Pages

Saturday, 2 January 2016

விஜயசுந்தரி 95

சிம்னி விளக்குகளை பார்த்தபடியே அது தெரியும் இடம் நோக்கி ஒடிக் கொண்டிருந்தேன். என்னை துரத்தி வந்தவர்கள் அடிக்கடி குனிந்து தங்கள் முட்டிகளில் கைகளை ஊன்றி ஆசுவாசப்படுத்திக் கொண்டே என்னை துரத்தி வந்த்தால் எனக்கு வேகமாக் ஓட வேண்டிய கஸ்டம் இல்லை.

எப்படியும் இவர்களை இன்னும் பத்து நிமிடங்கள் சமாளித்தால் அவர்கள் களைப்பாகிவிடுவார்கள் நான் ஈசியாக தப்பித்துவிடலாம் என்ற கணக்கில் அந்த கிராமத்தை நோக்கி ஓடினேன்.

அருகே செல்ல செல்லதான் தெரிந்த்து. அது நான் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய கிராம்ம் இல்லை என்று , மொத்தமாக இரண்டு தெருக்கள். அதில் அதிகபட்சம் 15 வீடுகள் மட்டுமே இருந்த்து.

அதுதான் ஒட்டுமொத்த கிராம்மே என்று தெரிந்த்தும் எனக்கு கொஞ்ச்ம கவலை அதிகமானது. ஏனென்றா;ல இங்கு ஒளிந்து கொள்ள இடம் கிடைப்பதே கடினமாக் இருக்குமே என்று நினைத்துக் கொண்டு ஓடினேன்.


நல்ல வேலையாக ஒரு வீட்டின் முன் திண்ணை ஒன்று இருந்த்து. அங்கு வெளிச்சமே இல்லாத்தால் ஆட்கள் இருப்பதே தெரியாத அளவுக்கு இருந்த்து. நான் ஒடி வந்த களைப்பில் அந்த திண்ணையில் படுத்து அருகே இருந்த ஒரு பழைய போர்வையை எடுத்து என்னை முழுவதுமாக் மூடிக் கொண்டு படுத்தேன்.

சில வினாடிகளில் கபாலியின் கூட்டம் கிராமத்துக்குள் களைப்புடன் புகுந்த்து. நான் இருந்த இட்த்துக்கு நேராக வந்து நின்றவர்கள் சுற்றிலும் பார்த்தார்கள் .கபாலி தொந்தி ஆட வந்து நின்றான்.

“டேய் என்ண்டா நின்னுகிட்டு இருக்கீங்க” என்று கேட்க

“தல இது ஏதோ ஊரு இதுல அவன் எங்க போயிருக்கானு தெரியலையே” என்று ஒருவன் கூற

“ஆமா போறவன் உனக்கு அட்ரஸ் கொடுத்துட்டு போவானா, போய் ஆளுக்கொரு மூலையில தேடுங்கடா” என்று கூறா எல்ல்லோரும் ஆளுக்கொரு பக்கம் ஓடினார்கள் .எல்லோரும் சென்றதும் கபாலி மூச்சுவாங்க நான் இருந்த திண்ணையில் வந்து உட்கார்ந்தான்.

நான் மெல்ல் போர்வையை விலக்கி பார்க்க எனக்கு தூக்கிவாரி போட்ட்து. முகமெல்லாம் வியர்த்து மூச்சு வாங்க கபாலி எனக்கு மிகவும் அருகில் உட்கார்ந்திருந்தான்.

நான் போர்வையை மெல்ல ஏற்றி என் முகத்தை மூடிக் கொண்டு ஒரு துளை வழியாக் பார்த்துக் கொண்டிருக்க சற்று தூரத்தில் ஏதோ சத்தம் கேட்ட்தும் கபாலி ஆர்வமுடன் எழுந்து ஓடினான்.

நான் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டேன். இப்போது அந்த இட்த்தில் யாருமில்லை. வந்த வழியே திரும்பி ஓட்லாமா என்று நினைத்த நேரம் நான் படுத்திருந்த வீட்டின் உள்ளே இருந்து ஏதோ மெல்லிய விசும்பல் சத்தம் கேட்ட்து.

