Pages

Friday, 20 November 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 43

"சொல்லுடா தங்கம்...." - ராகவ் சங்கீதாவின் கண்களைப் பார்த்து கொஞ்சினான்....

"என்னத்த சொல்லனும் அய்யாவுக்கு?..." - சிரித்துக்கொண்டே பதில் சொல்லாமல் ஜன்னல் அருகே முகம் திரும்பிக்கொண்டு விமானத்தின் ஜன்னல் வழியே தெரியும் மேகங்களை ரசித்துக்கொண்டிருந்தாள் சங்கீதா....

வெண்ணிலா ஐஸ் க்ரீம் நிறத்தில் ஒரு லாங் ஸ்கர்ட் அணிந்து, பாதாம் பால் மஞ்சள் நிறத்தில் இடுப்பின் வளைவுகள் வறை சற்று இருக்கமாய் வரும் லெனின் டாப்ஸ் அணிந்து, சுருட்டி கசக்கி விரித்துப் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு நீளமான ஆரஞ் துணியில் இரு முனைகளிலும் சிறிய குண்டு மணிகள் ஒன்றோடொன்று உரசி சத்தம் குடுக்கும் துணியை கழுத்து பகுதியில் ஒரு சுத்து சுத்தி தொங்க விட்டிருந்தாள். அவளது தலையின் மேல் தூக்கி விடப்பட்ட கூலிங் கிளாஸ் விமானத்தின் கூரையைப் பார்த்துக்கொண்டிருந்தது.. இப்போது சிறிய ஜன்னலின் வழியே வரும் வெளிச்சத்தில் அவளுடைய முகத்தழகை ரசித்துக்கொண்டிருந்தான் ராகவ்... அப்போது..


"ஸர் திஸ் இஸ் வாட் யூ ஆஸ்க்டு ரைட்?...." என்று விமானப்பணிப்பென் அழகாய் சிரித்துக்கொண்டே நுனிநாவில் ஆங்கிலம் தவழ ராகவுக்கு ஒரு ரெட் ஒயினை குடுத்துவிட்டு செல்லும்போது, சங்கீதா ராகவ் பக்கம் திரும்பி "இது எத்தினாவது?" என்று லேசாக முறைத்து கேள்வி எழுப்ப..

"ஷ்ஷ்... இதாம்மா முதல்...." என்று ராகவ் பனிவாக தன் மனைவி சராவிடம் பதில் சொல்ல....

"ஹ்ம்ம்.... உன்ன நம்ப முடியாதுடா...".. என்று சொல்லிவிட்டு அவள் திரும்பும்போது அவளது சீட்டின் முன் உள்ள ஹோல்டரில் அந்த ரெட் ஒய்ன் பாட்டிலை வைத்துவிட்டு..

"இனிமே தொட மாட்டேன்... சரியா?.... ஆனா எப்படி நடக்கனும்ன்னு சொல்லு.. கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆச்சு, இப்போதான் நாம ஃபர்ஸ்ட் நைட் கொண்டாட போறோம்... அதுவும் லண்டன்ல... இப்போ என்னோட விருப்பமெல்லாம் அது உன் விருப்பப்படி நடக்கணும்.... அதான் கேக்குறேன்... நீயே சொல்லு.. ப்ளீஸ் ப்ளீஸ்..?" - என்று எப்போதும் ராகவின் கண்களை டெம்ப்ட் செய்யும் சங்கீதாவின் கன்னங்களை தேவைக்கும் அதிகமாக தன் கை விரல்களால் தடவி தன் பக்கம் திருப்பினான் ராகவ்..

"ஹ்ம்ம்.. உனக்கு என் கன்னத்தை தடவனும்னா தாராளமா தடவிக்கோ, நான் உன் பொண்டாட்டிடா... என்னை திருப்பி பார்க்க வெக்குறேன்னு சாக்கு வெச்சி தடவனுமா நீ?" - ராகவின் கைக்குள் தன் கையை கோர்த்து வைத்து செல்லமாய் கடித்து பேச ஆரம்பித்தாள் சங்கீதா..

"சரி சொல்லுறேன் கேளு..... நடக்க போற இடம் ஃபாரீன் நாடா இருந்தாலும், நடக்குற விதம் நம்ம கலாச்சாரம் படி நடந்தா எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும்.... அதுக்கு ஏத்தா மாதிரி நீ எல்லா ஏற்பாடும் பண்ணு..." என்று டிவியில் உள்ள தொகுப்பாளினிகள் போல கழுத்தை ஆட்டி ஆட்டி, தலை முடி நெத்தியில் விழ, குரலை உயர்த்தியும் தாழ்த்தியும் கொஞ்சி கொஞ்சி ராகவிடம் பேசினாள் சங்கீதா....

"ப்ச் ப்ச்.... உனக்கு ஒன்னு தெரியுமா?...." - சங்கீதாவின் கைகளில் மென்மையாக முத்தம் குடுத்து சொன்னான் ராகவ்....

"என்ன?.." அவன் முத்தம் குடுக்கும் அழகை ரசித்துக்கொண்டே கேட்டாள் சங்கீதா..

"நான் ஏற்கனவே உன் காஸ்ட்யூம், ஜுவல்ஸ்னு எல்லாமே ச்சூஸ் செய்து அரேஞ் பண்ணிட்டேன்... கூடவே உனக்கு பிடிச்ச பாட்டு கூட அந்த நேரம் நீ கேக்குறா மாதிரி பண்ணிட்டேன்.." என்று ராகவ் சொன்னதை கேட்டு..

"ஒரு நிமிஷம் கிட்ட வா...." - ராகவின் கண்களை நேராக பார்த்து மென்மையாக புன்னகைத்து அழைத்தாள் சங்கீதா....


"ஹ்ம்ம்.. சொல்லு சொல்லு..." என்று அருகே வந்தவனின் உதட்டில் "ப்ச்...." என்று அவன் எதிர்பார்க்காத நேரம் ஒரு அழுத்தமான முத்தம் குடுத்தாள் சங்கீதா....

சிறு வயதில் பள்ளியில் நாம் படித்த நான்-டீடையில் புத்தகங்கள் மற்றும் ஃபைரி டேல் புத்தகத்திலும் வருவது போல பச்சை பசேல் என்று போர்வை போர்த்தியது போல இரு புறமும், ஈரத்தில் நனைந்த புல்வெளி ஃபிரஷ்ஷாக படர்ந்து இருந்தது. வீடுகள் அனைத்தும் ஒரே வரிசையில் சிகப்பு நிற செங்கற்களால் ஆன சுவர்களால் கட்டப்பட்டிருந்தது. ஹீத்றோ (HEATHROW, LONDON) ஏர்போர்ட் வந்தடைவதற்கு முன்பு, ராகவும் சங்கீதாவும் அமர்ந்திருக்கும் ஃப்லைட் ஒரு சில நிமிடங்கள் தரை இறங்காமல் காற்றில் மிதந்தது (இதற்கு Loitering என்று சொல்வார்கள்).

