Pages

Thursday, 5 November 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 26

மெதுவாக mike பிடித்து பேசினார் விஜய்.

இந்த... award குடுத்ததுக்கு IOFI க்கு எனது நன்றிகள்... (கரகோஷம் பலமாக ஒலித்தன) உழைப்பால் உயர முடியும் னு எடுத்து சொல்லுறதுக்கு தன் வாழ்க்கையையே உதாரணமா காமிச்சி இருக்கார் Mr.Mahesh Yadhav. அதே வழியில் அவர் மகனும் சிறந்து விலங்கிட்டு வரார். நான் ராகவுடன் இது வரை பணி புரிந்ததில்லை, ஆனால் அவருடன் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது. All the best Raghav. இன்னும் நிறைய வெற்றிகள் IOFI அடைய வாழ்த்தி விடை பெறுகிறேன். நன்றி. வணக்கம். - என்று பேசி விட்டு நடிகர் விஜய் இறங்கும்போதும் விசில்கள் சத்தம் குறையவில்லை.

இவர்களை அடுத்து சிறந்த charming face மற்றும் வித்யாச நாயகன் விருதுகளை சூர்யாவுக்கும், விக்ரமுக்கும் குடுத்தார்கள். அதை அடுத்து flawless acting performance விருதை நடிகர் தனுஷுக்கு கொடுத்தார்கள். அப்போது மேடை எரிய தனுஷ் "why this kolaveri kolaveri kolaveri di" என்ற பாடலைப் பாடி அரங்கத்தில் உள்ள அனைவரது pulse எகிறும் விதம் பாடிவிட்டு அவர் அமைதியாய் மேடை இறங்கி வந்து அமர்ந்தார்.

இப்பொழுது நாம் கௌரவிக்க இருப்பது சிறந்த மேற்கிந்திய சிந்தனையாளர் மற்றும் படைப்பாளி. அவரைப் பற்றி ஒரு சிறிய கண்ணோட்டத்தைப் பார்ப்போம்.


IOFI - Legends of Indian Cinema....(Click to watch)

அரங்கம் முழுதும் இவருடைய அறிவாற்றளுக்கும் சிந்தனைக்கும் நல்ல மரியாதை இருக்கிறது என்பது இவர் தன் இருக்கைலிருந்து எழுந்து மேடைக்கு வரும் வரை மிகுந்த சத்தத்துடன் நீண்ட கைத் தட்டல்களில் நன்கு தெரிந்தது.

மேடையில் தற்போது நடித்து வரும் Talaash படத்தின் மீசையுடன் மேடை ஏறினார் Aamir Khan.

அவருக்கு Dr.கமல்ஹாசன் IOFI Cine Legend Award விருதைக் குடுத்து கௌரவித்தார். அதை சந்தோஷத்துடன் பெற்றார் ஆமிர்.

மேடையில் மெதுவாக பேச ஆரம்பித்தார் Aamir - "Good evening chennai friends.." (என்று ஆரம்பிக்கும்போது பலமான கைத் தட்டல்கள் எழுந்தன.) I love the creativity of south India. Let it be cinema, art or fashion, everything has its own beauty. (சங்கீதாவை நோக்கி பார்த்து) This lady sangeetha (or) sheila?..(கூட்டம் சங்கீதா என்று கத்த) oh I am sorry sangeetha, what a dance?, mast dance yaar.. see that is what I say creativity. we have seen heroines dancing on stage, but I have never seen a comperer compering the programs and also dancing on the stage so confidently. Also she is a manager in a bank. This is amazing.. (என்று aamir புகழ "Thanks aamir" - என்று மென்மையாக பதில் கூறினாள் சங்கீதா.) & I appreciate the guy behind the organisor of all this.. & he is a naughty friend of mine, ஹாஹா (சிரித்து பேசினார்) yes I & Raghav are good friends and we worked together for 3 idiots & I still remember how we played pranks on eachother. Once we all put ice inside his underwear when he is pulling his pants down (என்று aamir ஒரு நிமிடம் குறும்பாக இதை சொல்லி கண் அடித்து சிரிக்க.... அதைக் கேட்டு கூட்டத்தில் கரகோஷம் அதிர்ந்தது. கீழே சூர்யாவும் விக்ரமும் அருரகே மாதவனிடம் "அப்படியா?" என்று கேட்டு aamir khanனின் பேச்சை மிகவும் ரசித்து சிரித்தார்கள்.)

