Pages

Wednesday, 26 August 2015

"ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க". 13

என்னை விட்டு நகர்ந்த அர்ச்சனாவின் கணவன் மூச்சிறைக்க,....

“நம்பிக்கை இல்லாம இல்லை மீனா. என்னாலே தாங்க முடியலை. பசியோட இருக்கிற ஒருவன், தனக்கு பிடிச்ச சுவையான பழுத்த பழத்தை எவ்வளவு நேரம்தான் கையிலே வச்சிகிட்டு வேடிக்கை பாத்துகிட்டு இருப்பான். கடிச்சுக் குதறிட மாட்டானா?”

“ கண்ணியமான ஆம்பிளை, பொம்பளையோட கண்ணைப் பாத்துதான் பேசுவான். நீங்களும் அப்படிதான் பேசிகிட்டு இருந்தீங்க. ஆனா, திடீர்ன்னு உங்க பார்வை கீழே போகவும், என் உடை எதாவது விலகி, என் அங்கங்கள் உங்க கண் பார்வையையும், கவனத்தையும் ஈர்த்து, உங்களை தப்பு பண்ண வச்சிடுமோன்னு நான் கணிச்சு, சரி பண்றதுக்குள்ளே.... நீங்க எல்லை மீறிட்டீங்க. உங்க கண்ணியத்தையும், கட்டுப் பாட்டையும் மீற வச்சது, என்னோட உடல் அழகும், புன்னகையுமா இருந்தா அதுக்காக நான் மன்னிப்பு கேட்டுகிறேன்.”



“என்னை நீதான் மன்னிக்கனும் மீனா!. கண்ணியமும், கட்டுப்பாடும் ஒரு பொம்பளைக்கு எவ்வளவு முக்கியமோ, ஆம்பளைக்கும் அந்தளவுக்கு முக்கியம். இதையெல்லாம் மறந்ததினாலதான், என் ஆசைப் பேய் என்னை மீறி, எல்லை மீறி, உன்னை அடையத் துடிக்குது. தூரத்திலேர்ந்து உன்னைப் பாக்கிறப்பவே உன்னை அடைய மாட்டோமா, உன் அழகான உடம்பை ருசிக்க மாட்டோமான்னு மனசு அலை பாயும்.

பக்கத்திலே உக்காந்து உன்னைப் பார்த்த்தும் உன்னோட அழகும், உன்னோட வாசனையும், நீ பேசும் போது, தண்ணீர் தெளித்துவிட்ட செர்ரிப் பழம் மாதிரி மினு மினுத்த உன் உதடுகளும், அந்த உதடுகளோட நீ அழகா புன்னகைச்சதும் என் கட்டுப்பாட்டையும், கண்ணியத்தையும் மீற வச்சிடுச்சு. இனி நீயா அனுமதி கொடுக்காம உன் பக்கத்துல வர மாட்டேன் மீனா. திரும்பவும் கேட்டுக்கறேன். என்னை மன்னிச்சிடு.”

“சரி விடுங்க!....நீங்க முன்னமே சொன்ன மாதிரி, கடிச்சு குதறுகிற ஆள் மாதிரி நீங்க தெரியலை. கண்ணியமான ஆம்பிளையாதான் தெரியறீங்க. பசிச்சிட்டா பழத்தை பப்பரக்கான்னு வெட்ட வெளியிலே மத்தவங்க பாக்க வச்சு சாப்பிட முடியுமா? அப்படி சாப்பிட்டாதான் ருசிக்குமா? அதுக்குன்னு இடம் இருக்குங்க. அங்க வச்சு, ஆசை தீர ரசிச்சு, ருசிச்சு சாப்பிடுங்க. உங்க பசி தீர நானும் பரிமாருறேன்.” என்று சொல்லி என் நழுவிக் கலந்திருந்த என் முந்தானையை ஒழுங்கு படுத்தி, அர்ச்சனா புருஷன் கடித்து வைத்த என் உதட்டை தடவிய படியே, “பாருங்க எப்படி கடிச்சு வச்சிட்டீங்க. அவங்க வந்து பாத்தாங்கன்னா கேலி கின்டல் பன்ணுவாங்க.” என்று சொல்லி அர்ச்சனா புருஷனை குறு குறுத்த பார்வை பார்க்க, என் உதடுகளை கவ்வி சப்பி சுவைத்த திருப்தியில், ஆசைகளை அடக்கிக் கொண்டு என் முன்னே உட்கார, அர்ச்சனாவும், நீங்களும் அங்கே வந்தீங்க.

