Pages

Saturday, 7 November 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 30

மேடம் bank போகனுமா? இல்லை வீட்டுக்கு போகனுமா?

bank க்கு போங்க தாத்தா.

தாத்தா ஓட்டும் மிதமான வேகத்தில் ஒரு மணி நேரம் பயணம் செய்திருந்தாலும், ஏதோ பத்து நொடிகளில் bank வந்தது போல் இருந்தது சங்கீதாவுக்கு. மனதுக்குள் காதல் உருவெடுத்து இருக்கும் தாக்கம்!!

சங்கீதா இறங்குகையில் டிரைவர் தாத்தா சங்கீதாவை அழைத்தார். "மேடம்.."

"என்ன தாத்தா?"

"இந்தாங்கம்மா.."


"என்னது இது?"

"காலைல வண்டி எடுக்கும்போதே நீங்க திரும்பி போகும்போது குடுக்க சொல்லி உத்தரவு. என்னன்னு எனக்கு தெரியாது மா.."

ஒரு brown sealed கவரில் IOFI என்று அச்சிடப்பட்டு இருந்தது. கீழே ஏதோ எழுதி ராகவ் என்று கையெழுத்து இருந்தது. அதை தனிமையில் சென்று படிப்போம் என்று எண்ணி தாத்தாவை அனுப்பி வைத்துவிட்டாள் சங்கீதா.

"மன்னவன் பெயரை சொல்லி மந்திரம் பாடி வந்தேன்...." - வண்டியில் கேட்ட பாடலை முனு முணுத்துக் கொண்டே முகத்தினில் அதே சிரிப்புடனும் சந்தோஷத்துடனும் உள்ளே சென்றாள். உள்ளே வந்தவள் ரம்யாவின் இருக்கையில் அவளுடைய handbag இருப்பதைப் பார்த்தாள். சாப்பாடு நேரம் நெருங்கி இருந்தது. இருப்பினும் ஒரு மணி நேரம் அவளது மேஜையில் அவளுக்கென இருக்கும் வேலைகள் என்னென்ன என்று பார்த்துவிட்டு ரம்யாவுக்கு phone செய்தாள். ரம்யாவின் phone ரிங்டோன் அருகில் கேட்பது தெரிந்து நிமிர்ந்து பார்த்தபோது "ஹாய் மேடம்...." என்று சிரித்துக்கொண்டே உள்ளே வந்தாள்.

ஏய் லூசு, எங்கடி போய் தொலைஞ்ச? last one hour நான் உனக்காக waiting.

ஹா ஹா.... சரி சரி வாங்க போகலாம்.

இருவரும் கான்டீன் சென்று அவர்களுடைய வழக்கமான ஜன்னல் ஓர இருக்கையில் சாப்பிட அமர்ந்தார்கள்.

சரி சொல்லுங்க, காலைல எங்கே போய் இருந்தீங்க மேடம்.

ராகவ் பார்க்க போய் இருந்தேன்.. - வியர்வைப் பனித் துளிகளை தனது கைக்குட்டையால் நெற்றியில் துடைத்துக் கொண்டே பேசினாள் இந்த தேவதை.

"ஒஹ்ஹ்...." - கொஞ்சம் ஓரக்கண்ணால் பார்த்து கிண்டலாய் சிரித்தாள் ரம்யா..

"சப்"... இதோ பார்.. நீ இப்படி எல்லாம் சிரிச்சா நான் அப்புறம் பேசவே மாட்டேன் போ..

"ஹா ஹா.. சரி சரி சொல்லுங்க.."

"கொஞ்சம் ஆழமா கீறல் ஏற்பட்டிருக்கு, அவன் நெஞ்சுல மருந்து வெச்சி பிளாஸ்டர் போட்டு இருகாங்காடி. கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சி."

"ஹ்ம்ம்.. ஆமாமாம் உங்களாலதானே ஆச்சு...." - ரம்யாவுக்கு ஏதோ சங்கீதாவை வெருப்பேத்துவதில் சின்ன சுகம்..