மெல்ல் ப்டுத்தபடியே அந்த திண்ணையின் ஒரு ஓரத்தில் இருந்த் ஜன்னல் வழியாக பார்த்தேன். ஒரு பெண் அதுவும் 20 வயது பெண். அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது பார்க்கும்போதே தெரிந்த்து. அதான் அவ கழுத்திலயும் கால்லயும் எதுவுமே இல்லை.

அவள் சுவற்றில் சாய்ந்து விட்ட்த்தை பார்த்து அழுது கொண்டிருந்தாள். அவள் பார்க்கும திசையில் என் பார்வையை செலுத்தினேன். அங்கே ஒரு படம் மாட்டி இருந்த்து. அதில் ஒரு கணவன் மனைவி இருந்தார்கள். சற்று வயதானவர்கள் என்பதால் அனேகமாக் இவள் அப்பாவும் அம்மாவும் தான் அவர்கள் என்று யூகித்துக் கொண்டேன்.

அவர்கள் இறந்துவிட்ட்தால் தான் இவள் அழுகிறாளோ என்று நானே நினைத்துக் கொண்டேன். அந்த வீட்டை மேலும் சுற்றி பார்த்தேன். அவளை தவிற வேறு யாரும் அங்கு இல்லை. உள்ளே பாத்திரங்களும் மிகவும் குறைவாகவே இருந்த்து. ரொம்ப ஏழை என்பது நன்றாக் தெரிந்த்து.

அவள் பார்க்க மிகவும் அழ்காக் இருந்தால் சினிமாவில் சேர்ந்தாள் கதாநாயகி வேடம் கிடைக்காவிட்டாலும் அவளுக்கு தோழி வேடம் போடும் அளவுக்கு அழகாக இருந்தாள் உட்கார்ந்திருந்த்தால் அவள் அழகு முழுவதுமாக் தெரியவில்லை

ஆனால் . மரண பயத்திலும் ஃபிகர பார்த்தா வர்ணிக்காம இருக்க முடியலயே, அதோட் இல்லாம் நாங்கெல்லாம் கொஞ்ச்ம தெரியறத வெச்சே முழுசா தெரிஞ்சிக்குவோமில்ல. அவள் அழுது கொண்டே இருந்தாள்

சட்டென்று ஏதொ நினைத்து எழுந்தாள் ஒரு ஓரத்தில் கிடந்த பழைய புடவை ஒன்றை எடுத்துக் கொண்டு எழுந்தாள். மங்கலான் விளக்கு வெளிச்சத்தில் இப்போதுதான் அவள் அழகு எனக்கு முழுவதுமாக் தெரிநதது. ஆனாலும் அவள் அழகை ரசிக்கும் எண்ணம் இல்லை.

புடவையுடன் எழுந்தவள் அருகே இருந்த ஒரு பித்தளை குடத்தை எடுத்து கவிழ்த்து போட்டாள். அதில் ஏறி மேலே இருந்த மூங்கில் கொம்பில் புடவையை கட்டினாள். அதன் மர்றொரு முனையில் சுறுக்கு போட்டாள்

.அடுத்து நடக்கபோகும் விபரீதம் என்ன்வென்று எனக்கு புரிந்துவிட அவளை காப்பாற்ற என் மனம் முடிவெடுத்து எழுந்தேன். வீட்டின் கதவை உடைக்க வேண்டி இருந்தால் அந்த சத்தம் கேட்டு வில்லங்கள் வந்துவிடுவார்களே, என்ன் செய்வது என்று யோசிப்பதற்க்குள் அந்த பெண் சுறுக்கில் தன் கழுத்தை வைத்துக் கொண்டாள்.

யோசிக்க் நேரமில்லை, தன் உயிரை கொடுத்தேனும் அடுத்தவர் உயிரை காப்பாற்றுபவன் தான் உண்மையான் மருத்துவன் என்று என் மனம் சொல்ல கதவை நோக்கி ஒடினேன். அதற்குள் உள்ளே அந்த குடம் உருளும் சத்தம் கேட்ட்து.

தாவி சென்று கதவை முட்ட கதவு உள்ளே தாழ்ப்பால் ஏதும் இல்லாமல் கிடந்த்தால் உடனே திறந்து கொண்ட்து. இதற்க்காகவா யோசித்தோம். என்று நினைத்துக் கொண்டு உள்ளே ஓடினேன். அந்த பெண் கயிற்றில் தொங்கிக் கொண்டு கால்களும் கைகளும் உதைத்துக் கொண்டிருக்க தாவி சென்று அவள் இடுப்பில் இரண்டு கைகளையும் கொடுத்து தூக்கி பிடித்தேன்.

