Pages

Friday, 6 November 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 28

வேகமாக பறக்கும் பட்டாம்பூச்சியின் முதுகில் ஒரு சிறிய கூழாங்கல்லை வைத்தால் எப்படி பளு தாங்க முடியாமல் பறக்காமல் இருக்குமோ அதைப் போல காலையில் நடந்த விழாவைப் பற்றி யோசிக்கமுடியாமல், விழாவுக்கு வந்த பிரபலங்கள் பாராட்டியதை யோசிக்க முடியாமல், இவ்வளவு ஏன், கடைசியாக கிளம்புவதற்கு முன்பு அவளுடைய unknown number குழப்பத்துக்கு பதில் கிடைத்தும் அதைப் பற்றி கூட அதிகம் யோசிக்க முடியாமல் அவளது மனதை அதிகமாக ஆக்கிரமித்தது ராகவின் காதல்தான். இந்த நினைவு மீண்டும் ஒரு முறை ரமேஷ் அவளது வாழ்வில் எட்டிப் பார்ப்பது போல் இருந்தாலும் "சப்" என்று உச்சுக் கொட்டி மீண்டும் ராகவின் எண்ணங்கள் ஓடின.

hall ல் உள்ள chair ல் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஒன்றும் செய்யாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். 'ஓய்ங்.. ஓய்ங்..' என்று மெதுவான சந்கீதத்துடன் fan மேலே சுத்திக்கொண்டிருருந்தது.
தன் முன் இருக்கும் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து க் கொண்டே இருந்தாள் சங்கீதா. அலுவலகத்தில் அவள் femina புத்தகத்தில் படித்தது நியாபகம் வந்தது. குடும்ப பெண்களுக்கு வரக் கூடிய மண அழுத்தம் பற்றி கூறியது, சுய கெளரவம் பற்றி விவாதித்தது, மனதுக்கு ஏற்ப சந்தோஷங்களில் ஈடுபடுத்திக் கொள்ளவேண்டுமென்று படித்தது அனைத்தையும் சிந்தித்தாள். அதில் இருந்த மற்றொரு கேள்வியில் வேலைக்கு செல்லும் ஒரு பெண் தன் கருத்துகளுக்கு ஒத்து போகும் ஒரு நபரிடம் காதல் ஏற்படுகிறது என்று கூறி இருந்ததும், அதற்க்கு அந்த புத்தகத்தில் ஒரு பெண் ஆலோசகர் அது ஒன்றும் பெரிய கொலைக் குத்தம் இல்லை என்று பதில் அளித்ததும் இன்றைய நவ நாகரீக உலகில் discreet relationship (ரகசிய உறவு) வைத்தாலும் அதையும் பெண்களால் balance செய்து குடும்பத்தை நடத்த முடியும் என்றும், அவ்வாறு செய்வதின் மூலம் பல மண அழுத்தங்களுக்கு அது தீர்வு குடுக்கும் என்று படித்தது அனைத்தும் அவளது மனதில் ஓடின.

இன்னும் பலவிதமான சிந்தனைகள் மனதை ஆட்கொண்டன.... "சப்" என்று உச்சு கொட்டி மெதுவாக கண்களை மூடி சாய்ந்தாள் - மூடிய இமைகளுக்குள் அவளுடன் ராகவ் சிரிக்கிறான், phone ல் பேசுகிறான், அவளுக்கு எந்த உடை நன்றாக இருக்கும் என்று சொல்லுகிறான், கிண்டல் பண்ணுகிறான், மணிக் கணக்கில் அவளுடன் நேரம் போவது தெரியாமல் பேசி சிரிக்க வைக்கிறான். அணு அணுவாய் அவளது உணர்வுகளை மதிக்கிறான், அவளது பெண்மையை ரசிக்கிறான். அவள் மணம் ஒத்து போகும் விதம் அவளுடன் IOFI வளாகத்துக்குள் அவளைப் பார்த்து அன்புடன் வாய் நிறைய வர்ணித்து அழைக்கிறான், ராகவ்.... ராகவ்.... ராகவ்....ராகவ்.... ராகவ்.... மூச்சு விட்டால் ராகவ், கண்களை மூடினால் ராகவ், தூங்கும்போதும் கனவில் ராகவ். ராகவ் பத்தி பேசும்போது அவள் குழந்தைகள் கூட குதூகலிக்கின்றன. முழுக்க முழுக்க அவளுடைய சிந்தனைகள் அனைத்தும் ராகவ் என்பவனுக்கு அடிமை ஆகி இருப்பதை இப்போதுதான் பூதக் கண்ணாடி வைத்து தன் ஆழ் மனதை பார்த்து தெரிந்துகொண்டாள் சங்கீதா.

