Pages

Saturday, 21 November 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 48

"என்ன ஆச்சு? ஏதாவது மறந்து வெச்சிட்டு வந்துட்டியா?.." என்றான்.

"அதெல்லாம் ஒன்னும் இல்லடா.. வா நடக்கலாம்.." - சஞ்சனாவின் முகத்திலும் ஒரு சந்தோஷம் தெரிவதை கவனிக்க தவறவில்லை கார்த்திக்..

"லாஸ்ட் ஒரு மாசமா நானும் உன்ன வந்து பார்க்கணும் பார்க்கணும்னு நினைப்பேன்.. ஆனா ஃபோன்ல மட்டும்தான் டெய்லி பேச முடிஞ்சிது...." என்றான்..

"ஹ்ம்ம்.. நானும் இந்த ஒரு மாசமா ராகவ் செய்ய வேண்டிய வேலை எல்லாத்தையும் செய்யுறதால இங்க அங்க கூட நகர முடியல டா.. செப்பா அவன் வேலைங்க இருக்கே....." லேசாக சலித்துக்கொண்டு மேலும் தொடர்ந்தாள்.. "நமக்குன்னு ஒரு வேலை குடுத்து முடிச்சிட்டு போக சொல்லும்போது நிம்மதியா காலைல வந்துட்டு சாயந்திரம் ஜூட் விட்டுடலாம்.. ஆனா இப்படி மத்தவங்கள வெச்சி மேய்ச்சி வேலை வாங்குறதிருக்கே.... அவன்தான் டா அதுக்கு லாயிக்கி.. என்ன சொல்லுற?" என்று சஞ்சனா கார்த்திக்கை பார்த்து சொல்லும்போது..


"இன்னைக்கி காத்து நல்லா அடிக்குதில்ல?... அவ்வளோவா வெயிலும் இல்ல.. நல்ல கிளைமேட்.." - என்று சம்மந்தமே இல்லாமல் அவன் பதில் சொல்லும்போது, நம்மள தவிர வேறெது பற்றியும் பேசுவதில் எனக்கு ஆர்வம் இல்லை என்று அவன் சொல்லாமல் சொல்வதை புரிந்துகொண்டு அவனைப் பார்த்து மெலிதாய் ஒரு புன்னகை தந்தால் சஞ்சனா..

இப்போது பேச்சை மாற்றினால்.. "நான் உன்ன என்னமோ நினைச்சேன் டா.. ஆனா இன்னிக்கி நீ சொன்ன அந்த ரிசஷன் கதை நல்லா இருந்துச்சி.. எதாவது எகனாமிக்ஸ் புக் படிச்சியா?"

"ச்சே ச்சே.. அதையெல்லாம் விட சூப்பர் புக் அது.."

"என்ன புக்.. சொல்லேன் நானும் படிக்குறேன்.." - ஆர்வமாய் கேட்டள் சஞ்சனா..

"ஹஹ்ஹா.. ரொம்பல்லாம் யோசிக்காத... வார கடைசில நியூஸ் பேப்பர் கூட போடுற இலவச இணைப்புல வர்ற குடும்ப மலர்ல படிச்சதுதான் இந்த குட்டி கதை.."

"ஒஹ்... அதுலயா?.." ஆச்சர்யமாய் கேட்டாள் சஞ்சனா..

"என்ன ஒஹ்..?.. அந்த புஸ்தகத்துக்கு என்ன குறைச்சல்? படிக்கிற விஷயம் எங்கிருந்து வேணும்னாலும் இருக்கலாம்.. ஆனா சொல்ல வேண்டிய இடத்துல நச்சுனு சொல்லணும்.. கரெக்டா சஞ்சு?...."

ஏற்கனவே ஒருமுறை கார்த்திக் அவளை சஞ்சு என்றழைத்தது நியாபகம் வந்தது.. அவன் அவளை அப்படி அழைப்பதை உள்ளுக்குள் மிகவும் ரசித்தாள் சஞ்சனா..

"ஹலோ.. மேடம்.. உங்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்... நான் சொன்னது கரெக்ட் தான..?.."

