Pages

Saturday, 16 August 2014

கனியும் ஒரு காதல்... 1


காலை மணி 9.00... அவசர அவசரமாய் ஆபீஸ்க்குள் நுழைந்தான் மோகன் கம்யூட்டர் ஆன் பண்ணி... விட்டு ரெஸ்ட் ரூமுக்குள் புகுந்தான்... அதற்கு முன் ஒரு சின்ன முன்னோட்டம்.... மோகனை பற்றி..... 27 வயது... அழகன் என்று சொல்லாவிட்டாலும் ஓரளவு அந்த வயதுக்கே உரிய துடிப்பு... சுறு சுறுப்பு.....இந்த பன்னாட்டு கம்பனிக்கு வந்து ஒரு மாதம் தான் ஆகிறது....அதற்கு முன் வேறு கம்பனியில் ஒரு 5 வருட அனுப்வம்...அதனால் கிடைத்த வாய்பு இந்த கம்பனியில் மானேஜர்.... கமர்சியல்... ம்ம்ம் பேரு தான் மேனஜர்... ஆனா எல்லா உதவியாளர் வேலயும் பார்க்க வெண்டும் இன்னும் ஒரு ஆறு மாதம்.... இது ப்ரொபெசன்... பீரியட்... அப்புரம் அப்ப்ரைசல்... அப்புரம் சம்பள உயர்வு.. பதவி உயர்வு. இத்யாதி இத்யாதி...இப்போதைக்கு இது போதும்.....

மோகன் திரும்பி வந்தான் கம்ப்யூட்டர்.. ஆன் ஆகி இருந்தது....சட சட வென்று... யாகூ மெசன்சர் லாகின் பண்ணினான்... அவன் பொழுது போக்கு சாட்.... நிறைய ரெக்வெஸ்ட் கொடுப்பான்... எதிர் பார்ப்பான்... சில வரும் சில வராது.... அப்படித்தான் இன்றும்.... டிங்.. சத்தம்... அட யாரோ அவனது அழைப்பை ஏற்று ஆக்சப் பண்ணி ... பெயர்.. மின்னியது மஞ்சளாய் ஹர்சினி.... பெண்.... முதல் வாசகம் ஹாய்..... ( எவன் கண்டு பிடிச்சான் ) அவனும் ஹாய்.. அறிமுக படலம். மொத்ததில். தெரிந்தது இவ்வளவு தான்... அவள் பெயர் ஹர்சினி...( புனைப் பெயராக கூட இருக்கலாம் ) வயது 29..( ம்ம் இப்ப எல்லாம் 40 கூட 20 ந்னு சொல்லுது இதுக்கு கொஞ்சம் உண்மையாக கூட இருக்கலாம் ) கல்யாணம் ஆகி விட்டது.... ஒரு குழந்தை... இருப்பது ( இது கூட உண்மை தானோ ) இருப்பது புனே... ( அட இங்க அமிஞ்ச்கரையில் இருந்துக்கிட்டு அட்லாண்டா வில் இருக்கிறேன் என்று புருடா விடுபர்கள் மத்தியில் நான் இந்தியாவில் இருக்கிறென் என்று பாதி உண்மை சொல்லி இருக்கிறாள் ) அவளை நான் பெயர் சொல்லி கூப்பிடலாம் என் சொல்லி விட்டு பை ஆப் லன்... மோகனுக்கு... காலையில் வந்ததும் இது தான் வேலை...யாரிடமாவது கடலை போட வேண்டும்... கொஞ்ச நேரம்...தான்.. அப்புறம் 9.30 ஆபிஸ் களை கட்ட ஆரம்பித்து விடும்....வேலைப்பளு கண்னைக் கட்டும்.....9.30.....எல்லோரும் வந்தாகி விட்டது... முன் காபினைப் பார்த்தான்... அவள் அவன் சீனியர் ...இன்னும் வரவில்லை.... மல்லிகையின் மனம் குப் பென்று வீச... வருகிறாள்... அவள் ... அவன் சீனியர்... அகிலா..... திரும்பிப் பார்த்தான் குமார்... அப்சரஸ் பாத்திருக்கீங்களா... அது மாதிரி.... எவண்டா இவளை பெத்தான் பெத்தான்... என்று பாட வைக்கும் அழகு... பதுமை... எல்லாம் அளவாய் அழகாய், அவ அப்பன் கிட்ட போய் கேக்கனும் இவளை பெத்தீங்களா இல்லை உக்காந்து செய்ஜீங்களான்னு...... மோகன் அவளைப் பார்த்து குட் மார்னிங்க் சொல்ல... ஒரு புன் முருவலை தெளித்து விட்டு அவள் காபினில் நுழைந்தாள் அகிலா... காபின் என்றால் அறை எல்லாம் கிடையாது அவர் அவருக்கு ஒரு பே ( பிரிவு). பஸ் நிக்கிற மாதிரி.. கொஞ்சம் உறக்க பேசினால் நாலவது சீட்ல இருக்குறவன் முறைப்பான். எவண்டா இவன் பட்டிகாட்டான்னு. சீனியர் என்றால் ஆபிஸில் மட்டும் தான்.. வயது என்னமோ 24 இருக்கும்... இந்த ஆபிஸில் என்னைப் பொறுத்தவரை அவள் சீனியர்.. வந்த அன்றே சொல்லி விட்டாள்..நீங்க என்ன விட வயது அதிகம்.. தயங்காம என்ன பெயர் சொல்லி கூப்பிடலாம்... அனுமதி கொடுத்து விட்டாள் ...காபினில் இருந்து எட்டி பார்த்து.. "மோகன்.. அந்த புது கம்பனி கோட் செக் பன்னி இன்னிக்கு அவங்களுக்கு... பேமண்ட் அக்கவுண்ட்ஸ்ல சொல்லி அரேஞ் பண்னிடுங்க...." சொல்லி விட்டு அவள் வேலைய கவனிக்க ஆரம்பித்தாள்.... கொஞ்ச நேரத்தில்... அவனது பெர்சனல் மொபைல் போன் டிங்க் என்று சொல்ல மெஸஜ். படித்தான்...