"ஏன்டா எப்போவும் கண்ணை மூடினாள் இப்படி நீயே வர.." - கண்களை மூடி சாய்ந்தவாறு லேசாக அழும் விதம் பேசிக்கொண்டாள். இப்படி அவனுடைய சிந்தனைகளிலேயே மூழ்கி இருக்கிறோம்... இது சரியா?... கேள்விகள் கொந்தளித்து எழுந்து கொண்டிருந்தது அவளுக்குள், இப்போது அதன் விளைவு குழப்பம்.

குழப்பத்தின் உச்சத்துக்கு சென்றாள். அவளது பத்து விரல்களில் கிட்டத்தட்ட ஒன்பது விரல்களில் நகங்கள் கடிக்கப் பட்டு தரையில் சிறு சிறு துண்டுகளாக இருந்தது, நகங்கள் இழப்பதற்கு காரணம் ராகவ் பற்றிய அவளது சிந்தனைகள் செய்த வேலை. 

உடல் முழுதும் ரத்த ஓட்டம் அதிகரித்தது, சற்றே உடலும் வேர்த்தது. இப்போது அவளுடைய ஆழ் மனது அவளுக்கு ஒரு கேள்வி எழுப்பியது, அந்த கேள்வி அவளை சற்று உலுக்கி நிமிர்ந்து உட்கார வைத்தது. அந்த கேள்வி "உன்னையும் அறியாமல் நீ ராகவ் மீது அடங்காத காதலில் இருக்கிறாயா?" என்பதுதான்.

முக்கால்வாசி பதில் மெளனமாக "ஆமாம்" என்றும் சொற்பமான பதில் "இல்லை" என்றும் அவள் மணம் உள்ளுக்குள் போராடிக்கொண்டிருந்தது.

மீண்டும் கண்களை மூடினாள்.... ஆமாம்..., இல்லை...., ஆமாம்..... ஆமாம்...., ஆமாம்...., இல்லை.... இல்லை, ..... இந்த ஆமாம் இல்லை என்ற வார்த்தைகள் அவளது மனதை குடைந்தது. சட்டென்று chair ல் இருந்து எழுந்து நின்று கண்ணாடியைப் பார்த்தாள், "இல்லை" என்று எண்ணும் போழுது அவள் முகம் பொய் பேசுகிறது என்று அவள் கண்கள் அவளுக்கே திருப்பி காண்பித்தது.

ஒன்று மட்டும் அவளுக்கு தெளிவாக தெரிந்திருந்தது. ராகவின் எண்ணங்கள் வேர் முளைத்து அவளின் மனதில் நன்றாக ஊனி இருக்கிறதென்று. ஹாலில் ஒரே இடத்தில் அமர பிடிக்கவில்லை, அங்கும் இங்கும் வளாத்தினாள்.

ஒரு கட்டத்தில் உள்ளுக்குள் இல்லை இல்லை என்று ஜீரணிக்க முடியாத பதிலை சொல்லி ஏமாற்ற முயற்சி செய்கையில் மணம் வெம்பியது....

சிறிது நேரத்திற்கு பிறகு மெதுவாக பாத்ரூம் சென்று கதவை சாத்தினாள். கொஞ்ச நேரம் சத்தம் இல்லை.....

