Pages

Tuesday, 13 October 2015

கனியும் ஒரு காதல்.. 3

பாண்டியன் எக்ஸ்பிரஸ் களைப்புடன் மதுரை வந்து சேர்ந்தது....யாரோ.. மெல்ல தலை தடவி தன்னை எழுப்புவதாக உணர்ந்தான் மோகன்... முழித்தான்... கண் எரிந்தது... கண்ணை கசக்கி..முழிக்க தேவதையாய்... அகிலா..

"ம்ம் என்ன விடிய விடிய குடியா... இப்படி தூங்கினால்..எழுந்திருப்பா...."

"இல்லை அகிலா... நான் திருச்சி வந்ததும் படுத்திட்டேன்..."

"தெரியும்......நான் கவனித்தேன்..." சொன்னவள் நாக்கை கடித்துக் கொண்டு திரும்பிக்கொண்டாள்....

மோகனின் மனசில் பட்டாசு வெடித்தது... என்னை கவனிக்கிறாள்... நான் என்ன செய்கிறென் என்று கவனிக்கிறாள்.. இதற்கு பெயர் தான் காதலா... பட்டென்று எழுந்தவன்...

"என்ன செய்யனும் சொல்லு...."

"முதல்ல இறங்கனும்...லக்கேஜ் செக் பன்னனனும்... ஹோட்டல் காரன் பஸ் அனுப்பி இருப்பான்...எல்லாரையும்
ஏத்தனும் கொண்டு போய் அங்க சேக்கனும்... வா சீக்கிரம்...."

வெளியே வந்தனர்.. எல்லா லக்கேஜ் செக் பன்னி...



இரண்டு கோட் சூட் போட்ட ஆசாமிகள் வந்தனர்...அகிலாவிடம் பேசினர்....அகிலா மோகனை காட்டி ஏதோ சொல்ல...அவர்கள் அவனிடம் வந்தனர்...

"வணக்கம், எங்கள் ஹோட்டல் சார்பா உங்களை எல்லாம் வரவேற்கிறோம்.. வெளிய பஸ் இருக்குது....
எல்லாரையும் நீங்க தான் ஏத்தனும்... உங்களுக்கு தான் உங்க ஆளுங்க தெரியும்....நாங்க பஸ் கிட்ட
நிற்கிறோம்..." சொல்லிவிட்டு நகர்ந்தனர்....

எல்லாரையும் நான் வண்டில ஏத்தனுமா... தேர இழுக்குற மாதிரி தான்... போ... குழு குழுவாய் நின்றவர்களிடம் போய் சொல்லி ஏற்றி.. அனுப்பும் முன் உன் பாடு என் பாடு ஆகி விட்டது மோகனுக்கு....எல்லாரும் ஏறியவுடன் அவன் மட்டும் பஸ்ஸில் ஏறாமல் அகிலாவைத் தேட.. அவள் அந்த கோட் ஆசாமிகளுடன் பேசிக் கொண்டிருந்தாள்.. அவனைப்பார்த்து கைஅசைத்து அழைத்தாள்..


இரண்டு பஸ் கிளம்ப... விசில் சத்தம் பறந்தது.. ப்ஸ்ல் இருந்து... கொண்டாட்டம் ஆரம்பம்...அப்போதே...

"பஸ் போகுது அகிலா... நீ வரல..."

"வா நாம இவங்க கூட கார்ல முன்னாடி போயிடலாம்... ப்ரொகிராம் என்னன்னு இவங்களுக்குஸ் சொல்லனும்
அவங்களுக்கு வேலை இப்ப இல்லை.. நமக்கு இப்ப இருந்து ஆரம்பம்.. திரும்ப போகிற வரை..."

காரில் அவளுடன் பின் சீட்டில் ஏற.. கோட் ஆசாமி ஒருத்தன் மட்டும் முன் சீட்டில் அமர.. இன்னோருத்தன் அங்கயே நின்று கொண்டான்...

இருவரும் பின் சீட்டில் அமர்ந்தவுடன்...

அகிலா மோகனப் பார்த்து..." தாங்க்ஸ்.." என்றாள்

"எதற்கு..."

"ம்ம்ம்...குடிக்காம இருந்தற்கு..."

"நான் குடிக்கலைன்னு எப்படி தெரியும்..."

"தெரியும்பா.. நீ குடிக்கலை..."