.".ஐ அம் ஆன் லைன் "- ஈஸ்வரி .. மின்னியது....ஆகா.. இது ஒரு பெண்.... இப்பத்தான் கொஞ்ச நாளா..... அவள் ஆன் லன் ல வந்ததும் ஒரு வெப்...ல இருந்து ஒரு குறுந்தகவல் வரும்... பெயர் இருக்கும் ஆனால் மொபைல் நம்பர் இருக்காது....மோகன் சாட்ல அவன் நம்பைரைக் கொடுத்து வைத்திருந்தான்..... மெஸஞ்சர் ஒபன் பண்ண.. மஞ்சள் கலரில் மின்னினாள் ஈ ஏ எஸ்.... ( இவன் வைத்துக் கொண்டது )..... வழக்கமாய் பேச ஆரம்பிக்க... கொஞ்ச நேரத்தில் எம் டி அழைக்க.. ஆப் பன்னிட்டு. அவரை பார்க்க....போய் விட்டான்..... ஒரு மணி நேரம் கழித்து... வந்து வேலையில் மூழ்கியவன் ஈஸ்வரியை சாட்டில் இருந்ததை மறந்து போனான்..... மதியம் சாப்பாட்டு நேரம்... பொதுவா...பியூன் வாங்கி வரும் சாம்பார் சாதம் தான் அதை சாப்பிட்டு கொண்டே.. மெசஞ்சரை ஓபன் பண்ண... ஆப் லன் மெஸ்ஜ்... மின்னியது... ஈஸ்வரி தான்... திட்டி இருந்தாள்... உனக்கு அறிவே இல்லை... முட்டாள்... என்ன இன்சல்ட் பண்னுற... நான் என்ன வேலை இல்லாமல் உன்னை கூப்பிடுறேனா... அது இது என்று ஏகத்துக்கும்.....அட இது என்னடா வம்பு.. நினைத்த மோகன்... மெல்ல நிலையை விளக்கி.. அதற்கு பதில் ஆப் ல்ன் நில் கொடுத்த படி.... சாப்பிட்டான்... கை கழுவி வந்தவன்... அகிலா சொன்ன வேலைய முடிக்க.. அவள் காபினில் நுழைந்து..பைல் எடுத்தவன் அவள் கம்யூட்டர் மானிடரை பார்த்தவன் திகைத்தான்.... மெசஞ்சர் ஓபென் ஆகி இருந்தது... கீழு டேப் பாரில்... பி கே எம்... என மின்ன.....ஆவலில் அதை கிளிக் செய்ய... விரிந்தது மெசஜ்.... மோகன் சற்று முன் கொடுத்த... அத்தனை மெசஸ்ஜ்.....அதில்...அப்படியே..... அதிர்ந்தான் குமார்.... அகிலா... இவளா ஈஸ்வரி.... சிங்கப்பூரில் இருப்பதாக சொன்னாளே... புருடாவா.... தில்லாங்கடி வேலையா...????????? பதை பதைப்புடன்.. வந்து அமர்ந்தான் குமார்... இங்கு வருவதற்கு முன்பே ஈஸ்வரியை சாட்ல தெரியும்.... பழைய போன் நம்பர்.. இங்கு வரும் போது புது நம்பர் கொடுத்திருந்தான்... அவன் மொபைல் டுயல் சிம், அதுனால அவளுக்கு அவனைத் தெரியலை. சாட்ல மீண்டும் ஓபன் பண்ணி.. ... "நீ ரெம்ப அழகுன்னு " ஒரு மெஸ்சஜ் கொடுத்தான்..... பின்னர் ஆப் பன்னிட்டான்.... மாலை 5.30க் கெல்லாம் டான்னு கிளம்பிடுவா.. அகிலா... அது போல் கிளம்பியவள். இன்னும் இருநத மோகனைப்பாத்து... " என்ன மோகன் கிளம்பலை " "இல்லை.. கொஞ்சம் வேலை அந்த கொட்டேசன் அக்கவுண்ட்ஸ்ல ல இன்னும் பணம் ரிலீஸ் பண்ணல.. அது தான் கொஞ்சம் வெயிட் பண்ணி... அனுபிட்டு கிளம்பலாமுன்னு." "சரி வரென்... அவள் நடையில் என்றும் இல்லாமல் ஒரு துள்ளல் இருந்ததை கவனித்தான்..... மெசஜ் பார்திருப்பாளோ... அது தானோ.... குழம்பினான் மோகன்.....மீண்டும் அக்கவுண்ட்ஸ் போய் ஆன் லன்ல பணத்த கட்ட வைச்சு.. திரும்ப மணி 7.00 ஆகி இருந்தது வழக்கம் போல்... சாட்ல மீண்டும் ஓபன் பண்ணி... பார்த்தவன் துள்ளினான்.....பதில் வந்திருந்தது..... ". போடா.... சீசீ.. நீ ரெம்ப மொசம்......" பதில் போட்டான் . " உண்மையிலேயே நீ அழகு தான் டி " கம்யூட்டரை ஆப் பன்னிட்டு கிளம்பினான்... சந்தோசத் துள்ளலுடன்.. வீடு ...மேடவாக்கம்... நண்பர்களுடன் தங்கிருந்தான்.. பிளாட் தான்..ஆனாலும் வசதியாக இருந்தது.. இறங்கிவுடன் பார்த்தான் ஒரு மெசஜ்.... மொபைலில்.. அவள் தான்.. " பொறுக்கி..." கொஞ்சம் முகம் வாடியது மோகனுக்கு... இன்னொறு மெசஜ்... "ஆன் லன் ல இருக்கேன் " லிப்டுக்கு காத்திராமல் நாலு படியாய் தாவி ஏறி.. ரூமைத்திறந்து கம்யூட்டர் ஆன் பண்ண.... மெஸஞ்சரில் ... " பொறுக்கி....": " நான் அழகில்லை...." " நான் சுமாரா பல்லு எத்தி போய் இருப்பேன்...." " என்னப் போய் அழகுன்னு சொல்லுற நீ குருடன் தான்..." ஆப் லைன்லில் வந்த மெஸஜ்....மெசஞ்சர பாத்தா அவ ஆப் லன்ல இருக்கானு காட்டுது... அடச்சே... பாத்ரூம் போய்டு வந்தான்.... வரதுக்குள்ள ஆப் லன்ல போய்டா.....