ஹாஹா good.. (மென்மையாக சிரித்து தலையை சாய்த்து வைத்து கைத் தட்டல்களுக்கு இடம் குடுத்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார் Aamir) let me come to the main point, Always how our work should be?..(சில வினாடிகள் மௌனம்...அதன் பிறகு தொடர்ந்தார்..) it should be in such a way that even our enemy should feel like standing & praising us. Thats the kind of work what Raghav is doing in IOFI I believe. (இந்த வரிகளுக்கு கூட்டம் மட்டும் அல்ல சங்கீதாவும் சேர்ந்து மிகவும் ரசித்து aamir ன் கருத்தை ஆமோதித்து க் கை தட்டினாள்.)
All the best to Raghav & his family & may god shower even more success on him. Thank you. & I would like to convey my regards to the legends BigB Rajini Sir & Kamal Ji. (என்று அடக்கமாக பேசி முடித்துக்கொண்டு இறங்கினார் aamir khan) - (கை தட்டல்கள் மிகவும் பலமாக இருந்தது இப்போது.)


Thank you Aamir sir - என்றாள் சங்கீதா.

அடுத்து நாம் கௌரவிக்க இருப்பது இந்திய சினிமாவின் மூத்த திருமகன். அனைவராலும் BigB என்று செல்லமாக அழைக்கப் படும் மாமனிதர். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. "The real wealth is not what you have earned till now, but how much worth you are when you loose everything what you have now" இந்த வரிகளைக் கேட்ட உடன் கீழே அமர்ந்து இருக்கும் தலைவர் ரஜினி BigB யை ப் பார்த்து எழுந்து நின்று கை த் தட்டினார். - இதைக் கண்டு அனைவரும் சற்று உணர்ச்சி வசப்பட்டு விசில் அடித்து காதுகள் கிழிய அன்புடன் BigB என்று கூச்சலிட்டு அன்பை வெளிப்படுத்தினர்.

சங்கீதா மேலும் தொடர்ந்தாள் - இந்தத் திருமகனின் biography யை ஒரு பார்வை பார்ப்போம்.... ( Click here to view....) - இது மேடையில் திரையிடப்பட்டது.

இப்போது மேடை ஏரிய BigB Aamir Khan னிடம் இருந்து IOFI Cine Legend விருதைப் பெற்றார். Aamir Khan னை தன்னுடன் தோள்களில் அனைத்து கட்டித் தழுவினார் BigB.

இப்போது BigB அவருடைய கணீர் குரலில் பேசினார்: Thanks to IOFI for honouring me with this award & I cheer the friendship I had with Mr.Mahesh Yadhav. I must say that in south india there are a lot of value for creativity & discipline. I have been observing this for past two decades and I am a fan of Late Mr.Shivaji Ganesan & my friends Rajini & Kamal haasan. (பலத்த கரகோஷம் ஒலித்தது....) (என்னதான் VVIP's மேடையில் பேசினாலும், அவர்கள் அருகில் நின்றுகொண்டிருக்கும் அழகி சங்கீதாவை யாரும் கவனிக்க தவறவில்லை. BigB உட்பட.) I also wanted to appreciate the comperer who showed various artistic talents like compering, dancing and receiving award for designing. Also I heard she is a working women. Thats great to hear & I appreciate your effor in this program & I admire the way you young ladies manage their career and work. (இதைக் கேட்க்கும்போது சங்கீதா தன் கையை தானே கிள்ளிப் பார்த்தாள், காண்பது நிஜமா என்று.) I pray god that Mr. Yadhav family & his great son Raghav have a successful life and wishing them many more success ahead in future endeavours with IOFI. - என்று சிக்கனமாக பேசி முடித்து மேடையை விட்டு கம்பீரமாக இறங்கினார் BigB.

Much Thanks Big B, you are an inspiration for many.. - என்றாள் சங்கீதா.

ரசிகர்களே, இப்போது நாம் கௌரவிக்க இருக்கும் மனிதரை எப்படி பாராட்ட முடியும் என்று எனக்கு தெரியவில்லை. தமிழில் பாராட்டும் வார்த்தைகள் பத்தாது. பிறந்ததிலிருந்தே சினிமாவுக்கு தன்னை தாரை வார்த்து குடுத்த ஞானி இவர். என்று சொன்னவுடன் கூட்டத்தில் யாரென்று யூகிக்க முடிந்து அரங்கம் அதிரும் வண்ணம் கை தட்டினார்கள். இது வரை இருந்தவர்களுக்கு எழுப்பிய சத்தம் பத்து மடங்காக திமிறிக்கொண்டு அரங்கம் முழுதும் கை தட்டல்கள் ஒலித்தன. -சந்கீதாவால் பேச முடியவில்லை. இருப்பினும் கொஞ்சம் பொருத்து மீண்டும் ஆரம்பித்தாள். இவருடைய தைரியத்துக்கு ஒரு எடுத்துக் காட்டு இந்த காட்சி. ( Click to view) இன்றைக்கு இருக்கும் commercial நாயகர்கள் யாருக்கும் இந்த காட்சியில் நடிக்க துணிச்சல் வேண்டும். இப்படிப்பட்ட காட்சியில் நடித்துவிட்டு அதுத்த படத்திலேயே commercial hit குடுக்கும் mass நாயகன்தான் நம்முடைய பொக்கிஷமான உலக நாயகன்.... (மீண்டும் சந்கீதாவால் பேச முடியாத வண்ணம் கைத் தட்டல்கள் ஒலித்தன இருப்பினும் அந்த சத்தத்துடன் சேர்த்து mike ல் கத்தி ஒரு முறை அந்த கலைத் தாயின் தவப் புதல்வனின் பெயரை சொல்லி விட்டாள்).. Padmashree Dr. கமல்ஹாசன் அவர்கள். (கமல் அருகே அமர்ந்திருந்த நண்பர் Super Star ரஜினி, கமலைக் கட்டி அணைத்து நட்பை பகிர்ந்து கொண்டார்.)