"எப்படி.... "அவள் கண்களைப் பார்த்தான்.... அதில் இரவு முழுவதும் தூங்காத அறிகுறியாய்... கண்ணில் ஒரு சோர்வு..சிவந்து...

"ஹேய் அகி.. நீ தூங்கலையா.... ஏன்பா... நான் தான் சொன்னேன்ல... நம்பலை என்ன... அப்படித்தானே...."

"இல்லை அதுக்கு இல்லை " தடுமாரினாள்...

இதற்குள் முன் சீட் ஆசாமி... "சார் உங்கள் புரோகிராம் என்னன்னு சொன்னீங்கன்னா.. அதுக்கு தகுந்த மாதிரி ஏற்பாடு பண்ணிடுவேன்..."

"எங்க புரோகிராம் 11.30 ஸ்டர்ட் ஆகும்... இனிடியல் மீட்டிங்க்.. அப்புறம் லஞ்ச்ஸ் அப்புறம் 3.00 மணிக்கு டீலர்ஸ் மீட்...5.00 மனி வரை.. மருபடி 6.00 மனிக்கு ஆரம்பித்து 7.30 வரை அப்புரம் டின்னர் காக்டெயில்.. இது இன்னிக்கு ப்ரொகிராம்... நாளைக்கு உள்ளத அப்புரம் சொல்லுறென்...."

"உங்க ஃபார்மாலிட்டீஸ் என்ன.." மோகன் கேட்க...

"சார் வெல்கம் ட்ரிங்க்ஸ் போன வுடன்...
breakfast ... non payable... then puffat lunch.... cultural programme 7.00 to 9.00.... we will be ready 7.30 for dinner & cocktile.....in between tea and snacks as you require....."

இதற்குள்.. கார் ஹோட்டல் வந்து விட்டது... பஸ் இன்னும் வரலை... காரை விட்டு இறங்கியதும் இரண்டு பெண்கள் வந்து பூச்செண்டு ஒரு ஒற்றை ரோஜா.. கொடுத்து வரவேற்றனர்....

ரிசப்சன்.. அருகே இருவரும் போய்... ரூம் அலாட்மண்ட்.. லிஸ்ட் எடுத்து கொடுக்க...பஸ் வந்து நின்றது....

எல்லரையும் கூல் டிரிங்க்ஸ் கொடுத்து சாவி கொடுத்து.. .....ப்ரெக்ஃபாஸ்ட்.. ஃப்ரிப்பா... அங்க போய் சாப்பிடுங்க...
ரூம்ல சாப்பிட்டா.. உங்க கணக்கு.. சொல்லி சாவி கொடுத்தான் மோகன்.....

"என்ன மோகன் அவனுக ரூம்ல சாப்பிட்டா என்ன... "

"அகி.. அங்க ரெஸ்டாரண்டுல சாப்பிட்டா.. அது ஃப்ரி.. ரூம்ல ஆர்டர் பண்ணினா... தாளிச்சிடுவான்....
மெனு பாத்தேன்... பொங்கல் 250/- ரூபாய் பார்த்தேன்... நான் நினக்கிறேன் 50 ரூபா.. பொங்கல்...200 ரூபா
சர்வீஸ் சார்ஜ்... பாரேன் ஒவ்வொறு ரூமும் எவ்வளவு தூரத்தில இருக்குன்னு.....அது ரூம் இல்லை வீடு...
வீடு மாதிரில்ல கட்டி விட்டிருகான்....."

"ரூமுக்கும் இங்க ரெஸ்டாரண்டுக்கும் 1/2 கிமீ இருக்கும் போல.. ..".சொன்னால் அகிலா...

"ஆமா மலை மீது.. இருக்குற இடத்துல எல்லாம் கட்டி இருக்கிறான்... ஒன்னு கூட மாடி இல்லை எல்லாம் தனித் தனி வீடு மாதிரி..நல்லா இருக்குல்ல... நல்ல செலக்ட் பண்ணிருக்க அகிலா... "

"என்ன மோகன் என்ன நினக்கிற... நீ"

"இல்லை என் ஹனி மூன இங்க கொண்டாலாமான்னு நினக்கிறேன்...". பட்டென்று சொன்னான் மோகன்...அகிலாவை பார்த்தவாரு....சிறு புன்னகையுடன்...