திருப்பி மெசஜ் அடித்தான்..... " நீங்கள் அழகு தான்....." " நீங்கள் சொன்னது போல் நீங்கள் ஹதிராபாத்தில் இல்லை... நீங்கள் சென்னை தான்..." " இன்று நீங்கள் அந்த நீல நிறச் சேலையில்...தலையில் பூவோடு... சூப்பர்..." "உங்க ஸ்கூட்டி கலர் சிவப்பு... இது போதுமா இன்னும் வேண்டுமா..." கொஞ்ச நெரம் பொறுத்திருந்து பார்த்தான்.. அவள் வரவில்லை... ஆப் பன்னிட்டு... சாப்பிட கிளம்பினான்.... மறு நாள் ஆபிஸ்ல் நடக்கப் போவது தெரியாமல்.... காலைல வழக்கம் போல் ஆபிஸ் வந்ததும்.. சாட் ஓபென் பண்ணி பார்த்தான்.. ம்ம் ம்ம்ம்ம் ஒன்னும் மெஸ்ஜ் இல்லை... என்ன ஆனாள் இவள் இன்னும் வரவில்லை..கொஞ்ச நேரத்தில் மிகவும் பதட்டமாக வந்தாள் அகிலா.. "மோகன்.. நேத்து கொடுத்த Quote that japan company, is that money paid yesterday... பதட்டமாய் கேட்டாள்.... "ம்ம்ம் நேத்து முடிச்சிட்டு தான் போனேன்.. ஏன்... 5.00 மனிக்கு ப்ரொசஸ் ஆகி...அவங்க கன்ஃபிர்ம் பன்னிடாங்க ஏன் அகிலா... எதாவது ப்ரொப்ஸ்.... " "Oh thank god.. நான் முடிச்சிட்டு போயிருக்கனும்... ஏதோ ஒரு ஞாபத்துல போய்டேன்..போகலன்னா என் வேலை காலிடா...." என்ன சொல்லுர... "ஆமா மோகன் இன்னிக்கு டாலர் ரேட் 5 ரூபா ஏறிடுச்சு... கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் போயிருக்கும்... நல்ல வேளை நீ முடிச்சிட்ட..இல்லைன்னா நான் காலிடா.. " "நான் தான பணணினேன்... உன்ன எதுக்கு ...." "இல்லை மோகன் நீ தப்பு பண்ணினாலும் நான் தான் அதுக்கு பலி ஆகனும்.. தாங்க்ஸ் மோகன்.. " இடையில் M.D. வந்தார்.. GOOD JOB.. AKILA... 2 CR... IN KITTY.. GOOD JOB KEEP IT UP... மோகனுக்கு விளங்கவில்லை..... அவர் போனவுடன் கேட்டான்.. என்ன அகிலா உன்னை குட்டின்னுட்டு போறார்.... "ஹைய் அவனை பார்த்து முறைத்தவள்.. "அது குட்டி இல்லை.. கிட்டி... அப்படீன்னா.. சேவிங்க்ஸ் ந்னு அர்த்தம்....." இன்னிக்கு சாயுங்காலம் உனக்கு A 2 B ல ட்ரீட் உனக்கு..... அது என்ன A 2 B.... நீ அம்மாஞ்சியா... ஒன்னும் தெரியலை... அடையார் ஆனந்த பவன்..ல டிரீட் உனக்கு.. நான் தரென்.. அவள் குரலில் மகிழ்ச்சி... பொங்கியபடி.... மோகனுக்கு வானில் பறப்பது போல் இருந்தது... மோகனுக்கு மனசு பறந்தது.. இன்னிக்கு சொல்லிடலாமா... அது நான் தான் என்று... சொல்லிட வேண்டியது தான்... மாலை வழக்கம் போல் 5.30 க்கு கிளம்பினாள் அகிலா, "என்ன மோகன் கிளம்பலாமா..." "ம்ம் இதோ வந்திட்டேன்....." அன்று இருந்த வேலை பழுவில் அவன் மெசஜ்ஸ்ர் ஓபன் பண்ணவே இல்லை.. அவன் எண்ணம் முழுவதும், மாலை 5.30 லிருந்த்து...

இப்ப ஓபன் பண்ணிலால் இவளுக்கு தெரிந்து விடும்.. அப்படியே விட்டு விட்டான்...இரவு பாத்துக்கலாம்னு... அங்க போனா.. ஏதோ திருவிழா கூட்டம் மாதிரி பாவிகளா திங்கறதுக்கு இப்படியா விழுவாங்க என்னமோ ஓசில கொடுக்கற மாதிரி, அடிச்சு பிடிச்சு இடத்த எப்ப பிடிக்க இந்த கூட்டத்தில எப்படி அவ கிட்ட பேச . மனசு அலை பாய்ந்தது மோகனுக்கு. "என்ன மோகன் வந்ததில் இருந்து பாக்குரேன் அப்படி என்ன யோசனை, காசு நான் கொடுக்கிறென் எம் டி. 1000/- ரூபாய் கொடுத்திருக்கார்" "என்னது.." "ஆமாம்டா.. நான் எம்.டி கிட்ட சொல்லிட்டேன் இதுக்கெல்லாம் காரணம் நீ தான்னு..." "ஏன் சொன்ன.." "இல்லை நான் அத செய்யலை நீதான் அத செஞ்ச... சோ த க்ரெடிட் ஈஸ் யுவர்ஸ்...." "அதனால் என்ன நீ தான இன்ஸ்டரட் பன்னின..."" "நோடா இம்பிலிமெண்ட்டேசன் ... அது மேட்டர்ஸ்...நீயும் போயிருக்கலாம்ல... இருந்து முடிச்சிட்டு போனதனால் தான இந்த லாபம் கம்பனிக்கு..." "சரி அப்ப நான் ஒன்னு சொல்லவா..." "என்ன" "இங்க வேண்டாம் வா காபி ஷாப்க்கு போயிடலாம்.. ஒரு பர்ஜர் ஐஸ் கிரீம்... காபி கலக்கிடுவோம்..." "என்ன விளையாடுரியா... 