"மல்லீ... மல்லீ..."
"ம்ம்ம். சொல்லுங்க.."
"திருப்திதானேடீ..."
"ம்ம்ம். நான் திருப்தியா இருக்கேன்... ரொம்ப தேங்க்ஸ்ங்க.. நான் உங்களை படுத்தி எடுக்கறனா? உங்க தூக்கத்தை கெடுத்துட்டேனா.." மல்லிகாவின் குரலில் சுகத்தை முழுவதுமாக அடைந்ததின் மகிழ்ச்சி வெளிப்பட்டது.
"சேச்ச்சே... தீபாவளிக்கு ஒரு நா... பொங்கல்லுக்கு ஒரு நாள்ன்னு உனக்கு ஆசை வருது.. நீயா வந்து என்னை கட்டிக்கறே... அந்த நேரத்துல உன் சின்ன ஆசையைக்கூட நான் நிறைவத்தலன்னா எப்படீம்மா..."
"நீங்க சந்தோஷமா இருக்கீங்களா? காத்தால கல்யாண சத்தரத்துலேயே என்னை தடவ ஆரம்பிச்சீங்க.." மல்லிகா சிரித்தாள்.
"ம்ம்ம்.. நிஜம்மாத்தான்டீ, மனசு எப்ப முழிச்சிக்குதுன்னு புரியவே மாட்டேங்குது..."
"சரி.. ஹேப்பிதானே?"
"ஹேப்பி.. இன்னைக்கு ரொம்ப ரொம்ப ஹேப்பி.." நடராஜன் மல்லிகாவை இழுத்து அவள் முகத்தை தன் மார்பில் பதித்துக்கொண்டார்.
"என்னமோ தெரியலைங்க... நேத்துலேருந்து என் மனசு தவிச்சுப் போவுது... அந்த தவிப்பு... உங்களை கட்டிப்புடிச்சிக்கிட்டா கொறையும்ன்னு நினைச்சேன்.." மல்லிகா தன் வலது காலை, தன் கணவரின் இடுப்பில் போட்டுக்கொண்டாள்.
"ஏம்மா.. எதுக்காக தவிக்கணும்.. ம்ம்ம். சொல்லு.. உனக்கு என்ன கொறை இந்த வீட்டுல..." நடராஜனின் கை மல்லிகாவின் பிருஷ்டத்தில் பதிந்தது. இன்னும் இறுகியிருந்த சதையை மெல்ல வருடி... அவள் உடலின் இறுக்கத்தை தளர்த்த முயன்றது.
"சியாமளா ஒரு விஷயம் சொன்னாங்க..."
"சொல்லும்மா. எங்கிட்ட உனக்கு என்னத் தயக்கம்...ம்ம்ம்" மனைவியின் முகத்தை நிமிர்த்தி, அவள் கண்களை கனிவுடன் நோக்கினார்.
"நம்ம மீனாவும்.. சீனுவும் ஒருத்தருக்கு ஒருத்தர் கொஞ்ச்சம் அதிகமா நெருங்கிட்டதா.. சொல்றாங்க.."
"ம்ம்ம்..." நடராஜன் தன் மனைவியை இறுக்கி அணைத்து அவள் இதழில் ஒரு முறை அழுத்தமாக கட்டுக்கடங்காத வெறியுடன் ஓசையாக முத்தமிட்டார்.
"என்னங்க... இதுக்கு எதுக்கு நீங்க எனக்கு முத்தம் குடுக்கறீங்க...?"
தான் சொல்லப்போகும் விஷயத்தைக் கேட்டு தன் கணவன் பதறிப்போவான் என மல்லிகா நினைத்ததுக்கு மாறாக, தன்னை அவன் இறுக்கி முத்தமிட்டதைக் கண்டு அவள் திகைத்துப் போனாள். அவன் அணைப்பில் தெரிந்த மகிழ்ச்சியைக் கண்டு அவள் சற்றே அதிர்ந்தும் போனாள்.
"மனசு சந்தோஷமா இருக்குடீ..."
"என்ன சொல்றீங்க...?" மல்லிகா நடராஜனின் மார்பில் தன் இருகைகளாலும் குத்தினாள்.
"அடியே பைத்தியம்.. என்னடீ பண்றே.. லூசு..." நடராஜன் சட்டென எழுந்து மல்லிகாவை தன் மடியில் கிடத்தி, தன் மார்போடு அவளை அணைத்துக்கொண்டு அவள் முதுகை வருடினார்.
"உங்களுக்கு இந்த விஷயம் ஏற்கனவே தெரியுமா...?"
"ம்ம்ம். தெரியும்...எப்பவும் லொடலொடன்னு பேசற ராமசாமி இந்த விஷயத்தை என் கிட்ட சொல்லாம சும்மா இருப்பாரா...?"
"சனியனே.. எதிர் வீட்டு மாமி நேத்துதான் எங்கிட்ட சொன்னாங்க.. பசங்களுக்குள்ள என்ன நடந்திருக்குமோன்னு பொண்ணைப் பெத்தவ நான் பயந்து சாகறேன்.. அப்போலேருந்து நான் தூக்கம் வராம துடிச்சிக்கிட்டு இருக்கேன். எங்கிட்ட நீங்க ஏன் சொல்லலை..? வீட்டுக்கு வந்ததும்.மீனா கிட்ட கேக்கவும் எனக்கு மனசு வரலை.. கேக்கலாமா? வேணாமா? தவிச்சுக்கிட்டு இருக்கேன்..." மல்லிகா குமுறினாள்.
