Pages

Saturday, 21 March 2015

சுகன்யா... 68

"சொல்லு மீனா...நான்தான் சீனு பேசறேன்.." உற்சாகமாக ஆரம்பித்தான், அவன்.

"தெரியுது... நான் என்னா நீ சீனு இல்லேன்னு நினைச்சுக்கிட்டா போன் பண்ணேன்...?"

"என்னடீ... மீனு குட்டீ.. கோவமா இருக்கியா?"

"நீயெல்லாம் ஒரு மனுஷன்... நான் ஒரு கேனச்சி.. போயும் போயும் உன்னை மாதிரி ஆளை லவ் பண்றேன் பாரு... என் புத்தியை நானேதான் ஜோட்டால அடிச்சுக்கணும்.."

"ஏம்ம்மா இந்த ஃபீலிங் உனக்கு? நான் ரொம்ப ரொம்ப நல்லவன்டீ" சீனுவுக்கு திக்கென்றிருந்தது.

"நீ நல்லவன்னு ஊர்ல இருக்கற நல்லவன் எவனாவது சொல்லணும்... இல்லேன்னா நான் சொல்லணும்... நீயே சொல்லிக்கக்கூடாது.."

"என்னாச்சு செல்லம்...?"

"ஒரு வாரமாச்சே... இங்க ஒருத்தி உன்னையே நெனைச்சுக்கிட்டு இருப்பாளேங்கற எண்ணம் உனக்கு கொஞ்சமாவது இருக்காடா?"

"மீனு... ஐ லவ் யூ ஸோ மச்... இப்பத்தான் உனக்கு நான் போன் பண்ணணும்ன்னு நெனைச்சேன்... அதுக்குள்ள நீ முந்திக்கிட்டே...."

"இந்த பிட்டு போடற வேலையெல்லாம் என் கிட்ட வெச்சுக்காதே? எனக்கு கெட்ட கோவம் வரும்... இந்த ஒரு வாரத்துல என் கிட்ட ஒரு தரமாவது பேசினியா... நீ?"



"எந்தப் பக்கம் வந்தாலும் கேட்டை மூடறியேடீ..."

"எப்பவும் கேட்டை ஒடைக்கறது, ஜன்னல் வழியா எட்டிப்பாக்கறது... காம்பவுண்டு சுவத்தை எகிறி குதிக்கறது.. இதான் உன் வேலையா?... வெக்கமா இல்லே... உனக்கு?"

"சாரிம்மா... போன வாரம் ரொம்ப வேலைடி... மீனு குட்டி.. நிஜம்மா சொல்றேன்... உன்னை உடனே பாக்கணும்.. ஒரு முக்கியமான மேட்டர் பேசணும் உங்கிட்ட.."

"இந்த குட்டீ... புட்டீ... மேட்டரு.. இந்தப் பேச்செல்லாம் என் கிட்ட பேசாதே!! ஒழுங்கு மரியாதையா சொல்லு ஏன் போன் பண்ணலே நீ... துட்டு செலவாயிடும்ன்னு பயந்தியா?"

"நிஜம்மா சொல்றேம்மா... நடுவுல ரெண்டு மூணு தரம் நான் பண்ணேன்.. நீ காலேஜ்ல இருந்தேன்னு நினைக்கிறேன்... என் காலை நீதான் எடுக்கலை... கால் லாக்ல பாரு... நாம நேராப் பாக்கும் போது என் போனை செக் பண்ணி பாரு நீ..." சீனு குழைந்தான்.

"போன எடத்துல நீ ஒழுங்கா சாப்பிட்டியா... நேரத்துக்கு தூங்கினியான்னு உன்னைப் பத்தியே நினைச்சுக்கிட்டு இருந்தேன்... எனக்கு எக்ஸாம் வருது... படிக்கறதுக்கு புடிக்கலை... இந்த வாட்டீ உன்னால எனக்கு அரியர் வரத்தான் போவுது... அரியர் வந்தது... பாத்துக்க..."

சீனுவுக்கு மீனா பேசியதை கேட்டதும் மனதுக்குள் பட்டாம் பூச்சி பறந்தது. மிக மிக மகிழ்ச்சியாக தன்னை உணர்ந்தான். என் லவ்வர் மீனாட்சி குட்டி ஒரு வாரமா என்னை ரொம்ப மிஸ் பண்ணியிருக்கா... என்னை அவ கோபப்படறதுல என்னத் தப்பு இருக்கு.

நேரா பாக்கும் போது அவளுக்குப் புடிச்ச காராசேவு ஒரு கால் கிலோ வாங்கிக் கையில குடுத்துட்டு, அதே கையைப் பிடிச்சு கண்ணுல ஒத்திக்கினு, ஐ லவ் யூ டீன்னு ஒரு சீன் போடணும்.. சீனு சட்டென்று அவள் கொடுத்த லீடைப் பிடித்துக்கொண்டான்.

"மீனா ராத்திரியில நீ எக்ஸாமுக்கு படிச்சிக்கிட்டு இருப்பியேன்னு உன்னை நான் டிஸ்டர்ப் பண்ணலம்மா.."

"இதப் பாரு... இந்த கதை சொல்றதை இன்னையோட நிறுத்திடு.. இந்த காதுல பூ சொருவற வேலையெல்லாம் உன் ஃப்ரெண்ட் செல்வாகிட்ட வெச்சுக்க... உன் வெல்லாயுதம் கிட்ட வெச்சுக்க... அந்த வேலாயுதமும் இப்ப ஒருத்தி பின்னாடி சுத்த ஆரம்பிச்சிட்டான்..."

"ம்ம்ம்..ஹீம்ம்ம்.." அர்த்தமில்லாமல் முக்கி முனகினான், சீனு.

"என்னா முனகல் அங்க... இல்லன்னா நாலு மொக்கைப் பசங்க, ப்ளேடு வாங்கி ஒழுங்கா ஷேவ் பண்ணத் துப்பில்லாம உன் வாலைப்புடிச்சிக்கிட்டு நிக்கறான் பாரு... அவனுங்க கிட்ட வெச்சுக்க...."

"இப்ப என் நண்பனுங்களை ஏன்டீ இழுக்கறே... ?

"நீ தானே இந்த ஏரியாவுல இருக்கற வெட்டிப்பசங்களுக்கு எல்லாம் காதலிக்கச் சொல்லிக்குடுக்கற வாத்தியாரு... உன் லவ்வர்கிட்ட எப்படீ இருக்கணும்ன்னு உனக்கு எவன் சொல்லிக் குடுப்பான்.. ஹூம்ம்ம்?

"சாரிம்ம்மா.. என்னை இப்படி போட்டு கஞ்சி காய்ச்சறியே.. நீயாவது ஃப்ரீயா இருக்கும் போது, ஒரு தரம் எனக்கு போன் செஞ்சிருக்கலாம்லே?"

"சீனு... பாத்தியா... நீ ஒரு மொக்கைன்னு திருப்பியும் திருப்பியும், ஃப்ரூவ் பண்ணறியே? நீ கை நெறய சம்பாதிக்கறே... அதை என்னப் பண்ணப் போறே... சிகரெட்டா ஊதி... காசை கரியாக்குடா.... நான் படிச்சிக்கிட்டு இருக்கேன்.. ஏன் கிட்ட பைசா ஏதுடா?