"ஹ்ம்ம் கரெக்ட் தான்.." அவன் சொன்னது என்னவென்று கூட கவனிக்காமல் அவன் கண்களை கூர்ந்து கவனித்துக்கொண்டே பதிலளித்தாள் சஞ்சனா..

இருவரும் பேசிக்கொண்டே நடக்கையில் அலுவலகத்தில் இருந்து சஞ்சனாவின் வீட்டை அடைந்த தூரத்தை அவர்களுடைய கால்கள் அறியவில்லை..

"ஃபர்ஸ்ட் டைம்...." என்று சொல்லி கார்த்திக்கைப் பார்த்து அதிக மகிழ்ச்சியுடன் "வெல்கம் டூ மை லிட்டில் ஸ்வீட் ஹோம்.." என்று தன் இரு கைகளையும் வாசப்படியை நோக்கி காண்பித்து மனம் முழுக்க சந்தோஷத்துடன் சிரித்தபடி ஒரு எக்சைட்மென்டில் கார்த்தியை உள்ளே வரவேற்றாள் சஞ்சனா..


உள்ளே வந்தவனுக்கு மிகுந்த ஆச்சர்யம்.. எதோ கேரளாவில் உள்ள வீட்டினுள் நுழைந்து விட்டோமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது அவனுக்கு..

உள்ளே நுழைந்த தருணத்தில் நல்ல சந்தன வாசம் வீசியது.. பெரிதாய் இல்லாமல் சிறிதளவில் ஜன்னல்களும், அதன் வழியே ஒரே நேர் திசையில் வெள்ளை நிற ஸ்க்ரீனை தாண்டி தரையில் விழுந்து கொண்டிருக்கும் சூரிய வெளிச்சமும், அடக்கமான சிறிய வீடாக இருந்தாலும் ஒவ்வொரு மூலையிலும் சின்ன சின்ன தொட்டிகளில் இரண்டடிக்கு வளர்ந்த செடிகள் அந்த சூரிய வெளிச்சத்தை நோக்கி வளர்ந்து கொண்டிருப்பதும்.. சின்ன பால்கனியில் மேலிருந்து தொங்கும் சிறிய பூந்தொட்டிகளும், சுவர் முழுக்க மரங்களால் அலங்காரம் செய்யபட்டு நடு நடுவே சிறிய ஃப்ரேமில் நிறைய ப்ளாக் & ஒயிட் ஃபோட்டோக்களில் தெத்துப்பல் தெரிய தன் அப்பாவின் இடுப்பில் அமர்ந்து அழகாய் சிரித்துக்கொண்டிருக்கும் குட்டி சஞ்சனாவையும் பார்த்து, நிற்கும் இடத்திலேயே அவளது வீட்டின் வசீகரத்தில் மனம் லயித்து தன்னையும் மறந்து அனைத்தையும் ஒரு நிமிடம் ரசித்துக்கொண்டிருந்தான் கார்த்திக்.

"ஹஹ்ஹா... ஹேய்.. என்னடா ஆச்சு?.. அப்படியே ஒரைஞ்சி நிக்குற?.. உட்கார மாட்டியா?" - சஞ்சனா காஷுவலாக கேட்டாள்..

"இல்ல சஞ்சு... இது வந்து.."

"ஹ்ம்ம்... இது வந்து....?"

"ரொம்ப வித்யாசமா இருக்கு.. உள்ள வந்துட்டா திரும்பி வெளிய போக பிடிக்குமான்னு தோனுற அளவுக்கு இருக்கு உன் வீடு.."

"ஹ்ம்ம்.. அப்படி ஒரு ஃபீலிங் குடுத்தாதான் அது வீடு.. இல்லன்னா என்ன பொறுத்த வரைக்கும் அது வெறுங்காடு.."

"ஹ்ம்ம்.. அந்த ஃபீலிங் உனக்கு இருந்தா பரவாயில்ல, வந்து பார்குரவங்களுக்கும் இருந்துட்டா அப்புறம் வெளிய போகவே மாட்டாங்க இல்ல?.."