இதைக் கேட்டவுடன் கோவத்தில் சங்கீதா அப்படியே சாப்பிட்ட கையுடன் எழுந்து தட்டை எடுத்துக் கொண்டு நடக்க....

"அய்யோ ஒரு நிமிஷம் இருங்க, ஐஅம் சாரி, ஐஅம் சாரி...." - சற்று பாடுபட்டு சங்கீதாவின் கையைப் பிடித்து மீண்டும் அமரவைத்தாள் ரம்யா. கண்னங்கள் சிவந்திருந்தது, நெற்றி இன்னும் வேர்த்து இருந்தது இந்த தேவதைக்கு.


"நானா போய் அவன சாவி எடுத்து நெஞ்சுல குத்திக்க சொல்லி சொன்னேன். கொஞ்சமாவது அறிவு இருக்கணும், அந்த கோபிய சும்மா ஓட சொல்லி இருந்தா கூட போதும், பெரிய இவனாட்டம் சாவிய எடுத்து குத்திக்குட்டான் ராஸ்கல்." - ராகவ் மீது இருக்கும் காதல் காரணமாக கொண்ட கோவத்தில் சகஜமாக பேசிவிட்டாள் சங்கீதா. சில நொடிகளுக்கு பிறகு ஏன் இப்படி பேசினோம் என்றெண்ணி ரம்யாவின் முகம் பார்ப்பதைத் தவிர்த்து மெளனமாக சாப்பிட ஆரம்பித்தாள்.

உள்ளே வரும்போது இருந்த முகத்தின் பிரகாசத்தையும், ராகவ் பத்தி பேசும்போது சங்கீதாவின் முகத்தில் மாறுபடும் உணர்வுகளையும் ரம்யா கவனிக்க தவறவில்லை.

பட படவென ராகவ் பத்தி பேசிய பின்பு ரம்யா ஒன்றும் பேசாமல் இருப்பதைக் கண்டு சற்று சங்கோஜமானது சங்கீதாவுக்கு..

என்னடி? பேசு ஏதாவது, நான் ஏதாவது தேவை இல்லாம கோவப் பட்டிருந்தா சாரி - என்றாள் சங்கீதா..

ச்ச.... ச்ச.... என்ன மேடம் என் கிட்ட போய் formal அ பேசுறீங்க. free யா விடுங்க. உங்களுக்கு மனசளவுல கொஞ்சம் relaxation வேணும். நான் சொன்னா மாதிரி வேணும்னா 2 நாள் லீவ் எடுங்க - ரம்யா பேசும்போது சங்கீதா குறுக்கிட்டாள்.

எனக்கு relaxation வேலையிலையும் என் மனசுக்கு பிடிச்சவங்க கூட பேசுறதுலையும்தான். வீட்டுல இல்ல. அப்படியே இருந்தாலும் அது என் பசங்களோட மட்டும்தான். actually நான் இன்னைக்கி காலைல அவனை பார்க்குற idea ல இல்ல, ஆனா...

ஆனா..? என்ன சொல்லுங்க மேடம்..

காலைல கொஞ்சம் மணசு சரி இல்ல. அதான் நேரா வேலைக்கு வர்ரத விட கொஞ்சம் ராகவ் கிட்ட பேசிட்டு வரலாம் னு தோணுச்சி.

ஒஹ், ஏன் எங்க கிட்ட எல்லாம் பேசக் கூடாதா?

இதற்கு சங்கீதாவிடம் இருந்து மௌனம்..

மீண்டும் ஏதோ கொஞ்சம் தவறாக கேட்டு விட்டோமோ என்று எண்ணி ரம்யா பேச்சை மாற்றினாள். "சரி சரி விடுங்க மேடம்.. இப்போ கொஞ்சம் relaxed இருக்கீங்களா?"

"ஹ்ம்ம்.." - சாப்டுக்கொண்டே தலையை மெதுவாக ஆட்டினாள். இப்போது ஏனோ திடீரென மனதில் ராகவிடம் கூறிய காதலை எண்ணினாள் சங்கீதா, அப்போது....