உள்ளே மஞ்சள் வெளிச்சத்தில் கண்ணாடியின் முன் நின்றிருந்தாள். washbasin முன்பாக சாய்ந்து நின்றுகொண்டிருக்கும்போது முந்தானை சரிந்து இருந்தது. எந்த உணர்ச்சிகளும் இல்லாமல் குனிந்த தலையோடு நிற்கையில் கீழ் நோக்கி பார்க்கும்போது அவளது கழுத்தினில் தாலி தொங்கியது. அதை ஒரு நிமிடம் கைகளில் பிடித்து உத்துப் பார்த்தாள்.. பார்த்தாள்...., மீண்டும் பார்த்தாள்.... சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டே இருந்தாள். "வெறும் ஒரு மஞ்சள் கயிறு என் வாழ்கையில் எத்தனையோ ஆசைகளுக்கும், விருப்பங்களுக்கும் தடை போட்டுடுச்சி. பத்துப் பேரை கட்டிப் போடுற இரும்பு சங்கிலிக்கு கூட இவ்வளவு சக்தி இருக்காது ஆனால் இந்த கயிறு ஒரு பொம்பளையோட வாழ்க்கையையே புரட்டி ப் போடுதே. ஒரு பெண்ணுக்குரிய தனிப்பட்ட ஆசைகளையும், விருப்பு வெறுப்புகளையும் உட்பட" என்று எண்ணிக் கொண்டிருக்கையில் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் தாலியின் மீது விழுந்தது.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் தன்னை ராகவிடம் இழந்து கொண்டிருக்கிறோம் என்ற உண்மை கண்ணாடியில் தெரியும் சங்கீதாவின் கண்கள் அவளுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

அம்மாவைத் தேடி ஸ்நேஹா படுக்கையில் இருந்து எழுந்து வெளியே வந்தாள், "அம்மா....அம்மா எங்கம்மா இருக்கே, வாமா?" என்று அழைத்த அந்த சிறுமி பாத்ரூமை கடந்து செல்லும்போது கதவின் கீழ் மஞ்சள் வெளிச்சம் எரிவதைப் பார்த்தாள் ஸ்நேஹா, 


அம்மா....

அழைத்ததுக்கு சத்தம் இல்லை...

அம்மா இருக்கியா மா..

சங்கீதா லேசாக விசும்பும் சத்தம் கேட்டது ஸ்நேஹாவுக்கு....

அம்... - முழுதாக "மா" என்று ஸ்நேஹா முடிப்பதற்குள் உள்ளுக்குள் இருந்து சங்கீதா "ஹம்மாஆஆ" என்று கதறி அழும் சத்தம் கேட்டது.

"அம்மா...." - ஸ்நேஹா பயந்தாள்.

"அம்மா என்னம்மா ஆச்சு? ஏன்மா அழுவுற? வாமா வெளியே.." - என்று சற்று பயத்தில் சொன்னாள்

"சங்கீதா தன்னை சுதாரித்துக் கொண்டு "ஒன்னும் இல்லடா செல்லம், "இஸ்ஸ்.. இஸ்ஸ்.." (மூக்கை உறிந்தால்) நீ போய் படுத்துக்கோ நான் வரேன்." கண்களை சரிந்த முந்தானை நுனியால் எடுத்து துடைத்துக் கொண்டு கண்ணாடியைப் பார்த்தாள். கண்களில் மை அழிந்திருந்தது. அதையும் முந்தானையால் துடைத்தாள்.

"ப்ராமிஸ்ஸா சீக்கிரம் வரணும்?" - என்றாள் ஸ்நேஹா

"ப்ராமிஸ் டா என் செல்லம், நீ... நீ போயி படுத்துக்கோ...நா" - கண்ணீர் எந்த தடைகளுமின்றி வந்துகொண்டிருந்தது. வந்த அழுகையால் முழுதாய் பேசி முடிக்க முடியவில்லை.

என்னாச்சும்மா? பேசுமா...

இஸ்ஸ்..... நீ போயி படுத்துக்கோ..... அம்மா வரேன், சரியா.. - அழுதுகொண்டே பேசினாள்.

சரிமா... - ஒன்றும் விளங்காதவளாய் ஸ்நேஹா மீண்டும் அறைக்கு சென்று படுத்தாள்.

பாத்ரூம் உள்ளே உள்ள கண்ணாடியில் அழுது சிவந்த கன்னங்களை பார்த்து தண்ணீரால் கழுவினால். மனதில் உள்ள எண்ணங்களை கழுவ முடியவில்லை அவளாள். முந்தானையை சரி செய்து, பெட்ரூமுக்கு சென்று குழந்தைகளுடன் படுத்து உறங்க முயற்ச்சி செய்தவளுக்கு தூக்கம் வரவில்லை. ஸ்நேஹா வை தன் நெஞ்சுடன் அனைத்து தலையில் தடவி தூங்க வைக்க.... இப்போது அவளுக்கும் கண்கள் சற்று லேசாக அயர்ந்தது சிறிய கண்ணீர் துளியுடன்.