"நான் ஒரு முண்டத்தை காதலிக்கறேன்... அவன் கிட்ட பேசறதுக்கு போன் ரீஜார்ஜ் பண்ண பைசா குடுன்னு யார்கிட்டவாவது கையேந்தணுமா...? நீ எதுக்கு ஒரு ஆம்பிளைன்னு என் லைஃப்ல வந்திருக்கே?"

"ம்ம்ம்... மீனா "

"போறப் போக்கைப் பாத்தா.. .எனக்கு நீ தாலி கட்டுவியா, மாட்டியான்னு உன் மேல எனக்கு சந்தேகமா இருக்கு... நல்லாக் கேட்டுக்க... நீ எங்கிட்ட மாட்டிக்கிட்டே... நீ என்னை விட்டுட்டு ஓடலாம்ன்னு மட்டும் கனவு காணாதே..."

"சேச்சே... லலிதான்னு ஒரு பொண்ணு ஜாதகம் வந்து இருக்குன்னு அத்தை காலையில சொன்னாங்க.." இந்த பிட்டைப் போட்டா, மீனா அடங்குவாளா.. என அவன் நினைத்தான்.

"என்னடா சொல்றே... சீனு இதப்பாரு... லலிதா.. ராகினின்னு எவ பின்னாடியாவது போனேன்னு தெரிஞ்சுது... இழுத்து வெச்சு அறுத்துடுவேன்..." மீனாவின் குரல் சற்றே தணிந்து மெல்லிய பயத்துடன் வந்தது.

"இதைப்பத்திதான் பேசணும்... அதுக்காகத்தான் உன்னைப் பாக்கணுங்கறேன்.."
டேய் சீனு...மீனா கொஞ்சம் அடங்கறா... புடிச்சிக்கடா.. சீனுவின் மனதுக்குள் தெம்பு வந்தது...

"சீனு... உன்னைத்தான் நான் என் மனசுக்குள்ள வெச்சிருக்கேன்டா..! என்னை ஏமாத்திட மாட்டீயே நீ"

"என்னம்மா இப்படீ பேசறே? இப்படீல்ல்லாம் நீ பேசினா எனக்கு ரொம்ப ஃபீலிங்காவுது... மனசுக்கு கஷ்டமா இருக்கு மீனா.." சீனு சட்டென குழைந்தான்.

"இச்ச் ....இச்ச்.."

"என்னா... திடீர்ன்னு இச்சு.. புச்சுன்னு சத்தம்.. வருது உன் சைடுலேருந்து...?"

"உனக்கு முத்தம் குடுத்தேண்டீ கண்ணு..." அசடு வழிந்தான் சீனு.

"உன் முத்தத்தை நீயே வெச்சுக்க... உன்னை நான் கேட்டனா? பகல்ல நான் போன் எடுக்கலைன்னா.. ஈவினீங்ல எனக்கு கால் பண்ண வேண்டியதுதானே நீ?" வேதாளம் திரும்பவும் முருங்கை மரம் ஏறியது.

"ராத்திரி பதினொரு மணிக்குத்தான் வேலை முடிஞ்சு தங்கியிருந்த இடத்துக்கு திரும்பி வந்தோம்.. கூடவே ரெண்டு வெட்டிப் பசங்க... ... என் ஆஃபிசருங்க... மசுரானுங்க... எதுக்கும் ஒத்துவராதவனுங்க... டக்குன்னு கெழட்டி விடமுடியலை.. கெழத்தாழிங்க..." சீனு கதை சொன்னான்.

"புளுவு... எல்லாம் புளுவு... உன்னைப் பத்தி எனக்குத் தெரியாது?"

"கம்மினாட்டிப் பசங்க... என் ஃபீலிங் அவனுங்களுக்குப் புரிஞ்சாதானே... நிம்மதியா தூங்ககூட முடியலை... மறு நாள் என்னப் பண்ணனும்ன்னு, ராத்திரி பன்னண்டு மணிக்கு எனக்கு லெக்சர் குடுப்பானுங்க.. அதாம்மா... புரிஞ்சுக்கடி செல்லம்.."

"ம்ம்ம்... ஆமாம்... கட்டிங்க்...கிட்டிங் வுட்டியா அவனுங்க கூட?"

"சேச்சே... உன் கையில அடிச்சு சத்தியம் பண்ணியிருக்கேம்மா... சோத்தை திண்ணுட்டு, ஜீரணம் பண்றதுக்கு கூட சாதா தண்ணியே குடிக்கலை தெரியுமா.."

"ஏன் ஒரே வழியா போய் தொலையறதுக்கா..."

"தண்ணின்னாத்தான் நீ கோச்சிக்கறியே...?"

"சரி... சரி... எப்படி இருக்கே...? நல்லா இருக்கியாப்பா..? சீனு... எனக்கு உன்னைப் பாக்கணும் போல இருக்குப்பா?"

"எனக்கும் அதே ஃபீலிங்கதான்டீ ... இப்ப எங்கே இருக்கேம்மா"

"வீட்டுலதான் இருக்கேன்...?"

"அது தெரியலையா எனக்கு..."

"வெரண்டாவுல இருக்கேன்..."

"ஒரு முத்தா குடுடீ கண்ணு..!!" கொஞ்சினான் சீனு.

"ப்ச்ச்ச்.. ப்ச்ச்ச்" மென்மையாக இச்சினாள் மீனா.

"ஸ்வீட்ட்டா இருக்குடீயோய்..."

"ம்ம்ம்ம். அப்புறம்.."

"பீச்சுக்கு வர்றியா..?"

"அங்கெல்லாம் நான் வரமாட்டேன்..."

"உன் கிட்ட இம்மீடியட்டா கொஞ்சம் பேசணும்மா..." சீனு கெஞ்சினான்.

"எங்க வீட்டுக்கு வாயேன்... நீ"

"என்ன சொல்றதுன்னே தெரியலை... உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சதுக்கு அப்புறம்... உங்க அம்மா மூஞ்சை நிமிர்ந்து பாக்கவே எனக்கு ஒரு தயக்கமா இருக்கு.. மனசுகுள்ள ஒரு குறுகுறுப்பா ஃபீல் பண்றேன்... உன் வீட்டுக்குள்ள வந்தா... முன்னே மாதிரி உங்கிட்ட சகஜமா பேச முடியலை..."

"ம்ம்ம்... புரியுது சீனு... எனக்கும் அப்படித்தான் இருக்கு... என் படிப்பு முடியற வரைக்கும், எங்க வீட்டுக்கு நாம லவ் பண்றது தெரிய வேணாம்ன்னு பாக்கறேன்.. ஆனா உன்னைப் பாக்காமவும் இருக்க முடியலைப்பா..."

"அம்மா இருக்காங்களா பக்கத்துல..."