"என்னைப் பத்தி நீ என்ன நினைக்குற ரம்யா?"

ஹா ஹா என்ன இது திடீர்னு புது கேள்வி?

சப்.. சொல்லுடி.. - சத்தமே இல்லாமல் ஒரு பெருமூச்சு அவளிடம்.

"ஹ்ம்ம்... எந்த ஒரு விஷயத்தையும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவ யோசிப்பீங்க. எதையும் டக்குன்னு செய்ய மாட்டீங்க? நல்லா ஆழ்ந்து சிந்திச்சி முடிவு எடுப்பீங்க. ஆனா அதையும் சீக்கிரமாவே எடுப்பீங்க. கடைசியில எடுக்குற முடிவு உங்க மனசாட்சிக்கு விரோதமா இருக்காது. முக்கியமா இன்னொன்னு சொல்லணும்.

என்னது? - பார்வையில் ஆச்சர்யகுரியுடன் கேட்டாள் சங்கீதா.

உங்க முடிவு முழுக்க முழுக்க உங்க மனசளவுல யோசிச்சி எடுக்குற முடிவா அமையும். யாருடைய தேவை இல்லாத advice ம் காதுல வாங்கிக்காம எப்போவும் சொந்தமாதான் முடிவு எடுப்பீங்க. அதே சமயம் அது தப்பான முடிவாவும் இருந்ததில்லை. ஹ்ம்ம்... வேறென்ன விட்டுட்டேன்.. (சில நொடிகளுக்குப் பிறகு தொடர்ந்தாள்).. ஆங்.. முடிவு எடுத்த பிறகு வீணா மனசை போட்டு குழப்பிக்க மாட்டீங்க. எதையும் தைரியமா ஒரு கை பார்ப்பீங்க. you will take the perfect decision at the end." - என்று ரம்யா கூறியதும் சங்கீதாவின் முகத்தில் ஒரு மௌனமான புன்னகை தோன்றியது.



"சரி ஏன் இதை கேட்டீங்கன்னு சொல்ல முடியுமா? - என்றாள் ரம்யா.."

"ஒன்னும் இல்ல, சும்மா திடீர்னு கேட்கணும்னு தோணுச்சி. என்னைப் பத்தி மத்தவங்க என்ன நினைக்குறாங்கன்னு சொல்லி கேட்கனும் போல இருந்துச்சி. அதான்."

"ஹலோ.... நான் உங்க friend, என்னை ஏன் மதவங்கன்னு சொல்லி ஒதுக்குறீங்க?"

"தெரியும் டி, அதான் உன் கிட்ட மட்டும் வெளிப்படையா நானே கேட்டு தெரிஞ்சிகுட்டேன். இல்லைனா இப்படி வாய் பேசுற ஜென்மமா நான். ஹா ஹா - தன்னைத் தானே கிண்டல் அடித்துக் கொண்டாள் சங்கீதா."

ரம்யா பேசியது அனைத்தையும் கேட்டு முடித்தவுடன் சாப்பாடு தட்டை wash areaவில் போட்டுவிட்டு தன் இருக்கைக்கு செல்வதற்கு முன் ரம்யாவிடம் இருந்து தனியே விலகி வந்து ராகவ்க்கு தன் mobile எடுத்து "I Love You so much sweetheart" என்று sms அனுப்பினாள் ராகவின் தேவதை.

(beep beep) message from SH (sweet heart) - "SH" என்று சங்கீதா, ராகவின் பெயரை மொபைலில் store செய்திருந்தாள். அதில் இருந்த message: "I born in this world only for you sara" என்றிருந்ததைப் பார்த்து ஒரு நொடி சந்தோஷத்தின் உச்சத்தில் லேசாக கண்களின் ஓரத்தில் நீர்த்துளிகள் போங்க அதை யாருக்கும் தெரியாமல் முந்தானை நுனியால் லேசாக துடைத்துக் கொண்டு மனதில் சொல்லிக் கொண்டாள் "you are crazy about me da.... my sweet rascal".