"எனக்கு தெரிஞ்சதும் உனக்கு சொல்லியிருந்தா... உடனே நீ குதிப்பே... கூச்சப்போடுவே.. இந்த செமஸ்டர் அவளுக்கு பைனல் செமஸ்டர்.. மீனாவோட மனசு வருத்தப்படும்... அவ டென்ஷன் ஆவா.. அடுத்த வாரம் அவளுக்கு ப்ளேஸ்மெண்ட் இண்டர்வீயூ இருக்கு... அவ கவனம் படிப்புலேருந்து சிதறிடக்கூடாதேன்னு நினைச்சேம்ம்மா.. அதுமட்டும் இல்லாமே.."
"எது மட்டும் இல்லாமே?"
"செல்வா நிச்சயதார்த்தம் முடியட்டும்.. அப்புறமா உன்கிட்ட சொல்லலாம்ன்னு நினைச்சேன்... இதுவரைக்கும் உங்கிட்ட எதையாவது நான் மறைச்சிருக்கேனா...?" அவர் குழைந்தார். மல்லிகாவின் மார்பெங்கும் தன் இதழ்களை ஒற்றி ஒற்றி எடுத்து அவளை சமாதானப் படுத்தினார்.
"ராமசாமி என்ன சொன்னார்.. மாமி பட்டும் படாமாத்தான் என் கிட்ட சொன்னாங்க..."
"அதெல்லாம் ஒண்ணும் தப்பா நடந்துடலேடீ..."
"சொல்லுங்கன்னா..." மல்லிகா சிணுங்கினாள்.நடராஜன் மல்லிகாவை இழுத்து அணைத்தார். அவள் முகத்தை நிமிர்த்தி, அவள் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டார். முத்தமிட்டவர் அவள் முகத்தைப் பார்த்து கனிவுடன் சிரித்தார்.
"என்னங்க நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்.. கிழவன் இப்பத்தான் நீங்க துள்ளி துள்ளி குதிக்கறீங்க.."
"நீதானேடீ கேட்டே... அவங்களுக்குள்ள என்ன நடந்ததுன்னு..?
"ஆமாம் சொல்லுங்களேன்..."
"அவங்களுக்குள்ள நடந்ததைத்தான் இவ்வளவு நேரமா சொன்னேன்.. இன்னும் உனக்குப் புரியலையா..? மக்கு சாம்பிராணி..."
"புரியலீங்க..." குழந்தையாக சிணுங்கினாள் மல்லிகா.
"மீனாவும் சீனுவும் மாடிபடிக்கிட்ட நின்னுகிட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் முத்தம் குடுத்துக்கிட்டு இருந்தாங்களாம்.. அதைத்தான் ராமசாமி, அவர் வீட்டு மாடியிலேருந்து பாத்தாராம்.. பாத்ததும் நம்ம கிட்ட சொல்றதுக்கு ஓடி வந்தாராம்... அன்னைக்குன்னு பாத்து நம்ம நொண்டி கருப்பன் அவர் ஓடிவந்த வேகத்தைப் பாத்து கொறைக்கவே, பயத்துல திரும்பி ஓடிட்டாராம்.
"நான் ரொம்பவே பயந்துட்டேங்க.."
"ஏன்டீ மல்லீ... நம்ம சுகன்யா... கல்யாணத்துக்கு முன்னாடீ உன் பையனுக்கு முத்தம் குடுத்தான்னு அப்படீ கோவப்பட்டியே...? சுகன்யா கூறு கெட்டவ... எடுபட்டவன்னு... கெடந்து கெடந்து குதிச்சியே..? இப்ப உன் பொண்ணு உன் வீட்டுக்குள்ளவே சீனுவுக்கு கட்டிப்புடிச்சி முத்தம் குடுத்திருக்காளே... இதுக்கு என்னப் பண்ணப் போறே?"
"சீனுவை எனக்கு பதினைஞ்சு வருஷமா தெரியும்.. அவன் குடும்பத்தைப் பத்தி எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும்... ஆனா சுகன்யாவைப் பத்தி அப்ப எனக்கு என்னத் தெரியும்...?"
"நீ பெத்த பொண்ணுதானே மீனா.. நீ எப்படியோ அப்படித்தானேடீ உன் பொண்ணு இருப்பா..."
"என்ன உளர்றீங்க...?" மல்லிகா சீறினாள்.
"நாம புருஷன் பொண்டாட்டியா ஆவறதுக்கு முன்னாடியே, உன் மாமா புள்ளை கல்யாணத்துல, கல்யாண சத்திரத்துல...வாட்டர் டேங்க் பின்னாடீ என்னை கட்டிப்புடிச்சி நீ கிஸ் அடிச்சியே.. அது உனக்கு மறந்து போச்சா.."
"கிட்ட வாடா.. நீ... மல்லிகா நடராஜனை இழுத்து தழுவினாள். அவர் உதடுகளை வெறியுடன் கவ்வி சப்பினாள். கண்களில் தோன்றிய மகிழ்ச்சியுடன் அவர் உதடுகளை இதமாக கடிக்க ஆரம்பித்தாள்.
"போதும்டீ... மல்லி இன்னைக்கு உனக்கு வெறி புடிச்சி போயிருக்கு.. நேரமாச்சுடீ.. சித்த நேரம் தூங்கவிடுடீ செல்லம்ம்ம்..."
"ம்ம்ம்.. உங்களுக்கு மீனாவும் சீனுவும் கிஸ் அடிச்சிக்கிட்ட விஷயம் எப்ப தெரியவந்தது...?"
