Pages

Monday, 6 April 2015

சுகன்யா... 100

இரவு உணவை முடித்துக்கொண்டதும், மறுநாள் சனிக்கிழமை விடுமுறைதானே என்ற காரணத்தால், சுகன்யா முதல்நாள் இரவு ஒரு மணிவரை ஆங்கிலப் புத்தகமொன்றை படித்துக் கொண்டிருந்தாள். கையிலிருந்த அந்த நாவலைப் படித்து முடித்த பின்னரே அவளுக்கு தூக்கம் வந்தது.

மறு நாள் காலையில் சுகன்யா படுக்கையை விட்டு எழுந்தபோது மணி எட்டைத் தொட்டுக்கொண்டிருந்தது. பாத்ரூமிலிருந்து தண்ணீர் வழியும் சத்தம் தொடர்ந்து வந்துகொண்டிருக்க, பக்கத்து கட்டில் காலியாக கிடந்தது. படுப்பதற்கு முன், காலையில் சீக்கிரமாக எழுந்து துணி துவைக்க வேண்டுமென அனுராதா முன்னாள் இரவு சொல்லிக்கொண்டிருந்தது அவள் நினைவுக்கு வந்தது.

புது இடத்திற்கு சுகன்யாவின் உடம்பும், மனசும் இந்த இரண்டு மாதத்தில் வெகுவாகப் பழகிவிட்டன. கண் விழித்த பின்னும், அரைமணி நேரம் உடலை அசைக்காமல், கட்டிலிலேயே கிடந்தாள் சுகன்யா. மனதை சூன்யத்தில் நிலைக்கவிட்டாள். புருவ மத்தியில் தன் கவனத்தை நிறுத்தினாள். வெகு தூரத்தில் நீல ஜ்வாலை மெல்ல எழுந்தது. இடம் வலம் அசைந்தது. மேலும் கீழுமாக அசைந்தது. பின் நிலைத்து நின்றது. பிரகாசித்தது. உள்ளமெல்லாம் இதமான சுகம் மெல்லிய தூறலாக பொழிந்தது. பரவியது.



கட்டிலைவிட்டு எழுந்த சுகன்யா பால்கனிக்கு வந்தபோது, கிழக்கில் வானம் இருட்டிக்கொண்டிருந்தது. பொன்னிற சூரியன் கரு மேகங்களுக்குள் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தான். ஆந்தி என்னும் மண்ணோடு சேர்ந்த பேய்க்காற்று வேக வேகமாக அடித்துக்கொண்டிருந்ததில், விடுதி காம்பவுண்டுக்குள் வளர்ந்திருந்த மாமரங்களில் இருந்த மாம்பிஞ்சுகள் சடசடவென காற்றில் கொட்டின. குழந்தைகள் கூச்சலுடன் ஓடி ஓடி தரையில் விழும் மாங்காய்களை பொறுக்கி சேர்த்துக்கொண்டிருந்தனர்.

சுகன்யா அணிந்திருந்த லூசான பைஜாமா, அவள் இடுப்புடன், தொடைகளுடன், புட்டங்களுடன் ஒட்டிக்கொண்டு, அழகான அவள் தேகத்தின் வடிவழகை தெளிவாக வெளிப்படுத்திக்கொண்டிருக்க, அவள் கூந்தல் காற்றில் அலையலையாக பறந்துகொண்டிருக்க, பால்கனியில் சுகன்யா ஒரு தேவதையைப்போல் நின்று கொண்டிருந்தாள்.

"மைடியர் ப்யூட்டி க்யூன்... குட்மார்னிங்..."

அனுராதா ஈரக்கைகளுடன் சுகன்யாவை, அவள் பின்புறத்திலிருந்து கட்டிக்கொண்டாள். அவளுடைய மெண்மையான கைகளிலிருந்து துணி வெளுக்கும் சோப்பின் வாசம் சுகன்யாவின் மூக்கிலடிக்க, அவள் விருட்டென அனுவின் பிடியில் திமிற, அனு அவள் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு, அவள் இடுப்பிலும் நறுக்கென கிள்ளிவிட்டு அறைக்குள் துள்ளி ஓடினாள்.

"இந்த மாதிரி தீடீர்ன்னு வந்து என்னை நீ கட்டிப்புடிக்காதேடீன்னு உனக்கு எத்தனை தரம் நான் சொல்லியிருக்கேன்? யாரோன்னு பயந்தே போயிட்டேன் நான்?" சுகன்யா அனுவை துரத்திச்சென்று அவள் முதுகில் பட்டென அடித்தாள். அவள் இவளை விளையாட்டாக அடிக்க, இவள் அவளை திருப்பி செல்லமாக அடிக்க, அவர்களிருவரும் இரண்டு நிமிடங்கள், சிறு குழந்தைகளாக கட்டிலில் விழுந்து புரண்டார்கள்.