என்னை நெருங்கி வந்த அர்ச்சனா, என் கீழ் உதடு லேசாக காயம் பட்டு ரத்தம் கசிந்திருந்ததைப் பார்த்தவள், குறும்பாக சிரித்துக் கொண்டே, “என்னடி,...ரொம்ப பழகிட்டீங்க போல இருக்கு?” என்றாள்.

என் உதடுகளைப் பார்த்து, என் நிலையை புரிந்துகொண்டு..... நீங்க அமைதியா இருக்க,....

“அதெல்லாம் ஒன்னும் இல்லைடி. சும்மா பேசிகிட்டு இருந்தோம். அது சரி. என்னோட புருஷன் கிட்டே இவ்வளவு நேரமா அப்படி என்னடி பேச்சு?!”

“புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும். அதையெல்லாம் உன் கிட்டே சொல்ல முடியுமா?”

“என்னது,... புருஷன் பொண்டாட்டியா?” என்று அவளை அடிக்க கையை ஓங்க,...

“யேய் அடிக்காதேடி,....ஆமான்டி, அவர் உன்னோட புருஷன், நான் இவரோட பொண்டாட்டி. ரெண்டு பேரும் பேசிகிட்டு இருந்தோம்.

இதைக் கேட்டு நால்வரும் சிரிக்க, அதன் பிறகு பேசிய பேச்சுகள் இங்கே அவசியமில்லாதது


ஹவுரா ஸ்டேஷனிலிருந்து வர varaவர ரயிலின் வேகம் குறைந்திருந்தது. போகப் போக கடலின் மட்டத்திலிருந்து நில மட்டம் உயர்ந்துகொண்டே போனதை அறிந்து கொள்ள முடிந்தது.

மிதமான வேகத்தில் வந்த ரயில் இரயில் ஒரு பெரு மூச்சுடன், க்ரீச் என்ற சப்தத்துடன் மெதுவாக ஊர்ந்து வந்து, ஒரு ஜங்க்ஷனில் நிற்க, கடந்து போன பெயர் பலகையில் GONDA JUNCTION என்றிருந்தது.

அங்கே ட்ரெயின் ஒரு 15 நிமிடம் நிற்கும் என்பதை நாங்கள் அறிந்துகொண்டதால், ட்ரெயினை விட்டு நால்வரும் இறங்கி, கொஞ்ச தூரம் காலாற நடந்து, திரும்ப வந்து, நானும் அர்ர்சனாவும் நம்ம கம்பார்ட்மென்ட்டுக்கு முன்னால் ப்ளாட்பாரத்திலிருந்த பெஞ்சில் உட்கார்ந்து,....அந்த இரவு வேளையிலும், .உத்திரப் பிரதேச மாநில மக்களையும், அவர்களின் நடை, உடை, பாவனைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க,... நீங்க ரெண்டு பேரும் டிபன் வாங்கப் போய் இருந்தீங்க.

டிபன் வாங்கி வந்து நான்கு பேரும் சாப்பிட்டதும், உண்ட மயக்கத்தில் தூக்கம் கண்களைச் சுழற்ற பர்த்தை இறக்கி படுக்கை தயார் செய்து அவரவர் இடத்தில் படுத்தோம்.

பாலங்களையும், பள்ளத் தாக்குகளையும், காடுகளையும், கணவாய்களையும் இரயில் மிதமான வேகத்தில், நிசப்தமான இரவில் தட தடத்து கடந்து கொண்டிருக்க,..... அர்ச்சனாவின் புருஷன் பேசிய பேச்சும், நடந்து கொண்ட விதமும் மனத் திரையில் ஓட,....எண்ணிப் பார்த்தேன். அவரின் ஆசை இயல்பாகவே தெரிந்தது எனக்கு.

