Pages

Tuesday, 9 July 2013

மீனாட்சியும் நானும்


மீனாட்சியும் நானும் ரொம்ப நாள் நண்பர்கள். அடிக்கடி எங்க வீட்டுக்கு மீனாட்சி வருவாள். அவகிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது அவளோட தலைமுடி. மீனட்சியோட தலைமுடி ரொம்ப நீளமா, கருகருன்னு இருக்கும். எங்க பக்கத்து வீட்ல இருக்குறதால அடிக்கடி அவ தலைமுடிய ரசிச்சு பார்பேன். அதுவும் வெள்ளிகிழமையானா போதும், காலைலேயே குளிச்சிட்டு தலைமுடிய காயவைக்க வீட்டுக்கு வெளிய வந்து நின்னுடுவா. அப்படி ஒரு வெள்ளிகிழமை, சும்மா பேசிகிட்டு இருந்தேன். ஜீவா: குட் மார்னிங் மீனாட்சி. மீனாட்சி: குட் மார்னிங் ஜீவா. என்னடா இன்னும் தூக்கத்துல இருக்க? ஜீவா: நைட் படம் பார்த்துட்டு இருந்தேண்டி. லேட் ஆயிடுச்சு. மீனாட்சி: உனக்கு வேற வேல இல்லையா? என்ன மாதிரி சுறுசுறுப்பா இருடா. ஜீவா: போடி. ரொம்ப சீன் போடாத..... சரி, இன்னைக்கு என்ன இவ்ளோ வேகமா குளிச்சிட்ட? மீனாட்சி: இன்னைக்கு வெள்ளிகிழமை டா. தலைக்குவேற குளிக்கணும் அதான். எவ்ளோ கஷ்டம் தெரியுமா? ஜீவா: அப்புறம் எதுக்கு உனக்கு இவ்வளவு நீளமான முடி? இங்க வா, உன் முடியை கட் பண்ணி விடுறேன். பிரச்சனை முடிஞ்சுரும். மீனாட்சி: போடா......... கிண்டல் பண்ணாத. அம்மாவேற வீட்ல இல்ல. எப்படி தலை சீவரதுன்னு தெரியல. ஜீவா: எதுக்குடி டென்சன் ஆகுற? நான் உனக்கு ஹெல்ப் பண்றேன். மீனாட்சி: ஹே, எப்படி டா? உனக்கு தலை வாரிவிட தெரியுமா? ஜீவா: இதென்ன பெரிய விஷயமா? இங்க வா. மீனாட்சி: கலக்குற டா. இரு என்னோட கிளிப், பேண்ட் எல்லாம் எடுத்துட்டு வரேன். ஜீவா: சரி... அவசரம் ஒன்னும் இல்ல. மெல்ல வா. எனக்கு இன்னைக்கு லீவுதான். அப்புறம் மீனாட்சி எங்க வீட்டுக்கு வந்தாள். நான் டிவி -ல கிரிக்கெட் மேட்ச் பார்த்துட்டு இருந்தேன். மீனாட்சி என்னோட நெருங்கிய தோழி. அடிக்கடி வீட்டுக்கு வரதால, சகஜமா என் பக்கத்துல வந்து அமர்ந்தாள். அவ தலைமுடியோட வாசனை சூப்பரா இருந்துச்சு. அவ தலைமுடி இன்னும் ஈரமா இருக்கு-னு சொல்லி துவட்டி விட சொன்னாள். அவள சேர்ல உட்கார சொல்லிட்டு தலையை துவட்டி விட்டேன். அவ தலைமுடி ஈரமா, ரொம்ப soft -ஆ இருந்துச்சு. துவட்டிகிட்டே, என் கையால அவ தலைமுடிய கோதி விட்டேன். சீப்பை கையில கொடுத்து முடியை வாரி விட சொன்னாள். அவ தலைமுடியை என் கையாள மொத்தமா எடுத்தேன். அவ நெற்றி முடி, காது பக்கத்துல இருக்குற முடி, எல்லாத்தையும் மொத்தமா எடுத்து, கையாள கோதி, முதுகுக்கு பின்னாடி தொங்க விட்டேன். அவ முடி தொடைக்கும் கீழே நீளமா இருந்துச்சு. இப்ப சீப்பு வச்சு அவ முடியை சீவினேன். அவ தலைமுடி ரொம்ப soft -ஆ, அடர்த்தியா இருந்துச்சு.