"சுகா... மழை வரும் போல இருக்கு... சட்டுன்னு கிளம்புடி... மெஸ் இன்சார்ஜ்க்கு காலையிலேயே போன் பண்ணி விசாரிச்சுட்டேன்... இட்லி, தால் வடை, தொட்டுக்க சாம்பார், தேங்காய் சட்னி... இதான் இன்னைக்கு மெனு. சூடா இருக்கும் போதே போய் சாப்பிட்டுட்டு வந்துடலாம். லேட்டாப்போனா ஒண்ணும் கிடைக்காது. அனு தன்னுடலில் பளபளக்கும் பழுப்பு நிற ஜீன்சை மாட்ட ஆரம்பித்தாள்.

"மழை கண்டிப்பா வரும்டீ.. மழைன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். மழையில கொஞ்ச நேரம் நனையணும்ன்னு எனக்கு ஆசையா இருக்கு. முகத்தை கழுவிக்கொண்டு லூசான காட்டன் ட்ரவுசரையும், மெல்லிய சட்டையொன்றையும் அணிந்துகொண்டாள் சுகன்யா. சுகன்யாவின் பருத்த தொடைகளும், மழமழவென்று சுத்தமாக முடியில்லாத அவளுடைய வலுவான கால்களும், அவள் டிரவுசரின் கீழ் பளபளவென மின்னிக்கொண்டிருந்தன.

அனு மவுனமாக, முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் தன் செல்லை நோண்டியவாறு நடந்து கொண்டிருந்தாள். அனுவை அவ லவ்வர் கூட சேத்து வைக்கறதுக்கு சின்சியரா நான் ஏன் டிரை பண்ணக்கூடாது? தீடிரென சுகன்யாவின் மனதில் இந்த எண்ணம் எழ அவள் அனுவின் தோளில் தன் கையை போட்டுக்கொண்டாள்.

"என்னடீ...?" அனு சிணுங்கினாள்.

"ஒண்ணுமில்லேடீ." சுகன்யா தன் உதட்டைக்கடித்துக்கொண்டாள். தன் செல்லில் இருக்கும் காண்டாக்ட் லிஸ்டை சர்ப் செய்தாள். அவசரஅவசரமாக ஒரு நம்பரை அழுத்தினாள்.

"ஸ்விச்ட் ஆஃப்.." என்ற பதில் மீண்டும் மீண்டும் வர செல்லை தன் ட்ரவுசர் பாக்கெட்டில் போட்டுக்கொண்டாள். 

மெஸ்ஸை நெருங்கும் வேளையில், பட படவென தூறல் போட ஆரம்பித்தது. அனு விருட்டென மெஸ்ஸை நோக்கி ஓட ஆரம்பித்தாள்.

"அனு... கேச் இட்...." சுகன்யா தன் செல்லை அனுவை நோக்கி விட்டெறிந்தாள்.

சுகன்யா தன் மேல் விழும் தூறலில் விருப்பத்துடன் நனைய ஆரம்பித்தாள். தன் கைகளை இடவலமாக வீசி எகிறி எகிறி குதித்தாள். மழையில் நனைந்ததால், தன் மனம் இலேசாகி, தேகம் காற்றில் பறப்பதை அவள் உணர ஆரம்பித்தாள். மழை நின்றதும், அனுவை அழைத்துக்கொண்டு, எங்கேயாவது ஜாலியாக வெளியில் போய் சுற்றிவிட்டு வரவேண்டுமென தன் மனதுக்குள் திட்டமிட்டுக்கொண்டாள்.

போர்டிகோவிற்குள் அடித்துக்கொண்டிருந்த மழையின் சாரலில் தன் உடல் நனைய நின்றிருந்தாள் சுகன்யா. இரு கோப்பைகளில் கொதிக்கும் காஃபியுடன் மெஸ்ஸின் வாசலுக்கு வந்தாள் அனு. சுழன்று சுழன்று அடித்த காற்றில் அனுவின் தலை முடி கொத்தாக அவள் முகத்தில் வந்து விழுந்தாடிக்கொண்டிருந்தது.

கொழு கொழுவென்ற உடலுடன், கள்ளமில்லாத குழந்தை முகத்துடன், சூடான காஃபியை, தன் சிவந்த உதட்டால் ஊதி ஊதி மெல்ல உறிஞ்சிக்கொண்டிருந்த அனுவின் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சுகன்யா.

"ரெண்டு மாசமா பாத்துக்கிட்டு இருக்கேன். இந்த அனுதான் எவ்வளவு நல்லவ? இவளுக்கு முகம் மட்டும்தானா அழகா இருக்கு... மனசும் ரொம்ப ரொம்ப அழகா இருக்கே? இவளை வேணாம்ன்னு சொல்றதுக்கு இவ லவ்வருக்கு எப்படி மனசு வந்திச்சி..."

"என்னடி சுகா... எதுக்குடி நீ என்னை உத்து உத்துப்பாக்கறே? என் புருவத்தை காலையில நானே ட்ரிம் பண்ணேன். சரியா இல்லையாடீ? கொஞ்சம் பாத்து சொல்லுடீ..." அனு, சுகன்யாவை நெருங்கி வந்தாள்.