நிதர்சனமாக நிறைவேறாது என்று தெரிந்தும், மனிதர்களின் மனங்களில்தான் எத்தனை அந்தரங்க ஆசைகள் புதைந்து கிடக்கிறது? சுய கட்டுப்பாடோ, சமூகக் கட்டுப் பாடோ, அமைபுக் கட்டுப் பாடோ,.... ஏதோ ஒன்று, மனிதனை கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் மனதையும் திறந்து படிக்க,.... பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால், வெளியில் சொல்ல முடியாத எவ்வளவோ ஆசைகள் அவனுள் கொட்டிக் கிடப்பதை அறிந்து கொள்ள முடியும். கேட்டு, அவமானப் பட்ட ஆசைகள், கேட்காமலே மனதிலேயே புதைத்துக் கொண்ட ஆசைகள், நிறைவேறாத அநியாமான ஆசைகள். இப்படி எத்தனையோ!....

இப்படி என்னென்னவோ நினைத்துக் கொண்டு படுத்திருக்க, எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.

அதி காலையில் கண் விழித்த போது, இரயில் ராம்புர் ஸ்டேஷனை வந்தடைந்திருந்தது. பயணிகள் கூட்டம் அவ்வளவாக இல்லை. காபி குடித்து, காலைக் கடன்களை முடித்து, வேறு உடை அணிந்து கொண்டோம்.

நான்கு மணி நேர பயணத்துக்குப் பிறகு, இரயில் உத்ரகான்ட் மாநிலம் லால் கான் ஜங்க்ஷன் வந்து சேர்ந்தது.

மீண்டும், மேடாக இருந்த மலைப் பாதையில் மெதுவாக ஊர்ந்த இரயில், காலை 9.30 மணிக்கு கடல் மட்டத்திலிருந்து 520 மீட்டர் உயரத்தில் இருந்த, கத்கோடம் ஸ்டேஷனை வந்தடைந்தது. கடைசி ஸ்டேஷனும் இதுதான்.

நீண்ட பயணம் மேற்கொண்ட அசதியில் பயணிகள் தங்கள் உடமைகளோடு கம்பார்ட்மென்டிலிருந்து இறங்கி, அவரவர் இலக்கை நோக்கி, அவரவர் சொந்தங்களோடு போய்க் கொண்டிருந்தனர். பயணிகளோடு, நாமும் லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு இறங்கி ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்தோம்.

ஜில்லென்ற மலைசாரல் காற்று வீச, மலை முகடுகளில் தாழ்வாக வெண் பஞ்சு பொதிகளாய் மேக கூட்டம் நகர்ந்துகொண்டிருக்க, தூரத்தில் நீல வண்ணத்தில் மலைச் சிகரங்கள் மங்கலாகத் தெரிய,...பக்கத்தில் இருந்த பகுதிகள் பச்சை நிற புல் வெளிகளாலும், தாவரங்களாலும்.....பச்சைப் பசேலென்று பச்சைக் கம்பளத்தை விரித்து விட்டதைப் போல இருந்தது.

ஆங்காங்கே, இதற்கு முன்னர் பார்த்திராத செடிகள், கொடிகள் பல வண்ணங்களில் பூத்த பூக்களைத் தாங்கி, மிதமான காற்றுக்கு அசைந்து, நம்மை அழைத்துக்கொண்டிருந்தது. மலைத் தாவரங்களிலிருந்து வந்த வாசனைக் கலவை, நறு மணமாய் நாசிக்குள் புகுந்து ஒரு சுகந்தத்தைக் கொடுக்க, மென்மையான குளிர் காற்று மேனியைத் தழுவ,.... பரபரப்பில்லாத அந்தப் பகுதி,.....மனதுக்கு மகிழ்வு தரும் வசந்தமான ஏதோ புதுமையான இடமாக இருந்தது.


ஸ்டேஷனுக்கு வெளியே, மனு மகாராணி ஹோட்டலில் இருந்து, நம்மை அழைத்துச் செல்ல கார் வந்து நின்றிருந்தது.

