Pages

Monday, 16 November 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 37

"ஹ்ம்ம்.. என்னடி செஞ்ச? யாரு அவன்?" - மென்மையாக சிரித்துக்கொண்டே சமையலறையில் டீ தூள் தேடினாள் சங்கீதா..

"சொல்லுறேன் அதுக்குத்தானே வந்திருக்கேன், அவன் கிட்ட வாங்கின சில முக்கியமான டீடேய்ல்ஸ் பத்தி உங்க கிட்டயும் ராகவ் கிட்டயும் சொல்லணும்.... இதுக்கு முன்னாடியே சொல்லி இருப்பேன், ஆனா அதுக்கான நேரம் இப்போதான் வந்திருக்கு."....சஞ்சனா பேசிக்கொண்டிருக்க வெளியில் கார் நிற்கும் சத்தம் கேட்டது..

ராகவ் அலுவலகத்தில் இருந்து கழுத்தில் கட்டின டை கூட கழட்டாமல் அப்படியே அங்கே வந்தடைந்தான். சஞ்சனாவையும் ராகவையும் பார்த்ததில் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி. மாடியில் மஞ்சள் வெயிலில் குழந்தைகள் விளையாட மூவரும் சூடாக டீ அருந்தி கொண்டே ஜில்லென்ற காற்றில் பேச தொடங்கினார்கள். சஞ்சனா மித்துனிடம் கறந்த விஷயங்களை ராகவிடமும் சந்கீதாவிடமும் பகிர்ந்து கொண்டாள். அதாவது.. அலுவலகத்துக்குள்ளேயே, குமார் ஃபாக்ட்ரி கழிவுகளில் இருந்து சில வஸ்துக்களை மூட்டை கட்டி ஒரு லாரியில் தினமும் இரவு துரையோட லெபாரேட்ரிக்கு அனுப்பி வைப்பதும், அதற்கு அடுத்த நாள் காலை அங்கிருந்து IOFI வளாகத்துக்குள் அதே லாரியில் ஃபாக்ட்ரிக்கு தேவையான சாமானுடன் லெபாரேட்ரியில் ப்ராசஸ் செய்யப்பட்ட சில பொருட்கள் வருவதற்கு க்லியரன்ஸ் வாங்கித் தருவது மித்துனின் வேலை என்று ஒவ்வொன்றும் விலாவரியாக எடுத்து சொன்னாள்.

சற்று கண்களை மூடி ஆழமாக யோசித்து "எப்படி அவன் துரைக்கு வேலை செய்ய ஆரம்பிச்சான்? எப்படி அவனுக்கு துரை கான்டாக்ட் கிடைச்சிது? என்றான் ராகவ்..

"அதை... நா.... வந்து... அது..." - சஞ்சனா தயங்கினாள்..

"என்ன வந்து போயி.. சொல்லு.." - கேட்க்கும்போதே ராகவின் முகம் கொஞ்சம் சிவந்தது. அது சஞ்சனாவுக்கு லேசான பயத்தை உண்டாக்கியது.

"நான் சொல்லுவேண்டா, ஆனா நீ கோவப்படக் கூடாது.. பொறுமையா கேட்கனும். சரியா? இந்த நிமிஷம் உனக்கு பொறுமை ரொம்ப முக்கியமா தேவைப் படும்... அப்போதான் அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்க முடியும். புரிஞ்சிக்கோடா.. நீ பார்க்குற பார்வைய பார்த்தா எனக்கு சொல்ல பயமா இருக்கு..... அக்கா.." - என்று சொல்லி சந்கீதாவைப் பார்த்தாள் சஞ்சனா..

"நான் கோவப்படுற அளவுக்கு அப்படி என்ன இருக்குது?" - கண்களை இருக்கியவாறு கூர்ந்து பார்த்து கேட்டான் ராகவ். அப்போது சங்கீதா குறுக்கிட்டாள்.

"நீ சொல்லுமா, யாரும் ஒன்னும் கோவப்பட மாட்டாங்க...." - சற்று அழுத்தமாக சொல்லி, ராகவை நோக்கி ஓரக்கண்ணால் லேசாக முறைத்து "பேசாமல் இரு" என்று சொல்லாமல் சொன்னாள் சங்கீதா. அந்த பார்வைக்கு உண்மையில் கொஞ்சம் அடங்கினான் ராகவ்.

"அவனுக்கு துரை யாருன்னு தெரியாது, ஆனா அவன் கிட்ட இருந்து நிறைய மிரட்டல் கடிதாசி வரும்னு சொல்லி இருக்கான். ஒரு நாள் அவன் ஒரு நைட் க்லப்பில் நல்ல போதையில் சீட்டு விளையாடிட்டு இருக்கும்போது யாரோ உன்னை சம்மந்த படுத்தி அவன் கிட்ட பேசும்போது அவன் உன்னுடைய லாப கணக்குல வர பணம் அப்போ அப்போ உனக்கே தெரியாம திருடுறதும்.. அது உனக்கு தெரியாதுன்னும் சொல்லி இருக்கான்.. அப்புறம்... - மேலே சொல்ல தயங்கினாள் சஞ்சனா..