"அனு... என்னைப்போய் ப்யூட்டி குயின்... ப்யூட்டி குயின்னு நீ சொல்றே... ஆனா உண்மையைச் சொல்லணும்ன்னா... என்னை விட நீதான்டீ கொள்ளை அழகா இருக்கே? உன் புருவம் என்னடி புருவம்? உனகென்னடீ கொறைச்சல்? ராஜாத்தி மாதிரி இருக்கே." இதமான காற்றில் அடிக்கும் மழைத்துளிகள் பறந்து வந்து தன் உடலில் மோத, கையிலிருந்த காஃபியை சுகன்யாவும் பரபரப்பில்லாமல் ருசித்துக் குடித்துக் கொண்டிருந்தாள்.

"ஆமாம்.. என் அழகை நீதான்டீ மெச்சிக்கணும்?"

அனு தன் தலையை கோதிக்கொண்டாள். தான் அணிந்திருந்த காட்டன் குர்த்தியின் முனையை திருகிக்கொண்டே, சுகன்யாவின் தோளில் தன் தலையைச் சாய்த்துக்கொண்டாள்.

"ஏண்டீ அலுத்துக்கறே? வெளியிலே எங்கேயாவது போவலாமா? இன்னைக்கு லஞ்ச் என் செலவுலதான்.. என்னடீ சொல்றே நீ?" சுகன்யா பூவாக சிரித்தாள்.

மழை இப்போது கொட்டோ கொட்டென கொட்டிக்கொண்டிருந்தது. சுகன்யா நிமிர்ந்து மைதானத்தை பார்த்தாள். கூச்சலுடன் மாங்காய் பொறுக்கிக்கொண்டிருந்த சிறுவர்கள் இப்போது காணாமல் போயிருந்தார்கள்.

"இன்னைக்கு வேணாம்டீ.. நாளைக்கு போவலாமே?" அனுவின் முகத்தில் ஒரு இனம் தெரியாத சோகம்.

"ஏண்டீ உம்முன்னு இருக்கே?"

"ப்ச்ச்ச்.. ஒன்ணுமில்லேடீ..."

"பொய் சொல்றே நீ..." சுகன்யா அவளை தோண்டி துருவ ஆரம்பித்தாள்.

"கோவிலுக்கு போகலாம்ன்னு நினைச்சேன்..."

"என்னடி தீடீர்ன்னு?"

"என் ஃப்ரெண்ட்டோட பர்த் டே இன்னைக்கு... கோவிலுக்குப் போய் ஒரு அர்ச்சனை பண்ணலாம்ன்னு நினைச்சேன்."

"ஃப்ரெண்டுன்னு சொல்றயே... அது அவனா? இல்லே அவளா?"

"ஜெண்டர்ல என்னடி இருக்கு... என் ஃப்ரெண்ட் நல்லாயிருக்கணும்... அதுதான் என் விருப்பம்.." அனு தன் தலையைத் தாழ்த்திக்கொண்டாள்.

"மை டியர் ப்யூட்டி குயின்... இன்னைக்கு வெதர் நல்லா இருக்குடீ... உன் இஷ்டப்படியே முதல்ல கோயிலுக்கு போயிட்டு அப்றமா லஞ்சுக்கு போவலாம்... ஈஸ் தட் ஓ.கே ஃபார் யூ?" சுகன்யா தாமரையாக மலர்ந்தாள்.

"ப்ச்ச்ச்... சும்மா நீ என்னை கிண்டல் பண்ணாதேடி. இப்பவும் ஒருத்தனுக்கு ரெண்டு பேரா, ஒரு பெங்காலியும், ஒரு டில்லிவாலாவும், ராத்திரி பகலா உன் கிட்டத்தான் கடலை போடறானுங்க. நீ என் பக்கத்துல இருக்கும் போது எவன்டீ என் பின்னாடி வர்றேங்கறான்?" அனுவின் கண்களில் இப்போது குறும்பு தெறித்துக்கொண்டிருந்தது.

"டோண்ட் பீ சில்லி. எனக்கு கடலையும் வேணாம். பட்டாணியும் வேணாம். இப்பத்தான் நான் நிம்மதியா இருக்கேன். என்னை கொஞ்ச நாளைக்கு இப்படியே நிம்மதியா இருக்க விடுங்கடீ." சுகன்யா அவள் தோளில் தன் கையைப் போட்டுக்கொண்டாள்.

"அப்ப நான் நிம்மதியா இருக்கறது உனக்குப் பிடிக்கலையா?"