(அரங்கம் அதிர்ந்து முடிய சற்று அவகாசம் குடுத்து விட்டு மீண்டும் பேசினாள் சங்கீதா.)

நாடே போற்றும் இந்த மாமனிதனின் சிறிய குறும்படம் ஒன்றை பார்ப்போம். (click to view - Must watch clip)

திரையில் biography வீடியோ முடிந்ததும், பல நிழல் நாயகர்களுக்கு மத்தியில் இருக்கும் நமது நிஜ நாயகன் எழுந்து மேடைக்கு வந்தார். மீசை இல்லாத மொழு மொழு முகத்துடன் அதே pushpak படத்தில் பார்த்த smart டான தோற்றத்துடன். தனது IOFI cine Legend award டினை BigB யிடம் இருந்து பெற்றார் கலைஞானி.


மெதுவாக பேச ஆரம்பித்தார் Dr.கலைஞானி: விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் எனது வணக்கம். (கரகோஷம் ஆடிட்டோரியம் கூரையை பிளந்தது.) அவை அடக்கம் காத்து விழாவை நன்கு இயங்க செய்து கொண்டிருக்கும் சகோதரி சங்கீதாவுக்கு எனது பாராட்டுகள். (சங்கீதாவின் சந்தோஷம் உச்சத்துக்கு போனது). என்னைப் பொருத்த வரையில் இது எனக்கு ஒரு குடும்ப விழா. நானும் Mahesh Yadhav வும் நீண்ட நாள் நண்பர்கள். யாரிடமும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் மனிதர் அவர். ஒரு முறை எனது heyram படத்தைப் பார்த்து விட்டு என்னிடம் "sir, என்னை தப்பா நினைச்சிகாதீங்க, இந்த படத்தோட costumes விடவும் நாயகன் படத்துல உங்க costume ரொம்ப நல்லா இருந்துச்சி.. அது என்னமோ தெரியலை sir மனசுல பட்டுச்சி, பட்டுன்னு சொல்லிட்டேன்" னு சொன்னார். நல்ல வெகுளி மனிதர். ( சில நொடிகள் தாமதித்து மீண்டும் விழாவைப் பற்றி பேச தொடங்கினார் கமல்.) இந்த விழாவில் ஆரம்பமாக ஒரு தாயின் பாடலைப் பாடினார் பாடகர் உண்ணி கிருஷ்ணன். அது எனது நெஞ்சைத் தொட்டது. அது மட்டும் இல்லாமல் நண்பர் Aamir சொன்னது போல மிக வித்யாசமாக compere பண்ணிய புது முக பெண்ணை வைத்து நடனத்தையும் இயக்கி காமித்து விழாவுக்கு ஒரு புது இலக்கணம் படைத்து விட்டார் இளைஞர் ராகவ். IOFI நிறுவனம் சினிமாவில்தான் எங்களுக்கு உடை அலங்காரம் எல்லாம் செய்ய உதவி வருகிறார்கள். நிஜத்தில் அவர்கள் focus செய்வது பெண்களுக்குத் தான். அதில் எனக்கு மகிழ்ச்சியும் உண்டு. பெண்ணின் இனம் உலகில் முதலில் தோன்றியவை. அதைப்பற்றி கொஞ்சம் பகிர்ந்து கொள்வது ஆண்களின் அறிவுக்கு நல்லது என்று நினைக்கிறேன். ( இதற்கும் கரகோஷம் ஒலித்தது..) உலகில் முதலில் தோன்றியது ஆதாம் அல்ல ஏவாள், அதுவும் வெண்மையான தோள் கொண்ட அழகிய பெண் அல்ல, ஆப்பிரிக்க கண்டத்தில் தோன்றிய கருப்பு மிருகம் தான். "ஹோமொசேபியன்" என்ற வகையை சார்ந்த நாம் அனைவரும் முதலில் தோன்றியது ஆப்பிரிக்க நாட்டின் நடுப்பகுதியில்தான். இன்றைக்கும் கோடிக்கணக்கில் இருக்கும் மனித உயிரினங்களுக்கெல்லாம் அஸ்திவாரம் போட்ட இடம் ஆப்பிரிக்கா!!!... எந்த ஜாதி மதமும் இல்லாமல் சடை முடியுடன் உடல் முழுதும் கரடியைப் போல முடிகளை வளர்த்து வளாத்திக் கொண்டிருந்த அந்த மிருகம் தான் முதல் ஆதி மனிதன், அதுவும் அது ஒரு பெண்!! அதற்க்கு வரலாற்றில் சான்றுகள் இருக்கிறது. சுமார் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெண் ஆப்பிரிக்க தென் பகுதியில் ஒரு மலைச் சரிவில் நடந்து இருப்பாள் போல தெரிகிறது, கடலோரமாக ஏதோ இறந்த மாமிசம் உண்பதற்காக சென்றிருக்கலாம், அப்போது அற்புதமான ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது, அந்தப் பெண் அவளுடைய காலடிச் சுவடுகளை