"ஹஹ்ஹா.. லூசு கிறுக்கா.. என் வீட்டுக்கு யாரும் வர மாட்டாங்க டா.. அதுபோக நானும் யாரையும் கூப்டதில்ல.... கூப்பிட விருப்பமும் கிடையாது.. எப்போவுமே இந்த இடத்துல நான் மட்டும்தான் இருக்கணும்னு விரும்புவேன்...... ஏன்னா எனக்கு தனிமை ரொம்ப பிடிக்கும்.. இன்னைக்கி வரைக்கும் நானாவே ஒரு ஆள கூப்டு என் வீட்ட காமிச்சி இருக்கேன்னா அது நீ ஒருத்தன் மட்டும்தான்.." என்று சொல்லிவிட்டு பின்னால் தொங்கும் முந்தானையை இடுப்பில் சுத்தி சொருகிகொண்டு கூந்தலை இறுக கட்டி ஸ்டைலாக சேவலுக்கு தலையில் நிற்பது போல முடியை குவித்து ஒரு கிளிப் போட்டுக்கொண்டே கிச்சனில் இருவருக்கும் ஜூஸ் கலந்துகொண்டிருந்தாள்..

தன்னைத் தவிர வேறு யாரையும் அவள் இன்று வரை கூப்பிட்டதில்லை என்பதை நினைத்து உள்ளுக்குள் மிகவும் பெருமிதம் கொண்டான்.. காரணம் இன்று வரை அவன் வாழ்கையில் தன் தாயும், நண்பன் ராகவையும் தவிர்த்து யாருமே அவனுக்கு இப்படி முக்கியத்துவம் குடுத்து பேசியதில்லை, இப்போது அவனுடைய சக வயது பெண், அதிலும் சமீபமாய் செல்ஃபோன் உரையாடல்களில் அவனை நன்கு புரிந்து அவன் மனதை சில நாட்களாய் மயக்கத்தில் ஆழ்த்தும் ஒருவள் அவள் வாயால் இப்படி சொல்வதைக் கேட்ததால்தான் அந்த தனி சந்தோஷத்துக்கு காரணம்..

கிச்சனில் விழும் இளம் வெயில் வெளிச்சத்தில் கரு நீல நிற புடவை மற்றும் ப்லவுசில் அளவாக தெரியும் அவளது தங்க நிற முதுகையும், சிக்கனமாக தெரியும் இடுப்பையும் கண்டு காம உணர்வுகள் ஏதும் இன்றி அவளது அழகை மட்டும் மெளனமாக ஆராதித்துக்கொண்டிருந்தான் கார்த்திக்.... அதே நேரம் உள்ளே ஜூஸ் கலக்கும்போது காலையில் அந்த இரு வாயாடிகளும் கார்த்திக்கை "அவ ஆள்" என்று கோவத்தில் இவளிடம் சொன்னதை மீண்டும் மனதுக்குள் ரகசியமாக அசை போட்டுக்கொண்டிருந்தாள் சஞ்சனா....



ஜூஸ் எடுத்துக்கொண்டு வெளியே வரும்போது மீண்டும் வீட்டைப் பற்றி பேச தொடங்கினாள் சஞ்சனா..

"ராகவ் கூட இன்னிக்கி வரைக்கும் இங்க வந்ததில்ல.. வரக்கூடாதுன்னு எந்த எண்ணமும் இல்ல, ஆனா வர்றதுக்கு அவனுக்கு சந்தர்ப்பம் அமையல.."

மீண்டும் அவன் எனிமியை பத்தி எதோ ஒரு பேச்சு வருகையில் ஒரு நல்ல சுகத்தில் லயித்து இருந்தவன் அவள் பேசுவதை கவனிக்கவில்லை என்பதுபோல வீட்டில் உள்ள சுவர் அனைத்தையும் அங்கும் இங்கும் பார்த்தான்.. அப்போது அவன் பார்வையை சின்ன சின்ன ஃப்ரேமில் தொங்கிக்கொண்டிருக்கும் சில வாக்கியங்கள் அவன் கவனத்தை ஈர்த்தது..

"ஹஹ்ஹா.... ஆளப்பாரு.. நோட்டம் விட்டது போதும்டா.... அப்படி ஒன்னும் என் வீடு பெரிய பேலஸ் கிடையாது... வந்து உட்காரு வா.." என்றாள் சஞ்சனா..

"இந்த வாக்கியங்க எல்லாம் நல்லா இருக்கே.. நெட்ல கூகிள் பண்ணி எடுத்தியா?... இல்ல எதாவது புக் ஸ்டோர்ல இருந்து சுட்டியா?.." என்றான் நக்கலாக..