"அனு உன் கிட்ட அழகு இருக்கு. படிப்பு இருக்கு. நிரந்தரமான வேலையிருக்கு. எல்லாத்துக்கும் மேல யாருக்கு என்னப் பிரச்சனைன்னாலும், உடனே அவங்களுக்கு ஹெல்ப் பண்ணணும்ங்கற ஆர்வமிருக்கு; எப்பவும் அடுத்தவங்களுக்கு உதவணுங்கற அழகான மனசும் உனக்கிருக்கு. இதுதாண்டீ ஒரு பொண்ணுக்கு உண்மையான அழகு. உன்னோட நல்ல மனசை அவனால புரிஞ்சுக்க முடியலியே; அதை நினைச்சாத்தான் எனக்கு வயித்தெரிச்சலா இருக்கு?"

"முடிஞ்சுபோன கதையைப் பத்தி இப்ப என்னடீ? பழசெல்லாத்தையும் விட்டுத்தள்ளுடீ..." அனு வெள்ளையாக சிரித்தபோதிலும் அந்த சிரிப்பில் ஒரு மெல்லிய சோகம் அன்று கலந்திருப்பதாக சுகன்யாவுக்குத் தோன்றியது.

"இல்லடீ... நானும் ஒரு வாரமா என் மனசுக்குள்ளவே யோசனை பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன். இந்த ஆண்கள் மனசுல அப்படி என்னதான் இருக்கு? ஆண்கள் ஒரு பெண்கிட்ட என்னதான் தேடறாங்க? எதை எதிர்பாக்கறாங்க?"

"ம்ம்ம்... என்ன எதிர்பாக்கறாங்களா? உன் கேள்விக்கு ஆன்சர் ரொம்ப சிம்பிள்... 'உடம்பு' பெண்கள் கிட்ட அவங்க எதிர்பாக்கறேதே 'பெண்களோட உடம்பைத்தான்டீ..." பொம்பளை கொஞ்சம் செவப்புத்தோலோட இருந்துட்டா கேக்கவே வேணாம்; அவ மொத்தமா ஒழிஞ்சா..." அனு ஹோவென சிரித்தாள்.

"சிரிக்காதேடீ... எனக்கு பத்திக்கிட்டு வருது. உன் ஆளைப்பாத்து நல்லா நாலு வார்த்தை நறுக்குன்னு கேக்கணும்ன்னு எனக்குத்தோணுது.." சுகன்யா முகத்தில் தோன்றிய மெல்லிய கோபத்துடன் வெடித்தாள். 




"அனு... நீ சொல்றது நூத்துக்கு நூறு உண்மைதான்டீ... எல்லாக்காதலனும், தன் காதலிக்கு விருப்பம் இல்லேன்னு தெரிஞ்சாலும், கல்யாணத்துக்கு முன்னாடியே, அவ உடம்பை அவுத்துப்பாக்க ஆசை படறாங்க..."

"ம்ம்ம்ம்..."

"பார்ச்சுனேட்லி... உன் வாழ்க்கையிலே தொலைஞ்சு போன அந்த வசந்தத்தை மீண்டும் என்னால கொண்டுவர முடியும்ங்கற நம்பிக்க்கை எனக்கு இருக்கு. உனக்கு ஆட்சேபனையில்லேன்னா, அதுக்கான முயற்சியிலே நான் இறங்கத்தான் போறேன்." சுகன்யா அனுவின் விரல்களில் தன் விரல்களை கோர்த்துக்கொண்டாள்.

"என்னடீ சொல்றே சுகா?"

"நீ சரீன்னு ஒரு வார்த்தை சொல்லு... நான் அவன்கிட்ட பேசறேன்..."

"எவன் கிட்டே?

"நீ யாரை காதலிச்சியோ.. அவன்கிட்டத்தான் பேசறேன்னு சொல்றேன்"

"வேணாம்டீ சுகா... நீ யாருடீ இவளுக்கு வக்காலத்து வாங்க வந்திருக்கேன்னு அவன் உன் மூஞ்சியிலே அடிச்சா நீ என்னடி பண்ணுவே?"

"யூ பர்கெட் அபௌட் இட்" சுகன்யா தன் குரலில் ஒரு உறுதியுடன் பேசினாள்.

"என் பேச்சைக் கேளுடீ சுகா..."

"உன் விருப்பம் என்ன? அதை மட்டும் நீ சொல்லுடீ"

"சுகா... கவர்ன்மெண்ட் வேலைக்கு வர்றதுக்கு முன்னாடி அவனும் நானும் ஒரே இடத்துலத்தான் வொர்க் பண்ணிகிட்டு இருந்தோம். ஆரம்பத்துல நாங்க வெறும் ஃப்ரெண்ட்ஸாத்தான் இருந்தோம்..."

"எல்லோரட கதையும் அப்படித்தாண்டீ ஆரம்பிக்குது.." சுகன்யா விழுந்து விழுந்து சிரித்தாள்.

"நான்தான் ஒரு பைத்தியக்காரி மாதிரி அவனை விழுந்து விழுந்து லவ் பண்ணேன். என்னை அவன் லவ் பண்ணவேயில்லேங்கறது கொஞ்ச நாள் பழக்கத்துக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது; என் காதலை அவன் ஒரு பொருட்டாவே நினைக்கலே; அவனுக்கு என் மனசு தேவைப்படலே; அவனுக்குத் தேவைப்பட்டதெல்லாம் என் உடம்புதான்."