அகிலா முகம் சிவந்தாள்... மனசுக்குள் பொறுக்கி அத ஏண்டா என்ன பார்த்து சொல்லுற...ராஸ்கல்... நான் என்ன சொன்னாலும் கேப்பியாடா.. குடிக்கலை நீ சந்தோசமா இருக்குடா... கேப்பியா நான் என்ன சொன்னாலும்... ம்ம்ம்..ம்ம்ம். சொல்லு....மனதிற்குள் சொல்லி கொண்டவள்.. அந்த கடைசி வார்த்தை அவளை அறியாமல் வெளியே விழுந்தது.....

"ம்ம்.. சொல்லு ..."


மோகன்.. முகத்தில் புன்னகையுடன்..." ம்ம்ம் என் காதலியுடன் இங்க ஹனி மூன கொண்டாலாம்னு நினைகிறேன்...."

திருப்பி அழுத்தாமாய் சொன்னதும் தான் அகிலா இந்த உலகுக்கு வந்தாள்....

"என்ன சொன்ன....."

"நீ என்ன செவுடா.... எத்தனை தடவை சொல்லுறது......"

அகிலாவுக்கு அவன் சொன்னது இனித்தது... ம்ம்ம்ம்ம் படவா நீ அப்படி நினச்சி தான் இங்க வந்தியா.... நான் யார்னு தெரிஞ்சும்
இன்னும் ஏண்டா சொல்லாம இருக்குற....சொல்லுவானா.... ம்ம்ம் இல்லை நான் சொல்லனுமா... நான் எப்படி அவன் கிட்ட
நானா சொல்லுறது... அவன் சொல்லட்டும்... தெரியாத மாதிரி இன்னும் நடிப்போம்.. எப்ப சொல்லுரான்னு பாப்போம்.....
பட்டிகாட்டுல இருந்து வந்த உனக்கு இவ்வளவுன்னா.. நான் இங்கயே பட்டனத்தில் குட்டி கரனம் போட்டவள்... ம்ம்ம் என் கிட்டயா....உனக்கு தண்ணி காட்டுறென் பார்.. அவள் மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்....

மோகன்..". என்ன யோசனை.. நீயும் அப்படித்தான் நினக்கிறாயா.. அகிலா....."

"சேச்சே இந்த இடத்திலயா... போடாங்க்......நான்... நான்...."

அவள் சொல்லி முடிக்குமுன் செல் போன் அலறியது... எம்.டி.... செல்போனை காதில் வைத்தபடி அவனைப் பார்த்து சீக்கிரம் குளித்து சாப்பிட வா.. என்பது போல் சைகை செய்து விட்டு... அவள் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்றாள்.....

ஒரே வீடு மாதிரி ஆனால் நாலு வாசல்கள்... ஒவொவ்ன்றும் ஒரு திசை பார்த்து.. ஒவ்வோறு அறையும் ஒரு பெட் ரூம் ஒரு ஹால்....மற்றும் குளியல் அறை... பாத் டப்புடன்.... முன்புரம் பூச்செடிகள்.. அப்புரம் ஒரு புல் வெளி அதில் ஊஞ்ச்ல்.. மற்றும் டேபிள் மாதிரி மற்றும் நாற்காலி... ஒரு பார்ட்டி கொண்டாடும் அளவிற்கு....அந்த வீட்டில் தங்கும் அனைவரும் பங்கு கொள்ளும் விதமாக...

இப்படியே ஒவ்வோறு வீடும்.... கொஞ்சம் தள்ளி நீச்சல் குளம்.... சில வெளி நாட்டினர்.. குளித்துக் கொண்டும் சன் பாத் எடுத்துக் கொண்டும் இருந்தனர்.....அகிலாவின் அடுத்த அறையே அவனுக்கும்... அவனுடன் சின்ன லெவலில் மார்கட்டிங்கில் உள்ள ஒரு அச்சிஸ்டட் சேல்ஸ் மேனஜர்...தன் டிராலி ரூமுக்கு வந்ததும் பாட்டில்களை பத்திரமாக செக் பன்னி அங்கிருந்த அலமாறியில் வைத்து பூட்டினான்.....மோகன்..

மடமடவென்று குளித்து கிளம்பி... நேராக... அகிலா தங்கியிருந்த அறைக் கதவை தட்டினான்....