செல்வா 'நிச்சயத்துக்கு' கும்பகோணம் போனோம்ல்லியா.. அன்னைக்குத்தான் ராமசாமி, பஸ்ல எங்கிட்ட இந்த விஷயத்தை சொன்னார்.
"மீனாவை சீனுவுக்கே பண்ணி வெச்சிடலாம்ன்னு முடிவு பண்ணிட்டீங்களா?" மல்லிகாவின் மனசு லேசாகிக்கொண்டிருந்தது.
"தங்கமான புள்ளைடீ அவன்... ஏன்டீ உன் பொண்ணோட செலக்ஷன் உனக்கு பிடிக்கலையா...?"
"அதில்லீங்க... உங்க தங்கச்சி நளினிக்கு... அவ வீட்டுக்காரருக்கு என்ன பதில் சொல்லுவீங்க... அமெரிக்கா போனாலும், நம்ப ஊர்ல வளந்த பொண்ணுதான் வேணும்ன்னு மூச்சுக்கு முப்பது தரம் சொல்றா அவ... நம்ப மீனா மேல அவங்களுக்கு ஒரு கண்ணாச்சே..." மல்லிகா தன் கணவனின் மார்பை வருடிக்கொண்டிருந்தாள்.
"ஆண்டவனா இவங்க ரெண்டு பேருக்கும் போட்டிருக்கற முடிச்சை நாம எதுக்குடீ மாத்தணும்...?"
"ம்ம்ம்.. நீங்க இவ்வளவு லைட்டா இந்த விஷயத்தை எடுத்துப்பீங்கன்னு நான் நெனைக்கவே இல்லீங்க..."
"மல்லி... என் தங்கச்சி புள்ளைக்கு எத்தனையோ நல்ல எடத்துலேருந்து 'நீ'... 'நான்'னு போட்டி போட்டுக்கிட்டு பொண்ணு குடுக்க வருவாங்க.."
"ம்ம்ம்..."
"என் பொண்ணு சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்.. நம்ம குழந்தை மகிழ்ச்சியா, மனம் நெறைஞ்சு என் கண்ணெதிர்ல குடும்பம் பண்ணணும்.. இதைத்தானே நீயும் விரும்பறே?" நடராஜன், மல்லிகாவை தன்னுடன் இறுக்கிக்கொண்டார். அவள் கன்னக்கதுப்புகளில் தன் முகத்தை இழைத்தார்.
"ஆமாங்க... எனக்கு வேற என்ன வேணுங்க..." மல்லிகா வெறியுடன் தன் கணவரை மீண்டும் ஒருமுறை தன் மார்புடன் அணைத்துக்கொண்டாள். இப்போது அவள் மனதுக்குள் மகிழ்ச்சி காட்டாறாக ஓடிக்கொண்டிருந்தது.
"அப்டீன்னா சீனுதான் நம்ம வீட்டு மாப்பிள்ளைடீ...எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லே..."
"முருகா..." மல்லிகா முனகினாள்.
"என்னங்க... சுகன்யாதான் நம்ம ஜாதி இல்ல.. சீனுவும் நம்ம ஜாதி இல்லையேங்க...?"
"சை...என்னடீ பேசறே நீ.. பதினைஞ்சு வருஷமா உன் புள்ளை செல்வா... அவங்க வீட்டுல பொங்கறதை திங்கறான்.. சீனு உன் கையால, நீ போடறதை திங்கறான்.. ஜாதி பாத்தா அவனை நம்ம வீட்டுக்குள்ள விட்டே? ஜாதி பாத்தா அவனுக்கு நாம சாப்பிட்ட தட்டுல சோறு போட்டே?"
"இல்லீங்க.. சத்தியமா இல்லீங்க.. அவனை என் புள்ளையாத்தான் நெனைச்சுக்கிட்டு செய்தேன்... செய்துகிட்டு இருக்கேன்.."
"அப்புறம் என்னடீ.. சீனுங்கற 'பிள்ளையை" சீனுங்கற 'மாப்பிள்ளை'யாக ஆக்கிக்கோங்கறேன்.. செல்வாவுக்கு 'இனம்' என்ன பெரிய 'இனம்' அப்படீன்னு முடிவெடுத்துதானே சுகன்யாவை அவனுக்கு நிச்சயம் பண்ணியிருக்கோம்..."
"ஆமாங்க.. நமக்கு குணம்தாங்க முக்கியம்..."
"அப்புறம் சீனு என்ன ஜாதின்னு இப்ப ஏன் யோசிக்கறே?
மல்லிகா மவுனமாக தன் கண்களை மூடிக்கிடந்தாள். தன் கழுத்தில் முறுக்கிக்கொண்டு கிடந்த தாலிக்கொடியை சீராக்கினாள். நடராஜனுக்கு தன் முதுகைக் காட்டிக்கொண்டு சுவரை நோக்கி திரும்பி படுத்தாள். உடனே அவள் இடுப்பில் நடராஜனின் கை விழுந்தது. நடராஜன், மல்லிகாவை இழுத்து தன் மார்புடன் சேர்த்துக்கொண்டார்.
"மல்லீ... மீனாகிட்ட பக்குவமா ரெண்டு வார்த்தை சொல்லுடீ... உன் விருப்பப்படியே எல்லாம் நடக்கும்ன்னு ஆதரவா பேசு... அவ படிப்பு முடிய இன்னும் ரெண்டுமாசம்தான் பாக்கியிருக்கு... இப்போதைக்கு அவளை தன்னோட படிப்புல முழுகவனம் வெக்கச் சொல்லு.. அவளுக்கு நல்ல இடத்துல வேலை கிடைச்சுடுங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு... நம்மக் குழந்தை நீ என்ன சொல்றேன்னு புரிஞ்சுக்குவாடீ.."