மீண்டும் பீப் பீப் என்று சத்தம் கேட்க phone எடுத்து ப் பார்த்தாள். "No reply honey?" என்று இருந்தது.. அதற்கு சங்கீதா "little busy da kanna, I will call you after going home" என்று message அனுப்பினாள்.

சற்று நிமிடம் கழித்து "என் மேல் விழுந்த மழைத் துளியே" என்று மெதுவான சத்தத்தில் சங்கீதாவின் phone சிணுங்க உடனே அதை எடுத்து attend செய்தாள். காரில் டிரைவர் தாத்தா ஓட்டி வரும்போது ராகவ் நம்பருக்கு மட்டும் அவள் வைத்த ரிங்டோன் அது. உற்சாகமாய் எடுத்து அட்டென்ட் செய்தாள்..

"ஹலோ.." - இருக்குமிடம் bank என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு அடக்க முடியாத சந்தோஷமாகவே இருந்தாலும் கொஞ்சம் அடக்கமாக சிரித்தாள் சங்கீதா.

"ஹ்ம்ம்.. பேசுறது என்னோட சரா வா?" - கட்டிலில் ஆயாசமாக சாய்ந்து பேசினான் ராகவ்.

"ஹ்ம்ம்.... ஆமாம்..." - சங்கீதாவின் வாய் அருகில் mike வைத்தால் கூட கேட்காது. அவ்வளவு மெலிதான குரலில் பேசினாள் தனது தேவனுடன்.

"இப்போ என்ன பண்ணுற சரா?" - காதலில் விழும் அனைவரும் கேட்க்கும் அழகான முட்டாள்தனமான கேள்வி இது. ராகவ் மட்டும் விதிவிளக்கா என்ன?

"ஹ்ம்ம்.... வேலை பார்க்குறேண்டா கண்ணா...." - வேறு யாராவது (நண்பர்கள் உட்பட) இதைக் கேட்டால் "எனக்கு தெரிஞ்சி இப்போதிக்கு உங்கள போல வெட்டியா இல்லைன்னு நினைக்குறேன்.. do you have anything important to say" என்று கூறும் தேவதை தன் தேவனுக்கு கண்ணும் கருத்துமாக கொஞ்சி அக்கறையாக பதில் கூறினாள். - உலகில் காதலுக்கே உரிய தனி power அது.


சரி, நாளைக்கு உன்னோட scehdule IOFI ல இருக்கு தெரியும் இல்ல?"

"ஒஹ்ஹ்... ஆமா நியாபகம் இருக்கு" - சொல்லும்போது தனது dairy எடுத்து check பண்ணி பார்த்தாள். full day IOFI schedule என்று இருந்தது. அதைப் பார்த்து மென்மையாக புன்னகைத்துக் கொண்டாள்.

"நாளைக்கு உனக்கு நான் ஒரு surprise வெச்சி இருக்கேன்" என்றான் ராகவ்.

"என்னது?"

"வந்து பாரு சொல்ல மாட்டேன்."

"ஏன்டா இப்படி கொல்ற, சொல்லேண்டா?"

"ஹா ஹா...."

"சிரிக்காத டா சொல்லு...."

"ராகவிடம் இருந்து மௌனம்...."

"நானும் உனக்கு ஒரு surprise வெச்சி இருக்கேன், சொல்லவா?" என்றாள் சங்கீதா.

"ஹா ஹா.. இப்படி சொல்லி பழி வாங்கலாம் னு நினைக்காத, கண்டிப்பா நான் என்ன surprise னு கேட்க மாட்டேன், அதுக்காக காத்து இருக்குறதுல கிடைக்குற சந்தோஷம் ரொம்ப ரொம்ப சுகம்.. அதை அனுபவி சரா, நாளைக்கே ரெண்டு பேரும் நம்ம surprise என்னன்னு தெரிஞ்சிக்கலாம். ஒகவா?...."