அருகே இருந்த குட்த்தை காலால் இழுத்து அவள் அருகே வைத்துக் கொண்டு அந்த பெண்ணை குட்த்தின் மேல் நிறுத்தினேன். அவள் அறை மயக்கத்தில் சாய க்ழுத்தில் சுறுக்கி இருந்த புட்வையை அவிழ்த்து அவளை கீழெ கொண்டு வந்து படுக்க வைத்தேன்.

அவள் கண்கள் மூடியே இருந்தன. நாடி பிடித்து பார்க்க உயிர் இன்னும் இருக்கிறது என்பது ஓரளவுக்கு நிம்மதியை கொடுத்த்து. ஆனால் மூச்சு மட்டும் சீராக இல்லாமல் இருந்த்து. புடவை இறுக்கியதால் மூச்சு குழலில் பாதிப்பு இருக்கும் போல, மூச்சு மெல்ல் நின்றூ கொண்டிருப்பது தெரிந்த்தும் நான் தாமதிக்காமல் என் வாயை அவள் வாயோடு வைத்து நன்றாக இழுத்து மூச்சை உட்செலுத்தினேன்.

மீண்டும் எழுந்து அவள் இட்துபக்க மார்பில் கைவைத்து அழுத்தினேன். சில நொடிகள் இரண்டையும் மாறி மாறி செய்துவிட்டு அருகே இருந்த தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளித்தேன்.

இப்போது அவளுக்கு மூச்சும் சீரானது இதயத்துடிப்பும் சீராக இருந்த்து. மெல்ல் கண் திறந்தாள். எதிரே முன்பின் தெரியாத ஒருவன் தன் வீட்டுக்குள் தன் முன்னால் இருப்பதை பார்த்த்தும் அதிர்ந்து போய் வீட்டின் மூலைக்கு சென்று உட்கார்ந்தாள். என்னை பார்த்து

“நீங்க யாரு” என்றாள்.

“நான் யாருன்றது இருக்கட்டும், நீ எதுக்கு தூக்கு மாட்ட போன” என்று நான் கேட்ட்தும் எதிரே அவள் ஏற்கனவே பார்த்து அழுது கொண்டிருந்த அந்த போட்டோவை பார்த்து அழ தொடங்கினாள். எனக்கு பயமாகிவிட்ட்து. எங்கே இவள் போனவர்களை அழுதே கூப்பிட்டு விடுவாளோ என்று நினைத்துக் கொண்டு அவள் அருகே ஓடி

“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......................, சத்தம் போடாத” என்று என் உதட்டில் விரல்வைத்து சொல்ல் அவள் அமைதியானாள். சரியாக அந்த நேரம் பார்த்து தூரத்தில் எங்கோ பேச்சு குரல் கேட்டுக் கொண்டிருக்க அவள் அதை உற்று கேட்டாள்.

“நீ யாரு” என்று என்னை பார்த்து கேட்க

“என்ன் சில் பேரு துரத்திக்கிட்டு வந்தாங்க, அவங்க கிட்ட் இருந்து தப்பி இந்த வீட்டு திண்ணையில் இருக்கும்போதுதான் நீ இப்படி பண்றத பார்த்தேன்” என்று சொல்லிக் கொண்டிருந்த நேரம் யாரொ வீட்டை நெருங்கி வருவதை அவள் பார்த்துவிட்டு சட்டென்று எரிந்து கொண்டிருந்த் விளக்கை அணைத்துவிட அந்த வீடு முழ்வதும் இருளானது.

அதே நேரம் கபாலியும் அவன் ஆட்களும் அந்த வீட்டுக்கு முன்னால் வந்து நின்று கொண்டு

“எங்கடா போயிருப்பான், எப்ப்டியும் இந்த ஏரியாவுக்குள்ள் தான் இருக்கனும், ஒரு எடம் விடாம போய் தேடுங்கடா, விடியிறதுக்குள்ள அவ்ன போட்டுட்ட செய்திய சொல்லனும்” என்று கூறிவிட்டு எல்லோரும் அங்கிருந்து க்ளைந்து சென்று தேட ஆரம்பித்தனர்.