அதிகமான உயரத்தில் இல்லாமல் கிட்டத்தட்ட தீப்பெட்டி அளவுக்கு கட்டடங்கள் கண்ணில் தெரியும் விதத்தில் பறந்து கொண்டிருந்தது.... அப்போது விமானத்தின் ஜன்னல் வழியே பார்க்கும்போது, இங்கிலாந்து ராணியின் பக்கிங்ஃஹம் கோட்டை, கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளை கடந்த டவர் ஆஃப் லண்டன், மற்றும் அதன் அருகே தேம்ஸ் நதியின் மீது இரண்டு கால்களையும் ஊன்றி கம்பீரமாய் நின்றுகொண்டிருக்கும் லண்டன் பிரிட்ஜ் ஆகியவை ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டு நான்தான் அழகு என்று புதிதாய் வருபவர்களை கண்கவரும் விதம் வரவேற்றுக்கொண்டிருந்தது. சங்கீதாவுக்கு இதுதான் முதல் விமானப் பயணம்.

அதிகமான சந்தோஷத்தில் ராகவின் கைகளை இறுக்கி கட்டிக்கொண்டு அவனை தன் இருக்கையின் ஜன்னல் அருகே இழுத்து, "ஏய்.. இங்க பாரு... இது என்னதுன்னு சொல்லு..." என்று மேலிருந்து காணும் போது தன் பார்வைக்கு எதெல்லாம் ஆச்சர்யமான விஷயமாக படுகிறதோ அவற்றையெல்லாம் காட்டி அவனிடம் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தாள் அவனது சரா..

அவள் ஆச்சர்யமாக கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லும்போது அவளின் நெத்தியிலும் கன்னத்திலும், இதழ்களிலும் மாறி மாறி முத்தம் குடுத்துக்கொண்டே பதில் சொன்னான் ராகவ். "இப்போ நீ பாக்குறதெல்லாம் மேலிருந்துதான்... ஒவ்வொன்னுதுக்கு முன்னாடியும் போய் நின்னா அததோட விஸ்வரூப சைஸ் பர்த்து மயங்கிடுவ... எப்படி நீ என்ன பார்த்து மயங்கி போனியோ அது மாதிரி... ஹா ஹா.." என்று சொல்லிக்கொண்டே சங்கீதாவின் கழுத்து பகுதியில் மென்மையாக "ப்ச்" என்று ஒரு முத்தம் குடுத்தான் ராகவ்....

பார்த்துக்கொண்டிருக்கும் காட்சிகள் யாவும் கண்களுக்கு ஆச்சர்யம் அளிக்கும்விதம் அமைய, ராகவின் அன்பு முத்தங்கள் சங்கீதாவுக்கு இன்னும் சந்தோஷத்தை அதிகரித்தது.

ராகவை தன் அருகே இன்னும் இறுக்கமாக அணைத்து அவன் தோள்களில் சாய்ந்து "எப்படிதான் கடந்த ஒரு மாசம் ஓடுச்சோ தெரியலடா...." - நெற்றியில் அழகாய் சுருள் முடி விழ அதை சரி செய்துகொண்டே சொன்னாள் சங்கீதா..
"ஹ்ம்ம்..." - அவள் பேசுவதை கூட அறியாமல் அவளது கண்களையும் அதன் மீது விழும் அவளது முடி அழகையும் ரசித்துக்கொண்டிருந்தான் ராகவ்.
"என்ன ஹ்ம்ம்.. நான் என்ன சொன்னேன்னு சொல்லு?..." - தன் கேள்விக்கு பதில் சொல்வதை விட அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்தாள் சங்கீதா..

"ஏய்ய்.. என்னடா ஆச்சு உனக்கு?... ஹாஹ்ஹா.. ஆபீஸ்ல உன் காபின் உள்ள முதல் முதல்ல வரும்போது எப்படி நோட்டம் விட்டியோ அந்த மாதிரி நோட்டம் விடுற?... ஹல்லோ..ஹல்லல்லோ.... மிஸ்டர் CEO..." - அவள் பேச பேச தான் ஒன்றும் பேசாமல் அவளது உதட்டழகை ரசித்துக்கொண்டிருந்தான் ராகவ்... 


"அடேய் பொருக்கி புருஷா..." கன்னத்தை மெதுவாக தட்டி அவனை உலுக்கினாள் சரா....

"ஆங்.. ஹ்ம்ம்.. சொல்லு....சொல்லு.. கொஞ்ச நேரம் உன் அழகுல அப்படியே ஃப்ரீஸ் ஆயிட்டேன்டி.." என்று வழிந்தான்....

"ஆமா... போ.. நான் பாட்டுக்கு பேசுவேன்.. இவரு வேடிக்க பார்ப்பாராம்.." அவன் சொன்னதை உள்ளுக்குள் ரசித்து பொய்யாக கோவித்து திரும்பிக்கொண்டாள்..

அவள் தோள்கள் மீது கை போட்டு தன் பக்கம் இருக்கி அணைத்தபடி அவள் மென்மையான கன்னத்தில் "ப்ச்" என்று முத்தம் குடுத்து.... "பொண்டாட்டிய இப்படி பக்கத்துல உட்கார வெச்சு அவளோட அழக இன்ச் இன்ச்சா ரசிக்குறதுல ஒரு தனி கிக் இருக்குடி என் செல்ல அம்முகுட்டி.... ப்ச்.. ப்ச்.."

"சரி.. சரி சரி.... இன்னும் ஃப்லைட் இறங்கல.. நாம நம்ம இடத்துக்கும் போகல.. கொஞ்சம் அடக்கி வாசி...."

சங்கீதா பேசியவுடன் லேசான விரக்தியுடன் அவள் மீது இருந்த கைகளை தளர்த்தி உடனே வேறு பக்கம் திரும்பி கொண்டான்..

"ஏய்.." அவன் முகத்தை திருப்ப முயற்சி செய்தாள் ஆனால் அவன் திரும்பவில்லை..