கடைசியாய் ஏதாவது ஒரு முடிவை எடுக்கலாம் என்றவளுக்கு தூக்கம் குறுக்கிட்டது. நல்ல தூக்கம் தூங்கினாள்.

அடுத்த நாள் காலை....

படுக்கையில் எழுந்து அமைதியாய் அமர்ந்திருந்தாள். இரவு நேரம் அழுதது கொஞ்சம் கண்களை லேசாக வீங்கச் செய்திருந்தது. அமைதியாய் சில நிமிடங்கள் அப்படியே இருந்தவள் இப்போது ராகவின் கடிதத்தைப் பார்த்தாள். அதில் உள்ள வார்த்தைகளை பொறுமையாக படித்து எப்படி எல்லாம் தன்னை வர்னிச்சி இருக்கான் என்று வியந்தாள். இரவு நேரம் முழுதும் அவளது எண்ணங்களை அதிகாரம் செய்த ராகவின் சிந்தனைகள் அதிகாலை எழுந்த பிறகும் கூட இறக்கம் இல்லாமல் அவளின் சிந்தனைகளை தனது கட்டுக்குள் வைத்திருந்தது. மனதில் ஒரு புறம் பயம் இருந்தாலும் அவள் அதில் ஒரு ரகசிய இன்பம் கண்டாள்.

டிங்..டிங். - என்று calling bell சத்தம் கேட்டு கடிதத்தை தனது handbag உள்ளே வைத்தாள்.

உள்ளே வந்தது குமார். கண்கள் சற்று சோர்வாக இருந்தது, கூடவே போதிய தூக்கம் இல்லை என்று சங்கீதாவுக்கு குமாரைப் பார்க்கும்போது நன்றாக தெரிந்தது. எப்படியும் மீண்டும் ஒரு வாக்கு வாதம் தொடரலாம் என்று மனதில் எண்ணி இருந்தாள் சங்கீதா.



குமார் சங்கீதாவை நேரடியாக பார்க்காமல் தனது ஷர்ட்டை கழட்டிவிட்டு நேராக படுக்கை அறையை நோக்கி நடக்க சங்கீதா பேச ஆரம்பித்தாள்.

"ராத்திரி எங்கே தங்கி இருந்தீங்க?"

"உனக்கு எதுக்குடி சொல்லணும்?"

"சொல்ல விருப்பம் இருந்தா சொல்லுங்க இல்லைனா வேணாம். நான் கட்டாய படுத்தல."

"நீ மட்டும் எல்லாத்தையும் சொல்லிட்டு செய்ரியாடி?" - முறைத்து பேசினான் குமார். கண்கள் லேசாக சிவந்திருந்தது. சற்றே அருகினில் நிற்க அவனது கோலம் முந்தைய இரவு கொஞ்சம் குடித்திருக்கிறான் என்று தெரிய வைத்தது.

"ஹ்ம்ம்.. again asusual I expected this kumar" - சலித்துக் கொண்டே பேசினாள்.

வாயில் ஏதோ கோவமாக முணுமுணுத்துக் கொண்டே இருந்தான் குமார். அதைக் கேட்டு சங்கீதா ஏதுவா இருந்தாலும் சத்தமா சொல்லுங்க என்றாள்.

"ஆங்... நல்லா ஆடுனியே மேடைல "ஷீலா கி ஜவாணி" பாட்டுக்கு, அந்த மாதிரி நாலு பார் ல ஆடினா கூட இன்னும் நிறைய காசு குடுப்பாங்க." - கையில் watch அவிழுத்து அருகில் உள்ள மேஜையில் விசிறி அடித்தான்.

"என்ன சொன்னீங்க?" - முன்புறம் இருந்த முடியை கைகளால் எடுத்து பின்னாடி போட்டு அவன் அருகில் வந்து கோவமான கண்களால் கேட்டாள் சங்கீதா.

"நல்ல்ல்லா நாலு இடத்துல இப்படியே ஆடுடி, ஏற்கனவே அவனவன் என்னை இளக்காரமா பார்க்குறான், இன்னும் நல்லா கேவலமா பார்ப்பான்." - இதைச் சொல்லும்போது குமாரின் முகம் ஆரோக்கியமற்ற உணர்ச்சிகளின் அவல உச்சிக்கு சென்றது.