"ப்ச்ச்..."

"நான் உன்னை மேரேஜ் பண்ணிக்க விரும்பறேன். கல்யாணத்துக்கு முன்னாடி என்னை நீ அனுபவிக்க முடியாதுன்னு நான் தீத்துச் சொன்னதும், கொஞ்சம் கொஞ்சமா அவன் என்னை விட்டு விலகி போக ஆரம்பிச்சான். ஆனா ஒரு விதத்துல அவனும் நல்லவன்தான்னு நான் ஃபீல் பண்றேன்..."

"என்னடீ சொல்றே... உன் ஃபீலிங்கை கேக்கறதுக்கு ரொம்பவே நல்லா இருக்குடி ?" சுகன்யா எரிந்து விழுந்தாள்.

"சுகா.. அவன் என்னைக் காதலிக்கறேன்னு என்கிட்ட பொய் சொல்லலே பாரு; என்னைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னு பொய்யா பிராமிஸ் பண்ணிட்டு என்னை ருசி பாக்கலே பாரு; அதைச்சொல்றேன் நான். அவன் தன்னோட தேவையை, அவன் என்கிட்ட எதை எதிர்பார்த்தாங்கறதை அவன் ஓப்பனா சொன்னான் பாரு... அந்த நேர்மையைச் சொல்றேன்டீ நான்."

"அனு... ஒரு பெண்ணை அவன் இந்த மாதிரி கண்ணோட்டதோட பாத்ததே பெரிய தப்புன்னு நான் நெனைக்கறேன்... நீ என்னடான்னா அவன் நேர்மையை பாராட்டிக்கிட்டு நிக்கறே?"

"நான் உன் ஃப்ரெண்டா இருக்கவே, அவன் மேல உனக்கு இந்த அளவுக்கு கோவம் வருது; எனக்காக அவன்கிட்ட பேசணும்ன்னு, வாதடணும்ன்னு உனக்குத்தோணுது ; ஆனா சுகன்யா... இது நாட்டுல தினம் தினம் நடக்கற கதைடீ... யாரார்கிட்ட யாராருக்காக நீ பேசுவே?"

"யாருக்காக இல்லேன்னாலும் உனக்காக நான் அவன்கிட்ட பேசறதா நான் முடிவு பண்ணியிருக்கேன்." சுகன்யாவின் கண்களில் தீர்க்கமிருந்தது.

"சுகா அவன் ஒரு மாதிரி டைப்டீ. பணத்தால எவளையும் விலைக்கு வாங்கிடலாங்கற எண்ணம் அவன் கிட்ட இருந்திச்சி. ஆரம்பத்துல இது எனக்கு புரியலே; நீ பேசற ஞாயத்துக்கெல்லாம் மசியறவன் அவன் இல்லே.. சாத்தானுக்கு வேதம் ஓதறதால எந்த பலனாவது உண்டாடீ?" நாலாபுறமும் குளிர்ந்த காற்று மென்மையாக அடித்துக்கொண்டிருந்தது உடலுக்கு மிகவும் இதமாக இருந்தது. அனு தன் மேல் சட்டையின் முதல் பொத்தானை அவிழ்த்து விட்டுக்கொண்டாள்.

"நீ சொல்றதெல்லாம் எனக்கும் புரியுதுடீ. எப்பவும் ஒருத்தன் ஒரே மாதிரி மனநிலைமையிலத்தான் இருக்கணுங்கறது அவசியமா என்ன? இன்னைய தேதிக்கு எல்லா பெண்களையும் பணத்தால விலைக்கு வாங்கிட முடியும்ங்கற அவனோட மனப்பாண்மை மாறியிருக்கக்கூடாதா? பெண்களை பெண்களா அவன் மதிக்க ஆரம்பிச்சிருக்கக்கூடாதா?"

"அவன் மாறியிருப்பாங்கறதுக்கு என்ன உத்திரவாதம்? அவனை நான் பாத்தே, நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரோட ஒருத்தர் பேசிகிட்டே, ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது. நானே மறந்துட்ட இந்த விஷயத்துலே, நீ ஏன் உன் டயமை, உன் எனர்ஜியை அனாவசியமா, வீணடிக்க விரும்பறேன்னுதான் எனக்குப் புரியலே?"

"காரணம் சொல்லவா?" சுகன்யா அனுவின் முகத்தை தன் வலது கையால் நிமிர்த்தினாள்.

'சொல்லு..."