"ஹூகூம்... வீட்டிலேயே இல்லே.. ஒரு கல்யாணத்துக்காக அப்பாவும், அம்மாவும், எதிர் விட்டு ராமசாமி அங்கிள் பேமிலியோட வேலூர் போயிருக்காங்க... நாளைக்குத்தான் வருவாங்க..."

"செல்வா ...."

"அவன் ரூம்ல ஏதோ பிக்சர் பாத்துக்கிட்டு இருக்கான்..."

"நீ ட்ரஸ் பண்ணிக்கிட்டு ரெடியா இரு... பத்து நிமிஷத்துல நான் வர்றேன்..."

"வெளியில போறமா..."

"ஆமாம்..."

"செல்வாகிட்ட என்ன சொல்றது..?"

"நான் பாத்துக்கறேன் அதெல்லாம்... நீ ரெடியா இரு..."

மீனா மாடிக் கைப்பிடி சுவற்றின் அருகே பவழமல்லி மர நிழலில், சீனுவுக்காக காத்திருந்தாள். அவளுக்குத் தன் வீட்டிலேயே, முதன் முறையாக அவளும், சீனுவும், ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு, முத்தமிட்டுக்கொண்ட அந்த இடம், அவளுக்கு இப்போது மிகவும் பிரத்யேகமான ஒன்றாக மாறிவிட்டிருந்தது. தினமும் தவறாமல் ஒரு பத்து நிமிடத்தை அங்கு கழிப்பதை தனது வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள், அவள்.

மீனா அன்று நீலவண்ண பிரின்டட் புடவையில், அந்த சாரியின் நிறத்துக்கு கான்ட்ராஸ்டான பிளவுசை டைட்டாக போட்டுக்கொண்டிருந்தாள். புடவையின் அகலமான பார்டர், அவள் மெல்லிய உடல்வாகுக்கும், உயரத்துக்கும் ஏற்ற டீசண்டான தோற்றத்தைத் தந்து கொண்டிருந்தது.

மீனா தன் கழுத்தில் மெலிதான தங்கச்செயின் ஒன்றை அணிந்து, காதில் குட்டித் தோடு ஒன்றை மாட்டி, அதில் ஒன்றின்கீழ் ஒன்று வரும் குடை ஜிமிக்கியை கோத்திருந்தாள். இரண்டு நாட்களுக்கு முன்தான் அவள் தன் புருவங்களை நேர்த்தியாக வில் போல் ஒதுக்கியிருந்தாள். புருவங்களுக்கு இடையில் சிறிய நீல நிற பிந்தியை ஒற்றி, மெல்லிய உதடுகளில், அவளுடைய சரும நிறத்தில், உற்று நோக்கினால் மட்டுமே கண்ணுக்குத் தெரியும்படியாக இலேசாக லிப்ஸ்டிக் பூசியிருந்தாள். இருகைகளையும் மெல்லிய கண்ணாடி வளையல்கள், அலங்கரித்துக் கொண்டிருந்தன.

மோட்டர் பைக்கை வீட்டுக்கு வெளியிலேயே நிறுத்திவிட்டு, வீட்டுக்குள் நுழைந்த சீனு, தன் காதலியைப் பார்த்ததும், ஒரு நொடி ஆணியடித்தது போல் நின்றான். மெல்ல விசில் அடித்தவாறு, அவளை நெருங்கி, 'மீனு யூ ஆர் வெரி வெரி கூல் இன் திஸ் சாரி யார்...' முனகியவாறு அவளை தன் புறம் இழுத்தான்.

சீனுவிடமிருந்து வந்த அதீதமான சிகரெட் ஸ்மெல், மீனாவின் முகத்தை தாக்க, அவள் முகம் சட்டென சுருங்கியது. சீனுவின் கண்களும், மனமும், ஒருங்கே அவள் அழகைப் அள்ளிப் பருகிக்கொண்டிருந்ததால், அவள் முகம் சுருங்கியதை கவனிக்கத் தவறின.

"சொன்னாக் கேளு.. இனிமே வீட்டுக்குள்ள என்னை தொடற வேலை வெச்சிக்காதே.. எங்கண்ணண் செல்வா ஹால்லேதான் இருக்கான்.." சீனுவுக்கு மட்டுமே கேட்கும் அடிக்குரலில் பேசிய மீனா, அவன் கையைத் தட்டிவிட்டாள்.

"ஓ.கே. ஓ.கே... அக்ரீட் டியர்... மீனாக் குட்டீ... நீ ஒண்ணு மட்டும் சொல்லிடு... இவ்வளவு அழகை எங்கடீ ஒளிச்சி வெச்சிருந்தே நீ?" சீனு அவள் வலது கையைப்பற்றி புறங்கையில் மென்மையாக முத்தமிட்டான்.

"ரொம்ப வழியாம சீக்கிரம் கிளம்புடா..!" மீண்டும் அடித்தொண்டையில் உறுமினாள், மீனா. உறுமியவள் சட்டென ஓட்டமாக ஓடி மாடிப்படிக்கட்டில் தாவி தாவி ஏறி மறைந்தாள்.

பைக்கின் சத்தம் கேட்டதும், ஹாலிலிருந்து வெளியில் வந்த செல்வா, "மாப்ளே எப்படா வந்தே மதுரையிலேருந்து?" அவன் கண்கள் இயல்பாக மீனாவைத் தோட்டத்தில் தேடியது.

"காலையிலத்தான் வந்தேன்... மீனா எங்கடா மச்சான்...? வீட்டுல சத்தத்தையே காணோம்" எதுவுமே தெரியாதவன் போல் கொக்கிப் போட ஆரம்பித்தான், சீனு.

ம்ம்ம். எல்லாம் என் நேரம்... என் க்ளோஸ் ஃப்ரெண்டோட தங்கச்சியை காதலிக்க ஆரம்பிச்சதுலேருந்து, அவன் கிட்டவே எப்படி எல்லாம் பொய் பேச வேண்டியதா இருக்குது... தன் மனதுக்குள் சீனு ஒரு வினாடி வெட்கப்பட்டான். கொடுமைடா.. இது... ரொம்ப நாளைக்கு என்னால இப்படி வேஷம் போட முடியாது. சீக்கரமே இதுக்கு ஒரு முடிவு கட்டணும். அவன் மனம் அவனைப் பார்த்து எள்ளி நகையாடியது.

இது என் ஃப்ரெண்டு வீடுன்னு மட்டும் இல்லாம, அதுக்கு மேலேயும் எனக்கு உரிமை உள்ள வீடா, சீக்கிரமா இதை மாத்திக்கணும்... சீனுவின் மனம் வேகவேகமாக சிந்தித்தது.

"மாப்ளே... அம்மாவும் அப்பாவும் வேலூர் போயிருக்காங்கடா... மீனா இங்கேதான் நின்னுகிட்டு இருந்தா... எங்கப் போனான்னுத் தெரியலியே?" நிஜமாகவே செல்வாவின் கண்கள் அவளைத் தேடிக்கொண்டிருந்தன.

"ஹாய் சீனு, ஹவ் ஆர் யூ," மீனா மாடியில் உலர்த்தியிருந்த துணிகளை எடுத்துக்கொண்டு, மாடிப்படியில் மெல்ல இறங்கிக் கொண்டிருந்தாள்.