"ம்ம்ம்..."
"அப்படியே அவளுக்கு கேம்பஸ் செலக்ஷன்ல்ல வேலை கிடைக்கலைன்னாலும் எங்க கம்பெனியிலேயே அடுத்த மாசத்துல ரெண்டு மூணு வேகன்சி வருது.. அதுக்கு அவளை அப்ளிகேஷன் போடச் சொல்லாம்ன்னு இருக்கேன்.. அந்த திருத்தணி முருகன் நினைச்சா எல்லாம் நல்லபடியா முடியும்ம்மா."
"சரிங்க.. இப்ப சீனுகிட்ட நான் எதாவது பேசணுமா?"
"ஒரு வாரம் பொறும்மா... குழந்தையோட ப்ளேஸ்மெண்ட் இன்டர்வியூல்லாம் நல்லபடியா முடியட்டும்... அதுக்கப்புறம் நாம ரெண்டுபேருமே அவனையும், அவன் வீட்டுப் பெரியவங்களையும் கூப்பிட்டு, உக்கார வெச்சு முடிவா இதைப் பத்தி பேசிடலாம்..."
"வீட்டுக்கு வெளியில அவங்க ரெண்டு பேரும் பழகினா..." வெகுளியாக கேட்டாள் மல்லிகா.
"உன் பொண்ணு புத்திசாலிடீ... சீனுவும் மரியாதை தெரிஞ்சவன்டீ... சும்மா சும்மா இதையே நீ பேசிக்கிட்டு இருக்காதே... எனக்குத் தூக்கம் வருதுடீ..." நடராஜன் நீளமாக கொட்டாவி விட்டார். மல்லிகாவின் முதுகோடு தன் மார்பை ஒட்டிக்கொண்டு தூங்க ஆரம்பித்தார்.

ஹாலில் சுவரோரம் போடப்பட்டிருந்த இரும்பு கட்டிலில் படுத்திருந்த சுகன்யாவுக்கு சட்டென விழிப்பு தட்டியது. தலைமாட்டிலிருந்த செல்லை எடுத்தாள். 0523 என டிஜிட்டலில் நேரம் பச்சையில் மின்னிக்கொண்டிருந்தது. விருட்டென எழுந்து உட்க்கார்ந்தாள். அப்பாவுக்கு டீ போட்டுக்குடுக்கணும்..
ராத்திரி படுக்கறதுக்கு முன்னே, விடிகாலம் அஞ்சு மணிக்கு அடிக்கற மாதிரி அலாரம் செட் பண்ணி வெச்சேனே... அலாரம் அடிச்சது கூட கேக்காம நான் அசந்து தூங்கியிருந்திருக்கேன்... அடிச்ச அலாரத்தை உள் ரூம்ல படுத்திருந்த அப்பாதான் எழுந்து வந்து நிறுத்தியிருக்கணும்.
பாத்ரூமில் பக்கெட்டில் தண்ணீர் விழும் ஓசை தெளிவாக ஹாலில் உட்க்கார்ந்திருந்தவளின் காதில் விழுந்தது. அப்பா எழுந்து தன் வேலையை தொடங்கிட்டாரா...? நாளையிலேருந்து அப்பா எழுந்துக்கறதுக்கு முன்னாடீ எழுந்துக்கணும்; மனதுக்குள் முடிவெடுத்தாள். சுகன்யா.
மெல்ல படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கையை உயர்த்தி சோம்பல் முறித்தாள். மெல்லிய வெளிச்சத்தில் வடிவான கற்சிலையொன்று தன் உடலை அசைப்பது போலிருந்தது. நைட்டியில் சுகன்யாவின் செழித்த மார்புகள் மேலும் கீழுமாக அசைந்தது. அவள் நாசியிலிருந்து சீரான சுவாசம் வெளிவந்து கொண்டிருந்தது.
அப்பா சரியா டாண்ணு அஞ்சு மணிக்கு எழுந்துடுவார். அஞ்சரைக்கு நடக்கப் போயிடுவார். ஒரு பத்து நாளைக்கு நீ விடியகாலையில எழுந்து, ஒரு கப் அப்பாவுக்கு டீ போட்டு குடுடீ கண்ணு... அப்புறம் நான் வந்து அவர் தேவைகளை கவனிச்சிக்கறேன்.. கும்பகோணத்திலிருந்து, சென்னைக்கு கிளம்புவதற்கு முன், சுந்தரி தன் பெண்ணிடம் நாலு தரம் திரும்ப திரும்ப சொல்லி அனுப்பியிருந்தாள்.
"ஏம்மா.. அப்பாவை நான் பாத்துக்க மாட்டேனா? இதெல்லாம் எனக்கு நீ சொல்லணுமா?" சுகன்யாவின் கண்களில் விஷமம் துளிர்த்திருந்தது.
"பாவம்டீ உன் அப்பா.. இத்தனை நாள்தான் தனியா கஷ்டப்பட்டார்.. தனியா தன் கையாலேயே டீ போட்டு குடிச்சாரு.. பொங்கித் திண்ணுகிட்டு இருந்தாரு... இனிமேலாவது.. பொம்பளை கையால திருப்தியா சாப்பிடட்டுமேன்னு சொல்றேன்டீ.."
"பாட்டீயும், தாத்தாவும் அப்பாக்கூடத்தானே இருந்தாங்க..." வேணுமென்றே கிண்டினாள், சுகன்யா.