நான் என் செல்போனை எடுத்து அதிலிருந்த ஃப்ளாஷ் லைட்டை ஆன் செய்தேன். அந்த வெளிச்ச்த்தில் அவள் முகம் எனக்கு அழகி பட்த்தில் வரும் கதாநாயகியை போல் “ஒளியிலே தெரிவது தேவதையா” என்று பாட் தோன்றியது. ஆனால் அதுக்கெல்லாம் நேரமில்லை. என்று

“சரி நீ எதுக்கு தூக்கி மாட்டிக்க் போன” என்று நான் கேட்ட்து,

“நீ எதுக்கு என்ன் காப்பாத்தின, எனக்குன்னு யாருமே இல்ல, நாளைக்கு என்ன ஒரு அரக்கன் கட்டிக்க போறான். அவ்ன கட்டிக்கிட்டு சாகுறதவிட தூக்குலயே தொங்கிடலாம், என்ன் விடு” என்று மீண்டும் அவள் எழ் நான் அவள் கையை பிடித்து இழுத்து உட்கார வைத்தேன்.

“என்ன் நடந்துச்சின்னு முழுசா சொல்லு, என்னால் முடிஞ்ச உதவிய நான் செய்றேன். கஸ்டம்னு வரும்போதே எல்லாரும் செத்து போகனும்னு முடிவெடுத்துட்டா இந்த ஊர்ல ரியல் எஸ்டேட் பிஸ்னச விட சுடுகாடு பிஸ்னஸ் தான் நல்லா போகும்” என்று நான் சொன்னதும் அவள் கிட்ட்தட்ட் சிரித்தே விட்டாள்.

“நல்லா சொன்னீங்க சார், ஆனா என் கஸ்டம் யாருக்கு வந்திருந்தாலும் அவங்க இந்த முடிவத்தான் எடுத்திருப்பாங்க”என்று கொஞ்ச்ம தெளிவான் குரலில் சொன்னாள்.

“சரி அப்ப்டி என்ன் தான் நடந்துச்சி சொல்லேன்” என்று நான் கேட்க

“எங்க குடும்பம் ரொம்ப ஏழ்மையான குடும்பம், எங்க அப்பா அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணு, என்ன பாசமா வளத்தாங்க, எனக்கு கல்யாணம் பண்ணனும்னு முடுவெடுத்து அதுக்காக இந்த ஊர் தலைவருகிட்ட பணம் கடன்வாங்கினாங்க, ஆனா அவங்க பார்த்த மாப்ள சரியான் குடிகாரன்றதால் கல்யாணத்த நிறுத்திட்டாங்க, ப்ணமும் செல்வாகி கல்யாணமும் நடக்கல, தலைவரு பணத்த கேட்டு மெரட்டினாரு, எங்க அப்பாவால் கொடுக்க முடியாத்தால் என்ன அவருக்கே கட்டி கொடுக்க் சொல்லி தலைவரு தெனமும் மெரடனாரு, ஒரு கட்ட்த்துல் அவர் தொல்லை தாங்க முடியாம எங்க அப்பா செத்தே போய்ட்டாரு அவரு போன் துக்கத்துல எங்க அம்மாவும் போய்ட்டாங்க, அந்த தலைவரும் நாளைக்கு காலையில் என்ன் கல்யாணம் பண்ணிக்க் போறதா, சாய்ந்திரம் வந்து மெரட்டிட்டு போயிருக்கான். இப்படி ஒரு அரக்கன் கிட்ட வாழ்றதுக்கு பெசாம் செத்தே போகலாம்னு தான் இப்படி ஒரு முடிவுக்கு வந்தேன்” என்று அவள் சொல்லி முடிக்க எனக்கு அவசரமாக முட்டிக் கொண்டு வந்த்து,

“இங்க பாத்ரூம் எங்க இருக்கு” என்று நான் கேட்க

“அதெல்லாம் இல்ல சார், கூர ஒரமா போய்ட்டு வாங்க” என்று அவள்: சொல்ல எழுந்தேன்.

அவள் தன் சோகத்தை சொன்னதும் எனக்கும் கொஞ்ச்ம கஸ்ட்மாக தான் இருந்த்து.