அந்த குண்டு பெண் அகிலாவுடன் வந்தவள் தான் கதவை திறந்தாள்.. தலைய நீட்டி என்ன.. என்றாள்....

"அகிலா இல்லையா..... ம்ம்ம் "

"இரு வராங்க...". சொன்னவள் கதவை மெள்ள மூட எத்தனிக்க... மூடும் முன் கவனித்தான்... ம்ம்ம்ம்ம்ம் அற்புதமான அருமையான காட்சி.......ம்ம்ம் அகிலா பெட்டிகோட்டுடன்.... பிரா மட்டும் போட்டு... எல்லாம் அளவாய்.. ஓன்றும் மித மிஞ்சி இல்லாமல்....அழகு பதுமையாய்... 32 28 32 ..... ம்ம்ம் மயக்கும் அழகு துவும் பிரா பெட்டிக் கோட்டில்... ஒரு வினாடி தரிசனம் .. கதவு மூடியது....

இந்த காமிரா.... இருக்குள்ள... அதனுடைய ஷ்ட்டர் திறந்து மூடுமுன்.. காட்சிகளை பதிவு செய்யுமே அது மாதிரி அந்த கோலம் அந்த நிலை... அவன் இதயத்திற்குள் அப்படியே கண் என்கிற காமிரா... மூலம்.. என்ன இமை என்ற அந்த ஷ்ட்டர் மூட மறந்தது நிஜம்....பதிவு பண்ணி உள்ளே நிரந்தரமாக பிரிண்ட் போட்டு.. படமாய்....வைத்துக் கொண்டது....

ரூமுக்குள்... அகிலா.. அவளை கேட்டாள்.. யார்பா....

உன் மோகன் தான்..... அந்த உன் அதை கொஞ்சம் அழுத்திச் சொன்னாள் அவள்.....

அகிலா..". ஏண்டி அறிவு இருக்கா.. நான் கண்னாடி முன்னால இப்படி நிக்கிறேன்.. கதவ திறக்க போறியே..."

"இல்லைடி அவன் பார்க்க வாய்ப்பில்லை..."

அகிலா.. மனசுக்குள்... பார்த்திருப்பானோ... எனது இந்த கோலத்தை பார்திருப்பானோ.... மடச்சி நான் இப்படியா அவுத்து போட்டுக்கிட்டு மீண்டும் அங்கிருந்து அவள் வாசல் கதவைப் பார்த்தாள்.. அவள் நின்றிருந்தது அறையின் இடபுறம்... அவள் கதவு இரண்டு கதவுகள் கொண்டது..முதலில் திறப்பது இடது புற கதவு தான்.... ச்ச்ச்ச்ச்சீ... அங்கிருந்து பார்த்தால்.... கதவைப் பார்த்தாள்... உடல் ஒரு கணம் ஆடியது கதவைத் திறக்கும் போது என்ன தான் மறைத்து நின்றாலும் அவன் உயரத்திற்கு வெகு சுலப்மாக அவளை பார்த்திருப்பான்... உடல் ஒரு கணம் கூசியது... மறுகணம்... உச்சங்காலில் இருந்து ஒரு பரவச உணர்வு மெள்ள ஏறி... அவள் உச்சந்தலையில் அறைந்தது... பார்த்திருப்பான்... பார்த்திருக்கிறான்... ம்ம்ம்ம்.. பார்த்திருக்கனும்... பாக்கனும்... இதய துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் ஏறி அவளுக்கே கேட்டது...


"என்னடி அப்படியே நிக்கிற.. ம்ம் கிளம்பு அவன் வேற வெளிய நிக்கிறான்...."

மோகன் வெளியே நிற்கிறான்.. பார்த்தும் பார்காதது மாதிரி... அவன் வெளியே நிற்பதே ... அவளுக்கு உடல் முழுவதும் கூசியது...சுவற்றை கிழித்து அவன் கண்கள் அவளை பார்பது மாதிரி.....மள மளவென்று புடவை கட்டினாள்... தலையை வாரி பொட்டு வைத்து...5 நிமிட்ங்களில் ரெடியாகி... கொஞ்சம் அக்கரையாய் கண்ணாடியில் சரி பர்ர்த்து....