காரில், நாம நம்ம லக்கேஜ்களோடு ஏறிக் கொள்ள, கார் நைனிடால் டவுனை நோக்கிப் புறப்பட்டது.

சாலையின் இரு பக்கமும், பச்சைப் பேசெலென்ற தாவரங்களின் பின்னணியில் ஓக், சில்வர் ஓக், யூகாலிப்டஸ்,.... இன்னும் என்னென்னவோ இனம் தெரியாத மலைக் காட்டு மரங்கள் அடர்த்தியாய் அணிவகுத்து வானுயர்ந்து நிற்க,... அரை மணி நேர வளைந்து, நெளிந்து சென்ற மலைப் பாதை பயணத்தில், நைனிடால் டவுனை அடைந்தோம். பெரிய நகரம் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஓரளவு சிறிய நகரம்தான். சுற்றுலா பகுதியானதால் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்துகொண்டே இருக்கிறது.

நைனிடால் டவுனின் முக்கிய சாலையும், கடைகள் நிறைந்ததுமான மால் ரோட்டைத் தொட்டு, டவுனிலிருந்து, மேடு பள்ளங்களாய் சாலைகள் வளைந்து நெளிந்து பல்வேறு திசைகளை நீண்டிருக்க, ...மேற்கே சென்ற மலைப் பாதையில் கொஞ்ச தூரம் பயணம் செய்து, டவுனை விட்டு தள்ளி இருந்த மனு மகாராணி ஹோட்டலை அடைந்தோம்.

இயற்கை எழில் சூழ, கீழே சிறிதும், பெரிதுமான கட்டிடங்கள், மேடுகளிலும், பள்ளங்களிலும் அமைந்திருந்த நைனிடால் டவுனும், மிதமான சூரிய ஒளியில் பச்சைப் பசேலென்ற நிறத்தில் பள பளக்கும் நைனிடால் ஏரியும், தெள்ளத் தெளிவாகத் தெரியும் உயரத்தில், பக்கம் அமைதியான சூழலில் பணக்காரத் தன்மையோடு மனு மகாராணி ஓட்டல் அமைந்திருந்தது.

காரை விட்டு நாங்கள் இறங்க, ஓட்டல் பணியாளர்கள் வந்து பணிவாய் லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு முன்னே செல்ல, நான்கு பேரும் அவர்கள் பின்னால் சென்றோம்.

தனியாக இருந்த இரண்டு சூட் மட்டும் கொண்ட ஒரு தங்குமிடத்திற்கு எங்களை பணியாளர்கள் அழைத்துச் சென்றனர். அறைகளைத் திறந்துவிட்டு, லக்கேஜ்களை வைத்து விட்டு, ‘ஏதாவது தேவையாக இருந்தால் இன்டர்காமில் அழையுங்கள்’ என்று ஆங்கிலத்தில் சொல்லி, பணிவாக விடை பெற்றனர்.

பத்து பேர் படுத்து உருளும் அளவுக்கு இருபதுக்கு இருபது அடி பரப்பளவில், வெது வெதுப்பை தரக்கூடிய சிம்னியுடன் அறை விசாலமாக இருக்க,.... படுக்கையோ நான்கு பேர் வசதியாக படுத்துப் புரண்டு தூங்கும் வகையில் பெரிதாகவும் மென்மையாகவும் கம்பளிகளோடும், தலையணைகளோடும் இருந்தது. .

24 மணி நேரமும் வென்னீரை தர ஹீட்டர் பொருத்தப் பட்ட, டைல்ஸ் பதிக்கப் பட்ட, சுத்தப் படுத்தப் பட்டு தூய்மையாக இருந்த வெஸ்டர்ன் டாய்லட்டோடு இருந்த தாராளமான குளியலறை, சூட்டோடு இணைக்கப்பட்டிருந்தது.


அர்ச்சனாவும், அவள் புருஷனும் ஒரு அறையில் தங்கள் உடைமைகளை வைத்து தங்கிக் கொள்ள, நாம இன்னொரு அறையில் தங்கினோம்.