"அயாம் பைன்... தேங்க்யூ... மீனா.. நல்லா சூடா ஒரு கஃப் காஃபி போட்டுக் குடுக்கறியா...?" சீனு செல்வாவின் பின் நின்று கொண்டு, அங்கிருந்து நகருமாறு, அவளைப் பார்த்து கண்ணடித்தான்.

***

"மச்சான்... ஒரு முக்கியமான விஷயம்டா..." நண்பர்கள் இருவரும் வீட்டுப் வாசல் படிக்கட்டிலேயே உட்கார்ந்து கொண்டார்கள்.

"சொல்லுடா... மாப்ளே"

"வீட்டுல எனக்கு தீவிரமா பொண்ணு பாக்க ஆரம்பிச்சிட்டாங்கடா... காலையில வீட்டுக்குள்ள நுழையக் கூட இல்லே... அத்தை ரொம்பவே பொலம்ப ஆரம்பிச்சிட்டாங்க... இந்த தரம் அப்பாவும் அவங்க கூட சேந்துக்கிட்டாரு..."

"வெரி குட்...யாருடா பொண்ணு...? அந்த ஜானகியோட சிஸ்டர், வெள்ளையா, பசுமாடு ஒருத்தி இருக்காளே அவளையா உனக்கு பாக்கறாங்க?"

"டேய்.. நிறுத்தடா உன் நக்கலை.. நானே வெறுத்துப் போய் வந்திருக்கேன்.. நீ வேற கேப்புல கடா வெட்டி உசுப்பேத்தற..."

"சரி... நவ் அயாம் சீரியஸ்... இதுக்கு நான் என்ன பண்ணணும் அதைச் சொல்லுடா.." செல்வா, சீனுவின் தோளில் நட்புடன் கையைப் போட்டுக்கொண்டான்.

"மீனாவைதான் நான் கல்யாணம் பண்ணிக்க விரும்பறேங்கற, என் முடிவை வீட்டுல அப்பா, அம்மாக்கிட்ட கிளியரா சொல்லிடலாம்னு பாக்கறேன்..."

"ம்ம்ம்..." செல்வா சீனுவை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான்.

"பொண்ணு காஞ்சிபுரமாம்.. அம்மா காலையிலப் பேச்சை எடுத்தவுடனே... நான் ஒரு பொண்ணை காதலிக்கறேன்னு பட்டுன்னு சொல்லிட்டேன்...

"ம்ம்ம்ம்..." செல்வா முனகினான்.

"யாருன்னாங்க...!!" சீனு பேசுவதை ஒரு நொடி நிறுத்திவிட்டு செல்வாவின் கையைப் பற்றிக்கொண்டான்.

"உன் அப்பாகிட்ட நீ கல்யாணம் பண்ணிக்க விரும்பறது என் தங்கச்சி மீனாட்சின்னு அப்ப சொல்லலியா?" சற்றே உணர்ச்சி வசப்பட்ட குரலில் பேசினான் செல்வா.

செல்வாவுக்கு பதில் சொல்லாமல், வீட்டு கேட்டுக்கு வெளியில், அவன் பைக்குக்கு காவல் காப்பதைப் போல் நின்று, தன் வாலை மெல்ல ஆட்டிக்கொண்டிருந்த நொண்டிக் கருப்பனை ஒரு முறைப் பார்த்தான், சீனு. ஒரு நிமிடத்திற்கு பின் மீண்டும் மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான்.

"நான் விரும்பறப் பொண்ணு நம்ம ஜாதியில்லே... ஆனா உங்க எல்லாருக்கும் அவளைப் கண்டிப்பா பிடிக்கும்... அந்தப் பொண்ணோட குடும்பத்தாரோட எனக்கு ரொம்ப நாளாப் பழக்கம்... அவளை நேரா வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து காட்டறேன்னு ஏதோ ஒரு மூடுல திடு திப்புன்னு உளறிட்டேன்..."

"அப்புறம்..."

"அப்பாவும் 'உன் சந்தோஷம்தாண்டா முக்கியம்... இன்னைக்கு நாள் நல்லாருக்கு' அவளை அழைச்சிட்டு வாடான்னுட்டார்.. அதான்..." சீனு பேசமுடியாமல் தவித்தான்.

"அதனாலே..."

"மீனாவை நான் என் வீட்டுக்கு அழைச்சிட்டு போக விரும்பறேன்... பத்திரமா ஒரு மணி நேரத்துல அவளைத் திரும்ப கொண்டாந்து நம்ம வீட்டுல விட்டுடறேன்... இதுக்கு நீ பெர்மிஷன் குடுக்கணும்..." சீனுவின் குரல் சட்டெனத் தழுதழுத்தது.

"சீனு இந்தாங்க காஃபி... செல்வா நீயும் எடுத்துக்க..." என்ன நடக்குது இங்க... சீனு ஏன் குரல் குளறி குளறிப் பேசறான்... நடப்பது புரியாமல் அவர்களைப் பார்த்த மீனா, காஃபி கோப்பைகள் இருந்த டிரேயை நீட்டினாள்.

செல்வா, மீனாவின் முகத்தை ஒருமுறை உற்று நோக்கினான். ம்ம்ம்ம்.. நீளமாக ஒரு பெருமூச்சை வெளியேற்றினான். 'மீனா ஒரு நிமிஷம் இப்படி உக்காரும்மா...' தன் தங்கை மீனாவின் இடது கையை பற்றி தன்னருகில் உட்காரவைத்துக்கொண்டான்.

"சீனு... எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா... அயாம் ரியலி ப்ரவுட் ஆஃப் யூ... உன்னை மாதிரி ஒரு நண்பன் கிடைக்க ஒருத்தன் குடுத்து வெக்கணும்டா..." மீனாவையும், சீனுவையும் ஒரு நொடி மாறி மாறிப் பார்த்தான்.

"மீனா..."

"சொல்லுங்க அண்ணா.." மீனாவின் குரலில் மரியாதை எக்கச்சக்கமாக ஏறி ஒலித்தது.

"சீனுவோட வீட்டுக்கு நீ இதுக்கு முன்னாடி என் கூட வந்திருக்கே... ஆனா சீனு இன்னைக்கு ஏதோ ஸ்பெஷலா உன்னை அவன் வீட்டுக்கு அழைச்சிட்டு போகணுங்கறான்... அதுக்கு என் பர்மிஷன் கேக்கறான். நீ என்ன சொல்றேம்மா?"

"என்ன சீனு இதெல்லாம்.." ஒன்றுமே தெரியாதது போல் மீனாவும் தன் பாத்திரத்துக்கான வேஷத்தை சரியாக அரங்கேற்றினாள். தன் காதலன் சற்று முன் தன்னைப் பார்த்து கண்ணடித்து சொல்லிக்கொடுத்த வசனத்தை சரியாக ஒப்புவித்தாள்.

"சீனுவோட அப்பா உன்னைப் பாக்கணும்ன்னு சொன்னாராம்... அவர் எது சொன்னாலும், சொல்றதை அமைதியா கேட்டுக்க... எதுவாயிருந்தாலும் நம்ம வீட்டுக்கு வந்து நம்ம அம்மா, அப்பாக்கிட்ட அவரை பேச சொல்லு..."