"அப்புறம்?...." - மீண்டும் ராகவின் முகம் அவளின் பதிலை கூர்ந்து கவனித்தது....


சற்று தயக்கத்துடன் பேச ஆரம்பித்தாள்.. "உன்னை பத்தியும் அக்காவைப் பத்தியும் தப்பா பேசி இருக்கான். அதை எப்படியோ துரை அவன் செல் ஃபோன்ல ரெக்கார்ட் பண்ணி அவனுக்கு அனுப்பி வெச்சி உன் கிட்ட அவனை போட்டு குடுத்துடுவேன்னு சொல்லி மிரட்டி இருக்கான், அந்த கோழையும் உனக்கு பயந்துதான் இந்த காரியத்துல இறங்கி இருக்கான்." - என்று மூச்சு விடாமல் சீக்கிரமாக சொல்லி முடித்தாள் சஞ்சனா..

"என்ன தப்பா பேசினான்?" - ராகவின் முகம் உண்மையில் நன்றாகவே சிவந்தது.

"அது.. வந்து.. இதை பாரு.." - என்று தனது செல் ஃபோனில் அன்று இரவு அவனுடய ஃபோனில் இருந்து காப்பி செய்த வீடியோவை காமித்தாள் சஞ்சனா... சங்கீதாவும் அதை ராகவுடன் சேர்ந்து பார்த்தாள்.

வீடியோவில் மித்துன் காமிக்கும் முகபாவனைகளும், பேச்சும் கேட்கும்போது ராகவ் அவனது இருக்கையின் கைப்பிடியை இறுகி பிடித்தான். தனது அக்கவுன்டில் இருந்து காசு திருடுவதற்கு கூட அவன் அதிகம் கோவப் படவில்லை... அதன் பிறகு அவன் சந்கீதாவைப் பற்றியும் சஞ்சனாவைப் பற்றியும் பேசிய வார்த்தைகளை கேட்க கேட்க உண்மையில் ரகாவ்கு பொருக்க முடியவில்லை.. உடனடியாக கை சட்டையை மடக்கிக் கொண்டு ஆவேசமாக எழுந்தான்.. அப்போது உடனடியாக சங்கீதா ராகவின் கைகளைப் பிடித்து நிறுத்தினாள்.

அவன் வாயலதானே என்னை மானபங்கம் பண்ணுவேன்னு சொல்லி இருக்கான்.. நிஜத்துல செய்துட்டானா? அப்படி ஒரு எண்ணத்தோட வந்தா அவனை நானே ரெண்டா வெட்டிடுவேன்.. யாருடைய உதவியும் எனக்கு தேவை படாது.. இப்போ நீ என்ன பண்ண போற? அவன கொல்ல போறியா?... அப்படியெல்லாம் பண்ணிட்டு ஜெயிலுக்கு போய் உட்காராத.... அப்புறம் என்னால உன்னை அங்க வந்து பார்க்க முடியாது." - கோவத்தில் சீறினாள் சங்கீதா.

"அக்கா.. அவன் அன்னிக்கி பேசின பேச்சுக்கு நான் ஏற்கனவே நிறைய குடுத்துட்டேன்கா" - மெதுவாக சஞ்சனா சங்கீதாவிடம் பேசியதைக் கேட்டுவிட்டு "என்ன குடுத்த?... எண்ணத்த குடுத்துட்ட?... சும்மா நாலு வார்த்தை திட்டிட்டு வந்திருப்ப.. அவளோதானே?.. அவனுக்கு அதெல்லாம் பத்தாது.." என்று ராகவ் கத்த.. அதற்கு மேல் வாய் மூடி இருந்த சஞ்சனா பொங்க ஆரம்பித்தாள்.

"போதும் நிறுத்துடா.. சும்மா பெரிய இவனாட்டம் கத்துற.. நான் ஒன்னும் அவளோ சொரணை கேட்ட ஜென்மன் இல்ல, உன்னால அவனுக்கு வெளி காயம் மட்டும்தான் குடுக்க முடியும், ஆனா நான் அன்னிக்கி அவனுக்கு வெளிக்காயம் மட்டும் இல்ல, உள்காயமும் குடுத்துட்டு வந்திருக்கேன். ஒரு ஆம்பளையா உன்னால குடுக்க முடியாத அளவுக்கு அன்னிக்கி நான் அவனுக்கு திருப்பி குடுத்து இருக்கேன். கிட்டத்தட்ட உரிச்ச கோழியாக்கி வேக வெச்சி அனுப்பி இருக்கேன். அவன் குணமாகி எழுந்திருக்கவே கொஞ்ச மாசமாகும்." - சொல்லும்போது அன்று மெளனமாக உள்ளுக்குள் அனுபவித்த வேதனைகளை எண்ணி லேசாக கொஞ்சம் அழ ஆரம்பித்தாள் சஞ்சனா.