“உன் கதைய கேட்டா உண்மையிலேய க்ஸ்டமாத்தான் இருக்கு, ஆனா முன்ன் நான் சொன்ன் மாதிரி எதுக்கும் முடிவு ம்ரணமில்ல” என்று சொல்லிக் கொண்டிருக்க எனக்கு அவசர்மாக முட்டிக் கொண்ட்து.

“இங்க பாத்ரூம் எங்க இருக்கு” என்று நான் கேட்க

“சார் இங்க பாத்ரூமெல்லாம் இல்ல், வெளியில் போய் ஒரு ஒரமா போய்ட்டு வாங்க, இருட்டுல் யாரும் பாக்க மாட்டாங்க” என்று அவள் சிரித்தப்டி சொல்ல

“நான் போய்ட்டு வரதுக்குள்ள நீ வேற மாதிரி எதுவும் பண்ணிக்க மாட்டியே” என்று கேட்டபடி நான் எழ்ந்து நிறக

“இல்ல் சார், உன் முகத்த பார்த்த்துக்கு அப்புறம், எனக்கு சாகவே தோனல சார்” என்று அவள் சொன்னதும்

“ஏன் இந்த மூஞ்சியெல்லாம் உயிரோட் இருக்கும்போது, நமக்கென்ன்னு தோனுச்சா” என்று நான் கேட்க்வும்

“சார் ஏன் அப்ப்டி சொல்ற, உனக்கு என்ன் சார் கொறச்சல், நீ ராசா கணக்கா இருக்க், சரி சீக்கிரமா போய்ட்டுவா, வீட்டுக்குள்ள் அசிங்கம் பண்ணிடாத” என்று அவள் சிரித்த்படி சொல்ல நான் கதவிய மெல்ல திறந்து எட்டி பார்த்தேன். அவர்கள் யாருமில்லை. மெல்ல் வெளிய வந்து என் ஜிப்பை திறந்து சர்ரென்று கூறை மேல் அடிக்க தொட்ங்கினேன்.

“அப்பாடா ரொம்ப நேரமா அடக்கி வெச்சிருந்தேன். இப்ப தான் போச்சு” என்று நினைத்துக் கொண்டே என் பேண்ட் ஜிப்பை மேலே ஏற்றிவ்ட்டு திரும்ப எனக்கு இரண்டு பக்கமும் இரண்டு தடியர்கள் நின்றிருந்தார்கள். என் தோளில் கைவைத்து

“எங்க கிட்ட் இருந்து யாரும் தப்ப முடியாது, ஓடவா பார்க்குற” என்று என் தலையில் அடித்து இழுத்து சென்றார்கள். என்னை இழுத்துசெல்லும் சத்தம் கேட்டு அந்த பெண் வெளியே வந்து பார்த்தாள். அதற்குள் கபாலியும் அவன் மற்ற ஆட்களும் வந்துவிட அவள் மீண்டும் வீட்டுக்குள் சென்று ஒளிந்து கொண்டாள்.

பாவி மகளே ஏதாவது பண்ணி என்ன் காப்பாத்துவான்னு பார்த்தா இப்படி கதவ மூடிகிட்டு உள்ளே போய்ட்டாளே என்று நினைத்துக் கொண்டேன். அந்த ஊரை தாண்டி சில் அடி தூரம் வரை என்னை இழுத்து வந்தார்கள். என்னை ஒரு இட்த்தில் நிற்க வைத்து இரண்டு பக்கமும் இரண்டு பேர் பிடித்து கொண்டார்கள். சென்னையில் இரவு அனிதா நன்றாக தூங்கிக் கொண்டிருக்க அவள் செல்போன் அலறியது தூக்க கலக்கம் கலையாமல் எழுந்து செல்போன் திரையை பார்க்க அது பார்த்திமாவிடமிருந்து வந்த கால். அட்டண்ட் செய்து காதில் வைத்து

“ஹலோ என்றதும் எதிர் முனையில்

“மேடம், டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னா” என்று பார்த்திமா கேட்டாள்.