(உண்மையில் சங்கீதாவிடம் ராகவ் க்கு surprise தர ஒன்னும் இல்லை, அவனுடைய வாயில் இருந்து பதில் வாங்கவே வெறுமென போட்டு வாங்க பார்த்தாள் ஆனால் ராகவ் கவிழவில்லை. "சப்" என்று உச்சுக் கொட்டிக் கொண்டாள் சரா..)

மெளனமாக இருக்கவே "என்ன ஒகவா?" என்று மீண்டும் கேட்டான் ராகவ்..

"ஹ்ம்ம்.." - சற்று சந்தோஷமும், ஏமாற்றமும் கலந்து பேசினாள் சங்கீதா....

"சரி அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், நம்ம டிரைவர் கிட்ட உனக்கு ஒரு கவர் குடுக்கணும் னு சொல்லி இருந்தேனே, கொடுத்தாரா?"

"ஆமா குடுத்தார்."

"சரி சரி வீட்டுக்கு போய் பொறுமையா பாரு. carry on with your work. I Love You honey."

"Love you too da sweet heart." - இருவரும் மணம் இல்லாமல் phone கட் செய்தார்கள்.

கையில் ஒரு sweet box உடன் சங்கீதாவின் இருக்கைக்கு வந்தார் Mr.Vasanthan.

"ஹலோ Sir" - என்றாள் சங்கீதா....

(அகண்ட சிரிப்புடன்....) ஹலோ.. seriously நீங்க தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போறீங்கன்னு தெரிஞ்சதும் surprising அ இருந்துச்சி. fantastic speech sangeetha. என்னோட wife கூட உங்கள ரொம்ப பாராட்டினாங்க, நேத்து எங்க வீட்டுல அவ தேங்கா பர்பி செஞ்சி இருந்தா, இன்னைக்கி காலைல கண்டிப்பா உனக்கும் நான் ஒரு பாக்ஸ் குடுக்கணும் னு சொல்லி இருந்தா. இந்தாமா வாங்கிக்க." என்றார்.

"மேடம் க்கு நான் மனசார நன்றி சொன்னதா சொல்லுங்க சார்."

"இன்னொரு நல்ல விஷயம் சொல்ல போறேன்."

"நல்ல விஷயம்னா சீக்கிரம் சொல்லுங்க சார், தாமதிகாதீங்க.. ப்ளீஸ்.."

"உங்களுக்கு அடுத்த மாசத்துல இருந்து 40% சம்பளம் அதிகரிக்குறதுக்கு மேலதிகாரிங்க ஒத்துக்கிட்டாங்க. congradulations."

"இதை கேட்டவுடன் மனதுக்குள் சங்கீதாவுக்கு மிதமான சந்தோஷம் தான். காரணம் சம்பளத்தை விடவும் செய்யும் தொழிலில் மண நிம்மதியை தேடுபவள் சங்கீதா."

"உங்க நல்ல மனசுக்கு நன்றி Mr.Vasanthan." - என்று சுருக்கமாக மரியாதையுடன் சொல்லி அமர்ந்தாள் சங்கீதா.

"மாலை நேரம் கிளம்பும் வேலையில் ரம்யா அவளது things அனைத்தும் pack செய்யும் போது அவளது handbag ல் இருந்து ஒரு cone மருதாணியை எடுத்து வந்து சங்கீதாவிடம் குடுத்தாள்."

"இன்னைக்கி காலைல வீட்டுக்கு பக்கத்து கடைல கிளம்பும்போது வாங்கினேன், அப்படியே உங்களுக்கும் சேர்த்து ஒன்னு வாங்கினேன். வச்சிக்கோங்க மேடம். நாளைக்கு பார்க்கலாம் bye."

"thanks டி" - உற்சாகமாய் சொன்னாள் சங்கீதா, மருதாணி என்றால் அவளுக்கு உயிர். அதை பத்திரமாக வைத்துக் கொண்டாள்.

"ஏய், கோபியை பார்த்தியா டி?" என்றாள் சங்கீதா

"இல்லை, ஆளே காணும்" என்றாள் ரம்யா.