மண்ணில் விட்டுச் சென்றிருக்கிறாள். சில ஆண்டுகளுக்கு முன்புதான் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த காலடிசுவடுகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.. கிட்டத்தட்ட சந்திரனில் neil armstrong வைத்த காலடி சுவடுகளுக்கு இணையானது அல்லவா இது?!!! அப்போதுதான் நம்மைப் போலவே கைகளை வீசி சாவகாசமாக நடந்து சென்ற அந்த பெண்ணிடம் ஒரு விசேஷ ஜீன் இருப்பது தெரிய வந்துள்ளது, அது "மீட்டோ கான்ட்ரியல்" DNA என்கிற ஜீன். உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் உருவாக அடிப்படைக் காரணமாக ஆதார சக்தி அந்த ஜீன் தான் என்று விஞ்ஞானிகள் பிற்பாடு தெரிவித்தார்கள். ஆகவே scientific ரீதியில் பார்த்தாலும் முதலில் சக்தி இல்லையேல் சிவம் இல்லை. (உலகநாயகனின் வாயால் இதைக் கேட்டதில் பெண்களின் கரகோஷம் சற்று பலமாக உயர்ந்தது.. சங்கீதாவையும் உட்பட.) "Ships are made to sail in the sea not to rest in harbour" என்கிற பழ மொழிக்கு இணையாக IOFI நிறுவனம் ஏற்கனவே பல கண்டங்களில் பயணித்தாலும், இன்னும் ஊடுருவி பல இடங்களுக்கு சென்று பல வெற்றிகள் அடைய வேண்டுமென்று வாழுத்துகிறேன்.. (பேசி முடித்து மேடையை விட்டு இறங்குவதற்குள் சத்தமின்றி யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ராகவ் மேடையின் மீது ஏறி கலைஞானியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான்.) புல்லரித்து நெகிழ்ந்து நின்றார் Dr.கமல். அப்போது mike பிடித்து மீண்டும் ஒரு விஷயத்தை சொன்னார். "கீழ உட்கார்ந்து இருக்கும்போது இந்த வாலிபர் ஒரு கவிதையை என்னிடம் சொன்னார், அதில் ஒரு தேவதை அடிக்கடி வந்தாள், யாரது என்று கேட்டேன், என் காதலி என்று சொன்னாரே தவிர பெயரை சொல்ல வில்லை. ஆனால் நான் அந்த கவிதையை ரசித்தேன். அதை இங்கே உங்களின் அனைவரின் முன்பாக ராகவ் படிக்க வேண்டுமென்று கேட்டுகொள்கிறேன்... இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் இளைஞர்களுக்கும் தமிழ் ஆர்வம் இருக்கிறது என்று காமிக்க இது ஒரு ஆதாரம்." (ராகவை நோக்கி படியுங்கள் என்று கலைஞானி mike ல் சொல்ல ராகவ் தொடர்ந்தான்...)


ராகவ் கடிதம்....( இது ஒரு காதல் கடிதம்..)

"மனதில் பல விதமான உணர்வுகளின் தாளம், கண்களை மூடி நானும் அப்படியே அந்த தாளங்களை ரசித்தேன், எனது மனதுக்குள் உலகில் பிரம்மன் படைத்த ஏராள இயற்கை அழகுகளுடன் சுவையாகவும் அமைதியாகவும் வாக்கு வாதம் நடந்துகொண்டிருந்தது., அவைகளை இங்கே குறிப்பிடுகிறேன்.

எனது மண ஓட்டத்தில் நான் பேசத் தொடங்கியது முதலில் இமய மலைகள் கூடத்தான்: சத்தங்கள் பலவிதம் என் காதில் வந்து விழுந்தாலும் அவை அனைத்தும் இமய மலையை புகழும் வார்த்தைகளாக வந்து கொண்டிருந்தது. அந்த புகழ்ச்சி சத்தங்களுக்கு மத்தியில் நான் கூறிய வார்த்தைகளைக் கேட்டு இமய மலைக்கு ஆச்சர்யம், காரணம் நான் அதன் அழகையும் பிரமிப்பையும் பார்த்து பாவப்பட்டு "நல்ல வேலை அவள் இங்கே வரவில்லை, இல்லையென்றால் நீதான் இந்த உலகில் கம்பீரதுக்கு அடையாளம் என்று எண்ணும் பலகோடி மக்கள் அவர்களுடைய முடிவை மாற்றி இருப்பார்கள்" என்று நான் சொன்னதைக் கேட்டு சற்று முகம் தொங்கியது..... ( அரங்கம் முழுதும் எதிரொலிக்கும் விழா ரசிகர்களின் கரகோஷ சத்தத்துக்கு சில நொடிகள் குடுத்து பிறகு கூட்டத்தை ப் பார்த்து அழுத்தமாக சொன்னான் ராகவ்) ..அந்த இமயத்துக்கு.