"எனக்குத் தெரியாதா அந்தக் கதையெல்லாம்..? அப்பனுக்கு செய்யறதுக்கு அழுவறே... உன்னால முடிஞ்சா செய்... முடியலைனா விடுடீ... சும்மா என் கிட்ட விவாதம் பண்ணாதே.." சுந்தரி தன் முகத்தைத் தூக்கிக்கொண்டாள்.
"அம்மா... தமாஷுக்குச் சொன்னேன்ம்மா... அவர் என் அப்பா மட்டுமில்லே... உன் புருஷனை, நீ வர்ற வரைக்கும் நான் பத்திரமா பாத்துக்கறேன்.. கவலையேப் படாதே..." அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள், சுகன்யா.
"தேங்க்ஸ்டீ.. சுகா..." சுந்தரியின் முகம் தாமரையாக மலர்ந்தது.
***
கண்ணு... சுகா இராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னாடி ஒரு தரம், காலையில எழுந்ததும் ஒரு தரம், நூத்தியெட்டு முறை நம்ம குலதெய்வம் சிவனை "ஓம் சிவாய நம" அப்படீன்னு நெனைச்சுக்க; கொஞ்ச நாள்லே வாழ்க்கையில எல்லாமே போதுங்கற மனசு உனக்கு வந்துடும்.
மனசு கண்டபடி இங்கயும் அங்கயுமா அலையறது கொறையும். திருப்தியோட எப்படி இருக்கறதுங்கற வித்தை கைகூடும்... ஒரு வீட்டுல மனசுல திருப்தியோட இருக்கற பொம்பளை இருந்தா, அந்த குடும்பத்துல மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது... தாத்தாவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.
சப்பணமிட்டு உட்கார்ந்த சுகன்யா, தன் உள்ளங்கைகளை நான்கைந்து முறை பதட்டமில்லாமல் தேய்த்து தன் மூடிய கண்களின் மேல் ஒற்றிக்கொண்டாள். உள்ளங்கையில் எழுந்த சூட்டை இமைகளில் உணர்ந்தாள். அலையும் தன் மனதை புருவ மத்தியில் கொண்டு வந்து நிறுத்த முயற்சித்தாள்.
ஓம் சிவாய நம: ஓம் சிவாய நம: ஓம் சிவாய நம: என மனசுக்குள் நிதானமாக ஜபிக்க ஆரம்பித்தாள். ஊருக்குப் போயிருந்த போது, ஒரு வாரம் தாத்தா சிவதாணுவுடன் இருந்ததின் விளைவு இது.
செல்வாவின் நட்பு கிடைப்பதற்கு முன் தினமும் காலையிலும், இரவிலும் தியானம் செய்வது அவள் வழக்கம். அவனை சுகன்யாவின் மனது விரும்ப ஆரம்பித்ததிலிருந்து அவளையறியாமல் தியானம் செய்யும் பழக்கம் அவளை விட்டுப் போய்விட்டது. தாத்தாவின் அறிவுரைப்படி, கடந்த பத்து நாட்களாக மீண்டும் தியானத்தில் உட்க்காருவதை தன் வழக்கமாக்கி கொண்டிருந்தாள்.
பாத்ரூமிலிருந்து வந்த குமார், அசையாமல் ஆசனத்தில் உட்கார்ந்திருந்த மகளை, மனதில் பெருமிதத்துடன் பார்த்தார். ஓசையெழுப்பாமல், தேனீரை தயார் செய்து, இரு கப்புகளில் ஊற்றினார்.
சுகன்யா தன் கண்களை மெல்லத் திறந்தாள். சுகன்யாவின் மனம் முழுசாக பதினைந்து நிமிடங்கள் கூட தியானத்தில் நிலைக்கவில்லை. கையில் தேனீர் கோப்பையும், முகத்தில் புன்னகையுமாக, தன் எதிரில் உட்கார்ந்திருக்கும் தந்தையைப் பார்த்தவள், முகம் சட்டென சுருங்கிப் போனது.
"அப்பா... உங்களுக்கு 'டீ' நான் போட்டுக் கொடுக்க மாட்டேனா..? நீங்க எதுக்காக இந்த வேலையெல்லாம் செய்யறீங்க..? அம்மாவுக்கு தெரிஞ்சா என்னை திட்டுவாங்கா.. நீங்க எழுந்தப்பவே என்னையும் எழுப்பியிருக்க வேண்டியதுதானே?" சுகன்யா சிணுங்கினாள்.
"நீ அசந்து தூங்கிக்கிட்டு இருந்தேம்மா... அலாரம் அடிக்கறது கூட உனக்கு கேக்கலே..? குமாரசுவாமி மகளின் தலையை ஆசையாக வருடிக் கொண்டிருந்தார்.
"அப்ப்பா... சீக்கிரமா ஒரு வீடு பாருங்கப்பா.. தாத்தா என் கூட இருக்கணும்ன்னு ரொம்ப ஆசைப் படறார்..."
"செல்வாவோட ஃப்ரெண்டு இருக்காரே... சீனுதானே அந்தப் பையன் பேரு... அவங்க ஏரியாவுல ஒரு வீடு காலியா இருக்கு அப்டீன்னு... ராத்திரி போன் பண்ணியிருந்தார்.. அப்ப நீ தூங்கிட்டே.. இன்னைக்கு ஈவினிங் பாக்கலாம்ன்னு சொல்லியிருக்கேன்.."