வெளியே வந்தவளை... கண் விழுங்க பார்த்தான்... மோகன்..... 5 நிமிடம் முன் பார்த்த அந்த அரைகுறை கோலம் அவன் கண்களில்..வந்து இப்போது இருக்கும் நிலையையும் ஒப்பிட்டு பார்த்தது... மனது..... ஒரு உஷ்ண மூச்சு விட்டான்.. மோகன்.....

"வா மோகன்.." அவனை பார்த்தாள்.. அவன் விழுங்கும் பார்வையை பார்த்தாள்... புரிந்து விட்டது அவளுக்கு.. மனசு சிலிர்த்தது... உடல் ப்றப்பது போல்... பார்த்திருக்கிறான்.. திருடன்.. முழிக்கும் முழிய் பாத்தாலே நல்லா தெரியுது....படவா.. ரசிக்கிறாயா...
ம்ம்ம்ம்ம்ம்ம்... என்னை அப்படி பார்த்தாயா... மனசு அவன் மனசுடன் பேசியது... நான் நல்லா இருக்கேனா.. ம்ம்ம்ம் .. சொல்லுடாஆஆ.....மனம் ஆர்பரித்தது...

"வாவ்.. அகி... ம்ம்ம்ம்ம் சான்ஸே இல்லை... என்ன இப்படி... ம்ம்ம் போங்க....நீங்க தான் இன்னிக்கு ஹால் ஆப் ஃபேம் ஆக போறீங்க...." அவன் பாராட்டு சொற்கள் அவள் மனதில் புகுந்து.. வெளியே வந்தது... புன்னகையாக....

"ஈஸ்.. இட்... தாங்க்ஸ்.. மோகன்... " அவள் கண்களாலும் நன்றி சொல்ல...

ரெஸ்டாரண்ட் நோக்கி இருவரும் இணையாக நடந்தனர்....




அப்சரஸ் மாதிரி அகிலா நடந்து வர அவள் அருகில் மோகன் இணையாக.....

ரெஸ்டாரண்டில் நுழைந்தவுடன்... அங்கிருந்த கூட்டம் எல்லாம் அவங்க ஸ்டாஃப் தான்... ஒரு முறை அனைவரின் கண்களும் அவர்கள் மேல் பதிந்து விலகியது.... சில ம்ம்ம்ம் பெருமூச்சு... சில பொறாமை... சில பையன் மடக்கிட்டான்... சில... இவளை இப்படியே சுவத்துல சாத்தி.....ம்ம்ம்ம்.. பார்வைகளின் கூர்மையை தாங்க முடியாமல் ... அகிலா.. கொஞ்சம் சங்கடமாய் நெளிய.. மோகன்.. உடனே ஒரு சீட்ட புடிச்சு அவளை உட்கார வைத்தான்.. இரண்டு பேர் எதிர் எதிரே அமரக்கூடிய அதில் ஒரு வெளி நாட்டு காரன் உட்கார்ந்திருந்தான்.. ஒரு சீட் காலி... அதில் அவளை உட்கார வைத்தான்.. மற்றவர்கள் பார்வையில் அவள் படாதவாறு அவளை மறைத்து நின்று கொண்டான்....

அங்க எக்ஸ்டிரா சீட் போடுற வழக்கம் இல்லை போல.. இது என்ன சரவண பவனா... உடனே ஒரு சேரை கொண்டு வந்து போட....இருவருக்கும் சேர்த்து ஆர்டர் பன்னிட்டு சும்மா அப்படியே நின்றான்....

அகிலாக்கு அவன் செய்கை ஒவ்வொன்றும் பிடித்திருந்தது... ம்ம்ம்ம் என்னடா... என் அழக யாரும் பார்க்க கூடாதா... அவ்வளவு..பொஸசசிவ் ஆ நீ.. ம்ம்ம்... சாரி... நான் உனக்காத்தான் இந்த மாதிரி டிரஸ் போட்டேன்.... இப்படி இவனுக கார்த்திகை மாத நாய் மாதிரி பார்பாங்கன்னு தெரிஞ்சிருந்தா... கண்டிப்பா இப்படி டிரஸ் பன்னி இருக்க மாட்டேன்... சாரி டா... மனம் அவனிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டது....

எதிர் சீட்டு வெளி நாட்டுக்காரன் அப்பத்தான் இட்லி சாம்பார ருசிச்சு சாப்பிட்டு கொண்டு இருந்தான்...