ஜீவா: உன்னோட முடி ரொம்ப அழகா இருக்குடி. ஆனா ரொம்ப நீளமா இருக்கே, எப்படி சமாளிக்கிற? கஷ்டமா இல்லையா? மீனாட்சி: கஷ்டமாதாண்டா இருக்கு. என்ன பண்றது? ஜீவா: பேசாம உன்னோட முடிய கட் பண்ணலாம்ல? ரொம்ப ஈசியா இருக்கும். மீனாட்சி: என்னோட தலைமுடி ரொம்ப நீளம் டா. எப்படி இவ்ளோ முடியை வெட்டுறது. அதுவும் என்னோட முடிய கட் பண்ணினா எப்படி இருக்கும்-னு நெனைக்கவே பயமா இருக்கு ஜீவா. ஜீவா: அதெல்லாம் நல்லா இருக்கும். இப்போ எல்லாம் முடியை கட் பண்ணி விடுறதுதான் பேஷன். நீ ஓகே -னு சொன்னா, நானே உன்னோட முடிய அழகா கட் பண்ணி விடுறேன். மீனாட்சி: சரி ஜீவா. ஆனா இப்ப வேணாம் டா. நான் கோவிலுக்கு போணும். சாயங்காலமா வந்து என்னோட தலைமுடியை எப்படி கட் பண்ணலாம்-னு பேசலாம். இப்போ ஒழுங்கா எனக்கு ஜடை பின்னிவிடு. ஜீவா: சரி..சரி... திரும்பு. மீனாட்சியின் தலைமுடியை மறுபடி சீவினேன். முதல்ல, சைடுல இருந்த முடியை சீவி ஒரு கிளிப் மாட்டி விட்டேன். அப்புறம், அவ கழுத்துக்கு கீழ இருந்த முடியை அப்படியே மூணா பிரிச்சேன். அத மெல்ல ஜடையா பின்ன ஆரம்பிச்சேன். அவ முடி ரொம்ப soft - ah இருந்ததால ஈசியா ஜடை பின்ன முடிஞ்சது. அவ ஜடையை பின்னி முடிச்சதும் பின்னலோட கடைசியில ரப்பர் பாண்ட் போட்டு விட்டேன். அவ ஜடைக்கு கீழ 6 inch முடி வால் மாதிரி அழகா இருந்துச்சு. அவள எழுந்து நிற்க சொல்லிட்டு, மறுபடி அவ ஜடையை தடவினேன். மீனாட்சி கண்ணாடியில பார்த்துட்டு, ரொம்ப அழகா இருக்கு-னு சொன்னாள். அப்பறம் கிளம்பி கோவிலுக்கு போயிட்டாள். அவ போகும்போது, அவ தலைமுடியோட அழகை ரசிச்சேன். ரெண்டு பக்கமும் ஆடிகிட்டே போன அவ ஜடை குண்டி வரை நீளமா இருந்துச்சு. என் மனசுல அப்டியே பதிஞ்சுருச்சு. சாயங்காலம் மறுபடி எங்க வீட்டுக்கு வந்தாள். ஜீவா: என்ன மீனாட்சி, கோவிலுக்கு போயிட்டு எப்ப வந்த? மீனாட்சி: நான் அப்பவே வந்துட்டேன் டா. ஆனா ஒரே தலைவழி. அதான் வீட்டுலையே இருந்துட்டேன். சரி இப்போ சொல்லு. ஜீவா: என்ன சொல்ல? மீனாட்சி: அதான் கலையில என்னோட தலைமுடியை கட் பண்ணலாம்-னு சொன்னேல. அதா கேட்டேன். ஜீவா: ஓ அதுவா? அப்போ உன்னோட முடியை கட் பண்ணலாம்-னு சொல்றயா? மீனாட்சி: ஆமா டா. ரொம்ப நாளா நானும் என்னோட முடியை கட் பண்ணனும்னு நெனைச்சிட்டு இருக்கேன். ஆனா டைம் இல்ல. நல்லவேளை, இன்னைக்கு காலைல நீ சொல்லும்போதுதான் யோசிச்சேன். ஜீவா: சூப்பர். அப்போ இன்மேல் முடியை கட் பண்ணிட்டு, modern - ah இருப்பேன்-னு சொல்லு. மீனாட்சி: அப்படியெல்லாம் இல்ல டா. ஆனா நீதான் எனக்கு help பண்ணனும். ஜீவா: சொல்லுடி, உனக்கு