"சரிண்ணா..." மீனா மெல்ல முனகினாள்.

"அது வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் பொறுமையா இருங்க..." 'பொறுமை' என்ற சொல்லை ஒரு அண்ணணுக்கே உரிய முறையான பொறுப்புடன் தன் தங்கைக்கும், தன் தங்கையின் காதலனுக்கும் பொதுவாக சற்றே அழுத்தமாகச் சொன்னான், செல்வா.

"தேங்க்யூடா செல்வா..." சீனு அவன் கையை அழுத்திக் குலுக்கினான். 


சீனு, பைக்கை ஒரே உதையில் உதைத்து கிளப்பினான். மீனா அவன் பின்னால் பைக்கில் ஏறி உட்க்கார்ந்ததும், வண்டியை வேகமாக கிளப்பி, தெருமுனையை நொடியில் கடந்து மெயின் ரோடுக்கு வந்தான். மீனா அவன் முதுகில் உரிமையுடன் சாய்ந்து கொண்டாள்.

"சீனு மெதுவா போப்பா... பைக்கை ஏன் இப்படி ஸ்பீடா ஓட்டறே?"

"ஸ்பீடா போனா உனக்குப் பிடிக்கலையா?"

"பிடிக்குது ஆனா... மெல்ல போனா... மஜாவா இருக்கும்ன்னு தோணுது..."

"உன் இஷ்டம்டீ மீனு..."

"உன் கூட, பைக்ல நான் எத்தனையோ தடவை செல்வாவோட தங்கையா வந்திருக்கேன்.. ஆனா உன் காதலியா உன் கூட வர்றது இதுதான் முதல் தடவை... இல்லியா.. மனசே காத்து மாதிரி ஆயிடிச்சிடா!!"

மீனாவின் குரலில் எப்போதுமே இல்லாத ஒரு அதிஅற்புதமான இனிமை வந்திருந்ததாக சீனுவுக்குத் தோன்றியது. மீனாவின் இதயத்திலும் மகிழ்ச்சி அலையலையாக அடித்துக்கொண்டுருந்தது.

"ம்ம்ம்...." சீனு சிலிர்க்க ஆரம்பித்தான்.

மீனாவின் முகத்திலிருந்து கிளம்பிய மெல்லிய பவுடர் வாசமும், உடன் கலந்து வந்த அவள் உடலின் தனியான வாசமும், அவள் தலையில் சூடியிருந்த ஒற்றை ரோஜாவின் மணமும், சீனுவின் இரத்த அழுத்தத்தை வெகுவாக ஏற்றி அவனைச் சிலிர்க்க வைத்தன. அவன் பைக்கின் வேகத்தை குறைத்தான். மீனாவின் வலது கை அவன் இடுப்பை அழுத்தமாகச் சுற்றிக்கொண்டது.

"சீனு... ரொம்ப ஜாலியா இருக்குடா... இதான் காதலா..." மீனா மெல்ல அவன் காதில் முனகினாள். மீனாவின் பெண்மை மெல்ல மெல்ல மலர ஆரம்பித்தது. மலர்ந்து வாசம் வீச ஆரம்பித்தது.

மீனாட்சியின் வலது மார்பு சீனிவாசனின் முதுகில் அழுந்தியது. தளர கட்டியிருந்த அவள் தலை முடிக்கற்றைகள், காற்றில் பறந்து அவள் முகத்தில் சுளீரென அடித்தன. மூடியிருந்த அவள் மெல்லிய உதடுகளை கிழித்துக்கொண்டு, அவள் முன்பற்களைத் தொட்டன.

சீனுவாசன் தன் தலையைத் திருப்பி மீனாட்சியின் முகத்தைப் பார்த்த போது, மீனாவின் மெல்லிய குழல்கள் அவன் முகத்திலும் வந்து மோதின. வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு இன்பம் அவன் மனதிலும், உடலிலும் எழும்ப, சீனு ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்தான்.

"தெரியலைடி... மீனு... எனக்கும் இது ஒரு புது அனுபவமா இருக்கு... எல்லாத்தையும் இனிமேத்தான் ஒண்ணொண்ணா டெஸ்ட் பண்ணிப் பாக்கணும்..."

"என்னது டெஸ்ட் பண்ணணுமா?"

"உன்னுது மெத்துன்னுதான் இருக்குமா இல்லே..."

"பொறுக்கி ராஸ்கல்... வண்டியை நேராப் பாத்து ஓட்டுடா..." சீனு எதைச் சொல்லுகிறான் என்பது ஓரிரு நொடிகளுக்குப் பின் அவளுக்கு புரிந்ததும், மீனா சட்டென அவனிடமிருந்து விலகினாள்.

"பிளீஸ்... மீனு... சாய்ஞ்சுக்கடி என் மேல... இனிமே அந்த மாதிரி தப்பா பேசமாட்டேன்..." சீனு பைக்கை வேகமாக வளைத்து திருப்பினான்.

"என்ன சீனு... ஏன் இந்தப் பக்கம் போறே... இது மெரினா பீச் போற வழிதானே? உன் வீட்டுக்கு போக வேணாமா?" மனமெங்கும் எழுந்த குதூகலத்துடன் முனகிய மீனாவின் வலது விலா, தோள், மார்பு, இடுப்பு என, அவளுடைய பாதி உடல் சீனுவின் முதுகில் மீண்டும் அழுந்தியது. அவள் வலது கை சீனுவின் தோள் வழியாக நழுவி அவன் மார்பை தடவிக்கொண்டிருந்தது.

"செல்லம்... பீச்சுல ஒரு பத்து நிமிஷம், முறைக்காதேடீ... ஒரே ஒரு அஞ்சு நிமிஷம் இருந்துட்டு போவலாம்பா..." சீனு முனகினான்.

"சரி... சரி.. எங்கேயாவது போய்த் தொலை... எங்கண்ணண் கிட்ட ஒரு மணி நேரம் டயம் வாங்கியிருக்கே.. இது நினைப்புல இருக்கட்டும்..."

மீனா சீனுவின் இடுப்பை இடது கையால் இறுக்கிக் கட்டிக்கொண்டாள். தன் மனசிலும், உடலிலும் மெல்ல மெல்ல சிலிர்த்தாள். ஒரு ஆணை விருப்பத்துடன் தழுவுவதால் வரும் உடல் சிலிர்ப்பின் சுகம் என்னவென்பதை மெல்ல மெல்ல அறிந்து கொள்ள ஆரம்பித்தாள்.

ஒரு ஆணுடம்பின் திண்மை தன் உடலில் பரவியதும், பதிலுக்கு, தன் ஒரு பக்க மார்பை அவன் முதுகில் அழுத்தி உரசி, சீனுவின் உடலை சிலிர்க்க வைத்து அவனுக்கும் ஒரு பெண் உடலின் மென்மையை போதிக்க ஆரம்பித்தாள்.