வார்த்தையைப் பார்த்து பேசுங்க குமார், நான் ஒன்னும் நாலு இடத்துல ஆடி போழைக்குரவ இல்ல.. - சங்கீதாவுக்கும் கண்கள் சிவந்தது. நான் வெறும் ஒரு 4 நிமிஷம் ஒரு சின்ன stage dance ஆடினேன்.. அது தப்பா?"

"ஆங்... பேசுடி, பேசு, இன்னும் நல்லா பேசு, கூட கூட பேசு, பொத்திக்குட்டு கேட்ப்போம் னு தோணல இல்ல?"

"எதுக்கு நான் ஒண்ணுமே சொல்லாம வாய் மூடிக்குட்டு இருக்கணும் னு எதிர்பார்க்குறீங்க? என் பக்கம் இருக்குற நியாயத்தை எடுத்து சொல்லுறேன்.."

"ஒஹ்ஹ்..... நியாயம் பேசுறியா என் கிட்ட?.... நான் ஒன்னு சொன்னா அதை நீ சும்மா கேட்டுக்குட்டு அப்படியே நிக்குரதுல என்னடி தப்பு? பொண்டாட்டிதானே நீ."

"நானும் அதையேதான் உங்களுக்கு நியாபகப் படுத்துறேன், நான் பொண்டாட்டிதான், ஆனா அடிமை கிடையாது."

"இருக்கனும்டி, எனக்கு அப்படிதான் நீ இருக்கணும், எனக்கு உன்னால கெளரவம் குறையுதுடி.... ஆமாம்.... இந்த நாலு சுவருக்குள்ள உன் கிட்ட இதை சொல்லுரதுல எனக்கு ஒன்னும் அசிங்கம் இல்லைடி" - குமாரின் குரல் அதிகரித்தது. அந்த சத்தத்தில் ஸ்நேஹா படுக்கை அறையில் இருந்து என்னமோ ஏதோ என்று பயந்து எழுந்தாள்..

"நா...." - பேச ஆரம்பித்தவளை பேச விடாமல் தடுத்து மீண்டும் தொடர்ந்தான் குமார்.

பேசக் கூடாதுடி, என்னடி கூட கூட பேசுற...., நீ பேசுவ.... காரணம் எனக்கு நீதான் இந்த வேலைய வாங்கிக் குடுத்த, எப்படி வாங்கிக் குடுத்த? அந்த ராகவ் கிட்ட ஈசி ஈசி வாங்கிக் குடுத்த அப்படிதானேடி?" - இதைச் சொல்லும்போது குமாரின் முறைக்கும் பார்வை சங்கீதாவை அதிகம் எரிச்சலடயசெய்தது.


உண்மையில் குமாருக்கு IOFI ல் application எழுதி போட்டதைத் தவிர சங்கீதா செய்தது ஒன்றும் இல்லை, அப்போது ராகவ் என்பவன் யாரென்ரு கூட அவளுக்கு தெரியாது. குமாரின் இந்த அருவருப்பான கேள்விக்கு "நீங்க நினைக்கிறது தப்புங்க" என்று அடி பணிந்து பதில் சொல்ல சங்கீதாவின் மணம் ஒத்து போகவில்லை. தாலி கட்டினவன் என்கிற அந்த ஒரு காரணத்துக்காக எவ்வளவோ வார்த்தைகளையும் சகிக்க முடியாத குணங்களையும், புருஷ லட்சணமே இல்லாத குணாதிசயங்களையும் கடந்த ஏழு ஆண்டுகளாக கடந்து வந்த பிறகு இன்றைக்கு தன் மணசு விருப்பபட்டு செய்த சில காரியங்களையும் அவனது மனக் கண்களால் அசிங்கமான பார்வையில் பார்த்து பேசியதைக் கண்டு அவனுக்கு விளக்கம் தர வேண்டிய அவசியம் இல்லை என்று அவளது ஆழ் மணம் கூறியது. பேச வேண்டிய வார்த்தைகள் எதுவாக இருந்தாலும் பேசட்டும் என்று எண்ணி அப்படியே மெளனமாக நின்றாள்.

இப்போ பேசுடி, ஏன் பேச மாட்டியா? பேசு பேசு...- கிட்டே நெருங்கினான்.