பண்ணாம, வேற யாருக்கு பண்ண போறேன். மீனாட்சி: நீதான் என்னோட முடியை கட் பண்ணி விடணும் ஜீவா: எனக்கு டபுள் ஓகே. உனோட முடியை எப்படி கட் பண்ணனும்னு சொல்லு, அப்படியே வெட்டி விடுறேன். மீனாட்சி: நீயே எதாவது ஸ்டைல் இருந்தா சொல்லு, நான் அதுல இருந்து choose பண்றேன். ஜீவா: ஓகே. உன்னோட முடி ரொம்ப நீளமா இருக்கறதுனால, நெறையா முடிய கட் பண்ணலாம். உனக்கு நான் மூணு சாய்ஸ் தரேன். 1 . கண்டிப்பா ஜடை போடுற மாதிரி-னா, கழுத்துக்கு கீழ ஒரு ஆறு இன்ச் முடி இருக்குற மாதிரி கட் பண்ணலாம். மூணு பின்னலாவது போட்டு ரப்பர் பேண்ட் போடலாம். 2 . ஜடை வேணாம்-னா, shoulder level -ல முடியை கட் பண்ணலாம். நீ ஒரு கிளிப் மட்டுப் போட்டுட்டு free hair -ஆ விட்டுரலாம். 3 . அதுவும் வேணாம்னா, pop cut பண்ணலாம். நீ ரொம்ப free ஆயிடுவ. இப்ப உன்னோட தலைமுடியை எப்டி கட் பண்ணலாம்-னு நீயே சொல்லு. மீனாட்சி: என்ன டா இவ்ளோதான் choice ஆ? ஜீவா: உன்னோட முடியை முழுசா கட் பண்ற மாதிரி எல்லா சாய்ஸ்-ம் கொடுத்திருக்கேன். வேறென்ன வேணும்? மீனாட்சி: இல்ல டா. எனக்கு ரொம்ப நாளா வேறு ஒரு ஆசை. எனக்கு மொட்டை அடிக்கனும்னு ஆசை. நீ எனக்கு மொட்டை போட்டு விடுறயா? ஜீவா: அடிப்பாவி, என்ன இப்படி ஒரு ஆசை.

மீனாட்சி: ரொம்ப நாளா நான் கண்ணாடி பார்க்கும்போதெல்லாம், என்னோட தலைமுடியை கட் பண்ணலாம்னு தோணும். சில நேரம், எனக்கு மொட்டை போட்டா எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையா இருக்கும். இன்னைக்கு நீ என்னோட முடியை கட் பண்ணலாம்னு சொன்னேல, அதான் உன்கிட்ட எனக்கு மொட்டை போடா சொல்லலாம்னு நெனைச்சேன். ஜீவா: கலக்குற போ. நீ எப்படி இவ்ளோ நீளமான உன்னோட தலைமுடியை கட் பண்ண போறேன்னு நெனைச்சேன். ஆனா நீ அடுத்த லெவலுக்கு போயி மொட்டை போடுறதுக்கே ரெடி ஆயிட்ட. மீனாட்சி: சரி டா. இப்போ நீ எனக்கு மொட்டை போட்டு விடுறயா? ஜீவா: இந்த மாதிரி ஒரு சான்ஸ் எனக்கு இனிமேல் கிடைக்குமா? ஆனா ஒரு கண்டிஷன். மீனாட்சி: என்ன ஜீவா? ஜீவா: உனக்கு மொட்டை போட்டதுக்கு அப்புறமா உன்னோடு தலைமுடியை நானே எடுத்துக்குவேன். ஓகே-வா? மீனாட்சி: என்ன டா, உன்ன நம்பி என்னோட தலையே தரேன். என்னோட தலைமுடியை தரமாட்டேனா? என்னோட ரொம்ப நாள் ஆசைய நிறைவேற்றி, எனக்கு மொட்டை போடா போறதே நீதான். மொட்டை போட்டதுக்கு அப்புறம் இல்ல, இப்பவே என்னோட தலைமுடியை உனக்கு தரேன். என் தலைமுடியை நீயே எடுத்துக்கோ. ஜீவா: தேங்க்ஸ் டி. சரி எப்போ உனக்கு மொட்டை போடலாம்? மீனாட்சி: இப்போவே டா. இனிமேலும் என்னோட ஆசைய தள்ளி