அதற்குள் அவன் ஆர்டர் பண்னியது வரவும்.. அகிலாவிடம்

"அகிலா நீ சாப்பிடு.. நான் அப்புரம் சாப்பிடுரென்...."

"வாடா நீயும் அப்படியே ..."

"என்ன கையேந்தி பவன்ன்னு நினைச்சியா... இங்க ஒரு மரியாத இருக்கு... காப்பாத்திக்கனும்...நீ சாப்பிடு.. நான் வெயிட் பன்னுரெண்"....அவள் அருகில் நின்று கொண்டான்...அவள் கொஞ்சம் இட்லி எடுத்து சாப்பிட... அவன் அவளையே பார்த்துக் கொண்டு..... இருந்தான்.....
அவளுக்கு கொஞ்சம் கூட பிடிக்க வில்லை சாப்பிட.. அதுவும் மோகனை விட்டு விட்டு... எனக்காக எப்படி நிக்கிறான்.. என்னை பாதுகாக்க வந்த காவலன் மாதிரி.. ம்ம்ம்ம்...அவ்வளவு பிடிக்குமா என்னை உனக்கு... ம்ம்ம்ம்.. மனசு அலை பாய.. விரல்கள் இட்லி சாம்பாரில் அலைந்து விளையாடிக் கொண்டிருந்தன....

"என்ன அகிலா சாப்பிடு.. சீக்கிரம் இன்னும் 10 நிமிசத்துல நாம அங்க இருக்கனும்... இவனுகளுக்கு முன்ன நாம அங்க இருக்கனும்...
சாப்பிடு.. "

அவன் வற்புருத்தலில் ஒரு இட்லியை எடுத்து சாப்பிட்டவள்.....அப்படியே வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள்....

"எனக்கு பிடிக்கலை மோகன்...."

"என்ன பிடிக்கலை இட்லியா அப்ப பொங்கல் சாப்பிடு.. இல்ல தோசை ஆர்டர் பன்னுரென்...."

எதிர் சீட்டு வெள்ளைக்காரன் இப்பத்தான் இட்லி சாம்பாரை முடித்து காபி ருசிச்சு சாப்பிட்டான்... அவன் சாப்பிடும் விதத்தை பார்த்தால்....மோகனுக்கு நெட் ல் படித்த ஓன்று ஞாபகம் வந்தது...

இரண்டு பிசினஸ் மேன் இருவரும் சைனாகாரகள்... ஆளுக்கு ஒரு டீ ஆர்டர் பன்ணி விட்டு... 1மணி நேரம் பேசி முடித்து....
அந்த பிசினஸ் டீல் முடியும் மட்டும் சிப் சிப்பா அந்த ஒரு டீ ய குடிச்சு.... டீல் முடிஞ்சு கிளம்பும் போது டீ கப்பை காலி செய்வார்களாம்... அதாவது ஒரு டீ ல ஒரு பிசினஸ் பேச்சு... ( நம்ம ஆளுக அதுக்குள்ள ஒரு புல் பாட்டில முடிச்சுட்டுவான்...ரயில்ல பண்ணின மாதிரி.. பாவிகளா ..) ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ.. டீ ஒன்று தான்....

அது மாதிரி அந்த வெள்ளைக்காரன் தனது காபிய ரசிச்சு ரசிச்சு குடித்தான்....அவனுக்கு வேற வேலை இல்லை ஆனா மோகனுக்கு...

அதற்குள் போன் அடிக்க.. அகிலா எடுத்தாள் எம். டி தான்.. அரெஞ்மெண்ட் ப்ற்றி விசாரித்தார்.... பட்டென்று எழுந்தவள் கை கழுவி விட்டு.". நீ சாப்பிட்டு வா மோகன் நான் மீட்டிங்க் ஹாலுக்கு போறென்..." கிளம்ப...அவளுடன் அவனும் நடந்தான்...

"என்னடா சாப்பிடலையா...."

"இல்லை வா நான் அப்புரம் சாப்பிடுறென்... வா போலாம்....."

"சாப்பிடுடா.. பிளீஸ்......"

"வா அகி..நேரமானா... எம் டி உன்னைத்தான் திட்டுவார்.. வா.. நான் இல்லாமல் அங்க ஒரு வேலையும் ஆகாது.. வா...."