கைகளை உயர்த்தி கண்களை மூடி "போதும்" என்பது போல காமித்து "எல்லாமே உங்க கண் பார்வைல இருக்கு, நான் எதுவும் விளக்கி சொல்லணும் னு தோணல"

ஒஹ் நான் சொல்லுறது எதையும் செய்ய கூடாது இல்ல அப்படிதானே?

"எது நீங்க சொல்லுறத நான் செய்யல? என்னத்துக்கு இப்போ போலம்புறீங்க?" - சத்தம் இல்லாமல் அமைதியாகவே கூறினாள்

"இதைக் கேட்டு ஒரு நிமிடம் பயித்தியம் பிடித்தவனைப் போல ஹாலில் இங்கும் அங்கும் நடந்துகொண்டே இருந்தவன் சட்டென ஒரு நிமிடம் திரும்பி சங்கீதாவை தலை முதல் கால் வரைப் பார்த்தான். அவள் அருகில் வந்து அவளின் தோளில் கை வைத்து முந்தானையை தரையில் இழுத்து விட்டு உச்ச குரலில் "உம்ம்.... come on ஆடு.... ஆடுடி... நான் பாடுறேன்.. எனக்கு இப்போ special அ ஆடி காமி எனக்கு "ஷீலா ஷீலா கிய ஜானி" (உலரும்போது குமாருக்கு பாட்டு வார்த்தைகள் கூட சரியாக வரவில்லை) ஆஆஆடுடி ஆடு ஆடு.. ஊருக்கு ஆடுனியே எனக்கு ஆட மாட்டியா?" - குமாரின் குரல் கூரையை கிழித்தது.

பெட்ரூம் கதவருகே ஒழிந்து கொண்டு மெதுவாக தலை மட்டும் தெரியும் வண்ணம் ஸ்நேஹா பயந்து எட்டிப் பார்த்தாள்.

வாழ்கையில் குழந்தையாய் பிறந்தது முதல் பள்ளி, கல்லூரி, நண்பர்கள், தோழிகள், மெத்த படித்தவர்களுடன் மேற்படிப்பு படித்த நாட்கள், வேலை செய்யும் அலுவலகத்தில் அவளது சக ஊழியர்கள், மற்றும் மேலதிகாரிகள் முதற்கொண்டு "சங்கீதா" என்றாலே தலை நிமிர்ந்து பார்க்க வைக்கும் மரியாதை உள்ளவள். அவளது கல்யாண வாழ்க்கையில் கடந்த ஏழு வருடம் என்னதான் பல மனக் குத்தல்களுக்கு ஆளானாலும், இந்த நாள் இந்த ஒரு கனம் அவள் குமாரின் எதிரில் வாங்கிக் கொண்டிருக்கும் வார்த்தைகள் அளவுக்கு அதிகமாகவே அவளது சுய கௌரவத்தை நசுக்கியது, அவனுடைய வார்த்தைகள் இவளுடைய மென்மையான குணாதிசயங்களை கூச வைத்தது. புருஷனாகவே இருந்தாலும் பேசக் கூடாத வார்த்தைகள் பேசினாள் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது என்று அழுத்தமாக அவள் மனது சொன்னது. இருப்பினும் அவனது வார்த்தைகளால் வந்த வலிகளை தாங்க இயலவில்லை அவளாள். அதற்கு ஆதாரமாக அவளது விழியன் ஓரம் தேங்கி நின்ற கண்ணீர் தான் சாட்சி.

"ஆடுடி, எவ்வளோ நேரம் சொல்லுறேன் ஆடு," என்று குமார் கூறிய வார்த்தைகளை கேட்க்கும்போது மெதுவாக திரும்பி ஈர விழிகளுடன் ஸ்நேஹாவை மென்மையாக சிரித்து ப் பார்த்தாள் சங்கீதா.. சற்றும் குமாரின் கோவத்துக்கு அசராமல் சரிந்த முந்தானையை எடுத்து மீண்டும் மேலே போட்டாள். "ஒன்னும் இல்லைடா" என்பது போல் தன் பயந்த குழந்தையை நோக்கி தலை அசைத்தாள்.


அவளின் கண்ணீரைக் கண்டு கதவின் ஓரமாக இருந்த ஸ்நேஹா வெடுக்கென ஓடி வந்து அவளது அம்மாவின் கால்களை கட்டிப் பிடித்துக் கொண்டாள். எந்த குழந்தையாய் இருந்தாலும் தாய் அவமானப் படுவதையோ அதிகம் திட்டு வாங்குவதையோ பார்க்கையில் பயம் கொள்ளாமல் பாதுகாக்க ஓடி வரும்.