போடவேணாம். என்னோட தலைமுடி-ல இருந்து இன்னைக்கே விடுதலை வேணும். இப்போவே மொட்டை போடலாம். ஜீவா: சரி. நான் போயி பக்கத்துக்கு சலூன்-ல ஒரு சவரக்கத்தி வாங்கிட்டு வரேன். நீ ரெடியா இரு. நான் கடைக்கு போயிட்டு வரும்போது மீனாட்சி ரெடியா இருந்தா. அவள என்னோட ரூம்க்கு கூட்டிட்டு போனேன். அவ கண்ணாடி முன் போயி நின்னுட்டு அவ ஜடையை தொட்டு பார்த்தாள். இனிமேல் ஜடை போட முடியாதுங்குறனால, அவ தலைமுடியை கையிலே பிடித்து பார்த்தாள். அவ ஜடை தொடை வரை நீளமா இருந்துச்சு. அன்னைக்கு தாவணி போட்டு ஒத்த ஜடை போட்டு இருந்ததால, அவ முடி ரொம்ப அழகா இருந்துச்சு. நான் அவ கிட்ட போயி நின்னேன். அப்படியே அவளோட ஜடையை என் கைல எடுத்து, என் விரல்-ல அவ ஜடையை கட் பண்ற மாதிரி செய்கை பண்ணேன். அவ என்ன பார்த்து சிரித்தாள். அப்புறம் அவ ஜடையை கொண்டாய் போட்டாள். மீனாட்சி: என்ன ஜீவா, என்னோட முடியை இப்டியே கட் பண்ணி எடுத்துக்கலாம்னு பார்க்குறியா? ஜீவா: காலைலதான் என்னோட கையால உனக்கு ஜடை பிண்ணி விட்டேன். இப்போ நானே உன்னோட தலையை மொட்டை அடிக்க போறேன். மீனாட்சி: என்னோட முடியை கட் பண்ண வேண்டாம்டா. அப்படியே முடி நீளமா இருக்குற மாதிரி மொட்டை போடலாம். ஜீவா: நான் உன்னோட முடியை கட் பண்ணல. எனக்கு உன்னோட தலைமுடி நீளமாகவேதான் வேணும். சரி நீ இந்த சேர்-ல உட்காரு. மொட்டை போடலாம். மீனாட்சி: சரி டா. மீனாட்சி சேர்ல உட்கார்ந்தாள். முதல்ல அவ கொண்டையை என் கையால பிடிச்சேன். அவ முடி ரொம்ப அடர்த்தியா இருந்துச்சு. மெல்ல அவ கொண்டையை அவிழ்த்தேன். இப்போ அவளோட ஜடை முழுசா என் கையில இருந்துச்சு. அப்படியே, அவ ஜடையோட கீழ இருந்த ரப்பர் பேண்ட்-ஐ கழட்டினேன். அப்புறம் அவ பின்னலை அவிழ்த்து விட்டேன். கடைசியா அவ தலைல இருந்தா கிளிப்-ஐ கழட்டினேன். இப்போ அவளோட மொத்த முடியும் என் கையில இருந்துச்சு. அத அப்படியே எடுத்து அவ தலைமுடிக்கு முத்தம் கொடுத்தேன். அவ முடி நல்ல வாசனையா இருந்துச்சு. என் கையாள, அவ தலைமுடியை கோதி விட்டேன். அப்புறம் கொஞ்சம் தண்ணீரை எடுத்து அவ தலைல ஊத்தினேன். தண்ணீரை ஊத்தி, அவ தலைமுடியை மசாஜ் பண்ணினேன். மீனாட்சி நான் செய்யும் எல்லாவற்றையும் சிரித்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தாள். அவ தலைமுடியில இருந்து தண்ணி சொட்டிகிட்டே இருந்துச்சு. அவளோட நீளமான முடியை கடைசியா ஒரு முறை கோதிவிட்டு, தொட்டு பார்த்தேன். அவ முன்னாடி போயி நின்னு, அவ முடியை தூக்கி முன்னாடி போட்டேன். அவ முடி முன்னாடி இரண்டு பக்கமும் அழகா தொங்குச்சு. மீதி முடி முதுகு பக்கம் இருந்துச்சு. இப்போ நான் அந்த சவரக்கத்திய எடுத்து, புதுசா ஒரு பிளேடு போட்டேன். மீனட்சியோட தலையை முன்னாடி குனிய வச்சு, அவ தலை வகிடை பார்த்தேன். முதல்ல கத்திய அவ உச்சந்தலைல வச்சேன். அப்டியே இடது பக்கம் வகிடுல ஆரம்பிச்சு கீழ்புறமா, அவ தலைமுடியை சிரைச்சேன்.