இரண்டு அறைகளின் கதவுகள் எதிர் எதிர் திசைகளில் அமைந்திருக்க, இரண்டு அறைகளுக்கும் பொதுவாக ,....கட்டிடத்தின் மையத்தில், நான்கு சோஃபாக்கள் போடப்பட்டு நடுவே பெரிதான டீ பாய் வைக்கப்பட்டிருந்த ஹால் இருந்தது. அந்த கட்டிடத்திற்கு முகப்பில் இரண்டு சூட்களுக்கும் பொதுவான மெயின் டோர் இருந்தது. இந்த மெயின் டோரைப் பூட்டி விட்டால் நம்ம இரண்டு அறைக்கு யாரும் வெளியிலிருந்து வர முடியாது.

நாம நாலு பேரும் சோஃபாவில் உட்கார்ந்து, பயணச் சுற்றுலாவை திட்டமிட்டோம். பின்னர் டிபன் வரவழைத்து சாப்பிட்டு விட்டு, பயணக் களைப்பு தீர அவரவர் சூட்களில் படுத்து தூங்கினோம்.




மாலை 3 மணி அளவில் எழுந்து, முகம் கை கால் கழுவி மிதமான மேக்கப் செய்து, நைனா தேவி ஆலயத்தை முதன் முதலாக பார்க்க முடிவு செய்து, காரில் புறப்பட்டோம்.

நைனா தேவி ஆலயம்:- நைனா மலையின் உச்சியில் அமைந்thuதுள்ள, புனிதத் தளங்களில் ஒன்றான, சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் நைனா தேவி ஆலயம், நைனிடாலில் உள்ள ஆலயங்களுள் முக்கியமானதாகும். இங்குள்ள பழங்குடியினர் இங்கு வாக்கு கேட்ட பின்பே காரியங்கலைச் செய்ய தொடங்குகிறார்கள்.

புராணக் கதைகளில்,.... சிதைக்கப் பட்டதாக கூறுப்படும், சக்தியின் உடல் பாகங்களில், சக்தியின் கண் விழுந்தாக கருதப்படும் இந்த இடத்தில் இந்தக் கோயில் எழுப்பப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். ஆலயத்தின் இடது முன் புறம் பெரிய பீபல் மரமும், வலது முன் புறத்தில் அனுமன், மற்றும் கணபதி சிலைகள் அமைந்துள்ளது. கோயிலின் உட் புறம் காளிதேவி அம்மனும், நைனா தேவி அம்மனும் விநாயகப் பெருமானும் முக் கடவுள்களாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.

கோயில் பகுதியை நெருங்குவதற்கு முன்பே, காரை நிறுத்தி விட்டு, நடைப் பயணமாக,..... ஜில் என்ற காற்று மேனியை வருட, இயற்கை எழில் சூழ்ந்த கரடு முரடான மலைப் பாதையில், பல் வேறு மொழி, இன மனிதர்களோடு நடைப் பயணமாக நடந்து சென்று கோயிலை அடைந்தோம்.

கோயில் கோபுரத்தைக் கண்களில் கண்டதும் பல் வேறு ஆசைகளையும், நினைவுகளையும் மனதில் அசை போட்டபடி வந்தவர்கள், அவற்றை மறந்து, துறந்து அங்கே இருந்த தெய்வங்களைப் பற்றியும் தங்களது வேண்டுதல்களையும் நினைத்து கடவுள்களை வேண்டியபடி வந்தனர்.

அகலமான விசாலமான படிக் கட்டுகளில் பக்தியுடன் ஏறி, ஆலயத்தின் முன்னே வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த கணேசனை முதலாவதாக வணங்கி, கோயிலின் நீண்ட உட்பிரகார மண்டபத்துக்குள் நுழைய.... வேண்டுதலை முடித்து திரும்பிச் செல்வோரின் பேச்சுகளைக் கேட்க முடிந்தது.