"ஏய்... கோவமா?... நான் எத விளையாட்டுக்கு சொல்லுவேன் எத சீரியஸ்ஸா சொல்லுவேன்னு உனக்கு வித்யாசம் தெரியாதா?.. இப்போ ஏன் கோச்சிகிட்ட.... எம்பக்கம் திரும்புடா.. கண்ணு இல்ல.. செல்லம் இல்ல... எனக்கு இப்போ உம்மா வேணும் தர மாட்டியா?.. திரும்ம்ம்புடா...." என்று கொஞ்சிய படி அவனது முகத்தை தன் பக்கம் திருப்பினாள்... எத்தனை முறை பார்த்தாலும் சராவின் அழகு ராகவுக்கு அலுக்காது.. சங்கீதாவின் அழகுக்கு முன்னால் ஓரளவுக்குத்தான் அவனால் ரோஷம் காமிக்க முடியும்... அவள் குடுத்த சிரிப்பை பார்த்து மீண்டும் வெடுக்கென அவள் தோள்களை பற்றி தன் பக்கம் இறுக்கி "ப்ச்.. ப்ச்.. ப்ச்.." என்று அவளது கன்னத்தில் இரண்டு முத்தமும்.. கடைசியாக அவளது இதழ்களில் அழுத்தி ஒரு முத்தமும் குடுத்தான்..

"வெவ்வ வெ.... இதுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் வெக்க மாட்டான் என் அழகு பொருக்கி புருஷன்...." - மெதுவாக அவன் காதருகே சொல்லி லேசாக கடித்தாள்..

ராகவின் தோள்களில் சாய்ந்தபடி கண்களை மூடி மயக்கம் கலந்த சந்தோஷத்தில் "நம்பவே முடியலடா..." என்றாள்..

"என்ன நம்ப முடியல...."

குமாரோட அப்பாவே கூட இருந்து நிர்மலா அக்கா வீட்டுல நம்ம கல்யாணத்த நடத்தி வெச்சத என்னால இப்ப யோசிச்சாலும் நம்ப முடியலடா..

"ஹ்ம்ம்.. நானும் அதை எதிர்பார்கல சரா.... சொல்லாமலேயே இருந்தா தப்பாயிடும்னு நினைச்சிதான் நான் சமயம் பார்த்து அவர IOFIக்கு வரவெச்சி நேர்ல பார்த்து நடந்தது எல்லாத்தையும் அவருக்கு எடுத்து சொன்னேன்.. குமார் செஞ்ச தப்பு, அவரோட ஆபத்தான ஸ்பிலிட் பர்சனாலிட்டி.. இதுக்கு நடுவுல அந்த வீட்டுல நீ பட்ட கஷ்டங்கள்.... நம்ம பசங்க பட்ட கஷ்டங்க எல்லாத்தையும் சொன்ன பிறகு அவர் சொன்ன வார்த்தைகள் இன்னும் எனக்கு ஆச்சரியமா இருக்கு... அவர் என்ன சொன்னார் தெரியுமா? "என் வாழ்க்கைல நான் செஞ்ச பெரிய தப்பு அவனை பெத்தது இல்ல தம்பி.. பெத்ததுக்கு அப்புறம் அவனை சரியா வளர்காததுதான்...சின்ன வயசுல எல்லாமே அவனுக்கு குடுத்து செல்லமா வளர்த்துட்டு அவனுக்கு விவரம் தெரிஞ்சப்புறம் அவனை ஓவரா கண்டிச்சு வளர்த்திட்டேன்...அதுவே அவனுக்கு மனசு இறுக்கமா மாற காரணம் ஆயிடுச்சு தம்பி" என் பையன் செஞ்ச தப்பான காரியங்க எல்லாம் ஒரு வேல நாளைக்கு வெளிய வந்தா நான்தான் அவன் அப்பான்னு தயவுசெய்து சொல்லிடாதீங்க...ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சா எல்லாம் சரி ஆயிடும்னு நினைச்சி சங்கீதா வாழ்கைய பாழாக்கினதுதான் நாங்க செஞ்ச பெரிய தப்பு..' அப்படின்னு அவர் சொன்னப்போ அவர் எதையும் சுயநலமா யோசிக்குற ஆள் மாதிரி தெரியல டா.. அவர் கூட பேசும்போது அவருக்கு இப்படி ஒரு பையனான்னு ஆச்சர்ய பட்டேன்.... ஆனா அதை விடவும் உன் அம்மா அப்பா வந்ததை பார்த்து நான் இன்னும் சந்தோஷ பட்டேன் டா" என்றான்..... 



ஹ்ம்ம்.. முதல்ல என் அப்பா இதுக்கு சம்மதிக்காம இருந்தப்போ எங்கம்மா என்ன காரணம்னு கேட்டு... அதுக்கு நாளைக்கு என்னை நாலு பேர் தப்பா பேசுவாங்கன்னு எங்கப்பா சொல்லும்போது என் மனசும் ரொம்ப கஷ்ட பட்டுச்சுடா...அந்த நேரம் குமார் அப்பாவே எங்கப்பா கிட்ட இறங்கி வந்து "எனக்கொரு பொண்ணு இருந்து, அவளுக்கு இப்படி ஒரு நிலைமை வந்து இருந்தா இந்நேரம் தகப்பன் ஸ்தானத்துல சந்தோஷமா நானே அவளுக்கு இன்னொரு கல்யாணம் கட்டி வெப்பேன். நாலு பேர் பேசுறதுக்கு கெளரவம் பாக்காதீங்க சம்மந்தி, இவளோ நாளா உங்க பொண்ணு வாழ்ந்த வாழ்கைய யோசிச்சி பாருங்க.. வாழ்கை ஒரு தடவதான், அதுலயும் நாம இந்த உலகத்துல இருக்க போகுறது இன்னும் அதிக பட்சம் பத்துல இருந்து பதினைஞ்சு வருஷத்துக்கு தான், கடைசியா கண்ணை மூடினா கூட நாலு பேர் பேசினதை விட்டுட்டு உங்க மனசாட்சிக்கு விரோதமா நீங்க நடக்காம இருந்திருந்தா நிம்மதியா உயிர விடலாம்னு பொறுமையா எங்கப்பாவுக்கு எடுத்து சொல்லி நம்ம கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சத யோசிச்சா நடந்தது எல்லாம் ஒரு கனவு மாதிரி இருக்கு டா.... என்னால நம்பவே முடியலடா...." என்று ராகவின் தோள்களில் சாய்ந்துகொண்டே கண்களை மேல்நோக்கி ராகவைப் பார்த்துக்கொண்டே பேசினாள் சரா..

"அதை விட நீ ரம்யா கிட்ட உன் ராஜினாமா கடிதத்தை குடுப்பன்னு நான் நினைச்சி கூட பார்க்கல சரா.."