“பரவால்ல, சொல்லுங்க ஏதோ முக்கியமான் விஷயம இல்லாமலா இந்த் நேரத்துல் போன் ப்ண்ணி இருப்பீங்க, அப்படி என்ன் முக்கியமான் விஷயம்” என்று அனிதா கேட்க பாத்திமா

“ஆமா மேடம் ரொம்ப முக்கியமான் விஷயம் தான்” என்று பீடிகை போட்டாள்.

மறுபுறம் கபாலி என்னை நோக்கி கத்தியுடன் வந்தான்.

“டேய் நாங்க எத்தன் பேர தடயமே இல்லாம் போட்டு தள்ளியிருக்கோம், எங்க கிட்ட் இருந்து தப்பிக்க பார்க்குறியா”என்று ஒர் சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து இழுத்தான்.

“உன்ன சாகடிக்க் சொன்னவங்களுக்கு நீ க்தறி துக்கிற சத்த்த்த கேக்கனும்னல” என்று கூறிக் கொண்டு தன் செல்லை எடுத்து அதில் அனிதாவின் எண்ணுக்கு டயல்செய்தான். நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்போது பிசியாக உள்ளார். என்று அதில் வந்த குரல் அந்த அமைதியான் இட்த்தில் என் காதிலும் விழுந்த்து.

“என்ண்டா இந்த பொம்பள, இந்த நேரத்துல் யாருகூட பேசிக்கிட்டு இருக்கு” என்று கபாலி கடுப்புடன் மீண்டும் முய்ற்சித்தான். மறுபுறம்

சென்னையில்

“சொல்லுங்க இப்படி பில்டப் கொடுக்குற அளவுக்கு என்ன் விஷ்யம்” என்று மீண்டும் அனிதா கேட்க

“அது வந்து மேடம் ஈவ்னிங்க பேசும்போது முத்து சார் இல்லாட்டியும் இந்த ஆஃபர் உங்களுக்குதான்னு கன்ஃபார்மா சொன்னேனில்லையா” என்று பார்த்திமா இழுக்க

“ஆமா சொன்னீங்க இப்ப் என்ன் அதுக்கு” என்று அனிதா டென்ஷன் உச்சிக்கேற கேட்ட்தும்

“மேடம் நான் இப்பதான் டாக்குமெண்ட ஃபுல்லா படிச்சேன்” என்று மீண்டும் நிறுத்த அனிதாவுக்கு கோபம் மண்டைக்கு ஏறியது. மறுபுறம் கபாலி அனிதாவுக்கு போன் மேல் போன் போடு கடுப்பாகிக் கொண்டிருக்க அவ்ன ஆட்களின் பிடி தளர்ந்திருந்த்து.

எனக்கும் இதைவிட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காது என்று சட்டென என்னை பிடித்திருந்த ஒருவனை தள்ளிவிட அவன் தூக்க கலக்கத்தில் இருந்த்தால் கீழெ சென்று விழுந்தான். என்னை பிடித்திருந்த மற்றொருவனையும் வேகமாக் அவன் கால்களுக்கு நடுவே என் பாத்த்தால் ஓங்கி ஒரு அடி கொடுக்க அவன் பிடித்துக் கொண்டு கீழெ உட்கார்ந்துவிட்டான்.

மற்ற் மூவரும் சுதாரிப்பதற்க்குள் நான் அங்கிருந்து ஓடினேன். கபாலி என்னை காட்டி

“டேய் அவன பிடிச்சி கொன்டுக்கிட்டு வாங்கடா” என்று கூறியது அனேகமாக் என்னை துரத்திய மற்ற் மூவரின் காதில்

“அவன் பிடிச்சி கொன்னுட்டு வாங்கடா” என்று விழுந்திருக்கும் போல் கையில் கத்தியை எடுத்துக் கொண்டு முன்பைவிட வேகமாக் துரத்தினார்கள். நான் நாக்கு தள்ளிக் கொண்டு வர வேகமாக் மீண்டும் கிராமத்தை நோக்கி ஓடினேன். சென்னையில் அனிதா சூடாகிக்கிடக்க

“என்ன்னு சொல்லுங்க பாத்திமா என்று கொஞ்ச்ம கோவமாவே கேட்டுவிட்டாள்.