***

இருவரும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டார்கள். சீனுவின் கை மீனாவின் தோளில் படர்ந்தது. மீனா கூச்சத்துடன் நெளிந்தாள்.

"சீனு.. எல்லாரும் நம்பளையே பாக்கற மாதிரி இருக்குடா... உன் கையை எடுப்பா" அவள் குரலில் சிறிது இனம் தெரியாத எரிச்சல் இருந்தது.

"அவனவன் அவன் வேலையைப் பாக்கறானுங்க... நீ மொக்கைங்களை ஏன்டீ பாக்கறே? நீ என்னை மட்டும் பாருடீச் செல்லம்.." போதையில் உளறினான், சீனு.

"அவனுங்க என்ன வேலை பாக்கறானுங்க...?" மீனாவும் போதையேறியிருந்த குரலில் முனகினாள்.

"கூட உக்காந்து இருக்கற ஜிகிடிங்களுக்கு 'காய்' மெத்துன்னு இருக்கா... இல்லே கல்லாட்டாம் இருக்கான்னு அழுத்தி அழுத்திப் பாக்கறானுங்க... கேக்கறியடீ இதெல்லாம் ஒரு கேள்வின்னு..?"

"கர்மம்... எப்பவும் இதே நெனைப்பாடா... உனக்கு... சனியன் புடிச்சவனே?"

சீனுவின் தொடலில் மீனா வெளியில் தன் உடல் குறுகி, தன் தேகம் இறுகி, தன்னைக் குளிர்ச்சியாக உணர்ந்தாள். உள்ளுக்குள் மெல்ல மெல்ல வெப்பமானாள். மொத்தத்தில் தன்னுள் தன்னை மகிழ்ச்சியாக உணர்ந்தாள். ஆனாலும் பீச்சில் பட்டப்பகலில் எல்லோருக்கும் தான் ஒரு காட்சிப்பொருளாக மாறுவதை உணர்ந்ததும், மனதின் ஒரு மூலையில் எரிச்சலானாள்.

"ம்ம்ம்... எவனும் இந்த உலகத்துல புத்தன் இல்லடீ மீனா... புத்தரே பொண்டாட்டி கூட, சின்ன வயசுலேயே, செமையா உடம்பு சொகத்தை அனுபவிச்சிட்டுத்தான் கடைசியா ஆசையே துன்பத்துக்கு காரணம்ன்னு ஞானம் வந்து காட்டுக்குப் போனாரு..."

"சீனு... நிஜமாவே உங்கப்பா என்னை உங்க வீட்டுக்கு கூப்பிட்டாரா... இல்லே... என்ன தள்ளிக்கிட்டு வர்றதுக்கு செல்வா கிட்ட இப்படி ஒரு டிராமா போட்டியா?" இப்போது அவள் குரலில் எரிச்சல் சற்று கூடியிருந்தது.

"மீனா... என்னை நம்புடி... என் மச்சான் கிட்ட நான் பொய் சொல்லுவேனா?.." சீனு மீனாவை சட்டென தன் புறம் இழுத்து அவள் கழுத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.

"சீனு இது பப்ளிக் ப்ளேஸ்டா... வேணாம்.. சொன்னாக் கேளுடா.." மீனா அவனிடம் மன்றாடினாள்.

"மீனா... நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கேடி... உன் கழுத்துல.... மல்லிப்பூ சென்ட் அடிச்சிருக்கியா, ம்ம்ம்ம். தன் மூச்சை நீளமாக இழுத்தான்... சீனு. அவன் பார்வை மீனாவின் மார்பில் குவிந்திருந்தது.

"ஆமாம்... கும்பகோணம் போயிருந்தோம்ல, அங்க சுகன்யா ஒரு பாட்டில் குடுத்தா..." மீனா புடவை முந்தானையை இழுத்து தன் மார்பை முழுவதுமாக மூடிக்கொண்டாள்.

"அய்யம்பேட்டை அருக்காணி மாதிரி என்னடீப் பண்றே... மொத்தமா இழுத்து மூடிக்கிட்டே... சரியான பட்டிக்காடுடி நீ.... மீனு... ஒரு செகண்ட் கிட்ட வாடீ..." தன் உடல் பதற சீனு அவளிடம் கெஞ்சினான்.

"ம்ம்ம்.. நீ என்னைத் தொடல்லன்னா கிட்ட வரேன்.." சீனுவின் முகத்தில் இருந்த ஆசையும், ஏக்கமும் அவளைத் தடுமாற வைத்தது. மெல்ல அவன் புறம் நகர்ந்து அமர்ந்தாள்.

மீனா அருகில் வந்ததும், சீனு அவளை தழுவி அவள் உதட்டில் முத்தமிட முயற்சித்தான். அவன் மூச்சில் வந்த சிகரெட் நாத்தம், மீனாவின் மூக்கில் ஏறியது. மீனா அவன் பிடியில் திணறினாள். அவள் திணற திணற, சீனுவின் பிடி மேலும் இறுகியது. ஒரு வினாடிக்கும் குறைவாக அவன் உதடுகள், மீனாவின் உதட்டை தொட்டு, உரசி, திரும்பின.

சீனுவின் உதடுகள் தன் உதடுகளை உரசியதும், மீனா ஒரு நொடி அதிர்ந்தாள். அவள் உதடுகளில் தீடிரென உண்டான வெப்பம், அந்த வெப்பத்தால் உண்டான உடல் அதிர்வின் தாக்கத்தை அவளால் சகித்துக்கொள்ள முடியாமல், அவனை வலுவாக தன்னிடமிருந்து உதறினாள். அவனிடமிருந்து மீண்டும் விலகி உட்க்கார்ந்தாள். அவன் கூரிய கண்கள், அவள் திமிறியதால் சற்றே விலகிய முந்தானையின் பின்னால், ஒரு நொடி மெல்ல ஏறி இறங்கிய மீனாவின் மார்புகளில் வட்டமடித்து திரும்பின.

மீனா மீண்டும் சட்டென தன் புடவை தலைப்பை நேராக்கிக்கொண்டாள். உடலில் இன்ப உணர்ச்சிகள் பெருகிக்கொண்டிருக்க, சீனுவைப் நேராகப் பார்க்காமல் கடல் அலைகளை பார்த்தாள். அவளுக்கு மூச்சு வாங்கியது.

சீனுவுக்கு வெறுப்பாக இருந்தது. என்னாச்சு இவளுக்கு? ஏன் எரிச்சலா இருக்கா? வண்டில வரும் போது அவளாத்தானே என்னை ஆசையா கட்டிக்கிட்டா..! இப்ப நான் இவளை திருப்பி கட்டிக்கிட்டா, முரண்டிக்கிட்டு போறா.. எதிர்ல, பக்கத்துல, இங்க அங்கன்னு, அவன் அவன் ஜாலியா, கூட இருக்கறவளை மடியில போட்டுக்கிட்டு செமையா அமுக்கி புழியறானுங்க...