"சங்கீதா மெதுவாக சஞ்சனாவின் கைகளை பிடித்து, "நிஜமாவா?" என்று பாவனை செய்வது போல கேட்க "ஆமாம் கா...." என்று மெதுவாக சொல்ல "நீதாண்டி என் தங்கச்சி" என்று சொல்லி அவளை தன் தோளில் சாய்த்தாள் சங்கீதா.

"நீ அழாதடா, எவளோ பெரிய காரியம் பண்ணி இருக்கே!.. நிஜமாவே சில நேரத்துல எப்படிதான் இந்த முட்டாள் CEO ஆனான்னு எனக்கு சந்தேகம் வரும். பொறுமையே இல்லாத ஜென்மம்.... ச்ச...." - சஞ்சனாவை தோளில் சாய்த்து ராகவை பொய்க் கோவத்துடன் முறைத்தாள் அவனது சரா..


"கரெக்டா சொன்னீங்கக்கா.. எனக்கு கூட அப்போ அப்போ அது தோணும்...." - கண்களைத் துடைத்துக் கொண்டு ராகவை முறைத்தாள் சஞ்சனா....

"ஆமா, பொறுமையா இருக்குறதைப் பத்தி பேங்க் மேனேஜர் பேசுறாங்க.." என்று மெதுவாக உள்ளுக்குள் முனு முணுத்துக் கொண்டான் ராகவ்....

"என்ன சொன்ன?" - சொடக்கு போட்டு கேட்டாள் சரா..

"ஒன்னும் இல்ல.... எனக்கு பொறுமை கம்மின்னு நானே சொல்லிக்கிட்டேன்...." - சங்கீதாவின் கேள்விக்கு, ராகவ் அசடு வழிந்து அடிபணிந்து பதில் சொன்னதைப் பார்த்து "ஹா ஹா.. உனக்கு சங்கீ அக்காதான் டா கரெக்ட்...." என்று ஈர விழிகளுடன் இருக்கும்போதே குபுக்கென சிரித்தாள் சஞ்சனா..

மூவரும் பேசி முடித்து சற்று அமைதியாய் இருக்கும்போது ராகவ் செல் ஃபோனில் "வேக்.. வேக்..." என்று சத்தம் வந்தது... - வேறு யாரும் அல்ல, அவனது நண்பன் Mr.வாத்து தான்!.. அமைதியாக இருக்கும்போது அந்த வித்யாசமான சத்தம் கேட்டு சங்கீதாவும், சஞ்சனாவும் புருவம் உயர்த்தி சிரித்தார்கள்..

அவனது நண்பனின் ஃபோன் கால் எடுத்து அட்டென்ட் செய்தான் ராகவ், அப்போது கார்த்திக் நாளை விடிகாலை வருவதாக சொல்லிவிட்டு ஃபோன் கட் செய்தான். அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்து "ஹ்ம்ம்... நாளைக்கு ஒரு கிறுக்கன் வரான், நாம நாலு பேரும் எங்கயாவது ஒரு ஒளடிங் போய்டு வரலாம்." என்று உற்சாகமாய் சொன்னான் ராகவ்.

"கிறுக்கனா? யாரு?" - என்றாள் சஞ்சனா ஸ்வாராஸ்யமாக, அந்த ஸ்வாராஸ்யத்தை கவனிக்க தவறவில்லை சங்கீதா....

"என்னோட ஸ்கூல் ஃபிரண்ட் கார்த்திக்...." - என்று ராகவ் சொன்னதும்.... "கார்த்திக்... ஹ்ம்ம்..." - என்று புருவத்தை உயர்த்தி லேசாக சிரித்து சஞ்சனாவைப் பார்த்து கண் அடித்தாள் சங்கீதா. அதற்கு சஞ்சனாவிடம் இருந்து லேசான புன்னகை மட்டுமே வந்தது..

"சரி நான் இப்போ கிளம்புறேன்...." - என்று எழுந்த ராகவ் சஞ்சனாவைப் பார்த்தான்... அவள் மனதளவில் நிறையவே தன்னை வருத்தி பல காரியங்களை செய்திருக்கிறாள் என்று புரிந்தது அவனுக்கு....