இங்கே வந்து வேண்டிகிட்டா, செய்ய நினைக்கிற காரியம், எந்தத் தடங்களும் இல்லாம நினைச்ச காலத்துக்குள்ள நல்ல படியா முடியுமாம். நினைக்கிற காரியம் பூர்வ ஜென்ம பாவங்களாலே நிரைவேறாதுன்னாலும் அதுக்கும் அறிகுறிகளை கடவுள் காமிச்சிடுமாம்.

அப்படியா?

அதுவுமில்லாம, கோயிலுக்கு வெளியே சிவப்பும், வெள்ளையுமா மலர்கள் பூத்து குலுங்குற மரம் ஒன்னு பாத்தோமே. அதுக்கு அடியில வேண்டுதல் செஞ்சவங்க போய் கை ஏந்தி நின்னு வேண்டிகிட்டா, அப்பவே நாம நினச்சு வேண்டிகிட்டது நிறைவேறுமா... நிறைவேறாதான்னு பூ மூலமா கடவுள் காட்டிக் கொடுத்துடுமாம்.’

எப்படி காட்டிக் கொடுக்கும்?

வேண்டிகிட்டு ஏந்திய கையிலே வெள்ளைப் பூ விழுந்தா, காரியத்தை முழு மனசா, எந்த வித சஞ்சலமும் இல்லாமே தொடங்கலாமாம். சிவப்பு பூ விழுந்தா எவ்வளவு வாய்ப்பு நமக்கு சாதகமா இருந்தாலும், யார் சொன்னாலும் தொடங்கவே கூடாதாம்.

ரெண்டு கலர் பூவும் ஒன்னா விழுந்துட்டா?

அப்படி இது வரைக்கும் விழுந்ததே இல்லையாம்.


எங்களைக் கடந்து சென்றவர்களின் பேச்சைக் கேட்ட நான் ஒரு முடிவுக்கு வந்து,.....மூல விக்கிரகங்களின் முன் நின்று,.....கை கூப்பி, பக்தியுடன் முக் கடவுள்களை மனதுக்குள் நினைத்து,...

‘தாயே,....தவறோ சரியோ, கண் கண்ட கடவுளாம் கணவனின் ஆசைப் படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், இன்னும் தீராத மன சஞ்சலத்துடன் இன்னொரு புதிய உறவுக்காக, இது வரை வந்துவிட்டேன். நான் செய்யப் போவது தவறாக இருந்தால் நீயே அதைத் தடுத்து, என் கணவனுக்கு நல்ல புத்தியை கொடுத்து, என்னை இந்த இக்கட்டிலிருந்து மீள வழி காட்டி விடு.

சரி என்றால் அதற்கும் உன் முடிவை இப்போதே சொல்லிவிடு.’ என்று வேண்டி, கண் திறக்க குருக்கள் அர்ச்சனைத் தட்டை என் முன் நீட்டியபடி நின்றிருந்தார். நீட்டிய தட்டிலிருந்து, குங்குமத்தை எடுத்து, நெற்றி நடுவேயும், வகிடின் ஆரம்பத்திலும் வைத்து, ......தாலியை எடுத்து அதற்கு வைக்கப் போகும் சமயம்,.... கோயிலின் உள்ளே ஆராதனை மணி ஒலித்தது.

மற்ற மூவரும் என்ன வேண்டிக் கொண்டார்கள் என்பது எனக்கு தெரியாது.

பிரகாரத்தை ஒரு சுற்று சுற்றி நடந்து வர, என்னருகே வந்த அர்ச்சனா, “என்னடி மீனா, இங்கே வந்தும் கோயில் கோயிலா சுத்தறே, கடவுள் கிட்டே என்னடி வேண்டிகிட்டே?”

“வேண்டுதலை வெளியே சொன்னா பலிக்காதாம்” என்று அவளுக்கு பதில் சொல்லி, வேண்டுதல் மரத்தின் அடியில் கையேந்தி நிற்க,.... என்னை புரியாத புதிராய் பார்த்தாள் அர்ச்சனா.

‘கொடுக்கவா, தடுக்கவா.... வேண்டுமா, வேண்டாமா’....வேண்டினேன்.

சில நொடித் துளியில் ஏந்திய கையில் விழுந்தது,... 






No comments:

Post a Comment