1000 தான் இருக்கு.. அங்க போனா பழுத்திரும்.." "எனக்கு தான ட்ரீட் " "ஆமா" "அப்ப வா என் கூட... " "உன் கிட்ட பேச முடியாதுப்பா.. வா போகலாம்..." அவள் அவனுடன் இணைந்து நடந்தாள்... அருகில் இருந்த காபி ஷாப்பிற்கு. ஓரமாக இடம் பிடித்து அமர்ந்தாள்.. அவன் சென்று ஆர்டர் செய்து விட்டு.. அவள் எதிரே அமர்ந்தான். "இன்னிக்கு என்ன ஒரே சந்தோசமா இருக்கறா மாதிரி இருக்கு..." "ஆமா.. இருக்கு சந்தோசமா.." "இதுக்கா இவ்வளவு சந்தோசம்...." "இல்லை மோகன்.. அது வேற.." "ம்ம்ம்ம் இன்னிக்கு நீ ரெம்ப அழகா இருக்கிற மாதிரி எனக்கு தெரியுது..." "என்ன உளர்ற... நான் ட்ரீட் கொடுக்கிறது காபி மட்டும் தான்... நீ என்னமோ ட்ரிங்கஸ் அடிச்சமாதிரி உளர்ற.." "இல்லை அகிலா.. இன்னிக்கு கொஞ்சம் வித்தியாசமா.." "என்ன வித்தியாசம்... சொல்லு.." "சொல்லிடுவேன்..." "சொல்லு மோகன்..." "உன் ட்ரெஸ்... எப்பவுமே..நீ டார்க் கலர்ல சேலை மேட்சிங்கா அதே டார்க் கலர்ல பிளவுஸ் போடுவ.." "ம்ம்ம்ம்.." "இன்னிக்கு அப்படி இல்லை... லைட் கலர் சேலை காண்டிராஸ்ட்டா... பிளவுஸ்..." "இல்லையே நான் எப்பவாவது இப்படி போடுவது உண்டு...." "அப்புறம்.... ம்ம்ம்... இல்லை வேன்டாம்...." "என்ன வேன்டாம்.. சொல்லு..." "இல்லை வேனாம்.. இரு நான் போய் நம்ம அயிட்டங்களை எடுத்திட்டு வந்திடுறேன்...." மோகன் போய் ரெடியான அனைத்தையும் எடுத்து வந்தான்..ஒரு ப்ர்ஜர்.. ஒரு கேக் இரண்டு காபி... "என்ன மோகன் எல்லாம் ஒன்னு ஒன்னு வாங்கீருக்க..." "இல்லை எப்பவுமே வரைட்டி வரட்டியா சாப்பிடனும் அது தான் எனக்கு பிடிக்கும்... இப்ப ரெண்டு பர்ஜர் வாங்கினேன்னா ரெண்டு பேருமே அத தான் சாப்பிடனும்.. இப்ப இதுல ஒன்னு அதுல ஒன்னுன்ன்னா ரெண்டு அயிட்டம் ஒரே நெரத்துல சாப்பிட்ட மாத்ரி எப்படி...." "உனக்கு தான்பா இப்படி எல்லாம் யோசனை வருது.. வடிவேலு சொன்ன மாதிரி உக்காந்து யோசிப்பையா இதெல்லாம்..." சொல்லி சிரித்தாள் "ஆனா இந்த கான்சப்ட் எனக்கு பிடிச்சிருக்கு... வரைட்டி.. ம்ம்ம் குட்.. உன் கிட்ட சரக்கு இருக்கு...." "சொல்லு மோகன் ஏதோ அப்ப சொன்ன நிறுத்திட்ட..." "ம்ம்ம் கோவிக்காம கேட்டா சொல்லுவேன்..." "சொல்லு அத அப்புறமா யோசிக்கலாம்... வெட்டிய பர்ஜரை ஒரு பகுதிய எடுத்து கடித்தபடி..." " உன்ன யாராவது இதுவரை புரொபோஸ் பன்னி இருக்காங்களா?..." " வாட் நோ நோப்....." மெசஞ்சர்ல சாட்ல சொல்லுற மாதிரி... தத்தி தத்தி விழுந்தன வார்த்தைகள்.. ஆனால் தடுமாறியது உதடு... "என்ன ஏதோ மெசஞ்சர்ல மெசஜ் வந்த மாதிரி சொல்லுரீங்க...." அவள் முகம் சிவந்தது.. குங்குமமாய்... "இல்லையே.. இது வரை இல்லை.....ஆமா நீ ஏன் அத கேட்கிற...." "இல்லை சும்மா கேட்டேன்'" ( மனசை அடக்கிக் கொண்டான் ) மடையா இது சொல்லும் நேரம் இது இல்லை,விதைய இப்பதானடா போட்ட, அதுக்கு முன்ன அருவடைக்கு அருவாளோட போனா எப்படிடா மனசு இடித்தது...மனதை அடக்கி கொண்டான் மோகன்.. இப்ப வேணாம்.. அப்புறம்.. இன்னொறு நாள்.... மாலை மணி 6.30 ஆகி விட்டது.. "மோகன் நான் கிளம்பபுரேன்.. இந்தா பில்லுக்கு உள்ள காசு.." அவனிடம் அவள் 1000 ரூபாய் நோட்டை நீட்ட... மோகன் மறுத்தான்... " அகிலா என்னங்க இது நமக்குள்ள பார்மாலிட்டீஸ் வேனாம்.. இன்னொறு நாள் நீங்க பே பன்னுங்க..." அவளை இன்னொறு நாள் வரவழைக்க வைத்த தந்திரம் அது... எலி பொறில மாட்டுமா இல்லையா இப்ப தெரிஞ்ச்டும்.... அவள் மோகனை உற்றுப் பார்த்தாள்.. "என்ன இன்னொறு நாளா...சான்ஸே இல்லை... ஆனா " "என்ன ஆனா.." ":உனக்குத் தெரியுமா... நம்ம கம்பனில இருந்து மதுரைக்கு போறாங்க...ஆல் இந்தியா டீலர்ஸ் மீட் அரேஞ் பன்னுராங்க... இந்த தடவை HR பாதி பொறுப்ப நம்ம தலைல கட்டிட்டான்... நீயும் வர... 15 நாள் இருக்கு இன்னும் " "மதுரைல எங்க..." " தி கேட்வே ஹோட்டல், பசுமைலை.... நல்ல இடம்... சின்ன மலை மேல 5 நட்சத்திரr ஹோட்டால்.... மதுரை முழுவதும் மண்டை காயிர மாதிரி வெயில் அடிச்சாலும் அங்க குளு குளுன்னு இருக்கும்... அப்படி ஒரு இடம்....