அங்கிருந்து கிளம்பும்போது சஞ்சனாவிடம் "ஐ ம் சாரி சஞ்சனா... எனக்காக நீ நிறைய சிரமப்பட்டிருக்கே.. நீ சொன்ன விஷயம் ரொம்ப முக்கியமானது, அதை வெச்சி நம்ம காளிதாஸ் கிட்ட ஒரு ரிப்போர்ட் எடுத்து பார்த்தால் அதுல ஓவர் டைம் யார் இருந்திருக்காங்களோ கண்டிப்பா அவங்க இந்த விஷயத்துல சம்மந்தப் பட்டிருப்பங்கனு கொஞ்சமாவது உறுதியா சொல்ல முடியும்னு நினைக்கிறேன்.. நீ என்ன சொல்லுற?" - என்றான் ராகவ்.. காளிதாஸ் என்பவர் பல ஆண்டுகளாக IOFIல் விசுவாசியாக வேலை பார்த்து வரும் நம்பிக்கையான மூத்த ஊழியர்.

"சாரி எல்லாம் சொல்ல வேணாம்டா.... போயி உன் மைன்டுக்கு என்ன அடுத்து செய்யனும்னு தோணுதோ அதை செய்..." என்று கூலாக சொன்னாள் சஞ்சனா..

"ராகவ்... அப்படியே காளிதாஸ் குடுக்குற அந்த ரிப்போர்ட்ல யாரோட பேரு அடி படுதோ அவங்க பேரை போலீஸ் கிட்ட இம்மீடியேட்டா சொல்லி என்ன பன்றாங்கன்னு கவனிக்க சொல்லுறதுதான் இன்னும் பெஸ்ட்..." - என்றாள் சங்கீதா. "யேஸ்.... அக்கா சொல்லுறது கரெக்ட்" என்று சஞ்சனாவும் அதை ஆமோதித்தாள்.

"ஹ்ம்ம்... இன்னிக்கே நான் இன்ஸ்பெக்டர் கிட்ட பேசுறேன்.." என்று சொல்லிவிட்டு சில நொடிகள் அமைதியாய் இருந்தான் ராகவ்.. அவனைப் பொருத்தவரை இவர்கள் மூவரையும் சுத்தி சீக்கிரமே ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று ஒரு இன்ட்யூஷன் இருந்தது. அப்போது "சஞ்சனா.. இஃப் யூ டோன்ட் மைன்ட்.. இன்னைக்கி நீ சங்கீதா கூட இருந்துடேன், நாளைக்கு காலைல நான் கார் அனுப்புறேன். ரெண்டு பேரும் என் இடத்துக்கு வந்துட்டா என் ஃபிரண்ட் கூட சேர்ந்து எங்கயாவது போகலாம்... சீரியஸ்லி வீ ஆல் நீட் ஏ ப்ரேக்" - என்று ராகவ் சொல்ல "ஹ்ம்ம் சவுண்ட்ஸ் குட்.." என்றாள் சஞ்சனா.. 