மோகன் முன்னால் நடந்தான்... அவள் தயங்கி தயங்கி சங்கடமாய் அவனை பின் தொடர்ந்தாள்.....

மனசு சங்கடமாய்.. நான் கொஞ்சம் முன்னால் கிளம்பிருந்தால் சாப்பிட்டிருப்பேல்ல....உனக்கு சாப்பிட நேரம் கிடைச்சிருக்கும்ல்ல....மனசு அவளை குத்தியது.. இந்த அலங்காரம்... அவனுக்காகதான்.. ஆனால் அது அவனை பட்டினி போட்டது தான் அவளுக்கு.. கசந்தது....
எம் டி என்னத்தானாடா திட்டுவார்...உனக்கு என்ன... அவர் என்ன திட்டினா நீ தாங்க மாட்டியாடா... ம்ம்ம் சொல்லு....மனம் அவனுக்காக கசிந்தது... அவள் அவனை பின் தொடர்ந்து நடந்தது அனைவரின் கண்களையும் உருத்தியது...

.சில இளவட்டங்கல் மட்டும் அதை ரசித்தது... ம்ம்ம் நல்ல ஜோடி மச்சி.... பாரேன் அவன் பொண்டாட்டி மாதிரி அவன் கூப்பிட்டதும் அவன் பின்னால ஓடுறா.... ம்ம்ம்ம்ம் நடத்து மாப்பிள்ளே நடத்து.. நாங்க இருக்கோம்..... உனக்கு... வாழ்த்தியது.....அவர்கள் மனம்....அது தான் வாலிபம்..


மீட்டிங்க ஹால்... இருவரும் நுழைந்தனர்....

மோகன்... உடனே தன் வேலய ஆரம்பித்தான்.....சீட் அரஞ்ச்மெண்ட்.... மைக் அரேஞ்ச்மெண்ட்... அப்புரம் ஸ்டேஜ்.... ப்ரொஜெக்டடர்....அதனுடன் லாப் டாப்.... இணைப்பு... டெஸ்டிங்.... மணி... 9.45... ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தனர்.....

9.50.. எம் . டி வந்துட்டார்.. அவர் எப்பவுமே ஷார்ப்... டைம்....

10.00 மணிக்கு மீட்டிங்க் தொடங்கியது......

இனி கொஞ்சம் ரிலாக்ஸ்... இன்னும் 1 மணி நேரம்.. பேச்சு நடக்கும்.. அப்புரம் .. ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை சொல்ல ஒரு நேரம்.. அப்புறம் டீ... அப்புரம் மறுபடியும்.... அப்புறம் 1.15 லன்ச்... பிரேக்... மறுபடியும் 2.30க்கு அரம்பம்.... 5.30க்க் முடியும்....

4.30 க்கு அகிலா ஒரு ப்ரசண்டேசன் பண்ணனும்....

ஹாலில் ஹோட்டல் சூப்பர் வைசர் மோகனை அழைத்தார்...

"சார் கொஞ்சம் வரீங்களா....."

"என்ன...."

"வாங்க ஒரு முக்கியமான விசயம்... "
அகிலாவைப் பார்த்தான்.... போ.. என்பது மாதிரி கண்ணக் காட்ட... அவர் பின்னால் போனான்....

பக்கத்தில் இருந்த ஒரு ரூமை திறந்தார் ... உள்ளே அழைத்துச் சென்றார்....அது ஒரு வாடிக்கையாளர்கள் தங்கும் அறை தான்.. ஆனா இப்ப யாரும் இல்லை.. காலியாக இருந்தது... அங்கிருந்த டீப்பாயில்... இட்லி பொங்கல்.. தோசை..வடை....காபி...

"என்ன சார் இது...."

"நீங்க காலைல சாப்பிடலைன்னு மேடம் சொன்னாங்க.. அது தான் இங்க எடுத்திட்டு வந்திட்டோம்...அங்க சாப்பிடறத் இங்க சாப்பிடுங்க..."

என்ன சார்....""


"நார்மலா இப்படி பண்ண மாட்டோம் சார்... ஆனா மேடம் எங்களுக்கு ஸ்பெசல்...... அவங்க தான் சார் கடைசில பில் செட்டில் பண்ணனும்... அது தான் அவங்க சொன்னா எதுவும் செய்ய எங்களுக்கு ஆர்டர்...."