"சீனு ரொம்ப நல்ல டைப்புப்பா.. அவுட் ஆஃப் த வே... அவரே போய் எல்லாருக்கும் ஹெல்ஃப் பண்ணுவார்... செல்வாவோட ஃபேமலி ஃப்ரெண்ட்.. அவரு.."
"ம்ம்ம்... சாயந்திரம் அந்த வீட்டைப் பாக்கறதுக்கு நீயும் வர்றியா...?"
"டூ வீக்ஸ் கழிச்சி இன்னைக்குத்தான் நான் வேலையில ஜாய்ன் பண்றேன்... சீக்கிரம் சீட்டை விட்டு சட்டுன்னு எழுந்து வரமுடியாதுப்பா.. உங்களுக்கு வீடு பிடிச்சிருந்தா.. ஓ.கே. பண்ணிடுங்க..."
"ம்ம்ம்..."
"அப்பா... இட்லியும் தொட்டுக்க சட்னியும் பண்றேன்.. லஞ்சுக்கு எடுத்துட்டுப் போறீங்களா?"
"வீட்டுல ஃப்ரெக்ஃபாஸ்ட் சாப்பிடறேம்மா... எனக்குன்னு லஞ்ச் எதுவும் தயார் பண்ணாதே... எனக்கு ருட்டீன் வேலை, மீட்டிங்... ஃபீல்டுல குடவுன் இன்ஸ்பெக்ஷன், அது இதுன்னு ஒரு நாள்லே பத்து எடத்துக்கு போகவேண்டி இருக்கும்... உன்னை மாதிரி சீட்டுலேயே உக்காந்து பாக்கற வேலை இல்லை என்னுது... லஞ்ச் நேரத்துல... எங்கே எது கிடைக்குதோ, அதைதான் சாப்பிடறது என் பழக்கம்.. ராத்திரி டின்னர் வீட்டுல வந்து சாப்பிடுவேன்..."
"அம்மா என்னைத் திட்டுவாங்கப்பா... உங்களுக்கு தினமும் லஞ்ச் பேக் பண்ணி குடுக்கணும்ன்னு என் கிட்ட ஸ்ட்ரிக்டா சொல்லியிருக்காங்கப்பா"
"பத்து நாள்லே உன் அம்மா இங்க வந்துடுவா... லஞ்ச்செல்லாம் அதுக்கப்புறம் பாத்துக்கலாம்.. உன்னை நீ ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதே... இப்ப நான் வாக்கிங் போய்ட்டு வந்திடறேன்... சரியா.." சுகன்யாவின் கன்னத்தை செல்லமாக தட்டிவிட்டு எழுந்தார், குமாரசுவாமி.
"சுகா... இன்னிக்கி ஈவினிங் உன் சவுகரியப்படி நீ வீட்டுக்கு போயிடுமா... நான் வர்றதுக்கு லேட் ஆகும்..." தன் அருகில் காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்த சுகன்யாவை, அவளுடைய அலுவலகத்தின் அருகில் டிராப் செய்தார், குமாரசுவாமி.
"சரிப்பா... வீட்டுல வந்து சாப்பிடுங்கப்பா.." சுகன்யா புன்னகைத்தவாறே, காரை விட்டு இறங்கினாள்.
***
சுகன்யா வருகையை பதிவு செய்துவிட்டு, தன்னுடைய பிரிவில் நுழைந்தவள் ஒரு கணம் அசந்து போய் நின்றாள். அவளுடைய தேவையான புத்தம் புதிய கணினியும், அவள் கேட்டிருந்ததற்கு மேலாகவே, கம்யூட்டருடன், ஃபேக்ஸ், ஸ்கேனர், போட்டோ காப்பியர், பிரிண்டர் என எல்லா வசதிகளும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆல்-இன்-ஒன் சாதனம் ஒன்றும் அவள் டேபிளை அலங்கரித்துக் கொண்டிருந்தன. விருட்டென தன் சீட்டுக்கு ஓடி, அவைகளை ஒரு சிறு குழந்தையைப் போல் தொட்டு தொட்டுப் பார்த்தாள். மனதுக்குள் உற்சாகம் பொங்கியது.
வேலைக்கு சேர்ந்த மறு நாளே அவளுக்கு கொடுக்கப்பட்டிருந்த ஆதாம் ஏவாள் காலத்து கம்யூட்டரை உடனடியாக மாற்றித் தரவேண்டும் என அவள் விண்ணப்பம் கொடுத்திருந்தாள். மூன்று மாதங்களுக்கு முன்னர் புதிதாக கணிணிகள், தலைமை அலுவலகத்திலிருந்து வந்திருப்பது தெரிந்ததும், சுகன்யா ஒரு வார காலம் தினமும் ஸ்டோருக்கு நடையாக நடந்தாள். ஸ்டோர்ஸ் இன்சார்ச் மாதவனின், வெற்றிலை காவியேறிய ஓட்டைப் பற்களையும், அவன் உதட்டில் நிரந்தரமாக குடியிருக்கும் அசட்டு சிரிப்பையும் அவள் பொறுமையுடன் சகித்துக்கொண்டாள்.
கிழவியோ, குமரியோ, கல்யாணம் ஆனவளோ, விதவையோ, பிள்ளையை சுமப்பவளோ, மலடியோ, மாதவனுக்கு இதைப்பற்றியெல்லாம் அவன் கவலைப் படுவது இல்லை. யாராவது ஒருத்தியை தன் சீட்டுக்கு எதிரில் உட்க்கார வைத்து, கதை அளந்து, பற்களை காட்டிக்கொண்டிருப்பான். இப்படி பெண்களுடன் இளித்துக்கொண்டிருப்பதில்தான் தன் ஜென்மம் சாபல்யம் அடைவதாக அவன் நினைத்தான்.
