எளிதானவை. கசக்கித் துவைத்து, காய வைக்க வேண்டிய அறுவறுப்பான வேலைகள் இல்லாதவை. எனவே உங்கள் வசதிக்கேற்ற அளவில் நல்ல நாப்கின்களை அணிவதை பூப்பெய்தும் நாள் முதலே பழக்கப் படுத்திக் கொள்ளுங்கள்.

அடுத்து டாம்பூன் எனப்படும் உறிஞ்சு குழல். இதைப் பற்றி நிறைய சர்ச்சைகள் உள்ளன. நீச்சல் மாதிரியான வேலைகளின் போதும் அணிய வசதியானது என்பதால் பல பெண்கள் டாம்பூன்களை விரும்புகின்றனர். பிறப்புறுப்பினுள் நுழைத்துக் கொள்ள வேண்டியதால், திருமணமாகாத பெண்களுக்கு இது உகந்ததல்ல என்றும் சொல்லப்படுகிறது. மற்றபடி இதை உபயோகிப்பது சிரமம் என்பதெல்லாம் சும்மா.

நாப்கினோ, டாம்பூனோ நீங்கள் எதை அணிகிறீர்கள் என்பது முக்கியமில்லை. உதிரப் போக்கு அதிகமிருக்கிறதோ, இல்லையோ, நான்கைந்து மணி நேரத்துக்கொரு முறை அவற்றை மாற்ற வேண்டியது அவசியம். இரத்தப் போக்கு இல்லாவிட்டாலும், உடலிலிருந்து வெளிப்படும் வியர்வை, கசிவு போன்றவற்றின் விளைவாக அவற்றிலிருந்து ஒருவித வாடை வீசும். உபயோகித்த நாப்கின்களை எக்காரணம் கொண்டும் கழிவறைக்குள் ப்பிளஷ் செய்யாதீர்கள்.


அடுத்து மாதவிலக்கு நாட்களின் போதான உள்ளாடை. பேண்டீஸ் அணிந்தே பழக்கமில்லாத பெண்கள்கூட மாதவிலக்கு நாட்களில் மட்டும் அணிவதுண்டு. அதுவும் மாதவிலக்கு நாட்களுக்கென்றே கிழிந்து போன, சாயம் போன, பழைய பேண்டீஸ்களை பத்திரப் படுத்தி வைக்கும் பெண்களும் உண்டு. இது மிகவும் தவறு. மாதவிலக்கு நாட்களில் அணிவதற்கென்றே, இப்போது பிரத்யேக பேண்டீஸ்கள் உள்ளன. உடைகளில் கறை படிவதையும் இவை தவிர்க்கும்.

நீங்கள் எதிர்பாராத நேரத்தில் மாதவிடாய் வந்து, உங்கள் உள்ளாடை மற்றும் உடையைக் கறைப் படுத்தி உங்களைத் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விட்டதா? எப்போதும் கைவசம் கொஞ்சம் உப்பு வைத்துக் கொள்ளுங்கள். கறை பட்ட இடத்தை உப்பும், குளிர்ந்த தண்ணீரும் கலந்து அலசிட, உடனடியாக மறையும். வீட்டுக்கு வந்த பிறகு டிடெர்ஜென்ட் போட்டு அலசிக் கொள்ளலாம்.

மாதவிலக்கின் போது உபயோகிக்கப் படுகிற உள்ளாடைகளை டெட்டால் கலந்த தண்ணீரில் அலசிக் காய வைக்க வேண்டியது முக்கியம்.

மாதவிலக்கின் போதான உடல் நாற்றம் பல பெண்களின் பிரச்சினை. அவர்களை விட அது மற்றவர்களை அதிகம் முகம் சுளிக்க வைப்பதுதான் வேடிக்கை. மாதவிலக்கின் போதான ஹார்மோன் மாற்றங்களால்தான் இப்படிப்பட்ட துர்நாற்றம் வருகிறது. கர்ப்பப் பையின் உட்புறத் திசுக்கள் இரத்தத்தோடு சேர்ந்து வெளியேறுவதன் விளைவான நாற்றம் இது.

இதைத் தவிர்க்க மாதவிடாய் நாட்களில் காட்டன் உள்ளாடையையே அணிய வேண்டும். காற்றோட்டமானதாக இருக்க வேண்டியது முக்கியம். ஒவ்வொரு முறை நாப்கின் மாற்றும் போதும் முன் பக்கத்திலிருந்து, பின் பக்கம் வரை பிறப்புறுப்பு நன்றாக சுத்தப் படுத்தப்பட வேண்டும். நாற்றத்தை மறைக்க, அதிக வாசனையுள்ள சோப் உபயோகிப்பதைத் தவிர்க்கவும். அவையெல்லாம் பிறப்புறுப்பின் மிக மென்மையான திசுக்களை அழற்சிக்குள்ளாக்கும்.

மாதவிடாய் நாட்களில் உபயோகிக்க வென்றே பெமினைன் வாஷ் கிடைக்கிறது. அதையும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உபயோகிக்கலாம்.


No comments:

Post a Comment