Pages

Saturday, 31 August 2013

விந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்!!!


இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் தான் காரணம். மேலும் கருவுறுதல் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் தான் இருக்கும். எனவே இந்த மாதிரி பிரச்சனை என்றதும் பெண்கள் மட்டும் நல்ல சரியான உணவுகளை உண்டால் மட்டும் போதாது, ஆண்களும் தான் ஒரு சில உணவுகள் மற்றும் செயல்களை மேற்கொள்ள வேண்டும்.

பொதுவாக இந்த மாதிரியான பிரச்சனை வந்தால், அனைவரும் உடனே மருத்துவரிடம் சென்று அதற்கான தீர்வை சரிசெய்ய முயல்வார்கள். ஆனால் அவ்வாறு சென்று என்ன தான் சிகிச்சை மேற்கொண்டாலும், ஒரு சில உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில் உணவுகள் மூலமும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். குழந்தை பெற நினைப்பவர்கள். சிகரெட் பிடிப்பவராக இருந்தால், உடனே நிறுத்திவிட வேண்டும். ஏனெனில் அவையும் குழந்தை பிறப்பிற்கு தடையை ஏற்படுத்தும். இப்போது எந்த உணவுகளை ஆண்கள் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவை அதிகரிக்கலாம் என்று பார்ப்போமா!!! பூண்டு இந்த உணவு ஆண் மற்றும் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின் பி6 இருப்பதால், இது இருபாலரும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதற்கான உணர்வை அதிகரித்து, கருவுறுதலுக்கு வழிவகுக்கும். மாதுளை இந்த சுவையான சிவப்பு நிற பழத்தை சாப்பிட்டால், ஆண்களின் விந்தணு அதிகரிப்பதோடு, அதன் சக்தியும் அதிகமாக இருக்கும். வாழைப்பழம் வாழைப்பழத்தில் விந்தணுவின் அளவையும், சக்தியையும் அதிகரிக்கும் வைட்டமின் பி1, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் புரோட்டீன்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, இதில் ப்ரோமெலைன் என்னும் நொதிப்பொருள் இருப்பதால், அவை உடலில் உள்ள உறவில் ஈடுபடுவதற்கான உணர்ச்சியை அதிகரிக்கும். பசலைக் கீரை பசலைக் கீரையில் ஃபோலிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. இது விந்தணுவின் உற்பத்தியை அதிகரித்து, விந்தணுவில் உள்ள டி.என்.ஏ -வைப் பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த உணவில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. எனவே தான், பசலைக் கீரை ஆண்களின் ஆண்மைத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது மிளகாய் மிளகாய் என்றதும் நம்பமுடியாது. ஆனால் உண்மையில் மிளகாய் விந்தணுவை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்களுள் ஒன்று. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், இவை எண்டோர்பின்கள் என்னும் ஒருவித சந்தோஷம்ன உணர்வைத் தூண்டக்கூடிய ஹார்மோன்களை விடுவிக்கும். இதனால் உடல் தளர்வடைந்துவிடும். மேலும் இதில் வைட்டமின் சி, பி, ஏ மற்றும் ஈ சத்துக்களும் உள்ளன. தக்காளி இது பொதுவாக சமையலில் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் ஒன்று. இந்த உணவுப் பொருளில் விந்தணுவை ஆரோக்கியமாக்கவும், அதிகரிக்க செய்யும் கரோட்டினாய்டு லைகோபைன் உள்ளது. அதிலும இதனை பருப்புகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இல்லையெனில் தினமும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடிக்கலாம். இதனால் இயற்கையாகவே விந்தணுவின் அளவானது அதிகரிக்கும். தர்பூசணி தர்பூசணிப் பழத்தில் லைசோபைன் மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், விந்தணு அதிகரிப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும். வைட்டமின் சி உணவுகள்

வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதாலும், ஆண்கள் தங்களது விந்தணுவின் அளவை அதிகரிக்கலாம். அதற்கு வைட்டமின் சி நிறைந்துள்ள உணவுகளான சிட்ரஸ் பழங்கள் சரியானதாக இருக்கும். ஆப்பிள் பழங்களில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஆப்பிள் முதன்மையானது. அத்தகைய பழத்தை பெண்களை விட ஆண்கள் அதிகம் சாப்பிட்டால், விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். அதிலும் ஆப்பிள் சீடர் வினிகரை சாப்பிட்டால், நம்பமுடியாத அளவில் தீர்வு கிடைக்கும். முந்திரி ஸ்நாக்ஸில் சிறந்த உணவுப் பொருள் ஸ்நாக்ஸ் தான். அத்தகைய நட்ஸில் முந்திரிப் பருப்பு மிகவும் சுவையுடன் இருக்கும். எனவே இதனை ஆண்கள் மற்றும் பெண்கள் அவ்வப்போது ஸ்நாக்ஸாக சாப்பிட்டால், இதில் அதிகமாக இருக்கும் ஜிங்க் சத்து, கருவுறுதல் தன்மையை அதிகரிக்கும்

No comments:

Post a Comment