அடுத்ததாக நான் கண்டது அழகிய இலைகளையும் கனிகளையும் தாங்கி பகல் வெளிச்சத்தில் காட்சி அளிக்கும் மரங்களையும், பூக்களையும் தான், அவைகளை மிகவும் ரசித்து பாராட்டி புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் பல்லாயிரக் கணக்கான இயற்கை ரசிகர்களுக்கு "தானே இவ்வுலகின் அழகு எண்ணும் எண்ணத்தில் pose குடுத்துக் கொண்டிருக்கும் வானுயர்ந்த மரங்களுக்கும் பூத்து குலுங்கி சிரித்துக் கொண்டிருக்கும் பூக்களுக்கும்" நான் கூறிய சில விஷயங்கள் ஆச்சர்யப் படுத்தின: அவை :- ங்கணம் இயற்கை ரசிகர்கள் அனைவரும் கண்களுக்கு பார்த்தவுடன் மனதை கவரும் விஷயமாக எது பட்டாலும் அதை உடனடியாக மனமுவந்து பாராட்டுவது வழக்கம். நானும் அவர்களில் ஒருவன்தான், ஏனென்றால் அதிகாலையில், எழுந்தவுடன் எங்கள் கண்களுக்கு பச்சைபசெலென்று காட்சி அளித்து, கண்களுக்கு இதமாக குளிர்ச்சி அளிக்கும் உங்களை தான் நானும் இன்றளவு விழிகளுக்கு உற்சாகம் தரும் அழகு என்று நினைத்திருந்தேன். ஆனால் சமீபமாக அது பொய் என்று ஒரு தேவதையின் சிரிப்பை பார்த்தபோது உணர்ந்தேன். கண்களுக்குள் ஊடுருவி மனதுக்குள் சென்று மயக்கும் சக்தி அந்த சிரிப்பில் தெரிந்தது எனக்கு. அதை மனதில் புகைப்படம் எடுத்து வைத்து தினமும் அதிகாலை எழுந்தவுடன் ஒரு நொடி மனதில் ஓட்டி பார்ப்பேன். அப்பொழுது எனக்குள் கிடைக்கும் அந்த உற்சாகத்துக்கு அளவே இல்லை. மன்னிக்கவும், பிரம்மனின் படைப்பில் நீங்கள் இயற்கை அழகுதான் ஆனால் இயற்கை அழகான நீங்களே அவளின் சிரிப்பைப் பார்த்தால் உங்களின் அழகை அவளுக்கு தாரை வார்த்து கொடுப்பீர்கள். - என்று நான் சொன்னதைக் கேட்டு அந்த மர செடி கோடிகளுக்கும் கூட கொஞ்சம் முகம் தொங்கியது.

மலைகளும், மரம் செடி கொடிகளும் மற்ற இயற்கை நண்பர்களுடன் கலந்தாலோசித்து யாரைப் பற்றி நான் இவ்வளவு புகழ்கிறேன் என்று நொந்து கொண்டிருந்தன, அப்போது குயில்கள் குறுக்கிட்டு நீங்கள் தோற்றத்தில் தோத்து இருக்கலாம், விடியற்காலையில் நான் குடுக்கும் இயற்கை இசைக்கு இணை உண்டா என்று சவால் விட்டு வருகிறேன் என்று சொல்லி என்னை நோக்கி வந்து, யார் அந்த தேவதை? இயற்கை மிகுதியான அழகு கொண்ட எங்களைக் காட்டிலும் அவ்வளவு அழகா? இருக்கட்டும், தோற்றத்தில் நான் தோற்றுத்தான் போவேன் (தனக்குத் தானே மணம் வருந்தியது) ஆனால் குரலில்? ( என்று சற்றே தன் நெஞ்சை நிமிர்த்தியது). அப்போது மென்மையாக சிரித்துக் கொண்டு அதற்க்கு நான் அளித்த விளக்கம் அந்த குயிலுக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது அவை : - கீதங்களை ஆயிரக்கணக்கில் தினமும் அதிகாலையில் பாடி வரும் உங்களை கவிஞர்கள் முதல் காதலர்கள் வரை பலரும் புகழ்ந்து இருக்கிறார்கள். நானும் அதற்க்கு விதி விலக்கல்ல. ஒரு முறை என் தேவதைக்கு அவளுடைய குரல் குயில் போல் உள்ளதென்று சொல்லும்போது "அப்படியா" என்று சொல்லிவிட்டு மிக அழகாக சிரித்தாள். அந்த சிரிப்பு சத்தத்தை க் கேட்க்கும் போது என்னையும் அறியாது என் நாடி நரம்பு உடல் உயிர் அனைத்தும் ஒரு நிமிடம் சிலிர்த்தது. ஒரு நிமிடம் அவளின் சிரிப்பைக் கேட்டு உறைந்து நின்றேன். அப்போதுதான் தெரிந்தது அவள் சிரிப்பைக் காட்டிலும் இவ்வுலகில் சிறந்த இசை எதுவும் இல்லை என்று. - குயில் மெளனமாக அங்கிருந்து விடைபெற்று சென்றது.