அஞ்சே நிமிஷத்துல எவ்வளவு சேஞ்ச் இவகிட்ட? பீச்சுக்கு வந்ததுலேருந்துதான் இவ இப்படி விலகி விலகிப் போறா? பொம்பளையைப் புரிஞ்சுக்கறது இவ்வளவு சிரமமா? ஒரு நிமிடம் அவர்கள் இருவரும் மவுனமாக உட்கார்ந்திருந்தனர். சீனு தன் ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தான். தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்த ஒரு சிகரெட்டை எடுத்தான். பேண்ட் பாக்கெட்டை லைட்டருக்காக துழாவினான். லைட்டர் அவன் பைக்கிலிருந்த ஹேங்கரில் கிடந்தது.

மீனா தன் செல்லை நோண்டிக் கொண்டிருந்தாள். சீனுவின் விரல் இடுக்கில் நெளிந்த சிகரெட்டை வெறுப்புடன் பார்த்தாள். அவன் முகத்தை ஒரு முறை கூர்ந்து நோக்கினாள். அவன் கண்கள் மிரட்சியாக இங்கும் மங்கும் தீப்பெட்டிக்காக அலைந்து கொண்டிருந்தது. அரை வினாடிக்குப் பின் மெல்ல ஒரு கேள்வியை அவனிடம் எழுப்பினாள்.

"சீனு... உண்மையிலேயே நீ என்னைக் காதலிக்கறயா?" மீனாவின் குரல் சீரியஸாக வந்தது.



"இதுல என்னடீ திடீர்ன்னு சந்தேகம் வந்திடிச்சி உனக்கு?" சீனுவின் குரலில் மெல்லிய எள்ளல் இருந்தது.

"எனக்கு சந்தேகம்தான் வருது ..? மீனாவின் மனதில் அவனுடைய கிண்டல் சுருக்கென்று தைத்தது. 

"மீனா... ரொம்ப மொக்கை போட்டு என் மூடைக் கெடுக்காதேடீ... வண்டில வரும் போது ஜாலியா இருக்குடான்னு நீதானே சொன்னே..."

"ஆமாம். அப்ப ஜாலியாத்தான் ஃபீல் பண்ணேன்.."

"அதுக்குள்ள உனக்கு என்ன ஆயிடிச்சி..."

"சீனு என் வயித்தெரிச்சலைக் கிளப்பாதே நீ..." பெண்ணின் பிடிவாதம் எழுந்தது.

"ஒரு வாரம் கழிச்சு ஆசையா உன்னைப் பாக்க வந்திருக்கேன்டீ... ஏன்டீ இப்படி அழிச்சாட்டியம் பண்ணுறே?" 

தன் மனதிலிருந்த ஆசை நிறைவேறாததால் சீனுவாசனுக்குள் இலேசாக சீற்றம் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. ஆணுக்கே உரித்தான மூர்க்கம் மெல்ல தலைத் தூக்கத் தொடங்கியது. 

"சீனு.. நிஜமா என் மேல உனக்கு அக்கறை இருக்கடா? சொல்லுடா.. உனக்கு அக்கறை இருக்கு?"

"மீனா... ப்ளீஸ்... என்னை வெறுப்பேத்தாதே...?"

"உன் கிட்ட பதில் இல்லேன்னா நான் என்ன பண்ண?"

"போதும் நிறுத்துடீ... இன்னிய தேதிக்கு... எந்த புத்திகெட்ட மடையனாவது, தன் லவ்வரோட அண்ணன் கிட்ட போய், மச்சான்.. உன் தங்கச்சியை பீச்சுக்கு இட்டுகினு போறேன்னு சொல்லுவானா?"

"யூ ஆர் ரைட்... எவனும் இப்படி கேக்கமாட்டான்..?" 

மீனாவின் விரல்கள் கடல் மணலில் அலைந்து கொண்டிருந்தன. சற்று தூரத்தில், சிறிய நண்டு ஒன்று பக்கவாட்டில் வேகமாக நகர்ந்து ஓடி வளைக்குள் நுழைந்ததை அவள் கண்ணில் ஒரு குழந்தையின் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

"இங்க என் மூஞ்சைப் பாருடீ... ஆனா இந்த மாங்கா மடையன் உன் வீட்டுக்கு வந்தேன்... உன் அண்ணன் கிட்ட 'மீனாவை வெளியே அழைச்சிட்டுப் போறேன்னு' பர்மிஷன் கேட்டேன்.. ஏன்?"

"ஏன்... சொல்லு... எனக்கு நிஜமா புரியலை?"

"ஏன்னா.. நான் உன்னை உண்மையா காதலிக்கறேன்.. கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நெனைக்கறேன்.. கடைசி வரை என் வாழ்க்கையை உன் கூட வாழ விரும்பறேன்..." சீனுவுக்கு மூச்சு வாங்கியது.

"மீனா... இன்னைக்கு ஒரு நாள் மட்டும் உன்னைத் திருட்டுத்தனமா பீச்சுல தொட்டுப் பாத்துட்டு, உன்னை இங்கேயே விட்டுட்டு ஓட போறவன் நான் இல்லே..." 

"செல்வா என்னோட டியரஸ்ட் ஃப்ரெண்டுன்னாலும், நீ அவனுக்கு தங்கச்சி... உன்னைப் பெத்தவங்களை, நான் என் சொந்த அம்மா, அப்பாவாத்தான் நெனைச்சுக்கிட்டு இருக்கேன்; அவங்களுக்கு குடுக்க வேண்டிய மரியாதையை என்னைக்கும் குடுக்கணும்ன்னு நெனக்கறவன் நான். இவங்கள்ளாம், என்னை எந்தக் காரணத்தைக் கொண்டும் சீப்பா நினைச்சுடக்கூடாது... அப்படி அவங்க என்னைத் தப்பா நினைச்சிட்டா... என்னாலே நிம்மதியா தூங்கவே முடியாது..."

"சீனு.. உன்னைப்பத்தி எனக்கு தெரியாதாப்பா? பேசிக்கலா நீ ரொம்ப நல்லவன்டா... உன்னை நான் நேத்து இன்னைக்கா பாக்கறேன்... அதனாலத்தான் நானா வந்து என் வாழ்க்கையை உன் கையில குடுத்துட்டேன்.. உன் மனசை நான் புண்படுத்தணும்ன்னு அந்தக் கேள்வியை நான் கேக்கலை." 

சீனுவின் கண்ணியமும், அவன் மனதின் நேர்மையும் அவன் வார்த்தைகளில் இருந்த உண்மையும் புரிந்ததும், தன் காதலனை பெருமிதத்துடன் பார்த்தாள் மீனா.

சீனு, மீனாவை மெல்ல நெருங்கி உட்க்கார்ந்து அவள் கையை தன் கையில் எடுத்து மென்மையாக வருட ஆரம்பித்தான். ஆனால் 'உண்மையிலேயே நீ என்னைக் காதலிக்கறயா?' மீனா தன்னிடம் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டாள் என்று அவனுக்கு விளங்காததால், திகைப்பின் மெல்லிய நிழல் அவன் முகத்தில் இன்னமும் இருந்தது. 