"நான் ஏற்கனவே முடிவு பண்ண விஷயம்தான் டா அது.. Mr.வசந்தனுக்கும் என் நிலைமை நல்லாவே தெரியும். அவரும் ஒத்துக்குட்டார்.. அதோட இனிமே எனக்கு எதுக்கு பேங்க் எல்லாம்..?.. எனக்கு என் உலகமே இந்த பொருக்கிதான்.. அந்த அழகு பிசாசோட கம்பெனிக்குத்தான் நான் இனிமேற்கொண்டு ஃபைனான்ஸ் மேனேஜர்.." - ராகவ் மீது சாய்ந்து அவன் கன்னங்களின் மீது தன் கன்னம் உரச சந்தோஷமாய் பேசினாள் சரா..
"நம்ம பசங்களை அவங்க ரெண்டு தாத்தா பாட்டிகளும் போட்டி போட்டு பார்த்துக்குறேன்னு சொல்லி நம்மள வழி அனுப்பி வெச்சுட்டாங்க...இருந்தாலும் பசங்க ஞாபகமாவே இருக்குடா..." என்றாள் சரா..

"ஹேய் சரா.... குழந்தைங்க ரொம்ப நாளா ஏங்கிக்கிட்டு இருந்த பாசம் அவங்களுக்கு கிடைச்சு இருக்கு...அவங்க சந்தோஷமா இருப்பாங்கடா... கீழ லேண்ட் ஆனதும் போன் பண்ணி பேசலாம் சரியா..."என்றான் அன்பாக அவள் தலையை தடவியபடி...

அப்போது முன் சீட்டில் ஓரு குழந்தை எக்கி பிடித்துக்கொண்டு.. கையில் உருட்டி வைத்த வெண்ணை உருண்டை போன்ற தலையுடன் வாயில் ஜொள்ளு விழ தன் சிறிய பொக்கை வாயை காட்டி "ஹேஹ்ஹே" என்று அழகாய் சிரித்தது..

"ஹா ஹா.. அந்த வெள்ளகார குழந்தை "பேபீஸ் டே அவுட்" படத்துல வர்றா மாதிரியே க்யூட்டா இல்ல?..." - ஆசையாய் அந்த குழந்தையின் பூ போன்ற கன்னத்தை தடவி பார்த்தாள் சரா....

"நமக்கு பொறக்க போற குழந்தை கூட இப்படிதான் இருக்கும், உன்ன மாதிரியே அமுல் பேபி மாதிரி...... ஹா ஹா.."

"ஏற்கனவே என்ன மாதிரி ஒரு பையனும், உன்ன மாதிரி ஒரு பொன்னும் இருக்குதுங்க... வேணும்னா கார்த்திக் மாதிரி ஒரு சமத்து பையனை பெத்துகலாம்... ஹா ஹா.." என்று சிரித்தாள்..

"ஹாஹ்ஹா... ஹா..ஹா.." - கார்த்திக் பற்றி சரா பேசும்போது ராகவ் அவனை எண்ணி சிரித்துக்கொண்டிருந்தான்.

"ஏய்.. எதுக்கு இப்போ சிரிச்ச?.. அந்த குழந்தைய பார்த்தா?.." -குழப்பத்தில் கேட்டாள் சரா..

"அது ஒன்னுமில்ல.... தாலி கட்டி முடிச்ச பிறகு கார்த்தி உன் கிட்ட சொன்னத நினைச்சி சிரிச்சேன்.."

"ஹா ஹா.. அவன் ஒரு அராத்து.... அதுலயும் சொல்லும்போது முகத்தை சீரியஸ்ஸா தொங்க போட்டு ஏதோ சொன்னான்.... ஆமா அவன் என்ன சொன்னான்..? மறந்துடேன்டா.. ஹா ஹா - என்று சங்கீதா சிரிக்கும்போது ராகவ் "வாவ் ஹணி.... க்ளாசிக் ஸ்மைல்டி.. திருப்பி அதே மாதிரி சிரி... ப்ளீஸ் ப்ளீஸ்... வின்டோ வெளிச்சத்துல சைடு ஃபேஸ்ல உன் சிரிப்பு அவ்வளோ நெச்சுரலா ரொம்ப அழகா இருந்துச்சிடி... நான் ஒரு ஃபோட்டோ எடுக்குறேன்டி... சிரி சிரி...." என்று ராகவ் தனது சிறிய டிஜிட்டல் கேமராவை எடுக்கும்போது.....

"ஹைய்யோ... போடா... வர வர சும்மா இதே வேலையா போச்சு உனக்கு.. க்ஹ்ம்..." கிளிக்.. கிளிக்... என்று சங்கீதா வெட்கப்படும்போது ராகவ் அவளது சிவந்த கன்னங்களுடன் கூடிய சிரிப்பை கிளிக் செய்து கொண்டான்...

"ஏய்.. சரி... முதல்ல கேட்டதுக்கு பதில் சொல்லு.... அவன் ஏதோ சொன்னானேடா... என்ன சொன்னான்.."

"அது ஒண்ணுமில்ல "உங்கள மாதிரி நாலஞ்சு அழகான பொண்ணுங்களுக்கு என் அக்கா தங்கையா இருக்குற பாக்கியம் கிடைச்சி இருக்கு.. ஆனா... உங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கல" அப்படின்னு சொல்லிட்டு அமைதியா இருந்தான்.... நான் கூட எதுக்கு இவன் இவளோ ஃபீல் பண்ணி பேசுறான்னு யோசிச்சேன், அப்புறும் மெதுவா நெஞ்சுல கை வெச்சி "கன்ஃஃப்யூஸ் ஆகாதீங்க.. நீங்க அதை விடவும் உயர்ந்த அண்ணி ஸ்தானத்துக்கு போய்டீங்கன்னு சொல்ல வந்தேன்னு சைலன்டா சொல்லிட்டு சஞ்சனா கிட்ட போய் ஏதோ கடல வருத்துகுட்டு இருந்தான்...."


"ஹா ஹா...." - ராகவ் சொன்னதை கேட்டு சங்கீதா எதேச்சையாக சிரிக்க மீண்டும் கிளிக்.... கிளிக்.... கிளிக்....என்று ராகவ் கேமரா அவளின் அழகான சிரிப்பை விழுங்கிக்கொண்டது... "அச்ஹோ.. போதுன்டா..."

"வீ கைன்ட்லி ரெக்வஸ்ட் ஆல் தீ பாசன்ஜர்ஸ் டூ ஃபாஸ்டன் யுவர் சீட் பெல்ட்ஸ் ப்ளீஸ்... வீ ஆர் நியரிங் ஹீத்றோ ஏர்போர்ட்" என்று சிறிய போனி டைல் போட்டு குட்டை பாவாடை அணிந்து ராகவுக்கு ரெட் ஒயின் குடுத்த அதே அழகான விமான பணிப்பெண் மைக்கில் ஆங்கிலத்தில் உச்சரிக்க அனைவரும் அவர்களது சீட் பெல்டை அட்ஜஸ்ட் செய்து கொண்டனர்....