மாதவனை கட்டிக்கொண்டவள், பத்து வருடம் முன், அவன் தொல்லைத் தாங்காமல், அவனை விட்டு விட்டு ஒரு சின்னப்பையனுடன் ஓடிப்போய்விட்டாளாம். அதிலிருந்து அவன் அலையும் அலைச்சலை, அந்த ஆஃபீஸ் ரின் சோப்பை போட்டு, அழுக்குத் துணியை அலசுவது போல் அலசிக்கொண்டிருந்தது. இதுவும் அவனுக்குத் தெரியும்.
மாதவனுக்கும் வெட்கம், மானம் என்ற எந்த சொல்லுக்கும் அர்த்தம் தெரியாது. அர்த்தம் தெரிந்தாலும், அவன் தெரியாதவன் போல்தான் இருக்கிறான் என எல்லோரும் பேசி சிரித்தார்கள். வர்ஜா வர்ஜம் எதுவுமே இல்லாமல், அவன் கண்கள் எக்ஸ்ரே மெஷினாக மாறி எதிரில் நிற்கும் பெண் உடலை தலை முதல் கால் வரை துளைத்து எடுக்கும். அதைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு அவர்கள் கேட்கும் எந்த ஸ்டேஷனரியும் உடனடியாக கிடைத்துவிடும்.
அவன் அறைக்குப் போகும் அத்தனை பெண்களும் அவனுடைய திருட்டுப் பார்வையையை ஒரு ஐந்து நிமிடம் சகித்து கொண்டுதானாக வேண்டும். இதற்கு யாருமே விதிவிலக்கு அல்ல. அவன் அட்டூழியம் எல்லாம், தன் கண்களால், பெண்களை சுகிப்போதோடு சரி. அதற்கு மேல் அவன் என்றைக்குமே யாரிடமும் அத்து மீறியதில்லை.
அந்த ஆஃபீஸின் தலைவருக்கும் (செல்லமாக குருடன், திருதராஷ்டிரன், என அழைக்கப்படுபவரும், தன் பை நிரம்பினால் போதும், மற்றதைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை.. பலன் இருக்கிறது என்று தெரிகிற இடங்களில் அவர் கண்ணை மூடிக்கொண்டு கையொப்பம் இடுவதால், ஊழியர்களால் இந்த பட்டப் பெயர் அவருக்கு சூட்டபட்டிருந்தது.) மாதவனுக்கும் இடையில் ஏதோ ஒரு அந்தரங்கத் தொடர்பு இருப்பதாகவும், அரசல் புரசலான செவி வழி செய்தி ஒன்று நிலவிக் கொண்டிருந்ததால், அவனுக்கு எதிராக தலைமையதிகாரியிடம், யாரும் எழுத்து மூலம் கம்ப்பெள்ய்ண்ட் எழுதிக் கொடுக்கவும் தயங்கினார்கள்.
சுகன்யா, தனக்கு தன் வரிசைப்படி புதிய கம்யூட்டர் தரப்படவில்லை என தன் சீனியர் கோபாலனிடம் ஓரிரு முறை, முறையிட்டும் பார்த்தாள். அந்த சாது புண்ணியாத்மாவோ, "கொழந்தே... சுகன்யா... என்னை நீ தப்பா நினைக்கதே... என் புது கம்ப்யூட்டரை வேணா நான் உனக்கு கொடுத்துடறேன்... நம்ம தலை குருடன் கிட்டவோ, இல்லே இந்த வெக்கம் கெட்ட தடியன் மாதவனோடவோ என்னால மல்லுக்கு நிக்க முடியாது... நான் சொல்றதை புரிஞ்சுக்கோ..."
"உன் சீட்டு வேலையை மட்டும் நீ பாரும்மா.. மத்ததையெல்லாம் கெடப்புல போடு.. சாவித்திரி எது சொன்னாலும் இந்த காதுல வாங்கி அந்த காதுலே விட்டுட்டு.. எதுவாயிருந்தாலும் பைனலா, நான்தானே உன்னை கேக்கப்போறவன்..!?"
"வருஷ முடிவுல உன் கான்ஃபிடன்ஷியல் ரிப்போர்ட்டை நான் தானே எழுதணும்... எதைப்பத்தியும் நீ கவலைப் படாதே... ஆஃபீசுல நீ எடுக்கற முயற்சிகளைப் பத்தியும், தனிப்பட்ட முறையில உன்னைப் பத்தியும் எனக்கு நன்னாத் தெரியும்... இந்த ஆஃபீசைப் பத்தி நீ இன்னும் சரியா புரிஞ்சுக்கலை... இது ஒரு சாக்கடை... இதுலே உன்னை அனாவசியமா நீ அழுக்காக்கிக்காதே.."
"எல்லாம் அந்த அந்த நேரத்தில் அததுவும் அதுவா நடக்கும் போது நடக்கும்..." இதைச் சொல்லிவிட்டு, தன் கண்ணாடியை முகத்தில் ஏற்றிக்கொண்டு.. எதிரில் இருந்த கோப்பில் அவர் மூழ்கிப் போனார்.
இது என்ன உலகம்? இப்படி ஒரு மனுஷனா? தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தட்டிக்கேக்க வேண்டியதை கூட இவர் ஒரு வார்த்தை கேக்க மாட்டேங்கறாறே? இவரை மாதிரி ஆஃபீசர்கள் நாலு பேரு இருந்தாலும் எந்த ஆஃபீசும் உருப்படாமத்தான் போவும்.. சுகன்யா தன் மனதில் எரிச்சலும், ஏமாற்றமும், அலுப்புமாக திரும்பி வந்தாள்.