"அயாம் சாரி... சீனு... என் மனசுல தீடீர்ன்னு அந்தக் கேள்வி ஏன் தோணிச்சின்னு தெரியலை; என்னால அதை என் மனசுக்குள்ள புதைச்சுக்க முடியலை..." சீனுவின் கூர்மையான பார்வையை மீனாவால் எதிர்கொள்ள முடியாமல் சங்கடப்பட்டாள். 

"மீனா... நீ என்னை எந்த அளவுக்கு காதலிக்கறயோ, அந்த அளவுக்கு மேலேயே நானும் உன்னை உண்மையா காதலிக்கறேன், நேசிக்கறேன், ஆசைப்படறேன், விரும்பறேன், போதுமா?"

"ரொம்ப தேங்கஸ் சீனு..." மீனா அவன் கையில் தன் கையை கோத்துக்கொண்டாள். 

"கொஞ்சம் சிரிம்மா ..."

"ம்ம்ம்... அயாம் சாரீ சீனு.. இனிமே இந்த மாதிரி நான் உன் கிட்ட பேசமாட்டேன்.." மீனாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. 

"இட்ஸ் ஆல்ரைட்... மீனா..."

"அப்படீன்னா, நான் சொல்றதை மட்டும் நீ ஏன் கேக்கமாட்டேங்கறே?" மீனா, சீனுவின் விரல்களை நெட்டி முறித்துக்கொண்டிருந்தாள்.

"நீ சொல்லி நான் என்னக் கேக்கலை?" முகத்தில் ஆச்சரியத்துடன் கேட்டான், சீனு. 

"முதல்ல உன் கையில இருக்கற சிகரெட்டை விசிறி அடி... அதுக்கப்புறம் உண்மையைச் சொல்லு... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடீ, எங்க வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி, நீ சிகரெட் குடிச்சுட்டுத்தானே வந்தே?"

"மீனா.. உன் கிட்ட நான் எதுக்குப் பொய் சொல்லணும்? யெஸ்.. உன்னைப் பாக்க வர்றதுக்கு முன்னே ஒரு சிகரெட் புடிச்சேன்.."

சீனு சிரிக்க ஆரம்பித்தான். மீனா வந்ததிலிருந்தே முகத்தை 'உம்' மென்று தூக்கிக்கொண்டு, ஏன் எரிச்சலுடன் இருக்கிறாளென்று, அவனுக்கு அப்போதுதான் புரிந்தது. தன் கையிலிருந்த சிகரெட்டை ஒடித்து எறிந்தான். 

"மீனா... எங்க அத்தை இன்னைக்கு அருமையான வெண் பொங்கல், கூடவே மெது வடை, சட்னி... சாம்பார்ன்னு சூப்பரா ஒரு டிஃபன் பண்ணியிருந்தாங்க... அதை ஒரு புடி புடிச்சதும், ஒரு சிகரெட் புடிச்சா என்னா சுகம் அதுல கிடைக்கும் தெரியுமா... அதை என்ன மாதிரி சிகரெட் பிடிக்கற ஒருத்தனை கேட்டாத்தான் புரியும்..."

"சீனு அந்த சுகம் எனக்கு வேணாம்..."

"மீனா... அது அனுபவிச்சாத்தான் புரியும்... ஆனா அந்த சிகரெட் வாசனை உனக்கு பிடிக்கலை... ஆல்ரைட்... அயாம் சாரி... நீ அந்த சிகரெட் நாத்தத்தை சகிச்சிக்கணும்ன்னு நான் சொல்லலே.."

"சீனு ஒரு விஷயத்தை நீ ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கறே? சிகரெட் ஸ்மெல் எனக்கு சுத்தமா பிடிக்கலை. நீ இன்னைக்கு போட்டுகிட்டு இருக்கற இந்த டார்க் ப்ளு ஜீன்ஸ்ல, வெள்ளை புல் ஹேண்ட் சட்டையில, ரொம்ப ஹேண்ட்சம்மா இருக்கே... ஒரு வாரம் கழிச்சி உன்னை என் வீட்டுலப் பாத்ததும், உன்னை அப்படியே கட்டிப்புடிச்சி கிஸ் அடிக்கணும்ன்னு என் மனசு துடிச்சுது..." 

"சரிடீ.. நீ குடுக்கறதை குடு... ஒரு முத்தத்துக்காகத்தான் இவ்வளவு நேரமா நான் கெடந்து தவிக்கறேன்.. நீயே கொடுக்கறேன்னா நான் வேணாம்ன்னா சொல்லப் போறேன்..?" முகத்தில் அசட்டுச் சிரிப்புடன், சீனு அவள் முகத்தை தன் புறம் திருப்பினான். தன் கையை அவள் தோளில் போட்டு தன்னுடன் சேர்த்தணைத்துக்கொண்டான். 

"கையை எடு என் மேலேருந்து... அது அப்ப; இப்ப உன்னைப்பாத்தாலே எனக்கு எரிச்சல்தான் வருது...!" மீனா அவன் கையை உதறிவிட்டு நகர்ந்து உட்க்கார்ந்தாள். 

"மீனா, மனசுல இருக்கற ஆசையை எப்பவும் உடனே தீத்துக்கணும்டீ...பென்டிங்க் வெக்கக்கூடாது."

"என்னை போடீ... வாடீன்னு பேசறதை முதல்ல நீ நிறுத்து..."

"கோச்சுக்காதடீ செல்லா..." சீனு மேலும் வழிந்தான்.

"என் ஆசையை நீ மதிச்சாத்தானே?"

"உன் ஆசையை மதிக்கவேதான்... உன் முகத்தை என் பக்கம் திருப்பி, என் உதட்டை உனக்கு காமிச்சேன்..." அவன் சினிமாவில் நக்கலடிக்கும் சத்தியராஜாக மாறினான். 

"சனியனே... நான் அதைச் சொல்லலே?"

"பின்னே?" சீனு மீனாவின் இடுப்பை தன் கையால் வளைத்து தன்னை நோக்கி இழுத்தான். 



"புரியாத மாதிரி பேசாதே... உன் வாயிலேருந்து வர்ற சிகரெட் நாத்தத்தால, நீ என் கிட்ட வந்தாலே, எனக்கு கொமட்டிக்கிட்டு வாந்தி வருது... அப்புறம் எப்படி நான் உன்னை மனசார, ஆசையா உன் வாயில கிஸ் பண்ண முடியும்?" 


"சீனுவாசா, நம்ம கல்சர்ல, மிடில் கிளாஸ் சூழ்நிலையில உழல்ற பாதி பொண்ணுங்களுக்கு சிகரெட் ஸ்மெல் புடிக்காதுடா... ஒரு நாளைக்கு நீயும் ஆசையா ஒரு பொண்ணு பக்கத்துல நெருக்கமா போவே; அவ மூஞ்சை திருப்பிக்கிட்டு தள்ளி நின்னான்னா, அந்த நேரத்துல அந்த உதாசீனத்தை உன்னால தாங்க முடியாதுடா..."

சீனுவின் மனதில் தன் அத்தை உஷா, வெகு நாட்களுக்கு முன், பட்டும் படாமல், இலை மறைவு காய் மறைவாக, சொன்னது சட்டென அவன் நினைவுக்கு வந்தது. 



No comments:

Post a Comment