ராகவ் IOFI வளாகத்துக்கு கிளம்பினான். இரவு நேரம் நெருங்கி இருந்தது. போகும் வழி யாவும் சஞ்சனா மித்துனிடம் இருந்து கறந்த விஷயங்களை மனதில் எண்ணிக்கொண்டே சென்றான். ஃபாக்டரி கழிவுகள்.. லாரி க்லியரன்ஸ்.... மரத்துண்டுகள்.... அனஸ்தீஷ்யாவால் குமாரைக் கொன்ற விதம்.... என்று பல விஷயங்களையும் மனதில் ஓட்டிக்கொண்டிருந்தான். சிந்தித்து சிந்தித்து மிகவும் அசதியானது ராகவ்கு.. அடர்த்தியான வீதியில் கொஞ்சம் வேகமாக ஓட்டி சென்றான். வீதியில் விளக்குகள் கூட இல்லை.. ஏதாவது பாட்டு கேட்கலாம் என்று ரேடியோ ஆன் செய்தான்.. "எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா" என்ற பாடல் வர, அதை ஹம் செய்து கொண்டே மனதில் அவனது சாராவை கற்பனை செய்து சீட்டை கொஞ்சமாக பின் பக்கம் சாய்த்தான்.... திடீரென சற்றும் எதிர்பாராதவிதம் காரின் பின் பக்க கண்ணாடியை டமால் என்று உடைத்துக் கொண்டு ஒரு கைப்புடி அளவு கருங்கல் கார் உள்ளே விழுந்தது. தெருவில் கிறீச் என்று காதைக் கிழிக்கும் சத்தத்துடன் டயரில் புகை வரும்விதம் பிரேக் போட்டான் ராகவ். ரியர் வியூ கண்ணாடி மூலம் ஏதோ ஒரு உருவம் ஓடுவது தெரிந்தது ராகவ்கு... உடனே கார் விட்டு இறங்கி பின் பக்கம் அந்த உருவத்தை நோக்கி மிக வேகமாக ஓடினான், ஒரு கட்டத்தில் அந்த உருவம் கண்ணுக்கு தெரியவில்லை. அவனை சுத்தி முழுவதும் இருட்டும் நிசப்தமும் நிறைந்திருந்தது. சற்று நேரம் இரவு நேர பூச்சிகளின் "க்ரீச்.. க்ரீச் .." என்ற சத்தம் மட்டும்தான் கேட்டது.... தீடீரென அந்த உருவம் ராகவின் முதுகுக்குப் பின்னால் வந்து அவனை இருக்கி பிடிக்க, அந்த ஒரு கண நொடி எதற்கும் பயப்படாமல் சற்றும் அசராமல் தன் வலது காலால் அந்த உருவத்தின் காலை ஓங்கி மிதித்து தன் தலையால் பின் பக்கம் வேகமாய் அடிக்க, அந்த அடியின் வலியை தாங்கி மீண்டும் ராகவை தாக்க முற்பட்டது அந்த உருவம்.... ஒரு கையைத் தூக்கி அவனை அடிக்க முற்படும்போது அதை கச்சிதமாக இடது கையால் பிடித்து நெஞ்ஜாங்க்கூடுக்கு நடுவில் தோள்களின் தசைகளை இருக்கி ஒட்டுமொத்த பலத்தையும் குடுத்து ஓங்கி தன் முஷ்டியை மடக்கி அடித்த அடியில் உண்மையில் மோசமான உள்காயம் ஏற்பட்டிருக்க வேண்டும்..அதற்க்கு ஆதாரமாக வலி பொருக்க முடியாமல் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அந்த இருட்டில் மீண்டும் அந்த உருவம் எங்கோ சென்று மறைந்தது. மீண்டும் அவன் கண்ணுக்கு அது தென்படவில்லை.. "எவனா இருந்தாலும் வாடா.... நான் மட்டும் தான் நிக்குறேன் வா.. எங்கே ஓடுன... வா" என்று மீண்டும் அந்த இருட்டினில் உரக்க கத்தினான் ராகவ்... சில நிமிடங்கள் சுற்றும் முற்றும் பார்த்தான்.. யாரும் தென்படவில்லை.. காரின் லைட் வெளிச்சம் தான் அவன் தெருவில் நடப்பதற்கு உதவியது. காரில் எரி அமர்ந்த பிறகு பின் சீட்டில் உள்ள அந்த கல்லை எடுத்துப் பார்த்தான், அதில் ஒரு சிறிய காகிதம் சுருட்டி கட்டப்பட்டிருந்தது.

அதைப் பிரித்து படித்தான்.... அதில்.. "எங்களுடைய டார்கெட் நீ மட்டும்தான் ஆனா பாவம் உன் கூட ஒரு சின்ன கூட்டணியும் சேருது, அது அவங்களுக்கு நல்லதில்ல.... நான் வாங்கின வடு சாதாரனமானது இல்ல.... நிச்சயம் திருப்பி குடுப்பேன்.." - கஷ்ட்டப்பட்டு புரிந்து கொள்ளும் கையெழுத்துதான், இருப்பினும் ஒரு வழியாக எழுதியது என்னவென்று புரிந்துகொண்டான் ராகவ்.

வண்டியை மெதுவாக தனது பர்சனல் வி.ஐ.பி லாஞ்ச் முன்னே நிறுத்திவிட்டு உள்ளே சென்றான்.. இருட்டாக நிசப்தம் நிறைந்த அறையில் மிதமான மஞ்சள் வெளிச்சம் தரும் விளக்கை ஆன் செய்தான். மீண்டும் ஆழ்ந்து சிந்தித்தான். யார் யாரோ மனதுக்குள் நினைவில் வந்தார்கள், "இருக்காது.... அவங்களா இருக்காது" என்று யோசித்துக் கொண்டே இருந்தான்.... பிறகு காளிதாசுக்கு ஃபோன் செய்தான்..


"ஹலோ நான் ராகவ் பேசுறேன்.." - ஷர்ட் டை அவிழுத்துக்கொண்டே கண்ணாடியில் தன் முகம் பார்த்து பேசினான்....

"சொல்லுங்க தம்பி.."

"சார் எனக்கு நம்ம கம்பெனியோட டைம் இன் டைம் அவுட் டிஜிட்டல் மெஷீன் ரிப்போர்ட் வேணும்... அதுவும் கடந்த ஒரு மாசத்துக்கு இருக்குற ரிப்போர்ட் வேணும்.." - சொல்லிக்கொண்டே ஏதோ சிந்தித்தான்..

"என் கிட்ட ஏற்கனவே இருக்கு சார், ஆடிட் பன்றதுக்கு ஏற்கனவே எடுத்து வெச்சி இருக்கேன்." - என்றார் தூக்கக் கலக்கத்தில் பொறுமையாக..