"உன் செல்லுல, இன்னமும் அவன் போட்டோவை நீ சேவ் பண்ணி வெச்சிருக்கே; அந்த போட்டோவை தினமும் கொறைஞ்சது நாலு தரமாவது நீ பாத்துக்கிட்டு இருக்கே: அவன் போட்டோவை பாக்கும் போதெல்லாம் உன் முகத்துல ஒரு பளபளப்பு வருது; ஒரு ஏக்கம் வருது; அவனை உன்னால மறக்க முடியலே; உன் மனசுக்குள்ளவே அவனை நீ வெச்சிக்கிட்டு வெளியிலே சிரிக்கறே; உள்ளுக்குள்ளே அழறே..." சுகன்யா தான் பேசுவதை நிறுத்தினாள்.

"சுகன்யா... ப்ளீஸ்... நீ நினைக்கற மாதிரியெல்லாம் என் மனசுக்குள்ளே ஒன்ணுமேயில்லை."

"உன் செல்லுலேருந்து அவன் போட்டோவை டிலீட் பண்ணுடீன்னு நான் சொன்னா, உடனே நீ பண்ணிடுவியா?" சுகன்யா அவள் முகத்தை மீண்டும் தன் புறம் திருப்பினாள்.

"இப்பவே பண்ணிடறேன்..." மனதில் கிளம்பிய வீம்புடன் தன் செல்லை விருட்டென எடுத்தாள் அனு.

"ஒரு செகண்ட் நில்லுடீ... அவனை நான் மறந்துட்டேன்னு என் முகத்தை நேரா பாத்து ஓரே ஒரு தரம் சொல்லுடீ. என்னால நீ படற அவஸ்தையைப் பாத்துக்கிட்டு சும்மா இருக்க முடியலேடீ; இதுதான் நான் அவன் கிட்டே பேசப்போறேன்னு சொல்றதுக்கான முதல் காரணம்."

"...."

சுகன்யாவுக்கு பதில் ஏதும் சொல்லாமல், காலியாக இருந்த மைதானத்தை நோக்கித் தன் முகத்தை விருட்டெனத் திருப்பிக்கொண்டாள் அனு. அவள் கண்கள் இலேசாக கலங்கிக்கொண்டிருந்தது.

"அனு... அயாம் சாரிடீ.. ஒரு விஷயத்தை மட்டும் நீ நல்லா புரிஞ்சுக்கோ; உன்னை அழவெக்கணுங்கறது என் விருப்பமில்லே"

"இட்ஸ் ஆல்ரைட்... ஐ நோ யூ..." அனுவின் குரல் தழுதழுத்தது.

"அனு... அப்ப நான் சொல்றதெல்லாம் உண்மைதானே?"

கொட்டிக்கொண்டிருந்த மழை இப்போது மெல்லிய தூறலாக மாறியிருந்தது. கீழ் வானில் சூரியன் இப்போது இலேசாக பளிச்சிட்டுக் கொண்டிருந்தான். அனு பதிலேதும் சொல்லாமல், சுகன்யாவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு தங்கள் அறையை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தாள். 

காலையிலிருந்து அடித்த காற்றாலும், பெய்த மழையாலும், பகல் நேரத்து வெப்பம் அன்று மிகவும் கணிசமாக குறைந்து விட்டிருந்தது. சுகன்யாவும், அனுவும் வெளியில் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார்கள். சுகன்யாவின் செல் சிணுங்கியது. செல்லில் பளிச்சிட்ட நம்பர் அவளுக்குப் பரிச்சயமில்லாததாக இருந்தது.

"ஹலோ... யாரு?"

"ஹாய் சுகன்யா... ஹவ் ஆர் யு? சம்பத் ஹியர்..?"

"பைன்.. பைன்... அத்தான்.. நான் சொன்னா நீங்க நம்பவே மாட்டீங்க... உங்ககிட்டதான் பேசணும்ன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்... நீங்களே என்னை கூப்பிட்டுட்டீங்க..." சுகன்யாவின் முகம் சூரியனைக் கண்ட தாமரையாக மலர்ந்தது.

"சுகன்யா... நீ சும்மா கதை விடாதே...! நீயா ஒரு தரம் கூட எனக்கு போன் பண்ணி பேசினதே இல்லை. ஒவ்வொரு தரமும் உன்னை நான் கூப்பிடும்போதெல்லாம் இந்த பிட்டைத்தான் நீ போடறே?"

"பொய் சொல்லாதீங்க அத்தான்.... சென்னையிலேருந்து எத்தனை தரம் நான் உங்களை கூப்பிட்டு இருக்கேன்? மறந்துட்டீங்களா?"

"நீ டில்லி வந்ததுக்கு அப்பறம் நடக்கிற கதையை சொல்றேன் நான்..." சம்பத்தும் விடாமல் வம்படித்தான்.

"சாரி அத்த்த்தான்... அக்ரீட்ட்ட்... நீங்க ரிங் பண்ணா என்ன? நான் ரிங் பண்ணா என்ன? நாம ரெகுலர்லி பேசிக்கிட்டு இருக்கோம்... அதானே முக்கியம்... பிராமிஸா சொல்றேன்... ரெண்டு மூணு நாள் முன்னாடி... அத்தை எங்கிட்டே பேசினாங்க. உடனே உங்கக்கிட்ட பேசணும்ன்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்.." சுகன்யா குழந்தையாக கொஞ்சினாள்.