விமானம் தரையை நெருங்க நெருங்க சங்கீதாவின் எக்சைட்மென்ட் அதிகம் ஆனது.. அவள் வாழ்வில் இதுதான் முதல் அயல்நாட்டு பிரயாணம்.. முதல் முதலில் பார்க்கும் பிரிட்டிஷ் வெள்ளைகாரர்கள், ஒய்யாரமான ஆங்கில பெண்கள், அவர்களின் கொலேக்கியல் ஆங்கில உச்சரிப்பு.. (அதாவது...மூச்சு விடாம சரசரசரன்னு தொடர்ந்து இங்கிலீஷ் படத்துல பேசுறாங்களே.. அதான்..) தரை இறங்கியபின் விமான நிலையத்துக்குள் இருக்கும் உயர்ரக அலங்காரங்கள் ஆகியவற்றை பார்த்துக்கொண்டே இம்மிக்ரேஷனில் அவளது பாஸ்போர்ட் வீசா விவரங்களை சரி பார்க்கும் பணிப்பெண் முதல், தனது சூட்கேசை கன்வேயர் பெல்டில் இருந்து எடுக்கயில் வெண்மையான வழுவழுப்பான முகத்தில் பிரவுன் நிற புருவங்களை அம்பு போல் வைத்து அழகான ஸ்கர்ட் அணிந்த டீன் ஏஜ் பெண்களையும், சற்றே வயது முதிர்ந்த பெண்கள் மெதுவாக நடக்காமல் வேகமாக சுறு சுறுப்பாய் ஓடுவதையும், ராகவ்தான் உயரம் என்று எண்ணியவளுக்கு அங்கிருக்கும் பணியாளர்கள் ஒவ்வொருவரும் ராகவைக் காட்டிலும் ஓரடி உயரமாக இருப்பதையும் கண்டு ஆச்சர்யமானாள்..

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் பொன் நிற வெளிச்சத்தில் மாலை நேரம் கொஞ்சம் கொஞ்சமாய் மிக அழகாக டாட்டா சொல்லிக்கொண்டிருந்தது... அப்போது அடித்த ஜில்லென்ற காற்று அவளுடைய கண்ணன்களை கொஞ்சம் இறுக செய்தது உடல் முழுக்க சிலிர்க்க வைத்தது.. அந்த சிலிர்ப்பை ராகவின் கைகளை இருக்கி அணைத்தபடி ரசித்துக்கொண்டிருந்தாள் சரா.. அந்த ஏழு நட்சத்திர ஓட்டலின் வண்டி வருவதற்கு சற்று தாமதம் ஆனதால் ராகவ் ஏர்போர்ட் உள்ளேயே ஒரு வண்டியைப் பார்த்து அழைக்க, திடீரென ஆஞ்சநேயர் வாயை போல மிகவும் பெரிய பானட்டுடன் வந்த கம்பீரமான கருப்பு நிற டாக்ஸியில் இருவரும் ஏறினார்கள்.

"குட் ஈவினிங் மேம்.... சார்.... டூ யூ ஹாவ் தீ அட்ரஸ் வித் யூ?" என்று டாக்ஸ்ஸி டிரைவர் சொல்வது வண்டியின் உள்ளுக்குள் இருக்கும் தடிமனான தடுப்பு கண்ணாடியை தாண்டி ராகவ் சங்கீதா அமர்ந்திருக்கும் இருக்கைக்கு பக்கத்தில் உள்ள ஸ்பீக்கரில் கேட்டது.... உடனே ராகவ் தனது வாலட்டில் இருந்து அந்த ஏழு நட்சத்திர ஓட்டலின் பெயரை காண்பித்ததும் டிரைவர் உதடுகளின் இரு முனைகளும் கீழிறங்கி மறு நொடி புருவங்கள் இரண்டும் நன்றாகவே உயர்ந்து....

போகும் சாலை யாவிலும் இரு புறமும் உள்ள வீடுகளின் வெளிப்புற சுவர்கள் செங்கர்களால் அடுக்கி வைக்கப் பட்டதுபோல வடிவம் கொண்டிருப்பதையும், ஒவ்வொரு வீடுகளும் ஒரே அமைப்பின் படி வரிசையாய் இருப்பதையும், ஆங்காங்கே பிசியாக வண்டிகள் ஓடும் சாலைகளில் கூட ட்ராம் ஓடுவதையும், கூடவே சிகப்பு நிறத்தில் டபுள் டெக்கர் பஸ்கள் ஓடுவதையும், மாலைப்பொழுதில் ஸ்டார்பக்ஸ் (STARBUCKS) காஃபி நிலையத்தில் வீடு திரும்பும் எக்ஸிக்யூட்டீவ்ஸ் கழுத்தில் பாதியாய் தளர்த்திய டையுடன் ஒரு கையில் தங்களின் கோட் தொங்கிக்கொண்டிருக்க மற்றொரு கையில் காஃபியை வாங்கிக்கொண்டு ட்ரெயின் பிடிக்க ஓடுவதையும் சற்றும் குனியாமல் நிமிர்ந்தவாறு அனைத்தையும் பார்த்துகொண்டிருந்தாள் சரா....

சற்று நேரம் கழித்து...... உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் ஒரு சில முக்கிய புள்ளிகளான ஃபேஷன் ஜாம்பவான்கள் வந்திறங்கிய இங்கிலாந்தின் மாபெரும் நட்சத்திர ஓட்டலான க்ரோவேனார் ஹவுஸ் முன்பு ராகவ் சங்கீதாவை அழைத்துவந்த ஹோட்டலின் டாக்ஸி கம்பீரமாய் வந்து நிற்க, வெள்ளை நிற க்ளவுஸ் அணிந்து ஓட்டலின் செக்யூரிட்டி உடனடியாக வந்து கதவை திறந்து வரவேற்றார்.

உள்ளே சென்றவுடன் ரிசப்ஷன் லாஞ்சில் தனது IOFI உதவியாளரை ஒரு நொடி ராகவ் தேட.. பின்னாடியிலிருந்து "வெல்கம் பாஸ்.... ஹாய் மேம்" என்றழைத்தபடி பளீரென வந்து நின்றான் ஸ்டீவ்.. முப்பதை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த இளைஞன் IOFI யின் லண்டன் பிராஞ்ச் இன்சார்ஜ்..

"ஹேய் ஸ்டீவ்.. ஹவ் இஸ் எவரிதிங்?" - உற்சாகமாய் கை குலுக்கி பேச ஆரம்பித்தான் ராகவ்.. வெளிநாட்டு வியாபாரங்களை பொருத்தவரை மற்ற நாடுகளில் உள்ள IOFI சீனியர் மேனேஜர்களைக் காட்டிலும் ஸ்டீவ் என்றுமே அவன் மார்கெட்டிங் புத்திசாலித்தனத்தால் ராகவின் மனதை அதிகம் கொள்ளை கொண்டவன்..