"நல்லதாப் போச்சு.., யாராவது ஓவர் டைம் இருந்து இருக்காங்களான்னு கொஞ்சம் பார்த்து சொல்ல முடியுமா?" - பரபரப்புடன் கேட்டான் ராகவ்..

"இருங்க பார்குறேன்.. ஹச்.." - சற்று இரும்பியவாறு தேடினார் பெரியவர்....

மறு முனையில் அவர் பார்க்கும்போது ராகவ்கு சற்றுமுன் நடந்த தாக்குதலின் காரணமாக சிலர் மேல் சந்தேகம் இருந்தது.. ஆனால் உறுதியான காரணம் எதுவும் மனதில் தோன்றாததால் அமைதியாக மீண்டும் சிந்தித்தான்..

"சார்.. சொல்லுறேன் கேட்டுகோங்க.." - என்று ஓரிரு பெயர்களை சொன்னார் காளிதாஸ். அவர் சொன்ன பெயர்களை கேட்டபோது ராகவ்கு ஜிவ்வென்று இருந்தது. காரணம் அதில் ஒரு பெயர் அவன் சந்தேகம் கொண்ட பெயர். மற்ற பெயர்கள் பல மணி நேரம் அலுவலகத்தில் இருந்ததாய் காமிப்பதற்கு காரணம் இருக்கிறது. ஆனால் அந்த ஒரு பெயருக்கு அவ்வளவு அவசியம் இருப்பதாக தெரியவில்லை.

"சார்... ஹச்.. இருக்கீங்களா?" - சத்தம் எதுவும் கேட்காததால் உரக்க பேசினார் பெரியவர்..

"ஆங்.. இருக்கேன் சார்.. தேங்க்ஸ்.. உங்களை நான் இந்த நேரத்துக்கு டிஸ்டர்ப் பண்ணதுக்கு மன்னிக்கணும்.. நீங்க படுத்துக்கோங்க...." - ஏதோ சிந்தித்துக் கொண்டே சொன்னான் ராகவ்.. "ஹச்.. இருக்கட்டும் பரவயில்ல.." என்று மீண்டும் முடியாமல் இரும்பிக்கொண்டே கட் செய்தார் பெரியவர்.

உடனே சங்கீதாவுக்கு ஃபோன் செய்தான் ராகவ்....

"ஹலோ..." - குழந்தைகள் கூச்சல் போட்டு விளையாடும் சத்தமும் சங்கீதாவும் சஞ்சனாவும் சிரித்துக்கொண்டிருக்கும் சத்தமும் கேட்டது..

"ஹேய் சரா...." - கொஞ்சம் பதத்தட்டுடன் அவசரமாய் கூப்பிட்டான் ராகவ்.

"ஹ்ம்ம்... இருங்க சார் நான் உங்க சரா இல்ல, சஞ்சனா... ஹா ஹா.." - கிண்டலாய் சிரித்தாள் சஞ்சனா..

"ஹேய் சஞ்சனா... இட்ஸ் ஓகே நான் யாராவது ஒருத்தர் கிட்ட பேசினா கூட போதும்... உங்களுக்கு ஒன்னும் இல்லையே?.. நல்லாதானே இருக்கீங்க?" - பயத்தில் கேட்டான் ராகவ்..

"என்னடா ஆச்சு திடீர்னு ஒன்னும் இல்லையான்னு கேட்குற?" - குழம்பினாள் சஞ்சனா..

"ஐ மீன்.... அதாவது... யாரும் ஒன்னும் வீட்டுக்கு வரலையே? எவ்ரிதிங் ஆல் ரைட்?" - அவசரத்தில் வார்த்தைகளை சரிவர வரிசை படுத்திகூட பேச முடியவில்லை ராகவ்கு..

"அதெல்லாம் ஒன்னும் இல்லைடா, உனக்கென்ன ஆச்சு ஏன் இப்படி பேசுற?.. ஆர் யூ ஆல் ரைட்?"


"நத்திங்... நத்திங்... ஐயம் ஆல் ரைட்.. நீங்க ரெண்டு பேரும் தனியா இருக்கீங்களே அதான்..." - நடந்ததென்ன என்று கூற விரும்பவில்லை, சமாளிக்க சற்று இழுத்தான் ராகவ்...

"நாங்க ரெண்டு பேரும் இருந்தா எப்பேர்பட்ட ஆளும் சட்னி ஆயிடுவான்.... நீ ஏண்டா கவல படுற..." - என்றாள் சஞ்சனா.. அவள் பேசும்போது ஸ்நேஹா அவளது டாக்கிங் பார்பி பொம்மையை வைத்து சஞ்சனாவிடம் பேச சொல்லி அடம் பிடிப்பது கேட்டது. பின் பக்கம் ரஞ்சித் அவனது கார் பொம்மையை போட்டு தட்டி தட்டி விளையாடுவதும் கேட்டது. சங்கீதா சஞ்சனாவுக்கு தோசை சுட்டு குடுப்பதும், கூடவே "யாரு அந்த மக்கு CEO வா?.." என்று அவள் சஞ்சனாவிடம் குறும்பாக கேட்பதும்... டி.வி யில் சுட்டி டிவி சத்தமும் கேட்டது... இதெல்லாம் கேட்க அங்கே ஒரு சகஜ நிலை நிலவுகிறதென்று மனதில் அமைதி அடைந்தான் ராகவ்.