Mr.unknown number என்று store செய்த நம்பரை டயல் செய்து பார்த்தாள் சங்கீதா. அதற்க்கு "நீங்கள் அழைக்கும் நம்பர் switch off செய்யப் பட்டுள்ளது" என்று மெசேஜ் வர ஒன்றும் புரியாமல் கடவுளிடம் கோபி நன்றாக இருக்க வேண்டுமென்று வேண்டிவிட்டு கிளம்பினாள்.

மாலை traffic ஐ சமாளித்து ஒரு வழியாக வீட்டை சென்றடைந்தாள் சங்கீதா.

ரஞ்சித்தும் ஸ்னேஹாவும் அமைதியாய் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வழக்கம் போல சங்கீதா வர தாமதம் ஆகும் தருவாயில் நிர்மலா இவர்களுக்கு வீட்டை திறந்து விட்டு குடிக்க ஒரு டம்ளர் பால் குடுப்பது வழக்கம். இந்த முறையும் அப்படியே செய்திருந்தாள் நிர்மலா.

"ஹலோ அக்கா, நல்ல ரெஸ்ட் எடுத்தீங்களா?"

"நான் எடுக்குறது இருக்கட்டும், நீதான் முக்கியமா எடுக்கணும். நீ எப்போ வருவேன்னு காத்திட்டு இருக்குது இதுங்க ரெண்டும். கொஞ்சம் நேரம் இதுங்களுடன் விளையாடிட்டு படுத்து ரெஸ்ட் எடும்மா. உனக்கும் உள்ள சூடா காபி போட்டு வெச்சி இருக்கேன்."

"thanks அக்கா, இன்னைக்கி வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சி. நீங்க ஏதாவது சாப்டீங்களா?"

"இப்போ எதுவும் வேணாம்டா, நீ பார்த்துக்கோ, நான் இப்போ கிளம்புறேன். கொஞ்சம் வீட்டுலயும் வேலை இருக்கு." - என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் நிர்மலா.

"என்னங்கடா பண்ணீங்க ரெண்டு பேரும் இன்னைக்கி?" - என்று பேசிக் கொண்டே சங்கீதா சமையல் அறைக்கு செல்ல பின்னாடியே ஸ்நேஹா மெதுவாக வந்தாள்.


"என்னடா கண்ணா?" - என்றாள் சங்கீதா..

"அம்மா, நேத்து கேட்கனும் னு இருந்தேன், அன்னிக்கி என்னையும் ரஞ்சித்தயும் ஸ்கூல் ல இருந்து ஒரு நாள் கூட்டிட்டு வந்தாரே ராகவ் மாமா, அந்த மாமா தானே அன்னிக்கி function ல stage மேல இருந்தாரு?"

"ஹா ஹா, ஆமாம், ஏண்டா கேட்குற?" - ராகவ் பத்தி கேட்டவுடன் சங்கீதாவுக்கும் மனதில் ஒரு வித சந்தோஷம்.

"ஒன்னும் இல்லைமா, எனக்கு அந்த மாமவ ரொம்ப பிடிச்சி இருக்கு, திரும்பவும் பார்க்க முடியுமா மா?"

"எதுக்கு? இன்னொரு talking barbie doll வாங்கிக்கவா? ஹா ஹா.."

"அது இல்லைமா, வேற ஏதாவது புதுசா பொம்மை வாங்கிக்கலாமே னு கேட்டேன்..அதான்." - பால்வடியும் முகத்துடன், வெளிப்படையாக பேசினாள் ஸ்நேஹா.

"எப்போ நினைச்சாலும் பார்க்கலாம், அம்மா நாளைக்கு அவரை தான் பார்க்க போறேன்". - தன் மகளிடம் இதை சொல்லும்போது சங்கீதாவின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷ சிரிப்பு.