"ஹா ஹா...." - ராகவ் சொன்னதை கேட்டு சங்கீதா எதேச்சையாக சிரிக்க மீண்டும் கிளிக்.... கிளிக்.... கிளிக்....என்று ராகவ் கேமரா அவளின் அழகான சிரிப்பை விழுங்கிக்கொண்டது... "அச்ஹோ.. போதுன்டா..."

"வீ கைன்ட்லி ரெக்வஸ்ட் ஆல் தீ பாசன்ஜர்ஸ் டூ ஃபாஸ்டன் யுவர் சீட் பெல்ட்ஸ் ப்ளீஸ்... வீ ஆர் நியரிங் ஹீத்றோ ஏர்போர்ட்" என்று சிறிய போனி டைல் போட்டு குட்டை பாவாடை அணிந்து ராகவுக்கு ரெட் ஒயின் குடுத்த அதே அழகான விமான பணிப்பெண் மைக்கில் ஆங்கிலத்தில் உச்சரிக்க அனைவரும் அவர்களது சீட் பெல்டை அட்ஜஸ்ட் செய்து கொண்டனர்....

விமானம் தரையை நெருங்க நெருங்க சங்கீதாவின் எக்சைட்மென்ட் அதிகம் ஆனது.. அவள் வாழ்வில் இதுதான் முதல் அயல்நாட்டு பிரயாணம்.. முதல் முதலில் பார்க்கும் பிரிட்டிஷ் வெள்ளைகாரர்கள், ஒய்யாரமான ஆங்கில பெண்கள், அவர்களின் கொலேக்கியல் ஆங்கில உச்சரிப்பு.. (அதாவது...மூச்சு விடாம சரசரசரன்னு தொடர்ந்து இங்கிலீஷ் படத்துல பேசுறாங்களே.. அதான்..) தரை இறங்கியபின் விமான நிலையத்துக்குள் இருக்கும் உயர்ரக அலங்காரங்கள் ஆகியவற்றை பார்த்துக்கொண்டே இம்மிக்ரேஷனில் அவளது பாஸ்போர்ட் வீசா விவரங்களை சரி பார்க்கும் பணிப்பெண் முதல், தனது சூட்கேசை கன்வேயர் பெல்டில் இருந்து எடுக்கயில் வெண்மையான வழுவழுப்பான முகத்தில் பிரவுன் நிற புருவங்களை அம்பு போல் வைத்து அழகான ஸ்கர்ட் அணிந்த டீன் ஏஜ் பெண்களையும், சற்றே வயது முதிர்ந்த பெண்கள் மெதுவாக நடக்காமல் வேகமாக சுறு சுறுப்பாய் ஓடுவதையும், ராகவ்தான் உயரம் என்று எண்ணியவளுக்கு அங்கிருக்கும் பணியாளர்கள் ஒவ்வொருவரும் ராகவைக் காட்டிலும் ஓரடி உயரமாக இருப்பதையும் கண்டு ஆச்சர்யமானாள்..

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் பொன் நிற வெளிச்சத்தில் மாலை நேரம் கொஞ்சம் கொஞ்சமாய் மிக அழகாக டாட்டா சொல்லிக்கொண்டிருந்தது... அப்போது அடித்த ஜில்லென்ற காற்று அவளுடைய கண்ணன்களை கொஞ்சம் இறுக செய்தது உடல் முழுக்க சிலிர்க்க வைத்தது.. அந்த சிலிர்ப்பை ராகவின் கைகளை இருக்கி அணைத்தபடி ரசித்துக்கொண்டிருந்தாள் சரா.. அந்த ஏழு நட்சத்திர ஓட்டலின் வண்டி வருவதற்கு சற்று தாமதம் ஆனதால் ராகவ் ஏர்போர்ட் உள்ளேயே ஒரு வண்டியைப் பார்த்து அழைக்க, திடீரென ஆஞ்சநேயர் வாயை போல மிகவும் பெரிய பானட்டுடன் வந்த கம்பீரமான கருப்பு நிற டாக்ஸியில் இருவரும் ஏறினார்கள்.

"குட் ஈவினிங் மேம்.... சார்.... டூ யூ ஹாவ் தீ அட்ரஸ் வித் யூ?" என்று டாக்ஸ்ஸி டிரைவர் சொல்வது வண்டியின் உள்ளுக்குள் இருக்கும் தடிமனான தடுப்பு கண்ணாடியை தாண்டி ராகவ் சங்கீதா அமர்ந்திருக்கும் இருக்கைக்கு பக்கத்தில் உள்ள ஸ்பீக்கரில் கேட்டது.... உடனே ராகவ் தனது வாலட்டில் இருந்து அந்த ஏழு நட்சத்திர ஓட்டலின் பெயரை காண்பித்ததும் டிரைவர் உதடுகளின் இரு முனைகளும் கீழிறங்கி மறு நொடி புருவங்கள் இரண்டும் நன்றாகவே உயர்ந்து....

போகும் சாலை யாவிலும் இரு புறமும் உள்ள வீடுகளின் வெளிப்புற சுவர்கள் செங்கர்களால் அடுக்கி வைக்கப் பட்டதுபோல வடிவம் கொண்டிருப்பதையும், ஒவ்வொரு வீடுகளும் ஒரே அமைப்பின் படி வரிசையாய் இருப்பதையும், ஆங்காங்கே பிசியாக வண்டிகள் ஓடும் சாலைகளில் கூட ட்ராம் ஓடுவதையும், கூடவே சிகப்பு நிறத்தில் டபுள் டெக்கர் பஸ்கள் ஓடுவதையும், மாலைப்பொழுதில் ஸ்டார்பக்ஸ் (STARBUCKS) காஃபி நிலையத்தில் வீடு திரும்பும் எக்ஸிக்யூட்டீவ்ஸ் கழுத்தில் பாதியாய் தளர்த்திய டையுடன் ஒரு கையில் தங்களின் கோட் தொங்கிக்கொண்டிருக்க மற்றொரு கையில் காஃபியை வாங்கிக்கொண்டு ட்ரெயின் பிடிக்க ஓடுவதையும் சற்றும் குனியாமல் நிமிர்ந்தவாறு அனைத்தையும் பார்த்துகொண்டிருந்தாள் சரா....

சற்று நேரம் கழித்து...... உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் ஒரு சில முக்கிய புள்ளிகளான ஃபேஷன் ஜாம்பவான்கள் வந்திறங்கிய இங்கிலாந்தின் மாபெரும் நட்சத்திர ஓட்டலான க்ரோவேனார் ஹவுஸ் முன்பு ராகவ் சங்கீதாவை அழைத்துவந்த ஹோட்டலின் டாக்ஸி கம்பீரமாய் வந்து நிற்க, வெள்ளை நிற க்ளவுஸ் அணிந்து ஓட்டலின் செக்யூரிட்டி உடனடியாக வந்து கதவை திறந்து வரவேற்றார்.