அங்க இருந்து பார்த்தா மதுரை முழுவதும் தெரியும்...." ( தெரியாத நண்பர்கள் கூகுள் ல போட்டு பாருங்க.. சும்மா அப்படி ஒரு இடம்...) "நீங்க போயிருக்கீங்களா...." "ம்ம் ஒரு தடவை போயிருக்கேன்.. ஒரு மூனு வருசம் முன்னால.... இப்ப இந்த வருசம்....அப்படியே குற்றாலம் போனாலுன் போவாங்க என்ன அங்கிருந்து ஒரு 150 கி.மீ தான்.... இப்ப சீசன் வேற....செட்யூல் இன்னும் வரலை.. வந்ததும் சொல்லுறேன்.". மோகன் திகைத்தான்.. ஆகா..என்ன ஒரு அருமையான சான்ஸ்.. நல்ல வேளை இப்ப சொல்லடா சாமி....சொல்லி எதிர் மறையாக போயி.. அப்புரம் இந்த பொன்னான சான்ஸ் .. கிடைக்காதே.. 'ஆக்கப் பொறுத்தவன் ஆற பொறுக்கனும் நண்பா '... மனசு இடித்து சொல்லியது... பொறு பொறு பொறுத்தார் பூமி ஆழ்வார் பொறாதார் பொண்டாட்டி ஆழ்வார்... கல்லூரியில் படிக்கும் போது நண்பர்கள் சொல்லக் கேட்டது அவனுக்கு நினவு வந்தது... மோகன் பொறுக்க முடிவு செய்தான். அகிலா புறப்பட்டு விட்டாள்.. மோகன் அவள் போனதும் தன் பல்சரில் பறந்தான் வீட்டுக்கு.... அடித்து பிடித்து வந்து மெசஞ்ச்ர் ஓபன் பன்னினான்.. ஈஸ்வரி ... ஆப் லன் மெஸ்ஜ் கொடுத்திருந்தாள்... 'ஆமா நான் ஹதிராபாத்தில் இல்லை....' 'அப்ப இல்லை இப்ப சென்னையில் தான் இருக்கேன்...' "'வேற எவளயோ பாத்திட்டு நான்னு நினக்கிறே...' ' பொறுக்கி அவ கிட்ட போய் அடி வாங்காத...' ' எனக்கு வண்டியே ஓட்ட தெரியாது ஸ்கூட்டி எப்படி ...' ' காமாலை கன்னுக்கு பாக்கிறது எல்லாம் மஞ்சளாத் தான் தெரியும்... பாத்து போ....' ' அப்புரம் நான் சுமாரா இருப்பேன் பை...' குதித்தான் மோகன்.. ஆக அவ சென்னையில் இருப்பதை ஒத்துக் கொள்கிறாள்.. மோகன் பதில் அடித்தான் ' நீங்க அழகாவே இருக்கீங்க...." "அது யாரு உங்ககூடவே ஒரு தடியன்...உங்க கூட ஒட்டிக்கிட்டு வந்தான் A2B ல....' 'உங்க லவ்வரா... ம்ம்ம்ம் ஆள் சுமார்ட்டா தான் இருக்கான்(ர்)..' 'எனக்கு பொறாமையா இருக்கு...அவன பாத்தா' 'ஏங்க ஆன் லன்லயே வர மாட்டீங்களா..' அனுப்பிவிட்டு அதை ஆன் லன்லயே வச்சிட்டான் மோகன்.... அவள் வரவில்லை... ஆப் லைன் தான் காட்டியது... கொஞ்ச நேரத்தில் ஹர்சினி ஆன் லன் ல வரவும்.. இவளை ஆப் லைன்ல போட்டுட்டு ஹர்சினியிடம் சாட் பண்ண தொடங்கினான்.... ஒரு 1/2 மணி நேரம் ஓடியது... திடீரென்று.. ஈஸ்வரி...யிடம் இருந்து மெசஸ்ஜ்.... ஆனால் அவள் பெயரில் ஆப் லன் தான் காட்டியது.. கள்ளி என்ன ஆப் லன்ல போட்டுட்டு அங்க யாரிடமோ கதை பேசுகிறாள்.. மெசஸ்ஜ் பாத்து பதில் போடுறாள்... 'நான் ஆன் லன்ல இருந்தா என்ன ஆப் லன்ல இருந்தா என்ன...' 'உனக்கு மெஸஜ் வருதா அத மட்டும் பாரு...' 'நான் எங்கயும் போகலை வீட்ல தான் இருந்தேன் ' 'நீ யாரிகிட்டயோ நல்லா அடி வாங்க போறப்பா பாத்து உடம்பு ஜாக்கிறதை..' அடிப்பாவி இப்படியா புழுகுவீங்க .. ம்ம்ம் ... எல்லாரும் இப்படித்தானோ....மோகன் அதற்கு பதில் போடவில்லை... போட்டால் அவள் புரிந்து கொள்வாள்... நீயும் அப்படித்தானே என்று திருப்பிக் கேட்டால்.....அனைத்துவிட்டு தூங்க சென்றான்.... நாட்கள் பறந்தன... ஒரு மீட்டிங்க அதுவும் ஆல் இந்தியா ல்வெல்ல பன்னுரது எவ்வளவு கஷ்டம்னு அப்பதான் மோகனுக்கு புரிந்தது....ஒரு பெரிய லிஸ்ட் எடுத்து அவங்க கம்பனியுடன் வைத்த turnover.. மற்றும் கொள்முதல்.. அதை சரி செய்து லிஸ்ட் கொடுத்து அதுல மாற்றம், அப்புரன் செக்;லிஸ்ட்... அப்புறம் அது முடிவடைந்து இறுதி வடிவம் கொடுக்க... இன்விடேசன் அடிக்க... யார் யார் வராங்க அவங்களுக்கு மெயில் அனுப்பி கன்ப்ர்ம் பண்ணி, ரூம் புக் பண்ணி... மெனு செக் பண்ணி என்ன என்ன புராடக்ட் கொண்டு போகனும் லிஸ்ட்.... அதுக்கு தேவையான மற்ற உப கரணங்கள்... ete..etc... ஒரு வாரம் பெண்டு நிமித்தி விட்டது மோகனுக்கு.. இதற்கிடையில் சாட்டாவது ஒன்னாவது.. எல்லாம் பரன்ல தூக்கி போட்டாச்சு...