இயற்கை அனைத்தும் ஒன்று கூடி ஆலோசித்தன, எப்படியாவது நமக்குள் ஒருவர் அவனது தேவதையை விட உயர்ந்தவள் என்று நிரூபிக்க வேண்டுமென்று, அதன் அடிப்படையில், உலக மாதாவின் உடலுக்குள் பொதிந்திருக்கும் தங்கத்தை நோக்கி விரைந்து சென்று விஷயங்கள் அனைத்தையும் எடுத்துக் கூறி என்னிடம் விவாதிக்க அனுப்பியது மற்ற இயற்கை அழகிகள் (!!). தங்கம் என்னை நோக்கி வந்து "என்னதான் மாணிக்கம், மரகதம், வைரம், வைடூரியம் என்று இவ்வுலகில் நிறைந்து இருந்தாலும் எனது அழகுக்கு இணை ஆகாது, அப்படி இருக்க உனது தேவதை எந்த அடிப்படையில் என்னை விட உயர்ந்தவள் என்று சொல்ல முடியுமா?" என்று கேட்டதற்கு நான் கூறிய பதில் தங்கத்தையும் ஆச்சர்யதுக்குள்ளாக்கியது, அவை :- தாராளமாய் சொத்து வைத்திருப்பவர்களும், பொருள் வசதி அதிகம் உள்ளவர்களும் அடித்துக் கொண்டு உலகில் நீ இருக்கும் இடம் தேடி உன்னை அடைகிறார்கள். வெட்கத்தை விட்டு சொல்கிறேன், நானும் அப்படி உன் பின்னால் அலைந்தவன் தான். ஆனால் ஒருமுறை காலை வெளிச்சத்தில், முதல் முதலில் என் கண் முன்னே வந்து நின்ற என் தேவதையின் தோள்கள் சூரிய வெளிச்சத்தில் மின்னியதை பார்த்தபோது, என் மனதில் நீ எந்த இடத்தில் இருந்தாயோ அந்த இடத்துக்கு நான் யோசிக்கக்கூட சில நொடிகள் குடுக்காமல் என் மனதில் இடம் பிடித்தாள் அந்த தேவதை. உன்னை க் காட்டிலும் தங்கத்தைவிட உயர்வான அவளது தோள்களில் எப்போதும் சாய்ந்து இருக்கவே துடிக்கிறேன். நீ அவளைப் பார்த்து விடாதே, மணம் நொந்துவிடுவாய். என்று நான் சொன்ன வரிகளைக் கேட்டு உண்மையில் தங்கதுக்கே கொஞ்சம் தடுக்கியது மனது.

இனியும் பொருக்க முடியாது, வாருங்கள் அனைவரும் பிரம்மனிடமே செல்லுவோம் என்று சொல்லி என்னைப் பற்றியும் என்னுடன் நடந்த விவாதங்கள் அனைத்தையும் கூறி புலம்பி இருக்கிறார்கள் அவன் படைத்த இயற்கை அழகிகள்.

அப்போது பிரம்மனே என் முன் வந்து பேசத்தொடங்கினான்.

மானிடா, ஒரு நிமிடம் பொறு, ஏன் நான் படைத்த இயற்கை குழந்தைகளின் மணம் வருந்தும் வண்ணம் உனது தேவதையை ஒப்பிட்டு பேசி இருக்கிறாய்? அவ்வளவு உன்னதமானவளோ உன் தேவதை?

ஆமாம்..

இவர்களிடம் இல்லாததென்ன அப்படி அவளிடத்தில் இருக்கிறது? என்று கேட்க

அனைத்து இயற்கை அழகுகளையும் படைத்த நீதானே அவளையும் படைத்து இருக்க முடியும்?

ஆமாம் - என்றான் பிரம்மன்.

மேலும் அவளிடத்தில் நான் பார்ப்பது உன்னைத்தான்.

என்ன சொல்கிறாய், என்னைப் பார்க்கிறாயா? - குழம்பினான் பிரம்மன்.