உள்ளே சென்றவுடன் ரிசப்ஷன் லாஞ்சில் தனது IOFI உதவியாளரை ஒரு நொடி ராகவ் தேட.. பின்னாடியிலிருந்து "வெல்கம் பாஸ்.... ஹாய் மேம்" என்றழைத்தபடி பளீரென வந்து நின்றான் ஸ்டீவ்.. முப்பதை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த இளைஞன் IOFI யின் லண்டன் பிராஞ்ச் இன்சார்ஜ்..

"ஹேய் ஸ்டீவ்.. ஹவ் இஸ் எவரிதிங்?" - உற்சாகமாய் கை குலுக்கி பேச ஆரம்பித்தான் ராகவ்.. வெளிநாட்டு வியாபாரங்களை பொருத்தவரை மற்ற நாடுகளில் உள்ள IOFI சீனியர் மேனேஜர்களைக் காட்டிலும் ஸ்டீவ் என்றுமே அவன் மார்கெட்டிங் புத்திசாலித்தனத்தால் ராகவின் மனதை அதிகம் கொள்ளை கொண்டவன்.."க்ரேட் சார்.. நம்ம காஸ்ட்யூம்ஸுக்கு நாலு நல்ல யுரோப்பியன் மாடல்ஸ் ஸ்கிரீன் டெஸ்ட் பன்னி ச்சூஸ் பண்ணி இருக்கேன்.. ஒவ்வொருத்தரும் நல்ல உயரம், ஃபேஸ் கட், உடல் வாகு உள்ளவங்க.. ரொம்பவும் ஹைலி பேய்ட் காஸ்ட்லி மாடல்ஸ் பாஸ். அதுலயும் "கேரன் வில்லட்" ரொம்பவும் டிமாண்ட் உள்ள மாடல்... அவளைத்தான் நாம யூரோப்பின் IOFI பிரான்ட் துணிகளுக்கு முக்கிய மாடலிங் செய்ய ஒப்பந்தம் செய்யணும் பாஸ்.. இவளுக்கு கொஞ்சம் மர்லின் மன்றோ சாயல் அதிகம்... அதான் அவளுடைய ஸ்பெஷல்..." என்று ஸ்டீவ் சொல்லும்போது அனைத்தையும் கவனமாய் கேட்டுக்கொண்டான் ராகவ்..


இவங்க நாலு பேரையும் நம்ம IOFI பிராண்ட் டிரஸ் போட்டு கேட் வாக் பண்ண வெக்குறதுக்கு அடிச்சி புடிச்சி புக் பன்னி இருக்கேன். ஷோ முடிஞ்சதும் இவங்களுக்கு ஸ்பாட் பேமன்ட் ச்செக்ல குடுத்துடனும். ப்ரோக்ராம் லிஸ்ட் இதுதான்.." என்று அந்த விழாவில் டிசைனர்களின் வரிசையை காண்பித்தான் ஸ்டீவ்..

"ஏன் நம்ம பிராண்ட் கடைசியா வருது..?" - குழப்பத்தில் கேட்டான் ராகவ்..

"பாஸ்.. ஒன்னு.. எல்லாத்துக்கும் முன்னாடி முதல் ஷோவா இருக்கணும்.. இல்லைன்னா கடைசியா இருக்கணும்.. நடுவுல வர்றத அவ்வளோவா பலரும் கண்டுக்க மாட்டாங்க.... நானேதான் இந்த ஸ்லாட் வேணும்னு இந்த ப்ரோக்றாம் ஆர்கனைசர் கிட்ட கேட்டு வாங்கினேன்.. கூடவே கொஞ்சம் லைட்டிங் எப்ஃபக்ட்ஸ் இருக்கணும்ன்னு எக்ஸ்ட்ரா பேமன்ட் கூட பன்னி இருக்கேன்..

யூரோப் பொருத்தவரைக்கும் பெண்களுக்கு நம்முடைய உள்ளாடைகள் (Lingerie), ஸ்கார்ட்ஸ், பார்ட்டி வேர் லாங் கவுன் அப்புறம் நைட் வேர்.. இது நாலும் நம்முடைய IOFI பிராண்ட் பொருத்த வரைக்கும் நல்ல அங்கீகாரத்துல இருக்கு. கூடவே முக்கியமான நாலு சிட்டி.. அதாவது க்லாஸ்கோவ், பர்மிங்ஹம், எடின்பறா, லண்டன் போன்ற இடத்துல இதோட சேல்ஸ் ரொம்ப அதிகம். மேடைல மாடல்ஸ் நடந்து வந்த பிறகு கடைசியா நீங்க அவங்க நாலு பேர் கூடவும் சேர்ந்து கூட்டத்தை பார்த்துட்டு போய்டணும். வழக்கமா எல்லா பிராண்ட் ஒனர்களும் கடைசியா மேடையில செய்யுற கலாச்சாரம் தான் இது.. ஒன்னும் புதுசு கிடையாது... அப்போ நீங்க போட்டுக்க வேண்டிய கிராண்ட் ப்லாக் சூட்டும் தயார் பண்ணிட்டேன். கூடவே இந்த விழாவோட ஸ்பெஷால் என்னன்னா Micheal Adams வந்திருக்கார்.. FTV னுடைய ப்ரோப்பரேடர். அது மட்டுமில்லாம அவர் சேனல்ல நம்ம IOFI பிராண்டுக்கு ஒரு ஸ்பெஷால் வீடியோ கவரேஜ் கூட இன்னிக்கி இருக்கு....

ஸ்டீவ் எடுத்துக்கொண்ட சிரமங்களுக்கு வார்த்தைகளால் பாராட்டாமல் ஒரு அழுத்தமான கைகுக்ளுக்களையும் வசீகரமான சிரிப்பையும் பதிலாய் குடுத்தான் ராகவ்..

"ப்ளீஸ் கம் ராகவ்,,, ரொம்ப சாரி நான் இங்கயே நிக்க வெச்சி உங்களுக்கு எல்லாத்தையும் விளக்கிட்டேன்.. ப்ளீஸ் கம் மிஸ்??.." - பெயர் தெரியாமல் ஸ்டீவ் நிற்க..

"ஷி இஸ் மை ஒய்ஃப் மிசஸ். சங்கீதா ராகவ்.. - என்று சராவை அணைத்தபடி ஸ்டீவுக்கு அறிமுகப்படுத்தி புன்னகைத்தான் ராகவ்..

"யுவர் ப்ரசன்ஸ் இஸ் அவர் ஹானர் மேடம்." - என்றான் ஸ்டீவ்..