"அதென்னவோ கரெக்ட் தான்... அதுலயும் அவ கிட்ட மாட்டினா தக்காளி சட்னிதான்.. ஹா ஹா.. என்ன பேசிட்டு இருக்கீங்க?..." சாதாரணமாக பயமின்றி பேசினான்..

"ஹ்ம்ம்.. எங்க வாழ்க்கைல வந்த காதல் கதைகள் பத்தி பேசினோம்.. அக்கா அவங்க காதல் கதையை பத்தி சொல்லிட்டு இருக்காங்க.. ஹா ஹா.." - பின்னாடி இருந்து சங்கீதா "ஒதை வாங்குவ" என்று சிரித்துக் கொண்டே கத்தும் சத்தம் கேட்டது ராகவ்க்கு..

"ஒஹ்.. அந்த பழைய லவ்வர் ரமேஷ் பத்தி சொன்னாளா?" - எங்கே தன்னை பத்தி சொல்லி விட்டாலோ என்று எண்ணி அசடு வழிந்தான்...

"டேய் ஃபிராடு... அதெல்லாம் ப்ளாக் & ஒயிட் படம் டா.... அவங்க
சொல்லிட்டு இருக்கிறது லேட்டஸ்ட் டிஜிட்டல் கலர் படம் பத்தி.. எவனோ ஒரு லூசு நெஞ்சுல பச்ச குத்தி வெச்சி இருக்கானாம்மே.. சொல்லவே இல்ல...." - பின்னாடியில் இருந்து சங்கீதாவும் சஞ்சனாவும் சேர்ந்து சத்தமாக சிரிக்கும் ஒலி கேட்டது ராகவ்கு.. கண்ணாடியின் முன்பு பல்பு வாங்கி விட்டோமே என்று எண்ணி அவன் முகம் வெட்கத்தில் சிவப்பது அவனுக்கே சிரிப்பை வரவழைத்தது.

"ஹ்ம்ம் சரி சரி... சீக்கிரம் படுத்து தூங்குங்க நாளைக்கு காலைல வண்டி வரும் அப்புறம்.." - ராகவ் முடிப்பதற்குள் சஞ்சனா பேசினாள்.. "உன்னோட வாத்து வருவான்.. அப்புறம் நாம நாலு பேரும் எங்கயாவது வெளியே போவோம்.. அதானே?...ஹா ஹா.." - என்று சிரித்தாள்... "சரி சரி... பேச்சை குறைடி வாயாடி....ஹா ஹா.. சீக்கிரம் படுத்து தூங்குங்க.." என்று சொல்லிவிட்டு கட்டிலில் அப்படியே அசதியில் சாய்ந்தான் ராகவ்....

"ஏய் கொஞ்சம் தள்ளுடி... நான் குளிக்க போகுறதுக்கு முன்னாடி கண்ணாடி முன்ன வந்து நின்னவ.. இன்னும் மூஞ்சிய அப்படியும் இப்படியும் திருப்பிகிட்டு இருக்கா.." - காலை வண்டி வருவதற்கு முன் இரு மங்கைகளும் ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி முன் செய்யும் கூத்து இயல்பாய் நடந்தது..

"சும்மா இருங்கக்கா.. யாரா இருந்தாலும் ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன் தான் பெஸ்ட் இம்ப்ரஷன் குடுக்கும்...." என்றாள் சஞ்சனா..

"நீ ஏன் இப்படி எக்ஸ்ட்ரா கேர் எடுத்து ட்ரெஸ்ஸிங் பண்ணுறேன்னு எனக்கு தெரியும்.. ஹா ஹா.." - சங்கீதா குறும்பாக சிரித்தாள்..

"ஏனாம்?.... சொல்லுங்கோ.. கேட்கலாம்..." - வாயில் லிப் க்லாஸ் தடவி இரு உதடுகளையும் உள்ளுக்கு இழுத்து உரசி வெளிச்சத்தில் பலபலக்கிறதா என்று பார்த்துக் கொண்டே கேட்டாள் சஞ்சனா..