"ம்ம்ம்... என் அம்மா, உன் கிட்டவும் பேசிட்டாங்களா?" சம்பத் சிரித்தான்.

"ஏன்... என் கிட்ட அவங்க பேசக்கூடாதா?"

"தாராளமா பேசலாமே?" சம்பத் கலகலவென சிரித்தான்.

"உங்களுக்கு சிரிப்பாத்தான் இருக்கும்... நீங்க ஏன் பொம்பளைங்க மனசை புரிஞ்சிக்கவே மாட்டேன்னு சத்தியம் பண்ணிட்டு அலையறீங்க?"

"என்ன நீ "பொம்பளைங்க"ன்னு பண்மையிலே பேசறே? யார் மனசையெல்லாம் நான் புரிஞ்சுக்கலே?"

"ஆமாம்... உங்க அம்மா மனசை, நீங்க புரிஞ்சிக்கலே; நான் சொல்றதை நீங்க கேக்க மாட்டேங்கறீங்க; தட் மீன்ஸ், என் மனசையும் நீங்க புரிஞ்சிக்கலேன்னுதான் அர்த்தம்; அப்புறம்... அப்புறம்..." சுகன்யா இழுத்தாள்.

"அப்புறம்...?"

"இன்னும் எத்தனையோ பேர் மனசை நீங்க புரிஞ்சிக்கலே? உங்களாலே எத்தனை பேர் கஷ்டப்படறாங்க தெரியுமா?"

"என்னால கஷ்டப்படறாங்களா? இன்னும் யாரார் மனசை நான் புரிஞ்சிக்கலே? அப்படி யாரை நான் கஷ்ட்டப்படுத்தறேன்?"

"உங்க அம்மா உங்களுக்குப் பாத்த பொண்ணை நீங்க ஏன் வேணாம்ன்னு சொன்னீங்க? உங்க மேரேஜை சீக்கிரமா முடிக்கணும்ன்னு அத்தை மனசுக்குள்ள எவ்வளவு ஆசையோடு இருக்காங்கன்னு உங்களுக்குப் புரியலியே?"

"என்ன என்னத்தான் பண்ண சொல்றே சுகா?"

"அந்த பொண்ணு வீட்டுல எல்லாருக்கும் உங்களை பிடிச்சிருக்காம்... நானும் அந்த பொண்ணு போட்டோவைப் பாத்தேன்... அவளை எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. சொல்லுங்களேன்... அவளுக்கு என்னக்கொறை?"


"ஸோ... இப்ப நீ என் அம்மாவோட லாயரா பேசிக்கிட்டு இருக்கியா? இல்லே என் மாமா பொண்ணு சுகன்யாவா பேசிக்கிட்டு இருக்கியா? இல்லே என் ஃப்ரெண்டா பேசிகிட்டு இருக்கியா?"

"நான் உங்களோட ஃப்ரெண்டா பேசிகிட்டு இருக்கேன். ஏன் உங்க கல்யாணத்தைப்பத்தி நான் உங்கக்கிட்ட பேசக்கூடாதா? உங்க கிட்ட இதைப்பத்தி பேச எனக்கு எந்த உரிமையும் இல்லையா?"

"வொய் நாட்... நீ பேசலாம்.. ஏன் பேசக்கூடாது?"

"பேசத்தான் போறேன்... நேர்ல வாங்க உங்களுக்கு ஒரு கச்சேரி வெச்சிக்கறேன்... சுவாமி மலைக்கு வந்திருக்கீங்களா?"

"நீயும் எனக்கு கச்சேரி வெக்கப்போறியா? எனக்கு பயமா இருக்கு சுகா... நான் வந்த வழியைப் பாத்துகிட்டு திரும்பி போயிடறேன்.." சம்பத் சிரித்தான்.

"திரும்பி போறீங்களா? இப்ப எங்க இருக்கீங்க?"

"உனக்கு பக்கத்துலேதான் இருக்கேன்..."

"ஓ மை காட்... அத்தான் நீங்க டெல்லிக்கு எப்ப வந்தீங்க? எங்கேருந்து பேசறீங்க.." சுகன்யா துள்ளி குதித்தாள்.

"வந்து ரெண்டு நாளாச்சு. கம்பெனி வேலையா வந்தேன். மண்டே ஈவினிங் பெங்களூருக்கு திரும்பிப் போறேன். இன்னைக்கு நான் ஃபிரீ. அதான் உன்னை மீட் பண்ணலாம்; உன் கூட லஞ்ச் சாப்பிடலாம்ன்னு நினைச்சேன்; நீ என்னடான்னா என் மேல கம்ப்ளெய்ன்ட் மேல கம்ப்ளெய்ன்டா அடுக்கிக்கிட்டே போறே?"