"அவங்களும் தான் சரியா சாப்பிடலை.. நேரம் ஆச்சுன்னு.. பாதிலயே கிளம்பிட்டாங்க."...

"சார்.. நீங்க சாப்பிடுங்க... முதல்ல.... "

"சரி எனக்கு இட்லி தோசை போதும்... பொங்கல் தனியா எடுத்து வச்சிடுங்க... மேடம் வரச் சொல்லுறென்...."
சாப்பிட ஆரம்பித்தான்..

மனதில்....அகி... என்ன விரும்புராயாடி...எதுக்குடி இந்த கவனிப்பு.. நான் சாப்பிடாமல் இருந்தால் உனக்கு வலிக்குதா... அடிப் பாவி... மாசத்துல பாதி நாள் இப்படித்தானடி பேச்சுலர் லைஃப் ஓடுது... அது தெரிஞ்சா.. என்ன பண்னுவ பா... ம்ம்ம்ம்
அவசரமா எந்திருச்சு.. குளிச்சு... சாப்பிட நேரம் இருந்தா டிபன்.. இல்லை மதியம் சேர்த்து வைத்து கட்டிறது.. இது தான எங்க
வழக்கம்... இது என்னம்மா புதுசா..... புருசனை சாப்பிட வைக்கிற மாதிரி..... நான் அந்த அளவுக்கு கொடுத்து வைத்தவனா அகி...உன் அன்பைப் பெற......ம்ம்ம்ம்ம்ம்....

10 நிமிடத்தில் சாப்பிட்டவன்.. காபி குடித்து எழுந்தான்....

"சார் வெயிட் பன்ணுங்க... அவங்களை அனுப்புறென்....."

மீட்டிங்க் ஹால் போனான்....அகிலாவை சைகை காட்டி அவன் அருகில் அழைத்தான்...
வந்தவளிடம்.....

"என்ன நான் சாப்பிட்டா மட்டும் போதுமா.... அகிலா.... போங்க.. உங்களுக்கு பொங்கல் வச்சிருக்கேன்.. நீங்க சாப்பிட்ட லட்சனம் தெரியும்... போ போய் சாப்பிட்டு வா.. நான் பாத்துக்குறென்..... "

மரியாதை ஆரம்பித்து அப்புரம் உரிமையில் குறைந்ததை அகிலா கவனித்தாள் அகிலா எதுவும் பேசாமல் அந்த ரூமில் நுழைந்தாள்.டீப்பாயில் இருந்த பொங்கலை மெல்ல எடுத்து... சாப்பிட ஆரம்பித்தாள்....

பக்கத்தில் மோகன் சாப்பிட்டு மிச்சம் வைத்த கொஞ்சம் தோசை இருந்தது... மெள்ள சுற்றும் முற்றும் பார்த்தாள்... சூப்பர் வைசர்...டிவி பார்த்துக் கொண்டிருந்தான்... மோகன் எச்சில் தட்டில் இருந்த அந்த தோசைய மெள்ள எடுத்து சாப்பிட்டாள் அகிலா...மனம் சிலிர்த்தது... எவ்வளவோ சாப்பிட்டிருக்கிறோம்... இது மட்டும்... இவ்வளவு சுவையாய்.... ஏன் அவன் எச்சில் இதில் இருப்பதாலா...இல்லை இங்க தோசை நல்லா இருக்குமா... மனம் விழித்தது....



அதே நேரம் ஏதோ கேட்க மெதுவாய் கதவு திறந்து வந்த.. மோகன்....அகி அவன் தட்டில் இருந்து எடுத்து சாப்பிடுவதை...பார்த்ததும்..அவன் மனம் ஆனந்த கூத்தாடியது....

அடி என் காதலியே அகி.... நீ நீ... என்னை என்னை.. விரும்புகிறாயா.... ம்ம்ம் நிசமா.. நான் பார்பது... இல்லை தோசை நல்லா இருக்குன்னு ச்ச்ச்சீ மடையா.. அவள் ஆர்டர் பன்ணினா... ரெஸ்டாரண்டே இங்க வரும்.... அவ...அவ... என் காதலி... என் காதலி..என் மனைவி....மனசு
ஆர்பரித்தது......உடல் நடுங்க ஆரம்பித்தது...

மெள்ள கதவைசாத்தியவன்... அப்படியே திரும்பினான்... மோகன்....



No comments:

Post a Comment