பேசிக் கொண்டிருக்கும்போது phone பீப் பீப் என்று சத்தம் குடுக்க, உற்சாகமாய் மொபைலை எடுத்தாள். அதில் "I wont come home today also, I will stay with my friend tonight" என்று குமார் sms அனுப்பியதைப் பார்த்துவிட்டு சற்று சலிப்புடன் "ஹ்ம்ம்.... இன்னைக்கி night ஒருத்தருக்கு குறைச்சி சமைக்கணும்" என்று மட்டுமே எண்ணினாள் சங்கீதா.

டிக் டிக் என்று கடிகாரத்தில் பெரிய முள் சுழன்று சுழன்று சிறு முள்லை கிட்டத்தட்ட 10 நோக்கி அழைத்து சென்றது. நீண்ட நேரம் pogo, மற்றும் chutti tv என குழந்தைகள் இருவரும் மாறி மாறி பார்த்துக் கொண்டு சங்கீதா குடுத்த உணவை சமத்தாக சாப்பிட்ட பிறகு தூக்கம் அவர்களது இமைகளை இழுக்க அவர்கள் இருவரையும் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு, வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு தனிமையில் சற்று ஹாலில் வந்து வழக்கமாக கண்ணாடியின் முன் fanனின் கீழ் அமர்ந்தாள்.

இப்போது ராகவ் குடுத்த கவரை ப் பிரிப்பதற்கு முன் அதில் என்ன எழுதி இருக்கிறதென்று பிரித்துப் பார்த்தாள் "newly designed saree for working women" என்று எழுதி இருந்தது. I am honouring the saree by giving the first piece to my தேவதை சரா - என்று எழுதி ராகவ் சிக்னேச்சர் போட்டிருந்தான். புடவைப் பார்ப்பதற்கு நைசாகவும் அதே சமயம் கனம் கம்மியாகவும், உடுத்தினால் transparent ஆக இல்லாத விதமாகவும், கூல் effect குடுப்பது போல் இருக்கும் என்று அந்த புடவையின் தன்மையைப் பற்றி அந்த கவரில் படித்து தெரிந்து கொண்டாள். உற்சாகமாய் பிரித்துப் பார்த்தாள், வானத்தின் நீல நிறம் காட்டிலும் சற்று dark ஆக இருந்தது புடவையின் நிறம். அதில் அழகாக சிறிய பளபளக்கும் கல் வைத்து design செய்யப்பட்டிருந்தது, இன்னும் ஏராளமான புதிய விஷயங்கள் அந்த புடவைக்கு சிறப்பம்சம் சேர்த்தது. சங்கீதாவுக்கு தனது குழந்தைகள் தூங்கும் அறைக்கு சென்று night lamp on செய்து அங்குள்ள கண்ணாடியின் முன்பு இந்த புடவையை கட்டிப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது.

அப்போது பீப் பீப் என்று sms வர எடுத்துப் பார்த்தாள் "message from SH" என்று இருந்தது.. அதில்..

"Is it right time to talk honey?" என்று இருந்தது..

"நீ எதையும் permission கேட்டு செய்யுற ஆளோ?" - என்று reply செய்தாள்.

சில நொடிகளுக்கு பிறகு "என் மேல் விழுந்த மழைத் துளியே" என்று சங்கீதாவின் மொபைல் சிணுங்க கண்ணாடியின் முன் வேகமாக ஒரு சுத்து சுத்தி கூந்தல் காற்றில் ஆட தன் தேவனின் குரல் கேட்க ஆவலுடன் phone attend செய்தாள்.


"ஹலோ ஸ்வீட் ஹார்ட்" - தனக்கே உரிய அந்த வசீகர குரலில் பேசினான்.

"ஹலோ ஹணி"

"என்ன செய்யுற இப்போ?"

"நீ குடுத்த புடவைய பார்த்துட்டு இருக்கேன்."

"சும்மா பார்த்துட்டு மட்டும்தான் இருக்கியா?"

"கட்டி பார்த்துக்குட்டு இருக்கேன் டா..."

"ஒஹ்ஹ் சாரி அப்போ நான் ரூம் விட்டு வெளியே போயிடுறேன்...."