அந்த நாளும் வந்தது.....அது ஒரு வியாழக்கிழமை.... இரவு 9.30 பாண்டியன் எக்ஸ்பிரஸ்... எல்லாருக்கு 3 டயர் ஏ சி.. கோச்...எல்லாம் நம்ம கிட்டத்தட்ட 60 பேர்... மீதம் உள்ள சிலர் நேரடியாக மதுரை வருவதாக சொல்லி இருந்தனர்...சிலர் மறு நாள் மாலை நேரடியாக ஹோட்டலுக்கு வருவதாக சொல்லி விட்டனர்.. அகிலா தன் பேக்கை தூக்கி கொண்டு வர பின்னால் பியூன் ஒரு பெரிய ட்ராலி பேக்க இழுத்து கொண்டு வந்தான்..அகிலா அந்த டிராலி பேக்கை கொடுத்து இது உன் பொறுப்பு என்றாள்.. இழுத்து பார்த்தான் செம கனம்... என்ன அகிலா இது பொனம் மாதிரி கனக்குது... ஆமா அத ரெம்ப அடிச்சாலும் பொனம் தான்... என்னது... ஆமாடா... ஃபுல்லா பாட்டில் எல்லாம் ஃபாரின் அயிட்டம்...எம் டி கொடுத்து வுட்டார்... பொறுப்பா அங்க கொண்டு வந்துடு.. மவனே இடைலை யாராவது கைய வச்சா.. அவ்வளவு தான்.. நீ குடிப்பியா.. மோகன்.. மண்டைய ஆட்டினான்.. என்ன ஒன்னு ஆமான்னு ஆட்டு இல்லை இல்லைன்னு ஆட்டு பொத்தம் பொதுவா ஆட்டினா என்ன அர்த்தம்... இல்லை எப்பவவாவது.... சரி தான் பாலுக்கு பூனை காவல்... சிரித்தாள்... எல்லாரும் வந்தாச்சான்னு பாரு... டிக்கெட் இந்தா... சொல்லி விட்டு அவளுக்கு என்று இருந்த பெர்த்தில் போய் உட்கார்ந்து கொண்டாள்... அவளுடன் இன்னொருத்தி சேல்ஸ் ல உள்ளவ.. அவளுடன் இணைந்து கொண்டாள்... வண்டி கிளம்பியது... ம்ம்ம் செக்கிங்க் முடிந்து... பாண்டியன் செங்கல் பட்டு தாண்டியது.....இரவை கிழித்துக் கொண்டு... வந்தார் G.M. Sales... என்ன மோகன் சரக்கு எங்க என்றார்.. சார் அந்த டிராலில இருக்கு சார்.. போ மோகன் போய் ஒரு பாட்டில் எடுத்துட்டு வா.. மெல்ல கொண்டு வா சத்தம் போடாம ..ம்ம்ம் நான் வாசல் கிட்ட் இருக்கேன்... கதவை திறந்து வாஷ் பேசின் பக்கம் போய் நின்று கொண்டார்.... போனான் எடுத்தான் வந்தான்.. கையில் ஒரு BECCADY.... WHITE RUM... அவ்ர் கையில் கொடுத்தான்.. இரு மோகன் இதோ வந்துடுறென்.. மீண்டும் உள்ளே போனார்...மமோகன் வாஷ் பேசன் கிட்ட நிற்க... இப்பத்தான் சனி விளையாடியது.... ஏ சி கதவு திறந்தது.. வந்தவள்.. அகிலா... பாத்ரூம் போக வந்தவள் மாட்டிக் கொன்டான்... கையில் பாட்டில் ... முழித்தான்... நான்.. இல்ல.. ஜிம் ஜிம் உளரினான்... அவர் தான் .. உள்ள போயிருக்கார்..வர்ரார்... யாரு அவன் அந்த சொட்டை தலையனா... அடிக்கட்டும்... நீ மட்டும் அடிச்சே... அப்புறம் அவனை முறைத்த படி டாய்லெட் போக....மோகன் அவஸ்தையாய் நெழிந்தான். இது என்ன டா வம்பு... அவ அடிக்காதாங்க்றா...இவர் அடிங்கிறார்... என்ன பன்ன... ஏசி கதவு திறந்தது.. GM, AGM SALES, AGM A/C... மூனு பேர் வந்தனர்.... சூப்பர் சரக்கு மச்சி... எப்படிடா இது...அவர்களுக்குள்.. எல்லாம் நம்ம பையன் இருக்க நாம் ஏன் கவலைப்படனும்.. என்னக் காட்டி கண்னடிக்க அட பாவிகளா.. ஆபீச பொருத்த மட்டில் சேல்ஸ்... அக்கவுண்ட்ஸ்.. அடிச்சுகுவானுக.. இங்க வந்தா.. இப்படி குடிக்கரதுக்கு கூடி கும்மியடிக்கிறாங்க.... டாய்லட் கதவு திறந்தது.. அகிலா வெளிய வந்தாள்.. அவர்களைப் பார்த்தாள் என்ன சார் இன்னும் தூங்கலையா... இல்லம்மா கொஞ்சம் பேச வேண்டி இருக்குது.. அங்க எல்லாம் தூங்குறாங்க.. நீ போய் படு... நாங்க பேசிட்டு வறோம்.. அகிலா மோகனை முறைத்தவாறு அவனுக்கு கண்னால் எச்சரிக்கை விடுத்து விட்டு சென்றாள்.... சரி பாட்டில் இல்லை.. எப்படி அடிக்க போறங்க பார்போம்.. கொஞ்சம் நின்றான் மோகன்.... AGM வாட்டர் பாட்லை கொண்டு வந்திருந்தார்... அதில் முழுசும் தன்னீர்.. ஜி எம்... ரம் பாட்டிலை திறக்க.. மெல்ல்லிய வாசனை மூக்கைத்துளைத்தது.. அப்படியே கொஞ்சம் வார்யில் கவிழ்த்தார்... வாட்டர் பாட்டிலை திறந்து அதையும் தன் வார்யில் விட்டு வாயிலேயே கலந்து முழுங்கிட்டாட்.. எமகாதகன்....இவனுக நம்ம குடி மகன் களையும் மிஞ்சிடுவாங்க போல.... நினத்துக் கொண்டான்.... அப்புறம் தண்ணி பாட்டில்ல கொஞ்சம் நல்ல ஊத்தி கலக்கினானுக ரெண்டு பாட்டிலைய்ம் மாத்தி மாத்தி கலந்தானுக தன்னனி ரெடி பண்ணி ..அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.... வண்டி மேல் மருவத்தூர் தாண்டியது.... இரண்டு பாட்டிலும் மாறி மாறி கைமாற.. கொறிக்க ஒரு சிப்ஸ் பாக்கட் அத வச்சே ....வடிவேல் மாதிரி கைய நக்கல அவ்வளவு தான்... மற்றபடி அவனை விட மோசம்... வண்டி விழுப்புரம் நெருங்கியது மணி கிட்டத்தட்ட 12.45... ஸ்டேசன் வந்ததும் ஏ ஜீ எம் உடனே ஓடி போய் ஒரு 7 அப் 1.5 லிட் வாங்கி ஏறிக்கொள்ள...அதற்குள் ஒரு புல் பாட்டில் காலி... ஜி .ஏம் நாலைந்து கார வகை பாக்கட்டுகள்.... கையில் அடப் பாவிகளா... மேல் மருவத்தூரில் ஆரம்பித்து விழுப்புரம் வரதுக்குள்ள ஒரு பாட்டிலா.. பிரியா கொடுத்தால் பினாயிலயே குடிப்பானுக போலிருக்கே..... மோகன் இன்னோறு பாட்டில் எடுத்திட்டு வாப்பா..... பாண்டியன் மீண்டும் நகர ஆரம்பிக்க..... முழித்தான் மோகன்... எப்படி எடுக்க.... மறுபடியும் உள்ள போய் மெல்ல டிராலி திறந்து எடுத்து மூடி.. சத்தம் இல்லாமல் வர.. அட இது வோட்கா பாட்டில்.... ஸிம்ரனாஃப் ( SMIRANOFF) 1 Lr... "சார் இருட்ல தெரியல சார் இது வோட்கா சார்...." "பரவால்லைப்பா.. கொண்டா.. ரெண்டும் ஒன்னு தான்...." அதையும் கலந்தார்கள் 7 அப் உடன்... இப்ப தான் ரெண்டு பாட்டில் இருக்கே....மோகன் அவர்களுடன் நின்றான்.... "என்னே மோகன் நீ அடிக்க வே இல்லையே...." "இல்ல சார் பழக்கம் இல்லை.. நீங்க கேட்டீங்கன்னு தான் எடுத்து வந்தேன்...." "இல்லை மோகன்.. இது சும்மா நல்லா இருக்கும் அடித்து பார்.." சொல்லி விட்டு... 7 அப் பாட்டில மோகனிடம் கொடுக்க.. அவன் தயங்கிய படி வாங்க... ம்ம்ம் ஷியர் அப் மேன்... ஜி ம் அக்கவுன்ட்ஸ் சொல்ல வேத வாக்காய் எடுத்து அவன் வாய் அருகில் கொண்டு போக.... ஏ சி கதவு திறந்தது.... வந்தவள் .. சாட்சாத் அகிலா தான்....