"ஹலோ.. நாங்கெல்லாம் சொந்தமா எழுதுவோம்.. ஒவ்வொருத்தருக்கும் இருக்குற விருப்பு, வெறுப்பு, கோவம், தாபம், மட்டற்ற எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்த பல விதங்கள் இருக்கு.. ஆனா நான் வார்த்தைகளா என் எழுத்துல கொட்டி என் மனசை சாந்தி படுதிக்குவேன்.. அப்படி செஞ்சதுதான் இது ஒன்னு ஒன்னும்.." - என்று சஞ்சனா சொல்ல

"ஹ்ம்ம்.. நம்பறா மாதிரி இல்லையே...." அவளை கொஞ்சம் வெருப்பேத்த யோசித்தான் கார்த்திக்..

"ஹ்ம்ம்.. நீ நம்புறதுக்கு என்ன செய்யனும்னு சொல்லு, செஞ்சிடலாம்.." - அவன் கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதிலளித்தாள் சஞ்சனா...

இந்த போர்டுல இருக்குற வாக்கியங்கள படிக்கும்போது எனக்கு எப்படி ஒரு உணர்வு இருந்துச்சோ நீ எதாவது இப்போ புதுசா சொல்லுறதை கேக்கும்போதும் எனக்கு ஏற்படணும்.. அப்போ ஒத்துக்குறேன் இதெல்லாம் எழுதினது நீதான்னு.. எங்க சொல்லு பாப்போம்.. - என்று சொல்லி அவள் முன் ஒரு ச்சார் போட்டு அமர்ந்தான்....

சில நொடிகள் மௌனமாய் இருந்தாள் சஞ்சனா..

"ஹஹா.. என்ன சஞ்சு சைலன்ட் ஆயிட்ட?.. சரக்கில்லையோ?.." - அவள்தான் அனைத்தையும் எழுதி இருக்கிறாள் என்று அவன் மனதில் ஒரு நம்பிக்கை இருந்தாலும், அவளை எதாவது புதியதாய் சொல்ல வைத்து பார்க்க வேண்டுமென்ற எண்ணம்தான் கார்த்திக்கை இப்படி பேச வைத்தது....

கார்த்திக் சிரிப்பதைப் பார்த்துவிட்டு சில நொடிகள் கழித்து மௌனம் களைந்து ஜூஸ் டம்ளரை மெதுவாக கீழே வைத்து தரையைப் பார்த்தபடி மெல்லிய குரலில் பேச தொடங்கினாள் சஞ்சனா..

"கூர்மையான முட்கள் பொதிந்த கூறுகெட்ட சமுதாயமே..
நான் அவ்வப்பொழுது தலைகுனிந்து நிற்பதற்குக் காரணம் நான் ஏன் பெண்ணாக பிறந்தேனோ என்று எனக்குள் நான் வருந்துவதாக எண்ணி விடாதே..
என்னிடம் இருக்கும் கண்ணியம் இறங்கி விடக் கூடாதென்பதற்காக என் கண்களில் தென்படும் கண்ணீர் துளிகளை உன் கண் பார்வையிலிருந்து மறைப்பதற்காகத்தான்...."


என்று அவள் சொல்லி முடிக்கும்போது தரையில் ஒரு துளி கண்ணீர் சிந்தியதை கவனித்தான் கார்த்திக்..


"ஹே சஞ்சு.. என்ன ஆச்சு?... ஐ அம் வெரி சாரி டி... ந...நான்...." - கார்த்திக் என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்க..

டைனிங் டேபிளில் உள்ள டிஷ்யூ பேப்பர் ஒன்றை எடுத்து மெலிதாய் எட்டிப் பார்த்த கண்ணீர் துளிகளை துடைத்துக்கொண்டாள் சஞ்சனா..

"இந்த வாக்கியத்தை மிதுன் விவகாரம் ஆனாப்போ எழுதினேன்.. ஆனா செவுருல மாட்டிவெக்க தோனல.. காரணம் அந்த நியாபகம்... எ... எனக்....." மன வலியில் சாதாரணமாக தொடர முடியாமல் மீண்டும் நன்கு மூசிழுத்துவிட்டு சுதாரித்துக்கொண்டு பேச தொடங்கினாள்.. "அந்த நியாபகம் திருப்பி வர வேண்டாம்னு நினைச்சிதான் அதை நான் மாட்டி வெக்கல...."