இறைவனே, கடவுளுக்கு மறு பெயர் அண்பு. சரிதானே? அன்பே சிவம் அல்லவா?

ஆமாம். - ஆமாம், (பிரம்மனையும் மயக்கினான் ராகவ்!!!!....)

அப்படிப்பட்ட அன்பின் உச்சகட்டம் காதல். சரியா?

ஆமாம்...

அப்படியானால் ஒரு விதத்தில் நான் உன்னைத் தானே அதிகம் ஆராதிக்கிறேன். அதுவும் நீ படைத்த அந்த தேவதையின் மூலம்....

பிரம்மன் சற்று குழம்பினான்... எல்லாம் சரி ஆனால் யார் அந்த தேவதை என்று பிரம்மன் கேட்க

நான் அவனது காதில் அந்த தேவதையின் பெயரை ரகசியமாக சொன்னேன். அதைக் கேட்டுவிட்டு அவனும் ஒரு முறை அவளைப் பார்த்தான். நான் கூறியது அனைத்தும் சரியே என்று அவனும் என் வழிக்கு வந்தான். என் காதலை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தான்.. ( கடைசி வரை பிரம்மனின் காதில் சொன்னா ரகசியத்தை சொல்லவே இல்லை ராகவ்.) - படித்து முடித்த பின் அனைவரும் ( கலைஞானி உட்பட) பலத்த சத்தத்தில் கை தட்டினார்கள்... ( சங்கீதாவுக்கு மனதுக்குள் ஒரு லேசான பொறாமை எட்டியது, யார் அவள் என்று தெரிந்துகொள்ள, இருப்பினும் அவன் கவிதையை பாராட்ட மணம் துடித்தது அவளுக்கு, இருப்பினும் சற்று அடக்கம் காத்தாள்..). இப்போது இருவரும் மேடையை விட்டு மெதுவாக இறங்கி அவரவர் இருக்கையில் சென்று அமர்ந்த வுடன் சங்கீதா மீண்டும் தொடர்ந்தாள்..

Thanks Dr.Kamal & Mr.Raghav - என்றாள் சங்கீதா.


இப்போது நாம் கௌரவிக்கும் அந்த மனிதர் இந்திய திரை உலகம் மட்டும் அல்ல, ஆசிய கண்டமே அண்ணார்ந்து பார்க்கும் BOSS - என்று சங்கீதா சொல்லி முடிப்பதற்குள் யாரென்று கூட்டத்துக்கு தெரிந்ததால் மீண்டும் அதிர்வுகள் காற்றில் பாயும் வண்ணம் கைகள் வலிக்க வலிக்க கைதட்டி ஆரவாரம் செய்தனர். கூச்சலும் விசிலும் தரும் சத்தம் ஆடிட்டோரியம் கதவுகளை உடைத்து விடுமோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு இருந்தது ரசிகர்களின் அதிர்வுகள்.. "None other than the one and only Super star RAJINIKANTH" என்று சங்கீதா சொன்னவுடன் glitters காற்றில் பறந்தது. கலர் paperகள் தூவப்பட்டன.. "தலைவா...." என்று ஒவ்வொரு ரசிகனும் தன் ஆழ் மனதிலிருந்து அன்பை வெறித்தனமாக வெளிப்படுத்தினார்கள், நண்பர் கமல் ரஜினியை கீழே கட்டி அனைத்துவிட்டு மேடைக்கு அனுப்பி வைத்தார்!!..
திரையில் இந்த மஹானைப் பற்றி ஒரு சிறிய biography யைப் பார்ப்போம். - (click to view PART 1- Must watch clip)
திரையில் இந்த மஹானைப் பற்றி ஒரு சிறிய biography யைப் பார்ப்போம். - (click to view PART 2- Must watch clip)

IOFI cine Legend award டினை நண்பர் BigB யிடம் இருந்து பெற்றார் ரஜினி.

மெதுவாக பேச ஆரம்பித்தார் ரஜினி: விழாவுக்கு வந்திருக்கும் ரசிகர்களே, பத்திரிகை நண்பர்களே, ... (இன்னும் பலர்...), கடைசியாய் "என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களே" என்ற வார்த்தையை சொல்லும்போது உண்மையாகவே கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது.