ராகவ், ஸ்டீவுக்கு சங்கீதாவை அறிமுகப்படுத்தும்போது "மிசஸ்.சங்கீதா ராகவ்" என்று அவன் சொன்னதை கேட்கையில் சங்கீதாவின் மனதுக்குள் ஒரு இனம் புரியாத சந்தோஷம். அது அவளின் முகத்தில் வெளிப்படும் சிரிப்பில் தெரிந்தது.

ஸ்டீவ் வேகமாக நடக்கையில் ராகவ் உடனே அவனை அழைத்து அவன் காதில் ஏதோ சொல்ல.. ஸ்டீவ் "ஓகே.. ஓகே.. சாரி.. இந்த பக்கம் வாங்க.." என்று சிரித்துக்கொண்டே ஒரு டீலக்ஸ் ரூமுக்கு அவர்களை அழைத்துசெல்லும்போது சங்கீதா ராகவின் கைகளை அழுத்தி கோத்தபடி நின்றிருந்தாள், அப்போது யாருக்கும் தெரியாமல் மெதுவாக ராகவை கிள்ளினாள்..

அவுச்... வலிக்குதுடி... ஏன் கில்லுற?.. - ராகவ் காற்று கலந்த குரலில் மெதுவாக கேட்க...

"அவன் கிட்ட என்ன சொன்ன?... ஏன் அவன் சிரிக்கிறான்...?" - ராகவ் ஏதாவது தில்லுமுல்லு வேல செய்வான் என்ற எண்ணத்தில் சிரித்துக்கொண்டே கேட்டாள் சங்கீதா..

"அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ சும்மா வா..." - என்றான் ராகவ்.... உண்மையில் அவளுக்கு அன்று இரவு இவர்கள் தேன்நிலவு கொண்டாடும் முக்கியமான அறையை காமிகாமல் இருக்கத்தான் ராகவ் இவளை தற்போது வேறொரு சாதாரண ரிலாக்சிங் அறைக்கு அழைத்து சென்றான்....

நடந்து போகும் பாதை யாவிலும் மேற்புரம் அழகிய ஆர்ச் வடிவில் சுவர்கள் அலங்காரம் செய்யப்பட்டு சிறிய வடிவில் கண்ணாடி சான்ட்லியர் விளக்குகள் சீராக தொங்கப்பட்டிருந்தன. பாதை முழுக்க ஆங்கிலேயர்களின் பழைய காலத்து பாரம்பரிய வயலின் மற்றும் பியானோ இசை காதை வருடிக்கொண்டிருந்தது....

"ஹியர் யு கோ சார்...." என்று ஸ்டீவ் ராகவ்கு ஒரு அறையை திறந்து வைத்து அவர்களுடைய பெட்டிகளையும் உள்ளே தானாக வந்து அடுக்கி வைத்துவிட்டு சார் இன்னும் ரெண்டுமணி நேரத்துல தயாராகிடுங்க.. ஷோ ஆரம்பிச்சிடும். என்று சொல்லிவிட்டு அவசரமாக மற்ற வேலைகளை கவனிக்க ஓடினான் ஸ்டீவ்... அப்போது ஒரு நொடி நின்று "பாஸ்..." என்று ராகவை அழைத்தான்.

"எஸ் ஸ்டீவ்..." - சங்கீதாவுடன் சற்று நேரம் தனிமை கிடைக்கபோகும் சந்தோஷத்தில் சிரித்துக்கொண்டே உற்சாகமாய் இருந்தான் ராகவ்....

"எத்தினி பேர் இருந்தாலும் நம்ம ஷோ எல்லார் கண்ணையும் நிச்சயம் பறிக்கும்.... குட் லக் பாஸ்...."

"ஹா ஹா.. கண்டிப்பா ஸ்டீவ்.." ஸ்டீவை வழி அனுப்பிவிட்டு உடனே கதவை சாத்தி விட்டு உற்சாகமாய் உள்ளே வந்தான் ராகவ்..

முகம் பார்க்கும் கண்ணாடியின் முன் தன் சராவை ஓடிப்போய் பின்னடியிருந்து அழுத்தி கட்டி அணைத்தான் ராகவ்...

ஹேய்ய்.... அய்யா இதுக்குதான் ரொம்ப நேரமா காத்துட்டு இருந்தீங்க போல தெரியுது... - ராகவின் இறுக்கமான பிடிப்பில் சந்தோஷத்துடன் கண்ணாடியில் அவன் முகத்தைப் பார்த்து சிரித்தபடியே கேட்டாள் சங்கீதா..

பின்ன என்னவாம்?.... கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆச்சு.. இன்னிக்கி வரைக்கும் உன்னை நான் கிஸ் மட்டும்தான் பண்ணி இருக்கேன்.. அதுவும் கன்னத்துல மட்டும்தான்..."

"ஹா ஹா.. பார்வைய பாரு...." - ராகவின் கண்களில் அந்த விளையாட்டான சோக பார்வையை சிரித்துக்கொண்டே உணர்ந்தாள் சரா....


சராவின் இடுப்பை ராகவ் பின்பக்கமிருந்து நின்றவாறு அழுத்தமாய் கட்டி இருக்க, அவள் தன் கரங்களை எடுத்து கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே ராகவின் பின்புற தலை முடியை தடவி மெதுவாய் பேசினாள்.. "கொஞ்ச நாளா நான் அந்த விஷயத்துக்கு மனசளவுல தயாராகாம இருந்தேண்டா செல்லம்.. உனக்காக வரேன்னு சொல்லிட்டு உன் கூட கட்டில்ல இருந்தா நீ மட்டும்தான சந்தோஷமா இருப்ப?.... ஒரு நாள் அது கூட எனக்கு பரவாயில்லன்னு நினைச்சி என் செல்லத்தோட சந்தோஷம்தான் முக்கியம்னு நான் வந்தப்போ எவ்வளவோ நான் சிரிச்சி சந்தோஷமா பேசியும் எனக்கு இன்னும் அந்த விஷயத்துல மணசு முழுசா ஒத்து போகலைன்னு என் கண்ண பார்த்தே கண்டு புடிச்சி உனக்கும் எப்போ என் கூட அந்த சுகம் அனுபவெக்கலாம்னு தோணுதோ அப்போவே நாம சேரலாம்னு சொன்ன ஸ்வீட் பொருக்கிடா நீ... இன்னிக்கி வரைக்கும் என் வாழ்கைல நான் அதிகம் நேசிச்சது என் குழந்தைகள தான்... அத விடவும் பைத்தியமா நான் இந்த உலகத்துல நேசிக்குற ஒரே விஷயம் இந்த பொருக்கி புருஷன தான்.." என்று அவன் கண்ணத்தில் செல்லமாக தட்டிவிட்டு "ப்ச் ப்ச் ப்ச்.." என்று அவன் காதினில் மென்மையாக முத்தம் குடுத்தாள்....


No comments:

Post a Comment