அவளுடைய முடி ஒரு பெரிய கற்றையா அவ மடில விழுந்துச்சு. அவ தலைல முடி இருந்தா இடம் இப்போ வெள்ளையா இருந்துச்சு. மீனாட்சி அவ மடில விழுந்த தலைமுடிய எடுத்து பார்த்தாள். நான் மறுபடி அவ தலையில கத்தி வைத்து மழிக்க ஆரம்பித்தேன். கொஞ்சகொஞ்சமா அவ தலையில இருந்தா முடி அவ மடியில விழுந்துச்சு. இப்போ அவ இடது பக்கமா, காதுக்கு மேல இருக்குற முடியை சிரைத்தேன். அவள் இடது பக்கம், மொட்டை அடிச்சாச்சு. மறுபடி அவ வலது பக்கம் போயி அவளோட தலையில உச்சியில இருந்து அவ தலைமுடியை மழிச்சேன். அவ முடி இப்போ அவளோட தோள்மேலயும், அவ மடியிலயும் விழுந்துச்சு. அவளோட வலதுபக்கமும் முடிஞ்சிருச்சு. அப்புறம் அவளோட பின்னாடி இருந்தா முடியை மழித்தேன். கொஞ்ச நேரத்துல அவளோட தலை முழுசா மொட்டையா இருந்துச்சு. அவளோட தலைமுடி இப்போ அவளை சுத்தி தரையில கிடந்துச்சு. அவ தலை மொட்டையா, அழகா இருந்துச்சு. கீழ இருந்த அவ தலைமுடியை எல்லாம் எடுத்து என்கிட்டே கொடுத்தாள். நான் அதை வாங்கிட்டு, அவளோட மொட்டை தலைய தொட்டு பார்த்தேன். ரொம்ப மென்மையா இருந்துச்சு. அவ மொட்டையில ஒரு முத்தம் கொடுத்தேன்.

ஜீவா: என்ன மீனாட்சி, இப்ப சந்தோசமா? உன்னோட ஆசை நிறைவேறிருச்சா? மீனாட்சி: ரொம்ப சந்தோசம் டா. இப்போ எவ்ளோ ஈசியா இருக்கு தெரியுமா? ஜீவா: நீ மொட்டை போட்டதுக்கு அப்புறம்தான் ரொம்ப அழகா இருக்க டி. மீனாட்சி: ரொம்ப நாள் நீளமா வச்சிருந்த என்னோட தலைமுடியை இன்னைக்கு நான் உனக்கே கொடுத்துட்டேன். நீயே அந்த முடியை வச்சிக்கோ. ஜீவா: தேங்க்ஸ் மீனாட்சி. இவ்ளோ நாளா உன்னோட முடியைத்தான் தொட்டு பார்ப்பேன். நாளைல இருந்து உன்னோட மொட்டை தலையை தொட்டு பார்க்கணும். மீனாட்சி: இனிமேல் அடிக்கடி மொட்டை போடலாம்னு யோசிக்கிறேன். எனக்கு நீளமான முடியே வேணாம். ஜீவா: அப்போ நானே உனக்கு மொட்டை போட்டு விடுறேன். மீனாட்சி: சரி டா. நான் கிளம்புறேன். அப்புறம் பார்க்கலாம். மீனாட்சி வீட்டுக்கு சென்றாள். அவள் போகும்வரை அவளுடைய மொட்டை தலையை ரசித்தேன். மீனாட்சியின் நீளமான தலைமுடி இப்போது என் கையில் இருந்தது. http://headshavedindians.blogspot.in/ http://headshavedindians.blogspot.in/ http://headshavedindians.blogspot.in/

No comments:

Post a Comment