“இல்ல மேடம் முத்து சாரும் உங்க கூட பார்ட்னரா இருந்துதான் எல்லாத்தையும் ரன் பண்றாதா அக்ரீமெண்ட் இருக்கு, அவரு இல்லனா ,இந்த ஆஃபருக்காக திரும்பவும் ஒரு மீட் நட்த்தக்கூட திட்டம் இருக்கு” என்று முடிவாக போட்டு உடைத்தாள். அனிதாவுக்கு உத்றல் எடுத்துக் கொண்ட்து

“என்ன் சொல்றீங்க பாத்திமா, அப்ப முத்து கண்டிப்பா வந்தே ஆகனுமா” என்று அனிதா கேட்க பாத்திமா கொஞ்ச்ம சந்தேகத்துடன்

“மேடம் நீங்க முத்து சார வர சொல்லியிருக்கீங்கல்ல” என்று கேட்க அனிதா தட்டு தடுமாறி சமாளித்துக் கொண்டு

“ம்ம்ம் வந்திடுவாரு, நாளைக்கு காலையில் வந்திருவாரு” என்று சொல்லிவிட்டு

“அப்ப நான் கட் பண்றேன்” என்று சொல்லிவிட்டு போனை வைக்க போனாள். அப்போதுதான் கபாலியிடமிருந்து 5 மிஸ்டு கால்கள் வந்திருப்பதை பார்த்தாள்.

“அய்ய்ய்யோ இந்தாளு அவ்ன கொன்னு தொலச்சிட்டானே என்னவோ தெரியலையே” என்று ப்தற்றத்துடன் கபாலி எண்ணுக்கு டயல் செய்தாள்.அதே நேரம் கபாலி என்னை துரத்திக் கொண்டே அனிதாவின் எண்ணுக்கு டயல் செய்ய இப்போது அனிதாவுக்கும் கபாலிக்கும் ஓரே நேரத்தில் பிஸி டோன் வ்ந்த்து.

இருவரும் தலையில் அடித்துக் கொள்ள மூவரும் என்னை துரத்திக் கொண்டு கிராமத்துக்குள் வந்துவிட்டார்கள். நான் கிராமத்துக்குள் செல்லும் நேரம் அங்கு ஒரு திருடன் திருடுவதற்க்காக வந்திருக்கிறான். அவன் என்னை போலவே பதுங்கி பதுங்கி சென்று கொண்டிருக்க நான் அவனை பார்த்த்தும் ஒரு புத்ர் போன்றா இட்த்தில் ஒளிந்து கொண்டேன். என்னை துரத்தி வந்த மூவரும் ஊருக்குள் வந்து சுற்றி தேடினார்கள். அந்த திருடன் பதுங்கி செல்வதை ஒருவன் பார்த்துவிட மூவரும் அவனை நோக்கி சத்தமின்றி சென்றாகள்.

நான் இன்னும் நன்றாக் உள்ளே பதுங்கிக் கொண்டேன். மூவரும் அவன் அருகே சென்று அவன் தலையில் ஓங்கி ஒரு அடி அடித்து அவனை பின்னாலிருந்து பிடித்துக் கொண்ட்னர். அவன் கத்த முற்பட ஒருவன் அவன் வாயில் துணியை வைத்து அடைத்தான். மூவரும் அவனை இழுத்துக் கொண்டு மீண்டும் முன்பு இருந்த இட்த்தை நோக்கி நடந்தனர்.

ஆனால் அந்த திருடனோ அவர்களிடமிருந்து தப்பிக்க நினைத்து அவர்களை தள்ளிவிட்டு ஓடினான். உடனே மூவரில் ஒருவன் தன்னிடமிருந்த கத்தியை எடுத்து அவன் வயிற்றில் குத்தினான். அனிதா கடுப்புடன் போனை கீழெ வைக்க அதே நேரம் கபாலி சரியாக போன் செய்தான். அனிதா ஆர்வமுடன் போனை எடுத்து

“கபாலி முத்து என்ன ஆனாரு” என்று கேட்க அந்த நேரம் கபாலி அந்த திருடனை பிடித்த இட்த்துக்கு சென்று கொண்டே

“என்ன் மேடம் போன் எடுக்க இவ்ளோ நேரம்” என்று எரிச்சலுடன் கேட்க

“அயோ இப்ப் முத்து எங்க” என்று அனிதா சத்தமாக கேட்டாள்.