'அடியே சுகன்யா, இந்த நாய்ங்க கிட்ட கொலைச்சு, சண்டைப் போட்டு, நீ ஏன் உன் மூடைக் கெடுத்துக்கறேடீ... நீ சின்னப்பொண்ணு... உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே... பிக்கல் பிடுங்கல் எதுவும் இல்லாம ஜாலியா இருக்கே... உடம்பு தெம்புல, இந்த ஆஃபிஸ் திருந்தணும்.. இந்த உலகம் திருந்தணும்ன்னு கூச்சல் போடறே... ஆன உன் தனி ஒருத்தி கூச்சலால எந்த பலனும் இல்லே...'
'என்னைப் பார்... நானும் ஆரம்பத்தில, இந்த ஆஃபீசுல சேர்ந்த புதுசுல, உன்னை மாதிரித்தான், ஒரு தண்ணி குடிக்கற கிளாஸுக்கு, எழுதறதுக்கு ஒரு பேனா, பென்சிலுன்னு சண்டை போட்டிருக்கேன்..'
'இப்ப எனக்கு எல்லாம் சலிச்சிப் போச்சு.. இது ஒரு டிபிகல் கவர்மெண்ட் ஆஃபீஸ்டீ... இங்கே யாரும் உன் சின்சியாரிட்டிக்கு எந்த மெடலும் குடுக்கப் போறது இல்லே... இன்னும் சொல்லப்போனா, உன் கிட்ட இருக்கறதை பிடுங்கிக்காம் இருந்தா சரின்னு சந்தோஷப்படு...'
'இங்க நடக்கிற இந்த அராஜகத்தையெல்லாம் நானும் எட்டு வருஷமா பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்டீ.. வந்தமா.. வேலையைப் பாத்தமா... சம்பளத்தை எண்ணி வாங்கினோமான்னு போய்க்கிட்டே இருடீ...'
வித்யா அவளுக்கு தாமரை இலையின் மேல் எப்படி புத்திசாலித்தனமான தண்ணீர் முத்துகளாக இருக்க வேண்டும் என்ற வித்தையை உபதேசித்தாள். அதற்கு பின், தனக்கு கிடைக்க வேண்டிய புது கம்ப்யூட்டரைப் பற்றி சுகன்யா சுத்தமாக மறந்தே போய்விட்டிருந்தாள்.
சுகன்யாவின் நினைப்புக்கு மாறாக, கோப்புகள் கன்னா பின்னாவென அவளுடைய சீட்டில் குவிந்து கிடக்காமல், டேபிள் வெகு சுத்தமாக இருந்தது. கால் உடைந்து ஒரு பக்கம் கோணிக்கொண்டு, திறக்கும் போது எந்த நேரத்திலும் தலையில் விழும் என்ற நிலையில், அவள் சீட்டுக்கு எதிரில் ஆடிக்கொண்டிருந்த, ஆதாம் ஏவாள் காலத்து இரும்பு அலமாரிகளுக்கு பதிலாக, அழகான கண்ணாடீ டாப் பொருத்தப்பட்ட, ஸ்லீக்கான பைல் கன்டெய்னர்களில், பைல்கள் வரிசையாக அடுக்கப்பட்டு, அழகாக நின்றுகொண்டிருந்தன.
என்னாச்சு இந்த செக்ஷனுக்கு...? நான் லீவுலே இருந்த பதினைஞ்சு நாள்லே இங்கே இத்தனை மாற்றங்களா? என் பாஸ், சோம்பேறி சாவித்திரிக்கு டிரான்ஸ்ஃபர் கிரான்ஸ்ஃபர் வந்து எங்கேயாவது போய் தொலைஞ்சிட்டாளா?
புதிசா இங்க வந்திருக்கிற ஆஃபிசர் யாராவது முயற்சி எடுத்து இந்த மாத்தங்களை கொண்டாந்து இருக்காங்களா? ஆனா இந்த ஆஃபீஸுல, ஆஃபிசர்ஸ் எல்லாம் கெழங்கதானே? ஒரே குட்டையில ஊறின பொடி மட்டைகள்தானே? இல்லே.. நான்தான் தப்பா... தவறுதலா... வேற எந்த செக்ஷனுக்குள்ள நுழைஞ்சிருக்கேனா? அவள் ஆச்சரியத்துடன் தன் சீட்டில் அமர்ந்தாள்.
வித்யாவின் சீட்டிலும், சாவித்திரியின் சீட்டிலும் கூட புதிதான கம்ப்யுட்டர்கள், சிரித்துக்கொண்டிருந்தன. அந்த பிரிவு முழுவதுமே வயதுக்கு வந்த ஒரு இளம் பெண்ணின் முகம் போல் சுத்தமான கண்ணாடியாக பளிச்சிட்டுக் கொண்டிருந்தது.
தன் உள்ளத்தில் எழுந்த 'இளம் பெண்' என்ற இந்த உவமை சரிதானா? ஏன் ஒரு வாட்டம் சாட்டமான ஒரு அழகான யுவனாக இந்த செக்ஷனை நான் வர்ணிக்கக்கூடாதா? சுகன்யா ஒரு நொடி மனதுக்குள் எழுந்த சிரிப்பை அடக்கமுடியாமல், வாய்விட்டு சிரித்தாள்.

No comments:
Post a Comment