"அத்தான் நான் இன்னைக்கும், நாளைக்கும் கம்ப்ளீட்லி ஃப்ரீதான். என் ஹாஸ்டலுக்கு வாங்க... உங்களுக்கு லஞ்ச் நான் குடுக்கறேன்.. ஓ.கே.வா?"

"ஏற்கனவே நான் உன் ஹாஸ்டலுக்கு வந்தாச்சு... சுகன்யா... லஞ்ச் வில் பீ ஃப்ரம் மை சைட்..."

"வந்தாச்சா? திரும்ப திரும்ப கேக்கறேன்... எங்க இருக்கீங்க நீங்க?"

"அயாம் அட் யுவர் ரிஸப்ஷன்...."

"அப்பிடியா.. அங்கேயே நில்லுங்க.. ரெண்டு நிமிஷத்துல நான் கீழே இறங்கி வர்றேன்..."

"நோ இஸ்யூஸ்... ஒண்ணும் அவசரமில்லே... நீ நிதானமா வா..."

"லஞ்ச் குடுக்கறேன்னு சொல்றீங்க... எனி திங் ஸ்பெஷல்...?"

"இருபத்தேழு வருஷத்துக்கு முன்னாடி, இன்னையத் தேதியிலதான் நான் இந்த பூமிக்கு வந்தேன்.."

"அத்தான்... ஹேப்பி பர்த் டே டு யூ..." சுகன்யா ராகம் பாடினாள். பேசிக்கொண்டே தன் கைப்பையைத் துணிக்குவியலிலிருந்து தேடி எடுத்து தன் தோளில் மாட்டிக்கொண்டாள். அனுவின் கையை பிடித்து இழுத்தாள்.

"தேங்க் யூ... சுகா... தேங்க் யூ" சம்பத் இனிமையாக சிரித்தான்.

"உங்க பர்த்டே அன்னைக்கு நீங்க எனக்கு டிரீட் குடுத்துத்தான் ஆகணும்... உங்களை யாரு விடப்போறது? ஆனா என் கூட, என் ஃப்ரெண்டும் வருவா? அதுல உங்களுக்கு எதுவும் ஆட்சேபணை இல்லையே?" சுகன்யா அனுவைப்பார்த்து கண்ணடித்தாள்.

"நீ போயிட்டு வாடீ.. என்னை எதுக்குடீ கூப்பிடறே?" அனு, சுகன்யாவின் முழங்கையை கிள்ளினாள்.

"நீ சும்மாயிருடீ.. நீ எங்க கூட லஞ்சுக்கு வர்றதால என் அத்தான் ஒண்ணும் ஏழையாகிட மாட்டார்? என்னத்தான் நான் சொல்றது சரிதானே?" தாங்கள் பேசுவதை அனுவும் கேட்கட்டும் என சுகன்யா தன் செல்லின் ஸ்பீக்கரை ஆன் செய்தாள்.

"சுகா... நீ உன் பிரண்டை மட்டுமில்லே; உன் ஹாஸ்டலையே தாராளமா அழைச்சிட்டு வா.. அயாம் ரெடி டு ஹோஸ்ட் எ லஞ்ச்.. ஒரு அழகான பொண்ணோட இன்னைக்கு டயம் பாஸ் பண்ணலாம்ன்னு நினைச்சேன். உன் கூட இன்னோரு அழகான பொண்ணும் வர்றான்னா எனக்கென்ன பிரச்சனை...?"

"என் ஃப்ரெண்ட் அழகான பொண்ணு மட்டும் இல்லே.." சுகன்யா சிரித்தாள்.

"பின்னே?"

"நேர்ல பாத்தீங்கன்னாத்தான் தெரியும்."

"உன் ஃப்ரெண்டு யாரு சுகா? அவ பேர் என்ன? உன் ஃப்ரெண்ட் உன்னை விட அழகா?"

"செர்ட்டெய்ன்லீ... அவ என்னவிடவே அழகுதான். அவ எவ்வளவு நல்லவ தெரியுமா? நிச்சயா அவளை நீங்க பாத்தீங்கன்னா இன்னைக்கு அசந்து போய் நின்னுடுவீங்க..." சுகன்யாவின் முகத்தில் சிரிப்பு பொங்கிக்கொண்டிருந்தது. அனு அவள் இடுப்பைக் கிள்ள ஆரம்பித்தாள்.

"சுகா.. ஐ ஹாவ் ஏ கார் வித் மீ... நான் டில்லியில எங்கேயாவது ஒரு கோவிலுக்கு போய், சுவாமி பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணித்தான் ஆகணும்ன்னு என் அம்மா உத்தரவு போட்டு இருக்காங்க... மலை மந்திருக்கு போகலாமா? சீக்கிரம் இறங்கி வாயேன்... அயாம் வெய்ட்டிங் ஃபார் யூ கேர்ல்ஸ்..."

"ஓ.கே.. அத்தான்... ரெண்டே நிமிஷம்... நாங்க வந்துகிட்டே இருக்க்கோம்.." சுகன்யா தன் செல்லை அணைத்தாள். 




No comments:

Post a Comment