"ஹ்ம்ம்.. எல்லாம் கார்த்திக் எஃபக்ட் தானே ஹா ஹா..?" - என்று சங்கீதா சிரிக்க... "ச்சே... ச்சே..." அதெல்லாம் ஒன்னும் இல்லைக்கா... போற இடத்துல நாலு பேர் நம்மள பார்பாங்களே.. நல்லா இருக்கணுமேன்னு தான்.... யு னோ சம் திங்.... லுக்கிங் குட் இஸ் ஃபீலிங்க் க்ரேட்...." - என்று சமாளித்தாள் சஞ்சனா..

"சப்... ஒஹ்ஹ்.. ஹ்ம்ம்.. நடத்து நடத்து..." - என்று சங்கீதா சொல்லும்போது என்னதான் வாய் பொய் பேசினாலும் சஞ்சனாவின் சிரிப்பு சங்கீதா சொன்னதுதான் உண்மை என்பதை நேர்மையாக ஒப்புக்கொண்டது.. பொதுவாக யாராவது ஒரு புதுப் பெண் வருகிறாள் என்றால் ஆண்கள் செய்யாத ஸ்டைலா!!?.... அந்த விஷயத்தில் பெண்களும் அப்படியே... அவர்கள் மட்டும் விதி விளக்கா என்ன!!...

"வாவ்... என்னதுக்கா இது...? திஸ் இஸ் லுக்கிங் கூல்...."- சங்கீதா ஒரு டார்க் பிரவுன் நிறத்தில் கண்ணைப் பறிக்கும் விதத்தில் இடுப்பில் இருந்து கால் வரை வரக்கூடிய லாங் மிடி ஒன்றை காமித்தாள், அதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் முட்டி அருகே சில பட்டன்கள் இருந்தது, அவற்றை எடுத்து விட்டால் அது ஸ்கர்ட் போல மாறிவிடும். இதைப் பார்த்து வியந்தாள் சஞ்சனா..

மேலே ஒரு ஒயிட் டாப்ஸ் அணிந்து அதற்கு மேட்சிங்காக வளையல், கம்மல், நெயில் பாலிஷ், மற்றும் ஒரு சிம்பிள் செயின் அணிந்து தலை முடியை கர்லி ஹேர் ஸ்டைல் செய்திருந்தாள். வெளியில் சென்றால் நிச்சயம் ஒவ்வொருவரும் அவளை ஒருமுறையாவது திரும்பி பார்ப்பார்கள் என்பது போல் பளிச்சென்று இருந்தாள்.

சற்று நேரத்துக்கெல்லாம் வெளியில் கார் ஹாரன் சத்தம் கேட்டது. இருவரும் உற்சாகமாய் கிளம்பினார்கள். சஞ்சனா டிரைவர் தாத்தாவை நோக்கி வம்பிழுக்கும் விதமாக "தாத்தா எங்க ரெண்டு பேருல யார் பார்க்க ரொம்ப நல்லா இருக்கோம்னு சொல்லுங்க பார்க்கலாம்?" என்று குறும்பாக கேட்டாள்.

"வம்பே வேணாம்மா.... ஒன்னும் பேசாதப்பவே என்னை அந்த ஓட்டு ஓட்டுற, இப்படி கேள்விய கேட்டு வலய விரிச்சி ஏதாவது சொல்ல வெச்சி அப்புறம் அதை சொல்லி சொல்லியே என்னை படுத்திடுவ தாயி...." என்று தாத்தா சொல்ல "ஹா ஹா.. ரொம்பவே பயப்படுத்தி வெச்சிருக்கடி" என்று சங்கீதா புன்னகைத்தாள்.

கார் கிளம்பியதும் பின் இருக்கையில் பகல் வெளிச்சத்தில் சங்கீதாவின் முகத்தைப் பார்த்தாள் சஞ்சனா.. ஒரு வித்யாசமான பொலிவும் பிரகாசமும் தெரிவதை கவனித்தாள். "அக்கா.." என்றாள் சஞ்சனா..

"என்னடா..?" - சஞ்சனாவின் தலையில் அவளது முடியை சரி செய்து கேட்டாள் சங்கீதா..

"யு ஆர் மை இன்ஸ்பிரேஷன்கா.. உங்களை ஒரு ஒரு தடவையும் பார்க்கும்போது மனசுல தைரியத்துக்கு வெத போடுறா மாதிரி இருக்குது. அன்னிக்கி ராத்திரி நான்தான் மித்துன் கிட்ட அவ்வளோ தைரியமா நடந்துகுட்டேனானு யோசிச்சி பார்த்தா நம்பவே முடியலகா.... you are the fuel for my guts" - சஞ்சனாவின் பேச்சுக்கு சங்கீதாவின் முகத்தினில் ஒரு புன்னகை மட்டுமே பதிலாக வந்தது.

"நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க கூடாது.. சரியா?..."

"ஹ்ம்ம்... சொல்லு..."

"அதான் ரெண்டு பேரும் லவ் பன்றீங்களே, ஏன் கல்யாணம் பன்னிக்க கூடாது?"



No comments:

Post a Comment