கார்த்திக் அவளை அப்படியே பார்துக்கொண்டே இருந்தான்..

"ஹஹ்ஹா... டேய் லூசு கிறுக்க.. நான் நார்மலாதான் பேசுறேன்.. நீ ஏன் என்ன அப்படியே ஒரைஞ்சி போயி பார்த்துட்டு இருக்க?.."

ஒன்றும் பேசாமல் கார்த்திக் மீண்டும் அப்படியே அவளை சீரியசாக பார்த்தான்..

"டேய் நீ சீரியஸா பார்த்தா சிரிப்பு வருது டா.. சாதாரணமா லூசு மாதிரியே இருடா.. அதுதான் உனக்கு எப்போவுமே எடுப்பா இருக்கும்... என்று சொல்லி சஞ்சனா இப்போது சிரிக்கும்போது உண்மையில் இவள்தானா சில நொடிகளுக்கு முன்னாடி கண்ணுல தண்ணி வெச்சி நம்ம கிட்ட பேசினா?.. என்று கார்த்திக் சத்தியமாகவே ஆச்சர்யப்படும் அளவுக்கு சந்தோஷத்தையும் கஷ்டத்தையும் ஒரு கன நொடியில் எப்படி இவளால மனசளவுல டக்கு டக்குன்னு மாத்திக்க முடியுதுன்னு எண்ணி மீண்டும் ஃப்ரீஸ் ஆனான்..

"டேய்.. வாத்து..." - கொஞ்சம் சத்தமாக கத்தினாள் சஞ்சனா..

"ஆங்.." - என்று இப்போது சுய நினைவுக்கு வந்தான் அந்த வாத்து..!

பார்ர்றா... உன்ன மரியாதையா லூசு கிறுக்கான்னு கூப்டா கூட காதுல கேக்கல.. ஆனா வாத்துன்னா டக்குன்னு திரும்புற?.. ஹா ஹா ஹா.... - நன்கு சத்தம் வர சிரித்தாள் சஞ்சனா..

"இன்னொன்னும் சொல்லுறேன் கேளு..." - என்று தொடர்ந்தாள்..

"வரதட்சனை என்ற பெயரில் அமௌன்ட் கேட்பதும் ஒரு ஆண்..
குடுப்பதும் இன்னொரு ஆண்...
இவற்றுக்கு நடுவில் ஒன்றும் செய்யாமல் அவர்களுடைய கோவத்துக்கு ஆளாகிறேன் நான்..."


அவள் சொன்ன அந்த இரு வாக்கியங்களையும் கேட்டு "நிஜமாவே நீதான் எழுதினன்னு ஒத்துக்குறேன்.. எனக்கு நிரூபிக்குறேன்னு சொல்லி இப்போ எனக்கு சொல்லி காமிச்ச வார்த்தைகளால நீ எதுவும் மனசளவுல கஷ்ட படல இல்ல?..."

கார்த்திக் இப்படி கேட்கும்போது அவன் வார்த்தைகளில் இருக்கும் அக்கறையை ரசித்தாள் சஞ்சனா..

"ஹலோ.. என்ன சொல்லிட்டு இப்போ நீ மட்டும் ஒரைஞ்சி போயி உட்கார்ந்திருக்க?... ஏதாவது பேசு..." - என்றான் கார்த்திக்..

"இல்லடா.. கஷ்டம் எதுவும் இல்ல.. உள்ள இருக்குறதை கொட்டுறதால மனசு லேசாகுது.. நீதான் பாவம் என் கிட்ட மாட்டிக்கிட்டு இதெல்லாம் கேட்டுட்டு இருக்க.." என்று லேசாக நொந்துக்கொண்டாள்..


"ச்சே.. ச்சே.. அப்படியெல்லாம் சொல்லாத.. உன் கூட பேசுறது எனக்கும் ரொம்ப பிடிக்கும்.." - என்று கார்த்திக் மெலிதாய் சிரித்து சொல்ல, சஞ்சனாவிடம் இருந்து வார்த்தைகள் எதுவும் இல்லை.. ஒரு மௌனமான சந்தோஷத்தைத் தவிர..