"ஏய் naughty... நீ phone ல தான் இருக்கே, ரூம்குள்ள கிடையாது. இங்கே மட்டும் இருந்திருந்தால் நானே புடிச்சி வெளியே தள்ளி இருப்பேன். ஹா ஹா.."

"ஹா ஹா.. சரி சரி கட்டி பார்த்தாச்சா?"

"ஹ்ம்ம்.. பார்துக்குட்டே இருக்கேன்...." - இந்த புடவையை அணிந்தால் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் சற்று அவசரமாகவே கட்டினாள். இன்றுவரை எத்தினையோ புடவைகள் கட்டினாலும் இப்போது கட்டிப் பார்க்கும் போது கண்ணாடியில் சாராவின் முகத்தினில் ஒரு விதமான அழகிய வெட்கம் தெரிந்தது. காரணம் ஒரு புறம் தன் மணம் விரும்பும் காதலன் பேசிக்கொண்டிருக்க அதே சமயம் மற்றொரு புறம் புடவையைக் கட்டிகொண்டிருப்பது இந்த தேவதைக்கு சற்று கூச்சத்தை ஏற்படுத்தியது. டக்கென ஒரு நிமிடம் "ஹாஹ்" என்று குறைவான சத்தத்தில் கூச்ச சிரிப்பைக் குடுத்தாள்.

"என்ன ஆச்சு? எதுக்கு சிரிப்பு?. புடவை சரியா இல்லையா?"

"No no, I just love the saree, நான் வேற எதுக்கோ சிரிச்சேன் டா.."

"ஹா ஹா.. கவல படாத சரா, நான்தான் சொன்னேனே ரூம் விட்டு வெளியே போயிடுறேன்னு. அதையே நினைச்சிட்டு இருந்தா உனக்கு சிரிப்புதான் வரும்."


"ஹையோ...., ஐயாவுக்கு மனசுல ரொம்பதான் நினைப்பு. நான் ஒன்னும் அதெல்லாம் நினைக்கல." - இப்படி பேசிவிட்டு வாயை மூடி ராகவின் reaction எப்படி இருக்கும் என்று எண்ணி சத்தம் இல்லாமல் வயிறு குலுங்க சிரித்தாள் சரா.

"சரி சரி... என்னை ஒட்டினது போதும், நாளைக்கு எனக்கு ஏதோ surprise தரேன்னு சொன்னியே? என்னது அது?"

"ஹலோ Mr.Sweet CEO. பொம்பளைங்க வாய் பொதுவா ஒட்ட வாய்தான் ஆன நான் அப்படி இல்ல, நீ எப்படி உன் surprise சொல்ல மாட்டியோ அதே மாதிரி நானும் சொல்ல மாட்டேன்." - ( surprise எல்லாம் குடுக்க நிஜம்மா என் கிட்ட ஒன்னும் இல்லடா.. என்னை இன்னும் நம்பிக்குட்டு இருக்கியேடா லூசு?" என்று கண்ணாடியின் முன் மனதுக்குள் எண்ணி வாயில் விரலைக் கடித்து சிரித்துக் கொண்டாள்.)

"நீ கொஞ்சம் அடம் பிடிக்குற டைப் டி ச்ச..?"

"ஹா ஹா.... ரொம்ப ரொம்ப அடம் பிடிப்பேன்...."

"cool.... எனக்கு அடங்காத குதிரைதான் ரொம்ப பிடிக்கும்."

"ஹா ஹா..... ஹேய், dont get naughty...." - பேசிக் கொண்டிருக்கும்போது மதியம் ரம்யா குடுத்த மருதாணி சங்கீதாவின் handbag ல் இருந்து வெளியே தன் தலையை நீட்டி அவள் கண்ணில் பட, சட்டென ஒரு நொடி தீப்பொறி போல் மனதில் ராகவ்க்கு ஒரு புது surprise குடுக்கும் எண்ணம் தோன்றியது சங்கீதாவுக்கு.



No comments:

Post a Comment