“நம்ம பசங்க அவர தொரத்திக்கிட்டு போயிருக்காங்க” என்றதும் அனிதாவுக்கு போன் உயிர் திரும்பிய் நிம்மதி

“சரி அவருக்கு ஒன்னும் ஆகாம் சென்னைக்கு கூட்டி வந்திருங்க” என்று அனிதா சொல்லிக் கொண்டிருந்த நேரம் கபாலி அந்த திருடனை அவன் ஆட்கள் குத்தி கொல்லும் காட்சியை பார்க்கிறான்.

“அட பாவிங்களா அவன் கொன்னுட்டீங்களா” என்று போனை காதில் வைத்தபடி சொல்ல்

“என்ந்து கொன்னுட்டாங்களா” என்று அனிதா பதறுகிறாள்.

“டேய் நான் உங்களா கொண்டாங்கடான்னு தான சொன்னேன்” என்று கபாலி கேட்க

“அண்ணே நீங்க கொன்னுட்ரு வாங்க்ன்னுதானே சொன்னீங்க இப்ப் மாத்தி சொல்றீங்களேண்ண” என்று அவ்னை குத்திய கத்தியை வ்யிற்றுக்குள் இருந்து இழுக்க திருடனின் உயிர் முற்றிலும் போய் கீழெ சாய்ந்தான். மின்சாரம் இல்லாம்ல் எங்கும் இருட்டாக இருந்த்தால் குத்தியது யாரென்று தெரியாமல் எல்லோரும் இருக்க அனிதா பத்ற்றத்துடன்

“கபாலி என்னாச்சு” என்று கேட்க

“மேடம் அவர் கொன்னுட்டாங்க மேடம்” என்று சொன்னதும் அனிதாவுக்க் பல கோடி ரூபாய் தன்னைவிட்டு போன் ஏமாற்றமுன் கோபமும் தலைக்கேறியது.

“டேய் நான் முத்துவ உயிரோட தான் கொண்டார சொன்னேன்” என்று அனிதா கோவமாக் கேட்க

“என்ன் மேடம் திடீர்னு மரியாத இல்லாம் பேசுறீங்க, நீங்க மொதல்ல அவன் கொன்னுட்டு வான்னுதான் சொன்னீங்க, கடைசி நேரத்துல் உயிரொட வேணும்னா நான் என்ன பண்றது. எங்க ஆளுங்களோட் அவன புடிக்க் நான் பட்ட் கஸ்டம் எனக்கு தான் தெரியும்” என்று கபாலி சொல்ல

“டேய் மடையா உன்னால் எனக்கு பல் ஆயிரம் கோடி ரூபா நஷ்டம்டா “என்று அனிதா அழாத குறையாக் சொல்ல


“அதுக்கு நான் என்ன மேடம் ப்ண்றது. நீங்க் யோசிச்சி யோசிச்சி திட்ட்த்த மாத்துனா, யாரு என்ன் பண்ணா முடியும், வேணும்னா என் பேமெண்ட வேணா நீங்க கொடுக்க் வேண்டாம்” என்று க்பாலி பெருந்தன்மையாக் சொல்ல

“போடா முட்டாள். “என்று அனிதா போனை கட் செய்தாள்.

“என்னண்ணே ஆச்சு” என்று ஒருவன் கேடக் “அந்த பொம்பாள் ரொம்ப் ஓவரா பேசுறாடா, மொதல்ல கொல்ல சொன்னா, அப்புறம் கடைசி நேரத்துல் போன் ப்ண்ணி உயிரோட் வேணும் கொல்லாதன்னு சொல்றா” என்று கூறீவிட்டு கத்தியால் குத்தியவன் தலையில் அடித்து

“உனக்கு என்ன அவசரம் நான் தான் வ்ந்துக்கிட்டு இருக்கேன்ல, அதுக்குள்ள் ஏன் குத்துன” என்று கேட்க

“அண்ணே, ஏற்க்னவே ஒடிப்போய் க்ஸ்டப்பட்டு புடிச்சிருக்கோம், திரும்பவும் ஓடிடா அதான் போட்டுட்டேன்” என்றான். நான் அங்கிருந்து மெல்ல ஊருக்குள் சென்று அந்த் வீட்டுக்குள் எட்டி பார்த்தேன்.. 



No comments:

Post a Comment