"நானும் எனக்குள்ள சில விஷயங்கள வெச்சிருக்கேன்... ஆனா அதெல்லாம் நீ எழுதினா மாதிரி வாக்கியங்கள் கிடையாது.." - என்றான் கார்த்திக்..

"வாக்கியங்கள் இல்லன்னா வேறென்னது அது?..." - ஆச்சர்யமாக கேட்டாள் சஞ்சனா..

"கேள்விகள்.."

"ஒஹ்.."

"ஆனா அந்த கேள்விக்கு யாருமே சரியான பதில் சொன்னதில்ல.."

"அப்படி என்ன கேள்வி அதெல்லாம்.. ஹ்ம்ம்.. கேளு கேளு பார்க்கலாம்..? என்று கார்த்திக் அருகே முகத்தை நீட்டி அவனருகில் வந்து சுவாரஸ்யமாக கேட்டாள் சஞ்சனா.."

"ஒரு ஆணுக்கு எது பெஸ்ட் மோதிரம்னு சொல்ல முடியுமா?" - சிரித்துக்கொண்டே புருவங்கள் உயர்த்தி கேள்வி எழுப்பினான் கார்த்திக்..

"ஹ்ம்ம்.. பிளாட்டினம், தங்கம், கல்லு வெச்ச மோதிரம், ராசிக்கல் வெச்ச மோதிரம்".. என்று அவளும் ஒன்று ஒன்றாக சொல்லிக்கொண்டே போனாள்.... ஒன்றும் தென்படவில்லை.. கடைசியாக ஒருவழியாக அவனிடம் சரணடைந்து "நீயே சொல்லிடுடா.. ப்ளீஸ் தெரிஞ்சிக்கலைனா, தலை வெடிச்சிடும்.." என்றாள்..

அவள் கண்களை நேராகப் பார்த்து சொல்ல தொடங்கினான்..

"காதலிச்சி கல்யாணம் பண்ண மனைவியோட கால் மெட்டிய விட ஒரு சிறந்த மோதிரம் இருக்க முடியுமா ஆணுக்கு?" - என்றான்..

கார்த்திக் இதை சொன்னவுடன் முகத்தின் கீழ் கை வைத்து குனிந்து கேட்டுக் கொண்டிருந்தவள் சற்று மெதுவாக நிமிர்ந்து உட்கார்ந்து ஒரு ஆச்சர்ய சிரிப்புடன் அவனைப் பார்த்தள்....

"இன்னொன்னு சொல்லுறேன்.."

"ஹ்ம்ம்.." எதுவும் பேசாமல் அவன் கண்களையே கூர்ந்து கவனித்து தொண்டையில் இருந்து ஒரு மெல்லிய சத்தம் மட்டும் குடுத்தாள்..


"ஐ லவ் யூ...." - என்று கார்த்திக் ஆரம்பித்தான்..

அதற்குள் சஞ்சனா உடனே ஒரு அதிர்ச்சி பார்வையை குடுத்தாள்..

"ஹஹாஹ்.. பொறு பொறு.. நான் இன்னும் முடிக்கல.. பயப்படாத.." - என்று அவள் பார்வையைக் கண்டு சிரித்தான் கார்த்திக்..

"ஐ லவ் யூ" ங்கறது கேள்வியே கிடையாது.... ஆனாலும் உலகம் முழுக்க இருக்குற காதலர்கள் எல்லாருமே ஒருத்தருக்கு ஒருத்தர் இந்த வார்த்தைய இன்னொருத்தர் கிட்ட சொல்லிட்டு ஏன் பதில் எதிர் பார்க்குறாங்க?.."

"ஹ்ம்ம்.." ஒன்றும் பேசாமல் மௌனமாய் தலை அசைத்தாள்....

"பரவாயில்லையே... உணகுள்ளையும் எதோ இருக்குன்னு சொல்ல வர்ற.. சரி உன் கிட்ட ஒரு கேள்வி... காதல் பத்தி என்ன நினைக்குற?...."



No comments:

Post a Comment