அதிகம் பேச நேரம் இல்லை, எனவே சொல்ல வேண்டிய கருத்தை சீக்கிரம் சொல்லிடுறேன். Mr.Mahesh Yadhav is a good man. kind hearted man.. எப்டி எப்டி இவளோ பெரிய success அவருக்கு கிடைசுதுன்னு பார்த்தா... அதுக்கு காரணம் அவருடைய தன்னடக்கம். சாதாரண தையல் காரனா இருந்தவரு இன்னைக்கி ஒரு மிகப்பெரிய லக்ஷ்மிகரமான IOFI நிறுவனத்தை உருவாக்கி இருகாருன்னா அது சாதாரண விஷயம் இல்லை நண்பர்களே.. மிகுந்த தன்னடக்கம் வேண்டும். அதைப்பற்றி ஒரு சின்ன குட்டி கதை ஒன்றை இன்றைய தலைமுறைக்கு சொல்லிக்குறேன் சொல்லிகுறேன்:

ஒரு நாள் midnight ஒரு இளைஞன் நல்லா தண்ணி அடிச்சிட்டு மொட்டை மாடியில் போய் உட்காருறான். அப்போ மேல அண்ணார்ந்து பார்க்கும்போது அவனுக்கு நிலா தெரியுது. அதுவும் நல்ல வெளிச்சமா தெரியுது. அவன் மனசுக்குள்ள சில விரக்தி. திறமை அதிகம் இருந்தும் கொஞ்சம் வாய் ஜாஸ்தி அவனுக்கு. அவன் மேலதிகாரிங்க கிட்ட ஒத்து போக மணசு இல்லாம வீராப்பு தான் பெருச்சுன்னு வேலைய விட்டுட்டு வந்து நிலாவ பார்த்து சொல்லுறான் .... "ஏய்ய் எதுக்கு இப்போ உன் மிதமான வெளிச்சத்தை காமிச்சி நீ ரொம்ப அழகுன்னு தெரியப் படுத்திக்குற? வேற வேலை இல்ல உனக்கு? அதான் கவிஞன் முதல் காதலர்கள் வரை உன்னை புகழ்ந்து தள்ளுரான்களே, என்னை மாதிரியா உன் நிலைமை.? வேற எங்கயாவது போ என் முன்னாடி வராத போ போ" னு அவன் ரொம்ப feel பண்ணி நிலாவிடம் பேசுறான்.... அப்போது நிலா அவனுக்கு அழகாக பதில் சொன்னது.. "அடேய் அற்ப மானிடா, நீ இருக்குற பூமியில பகல் நேரத்துல சுட்டு எரிக்குற சூரியனைத்தான் டா நானும் தினமும் வணங்குறேன். என் கிட்ட ஒரு மிதமான வெளிச்சம் வருதுன்னு சொல்லி அதை வர்னிச்சி இன்றைக்கு கவினர்களும் காதலர்களும் என்னை பாரட்டுராங்கன்ன நான் அந்த சூரியனை வணங்கி அவன் குடுக்குற வெளிச்சத்தை உள் வாங்கித்தான் உனக்கு இந்த மிதமான வெளிச்சத்தை குடுக்குறேன். அந்த தன்னடக்கம் எனக்கு சூரியன் கிட்ட இருக்கு, அது போல உன் கிட்ட நிறைய திறமை இருக்கு, ஆனா தன்னடக்கம் இல்ல, நான் தான் எல்லாரையும் விட பெரியவன் ன்னு நினைச்சி அகந்தையில உன்னை நீயே தொலைச்சிக்குற. தன்னடக்கதுடன் உன் வேலையை நாளை காலை தொடங்கு, அப்புறம் பார் உன்னை மற்றவர்கள் எப்படி தலையில் தூக்கி வைப்பார்கள்" என்று நிலா அன்று இரவு பேசியதில் இருந்து அந்த மனிதனுக்கு ஒரு ஞானோதயம் வந்தது, மிகுந்த தன்னடக்கத்துடன் வேளைகளில் ஈடுபட்டார், பல வெற்றிகளைக் கண்டார்.
என் நிஜ வாழ்க்கையில் ஒரு நண்பர் இப்படி நான் வளர்ந்து வருவதைப் பார்த்து இருக்கிறேன் நண்பர்களே. (சில நொடிகள் மௌனம்...பிறகு கண்களை மூடி தொடர்ந்தார்...) Yes... yes.... அந்த குணாதிசயத்தை நன் அவருடைய மகன் Raghav கிட்டயும் எந்திரன் படத்துல பணி புரியும்போது பார்த்திருக்கிறேன். definately... definately IOFI இன்னும் மேல போகும் னு சொல்லி இறைவனை பிரார்த்தனைப் பண்ணிகுறேன். நன்றி வணக்கம். - என்று பேசி முடித்து தனக்கே உரிய மின்னல் வேக நடையில் மேடையை விட்டு கீழே இறங்கினார் தலைவர் ரஜினி. - அப்போது ரஜினியின் தீவிர ரசிகயான சங்கீதா மேடையிலேயே ரஜினியிடம் autograph வாங்கி பத்திரமாக வைத்துக்கொண்டாள்.

அப்போது ரஜினி சங்கீதாவிடம் கூறிய வார்த்தைகள்.. "you did a fantastic job.. ஆ...ஹா ஹா ஹா.." என்று தனக்கே உரிய அந்த மந்திர சிரிப்பைக் குடுத்துவிட்டு மேடையில் இருந்து நொடிகளில் மறைந்தார் ரஜினி.

Thank you Dear Super Star ரஜினி. 



No comments:

Post a Comment