மோகனை பார்தவள்.. ஜி எம் பார்த்தாள் ஓன்றும் சொல்லாமல் டாய்லெட் போனாள்.. அவள் போகும் வரை அமைதியாய் இருந்தவர்கள்... அவள் திரும்பி போன வுடன்.... ஜி எம் சேல்ஸ் சொன்னார்.". இவளுக்கு என்ன சுகர் இருக்கா இப்படி அடிக்கடி பாத்ரூம் போறா....." சொன்னவுடன் அனைவரும் சிரித்தனர்.. கொல்லென்று.... மோகனுகு வலித்தது.... ம்ம்ம் அவள் நான் குடிகிறேனான்னு செக் பண்ண வரா.. அத போய் இந்த கிழடுகள்... அவ மக வயசு இருக்கும் இப்படி சொல்லுதுகளே.. நினைததவன்... "சார் இத புடிங்க.. நான் ட்ராலி லாக் பண்னாம வந்திட்டேன்... வேற எவனாவது எடுத்து வச்சிக்கிட்டான்ன நாளைக்கு என் தலை தான் உருளும் " சொல்லி விட்டு ஏ சி திறந்து உள்ளே போனான்... அவன் எதிர் பார்த்த மாதிரியே.. அகிலா அங்க அவன் பெர்தில் உட்கார்ந்திருக்க..... அவள் அருகில் போய் " என்ன அகிலா தூங்கலையா... " "இல்லடா தூக்கம வரலை..." "ஏன்.. அதுக்கு என் பெர்த்ல வந்து உக்காந்து இருக்கீங்க..." "உன்னது தான் சைடு லோயர்.. போதுமா... குடிச்சியா.... அவங்க கூட..." அவள் குரலில் கலக்கம்... "இல்லை அகி நான் குடிக்கலை.... "அவன் அவளை அகி என்று சுருக்கி கூப்பிட்டது அவளுக்கு தெரிந்தும் அவன் அப்படி சொன்னதை அவள் பெரிசா எடுத்துக்கலை... "நம்ம ஸ்டாப் நாளக்கு எதுன்னாலும் நாம தான் பதில் சொல்லனும்... அது தான் அவங்க கூட இருக்கேன்..." "நீ சொன்ன பிறகு நான் குடிப்பேனா... குடிக்க மாட்டேன் அகிலா..." "இல்லை நாளைக்கு நிறைய வேலை இருக்குடா.. நீ இப்படி அவங்க கூட இருந்தா.. எப்படி நாளைக்கு வேலை செய்வ...." அவள் கேட்டதும் அவனுக்கு அவள் தன் மேல் கொண்டிருந்த அக்கரை வெளிப்பட்டது.... "இல்லை அகி நான் மேனஜ் பன்னிகிறேன்... நீ இனிமே இந்த பக்கம் வராதே.. அந்த பக்கம் போ......" சொல்லிட்டு விடு விடுவென்று கதவை நோக்கி நடந்தான்... மோகன்.... அகிலாக்கு அவன் சொன்னது பிடித்திருந்தது... தன்னை ஏதோ கிண்டல் பண்ணி பேசி இருக்கிறார்கள்.. அது தாங்காமல் அவன் உள்ள வந்து தன்னை சமாதானம் பண்ணி... திரும்ப போய்.... இரண்டு நாள் முன்னாள் .. அவள் பின்னோக்கி போனாள்... ஆபிஸ்... மோகன் சீட்டில் இல்லை.. ஒரு மிக முக்கியமான ரிப்போர்ட்... பாக்கனும் அது மோகன் கம்பூட்டர் ல இருக்கு.. பார்தாள்.. அவன் கம்புய்ட்டர ஓப்பன் பன்னியவள்.. அதிர்ந்தாள்.. மெஸஞ்சர் ஓபன் ஆகி அவள் ஐடி காட்டியது... அவள் அனுப்பிய மெஸஜ் எல்லாம்... அவன் ஐடி ல.....அதிர்ந்தவள்.. சுதாரித்தாள்... ஆக.. இவன் தான் அவன்... அவள் முகத்தில் மெல்லிய புன் முறுவல்.. படவா என் கிட்டயே வாஅ... உனக்கு மட்டும் தான் தெரியுமா.. அப்படி ஆக்ட் பண்ண.... நான் சாவித்திரி டா.. அத விட நல்லா ஆக்ட் கொடுப்பேன் பாக்குரியா... ம்ம்ம்ம் யோசித்தபடி வந்து தன் இருக்கையில் அமர்ந்தாள்.... ம்ம்ம்ம்ம்.... அது தான் இப்ப மனசில் ஓடியது.....மனசு அவளை கேள்வி கேட்டது....அவன் குடிக்க கூடாது .. ஏன் இப்படி அவனை நீ காதலிக்கிறாயா.. மனசு இடித்தது...... இல்லை அவன் என் அசிஸ்டண்ட்.... சோ வாட் அடிமை இல்லையே..... ஆனா அவன் குடிக்க கூடாது.... அப்ப அவனை நீ காதலிக்கிற அப்படித்தானே..... இல்லை அவனை புடிச்சிருக்கா..... ம்ம்ம்ம்ம் ஆமா.... இப்பவா இல்லை முன்னாடியேவா... இல்லை இப்பத்தான் கொஞ்ச நாளா...அவனை புடிக்க ஆரம்பிதிருக்கு.... ஏன்... தெரியலை.. ஆனா அவன் கூட பேச புடிக்குது... அவன் கூட சுத்த பிடிக்குது.... அப்ப அவனை நீ காதலிக்கிற... இல்லை..... இன்னும் இல்லை....அவனை புடிச்சிருக்கு.... என்ன இது அவனை புடிச்சிருக்கு ஆனா அவனை காதலிக்கலை.... என்ன இது.... அது தான் எனக்கும் தெரியலை..... அவனை புடிச்சிருக்க அவ்வளவு தான்... மனசு அவளிடம் சண்டை போட்டது........ அப்படியே அவன் பெர்த்தில் தூங்க ஆரம்பிததாள் அகிலா..... மோகன் திரும்பி வந்தான்.. அதற்குள் 1/4 பாட்டில் காலி... ம்ம்ம் அவர்கள் பேச தொடங்கினார்கள்...A/C GM பேச்சு வாக்கில் GM sales கிட்ட அவர் என்ன பண்னுரார்னு போட்டு வாங்க பாக்கிறார்..... சேல்ஸ் ஜி ம் அக்கவுண்ட்ஸ் ஜி எம் கிட்ட் வாய கிழருறாறு... இப்ப மோகனுக்கு ஒன்று நன்றாக புரிந்தது... ஒருத்தன் வாய ஒருத்தன் கிளரி.. அவனுக ப்ண்னுர கோல் மால் எல்லாம் அவனவன் வாயில வரவைக்க தான் இந்த் உத்தி.. இந்த கூட்டு குடி எல்லாம்... அடப்பாவிகளா.. இப்ப மட்டும் ஒரு கத்திய அவனவன் கையில கொடுத்து விட்டா தெரியும் சேதி... ஒருத்தன ஒருத்தன் குத்திகுவாங்க போல... ஆனா வாய் மட்டும் அழகா பேசி சிரிச்சு.. உலக மகா நடிப்புடா.. சாமி... திடீர்னு ஜிம் அக்கவுண்ட்ஸ்... நம்ம மோகன் இருக்கான்ல பா.. ஒரு நாள் என்ன நச்சு நச்சுன்னு படுத்தி எடுத்தான் அந்த இம்போர்ட்ர்க்கு எக்ஸேஜ் கட்ட சொல்லி நான் கூட அவன தப்ப நினைச்சேன் .. பையன் ஏதோ கட்டிங்க் வாங்கி... நம்மள படுத்திறானேன்னு... ஆனா பாருய்யா.... ஒரே நாள்ல 5 கோடி லாபம் சம்பாதிச்சு கொடுத்திட்டான்... ஒரு நயா பைசா செலவு இல்லாமல்..... மோகனுக்கு திக்கென்றது... அவர் நம்மை பாராட்டுகிறாரா.. இல்லை சேல்ஸ் ஜி எம் ம கிண்டல் பன்னுரார... நீயும் இருக்கியீனு... குத்தி காட்டுராறா.. புரியலை அவனுக்கு... சேல்ஸ்... ஏ ஜி எம்... இல்லை அக்கவுண்ட்ஸ்... அது அவனுக்கு ஒரு லக்... நாங்க லக் நம்பி போறது இல்லை... 1 ம் தேதில விதை போட்டாத்தான் 30ம் தேதி ஆர்டர் கிடைக்கும்... அப்புறம் தான் உங்களுக்கு டப்பு.. இல்லேன்னா நீங்க எப்படி அந்த பணத்த இம்போர்டருக்கு கொடுத்திருப்பீங்க...ம்ம்ம்.. பையன் மச்சக்காரன் தான்... சீனியர் வேற அவனை மிரட்டுரத பாத்தீங்கல்ல.... என்ன் சார்.. சொல்லுரீங்க சும்மா இருப்பா மோகன்.. அவ வந்தா... வந்து உன்ன க்ண்னை காட்டி குடிக்காத ந்னு சொன்னத எல்லாம் நான் கவனிச்சேன்.... என்ன உன் கிட்ட கவுந்திட்டாளா... இப்படி பச்சையா கேட்டவுடன் ஆடி போய்டான் மோகன்.... சார்... அவங்க என் கிட்ட ஆபிஸ்ல வச்சே சொல்லிட்டாங்க... நீ குடிக்கனும்னு தோனுச்சின்னா.. திரும்பி இங்க வந்து குடி நான் வாங்கித்தறென்... ஆனா டூர்ல குடிக்காத... ஏன்னா நாம தான் எல்லாத்தையும் ஆர்கனைஸ் பண்ணனும் சொன்னாங்க சார்.. அது தான் பார்த்திட்டு போறாங்க.. தப்பா நினைகாதீங்க சார்... இன்னும் இரண்டு மாசத்தில அப்ப்ரைஸல் இருக்கு.... அதுக்கு வேட்டு வச்சிடுவீங்க போல இருக்கு சார்.. நீங்க சொல்லுரது.... உடனே அக்கவுன்ட்ஸ்... மோகன் உனக்கு இங்கிரிமேண்ட் கன்ஃப்ர்ம்டா...... அடுத்த மாசமே.. வருது பார்....எம் டி சொல்லிட்டார்... உன் மெயில ஊருக்கு போன உடனே செக் பன்னு.... அவனை பார்த்து கண்ணடித்தார்.... பேசிக் கொன்டே பாட்டில வாயில் கவுத்திக் கொண்டார்... மணி 3.00 நெருங்கியது... தட தட வென்று சத்தம்.... காவேரி.. பாலத்தை கடக்கிறது பாண்டியன்.... அட திருச்சி வருது...

சார் திருச்சி வந்திருச்சு நான் போய் படுக்க போறென் சார்.... போப்பா.. போய் உன் சீனியர் மானத்த காப்பாத்து யாரோ கமண்ட் அடிக்க.. அவன் , அடப்பாவிகளா..ஏ ஸி டிக்கட் எடுத்துட்டு கக்கூஸ் பக்கம் நின்னு கிட்டு திருச்சி வரை.... தண்ணி....காசுடா.. காசு உங்க காசாயிருந்தால் செய்வீங்களா... அதுவும் தண்ணி அடிக்க... மனசுக்குள் இவனுகளை எஞ்சின் பக்கம் ஜெனரல் கம்பார்ட்மெடண்ட்ல போட்டு கூட்டிக்கிட்டு வந்திருக்கனும்.. கருவினான் மோகன்... அவன் படுக்கும் போது.. பாண்டியன் திருச்சியவிட்டு மெதுவா கிளம்பியது......

No comments:

Post a Comment