"தள்ளி போடி நானும் உன் அம்மாவும் பேசிக்கிட்டு இருக்கோம் இல்ல போ... உள்ள போ" - என்று அதட்டி கத்தினான் குமார்.

"பிரச்சினை நமக்குள்ளதான் குழந்தையை ஏதாவது ...." - என்று அவள் முடிப்பதற்குள் "என்னடி செய்வ..... என்னடி செய்வ...." என்று ஸ்நேஹா மீது கை ஒங்க வந்த குமாரின் கைகளை தடுக்க முயன்ற சங்கீதாவின் கைகளில் குமாரின் கரங்கள் பட அவளது கண்ணாடி வளையல்கள் உடைந்து பொல பொலவென தரையில் விழுந்தது. அப்போது நிமிர்ந்து குமாரைப் பார்த்தபோது குமாருக்கு சங்கீதாவின் முகம் ஒரு காளியின் முகத்துக்கு இணையாக தெரிந்தது.

கண்களை இறுக்கி மூடி பயத்தின் உச்சத்தில் தன் முகத்தை சங்கீதாவின் கால்களில் அழுத்தி கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தாள் ஸ்நேஹா.

சில நிமிடங்கள் ஹாலில் நிசப்தம், யாரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை.

சங்கீதா ஸ்நேஹாவை தூக்கி அவளது கண்களைத் துடைத்தாள், பதிலுக்கு குழந்தையின் கரங்கள் தாயின் கண்ணீரைத் துடைத்தது.

தயவுசெய்து உங்க வேலைய நீங்க பாருங்க.... உங்க கிட்ட பேச எனக்கு வேற எதுவும் இல்ல.

எனக்கும் ஒன்னும் இல்லடி, மனுஷன் பேசுவானா உன் கிட்ட? - என்று குமார் அவனுடைய கையாலாகதனத்தை அலுத்துக்கொண்டு வெளிப் படுத்த "இந்த வார்த்தையை நான் சொல்லணும்" என்று மனதில் எண்ணிக்கொண்டாள் சங்கீதா.

வீடாகவே இருந்தாலும் வெறுமையாக தோன்றியது சங்கீதாவுக்கு. எப்போதுடா வீட்டை விட்டு தொலைவான் என்றிருந்தது சிறுமி ஸ்நேஹாவுக்கு.

குழந்தைகளுக்கும் கணவனுக்கும் சமைத்துவிட்டு, வங்கிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் சங்கீதா. அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் ரோஷம் என்றால் என்னவென்று கொஞ்சம் கூட அறியாது அவள் செய்து கட்டி வைத்த உணவை எடுத்துக் கொண்டு வழக்கம் போல வீட்டை விட்டு கிளம்பினான் குமார்.
அவன் கிளம்பும்போது பெட்ரூமில் இருந்து ஜன்னல் வழியாக பார்த்தாள் சங்கீதா "disgusting object" என்று முனுமுனுத்துகொண்டாள். (disgusting தமிழில்: அருவருப்பான ஒன்று). அங்கும் இங்கும் கையில் சிக்காமல் திறிந்த ரஞ்சித்தையும், சமத்தாக அம்மாவுக்கு உதவியாய் அனைத்தையும் செய்து குடுக்கும் ஸ்நேஹாவையும் அவர்களது ஸ்கூல் வேனில் ஏற்றி அனுப்பிவிட்டு வீட்டில் யாரும் இல்லாமல் கொஞ்சம் அமைதியாய் ஹாலில் மீண்டும் அமர்ந்தாள்.

சற்று முன்பு நடந்த விஷயங்களை நினைக்க விரும்பவில்லை,
எனவே தனது mobile phone எடுத்தாள், அதில் "message from Raghav" என்று இருந்தது. பரவசமாய்ப் பார்த்தாள் "did you reached home safely?" என்று நேற்று இரவு இரண்டு மணி அளவில் அனுப்பி இருந்தான். பதிலுக்கு மெசேஜ் அனுப்புவதற்கு மாறாக ராகவ்க்கு கால் செய்தால் சங்கீதா..


No comments:

Post a Comment